தமிழ்மணி - மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!

753 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Jan 3, 2010, 12:02:54 AM1/3/10
to Min Thamizh
Last Updated :
இலக்கியம் தொடர்பாக மாதம் ஒரு கேள்வி எழுப்பப்படும்.

இது பற்றி, இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் வாசகர்களிடமிருந்து ஒரு பக்கத்துக்கு மிகாமல் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

கருப்பொருள் சிதையாமல் அதே நேரம், ஆதாரப்பூர்வமாக எழுதப்படும் சிறந்த நான்கு கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு,
அடுத்தடுத்த வாரங்களில் வெளியிடப்படும்.

இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி!

கண்ணகி தனது காற்சிலம்பில் உள்ளது மாணிக்கப் பரல்கள் என்றும் அதையே பாண்டியன் சபையில் ஆதாரமாகவும் காட்டுகிறாள்.

அரசியின் சிலம்பில் முத்துப் பரல்கள் தான் இருக்கிறது மாணிக்கப் பரல்கள் இருக்காது என்று, எந்த நம்பிக்கையில் கண்ணகி வாதாடினாள்?

அதற்கு என்னதான் ஆதாரம்?

கட்டுரைகள் அனுப்ப வேண்டிய முகவரி:-
ஆசிரியர், தினமணி - "தமிழ்மணி",
29, இரண்டாவது பிரதான சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை,
சென்னை- 600058.

Kannan Natarajan

unread,
Jan 9, 2010, 11:55:30 PM1/9/10
to Min Thamizh
நல்திறம் படராக் கொற்கை வேந்தே!

கண்ணகி தனது காற்சிலம்பில் உள்ளது மாணிக்கப் பரல்கள் என்றும் அதையே பாண்டியன் சபையில் ஆதாரமாகவும் காட்டுகிறாள்.

அரசியின் சிலம்பில் முத்துப் பரல்கள் தான் இருக்கிறது மாணிக்கப் பரல்கள் இருக்காது என்று, எந்த நம்பிக்கையில் கண்ணகி வாதாடினாள்?

அதற்கு என்னதான் ஆதாரம்?


சிலப்பதிகாரம் "மாணிக்கத்தை"ப் போற்றுகிறது.

பட்டினப்பாக்கத்திலும், மருவூர்ப்பாக்கத்திலும் மணிகளைத் துளையிடுவோர், மணி வேலைகளைச் செய்வோர் இருந்ததையும் செப்புகிறது சிலப்பதிகாரம். (இந்திரவிழவூரெடுத்த காதை) மன்னனைப் பார்த்து முறையிட வந்த கண்ணகி,

"நல்திறம்படராக் கொற்கை வேந்தே,
என்காற் பொற்சிலம்பு மணியுடையரியே
". (வழக்குரைகாதை - 66 - 67)

என்கிறாள்.

பாண்டிய மன்னனை, "மதுரை வேந்தே!" என்று கண்ணகி சொல்லவில்லை.

கொற்கையில் விளையும் முத்து உனது உடைமையாக இருக்கும் செருக்கினால்தானே, நீ கண்மூடித்தனமாக நடந்து கொண்டிருக்கிறாய் என்று இடித்துக் கூறும் பாவனையில் பேசியவள் கண்ணகி.

காரணம், "என் காற்பொற் சிலம்பின் உள்ளே உள்ள பரல்கள் மாணிக்கங்கள் தெரியுமா உனக்கு?" என்றாள்.

வழக்காட வந்த கண்ணகி, அரசன் முன் வைக்கிற வாதமே இது ஒன்று தான்.

முத்தைக் காட்டிலும் மதிப்புமிக்க மாணிக்கங்களைப் பரல்களாகக் கொண்ட சிலம்பு பெருவணிகக் குடும்பத்தினராகிய எங்களைத் தவிர அரசனான உன்னிடம் கூட இருக்கமுடியாது என்ற குலச்செருக்கோடு கூடிய வாதம் கண்ணகியுடையது.

கொற்கை முத்துக்கள், பாண்டிய மன்னனின் ஏகபோக வாணிப உடைமையாக இருந்த காலம்.

எனவே, "புகார்" நகர வணிகர்கள் கொற்கை முத்துக்களை வாங்கவோ, அயல் நாட்டினருக்கு விற்கவோ முயலவில்லை.

(புகார் நகர வணிகர்கள் வேறு முத்துக்களை வாங்கி, விற்ற செய்தி சிலப்பதிகாரத்தில் உண்டு).

கோவலன் கொலை செய்யப்பட்டபின் கோவலன் கையிலிருந்த சிலம்பு பாண்டியனிடம் வந்துவிட்டது.

இப்போது பாண்டிய மன்னனிடம் இரண்டு வகைச் சிலம்புகள் இருக்கின்றன.

இந்த நிலையில், கண்ணகி ஒற்றைச் சிலம்போடு வருகிறாள்.

இதனைக் கண்டதும், "வையைக்கோன் கண்டளவே தோற்றான்" (வழக்குரைகாதை வெண்பா).

ஆம்; பாண்டிய மன்னனின் நாடி தளர்ந்து விடுகிறது.

எனினும் நம்பிக்கையோடு, "யாம் உடைச்சிலம்பு முத்துடை அரியே" என்கிறான்.

கண்ணகி காற்சிலம்பை உடைத்தாள்.

"கொன்றச் சிலம்பைக் கொணர்க" என்று உத்தரவிட்ட மன்னனின் வாயிலே போய் கண்ணகி காற்சிலம்பின் மாணிக்கம் தெறித்து விழுந்தது.

மாதர்குல மாணிக்கம் மகத்தான வெற்றி பெற்றாள்.

  • வேழநாடு - மாணிக்கம் - வணிக வர்க்கம்;

  • பாண்டியநாடு - முத்து - மன்னர் வர்க்கம்.

கண்ணகி தம் நாட்டின் சிறப்பை நன்கறிந்திருந்த நிலையில், பாண்டிய மன்னரது சிலம்பில் முத்துக்கள் தான் இருக்கும் என்ற நம்பிக்கையிலே வாதாடினாள், வென்றாள்.

அதனால் தான், வழக்குரை காதையில் முன்னரே வாயிற் காவலனும் "கொற்கை வேந்தே" என்கிறான்.

கண்ணகியும் கொற்கை வேந்தே என்கிறாள்!


செ.திவான்

நன்றி:- தினமணி  

Kannan Natarajan

unread,
Jan 17, 2010, 2:03:06 AM1/17/10
to Min Thamizh
"சிலம்பு கழீஇ"

கண்ணகி தனது காற்சிலம்பில் உள்ளது மாணிக்கப் பரல்கள் என்றும் அதையே பாண்டியன் சபையில் ஆதாரமாகவும் காட்டுகிறாள்.

அரசியின் சிலம்பில் முத்துப் பரல்கள் தான் இருக்கிறது மாணிக்கப் பரல்கள் இருக்காது என்று, எந்த நம்பிக்கையில் கண்ணகி வாதாடினாள்?

அதற்கு என்னதான் ஆதாரம்?

ற்றிறம் படராக் கொற்கை வேந்தால், தன் கணவன் கொலையுண்டதை அறிந்த கண்ணகி, வாயில் காட்டக் கோவில் புகுந்து, தன் கணவன் கள்வன் அல்லன் எனக் கூறினாள். அத்துடன் அமையாது, "என்காற் சிலம்பு மணியுடை யரியே" என்றாள்.

அது கேட்ட பாண்டியன், "யாமுடைச் சிலம்பு முத்துடை யரியே" எனக் கூறினான்.

கோப்பெருந்தேவியின் சிலம்பின் பரல்கள் மாணிக்கமாக இருக்காது எனக் கண்ணகி கருதியமைக்குப் பின்வரும் காரணங்களைச் சுட்டலாம்.

பண்டை நாளைத் தமிழ் வேந்தர்கள், திருமணத்திற்குப் பெண் கொள்ளும்பொழுது, தன்னாட்சிப் பரப்பையும், புகழையும் பரப்பும் வண்ணம், பிற நாட்டு மன்னர்களிடமிருந்தோ, தகுதியமைந்த குறுநிலமன்னர்கள், வேளிர்களிடமிருந்தோ மகட்கொடை பெறுதல் மரபு.

பல நேரங்களில் போர் செய்து வெற்றிகொண்டும், மணப்பெண் கொள்ளுவர்.

இங்ஙனம் மணவிழா செய்யும் காலத்தில், மணமகள் தன் தாய் வீட்டிலிருந்து அணிந்து வந்த சிலம்புகளை நீக்கிவிட்டு, தங்கள் வீட்டுப் (குடிப்பெருமை கூறும்) புதிய சிலம்புகளை அணிவிப்பர். இந்நிகழ்ச்சியைச் சங்க இலக்கியங்கள் "சிலம்பு கழீஇ" விழா எனக் கூறுகின்றன.

அங்ஙனம் சிலம்பு அணிவிப்போர், தம் குடிப்பெருமைக் கேற்ப உயர்ந்த சிலம்புகளை அணிவிப்பர்.

கொற்கை வேந்தனும், சிறந்த கல்வியாளனுமாகிய பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தன் பாண்டிய நாட்டுப் பெருமையும் மரபும் கெடாதவாறு, பாண்டி நாட்டுக்கே சிறப்பினை நல்கும் கொற்கை முத்துகளை உள்ளிடு பரல்களாகக் கொண்ட சிலம்புகளையே, கோப்பெருந்தேவிக்கு மணவிழாவில் அணிவித்திருப்பான்.

முத்தினும் மேலான, விலையுயர்ந்த வைரம், மாணிக்கம் போன்ற கற்கள் கிடைப்பினும் தன்குடிப் பெருமையையும், நாட்டுச் சிறப்பினையும் விடாது போற்றுதலே மன்னர்தம் மாண்பு.

இத்தகைய பண்டை மரபுகளைப் பேரறிவுமிக்க இளையோளாகிய - சிறுமுதுக்குறைவி கண்ணகி நன்கு அறிந்திருப்பது இயல்பே.

மேலும், மாநாய்கன் குலக் கொம்பராகவும், பெருநிலமுழுதாளும் பெருமகன் தலைவைத்த உயர்ந்தோங்கு செல்வத்தனாகிய மாசாத்துவான் மருமகளுமாகிய கண்ணகி, அரச மரபுகளை அறிந்திருப்பது புதுமையுமன்று; வியப்புமன்று.

அதனால், கோப்பெருந்தேவியின் காற் சிலம்பின் பரல்கள் மாணிக்கம் இல்லை எனத் துணிந்தாள்.

மேலும்,
  • "சிலம்பு கழீஇய செல்வம்" (நற்றிணை: 279, 9 - 11)
  • "ஏதில் வறுமனைச் சிலம்புடன் கழீஇய" (அகம்: 369 - 25)
  • "சிறுவன் கண்ணி சிலம்பு கழீஇய" (அகம்: 385 - 17)
  • "நும்மனைச் சிலம்பு கழீஇயயரினும்" (ஐங்குறு: 399 - 1)
என சிலம்பு அணி விழாக்களைச் "சிலம்பு கழீஇ" விழாவெனச் சங்க இலக்கியங்கள் சுட்டும் சான்றுகளால் அறியலாம்.

முனைவர் இராம. இராமமூர்த்தி

ananda rasa thiruma

unread,
Jan 21, 2010, 7:40:06 PM1/21/10
to mint...@googlegroups.com
தமிழ் மரபு அறக்கட்டளையில் கட்டுரை அனுப்பப் பயனர் கணக்கை எவ்வாறு தொடங்க வேண்டும் எனத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி
- ஆராதி -

2010/1/17 Kannan Natarajan <thar...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Jan 21, 2010, 9:01:59 PM1/21/10
to mint...@googlegroups.com
தாங்கள் http://www.heritagewiki.org எனும் தளம் சென்று எளிதாக ஒரு
கணக்கை உருவாக்கி, உங்கள் சேகரங்களை வழங்கலாம்.

க.>

2010/1/22 ananda rasa thiruma <aara...@gmail.com>:

vj kumar

unread,
Jan 22, 2010, 2:01:49 AM1/22/10
to mint...@googlegroups.com
"கொற்கை முத்துக்கள், பாண்டிய மன்னனின் ஏகபோக வாணிப உடைமையாக இருந்த காலம். "

Have heard that only pearls above a certain size were property of the Pandian Kings. I am not sure where the reference came from, but have read this being quoted in Raaja Muthirai. Would love to see the actual basis of this exclusive dealing. It doesnt make sense to prepare a big market or sandhai for pearls in korkai - without dealing in local produce. It could have only been an evolution of a sellers market with traders coming in to buy.

rgds
vj


http://www.poetryinstone.in
Here the language of stone surpasses the language of man


2010/1/10 Kannan Natarajan <thar...@gmail.com>

devoo

unread,
Jan 22, 2010, 2:56:32 AM1/22/10
to மின்தமிழ்
//எனவே, "புகார்" நகர வணிகர்கள் கொற்கை முத்துக்களை வாங்கவோ, அயல்

நாட்டினருக்கு
விற்கவோ முயலவில்லை. (புகார் நகர வணிகர்கள் வேறு முத்துக்களை வாங்கி,
விற்ற செய்தி
சிலப்பதிகாரத்தில் உண்டு). //

பாண்டிய ராசாமாருங்க முத்து பூராத்தையும் எக்ஸ்போர்ட் பண்ணி லோகல்
மார்க்கட்ல கெடைக்காம
பண்ணிட்டாங்களோ என்னவோ ! கில்லாடிங்க; படிக்க நல்லாதான் இருக்குது


தேவ்

ananda rasa thiruma

unread,
Jan 22, 2010, 7:01:50 PM1/22/10
to mint...@googlegroups.com
நண்பர் கண்ணன் அவர்களே, தமிழ் மரபு விக்கியில் புதிய கணக்கை உருவாக்க வழிகாட்டியமைக்கு நன்றி
- ஆராதி -

2010/1/22 devoo <rde...@gmail.com>

--

Kannan Natarajan

unread,
Jan 23, 2010, 7:03:56 PM1/23/10
to Min Thamizh
கண்ணகியின் நம்பிக்கையும், குலச்செருக்கும்!

கண்ணகி தனது காற்சிலம்பில் உள்ளது மாணிக்கப் பரல்கள் என்றும் அதையே பாண்டியன் சபையில் ஆதாரமாகவும் காட்டுகிறாள்.

அரசியின் சிலம்பில் முத்துப் பரல்கள்தான் இருக்கிறது மாணிக்கப் பரல்கள் இருக்காது என்று, எந்த நம்பிக்கையில் கண்ணகி வாதாடினாள்?

அதற்கு என்னதான் ஆதாரம்?

பண்டைக் காலத்தில் பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கியது கொற்கை மாநகரம்.

அது துறைமுகமாகவும் விளங்கியது.

பாண்டிய நாட்டின் செல்வத்துக்கும் சிறப்புக்கும் கொற்கையில் விளைந்த முத்துக்கள் ஒரு பெரும்
காரணமாக விளங்கியது.

சிலப்பதிகாரத்தில் முத்து பற்றி பல இடங்களில் பேசப் பட்டாலும், கொற்கை முத்தைப் பற்றிக்
குறிப்பிடும் இடம் ஒன்றே ஒன்று தான்.

மதுரை நகரில் காலை வேளையிலேயே பொது மகளிர், செல்வவளம் படைத்த தமது காதலர்களோடு (கடைகழிமகளிர் தம் காதல் அம் செல்வரோடு - ஊர்காண் காதை: வரி - 70) வையை நதியில்
படகோட்டிக் களித்துவிட்டு, நண்பகலில் அவர்கள் அலங்காரம் செய்து கொள்ளும்போது,
கொற்கைத் துறையில் விளைந்த முத்துக்களாலான மாலையை அணிந்து

(கொற்கையம் பெரும்துறை முத்தொடு பூண்டு - வரி 80)

கொண்டனர் என்று கூறப்படுகிறது.

தமிழ் நாட்டில் கொற்கைத் துறையில் குளித்தெழுந்த முத்துக்கள் உலகத்து எல்லாச் சந்தைகளையும் பார்த்திருக்கின்றன.

"பாரசீக வளைகுடா முத்தைவிட மன்னார் வளைகுடாவில் தோன்றும் முத்துக்களே வெண்மையும்
ஒளியும் சற்று மிகுதியாக உள்ளன. ஆகவே இவை தரத்தில் உயர்ந்து அதிக விலை பெறுகின்றன"
என்று நவமணிகளைப் பற்றி நன்கு ஆய்ந்த வல்லுநர் டி.எஸ்.வைத்தியநாதன் (நவமணிகள் - பக்:-81,82) குறிப்பிடுகிறார்.

கொற்கையில் விளைந்த முத்துக்களுக்கு ரோமாபுரியில் அதன் செல்வத்தையே வற்ற வைக்கும்
அளவுக்கு கிராக்கி இருந்து வந்தது. அதன் காரணமாக, கொற்கைத் துறையின் முத்தெடுப்பையும்,
முத்து வாணிபத்தையும் தமது ஏகபோகமாக்கிக் கொண்டிருந்த பாண்டிய மன்னர்கள் தங்கள் நாட்டில்
விளையும் முத்துக்களை சோழ நாட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் சோழ நாட்டு வணிகர்கள் கொற்கை  முத்துக்களை வாங்கவோ, வாங்கி விற்கவோ
முடியவில்லை. மேலை நாட்டவரும் விரும்பும் முத்துக்களை பாண்டிய மன்னனின் மனைவி
கோப்பெருந்தேவி தன் காற் சிலம்பில் அணியாமலா இருந்திருப்பாள் என்பது கண்ணகியின் நம்பிக்கை.பாண்டியன் அவைக்கு வந்த கண்ணகி,

"நற்றிறம் படராக் கொற்கை வேந்தே!
 என் காற் சிலம்பு மணியுடை அரியே!''
(66,67)

என்று கூறியதால், "கொற்கையில் விளையும் முத்து உனது உடைமையாக இருக்கும் செருக்கினால்
தானே, நீ கண்மூடித்தனமாக நடந்து கொண்டிருக்கிறாய்?" என்று இடித்துக் கூறுகிற பாவனையில்
அவளது சொற்கள் ஒலிக்கின்றன.

அடுத்தாற்போல், தான் அவனை இடித்துரைத்ததற்கான காரணத்தையும் "என் காற்பொற் சிலம்பின்
உள்ளே உள்ள பரல்கள் மாணிக்கங்கள் தெரியுமா உனக்கு?" என்று கேட்பது போலக் கூறிவிடுகிறாள்.

அவள் அவ்வாறு கூறியதன் காரணம் யாது என்று ஆராய்ந்து பார்த்தால், முத்தைக் காட்டிலும்
மதிப்பு மிக்க மாணிக்கங்களைப் பரல்களாகக் கொண்ட சிலம்பு வணிகர் குலத்தினரான எங்களைத்
தவிர அரசனான உன்னிடம் கூட இருக்க முடியாதே என்ற குலச் செருக்கோடு கூடிய மறைமுகமான
குறிப்பும் தெரிய வரும்.

கண்ணகி அவ்வாறு கூறியதும் பாண்டிய மன்னன்,

"தேமொழி! உரைத்தது செவ்வை நல்மொழி!
 யாம் உடைச் சிலம்பு முத்துடை அரியே''
(69 - 70)

என்று ஒப்புக்கொள்கிறான்.


குச்சனூர் கிழார்

Kannan Natarajan

unread,
Jan 30, 2010, 7:51:10 PM1/30/10
to Min Thamizh
கண்ணகி தனது காற்சிலம்பில் உள்ளது மாணிக்கப் பரல்கள் என்றும் அதையே பாண்டியன் சபையில் ஆதாரமாகவும் காட்டுகிறாள்.

அரசியின் சிலம்பில் முத்துப் பரல்கள்தான் இருக்கிறது மாணிக்கப் பரல்கள் இருக்காது என்று, எந்த நம்பிக்கையில் கண்ணகி வாதாடினாள்? அதற்கு என்னதான் ஆதாரம்?

பாண்டிய மன்னனின் மனைவி கோப்பெருந்தேவியின் காற்சிலம்பில் முத்துப் பரல்களே இருக்கும் எனக்  கண்ணகி வாதிட்டதற்கு இலக்கிய ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன.

தமிழ் மூதாட்டி ஒüவையின் பாடலில், முடியுடை மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களின் நாட்டிலும், தொண்டை நாட்டிலும் - ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சிறப்பிருக்கிறது என்பதை,

"வேழ முடைத்து மலைநாடு; மேதக்க

 சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்

 தென்னாடு முத்துடைத்து; தெண்ணீர் வயற்றொண்டை

 நன்னாடு சான்றோ டுடைத்து
."

என்று பாடியுள்ளார்.

"பூழியர்கோன்" என்பது பாண்டிய மன்னர்களைக் குறிக்கும்.

அந்நாட்டு முத்துக்களை எல்லாம், உலக நாடுகள் அனைத்தும் - குறிப்பாக, ரோமாபுரி மங்கையின் அங்கங்களை அலங்கரித்தன என்று பல இலக்கியங்கள் கூறுகின்றன.

"கொற்கையான் மாறன், குலசேகரப் பெருமான்

 பொற்கையான் ஆனகதை போதாதோ
!"

என்று கவிச்சக்ரவர்த்தி கம்பர் பாடியுள்ளார்.

கொற்கைத் துறைமுகத்தில் முத்துக்களை வாங்கிச் செல்வதற்கு உலக நாடுகளில் உள்ள வணிகர்கள் எல்லாம் காத்திருந்தனர் என்று பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன.

பாண்டிய நாட்டிற்குப் பெருமை தரும் காரணங்களில் ஒன்றான முத்துப் பரல்களையே பாண்டியன், தனது மனைவியின் காற்சிலம்பில் பதித்திருப்பான் என்ற இலக்கிய ஆதாரங்களைக் கொண்டே, "கொற்கை வேந்தே!" என்று அழைத்து,

"என் காற்சிலம்பு மணியுடை அரியே!" என்று வாதாடினாள் கண்ணகி.

சீனி.மணி

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி!

பாரதியின் "தேசிய கீதங்கள்" பாடலில் - பாரததேசம் பாடல் பகுதியில்,

"வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - அடி

 மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்..
."

தீபகற்ப இந்தியாவில், "மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்" என, "மேலைக் கடலை" மட்டும் பாரதி குறிப்பிட்டு பாடிய காரணம் என்ன?

Tirumurti Vasudevan

unread,
Feb 1, 2010, 2:00:24 AM2/1/10
to mintamil
அப்போதைய இந்தியா பர்மா உள்ளிட்டு பரவி இருந்ததே? கீழை கடலில் கப்பல்
விடுவதில் என்ன பிரச்சினை இருக்கும்? அது என்ன ஆளுமையை நிரூபிக்கும்?
அதனால் மேலைக்கடல்.

திவாஜி

2010/1/31 Kannan Natarajan <thar...@gmail.com>:


> இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி!
>
> பாரதியின் "தேசிய கீதங்கள்" பாடலில் - பாரததேசம் பாடல் பகுதியில்,
>
> "வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - அடி
>
>  மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்..."
>
> தீபகற்ப இந்தியாவில், "மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்" என, "மேலைக் கடலை" மட்டும் பாரதி குறிப்பிட்டு பாடிய காரணம் என்ன?

--
My blogs: [all in Tamil]
http://anmikam4dumbme.blogspot.com/
http://chitirampesuthati.blogspot.com/ photo blog now with english text too!
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Geetha Sambasivam

unread,
Feb 1, 2010, 3:53:00 AM2/1/10
to mint...@googlegroups.com
சரிதான். மேலைக்கடல் முழுதும் கப்பல் விட்டிருக்கணும்! :(

2010/2/1 Tirumurti Vasudevan <agni...@gmail.com>

Kannan Natarajan

unread,
Feb 7, 2010, 5:31:39 PM2/7/10
to Min Thamizh
இரண்டுக்கும் பொதுவானது!
--------------------------------------------------


பாரதியின் "தேசிய கீதங்கள்" பாடலில் - பாரததேசம் பாடல் பகுதியில்,

"
வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - அடி

 மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்..."

தீபகற்ப இந்தியாவில், "மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்" என, "மேலைக் கடலை" மட்டும் பாரதி குறிப்பிட்டு பாடிய காரணம் என்ன?


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


பாரதியின் தேசிய கீதங்கள் பாடலில் - பாரததேசம் பாடல் பகுதியில்,

"வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - அடி
 மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்..."

தீபகற்ப இந்தியாவில்,"மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்" என, "மேலைக் கடலை" மட்டும் பாரதி குறிப்பிட்டுப் பாடிய காரணம் என்ன?

"வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்" என்ற பாரத தேசப் பாடலில், மேலைக்கடல் மட்டும் பாரதியால் சுட்டப்படவில்லை.

"அடி" என்ற சொல்லோடே மேலைக் கடல் என்பதற்குப் பொருள் காண வேண்டும்.

"மலையடி" என்றால், மலையின் கீழ் என்பதுபோல "அடி" என்பது - "மேலைக்கு அடி" என்பது, மேற்குத் திசைக்குக் கீழான "கிழக்குத் திசை" என்ற பொருள்படும்.

அதனால், கிழக்கும் மேற்குமாகிய திசைகளில் சுதந்திரமாகக் கப்பல் ஓட்ட விரும்புகிறார் பாரதியார்.

ஏனெனில், கிழக்கில் தோன்றும் சூரியன் மேற்கில் மறையும் எல்லை வரை அதாவது, உலகையே ஒரு குடைக்கீழ் ஆள்வதாக மார்தட்டிய ஆங்கிலேயரை
விரட்டிவிட்டுக் கப்பல் விடுவோம் என்கிறார் பாரதி.

கிழக்கும், மேற்கும் கடல் என்பதால், அது சங்கமிக்கும் தெற்கும் கடல் எல்லையானதால் அங்கும் கப்பல் விடப்படும் என்பது கருத்து.

இப்படியாக இந்திய தீபகற்பத்தின் மூவெல்லையில் சுட்டப்படும் சுதந்திரம் போல வடக்கெல்லையான இமயம் யாராலும் உரிமை கொண்டாட முடியாத
சுதந்திர மலையாக உள்ளது என்பதையே,

"வெள்ளிப் பனி மலையின் மீதுலவுவோம்" என்ற நிலப்பட்டாவைப் பாடலாகப் பதிவு செய்கிறார் பாரதியார்.

அடுத்து, மேலைக்கடலை மட்டும் தான் குறிப்பிடுவதாகக் கருதினால், கீழை நாட்டிலிருந்து வராத ஆங்கிலேயரை மேலை நாட்டினர் எனக்கூறும் வழக்கத்தால் மேலைக்கடல் தாண்டி அதாவது, வந்த வழியாகவே அவர்களை விரட்டிவிட்டுச் சுதந்திரமாகக் கப்பல் விடுவோம் என்பதாகப் பொருள் பொருத்தம் காணலாம்.

தமிழாகரர் தெ. முருகசாமி

ananda rasa thiruma

unread,
Feb 7, 2010, 7:49:59 PM2/7/10
to mint...@googlegroups.com
வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம் அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
என்னும் பாடல் அடிகளில் வரும் மேலைக் கடல் என்பதற்குத் தமிழாகரர் முருகசாமி தந்த விளக்கம் ஒரு விதமானது.
 
ஆங்கிலேயர் முதலிய ஐரோப்பியர் வணிகத்திற்காகக் கப்பலில் இந்தியாவிற்கு வந்தவர்கள். பிறகு நாட்டையே அடிமைப்படுத்தினர் என்னும் வரலாற்று உண்மையை உணர்ந்தவர் பாரதி.

சொந்தமாகக் கப்பல் விடும் உரிமையை ஐரோப்பியர்களே வைத்திருந்தார்கள். அதற்கு மாறாக இந்தியர் கப்பல் விட வேண்டும் என்பதற்காகவே வ.உ.சி. போராடினார் என்பதை அறிந்தவர், ஆதரித்தவர் பாரதி.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்
செல்வங்கள் யாவையும் கொண்டிங்குச் சேர்ப்பீர் - எனப் பாடியவ்ர் பாரதி.

இந்தப் பாரததேசம் பாடலின் 3வது பத்தியிலும்
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
    எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்
என்றும் பாடியுளளார்.

இவற்றின் பின்னணியில் மேலைக் கடல் - என்பதற்குப் பொருள் காணவேண்டும். மேலை நாட்டுக் கடல்பகுதிகளுக்கு இந்தியர்கள் கப்பல் செலுத்த வேண்டும் ஆங்கிலேயர் முதலிய ஐரோப்பியர்களுக்கு இணையாக இந்தியர்கள் வணிகத்திலும் தொழில் நுட்பத்திலும் அறிவாற்றலிலும் உயரவேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்திக் கூறப்பட்டதுதான் அடிமேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் எனக் கொள்வது பாரதியின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்த உதவும்.

ஆராதி

2010/2/8 Kannan Natarajan <thar...@gmail.com>

--

Hari Krishnan

unread,
Feb 8, 2010, 9:21:51 AM2/8/10
to mint...@googlegroups.com


2010/2/8 Kannan Natarajan <thar...@gmail.com>



"அடி" என்ற சொல்லோடே மேலைக் கடல் என்பதற்குப் பொருள் காண வேண்டும்.


அடி சக்கைனான்.

உண்மையான பொருளும் அதுதான்.  இந்த அடி சக்கை இருக்கிறதே, அது உண்மையில் அடிச் சக்கை.  கள்ளுப் பாத்திரத்தின் அடிப்பக்கத்தில் தங்கிக் கிடக்கும் சக்கையோடு கலந்த அடியில் இருப்பதான கள்.  அடிச் சக்கைலதான் கிக் அதிகமாம்.  (மாம் என்று சொல்லியிருப்பதை தயவுசெய்து கவனிக்கவும். கிடச்சுதுடா இடுக்குன்னு சொட்டைத் தலையில் ஒரு குட்டு வைக்காதீங்க....)) ) ஒரு ச் விட்டா அர்த்தம் மாறிப் போயிருது.   

அடி என்றால் கீழ் என்ற பொருள் இருக்கிறதுதானே.  அடிமேலைக் கடல்.  அடியிலும் மேலையிலும் உள்ள கடல்.  
--
அன்புடன்,
ஹரிகி.

