திருப்புகழ் - செம்பதிப்பு

247 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
Dec 2, 2017, 2:36:11 AM12/2/17
to மின்தமிழ்
அன்புடையீர்,
திருப்புகழுக்குரிய தொடரடைவு உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளேன். அதற்கு, முதலாவதாக திருப்புகழ் பாடல்களைக் கொண்ட இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். இரண்டிலுமே பாடல் எண் வரிசைகள் வேறுவேறாக இருக்கின்றன. ஒன்றில் 600-ஆவது பாடலாக இருப்பது மற்றொன்றில் 649 என இருக்கிறது. மொத்தப்பாடல்களின் எண்ணிக்கையும் ஒத்துவரவில்லை. ஒன்றில் 1311 பாடல்கள் இருக்க, மற்றொன்றில் 1324 பாடல்கள் இருக்கின்றன. எதனை வைத்துத் தொடரடைவு உருவாக்குவது என்று குழம்பியுள்ளேன். எனவே, பெரும்பாலானோர் பயன்படுத்தும் திருப்புகழ் செம்பதிப்பு ஏதேனும் இருக்கிறதா என்று தெரிந்தவர்கள் தெரியப்படுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன்.
ப.பாண்டியராஜா

nkantan r

unread,
Dec 2, 2017, 2:39:08 AM12/2/17
to மின்தமிழ்
I go by kaumaaram

http://www.kaumaram.com/thiru/

rnk

தேமொழி

unread,
Dec 2, 2017, 4:08:15 AM12/2/17
to மின்தமிழ்
///ஒன்றில் 1311 பாடல்கள் இருக்க, மற்றொன்றில் 1324 பாடல்கள் இருக்கின்றன.////

அத்துடன்  1326 மற்றும் 1334 என்ற எண்ணிக்கைகளும் காணப்படுகின்றன ஐயா !!!!!


செங்கல்வராய பிள்ளை வழியில் செல்லலாம் என நினைக்கிறேன்.

 

செங்கல்வராய பிள்ளையின் ஆய்வு பகுப்பாய்வு நெறிக்கு உட்பட்டது. தேவாரத்தில் மறைந்தும் வெளிப்படையாகவும் காணப்படும் செய்திகளைத் தொகுத்துத் தருவது இவரது நோக்கமாக இருந்திருக்கிறது. இவரின் இன்னொரு மிகமுக்கியமான பணி 1,325 பாடல்களைக் கொண்ட அருணகிரி நாதரின் திருப்புகழுக்கு உரை எழுதியது.  இந்த உரை மாதம் தோறும் இதழ் வடிவில் வெளிவந்துள்ளது. திருப்புகழ் உரை 30 இதழ்களாக வெளிவந்து பின் 6 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது. 

ஞானபுரணி மாதவானத் , M.A., M.S. 
V.T. சுப்ரமணிய பிள்ளையின் பேத்தியும், 
அருணகிரிநாதரின் திருப்புகழை வெளியிட்ட V.S. செங்கல்வாராயனின் மகளும் ஆவார்.

Gnanapurani Madhvanath
13, 3rd East Street
Tiruvanmiyur Chennai - 600 041 India

ஞானபுரணி மாதவானத்  அவர்களும் தகவல் கொடுத்து உதவக்கூடும். 

அத்துடன் 
மதுரைத்திட்டம் பதிப்பு குறித்து பார்ப்பதும் உதவக்கூடும் 

திருப்புகழ் /பாகம் 1 (பாடல்கள் 1-330)

திருப்புகழ் /பாகம் 2  (பாடல்கள் 331-670)

திருப்புகழ் /பாகம் 3  (பாடல்கள் 671- 1000)

திருப்புகழ் /பாகம் 3  (பாடல்கள் 1001 - 1326)

அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும்
by VS Chengalvaraya Pillai

இந்த  ஆய்வு நூல் காட்டும் பாடல் எண்களுடன்  பொருந்துவது போல இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

