FW: தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் புதிய செயல்திட்டங்கள்

51 views
Skip to first unread message

N Deiva Sundaram

unread,
Sep 2, 2015, 5:27:07 AM9/2/15
to mint...@googlegroups.com, Tamilmanram



Date: Wed, 2 Sep 2015 09:13:03 +0000
From: tam...@yahoo.com
To: tvaa...@tamilvu.org
Subject: தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் புதிய செயல்திட்டங்கள்

31.08.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவல் தொழில்நுட்பவியல் துறையின் 2015-16ம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் இடம் பெற்றுள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் புதிய செயல்திட்டங்கள்.
 
      புதிய கணித்தமிழ் கொள்கை 
தமிழகம் மட்டுமின்றி உலகெங்கம் கணித்தமிழ் வளர்ச்சியைப் பெருக்கிடவும், ஆராய்ச்சியாளர்கள், அரசு அலுவலர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய ஒரு உகந்த சூழலை உருவாக்கிடும் நோக்கோடு தமிழ்நாடு அரசு புதிய கணித்தமிழ் கொள்கை ஒன்றை வெளியிடும். அக்கொள்கையினைச் செம்மையாக வடிவமைத்திட மூத்த தமிழறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள், கணித்தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மென்பொருள் நிறுவனப் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்படும்.
      தமிழ் இணையக் கல்விக்கழகத்திற்கு ரூ.2.5 கோடி ஒதுக்கீடு
தமிழ் மொழித் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு மொழி ஆய்வு மென்பொருள்கள் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு பயனளிக்கும் வகையில் உலக தரத்திலான மதிப்பீட்டுக் கருவிகள்; முழுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான மேலாண்மைத் தளம்; அரிய தமிழ் நூல்கள், ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள், ஓவியங்கள் ஆகியவற்றின் மின்னுருவாக்கம் தமிழ் மொழியியல் தரவகம் மற்றும் மின் அகராதி; கணினி, அலைபேசி மற்றும் திறன்பேசியில் தமிழ் பாடங்கள்; இலக்கணம் மற்றும் அகராதி ஆகியவற்றை கற்பிப்பதற்கான குறுஞ்செயலிகள் ஆகியவற்றை உருவாக்கிச் செயல்படுத்த ரூபாய் 2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
       கல்லூரிகள்தோறும் கணித்தமிழ்ப் பேரவைகள்
கணித்தமிழ் வளர்ச்சியைப் பெருக்கிடும் நீண்டகால நோக்கிலும், அதன் முக்கியத்துவத்தை எதிர்காலத் தலைமுறையினர் உணர்ந்து செயல்படும் விதத்திலும், கணித்தமிழ்ப் பேரவைகள் கல்லூரிகள் தோறும் உருவாக்கப்படும். அவற்றிக்கு ஊக்கமளித்திடத் தேவையான ஆதார நிதியினைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கிடும்.
       அரிய நூல்கள், ஆவணங்களின் மின்னுருவாக்கம்
தற்போது நடைமுறைப்படுத்தப்படும்தகவலாற்றுப்படைதிட்டத்தின் கீழ், நாட்டுடைமையாக்கப்பட்ட மற்றும் அரிய தமிழ்நூல்கள், பழமையான ஆவணங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், ஓவியங்கள் உட்பட தமிழ்ப் பண்பாட்டை விளக்கும் அனைத்துப் படைப்புகளையும் மின்னூருவாக்கம் செய்திடும் ஓர் மாபெரும் திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கானத் தரக்கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை உலகத்தரத்தினை ஒட்டி வகுத்திடவும், தகுந்த தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறவும் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் புகழ்பெற்ற அமைப்புகளின் உதவியோடு இத்திட்டம் செயல்படுத்தப்படும். அரிய தமிழ்நூல்கள், பழமையான ஆவணங்கள் ஆகியவற்றைச் சேகரித்து வைத்திருக்கும் தனியார் மற்றும் அரசு சாரா அமைப்புகளையும் இணைத்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
       தமிழ்99 விசைப்பலகை, யூனிகோடு, TACE பயன்பாடு.
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்99 விசைப்பலகை மற்றும் யூனிகோடு, தமிழ் அனைத்து வரியுருக்களுக்கான குறியீடு (TACE16) ஆகியவற்றின பயன்பாட்டை அரசு அலுவலகங்களிலும் பொதுவெளியிலும் பரவலாக்குவதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
அரசுத் துறைகள் மற்றும் அரசு சார் நிறுவனங்களின் இணையதளங்களில் தமிழ்ப் பயன்பாட்டை முழுமையாகக் கொண்டு வரவும், அவற்றில் யூனிகோடு/ தமிழ் அனைத்து வரியுருக்களுக்கான குறியீடு (TACE16) பின்பற்றிட தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
