அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்

408 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 17, 2021, 2:34:52 AM8/17/21
to மின்தமிழ்
"ஆலயங்களில் பூசை செய்யும் உரிமையை சிலர் கைப்பற்றி எல்லா ஜனங்களுக்கும் அவ்விஷயத்திலுள்ள புறப்புரிமையைப் பிடுங்கிக்கொண்டதினால் இந்த அக்கிரமத்தை நிறுத்தவும் ஆலயத்தில் பூஜை செய்யவும் அதற்காகக் கோயிலுக்குள் போகவும் ஒவ்வொரு இந்துவும் உரிமை பெறச்செய்யவும் இந்துத் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது."

இவ்வாறாக ஒரு  தீர்மானம் முன்மொழியப்பட்டு சுமார் 93 ஆண்டுகள் ஆகின்றன. சீர்திருத்தம் விரும்பிய  தமிழர்களின்  இத்தீர்மானம் பல போராட்டங்கள் மற்றும்  சட்டச் சிக்கல்களுக்குப் பிறகு நிறைவேறியுள்ளது. தந்தை 'பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்' அகற்றப்பட்டது.

பார்க்க-தமிழ்நாடு அரசாணை எண் 609: 
மற்றும் படங்கள்: 
archagar.JPG
archagar0.JPG
archagar1.JPG

ஆண்டு 1927-  நவம்பர் மாதம் 5, 6 தேதிகளில் திருவாளர் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற 'சேலம் 3-வது அரசியல் மகாநாட்டில்' 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
அவற்றில் ஆறாவது தீர்மானமே -- "ஆலயங்களில் பூசை செய்யும் உரிமையை சிலர் கைப்பற்றி எல்லா ஜனங்களுக்கும் அவ்விஷயத்திலுள்ள புறப்புரிமையைப் பிடுங்கிக்கொண்டதினால் இந்த அக்கிரமத்தை நிறுத்தவும் ஆலயத்தில் பூஜை செய்யவும் அதற்காகக் கோயிலுக்குள் போகவும் ஒவ்வொரு இந்துவும் உரிமை பெறச்செய்யவும் இந்துத் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது."

மாநாட்டு  நிகழ்வுகள் குறித்து பெரியாரின் 'குடிஅரசு'  இதழில் (13-11-27 பக்கம் - 13) செய்தி வெளியாகி உள்ளது.  அச்செய்தி கீழே வெள்ளுரை வடிவிலும், படமாகவும் இணைக்கப் படுகிறது.  

சேலம் 3-வது அரசியல்  மகாநாடு.

குடி அரசு
13-11-27
பக்கம் - 13

ஆண்டு 1927-  

நவம்பர் மாதம் 5, 6 தேதிகளில் திருவாளர் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற 
'சேலம் 3-வது அரசியல் மகாநாடு'

சேலம் ஜில்லா 3-வது அரசியல் மகாநாட்டின் தலைவர் அவர்களையும் மற்றய அரசியல் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் சிறப்புடன் வரவேற்பதற்காக வேண்டிய ஏற்பாடுகள் 2 நாள்  முன்னரிருந்தே நடைபெற்றது. நகர்முழுதும் வளைவுகளாலும் தோரணங்களாலும் அலங்காரமாய் சிங்காரிக்கப்பட்டிருந்தது. மகாநாட்டுத் தலைவர் திரு. வி. ஒ. சிதம்பரம் பிள்ளை அவர்களை காலை 9 மணிக்கு சேலம் டவுன் செவ்வாய்ப்பேட்டை தேர் நிலையிலிருந்து முதல் அக்கிராரம் கடைவீதி வழியாய் பாண்டு வாத்தியங்களுடன் ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டது தலைவர் திரு. சிதம்பரம் பிள்ளை அவர்களும் வரவேற்பு கமிட்டித் தலைவர் திரு. தம்மண்ண செட்டியார் அவர்களும் முன்னணியிலும் ஈரோடு குடிஅரசு ஆசிரியர் திரு. ஈ. வெ. ராமசாமி நாயக்கர் அவர்கள், திரு. ஆர். கே. ஷண்முகம் செட்டியார் அவர்கள், டாக்டர் வாதராஜலு நாயுடு அவர்கள் பின்னணியிலும், இரண்டு மோட்டார்களில் வரவும், முன்னால் மாணவர்கள் உள்பட பல வாலிப  தொண்டர்கள் அணிவகுத்து வழி விலக்கவும், பிரபலஸ்தர்கள் புடைசூழவும், ஊர்வலம் சுமார் 3000 ஜனங்களடங்கிய பெருங் கோஷ்டியாய் ஜே. கோஷங்களுடன் புறப்பட்டு வந்தது. ஊர்வலம் 11 மணிவரையில் நடை பெற்றது, பின்னர் தலைவர்கள் ஜாகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். 