..... தேமொழி

Kavip-perum-sudar Hari Krishnan

unread,
Dec 2, 2017, 5:12:43 AM12/2/17
to min tamil, Pas Pasupathy
2017-12-02 14:38 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Friday, December 1, 2017 at 11:36:11 PM UTC-8, Pandiyaraja wrote:
அன்புடையீர்,
திருப்புகழுக்குரிய தொடரடைவு உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளேன். அதற்கு, முதலாவதாக திருப்புகழ் பாடல்களைக் கொண்ட இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். இரண்டிலுமே பாடல் எண் வரிசைகள் வேறுவேறாக இருக்கின்றன. ஒன்றில் 600-ஆவது பாடலாக இருப்பது மற்றொன்றில் 649 என இருக்கிறது. மொத்தப்பாடல்களின் எண்ணிக்கையும் ஒத்துவரவில்லை. ஒன்றில் 1311 பாடல்கள் இருக்க, மற்றொன்றில் 1324 பாடல்கள் இருக்கின்றன. எதனை வைத்துத் தொடரடைவு உருவாக்குவது என்று குழம்பியுள்ளேன். எனவே, பெரும்பாலானோர் பயன்படுத்தும் திருப்புகழ் செம்பதிப்பு ஏதேனும் இருக்கிறதா என்று தெரிந்தவர்கள் தெரியப்படுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன்.
ப.பாண்டியராஜா



தணிகைமணி குகத்திரு செங்கல்வராய பிள்ளையவர்கள் காலத்தில் 1311 பாடல்கள்தாம் கிடைத்திருந்தன.  கேரள நூலகம் (அரசு நூலகம் என்று நினைவு) போன்ற எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் அவர் பதிப்பிக்காத பாடல்கள் கிடைத்தவண்ணமாக இருக்கின்றன.  இப்படிப் புதிதாகக் கிடைத்த ஒரு பாடலை கனடாவில் வாழும் பேராசிரியர் பசுபதி அவர்கள் உரையெழுதும்படி அனுப்பியிருந்தார்கள்.  2004 வாக்கில் நான் உரை எழுதினேன். 

பாடலைப் படிக்கும்போதே, அதன் அமைப்பு முறை போன்ற சில தன்மைகளை வைத்து இது அருணகிரியார் பாடல்தான் என்பதை உறுதிசெய்ய முடியும்.  அப்படித்தான் எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்கிறது.

தங்களுக்கு சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை, சேலம் வெளியிட்ட பதிப்பு உதவும்.  செம்மையான, பிழையற்ற பதிப்பு.  தற்போது கிடைக்கும் செங்கல்வராய பிள்ளையவர்களின் பதிப்பில் அச்சுப் பிழையைச் சொல்லி மாளாது.  குஹாநந்தா சபையினர் வெளியிட்ட என்னிடமுள்ள பதிப்பு 2006ம் ஆண்டு வெளிவந்தது.  1330 பாடல்களைக் கொண்டிருக்கிறது.  தற்போது மேலும் சில பாடல்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம்.  கிடைத்திருக்கின்றன என்றுதான் பேரா பசுபதியவர்களும் சொன்னார்கள்.   இம்மடலை அவருக்கும் நகலனுப்புகிறேன்.  அவரிடமிருந்தும் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம்.

தங்களுடைய பெருந்தொண்டைத் தமிழ்த்தாயும் முருகனும் ஆசிர்வதிக்கிறார்கள்.  உங்களுடைய தகவலுக்காகச் சில சொல்லவேண்டியிருக்கிறது:

திருப்புகழ் என்பது வண்ணவிருத்தங்களைக் கொண்ட மேற்சொன்ன எண்ணிக்கையிலான பாடல்களைக் கொண்டது.  இது முழுமையான கணக்கன்று.

முழுமையானது என்றால் திருப்புகழ் மதாணி எனப்படும் ஒன்பது பாகங்களைக் கொண்டது.  அதில்:

1) திருப்புகழ் - 1334
2) கந்தரலங்காரம் - 107
3) கந்தரந்தாதி - 100
4) கந்தரநுபூதி -   51
5) திருவகுப்பு - 25
6) வேல்விருத்தம் - 10
7) மயில் விருத்தம் - 11 (காப்பு நீங்கலாக)
8) சேவல் விருத்தம் - 11 (காப்பு நீங்கலாக)
9) திருவெழுகூற்றிருக்கை

என்று ஒன்பது பாகங்களால் ஆனது.  இவை அனைத்தும் மேற்படி சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை, சேலம் பதிப்பில் கிடைக்கும்.  நான் அறிந்து எழுத்துப் பிழைகள் இல்லை அல்லது மிகக் குறைவு.  இப்பதிப்பில் மூலம் மட்டும்தான் உண்டு.  உரை இல்லை.

