பிழை திருத்தம்

906 views
Skip to first unread message

Suba.T.

unread,
Jul 7, 2014, 3:33:26 PM7/7/14
to மின்தமிழ், Subashini Tremmel
மிக அவசியமான ஒரு இழையாக இது இருக்கும் என்பதால் இத்தலைப்பிலேயே தொடங்கியிருக்கின்றேன். புணர்ச்சி விதிகள் தொடர்பாக ஐயம் உள்ளவர்கள் தொடர்ந்து இந்த இழையில் தங்கள் கேள்விகளையும் ஐயங்களையும் பகிர்ந்து கொள்ள டாக்டர்.பொன்முடி அவர்கள் தமது கருத்துக்களை இங்கே வழங்கினால் சிறப்பாக இந்த இழை அமையும்.

அன்புடன்
சுபா

---------- Forwarded message ----------
From: dr.ponmudi <dr.pon...@gmail.com>
Date: 2014-07-07 18:42 GMT+02:00
Subject: Re: செயல் நெறிகள்-Re: [MinTamil] புணர்ச்சியென்னும் இலக்கணம் - அறிமுகம் (1)
To: mint...@googlegroups.com
Cc: tkt...@gmail.com

ஏன் மின் தமிழிலிலேயே ‘பிழை திருத்தம்’ என்றொரு இழையைத் துவங்கி நாங்கள் செய்யும் பிழைகளைத் திருத்தி எங்களை நெறிப்படுத்தக் கூடாது?

நன்றி!

வேண்டுபவர்கள் என் மின்னஞ்சலில் தங்கள் எழுத்தை அனுப்பி திருத்திப்பெற்றுக்கொள்ளலாம். வரவேற்கிறேன்.

On Monday, July 7, 2014 6:10:59 PM UTC+5:30, N. Kannan wrote:
மிக அருமையான கட்டுரை. லோகாவின் பின்னூட்டமும் அவசியமான ஒன்று. தமிழ் மொழியைப் பற்றி அறிய, அறிய அது வெறும் மொழியல்ல, ஒரு “வாழ்வியல்” என்பது புரிகிறது. இப்படிச் சுவைத்து பாலிலும், தேனிலும் கலந்து கொடுத்தால் யார்தான் வேண்டாம் என்பார்கள்? நண்பர் முனைவர் திருவேங்கிடமணி சில காலம் முன்பு அவர் தந்தையார் எழுதிய எளிய இலக்கண (பிழை திருத்தம்) நூலை இங்கு தொடர்ந்து வெளியிட்டார். அது மீள் பதிவு காண வேண்டிய காலம் வந்துவிட்டது என்று தோன்றுகிறது.

உங்கள் ‘மொழிக்காவல்’ முனைப்பிற்கு வாழ்த்துகள். ஏன் மின் தமிழிலிலேயே ‘பிழை திருத்தம்’ என்றொரு இழையைத் துவங்கி நாங்கள் செய்யும் பிழைகளைத் திருத்தி எங்களை நெறிப்படுத்தக் கூடாது?

நா.கண்ணன்

2014-07-07 16:55 GMT+08:00 'veera pandian' via மின்தமிழ் <mint...@googlegroups.com>:

தமிழ்மொழி, தமிழர்கள், தமிழ்நாடு வீழ்ச்சிப் பாதையிலிருந்து மீள வேண்டும் என்பதில் சுயநலமற்ற உண்மையான அக்கறையுள்ள தமிழ்த் தலைவர்களும், தமிழ் ஆர்வல‌ர்களும் மீட்சிவழியைத் தேடும் கவலையுடன் ஆழ்ந்து பரீசிலிக்க வேண்டிய பதிவு முனைவர்.பொன்முடியின் 'புணர்ச்சி' தொடர்பான பதிவு ஆகும். (அவரின் பதிவிலிருந்து மேற்கோள்கள் கீழே  சிகப்பில்)
 
  இதன்படிப்பார்த்தால், இன்று காணக்கிடைக்கின்ற அனைத்துநூல்களும், அவை கதைநூல்களாகட்டும், கவிதைநூல்களாகட்டும், கட்டுரைகளாகட்டும், ஏன் பாடநூல்களும் இலக்கணநூல்களுமேயாகட்டும், இன்று பக்கத்துக்குப்பக்கம் பிழைபட்டேயுள்ளனவென்றால் அது மிகையில்லை!
 
நிகழ்காலத்தில் உலகில் வேறு எந்த மொழியிலும் " கதைநூல்களாகட்டும், கவிதைநூல்களாகட்டும், கட்டுரைகளாகட்டும், ஏன் பாடநூல்களும் இலக்கணநூல்களுமேயாகட்டும், இன்று பக்கத்துக்குப்பக்கம் பிழைபட்டேயுள்ள" நிலை இருப்பதாகத் தெரியவில்லை.
 
தமிழுக்கு மட்டும் இந்த இழிநிலை 'எப்போது' தொடங்கி,  'எப்படி' வளர்ந்தது? என்ற கேள்விகளைப் புறக்கணித்து தீர்வுகள் தேட முடியாது.
 
தமிழர்களிடையே வளர்ந்து வரும் குற்றங்களும் குழப்பங்களும் , அவர்கள் தம் மொழியில் 'புணர்ச்சி'யில் புரிந்து வரும் கீழ்வரும்  விளக்கம் அடிப்படையிலான‌ குற்றங்களுடனும், குழப்பங்களுடனும் தொடர்புடையவையா? இல்லையா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
 
சொல்லவரும் பொருளை குற்றமின்றியும் குழப்பமின்றியும் தெளிவாக எவரும் ஒன்றேபோலறிந்துகொள்ளுமாறும் சரியாயெழுதுவதற்கு ஒரு கருவி உண்டென்றால் அது புணர்ச்சியைத்தவிர வேறொன்றுமில்லை.
 
எழுத்தில் வெளிப்படும் குற்றங்களும் குழப்பங்களும் பேச்சிலும் வெளிப்பட வாய்ப்புண்டு. எனவே தமிழ் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் பேச்சு ஒலிப்பதிவுகளையும் ஆராய்வதும் அவசியமாகும்.
 
புணர்ச்சி என்பது எழுத்தில் வெளிப்படுவது போல, பேச்சிலும் 'ஒலியியல்' (acoustics) அடிப்படையில் வெளிப்படுவதாகும். யாப்பிலக்கண விதிகளின்படி உருவான பாடல்களில் இசை ஒலியியல் ( musical acoustics)  அடிப்படையில் அது வெளிப்படுவதாகும்.
 
தமிழர்களிடையே வளர்ந்து வரும் குற்றங்களும் குழப்பங்களும் , அவர்கள் தம் மொழியில் 'புணர்ச்சி'யில் புரிந்து வரும்  குற்றங்களுடனும், குழப்பங்களுடனும் எவ்வாறு தொடர்புடையவை என்பதை இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.
 
நுரையீரலில் துவங்கும் காற்று குரனாணில் (vocal cord ) மோதி துவங்கும் அதிர்வுகள் குரலொலி இயக்கவியல் (vocal dynamics) அடிப்படையில் பேச்சொலிகளையும், இசையொலிகளையும் எழுப்புகின்றன.
 
தொல்காப்பியத்தில் புணர்ச்சி உள்ளிட்ட இலக்கண விதிகள் 'ஒலியியல்' அடிப்படையிலும், 'இசை ஒலியியல்' (Musical Acoustics) அடிப்படையிலும் அமைந்துள்ளவையாகும். (http://musictholkappiam.blogspot.in/ )
 
தொல்காப்பியத்தில் ஒரு பாடலின் எழுத்தின் இசை ஒலிகள் அடிப்படையில் இருவகை அசைகள் (நேரசை, நிரை அசை) சேர்ந்து சீரை உருவாக்கின்றன. அப்பாடலின் பாலை நிலை, பண்ணு நிலை, வண்ணக்கூறுபாடு, தாளக் கூறுபாடு பற்றிய தகவல்களைக் கொண்ட முக்கியத்துவ பணி(significant role)  ஆற்றுவது சீர்.
 
ஒரு பாடலின் இசையொலியில் வெளிப்படும் குற்றங்களும் குழப்பங்களும்,  அப்பாடலில் உள்ள 'சீர்கள்' மூலம் வெளிப்படும். ஒரு ஊரில் வாழும் மக்களின் பண்பை, அந்த ஊர்ப் பாடல்களில் வெளிப்படும் குற்றங்களையும் குழப்பங்களையும் வைத்தே கண்டுபிடிக்க முடியும் என்பதற்கான பழந்தமிழ் இலக்கியச் சான்று வருமாறு:
 
“ பணிவு இல் சீர் மாத்திரை இன்றி நடக்குமேல், வாழும் ஊர் கோத்திரம் கூற‌ப்படும்.”
நாலடியார் 3:25;2
 
இதே வழியில்  தமிழர்களிடையே வளர்ந்து வரும் குற்றங்களும் குழப்பங்களும் , அவர்கள் தம் மொழியில் 'புணர்ச்சி'யில் புரிந்து வரும்  குற்றங்களுடனும், குழப்பங்களுடனும் தொடர்புடையவையாகும்.
 
எழுத்துக்கள் பலவகைப் பட்ட புணர்தல் விதிகளின் அடிப்படையில் சேர்ந்து கதைகள், கவிதைகள்,கட்டுரைகள் போன்றவற்றை உருவாக்குகின்றன. அதே போல் மனிதர்களும் பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளிலான பலவகைப் பட்ட புணர்தல் விதிகளின் அடிப்படையில் சேர்ந்து குடும்பம், நட்பு வட்டம்,அமைப்புகள் போன்றவற்றை உருவாக்குகின்றனர்.
 
சமூகத்தில் எந்த துறையிலும் உள்ள குற்றங்களையும் குழப்பங்களையும் அவ்வப்போது அடையாளம் கண்டு களையும் செயல் நெறிகள் ( Functional Checks)  வலிவுடன் செயல்படுவது சமூக வளர்ச்சிக்கு வழி வகுக்கும். மாறாக அச்செயல் நெறிகள் வலுவிழப்பது சமூக வீழ்ச்சிக்கு வழி வகுக்கும். அச் செயல்நெறிகளே இல்லாது போனால் அவ்வீழ்ச்சி பள்ளத்தில் கொண்டு சேர்க்கும். அந்த நிலையில் தான் இப்போது தமிழ்நாடு இருக்கிறதா என்பதும் ஆய்விற்குரியதாகும்.
 
இனியும் தாமதியாமல், தமிழ்ச் சமூகத்தில் ஒவ்வொரு துறையிலும் செயல்நெறிகள் செயல்பட துவங்கியாக வேண்டும். அந்த நோக்கில்   முதலில் பள்ளி, கல்லூரிகளில் உள்ள தமிழ்ப் பாடப் புத்தகங்களில் உள்ள இலக்கணப் பிழைகளையும், தமிழ்த் தலைவர்கள், முக்கிய பேச்சாளர்கள் ஒலிப்பதிவுகளிலும் உள்ள குறைகளையும் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து சரி செய்யும் செயல்நெறி முயற்சியாக நான் எனது நண்பர்கள் திருச்சி ('பெல்' பணி நிறைவு பணியாளர்)  சமுத்திரராசன், (லண்டன்) தொல்காப்பியன் துணையோடு 'தமிழ்க் கண்காணிப்பு மையம்' துவங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். பணி ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களை உரிய சன்மானத்துடன் பணியில் அமர்த்தி செயல்பாடுகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இது போன்ற முயற்சிகளில் உள்ளவர்களுடன், தனி மனித முக்கியத்துவம் இன்றி, கூட்டாக செயல்படவும் எண்ணியுள்ளோம்.
 
செ . அ . வீரபாண்டியன்

On Sunday, 6 July 2014 12:44 PM, Suba.T. <ksuba...@gmail.com> wrote:

வணக்கம் டாக்டர்.பொன்முடி.

இங்கு தொடர்ந்து தாங்கள் தங்களது கட்டுரைகளை இதே போல பகிர்ந்து வரலாம்.

