என்ற அறுசீர் விருத்தமுடன்(சரியா இருக்கா புலவர் பெருமக்களே?சரியா தான் இருக்கணும் ஏனென்றால் இதை முன்னமே நான் எழுதி வேறுகுழுவில் வெளியிட்டதும் தட்டி சரி செய்து கொடுத்தவர் மரபுக்கவிஞர்திருசிவசிவா(சுப்ரமண்யன் நியூஜ்ர்சி)அவர்கள்
அன்னையர் தினத்திற்கு இந்த இடுகை சமர்ப்பணம்!
***************************************************************************************************
அன்னையர்தினம் மேலை நாட்டில் உண்டானது, நமக்கு அவசியமானதா அன்றைக்கு மட்டும்தான் அன்னையை நினைப்பதா என்றெல்லாம் சிலர் கேட்கிறார்கள். கடவுள் எங்கும் இருக்கிறார் ஆனாலும் கோயிலுக்குபோய் வரும்போது தனி அமைதியும் நிம்மதியும் கிடைக்கிறதல்லவா அதுபோல அன்னையோடுதான் வாழ்கிறோம் அடிக்கடிசந்திக்கிறோம் பேசி மகிழ்கிறோம் ஆனாலும் சிறப்புதினம் என்கிறபோது அன்னையை அதிகமாய் நினைக்கிறோம்,நேசத்தை ,பாசத்தை அன்றைக்கு சற்று அதிகப்படியாகத் தெரிவிக்கிறோம். நல்லவைகளை எங்கும் யாரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்தானே?யாமறிந்த பெண்களிலே அன்னையைப்போல் இனிதானவர் யாரும் இல்லை என நாம் ஒவ்வொருவருமே சொல்லிக் கொள்ளமுடியும்.வளர்ந்து பெரியவர்களாகி நாமும் தாய் தந்தை என ஆகிவிட்டாலும் நம் தாய்க்கு நாம் என்றும் குழந்தைகளே!
மூன்றுவயது வரை தாயோடு தான் எல்லாக்குழந்தைகளுக்கும் சிநேகம்.மொழியிலிருந்து
பழக்கவழக்கங்களைபோதிப்பது வரை முதல் குரு தாயாகிறாள். அதற்குப்பிறகுவாழ்வில் எத்தனையோ பெண்களுடன் அறிமுகம ஆனாலும் மனம்,தாயைவிட உயர்ந்த இடத்தில் அவர்களை வைக்கமுடிவதில்லை. தாயைப்போல் என்கிறோமே தவிர தாயின் இடத்தை அவர்களுக்குக் கொடுப்பதில்லை.ஒருத்திமகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்திமகனாய் வளர்ந்து..என்கிறது திருப்பாவை. பெறவில்லையாயினும் வளர்த்த பேறுகொண்டவள் யசோதை அதனாலே அவள் வேறொருத்தி என்ற சொல்லில் கட்டுப்படவில்லை. தாய் என்பவள் ஒருத்தி. அவ்வளவுதான்.
பெற்றதாயினும் ஆயின செய்யும் என்கிறார் இறைவனின் கருணையை ஆழ்வாரொருவர். தாயினும் சாலப்பரிந்து என்கிறார் சைவ அடியார்.
அம்மா என்ற சொல்லே மந்திரமாய் நம்மை இன்பத்திற்கும் துன்பத்திற்கும் சுற்றிக்கொண்டிருக்கும். அடிபட்டால் அம்மா! மகிழ்ச்சி அதிகமானால் அம்மா!