எலெக்டிரி தியேட்டரில் மகாநாடு ஆரம்பம்: 
மகாநாடு பகல் 2 மணிக்கு ஆரம்பம் என்றிருந்தாலும் மகாநாடு ஆரம்பமாக மாலை 3 மணி ஆய்விட்டது, தலைவர் வருவதற்கு முன்னர் கொட்டகையில் பிரதிநிதிகளும் விசிட்டர்களும் நிறைந்து விட்டார்கள், தலைவர் கரகோஷத்துடன் வரவேற்கப்பட்டு ஆசனத்திலமர்ந்தார். மேடையில் பல இடங்களிலிருந்தும் வந்த வரவேற்புகமிட்டி அங்கத்தினர்களும் தலைவர்களும் நிறைந்திருந்தார்கள். அவர்களில் கீழ்க்கண்டவர்கள் முக்கியஸ்தர்கள், திரு பிஞ்சல சுப்பிரமணிய செட்டியார்,  ராவ்சாகிப் எல்லப்ப செட்டியார்  எம்.எல்.சி.,  திரு. ஆர். கே. ஷண்முகம் செட்டியார் எம்.எல்.ஏ.,  திரு. ஈ. வெ. ராமசாமி நாயக்கர்,  டாக்டர் வாதராஜுலு நாயுடு, திரு. தெண்டபாணிபிள்ளை, திருவாளர்கள் டி.  எஸ்.  ஜெகராஜ் பி.ஏ.பி.எல்., கே. நரசிம்மய்யங்கார் பி.ஏ.பி.எல்., எம்.சாமிநாதய்யர் பி.ஏ.பி.எல்., கே. சிவ. சங்கர முதலியார்,  டாக்டர் ரங்கய்ய நாயுடு,  பி. இராஜமணிக்கம் பண்டாரம், டி.வி.பங்காரு செட்டியார், எ. கே. சுந்தரய்ய செட்டியார், கே.எஸ்.  அருணாஜலம் செட்டியார், எஸ். பெரியசாமி முதலியார், என். கே. சடகோப முதலியார், நாமக்கல் உஸ்மான் சாயுபு, புரொபசர் ராமமூர்த்தி, ஆத்தூர் அப்துல் அமித் சாயபு, ஏ.வையாபுரி மண்டாரம், பூபதி கந்தசாமி பிள்ளை, எஸ்.பி.பொன்னுசாமி முதலியார், கே.மாரிமுத்து முதலியார், பாப்பாபட்டி சின்னமுத்து முதலியார், சர்மசந்திர நாயுடு, பி. ஸ்ரீராமலு செட்டியார் பி.ஏ.பி.எல்., சித்தி ராஜு, கோவிந்தசாமி நாயுடு, சிவப்பெருமாள் பிள்ளை, ஒபிளி செட்டியார், கதிர் செட்டியார், ஜெகநாத செட்டியார்,  அங்கமுத்து முதலியார், ஏத்தாபூர் நாராயணா  செட்டியார், பி. சிவராவ் எம்.எல்.சி,  முதலிய முக்கியஸ்தர்கள் வந்தார்கள். 

முனிசிபல் சேர்மனும் வரவேற்பு கமிட்டித் தலைவருமான எஸ்.தம்மண்ண செட்டியார் பிரதிநிதிகளை வரவேற்று தம் பிரசங்கத்தை வாசித்தார். மகாராட்டுக்கு வரமுடியாதவர்கள் அனுப்பிய தந்திகளை வாசித்தார்.

பின்னர் டாக்டர் நாயுடு அவர்கள் மகாநாட்டுக்குத் தலைமைவகித்த திரு. வி. ஒ. சிதம்பரபிள்ளை அவர்களைப் பிரேரேபிக்கராவ் சாகிப், எல்லப்ப செட்டியார் ஆமோதிக்க, திருவாளர்கள் வெங்கடாஜல ரெட்டியார், நாமக்கல் ஊஸ்மான் சாயபு, எம். சாமிநாதய்யர், ஆர். கே. ஷண்முகம் செட்டியார், ஈ. வெ. ராமசாமி நாயக்கர் இவர்கள் ஆகரிக்க தலைவர் அவர்கள் கரகோஷத்தினிடையே பதவியை யேற்று தமது அக்கிராசனப் பிரசங்கத்தை வாசித்தார். 
குறிப்பு:- மற்றய நடவடிக்கைகளும் அக்கிராசனப் பிரசங்கமும் அடுத்த வாரம் வெளி வரும். 