அன்புடன்
சுபா

2014-07-06 0:57 GMT+02:00 dr.ponmudi <dr.pon...@gmail.com>:
சொற்களை சேர்த்தெழுதுவது புணர்ச்சியெனப்படும். தனிச்சொற்கள் ஒன்றுடனொன்று புணர்ந்து தொடர்மொழிகளாகின்றன. தனிச்சொற்களோடு தனிச்சொற்களைச்சேர்ப்பதுமட்டுமன்றி, ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமையுருபுகளைச்சேர்த்தலும் உம்மையைச்சேர்த்தலும் ஒரு வினைச்சொல்லுடன் (பகுதி) இடைநிலை, சாரியை, விகுதியாகியவற்றைச்சேர்ப்பதும் புணர்ச்சியே. தமிழில் எழுத்தென்பது பாக்களாகமட்டுமேயிருந்தகாலத்தில் புணர்ச்சியானது சரியாயிருந்திருக்கக்கூடும். ஆனால் இக்காலத்தில் உரைநடையில் அது முற்றிலும் கைவிடப்பட்டுவிட்டதென்பதே உண்மை.

வேற்றுமையுருபுகளும், உம்மையும் பகுபதவுறுப்புகளும் சேர்க்கப்பட்டேயிருப்பதால் அவை பிரிக்கப்படுவதில்லை. ஆனால் தனித்தனிச்சொற்களாலானவையான தொடர்மொழிகள் இடத்துக்கேற்றவாறு ஓரிடத்தில் சேர்ந்தும் வேறிடத்தில் பிரிந்தும்நிற்பதால் அவை இக்காலத்தில் அனைத்திடங்களிலும் பிரித்தேயெழுதப்படுகின்றன. 

புணர்ச்சியென்பது ஏதோ அடுத்தடுத்தசொற்களையெல்லாம் எந்தக்காரணமுமின்றி புணர்த்திவிடுவதன்று. எந்தவிருசொற்கள் புணர்வதானாலும் அதற்கு சரியான காரணமிருக்கவேண்டும்.

சொற்கள் காரணமில்லாமல் புணரும்போதும் காரணமிருந்தும் புணராதபோதும் சொல்லவரும் பொருளில் குற்றமுண்டாவதை தடுக்கமுடியாது. சொல்லவரும் பொருளை குற்றமின்றியும் குழப்பமின்றியும் தெளிவாக எவரும் ஒன்றேபோலறிந்துகொள்ளுமாறும் சரியாயெழுதுவதற்கு ஒரு கருவி உண்டென்றால் அது புணர்ச்சியைத்தவிர வேறொன்றுமில்லை.

வேறாய்ச்சொல்வதானால், புணர்ச்சியின் உதவியில்லாமல் சொல்லவந்த பொருளை சரியாகச்சொல்வதென்பது எவருக்கும் இயலாததாகும். இதன்படிப்பார்த்தால், இன்று காணக்கிடைக்கின்ற அனைத்துநூல்களும், அவை கதைநூல்களாகட்டும், கவிதைநூல்களாகட்டும், கட்டுரைகளாகட்டும், ஏன் பாடநூல்களும் இலக்கணநூல்களுமேயாகட்டும், இன்று பக்கத்துக்குப்பக்கம் பிழைபட்டேயுள்ளனவென்றால் அது மிகையில்லை!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Innamburan S.Soundararajan

unread,
Jul 8, 2014, 2:01:45 AM7/8/14
to mintamil
மிகவும் இன்றியமையாத தொடராக, இது தமிழ்த்தொண்டு செய்து வரவேண்டும் என்று நானும் கேட்டுக்கொள்கிறேன்.

1.'இன்றியமையாத தொடராக'
அல்லது
'இன்றியமையாதத் தொடராக'

எது சரி? எது தவறு?

2. தமிழ் இலக்கணம் தற்காலத்தில் தளர்த்தப்படுவதில் வழுவமைதி காண்கிறதா?
அல்லது நாம் தொன்மை இலக்கணத்தை கெடுபிடியாக பிடித்துக்கொள்ள வேண்டுமா?
உதாரணமாக, கலாநிதி நுமான் அவர்கள் தமிழ் இலக்கணம் தற்காலத்தில் தளர்த்தப்படுவதை பரிந்துரை செய்கிறார். அது சரியா?

இன்னம்பூரான்

dr.ponmudi

unread,
Jul 8, 2014, 6:52:36 AM7/8/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com
என்னுடைய கருத்துகளை வழங்குவதற்கு நான் எப்போதும்விரும்புவேனென்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்!

dr.ponmudi

unread,
Jul 8, 2014, 1:11:35 PM7/8/14
to mint...@googlegroups.com
ஐயா,

இலங்கை பேராதனைப்பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தவரான முனைவர் நுஃமானவர்களின் 'தற்காலத் தமிழ் இலக்கணம்' என்னும் நூலை வலைத்தளத்தில் பார்த்தேன். அதுபற்றிய ஒரு கட்டுரையையும் எழுதியிருக்கிறேன். அவர் சொல்வதெல்லாம் உண்மைக்கு மாறானகருத்துகளென்பது என்னுடைய பணிவானகருத்து.

அந்த கட்டுரை உங்களுக்கு பார்ப்பதற்கு வேண்டுமானால் அனுப்பிவைக்கிறேன்.

'இன்றியமையாத தொடராக' என்பது புணராமலிருக்கிறது. இதை புணர்த்தியெழுதினால், 'இன்றியமையாததொடராக' என்றேவரும். 'இன்றியமையாதத்தொடராக' என வலிமிகுந்துவராது! 'இன்றியமையாத' என்பது பெயரெச்சம். பெயரெச்சத்துடன் வலி மிகாதுதான் பெயர்கள் புணரும்.

Innamburan S.Soundararajan

unread,
Jul 8, 2014, 1:33:22 PM7/8/14
to mintamil
மிக்க நன்றி, டாக்டர் பொன்முடி. நான் ஒரு தமிழ் மாணவன். உங்கள் விளக்கம் உதவியது. கலாநிதி. நுஃமான் அவர்களது நூலை சில வருடங்களுக்கு
முன் படித்தேன். அது ஏற்புடையது என்று தான் நினைத்தேன். மறுபடியும் அலசுகிறேன்.
அன்புடன்,
இன்னம்பூரான்

N. Ganesan

unread,
Jul 8, 2014, 8:34:33 PM7/8/14
to mint...@googlegroups.com

On Monday, July 7, 2014 11:01:45 PM UTC-7, இன்னம்பூரான் wrote:
மிகவும் இன்றியமையாத தொடராக, இது தமிழ்த்தொண்டு செய்து வரவேண்டும் என்று நானும் கேட்டுக்கொள்கிறேன்.

1.'இன்றியமையாத தொடராக'
அல்லது
'இன்றியமையாதத் தொடராக'

எது சரி? எது தவறு?

இன்றியமையாத தொடராக - இதில் வல்லெழுத்து மிகாது.

இன்றியமையாத் தொடராக - இது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத் தொடர். எனவே, வல்லெழுத்து மிகும்.

நா. கணேசன்

N Deiva Sundaram

unread,
Jul 8, 2014, 8:55:41 PM7/8/14
to mint...@googlegroups.com
அன்புள்ள  நண்பர் முனைவர் கணேசன் அவர்களுக்கு,

தங்கள் கருத்து சரியே. 

சந்தி இலக்கணத்திற்கு அடிப்படை ஒலியன் வருகை, அசை அமைப்பு, உருபன்வருகை, தொடரியல், பொருண்மையியல் ஆகிய பல நிலைகள் அடிப்படையாக அமைகின்றன. குறிப்பாக, தமிழ்ச்சொல்லின் அசை அமைப்பே மிக அடிப்படையாக அமைகிறது.  உடம்படுமெய் வருதல், குறிலை அடுத்து ஒற்று மிகுதல் ஆகியவற்றிற்குக் காரணம்  தமிழ் அசை அமைப்பே ( மொழி அசை, யாப்பு அசை அல்ல) ஆகும். நிலைமொழியிறுதியில் அகரம் வர, வருமொழி முதலில் வல்லினம் வரும்போது, ஒற்று மிகுதலுக்கும் ( பெயரடை, பெயரெச்சம் தவிர) அசை அடிப்படையே காரணம். இதைத் தற்கால மொழியியலின் Optimality Theory  அடிப்படையில் பார்த்தால், தெளிவாக விளங்குகிறது. 

நிலைமொழி இறுதியில் ஒற்றாக வல்லினம் வருதல்கூடாது என்ற கருத்து சரியில்லை. முக்கியத் தலைவர், முக்கிய தலைவர் = முதல் முக்கிய என்பது  முக்கியம் என்ற சொல்லிலிருந்து தோன்றுகிறது. இரண்டாவது,  முக்கு என்ற வினைச்சொல்லின் பெயரெச்ச வடிவம். இங்கு மிகாது.  இங்கு முக்கியத்தலைவர் என்று சேர்த்து எழுதவேண்டும் என்பது சரியல்ல.

கடலைப் ( கடல் +ஐ) பார்த்தான், கடலை ( கடலை)  பொறுக்கினான்  - வேலைப் ( வேலை+ஐ) பார்த்தான், வேலை ( வேலை) பார்த்தான்  - போன்ற எடுத்துக்காட்டுகளைப் பார்த்தால் தெளிவாகும்.

பேராசிரியர் பொற்கோ, பேரா. நுஃமான் ஆகியோர் தற்காலத் தமிழின் வளர்ச்சிநிலையிலிருந்து சந்திபற்றித் தெளிவாகப் பல கருத்துகளை முன்வைத்துள்ளார்கள். 

சந்தி அல்லது புணர்ச்சி , சாரியை ஆகியவை  பொருளை ஐயமின்றி வெளிப்படுத்தத் தமிழ்மொழி உருவாக்கிக்கொண்ட உத்திகளாகும். எனவே மிக எச்சரிக்கையாக இவற்றைக் கையாளவேண்டும். இலக்கணத் தெளிவும் மொழியியல் அடிப்படையும் கைகொடுக்கும். 

அன்புடன்
ந. தெய்வ சுந்தரம்

Date: Tue, 8 Jul 2014 17:34:33 -0700
From: naa.g...@gmail.com
To: mint...@googlegroups.com
Subject: Re: [MinTamil] பிழை திருத்தம்

dr.ponmudi

unread,
Jul 8, 2014, 10:34:05 PM7/8/14
to mint...@googlegroups.com
பாருங்கள், பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

dr.ponmudi

unread,
Jul 8, 2014, 11:05:50 PM7/8/14
to mint...@googlegroups.com, ndsun...@hotmail.com
ஐயா,

//நிலைமொழி இறுதியில் ஒற்றாக வல்லினம் வருதல்கூடாது என்ற கருத்து சரியில்லை//

என்கிறீர்களே,

ஆவி ஙஞணமந யரல வழளமெய்
சாயு முகரநா லாறு மீறே

என்னும் நன்னூற்பாவை பார்த்திருப்பீர்கள். இது சொல்லுக்கு ஈற்றெழுத்தாகக்கூடியவை எந்தெந்தவெழுத்துகளென்பதை வரையறுத்துச்சொல்கிறது. இதில் வல்லினமெய் சொல்லப்படவில்லையென்பதனால், அது சொல்லுக்கு ஈற்றெழுத்தாகாதென்பது அறியத்தக்கதுதானே? அப்படியிருக்கும்போது அதை ஈற்றெழுத்தாய்வைப்பதை எதனால் நீங்கள் ஆதரிக்கிறீர்களென்பது எனக்கு புரியவில்லை.

மேலும், எந்தவொருதனிச்சொல்லுக்கும் வல்லினமெய் ஈற்றெழுத்தாக இல்லையென்பதும் புணர்ச்சியால் வலிமிகுந்தகாரணத்தால்மட்டுமே அது தோன்றுகிறதென்பதும் தங்களுக்கு தெரிந்திருந்தும் புனர்ந்தசொற்களை பிரித்தெழுதுவதை தாங்கள் சரியென்றுசொல்வதானால், புணர்ச்சியாலுண்டாகும் தொடர்மொழியானது இல்லாமற்போய்விடுகிறதே, அதைப்பற்றியென்னசொல்கிறீர்கள்?

இத்தகையகாரணங்களை எண்ணிப்பார்க்கும்போது, வல்லினமெய்யை சொல்லுக்கு ஈற்றெழுத்தாய்வைப்பது சரியன்றென்றேதோன்றுகிறது.