பலவருஷங்கள் முன்பு என் அப்பா கிராமத்திற்குச் சென்று தனது தாயை(எனதுபாட்டி)எங்கள் ஊருக்கு அழைத்துவரச் சென்ற நிகழ்ச்சியை அவர் வாயிலிருந்து கூறியதை அப்படியே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.இதையே அம்மா என்ற தலைப்பில் சற்றே கற்பனை கதாபாத்திரஙக்ளை அமைத்து சுவைபட சிறுகதையாகவும் எழுதி இருக்கிறார் அது செம்மண் என்னும் அவரது சிறுகதை தொகுப்பில் உள்ளது
*********************************************************************************************************' அப்பா போனதும் ஆறுவருஷம் கழிச்சி ஒருவழியா அம்மா கிராமத்தைவிட்டு என்கூட நகரத்துக்கு வந்து தங்க சம்மதிச்சதுல ரொம்ப சந்தோஷமா இருக்கு/ அம்மாவை அழைச்சிட்டுவர உடனே கிளம்பிட்டேன். ஊர்ல நுழையறப்போவே கோயில் தர்மகர்த்தா என்கிட்ட"அம்மாவை அழைச்சிட்டுப்போக வந்துருக்கியாமே, இங்கயே வருஷக்கணக்காய் வாழ்ந்தவளுக்கு அங்கே பொருந்துமா என்ன?'ன்னுகேட்டார்
'அம்மாவுக்கு ஒருகுறையும் இல்லாம நானும் என்குடும்பமும் கவனிச்சிப்போம் ஐயா..நீங்க கவலைப்படாதீங்க..'
என்னைக்கண்டதும் அம்மாவுக்குக்கண் சிரிச்சது,'வாடா வா..உனக்குப்பிடிச்ச வத்தக்குழம்பும் வாழப்பூ உசுலியும் பண்ணிவச்சிருக்கேன்?ன்னு ஆசைஆசையா பரிமாறினாள் அம்மா.
சாப்பிடறப்போ'அம்மா உனக்கு பூரண சம்மதமா இந்தவீட்டைவிட்டுவரதுக்கு? உனக்கு வயசாச்சும்மா தள்ளாமைவேற.. தனியே நீ இங்க இனிமேயும் இருக்கவேண்டாம்னுதான் அழைச்சிட்டுபோறேன் ... உனக்கு அங்க நம்ம வீட்லயே கோயில்மாதிரி பெரியபூஜை ரூம் இருக்கு........நம்ம தெரு வாசல்லயே பந்தல்போட்டு அடிக்கடி ...உபந்ந்யாசம், கச்சேரிநடக்கிறதால அதுக்க்கெல்லாம் அழைச்சிட்டுபோறோம்.. உன்னை கவலையேஇல்லாம சந்தோஷமா வச்சிப்போம்மா' அப்படீன்னு சொன்னேன்
'அதுல எனக்கு சந்தேகமே இல்லடா.. இருக்கறவ்ரைக்கும் இங்க இருப்போம்னு இருந்தேன்..நினைவுச்சுமைகள் தான் அதிகமாகிறது தனிமையில் இருந்தான்னும் தெரிகிறது....உடம்பும் இனிமே இங்கதனியே இருக்க இடம் கொடுக்கலயே சந்தோஷமா வரேன் உன்கூட'
'சரிம்மா...பகல்ல உக்காந்து போவது கஷ்டம்னு ராத்திர ரயில்ல பர்த் ரிசர்வ் பண்ணி இருக்கேன்.. பத்துமணிக்கு வண்டி ஏறினா கார்த்தால 4மணிக்கு ஊருபோயிடும்மா..ராத்திரி நீ தூங்கிடுவியா ஒண்ணூம் சிரமம் இருக்காது..'
'சரிப்பா'
நானும் அம்மாவும் ரயிலில் ஏறினோம்.
ஸ்டேஷன்மாஸ்டர்கிட்ட பெருமையா சொல்லிட்டேன்..' எங்கம்மா இனி என்கூடதானாக்கும்! என்ன இருந்தாலும் ஒரு அம்மாவை பெத்தமகன் பாதுக்கறமாதிரிஆகுமா சொல்லுங்க ?'
ரயில்ல ஏறினதும் அம்மாவுக்கு கீழ் பர்த்துல நல்லா மெத்துனு மூணு விரிப்பு போட்டுபடுக்கை தயாரித்து, சின்னதலையணைவச்சி போர்வைகொடுத்தேன்.
'அம்மா!எல்லாம் வசதியா இருக்கா? ரிசர்வ்ட் கபார்ட்மெண்ட்..யாரும் வரமாட்டாங்க..ஜம்முனு படுத்துத் தூங்கு.. நான் மேல்பெர்த்ல போயிபடுக்கறேன் ..கார்த்தால நானே உன்னை எழுப்பறேன்.இறங்கி டாக்ஸில ஏறி ஊருக்குபோகலாம் என்ன?'
தலை அசைத்து அம்மா படுத்தாள்.
