ஞாயிறு போற்றுதும் 246 - ஆராரோ ஆரிரரோ.. அகிலம் அறியா வலி - கோகுலராஜன் இராஜேந்திரன்
ஞாயிறு தோறும் தமிழால் இணைவோம் !
தளராது தாய்மொழி கற்போம் !
தலைநிமிர்ந்து மொழிகாத்திட நிற்போம் !
தலைப்பு:
"ஆராரோ ஆரிரரோ.. அகிலம் அறியா வலி"
( மலேசியத் தோட்டங்களில் நாட்டுப் புறப் பாடல்கள் )
சிறப்பு விருந்தினர்:
கலைமாமணி தஞ்சை சின்னப்பொண்ணு
திரைப்பாடகர், நாட்டுப்புற இசைக்கலைஞர்
விளக்க உரை :
முனைவர் இரா.காமராசு
பேராசிரியர் மற்றும் தலைவர்
நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்
சிறப்புரை:
கோகுலராஜன் இராஜேந்திரன்
ஆவணப்பட இயக்குநர், மலேசியா
- மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். கோலாலம்பூரைத் தளமாகக் கொண்டு திரைமுயற்சியில் இயங்கிவரும் இளம் இயக்குனர்.
- மலாயாப் பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலையில் பட்டம் பெற்றவர்.
- மலேசிய இந்தியர்கள் தொடர்பான கதையாடல்களைக் காத்திரமாகவும் கவித்துவமாகவும் திகில், நகைச்சுவை உணர்வுகளோடும் சொல்ல விழைபவர்.
- சக இளம் இயக்குநர்களுடன் இணைந்து, தனிச்சிறப்பான ஒருங்கிணைந்த கதைசொல்லலை உருவாக்கும் நோக்கில், "படை கலை இயக்கம்" (Padai Art Movement)எனும் குழுவைத் தோற்றுவித்தவர்.
- 1960-களில் மலேசிய இந்திய தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைக் கதைகளை ஆவணப்படுத்த கிருஷென் ஜித் நிதி (Krishen Jit Fund) பெற்றவர்.
- தற்போது, தனது முதல் முழுநீள திரைப்படமான "காளி, டெப்த் ஆஃப் டார்க்னஸ்" (Kaali, Depth of Darkness) உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறவர்.
- இத்திட்டம் முதல் மைலாப் FINAS விருதை வென்றதோடு, அதை இந்தியாவில் நடைபெற்ற 2022 பிலிம் பஜார் (Film Bazaar) இணைத் தயாரிப்பு சந்தையில் (Co-Production Market) பங்குபெறச் செய்திருப்பவர்.
- டைரக்டர் பேக்டரி பிலிப்பைன்ஸ் (Director Factory Philippines) நிகழ்ச்சியில் பங்கேற்று, "வலாய் பலாய்" (Walay Balay) எனும் குறும்படத்தை இணைந்து இயக்கியவர்.
- இப்படம் 2024 கான்ஸ் (Cannes) இயக்குநர்கள் 24 (Directors’ Fortnight) விழாவில் முதன்முறையாக வெளியிடப்பட்டது.
- சங்க இலக்கியத்திலும் பாரதி பாடல்களிலும் அதிக நாட்டம் உடையவர். சிறுவயதிலேயே, எழுத்தாளர் ஜெயகாந்தன் பாராட்டைப் பெற்ற திறமையான ஓவியர்.
- மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.இராஜேந்திரன் அவர்களின் அன்பு மகன்.
Join Zoom Meeting:
https://us02web.zoom.us/j/9466405430இணைப்பு எண்: 946 640 5430
கடவுச்சொல் இல்லை
நாள் - 31.08.2025 ஞாயிறு
முற்பகல் 11:00 மணி - இந்திய நேரம்
நிகழ்வு நிரல் : மிகச்சரியாக (இந்திய நேரம் )
அரங்கம் திறப்பு : காலை 11 மணி IST
துவக்கம் : பிற்பகல் 11:10 மணி IST
மலேசிய நேரம்: பிற்பகல் மணி 1.30க்கு ஆரம்பம்
நெறியாள்கை & அறிமுகவுரை : கவிஞர் இறை.மதியழகன்
வரவேற்புரை : செல்வி கோ.கோபிகா
தமிழ்த்துறை, இரண்டாமாண்டு
சேலம் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
நன்றியுரை: செல்வி ப.கார்த்திகா
தமிழ்த்துறை இரண்டாமாண்டு
சேலம் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கூட்டம் நிறைவு : பிற்பகல் 1:00 மணி IST