தமிழ் அருச்சனை

159 views
Skip to first unread message

Thenee MK

unread,
Dec 26, 2017, 12:08:41 AM12/26/17
to mintamil
மின் தமிழ் வாசகர் அவ்வப்போது தமிழில் அருச்சனை வேண்டுமென்று கூக்குரலிட்டு வருவது வழக்கம். ஆனால் அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதில் தமிழறிஞர் கவனம் செலுத்துவதில்லை.

முதலில் தமிழ்மொழியில் இல்ல வழிபாடு செய்யும் முறைகளையாவது அறிந்து அதனை செயல்படுத்தினால் அடுத்தக் கட்டமாக சைவ கோயிலுக்குள் அதனை செயற்படுத்த முடியும். 

முடியாதென்று முரண்படும் மூர்க்கரோடு முயலுவதை விடுத்து முடியும் என்னும் தமிழர் வழி நடத்தும் சைவ கோயிலில் இதனை செயல்படுத்தலாம். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

இதனையொட்டி தமிழ் அருச்சனை என்னும் தலைப்புக் கொண்ட சிறு நூலை இவ்விடம் மின் தமிழார் அறிவுத் தெளிவிர்க்காக இணைக்கின்றேன். சிவசிவ.

மு. கமலநாதன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 26, 2017, 12:53:45 AM12/26/17
to mintamil
வணக்கம்.
மிக்க நன்றி ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

nkantan r

unread,
Dec 26, 2017, 10:39:53 AM12/26/17
to மின்தமிழ்
அருச்சனை என்பதன் (எனும் சொல்லின்) தமிழ் மூலம் என்ன?

rnk

தேனீ

unread,
Dec 26, 2017, 10:28:03 PM12/26/17
to மின்தமிழ்
'பூசனை' என்பதாகும். நீரும், மலரும், தமிழோடு இசைப்பாடலும் கொண்டது பூசனை என்பதாகும். இது திருமேனி வழிபாட்டிற்கு உரிய முறை. இவ்வாறு  இறைவழிபாட்டைச் செய்பவர் பூசகராவார்.   

தமிழில் எளிய இல்ல வழிபாடு செய்வது எப்படி என்னும் சிறிய வழிகாட்டி நூலை இத்துடன் இணைக்கிறேன். தமிழ் நாட்டிலும் தற்சமயம் பல்வேறு சமய இயக்கங்கள் தமிழில் வழிபாடு செய்ய வழிகாட்டி நூல்களை வெளியிட்டுள்ளனர். செய்முறை பயிற்சியும் நடத்தி வருகின்றனர். 

இதனையறிந்து தமிழில் வழிபாடு செய்ய இயலாதோரே 'காலி டப்பாவாக' பெருஞ்சத்தம் போடுகின்றனர்.

தன்னலம் வேண்டி செய்யப்படும் 'ஆன்மார்த்த' பூசை என்பது இல்லத்திலேயே செய்யலாம். உலகவாழ் உயிர்குல நலம் வேண்டி ஆலயத்தில்  செய்யப்படுவதே 'பரார்த்த பூசை' வழிபாடும். ஆலயத்தில் ஆன்மார்த்த பூசை செய்ய வேண்டிய அவசியமேதுமில்லை. அருச்சனை என்று சொல்லி புரியாத அயலார் மொழியில் இறைவனிடம் விண்ணப்பம் செய்வதும் தேவையற்றது. பணமும் மிச்சம். 
 
வழிவகை அறிந்தோருக்கு நாள்தோறும் தமிழில் வழிபாடு செய்வது என்பது இயல்பு.

மு. கமலநாதன் 

Thenee MK

unread,
Dec 26, 2017, 10:38:55 PM12/26/17
to mintamil
'திருமுறைவழி இல்ல வழிபாடு' என்னும் நூலை மின் தமிழார் பயன்பாட்டிர்க்கு இணைக்கப்பட்டுள்ளது. 

மு. கமலநாதன்
   
தமிழ் வழிபாடு வழிகாட்டி நூல்.pdf

சேது

unread,
Dec 26, 2017, 11:19:11 PM12/26/17
to மின்தமிழ்
சிவன் கோவில்களில்பூசனையின்போது பின்காணும் மந்திரங்கள்  சொல்வர். 1.ஏகவரணாயக நமக.2.துவி வர்ணாயக நமக.3. திரிவர்ணாயக  நமக.4.சதுர்வர்ணாயக நமக.5.பாஞ்சவர்ணாயகநமக.. இத்தொடர்களைத்தமிழில் ஓதினால்  நன்கு விளங்கும்.. 1.ஒருவண்ணனே  போற்றி.2.இருவண்ணனேபோற்றி..3.மூவண்ணனேபோற்றி. 4.நால் வண்ணனே போற்றி.5.ஐ வண்ணனே போற்றி.

Thenee MK

unread,
Dec 27, 2017, 12:44:26 AM12/27/17
to mintamil
தங்களின் பதிவுக்கு நன்றி ஐயா.

அச்சொற்றொடர்களின் பொருளையும் பதிவு செய்தால் படிப்போர் புரிந்து கொள்வார். ஐந்தாம் ஆறாம் திருமுறைகளில் பொருள் பொதிந்த போற்றிகள் நிறையவே உள்ளன.