நிறைவேறிய தீர்மானங்கள்:
(1) 
இந்திய சமூக வளர்ச்சிக்கும் சுயராஜ்யம் விரைவில் பெறுவதற்கும், ஜாதி வித்தியாசம் முதலிய சமூக ஊழல்களை ஒழிப்பதில் காங்கிரஸ் தலையிட வேண்டியது அவசியமாயிருப்பதால், அதற்கு அநுகூலமாக காங்கிரஸ் விதிகளை அமைத்து சமூகச் சீர்திருத்தம் செய்ய முயலுவதாக காங்கிரஸ் மெம்பர்கள் வாக்குறுதியளிக்குமாறு செய்யவேண்டுமென்று இந்த மகாநாடு அபிப்பிராயப் படுகிறது.

(2) 
வரப்போகும் ராயல் கமிஷன் பார்லிமெண்டு மெம்பர்களடங்கிய ஒரு கமிஷனாக இருக்குமென்று கேட்டு இந்த மகாநாடு வருந்துவதுடன் போதுமான அளவுக்கு இந்தியப் பிரதிநிதிகள் கமிஷனில் இல்லாவிட்டால் தேசத்தாருக்கு கமிஷன் திருப்திகரமாயிருக்கா தென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கிறது. 

(3) 
     (அ) கௌகத்தி காங்கிரஸ் கட்டளைக்கு விரோதமாக சட்டசபை மெம்பர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியார் உத்தரவுகள் அனுப்பியதை இந்த மகாநாடு வன்மையகாக் கண்டிக்கிறது. 
     (ஆ) சென்னை காங்கிரஸ் கட்சி மெம்பர்களில் சிலர் மந்திரி பதவி ஒப்புக்கொள்வதற்கு அனுகூலமுடையவராகக் காணப்படுவதால், காங்கிரஸ் கட்சியார் உத்தியோகம்  ஒப்புக்கொள்ளுவது தேர்தல் வாக்குறுதிக்கு விரோதமான தென்றும், அடுத்த காங்கிரஸ் உத்தியோகம் ஒப்புக்கொள்ளும்படி தீர்மானம் செய்தால் உத்தியோகம் ஒப்புக் கொள்ள விரும்பும் சட்டசபை மெம்பர்களை ராஜிநாமா செய்யச்சொல்லி மீண்டும் தேர்தலுக்கு நிற்குமாறு தூண்ட வேண்டுமென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கிறது.

(4) 
"காமன் வெல்த்து ஆப் இந்தியா" மசோதாவைப் பரிசீலனை செய்து அது சர்வஜன சம்மதம் பெற ஏதேனும் திருத்தங்களோ மாற்றங்களோ தேவையாயிருந்தால் அவைகளைக் குறிப்பிடுமாறு காங்கிரஸ் ஒரு கமிட்டியை நியமிக்கும்படி இம்மகாநாடு தீர்மானம் செய்கிறது. இந்த மசோதா விஷயத்தில் டாக்டர் பெசண்டு எடுத்துக்கொண்ட அரிய முயற்சிகளை இம்மகாகாடு மிகவும் பாராட்டுகிறது.

(5) 
     (அ) இந்த நாட்டிலுள்ள ஜனங்களை சமூக  விஷயங்களில் அடிமையாக வைப்பதற்குக் காரணமாயிருக்கும் வருணாசிரம தர்மத்தைப்பற்றி மகாத்மா தென்னாட்டுப் பிரயாண காலத்தில் பிரசாரம் செய்ததற்காக இம்மகாகாடு வருந்துகிறது. 
     (ஆ) தீண்டாமை யொழித்தல், பிறப்பினால் உயர்வு தாழ்வுண்டென்னும் உணர்ச்சியை நீக்கல், முதலியவைகளுக்காக எல்லா இந்துக்களும் பிரசாரம் செய்து சுயமரியாதை உணாச்சியை விருத்தி செய்ய வேண்டுமென்று இந்த மநாநாடு கேட்டுக்கொள்ளுகிறது. தேவையானால் எங்கும் சத்தியாக்கிரக ஆசிரமங்கள் ஸ்தாபனம் செய்யவேண்டுமென்றும் இந்த மகாநாடு அபிப்பிராயப் படுகிறது.

(6) 
ஆலயங்களில் பூசை செய்யும் உரிமையை சிலர் கைப்பற்றி எல்லா ஜனங்களுக்கும் அவ்விஷயத்திலுள்ள புறப்புரிமையைப் பிடுங்கிக்கொண்டதினால் இந்த அக்கிரமத்தை நிறுத்தவும் ஆலயத்தில் பூஜை செய்ய வும் அதற்காகக் கோயிலுக்குள் போகவும் ஒவ்வொரு இந்துவும் உரிமை பெறச்செய்யவும் இந்துத் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.

