You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to minT...@googlegroups.com
கடந்த கால நினைவுகள் -அண்டம்
==============
அன்பர்களே!
அன்பர்கள் அங்கையா, கண்ணன் ஆகியோர் அண்டம் பற்றி சில செய்திகள் வெளியிட்டிருந்தனர். அன்பர்
பழனியப்பன் எழுதிய செய்தியும் அண்டத்துடன் தொடர்புடையதுதான்.
திரு அங்கய்யா மேற்கோள் காட்டியுள்ள திருமூலரின் பாடல்:
> அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி
> தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி
> எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி
> அண்ட நடஞ்செயும் ஆலயம் தானே.
. பிண்டம் என்பது சித்தர்களின் ஆதாரதத்துவம், ஆணிவேர்.
ஏன், இறைல்யியல் விஞ்ஞானத்தின் நுட்பங்களை அதிக அளவில் உருவகப்படுத்தியுள்ள இந்து மதத்தின் ஆதார
தத்துவமும் அதுவேதான். (மற்றமதங்களில் இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளே படைப்பின் மர்மத்தைக்
குறிப்பனவாயுள்ளன), சிவாத் பரதரம் என்றும், சிவனுக்குமேல் தெய்வமில்லை என்றும், தென்னாடுடைய
சிவனே போற்றி - எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்றெல்லாம் போற்றப்பட்ட சிவனை பற்றிய
புகழ்ச்சிகள் அண்டம் பற்றிய கருத்துக்களே.
அண்டம் பற்றியே திருமூலர் தமது மற்றோர்பாடலில் "பழம்பொருள்
போற்றுமின்" என்று கூறினார். ஆனால் அண்டம் என்பது ஈண்டு (அதன் பல பொருட்களுள் ஒன்றாகிய) cosmos
(பிரபஞ்சம் - The whole collection of existing things) என்பதை குறிப்பதல்ல. Galaxy
என்பதும் முற்றிலும் தவறான சொல்; ஏனெனில், அது பூமிக்கு மேலுள்ள விண்வெளியை மட்டும் குறிப்பது
(இi.e., a collection of star systems). Galaxy என்பது Cosmos இன் ஒரு பகுதி என்று
கொள்ளக்கூடும். எனவே cosmos, galaxy ஆகிய இரண்டும் மேற்படி பாடலில் கூறப்படவில்ல. திருமூலர்
ஒரு வருட தவத்திற்குப்பின் ஒருபாடல் எழுதியவர். கரி வைரமாக மாறியுள்ளது (the meaning is
expressed in a very concentrated form).
மேலும் எழு என்பது இந்தப்பாடலைப் பொருத்தமட்டில் ஏழு அல்ல. திருவள்ளுவர் சொன்ன எழுமை ஏழுபிறவியல்ல;
ஏனெனில் பிறவிகள் ஏராளம். சென்னையில் எழுகின்ற ஊர், எழுமூராகி பின் வெள்ளையர் தயவால்
எக்மோரானது. அதுவும் ஏழு ஊரல்ல. ஈண்டு எழும் எனும் பொருளே பொருந்தும்.
அதேபோல் கோடி என்பது துல்லியமாக கோடி என்பதல்ல. கூடிவாழ்ந்தால் கோடிநன்மை என்பது crore
benefits!!! அல்ல; ஏராளம் என்பது பொருள் அவ்வளவே!
திருமூலர் கோடி என்று குழப்பியதை தன்வந்திரி
"உலகந்தன்னில் பெலமாக ரெம்பவுண்டு எடுத்துக்கொள்ளே" என்று கிராமியத்தமிழில் கூறுவார். சித்தர்களில்
எளிய தமிழில் குழப்புபவர் அகத்தியர். (தமக்கு சமமானவர்கள், siddhar level readers படிக்கக்கூடிய
நூல்களில் கம்பசூத்திரம் போலும் எழுதுவார்.) உயர்ந்த தமிழில் ஆணியடித்தார்போல் எழுதி குழப்புபவர்
திருமூலர். இவர் அமுரி தாரணையைப்படித்து சிலர் தங்கள் மூத்திரத்தை குடித்து கொண்டுள்ளனர். அது எவன்
மூத்திரமுமல்ல சிவன் மூத்திரம். அண்டத்தின் மூத்திரம். விட்டகுறை உள்ளவர்க்குப்புரியும்.
எனவே பாடலின் உண்மைப்பொருள்:
அண்டங்களும் பிண்டங்களும் எல்லா திசைகளிலும் ஏராளமாக எழுகின்றன; ஆகவே ஈசன் நடஞ்செயும் ஆலயங்களான
லிங்கங்களும் ஏராளமாக எண்திசைகளிலும் சூழ்ந்துள்ளன!
மேற்படி பாடலில் பிரம்ம, விட்ணு, மற்றும் எதிர்கால சித்தர்களுக்கும் சித்த மருத்துவர்களுக்கும் இரண்டு
குறிப்புகள் (hints) தரப்பட்டுள்ளது. அவையாவன 1) தெண்டிரை சூழ்ந்த 2) எண்டிசை என்பன.
புத்தகங்களில் தமிழ் Hybrid scholars எழுதிய உரை வேறாக இருக்கும். ஆனால் நான் கூறிய உரை சூரிய
சந்திரர் அறிய சரியானது! நம்பினால் நம்புங்கள்.
அன்பர் கண்ணன் அவர்கள் கூறினார்:
> அண்டமே இறைவன் நடனம் செய்யும் ஆலயம் என்பது அழகான இந்தியப் பார்வை.
இறைவன் என்பதை மிக அறிவியல் பூர்வமாக ஒரு இயக்கமாகக் காண்பது இவர்களின்
சிறப்பு.
அல்ல! அண்டமே சிவன் நடனம் செய்யும் ஆலயம் என்பது தமிழ் சித்தர்களின் (விஞ்ஞானத்துக்கு மேலான)
உயர் ஞானக் கண்டுபிடிப்பு. அது சிவன் மட்டும் ஆடும் மேடையல்ல; சிறுமணவூர் முனுசாமி முதலியார் பாடியது
போல்
, "மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கைசிவகாமியாட, மாலாட, நூலாட, மறையாட, திரையாட
மறைதந்த பிரம்மனாட" இயற்கை அமைத்த மேடை.
அன்பர் பழனியப்பன் எழுதினார்:
>சில சிவன் கோயில்களில் சிவ லிங்கத்திற்கு மேலே ஒரு கும்பம் வைத்து அதிலிருந்து சொட்டு சொட்டாக
நீர் சிவலிங்கத்தின் மீது விழுமாறுவைத்திருப்பார்கள். வெப்பமான காலத்தில்
> சிவபெருமானும் குளிர்ச்சியாக இருக்கவேண்டும் அல்லவா?
மேற்படி செய்கை தத்துவரீதியானது. மேலே பேசப்பட்ட அண்டத்தின் தலையில் இயற்கையில் நடக்கும்
நிகழ்வையே அவ்வாறு உருவகப்படுத்தியுள்ளனர். சித்தர்கள் கண்ட அண்டசிவன் உண்மையில் குளிர்ந்தவர். கோபம்
வந்தால் நெற்றிக்கண்ணை திறப்பார். பக்கத்தில் உடனே சதாசிவன் பெண்டிர் (சக்தி) தாண்டவமாடுவார்.
ஒருவழியாக சமாதானமடைந்ததும் கார்திகேயன் தோன்றுவார் (பிண்டம் தோன்றும்).