Kannan Natarajan

unread,
Feb 13, 2010, 5:29:00 PM2/13/10
to Min Thamizh
ஆழ்கடல் செல்வங்களும், நாட்டின் பாதுகாப்பும்
Last Updated :

பாரதியின் தேசிய கீதங்கள் பாடலில் - பாரததேசம் பாடல் பகுதியில்,

"வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம் - அடி
மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்..."

தீபகற்ப இந்தியாவில், "மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்" என, "மேலைக் கடலை மட்டும் பாரதி குறிப்பிட்டுப் பாடிய காரணம் என்ன?

பாரதியார் ஒரு தீர்க்கதரிசி. அதனால்,

அவர் வாழ்ந்த காலத்தில் இந்தியா எப்படி இருந்தது?

அதற்கு முன்பு இந்தியா எப்படி இருந்தது?

அவர் காலத்துக்குப் பின்னர் அது எப்படி இருக்கும்?

என்ற முக்காலச் செய்தியையும், தாம் பாடிய "பாரத தேசம்" என்னும் பாடலில் கூறியுள்ளார்.



"வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்..."

என்னும் அடிகளில், "மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்" என்று மட்டும் கூறியிருந்தால், "மேலை" என்பதற்கு மேற்குத் திசை எனப் பொருள் கொண்டு (தீபகற்ப இந்தியாவின் மேற்குத் திசை), தீபகற்ப இந்தியாவின் மேற்குத் திசையிலுள்ள மேற்குக் கடல், அதாவது, அரபிக்கடல் மீது கப்பல் ஓட்டுவோம் எனக் கொள்ளலாம்.

ஆனால், மேலைக் கடல் என்று சொல்லாது, "அடி" என்னும் ஒரு சொல்லைப் பெய்து, "அடி மேலைக் கடல் முழுதுங் கப்பல் விடுவோம்" எனப் பாடியிருப்பதால், "அடிக்கடல், மேலைக்கடல்" என்று கொண்டு கூட்டி, கடலின் மேலும், கடலின் கீழும் கப்பல் விடுவோம் என்று பொருள் கொள்ளத்தக்கது சிறப்புடையதாகும்.

அவ்வாறு பொருள் கொண்டால், கடல் நீரின் மேலேயும் அல்லாமல், கடல் நீருக்குள்ளேயும் கப்பல் ஓட்டுவோம் என்பது தெளிவாகிறதல்லவா?

ஒரு சமயம், இது குறித்து மூதறிஞர், முனைவர் முத்து கண்ணப்பரோடு உரையாடிபோது, அன்னார் இதைத் தெரிவித்தார். காந்திய சிந்தனையாளரான அவருக்கு இத்தகைய சிந்தனை ஏற்பட்டிருப்பது நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறதல்லவா!

ஆகவே இந்தியா, நீர் மூழ்கிக் கப்பலைக்கட்டி, ஆழ்கடலில் அமிழ்ந்து கிடக்கும் அரிய செல்வங்களை மேலே கொண்டு வரத் துணை புரிவதோடு, கடல் வழி நாட்டின் பாதுகாப்புக்கும் அடிகோலும் என்னும் உண்மையைத் தான் "அடி" என்ற சொல்லைக் கொண்டு புலப்படுத்தியுள்ளார் என்பது விளங்குகிறதல்லவா!

தமிழறிஞர் ப. இராமலிங்கம்

Kannan Natarajan

unread,
Feb 20, 2010, 7:09:32 PM2/20/10
to Min Thamizh
பார​தி​யின் கனவு!


பார​தி​யின் தேசிய கீதங்​கள் பாட​லில் -​ பார​த​தே​சம் பாடல் பகு​தி​யில்,​​

"வெள்​ளிப் பனி​ம​லை​யின் மீது​ல​வு​வோம் -​ அடி

 மேலைக் கடல் முழு​துங் கப்​பல் விடு​வோம்
..."


தீப​கற்ப இந்​தி​யா​வில்,​​ "மேலைக் கடல் முழு​தும் கப்​பல் விடு​வோம்" என,​​ "மேலைக் கடலை" மட்​டும் பாரதி குறிப்​பிட்​டுப் பாடிய கார​ணம் என்ன?​

​கீழைக் கடற்​க​ரையை ஒட்​டி​ய​மைந்த பல துறை​மு​கங்​கள் செயற்​கைத் துறை​மு​கங்​கள்.​

மேலைக் கடற்​க​ரையை ஒட்​டி​ய​மைந்​தவை இயற்​கைத் துறை​மு​கங்​கள்.​

எனவே,​​ ஆழ​மான இயற்​கைத் துறை​மு​கங்​கள் கொண்​டது என்ற பொரு​ளில் "அடி மேலைக்​க​டல்" என்று சொல்​லி​யி​ருக்​க​லாம்.​

கட​லின் அடி​வரை சென்று பார்த்​தான் எனில்,​​ கட​லின் ஆழத்​தி​னைத்​தான் நாம் நினைப்​போம்.​

அடி​மு​தல் முடி​வரை என்​றால்,​​ முழு​மை​யாக என்று பொருள்.​

கடலை ஆளுகை செய்​வது முழு​மை​யாக இருக்க வேண்​டும் என்று விரும்​பி​னார் பாரதி என​லாம்.​

இந்​தக் கடலை ஆள்​வ​தற்கே பிரஞ்​சுக்​கா​ர​ரும்,​​ ஆங்​கி​லே​ய​ரும்,​​ டச்​சுக்​கா​ர​ரும்,​​ போர்த்​துக்​கீ​சி​ய​ரும் போட்​டி​யிட்​ட​னர்.​

இவர்​கள் ஆளுகை செலுத்​திய மேலைக்​க​டல் முழு​வ​தும் இனி இந்​தி​யா​வின் ஆளு​கைக்கு உள்​பட வேண்​டும் என பாரதி கனவு கண்​டார் என​லாம்.​

பாரதி,​​ மேலைக்​க​டல் முழு​வ​தை​யும் இந்​தியா ஆள​வேண்​டும் என்றே "அடி மேலைக்​க​டல் முழு​துங் கப்​பல் விடு​வோம்" என்​றாரா?​

இருக்​க​லாம்.​

இன்​னொன்று,​​ ஆழ்​வார்​க​ளின் பாசு​ரங்​க​ளில் பேரீ​டு​பாடு கொண்​ட​வர் பாரதி.​

அத்​து​வித ஞானி.​ ஈட்டு வியாக்​கி​யா​னங்​க​ளிலே முழு​தும் பயிற்சி பெற்ற பேர​றி​ஞன்.​

"அடி" என்ற சொல்​லுக்​கு​ரிய விழு​மிய பொருள்​க​ளுள் ஐசு​வ​ரி​யம் ​(செல்​வம்)​ என்​ப​தும் ஒன்று.​

செல்​வம் உடை​ய​வர்​கள் உல​கில் எல்​லா​வற்​றை​யும் அடை​ய​மு​டி​யும் என்ற பொருள்​பட ஈட்​டு​வி​யாக்​கி​யா​னம்,​​

"அடி​யு​டை​யார்க்கு எல்​லாம் சாதித்​துக்​கொள்​ள​லாம்" ​(4:2:9) என்​கி​றது.​

எனவே,​​ பார​தி​யா​ரும் இந்​தப் பொருள்​ப​டவே பெரு​வ​ளங்​க​ளைத் தன்​னுள் அடக்​கிக் கொண்​ட​தும் ​(கடல்​படு செல்​வம்)​,​​ தன்னை ஆள்​ப​வர்க்​குப்
பெரு​வ​ளத்தை அளிக்​கத்​தக்​க​து​மான மேற்​குக் கடலை அடி​மே​லைக்​க​டல் என்று விளக்​கி​யி​ருத்​த​லும் கூடு​மன்றோ?​

மேலை நாட்​டார் அனை​வ​ரும் மேற்​குக் கடற்​கரை வழி​யா​கவே இந்​தி​யா​வுக்​குள் நுழைந்​த​னர்.​

இதை நன்கு அறிந்​த​வர் பார​தி​யார்.​

பிறர் ஆதிக்​கம் செலுத்தி,​​ இந்​தி​யச் செல்​வத்​தைக் கொள்​ளை​யிட உத​விய மேலைக்​க​டல் ஆதிக்​கம் இந்​தி​யர்​க​ளுக்கு வாய்க்​கும் -​ வாய்க்க வேண்​டும் என்று கரு​தியே "மேலைக்​க​டல் முழு​துங் கப்​பல் விடு​வோம்" என்​றார்.​

இன்​னொரு பேருண்​மை​யும் உள்​ளது.​ இப்​பாட​லில் அடுத்த பகு​தி​யி​லேயே அதைக் கூறி​யுள்​ளார்.​

​"முத்​துக் குளிப்​ப​தொரு தென்​கட​லிலே

 மொய்த்து வணி​கர் பல நாட்​டி​னர் வந்தே

 நத்தி நமக்​கி​னிய பொருள் கொணர்ந்தே

 நம்​ம​ருள் வேண்​டு​வது மேற்​க​ரை​யிலே
".

என்றார்.​

தென்​க​ரை​யும், மேற்​க​ரை​யும் தாம் பெரி​தும் மேலை நாட்​ட​வர்​களை இந்​தி​யா​வுக்கு இழுத்​தன என்​பது பாரதி அறிந்த உண்மை.​

இதற்​காக அவர் கீழ்க்​க​ட​லைப் புறக்​க​ணித்​த​தா​கக் கொள்ள முடி​யாது.​

முனை​வர் அ.தட்​சி​ணா​மூர்த்தி

Kannan Natarajan

unread,
Feb 27, 2010, 6:14:01 PM2/27/10
to Min Thamizh
கவிதையில் மோனை அழகு (முதலெழுத்து ஒன்றி வருதல்) முக்கியமானது. வகரத்துக்கு மகரம் இன மோனையாகும். கவிஞன் பாடல் எழுதிவரும் நிலையில் எதுகை, மோனை என்பன இயல்பாகவே வந்து தோன்றும். அவை பொருள் பொருத்தப் பாட்டுடன் அமையும். இப்படி எழுவதே நல்ல கவிதையின் அடிப்படை. ஆதலின், தனிச்சொல் "அடி" எனப் போட்டு "மேலைக்கடல் முழுதுங் கப்பல் விடுவோம்" என்று பாடியுள்ளார் பாரதியார்.

நாம் வேண்டுமானால் உரையாசிரியர்கள் விளக்கவுரை வரைவதுபோல் காரணம் கற்பிக்கலாம். அப்படி சில செய்திகள்:-

"அடி" என்ற தனிச்சொல், அடிப்புறம் உள்ள இந்தியப் பெருங்கடலைக் குறிக்கிறது. மேற்கில் அமைந்த அரபிக்கடல் வழியாகப் பயணத்தைத் தொடர்ந்தால் (மும்பையிலிருந்து), உலகம் முழுதும் சுற்றிவரலாம். தமிழகத்தோடு வணிகத் தொடர்புடைய அரேபியா, நாகரிகத் தொட்டில் எகிப்து, நமையாண்ட வெள்ளையர் பூமி இங்கிலாந்து, கலை - கலாசார சிறப்புமிக்க பிரான்ஸ் தேசம், ரஷியா என்று போய்க்கொண்டே இருக்கலாம். பாரதியின் நோக்கம், இந்தியா உலக நாடுகளோடு வணிகம் - கடல்வழி வணிகம் மிகுதியாகச் செய்ய வேண்டும் என்பதே. முக்கியமாகக் "கப்பல் விடுதல்" நமக்கு வ.உ.சி.,யை நினைவுபடுத்தும்.

கிழக்குப் பக்கம் வங்காள விரிகுடா வழியாகச் சென்றால் (கொல்கத்தாவிலிருந்து) மியான்மர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங் என்று தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் செல்லலாம். கிழக்குக் கடலில் புறப்பட்டு "உலக வலம்" வருதல் கடினம். மேலைக்கடலில் புறப்பட்டால், சுற்றிச் சுற்றி ஞாலம் முழுதும் போய்க்கொண்டே இருக்கலாம். "முழுதும்" என்ற சொல், உலகம் முழுதும் என்ற கருத்துக்கு வலிமை சேர்க்கிறது.

கவிக்கோ ஞானச்செல்வன்

இலக்கிய விவாதத்திற்குரிய  இந்த மாதக் கேள்வி!

தமிழில் ஆயுத எழுத்தாக "ஃ" உள்ளது. அது எப்பொழுது தோன்றியது?

அதற்கு ஏன் ஆயுத எழுத்து என்று பெயர் வந்தது?

ananda rasa thiruma

unread,
Feb 27, 2010, 7:54:56 PM2/27/10
to mint...@googlegroups.com
இம்மாத வினாவில் ஒரு திருத்தம். அதாவது ஆயுத எழுத்து எனக் கூறுவது பிழை. ஆய்த எழுத்து என்பதே சரி. இந்த எழுத்து எப்பொழுது தோன்றியது என்பதும் விந்தையான வினா. தொல்காப்பியர் தம் முதல் நூற்பாவில் இதனைக் குறிப்பாகக் கூறுகிறார். இரண்டாம் நூற்பாவில் ‘ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன‘ என இதன் பெயரையும் குறிப்பிடுகிறார்.
ஆய்தம் ஆயுதம் இரண்டும் வெவ்வேறு சொற்கள். ஆய்தம் எழுத்துக்களில் ஒன்று. ஆயுதம் என்பது போர்க் கருவி. தொல்காப்பியர் இதனை ஆய்தம், ஆய்தப் புள்ளி, அஃகான், இசைமை என்னும் பெயர்களால் குறிப்பிட்டு விரிவாக விளக்கியுள்ளமையால் இவர்க்கு முன்பே இது தமிழ் மொழி வழக்கில் ஏனைய எழுத்துக்களோடு இடம் பெறத் தொடங்கிவிட்டது என்பதை அறியலாம். உரையாசிரியர்கள் முப்பாற் புள்ளி எனத் தொல்காப்பியர் இவ்வெழுத்தையே குறிப்பிடுகிறார் என்றும் இல்லை என்றும் இருவகையாகக் கருத்தறிவிக்கின்றனர். மேலும் இதன் வரிவடிவம் பற்றியும் உரையாசிரியர்களிடம் விரிவான விவாதம் காணப்படுகிறது. வடமொழியில்  உள்ள விசர்க்க ஒலியுடன் இதனைஒப்பிட்டுக் காண்பர். கல்வெட்டுக்களில் ஒரு சிறிய படுக்கைக் கோட்டிற்கு மேலும் கீழும் புள்ளி வைத்தார் போன்ற வடிவில் இது குறிப்பிடப்படுகிறது என்பதை அறிஞர் எடுத்துக்காட்டியுள்ளனர். ஆய்தம், அஃகான் என்னும் பெயர்கள் இதன் பொருள் விளக்கத்தைத் தருகின்றன. ஆய்தம் என்பதற்கு நுணுகி ஒலித்தல் என்பது பொருள். அதே பொருளில்தான், அஃகுதல் என்பதன் அடியாக அஃகான் அஃகேனம் என்னும் பெயர்கள் ஆய்த எழுத்திற்கு ஏற்பட்டன. வல்லெழுத்துக்களில் உள்ள வெடிப்புத் தன்மையை மாற்றி நலியச் செய்வதால் இப்பெயர் தோன்றியது எனலாம். பிற்காலத்தில் கேடயம் என்னும் போர்க் கருவியுடன் இதன் வரிவடிவத்தை ஒப்பிட்டுக் காணும் போக்கைக் காணமுடிகிறது. அக்கருவி வட்டமான ஒரு தட்டில் மூன்று குழிகள் அமைந்தது போல் காணப்படும். தொல்காப்பியர் செய்யுளியலில் நலிபு வண்ணம் என்னும் ஒன்றைக் குறிப்பிடுகிறார்.
‘நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்’
என்பது அந்நூற்பா. அதாவது ஒரு பாடலில் ஆய்த எழுத்துக்கள் மிகுதியாக இடம் பெற்றால் அப்பாடல் நலிபு வண்ணம்(ஓசை) உடையது என்பது இதன் பொருள்.

ஆராதி

2010/2/28 Kannan Natarajan <thar...@gmail.com>
--

Hari Krishnan

unread,
Feb 28, 2010, 1:08:29 AM2/28/10
to mint...@googlegroups.com


2010/2/28 Kannan Natarajan <thar...@gmail.com>



இலக்கிய விவாதத்திற்குரிய  இந்த மாதக் கேள்வி!

தமிழில் ஆயுத எழுத்தாக "ஃ" உள்ளது. அது எப்பொழுது தோன்றியது?

அதற்கு ஏன் ஆயுத எழுத்து என்று பெயர் வந்தது?



அய்யிய்யோஓஓஓஓஓஓ தாங்கலியேஏஏஏஏஏஏ......ணா! யாரவது இந்த டெய்லிபெல் எடிட்டர் கிட்ட போயி,  மூணு புள்ளி வச்ச எழுத்துக்க எப்பலேந்து ஆயுத எழுத்து என்று பெயர் வந்தது அப்டீன்னு மூணாவதா ஒரு கேள்வியையும் சேத்துக் கொல்லச் சொல்லுங்கண்ணா. 

அந்தாண்டு, இந்தாண்டு, ஆபரணநகை, கரும்புவிலிருந்து சரக்கரை, இரும்புவிலிருந்து ஆயுதம் எல்லாத்தியும் படிச்சாச்சு.  இனிமே இந்த ஆயுதத்தையும் பூஜைக்கு வச்சிருவோம்.

கண்ணன் ஐயா (நான் கொரியா காரரை சொல்றேன்) எப்படியாச்சும் இந்த பத்திரிகை ஆசிரியப் பெருமக்களை இங்கே இட்டாங்களேன்!  மண்டையில நாலு ஆணி அடிச்சாலாவது உருப்படுதான்னு பாக்கலாம்....... 

srirangammohanarangan v

unread,
Feb 28, 2010, 1:16:19 AM2/28/10
to mint...@googlegroups.com
>>அய்யிய்யோஓஓஓஓஓஓ தாங்கலியேஏஏஏஏஏஏ......ணா!<<
 
துணிந்தபின்  மனமே    துயரம்  கொள்ளாதே....!

 

--

வினோத் ராஜன்

unread,
Feb 28, 2010, 2:57:45 AM2/28/10
to மின்தமிழ்

//> அந்தாண்டு, இந்தாண்டு, ஆபரணநகை, கரும்புவிலிருந்து சரக்கரை,

இரும்புவிலிருந்து
> ஆயுதம் எல்லாத்தியும் படிச்சாச்சு.  இனிமே இந்த ஆயுதத்தையும் பூஜைக்கு
> வச்சிருவோம்.//

அகத்தியரிலிருந்து:

<< கல்கண்டுவின் ஆசிரியர் லேனா கரும்புவிலிருந்து சாறெடுக்கப்
பயன்படுத்தும் இரும்புவினால் செய்யப்பட்ட யந்திரம் கொழும்புவிலிருந்து
வந்தது என்று எழுதியிருக்கிறார். இனிப்புவினால் ஈர்க்கப்பட்ட எறும்புவின்
புற்றுவிலிருந்து கிளம்பிய பெரும்படை கரும்புவின் சாறுவிலிருந்து
கனகாம்பரத்தின் அரும்புவின் உள்ளிருக்கும் தேன்வரைக்கும் மொய்த்தது.
முருகுவிடம் கற்றபடி எழுதுகிறேன். ;-)

அன்புவின்,
ஹரிகி. >>

http://www.treasurehouseofagathiyar.net/10500/10564.htm

On Feb 28, 11:08 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/2/28 Kannan Natarajan <thara...@gmail.com>
>
>
>
> > *இலக்கிய விவாதத்திற்குரிய  இந்த மாதக் கேள்வி!


>
> > தமிழில் ஆயுத எழுத்தாக "ஃ" உள்ளது. அது எப்பொழுது தோன்றியது?
>

> > அதற்கு ஏன் ஆயுத எழுத்து என்று பெயர் வந்தது?*


>
> அய்யிய்யோஓஓஓஓஓஓ தாங்கலியேஏஏஏஏஏஏ......ணா! யாரவது இந்த டெய்லிபெல் எடிட்டர்
> கிட்ட போயி,  மூணு புள்ளி வச்ச எழுத்துக்க எப்பலேந்து ஆயுத எழுத்து என்று பெயர்
> வந்தது அப்டீன்னு மூணாவதா ஒரு கேள்வியையும் சேத்துக் கொல்லச் சொல்லுங்கண்ணா.
>

>

தாரகை

unread,
Feb 28, 2010, 7:10:28 AM2/28/10
to மின்தமிழ்
> அய்யிய்யோஓஓஓஓஓஓ தாங்கலியேஏஏஏஏஏஏ......ணா! யாரவது இந்த டெய்லிபெல் எடிட்டர்
> கிட்ட போயி, மூணு புள்ளி வச்ச எழுத்துக்க எப்பலேந்து ஆயுத எழுத்து என்று பெயர்
> வந்தது அப்டீன்னு மூணாவதா ஒரு கேள்வியையும் சேத்துக் கொல்லச் சொல்லுங்கண்ணா.


அடடா! கவனிக்காமல் விட்டேன்.

ஆய்த எழுத்து என்பதை நாளிதழ் தவறாக அச்சிட்டிருந்தாலும், அடியேனாவது
எழுத்தின் தவறை மாற்றி குழுமத்திற்கு அனுப்பியிருந்தால் ஆய்த எழுத்து
என்ற பெயர் ஏன் வந்தது என்னும் சிந்தனை நிலையில் இருக்கும் நம்
குழுமத்தினர், தடுமாற்றம் கண்டிருக்க மாட்டார்கள். எழுத்து
தவறிழைத்தமைக்கு மன்னித்தருள்வீராக.

Kannan Natarajan

unread,
Mar 6, 2010, 5:04:33 PM3/6/10
to Min Thamizh
இலக்கிய விவாதத்திற்குரிய  இந்த மாதக் கேள்வி!

தமிழில் ஆய்த எழுத்தாக "ஃ" உள்ளது. அது எப்பொழுது தோன்றியது?

அதற்கு ஏன் ஆய்த எழுத்து என்று பெயர் வந்தது?


உலகில் பேச்சுமொழி முதலில் தோன்றி, பின்னர் எழுத்துமொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரிவடிவ எழுத்து தோன்றியது.

"அ" என்று எழுத்தொலியை எழுப்பினால் அஃது ஒலி வடிவ எழுத்து.

"அ" என எழுதினால் அது வரிவடிவ எழுத்து.

காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து. கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து.

வரிவடிவ எழுத்துகள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன.

ஆய்த எழுத்து தொல்காப்பியர் காலத்திலிருந்தே உள்ளது. இந்த ஆய்த எழுத்தைத்
  • தனிநிலை
  • முப்புள்ளி
  • முப்பாற்புள்ளி
  • அஃகேனம்
முதலிய பெயர்களால் குறிப்பிடுகின்றனர்.

உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர்மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று, தனியொரு எழுத்தாக இருப்பதால் "தனிநிலை" எனப்படுகிறது.

இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளிகளாலான எழுத்தாக அமைந்துள்ளது.

ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது.

ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது.

வழக்காற்றில் இதை "ஆய்த" எழுத்து என்றே கூறுவர்.

"ஆயுத" எழுத்து என இலக்கண நூலார் கூறுவதில்லை.

பத்துவகைச் சார்பெழுத்துகளில் ஒன்றாகவே ஆய்த எழுத்து கூறப்பட்டுள்ளது. இயல்பாக அரை மாத்திரை ஒலியளவுபெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும்பொழுது, "ஆய்தக்குறுக்கம்" என்ற சார்பெழுத்து ஆகிறது.

ஆய்த எழுத்து தனிக்குறிலை (தனிக்குற்றெழுத்தை) அடுத்தும், வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்பும் எஃகு, அஃது என்பன போன்று வரும்.

கஃறீது (கல்+தீது), முஃடீது (முள்+தீது) என ஆய்தக்குறுக்கமாகி, சார்பெழுத்தாக வரும்பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னருமே வரும்.

ஆய்தம் என்பது பொதுவாக, கருவி எனப் பொருள்படும்.

http://www.dinamani.com/Images/article/2010/3/7/tamil3.jpg

ஆயினும், போர்க் கருவிகளையே ஆய்தம் அல்லது ஆயுதம் என்றனர்.

போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆய்தம் எனப் பெயர்பெற்றது.

போர்வீரன் வலக்கையில் வாளை ஏந்தி இருப்பான்.

இடக்கையில் கேடயத்தைத் தாங்கி இருப்பான்.

எதிரியை வாளால் தாக்குவான்.

எதிரியின் வாள், தன்னைத் தாக்காமல் கேடயத்தால் தடுத்து, காத்துக்கொள்வான். அந்தக் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத்தில் கைப்பிடி இருக்கும். மறுபக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும். இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று  குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டுவதுபோல் இடித்துத் தாக்கும். அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ஃ என்பதுபோல இருக்கும். அந்த ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும் அப்பெயரைப் பெற்றது.

http://www.dinamani.com/Images/article/2010/3/7/tamil3.jpg

"போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்கருவிகளில் சூலமும் ஒன்று. சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக்கும். அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளியாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ஃ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்து கொள்ளலாம்.

இக்காட்சியைக் கோயில்கள் சிலவற்றில் காணலாம். இந்த ஒப்புமையாலும் முப்புள்ளி எழுத்து, ஆய்தம் எனப் பெயர் பெற்றது", என்று "தமிழ்த்தாத்தா" உ.வே.சாமிநாதய்யரின் மாணாக்கர் மகாவித்துவான் ச.தண்டபாணி தேசிகர் கூறக் கேட்டுள்ளேன்.

தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத்துகளின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன. அவ்வாறே ஆய்த எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப்பெயர்) பெற்றுள்ளது.

"காரணப்பெயர் புலவர்" ம.நா.சந்தானகிருஷ்ணன்

ananda rasa thiruma

unread,
Mar 6, 2010, 7:30:07 PM3/6/10
to mint...@googlegroups.com
1. ஆய்தம், ஆயுதம் என்பன வெவ்வேறு சொற்கள். ஆயுதம் என்னும் வழக்காறு மிகப்பிற்காலத்தைச் சேர்ந்தது. ஆய்தம் என்பது குறுகிய ஓசையைக் குறிக்கும் என்பதற்கு முன்னரே தொல்காப்பிய சான்றுகளைக் காட்டினேன்.
‘ஆய்தல் ஓய்தல் உள்ளதன் நுணுக்கம்’
என்பது தொல்காப்பிய உரியியல் சூத்திரம். தொல்காப்பியரே ஆய்தம் என்பதற்கு உரிய பொருள் கூறிய பின் அதனை ஆயுதம் என்பதனோடு பொருள் மயக்கம் தருமாறு விளக்குவது ஏற்புடையதாகாது.

2. சார்பெழுத்தில் ஒன்றாக ஆய்தம் தொல்காப்பியர் காலத்திலேயே கருதப்பட்டது. சார்பெழுத்தென்றால் என்ன?
‘சார்ந்து வரின்அல்லது தமக்கு இயல்பிலவெனத்
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்’
என்பது தொல்காப்பியம். முதல் எழுத்துக்களைச் சார்ந்து பிறப்பது சார்பெழுத்து. தொல்காப்பியர் சார்பெழுத்துக்கள் மூன்று என்னும் கருத்துடையவர். சார்ப்பெழுத்துக்களின் எண்ணிக்கை காலம் தோறும் இலக்கண ஆசிரியர்களின் கொள்கைக்கு ஏற்ப மாறி வந்துள்ளன. பவணந்தியார் கொள்கை சார்பெழுத்துக்கள் பத்து என்பது. இது அனைவருக்கும் உடன்பாடன்று. இவரது சார்பெழுத்துக் கருத்தில் ஒரு சிக்கல் உள்ளது. ஆய்தமே சார்பெழுத்தாக இருக்கும் போது சார்பெழுத்திற்கு ஒரு சார்பெழுத்தாக ஆய்தக் குறுக்கம் இருக்கமுடியுமா? எழுத்துக்கள் மாத்திரை அளவில் மாற்றம் பெறுமானால் அவற்றைப் பவணந்தியார் சார்பெழுத்துக்கள் என்றார். இது இவர் கொள்கை. உயிர்மெய்யைச் சார்பெழுத்தாகக் கொண்டதற்கும் அதுதான் காரணம்.

3. ஒரு சொல்லுக்குப் பொருள் காணும் போது அதன் வழக்காறு எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். பிற்கால வழக்கையும் அதன் முற்கால வழக்கையும் இவற்றிற்கு இடையே உள்ள பொருள் வேறுபாட்டையும் கவனிக்காமல் விளக்கம் அளித்தால் தெளிவு ஏற்படாது.

ஆராதி

2010/3/7 Kannan Natarajan <thar...@gmail.com>
--

RAJAGOPALAN APPAN

unread,
Mar 7, 2010, 4:25:52 AM3/7/10
to mint...@googlegroups.com

'' அகரம் எனப்பட்டது போல் '' அஃதம் எனப்பட்டது. ஃ க்கு யகர மெய்யொலி உண்டு.
'
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்'

 என்ற குறளில்  எஃகதனில் என்பது, செய்க என்ற சொல்லின் எதுகையாக வந்திருப்பது காண்க.' ' க்கு யகர மெய்யொலி இயல்பானதே. அந்த வழியில் அஃதம் அய்தம் ஆகிப், பின் நீண்ட கால வழக்கில் ஒடுஉருபு, ஓடுருபாகவும், அதுவுருபு, ஆதுருபாகவும் நீண்டிருப்பது போல, முதநிலை நீண்டு, ஆய்தம்  என்றாகியிருக்க வேண்டும். இந்த மாற்றங்கள் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று 'ஆய்த எழுத்தின் வரலாறு' என்ற கட்டுரையில் செந்தமிழ் ஆசிரியர் திருநாராயணையங்கார் குறிப்பிடுகிறார். மு.ராகவையங்கார் எழுதிய 'ஆய்தவோசை' என்கிற கட்டுரையில், ஆய்த எழுத்துப் பற்றிய பல செய்திகளோடு
'
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி' என்ற குறளில், ஆய்தம் குகர ஒலியேற்று, மாமுன் நிரையாகி வெண்டளை அமைவது எடுத்துகாட்டப்பட்டிருந்ததைப் படித்தது நினைவுக்கு வருகிறது.
அ.ரா.