அன்புடன்
பொன்முடி

dr.ponmudi

unread,
Dec 19, 2014, 9:00:46 AM12/19/14
to mint...@googlegroups.com, ndsun...@hotmail.com
ந. தெய்வ சுந்தரம் அவர்களுக்கு.

ஐயா,

//முக்கியத் தலைவர், முக்கிய தலைவர் = முதல் முக்கிய என்பது  முக்கியம் என்ற சொல்லிலிருந்து தோன்றுகிறது. இரண்டாவது,  முக்கு என்ற வினைச்சொல்லின் பெயரெச்ச வடிவம். இங்கு மிகாது.  இங்கு முக்கியத்தலைவர் என்று சேர்த்து எழுதவேண்டும் என்பது சரியல்ல.//

எனச்சொல்கிறீர்கள்.

'முக்கியத்தலைவர்' என்று சேர்த்தெழுதுவது தேவையில்லையெனச்சொல்லலாகாது. ஏனெனில், 'முக்கியத் தலைவர்' என இதை 
பிரித்தால், இதில் இரண்டுசொற்களிருப்பதைப்போலாகிறது. உண்மையில், இது இரண்டுசொற்களாலானதாயிருந்தாலும், ஒரேசொல்லாகவே கொள்ளப்படவேண்டும். 

ஏனென்றால், இது ஒரு தொகைநிலைத்தொடராகும். 'முக்கியம்' என்பது ஒரு தனிச்சொல். இது, 'தலைவர்' என்னும் இன்னொருதனிச்சொல்லுடன் புணர்ந்ததால், 'மகரவீறு கெடுதல்' என்னும் புணர்ச்சிவிதிப்படி, 'முக்கிய' என தனது மகரவீற்றை இழந்தது. இது 'தலைவர்' என்பதுடன் புணரும்போது 'தலைவர்' என்பதன் முதலெழுத்தாகிய தகரம் மிகுந்தது. அவ்வாறு மிகுந்ததால்வந்த 'த்' என்பது என்னகாரணத்தால் 'முக்கிய' என்பதற்குப்போய் 'முக்கியத்' என்றாகும்?

புணர்ந்தசொற்களை பிரித்தெழுதுவது சரியன்று. அவ்வாறு பிரிக்கலாமென்றால், புணர்ச்சியென்பதற்கு பொருளேயில்லை.

'முக்கியம்' என்பதும் 'தலைவர்' என்பதும் பெயர்ச்சொற்கள். இரண்டு பெயர்ச்சொற்கள் இவ்வாறு புணர்ந்தனவென்றால், அவற்றுக்கிடையே ஏதாவது ஒரு உருபோ சொல்லோ மறைந்துநின்று தனது பொருளை வெளிப்படுத்துவதாயாகும். இங்கே, 'முக்கியத்தலைவர்' என்பதை, 'முக்கியமாகியதலைவர்' எனக்கொள்ளவேண்டுமாகையால், இது இருபெயரொட்டுப்பண்புத்தொகை. (ஆகிய என்னும் பண்புருபு மறைந்துவந்தது)

தொல்காப்பியம், 'தொகைச்சொல் எல்லாம் ஒருசொன்னடைய' என்கிறது. எனவே, இதை ஒருசொல்லைப்போலவேகொள்ளவேண்டும். பிரித்துச்சொல்லுதல் சரியன்று.

அதுமட்டுமன்றி, வல்லினமெய் தமிழுக்கு ஈற்றெழுத்தாகாதென்பது விதி.

ஆவி ஞணநமன யரலவ ழளமெய்
சாயுமுகர நாலாறு மீறே

என்பது நன்னூல்.

இதில் சொல்லுக்கு ஈறாயிருப்பவை எவ்வெவ்வெழுத்துகளென்பது சொல்லப்பட்டுள்ளது. இதில் வல்லினம் இல்லையென்பதை எண்ணிப்பாருங்கள். இக்காலத்தில் புணர்ச்சியால் வலிமிகுந்தவிடங்களில் பிரித்துவிடுவதாலேயே சொல்லுக்கு வல்லினமெய் ஈறாகிறதேயன்றி அவை வேறிடங்களில் வருவதில்லை. வலிமிகுதலென்பது சொற்கள் புணர்ந்திருப்பதைக்காட்டுவது. புணர்ந்தசொற்களை பிரிக்கக்கூடாதென்பதை சொல்லவேண்டியதில்லை

'முக்கிய தலைவர்' எனச்சொன்னால், அது முக்கியவரைக்குறிக்குமென்கிறீர்கள்.அப்படியானால்,  'முக்கியவணிகர்' என்பதை இப்படி ஒன்றாயெழுதுவதா, 'முக்கிய வணிகர்' என்று இரண்டாயெழுதுவதா? இதில் வலி மிகாதென்பதால், இதை பிரித்தெழுதினால் தங்கள்கூற்றுப்படி இதன் பொருள் முக்குபவரையேகுறிக்கும். அன்றோ?

ஆனால், பெயரெச்சமும் வினையெச்சமும் தனித்துநிற்பதை குற்றமாய்ச்சொல்லமுடியாது. 'முக்கிய' என்பது ஒரு பெயரெச்சமானால், அதை தனித்தெழுதுவது குற்றமாகாது. எனினும், இது வேறுபொருளைத்தருவதால், இதை தனித்துச்சொல்லும்போது எவரும் 'முக்கிய' எனச்சொல்வதில்லை. மாறாக, 'முக்கியமான' என்றேசொல்வர்.

அன்புடன், பொன்முடி.

On Wednesday, July 9, 2014 6:25:41 AM UTC+5:30, N Deiva Sundaram wrote:

Oru Arizonan

unread,
Dec 19, 2014, 12:22:07 PM12/19/14
to mintamil
அருமையான விளக்கம், பொன்முடி அவர்களே!
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

dr.ponmudi

unread,
Dec 23, 2014, 6:32:18 AM12/23/14
to mint...@googlegroups.com
நன்றியையா!

அன்புடன் பொன்முடி

dr.ponmudi

unread,
Dec 24, 2014, 8:40:00 PM12/24/14
to mint...@googlegroups.com
தமிழில் எழுதும்போது நாம் எளிதாக சில புணர்ச்சிப்பிழைகளை தவிர்க்கமுடியும்.

அவை யாவையென்றால், 

1. இரண்டாம்வேற்றுமையுருபான 'ஐ' வருமிடங்களில் அதனையடுத்து ஒரு பெயர்ச்சொல்வருமாயின் அங்கெல்லாம் வலியை மிகுக்காமலெழுதுவது. ஏனென்றால், இங்கெல்லாம் புணர்ச்சி வராது. 
(இரண்டாம்வேற்றுமையுடன் வினையேபுணரும், பெயர் புணராது.)

2. வினையெச்சத்தின்முன்வரும்போதும் பெயர் புணராதென்பதால், அங்கும் வலிமிகுக்காமலெழுதவேண்டும். வினையெச்சத்தையடுத்துவரும் இன்னொருவினையெச்சமோ வினைமுற்றோதான் புணர்ந்துவரும்.

3. வேற்றுமையுருபை வெளிப்படுத்தியெழுதும்போது, வருமொழியானது வல்லினமாயிருந்தால் வலிமிகுத்தெழுதுகிறோம், பிறவினமாயிருந்தால் அங்கு சொல்லவரும் பொருளுக்கு அவை புணர்த்திச்சொல்வதா, புணர்த்தாமற்சொல்வதா, எப்படிச்சொன்னால் பொருளுக்கு பொருந்துவதாயிருக்குமென்பதைப்பற்றி எண்ணிப்பார்க்காமல், தனிச்சொற்களாகவேயெழுதிவிடுகிறோம்.

வேற்றுமையில் வல்லினவருமொழிவந்தால்மட்டுமே புணர்ச்சி நேருமென்பதில்லை. பிறமுதன்மொழிகளும் தேவைப்படுமிடங்களில் புணர்ந்துவரவேண்டியிருக்குமென்பதும் அது சொல்லவரும் பொருளைப்பொருத்ததென்பதும் நாம் அறிந்துகொள்ளவேண்டியவையாகும்.

ஓர் இடத்தில் புணர்ச்சி வேண்டுமாவேண்டாமாவென்பதை சொல்லக்கூடியது அங்கு சொல்லவரும் பொருளேயன்றி, வருமொழியானது வல்லினமுதலைக்கொண்டதாவென்பதன்று. ஏனெனில், வல்லினமுதன்மொழிகளும் புணராமல்வரவேண்டியிருப்பதுண்டு.

4. பெயரெச்சம் வினையெச்சம் போன்றவையும் முறையே பெயருடனும் வினையுடனும் புணர்ந்து தொடர்மொழியாய்வருவதும் புணராமல் தனித்தனியாய்வருவதுங்கூட சொல்லவரும் பொருளைப்பொருத்ததேயாகும்.

5. தொகைநிலைத்தொடரென்பது, இரண்டுசொற்களை சேர்த்தெழுதுவதாகும். அவ்வாறு சேர்த்தெழுதும்போது, அவற்றுக்கிடையில் ஓர் உருபோ சொல்லோ மறைந்திருப்பதாய்ப்பொருள். 

வேற்றுமைத்தொகையானால் வேற்றுமையுருபும், பண்புத்தொகையானால் பண்புப்பெயரிலுள்ள 'மை' என்னும்  அதன் விகுதியோடு, 'ஆகிய' என்னும் பண்புருபும், உம்மைத்தொகையானால் 'உம்' என்னும் இடைச்சொல்லும் வினைத்தொகையானால் காலத்தைக்காட்டும் இடைநிலையும் மறைந்திருப்பதாய்ப்பொருள்.

இவ்வாறான ஒரு தொகைநிலைத்தொடரை தொடர்மொழியாயெழுதாமல் அதிலுள்ள சொற்களை பிரித்தெழுதிவிட்டால், பொருள் கெட்டுவிடும். அதாவது பிரித்தபின் தொகைநிலைப்பொருளை கொள்ளமுடியாது.

6. எழுவாய்த்தொடரென்பது நாம் பேச்சில் பயன்படுத்துவதுதான். ஆனால் இன்று அதை எழுத்தில் எவரும் எழுதுவதில்லை. ஓர் எழுவாயையும் அதன் பயனிலையையும் சேர்த்துச்சொல்வதே எழுவாய்த்தொடர்.

'அந்த கடிதத்தை நானெழுதவில்லை!' என்பதைப்பாருங்கள். இதில், 'நானெழுதவில்லை' என்பது ஒரு தொடர்மொழியாயுள்ளது. இது எழுவாய்த்தொடர். இதை இப்படிச்சொல்லாமல், 'அந்த கடிதத்தை நான் எழுதவில்லை' என்றெழுதினால், இது 'எழுதவில்லை' என்பதை சிறப்பித்துச்சொன்னதாகிறது. அப்படியானால், அதை தட்டச்சிட்டிருக்கலாம். அன்றோ?

'நானெழுதவில்லை' என்பதும் 'நான் எழுதவில்லை' என்பதும் வெவ்வேறுபொருளைத்தருவனவாயிருப்பதைப்பாருங்கள். எழுவாயை சிறப்பித்துச்சொல்லவேண்டியவிடங்களில் எழுவாய்த்தொடரென்பது எவ்வளவிற்கு பயனுள்ளதாகவும் சொல்லவரும் பொருளை சரியாய்ச்சொல்வதற்கு துணைசெய்வதாகவுமிருக்கிறதென்பதை எண்ணிப்பாருங்கள்.

இவ்வாறாக, தொடர்மொழிகளின் பொருளை அறிந்து அதற்கேற்றாற்போல் அவற்றை அமைத்தும் வேண்டாதவிடங்களில் தனிச்சொற்களாகவுமெழுதினால்,  எழுத்தில் 
தமிழ்நடையானது சிறந்துவிளங்குமென்பதில் ஐயமில்லை.

அன்புடன் பொன்முடி
...