கீழ்காணும் பாடலும் பொருள் பொதிந்ததே:

ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை யைந்தாய்
ஆறார்சுவை யேழோசையொ டெட்டுத்திசை தானாய்
வேறாயுட னானானிடம் வீழிம்மிழ லையே. (1:11:2)

பொ.உ. ஊழிக் காலத்தில் அனைத்தையும் ஒடுக்குவோனாய், ஒடுங்கிய உடலைத் தானொருவனே முதற்பொருளாய் நின்று தோற்றுவிப்பவனாய், சக்தி சிவம் என இருவகைப்பட்டவனாய், முக்குண வடிவினனாய், எக்காலத்தும் மாறுபடாத நான்மறை வடிவினனாய், ஐம்பெரும்பூதங்கள், ஆறுசுவை, ஏழு ஓசை, எட்டுத்திசை ஆகியவற்றில் நிறைந்தவனாய், உயிரோடு ஒன்றாகியும், வேறாகியும், உடனாகியும் விளங்கும் இறைவனது இடம் திருவீழிமிழலை.

மு. கமலநாதன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/gEiEfnia_eA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N D Logasundaram

unread,
Dec 27, 2017, 2:28:46 AM12/27/17
to mintamil
திரு தேனீ  அவர்கட்கு 

ஓர் நல்ல பதிவு 

நன்றி 

நூ த லோ சு
மயிலை
ஊ 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
Dec 27, 2017, 2:30:08 AM12/27/17
to mintamil
சிவசிவ. 

You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/gEiEfnia_eA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba

unread,
Dec 27, 2017, 3:32:31 AM12/27/17
to மின்தமிழ்
தமிழில் சிவபூஜை, மற்றும் திருமண நூல் நமது தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் முன்னர் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றை தமிழ் ஆர்வலர்கள் பயன்படுத்தி பயனுறலாம்

நூல்கள் அனைத்தும் இருக்கும் பகுதி..  http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html.

சுபா

nkantan r

unread,
Dec 27, 2017, 3:33:12 AM12/27/17
to மின்தமிழ்
தமிழ்வழி போற்றி பூசனையோ, சமஸ்க்ரித வழி அர்ச்சனையோ, பொருள் விளங்கினால் சிறப்பே; பொருள் விலங்காவிட்டால் அந்த பொருளைக் கேட்டறிவதும்  நலமே; 

தமிழ் வழி போற்றி பெயர்களால் பொருள் எளிதில் விளங்கும் என்பதாலே தமிழ் வழி போற்றிப்பாடல் இவ்விழையில் சிறப்பாக சொல்லப்படுகிறது.

ஆனால் , இங்கு சொல்லப்பட்ட ஒரு நாமத்தைப் பாப்போம்;

एकवर्णाय नमः  (ஏகவர்ணாய நமஹ);  இதன் தமிழ் போற்றிபெயர் "ஒருவண்ணனே போற்றி" என்று காட்டப்பட்டுள்ளது.
முன்பே நான் வேறு ஒரு இழையில் ஷண்முக அஷ்டோத்திரம் பற்றி சொல்லியுள்ளேன்; அதில் வரும் சில நாமங்களில் இதுவும் உண்டு;

2017-12-27 12:19 GMT+08:00 சேது <sethura...@gmail.com>:
    சிவன் கோவில்களில்பூசனையின்போது பின்காணும் மந்திரங்கள்  சொல்வர். 1.ஏகவரணாயக நமக.2.துவி வர்ணாயக நமக.3. திரிவர்ணாயக  நமக.4.சதுர்வர்ணாயக நமக.5.பாஞ்சவர்ணாயகநமக.. இத்தொடர்களைத்தமிழில் ஓதினால்  நன்கு விளங்கும்.. 1.ஒருவண்ணனே  போற்றி.2.இருவண்ணனேபோற்றி..3.மூவண்ணனேபோற்றி. 4.நால் வண்ணனே போற்றி.5.ஐ வண்ணனே போற்றி.

பொருள் விளங்கியதா ?

rnk

ipohsaivite

unread,
Dec 27, 2017, 7:01:59 AM12/27/17
to mint...@googlegroups.com
தங்கள் தகவல்களுக்கு நன்றி சுபா. 

Sent from my Samsung Galaxy smartphone.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/gEiEfnia_eA/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

ipohsaivite

unread,
Dec 27, 2017, 7:07:54 AM12/27/17
to mint...@googlegroups.com
இது வடமொழி மந்திரம். பொருளறிந்து ஓதலாம். 

Sent from my Samsung Galaxy smartphone.

-------- Original message --------
From: nkantan r <rnka...@gmail.com>
Date: 27/12/2017 16:33 (GMT+08:00)
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>

nkantan r

unread,
Dec 27, 2017, 2:20:09 PM12/27/17
to மின்தமிழ்
சிவன் கோவில்களில்பூசனையின்போது பின்காணும் மந்திரங்கள் சொல்வர். 1.ஏகவரணாயக நமக.2.துவி வர்ணாயக நமக.3. திரிவர்ணாயக நமக.4.சதுர்வர்ணாயக நமக.5.பாஞ்சவர்ணாயகநமக.. இத்தொடர்களைத்தமிழில் ஓதினால் நன்கு விளங்கும்.. 1.ஒருவண்ணனே போற்றி.2.இருவண்ணனேபோற்றி..3.மூவண்ணனேபோற்றி. 4.நால் வண்ணனே போற்றி.5.ஐ வண்ணனே போற்றி.

=======
என்ன பொருள்?

rnk

Reply all
Reply to author
Forward
0 new messages