 



2010/2/28 Kannan Natarajan <thar...@gmail.com>
--

Kannan Natarajan

unread,
Mar 20, 2010, 6:23:24 PM3/20/10
to Min Thamizh
இசை உருவும், மொழி மரபும்!

ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்து. சார்பெழுத்து என்பது ஒன்றைச் சார்ந்து வருவது. ஒன்றினிடத்து பற்றுக்கோடாக வருவது. சார்த்தப்படுவதாலே சார்பெழுத்து என்றானது. இவ்வெழுத்து மொழிக்கு முதலிலும், இறுதியிலும் வராது, தனித்தும் வராது. ஆய்தம் அரை மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மையுடையது.

"எழுத் தெனப் படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப

 சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே" (தொல்.1)

சார்ந்துவரும் குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் எனும் மூன்றும் மொழியின் மரபிலக்கணமாக வழிவழியாக வந்ததாகும் என தொல்காப்பியர் முதற்பாவிலேயே குறிப்பிடுகிறார். அவ்வாறாயின், ஆய்தம் ஒரு மரபு எழுத்தாகும். தொன்றுதொட்டு முன்னோர்களால் பயன்படுத்தும் பண்பாடே மரபு. ஆய்த எழுத்தும் இந்த மரபுப் பண்பாட்டை காலங்காலமாகப் பெற்று வருகிறது. எனவே, வடிவத்தால் மிகப் பழமையானது ஆய்த எழுத்து. வேறு எந்த மொழியிலும் இவ்வாறு புள்ளி எழுத்து இல்லை என்பது தமிழ் மொழிக்குச் சிறப்பாகும்.

ஆய்த எழுத்து அடுப்புக்கூடுபோல அமைந்திருப்பதால் இது "அடுப்புக் கூட்டு எழுத்து" என்றும், மூன்று புள்ளிகளைக் கொண்டதால் "முப்பாற்புள்ளி" என்றும் பழங்காலப் போரில் பயன்படுத்திய ஆய்தமான கேடயத்தின் மூன்று புள்ளிகளைப் போல் உள்ளதால், இது "ஆய்த எழுத்து" என்றும், உயிர் எழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும் நடுவில் தோன்றி, மொழியிடைச் சார்ந்து நடுவில் வந்ததால் "நடுவுவாங்கிய எழுத்து" எனவும் பெயர் பெறும்.

"முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன''  (தொல்.2)

"பத்தென் கிளவி ஒற்றிடைக் கொடுவழி

நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி''  (தொல்.350)

என ஆய்த எழுத்தின் வடிவங்களைத் தொல்காப்பியர் தெளிவுபடுத்துகிறார்.

ஆய்த எழுத்து, மொழிக்கு இடையில் குற்றெழுத்தை அடுத்து உயிரோடு கூடிய வல்லெழுத்துகளான "கு, சு, டு, து, பு, று'' என்ற ஆறு எழுத்துகளின் மேல் ஏறிவரும். உதாரணம், எஃகு, கஃசு, கஃடு, உஃது, கஃபு, கஃறு.

மேலும், புணர்ச்சி விகாரத்திலும், செய்யுள் விகாரத்திலும் ஆய்தம் பிறக்கும். எனவே, ஆய்தம் எட்டு இடங்களிலும் தோன்றும்.

(உ.ம்) அவ்+கடிய = அஃகடிய.

ஒலியே ஒரு மொழிக்கு முதற்காரணமாகும். காற்று அனுத்திரளின் செயல்பாடு முயற்சி இவைகளால் உண்டாகும் ஒலியே எழுத்து எனப்படும். ஒலி பிறக்க ஒலியுறுப்புகள் செம்மையாகச் செயல்பட வேண்டும். அவ்வகையில் இது தலை, மிடறு, நெஞ்சு, நாக்கு, அண்ணம், மூக்கு, பல், இதழ் ஆகிய எட்டு உறுப்புகளும் செயல்பாட்டு விளக்கம் பெறும்போது சார்பெழுத்தாகிய ஆய்தம் பிறக்கும்.

ஆய்தம் இசையையும் உருவையும் அருகித் தோன்றும் என்பதை தொல்காப்பியர்,

"ஈறியல் மருங்கினும் இசைமை தோன்று'' (தொல்.39)

"இசையினும் உருவினும் அருகித் தோன்றும்

மொழிக் குறிப் பெல்லாம் எழுத்தினியலா

ஆய்தம் அஃகாக் காலை யான''  (தொல்.40)

எனும் நூற்பாக்களால் அறியலாம். (உ.ம்) அல்+திணை = அஃறிணை; பல்+துளி = பஃறுளி. ஆனாலும் ஆய்தம் அஃகாக்காலை அரைமாத்திரை அளவில் சுருங்கி நில்லாது உருவும் இசையும் மிகுதியாகும்போது நீண்டே ஒலிக்கும். (உ.ம்) "கஃஃறென்னும்" என்று நிறம் பற்றியும், "சுஃஃறென்னும்" என்று இசை பற்றியும் நீண்டே ஒலிக்கும் என்பது நம் முன்னோர்களின் ஒலி நுட்ப ஆய்வு.

இதுமட்டுமல்ல, ஆய்தம் சில இடங்களில் முற்றாய்தமாகவும், குறுக்கமாகவும், அளபெடையாகவும், குறிப்பு மொழியின் கண்ணும் தோன்றும். இஃது, அஃது எனச் சுட்டப்படும் இடங்களில் உரசொலியாகவும், சில இடங்களில் நலிவொலியாகவும் இடம்பெறும்.

(உ.ம்) "அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்''  (குறள்:178)

ஆய்தம் என்னும் சொல், ஆய்தல் என்னும் சொல்லோடு தொடர்புடையதாக உள்ளது. ஆய்தல் என்பது உள்ளதன் நுணுக்கம் எனும் பொருள்படும். எனவே, ஆய்த ஒலி மிகமிக நுண்ணிய ஓசையைக் குறிக்கவே அக்காலத்தில் பயன்பட்டது என்பது தெளிவாகிறது. இக்காலத்தில், மொழியியலில் அயல்மொழி ஒப்பீட்டு ஆய்வுக்கு இது பெரிதும் துணை நின்று உதவுகிறது.

பன்னெடுங்காலமாக ஓலைச்சுவடிகளிலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் இதன் உருவம் ர்ர், :, -, அப்து என மாறிமாறி அழியாமல், முடிவில் ஃ என இவ்வாறு உருவம் பெற்றது. ஆய்த எழுத்து மொழிமரபு காக்கத் தோன்றிய எழுத்தாகும்.

காத்த.சீனிவாசன்

Kannan Natarajan

unread,
Mar 27, 2010, 8:35:02 PM3/27/10
to Min Thamizh
நடுவுவாங்கி இட்டெழுதுதல்

ஆய்தம் என்பது புதியன புகுதல் விதிப்படி பிற்கால வழக்கு. கவிஞர் ஒருவர் "தமிழை எவரும் அழிக்க முடியாது. ஏனெனில் அதில் ஆய்தம் உள்ளது'' என்றே பாடிவிட்டார். தொல்காப்பியர் "ஆய்தம்" என்றே கூறுகிறார். தொல்காப்பியமும், நன்னூலும் ஆய்தத்தைச் சார்பெழுத்து என்று கூற, நேமிநாதமும், வீரசோழியமும் முதல் எழுத்து என்றே கூறும்.

திருக்குறளில் 49 இடங்களில் ஆய்தம் வருகிறது. 43 இடங்களில் மெய்போல அலகு பெறாமலும், 6 இடங்களில் அலகு பெற்றும் வருகிறது. "ஒள" என்ற எழுத்தின்பின் ஆய்தம் மெய்போல் உச்சரிக்கப்பட்டாலும் ஏனைய மெய்போல ஆய்தம் உயிர் ஏற இடமளிப்பதில்லை. மெய்போல் சொல் இறுதியிலும் வராது. எனவே ஆய்தத்தைத் "தனிநிலை" என்பர்.

ஆய்தம் பல திரிபுகளைப் பெற்றது. தொல்காப்பியம் பஃது, அஃது, இஃது என்று கூறுவது (முப்)பது, அது இது என மாறிவிட்டது. இஃதை என்பது இத்தை என்றும், "இஃதெழுதிய" என்பது "இய்தெழுதிய" என்றும் மாறியது. சங்ககால மன்னர், மன்னர் மகள் இருவரும் அஃதை என்று புலவர் ஒருவர் கூற மற்றொரு புலவர் "அகுதை" எனக்குறிப்பார். குறிலுக்குப் பின்னர் உகரம் ஏறிய வல்லினத்துக்கு முன்பு ஆய்தம் வரும் என்று கூறப்பட்டாலும் புணர்ச்சியில் கல்+தீது = கஃறீது எனக் கூறப்பட்டாலும் "கற்றீது" என மாறியது.

"ஆய்தம்" என்ற முப்பாற்புள்ளி என்று தொல்காப்பியர் கூறினாலும், பழந்தமிழில்  (தமிழ்பிராமி என்பது தவறு) இ என்ற எழுத்து என்று எழுதப்பட்டது. இலக்கண ஆசிரியர்கள் ஆய்தத்தை ஒரு புள்ளி . இருபுள்ளி : மூன்று புள்ளி ஃ என்று பலவாறு கூறுவர். நச்சினார்க்கினியர் ஆய்தத்தை "நடுவுவாங்கியிட்டு எழுதுப" என்கிறார். அவர் கூறும் வடிவம் தான் இரண்டாம் நந்திவர்மன் காசாக்குடிச் செப்பேட்டில் வெஃகா என்பது வெ கா என எழுதப்பட்டுள்ளது. வரகுணபாண்டியனின் திருச்செந்தூர் கல்வெட்டில் என்றும் காணும் வண்ணம் முதல் முறையாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

புலவர் செ.இராசு


இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி!

தன் மகன் ஓட்டிச் சென்ற தேர்க்காலில் சிக்கி பசுவின் கன்று இறந்ததை - "ஆராய்ச்சி மணி" வாயிலாக அறிந்த மனுநீதிச்சோழன், தன் மகனையும் அதே தேர்க்காலில் கிடத்திக் கொன்றுவிடுமாறு கூறியது அறிவார்ந்த நீதிதானா?

கே.என்.பாலகிருஷ்ணன், சென்னை.

ananda rasa thiruma

unread,
Mar 27, 2010, 9:21:58 PM3/27/10
to mint...@googlegroups.com
திரு இராசு
///"ஒள" என்ற எழுத்தின்பின் ஆய்தம் மெய்போல் உச்சரிக்கப்பட்டாலும்///
எனக் குறிப்பிட்டுள்ளார். ஏதேனும் சான்று காட்ட இயலுமா?
''குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே''
என்பது தொல்காப்பியம். முதல் எழுத்துக் குறில் எழுத்தாக இருக்க வேண்டும், ஆய்தத்திற்குப் பின்வரும் எழுத்து வலலெழுத்தாக இருக்கவேண்டும்  என்பது  இடம். வல்லொற்றுக்களைச் சார்ந்து வரும் என்பது பற்றுக்கோடு. இதனை இடமும் பற்றுக் கோடும் எனக் குறிப்பிடுவர். ஔகாரம் நெடில் அல்லவா? அதன் பின்னர் எவ்வாறு ஆய்தம் வரும்?

///"ஆய்தம்" என்ற முப்பாற்புள்ளி என்று தொல்காப்பியர் கூறி///
முப்பாற் புள்ளி என்பது ஆய்தத்தைக் குறிப்பது என்றும் சார்பெழுத்துக்கள் மூன்றையும குறிப்பது என்றும் இரு வகையாகவும் உரைகாண்பர். அதற்கான தடைவிடைகளைத் தனியே ஏனையோர் விரும்பினால் பேசலாம்.

அன்புடன்
ஆராதி

2010/3/28 Kannan Natarajan <thar...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
 
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

தாரகை

unread,
Mar 27, 2010, 9:38:15 PM3/27/10
to மின்தமிழ்
> ஔகாரம் நெடில் அல்லவா? அதன் பின்னர் எவ்வாறு ஆய்தம் வரும்?

"ஒü" என்ற எழுத்தின்பின் ஆய்தம் மெய்போல் உச்சரிக்கப்பட்டாலும் ஏனைய


மெய்போல ஆய்தம் உயிர் ஏற இடமளிப்பதில்லை. மெய்போல் சொல் இறுதியிலும்
வராது. எனவே ஆய்தத்தைத் "தனிநிலை" என்பர்.

> > புலவர் செ.இராசு

ananda rasa thiruma

unread,
Mar 27, 2010, 9:47:04 PM3/27/10
to mint...@googlegroups.com
திரு தாரகை,
ஔ என்னும் எழுத்தின் பின்னால் ஆய்தம் மெய்போல் உச்சரிக்கப்படுகிறது என்பது கட்டுரையாளர் திரு இராசின் கருத்து. ஔ நெடில் என்பதால் அதனை அடுத்து ஆய்தம் வருவதற்கு வாய்ப்பில்லையே? இதற்குச் சான்றுள்ளதா? என்று கேட்டிருந்தேன். திரு இராசு வரிகளையே நீங்கள் திரும்பவும் குறிப்பிட்டதற்கான காரணம் விளங்வில்லை. தயவு செய்து விளக்க முடியுமா?


அன்புடன்
ஆராதி

2010/3/28 தாரகை <thar...@gmail.com>

தாரகை

unread,
Mar 27, 2010, 10:21:28 PM3/27/10
to மின்தமிழ்
> > "ஒü" என்ற எழுத்தின்பின் ஆய்தம் மெய்போல் உச்சரிக்கப்பட்டாலும் ஏனைய
> > மெய்போல ஆய்தம் உயிர் ஏற இடமளிப்பதில்லை.

> தயவு செய்து விளக்க முடியுமா?


"ஒü" - this was how Dinamani had printed in the page,which I inferred
as ஔ.

I wanted to clarify the status quo by re-typing the Dinamani's quote.

N. Ganesan

unread,
Apr 3, 2010, 12:52:26 PM4/3/10
to மின்தமிழ்

On Mar 27, 8:47 pm, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> திரு தாரகை,
> ஔ என்னும் எழுத்தின் பின்னால் ஆய்தம் மெய்போல் உச்சரிக்கப்படுகிறது என்பது
> கட்டுரையாளர் திரு இராசின் கருத்து. ஔ நெடில் என்பதால் அதனை அடுத்து ஆய்தம்
> வருவதற்கு வாய்ப்பில்லையே? இதற்குச் சான்றுள்ளதா? என்று கேட்டிருந்தேன். திரு
> இராசு வரிகளையே நீங்கள் திரும்பவும் குறிப்பிட்டதற்கான காரணம் விளங்வில்லை.
> தயவு செய்து விளக்க முடியுமா?
>
> அன்புடன்
> ஆராதி

புலவர் இராசு அவர்களுடன் பேசினேன். சரியாகப் போன் ஒலி கேட்கவில்லை.

தொல்காப்பிய ஔகடிய, அதற்கு அஃகடிய, ... என்று இருப்பதாக்ச் சொன்னார்கள்.

ஔகாரம், தொல்காப்பிய உரைகளில் இருக்கும் என்று நம்புகிறேன்.

நா. கணேசன்

>
> 2010/3/28 தாரகை <thara...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Apr 3, 2010, 2:16:44 PM4/3/10
to மின்தமிழ்
//ஆய்தம்" என்ற முப்பாற்புள்ளி என்று தொல்காப்பியர் கூறினாலும்,
பழந்தமிழில்
(தமிழ்பிராமி என்பது தவறு) இ என்ற எழுத்து என்று எழுதப்பட்டது. //

???

V

On Apr 3, 9:52 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Mar 27, 8:47 pm, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
>
> > திரு தாரகை,
> > ஔ என்னும் எழுத்தின் பின்னால் ஆய்தம் மெய்போல் உச்சரிக்கப்படுகிறது என்பது
> > கட்டுரையாளர் திரு இராசின் கருத்து. ஔ நெடில் என்பதால் அதனை அடுத்து ஆய்தம்
> > வருவதற்கு வாய்ப்பில்லையே? இதற்குச் சான்றுள்ளதா? என்று கேட்டிருந்தேன். திரு
> > இராசு வரிகளையே நீங்கள் திரும்பவும் குறிப்பிட்டதற்கான காரணம் விளங்வில்லை.
> > தயவு செய்து விளக்க முடியுமா?
>
> > அன்புடன்
> > ஆராதி
>
> புலவர் இராசு அவர்களுடன் பேசினேன். சரியாகப் போன் ஒலி கேட்கவில்லை.
>
> தொல்காப்பிய ஔகடிய, அதற்கு அஃகடிய, ... என்று இருப்பதாக்ச் சொன்னார்கள்.
>
> ஔகாரம், தொல்காப்பிய உரைகளில் இருக்கும் என்று நம்புகிறேன்.
>
> நா. கணேசன்
>
>
>
>
>
> > 2010/3/28 தாரகை <thara...@gmail.com>
>
> > > > ஔகாரம் நெடில் அல்லவா? அதன் பின்னர் எவ்வாறு ஆய்தம் வரும்?
>
> > > "ஒü" என்ற எழுத்தின்பின் ஆய்தம் மெய்போல் உச்சரிக்கப்பட்டாலும் ஏனைய
> > > மெய்போல ஆய்தம் உயிர் ஏற இடமளிப்பதில்லை. மெய்போல் சொல் இறுதியிலும்
> > > வராது. எனவே ஆய்தத்தைத் "தனிநிலை" என்பர்.
>
> > > > > புலவர் செ.இராசு
> > > > > நன்றி:- தினமணி
>
> > > --
> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.

> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our

தாரகை

unread,
Apr 3, 2010, 2:22:24 PM4/3/10
to மின்தமிழ்
> //ஆய்தம்" என்ற முப்பாற்புள்ளி என்று தொல்காப்பியர் கூறினாலும்,
> பழந்தமிழில் (தமிழ்பிராமி என்பது தவறு) இ என்ற எழுத்து என்று எழுதப்பட்டது. //

> ???
> V


Though raising our eye-brows, that concept is considered the
evolutionary process for "ஆய்தம்" according to certain Tamil scholars.

வினோத் ராஜன்

unread,
Apr 3, 2010, 2:28:03 PM4/3/10
to மின்தமிழ்
Nah..

I am not talking about Aytham at all.

The author says Pazhanthamizh (Not Tamil Brahmi) has /i/ has 3 dots.

But the fact is Brahmi (Asokan & Tamil) does have /i/ as 3 dots. I am
not sure what he means by Pazhantamizh. He has got something seriously
wrong in this part.

V

தாரகை

unread,
Apr 3, 2010, 2:33:06 PM4/3/10
to மின்தமிழ்
> He has got something seriously wrong in this part.


Patience Vinod.

Pulavar Rasu may have an explanation.

If we could get one,that would be worthwhile.

After which,making a comment is anyone's decision.

வினோத் ராஜன்

unread,
Apr 3, 2010, 2:33:32 PM4/3/10
to மின்தமிழ்
Again, recalling from my memory...

//முப்பாற் புள்ளி என்பது ஆய்தத்தைக் குறிப்பது என்றும்


சார்பெழுத்துக்கள்
மூன்றையும குறிப்பது என்றும் இரு வகையாகவும் உரைகாண்பர். அதற்கான
தடைவிடைகளைத்

தனியே ஏனையோர் விரும்பினால் பேசலாம். //

This seems to be correct.

Most probably all the three: KuRRiligaram, kuRRilugaram & Aytam used a
dot (Viraama).

Do note that, Malayalam script still preserves the tradition using
Viraama (Chandrakkala - The Malayalam Equivalent of Pulli) to
represent the kuRRilugaram (Samvrita-ukaara in Malayalam).

V

Kannan Natarajan

unread,
Apr 3, 2010, 4:41:53 PM4/3/10
to Min Thamizh
இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி!

தன் மகன் ஓட்டிச் சென்ற தேர்க்காலில் சிக்கி பசுவின் கன்று இறந்ததை - "ஆராய்ச்சி மணி" வாயிலாக அறிந்த மனுநீதிச்சோழன், தன் மகனையும் அதே தேர்க்காலில் கிடத்திக் கொன்றுவிடுமாறு கூறியது அறிவார்ந்த நீதிதானா?


http://www.dinamani.com/Images/article/2010/4/4/4TM-3.jpg

அறிவார்ந்த நீதியே...


தன் மகன் ஓட்டிச் சென்ற தேர்க்காலில் சிக்கி பசுவின் கன்று இறந்ததை - "ஆராய்ச்சி மணி" வாயிலாக அறிந்த மனுநீதிச்சோழன், தன் மகனையும் அதே தேர்க்காலில் கிடத்திக் கொன்றுவிடுமாறு கூறியது அறிவார்ந்த நீதிதானா?

இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் இவ்வுலகில் இன்பமாக வாழவேண்டும் என்பதே ஆன்றோர் கருத்து. ஒரு நாட்டை ஆளும் மன்னனுடைய ஆட்சியிலும் இது நிகழவேண்டும். காரணம், மன்னனை இறைவனோடு ஒப்பிடுவது நமது மரபு. மனுநீதிச் சோழன் தன் மண்ணில் வாழும் உயிர்களை எல்லாம் தன் கண்களைப் போலவும், தன் உயிரைப் போலவும் பாதுகாத்து வந்தான் என்றும், பழைய நீதி நூலின்படி ஆட்சிசெய்து, மக்களையும் உயிர்களையும் காத்து வந்தான் என்றும், அதனாலேயே "மனுநீதிச் சோழன்" என்ற பெயர் பெற்றான் என்றும் சேக்கிழார் கூறியுள்ளார்.

"அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய்

 தம்நோய்போல் போற்றாக் கடை''. (குறள் - 315)

என்ற குறளுக்கேற்ப அரசாட்சி செய்துவந்த மனுநீதிச் சோழன், திருக்குறளுக்கு ஏற்றவாறே தீர்ப்பு வழங்கியுள்ளான் என்பது தெளிவு.

"முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

 இறையென்று வைக்கப் படும்''. (குறள் - 388)

அதாவது, நீதிமுறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்குத் தலைவன் என்று தனியே கருதி மதிக்கப்படுவான் என்பது வள்ளுவர் வாக்கு.

சேக்கிழார் பெருமான், தாம் எழுதிய திருத்தொண்டர் புராணத்தில் (பெரியபுராணம்), திருநகரச் சிறப்பு என்ற தலைப்பில் 36 செய்யுள்களில் மனுநீதிச் சோழனின் நீதிதவறாத அரசாட்சியை விவரித்துள்ளார்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய அருட்பிரகாச வள்ளலார், இம் மன்னனின் மாண்பைப் போற்றும் வகையில், "மனுமுறை கண்ட வாசகம்" என்ற தலைப்பில் ஓர் அரிய உரைநடை நூலை எழுதியுள்ளார்.

"வாயிற் கடைமணி நடுநா நடுங்க

 ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத் தான்தன்

 அரும்பெறல் புதல்வனை ஆழியில் மடித்தோன்''.

என்று தன் நாட்டின் நீதிச் சிறப்பை எடுத்துக்கூறி, பாண்டிய மன்னனிடம் நீதி கேட்கிறாள் கண்ணகி.

"குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

 வடுவன்று வேந்தன் தொழில்''. (குறள் - 549)

என்ற குறள் வழி, குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல் அரசனுடைய தொழில்; அது பழி அன்று என்கிறார் வள்ளுவர்.

மனுநீதிச் சோழன் தன் மகனை தேர்க்காலில் கிடத்திக் கொன்றுவிடுமாறு கூறியதும், தானே கொன்றதும் அறிவார்ந்த நீதியே எனக் குறள்வழி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தாரகை

unread,
Apr 3, 2010, 4:43:41 PM4/3/10
to மின்தமிழ்
> அறிவார்ந்த நீதியே...

தெள்ளாறு ந.பானு

ananda rasa thiruma

unread,
Apr 3, 2010, 8:54:09 PM4/3/10
to mint...@googlegroups.com
அவ் + கடிய=அஃகடிய என்பதற்கும் ஔ என்னும் எழுத்தின் பின்னால் ஆய்தம் வரும் என்பதற்கும் தொடர்பில்லை. அவ், இவ், உவ் என்பன பன்மைப் பொருள் உணர்த்தும் சுட்டுச் சொற்கள். எழுத்தன்று. அவற்றின் பின் வல்லெழுத்து வரின் ஆய்தமாகும் என்பது விதி. இதில் ‘வ்‘ என்னும் எழுத்து ஆய்தமாக மாறியுள்ளது. அதற்கு முன் உள்ளது தனிக் குறில். புணர்ச்சியில் தோன்றும் ஆய்தம் பற்றிக் கூறும் போது இது இடம் பெற்றுள்ளது. இச்சொற்களுடன் ஐகாரச் சாரியை சேர்ந்து அவை, இவை, உவை என வழங்கப்பெறுகின்றன.

கூடுதலாக ஒரு செய்தி. தமிழில் ‘வ்’ என்னும் எழுத்தில் முடியும் சொற்கள் நான்குதாம் உள்ளன எனத் தொல்காப்பியர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் மேலே குறிப்பிட்ட பன்மைப் பொருள் உணர்த்தும் சுட்டுப் பெயர்கள் மூன்று. தெவ் என்னும் பகைப் பொருளில் வரும் சொல் ஒன்று.


அன்புடன்
ஆராதி

2010/4/3 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe, reply using "remove me" as the subject.

Nakinam sivam

unread,
Apr 4, 2010, 12:45:28 AM4/4/10
to mint...@googlegroups.com
அன்புள்ள குழும நண்பர்களுக்கு,

தமிழ் மொழி எங்கு ஆரம்பித்தாலும் முடிவில் இறை நிலையை அடையும் வழியை கான்பித்தலையே முடிவாக கொள்ளும்.
அது போல் தான் 
தமிழ் எழுத்துக்களை வடிவமைத்த சித்தர்கள்
தமிழில்
உயிர், மெய், ஆயுதம் என்று மூன்றாக பிரித்தார்கள்.
நம்முடைய உயிர் எப்படி தனியாக இயங்காதோ,
நம்முடைய மெய் அதாவது உடல் எப்படி தனியாக இயங்காதோ
அதேபோல் ஆயுதமும் தனித்து இயங்காது.
உயிருடன் உடலான மெய் சேரும்போதுதான் இயக்கம் தோன்றுகிறது. அதே போல்தான் தமிழில் உயிர் எழுத்துக்களுடன் மெய் எழுத்துக்கள் சேரும் பொது இயக்க நிலையினை அடைகிறது.
சரி ஆயுதம் என்று ஒரு தனி எழுத்து எதற்க்காக படைத்தார்கள்.
உயிரும் மெய்யும் சேர்ந்தால் உலகியல் இயக்கம் 
அடுத்து இறை நிலை அடைவதற்கான பாதையை
ஆயுத எழுத்தில் வைத்தார்கள்.
ஃ மூன்று புள்ளிகளாக நமக்கு காட்சி கொடுக்கும் இந்த ஆயுத எழுத்து 
ஞான நிலையினையும் இறைவனை அடையும் வழியினையும் நமக்கு வழி காட்டுவதற்காக ஏற்படுத்தப் பட்டது.
இரண்டு புள்ளிகளுக்கு மேல் ஒரு புள்ளி என்பது
இரண்டு புள்ளிகள் என்பது இரண்டு கண்களையும் 
மூன்றாவதாக மேலே உள்ள புள்ளி நமது மூன்றாவது கண் 
எனப்படுகின்ற நமது ஆன்மாவையும் காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது நமது புருவ மத்தியம் என சொல்லப் படுகின்ற 
உச்சிக்கு கீழே உண்ணாவுக்கு மேலே
நமது ஆன்மா நிலை கொண்டு உள்ளது அந்த ஆன்மாவினுள்ளே
இறைவன் குடி கொண்டுள்ளான் அதை தக்க ஆயுதம் கொண்டு 
அறிந்து அம்மையம் ஆக வேண்டும் என்றுதான்
நடைமுறைக்கு பயன்படாத ஒரு ஒரு எழுத்தை படைத்தார்கள்.
அதே போல் தமிழில் உயிர் எழுத்துக்கு
அடிப்படை எழுத்துக்கள் அ, இ, உ, எ, ஒ எனும் ஐந்து மட்டுமே
இவை நம்மை இயக்கும் பஞ்ச பூதங்களை குறிக்கின்றது.
தமிழ்  எழுத்தின் ஆதி  மூலம் ஞானத்தின் பாதையை நமக்கு தெரிவிப்பதற்காக அமைக்கப்பட்டது.
எழுத்து முதல் வார்த்தைகள் வரை தமிழ் மொழி சித்தர்களால் வளர்க்கப் பட்டது. அப்படிப்பட்ட முன்னோடிகளான சித்தர்களின் இலக்கியங்கள் இருட்டடிப்பு செய்யப்படுவது வேதனையான விஷயம்.
அன்புடன்
நக்கினம் சிவம் 


2010/4/4 ananda rasa thiruma <aara...@gmail.com>



--
Brotherly Athman
Nakinam Sivam

வினோத் ராஜன்

unread,
Apr 4, 2010, 12:58:08 AM4/4/10
to மின்தமிழ்
//ஃ மூன்று புள்ளிகளாக நமக்கு காட்சி கொடுக்கும் இந்த ஆயுத எழுத்து

ஞான நிலையினையும் இறைவனை அடையும் வழியினையும் நமக்கு வழி காட்டுவதற்காக
ஏற்படுத்தப் பட்டது.
இரண்டு புள்ளிகளுக்கு மேல் ஒரு புள்ளி என்பது
இரண்டு புள்ளிகள் என்பது இரண்டு கண்களையும்
மூன்றாவதாக மேலே உள்ள புள்ளி நமது மூன்றாவது கண்
எனப்படுகின்ற நமது ஆன்மாவையும் காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. //

ஆய்த எழுத்தின் இம்முப்புள்ளி வடிவம் சமீபத்தில் ஏற்பட்டது. இந்த
தத்துவத்துக்காகத்தான் முப்புள்ளியாக்கப்பட்டது என்பதெல்லாம் கொஞ்சம்
ரீல்.. இதில் பாவம் ஏன் சித்தர்களை இழுக்க வேண்டும்.