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 25, 2014, 12:48:45 AM12/25/14
to mintamil
அறிந்துகொள்ளப்படவேண்டிய சிறப்பான விவரங்கள். நன்றி திரு பொன்முடி ஐயா.
தாங்கள் கொடுத்துள்ள ஆறு இடங்களுக்கும் எடுத்துக்காட்டுகள் தந்தால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் மொழியின் இறுதியில் ஒற்று வராது என்பதால் ஒற்று மிகும் அனைத்து இடங்களிலும் சொற்களை இணைத்து எழுதவேண்டுமென்றும் அறிகிறேன். அதனையும் நண்பர்கள் உறுதிசெய்யும்படி வேண்டுகிறேன்.
நன்றி
சொ.வினைதீர்த்தான்.

dr.ponmudi

unread,
Dec 25, 2014, 9:46:34 PM12/25/14
to mint...@googlegroups.com
தமிழின் இன்றைய உண்மைநிலை:

இன்றைய +2 தமிழ்ப்பாடநூலில் கதைப்பகுதியில் மூன்றாவதுகதை ‘சட்டை. ஜெயகாந்தனெழுதியது. அதில் இவ்வாறுள்ளது:

// அரையில் ஒரு துண்டும் நெஞ்சுக்குழி வரை அடர்ந்துவிட்ட தாடியும் உண்மையைத் தேடும் அவனது தீட்சண்யமான பார்வையும் – கொஞ்ச காலத்தில் அவனைப் பூந்தோட்டத்துச் சாமியாராக்கி விட்டது.

பூந்தோட்டத்துச் சாமியார் என்பதே இப்போது அவனுக்குப் பெயர் எனினும் அவர் சோம்பேறி அல்ல.

செடிகளுக்குத் தண்ணீர் இறைத்துக் கொட்டுவான். மடப்பள்ளிக்கு விறகு பிளந்து போடுவான். கோயில் பிரகாரத்தைக் கூட்டி வைப்பான்.; குருக்கள் வீட்டுத் தென்னை மரத்தில் ஏறித் தேங்காய் பறிப்பான். //

இதை படித்துப்பார்த்தீர்களா? பொதுவாக இதுபோல் ஒரு பகுதியை படிக்கும்போது படிப்பதன் பொருள் இன்னதென்பதை அறிந்துகொள்வதிலேதான் நாம் கவனமாயிருப்போமேயன்றி, அதில் இலக்கணக்குற்றமுள்ளதாவென்பதை பார்ப்பதில்லை. அது நமக்கு தேவையானதுமில்லை.

ஆனால், ஒரு மொழியை இலக்கணக்குற்றமில்லாமல் எழுதுவதற்கு நாம் கற்றிருந்தோமானால், எவராவது அதை குற்றமாயெழுதியிருந்தால் அந்த குற்றம் நம் கண்ணில் படாமற்போகாது.

ஆங்கிலத்தை நாமெல்லாம் கற்றிருக்கிறோமாதலால், அதை எவராவது குற்றமாயெழுதியிருந்தால் அதை பார்த்தவுடன் நம் மனமானது அந்த குற்றத்தை கண்டுபிடித்துவிடும். ஆனால் தமிழில் இன்று காணப்படும் குற்றங்களை நாம் குற்றமென்றே அறியாதிருப்பதனால் நமக்கு அவையெல்லாம் குற்றமாக படுவதேயில்லை. 

இப்போது அதில் காணப்படும் இலக்கணக்குற்றங்களை சற்று பார்ப்போம்.

‘அடர்ந்துவிட்ட தாடியும் உண்மையைத் தேடும் அவனது தீட்சண்யமான பார்வையும் – கொஞ்ச காலத்தில் அவனைப் பூந்தோட்டத்துச் சாமியாராக்கி விட்டது.

இதில் ‘கொஞ்ச என்பது என்னபொருளைத்தருமென்பதைப்பாருங்கள். அதென்ன கொஞ்சுவதையாசொல்கிறது?

‘கொஞ்சகாலத்தில் என்றெழுதியிருந்தால் இந்த குற்றம் வந்திருக்காது. இது பெயரெச்சத்தொடர்.

‘அவனைப் பூந்தோட்டத்துச் சாமியாராக்கி விட்டது என்பதில், ‘அவனைப்பூந்தோட்டம் என்பது குற்றமென்பது இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும். இரண்டாம்வேற்றுமை பெயரை புணர்த்திக்கொள்ளாதன்றோ?

‘அவனை காட்டினான் என்றுவரும், ‘அவனை கேட்டான் என்றுவரும். இவற்றை புணர்த்திச்சொல்வதுமுண்டு. ‘அவனைக்காட்டினான் என்றும், ‘அவனைக்கேட்டான் என்றும் சேர்த்துச்சொல்வது, ‘அவனை’ என்பதை முதன்மைப்படுத்திச்சொல்வது.

ஆனால், அவனைப்பூந்தோட்டம்’ என்று வராது. ‘அவனை பூந்தோட்டத்துக்குவரச்சொன்னான்’ எனச்சொல்வது சரி. இதில் அவனை வரச்சொன்னான் என்பவை நேரடியாய்ப்பொருந்தக்கூடியவை. இவை புணரவுங்கூடும் ஆனால், இடையில் ‘பூந்தோட்டத்துக்கு என்பதுவந்ததால், அதையுஞ்சேர்த்துப்புணர்த்தமுடியாது. அப்படி புணர்த்திச்சொல்வதானால்,, ‘அவனைப்பூந்தோட்டத்துக்குவரச்சொன்னான் எனவரும். இதில், ‘அவனைப்பூந்தோட்டம் என்பது பூந்தோட்டத்தின் பெயராயிருக்கவேண்டும்!

‘சாமியாராக்கிவிட்டது என்பதும் ‘சாமியாராக்கி விட்டது என்பதும் ஒரேபொருளைத்தருமாவென்பதை எண்ணிப்பாருங்கள். ‘விட்டது என்பதை தனித்துச்சொன்னால் விட்டதென்பதை சிறப்பித்துச்சொன்னதாகாதா? இந்த வாக்கியம் விட்டதைப்பற்றியாசொல்கிறது?

‘பூந்தோட்டத்துச் சாமியார் என்பதே இப்போது அவனுக்குப் பெயர் என்பதைப்பாருங்கள்.

‘அவனுக்குப்பெயர்’ என்பது பிரிந்திருந்தாலும் புணர்த்தப்பட்டிருப்பதற்கு அடையாளமாய் வலிமிகுந்திருப்பதால் நாம் அதை தொடர்மொழியாகவேகொள்வோம். தொடர்மொழியைப்பொருத்தவரை, நிலைமொழியானது சிறப்பித்துச்சொல்லப்பட்டதாகும். இங்கே ‘அவனுக்குப்பெயரென்பது ‘அவனுக்கு’ என்பதை சிறப்பித்துச்சொன்னது. இங்கே அவனுக்கென்பதை இப்படி சிறப்பித்துச்சொல்லவேண்டிய தேவை உண்டாகவில்லை. அந்த பெயர் யாருக்கானதென்பதை படிப்போர் அறிந்துதானேபடித்துவருவர்? எனவே,

‘பூந்தோட்டத்துச்சாமியாரென்பதே இப்போது அவனுக்கு பெயர்

எனச்சொல்வதே சரியாயிருக்கும். (‘பூந்தோட்டத்துச்சாமியார் என்பதே என ‘என்பதே என்பதை தனித்துச்சொல்வதும் பொருந்தாதென்பதை எண்ணிக்கொள்க)

‘எனினும் அவர் சோம்பேறி அல்ல என்பதைப்பாருங்கள்.

இதை நாம் படிக்கும்போது, ‘எனினும் அவர் சோம்பேறியல்ல என்று சேர்த்துப்படித்துவிடுவதால் இது குற்றமாய்ப்படுவதில்லை. ஆனால், ‘எனினும் அவர் சோம்பேறி என்பதுடன் இந்த வாக்கியம் முற்றுப்பெற்றுவிடுகிறது. ‘அவர் சோம்பேறி என்பது ஒரு முழுமையான வாக்கியமென்பது நமக்கு தெரிந்திருந்தும், இதை நாம் எண்ணிப்பார்க்காமல் சேர்த்துப்படித்துவிடுகிறோம்.

உண்மையில் நமக்கெல்லாம் படிக்கத்தெரியவில்லையென்றுதான்சொல்லவேன்டும்! ஏனென்றால், புணர்த்தப்பட்டிருப்பவற்றையன்றி, புணர்த்தப்படாதசொற்களை நாம் நாமாகப்புணர்த்திக்கொள்வது நமக்கு படிக்கத்தெரியவில்லையென்பதையேகாட்டும்.

புணர்த்திப்படிக்கவேண்டியவையென்றால் அவற்றை புணர்த்தியிருக்கவேண்டுமென்பதால், புணத்தாமலெழுதியது எழுதியவரதுகுற்றம். அதை அறியாதிருப்பது நம்முடைய அறியாமை. நாம் விழித்துக்கொண்டால் எவராலும் இப்படியெல்லாம் எழுதமுடியாது.

‘செடிகளுக்குத் தண்ணீர் இறைத்துக் கொட்டுவான் என்பதைப்பாருங்கள்.

இதை எப்படிப்படிப்பது? ‘செடிகளுக்குத்தண்ணீர் இறைத்துக்கொட்டுவான் என்றாபடிப்பது

‘செடிகளுக்குத்தண்ணீர் என்பது செடிகளுக்கென்பதை சிறப்பித்தது. இந்த வாக்கியம், தண்ணீரை எதற்கிறைத்துக்கொட்டுவானென்பதையாசொல்கிறது?

தண்ணீரை’ என்றிருக்கவேண்டாமா? ஐயுருபை மறைத்தெழுதினால் சொற்களை சேர்த்தெழுதவேண்டாமா? ‘செடிகளுக்கு தண்ணீரிறைத்துக்கொட்டுவான் என்றெழுதியிருக்கவேண்டாமா?

‘விறகு பிளந்து போடுவான் என்பது ‘விறகுபிளந்துபோடுவான் என்றிருக்கவேண்டாமா? ‘விறகுபிளந்து’ என்பது இரண்டாம்வேற்றுமையின் தொகைநிலைத்தொடரன்றோ? ‘போடுவான்’ என்பதை ஏன் தனித்துச்சொல்லவேண்டும்? பிளந்து என்னசெய்வானென்பதற்கு விடையாயிது? போடுவானென்பதை சிறப்பித்துச்சொல்லவேண்டிய தேவையென்ன?

கோயில் பிரகாரத்தைக் கூட்டி வைப்பான் என்பதைப்பாருங்கள்.

இதில் ;கோயில் என்பதை என்னவென்றுகொள்வது? அதென்ன கூட்டியவனுடைய பெயரா? ‘கோயிற்பிரகாரத்தை என்றிருந்தால் இந்த குழப்பம் வராதன்றோ? இப்படியெழுதவேண்டாமென்றால் ‘கோயிலின் பிரகாரத்தை என்றெழுதியிருக்கலாம்.

‘பிரகாரத்தைக்கூட்டிவைப்பான் என்பது எதைக்கூட்டிவைப்பானென்பதைச்சொல்வது. பிரகாரத்தைக கூட்டிவைப்பான் என்பதோ பிரகாரத்தை என்னசெய்வானென்பதைச்சொல்வது. இங்கே எதைச்சொல்லவேண்டுமென்பதை எண்ணிப்பாருங்கள். எதைக்கூட்டுவானென்பதை சொல்லவேண்டியதில்லையென்பதும் என்னசெய்வானென்பதையே சொல்லியிருக்கவேண்டுமென்பதும் புரிகிறதன்றோ?

இதைப்பாருங்கள்:

குருக்கள் வீட்டுத் தென்னை மரத்தில் ஏறித் தேங்காய் பறிப்பான்

இது என்னசொல்கிறது? வீட்டுத்தென்னைமரத்தில் குருக்களென்பவன் ஏறித்தேங்காய்பறிப்பானா? அதென்ன ஏறித்தேங்காய்? தேங்காயில் இப்படியொருதேங்காயா?

ஏறி என்பது வினையெச்சமென்பதும் அது தன்னுடன் பெயரை புணர்த்திக்கொள்ளாதென்பதும் நாம் அறிந்திருக்கிறோம்.

‘குருக்களுடையவீட்டில்
என்பது ஆறாம்வேற்றுமையின் விரிநிலைத்தொடர். இதை தொகையாக்கினால், ‘குருக்கள்வீட்டில் என்று ஒன்றாகத்தான்வரும். தொகைநிலைத்தொடர் பிரிந்தால் பொருள் குற்றப்படும்.