(7) 
தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியார் கங்காணி சபைகள் ஸ்தாபித்து காங்கிரசில் ஆட்கள் சேரமுடியாமல் தடைசெய்திருப்பதையும் ஒரு கட்சியார் தம் கட்சியாருக்கு மட்டும் ஜில்லா தாலுகா கமிட்டிகளில் ஆதிக்க முண்டாகுமாறு சூழ்ச்சி செய்து வருவதையும் இம்மகாநாடு கண்டிக்கிறது.

(8) 
வகுப்பு வேற்றுமைகளும் ஜாதி வித்தியாசங்களும் இருக்கும்வரை எல்லா சமூகத்தாருக்கும் உத்தியோகமும் மற்றும் பதவிகளும் சமமாகக் கிடைக்கும்படி தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்று இந்தமகாநாடு  தீர்மானிக்கிறது.

(9) 
சேலம் ஜில்லாவில் ஒரு பகுதிக்கு மேட்டுர் தேக்கத்திலிருந்து நீர்ப்பாசானத்துக்காக தண்ணீர் விட்டுக்கொடுக்கவேண்டு மென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.

(10) 
கிராமங்களில் அதிகப்படியான பாடசாலைகளும் சித்த வைத்திய சாலைகளும் ஸ்தாபிக்கவேண்டியதும் எல்லா ஆரம்பப் பள்ளிக் கூடங்களிலும் ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கவே ண்டியதும் மிகவும்  அவசியமென்று இந்த மாநாடு சர்க்காருக்கு வற்புறுத்துகின்றது.
archagar2.jpg
---------------------











archagar1.JPG
archagar.JPG
archagar2.jpg
TN GOV Press Release 609 - 140821.pdf
archagar0.JPG

தேமொழி

unread,
Aug 17, 2021, 3:02:14 AM8/17/21
to மின்தமிழ்
ஸ்டாலினை எச்சரிக்கும் சுப்பிரமணிய சாமி

அர்ச்சகர் விவகாரம்; முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
17 ஆகஸ்ட்  2021

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்தார். அவர் கூறியதாவது:
ஈ.வெ.ரா நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கும் விதமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். அர்ச்சகர் நியமனத்தில் சமூகநீதியை பாழ்படுத்தும் வகையில் சமூகவலை தளங்களில் தவறான கருத்துகள் பரப்பப்படுகிறது.

தமிழக கோவில்களில் ஏற்கனவே பணியில் இருந்த அர்ச்சகர்கள் யாரையும் பணிநீக்கம் செய்யவில்லை. யாரையும் விடுவித்து பணி நியமன ஆணை வழங்கவில்லை; கொச்சைப்படுத்த வேண்டுமென்றே அரசியலுக்காக சிலர் குறை கூறுகின்றனர். சமூகநீதியை சீர்குலைப்பதற்காகவே சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தேமொழி

unread,
Aug 17, 2021, 5:16:02 PM8/17/21
to mintamil
#whatsappshare
அனைத்து சாதி அர்ச்சகர் பணி நியமனம் 
archaka on duty.jpg

மற்றொரு 
#whatsappshare
காணொளி  இணைப்பில் 
அனைத்து சாதி அர்ச்சகர் பணி நியமனம் குறித்து சினம் கொண்டவர் ஒருவர் 
சபிக்கிறார் 


..... தேமொழி




※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※
உயரேப் பறக்கும் குருவியே காணுமாம்  
ஊரின் தொலைவு தனை                                                                                         
※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※
brahmin archakas curse.mp4

தேமொழி

unread,
Aug 18, 2021, 3:07:28 PM8/18/21
to மின்தமிழ்
source: https://www.facebook.com/100007187348472/videos/535784614238682/

