கோகுலன் கவிதைகள்

7 views
Skip to first unread message

Gokulan

unread,
Apr 7, 2009, 5:40:18 PM4/7/09
to மிந்தமிழ்

நண்பர்களுக்கு வணக்கம். குழும நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக எனது ஒரு கவிதை..

தனிமை விளையும் இருள்

கடலின் நீலத்தில்
சூரிய மஞ்சள் மூழ்கிய மாலையில்
நீண்ட நாளின் விளிம்பிலேறி
இரவுக்குள் குதித்தேன்

நானாகி வியாபித்தது இருள்
வெளிச்சங்களின் சீண்டல்
ஆரம்பமானது
உராயும் தீயின் தீற்றல்கள்
எனதியல்பைக் குலைத்தன
அந்தரங்கத்தில் புகுந்த வெளிச்சங்கள்
அடுத்தவனின் படுக்கையிலும்
வெட்கமின்றி உறங்கின

பொறுக்கவியலாத
ஆக்கிரமிப்பின் உச்சத்தில்
காற்றின் கரங்களைப் பற்றி
சில விளக்குகளைக் கவிழ்த்தேன்
முழு இரவிலும் என் தனிமையை
எட்டிப்பார்க்கும் தெருவிளக்குகள்
தலைகுனிந்தே நிற்கின்றன

அத்தனையொன்றும்
கோரமானவன் அல்ல நான்

வெளிச்சங்களைக் கொத்திவந்த
மின்மினிப்பூச்சிகளை உள்ளங்கையில்
கதகதப்பாய்ப் போர்த்தினேன்
உயிரை உருக்கி எரியும்
மெழுகுவர்த்தியின் வலி அறிந்தே
கருஞ்சிறகுகள் போர்த்தாதிருந்தேன்
கடைசித்துளியும் கரைந்து
எனக்கு வழி திறந்தன அவை

சூரிய விளக்கின் வெளிச்சத்தில்
புராதனம் பேசி எனை இகழ்ந்தவர்கள்
தமது இரகசியங்களுக்கென
கருப்புத் திரைகளில் ஒளிந்தார்கள்
எனது பின்புறத்தில் விளைகிறது
அவர்களுக்கான தனிமை

பெருவானின் கீழ்
பலவான அர்த்தங்கள் தாண்டியும்
இயற்கையின் கரியமுகத்தைத்
காலங்களுக்கும் தூற்றியவர்கள்
இருளில் இயல்பாகவே இருந்தார்கள்
வெளிச்சத்தின் நேரம் மட்டும்
அவசரமாய்ப் பதறி ஆடையுடுத்தினார்கள்
 


kaviarasan Va.Mu.Se.

unread,
Apr 7, 2009, 6:10:43 PM4/7/09
to minT...@googlegroups.com

கோகுலரே

குனிந்தே நின்ற தெருவிளக்குகள்
தங்கள் ஓரக்கண்ணால்
தங்கள் அழகுடலை சீண்டுவது
அறிந்தும் அறியாதது போல் கேட்பதேனோ?
தங்கள் உடையாளின்
ஊடல் தவிர்க்கும் நோக்கோ?

அன்புடன்
.கவி.

2009/4/7 Gokulan <gokula...@gmail.com>

Gokulan

unread,
Apr 10, 2009, 1:47:18 PM4/10/09
to minT...@googlegroups.com


2009/4/7 kaviarasan Va.Mu.Se. <vamus...@gmail.com>

கோகுலரே

குனிந்தே நின்ற தெருவிளக்குகள்
தங்கள் ஓரக்கண்ணால்
தங்கள் அழகுடலை சீண்டுவது
அறிந்தும் அறியாதது போல் கேட்பதேனோ?
தங்கள் உடையாளின்
ஊடல் தவிர்க்கும் நோக்கோ?

அன்புடன்
.கவி.

 
:))
 
கருத்துக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள் வ. மு. சே ஐயா..:)
 

2009/4/7 Gokulan <gokula...@gmail.com>


முழு இரவிலும் என் தனிமையை
எட்டிப்பார்க்கும் தெருவிளக்குகள்
தலைகுனிந்தே நிற்கின்றன

அத்தனையொன்றும்
கோரமானவன் அல்ல நான்


Reply all
Reply to author
Forward
0 new messages