ஆய்த எழுத்தின் வடிவத்தின் மூலம் தத்துவம் கூற நேர்வது வேறு.. இந்த
தத்துவத்துக்காகத்தான் ஆய்த எழுத்து படைக்கப்பட்டது என்பது ரொம்ப ஓவர்.

முன்னது மட்டுமே ஏற்றுக்கொள்ளத்தக்கது. பௌத்த வஜ்ரயானத்தில் (சித்தம்)
அக்ஷர லிபி தியானம் நிறையவே இது போல் உண்டு.

V

> 2010/4/4 ananda rasa thiruma <aaraa...@gmail.com>


>
>
>
> > அவ் + கடிய=அஃகடிய என்பதற்கும் ஔ என்னும் எழுத்தின் பின்னால் ஆய்தம் வரும்
> > என்பதற்கும் தொடர்பில்லை. அவ், இவ், உவ் என்பன பன்மைப் பொருள் உணர்த்தும்
> > சுட்டுச் சொற்கள். எழுத்தன்று. அவற்றின் பின் வல்லெழுத்து வரின் ஆய்தமாகும்
> > என்பது விதி. இதில் ‘வ்‘ என்னும் எழுத்து ஆய்தமாக மாறியுள்ளது. அதற்கு முன்
> > உள்ளது தனிக் குறில். புணர்ச்சியில் தோன்றும் ஆய்தம் பற்றிக் கூறும் போது இது
> > இடம் பெற்றுள்ளது. இச்சொற்களுடன் ஐகாரச் சாரியை சேர்ந்து அவை, இவை, உவை என
> > வழங்கப்பெறுகின்றன.
>
> > கூடுதலாக ஒரு செய்தி. தமிழில் ‘வ்’ என்னும் எழுத்தில் முடியும் சொற்கள்
> > நான்குதாம் உள்ளன எனத் தொல்காப்பியர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவற்றில்
> > மேலே குறிப்பிட்ட பன்மைப் பொருள் உணர்த்தும் சுட்டுப் பெயர்கள் மூன்று. தெவ்
> > என்னும் பகைப் பொருளில் வரும் சொல் ஒன்று.
>
> > அன்புடன்
> > ஆராதி
>

> > 2010/4/3 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>

> >> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmaylike to visit
> >> our
> >> > > > Muthusom Blogs at:
>
> ...
>
> read more »

Kamala Devi

unread,
Apr 4, 2010, 1:12:27 AM4/4/10
to mint...@googlegroups.com
அன்புக்குரிய திரு சிவம்,
மிக ஆழமாக அழகாக விளக்குகிறீர்கள்..ஆனால் சிறு விளக்கம் கூற மனம் விழைகிறது.
சித்தர்கள் வளர்த்த தமிழை அப்படி யாரும் முழுமையாக இருட்டடிப்பு செய்யவில்லை.
[எந்த நூற்றாண்டு நூல் என்று தெரியவில்லை] சங்கம் கண்ட தமிழ், --கோமேதகப் புலவர்,எழுதிய இற்றுப்போகும் நிலையில் உள்ள
,அரிய பேழையில் ,தமிழை சித்தர்கள் வடிவமைத்த சிரமத்தை, அந்த உழைப்பை, அவ்வளவு அருமையாக விவரித்துள்ளாரே,
சென்னையில் கன்னிமாரா நூலகத்தில் இந்நூல் கிடைக்கலாம்.
தமிழை தெய்வீக மொழியாகவே எல்லோரும் காண்கிறார்கள், அப்படிக்கொண்டாடும் நூல்களையே ஞான் இதுவரை படித்துள்ளேன்.
அன்புடன் கமலம்


http://www.kamalagaanam.blogspot.com

--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe, reply using "remove me" as the subject.

Get your new Email address!
Grab the Email name you&#39;ve always wanted before someone else does!
http://mail.promotions.yahoo.com/newdomains/sg/

Nakinam sivam

unread,
Apr 4, 2010, 1:31:13 AM4/4/10
to mint...@googlegroups.com
அன்பு சகோதரி கமலம் அவர்களுக்கு,
நன்றி பல.
மேலும் அன்பு சகோதரர் வினோத் ராஜன் அவர்கள் மூன்று புள்ளி என்பது இடையில் ஏற்பட்டது என்று கூறி இருக்கிறார் 
அவருக்காக
"முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன''  (தொல்.2)

தொல்காப்பியத்தில் உள்ளது எனவே தொல்காப்பியம் வருவதற்கு முன்பே ஆய்த எழுத்து மூன்று புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
அன்புடன்
நக்கினம் சிவம்


2010/4/4 Kamala Devi <saahi...@yahoo.com.sg>
Grab the Email name you've always wanted before someone else does!
http://mail.promotions.yahoo.com/newdomains/sg/

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

வினோத் ராஜன்

unread,
Apr 4, 2010, 2:13:29 AM4/4/10
to மின்தமிழ்
அதற்கு இன்னொரு பொருளும் உள்ளது. மெலே உள்ள இடுகைகளை படித்துவிட்டு
வாருங்கோள்..

தொல்காப்பிய காலத்தில் முப்புள்ளி வடிவமாக இருந்தது இகரம் தான். ஆய்தம்
இல்லை.

V

On Apr 4, 10:31 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> அன்பு சகோதரி கமலம் அவர்களுக்கு,
> நன்றி பல.
> மேலும் அன்பு சகோதரர் வினோத் ராஜன் அவர்கள் மூன்று புள்ளி என்பது இடையில்
> ஏற்பட்டது என்று கூறி இருக்கிறார்
> அவருக்காக
> "முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன''  (தொல்.2)
>
> தொல்காப்பியத்தில் உள்ளது எனவே தொல்காப்பியம் வருவதற்கு முன்பே ஆய்த எழுத்து
> மூன்று புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
> அன்புடன்
> நக்கினம் சிவம்
>

> 2010/4/4 Kamala Devi <saahith...@yahoo.com.sg>

> ...
>
> read more »

Kamala Devi

unread,
Apr 4, 2010, 2:51:30 AM4/4/10
to mint...@googlegroups.com
அன்பு சிவம்
தொல்காப்பியம் பற்றிய ஆண்டின் விளக்கம் , 2 நூல்களில் 2 விதமாக எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஞான் சந்தித்த தமிழறிஞர்கள் பலரிடமும்  விளக்கம் கேட்டிருக்கிறேன்.
முக்கியமாக,கூடலூர் கிழாரின் அபிமானியாக தன்னை ஸ்தாபித்துக்கொண்ட அருமையான,
தமிழறிஞர் வாசுதேவகிழார்,  எழுதிய நூல், history of tamil, 3பகுதிகளாக வெளி வந்துள்ளது.
நிச்சயம் நிங்ஙள் படிக்கவேண்டும். பல அரிய தகவல்கள் உண்டு.
அன்பு கமலம்
 
http://www.kamalagaanam.blogspot.com



From: Nakinam sivam <nak...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Sunday, 4 April 2010 13:31:13
Subject: Re: [MinTamil] Re: தமிழ்மணி - மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!


New Email names for you!
Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.
Hurry before someone else does!

Nakinam sivam

unread,
Apr 4, 2010, 2:54:56 AM4/4/10
to mint...@googlegroups.com
ஆய்தம் ஒரு மரபு எழுத்தாகும். தொன்றுதொட்டு முன்னோர்களால் பயன்படுத்தும் பண்பாடே மரபு. ஆய்த எழுத்தும் இந்த மரபுப் பண்பாட்டை காலங்காலமாகப் பெற்று வருகிறது. எனவே, வடிவத்தால் மிகப் பழமையானது ஆய்த எழுத்து. வேறு எந்த மொழியிலும் இவ்வாறு புள்ளி எழுத்து இல்லை என்பது தமிழ் மொழிக்குச் சிறப்பாகும்.

ஆய்த எழுத்து அடுப்புக்கூடுபோல அமைந்திருப்பதால் இது "அடுப்புக் கூட்டு எழுத்து" என்றும், மூன்று புள்ளிகளைக் கொண்டதால் "முப்பாற்புள்ளி" என்றும் பழங்காலப் போரில் பயன்படுத்திய ஆய்தமான கேடயத்தின் மூன்று புள்ளிகளைப் போல் உள்ளதால், இது "ஆய்த எழுத்து" என்றும், உயிர் எழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும் நடுவில் தோன்றி, மொழியிடைச் சார்ந்து நடுவில் வந்ததால் "நடுவுவாங்கிய எழுத்து" எனவும் பெயர் பெறும்.

"முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன''  (தொல்.2)

"பத்தென் கிளவி ஒற்றிடைக் கொடுவழி

நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி''  (தொல்.350)

என ஆய்த எழுத்தின் வடிவங்களைத் தொல்காப்பியர் தெளிவுபடுத்துகிறார்

anbudan

Nakinam sivam

unread,
Apr 4, 2010, 2:56:38 AM4/4/10
to mint...@googlegroups.com
அன்பு சகோதரி கமலம் அவர்களுக்கு,

தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி. 
அவசியம் படிக்கிறேன்.
அன்புடன்

வினோத் ராஜன்

unread,
Apr 4, 2010, 3:08:20 AM4/4/10
to மின்தமிழ்
> வேறு எந்த
> மொழியிலும் இவ்வாறு புள்ளி எழுத்து இல்லை என்பது தமிழ் மொழிக்குச் சிறப்பாகும்.
>

கிட்டத்தட்ட எல்லா ஆசிய - கிழக்காசிய எழுத்துமுறைகளில் அனுஸ்வாரமும்
விஸர்க்கமும் புள்ளியாகத்தான் அமைந்துள்ளன.

இத்தனைக்கும் தாய் எழுத்துமுறையில் தமிழ் போலவே புள்ளி பிரயோகம் உண்டு.
நாம் எழுத்துக்கு மேலே புள்ளி வைப்போம், அவர்கள் எழுத்துக்கு கீழே புள்ளி
வைக்கிறார்கள்.

மறுபடியும் சும்மா.. இஷ்டத்துக்கும்.. ரீல் விடக்கூடாது..

தினமணி கட்டுரையின் காகிதப்பிரதியை பார்க்கவும்.. ஆய்தத்தின் இடைக்கால
கல்வெட்டு வடிவத்தை (தற்கால வகுத்தல் குறி போன்றது) அச்சிட்டு உள்ளனர்.

ஆயுத எழுத்து என்ற பெயர் திரிபு பெற்ற ஒன்று. அதற்கு ஆய்தத்துக்கு
தொடர்பில்லை. Its nothing more than a Literary Urban Legend.

குற்றியலுகரம் குற்றிலிகரம் ஆய்தம் ஆகிய மூன்றும் புள்ளியை கொண்டிருந்தது
என்பதே சரியான பொருள். மகரக்குறுக்கத்திற்கும் உட்புள்ளி இருந்ததாக
கூறுவர்.

V

On Apr 4, 11:54 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> *ஆய்தம் ஒரு மரபு எழுத்தாகும். தொன்றுதொட்டு முன்னோர்களால் பயன்படுத்தும்


> பண்பாடே மரபு. ஆய்த எழுத்தும் இந்த மரபுப் பண்பாட்டை காலங்காலமாகப் பெற்று
> வருகிறது. எனவே, வடிவத்தால் மிகப் பழமையானது ஆய்த எழுத்து.

> ஆய்த எழுத்து அடுப்புக்கூடுபோல அமைந்திருப்பதால் இது "அடுப்புக் கூட்டு
> எழுத்து" என்றும், மூன்று புள்ளிகளைக் கொண்டதால் "முப்பாற்புள்ளி" என்றும்
> பழங்காலப் போரில் பயன்படுத்திய ஆய்தமான கேடயத்தின் மூன்று புள்ளிகளைப் போல்
> உள்ளதால், இது "ஆய்த எழுத்து" என்றும், உயிர் எழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும்
> நடுவில் தோன்றி, மொழியிடைச் சார்ந்து நடுவில் வந்ததால் "நடுவுவாங்கிய எழுத்து"
> எனவும் பெயர் பெறும்.
>
> "முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன''  (தொல்.2)
>
> "பத்தென் கிளவி ஒற்றிடைக் கொடுவழி
>
> நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி''  (தொல்.350)
>

> என ஆய்த எழுத்தின் வடிவங்களைத் தொல்காப்பியர் தெளிவுபடுத்துகிறார்*
> *
> *
> *anbudan*
> *நக்கினம் சிவம்
> *
> 2010/4/4 Kamala Devi <saahith...@yahoo.com.sg>


>
>
>
> > அன்பு சிவம்
> > தொல்காப்பியம் பற்றிய ஆண்டின் விளக்கம் , 2 நூல்களில் 2 விதமாக
> > எழுதப்பட்டுள்ளது.
> > இதுகுறித்து ஞான் சந்தித்த தமிழறிஞர்கள் பலரிடமும்  விளக்கம்
> > கேட்டிருக்கிறேன்.
> > முக்கியமாக,கூடலூர் கிழாரின் அபிமானியாக தன்னை ஸ்தாபித்துக்கொண்ட அருமையான,
> > தமிழறிஞர் வாசுதேவகிழார்,  எழுதிய நூல், history of tamil, 3பகுதிகளாக வெளி
> > வந்துள்ளது.
> > நிச்சயம் நிங்ஙள் படிக்கவேண்டும். பல அரிய தகவல்கள் உண்டு.
> > அன்பு கமலம்
>
> >http://www.kamalagaanam.blogspot.com
>

> > ------------------------------
> > *From:* Nakinam sivam <naki...@gmail.com>
> > *To:* mint...@googlegroups.com
> > *Sent:* Sunday, 4 April 2010 13:31:13
> > *Subject:* Re: [MinTamil] Re: தமிழ்மணி - மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!


>
> > அன்பு சகோதரி கமலம் அவர்களுக்கு,
> > நன்றி பல.
> > மேலும் அன்பு சகோதரர் வினோத் ராஜன் அவர்கள் மூன்று புள்ளி என்பது இடையில்
> > ஏற்பட்டது என்று கூறி இருக்கிறார்
> > அவருக்காக
> > "முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன''  (தொல்.2)
>
> > தொல்காப்பியத்தில் உள்ளது எனவே தொல்காப்பியம் வருவதற்கு முன்பே ஆய்த எழுத்து
> > மூன்று புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
> > அன்புடன்
> > நக்கினம் சிவம்
>

> > 2010/4/4 Kamala Devi <saahith...@yahoo.com.sg>

> ...
>
> read more »

Nakinam sivam

unread,
Apr 4, 2010, 3:23:02 AM4/4/10
to mint...@googlegroups.com
அன்பு சகோதரர் வினோத் உங்களுடைய எதிர்ப்பு சிந்தனை 
மாறவில்லை என்பதனை மிக தெளிவாக காட்டி விட்டீர்கள்
எதோ குறை கண்டுபிடித்து பேர் வாங்கும் புலவர் ஆக மாறி விட்டீர் என்பது புலனாகிறது.
வேறு எந்த
மொழியிலும் இவ்வாறு புள்ளி எழுத்து இல்லை என்பது தமிழ் மொழிக்குச் சிறப்பாகும்.
இது நான் சொன்னதல்ல 
நீங்கள் சொன்ன தினமணி கட்டுரைதான்.
உங்களுக்காக மேற்கண்ட கட்டுரையை மீண்டும் தருகிறேன் 
நன்றாக படிக்கவும்

இசை உருவும், மொழி மரபும்!


ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்து. சார்பெழுத்து என்பது ஒன்றைச் சார்ந்து வருவது. ஒன்றினிடத்து பற்றுக்கோடாக வருவது. சார்த்தப்படுவதாலே சார்பெழுத்து என்றானது. இவ்வெழுத்து மொழிக்கு முதலிலும், இறுதியிலும் வராது, தனித்தும் வராது. ஆய்தம் அரை மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மையுடையது.

"எழுத் தெனப் படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப

 சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே" (தொல்.1)

சார்ந்துவரும் குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் எனும் மூன்றும் மொழியின் மரபிலக்கணமாக வழிவழியாக வந்ததாகும் என தொல்காப்பியர் முதற்பாவிலேயே குறிப்பிடுகிறார். அவ்வாறாயின், ஆய்தம் ஒரு மரபு எழுத்தாகும். தொன்றுதொட்டு முன்னோர்களால் பயன்படுத்தும் பண்பாடே மரபு. ஆய்த எழுத்தும் இந்த மரபுப் பண்பாட்டை காலங்காலமாகப் பெற்று வருகிறது. எனவே, வடிவத்தால் மிகப் பழமையானது ஆய்த எழுத்து. வேறு எந்த மொழியிலும் இவ்வாறு புள்ளி எழுத்து இல்லை என்பது தமிழ் மொழிக்குச் சிறப்பாகும்.


ஆய்த எழுத்து அடுப்புக்கூடுபோல அமைந்திருப்பதால் இது "அடுப்புக் கூட்டு எழுத்து" என்றும், மூன்று புள்ளிகளைக் கொண்டதால் "முப்பாற்புள்ளி" என்றும் பழங்காலப் போரில் பயன்படுத்திய ஆய்தமான கேடயத்தின் மூன்று புள்ளிகளைப் போல் உள்ளதால், இது "ஆய்த எழுத்து" என்றும், உயிர் எழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும் நடுவில் தோன்றி, மொழியிடைச் சார்ந்து நடுவில் வந்ததால் "நடுவுவாங்கிய எழுத்து" எனவும் பெயர் பெறும்.

"முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன''  (தொல்.2)

"பத்தென் கிளவி ஒற்றிடைக் கொடுவழி

நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி''  (தொல்.350)

என ஆய்த எழுத்தின் வடிவங்களைத் தொல்காப்பியர் தெளிவுபடுத்துகிறார்.


ஆய்த எழுத்து, மொழிக்கு இடையில் குற்றெழுத்தை அடுத்து உயிரோடு கூடிய வல்லெழுத்துகளான "கு, சு, டு, து, பு, று'' என்ற ஆறு எழுத்துகளின் மேல் ஏறிவரும். உதாரணம், எஃகு, கஃசு, கஃடு, உஃது, கஃபு, கஃறு.

மேலும், புணர்ச்சி விகாரத்திலும், செய்யுள் விகாரத்திலும் ஆய்தம் பிறக்கும். எனவே, ஆய்தம் எட்டு இடங்களிலும் தோன்றும்.

(உ.ம்) அவ்+கடிய = அஃகடிய.

ஒலியே ஒரு மொழிக்கு முதற்காரணமாகும். காற்று அனுத்திரளின் செயல்பாடு முயற்சி இவைகளால் உண்டாகும் ஒலியே எழுத்து எனப்படும். ஒலி பிறக்க ஒலியுறுப்புகள் செம்மையாகச் செயல்பட வேண்டும். அவ்வகையில் இது தலை, மிடறு, நெஞ்சு, நாக்கு, அண்ணம், மூக்கு, பல், இதழ் ஆகிய எட்டு உறுப்புகளும் செயல்பாட்டு விளக்கம் பெறும்போது சார்பெழுத்தாகிய ஆய்தம் பிறக்கும்.

ஆய்தம் இசையையும் உருவையும் அருகித் தோன்றும் என்பதை தொல்காப்பியர்,

"ஈறியல் மருங்கினும் இசைமை தோன்று'' (தொல்.39)

"இசையினும் உருவினும் அருகித் தோன்றும்

மொழிக் குறிப் பெல்லாம் எழுத்தினியலா

ஆய்தம் அஃகாக் காலை யான''  (தொல்.40)

எனும் நூற்பாக்களால் அறியலாம். (உ.ம்) அல்+திணை = அஃறிணை; பல்+துளி = பஃறுளி. ஆனாலும் ஆய்தம் அஃகாக்காலை அரைமாத்திரை அளவில் சுருங்கி நில்லாது உருவும் இசையும் மிகுதியாகும்போது நீண்டே ஒலிக்கும். (உ.ம்) "கஃஃறென்னும்" என்று நிறம் பற்றியும், "சுஃஃறென்னும்" என்று இசை பற்றியும் நீண்டே ஒலிக்கும் என்பது நம் முன்னோர்களின் ஒலி நுட்ப ஆய்வு. 

இதுமட்டுமல்ல, ஆய்தம் சில இடங்களில் முற்றாய்தமாகவும், குறுக்கமாகவும், அளபெடையாகவும், குறிப்பு மொழியின் கண்ணும் தோன்றும். இஃது, அஃது எனச் சுட்டப்படும் இடங்களில் உரசொலியாகவும், சில இடங்களில் நலிவொலியாகவும் இடம்பெறும்.

(உ.ம்) "அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்''  (குறள்:178)

ஆய்தம் என்னும் சொல், ஆய்தல் என்னும் சொல்லோடு தொடர்புடையதாக உள்ளது. ஆய்தல் என்பது உள்ளதன் நுணுக்கம் எனும் பொருள்படும். எனவே, ஆய்த ஒலி மிகமிக நுண்ணிய ஓசையைக் குறிக்கவே அக்காலத்தில் பயன்பட்டது என்பது தெளிவாகிறது. இக்காலத்தில், மொழியியலில் அயல்மொழி ஒப்பீட்டு ஆய்வுக்கு இது பெரிதும் துணை நின்று உதவுகிறது.

பன்னெடுங்காலமாக ஓலைச்சுவடிகளிலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் இதன் உருவம் ர்ர், :, -, அப்து என மாறிமாறி அழியாமல், முடிவில் ஃ என இவ்வாறு உருவம் பெற்றது. ஆய்த எழுத்து மொழிமரபு காக்கத் தோன்றிய எழுத்தாகும்.

காத்த.சீனிவாசன்

நன்றி:- தினமணி


2010/4/4 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>
> ...
>
> read more »

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

devoo

unread,
Apr 4, 2010, 4:44:35 AM4/4/10
to மின்தமிழ்
சிவம் ஐயா,
ஆய்த எழுத்தைக் காரண இடுகுறிப் பெயர் என்று
சொல்லலாமா ?

தேவ்


On Apr 4, 2:23 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> அன்பு சகோதரர் வினோத் உங்களுடைய எதிர்ப்பு சிந்தனை
> மாறவில்லை என்பதனை மிக தெளிவாக காட்டி விட்டீர்கள்
> எதோ குறை கண்டுபிடித்து பேர் வாங்கும் புலவர் ஆக மாறி விட்டீர் என்பது
> புலனாகிறது.
> வேறு எந்த
> மொழியிலும் இவ்வாறு புள்ளி எழுத்து இல்லை என்பது தமிழ் மொழிக்குச் சிறப்பாகும்.
> இது நான் சொன்னதல்ல
> நீங்கள் சொன்ன தினமணி கட்டுரைதான்.
> உங்களுக்காக மேற்கண்ட கட்டுரையை மீண்டும் தருகிறேன்
> நன்றாக படிக்கவும்
>

> *இசை உருவும், மொழி மரபும்!*


>
> ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்து. சார்பெழுத்து என்பது ஒன்றைச் சார்ந்து வருவது.
> ஒன்றினிடத்து பற்றுக்கோடாக வருவது. சார்த்தப்படுவதாலே சார்பெழுத்து என்றானது.
> இவ்வெழுத்து மொழிக்கு முதலிலும், இறுதியிலும் வராது, தனித்தும் வராது. ஆய்தம்
> அரை மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மையுடையது.
>
> "எழுத் தெனப் படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப
>
>  சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே" (தொல்.1)
>
> சார்ந்துவரும் குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் எனும் மூன்றும் மொழியின்
> மரபிலக்கணமாக வழிவழியாக வந்ததாகும் என தொல்காப்பியர் முதற்பாவிலேயே
> குறிப்பிடுகிறார். அவ்வாறாயின், ஆய்தம் ஒரு மரபு எழுத்தாகும். தொன்றுதொட்டு
> முன்னோர்களால் பயன்படுத்தும் பண்பாடே மரபு. ஆய்த எழுத்தும் இந்த மரபுப்

> பண்பாட்டை காலங்காலமாகப் பெற்று வருகிறது. எனவே, *வடிவத்தால் மிகப் பழமையானது


> ஆய்த எழுத்து. வேறு எந்த மொழியிலும் இவ்வாறு புள்ளி எழுத்து இல்லை என்பது தமிழ்

> மொழிக்குச் சிறப்பாகும்.*


>
> ஆய்த எழுத்து அடுப்புக்கூடுபோல அமைந்திருப்பதால் இது "அடுப்புக் கூட்டு
> எழுத்து" என்றும், மூன்று புள்ளிகளைக் கொண்டதால் "முப்பாற்புள்ளி" என்றும்
> பழங்காலப் போரில் பயன்படுத்திய ஆய்தமான கேடயத்தின் மூன்று புள்ளிகளைப் போல்
> உள்ளதால், இது "ஆய்த எழுத்து" என்றும், உயிர் எழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும்
> நடுவில் தோன்றி, மொழியிடைச் சார்ந்து நடுவில் வந்ததால் "நடுவுவாங்கிய எழுத்து"
> எனவும் பெயர் பெறும்.
>

> *"முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன''  (தொல்.2)


>
> "பத்தென் கிளவி ஒற்றிடைக் கொடுவழி
>
> நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி''  (தொல்.350)
>

> என ஆய்த எழுத்தின் வடிவங்களைத் தொல்காப்பியர் தெளிவுபடுத்துகிறார்.*

> 2010/4/4 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>

manikandan

unread,
Apr 4, 2010, 5:46:15 AM4/4/10
to மின்தமிழ்
அருமையான விவாதம். இதுபோன்ற் ஆக்கப்பூர்வமானப் பணியில் மின்குழுமம்
செயல்பட்டுவருவது என்னைப்போன்ற தமிழ் ஆர்வளர்களுக்கு மிகவும் பயன். நன்றி
குழுமத்தின் தலைவருக்கு.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.

Nakinam sivam

unread,
Apr 4, 2010, 6:02:23 AM4/4/10
to mint...@googlegroups.com
அன்பு சகோதரர் தேவ அவர்களுக்கு,
தாராளமாக சொல்லலாம்.
தமிழில் எல்லா வார்த்தைகளுமே கூடுமான வரை காரண பெயராகத்தான் உள்ளது.
மற்றும் இடு குறி பெயர்களாக உள்ளது.
காரணம் தமிழ் ஆக்கிய சித்தர்கள் 
காரண காரியம் ஆராய்ந்தே பெயர்களை சூட்டி இருக்கிறார்கள்.
அதுவும் இறைவனை காரிய காரணம் கடந்தவன் என்பதை காட்ட
இரண்டு கண்கள் காரியப்பட்டால் மனம் காரணப் படும்.
இந்த இரண்டையும் கடந்தால் மூன்றாவதான ஆன்மா காரியப்படும்.
இரண்டு புள்ளிகளுக்கு மேல் மூன்றாவதாக காரண காரியம் கடந்த ஆன்மாவை குறிக்கும் விதத்தில் அமைத்தார்கள்.
நீங்கள் சொன்ன காரண இடுகுறி பெயர் என்பது
மிக சரியான ஒன்று.
அன்புடன்
சிவம்


2010/4/4 devoo <rde...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

devoo

unread,
Apr 4, 2010, 6:44:52 AM4/4/10
to மின்தமிழ்
நன்றி ஐயா, விரிவான ஆராய்ச்சி.

நாற்காலி என்பதைக் காரண இடுகுறிப் பெயர் என வகைப்படுத்துவர்; அதை
மனத்தில்கொண்டு வினவினேன்.

ஆய்த எழுத்துத் தொடர்பான சில கருத்துக்கள் –

http://ve.bdu.ac.in:8080/tamil/mat/matt02/html/mat02003mp2b.htm

‘ஆய்தப் புள்ளி’ என்பதனால் அதனை மெய்போலக் கொள்ள வேண்டும் என்கிறார்
இளம்பூரணர்.
புணர்மொழி ஆய்தம்
இரு சொற்களின் புணர்ச்சியில் ஆய்தம் வருவதுண்டு.
(எ-டு)
அல் + திணை -> அஃறிணை
பல் + தொடை-> பஃறொடை
கல் + தீது -> கஃறீது
முள் + தீது -> முஃடீது
இங்கு நிலைமொழியீற்றில் உள்ள லகரமும் ளகரமும் வருமொழி முதலில் உள்ள
தகரத்தோடு புணரும் போது ஆய்தமாகத் திரிந்துள்ளன. இவ்வாறு வருவதே
புணர்மொழி ஆய்தம்.

நூற்பா
ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும். (தொல். எழுத்து, மொழி. 6)
ஈறியல் மருங்கு = நிலைமொழியீறும் வருமொழி முதலும் புணர்தல்.
இசைமை = ஆய்த எழுத்தின் ஓசை.

தனிமொழி ஆய்தம் தொடர்பான மற்றொரு கருத்து -
ஆய்த எழுத்தைப் பற்றித் தொல்காப்பியர் மற்றொரு கருத்தையும் கூறுகிறார்.
நிறத்தையும், ஓசையையும் குறிக்கும் குறிப்பு மொழிகளில் ஆய்தம் இடம்
பெறும். இது அருகிய வழக்கே என்கிறார்.
(எ-டு) கஃறு (நிறம்), சுஃறு (இசை)
நச்சினார்க்கினியர் ஆய்தம் அளபெடுத்து வருவதை இங்குக் குறிப்பிடுகிறார்.
(எ-டு) கஃறென்னும் கல்லதர் அத்தம்
சுஃறென்னும் தண்தோட்டுப் பெண்ணை

நூற்பா
உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அஃகாக் காலை யான. (தொல். எழுத்து. மொழி. 7)

ஆய்தம் தொடர்பான மொழியியல் கருத்துகள் -
ஆய்தத்தை உரசொலி என்பர் மொழியியலார். புணர்மொழியில் வரும் ஆய்தங்கள்
வெடிப் பொலிகளின் (வல்லினமெய்) மாற்று வடிவங்கள் என்கிறார் தெ.பொ.மீ.
(தமிழ்மொழி வரலாறு, ப. 94,95)
கல் + தீது = கற்றீது; முள் + தீது = முட்டீது என வரும் புணர்ச்சிகளில்
ற், ட் எனும் வல்லினங்களுக்கு மாற்று வடிவமாக வருவது ஆய்தம். அதாவது
‘கற்றீது’ என்பது ‘கஃறீது’ எனவும் ‘முட்டீது’ என்பது முஃடீது எனவும்
வரும் போது ற், ட் ஒலிகளுக்கு ஃ மாற்று வடிவமாக வருவது காணலாம். இந்த
ஆய்த ஒலி வல்லெழுத்து ஆறன் மேல்நின்று அவற்றின் வல்லோசையை மென்மையாக்கி
விடுகிறது. ‘அக்கு’ என்பதில் உள்ள ‘கு’வையும் அஃகு என்பதில் உள்ள ‘கு’
வையும் உச்சரித்து ஒப்பிடுங்கள். இதனை உணர்ந்த மாணிக்கநாயகர்
பிறமொழிக்கண் காணப்படும் சில ஒலிகளை மென்மைப் படுத்த ஆய்தத்தைப்
பயன்படுத்தலாம் என்று கூறிக் ‘காப்பி’யை காஃபி என்று எழுத
வழிகாட்டினார்.