நிகழ்வுகள்..
1. அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டல்படியே நடக்கிறது. ஏற்கனவே இருந்த ஒருவரை நீக்கி அவ்விடத்தில் யாரையும் பணியமர்த்தவில்லை. காலிப் பணியிடங்களில் புதியவர்களை நியமனம் செய்கிறோம். 60 வயதில் ஓய்வு பெறவேண்டும் என்பது நியதி. 69 வயதிலும் பணியில் இருப்பவர்களையே மாற்றுகிறோம்.. அறநிலையத்துறை அமைச்சர் விளக்கம்..
2. இந்த நிகழ்வு இன்றைய ஆட்சியில் துவக்கப்பட்டது அல்ல.
1970 ஆம் ஆண்டில் அனைவரும் அர்ச்சகராகலாம் என்னும் சட்ட முன்வரைவு தமிழகத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இதை எதிர்த்தும், ஆதரித்தும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
3. 1982 ஆம் ஆண்டு இது சம்பந்தமாக ஆய்வு செய்ய நீதியரசர் மகாதேவன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அனைவரும் உரிய பயிற்சி பெற்று அர்ச்சகர் ஆகலாம் என்று மகாதேவன் குழு அறிக்கை கொடுத்தது.
அறிக்கையின் முக்கிய அம்சம்.... கோவில்களில் ஆகமங்கள் அவ்வளவாக பின்பற்றப்படவில்லை என்கிறார் நீதியரசர்.
4.2002 ஆம் ஆண்டு கேரளா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு .. ஆதித்தியVs கேரளா..
ஆகமங்கள், மதச் சடங்குகள் எல்லோருக்கும் சமம் என்பதே இந்திய அரசியல் சாசனச் சட்டம்.
ஆகவே அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தீர்ப்பை கேரளா உயர்நீதிமன்றம் வழங்கியது.
5. 2006 இல் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. அர்ச்சகர்களுக்குண்டான பயிற்சி மையங்களை தமிழகத்தின் 6 நகரங்களில் துவங்கியது. மையத்திற்கு 40 பேர் வீதம் 240 பேர் ஆகமப்பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு பயிற்சி அளித்தவர் பெங்களூரைச் சேர்ந்த மிகச்சிறந்த ஆகமப்பண்டிதரும் சமஸ்க்ருதப் பேராசிரியருமான ராமகிருஷ்ணா ஜுவா என்னும் பிராமணர்.
பயிற்சி காலம் 13 மாதங்கள். ஆதாவது 13 மாதங்கள் முறையான ஆகமப்பயிற்சி பெற்ற அடியார்களே தற்போது அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கசாப்புக் கடையில் வேலை பார்த்தவர்களோ, கார் சர்வீஸ் செண்டரில் காலத்தை ஓட்டியவர்களோ அல்ல...
6.சிலையை வாட்டர் ஹோஸ் கொண்டு சுத்தம் செய்பவர் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர் அல்ல.. லாக்டவுன் முடிந்து கோவில் திறந்தபோது சிலைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட அறநிலையத்துறை பணியாளர்.
7. ஐயா ரங்கராஜன் நரசிம்மன் பேசிய காணொளியில் .. சுவாமியை ஆவாஹனம் செய்து வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என்கிறார். அதற்காக அவர்கள் மேற்கோள் காட்டுவது திருமிழிசை ஆழ்வார் மற்றும் ஆண்டாள் பாடல்களை.
இவர்கள் பாடியது தமிழ் பதிகங்கள்.. அதாவது தமிழ் பதிங்களைப் பாடி சுவாமியையே ஆவாஹனம் செய்யலாம் என்கிறார் ஐயா ரங்கநாதன் நரசிம்மன்...
8. இந்த சாபம் விடுவதெல்லாம்.......?

அன்புடன்..
மா.மாரிராஜன்..

தேமொழி

unread,
Aug 18, 2021, 4:08:55 PM8/18/21
to மின்தமிழ்
கோயில்களில் ஆகம விதிமுறைகளின் நிலை    - ஒரு மீள்பார்வை 