நான் போயி மேலேபோய்படுத்தவன் தான் அடுத்த நிமிஷமே நல்லதூக்கம்!
திடீர்னுமுழிப்பு வரவும்எழுந்து கைகடிகாரத்தை பார்த்தேன். மணி 3.இன்னும் ஒருமணி நேரத்துல ஊர்வந்துடும்..டாய்லெட் போய்வரலாமென கிழே இறங்கினேன்.
கீழ்பர்த்தில் அம்மா கொட்டகொட்ட முழித்தபடி உட்காந்திருக்கவும் கலவரமாய்,
'என்னம்மா எழுந்திட்டியா சீக்ரமா?'
'இல்லடா நான் தூங்கவெ இல்ல'
'அய்யய்யோ என்னாச்சு படுக்கை சரீ இல்லயா?காத்து வரலயா? பசிச்சிதா? போர்வை கனமா இல்லையா?'
'எல்லாம் சரியாத்தான் இருக்குப்பா..நீ போயி மேலே படுத்துட்டதும் எனக்கு பயமாபோச்சுப்பா..சின்ன வய்சுல திண்ணைல படுத்து தூங்க்றப்போ ராத்திரி கீழே அடிக்கடி விழுந்திடுவே.. கண்முழிச்சிட்டே பாத்து தூக்கி நான் மேலே விடுவேன்.. அதுமாதிரி இவ்வளோ உயரத்திலேந்து நீ எப்போ விழுந்திடுவியோன்னு கவலையா மேலேயே பாத்துட்டே உக்காந்திருந்தேன்..'
அம்மா இப்படிச்சொன்னதும் என்னவோ அவளை நான் தான் இனிமே கவனிச்சி காலமெல்லாம் பேணப்போவதா நினச்ச என் கர்வம் அப்படியே தலைகுப்புற விழுந்தது.'
************************************************************************************************
--
On May 8, 10:17 am, shylaja <shylaj...@gmail.com> wrote:
> அவசரச் சமையல் நடுவே
> .. அள்ளி எடுத்தென் அம்மா
> அவள்கொடுத்த முத்தம்; இன்றும்
> .. அதைநினைத் தால்என் நெஞ்சில்
> தவழ்கிற (து) அந்த எண்ணெய்
> .. தாளித்த மணமும் முத்தச்
> சுவையுடன் அன்னை மணமும்;
> .. சொல்ல முடியுமோ பாட்டில் !
>
> என்ற அறுசீர் விருத்தமுடன்(சரியா இருக்கா புலவர் பெருமக்களே?சரியா தான்
> இருக்கணும் ஏனென்றால் இதை முன்னமே நான் எழுதி வேறுகுழுவில் வெளியிட்டதும்
> தட்டி சரி செய்து கொடுத்தவர் மரபுக்கவிஞர்திருசிவசிவா(சுப்ரமண்யன்
> நியூஜ்ர்சி)அவர்கள்
>
>
சிவசிவா பார்த்தபின்னர் வேறொருவர் வேண்டுமோ?
நா. கணேசன்
>
>
>
> > அன்னையர் தினத்திற்கு இந்த இடுகை சமர்ப்பணம்!
>
> > ***************************************************************************************************
> > வாயிலிருந்து கூறியதை அப்படியே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.இதையே *அம்மா*என்ற தலைப்பில் சற்றே கற்பனை கதாபாத்திரஙக்ளை அமைத்து சுவைபட சிறுகதையாகவும்
> > எழுதி இருக்கிறார் அது செம்மண் என்னும் அவரது சிறுகதை தொகுப்பில் உள்ளது
> > *********************************************************************************************************
> > ************************************************************************************************
>
> > --
>
> --
> ஷைலஜா..
> .../////
> //
> ‘’மறுவில் தூவிச் சிறு கருங் காக்கை
> அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப்
> பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
> பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
> வெஞ்சின விறல் வேல் காளையோடு
> அஞ்சில் ஓதியை வரக் கரைந்தீமே’’
>
> ஐங்குறு நூறுப்பாடல்
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -- Hide quoted text -
>
> - Show quoted text -
மாத்வ பிராமணர்கள் மடி ஆச்சாரத்தில் ரொம்பவும் கெட்ட பெயர் வாங்கியவர்கள். அதாவது தங்களுlடய கடுமையான மடி ஆச்சாரத்தினால் மற்றவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறவர்கள். பல நேரங்களில் மனித வதையின் எல்லைவரை இவர்களின் மடி ஆச்சாரம் செல்லும்.