இன்னும், ‘குருக்கள் வீட்டுத்தென்னை
என்பதுடன் இந்த வாக்கியம் முற்றுப்பெற்றுவிடும்! ஆம் இது பெயர்ப்பயனிலையென்பதாகும். இரண்டேயிரண்டு பெயர்ச்சொற்கள் வாக்கியமாகும். ‘கண்ணன் பாடகன் கந்தன் மருத்துவன் என்பவை இவ்வாறானவாக்கியங்களே.

‘தென்னைமரத்தில்
என்பதை பிரித்தெழுதியிருப்பதைப்பாருங்கள்! ‘தென்னை மரத்தில் என்றால் பொருள் வேறாகிவிடும். அதாவது ஏதோவொருமரத்தில் தென்னையானது இருப்பதாயாகும். ‘தென்னைமரம் என்பது, ‘தமிழ்மொழி என்பதைப்போல் ‘இருபெயரொட்டுப்பண்புத்தொகைஎனப்படுவதாகும். (தென்னையாகியமரம், தமிழாகியமொழி)

‘தேங்காய் பறிப்பான் என்பது இரண்டாம்வேற்றுமைத்தொகையென்பதும் இதை ‘தேங்காய்பறிப்பான் என்று சேர்த்துத்தானெழுதவேண்டுமென்பதும் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

குருக்கள்வீட்டுத்தென்னைமரத்தில் ஏறி தேங்காய்பறிப்பான்

என்பதன்றோ சரியானது?

தமிழ் இன்று எவ்வாறெழுதப்பட்டுவருகிறதென்பதை இதில் பார்த்தோம். இதிலுள்ள குற்றங்களை நாம் எண்ணிப்பார்ப்பதில்லை. அறிஞர்களும் இவ்வாறேயெழுதிவருகிறார்களென்பது இன்னும்வேதனைக்குரியது.

இதை படிக்கும் தங்களைப்போன்றோர் ஆதரவளித்தால், தமிழை மீட்டுவிடமுடியும்!

சொ. வினைதீர்த்தான்

unread,
Dec 26, 2014, 1:31:35 AM12/26/14
to mintamil
அருமை.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Suba.T.

unread,
Dec 26, 2014, 9:17:47 AM12/26/14
to மின்தமிழ், Subashini Tremmel
மிக அருமையானவிளக்கம். நன்றி!

நான் மேலே எழுதியிருப்பது சரியா?

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை

dr.ponmudi

unread,
Dec 26, 2014, 11:05:47 AM12/26/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
நன்றியம்மா!

சரியாகத்தானெழுதியிருக்கிறீர்கள். அதில் குற்றமேதுமில்லை!
...

Oru Arizonan

unread,
Dec 26, 2014, 12:11:16 PM12/26/14
to mintamil
அருமையான விளக்கம், பொன்முடி அவர்களே!  நன்றாகக்கற்றுக்கொடுக்கிரீர்கள்!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

dr.ponmudi

unread,
Dec 27, 2014, 6:07:30 AM12/27/14
to mint...@googlegroups.com
நன்றியையா!
...

dr.ponmudi

unread,
Dec 27, 2014, 6:33:02 AM12/27/14
to mint...@googlegroups.com

வேற்றுமைப்புணர்ச்சி – ஒரு விளக்கம்:

ஐயுருபீற்றுநிலைமொழியுடன் வல்லினமுதலல்லாதமொழிகள் புணர்ந்துவருவதுமுண்டு; வல்லினமுதன்மொழிகள் புணராதுவருதலுமுண்டு. வல்லினம்வந்தால்மட்டுமே புணருமென்பதுமில்லை, பிறவெல்லாம் புணராவென்பதுமில்லை.

வல்லினமானால் வலிமிகுந்துபுணருமென்பதும், வல்லினமல்லாதவை இயல்பாய்ப்புணருமென்பதும் தாங்கள் அறிந்ததேயன்றோ?

வலிமிகுமென்பதன்படி, வல்லினம்வந்தால் வலிமிகுந்துபுணர்வதுபோல் வல்லினமல்லாதவை வலிமிகாமற்புணரவேண்டுமென்பதன்படி அவையெல்லாம் புணர்த்தப்படுகின்றனவாவென்பதை எவரும் எண்ணிப்பார்ப்பதில்லை!

ஐயுருபின்முன்வரும் வல்லினமல்லாத பிறமுதன்மொழிச்சொற்கள் எதனால் புணர்த்தப்படுவதில்லை? அவை புணரக்கூடிய தேவை எழுவதேயில்லையா? வல்லினமுதன்மொழியென்றால் புணர்ந்துதான்வரவேண்டுமா? அவை புணராமல்வருவதென்பது இல்லவேயில்லையா?

இரண்டாம்வேற்றுமைத்தொடரென்பது எதனாலமையும்? வருமொழியின் முதலெழுத்தைப்பொருத்தா, அல்லது, சொல்லும் பொருளைப்பொருத்தா?

எவ்வினமானாலும், சொல்லவரும் பொருளுக்கு தேவையாயிருந்தால் புணர்ந்துவரும், தேவையில்லையென்றால் புனராதுவரும். அவ்வளவுதான். புணரவேண்டியிருந்தால், வல்லினம் வலிமிகுந்துபுணருமென்பது விதி.

இந்த எடுத்துக்காட்டை எண்ணிப்பாருங்கள்:

அரைக்கீரையை கடைவதைவிட பொரியலாய்ச்செய்யலாம்.

ஆனால், முளைக்கீரையை கடைவதுதான்சுவையாயிருக்கும்.”

இதில் ஐயுருபின்முன் ‘கடைவது என்னும் வல்லினமுதன்மொழியேவந்திருந்தும் புணர்த்திச்சொல்லப்படவில்லை. ஏனெனில், இங்கு புணர்த்திச்சொல்வது சொல்லும் பொருளுக்கு பொருந்தாது. புணர்த்தினால், இதில் ‘கடைவது என்பதற்கிருக்கும் பொருளழுத்தம் இல்லாமற்போய்விடும்.

புணர்த்திச்சொல்வதானால் அதெப்படியிருக்குமென்பதைப்பாருங்கள்:

அரைக்கீரையைக்கடைவதைவிட முளைக்கீரையைக்கடையலாம்.”

இதில் கடைவதென்பது இந்த தொடர்மொழியகளில் வருமொழியாயிருப்பதால், அது அழுத்தமின்றி இயல்பாய்ச்சொல்லப்படுவதையும் தனித்துச்சொல்லப்பட்டபோதிருந்த அந்த அழுத்தம் இப்போது அதற்கு இல்லாமற்போய்விட்டதையும்பாருங்கள்.

நாம் பேசும்போது, பொதுவாக ஒவ்வொருதனிமொழியையும் அதன் முதலசைக்கு சற்று அழுத்தங்கொடுத்துப்பேசுவது இயல்பு.. தொடர்மொழிகளைப்பேசும்போதும் முதலசைக்குமட்டுமேயழுத்தந்தருவதால், வருமொழிகள் அழுத்தம்பெறுவதில்லை.

‘அரைக்கீரையைக்கடைவதைவிட என்பதையும், ‘அரைக்கீரையை கடைவதைவிட என்பதையும் நாம் எப்படிச்சொல்லுவோமென்பதை எண்ணிப்பாருங்கள். சேர்த்துச்சொல்லும்போது ‘கடைவதைவிட’ என்பதற்கு அழுத்தமிருக்காது. ஆனால் பிரித்துச்சொல்லும்போதோ அதற்கு ஓர் அழுத்தம் இருக்கும்.

உச்சரிப்பில் உண்டாகின்ற இந்த வேறுபாடே, சொற்களை தொடர்மொழியாய்ச்சொல்வதற்கும் தனிமொழிகளாய்ச்சொல்வதற்குமுள்ள வேறுபாடாகும். இந்தவேறுபாடே சொல்லும் பொருளையும் வேறுபடுத்திக்காட்டுகிறதென்பது எண்ணிப்பார்க்கத்தக்கது.

அரைக்கீரையைக்கடைவதைவிட என்று சேர்த்துச்சொல்லும்போது, ‘அரைக்கீரை என்பது சிறப்பித்துச்சொல்லப்படுகிறது, ‘கடைவதைவிட என்பது அப்படி சிறப்பிக்கப்படவில்லை. ஆனால், ‘அரைக்கீரையை கடைவதைவிட என்று பிரித்துச்சொல்லும்போது, ‘கடைவதைவிட’ என்பது சிறப்பித்துச்சொல்லப்படுகிறதென்பதை சொல்லத்தேவையில்லை.

வேற்றுமையில் சொற்களை புணர்த்தி தொடர்மொழியாய்ச்சொல்வதா, அல்லது புணர்த்தாமல் தனிமொழிகளாய்ச்சொல்வதாவென்பது, நாம் சொல்லவரும் பொருளுக்கு முதற்சொல்லைச்சிறப்பிப்பதா, அல்லது இரண்டாவதுசொல்லைச்சிறப்பிப்பதாவென்பதே காரணமாயிருக்கும்.

இந்த அடிப்படையானகாரணத்தை இன்று நாம் அறிந்திராததால், வல்லினம்வந்தால் வலிமிகுமென்பதை பொதுவாய்க்கொண்டு, எல்லாவிடங்களிலும்புணர்த்திவிடுகிறோம்!

புணர்ச்சியென்பது பொருளையடிப்படையாய்க்கொண்டதேயன்றி வல்லினத்தையடிப்படையாய்க்கொண்டதன்று.

இதை எண்ணிப்பார்த்து, இனி நாம் எழுதும்போது வேற்றுமையுருபுகள் வந்தால், அங்கே சொல்லவரும் பொருளுக்கு புணர்த்திச்சொல்வதுபொருந்துமா, அல்லது புணர்த்தாமற்சொல்வதுபொருந்துமாவென்பதை எண்ணிப்பார்த்து அதற்கேற்றவாறெழுதினால், வேற்றுமைப்புணர்ச்சியில் குற்றமுண்டாவதை தவிர்க்கமுடியும்.

வேற்றுமைப்புணர்ச்சிமட்டுமன்றி, வினையெச்சத்தொடர், பெயரெச்சத்தொடர் போன்றவையும் இன்னும்பிறவுமான அல்வழித்தொடர்களிலும் தேவையைப்பொருத்தே புணர்ச்சி அமையுமென்பதை எண்ணிப்பார்த்தால் எளிதாயறிந்துகொள்ளலாம்.

இதற்கெல்லாம் அடிப்படைக்கருத்துமட்டும் ஒன்றுதான். அதாவது, புணர்த்திச்சொன்னால் நிலைமொழிக்குச்சிறப்பு, பிரித்துச்சொன்னாலோ வருமொழிக்குச்சிறப்பு. அவ்வளவுதான்.

இதற்கெல்லாம் விதியைக்காட்டுங்களென்றால், காட்டமுடியாது! ஏனெனில், இலக்கணநூல்கள் இதையெல்லாம் சொல்லவில்லை. அவற்றை உணர்ந்துகொள்ளுமளவுக்கு தமிழின் இயல்பானது நமக்கு தெரியுமென்பதால் அவர்கள் அதையெல்லாம் சொல்லாமல்விட்டனர்!

நாமோ, தமிழின் இயல்பை இன்றுவரை பேச்சைப்பொருத்தவரை மிகச்சரியாயுணர்ந்து பேசினாலும், எழுதும்போது அதை மறந்து கண்டபடியெல்லாமெழுதிக்கொண்டிருக்கிறோம்!

அன்புடன் பொன்முடி

...

dr.ponmudi

unread,
Jan 15, 2015, 4:07:15 AM1/15/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com

ஐயா சொ. வினைதீர்த்தானவர்கள் கேட்டுக்கொண்டதன்படி வேற்றுமைப்புணர்ச்சிகள் ஆறையும் ஒவ்வொன்றாய் இங்கு விளக்கமுற்படுகிறேன்.

வேற்றுமைத்தொடர்கள் ஆறென்பதை அறிவோம். அவை தொடராகவருவதும் தொடராகாமல் தனிச்சொற்களாய்வருவதும் சொல்லவேண்டிய பொருளுக்கு முறையே நிலைமொழியைச்சிறப்பித்துச்சொல்லவேண்டுமா, அல்லது வருமொழியைச்சிறப்பித்துச்சொல்லவேண்டுமாவென்பதே அடிப்படை. அது எவ்வாறென்பதை இதில் சற்று விளக்கமாய்பார்ப்போம்.