nakkeeran facebook.JPG

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பணி நியமன ஆணைக்குப் பிறகு எழும் விவாதங்களில் வழக்கம் போல ‘ஆகமம்’ என்கிற சொல் தற்போது மீண்டும் அடிப்படுகிறது. உண்மையிலேயே நமது கோயில்களில் ஆகம விதிமுறைகள் நேர்மையாகப் பின்பற்றப்படுகிறதா? என்கிற கேள்வி எழுந்ததும் அதற்கு விடை காண நீதியரசர் மகராசன் குழுவின் ஆய்வறிக்கையை மீண்டும் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1982 இல் கோயில் வழக்கங்களில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வுசெய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. நீதியரசர் மகாராசன் தலைமையில் அமையபெற்ற அக்குழு மூன்று ஆண்டுக் காலம் தமிழகத்தின் கோயில்களுக்கு வருகை புரிந்து ஆய்வுசெய்து அறிக்கை வெளியிட்டது. .இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில செய்திகளை நேர்மையான பக்தர்களும் பரிசீலனை செய்யலாம். அறிக்கை சுட்டிய ஆகம விதிமீறல்களில் சில:
முதலில், ஆகமவிதியின்படி அர்ச்சகர் ஊதியம் பெறக்கூடாது. அதனால் தேவலோக தோசம் வருவதோடு ஆலயத்தில் புனிதமும் கெடும். ஆனால் பல கோயில்களில் இவர்கள் மாத சம்பளம் பெறுகிறார்கள். .
மனைவி இல்லாதவர் (அபத்திகள்), பிரம்மச்சாரி ஆகியோர் நைமித்திகம் முதலிய பூசைகள் செய்யக்கூடாது என்பது விதி. இதற்கு மாறாகப் பல கோயில்களிலும் இவர்கள் நித்திய நைமித்திக பூசை இரண்டும் செய்கின்றனர். மேலும், விதிக்கு மாறாக உடல் குறைபாடு உடையவர்களும் பூசை செய்கின்றனர்.
கருவறையின் புனிதம் கெடுவதற்கான காரணங்களாகப் பிரம்ம புராணம் குறிப்பிடுவதில் குறிப்பிட்ட ஒரு கடவுளை பிற கடவுளுக்குரிய மந்திரங்களால் வழிபடுதலும் ஒன்றாகும். ஆனால் ஒரு கடவுளுக்குரிய மந்திரம் மற்றொரு கடவுள்களுக்குச் சொல்வதும், ஒரே மந்திரத்தைப் பல கடவுள்களுக்குச் சொல்வதும் நடைபெறுகிறது. தேவி மந்திரத்தை துர்க்கை, காளி, மாரிக்கு வேறுபாடு இல்லாமல் சொல்கிறார்கள். தட்சிணாமூர்த்திப் போன்ற பெருந்தெய்வங்களுக்குத் தனியாக மந்திரம் இருந்தும் அர்ச்சகர் அனைத்துக்கும் ஒரே வகையான மந்திரங்களையே சொல்கிறார்கள். மேலும், மந்திரங்கள் எழுத்துச் சோரமில்லாமல் திருத்தமாக உச்சரிக்கப்பட வேண்டும் என்பது ஆகமவிதி. ஆனால், பல அர்ச்சகர்கள் மந்திரங்களைப் பிழையாகவே உச்சரிக்கின்றனர்.
கோவிலின் மடைப்பள்ளியில் பாசகர் என்ற பிரிவுக்குரிய தீட்சை பெற்ற சிவாச்சாரியார் மட்டுமே கடவுளுக்குரிய நிவேதனத்தைச் சமைக்க வேண்டும். பல மடைப்பள்ளிகளில் தீட்சை பெறாதவரே சமைக்கிறார். தவிரக் கோயிலில் மடைப்பள்ளி இருந்தும் அர்ச்சகர்களின் வீடுகளில் தயாரிக்கும் உணவும் கடவுளுக்குப் படைக்கப்படுகிறது.
நம்மில் பலரும் தவறாக நினைப்பது போலப் பார்ப்பனர் எல்லோரும் அர்ச்சகராக முடியும் என்பதற்கு ஆகமத்தில் இடமில்லை. இதற்குப் பனக்குடி கோயில் வழக்கு சான்றாக இருக்கிறது. அந்த வழக்கில் நீதியரசர் டி.சதாசிவ அய்யர் கோயில் அர்ச்சகர்களைத் தவிர வேறெவரும் அவர் பார்ப்பனராகவே இருந்தாலும் கருவறைக்குள் நுழைய அனுமதியில்லை என்கிறார். அர்ச்சகர் என்பவர் தீட்சை பெற்றவர். அவர் சிவாச்சாரியார் என்று அழைக்கப்படுகிறார்.
ஒருவர் பிறப்பினால் சிவாச்சரியார் ஆகமுடியாது. அக்குடியில் பிறப்பவர்களைச் சிவசிருஷ்டி என்று கூறுவது வழக்கு. ஆனாலும் எழு வயது முதலே தீட்சைகளும் ஆச்சாரிய அபிசேகமும் பெற்று வருபவரே சிவாச்சாரியார் ஆக முடியும். ஆதிசைவர்கள் என்றழைக்கப்படும் இவர்கள் சிவனின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியவர்கள் என்பது அவர்களது நம்பிக்கை. மாறாகப் பிரம்மாவின் நான்கு முகங்களிலிருந்து தோன்றியவர்கள் ஸ்மார்த்த பார்ப்பனர்கள் என்பதால் இவர்களைப் பிரம்ம சிஷ்டி. என்பர்.
ஸ்மார்த்தத்தில் உருவ வழிபாடு இல்லை என்பதால் கோயில்களே இல்லை. எனவே, ஆகமும் இல்லை. ஆகமமே கிடையாது எனில் அவர்கள் அர்ச்சராக இயலாது. எனவேதான் ஸ்மார்த்த பார்ப்பனர்கள் சிவாலயங்களில் பூசை செய்யத் தகுதியற்றவர்கள் என்று ஆகமங்களில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான் ஸ்மார்த்தரான சங்கராச்சாரியாருக்குக் கருவறையில் பூசை செய்ய இன்றும் மறுக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் 187 கோயில்களில் 218 ஸ்மார்த்தர்கள் அர்ச்சர்களாகப் பணியாற்றுகிறார்கள் என்பதை மகராசன் ஆய்வுக்குழு கண்டறிந்தது. வடபழனி, சிதம்பரம், திருவானைக்கா, இராமேசுவரம், திருவீழிமிழலை, திருவொற்றியூர், ஆவுடையார் போன்ற புகழ்பெற்ற கோயில்களும் இவற்றில் அடக்கம். பிற சாதியினர் கடவுளுக்குப் பூசை செய்யத் தகுதியற்றவர் எனில் ஸ்மார்த்த பார்ப்பனர்களுக்கும் அத்தகுதி கிடையாது என்பதுதானே உண்மை?
ஆகம முறைப்படி ஒரு சிவாச்சாரியார் பூசை செய்து வந்த காளஹத்தி கோயிலில் வேடன் கண்ணப்பர் செய்த பூசையைச் சிவன் ஏற்றுக்கொண்டதால்தானே அவர் கண்ணப்ப நாயனார் ஆனார்? நாயக்கர் கால அரசியல் தலையீட்டுக்கு முன்னர் வரை சைவ பண்டார சாதியினர் செய்து வந்த பூசையைத்தானே பழனி முருகன் ஏற்றுக்கொண்டார்? உருவ வழிபாட்டை ஏற்காத ஸ்மார்த்தர்களின் பூசையை ஏற்றுக்கொள்ளும் கடவுள் உருவ வழிப்பாட்டின் மீது நம்பிக்கை கொண்டவர்களின் பூசையை ஏற்காமல் போவாரா? ஏற்க மாட்டார் எனில் அந்த அரசியல்தான் என்ன?
சுப்ரமணிய சாமி அண்மையில் தனது டிவிட்டர் பதிவில் கோயில்கள் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அவர் தந்தை செய்த தவறினை செய்ய மாட்டார் என்று நினைத்தேன். ஆனால் அண்மையில் கோயில் அர்ச்சகர் நியமனத்தில் திமுக தலையிட்டது என்னை மீண்டும் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டிய தேவையை உருவாக்கியுள்ளது என்று எழுதுகிறார். ஸ்மார்த்தர்களின் விவகாரத்தைக் கள்ள அமைதியுடன் கடந்து, பிற சாதியினர் என்றவுடன் பொங்குகிறார்களே, இதுதான் அந்த அரசியலா?