       மொழித் தொழில்நுட்ப ஆய்வு
தமிழ் மொழித் தொழில்நுட்பம் மற்றும் இயற்கை மொழி ஆய்வு நோக்கில் நீண்ட கால ஆராய்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் சொல்லாளர், பிழைதிருத்தி, ஒளி வழி எழுத்தறிவான் ஆகிய மென்பொருட்களைச் செம்மையாக்குவது மட்டுமின்றி, உரை உணர்தல், உரைச்சுருக்கம் தருதல், மனிதன்-கணினி உரையாடல், தானியங்கு மொழிபெயர்ப்பு போன்ற பலவகைப் பயன்பாட்டு மென்பொருட்கள் உருவாக்கப்படும்.
       தரவகம் மற்றும் மின் அகராதி
தமிழ் மொழியியல் ஆராய்ச்சிக்குப் பெருமளவில் உதவிடத் தேவையான தரவகம் மற்றும் மின்-அகராதி ஆகியவற்றை உருவாக்கிட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
       மென்பொருள் உருவாக்கம்
கணினி, அலைபேசி மற்றும் திறன்பேசி உட்பட அனைத்து மின்னணு தகவல் தொடர்புச் சாதனைகளிலும் தமிழைப் பயன்படுத்துவதற்குத் தேவையான மென்பொருட்கள் உருவாக்கப்படும்.
மென்பொருள் நிறுவனங்களின் தமிழ ்மென்பொருள் உருவாக்கங்களுக்குப் பயன்படும் தமிழ் நிரலாக்கங்கள் உருவாக்கப்படும்.
    மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தேவையான நவீன மொழியாக்கக் கருவிகள் உருவாக்கப்படும்.
       பாடத்திட்டங்கள் மாற்றியமைப்பு
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தொடர்ந்துப் பயன்பெறும் வகையில் தமிழை இரண்டாம் மொழியாக மற்றும் அந்நிய மொழியாகக் கற்பிக்கும் வகையிலும் அந்தந்த நாட்டுக்கு ஏற்ற சூழலுக்குப் பொருந்தும் வகையிலும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.
       வெளிநாடுவாழ் தமிழாசிரியர்களுக்கான பட்டயப்படிப்பு அறிமுகம்
வெளிநாடுகளில் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்திடும் தன்னார்வலர்களுக்கு முறையான ஆசிரியர் பயிற்சி இல்லாததைக் கருத்தில் கொண்டு வெளிநாடு வாழ் தமிழாசிரியர்களுக்கான பட்டயப் படிப்பு ஒன்று புதிதாய் அறிமுகம் செய்யப்படும்.
       கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான முழுமையான மேலாண்மைத்தளம்
மொழித்திறன்களை மதிப்பீடு செய்யும் வகையில் உலகத்தரத்தில் மதிப்பீட்டுக் கருவிகளை உருவாக்கிடவும், கணினி வழிக்கற்றல் மற்றும் கற்பித்தலை உள்ளடக்கிய பல்ஊடகப் பயன்பாட்டின் வழி ஒரு முழுமையான கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான மேலாண்மைத் தளம் ஒன்று உருவாக்கப்படும்.
       குறுஞ்செயலிகள் உருவாக்கம்
மாணவர்களை எளிதில் கவர்ந்திடும் வகையில் தமிழ்மொழிப் பாடங்கள், இலக்கணம், அகராதி ஆகியவற்றை பல்ஊடகப் பயன்பாட்டின் துணைகொண்டு அலைபேசி மற்றும் திறன்பேசியில் பயன்படுத்தும் வகையில் குறுஞ்செயலிகளாகப் படைத்திடவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
       செய்தி மடல் மற்றும் பன்னாட்டு ஆய்விதழ்
பழம்பெரும் அரிய நூல்கள் மற்றும் உலகத் தமிழருக்குப் பயன்தரும் பல செய்திகளை உள்ளடக்கியவாறு தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையதளம் மெருகூட்டப்படும். மேலும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சார்பாக மாதமொருமுறை செய்திமடல் ஒன்றும் காலாண்டு பன்னாட்டு ஆய்விதழ் ஒன்றும் வெளியிடப்படும்.
       விக்கிபீடியாவுடன் இணைந்து விழிப்புணர்வுப் பரப்புரை
இணையத்தில் தமிழ்மொழியின் பயன்பாட்டை அதிகரித்திடும் நோக்கோடு தமிழ் இணையக் கல்விக்கழகம், ‘விக்கிபீடியாஉள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து தமிழகமெங்கும் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வுப் பரப்புரை நிகழ்த்துதல், மாணவர்களுக்கிடையே கணித்தமிழ்த் திறனை ஊக்குவித்திடப் பல்வேறு போட்டிகளை நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
       படைப்பாக்க பொதும உரிமங்கள்
தமிழ் இணைய கல்விக்கழகத்தால் உருவாக்கப்பட்ட மற்றும் அதன் மூலம் வெளியிடப்பட்ட படைப்பாக்கம், கல்வி மற்றும் அறிவியல் உள்ளடக்கங்கள், பல்வேறு மென்பொருட்கள் மற்றும் அவற்றின் வழிமுறைகள் அனைவருக்கும் தடையின்றிச் சென்று சேரும் விதமாக, அவையனைத்தும் படைப்பாக்க பொதும உரிமங்களின் கீழ் வெளியிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 
 