தாத்தா பாட்டிக்கு அப்பா ஆண்டு தோறும் திவசம் கொடுப்பார். கடும் பட்டினியாக இருந்து திவசம் கொடுப்பார். பிராமணார்த்தத்துக்கு வரும் பிராமணர்களும் கடும் பட்டினியுடன் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார். நிபந்தனைகள் விதிப்பார். கொஞ்சம் மடி ஆச்சாரம் குறைந்தவர் போல இவருடைய அபிப்ராயத்தில் அந்த மனிதரைக் கூப்பிட மாட்டார்.
அப்பா மற்றும் அம்மாவின் பட்டினி திவசத்துக்கு முந்தைய இரவில் துவங்கும். திவசம் எல்லாம் முடித்து பசுமாட்டுக்கும் மீன்களுக்கும் காக்கைகளுக்கும் பிண்டம் கொண்டுத்து சாப்பாட்டு இலை முன்பு உட்கார மறுநாள் மாலை ஐந்து மணி ஆகிவிடும்.
இந்தக் கடுமையான பட்டினி குழந்தைகளான எங்களுக்கும் விதிக்கப்படும். நான் அம்மாவுக்கு ஒன்பதாவது பையன். கடைக்குட்டி.
என்னால் பசி தாங்க முடியாது. துடித்துப் போவேன். மடி ஆச்சாரக் கட்டுப்பாடுகளால் யாரையும் தொடமுடியாது. சமையலறைக்குப் போக முடியாது. ஏக்கத்துடன் கண்கள் செருகிக் கொண்டு உட்கார்ந்து இருப்பதுதான் ஒரே வழி.
ஏதோ காரியமாக புறக்கடை வழியாக வருவது போல வருவாள் அம்மா. அங்கு வரச்சொல்லி கண்ணால் ஜாடை காட்டுவாள்.
அங்குபோனால் அவள் முந்தானையில், திவச பட்சணங்கள் ஒளித்து வைத்து இருப்பாள். நைவேத்தியம் பண்ணுவதற்கு முன்பு, பிராமணர்கள் சாப்பிடுவதற்கு முன்பு அப்பாவின் எல்லா அனுஷ்டானங்களையும் தவிடுபொடியாக்கி விடுவாள். அவசர அவரசமாக என் கைகளில் திணித்து எங்கேயாவது ஒளிஞ்சு நின்னு சாப்பிடு. அப்பா பார்த்தா கொன்னுடுவார் என்று கைகளில் திணித்து என்னை விரட்டுவாள்.
மதம் விதிக்கும் கடுமையான கட்டுப்பாட்டினால் திவசம் முடிகிறவரை அடுத்தவர்களைத் தொடக்கூடாது என்கிற மடிக் கட்டுப்பாடு - திவச பிராமணர்கள் சாப்பிடுவதற்கு முன்பு, நைவேத்தியம் செய்வதற்கு முன்பு யாரும் சாப்பிடக்கூடாது என்கிற கடுமையான அனுஷ்டானங்களையும் தன் பிள்ளையின் பசிக்கு ஒன்றுமே இல்லை என்று காலில் போட்டு மிதிக்கிறவள் அன்னையாக மட்டுமே இருக்க முடியும்.
இப்போதும் ஆண்டு தோறும் என் அன்னைக்கு திவசம் செய்யும்போது இந்த வயதிலும் நேரம் கடந்தால் பசி வயிற்றைப் பிடுங்கும். என் குழந்தைப் பருவத்தில் என்னை அரவணைத்த அம்மாவின் ரகசிய கிசுகிசுப்பும் கையில் திவச பட்சணங்களைக் கையில் திணித்த அவசரமும் நினைவில் வந்து மனதெல்லாம் நெகிழ்ந்து நெக்குருகும்.
அன்புடன்
பென்னேஸ்வரன்
இந்தக் குறும்படத்தைப் பாருங்கள்:
http://www.flixxy.com/game-of-survival.htm
அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.