e-Content Development

unread,
Aug 19, 2021, 1:47:38 AM8/19/21
to mintamil
🙏🙏🙏

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/8da3d2ae-9c20-4706-a4a0-1e2e957486a2n%40googlegroups.com.


--
With Warm Regards,

S.Edward Packiaraj
Rosary e-Solutions
Trichy-621216
Cell 9786424927
https://vinganam.blogspot.com/  (Science Articles in Tamil )
www.packiam.wordpress.com (web directory)
http:/edwardpackiaraj.blogspot.in (Resume)

தேமொழி

unread,
Aug 19, 2021, 3:08:19 AM8/19/21
to மின்தமிழ்
source - https://www.facebook.com/photo/?fbid=10221834792484371&set=a.10200341375882389

ஆகம விதிகள் மட்டும் ஏன் பேசப் படுகிறது?

கோயில் அர்ச்சகர்களில் #பிற்படுத்தப்பட்டோர்#மிகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் #தலித்துகள் அனுமதிக்கப்பட்டப் பிறகு ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளதாக #பார்ப்பனர்கள் கொதித்து எழுகிறார்கள். ஆகம விதிகளைப் பார்க்கும்போது பார்ப்பனர்கள் ஒவ்வொருநாளும் மீறி வந்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

அதுமட்டுமா... ஆகம விதிகள் என்று பொத்தாம் பொதுவாக இந்து மத கோவில் விதிகள் என்று இவர்கள் திசை திருப்பி பொய் பேசுவது ஏன்...?

#ஆகமவிதிகள் சைவ சமயத்திற்கு மட்டுமே பொருந்தும். என்பதைப் பற்றி இவர்கள் வாய் திறப்பதே இல்லை. சைவ சமயத்திற்கு ஆகமங்கள் இருப்பதைப் போலவே வைணவ மதத்திற்கு #ஸம்ஹிதைகள் இருக்கின்றன.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற அரசாணைக் குறித்து வைணவர்கள் வாய் திறக்காமல் அமைதியாக இருப்பதற்கு காரணம் இதுதான். தற்போதைய அர்ச்சகர் நியமனங்கள் எதுவும் இன்னும் வைணவக் கோயில்களில் நடை பெறவில்லை.