N. Kannan

unread,
Sep 2, 2015, 11:43:25 AM9/2/15
to மின்தமிழ்
2015-09-02 17:27 GMT+08:00 N Deiva Sundaram <ndsun...@hotmail.com>:



Subject: தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் புதிய செயல்திட்டங்கள்
       அரிய நூல்கள், ஆவணங்களின் மின்னுருவாக்கம்
தற்போது நடைமுறைப்படுத்தப்படும்தகவலாற்றுப்படைதிட்டத்தின் கீழ், நாட்டுடைமையாக்கப்பட்ட மற்றும் அரிய தமிழ்நூல்கள், பழமையான ஆவணங்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், ஓவியங்கள் உட்பட தமிழ்ப் பண்பாட்டை விளக்கும் அனைத்துப் படைப்புகளையும் மின்னூருவாக்கம் செய்திடும் ஓர் மாபெரும் திட்டம் செயல்படுத்தப்படும். அதற்கானத் தரக்கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை உலகத்தரத்தினை ஒட்டி வகுத்திடவும், தகுந்த தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறவும் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் புகழ்பெற்ற அமைப்புகளின் உதவியோடு இத்திட்டம் செயல்படுத்தப்படும். அரிய தமிழ்நூல்கள், பழமையான ஆவணங்கள் ஆகியவற்றைச் சேகரித்து வைத்திருக்கும் தனியார் மற்றும் அரசு சாரா அமைப்புகளையும் இணைத்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.


​Congratulations!

Our motto when formed Tamil Heritage Foundation in 2001 was "Tamil in Digital Media". We would be very glad to assist Government of Tamilnadu in its earnest efforts to promote Digital Tamil.