இரண்டாம்வேற்றுமை:

இதில் பெயரும் வினையுமட்டுமேபுணரும். இந்த உருபை ஏற்றிருக்கும் ஒரு பெயருடன் இன்னொருபெயர்ச்சொல் புணர்ந்துவராது. இந்தவேற்றுமைக்கு ‘செயப்படுபொருள்வேற்றுமை என்பது பெயர். இதை ஏற்கும் பெயரை இது செயப்படுபொருளாயாக்குவதால் இதற்கு அந்த பெயர்.

பொது:

ஒரேயொருபொருளைப்பற்றிச்சொல்லும்போது இரண்டாம்வேற்றுமையை புணர்த்திச்சொல்லவேண்டியதாயிருக்காது. இரண்டுபொருள்களிருக்குமானால் அப்போது ஒன்றிலிருந்து மற்றதை வேறுபடுத்திக்காட்டும்பொருட்டு புணர்த்திச்சொல்வது தேவைப்படுவதாயிருக்கும்.

வல்லினவருமொழி:

ஒரு வண்டியில் நீங்கள் எங்கோ போவதற்கென்று புறப்பட்டு போய்க்கொண்டிருக்கிறீர்கள், சற்றுதுரத்துக்கு போனபின் பெட்டியை மறந்துவிட்டது நினைவுக்குவந்துவிடுகிறது, இப்போது வண்டியை திருப்பச்சொல்லவேண்டுமென்றால் எப்படிச்சொல்வீர்கள்?

‘வண்டியத்திருப்புஎன்பீர்களா, ‘வண்டிய திருப்பு என்பீர்களா?

இங்கே ‘வண்டியை திருப்புஎன தனித்தனியாய்ச்சொல்லி, ‘திருப்பு என்பதை சிறப்பித்துச்சொல்வதே சரியாயிருக்கும். அன்றோ? ஏனெனில், திருப்புவதற்கு வண்டியைத்தவிர வேறொன்றுமில்லையன்றோ?

ஆனால், கண்ணனென்பவனை தேடிச்செல்லும் ஒருவர், தான் தேடுவது ஒருவரைத்தானென்பதால், ‘கண்ணனை பார்த்தாயா? என்று தனித்தனியாய்க்கேட்கமாட்டார்.  ‘கண்ணனைப்பார்த்தாயா? என்று சேர்த்துத்தான்கேட்பார்! அப்படி தனித்தனியாய்க்கேட்டால், ‘பார்த்தாயா? என்பதை சிறப்பித்துக்கேட்டதாய்ப்பொருள். அதாவது அவன் பார்த்திருக்கமாட்டானென்றெண்ணி, அவ்வாறு சிறப்பித்துக்கேட்பதாகும். ‘கண்ணனை பார்த்தாயா! என வியப்பாய்க்கேட்பதுமுண்டு.

‘அங்கே கந்தனைப்பார்த்தாய், கடம்பனைப்பார்த்தாயென்பதெல்லாமிருக்கட்டும், கண்ணனைப்பார்த்தாயா?

இதில் ‘கண்ணனைப்பார்த்தாயா? என்பது ‘கண்ணனை என்பதை சிறப்பித்துச்சொல்வதைப்பாருங்கள். இதுபோலவே, கண்ணனை தேடிப்போகும்போதும், ‘கண்ணனைப்பார்த்தாயா? எனக்கேட்டதும்.

இரண்டுபொருட்களிருக்கும்போது புணர்த்திச்சொல்வது:

நீ கந்தனைப்பார்த்தாயா, கண்ணனைப்பார்த்தாயா?

இதில் ஒவ்வொன்றும் நிலைமொழியை சிறப்பித்துச்சொன்னதாகிறது. இதை இவ்வாறு சேர்த்துச்சொல்லாமல், நீ கந்தனை பார்த்தாயா, கண்ணனை பார்த்தாயா?என பிரித்துச்சொல்வது பொருந்தாதென்பதை சொல்லத்தேவையில்லை.

‘நீ கண்ணனைப்பார்த்தாயா, அல்லது அவன் உன்னைப்பார்த்தானா?

இதிலும் நிலைமொழிகள் சிறப்பித்துச்சொல்லப்படுவதைப்பாருங்கள்.

‘நீ கண்ணனை பார்த்தாயா, இல்லை, பார்க்காமலேவந்துவிட்டாயா?

இதில் வருமொழியானதுசிறப்புறுவதைப்பாருங்கள்! இங்கே ‘கண்ணனைப்பார்த்தாயா? என புணர்த்திச்சொல்வது பொருந்துமாவென்பதை எண்ணிப்பாருங்கள்.

ஆகவே, வேற்றுமைப்புணர்ச்சியைப்பொருத்தவரை புணர்த்துவதென்றால் அது நிலைமொழியைச்சிறப்பிப்பதென்பதும், புணர்த்தாமல் பிரித்துச்சொல்வதென்றால் அது வருமொழியைச்சிறப்பிப்பதென்பதும் நாம் அறிந்துகொள்ளத்தக்கது.

இரண்டாம்வேற்றுமையைப்பொருத்தவரை வல்லினவருமொழியானால் அனைத்திடங்களிலும் இன்று புணர்த்திவிடுகிறோம். ஆதலால், என்னபொருளில் அது புணராமல்வருமென்பதையே நாம் அறிந்துகொள்ளவேண்டியதாயிருக்கிறது.

இரண்டாம்வேற்றுமையின்முன்வரும் எதிர்மறைவினைமுற்றுகள் அதன் பெயருடன் இன்னொருபெயரை சொல்லாமற்சொன்னதாக ஒரு பொருளை வெளிப்படுத்துவதாயிருக்கும்.

‘நான் அவனை கூப்பிடவில்லை என்பது ஒருவனை கூப்பிடவில்லையென்பதைமட்டுஞ்சொன்னது.

‘நான் அவனைக்கூப்பிடவில்லை என்பதோ, ஒருவனை கூப்பிடவில்லையென்பதைமட்டுஞ்சொல்லாமல், வேறொருவனை கூப்பிட்டதையும் சொல்லாமற்சொன்னது. அதாவது, ‘நான் அவனைக்கூப்பிடவில்லை, அவனது அண்ணனைத்தான்கூப்பிட்டேன் என்பது முழுமையானபொருளைக்கொடுக்கும்.

ஆனால், ‘நான் அவனைக்கூப்பிடவில்லை என்றுமட்டுஞ்சொன்னால், அதை கேட்பவர், ‘அவனைக்கூப்பிடவில்லையென்றால் வேறு யாரைக்கூப்பிட்டாய்? எனக்கேட்பார். அன்றோ?

இதைப்பாருங்கள்:

‘நான் பணத்தை திருடவில்லை!

என்பது திருடவில்லையென்பதைச்சொன்னது. இதை கேட்பவர், ‘திருடவில்லையென்றால், யாரைக்கேட்டு அந்த பணத்தை எடுத்தாய்? என்றுகேட்கலாம்.

ஆனால், ‘நான் பணத்தைத்திருடவில்லை!எனச்சொன்னால், ‘பணத்தைத்திருடவில்லையானால் வேறெதைத்திருடினாய்? எனக்கேட்பார். அன்றோ?

ஆகவே, எதிர்மறைவினைமுற்றுவருமிடங்களில் வருமொழிமுதலானது வல்லினமென்பதற்காக புனர்த்திவிடுவது சொல்லவரும் பொருளை மாற்றிவிடுமென்பது அறிந்துகொள்ளத்தக்கது.

பொன்னியின்செல்வனில் வந்தியத்தேவன்சொல்வதாக,

‘நான் ஆதித்தகரிகாலனைக் கொல்லவில்லை

என்றுவரும். இதில் வலிமிகுந்ததால், ‘நான் ஆதித்தகரிகாலனைக்கொல்லவில்லை என்றாகும். இப்போது என்னாயிற்றென்றால், வந்தியத்தேவன் ஆதித்தகரிகாலனைக்கொல்லவில்லையென்றும், அவன் கொன்றது வேறுயாரையோவென்றுமாகிறது! இதன்படி, அவன் யாரோவொருவரை கொன்றானென்றாகிவிடுவதைப்பாருங்கள்!

வல்லினமல்லாதமுதன்மொழிகள்:

வல்லினமல்லாத பிறமுதன்மொழிகளும் இதுவரை நாம் பார்த்துவந்ததுபோல் பொருளுக்கேற்பவேபுணரும். இக்காலத்தில் வல்லினமல்லாதவை புணர்த்தப்படுவதில்லையென்பது நாம் அறிந்ததே. புணர்த்திச்சொல்லவேண்டியவிடங்களில் புணர்த்தாமற்சொல்வதால் பொருளில் மாறுபாடுண்டாகுமென்பதை சொல்லத்தேவையில்லை.

‘இங்கே நாயைவைத்திருக்கலாம், பூனையைவைத்திருக்கலாம் புறாவைக்கூடவைத்திருக்கலாம்; ஆனால் மாட்டைவைத்திருக்கமுடியாது!

இதில் புணர்த்திச்சொல்லப்பட்டவிடங்களில் பிரித்துச்சொன்னால் பொருள் பொருந்தாதென்பதை இதிற்பாருங்கள்:

‘இங்கே நாயை வைத்திருக்கலாம், பூனையை வைத்திருக்கலாம்; ஆனால் மாட்டை வைத்திருக்கமுடியாது!

இது சொல்லும் பொருளை சரியாய்ச்சொன்னதாயிருக்கிறதாபாருங்கள்!

ஆனால், இதைப்பாருங்கள்:

‘இங்கே நாயை வைத்திருக்கலாம், ஆனால் வெளியேவிடக்கூடாது! வீட்டுக்குள்ளேதான்வைத்திருக்கவேண்டும்!

இதில் பிரித்துச்சொன்னது சரியானபொருளைத்தருவதையும் இதையே சேர்த்துச்சொல்லியிருந்தால் பொருளுக்கு பொருந்தாமற்போய்விடுமென்பதையும் எண்ணிப்பாருங்கள்.

எனவே, வல்லினவருமொழியானாலும் பிறமுதன்மொழியானாலும் புணர்ச்சியென்பது பொருளைப்பொருத்ததாகவேயிருக்குமென்பது அறிந்துகொள்ளத்தக்கதாயிருக்கிறதன்றோ?

பெயர்வந்தால் புணர்ச்சி வராது:

‘பணத்தை பெட்டியில் எண்ணிவை. ‘கண்ணை தண்ணீரில் கழுவு‘காலை தரையில் ஊன்றிவை, வழுக்கிவிடப்போகிறது!

இவற்றில் புணர்ச்சி வராதென்பதை எண்ணிப்பாருங்கள். ‘பணத்தைப்பெட்டியில் ‘கண்ணைத்தண்ணீரில் ‘காலைத்தரையில் என்பவை பொருளற்றவையன்றோ?

‘காலை பனித்துளி நனைத்தது என்பதும் ‘காலைப்பனித்துளி நனைத்தது என்பதும் ஒரேபொருளைத்தருவனவல்லவென்பதை எண்ணிப்பாருங்கள். புணராதவிடத்தில் ‘காலை என்பது இரண்டாம்வேற்றுமையேற்ற ‘கால் என்னும்பெயராயிருப்பதையும், அதுவே புணர்ந்திருக்கும்போது, பொழுதைக்குறிக்கின்ற ‘காலை என்னும் வேறுபெயராயாகிவிடுவதையும்பாருங்கள்.

எனவே, இரண்டாம்வேற்றுமையின்முன் பெயர் புணராதென்பது அறியத்தக்கதாயிருக்கிறதன்றோ?

இதுவரை நாம் கண்டுவந்தபடி இரண்டாம்வேற்றுமைப்புணர்ச்சியை இடமும் பொருளுமறிந்து அதற்கேற்பவேசெய்யவேண்டுமென்பதை அறிந்து அனைவரும் சரியாயெழுதினால் தமிழ் எத்துணைச்சிறப்பாயிருக்கும்! இதை இனி நாம் எண்ணிப்பார்த்து புணர்ச்சியை சரியாய்ச்செய்வோமாக!

அடுத்ததில் மூன்றாம்வேற்றுமைப்புணர்ச்சியைப்பார்ப்போம்.