ஆய்தம் தொடர்பான கருத்துகளின் தொகுப்பு -

*ஆய்தம் உயிரும் மெய்யும் அல்லாத தனிநிலை எழுத்து.

*எனினும் மெய்க்குரிய அரை மாத்திரை பெறுவதால் ஒருவகையில் மெய் போலக்
கொள்ளப்படும்.

*ஆய்தம் தனிமொழியிலும் வரும்; புணர்மொழியிலும் வரும்.

*குற்றெழுத்தின் பின்னாலும் வல்லின உயிர்மெய்க்கு முன்னரும் வரும்.
இதுவே ஆய்தத்துக்கு இடம்.

*ஆய்தம் அளபெடுத்தும் வருவதுண்டு.

*மொழியியலார் ஆய்தத்தை வெடிப்பொலிகளின் மாற்று வடிவங்களாகக்
கொள்கின்றனர்.

*ஆய்த எழுத்தைப் பிறமொழிச் சொற்களில் உள்ள வல்லெழுத்துகளை மென்மையாக்கப்
பயன்படுத்தும் முயற்சி தமிழில் சிலரால் புகுத்தப்பட்டது.


தேவ்

> ...
>
> read more »

Kamala Devi

unread,
Apr 4, 2010, 7:04:33 AM4/4/10
to mint...@googlegroups.com
தேவ்
ஞான்- ஞான் , எழுத நினைத்த வரிகள். ஆனால் தயங்கின வரிகள்.
மிகத்தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.
ல கரமும் ழ கரமும் பற்றிய வரு,மொழி பற்றி, இளம்பூரணர் மட்டுமல்ல.
முனைவர் கார்த்திகேயன் எழுதிய நூலிலும் உண்டு
கமலம்

http://www.kamalagaanam.blogspot.com

http://ve.bdu.ac.in:8080/tamil/mat/matt02/html/mat02003mp2b.htm


தேவ்

--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe, reply using "remove me" as the subject.

New Email names for you!
Get the Email name you&#39;ve always wanted on the new @ymail and @rocketmail.

Hurry before someone else does!

http://mail.promotions.yahoo.com/newdomains/sg/

Nakinam sivam

unread,
Apr 4, 2010, 7:29:26 AM4/4/10
to mint...@googlegroups.com
அன்பு தேவ்.
மிக சிறப்பாக ஆய்வு செய்துள்ளீர்கள்.
மேலும் உங்களது வரிகளில்

1  *ஆய்தம் உயிரும் மெய்யும் அல்லாத தனிநிலை எழுத்து.

2  *எனினும் மெய்க்குரிய அரை மாத்திரை பெறுவதால் ஒருவகையில் 
     மெய் போலக் கொள்ளப்படும்.

3  *ஆய்தம் தனிமொழியிலும் வரும்; புணர்மொழியிலும் வரும்.

1  நமது ஆன்மா உயிரும் மெய்யான உடலும் இயங்கு நிலையிலும் எந்த இயக்கத்தையும் சாராமல் தனித்து இருக்கும்.

2  எனினும் மெய் என்னும் உடலினுள்ளே இருப்பதால் ஆன்மாவையும் மெய் என கொள்ள வேண்டும்.

3  ஆன்மா மெய் எனும் உடலோடு சேர்ந்து இருந்தாலும் இறைவனோடு கலக்கின்ற புணர்ச்சியின் பொது தன்னை அறியும்.

என்று பொருள் படும்.
மேலும் இந்த ஆன்மாவை அறிய உதவும் ஆயுதம் எது ?
அது பாதம்
இறைவனின் பாதத்தை பிடிக்க சொன்னது எதற்காக ?
பாதம் என்றால் கால் 
கால் என்றால் காற்று
நாம் விடுகின்ற மூச்சே கால் எனப்படும்.
இதைதான் காற்றை பிடிக்கும் கணக்கரிவாளர் கூற்றை உதைப்பார்
என்று சொன்னார்கள்.
நாம் விடுகின்ற மூச்சுக்கும் நமது ஆயுளுக்கும் தொடர்பு உள்ளது என்று சித்தர்கள் வகுத்து இருக்கிறார்கள்..
உள்ளே போகின்ற சுவாசம் மேலே அண்டத்தில் சேர்ந்தால் 
ஞான நிலை வாய்க்கும்.
ஆகவே ஒவ்வொன்றையும் நுணுகி ஆராய்ந்தால் 
அனைத்தும்  இறை நிலையை தெரிவிக்கும் என்பதனை உணரலாம். 
அன்புடன்
சிவம்

2010/4/4 Kamala Devi <saahi...@yahoo.com.sg>
Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.

Hurry before someone else does!
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Nakinam sivam

unread,
Apr 4, 2010, 9:59:26 AM4/4/10
to mint...@googlegroups.com
ஆய்த எழுத்து அடுப்புக்கூடுபோல அமைந்திருப்பதால் இது "அடுப்புக் கூட்டு எழுத்து" என்றும், மூன்று புள்ளிகளைக் கொண்டதால் "முப்பாற்புள்ளி" என்றும் பழங்காலப் போரில் பயன்படுத்திய ஆய்தமான கேடயத்தின் மூன்று புள்ளிகளைப் போல் உள்ளதால், இது "ஆய்த எழுத்து" என்றும், உயிர் எழுத்துக்கும் மெய்யெழுத்துக்கும் நடுவில் தோன்றி, மொழியிடைச் சார்ந்து நடுவில் வந்ததால் "நடுவுவாங்கிய எழுத்து" எனவும் பெயர் பெறும்.

அடுப்பு கூடு எழுத்து என்று சொன்னதற்கு காரணம் உண்டு
இது தெரிய வேண்டும் என்றால்
நாம் அவ்வையாரின் அகவலை நோக்க வேண்டும்.

அது 
மூலாதாரத்து மூண்டு எழு கனலை 
காலால் எழுப்பும் கருத்து அறிவித்து

என்கின்ற வரிகளின் பொருள் உணர்ந்தால்
அடுப்பு கூட்டு எழுத்து என்று ஏன் பெயர் வந்தது என்பதனை உணரலாம்.

இங்கே மூலாதாரம் என்றால் பதஞ்சலியின் யோக சூத்திரத்தை வைத்து பார்க்கும் போது மூலாதாரம் என்பது நமது மல வாயிலுக்கு அருகில் இருப்பதாக கருதப்பட்டு வருகிறது.
ஆனால் சித்தர்கள் மூலாதாரம் என்பது புருவ மதியத்தில் உள்ளதாக எடுத்துரைக்கிறார்கள்.
அதாவது மூன்றாவது கண் எனப்படுகின்ற நமது ஆன்மாவே 
மூலாதாரம் எனப்படுகிறது.
அது கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்குகிறது.
இருப்பினும் அது அசுத்த மாயை என்னும் திரை மறைப்பில் உள்ளதால் 
அது அக்னி என்னும் கனலாக உள்ளது 
கனல் என்பது நெருப்பு அது ஜோதியாக மாற வேண்டும் என்றால் 

இங்குதான் அடுப்பு கூட்டு எழுத்து என்ற பெயர் ஏன் வந்தது என்று உணரலாம்.
அடுப்பில் உள்ள கனலை கொழுந்து விட்டு எரிய செய்ய வேண்டும் என்றால் எனா செய்வோம். ஊது குழ கொண்டு காற்றால் ஊதுவோம்.

மூலாதாரம் எனப்படும் நமது ஆன்மா மூண்டு எழு கனலாக கனன்று கொண்டு இருக்கிறது அதை தீபமாக மாற்ற நாம் நமது மூச்சு காற்றை மேலே ஊதுவதன் மூலம் ஏற்றுகின்ற ரகசியம் அறிந்தால் இறை தரிசனம் வாய்க்கும். இதைதான் சித்தர்கள் சாகா கல்வி என்று மறை பொருளாக ரகசியமாக வைத்து இருந்தார்கள்.

இந்த ரகசியத்தின் வடிவாகதான் அடுப்பு கூட்டு எழுத்து என்று ஆயுத எழுத்தினை படைத்தார்கள்.

மேலோட்டமாக பார்த்தால் சித்தர்களின் பாதை புரியாது.

மூலாதாரம் என்பது மலக்குடளுக்கு அருகில் இல்லை என்பதை 
சுப்பிரமணியர் ஞானத்தில் மிக தெளிவாக எழுதி உள்ளார்.
அந்த பாடலை அடுத்த மடலில் அளிக்கிறேன்.
அன்புடன்
சிவம்


2010/4/4 Nakinam sivam <nak...@gmail.com>

devoo

unread,
Apr 4, 2010, 10:29:16 AM4/4/10
to மின்தமிழ்
ஆகா, அஃகேனம் வல்லெழுத்துத்தான் , இன்னும் தொடர்கிறதே !

என் பங்குக்கு இணையம் தரும் இன்தமிழ்ச் சொற்கள் சிலவற்றை இங்கு இடுகிறேன்
-

அஃதை ( சோழ இளவரசி ஒருத்தி), அஃகம் ( grain), அஃகரம் (வெள்ளெருக்கு),
அஃகல் ( சுருங்குதல்), அஃகு (ஊறுநீர்), அஃகுள் (அக்குள்), அஃது
(அது), இஃகுதல் (இழுத்தல்), இஃது (இது), உஃது (உது), எஃகம் (கூர்மை),
எஃகு (உருக்கு), எஃகுதல் (நெகிழ்தல்), ஒஃகல் (ஒதுங்குதல்), கஃசு (காற்
பலம் எடை), கஃறு (கறுத்தது), சஃகுல்லி (சிற்றுண்டி வகை), சுஃறு (ஓலை
எரியும் போது உண்டாகும் ஓசை), பஃது (பத்து), பஃதி (பகுதி), பஃறி (படகு-
பட்டினப்பாலை), வெஃகல் (விரும்புதல்)

தேவ்

N. Ganesan

unread,
Apr 4, 2010, 12:11:22 PM4/4/10
to மின்தமிழ்

On Apr 3, 7:54 pm, ananda rasa thiruma <aaraa...@gmail.com> wrote:
> அவ் + கடிய=அஃகடிய என்பதற்கும் ஔ என்னும் எழுத்தின் பின்னால் ஆய்தம் வரும்
> என்பதற்கும் தொடர்பில்லை. அவ், இவ், உவ் என்பன பன்மைப் பொருள் உணர்த்தும்
> சுட்டுச் சொற்கள். எழுத்தன்று. அவற்றின் பின் வல்லெழுத்து வரின் ஆய்தமாகும்
> என்பது விதி. இதில் ‘வ்‘ என்னும் எழுத்து ஆய்தமாக மாறியுள்ளது. அதற்கு முன்
> உள்ளது தனிக் குறில். புணர்ச்சியில் தோன்றும் ஆய்தம் பற்றிக் கூறும் போது இது
> இடம் பெற்றுள்ளது. இச்சொற்களுடன் ஐகாரச் சாரியை சேர்ந்து அவை, இவை, உவை என
> வழங்கப்பெறுகின்றன.
>
> கூடுதலாக ஒரு செய்தி. தமிழில் ‘வ்’ என்னும் எழுத்தில் முடியும் சொற்கள்
> நான்குதாம் உள்ளன எனத் தொல்காப்பியர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவற்றில்
> மேலே குறிப்பிட்ட பன்மைப் பொருள் உணர்த்தும் சுட்டுப் பெயர்கள் மூன்று. தெவ்
> என்னும் பகைப் பொருளில் வரும் சொல் ஒன்று.
>

நன்றி. திரு. ஆராதி.

அன்புடன்,
நா. கணேசன்

> அன்புடன்
> ஆராதி
>

> 2010/4/3 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>

> > > > > Visit our website:http://www.tamilheritage.org;youmaylike to visit


> > our
> > > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > > To unsubscribe from this group, send email to
> > > > > minTamil-u...@googlegroups.com
> > > > > For more options, visit this group at
> > > > >http://groups.google.com/group/minTamil
>
> > > > > To unsubscribe from this group, send email to mintamil+
> > > > > unsubscribegooglegroups.com or reply to this email with the words
> > "REMOVE
> > > > > ME" as the subject.
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>

ananda rasa thiruma

unread,
Apr 4, 2010, 12:14:17 PM4/4/10
to mint...@googlegroups.com
திரு சிவம்,
நீங்கள் காட்டிய தொல்காப்பிய நூற்பாவை முழுமையும் பாருங்கள். அதைப் பற்றிய உரையாசிரியர்கள் கருத்தையும் கவனியுங்கள். பின்னர் வழக்காறுகளை ஒப்பிட்டுப்பாருங்கள். அதன் பிறகு முடிவுக்கு வாருங்கள்.
‘குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன‘
என்பதே நூற்பா. தொல்காப்பியர் சார்பெழுத்து எனக் கொண்டவை மூன்றும் அக்காலத்தில் புள்ளியிட்டுக் காட்டப் பெற்றன என்பது உரையாசிரியர் சிலர் கருத்து. கல்வெட்டுக்களில் மூன்று புள்ளியுடையதாக ஆய்தம் இல்லை. மேலும் கீழும் புள்ளிகள். இடையில் கோடு என்னும் வடிவத்தில் கல்வெட்டு ஒன்றில் ஆய்தம் காணப்படுகிறது. முக்கூட்டு வடிவில் ஆய்தம் எழுதப்பட்டது மிகப் பிற்கால வழக்கு. சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


அன்புடன்
ஆராதி

2010/4/4 Nakinam sivam <nak...@gmail.com>

Nakinam sivam

unread,
Apr 5, 2010, 11:15:15 PM4/5/10
to mint...@googlegroups.com
சென்ற மடலில் மூலாதாரம் எது என்பதை பற்றி சித்தர் சுப்பிரமணியர் ஞானம் பாடல்களில் உள்ளதை பற்றி எழுதி இருந்தேன். அதை கீழே தருகிறேன்.

மூலாதாரம் எது என்பதன் ஆதாரம் - சித்தர் சுப்பிரமணியர் ஞானம் 

பேநியதோர் அடி வயிற்றைப் பார்வை செய்வார் 
பிலமுள்ள மேல் வயிற்றைத் தியானம் செய்வார் 
பாநியதோர் நெஞ்சதனை நியாயம் செய்வார் 
பகருகின்ற கண்டத்தை நிசமே செய்வார் 
கானியதோர் கபால நிலா அறமே என்பார் 
கருத்துள்ள நெற்றிக்கண் கானச்சொல்லார்
ஆணியதோர் மூக்கு முனை யதீதமென்று 
அழகுள்ள இரு கண்ணும் பார்வையாமே.

பார்வைஎன்ற இந்த முறை யதீதமேன்பார் 
பண்பில்லா மூடரப்பா நியாயஞ் செய்வார் 
சேர்வை என்ற குரு சீஷர் இருவர் கெட்டார்
செகந்தனிலே நோய் பிறந்தே உழன்று போவார் 
கொர்வைஎன்ற ஐம்பூத கவனமாகி 
கொடிதான துயரத்தால் மாண்டு போவார் 
ஏர்வை என்ற ஞானம் வந்து என்ன செய்யும் 
எட்டு இரண்டும் அறியாத மூடர் தானே. 

மேற்கண்ட சுப்ரமணியரின் சுத்த ஞானம் பதஞ்சலி யோக சூத்திர முறையில் கூறப்பட்ட சக்கரங்கள் மேலேற்றும் பாவனையால் ஞான நிலையினை அடைய முடியாது என்று தெளிவாக கூறுகிறார். ஆகவே சுத்த சன்மார்க்க நிலையினை அடைவதற்கு சக்கரங்களை தேடி போக வேண்டாம் என்று நமது வள்ளல் பெருமானும் மற்றும்  சித்தர்கள் கூறுகிறார்கள். இது யாருடைய மனதையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்படவில்லை. நமது சன்மார்க்க அன்பர்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றே எழுதப்பட்டது.

எட்டும் இரண்டும் என்பதற்கு விளக்கத்தை சித்தர்கள் மறைத்து வைத்தார்கள். காரணம் எட்டும் இரண்டும் என்பது சன்மார்க்கதிற்கான பயிற்சி. இப்பயிற்சி குரு மூலமாய் மேற்கொள்ள வேண்டிய பயிற்சி. தவறாக பயிசி செய்தால் உடல் உபாதைகள் ஏற்பட்டு உடல் நலக் குறைவு ஏற்படுவதுடன் மன நல குறைவும் ஏற்ப்படும். 

நமது வள்ளல் பெருமானும் 
எட்டு இரண்டு என்பது இயலு முற்படிஎன 
அட்ட நின்று ஓங்கிய அருட்பெரும்ஜோதி 
என்று கூறி உள்ளார்கள்.

ஆக எட்டு என்பதற்கு தமிழில் அ என்ற எழுத்து எண்ணாக பயன்படுத்த படுகிறது. இரண்டு என்பதற்கு உ என்ற எழுத்து எண்ணாக பயன்படுத்த படுகிறது. அ என்பது அடி என்ற பதத்திலும் உ என்பது உச்சி என்ற பதத்திலும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக அடி முடி என்பதைத்தான் எட்டும் இரண்டும் என்று பயன்படுத்தினார்கள். அடி என்றால் கால் கால் என்றால் காற்று உச்சி என்றால் தலை தலை என்றால் அண்டம் ஆக காற்றை அண்டத்திற்கு ஏற்றும் பயிற்சியே எட்டும் இரண்டும் என்று சித்தர்கள் மறைத்து வைத்தார்கள். 

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு 

2010/4/4 ananda rasa thiruma <aara...@gmail.com>
திரு சிவம்,

Madhurabharathi

unread,
Apr 6, 2010, 12:43:09 AM4/6/10
to mint...@googlegroups.com
2010/4/6 Nakinam sivam nak...@gmail.com

 

மேற்கண்ட சுப்ரமணியரின் சுத்த ஞானம் பதஞ்சலி யோக சூத்திர முறையில் கூறப்பட்ட சக்கரங்கள் மேலேற்றும் பாவனையால் ஞான நிலையினை அடைய முடியாது என்று தெளிவாக கூறுகிறார்.
 
அன்பு சிவம்,
 
நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடலில் பதஞ்சலி யோகசூத்திரம் பற்றிய குறிப்பு எங்கே உள்ளது?
 
நீங்கள் பதஞ்சலி யோகசூத்திரத்தை அல்லது அதன் விளக்கத்தைப் படித்ததுண்டா? அதில் சக்கரங்களைப் பற்றி வரும் இடம் எது? திருமூலரின் திருமந்திரமும் பேசும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகம் சக்கரத்தில் சம்யமம் (தியானம் அல்ல) செய்வதுடன் நின்றுவிடுகிறதா? சக்கர சம்யமத்தால் ஞானம் அடையலாம் என்று பதஞ்சலி யோக சூத்திரம் சொல்கிறதா?
 
அன்புடன்
மதுரபாரதி

வி. சு.

unread,
Apr 6, 2010, 7:15:26 AM4/6/10
to மின்தமிழ்

On Apr 4, 10:31 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
...

> தொல்காப்பியத்தில் உள்ளது எனவே தொல்காப்பியம் வருவதற்கு முன்பே ஆய்த எழுத்து
> மூன்று புள்ளிகளால் குறிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
...

இப்போது உள்ள தொல்காப்பியம் பலர் படியெடுத்து, அதன் பின் அச்சேறி
வந்திருக்கிறது.

இதை வைத்து தொல்காப்பியர் ஆய்த எழுத்தில் மூன்று புள்ளிகளை
வைத்திருப்பார் என்று சொல்ல முடியாது. :-)

Kannan Natarajan

unread,
Apr 11, 2010, 10:17:23 PM4/11/10
to Min Thamizh
இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி!

தன் மகன் ஓட்டிச் சென்ற தேர்க்காலில் சிக்கி பசுவின் கன்று இறந்ததை - "ஆராய்ச்சி மணி" வாயிலாக அறிந்த மனுநீதிச்சோழன், தன் மகனையும் அதே தேர்க்காலில் கிடத்திக் கொன்றுவிடுமாறு கூறியது அறிவார்ந்த நீதிதானா?



அக்கால நடைமுறை!

மனுநீதிச்சோழன் பற்றிய செய்தி, 
  • சிலப்பதிகாரம்
  • புறநானூறு
  • பழமொழி
  • மூவருலா
  • கலிங்கத்துப்பரணி
  • பெரியபுராணம் 
ஆகிய நூல்களில் உயர்த்திப் பேசப்பட்டுள்ளது.

இளவரசனுக்கு மரண தண்டனை விதித்ததற்கு இரண்டு காரணங்கள் பெரியபுராண ஆசிரியரான சேக்கிழாரால் கூறப்பட்டுள்ளன.

முதலாவது, "கன்றை இழந்து அந்தத் தாய்ப்பசு படும் துன்பத்தை என் மகனை இழந்து நான் படவேண்டும்'' என்று மன்னன் கூறுவது.

இரண்டாவதாகக் கூறப்பட்ட காரணம், திருவாரூர் ஒரு புண்ணியத்தலம். அங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமான் முப்பெரும் தெய்வங்களால் வணங்கப்பட்டவர். திருவாரூரில் தோன்றிய புல், பூண்டு முதல் ஆறறிவு உயிர்கள் வரை அனைத்தும் சிவகணங்கள். இவற்றுள் எதனைக் கொன்றாலும் சிவகணத்தைக் கொன்ற பெரும்பழி வந்து சேரும். அதற்குரிய தண்டனை மரண தண்டனைதான் என்று மன்னன் கூறுகிறான். 

இது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம். 

இதிலிருந்து இதே நிகழ்ச்சி திருவாரூரைத் தவிர வேறு ஓர் ஊரில் நடைபெற்று இருப்பின் அக்குற்றத்துக்கு மரணதண்டனை விதிக்கப்படாது என்பது தெளிவாகிறது.

தண்டனை நிறைவேற்றுவதற்கான முறைகள் இருபதுக்கும் மேலானவை இலக்கியங்களிலும் புராணங்களிலும் காணப்படுகின்றன. 

அவற்றை எல்லாம் விடுத்து தேரை ஏற்றிக் கொல்லும் முறையை மன்னன் ஏன் மேற்கொண்டான்? 

ஒருவன், எந்த ஒரு பொருளின் மேல் அதிகமாக ஆசைப்பட்டு குற்றம் இழைக்கிறானோ அதே பொருளால் அவனுக்குத் தண்டனை வழங்குவது பண்டைக்கால வழக்கங்களுள் ஒன்றாகும்.

முற்காலத்தில் மன்னர்கள் தேர்கள் வைத்திருப்பதையும் அவற்றைப் பல வகைகளில் ஓட்டி பாராட்டுப் பெறுவதையும் தங்கள் வாழ்வின் குறிக்கோளாகவும் பெருமையாகவும் கருதினர் என்பதற்கும், மன்னர்களுக்குத் தேரின் மீது இருந்த அளவுக்கு மீறிய ஆர்வத்துக்கும் வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன.

அதேபோல மனுநீதிச் சோழனின் மகனுக்கும் தேரோட்டுவதில், அதைப்பலர் பாராட்டக் கேட்பதில் அளவற்ற ஆர்வம். ஏன் வெறியே இருந்தது. 

இக்கருத்தை இராமலிங்க வள்ளலார் எழுதிய "மனுமுறை கண்ட வாசகம்",என்னும் நூலில் உள்ள கீழ்வரும் பகுதிகள் விளக்கும்.

"சிவதரிசனம் செய்யப் போகிறவன் தேரூர்ந்தே போகக்கூடாது. அவ்வாறு போயினும் நாற்புறத்திலும் நடப்போர்களை விலகும்படி ஆள்விலக்கிகளை விட்டு முன்னே பரிகாரகர் வரவு குறித்துப் போக, பின்னே மெல்லெனத் தேரை விடவேண்டும்''. 

அப்படிச் செய்யாமல் பாலியப்பருவம் பயமறியாது என்பதற்குச் சரியாக, பரபரப்பாகத் தேரை நடத்தி பசுங்கன்றைக் கொன்றான் எனவும் 

"என் புத்திரன் தேரில் ஏறிக்கொண்டு செல்வச் செருக்கினால் மறதி பற்றியே இப்பசுவின் கன்றைக் கொன்றான்'' என்றும் மனுநீதிச் சோழன் கூறுகிறான்.

திருவாரூர் சோழர்களின் தலைநகராக இருந்திருப்பின் இளவரசன் திருவாரூரில்தான் பிறந்திருப்பான். திருவாரூரில் பிறந்த உயிர்கள் அனைத்தும் சிவகணங்கள் என்பதால் அவற்றைக் கொல்லக்கூடாது என்பது சமயக்கொள்கை. அதனால் மன்னன், இளவரசனுக்கு மரணதண்டனை விதித்திருக்க மாட்டான்.

சோழ இளவரசன் தேரை அதிகமாக விரும்பி, அதன் காரணமாகக் குற்றம் செய்ததால், தேரையே அவனைக் கொல்லும் கருவியாக மாற்றி தண்டனை வழங்கினான் சோழ மன்னன்.

இத்தகைய தண்டனை வழங்கியதற்கு புனை கதை மற்றும் புராணச் சான்றுகளைத் தவிர வரலாற்று ஆதாரமும் ஒன்று உள்ளது.

காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றிய வர்ணனையில், சிலப்பதிகாரத்தில் ஒரு செய்தி கூறப்பட்டுள்ளது. 

"வீதிகளில் பல பண்டங்கள் காவல் இன்றிக் கிடந்தன. ஏனெனில் அவற்றைக் களவு செய்வோர் உளராயின் அவர் கழுத்துக் கடுப்பப் பொதியைத் தலையில் ஏற்றி ஊரைச் சூழ்விப்பின் அல்லது அவர்க்கே கொடுத்துவிடாது. அதனால் களவு என்பதை நினைப்பதற்கே நடுங்கும் மன்றம்'' என்னும் கருத்தமைந்த "ஒருவன் எந்தப் பொருளை விரும்பித் திருடுகிறானோ அதே பொருளை அவன் சுமக்க முடியாத அளவுக்கு அவன் தலையில் ஏற்றி ஊரைச் சுற்ற வைப்பது தண்டனையாக வழங்கப்பட்டது என்பது இந்திரவிழவூரெடுத்த காதை (115-17)யில் சொல்லப்பட்டுள்ளது.

புராணக் கருத்துகளின்படி இளவரசன் பசுவின் கன்றைக் கொன்றது குற்றம் என்பதும், அக்குற்றம் நடைபெற்ற இடத்தை வைத்து அதற்குரிய தண்டனை மரண தண்டனை என்பதும் வரலாற்று மற்றும் பண்பாட்டுப் வழக்கப்படி தேரை ஏற்றிக் கொன்றது அக்காலத்து நடைமுறை என்பதும் தெளிவாகிறது.

கா.மு.சிதம்பரம்

N. Kannan

unread,
Apr 12, 2010, 4:22:03 AM4/12/10
to mint...@googlegroups.com
2010/4/12 Kannan Natarajan <thar...@gmail.com>

"ஒருவன் எந்தப் பொருளை விரும்பித் திருடுகிறானோ அதே பொருளை அவன் சுமக்க
முடியாத அளவுக்கு அவன் தலையில் ஏற்றி ஊரைச் சுற்ற வைப்பது தண்டனையாக
வழங்கப்பட்டது என்பது இந்திரவிழவூரெடுத்த காதை (115-17)யில்
சொல்லப்பட்டுள்ளது."

அட! எங்க அம்மா சங்க மரபு என்று தெரிகிறது.

ஒரு நாள் என் அண்ணன் (சித்தி பையன்) என் அப்பாவுடன் சாப்பிடும் போது
“பெரியப்பாவிற்கு மட்டும் நீ நிறைய சர்க்கரைப் பொங்கல் வைக்கிறாய்” என்று
சொல்லப்போக (அப்போது அவனுக்கு 10 வயது இருக்கலாம்), வந்ததே எங்க
அம்மாவிற்குக் கோபம். அவனைத் தரதரவென்று இழுத்து ஒரு ரூமில் பூட்டி,
அன்று பண்ணிய அத்தனை சர்க்கரைப் பொங்கலையும் (ஒரு குண்டான் பொங்கல்) அவன்
முன்னே வைத்து, தின்று முடித்தால்தான் கதவைத்திறப்பேன் என்று
சொல்லிவிட்டாள்! பாவம் சேது! வாழ்நாளுக்கும் மறக்கமுடியாத படிப்பிணை அது
;-)

க.>

Ramesh

unread,
Apr 12, 2010, 6:04:00 AM4/12/10
to mint...@googlegroups.com
நீங்க அருணாச்சலம் படத்திற்க்கு கதை-வசனம் ஏதும் எழுதினீங்களா? :)

2010/4/12 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe, reply using "remove me" as the subject.



--
regards,
Ramesh

Lead me from the unreal to the truth;
Lead me from darkness to the light;
Lead me from death to immortality.

Kamala Devi

unread,
Apr 12, 2010, 6:28:22 AM4/12/10
to mint...@googlegroups.com
அம்மா செய்ததுதான் சரி.
ஆனால் சேது என்ன ஆனான்?
கமலம்

http://www.kamalagaanam.blogspot.com

----- Original Message ----
From: N. Kannan <navan...@gmail.com>

Subject: Re: [MinTamil] தமிழ்மணி - மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!

2010/4/12 Kannan Natarajan <thar...@gmail.com>
து."

அட! எங்க அம்மா சங்க மரபு என்று தெரிகிறது.