Kannan​



 
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Nagarajan Vadivel

unread,
Sep 2, 2015, 11:47:47 AM9/2/15
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளை த.இ.க.க வுடன் கைகோர்த்தால் நலமே.  சுபா அவர்களைத் தொடர்புகொள்வதாகச் சொல்லியிருந்தார்

அ.த

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Tthamizth Tthenee

unread,
Sep 2, 2015, 12:14:29 PM9/2/15
to mint...@googlegroups.com
மிக்க  மகிழ்ச்சி  

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net



Oru Arizonan

unread,
Sep 2, 2015, 5:14:01 PM9/2/15
to mintamil
வெளிநாட்டில் வாழும் தமிழனான எனக்கு தாங்கள் கொடுத்திருக்கும் இச்செய்தி பாலையும், தேனையும் சேர்த்துப் பருகியமாதிரி இருக்கிறது, தெய்வசுந்தரம் அவர்களே!

இம்முயற்சி வெற்றியடைந்து தமிழ் உலகெங்கும் பல்கிப் பரவிடவேண்டும்.

ஒரு அரிசோனன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Nagarajan Vadivel

unread,
Sep 2, 2015, 11:00:10 PM9/2/15
to மின்தமிழ்
தமிழ் மரபு அறக்கட்டளைக்கு இதில் ஆர்வம் உள்ள காரணத்தால் என் காத்துட்டுக் கருத்துக்களை முன்வைக்கிறேன்

தகவலாற்றுப்படையில் வழியிருந்தும் முதல்கட்டத் திட்டங்களில் இது சேர்க்கப்படவில்லை.  எனினும் த.இ.க.க வில் நூலகத்தை விரிவு செய்ய நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களையும் அரசுக்கு அளிக்கப்பட்ட தமிழ்நாட்டில் அச்சிடப்பட்ட நூல்களின் இரு படிவங்கள் அரசுக்கு அளித்த நூல்களை ஒளிவருடும் முன்மொழிவும் முன்னர் இருந்தது.  

வெளிநாட்டில் உள்ள தமிழ் நூல்களைத் தனியார் ஒளிவருடிக் கொடுக்கும் திட்டம் ஏற்கனவே தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மேற்பார்வையில் நடைபெற்றுக்கொண்டுள்ளது.  தொல்லியல்துறை அவர்களின் வளங்களை ஒளிவருடத் தனியாக நிதிபெற்று அத்திட்டமும் செயலில் உள்ளது.  ஆவணக் காப்பகம் அவர்களிடம் உள்ள ஆவணங்களை ஒளிவருடி முடித்துவிட்டார்கள்
இத்திட்டங்கள் செயலாக்கம்பெற விலை உயர்ந்த ஒளிவருடிகள் இந்நிறுவனங்களால் விலைகொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம் அவர்தம் வளங்களை ஒளிவருடி முடித்துவிட்டனர்.  கிறித்துவக்கல்லூரியில் 175 வருட ஆவணங்கள் ஒளிவருட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது

தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கு ஏற்ப த.இ.க.க வில் உள்ள நூல்களைப் பலகைக்கணினிக்கும் அலைபேசிக்கும் ஏற்ற வடிவில் மாற்ற இபப் வடிவில் மாற்ற ஒரு சிறு முயற்சியை மேற்கொண்டு இரண்டு நூல்களை ஒளிவருடிக் கொடுத்தேன் அப்போதுதான் தெரிந்தது பல பழமையான நூல்கள் குறிப்பாகச் சங்க இலக்கியங்களை அச்சிட்டு வெளியிட்டவர்கள் காப்புரிமையை வைத்துக்கொண்டு த.இ.க.க அவர்கள் நூலகத்தில் மட்டும் வைத்துக்கொள்ளலாம் என்று அனுமதி அளித்திருப்பதாகவும் அதை இணையத்தில் வெளியிடச் சட்டச் சிக்கல் இருப்பதாகவும் தெரிந்தது. வில்லங்கம் எதற்கென்று பாரதியார் பாடல்களை மாற்றித்தந்தேன்

எனவே த.ம.அ.க ஒன்று தன்னிடம் உள்ள ஒளிவருடப்பட்ட வளங்களை அளிக்கலாம் அல்லது புதிய திட்டத்தில் பங்குபெற்று அச்சு வடிவில் உள்ள நூல்களை ஒளிவருடிக் கொடுக்கலாம்.  தற்போது அழுந்தியிருக்கும் ஆனால் எப்போது வேண்டுமானாலும் எழக்கூடிய சிக்கல் காப்புரிமை பற்றியதாகும். 