கண்ணன்
2010/5/9 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>:
> மதம் விதிக்கும் கடுமையான கட்டுப்பாட்டினால் திவசம் முடிகிறவரை அடுத்தவர்களைத்
> தொடக்கூடாது என்கிற மடிக் கட்டுப்பாடு - திவச பிராமணர்கள் சாப்பிடுவதற்கு
> முன்பு, நைவேத்தியம் செய்வதற்கு முன்பு யாரும் சாப்பிடக்கூடாது என்கிற கடுமையான
> அனுஷ்டானங்களையும் தன் பிள்ளையின் பசிக்கு ஒன்றுமே இல்லை என்று காலில் போட்டு
> மிதிக்கிறவள் அன்னையாக மட்டுமே இருக்க முடியும்.
நான் லூகாஸ் டீ வீ எஸ்ஸில் போட்ட ஒரு நாடகத்துக்கு தலைமை தாங்க வந்து
அந்த நாடக மேடையிலென்னை அழைத்து என் தோளிள் கைபோட்டுக்கொண்டு
எதிரே உட்கார்ந்திருந்த என் தாயாரைக் காட்டி அதோ உட்கார்ந்திருக்கிறார்களே எழுத்தாளர் கமலம்மாள் அவர்களுக்கு இந்தப் பிள்ளை பிறக்கும் போது ப்ரசவம் பார்த்த மருத்துவச்சி நான்தான் , அதனால் இந்தக் கிருஷ்ணமாச்சாரி
“என் கையில் பூத்த மலர் ” என்று வர்ணித்தார்கள்
என் தாயாரின் எழுத்துக்களை அந்தக் காலம் தொட்டு நான் சேகரித்து வைத்திருக்கிறேன்
அவைகளை தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்
ஒரு நல்ல காலம் வரும் அப்போது அந்தப் பொன்னெழுத்துக்களை வெளியிடுவேன்
என் தாயார் எழுதிய பாடல்கள், கதைகள், நாடகங்கள் வெளிவராத பத்த்ரிகைகளே ஒரு காலத்தில் இல்லை எனலாம்
அவர்கள் வாய் திறந்தாலே வார்த்தைகள் தாமாக வந்து அணிவகுக்கும்
ஒரு மாலைச் சூரியனைப் பார்த்துவிட்டு
அவர்கள் கூறிய பாடல்
மரகதப் பச்சைக் கரை வரைந்த
வைரக் கிரணங்கள் இழை சேர்த்து
செந்தூரச் செந்தழல் சேலை கட்டி
மாலை மயங்கும் வேளையிலே
மலைமுட்டின் சிகரத்திலே காதலன்
காவலன் காரிளோன் வரக் காத்திருக்கும்
வண்ண மாலை பெண்ணே
இது முதல் பாரா மட்டுமே
அவர்கள் போட்ட நல் விதைதான் இன்று உங்கள் முன்னால் ஒரு சிறு செடியாக நான் நிற்கிறேன், அன்னையர் தினத்தில் மட்டுமல்ல எப்போதும் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் எங்கள் தாயார் ஆர் கமலம்மாள் அவர்களுக்கு நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் அனைத்தும் சமர்ப்பணம்
அன்புடன்
தமிழ்த்தேனீ
I shall gladly do a diligent search for you, Subashini, and send the
results only to you. Please give me basic clues, if you agree. In our
family, I am the search party for my daughter in law's art, dance,
pottery inputs, select medical book reviews for my son and so on. I am
also the research assistant for my grand daughter's home work.
Regards,
Innamburan
2010/5/9 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
பெரியோர் சொல் வேதம்என் குரு போன்ற உங்களை நான் தவறாக நினைக்க இடமே இல்லைஅழ அழச் சொல்பவர் தமர்தெரியாதா எனக்குநீங்கள் உங்கள் தாயாரைப் பற்றி எழுதும்போதுநானும் என் தாயாரைப் பற்றி எழுதினால் உங்கள் மடலிலிருந்து கவனம் சிதறும் என்பதால் எழுதவில்லை அவ்வளவேஅன்புடன்தமிழ்த்தேனீ
திரு தமிழ்த்தேனி சார்,
கண்ணின் படலம் அகல பல அம்மாக்களின் சரிதமும் ஏக புராணம் ஆகாதோ?
இவ்வலியை உணர்தவரால் மட்டுமே இதைப் புரிந்து கொள்ள முடியும்.
எங்கிருந்து வருகிறது இத்தகைய எழுத்து! ? அடடா!