ஒரு நாள் என் அண்ணன் (சித்தி பையன்) என் அப்பாவுடன் சாப்பிடும் போது
“பெரியப்பாவிற்கு மட்டும் நீ நிறைய சர்க்கரைப் பொங்கல் வைக்கிறாய்” என்று
சொல்லப்போக (அப்போது அவனுக்கு 10 வயது இருக்கலாம்), வந்ததே எங்க
அம்மாவிற்குக் கோபம். அவனைத் தரதரவென்று இழுத்து ஒரு ரூமில் பூட்டி,
அன்று பண்ணிய அத்தனை சர்க்கரைப் பொங்கலையும் (ஒரு குண்டான் பொங்கல்) அவன்
முன்னே வைத்து, தின்று முடித்தால்தான் கதவைத்திறப்பேன் என்று
சொல்லிவிட்டாள்! பாவம் சேது! வாழ்நாளுக்கும் மறக்கமுடியாத படிப்பிணை அது
;-)

க.>

--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

To unsubscribe, reply using "remove me" as the subject.


Send instant messages to your online friends http://asia.messenger.yahoo.com

N. Kannan

unread,
Apr 12, 2010, 9:11:47 AM4/12/10
to mint...@googlegroups.com
சேதுராமன் எனும் சேது பின்னால் புரிந்து கொண்டான். ஆயினும் இந்த தாயாதிப்
பொறாமை என்பது இருந்து கொண்டேதான் இருந்தது. மகாபாரதமெல்லாம் எங்க
ஊரிலேயே பார்த்தாச்சு கமலம். இங்கிருந்து பார்த்தால் எல்லாமே திரைப்படம்
போல் கண் முன்னால் ஓடுகிறது. கொஞ்ச நேரம் முன்தான் 16 பரிமாணங்கள் உள்ள
சம பிரபஞ்சம் பற்றிய ஆவணம் பார்த்தேன். இப்ப சொன்ன கதையிலே நான்
இருந்தேனா இல்லையாங்கறத ஒரு நாலு பேர் தீர்மானிப்பர். அவர்களும்
போய்விட்டால். என் உலகின் ஒரு பரிமாணம் காணாமல் போய்விடும். நம்
நினைவுகள்தானே நமது உலகங்கள். நினைவுகளை எப்பரிமாணம் என்பது. அதன் இலக்கு
என்ன? எங்கே இருக்கிறது? நாம் வாழ்கின்ற போதே எங்கெங்கோ மிதக்கிறோம்! ஒரே
நேரத்தில் ஆயிரம் சம உலகுகள். இங்கு இப்போதே!

ஆமா, சேது எவ்வளவு பொங்கல் சாப்பிட்டான்? அவனுக்குத்தான் தெரியும்!
ஊருக்குப் போகும் போது கேட்டுச் சொல்கிறேன். அம்மா இப்போதெல்லாம்
எப்போதாவது கனவில் வந்தால் உண்டு. வந்தாலும் இப்போதெல்லாம் விட்டேத்தியாக
இருக்கிறாள். அவள் உலகு வேறு போலும். ஆயினும் விட்ட குறை தொட்ட குறைக்கு
வந்து போகிறாள்!

க.>

2010/4/12 Kamala Devi <saahi...@yahoo.com.sg>:

Kamala Devi

unread,
Apr 12, 2010, 9:24:00 AM4/12/10
to mint...@googlegroups.com
அம்மா கனவில் வராட்டாலும், நிங்ஙள் அம்பிகையாய் நினைத்து அவ்வப்போது,
மனசார சாஷ்டாங்கமாய் அம்மாவிடம் , சரணடைந்து பாருங்கள்.
அம்மாவின் ஆசி பூரணமாய் துலங்கும் காட்சியை காணமுடியும்.
ஹ்ம்ம், நிங்ஙலின் பாசுரமடலே பக்திப்பாசுரம்தான்,
அம்பிகைக்கு வேறென்ன நைவேத்யம் கொடுப்பது?
கமலம்


http://www.kamalagaanam.blogspot.com


To: mint...@googlegroups.com

7Subject: Re: [MinTamil] தமிழ்மணி - மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்!

மகாபாரதமெல்லாம் எங்கஊரிலேயே பார்த்தாச்சு கமலம்.

.
அம்மா இப்போதெல்லாம் எப்போதாவது கனவில் வந்தால் உண்டு. வந்தாலும் இப்போதெல்லாம் விட்டேத்தியாக
இருக்கிறாள். அவள் உலகு வேறு போலும். ஆயினும் விட்ட குறை தொட்ட குறைக்கு
வந்து போகிறாள்!

க.>


N. Kannan

unread,
Apr 12, 2010, 10:23:37 AM4/12/10
to mint...@googlegroups.com
என்ன கமலம், அதில் தொணிக்கும் அறிவியல் புதினம் எப்படி உங்கள்
கண்ணிலிருந்து தப்பியது? உங்களுக்காக ஒரு குறுங்கதை அது! ;-)
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!
என்பதுதான் தினமும் நடக்கிறதே!
எழுதவுடன் மூன்றுமுறை ஹரி, ஹரி, ஹரி என வேண்டும்.
ஆண்டாள் சொல்லும் அரி என்ற பேரரவம் அதுதான் :-)

க.>

2010/4/12 Kamala Devi <saahi...@yahoo.com.sg>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>
> To unsubscribe, reply using "remove me" as the subject.
>

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

shylaja

unread,
Apr 12, 2010, 10:29:24 AM4/12/10
to mint...@googlegroups.com


2010/4/12 N. Kannan <navan...@gmail.com>

என்ன கமலம், அதில் தொணிக்கும் அறிவியல் புதினம் எப்படி உங்கள்
கண்ணிலிருந்து தப்பியது? உங்களுக்காக ஒரு குறுங்கதை அது! ;-)
நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா!
என்பதுதான் தினமும் நடக்கிறதே!
எழுதவுடன் மூன்றுமுறை ஹரி, ஹரி, ஹரி என வேண்டும்.
 
ஆண்டாள் சொல்லும் அரி என்ற பேரரவம் அதுதான் :-)<<<<<>>.ஹரிஹரிஹரி என்கிறோமோ இல்லையோ காலைல எழுந்ததும்  இந்தப்பசங்களை பள்ளிக்கூடம் அனுப்பும் அம்மாக்களின்  hurry up என்ற குரல் பலவீடுகளில் கேட்கிறது ‘க’!



--
shylaja..

A Thing Of Beauty Is Joy For Ever!
Keats.

Kamala Devi

unread,
Apr 12, 2010, 10:38:51 AM4/12/10
to mint...@googlegroups.com
அற்புதம்.
இப்பொழுது புரிகிறது.அருமையாய் புரிகிறது.
எண்டெ நினைப்பெல்லாம் பாசுர மடலிலேயே இருந்தது.
கமலம்


http://www.kamalagaanam.blogspot.com

----- Original Message ----
From: N. Kannan <navan...@gmail.com>

Kannan Natarajan

unread,
Apr 25, 2010, 12:29:55 AM4/25/10
to Min Thamizh
இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி!

தன் மகன் ஓட்டிச் சென்ற தேர்க்காலில் சிக்கி பசுவின் கன்று இறந்ததை - "ஆராய்ச்சி மணி" வாயிலாக அறிந்த மனுநீதிச்சோழன், தன் மகனையும் அதே தேர்க்காலில் கிடத்திக் கொன்றுவிடுமாறு கூறியது அறிவார்ந்த நீதிதானா?

கோன் எவ்வழியோ குடி அவ்வழி' என்றாய்ந்த மனுநீதி வழுவாது வாழ்ந்த கொற்றவர்களின் காலம். "கோ"வின் மகனாயினும், "கோ"வின் மகவு ஆயினும் "உயிர்மை" என்பது ஒன்றே என்று உணர்ந்திருந்த மனிதர்கள் வாழ்ந்த காலம். எவ்வுயிரும் இறைவனின் படைப்பு என ஒவ்வொரு அசைவிலும் இறைத்தன்மையை கண்ணுற்ற மக்கள் வாழ்ந்த காலம்.

இயற்கை இடர்பாடுகள் இன்றி செயற்கை வழியில், அறவழியன்றி புறவழியில், நெறிபிறழ் வழியில் உயிர்பிரியா நிலைமை உறுதி செய்த காலம். "தன் மகன் வேறு, தன் குடைநிழலில் வாழும் பசுவின் கன்று வேறு",எனப் பிரித்தறியா மனம் கொண்டவன்

சோழப் பெருவளத்தான்.

"நீயே கள்வன்" என்றுரைத்த சோழ நாட்டின் குடிமகள் கண்ணகியின் கூற்றை ஆராய்ந்து, "அய்யஹோ! என் செய்வேன்! என் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அல்லவா என்றென்றும் நாணித் தலைகுனியும் தீயது பயத்துவிட்டேன்",என்று ஒரு நொடியில் உயிர்விட்டான் பாண்டிய நெடுஞ்செழியன். "ஆய்ந்தறியத் தெரியாத மன்னனை நெஞ்சில் சுமந்தேனே!" என இணைந்து உயிர்விட்டாள் கோப்பெருந்தேவி.

ஓர் உயிர் போனதற்கு இரு உயிர்களைத் தந்து நீதி காத்தனர். அறநெறி இவ்வாறிருக்க, சோழன் மனுநீதிக்கு முற்பட்ட சிலப்பதிகாரம், அதன் வழிவந்த தமிழ் வேந்தன் தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றது விவாதத்துக்குரிய பொருளன்று. ஓர் ஆட்சியாளரின் நீதி நெறிவாழ் தமிழ் மரபினனின் இயல்பு மனநிலை. தமிழ்க் குடிமக்களும் இவ்வாறே வாழ்ந்தார்கள்.

மன்னன் தன் மகனைத் தேர்க்காலில் இட அமைச்சரவையைக் கூட்டவில்லை; ஆண்டுகள் பல நீட்டித்து ஆய்வறிக்கை கோரவில்லை. சங்ககாலத்தில் அரசாட்சியில் இருந்தவர்கள் மனம் என்ற பெரும் சாட்சியோடு (மனசாட்சி) ஆட்சி புரிந்தனர். தெய்வங்களுக்கு நேர் நிலையில் நின்று போற்றத்தக்க குணமுடையோராய் வாழ்ந்தனர்; வாழ்ந்தும் காட்டினர். வழிவழி வருபவர்களுக்குத் தங்கள் வாழ்க்கையையே வழிகாட்டியாய் வைத்தனர்.

நம் முன்னோர்கள் தமது வாழ்வினையே "நீதிகளுக்கு" களமாக்கினர். அவ்வழி வந்த தமிழர் நாம் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும்.

ந.தமிழ்க்காவலன்


நன்றி:- தினமணி

--

Kannan Natarajan

unread,
May 1, 2010, 9:08:18 PM5/1/10
to Min Thamizh
கம்​ப​னுக்கு முன்பே தமி​ழில் இராமா​யண நூல்​கள் உண்டு!
 
தமிழ்ச் செவ்​வி​யல் நூல்​கள் பல​வற்​றில் இராமன் பற்​றிய குறிப்​பு​கள் காணப்​ப​டுவ​தால்,​​ கம்​ப​னுக்கு முன்பே வேறு
யாரா​லா​வது இராம​காதை எழு​தப்​ பட்​டி​ருக்​கி​றதா இல்​லையா?​

கம்​ப​ருக்கு முன்பே தமி​ழில் இராமா​யண நூல்​கள் இருந்​தி​ருக்​கின்​றன என்​பதை,​​ சங்​கம் மற்​றும் சங்​கம் மரு​விய நூல்​கள் வழி அறி​ய​ மு​டி​கி​றது.​

பார​தம் பாடிய பெருந்​தே​வ​னார் என்​ப​வர்,​​"பார​தம் -​ சீராமகதை" எனக் குறிப்​பி​டு​கி​றார்.​

இராமா​ய​ணத்​தைச்"சீராமகதை"என்றே முன்பு வழங்​கி​னர் என்​கி​றார் பெரும்​பு​ல​வர் மு.இராக​வை​யங்​கார்.​

கம்​பர் விருத்​தப்​பா​வில் இராமா​ய​ணம் பாடி​னார்.​

ஆனால்,​​வெண்​பா​வி​லும் இராமா​ய​ணம் இருந்​தது என்ற தக​வலை,​​"யாப்​ப​ருங்​கலவிருத்தி" என்​னும் யாப்​பி​லக்​கண நூல் கூறு​கி​றது.​

மேலும்,​​"பஃ​றொடை வெண்​பா​வில்" இராமா​ய​ணம்

எழு​தப்​பட்​ட​தா​க​வும் கூறு​வது நோக்​கத்​தக்​கது.​

"வீர​சோ​ழி​யம்" என்ற இலக்​கண நூல்உரை​யா​சி​ரி​யர்,

​​"இரா​மா​யண வெண்பா" உண்டு என்​கி​றார்.​

வீர​சோ​ழி​யம் உரை​யில் காணப்​ப​டும் இராமா​யண வெண்பா

பின் ​வ​ரு​மாறு:-​​

​"மற்​றி​வனை மாலென்று அறிந்​தால்

அவ்​வா​ள​ரக்​கன்

பெற்றிதரு​வ​தென் பேதை​யர்​காள்

மற்​றி​வன்​ தன்கண்​டான் கடைசிவத்​தற்கு

-​ உண்டோ

கட​லி​லங்கை வண்​டார் அரக்​கன்வலி''​!

​இவ்​வெண்பா யாப்​பின் மூலம்,​​கம்​ப​ருக்கு முன்பு

இராமா​யண நூல் இருந்​தது என்​பதை அறி​ய​ மு​டி​கி​றது.​

புறத்​தி​ரட்​டில்,​​"ஆசி​ரியமாலை" என்ற நூலில்,​​கம்​ப​ருக்கு முன்பே இராமா​யண நூல் உண்டு என்​ப​தும் அறி​யப்​ப​டு​கி​றது.

​"ஸ்ரீபு​ரா​ணம்" என்ற ஜைன​ நூல் மூலம் முன்பே

இராமா​ய​ணம் உண்டு என்​பதை அறி​ய​லாம்.​

மணிப்​பி​ர​வாள நடை​யில் அமைந்த இந்நூ​லில்,​​இராமா​ய​ணம்

பற்​றிய நிகழ்ச்​சி​கள் எழு​தப்​பட்​டுள்​ளன.​

ஸ்ரீபு​ரா​ணத்​தில் காணப்​ப​டும் ஆசி​ரி​யப்பா வரி​கள் பின்​ வ​ரு​மாறு:​​-

​"மாற்​றி​வன் செய்தமாயா மானின்

நோற்றிலாதே நோக்​கிய நோக்​கின்

அரு​வினையேனை அரு​ளிய மனத்​தால்

மரு​விய மாயஉரு​வு​த​ரற்கு எழுந்த

மான்​மறி தொடர்ந்து செல்​வாள் அரி​போ​லக்

கான்​நெறி விடுத்​துக் கடு​வ​னம் புகுந்து

மாயாப்புணர்ப்​பின் மன்​னனை நினைந்து

ஆய​ரும் தாய​மும் தோழி​யும் இன்​றி​யோர்

நொது​மல் ஆன​வன் விதி​வழி ஒழுகி

இட​னிடையிட்ட சேய் ​மைத்தன்​றி​யும்

கட​லிடையிட்டகாப்​பிற்​றா​கிய

இலங்கை மூதூர் இடு சிறைப்​பட்டு..''​!

​தமிழ்​நாடு அர​சின் கையெ​ழுத்​துப் புத்​த​கச்சாலை​யில்,​​

"பல​தி​ரட்டு" என்ற சுவ​டி​யில்,​​"இரா​மா​யண வெண்​பாக்​கள்"

உள்​ள​தை​யும் மு.இராக​வை​யங்​கார் குறிப்​பிட்​டுள்​ளார்.​

அந்த வெண்பா இது​தான்.​

​"வசிட்​ட​னும் கோசி​க​னும் மன்​ன​வ​னும் கூடி

விசித்​தி​ரமா மங்​க​லச்​சொல்விண்டு-​

சசிக்​கு​ நி​கர்

மாமு​கத்​துச் சீதைக்​கும் வாழும் உரு​மி​ளைக்​கும்

மாமு​குர்த்​தம் இட்​டார் மகிழ்ந்து!​''​

​​​நச்​சி​னார்க்​கி​னி​யர்,​​தொல்​காப்​பி​யப் பொரு​ள​தி​கார உரை​யில்

மேற்​கோள் வரி​க​ளாக,​​

​"ஆள்​வினை முடித்த அருந்​தவ

முனி​வன்

வேள்வி போற்​றிய இரா​மன் அவ​னோடு

மிதிலைமூதூர் எய்​திய ஞான்றே

மதி​யு​டம்பட்ட மாக்​கண் சீதை

கடு​விசைவில்​ நாண்இடி ஒலிகேளா

கேட்ட பாம்​பின் வாட்​டம் எய்​தித்

துயில் எழுந்து மயங்​கி​னன் அதான்று''​.

என்ற இராமா​ய​ணச் செய்​தி​க​ளைக் கூறி​யுள்​ளார்.​

வால்​மீகி இராமா​ய​ணத்​தில்,​​இராம​னும் சீதை​யும்

திரு​ம​ணத்​துக்கு முன்பு சந்​திக்​க​வில்லை என்ற குறிப்பு உள்​ளது.​

ஆனால்,​​கம்​பர் காட்​டிய இராம​னும் சீதை​யும்

திரு​ம​ணத்​துக்கு முன்பே நோக்​கு​கின்​ற​னர்.

​"அண்​ண​லும் நோக்​கி​னான்,​​அவ​ளும் நோக்​கி​னாள்''

என்​பது கம்​பர் வரி.​

இது தமிழ்மரபு.​

இத​னா​லேயே, மேற்​கா​ணும் நச்​சி​னார்க்​கி​னி​யர் உரை​யின்

மேற்​கோள் பாட​லும் காட்​டு​கி​றது.​

சங்க இலக்​கி​ய​மான அக​நா​னூறு,​​

​"வெல்​போர் இரா​மன்

அரு​ம​றைக்கு அவித்த

பல்​வீழ் ஆலம்போல''​.

​என,​​ஆல​மர நிழ​லில் இராமன் ஆலோ​சனை செய்த தக​வல்

கூறப்​ப​டு​கி​றது.​

"இந்​தத்தக​வல் அக​நா​னூறு காலத்​துக்கு முன்பே தமி​ழில்

இராமா​யண நூல் இருந்​தி​ருக்க வேண்​டும்",என்ற

உண்​மை​யைப் புலப்​ப​டுத்​து​கி​றது.​

புற​நா​னூற்​றி​லும்,​​

​"கடுந்​தேர் இரா​மன் உடன்​பு​ணர்

சீதையை

வலித்​தகை அரக்​கன் வவ்​விய

ஞான்றை

நிலஞ்​சேர்மது​ரணி கண்ட குரங்​கின்

செம்​மு​கப் பெருங்​கிளை இழைப்பொலிந்தாங்கு''​

என்ற வரி​கள் மூலம்,​​"இராவ​ணன் சீதை​யைக் கவர்ந்து சென்​ற​போது,​​தன் அணி​க​லன்​களை சீதை வழி​யில் போட்​டு​விட,​​அவற்றை வானர வீரர்​கள் கண்​டெ​டுத்து அணிந்த நிகழ்வை''அறி​ய​லாம்.​

இந்​நி​கழ்ச்​சி​யைக் கம்​ப​ரா​மா​ய​ணத்​தி​லும் காண​லாம்.​

சங்​கம் மரு​விய நூலான சிலப்​ப​தி​கா​ரத்​தி​லும்,​​

​"பெரு​ம​கன் ஏவல் அல்​லதுயாங்​க​ணும்

அரசே தஞ்​ச​மென்று அருங்​கான் அடைந்த

அருந்​தி​றல் பிரிந்த அயோத்தி போலப்

பெரும்பெயர் மூதூர்பெரும்பே துற்​ற​தும்''​.

என்​றும்,​​

​"தாதை ஏவ​லின் மாது​டன் போகிக்

காதலி நீங்​கக்கடுந்​து​யர் உழந்​தோன்

வேத முதல்​வற் பயந்​தோன் என்​பது

நீ அறிந்திலையோ நெடு​மொழி அன்றோ''​

​என்​றும் கூறப்​ப​ கள்,​​இராமா​ய​ணத் தக​வல்​களை எடுத்​தி​யம்​பு​கி​றது.​

தந்தை சொல் ஏற்று,​​சீதை​யைப் பிரிந்து,​​இராமன்

கான​கம் அடைந்த செய்தி இவ்​வ​ரி​க​ளில் காணப்​ப​டு​கி​றது.​

மணி​மே​க​லைக் காப்​பி​யத்​தி​லும்,​​

​"நெடி​யோன் மயங்கி நில​மி​சைத் தோன்றி

அட​லரு முந்​நீர் அடைந்த ஞான்று

குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு​மலை

எல்​லாம்

அணங்​குடை அரக்​கர் வயிறுபுக்காங்கு''​.

​இவ்​வ​ரி​கள்,​​இராம​பி​ரான்,​​குரங்​கு​க​ளின் துணை​யு​டன் சேது​பந்​த​னம்​(சேது​பா​லம்) ​கட்​டி​யதை எடுத்​துக்​காட்​டு​கி​றது.​

ஆழ்​வார் பாடல்​க​ளின் தாக்​க​மும்,​​கம்​பன் காவி​யத்​தில் பல

இடங்​க​ளில் காணப்​ப​டு​கின்​றன.​​

எனவே,​​அக​நா​னூறு,​​புற​நா​னூறு,​​சிலப்​ப​தி​கா​ரம்,​​மணி​மே​கலை,​​

ஆழ்​வார் பாசு​ரங்​கள் ஆகி​ய​வற்​றின் மூலம் கம்​ப​னுக்கு முன்பே இராமா​யண நூல்​கள் இருந்​தி​ருக்க வேண்​டும் என்​பது

தெளி​வா​கி​றது.​

கம்​ப​னுக்கு முன்​பி​ருந்த இராமா​யண நூல்​கள்

கால​வெள்​ளத்​தால் அழிந்​தி​ருக்​கக்கூடும் என்றே

கரு​த​ வேண்​டி​யுள்​ளது.

புல​வர் முத்து.வேங்​க​டே​சன்

srirangammohanarangan v

unread,
May 2, 2010, 9:51:17 PM5/2/10
to mint...@googlegroups.com
அருமையான கட்டுரை. போலா ரிச்மன் என்று நினைவு -- ஆயிரக்கணக்கான ராமாயணங்கள் என்று எழுதினார்.
 
தமிழில் கம்பனுக்கு முந்தைய ஸ்ரீராமாயணக் குறிப்புகளைப் பற்றிய
கட்டுரையைப் படிக்கத் தந்தமைக்குத் 
தாரகையாருக்கு நன்றிகள். 

 

Hari Krishnan

unread,
May 3, 2010, 2:47:12 AM5/3/10
to mint...@googlegroups.com


2010/5/3 srirangammohanarangan v <ranga...@gmail.com>

அருமையான கட்டுரை. போலா ரிச்மன் என்று நினைவு -- ஆயிரக்கணக்கான ராமாயணங்கள் என்று எழுதினார்.

Many Ramayanas, Paula Richman.  The book in its digital version is available here:


I strongly differ with many of the conclusions arrived at  in the collection of essays.  (Btw, this is a collection of essays by different authors and Paula Richman is only the Editor).  I have debated a few points mentioned in the book and established the invalidity of the conclusions arrived at, in my Ramayana series.  Many of them are misconstrued, baseless and contorted arguments.  Only natural.  If you have to understand an Epic from this land, you have to first understand the culture from which it germinated.  When your cultural glasses have a different colour, how can you look at my culture in its right colour!

Anyway, I am after all an Indian, non-academician, with no degrees and Ph D-s to stand in queue behind my name.....a book worm at that, not a scholar :-))

(That way...the laughter at the end of the last line shows how irritable I can get, is that not so Rangan?)


--
அன்புடன்,
ஹரிகி.

srirangammohanarangan v

unread,
May 3, 2010, 2:55:51 AM5/3/10
to mint...@googlegroups.com
On 5/3/10, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:


2010/5/3 srirangammohanarangan v <ranga...@gmail.com>
அருமையான கட்டுரை. போலா ரிச்மன் என்று நினைவு -- ஆயிரக்கணக்கான ராமாயணங்கள் என்று எழுதினார்.

 
Many Ramayanas, Paula Richman.  The book in its digital version is available here:

 

 
I strongly differ with many of the conclusions arrived at  in the collection of essays.  (Btw, this is a collection of essays by different authors and Paula Richman is only the Editor).  I have debated a few points mentioned in the book and established the invalidity of the conclusions arrived at, in my Ramayana series.  Many of them are misconstrued, baseless and contorted arguments.  Only natural.  If you have to understand an Epic from this land, you have to first understand the culture from which it germinated.  When your cultural glasses have a different colour, how can you look at my culture in its right colour!

 
Anyway, I am after all an Indian, non-academician, with no degrees and Ph D-s to stand in queue behind my name.....a book worm at that, not a scholar :-))

 
(That way...the laughter at the end of the last line shows how irritable I can get, is that not so Rangan?)
 
Not necessarily,  This shows how you can take things with a pinch of salt. :--)))
 
this smily is a pinch of sugar, I suppose.
 
And thank you for your clarification regarding 'Many Ramayanas'.  Yea  you do have a point there. Thank you.

--
அன்புடன்,
ஹரிகி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

MANICKAM POOPATHI

unread,
May 3, 2010, 4:04:44 AM5/3/10
to mint...@googlegroups.com
வணக்கம் நண்பர்களே:

ஆரம்பம் முதல்..
ஆய்த எழுத்து மூன்று புள்ளிகளால் ஆனதா [∴ ]
அல்லது மூன்று சிறு சில்லி வட்டங்களால்  [ஃ ]
வரையப்படுவதா என்பதனை.. நமது பெரியவர்கள்..
உரிய இடத்தில்/ நேரத்தில் விளக்கினால்/விளக்கம் வேண்டினால்..
அது மிகவும் நலம் பயக்கும்.

மிகவும் நன்றி..!


அன்புடன்../பூபதி செ. மாணிக்கம்
________________________________

2010/2/28 தாரகை <thar...@gmail.com>:
>> அய்யிய்யோஓஓஓஓஓஓ தாங்கலியேஏஏஏஏஏஏ......ணா! யாரவது இந்த டெய்லிபெல் எடிட்டர்
>> கிட்ட போயி,  மூணு புள்ளி வச்ச எழுத்துக்க எப்பலேந்து ஆயுத எழுத்து என்று பெயர்
>> வந்தது அப்டீன்னு மூணாவதா ஒரு கேள்வியையும் சேத்துக் கொல்லச் சொல்லுங்கண்ணா.
>
>
> அடடா! கவனிக்காமல் விட்டேன்.
>
> ஆய்த எழுத்து என்பதை நாளிதழ் தவறாக அச்சிட்டிருந்தாலும், அடியேனாவது
> எழுத்தின் தவறை மாற்றி குழுமத்திற்கு அனுப்பியிருந்தால் ஆய்த எழுத்து
> என்ற பெயர் ஏன் வந்தது என்னும் சிந்தனை நிலையில் இருக்கும் நம்
> குழுமத்தினர், தடுமாற்றம் கண்டிருக்க மாட்டார்கள். எழுத்து
> தவறிழைத்தமைக்கு மன்னித்தருள்வீராக.

வி. சு.

unread,
May 3, 2010, 6:02:38 AM5/3/10
to மின்தமிழ்
On May 3, 1:04 pm, MANICKAM POOPATHI <poopa...@gmail.com> wrote:
...

> ஆய்த எழுத்து மூன்று புள்ளிகளால் ஆனதா [∴ ]
> அல்லது மூன்று சிறு சில்லி வட்டங்களால்  [ஃ ]
...

3 small circles.

because, it is difficult to put dots on 'olai suvadi'.

தாரகை

unread,
May 3, 2010, 8:39:31 AM5/3/10
to மின்தமிழ்
"கால ஓட்டத்தில் பல்வேறு இனங்கள், குலங்கள் கலக்க நேர்வது இயல்பு.
ஏதேனும் ஒரு வகையில் வந்தவர்களின் போக்கினால், பழையவர்கள் (பழங்குடி
மக்கள்) தங்கள் இயல்புகளை இழப்பதும், மாற்றிக்கொள்வதும் - புதியவற்றை
சேர்த்துக்கொள்வதும் இயல்பு தான், இந்த காலச்சக்கரம் ஆயிரமாண்டுகளுக்கு
ஒரு (பல) முறை சுழலும். சான்றாக, தென்னாப்பிரிக்காவில் டச்சுக்காரர்கள்
ஆண்டார்கள்,தொடர்ந்து பலர் ஆண்டார்கள் - இப்போது தென்னாப்பிரிக்கர்களே
தலைமைத் தாங்குகிறார்கள். தென்னாப்பிரிக்கர்கள் தங்களுடைய பழைய
நாகரீக,பழக்கவழக்கங்கள்,பண்பாட்டுக்கூறுகள், நூல்கள்,பழமொழிகள் இவை
எல்லாவற்றையும்,இதற்கு முன்னால் ஆண்டவர்களும்,வந்தவர்கள் எல்லாம்
எப்படியெல்லாம் திரித்திருக்கிறார்கள் என்று நாள் தவறாமல்
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
அது இயற்கை தான். அதே நிலை தான் தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கத்தின்
வளர்ச்சி காரணமாக கடவுள் மறுப்பு என்பதை நாற்பதாண்டுக் காலமாக
மறைமுகமாகவோ,வெளிப்படையாகவோ,பொய்யாகவோ,உண்மையாகவோ கூறுபவர்கள் இப்போது 43
ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளனர்.

ஆத்திசூடியை மாற்றுவது! ஆலயங்களை தெரிந்தோ,தெரியாமலோ புறக்கணிப்பது!
புராண இதிகாசங்களைப் பழிப்பது! சங்க இலக்கியங்களிலும் கடவுள்
சார்பில்லாதக் கருத்துக்களை பரப்புவது! அதென்ன, அரசாங்க சின்னங்களில்
கோயில் கோபுரத்தை இன்னும் வைத்திருக்கலாம் என்று பிறரைக் கேட்பது.
ஆட்சிக்கு வந்த பிறகு கடவுள் படங்களை எல்லாம அகற்றியது. இப்படியான
பொருண்மைகளில், வீழ்ந்துகிடந்தவர்கள் எழுந்து நிமிரும் போது நடக்கும்!