தமிழ்நாடு மட்டுமே உலகில் தனியார் படைப்புகளை நாட்டுடமையாக்கி அது சரியா தவறா என்ற வாதத்துக்கு வழிவகுத்துள்ளது.  நாட்டுடமையா அல்லது அரசுடமையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  பாரதியரின் படைப்புகளை யார்வேண்டுமானலும் அச்சிட்டு விலைக்குவிற்று செல்வம் சேர்த்ததுபோல் இந்நூல்களையும் யார் வேண்டுமானாலும் ஒளிவருடி இலவசமாக அல்லது விலைக்கு விற்கலாம என்ற கேள்வியும் எழுகிறது

அச்சில் உள்ள நூல்களின் காப்புரிமை யாருக்கு காப்புரிமையிலிருந்து விலகி பொதுத்தளத்துக்கு வந்தடைய ஆசிரியர் இறந்து 60 ஆண்டுகளுக்கு மேலான நூல்கள் தகுதியுடையதால் சட்டச் சிக்கலின்றி ஒளிவருடத்தக்க நூல்களின் பட்டியல் உருவாக்கப்படவேண்டும்

ஒரே நேரத்தில் பல நிறுவனங்கள் ஒரே வேலையைச் செய்யும் நிலையில் ஒரே நூல் பலரால் ஒளிவருடக்கூடிய நிலை ஏற்படுவதைத் தடுக்க மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கை தெளிவுபடுத்தப்பட வேண்டும்

ஒரு நூலை ஒளிவருடி மின் நூலாக்க அதிக நேரமும் அதிகச் செலவும் பிடிக்கும் என்ற காரணத்தால் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் மிகக்குறைவான நூல்களையே குறிப்பாக பாதுகாக்கமுடியாத நிலையில் இருக்கும் அச்சு நூல்களுக்கு மின்னாக்கலில் முன்னுரிமை கொடுத்தனர்

தமிழ் மரபு தொடர்பான பிறமொழி நூல்கள் குறிப்பாக ஆங்கில மொழியில் பல நூல்கள் மேலைநாட்டு நூலகங்களில் ஏற்கனவே ஒளிவருடப்பட்டுள்ள நிலையில் அவற்றைக் கொடையாகப் பெறாமல் மீண்டும் ஒளிவருட வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது

தொடக்க கட்டத்தில் 3000 நூல்களை ஒளிவருடலாம் என்ற நிலை மாறி இப்போது ஒரு லட்சம் நூல்கள் (நன்றி கணேசனாருக்கு) ஒளிவருட மேற்கொள்ளும் முயற்சி கால பொருள் அடிப்படையில் எப்படி செயல்படுதப்படும் என்ற தெளிவில்லாத அறிக்கையாக மட்டுமே உள்ளது.  இப்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி இந்த நிதியாண்டுக்கு மட்டுமா என்பது தெரியவில்லை

யார் இந்தப் பணியில் ஈடுபடப்போகிறார்கள் அரசுத் திட்டத்தின் ஆமை வேகத்துக்கும் நரிகுளிப்பாட்ட நிலைக்கும் ஏற்ப வேலை செய்யும் பெரிய நிறுவனங்கள் மட்டுமே பங்குகொள்ளுமா அல்லது தனியார் தன்னார்வ நிறுவனங்கள் பங்குகொள்ளுமா என்ற நடைமுறையும் தெளிவாக்கப்படாத நிலையில் இது ஒரு தொடக்க அறிவிப்பாகக் கருதி மேலதிகத் தகவல் கிடைக்கும்வரை காத்திருப்பதே உசிதம் என்று தோன்றுகிறது

அ.த
டிஸ்கி: த.ம.அ.கவுக்காக என் தனிப்பட்ட காத்துட்டுக்கருத்து ஏற்பதும் விலக்குவதும் அவர்களின் உரிமை

2015-09-02 21:13 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:

--
Reply all
Reply to author
Forward
0 new messages