க.>
2010/5/10 Venkatachalam Subramanian <v.dot...@gmail.com>:
> ஓம்.
> ஆராவமுதனை உங்களுக்குத் தெரியுமா!
உன்னைக்கருவுற்ற போது
ஒரு காட்சி கண்டேன்
புற உலகின் மாயை நீக்கி
அக உலகின் அசுத்தம் நீக்கி
வெண் சாம்பல் மேனியனாய்
வந்து பிட்சை கேட்கும் சாதுவாய்
நீ உட்புகுவது போல்
நீ பிறந்தபின்
உலகம் உன்னை அதிசயக்
குழந்தை என்று காணவில்லை.
அவர் உலகில் நீ ஒட்டவில்லை.
அது உன் தவறில்லை
எங்கள் தவறென்றும் சொல்வதற்கில்லை
எம் இச்சையால் நீ பிறக்கவில்லை
உன் இச்சையால் வந்து பிறந்தாய்
கரியாய் கிடந்த நான் இன்று
வைரமாய் மின்னுகிறேன்
நீ ஒரு யோகி என்று
நான் சொல்கிறேன்
உன்னைப் பெற்று வளர்ப்பதால்
நானே யோகி என்று
தோழி சொல்லுகிறாள்.
நீ வாழி.
காசுமி
On May 10, 11:12 am, Venkatachalam Subramanian <v.dotth...@gmail.com>
wrote:
>
> பார்வையற்ற ஒருவனிடம் அழகைப் பற்றி எப்படி விவரிக்கமுடியாதோ அது போல அம்மா
> இறந்து போய்விட்டாள் என்ற செய்தியை அறிவிக்க முதலாளிக்கு முடியவில்லை.
> அவனைக் கட்டி யிழுத்தாற்போன்று அவன் கையிலிருந்த பணியைப் பிடுங்கிவைத்துவிட்டு
> அவனுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள்.
>
> எப்போதும் போவது போன்று அந்த வீட்டிற்குள் ஆராவமுதன் சென்றான். வழக்கமாக அவன்
> வரும்போது வழிமேல் விழிவைத்திருக்கும் அன்னை ஏன் தரையில் படுத்திருக்கிறாள்.
> அவனுக்கு உணர்த்துவது யார்? இழுத்து வைத்து அவனைக் குளிப்பாட்டி சில
> சாங்கியங்களின் உச்சாடனத்துடன் ...
>
> read more »
இதுவரை அழாத ஆராவமுதன் விக்கி விக்கி அழுதான்.
ஓம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆழமான கேள்வி!
Rain Man எனும் படத்தில் உணர்ச்சிகள் இல்லாத மனிதராக Dustin Hoffman
நடிப்பார். உணர்ச்சிகளைக் காட்டத்தெரியாததால் உணரமுடியாது என்று பொருளா?
இல்லை இக்கதையில் சொல்வது போல், ஏதொவொன்று போய்விட்டது என்ற உணர்வு
வருமா? இக்கதையில் ஆராவமுதன் அழுவது போல் வருகிறது. எனவே அவன் Rain Man
அல்ல. அவனால் அழமுடிகிறது. உணர்ச்சிகளைக் காட்டமுடிகிறது. ஆனால்
உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியாது ஊனமுற்றோரின் புரிதல் என்னவாக
இருக்குமென்று நமக்கு எப்படித்தெரியும்? ஊடுருவி தாயுள்ளம் அதையும்
புரிந்து கொள்ளுமோ என்னமோ?
வாழ்வு நிலைகள் புரிபடுவது போலும் புரிபடாதது போலும் உள்ளன.
க.>
நீங்கள் சொல்கின்ற அனுபவங்களை ஒரு சாதாரண மனிதன் தூக்கம் கொள்ளும் முன்
அனுபவிக்கத் தொடங்குகிறான். நேற்று என்னையே நான் கவனித்தேன்! நிஜம்
நழுவுதல் என்பது சுவாரசியமாக உள்ளது. பனிமூட்டத்தில் இருக்கும் போது
தெளிந்தும் தெளியாமலும் தெரியும் காட்சிகள் போலும், வண்ணக்கலவைகள்
கலக்கும் போது சேரும் அதிசய வர்ணங்கள் போலும் ஒரு நிகழ்வு. சில
நிமிடங்களில் நாம் நிஜ உலகிலிருந்து நழுவி சொப்ன உலகிற்குள்
போய்விடுகிறோம். பிறகு என்னென்னமோ நாடகங்கள்.