Oru Arizonan

unread,
Jan 15, 2015, 4:35:42 PM1/15/15
to mintamil
சிறந்த பனி.  தொடர்ந்து எழுதுங்கள், ஐயா!

Oru Arizonan

unread,
Jan 15, 2015, 4:36:30 PM1/15/15
to mintamil
எழுத்துப்பிழை. " சிறந்த பணி" என்றிருக்கவேண்டும். 

சி. ஜெயபாரதன்

unread,
Jan 15, 2015, 5:41:24 PM1/15/15
to mintamil, vallamai, tamilmantram
​சிலர் தெரிந்தோ, தெரியாமலோ இப்பிழையை எழுதி வருகிறார்.  நான் பலமுறைச் சொல்ல நினைத்து இப்படி ஓர்​ வாய்ப்புக்குப் பொறுதிருந்தேன்.

அதாவது சொற்களிலோ, சொல் தொடரிலோ இரு வல்லின ஒற்றுகள் சேர்ந்து வரா.

புணர்ச்சிப் பிழைகள்  - சரியானவை

பாற்க்கடல்.  -->   பாற்கடல்

விற்ப்பனை  -->  விற்பனை

சொற்த்திறம்  ---->  சொற்திறம் --->  சொற்றிறம்

ஆட்க் கொல்லி  -->  ஆட்கொல்லி

காதற்ச் சிறப்பு  --->  காதற் சிறப்பு

மக்கட்ப் பேறு   ---->  மக்கட் பேறு

வினைத் திட்ப்பம்  ---->  வினைத் திட்பம்

மணற்க்கேணி  --->  மணற்கேணி

சொற்ப்படி செய்  --->  சொற்படி செய்

செயற்க்கரிய   --->  செயற்கரிய

பொற்க்குடம்  -->  பொற்குடம்

++++++++++++++

சி.  ஜெயபாரதன்

dr.ponmudi

unread,
Jan 15, 2015, 8:15:13 PM1/15/15
to mint...@googlegroups.com
நன்றியையா!

அன்புடன் பொன்முடி
...

Seshadri Sridharan

unread,
Jan 15, 2015, 9:38:12 PM1/15/15
to mintamil
2015-01-16 3:05 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
சிறந்த பனி.  தொடர்ந்து எழுதுங்கள், ஐயா!

 பனி சிறந்தால் உடல் வெட வெடுக்கும், விரல் நடுங்கும், எழுதமுடியாது.

கைத்தொழுவான் 

சி. ஜெயபாரதன்

unread,
Jan 15, 2015, 10:57:44 PM1/15/15
to mintamil, vallamai, tamilmantram
பொறு
​த்​
திருந்தேன்.

2015-01-15 17:40 GMT-05:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
​சிலர் தெரிந்தோ, தெரியாமலோ இப்பிழையை எழுதி வருகிறார்.  நான் பலமுறைச் சொல்ல நினைத்து இப்படி ஓர்​ வாய்ப்புக்குப்
பொறு
​த்​
திருந்தேன்.

அதாவது சொற்களிலோ, சொல் தொடரிலோ இரு வல்லின ஒற்றுகள் சேர்ந்து வரா.

புணர்ச்சிப் பிழைகள்  - சரியானவை

பாற்க்கடல்.  -->   பாற்கடல்

விற்ப்பனை  -->  விற்பனை

சொற்த்திறம்  ---->  சொற்திறம் --->  சொற்றிறம்

ஆட்க் கொல்லி  -->  ஆட்கொல்லி

காதற்ச் சிறப்பு  --->  காதற் சிறப்பு

மக்கட்ப் பேறு   ---->  மக்கட் பேறு

வினைத் திட்ப்பம்  ---->  வினைத் திட்பம்

மணற்க்கேணி  --->  மணற்கேணி

சொற்ப்படி செய்  --->  சொற்படி செய்

செயற்க்கரிய   --->  செயற்கரிய

பொற்க்குடம்  -->  பொற்குடம்

​   கற்க்கண்டு --> கற்கண்டு​
 
N. Ganesan

unread,
Jan 15, 2015, 11:18:18 PM1/15/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
On Thursday, January 15, 2015 at 2:41:21 PM UTC-8, ஜெயபாரதன் wrote:
​சிலர் தெரிந்தோ, தெரியாமலோ இப்பிழையை எழுதி வருகிறார்.  நான் பலமுறைச் சொல்ல நினைத்து இப்படி ஓர்​ வாய்ப்புக்குப் பொறுத்திருந்தேன்.

அதாவது சொற்களிலோ, சொல் தொடரிலோ இரு வல்லின ஒற்றுகள் சேர்ந்து வரா.

சில முறை சுட்டிக்காட்டியுள்ளேன் ஐயா.

முன்பு 2010-ல் தினமணியில் நல்ல கட்டுரை வந்தது:

மொழிப் பயிற்சி - 67:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!
பயிற்ச்சியா? பயிற்சியா?

குழந்தைப் பேறு என்பதில் மகனோ, மகளோ பிறக்கக்கூடும். இவ்விரண்டிலும் "மக"தான் உள்ளது; "மகவு" இல்லை. ஆதலின் மகப்பேறு என்று குறிப்பதில் தவறில்லை. மகன், மகள் என்னும் சொற்கள், தொல்காப்பியம், சங்கநூல்கள் எனப் பண்டுதொட்டு இருப்பனவேயாம். மக்கள் என்னும் சொல்லும் "மக" அடிப்படையில் உருவானதாக இருக்கக்கூடும்.

"கள்" விகுதி பயன்பாட்டில் மிகுதியாக இல்லாத காலத்திலேயே மக்கள் எனும் சொல் உண்டு. "உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே" (தொல்), "மக்கள், தேவர், நரகர் உயர்திணை" என்று நன்னூல் பிற்காலத்தில் நவின்றது.

"என்மகன் யாண்டுளன் ஆயினும் அறியேன்" புறநானூறு, பாரிமகளிர் (மகள் + இர்) இர் பலர்பால் விகுதி - மகள் - மகளிர் சங்கச் சொல்லே.

மகம் + நாளில் = மகநாளில் இதிலுள்ள மகம் என்பது வேறு. இது மக மீனைக் குறிக்கும் (மக நட்சத்திரம்) 

மகவு - மக என்பது வேறு. மகவுப்பேறு என்பதனினும் மகப்பேறு எனச்சொல்லுதல் எளிது. அதனால் மகப்பேறு நிலைபெற்றுவிட்டது.

வல்லொற்றின் பின் மெய்யெழுத்து வராது. இதுபற்றித் தொடக்கப்பள்ளியிலேயே ஆசிரியர் சொல்லித் தந்திருப்பார். வல்லினப்புள்ளி எழுத்துக்கள் (எ-டு:- ட்,ற்) பின்னே மற்றொரு ஒற்று வராது எனக்கூறி கற்க்கண்டு என எழுதக்கூடாது. கற்கண்டு என்று எழுதுக எனச்சொல்லியிருப்பார்.

ஆயினும் இன்னும் பலர் "பயிற்ச்சி" என்று எழுதுகிறார்கள். "ற்" ஓசையே அழுத்தமாக இருப்பதால் "ச்" அழுத்தம் தனியே வேண்டாம் என்றே இலக்கண நூலார் "ற்" றோடு "ச்" சேராது என்றனர். சொல்லாக உச்சரிக்கும்போது அந்த "ச்" ஒலி இருக்கிறது என்பதை உணர்க. அதனால்தாம் சிலர் தம்மையறியாமலேயே "பயிற்ச்சி" என்று எழுதிவிடுகிறார்கள்.

"பற்ப்பசை" என்பதும் அத்தகைய ஒரு சொல். பற்பசை என்றே எழுத வேண்டும். இவ்வாறே உட்கார் என்பதை "உட்க்கார்" என்றெழுதுவதும் பிழை. இனி நீங்கள் எழுதும்போது கவனமாக உட்காருங்கள், பற்பசை கொடுங்கள், கற்கண்டு எடுத்துக்கொள்ளுங்கள், நாளும் பயிற்சி செய்யுங்கள் என்று தவறின்றி எழுதுவீர்களாக.

வல்லொற்று இரட்டித்தல் உண்டு; இது வேறு. எந்த வல்லொற்று வந்ததோ அதே எழுத்து - இன்னொரு சொல்லோடு சேர்கிறபோது இரட்டித்தல் அது. (எ-டு) காட்டரண் (காடு + அரண்) "ட்" இரட்டித்தது, சோற்றுப்பானை (சோறு + பானை) "ற்" இரட்டித்தது.

இலக்கணம் எதற்கு? பேசுவதற்கும் எழுதுவதற்கும் எதற்கு இலக்கணம்? 

நாமறிந்தபடி பேசுவதில் என்ன தவறு என்று சிலர் கருதக்கூடும். இலக்கணம் என்பது புதிதாகத் திணிக்கப்படும் ஒரு கருத்தன்று. காலம் காலமாக நம் பேச்சில், எழுத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நெறியே இலக்கணம். முன்னரே எழுதப்பட்ட இலக்கியங்களின்றே இலக்கண விதிகள் எடுக்கப்பட்டன.

இதனை "எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பதுபோல் இலக்கியத்திலிருந்து இலக்கணம் எடுக்கப்பட்டது", என அறிஞர் உரைப்பர். எடுத்துக்காட்டாக ஒரு செய்தியைக் காண்போமே.

"நடைபெற்ற தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்", என்று சொல்லுகிறோம். இதில் வாக்களித்தனர் என்பதைப் பிரித்தால் வாக்கு + அளித்தனர் என்றாகும். இப்படிச் சேர்ந்தபோது ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அது என்ன? 

வாக்கு என்ற சொல்லில் (க் + உ= கு) இறுதியில் நின்ற "உ" எனும் ஓசை நீங்கிவிட்டது. "கு"வில் "உ" நீங்கினால் "க்" இருக்கும். இதனோடு வருமொழி முதலில் உள்ள "அ" சேர்ந்து க் + அ = க வாக்களித்தனர் என்றாகிறது.

"உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்" என்பது விதி. இந்த விதியைப் பார்த்தா நாம் பேசுகிறோம்? இயல்பாக நாம் பேசும்போது இவ்விதி அதனுள் அடங்கியிருக்கிறது. இன்னும்சில காட்டுகளைப் பார்ப்போமா?

நேற்று + இரவு = நேற்றிரவு
நண்டு + ஓடி = நண்டோடி

சரி, மேற்சொன்ன நூற்பாவின் (சூத்திரம்) விளக்கம் சொல்லவில்லையே. வருமொழி முதலில் உயிர் எழுத்து வருமானால், நிலைமொழி இறுதியில் உள்ள குற்றியலுகரம் தான் ஏறியிருந்த மெய்யெழுத்தை விட்டு நீங்கிவிடும்.

முதலில் இருக்கும் சொல் நிலைமொழி; அதனுடன் சேரும் சொல் வருமொழி.

வாக்கு - நிலைமொழி; அளித்தனர் - வருமொழி. வாக்குவில் உள்ள இறுதி "உ" குறுகிய ஓசைகொண்ட உகரம் ஆகும் (குற்றியலுகரம்). "உ" என்னும் எழுத்துக்கு ஒரு மாத்திரை ஒலியளவு. (கை நொடிப்பொழுது ஒரு மாத்திரை)

வாக்கு என உச்சரிக்கும்போது "கு"வில் உள்ள "உ" முழுமையாக ஒலிக்கிறதா? இல்லை. 

நடு, நாடு - இரண்டையும் உச்சரித்துப் பாருங்கள் "நடு"வில் உள்ள "உ" முழுமையாக ஒலிக்கும்; நடுவில் உள்ள "உ" அரையளவு ஒலிக்கும். இதற்கு அரை மாத்திரை மட்டுமே.

தமிழ் வளரும்
.......

கவிக்கோ.ஞானச்செல்வன்  ( www.dinamani.com/Images/article/2010/8/8/8kdr10.jpg )

நன்றி:- தினமணி கதிர்

...

dr.ponmudi

unread,
Jan 16, 2015, 12:13:57 AM1/16/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
//மொழிப் பயிற்சி - 67:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!//

'இன்றி' என்பது வினையெச்சப்பொருளைத்தருவதாதலால் அதனோடு 'தமிழ்' என்னும் பெயர்ச்சொல் புணர்ந்துவருவதில்லை. வினையெச்சமும் பெயரும் புணரா. எனவே இவற்றை புணர்த்திச்சொல்வது குற்றமாகும்.