இதைத் தவிர http://www.kaumaram.com தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  இதில் மட்டும்தான் நம் காளைராசன் சொல்லும் திருப்பூவணத் திருப்புகழ் இடம் பெற்றிருக்கிறது.  மற்ற பதிப்புகளில் இல்லை.

இந்தப் பணியில் உங்களுக்குப் பேரருள் துணை நிற்பதாக.  எம்போன்ற முருகனடியார்கள் எப்போதும் நன்றியோடு நினைத்துக்கொள்வார்கள்.  வாழ்க.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 2, 2017, 7:09:49 AM12/2/17
to mintamil, Kalai Email, thiruppuvanam, naga rethinam

வணக்கம்.
திருப்புகழுக்குத் தொடரடைவு உருவாக்க முயன்றுள்ள ஐயா பாண்டியராஜா அவர்களின்
பணி போற்றுதற்கு உரியது. ஐயா அவர்களை வணங்கி அவரது புகழ் ஓங்க வாழ்த்துகிறேன்.

திருப்பூவணம் பாடல்கள் மூன்றும் விடுதல் இல்லாமல் சேர்க்கப்படும் வகையில் செம்பதிப்பை அடையாளம் காட்டிய கவிப் பெரும் சுடர் ஐயா ஹரிகி அவர்களுக்கு எனது நன்றி.

அன்பன்
கி. காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Pandiyaraja

unread,
Dec 2, 2017, 7:22:12 AM12/2/17
to மின்தமிழ்
மிக்க நன்றி ஐயா!
ப.பாண்டியராஜா

Pandiyaraja

unread,
Dec 2, 2017, 7:22:52 AM12/2/17
to மின்தமிழ்
மிக்க நன்றி அம்மா!
ப.பாண்டியராஜா

Pandiyaraja

unread,
Dec 2, 2017, 7:28:41 AM12/2/17
to மின்தமிழ்
அன்புள்ள ஹரிகி ஐயா அவர்களுக்கு,
தங்களின் அரிய தகவல்களுக்காக மிக்க நன்றி ஐயா! kaumaram.com இணையதளத்தில் காணப்படும் வரிசையிலேயேதான் projectmadurai-க்காரர்களும் பதிவிட்டிருக்கிறார்கள். கௌமாரத்தில் திருப்பூவணம் சார்ந்த சில பாடல்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை இரண்டும் ஒத்துவருவதாலும், இணையதளத்தில் காணக்கிடைப்பதாலும் கௌமாரத்தில் இருக்கும் திருப்புகழ் வடிவத்தையே என்னுடைய தொடரடைவுக்கு அடிப்படையாக எடுத்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். வேறு இடையூறுகள் முளைக்காதிருந்தால் இன்னும் ஒரு மாத காலத்தில் முடித்துவிடலாம் என்று நினைக்கிறேன். தங்கள் அன்பான வாழ்த்துதல்களுக்கு மிக்க நன்றி ஐயா!
ப.பாண்டியராஜா

Kavip-perum-sudar Hari Krishnan

unread,
Dec 2, 2017, 8:14:59 AM12/2/17
to min tamil
2017-12-02 17:58 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:
அன்புள்ள ஹரிகி ஐயா அவர்களுக்கு,
தங்களின் அரிய தகவல்களுக்காக மிக்க நன்றி ஐயா! kaumaram.com இணையதளத்தில் காணப்படும் வரிசையிலேயேதான் projectmadurai-க்காரர்களும் பதிவிட்டிருக்கிறார்கள். கௌமாரத்தில் திருப்பூவணம் சார்ந்த சில பாடல்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை இரண்டும் ஒத்துவருவதாலும், இணையதளத்தில் காணக்கிடைப்பதாலும் கௌமாரத்தில் இருக்கும் திருப்புகழ் வடிவத்தையே என்னுடைய தொடரடைவுக்கு அடிப்படையாக எடுத்துக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். வேறு இடையூறுகள் முளைக்காதிருந்தால் இன்னும் ஒரு மாத காலத்தில் முடித்துவிடலாம் என்று நினைக்கிறேன். தங்கள் அன்பான வாழ்த்துதல்களுக்கு மிக்க நன்றி ஐயா!
ப.பாண்டியராஜா