மிகக்குறிப்பாக ஆகம விதிகள் உள்ள சைவக் கோயில்களிலோ, ஸம்ஹிதை விதிகளைப் பின்பற்றும் வைணவக் கோயில்களிலோ நியமனங்கள் செய்யப்படவில்லை. அப்படி செய்யக்கூடாது என்றும் ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. அந்த தீர்ப்பினை 2015 டிசம்பர்16 அன்று நீதிபதிகள் ரஞ்சன் கோகய், என்.வி. ரமணா ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.

ஆகமம் மற்றம் சம்ஹிதைகளை படைத்தது சிவன் மற்றும் திருமால் என்று அவர்கள் கட்டிய கதைகளை உச்ச நீதிமன்றமும் உண்மையென உறுதி செய்கிறது. இந்த கதைகளில் பார்ப்பனர்கள் கடவுளை பூசிக்க தகுதியுள்ளவர்கள் என்று குறிப்பிட்டுக் கொண்டார்கள்.

இப்போது இருக்கின்ற கேள்வி பார்ப்பனர்களுக்கு மட்டும் ஏன் கடவுகள் அர்ச்சனைச் செய்யும் தகுதியை வழங்கினார்கள் என்பதை பக்தர்கள்தான் கேட்க வேண்டும்.

எனது கேள்வி என்னவென்றால் இப்போது உள்ள பார்ப்பனர்கள் சாஸ்த்திரங்களின் படி நடக்கும் பார்ப்பனர்களா..? உன்மையான பார்ப்பனர் இக்காலத்தில் இருக்கிறாரா..?

ஆகமங்கள் மீறப்படுகின்றன என்று பொத்தாம் பொதுவாக கத்தாமல், என்ன என்ன விதிகள் மீறப்படுகின்றன என்பதைப் பற்றி இந்து மதக் காவலர்கள் விவாதிக்கத் தயாரா....?

படத்தில்.. சைவ மத ஆகம விதிகளின் தொகுப்பான உத்திர காமிக ஆகமத்தின் முதல் பக்கம்...
kamamigam.JPG
கௌதம சன்னா 

-----

தேமொழி

unread,
Aug 21, 2021, 4:50:42 AM8/21/21
to மின்தமிழ்
#whatsappshare

காமிகாகமம்...
அர்ச்சனா விதிப்படலம்...
----------------------------------------
பரார்த்த பூஜாபலன்.

பாரார்த் பூஜையானது அரசனுக்கு ஆயுள் , ரோகமின்மை,
சத்ருஜம்  சம்பத்து இவைகளின்
விருத்திக்காவும் கிராம
முதலியவைகளின்  விசேஷ விருத்திக்காகவும் செய்தல் வேண்டும்,
பரார்த்தபூஜைகளை சிவத்விஜர்களே செய்தல் வேண்டும். எப்பொழுதும்
இருந்த தர்மிஷ்டரான ஆதிசைவ பிராமணர்களே...
பிராமணர்களுள்
சிறந்தவரென்று சொல்லப்படுகிறது. அந்தக் காரணத்தால் சிவத்விஜர்காளாலேயே பரார்த்தபூஜை அவசியம் செய்யுத் தக்கது.

இதராள். பார்த்தபூஜை செய்வதாற் பீடை.

மற்றவர்களோ வெனில், ஆன்மார்த்தத்தைப் பார்க்கினும் 
வேறாகிய பரார்த்தத்தை  செய்யார்களாகில் செய்கிறவர்ட்கு
கெடுதலுண்டாகும். யாதொருவர் சிவசிருஷ்டியின்றி நான்முகனின் முகத்திலிருந்து உண்டானர்களோ அவர்கள் சாதாரன வைதிகர்கள்.
 அவர்கட்கு  பரார்த்த பூஜையில் அதிகாரமில்லை. அவிவேகத்தாற்  செய்வார்களாகில் அரசனுக்கும் ராஜ்யத்திற்கும் அழிவுண்டாகும். சாதாரணர்களாகிய  பிராமணர்கள் கூலிக்காகப் பரமசிவத்தைப் பூஜிப்பாராகில் ஆறுமாதத்திற்குள் யாவும் கெடும். ஆகையாலவர்களை  பரார்த்த பூஜா விதியில்  பரித்யாகஞ் செய்தல் வேண்டும்...

------------------------------------

ம்....
இப்படிபோகுது ஆகமம்..

அன்புடன்..
மா.மாரிராஜன்..


mari shared.jfif

---
mari shared.jfif
Reply all
Reply to author
Forward
0 new messages