தென்னாப்பிரிக்ககாரர்கள் நாம் படிக்க பயப்படுகிற அளவிற்கு வெள்ளையர்களை
குற்றம்சாட்டி வருவது பல்வேறு தொகுதிகளாக வந்தவண்ணமாகவுள்ளது.
தொல்காப்பியம் வடமொழியிலிருந்து வந்தது, சங்க இலக்கியத்தில் வேதக்
கருத்துக்கள் பல உண்டு, திருக்குறள் அர்த்தசாஸ்தரத்தை தழுவியது, தமிழேக்
கூட சம்ஸ்கிருதம் இல்லாமற் போனால் நொண்டும் எனக் கூறுபவர்கள்
இருக்கிறார்கள். நல்ல வேளை, இந்த வெள்ளை மனோபாவம் உடையவர்கள்,கறுப்பு
மனோபாவம் உடையவர்களால் முழுவதும் புறக்கணிக்க முடியாமல் இருக்கிறார்கள்".


இந்த மேற்கோள் - தென்னாப்பிரிக்க மேம்பாடு - மறுபரிசீலனை என்ற
கட்டுரையின் கருத்தை தமிழிய தழுவலாக எழுதப்பட்டுள்ளது.

தாரகை

unread,
May 3, 2010, 8:41:43 AM5/3/10
to மின்தமிழ்
> When your cultural glasses have a different colour

More of "cultural clash":-)

Kannan Natarajan

unread,
May 8, 2010, 10:23:54 PM5/8/10
to Min Thamizh
கம்​ப​னுக்கு முன்பே தமி​ழில் இராமா​யண நூல்​கள் உண்டு!

தமிழ்ச் செவ்வியல் நூல்கள் பலவற்றில் இராமன் பற்றிய குறிப்புகள் காணப்படுவதால், கம்பனுக்கு முன்பே வேறு யாராலாவது இராமகாதை எழுதப்பட்டிருக்கிறதா இல்லையா?

கம்பருக்கு முன் இராமகாதையின் கூறுகள் வாய்மொழியாக ஆங்காங்கே பேசப்பட்டு வந்ததைப் புலவர்கள் தமிழ்ச் செவ்வியல் நூல்கள் பலவற்றுள் பதிவு
செய்துள்ளனர்.

ஓர் ஊரில் எழுந்த அலர், பிறகு அடங்கிப் போனதற்குக் காரணம் கூறும் நிலையில் இராமாயணக் கருத்து பொருத்தமாகக் கூறப்பட்டுள்ளது.

கோடிக்கரையில் (தனுஷ்கோடி) இராமன் ஓர் ஆலமரத்து நிழலில் போர் வீரர்களுடன் போர் குறித்து ஆராய்ந்த போது அவர்களின் பேச்சுக்கு இடையூறாக இருந்த பறவைகளின் ஆரவாரத்தை இராமன் தன்கையால் அமர்த்தி அமைதிபடுத்தியது போலத் தூற்றப்பட்ட அலர், தலைவன் மணம் பேசி வந்ததால் அடங்கியதாக சங்க நூலான அகநானூற்றின் 70ஆம் பாடல் கூறுகிறது.

இராவணன், சீதையைக் கவர்ந்த செய்தியும், அப்போது அவள் தான் அணிந்திருந்த அணிகலன்களைக் கழற்றி எறிந்த செய்தியும், அவைகளைக் குரங்குகள் கண்டு விரலுக்கு அணிவதைக் காதுக்கும், காதுக்கு அணிவதை விரலுக்குமாக இப்படி மாற்றி மாற்றி அணிந்து கொண்ட செய்தியும் புறநானூற்றின் 378ஆம் பாடல் கூறுகிறது.

"வாரணம் பொருத மார்பும்",என்ற பாடலில் "வரையினை எடுத்த தோளும்",எனக் கம்பர் பாடியதற்கேற்ப இராவணன் கயிலையை எடுத்து அல்லலுற்றதைக் கலித்தொகையின் 38ஆம் பாடல் கூறுகிறது.

இராமன், தம்பியோடு கானகம் சென்றது பற்றி இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் -ஆய்ச்சியர் குரவை 35ஆம் பாடலில் பாடியுள்ளார். மேலும், இராமனைப் பிரிந்து அயோத்தி வருந்தியதுபோலக் கோவலனைப் பிரிந்து மாதவி வருந்தியதாகப் புறஞ்சேரியிறுத்த காதையில் கோசிகமாணி என்ற கதாபாத்திரத்தின் மூலம் இளங்கோ கூறுகிறார்.

மற்றும் இராம - இராவண போர் 18 மாதம் நடந்த குறிப்பை நீர்ப்படைக் காதையின் தொடக்கம் கூறுகிறது.

எல்லாவற்றுக்கும்  மேலாக, கண்ணகியை மதுரைக்கு அழைத்து வந்து துன்புறுவதாகக் கோவலன், கவுந்தியடிகளிடம் கூறி வருந்தியபோது கவுந்தியடிகள், "மனைவியுடன் கானகம் வந்த இராமன், மனைவியைப் பிரிந்தது போலில்லாமல் நீ உடன் போந்தது சிறப்புக்குரியது",எனக் கூறி ஆறுதல் கூறுவதை ஊர்காண்காதையில் காணலாம்.

மணிமேகலையில், சாத்தனார் உலக அறவிபுக்க காதையில், திருமால் இராமனாக அவதரித்து உழலும்போது கடலில் அணைகட்டிய குறிப்பைத் தருகிறார்.

மேலும் சமயக்கணக்கர் தந்திரம் கேட்ட காதையில், பல அளவைகள் பற்றிக் கூறும் வரிசையில், "இராமன் வென்றான்" என்றால், இராவணன் தோற்றான் என்பது கூறப்பட்டதன் பயனாக விளங்குவதென்பது "பயன் அளவை" எனக்கூறும்போது இராமனைக் குறிப்பிடுகிறார் சாத்தனார்.

சிந்தாமணியில், திருத்தக்கதேவரால் கனகமாலையார் இலம்பகத்தில் இராமன் மராமரம் ஏழும் எய்திய வில்லாற்றலின் செய்தி சீவகனின் வில்லாற்றலுக்கு எடுத்தாளப்பட்டதால் பரவலாக இராமகாதையின் கூறுகள் ஆங்காங்கே தெளிக்கப்பட்டுள்ளன எனலாம்.

இப்படி சங்கம், சங்கம் மருவிய காப்பிய காலங்களின் நூல்கள் செய்வியல் நூல்களாகக் கருதப்பட்டதற்குப் பின்னும், கம்பருக்கு முன்பும் எழுந்த தேவார, திருவாசக, திவ்வியப் பிரபந்தங்களிலும் ஏராளமான செய்திகள் இராமகாதையை நினைவு கூர்வனவாக உள்ளனவேயன்றி கம்பர் இயற்றியதைப் போல தனித்த நூலாக இருந்ததில்லை எனலாம்.


தமி​ழா​க​ரர் தெ.முரு​க​சாமி

Banukumar Rajendran

unread,
May 10, 2010, 4:22:07 AM5/10/10
to mint...@googlegroups.com
 
ஐயா,

<<<சமணத்தில் மகாபாரதம், இராமயணம்பகவத் கீதை
ஆகியவை
உள்ளனவா?>>>>>>

பாரதமும், இராமாயணமும் உண்டு.! கீதையில்லை. :-))

மகாவீரரின் பிரதம கணதரரான கெளதமர் வாயிலாக, குரு பரம்பரையாக
கீர்த்திதர ஆசாரியார் அறிந்தார். பின் விமலசூரி என்பவர் இராமர்
வரலாற்றை ப்ராகிருத மொழியில் 'பவும சரியம்' என்ற பெயரால்
கி.பி.4ஆம் நூற்றாண்டில் இயற்றினார். அதற்கு பின் இரவிசேனாசாரியார்
இராம சரித்திரத்தை வடமொழியில் 'பத்ம புராணம்' என்ற பெயரால்
கி.பி. 677 ஆம் ஆண்டில் இயற்றினார்.இவர் சேன சங்கத்தைச் சேர்ந்தவர்.
தொண்டை நாட்டினர். தமிழர்.(சேட் இல்லை :-))

சுமார் கி.பி.1100 ல், அபிநவ பம்பா என்பவர் கன்னட மொழியில்
இராமசந்திர சரித புராணம் இயற்றினார். அதுவே பின்னாளில் பம்பா
இராமாயணம் என்று அழைக்கப்பட்டது. பின் கி.பி.1596ல் தேவ விஜயகணி
என்பவர் வடமொழியில் வசனமாகவும், கி.பி.1766ல் பண்டிதர் தெளலத்ராம்
காச்லீவால் இந்தி மொழியில் உரை நடையாக எழுதினார்கள். இந்நூட்களே
மொழி மாற்றம் செய்யப்பட்டு எல்லா மாநிலத்திலும் தமிழ் உட்பட
வழங்கிவருகிறது.


In Tamil land, Jaina Ramayanam was lost. இப்போது
கிட்டவில்லை. உரையாசிரியர்கள் மேற்கோள்களினால் அறியப்படுகிறது.
மயிலையாரின் "மறைந்து போன தமிழ் நூல்கள்" என்ற புத்தகத்தில்
மேற்கோள்கள் தரப்பட்டிருக்கிறது. மற்றும் வையாபுரியாரின் "தமிழர்
பண்பாடு" தொகுதி ஐந்திலும் மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுருக்கின்றன.

ஜைன இராமாயணம், கம்ப இராமாயணத்தை விட காலத்தால் முந்தியது. May
be around 4th ce., வையாபுரியார் தம் நூலில்...
..... "சிறந்த நடைக் கொண்டது. பொருட் செறிவு நிறைந்தது. ஆனால்,
கதையமைப்பில் தாழ்ந்தது" என்று கூறியிருக்கிறார்.


கம்பர் தான் எழுதிய இராம காவியத்தை முதன்முதலில் ஜைன முனி சங்கத்திடம்
காண்பித்து, ஒப்புதல் பெற்ற பின்னரே தன் நூலை அரங்கேற்றினார்
என்பர்.(மயிலையார்)

பாரதம் இருந்ததற்கும் ஆதாரம் உண்டு. மேற்கொண்டு யாராவது தகவல் தந்தால்
நன்றாய் இருக்கும்.


<<<<<கண்ணனும் இராவணனும் தீர்த்தங்கரர்களாக வந்தனர் என்று சென்னை பானு
குமார்ராஜேந்திரன் சொன்னார். >>>>

மன்னிக்கவும். வருவார்கள் என்றேன். முறையே முதலும் கடைசியுமாக வருவார்கள்.
தமிழில் இராவணேந்திர காவியமும் இருந்தது. வித்தியாதரன். சிறந்த ஜின
பக்தன். பிறர்மனை நோக்கியதால் தன்னிலை தாழ்ந்தான்.


இப்போது உள்ள ஒரே நூல் ஸ்ரீபுராணம் மட்டுமே. இதில் பாரத கதையும்,
பதும(இராம) கதையும் சுருங்கக் காணலாம். மணிப்ரவள நடையில் அமைந்த நூல்.

இரா.பானுகுமார்,
சென்னை.


--- dotthusg wrote:
> ஓம்ஓம். அன்புடன் க�ணேசன் அவர்களே! வணக்கம். சமணத்தில் மகாபாரதம்,
> இராமயணம்பகவத் கீதை ஆகியவை
> உள்ளனவா?
> கண்ணனும் இராவணனும் தீர்த்தங்கரர்களாக வந்தனர் என்று சென்னை பானு
> குமார்ராஜேந்திரன் சொன்னார். இதை
> அவரும் விளக்கலாம்.
> அன்புடன்,
> வெ.சுப்பிரமணியன்,
> ஓம்.
/////

2010/5/9 Kannan Natarajan <thar...@gmail.com>

Kannan Natarajan

unread,
May 17, 2010, 1:46:23 AM5/17/10
to Min Thamizh
கம்பனுக்கு முன்பே அகவற்பாவில் இராமாயணம்!

கம்பனுக்கு முன்பு தமிழில் இராமாயணம் பற்றிய விரிவான நூல் இல்லை என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அன்று. ஏனெனில் பாரதமும், இராமாயணமும் பாரதத்தில் பேசப்பட்ட தொல்பழங்கதைகள் ஆகும்.

சங்ககால நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பெருந்தேவனார் என்பர். இவர் கி.பி.5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைக்கப்படுகிறார்.

இவர் எழுதிய பாரதத்திலிருந்து சில பாடல்கள் நச்சினார்க்கினியரின், தொல்காப்பியப் புறத்திணை உரையிலிருந்து தெரியவந்துள்ளன. இவை அகவற்பாவில் அமைந்தனவாகும்.

சங்க காலத்தில் "மறக்காப்பியம்" இருந்திருக்க வேண்டும் என்பது உறுதி. இம்மறக் காப்பியமானது கதை சொல்லுகிற பாங்கில் அமைந்திருக்க வேண்டும் என்பது தகடூர் யாத்திரை போன்ற நூல்களால் தெளிவாகிறது.

இவ்வாறு சொல்லப்படுகிற கதை உரை மரபைப் பின்பற்றி,இராமாயண, மகாபாரதக் கதைகள் தமிழில் முதல் முறையாகப் பாடப்பட்டன என்று பேராசிரியர் து.சீனிச்சாமி குறிப்பிடுகிறார். மேலும், தகடூர் யாத்திரையைத் "தென்னாட்டுப் பாரதம்" என்று பேராசிரியர் சு. வையாபுரிப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

சங்ககால யாப்பு முறையை நுணுகி ஆராயும்போது, அந்த யாப்பு முறையில் வாய்மொழிக் கூறுகள் படிப்படியாக வளர்ச்சிபெற்று, செவ்வியல் நிலையை அடைந்திருப்பதைக் காணமுடியும்.

சங்ககாலத்துக்குச் சற்றுமுன் வரை, மறவியல் காப்பியக் கதைகள் வாய்மொழிக் கூறுகளை உள்ளடக்கியனவாக இருந்துள்ளன. இவை வாய்ப்பாட்டுத் தன்மைகளுடன் பொது அவைகளில் பாடப்பட்டிருக்க வேண்டும் என்பது அறிஞர் கருத்தாகும். ஏனெனில், இத்தகைய வாய்மொழி மரபுகள் சிலம்பு, மேகலை, பெருங்கதை ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளன. இத்தகைய வாய்மொழிக் கூறுகள் அமைந்த தகடூர் யாத்திரை என்ற கதைபொதி பாடலின் காலம் கி.பி.6ஆம் நூற்றாண்டு என அறுதியிடப்படுகிறது.

இந்தக் காலகட்டத்திலேயே இராமாயண, மகாபாரத நூல்களும் அகவற்பாவில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இராமாயணக் கதையைச் சைனர்களும் எழுதியுள்ளனர். இந்நூல் "சைன இராமாயணம்" என அழைக்கப்படுகிறது. எனினும் சைன, பெளத்த வருகைக்கு முன்பே தமிழ்நாட்டில் வைதிக நெறி  காலூன்றிவிட்டது என்பது வரலாற்று உண்மை. இவ்வைதிக நெறிச் சடங்குகளில் பாரதம், இராமாயணம் கூறல் என்பது புழக்கத்தில் இருந்த ஒன்றாகும். இக்கதை அப்பழங்கால மரபுப்படி அகவற்பாவில் பாடப்பட்டிருக்க வேண்டும் என்பதையே "ஆசிரியமாலை" என்ற தொகுப்பின் மூலமும், நச்சினார்க்கினியர் உரையின் வாயிலாகவும் நாம் அறிகிறோம்.

பாரதம் பாடிய பெருந்தேவனாரின் பாடலுக்கும் அகவற்பாவில் அமைந்த பழைய  இராமாயணத்துக்கும் நெருங்கிய ஒற்றுமையைக் காண முடிகிறது. எனவே, இவை இரண்டும் சமகாலத்தவை என்று துணிய இடமுண்டு.

பழைய இராமாயணத்தில் அமைந்த மூன்றாம் பாடல் வருமாறு:-

"மேலது வானத்து மூவா நகரும்

 கீழது நகர் நாடும் புடையன

 திசைகாப்பாளர் தேயக் குறும்பும்

 கொள்ளை சாற்றிக் கவர்ந்து முன்தந்த

 பல்வேறு விழுநிதி யெல்லாம் அவ்வழிக்

 கண்ணுதல் வானவன் காதலன் இருந்த

 குன்றேத்து தடக்கை அனைத்தும் தொழிலுறத்

 தோலாத் துப்பின் தாழ்நிலை வாழ்க்கை

 வலம்படு மள்ளற்கு வீசி, இலங்கையில்

 வாடா நொச்சி வகுத்தனன்

 மாலை வெண்குடை அரக்கர் கோவே''.


இப்பாடலில், இராமாயணம் தமிழ்ப் புறத்திணை மரபில் பாடப்பட்டுள்ளதைக் காணவேண்டும். இப்பாடலில் இராவணன், நொச்சி சூடி இலங்கையில் மதில் காத்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இராவணன் மூவுலக நாயகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "கண்ணுதல் வானவன் காதலன்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், அவன் சிவனைப் போற்றியவன் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாடலின் யாப்பு நடையை நுணுக்கமாக ஆராயும்போது, கதை கூறுதலுக்குப் பயன்பட்ட அகவற்பாவானது, மிகச் செறிவாகக் கதையை உள்ளடக்கிய செவ்வியல் தன்மையைத் தழுவி மாற்றம் பெற்றுவிட்டதைப் பார்க்க முடிகிறது.

இவற்றை வைத்து ஆராயும்போது, பழைய இராமாயணம், பாரதம், தகடூர் யாத்திரை போன்ற பாடல்கள் கம்பனுக்கு முற்பட்ட காலத்தில் சங்க யாப்பு முறையைத் தழுவி கதை உரைத்தலுக்கு அதே அகவற்பாவைப் பயன்படுத்திப் பாடப்பட்டவை என்பது உறுதியாகிறது. இதற்குப் பின்னால், பக்தி எழுச்சிக்காலத்தில் காப்பிய ஒளியை உலகுக்கு ஈந்த கம்பர், அப்போது நிலவிய விருத்தப்பாவை எடுத்துக் கொள்கிறார்.

முன்னுள்ளவற்றை ஈர்த்துப் பயன்படுத்திக்கொள்ளும் இயல்பு படைத்த கம்பர், உணர்ச்சி ஆளுமைகளைக் கொடுக்க இவ்விருத்தப்பாவைப் பயன்படுத்திக் கொண்டார் என்பதே யாப்பிலக்கண வரலாறு காட்டும் உண்மை.

முனைவர் அ.அ.ஞானசுந்தரத்தரசு

Kannan Natarajan

unread,
May 23, 2010, 4:15:24 AM5/23/10
to Min Thamizh
தொன்​மம்,​​ நாடோ​டிப் பாடல்​கள் வடி​விலும் உண்டு!

தமிழ்ச் செவ்​வி​யல் நூல்​கள் பல​வற்​றில் இராமன் பற்​றிய குறிப்​பு​கள் 
காணப்​ப​டு​வ​தால்,​​ கம்​ப​னுக்கு முன்பே வேறு யாரா​லா​வது இராம​காதை எழு​தப்​பட்​டி​ருக்​கி​றதா இல்​லையா?​

"ஆம்" என்​பதே இவ்​வி​னா​வுக்​கு​ரிய விடை.​ 

அதற்கு மூன்று கார​ணங்​க​ளைக் கூற​லாம்.​ 

"வால்​மீ​கி​யின் வாயி​லாக இலக்​கிய வடி​வம் பெறு​வ​தற்கு முன்பே இக்​க​தைத் தொகுதி தொன்ம வடி​வி​லும்,​​ நாடோ​டிப் பாடல்​கள் வடி​வி​லும் இந்​தி​யா​வின் 
எல்​லாப் பகு​தி​க​ளி​லும் பரவி இருந்​த​தாக மானு​ட​வி​ய​லா​ல​ரி​டை​யே​யும்,​​ சமூ​க​வி​ய​லா​ல​ரி​டை​யே​யும் ஒரு கருத்து நிலவி வரு​கி​றது'' ​(இரா​ம​கா​தை​யும் இரா​மா​ய​ணங்​க​ளும் -​ டாக்​டர் அ.அ.மண​வா​ளன் -​ பக்.1).​

"தமி​ழில் அக​வல் வடி​வில் ஒரு இராமா​யண நூல் இருந்​துள்​ளது.​ அவற்​றில் ஐந்து செய்​யுள்​கள் மட்​டும் இப்​போது கிடைக்​கின்​றன.​ இது​த​விர,​​ சமண இராமா​ய​ணம் ஒன்​றும் இருந்​துள்​ளது.​ கம்​ப​ரது இராமா​ய​ணம் தோன்​றிய பிறகு 
அவை​யெல்​லாம் புகழ் மங்கி மறைந்​தன'' என்று "புதிய நோக்​கில் தமிழ் இலக்​கிய வர​லாறு" என்​கிற நூலில் டாக்​டர் தமி​ழண்​ணல் பதிவு செய்​துள்​ளார்.​

உ​ல​கி​லேயே பாலி மொழி​யில் "தச​ரத ஜாத​கம்" என்ற இரா​ம​கா​தை​ 
முதன்​முத​லில் தோன்​றி​யது.​ 

பின்​னர் வால்​மீகி சம்ஸ்​கி​ருத மொழி​யில் இயற்​றி​னார்.​ 

அதன் பின்​னர் பிராக்​கி​ரு​தம்,​​ திபெத்​திய மொழி ஆகி​ய​வற்​றில் இராமா​ய​ணம் இயற்​றப்​பட்​டது.​ 

இவற்​றுக்​குப் பின்​னர்​தான் தமி​ழில் இராமா​ய​ணம் இயற்​றப்​பட்​டது.​ 

இராமா​ய​ணம் இந்​திய மொழி​க​ளில் மட்​டு​மன்றி,​​ தாய்​லாந்து,​​ மலே​சியா,​​ இலாவோஸ்,​​ பிலிப்​பின்ஸ்,​​ ஜப்​பான்,​​ பர்​மி​யம்,​​ பார​சீ​கம் ஆகிய மொழி​க​ளி​லும் இயற்​றப்​பட்​டுள்​ளது.​

தி​பெத்,​​ இந்​தோ​னே​ஷியா,​​ ஜப்​பான் ஆகிய மொழி​க​ளில் இயற்​றப்​பட்ட 
இராமா​ய​ணங்​கள் கம்​ப​ரா​மா​ய​ணத்​துக்​குப் பிற்​பட்​டவை அல்ல.​ எனவே,​​ 
கம்​ப​ரா​மா​ய​ணத்​துக்கு முன்பே ஒரு இராமா​ய​ணம் தமி​ழில் உறு​தி​யாக 
இருந்​தி​ருக்க வேண்​டும்.​

த​மிழ் இலக்​கிய வளர்ச்​சியை உற்​று​நோக்​கி​னால் ஓர் உண்மை புலப்​ப​டும்.​ 

முத​லில் தமிழ்ப் புல​வர்​கள் தங்​கள் கருத்​து​களை அக​வற்​பா​வில் வெளி​யிட்​ட​னர்.​ 

பின்​னர் வெண்பா வாயி​லாக உரைத்​த​னர்.​ 

அடுத்த கால​கட்​டங்​க​ளில் 

    • விருத்​தப்பா
    • துறை​தா​ழிசை
    • கண்ணி
    • சிந்து
    • கீர்த்​தனை
    • வில்​லுப்​பாட்டு
    • புதுக்​க​விதை
    • ஹைக்கூ 
    என்று மன்​னர்​கள்,​​ மக்​கள்,​​ செல்​வந்​தர்​கள் ஆகி​யோ​ரது இரச​னைக்கு ஏற்​ப​வும்,​​ படைப்​பா​ளி​க​ளுக்கு யாப்​பி​லக்​க​ணத்​தின் மீதி​ருந்த அச்​சத்​திற்கு ஏற்​ப​வும் கருத்தை வெளி​யி​டும் வடி​வங்​கள் மாறி​வந்​துள்​ளனஎ​டுத்​து​காட்​டாக 
    மகா​பா​ர​தக் கதை அக​வற்பா,​​ வெண்பா,​​ விருத்​தம்,​​ புதுக்​க​விதை ஆகிய 
    வடி​வங்​க​ளில் இயற்​றப்​பட்​டுள்​ளது.​ 

    அதே போன்று இராமா​ய​ணக்​க​தை​யும் எல்லா வடி​வங்​க​ளி​லும் 
    இயற்​றப்​பட்​டி​ருக்க வேண்​டும்.​ வெண்​பா​வில் இயற்​றப்​பட்ட இராமா​ய​ணம் 
    மட்​டும் கிடைக்​க​வில்லை.​ அத​னால் அப்​படி ஒரு நூலே இல்லை என்ற 
    முடி​வுக்கு வரு​வது சரி​யல்ல.​

    யாப்பு வடி​வங்​க​ளில் அக​வற்​பா​வும்,​​ வெண்​பா​வும் சங்க காலத்​துக்கு 
    முற்​பட்​டவை.​ டாக்​டர் தமி​ழண்​ணல் குறிப்​பி​டும்,​​ தற்​போது ஐந்து பாடல்​களே எஞ்​சி​யி​ருக்​கும்,​​ அக​வற்​பா​வா​லான இராமா​ய​ணம்,​​ ஒருக்​கால் சங்க காலத்​துக்கு முற்​பட்​ட​தாக இருக்க வேண்​டும்.​

    வெண்பா யாப்​பில் ஆக்​கப்​பட்ட இராமா​ய​ணம் தமி​ழில் இருந்​தது என்​ப​தற்​கான ஆதா​ரங்​கள் உள்​ளன.​

    சென்னை கம்​பன் கழ​கம் வெளி​யிட்​டுள்ள இராமா​ய​ணம் நூலில்,​​ 
    மிகைப்​பா​டல்​கள் என்று ஆயி​ரத்து இரு​நூற்​றுத் தொண்​ணூறு பாடல்​கள் 
    குறிப்​பி​டப்​பட்​டுள்​ளன.​ அவற்​றுள் மூன்று பாடல்​கள் மட்​டுமே 
    வெண்​பா​வால் இயற்​றப்​பட்​டுள்​ளன.​ 

    அவற்​றுள் ஒரு பாடல்,​​

    "கலங்கா மதி​யும் கதி​ரோன் புர​விப்
     பொலன்கா மணித்​தே​ரும் போகா இலங்கா
     புரத்​தானை வானோர் புரத்​து​ஏற விட்ட
     சரத்​தானை நெஞ்சே தரி''​

    என்​ப​தா​கும்.​ 

    இது ஒரு காப்​புச் செய்​யுள்.​ 

    காப்​புச் செய்​யுள் நூலா​சி​ரி​ய​ரால் மட்​டுமே இயற்​றப்​பட வேண்​டும்;​ ஒரு நூலைத் தொடங்​கும் முன் முதல் பாட​லாக அமை​ய​வேண்​டும் என்​பது மரபு.​ இப்​பா​டல் வெண்​பாக்​க​ளால் இயற்​றப்​பட்ட இராமா​ய​ணத்​தின் காப்​புச் செய்​யு​ளாக இருக்க வேண்​டும்.​ 

    அது எவ்​வாறோ கம்​ப​ரா​மா​ய​ணச் சுவ​டி​யு​டன் கலந்து,​​ வெண்​பா​வா​லான 
    இராமா​ய​ணம் மறைந்​தும்,​​ தான் மறை​யா​மல் இருக்​கி​றது.​

    வெண்​பா​வா​லான இந்​தக் காப்​புச் செய்​யுள் சங்க காலத்​தைச் சேர்ந்​தது.​ சங்க காலத்​தில் காப்​புச் செய்​யுளை வெண்​பா​வால் இயற்​று​வ​து​தான் மர​பாக இருந்​தது.​ இளங்​கோ​வ​டி​க​ளும் அக்​கால மரபை மீறாது வாழ்த்​துப் பாடலை 
    வெண்​பாக்​க​ளால் இயற்​றி​யுள்​ளது குறிப்​பி​டத்​தக்​கது.​

    இ​து​கா​றும் கூறி​ய​வற்​றால்,​​ கம்​ப​னுக்கு முன்பே இராமா​ய​ணக் கருத்​து​கள் தொன்ம வடி​வி​லும்,​​ நாடோ​டிப் பாடல்​கள் வடி​வி​லும் தமிழ் நாட்​டில் வழங்கி ​ வந்​தி​ருக்​கின்​றன.​ அக​வற்​பா​வால் இயற்​றப்​பட்ட இராமா​ய​ணம் ஒன்று இருந்​தது.​ வெண்​பா​வா​லான இராமா​ய​ணம் ஒன்​றும் இருந்​தி​ருக்க வேண்​டும்.​ இவற்​றுள் ஏதே​னும் ஒன்​றின் வாயி​லாக அல்​லது அனைத்​தின் வாயி​லா​கத்​தான்,​​ தாம் அறிந்த செய்​தி​க​ளைச் சங்​கப்​பு​ல​வர்​கள் தமது பாடல்​க​ளில் 
    குறிப்​பிட்​டி​ருக்​கி​றார்​கள் என்​பது தெளிவு.​

    கா.மு.​ சிதம்​ப​ரம்


    நன்றி:- தினமணி

    Kannan Natarajan

    unread,
    May 30, 2010, 8:12:08 PM5/30/10
    to Min Thamizh
    இலக்கிய விவாதத்திற்குரிய இந்த மாதக் கேள்வி!

    சிலப்பதிகாரம் பேசப்படும் அளவுக்கு மணிமேகலையும், சீவகசிந்தாமணியும்  பேசப்படுவதில்லையே, ஏன்?

    புதூ.சு. முருகையன்,
    திருப்பத்தூர்.

    Kannan Natarajan

    unread,
    Jun 12, 2010, 11:54:26 PM6/12/10
    to Min Thamizh
    சிலப்பதிகாரம் பேசப்படும் அளவுக்கு மணிமேகலையும், சீவகசிந்தாமணியும்  பேசப்படுவதில்லையே, ஏன்?

    சமய நல்லிணக்கம் இல்லாமையே!

    ஒரு சிறந்த காப்பியம் என்றால் அது சமய நல்லிணக்கக் காப்பியமாக விளங்க வேண்டும்.

    சிலப்பதிகாரம் சமணச் சார்புடையதாகக் கருதப்படுகிறது.

    எனினும் சைவ, வைணவக் கருத்துகள் போற்றப்படுகின்றன!