அன்புள்ள பாண்டியராஜா அவர்களுக்கு,

நன்றி.  தணிகைமணி அவர்களுடைய பதிப்புக்கு மிக நெருக்கமாக அமைந்த மின்பதிப்பு ஒன்று என்னிடத்திலே உள்ளது.  இதில் வரிசை முறையை நான் பரிசோதித்துப் பார்த்ததில்லை.  சிற்சில இடங்களில் தட்டுப்பிழைகள் இருக்கின்றன.  ஓரளவுக்குத் திருத்தியிருக்கிறேன்.  பாடலை பதம்பிரித்த வடிவமும் இதில் உண்டு.  சிறு உரையும் உண்டு.  சுமார் ஒன்பது-பத்து எம்பி அளவுள்ள கோப்பு. தங்களுக்குத் தனிமடலில் அனுப்பி வைக்கிறேன்.  தட்டும் வேலையை ஓரளவுக்கேனும் குறைக்கும்.

அன்புடன்,
ஹரிகி. 

Pandiyaraja

unread,
Dec 2, 2017, 9:50:54 AM12/2/17
to மின்தமிழ்
மிக்க நன்றி ஐயா!  பாடலைப் பதம் பிரித்த வடிவம் பேருதவியாக இருக்கும். வேலையைச் சீக்கிரமாக முடிக்க உதவும். ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.
நன்றியுடன்,
ப.பாண்டியராஜா

N. Ganesan

unread,
Dec 2, 2017, 10:19:22 AM12/2/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
திருப்புகழுக்கு உங்கள் இணையத்தில் சீர்பிரித்த வடிவம் வருவது தமிழுக்கு ஓர் புதிய அணிகலன். வாழ்க. 2015-ல் கேட்டிருந்தேன்.

கனடாக் கவிஞர்கள் (பேரா.) அனந்தநாராயணன், பசுபதி இருவரையும் கேட்டு கௌமாரம்.கொம் தளத்தின் சீர்,சந்தி பிரித்த
கோப்பை வாங்கித் தரவேண்டும். நீங்களும் அணுகலாம். நான் செய்ய எண்ணியுள்ளேன். சோம்பரே காரணம், இதுவரை முயலவில்லை.

முன்பு தமிழ்.நெட், அகத்தியர் குழுமங்களில் திருப்புகழை கவிஞர் ஹரிகி ப்ராஜெக்ட் மதுரைக்கு தட்டெழுதணும் என
வேண்டிக்கொண்ட ஞாபகம் இருக்கிறது. இப்பணிக்கும் அவர் உதவ முன்வந்துள்ளார். இணையத்தில் அருணகிரிக்கு
அத்தாரிட்டி என்றால் ஹரிகி தான்.

தமிழின் தனிப்பெருந்தெய்வம் தேவசேனாபதி கந்தவேளின் கனியமுதாகிய திருப்புகழ் இந்தியாவின்
இரு செம்மொழிகளையும் இணைக்கும் பெரும்பாலம். பாரதச் செம்மொழிகள் இரண்டும் இழையும்
சந்தக் கவிகள். உங்கள் திருப்பணியால் தமிழ்த்தாய் இணைய உலாப்புகும் இந்நாளில்
திருமுருகின் அருள்முறுவல் காற்றுவெளியிடையே தமிழ்த்தென்றலாய் வீசிக் கொண்டே இருப்பதாக!

உங்களுக்கும், ஹரிகி அவர்களுக்கும் பயன்படும் சில நூல்கள் - பிடிஎப் தரவிறக்க - திருப்புகழ் தொடர்பாக
இவ்விழையில் தருகிறேன். பயன்கொள்க.

பணிவான வணக்கங்களுடன்,
நா. கணேசன்

On Wednesday, July 15, 2015 at 8:07:03 PM UTC-7, Pandiyaraja wrote:
- hide quoted text -
அன்புடையீர்,
தமிழ் இலக்கியத் தொடரடைவு என்ற தலைப்பில் sangamconcordance.in என்ற என் வலைத்தளத்தில் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கும் பல்வேறு நூல்களுக்கான தொடரடைவுகளோடு, சேக்கிழார் பெருமான் எழுதிய பெரியபுராணம் என்ற நூலுக்கான தொடரடைவு புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அன்பர்கள் பார்த்துத் தம் கருத்துகளை இங்குக் குறிப்பிடுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
மிக்க நன்றி,
ப.பாண்டியராஜா


நல்ல பணி ஐயா. வாழ்த்துக்கள்.