மரணத்துள் வாழ்ந்து திரும்பும் அனுபவமும் ஏறக்குறைய இது போல் இருக்கலாம்
(எனக்கு நேரடி அனுபவமில்லை). ஆயின் இது குறித்து நிரம்ப வாசித்து
இருக்கிறேன்.
உறங்குவது போலும் சாக்காடு என்று இதைத்தான் வள்ளுவன் சொல்லியிருக்க
வேண்டும். உறக்கம் கொள்ளுதல் போலவே சாவு நிகழ்கிறது. கோமா என்பது slumber
என்பது போன்றதோ?
வலி வருவதற்கு முன்பே வலிக்க ஆரம்பிக்கிறதே! இந்த மனதை என்ன சொல்வது?
ஜெர்மன் மருத்துவர் ஒருவர் என்னிடம் வேடிக்கையாகக் கேட்டார், மருந்து
போடாமல் பல்லைச் சுரண்டவா என்று. அவர் சொல்லும் போதே கூசி, பிராணன்
போய்விட்டது. ;-)
கண்ணன்
2010/5/11 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
உறங்குவது போலும் சாக்காடு என்று இதைத்தான் வள்ளுவன் சொல்லியிருக்க
வேண்டும். உறக்கம் கொள்ளுதல் போலவே சாவு நிகழ்கிறது. கோமா என்பது slumber
என்பது போன்றதோ?
To die....to sleep...to sleep! ... perchance to dream...Aye there's the rub.For in that sleep of death what dreams may come!(William Shakespeare)
ஆயின் இங்கு வள்ளுவர் ஒரு சுழற்சி பற்றிப் பேசுகிறார். எனவே எங்கு
தொடங்கினால் என்ன? வள்ளுவ சூத்திரங்கள் எல்லாமே இந்திய சிந்தனை மரபின்
சாரமாக அமைகின்றன. எனவே இங்கு ‘உளன் ஒருவன்’ என்பது ஆன்மாவைக்
குறிப்பதாகக் கொள்ளலாம்? ஏன் ‘அன்’ விகுதி? ஆன்மாவிற்கு பால் வேறுபாடு
கிடையாதே? இப்படிக் கேட்டால், ஏன் நம்மாழ்வார் ‘அவன் ஆணல்லன்,
பெண்ணல்லன், அலியுமல்லன்’ என்று ‘அன்’ விகுதி போட்டுக்கொண்டே போகிறார்
என்று வரும்! ஆன்மா ஈஸ்வர சம்பந்தமுடையது. கீதையில் ஆன்மாவை உடலின்
ஈஸ்வரன் என்றே பகவத்பாதாள் சொல்கிறார்.
இவ்வளவுதான் நம்ம சரக்கு ;-)
நீங்கள் வித்தியாசமாக நோக்குவீர்கள் என்று தெரியும். முடிச்சை தாங்களே
அவிழ்க்கவும்.
க.>
2010/5/11 Hari Krishnan <hari.har...@gmail.com>:
> திருவள்ளுவர் சிண்டு அவ்வளவு லேசில் கையில சிக்கிடுமா கண்ணரே! :-)
>
--
ஹரிகியின் கேள்விகளை மீண்டும் வாசித்தேன்.
உறக்கம் என்பது ஏன் முதன்மைப்படுத்தப்படுகிறது? என்பதா கேள்வி. உறக்கம்
denotes the transitional status. ஒரு நிலையிலிருந்து மெல்ல நழுவுவது.
எனவே அங்கிருந்து தொடங்குவதில்தான் கவிதை உள்ளது. பிறப்பு என்பது,
கமலஹாசன் பாஷையில் சொல்வதானால் violence. அங்கு எல்லாமே உரக்க நடக்கிறது.
அம்மாவின் கதறல். மருத்துவச்சியின் பதட்டம். பின் குழந்தையின் கதறல்.
எனவே அங்கு தொடங்க முடியாது. That does not represent the mystical
transitional moment. மேலும் பிறக்கும் முன்னமே குழந்தையின் இருப்பு
உணரப்பட்டு அதன் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. உறக்கம், இறப்பு என்பது
அப்படியல்ல.