    மணிமேகலை புத்த சமயக் காப்பியமாகவும், சீவகசிந்தாமணி சமண சமயக் காப்பியமாகவும் அமைந்துள்ளன.

    பிற சமயங்களைப் புறக்கணிக்காமல், அவற்றையும் தழுவி மெய்ப்பொருளை எடுத்து மொழியும் ஆற்றலும் ஏற்றமும் வாய்ந்தது சிலப்பதிகாரம்.

    அடுத்து, வலிவான கதையும் பொலிவான கற்பனையும் வேண்டும்.

    சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியுடன் வாழ்ந்து, மாதவியுடன் இணைந்து மணிமேகலை என்னும் பெண்ணுக்குத் தந்தையாகத் திகழ்ந்து "கருணை மறவன்", "இல்லோர் செம்மல்", "செல்லாச் செல்வன்" என்று பாராட்டப்பட்டவன், மதுரைக்குச் சென்று புதுவாழ்வு மேற்கொள்ள முயன்றபோது, அரண்மனைப் பொற்கொல்லன் "கள்வன்" என்று குற்றம் சாட்டிக் கோவலனைக் கொன்றுபோட்டான்.

    தன் காற்சிலம்பையே கோவலன் விற்க வந்த செய்தியை எடுத்துரைத்து, "சிலம்பின் வென்ற சேயிழை''யாக விளங்கும் கண்ணகி, பத்தினித் தெய்வமாகப் பாராட்டப்படுகிறாள்.

    மணிமேகலை, துறவியாகவும் உலகின் அறச் செல்வியாகவும் விளங்கினாலும், துறவற வாழ்வு பெரிதும் போற்றப்படவில்லை.

    மேலும், பதிமூன்று கதைகளின் தொகுப்பாக மணிமேகலை அமைந்துள்ளது.

    சீவகசிந்தாமணி எண்மரை மணக்கும் சீவகனின் மணநூலாக ஒளியுடன் மிளிர்கிறது.

    எனினும் கதை வலிவும் கற்பனைப் பொலிவும் மக்கள் உள்ளங்களை அள்ளவில்லை!

    மூன்றாவதாக, காப்பியப் பரவலுக்குத் துணைபுரியும் சான்றோரும் இயக்கமும் வேண்டும்.

    சிலப்பதிகாரத்தை ஆர்வத்துடன் பரப்ப, பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் போன்ற புலவர் பெருமக்களும் பல்வேறு இலக்கிய அமைப்புகளும் முழு மூச்சுடன் செயலாற்றியது குறிப்பிடத்தக்கது.

    பாரதியின் எழுத்தோவியங்களைத் தேசிய இயக்கத்தாரும் பாரதிதாசன் எழுத்தோவியங்களைத் திராவிட இயக்கத்தாரும் பேணிப் போற்றிப் பரப்பி வந்தனர்.

    சிலப்பதிகாரத்தின் செழுமையைப் பாரதியாரும், பாவேந்தரும் பரப்பி வந்தனர்.

    சிலப்பதிகாரம் என்பதை "சிறப்பதிகாரம்" என்றார் தமிழ்த்தாத்தா உ.வே.சா.

    தமிழ் மரபும் தொல்காப்பியச் சால்பும், திருக்குறள் நெறியும் செறிந்தது சிலப்பதிகாரம்.

    குடிமக்கள் காப்பியமாகவும்; தமிழ்நாட்டு ஒருமைப்பாட்டுக் காப்பியமாகவும்; மூவேந்தர் புகழ்பாடும் பனுவலாகவும் திகழும் சிலப்பதிகாரம் அறுபத்து நான்கு கதை மாந்தருடன் கலைக் காப்பியமாகவே திகழ்கிறது.

    தமிழ்த்தாத்தா உ.வே.சா. கூறுவது போன்று, சிலப்பதிகாரம் ஐம்பெருங் காப்பியங்களில் "சிறப்பதிகாரம்" என்று சொல்லும் அளவுக்குப் பெருமை வாய்ந்ததாக விளங்குவது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

    முனைவர் பா.வளன் அரசு

    Kannan Natarajan

    unread,
    Jun 20, 2010, 2:12:48 AM6/20/10
    to Min Thamizh
    சிலப்பதிகாரம் பேசப்படும் அளவுக்கு மணிமேகலையும், சீவகசிந்தாமணியும்  பேசப்படுவதில்லையே, ஏன்?

    புறந்தள்ளப்பட்டதே காரணம்.

    சிலப்பதிகாரம், மக்களின் இயல்பு வாழ்க்கையோடு ஒத்ததாய் - மக்கள் காப்பியமாக, முத்தமிழ்க் காப்பியமாக மிளிர்கிறது. திருக்குறள் போல் சமயப் பொதுமையுடைய நூலாகவும் சேர, சோழ, பாண்டியர்களைச் சமமாகக் கருதும் மனப்பான்மையை வளர்க்கும் நூலாகவும் திகழ்கிறது.

    கற்புக்கடம் பூண்ட பொற்புடைத் தெய்வமாய், நகரெங்கும் ஊரெங்கும் தீப்பாய்ந்த நங்கையாய், கொற்றவை என வணங்கத் தக்கவளாய் கண்ணகி போற்றப்பட்டமையால் சிலப்பதிகாரம் அன்றும் இன்றும் என்றும் போற்றப்படும் நிலை எய்திற்று.

    சிலப்பதிகாரம் சமணரான இளங்கோவடிகளால் இயற்றப்பட்டிருந்தாலும், காப்பியத்துள் அறவண அடிகளும் கவுந்தியடிகளும் வந்தாலும் இவர்கள் கூறுவதுபோல வரும் சமண மதக் கருத்துரைகள் மிகமிகக் குறைவே!

    அடுத்து, மணிமேகலை நூலின் மீது குத்தப்படும் முதல் முத்திரை அது பெ
    த்தம் சார்ந்தது என்பதே.

    கி.பி.6ஆம் நூற்றாண்டு (பல்லவர்களின் காலம் முதல்) சைவ, வைணவ எழுச்சி பெற்ற சமய மறுமலர்ச்சிக் காலம்.

    வைதிக மதத்தால் சமணமும் பெ
    த்தமும் புறம் தள்ளப்பட்ட காலம். அதனால் குறிப்பாக சிந்தாமணியும், மணிமேகலையும் ஒதுக்கி வைக்கப்பட்ட காலம் இதுவே.

    இந்த நூல்கள் செல்வாக்குப் பெறாமைக்கு முக்கிய காரணம், இத்தகு நூல்களைப் பார்த்தாலும், படித்தாலும், வைத்திருந்தாலும் ஆகாது; தீது என்று வற்புறுத்தப்பட்ட காலம்.

    பெரும் புலவர் உ.வே.சாமிநாதையர், சிந்தாமணியையும், மணிமேகலையையும் பதிப்பிப்பதற்குத் தான்பட்ட துயரையும் வஞ்சகத்தையும் தம் நூலில் மிக அருமையாக எழுதியிருத்தலே மிகச் சிறந்த சான்றெனக் கொள்ளலாம்.

    இவ்விரு நூல்களின் மீது படித்தவர்களே வெறுப்பையும் நெருப்பையும் உமிழ்ந்ததாக உ.வே.சா. குறிப்பிட்டுள்ளார்.

    புலவர் சி.சுவாமிநாதன்

    Innamburan Innamburan

    unread,
    Jun 21, 2010, 6:42:43 AM6/21/10
    to mint...@googlegroups.com
    நான் இந்த தளத்தில் முன்பே இந்த வினாவை எழுப்பியிருந்தேன். விடை
    காணவில்லை. மதுரை எரிந்தபோது மீனாக்ஷிக்கோயில் இருந்ததால் தப்பிய
    பெரும்புலவர் சாத்தனாரின் தூண்டுதல் இல்லையெனில், சிலப்பதிகாரம்
    வந்திருக்குமா? அதன் இரட்டைக்காப்பியம் மணிமேகலை; தொடர்; அதே
    விருத்தப்ப்பா. சொல்லப்போனால், புலமை மிளிர்கிறது; ஈவிரக்கம், ஆன்மீகம்
    எல்லாம் பெளத்தமத சார்பில் இருந்தாலும், சைவர்களாலும் போற்றப்பட்ட வகையே.
    காழ்ப்புணர்ச்சியினால், உ.வே.சா. அவர்கள் காலம் வரை (ஏன் இன்று வரை!) ஆதி
    காலத்திலிருந்து, அந்த இரட்டைக்காப்பியம் புறக்கணிக்கப்பட்டால், தமிழ்
    பண்பின் மேல் எனக்கு மதிப்பு குறைகிறது. பரிபாடலுக்கும் அதே கதி தான்.
    இன்னம்பூரான்

    2010/6/20 Kannan Natarajan <thar...@gmail.com>:

    Kannan Natarajan

    unread,
    Jun 26, 2010, 9:26:42 PM6/26/10
    to Min Thamizh
    சிலப்பதிகாரம் பேசப்படும் அளவுக்கு மணிமேகலையும், சீவகசிந்தாமணியும்  பேசப்படுவதில்லையே, ஏன்?


    தேசியப் பார்வை இல்லாமையே...!


    சிலப்பதிகாரத்தை அடிக்கடி எடுத்தாளும் அளவுக்குப் புலவர்கள் கூட மணிமேகலையையோ சிந்தாமணியையோ ஆளுவதில்லை.

    அந்த அளவுக்கு மக்கள் வாழ்விலிருந்து அவை விலகிவிட்டன என்பது பொது உண்மை.

    மேலும் சிறப்பான பல உண்மைகளும் உள்ளன.

    சிந்தாமணியின் ஓர் அகப்பையை மட்டுமே கம்பர் முகந்து கொண்டார் எனக் கம்பரின் விருத்தப்பா மூலத்துக்குச் சிந்தாமணியின் பாவைப் போற்றினாலும், நெஞ்சையள்ளும் சிலம்பு என்ற பன்முகப் பரிமாண உரை சிந்தாமணிக்கு அமையவில்லை.

    சிலம்பின் அடியார்க்கு நல்லார் உரைபோல சிந்தாமணியின் நச்சினார்க்கினியர் உரை பாராட்டுக்குரியது. இவைபோன்ற உரைச்சிறப்பு மணிமேகலைக்கு இல்லை என்றாலும் சாத்தனாரின் சொல் நுட்பம் பாராட்டுக்குரியது. இவ்வாறு சிந்தாமணி, மணிமேகலையின் நுட்பங்களைப் புலவர்கள் அரிதாகப் பாராட்டினரேயன்றி, பலரது பாராட்டுக்குரியதாக அமையவில்லை.

    சிலம்பின் நுட்பம் பலராலும் பாராட்டுக்குரியதாகும்.

    சிலப்பதிகாரம் முத்தமிழ் பாவிய காவியம். அதுபோல் அவ்விரண்டும் இல்லை. சிலம்புக்கான பதிகச் சிறப்புபோல் அவ்விரண்டிற்கும் அமையவில்லை. சிலம்பு சமயப் பொதுநோக்குடைய நூல். ஆனால், மணிமேகலை சமய வாதங்களால் பெ
    த்தத்தை நிலைநாட்ட, சிந்தாமணியோ சமணத்தை வற்புறுத்துகிறது. சமயப் பொதுமைக்குள்ள வரவேற்பை வற்புறுத்தும் தனிமைச் சமயம் பெறவில்லை. இதனால் காமம் செப்பாது கண்டது மொழிந்த பொதுமைச் சிறப்பால் இளங்கோவடிகள் பேசப்படுகிற அளவுக்குச் சாத்தனாரோ, திருத்தக்கதேவரோ பேசப்படவில்லை.

    இதற்குச் சான்றாகவே இளங்கோவடிகளின் வரலாறு, சிலம்பில் பதிவானதுபோல ஏனைய இருவரின் வரலாறுகள் அந்தந்தக் காப்பியங்களில் பதிவாகவில்லை.

    குடிமக்கள் காப்பியமாகச் சிலம்பு பெருமையுறுவதுபோல் அவ்விரண்டும் இல்லை.

    நாட்டுப்புறவியல் பாங்கில் முல்லை, பாலை, குறிஞ்சி, மருதம், நெய்தலான ஐந்து நிலமக்களும் சிலம்பில் பங்குகொள்ளும் பாங்கு அவ்விரண்டிலும் இல்லை.

    சிலப்பதிகாரத்தின் அவலமும், துன்பியலும் கற்பவர் நெஞ்சைவிட்டு நீங்கா இடம் பிடித்துவிடுகின்றன. மணிமேகலையின் அவலம் இயல்பானதாக இல்லை. சிந்தாமணியில், அவலத்தினும் கானல் நீரான மனித இயல்புக்கு எதிரான இன்பச் சுவை பற்றிய செய்திகள் ஏற்புடையனவாக இல்லை.

    நினைவு கூரத்தகும் செம்மொழிச் செழுந்தொடர்கள் சிலம்பில் ஏராளமாக உள்ளன. கதை நிகழ்ச்சி நினைவுகளோடு அவை அடிக்கடி பயிலப் பெறுவனபோல் அவ்விரு காப்பியங்களில் தொடர்கள் எடுத்துக்காட்டப் படுவதில்லை.

    பாத்திரப் படைப்பு, கதைக்கரு, கதைப்பின்னல், கதைத் திருப்பம், நாடக உத்திகள், சிலேடைக் கூற்று, சொற்கட்டு போன்ற சிலம்புக்குள்ள கட்டமைப்புகள் ஏனைய இரண்டிலும் குறைவு எனலாம்.

    தமிழகப் பரப்பு முழுவதுக்குமன்றி இந்தியப் பரப்பளவைத் தொடும் கதை தழுவிய தேசியப் பார்வையைத் தரும் சிலம்பைப் போல் மணிமேகலையும் சிந்தாமணியும் இல்லை.

    காண்டம், காதை, மாலை, வரி, குரவை என்ற பிரிவுகளால் கற்போரை ஈர்க்கும் சிலம்புபோல் இல்லாமல் மணிமேகலை காதை என்ற பிரிவையும், சிந்தாமணி இலம்பகம் என்ற பிரிவையுமே பகுப்பாகக் கொண்டது - நூல் அமைப்பில் அவைகளுக்குள் உள்ள மாற்றமாகும்.

    நாட்டுப்பற்றை இளங்கோவடிகள் மிகுதியும் வற்புறுத்துகிறார்.

    தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற முத்தரப்புச் செய்திகள்  சிலம்பில் உள்ளதுபோல் அவைகளில் இல்லை.

    சிலம்பில்,
    • அரசியல்கூறு
    • நாடகக்கூறு
    • இசைக்கூறு
    • கதைக்கூறு
    • கதாபாத்திரக்கூறு
    • மெய்யியல்கூறு
    • நீதிக்கூறு
    • ஊழ்வினைக்கூறு
    • இன்பியல்கூறு
    • துன்பியல்கூறு
    • நாட்டுப் புறவியல்கூறு
    • சமூகவியல்கூறு
    போன்றவற்றைத் தனித்தனியே பிரித்தறிய வாய்ப்புள்ள தெளிவு மணிமேகலையிலும் சிந்தாமணியிலும் இல்லை.

    தொடக்கத்தில் மூன்று நீதிகளை அறிமுகப்படுத்தும் ஆர்வத்தில் பதிகம் அமைந்தாலும் சிலப்பதிகார இறுதியில் காப்பிய சாரம் போல் இளங்கோவடிகள், "தெளிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்'' என விளித்துக் கூறும் இருபத்திரண்டு நீதிகள் போல் மணிமேகலையிலும், சிந்தாமணியிலும் அமையாதது பெருங் குறையே!

    எனவே, யாப்பில், சொற்செட்டால் பன்முகப் பாங்குடன் அமைந்த சிலப்பதிகாரம் பெண்மையை உயர்த்திய அதாவது, கடவுளாக்கிய புதுமையால் புரட்சிக் காப்பியம் எனப் பெயர்பெற்று, எல்லோராலும் கையாளப்படும் இலக்கியமாக - செம்மொழித் தகுதிக்குப் பெருமை சேர்க்கும் முதன்மைக்குப் பிந்தியதாக மணிமேகலையும், சிந்தாமணியும் உள்ளதால், சிலம்பு பேசப்படும் அளவுக்கு அவை பேசப்படவில்லை.

    "உரையிடையிட்டப் பாட்டுடைச் செய்யுள்",என்ற புதுப்பொலிவு சிலம்பிற்கே உள்ளதால் எல்லா வகையாலும் அரவணைத்து நிற்பது சிலப்பதிகாரமே.


    தமிழாகரர் தெ.முருகசாமி

    Kannan Natarajan

    unread,
    Jul 8, 2010, 8:25:38 PM7/8/10
    to Min Thamizh
    ஐம்பெரும் காப்பியங்களுள் கம்பராமாயணம் ஏன் இடம்பெறவில்லை?

    சமயப் பூசலே காரணம்.


    "காப்பியம்" என்பது "காவியம்" என்பதன் வட சொல்லின் திரிபு ஆகும்.

    ஐம்பெருங்காப்பியம் என்னும் வழக்கு பிற்காலத்தில் தோன்றியது என்பதை இதன் மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

    பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என்னும் இலக்கிய வரிசை போல பிற்காலத்தில் ஐம்பெருங்காப்பியங்கள் என்னும் வரிசையும் வழங்கிவரத் தொடங்கியது.

    வடமொழியில்,
    1. நைடதம்
    2. ரகுவம்சம்
    3. குமாரசம்பவம்
    4. கிராதர்ஜுனியம்
    5. சிசுபாலவதம்
    ஆகிய ஐந்தும் ஐம்பெருங் காப்பியங்களாக விளங்கின.

    அந்த வடமொழி மரபைப் பின்பற்றியே தமிழில் காப்பியங்களை
    • ஐம்பெருங்காப்பியங்கள் என்றும்,
    • ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும்
    வகைப்படுத்தி உள்ளனர்.

    வடமொழி மரபைப் பின்பற்றி காப்பிய வகைப்பாடு செய்து இருப்பதால் காப்பியத் தகுதி இல்லாத நூல்களையும் காப்பியம் என்று கூறுகிற போக்கைக் காணமுடிகிறது.

    வடமொழியில் வால்மீகி எழுதிய
    ராமாயணத்தை அடியொற்றி, கம்பர் ராமாயணத்தை திருந்திய வடிவில், காவிய இன்பத்தோடு வளம் பொருந்தியதாக அமைத்துள்ளதை,"நாரதன் கருப்பஞ் சாறாய் நல்ல வான்மீகன் பாகாய்சீர் அணி போதன் வட்டாய் செய்தனன் காளிதாசன்பார் அமுது அருந்தப் பஞ்ச தாரையாய்ச் செய்தான் கம்பன்வாரம் ஆம் இராமகாதை வளம் முறை திருந்தினானே''(மிகை:28) என்ற பாடல் நமக்கு உணர்த்துகிறது.

    கி.பி. 9ஆம் நூற்றாண்டில் தோன்றியது என நாம் கம்பராமாயணத்தின் காலத்தை வரையறுத்தாலும் அதன் வடிவமும், கம்பரின் கவிதை நயமும் எக்காலத்துக்கும் இன்பத்தை வாரி வழங்குகிறது என்றால் அது மிகையாகாது.

    கம்பராமாயணம் தோன்றிய காலத்தில் சமண, பெ
    த்த சமயக் கருத்துகளே மேலோங்கி இருந்தன.  "வீடுபேறு" என்ற தத்துவமே சமயத்தில் சிறப்பாகக் கொள்ளப்பட்டது. தமிழில் உள்ள சிலப்பதிகாரம் முதலிய ஆரம்பகாலக் காப்பியங்கள் யாவும் சமண, பெத்தக் காப்பியங்களாக இருந்ததால் அவை ஐம்பெருங்காப்பியங்களுள்  இடம்பெறத் தகுதியானதாகக் கொள்ளப்பட்டது. மேலும், கம்பரை அவர் வாழ்ந்த காலம் எளிதாக ஏற்றுக்கொள்ளாத ஒரு சூழல் இருந்தது. அது அவரைத் தனித்துவப்படுத்தியே காட்டியது. இதுபற்றி கம்பரே வருந்திக் கூறியுள்ளார் என்பதை ராமாவதாரம் தற்சிறப்புப் பாயிரம் எடுத்துக் கூறுகிறது.

    ஐம்பெருங்காப்பியங்களுள் இருந்து கம்பராமாயணம் புறந்தள்ளப்பட்டதற்கு மேற்சுட்டிய காரணங்களே பொருத்தமாக இருக்கிறது.

    ஐம்பெருங்காப்பியங்களாக விளங்கக்கூடிய சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய இவை ஐந்தும் சமண, பெ
    த்தக் காப்பியங்களாகவே இருக்கின்றன. இதனால், அக்காலத்தில் சமணமும் பெத்தமும் தழைத்தோங்கியது என்பதை உணரமுடிகிறது.

    மேலும், கம்பரது வைதீக நெறி கம்பராமாயணத்தில் பிரதிபலித்தது. அதனாலேயே இதைச் சமணர்களும் பெ
    த்தர்களும் ஏற்கவில்லை. சமயப் பூசல் காரணமாகவே கம்பராமாயணம் ஐம்பெருங்காப்பியங்களுள் இடம்பெறவில்லை.

    ப.இரமேஷ்

    Geetha Sambasivam

    unread,
    Jul 9, 2010, 4:29:27 AM7/9/10
    to mint...@googlegroups.com
    நல்ல கட்டுரை, நன்றி.

    2010/7/9 Kannan Natarajan <thar...@gmail.com>

    --

    Kannan Natarajan

    unread,
    Jul 11, 2010, 10:48:24 PM7/11/10
    to Min Thamizh
    ஐம்பெரும் காப்பியங்களுள் "கம்பராமாயணம்"  ஏன் இடம்பெறவில்லை?

    இதிகாசமானதால், காப்பியமாகவில்லை

    காப்பியங்களை வடமொழிச் செல்வாக்கு வந்த பிறகே ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறுகாப்பியம் என்று தமிழ்ச் சான்றோர் பகுத்துக் கொண்டதாகத் தெரிகிறது.

    பஞ்சமா காவியங்களுக்கு இணையாக, ஐம்பெருங்காப்பியங்களுள் சமணக் காப்பியங்கள் மூன்றும், புத்தக் காப்பியங்கள் இரண்டும் இடம்பெற்றன.

    ஐஞ்சிறு காப்பியங்கள் ஐந்தும் சமணம் சார்ந்தனவே.

    சமயச் சார்பு இல்லாத பேரிலக்கியமாகவே கம்பர் இராமகாதையை உருவாக்கியுள்ளார்.

    வைணவ சமயத்தை வளர்ப்பதோ, திருமால் பக்தியைப் பெருக்குவதோ கம்பருடைய நோக்கம் அன்று.

    "யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின் போரொடுங்கும் புகழ் ஒடுங்காது'' என்னும் விழுமிய செய்தியை வழங்குவதே கம்பரது குறிக்கோள்.

    "அணி செய் காவியம் ஆயிரம் கற்போர் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண வேண்டும்'' என்பார் பாரதியார்.

    தமிழ் மாந்தர் போர்களால் பேரழிவுக்கு இனி மேலும் ஆளாகக் கூடாது எனவும், ஒன்றுபட்டால் தமிழர்க்கு வாழ்வு உண்டு எனவும் நிலைநாட்ட விரும்பியவர் கம்பர்.

    மேலும், இராமன் மனிதனாக இறங்கி வருவதை இதிகாசம் என்றே குறித்தனர்.

    திருமால் இராமனாகத் தோன்றியதை இராமகாதையும், கண்ணனாக விளங்கியதை மகாபாரதமும் விரித்துரைக்கின்றன.

    இதிகாச நூலாகக் கம்பராமாயணம் போற்றப்பட்டதால், காப்பியமாக அமையவில்லை.

    "மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்'' என்ற பழந்தமிழ்ச் சான்றோர் மரபை மீறி, "உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்'' என்று கருத்துப் புரட்சி செய்தவர் கம்பர்.

    மக்கள் உயிர் எனவும், மன்னன் உடல் எனவும் மாபெரும் புத்தெழுச்சியை உருவாக்கியவர் கம்பர்.ஆழ்வார் பாசுரங்களின் பிழிவாக இராமகாதை அமைந்ததாலும், உபநிடதக் கருத்துகளை முதலில் மொழிவதாலும் கம்பர் இலக்கிய உலகில் தனிச்சிறப்பு வாய்ந்தவராக விளங்குகிறார்.

    வால்மீகி, வசிட்டர், போதாயனர் ஆகிய மூவரும் வடமொழியில் வழங்கிய இராமாயணங்கள் உள்ளன.

    வால்மீகியிடம் கதை அமைப்பைப் பெற்றுக் கொண்ட கம்பர், தமிழ் மரபுக்கு ஏற்றவாறு மாற்றியும், போற்றியும், நீக்கியும் இராமகாதையைத் தீட்டியுள்ளார்.

    எனவே, தனிச்சிறப்பு வாய்ந்ததாகத் திகழும் கம்பராமாயணம், ஐம்பெருங்காப்பியங்களுள் இடம்பெறவில்லை எனலாம்.


    முனைவர் பா.வளன் அரசு

    Geetha Sambasivam

    unread,
    Jul 12, 2010, 3:34:14 AM7/12/10
    to mint...@googlegroups.com
    இதிகாசத்துக்கும், காப்பியத்துக்கும் என்ன வேறுபாடு என்பதை விளக்க முடியுமா என்று கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

    2010/7/12 Kannan Natarajan <thar...@gmail.com>

    --

    Tthamizth Tthenee

    unread,
    Jul 12, 2010, 3:46:07 AM7/12/10
    to mint...@googlegroups.com
    காவியம் , காப்பியம் , போன்றவைகளுக்கும் என்ன  வேறுபாடு
     
    அன்புடன்
    தமிழ்த்தேனீ

     
    12-7-10 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதினார்:



    --
    மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

    அன்புடன்
    தமிழ்த்தேனீ
    http://thamizthenee.blogspot.com
    rkc...@gmail.com
    http://www.peopleofindia.net

    Hari Krishnan

    unread,
    Jul 12, 2010, 4:12:28 AM7/12/10
    to mint...@googlegroups.com


    2010/7/12 Geetha Sambasivam <geetha...@gmail.com>

    இதிகாசத்துக்கும், காப்பியத்துக்கும் என்ன வேறுபாடு என்பதை விளக்க முடியுமா என்று கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.


    இதி ஹாச என்றால் ‘இது நடந்தது’ என்பது பொருள்.  ராமாயணமும் மஹாபாரதமும் இதிஹாசங்கள்.  இரண்டைத் தவிர வேறு எதையும் இந்தப் பிரிவில் எனக்குத் தெரிந்து யாரும் அடக்கியதாகத் தெரியவில்லை.  இதிஹாசம் என்றால் என்னவென்று கௌடில்யருடைய வரையறை இங்கே: 


    ராமயண, மஹாபாரதங்களை இதிஹாசங்களாக வரையறை செய்தவர் வியாசரே என்று தெரியவருகிறது.  

    Hari Krishnan

    unread,
    Jul 12, 2010, 4:15:17 AM7/12/10
    to mint...@googlegroups.com


    2010/7/12 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

    காவியம் , காப்பியம் , போன்றவைகளுக்கும் என்ன  வேறுபாடு
     
    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    காவ்ய என்ற சொல்லினடிப்படையில் காவியம், காப்பியம் போன்ற வடிவங்கள் தோன்றின என்பது சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி சொல்கிறது.  ஓடிஎல் விளக்கம் இது: 

    காப்பியம் kāppiyam : (page 868)

    உரை.) 2. An ancient village near Cīkāḻi; சீகாழிக்கு அயலிலுள்ள ஓர் ஊர். (சிலப். 30, 83, கீழ்க்குறிப்பு.)

    காப்பியம் kāppiyam

    n. < kāvya. A narrative poem dealing with aṟam, poruḷ, iṉpam and vīṭuperu-ṇ-kāppiyamciṟu-kāppiyam;

    கடைசி வரியைப் பார்க்கவும் < என்ற குறி அடிச்சொல்லைக் குறிக்கிறது.  

    devoo

    unread,
    Jul 12, 2010, 5:14:18 AM7/12/10
    to மின்தமிழ்
    இதிஹாஸம்

    ‘இதி’, ‘ஹ’, ‘ஆஸ’ (इति+ह+आस) மூன்று சொற்கள் கொண்ட தொகைச்சொல்.


    இதி – இவ்வாறு
    ஹ – அன்றோ
    ஆஸ – (முன்பு) நிகழ்ந்தது,
    என்று பொருள் கொள்ள வேண்டும்; ஹ என்பது அசை

    வரலாறு என எடுத்துக்கொள்ளலாம் - इति ह पुरावृत्तमास्ते यस्मिन् स इतिहासः


    தேவ்


    On Jul 12, 3:12 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
    > 2010/7/12 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>


    >
    > > இதிகாசத்துக்கும், காப்பியத்துக்கும் என்ன வேறுபாடு என்பதை விளக்க முடியுமா
    > > என்று கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.
    >
    > இதி ஹாச என்றால் ‘இது நடந்தது’ என்பது பொருள்.  ராமாயணமும் மஹாபாரதமும்
    > இதிஹாசங்கள்.  இரண்டைத் தவிர வேறு எதையும் இந்தப் பிரிவில் எனக்குத் தெரிந்து
    > யாரும் அடக்கியதாகத் தெரியவில்லை.  இதிஹாசம் என்றால் என்னவென்று கௌடில்யருடைய
    > வரையறை இங்கே:
    >

    > http://ancientindians.net/2009/05/28/what-is-itihasa-kautilyas-defini...

    Geetha Sambasivam

    unread,
    Jul 12, 2010, 6:11:11 AM7/12/10
    to mint...@googlegroups.com
    நான் கேட்டது இதிஹாசம் என்றாலும் காப்பியம் என்றாலும் ஒன்றே தானே என்ற அர்த்தத்தில். சிலப்பதிகாரமும் நடந்ததைக் கூறும் காவியம் தானே? அப்புறம் ராமாயணம் இதிஹாசம் என்பதால் ஐம்பெருங்காப்பியங்களோடு சேர்க்கவில்லை என்கிறதில் என்ன வேறுபாடுனு புரியலை எனக்கு. :(

    2010/7/12 devoo <rde...@gmail.com>
    It is loading more messages.
    0 new messages