நேரம் வாய்க்கும் போது திருப்புகழ் சொல்லடைவு தாருங்கள். நன்றி.

அன்புடன்
நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 2, 2017, 10:43:19 AM12/2/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

அன்பின் பேரா. பாண்டியராஜா,

உங்கள் கேள்விக்கு வருகிறேன்,
 

2017-12-01 23:36 GMT-08:00 Pandiyaraja <pipi...@gmail.com>:
அன்புடையீர்,
திருப்புகழுக்குரிய தொடரடைவு உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளேன். அதற்கு, முதலாவதாக திருப்புகழ் பாடல்களைக் கொண்ட இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். இரண்டிலுமே பாடல் எண் வரிசைகள் வேறுவேறாக இருக்கின்றன. ஒன்றில் 600-ஆவது பாடலாக இருப்பது மற்றொன்றில் 649 என இருக்கிறது. மொத்தப்பாடல்களின் எண்ணிக்கையும் ஒத்துவரவில்லை. ஒன்றில் 1311 பாடல்கள் இருக்க, மற்றொன்றில் 1324 பாடல்கள் இருக்கின்றன. எதனை வைத்துத் தொடரடைவு உருவாக்குவது என்று குழம்பியுள்ளேன். எனவே, பெரும்பாலானோர் பயன்படுத்தும் திருப்புகழ் செம்பதிப்பு ஏதேனும் இருக்கிறதா என்று தெரிந்தவர்கள் தெரியப்படுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன்.
ப.பாண்டியராஜா



நீங்கள் பயன்படுத்த வேண்டிய பதிப்பு தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளையவர்களின் திருப்புகழ்ப் பதிப்பும், சந்தேகம் வருமிடங்களில் தெளிவுபெற அவரது உரையும் தான்.
ஐயமே இல்லை. 3 தலைமுறைகளாக திருப்புகழுக்காகப் பாடுபட்ட குடும்பம். தமிழின் முதல் எம்.ஏ தணிகைமணி அவர்கள் தாம். தமிழின் முதல் கவிச்சக்கிரவர்த்தி
செயங்கொண்டார், வள்ளலார், ஔவை துரைசாமி, கரந்தைத் தமிழ்ச் சங்கத்து வீற்றிருந்த அ. வரதநஞ்சையபிள்ளை, அவரது தம்பி, ‘கொங்குத் தொல்காப்பியர்’
அ. கந்தசாமிப்பிள்ளை (பேரூர்த் தமிழ்க் கல்லூரியில் இருந்த பெரும்புலவர்), .... போன்ற எண்ணற்றவர்களின் சீர்கருணீகர் குலமரபு வடக்குப்பட்டுக் குடும்பத்தினர்கள். சிலரை
அறிவேன்.

தணிகைமணியாரின் திருப்புகழ் செம்பதிப்பு - இணையப் பல்கலையிலே. 4 பிடிஎப் கோப்புகள். பயன் கொள்க. இவை மீளச்சு அச்சாதற்கு சிறுதொகை உதவினேன்.

(1)
(2)
(3)
(4)

from
 
4 கோப்பும் தரவிறக்கி வாசித்து அருள்க, பயன்கொள்க!

NG

N D Logasundaram

unread,
Dec 3, 2017, 12:54:26 AM12/3/17
to mintamil
​​
அன்புள்ள பாண்டியராசா அவர்களுக்கு 

முன் பே  உள்ள நூல்களை மறுபதிப்பு செய்யும்போது ஏற்படும் பொதுவான கவலை தா ன் இது

இவை உங்களுக்கு தெரியாது எனக்காட்ட வரவில்லை என் நிலையில் தெரிந்ததை கேட்ட வினவினுக்கு
விடைவைக்கும் நிலை மட்டுமே அய்யா 

இப்போது நீங்கள் எண்ணிம உலகத்தில் பதிப்பிக்கின்ரீர் எதனால்? இந்நாளைய பயன்பாட்டாளர்
 நலன் கருதி தா ன அல்லவா 