உறக்கம் என்பது நாடகத்தில் சீன் மாற்றுவது போல. படுதா விழுகிறது. படுதா
தூக்கப்படும் போது இன்னொரு நாள் இன்னொரு நாடகம். கதாநாயகன் ஒருவனாக
இருக்கலாம். ஆனால் நாடகம் வேறு. நாளை என்ன நடக்குமென்று யாருக்கும்
தெரியாது. அந்த விதத்திலும் உறக்கத்திலிருந்து தொடங்குவது சரியே.
நினைவுகள்தான், நான் நானாக மீண்டும் விழித்து வாழ்வதற்கு சாட்சி. சில
ஊனங்களில் இந்த நான் என்ற உணர்வு இல்லாமல் போய்விடுகிறது. அவர்களைப்
பொறுத்தவரை உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.
தான்தான் மீண்டும் பிறந்திருக்கிறோமென்று தெரியாது. உண்மையில் நாம்
எல்லோரும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிய மனிதனாய்
பிறக்க வேண்டும். ஆனால் நாம் பழைய ஆளாகவே சாகும்வரை இருக்கிறோம்.
ஆன்மாவின்முன் நடக்கும் நாடகத்தில் அது கண்ணனாகவும், ஹரிகியாகவும் வேடம்
போடுகிறது. கனவில் இருப்பது ஒரே ஆள்தான் என்றாலும் கனவில் பலபேரை
உருவாக்க முடிகிறது. அதுபோல் இருப்பு/மூலம் ஒன்றுதான். அங்கிருந்து
பல்கிப்பெருகி பல வடிவம் கொண்டு, பல நாமம் பூண்டு, நாடகம் ஆடிவிட்டு
ஒடுங்கும் போது ஒன்றில் தங்கிவிடுகிறது.
எனவே இங்கே நான் என்று மார் தட்டுவதெல்லாம் நாடகத்தில் பேசப்படும் வெட்டி
வசனம். ராஜா மாதிரி வசனம் பேசினால் அதற்காக ராஜாவாக முடியுமா என்ன?
அடுத்த நாள் நாடகத்தில் பிச்சைக்காரனாக நடிப்பதால் அவன் பிச்சைக்காரனா
என்ன? எனவே உறக்கம், பிறப்பு என்பது ஒரு சுழல் மேடை நாடகத்தில் மாறி,
மாறி வரும் காட்சிகள்.
இதுவே இம்மாலைப் புரிதல். (நடிகர் சூப்பரா நடிச்சா எல்லோரும் ஜோராக் கை
தட்டணும் :-)
அடியேன்
2010/5/11 N. Kannan <navan...@gmail.com>:
> வள்ளுவ சூத்திரம் உங்களுக்கு அத்துபடியென்று தெரியும். அதனால் மேலும்
> அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.
>
> ஆயின் இங்கு வள்ளுவர் ஒரு சுழற்சி பற்றிப் பேசுகிறார். எனவே எங்கு
> தொடங்கினால் என்ன? வள்ளுவ சூத்திரங்கள் எல்லாமே இந்திய சிந்தனை மரபின்
> சாரமாக அமைகின்றன. எனவே இங்கு ‘உளன் ஒருவன்’ என்பது ஆன்மாவைக்
> குறிப்பதாகக் கொள்ளலாம்? ஏன் ‘அன்’ விகுதி? ஆன்மாவிற்கு பால் வேறுபாடு
> கிடையாதே? இப்படிக் கேட்டால், ஏன் நம்மாழ்வார் ‘அவன் ஆணல்லன்,
> பெண்ணல்லன், அலியுமல்லன்’ என்று ‘அன்’ விகுதி போட்டுக்கொண்டே போகிறார்
> என்று வரும்! ஆன்மா ஈஸ்வர சம்பந்தமுடையது. கீதையில் ஆன்மாவை உடலின்
> ஈஸ்வரன் என்றே பகவத்பாதாள் சொல்கிறார்.
>
> இவ்வளவுதான் நம்ம சரக்கு ;-)
>
> நீங்கள் வித்தியாசமாக நோக்குவீர்கள் என்று தெரியும். முடிச்சை தாங்களே
> அவிழ்க்கவும்.
>
> க.>