செம்பதிப்பு என குறிப்பது என்பதே பொதுநிலையில் பயன்பாட்டாளரின் நலன் கருதி செய்யப்பட்டவை 
செய்யப்படுபவை அதாவது அந்நாளைய அறிவு நிலையில்  முடிந்த வரை சிறப்பாகக்ச் செய்யவேண்டும்
 எனும் முடிவின்படி செய்யப்பட்டவை 

இவை பதிப்பிக்கும் ஆசிரியர் திறன் பற்றின் பாடல் முதல் குறிப்பு அருஞ்ச்சொல் அகராதி என சேர்க்கப்படுகின்றன 
அச்சு  ஊடகத்தினால் இவை உள்ளவை முன்னேற்றமே
என்னிடமுள்ள ஓர் இறையனார் அகப்பொருள் உரையில் பாண்டிக்கோவை என்னும்  முழு நூலும் ( அகப்பொருள்களின்
 தலைப்புவழி)உள்ளடக்கியதாக மட்டுமல்லாமல் அக்காலத்து எடுத்துக்காட்டுகள் எனும் பொருள் வழியும் ஓர் பின்சேர்க்கை உள்ளது  
அதனிலிருந்து பாடிக்கோவை எனும் நூலை ஏ றக்குறையா 400 பாடல்கள் தொகுத்து மதுரை திட்டத்தில் வெளியிட்டேன் 
ஆ னால் செய்யப்பட்ட வரலாறு முழுதும் நூன்முகமாக  அறிவித்தேன்முன்னாளில் பாயிரம் என்பதே இந்நாளைய நூன்முகம் போன்றுதானே 

 
ஆனால் எண்ணிம உலகத்தில் மிகமிக  நுண்ணிய நிலையில் ஓர் தனி  எழுத்து  அல்லாது அ ந்த எழுத்தினுக்கு  அணி த்து வரும் எழுத்து வரை  தேடமுடியும் போ து பயனளிர்களின் 
 


அதாவது தொடர் முன்னேற்றம் (Continuous  improvement )  அவர்களின் நலன் = தேவை = கிட்டுநிலை 
உள்ளடைக்கி இருக்கவேண்டும் 

வேறு 
ஓர் நூலகத்தில் நூலைத்தேடும் போது பலவகையில்  பயனாளரின் அறிவு நிலையிலிருந்து  
ஒரு நூலகத்தில் பயன்பாட்டாளர் நலன் கருதி நூல்களின் நிரல் நூலின் பொருள் வழி 
தலைப்பு வழி ஆசிரியர்வழி பதிப்பித்த காலநிலை  பதிப்பித்த நிறுவனம் வழி நூலின் அளவு வழி 
அந்த நூல் எந்தமாடத்தில் எந்த அடுக்கில் கிட்டும் எனும் நுண்ணனிய நிலைவரை தகவல்களைப்
ப டைக்கின்றனர் 
 
தொடர்ந்த முன்னேற்றம் எனும் பொதுக்கருத்தில் யாருக்காக செயகின் றீர்களோ அவர்களின்
நலன் =  எளிமை கலந்த  தேவை அவர் களின் கிட்டுநிலை ஓர் நூலிற்குள்ளும் இருப்பதுதானே சிறந்தது

 தேவாரம் முதல் முதலில் ஒருவர் தொகுத்து பதி ப்பிக்கும்போ து பண்முறையில் பதிப்பித்தார்
அவர் மனதில் யாரது மிகுதியாக உள்ளதை முதலில் வைத்தார் பின் மற்றவரது அதாவது ஆசிரியரின் வழியிலும் 

ஆனால் பின்னாளில் பயனாளர் நலம் கருதி தலமுறை என்பது தேவைப்பட்டது அதாவது மெய்யான
 தேவை நலன் கருதி  ஆனால் பயன் பெரிதாக அல்லாமல் காலமுறை எனக்கூட ஒருவர்  பதிப்பிக்க
 முயன்றனர் இது மாறுபட்டது என்னும் கருத்தில் மட்டும் (copyright ) வெறும் சுயவிளம்பரம் பார்ப்பட்டதே
 அன்றி பயனாளிகளுக்கு ஒன்றும் இல்லை
 மேலும் கல்வட்டு படிப்பு காலத்தில் கிட்டிய ஓர் தேவாரம் பின் ஓலைச்சுவடி வழி
 கிட்டியதும்  உரைகாரர்களின் எடுத்துக்காட்டுவழி கிட்டியதும்  பின்சேர்க்கையாக வும் உள்ளன அறிவீர்கள் 

ஓர் பேர்பெற்ற ஓர் மடம் வெளியிட்ட தேவார தலைமுறையில் பதிப்பினில்  சீர் கூட பிரிக்காமல் எழுத்து க்களுக்கு
 இடையே இடை வெளி இல்லாமலும்  வெளியிட்டுள்ளனர் 
ஓர் மிகப்பழைய திருக்கோவையார் பாடலில்அடி  வழி கூட பிறி க்காமல் வெளிவந்துள்ளது கண்டுள்ளேன் 

மதுரை திட்டத்தில் எல்லாம் எண்ணிம உலகில் இருப்பதால் பயனாளர்களின் தேவைகள் தேடுதல் எளிமை
வழி அமைந்து விடுகின்றது எனினும் தனியாக முன்பே பலவகையில் நிரலி டப்பட்ட என ஒன்றுஇருந்தால்
 நலம்தான் நீங்களும்  வைக்கின்கிறீர்  மிகச் சிறப்பு தான் 

என்னிடம் மிகப்பழங்கால திருப்புகழ்  பதிப்பு என இரண்டு  இருந்தது அதனில் இ  துவரை கிட்டிய எல்லாப்பாடல்களும்
 இல்லை அதாவது அந்த பதி ப்பாளர்களுக்கு கிட் டயது மட்டுமே  பின் வந்தவை சில பாடல்களை சேர்த்து வெளியிட்டுள்ளனர் 
பின் இப்போது வாங்கிய பதிப்பினி ல் தலைமுறையாக (சில தலங்கள் அவர்களின் அறிவுப்படிக்கூட அ ய்யமுடையதே )  
5 படைவீடுகள் (பழமுதிர்சோலை படைவீடாக காட்டவில்லை ) குன்றுதோறாடல் எனும் பெயரி வட க்கேசிறீ சயிலம் முதல் 
தேவாரம் போன்று தொண் டை நாடு நடுநாடு  கொங்குநாடு சோழநாடு பாண்டிநாடு என அவர்களின் கருத்துப்படி  ஒன்றன்
 பின் ஒன்றாக வைத்துள்ளனர் எண்ணிடுதல் பாக  ம் பிரித்தல் எனும் வழியும் கோபியரைட் அமையக்கூடும் 

சிலபோது காப்புரிமை பற்றி மாற்றியமைப்பர் சில வற்றில் தாத்த தாந்த தமி எனும்  இசையின் தாள முறை முன்னிற்கும் 
பொதுவாக மீள் தொகுப்பாக தலைப்பு கொளு  சிலதகவல்கள் (படைப்பட்டோன் பாடியவர் பொருள் (திணை )
என முன்போ பின்போ சேர்த்து மாற்றியமைத்து விடுகின்றனர் 

புதிதாக சேர்த்தல் எப்போதும் உண்டு கவுமாரம் எனும் இணையதளத்தகில் நான் திரு காளைராசன் கொடுத்த ஓர் பழம்
 திருப்புகழ் பாடல் இல்லt த து கண்டு சேர்க்க கேட்டுக்கொண்டேன் 

படிப்பிக்கும் பொது கையில் மேற்கொண்ட எல்லாக்கருத்துக்களையும்நி நூல் முகமாக நி ரல்படை வத்தல் தகு ம்
 அதனை முன்பே செவ்வனே  செய்கின்றீர் உலாவரும் அறிவர் 

பல்லாண்டு வாழ்க சீறி தமிழ் நூல்களின் எண்ணிம பதிப்பு வளர்ச்சிக்கு மேலும் உதவுவதில் மிக்க மகிழ்ச்சி 


அருணகிரியாரின் திருப்புகழ் 1324 அல்லாது  கந்தரந்தாதி (2 +100)க ந்தரவுனுபூதி  (1+ 51 )கந்தரலங்காரம் (1 +107)
திருவகுப்புகள் (25) வேல் விருத்தம்ம (10) ம யில் விருத்தம் (1+11) சேவல் வருத்தம் (1+11) திரு எழுகூற்றிக்கை எனும் குறு
நூல்களும் ஒரே பதிப்பக உள்ளது பிரேமா பிரசுரம் மூலம் மட்டும் 


 



நூ த லோ சு
மயிலை
ஊ 

Reply all
Reply to author
Forward
0 new messages