'தமிழ் பேசுவோம்' என்பது பொருளற்றதாகும். 'தமிழ் பேசும்'  என்பதே பொருளுடையது. 'தமிழை பேசுவோம்' என்பது சரியானபொருளைத்தரும். இது ஓர் எழுவாயையும் ஒரு பயனிலையையுங்கொண்ட ஒரு வாக்கியம். இதை தொடர்மொழியாக்கினால், 'தமிழைப்பேசுவோம்' என்றாகும். இப்போதும் இது ஒரு வாக்கியமே. 

இந்த தொடர்மொழியை தொகைநிலைப்படுத்தினால், (விரிநிலைத்தொடர்களைமட்டுமே தொகைநிலைப்படுத்தமுடியும். தொடராகாத தனிமொழிகள் தொகைநிலைபெறா) 'தமிழ்பேசுவோம்' எனவரும். (இரண்டாம்வேற்றுமையின் விரிநிலையில் வலி மிகும்; தொகைநிலையில் மிகாது)

எனவே, 'பிழையின்றித் தமிழ் பேசுவோம்'  என்றிருப்பது பிழை. 'பிழையின்றி தமிழ்பேசுவோம்' என்றெழுதுவது சரி.

எனினும், இங்கே சொல்லவரும் பொருளுக்கு, இவ்வாறு 'பிழையின்றி தமிழ்பேசுவோம்' எனச்சொல்வது பொருந்தாது. ஏனெனில், 'பிழையின்றி தமிழ்பேசுவோம்' என்பதில் 'தமிழ்பேசுவோம்' என்னும் இந்த தொடர்மொழியின் முதற்சொல்லான 'தமிழ்' என்பது சிறப்பித்துச்சொல்லப்படுவதாயிற்று. (தொடர்மொழிகளைப்பொருத்தவரை, அவற்றின் முதற்சொல்லானது சிறப்பித்துச்சொல்லப்படுவதென்பது நாம் அறிந்ததே.)

இங்கே நாம் சொல்லவேண்டியது, பிழையின்றி எதைப்பேசவேண்டுமென்பதைப்பற்றியதன்று. மாறாக, தமிழை பிழையின்றிப்பேசவேண்டுமென்பதைப்பற்றியது.

ஆகவே, 'தமிழை பிழையின்றிப்பேசுவோம்; எழுதுவோம்' என்பதே நாம் சொல்லவரும் பொருளை சரியாய்ச்சொன்னதாயிருக்கும்.

அன்புடன் பொன்முடி
...

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 17, 2015, 1:34:42 AM1/17/15
to mintamil, vallamai
நன்றி. எடுத்துக்காட்டுகளோடு தாங்கள் எழுதியுள்ள கீழே கொடுத்துள்ள பதிவுகள் போல தொடர்ந்து பதிவிடவேண்டுகிறேன் திரு பொன்முடி. வேறு இழைக்களுக்கான என்னுடைய பின்னூட்டங்களில் பிழை கண்டாலும் இங்கு எடுத்தெழுதி விலக்கமளிக்கவும் வேண்டுகிறேன். வாழ்த்துகள். 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

dr.ponmudi

unread,
Jan 17, 2015, 2:44:32 AM1/17/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
ஐயா, நன்றி!

இனி தாங்கள் எழுத்தில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய்தாக ஏதேனும் இருப்பின் குறிப்பிடுகிறேன்.

அன்புடன் பொன்முடி

வேந்தன் அரசு

unread,
Jan 17, 2015, 9:03:16 AM1/17/15
to vallamai, mintamil, tamilmantram

15 ஜனவரி, 2015 ’அன்று’ 5:40 பிற்பகல் அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

​சிலர் தெரிந்தோ, தெரியாமலோ இப்பிழையை எழுதி வருகிறார்.  நான் பலமுறைச் சொல்ல நினைத்து இப்படி ஓர்​ வாய்ப்புக்குப் பொறுதிருந்தேன்.

அதாவது சொற்களிலோ, சொல் தொடரிலோ இரு வல்லின ஒற்றுகள் சேர்ந்து வரா.

புணர்ச்சிப் பிழைகள்  - சரியானவை

பாற்க்கடல்.  -->   பாற்கடல்

ஆர்க்காடு என்பது போல் பால்க்கடல் என எழுதலாமா? 

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

சி. ஜெயபாரதன்

unread,
Jan 17, 2015, 9:24:38 AM1/17/15
to tamilmantram, mintamil, vallamai
​வேந்தரே,

பாற்கடல் என்றுதான் இலக்கணப்படி எழுத வேண்டும்.  பால்க்கடல் என்பது பிழையே.​

சி. ஜெயபாரதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

dr.ponmudi

unread,
Jan 19, 2015, 7:56:04 PM1/19/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com
மூன்றாம்வேற்றுமைக்கான உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகியவை. இவற்றுடன் ‘உடன்’ ‘கொண்டு’ என்பவையுமுண்டு. இவை சொல்லுருபுகளெனப்படுகின்றன. 

‘ஆன்’ என்பதும் ‘ஒடு’ என்பதும் இலக்கியத்திலேமட்டும்வருவன.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழு மில

என்னும் குறளில், ‘அறத்தான்வருவதே’ என்பது ‘அறத்தினால்வருவதே’ என்னும்பொருளைக்கொண்டது.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்

என்னும் இந்தக்குறளில், ‘விலங்கொடு’ என்பது ‘விலங்கோடு’ என்னும்பொருளையுடையது.

இனி, ஆல், ஓடு, உடன், கொண்டு ஆகியவற்றைக்கொண்டு சில வாக்கியங்களை பார்ப்போம்.

எல்லை இன்னும் அதுவும் பெயர்கொளும்
ஏனை வினைகொளும் நாலேழ் இருமையும்
புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர்

என்னும் நன்னூலின் (319) விதிப்படி, இரண்டாம்வேற்றுமையும் மூன்றாம்வேற்றுமையும் வினையைமட்டுமேயேற்குமென்பதை அறிந்துகொள்ளலாம்.

‘கையாலிழுத்தான்’ ‘காலாலுதைத்தான்’
‘கையோடுவந்தது’ ‘பையோடுபோனது’
‘மனைவியுடன்வந்தான்’ ‘தங்கையுடன்சென்றான்’
‘ஊசிகொண்டுதைத்தான்’ ‘கத்திகொண்டுவெட்டினான்’

இவற்றுள் மூன்றாம்வேற்றுமையுருபுகளின்முன் வினைச்சொற்கள்வந்து அவற்றோடு புணர்ந்துநின்றமைகாண்க.

இனி, சொல்லவரும் பொருளுக்கேற்றவாறு மூன்றாம்வேற்றுமைவருமிடங்களில் அது வருமொழியோடு புணர்ந்தும் புணராமலும் வெவ்வேறானபொருள்களை தந்துநிற்பதை பார்ப்போம்.

‘ஆல்’ என்னும் இந்த உருபின் ஈற்றெழுத்தானது லகரவொற்றாயிருப்பதால், இதன்முன் வல்லினம்வரும்போது இது திரிந்தேபுணரும்.

துணியை கையாற்கிழித்தான் (கையால் + கிழித்தான்)
மண்ணை கையாற்சரித்தான் (கையால் + சரித்தான்)
கயிற்றை கையாற்றிரித்தான் (கையால் + திரித்தான்) 
குழியை கையாற்பறித்தான் (கையால் + பறித்தான்)

லளவேற் றுமையிற் றடவும் அல்வழி
அவற்றோ டுறழ்வும் வலிவரி னாமெலி
மேவி னணவும் இடைவரி னியல்பும்
ஆகும் இருவழி யானு மென்ப

என்பது நன்னூல் (227). இதில் வேற்றுமைப்புணர்ச்சியில் லகரம் றகரமாய்த்திரியுமென்பது சொல்லப்பட்டுள்ளதைப்பாருங்கள்.

‘கையாற்கிழித்தான்’ என்பதை பேச்சுவழக்கிற்சொல்லப்போனால், ‘கையாக்கிழித்தான்’ என்றாகிவிடும்! (தையற்கடை – தையக்கடை) ‘கையாற்சரித்தான்’ என்பது ‘கையாச்சரித்தான்’ (காற்சட்டை – காச்சட்டை) என்றும், ‘கையாற்றிரித்தான்’ என்பது ‘கையாத்திரித்தான்’ (மேற்றிசை – மேத்திசை) என்றும் இவ்வாறாக மாறிவிடுவதால், பேச்சில் லகரவொற்றோடு ஒரு ஏகாரத்தை சேர்த்துப்பேசுவது வழக்கம்.

‘கையாலேகிழித்தான்’ ‘கையாலேசரித்தான்’ என்றெல்லாம்வரும். இன்னும், இந்த ஏகாரங்கூட, அகரமாய்த்திரிந்து இன்று, ‘கைய்யாலகிழித்தான்’ ‘கையாலசரித்தான்’ என்றுதான்பேசப்படுகிறதென்பது எண்ணிக்கொள்ளத்தக்கது.

சரி. இனி தொடர்மொழிகளாயும் தனிமொழிகளாயும்வருமிடங்களைப்பார்ப்போம்.

கருவிப்பொருள்:

(ஒரு பெயரை கருவியாக்கும்பொருளிற்கொள்வது)

வேற்றுமையைப்பொருத்தவரை இரண்டுபெயர்களிருந்தாலன்றி புணர்த்திச்சொல்வது பொருந்தாதென்பதை பார்த்திருக்கிறோம்.

‘நாய் தண்ணீரை நாக்காலே நக்கிக்குடிக்கும்’

இது நக்கிக்குடிக்குமென்பதைச்சிறப்பித்தது. இதை புணர்த்திச்சொன்னால், 

‘நாய் தண்ணீரை நாக்காலேநக்கிக்குடிக்கும்’ என்றாகும். இது ‘நாக்காலே’ என்பதை சிறப்பித்துச்சொன்னது. நக்குவதென்பதை நாக்காமல்மட்டுந்தான்செய்யமுடியுமாதலால், ‘நாக்காலேநக்கி’ எனச்சொல்வது தேவையற்றதாகிவிடுவதைப்பாருங்கள்.

‘முள்ளை முள்ளாலெடுக்கவேண்டும், வஞ்சத்தை வஞ்சத்தால்வெல்லவேண்டும்’

இதில் முள்ளும் வஞ்சமுமென இருவேறுபொருள்களைப்பற்றிப்பேசுவதால் புணர்த்திச்சொன்னது முள்ளையென்பதையும் வஞ்சத்தையென்பதையும் சிறப்பித்துச்சொல்வதால் இங்கே சொல்லவரும் பொருளுக்கு அது பொருந்துவதாயிருப்பதைப்பாருங்கள். இதை பிரித்துச்சொன்னால்,

‘முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும், வஞ்சத்தை வஞ்சத்தால் வெல்லவேண்டும்’

எனவரும். இது, ‘எடுக்கவேண்டும்’ ‘வெல்லவேண்டும்’ என்பவற்றைச்சிறப்பித்துச்சொல்வது. முன்பு சேர்த்துச்சொன்னபோதிருந்த அந்தப்பொருள் இதில் இல்லையென்பதும் இது எதற்கும் பொருந்துமாறானபொருளை தரவில்லையென்பதையும் எண்ணிப்பாருங்கள்.

உடனிகழ்ச்சிப்பொருள்:

(ஒரு பெயர் இன்னொருபெயரோடு சேர்ந்துநடக்கும்போதுகொள்வது)

‘பூவோடுசேர்ந்த நாறுமணம்பெறும்’

இதில் ‘பூவோடுசேர்ந்த’ என்பது தொடர்மொழியாயிருப்பதால், ‘பூவோடு’ என்பது சிறப்பித்துச்சொன்னதாகிறது. இதை இவ்வாறுசொல்லாமல், ‘பூவோடு சேர்ந்த நாறுமணம்பெறும்’ என்றுசொன்னால், ‘பூவோடு’ என்பது தனித்துச்சொல்லப்பட்டதால், ‘பூவோடுசேர்ந்த’ என்னும்போதிருக்கும் சிறப்பானது இப்போது அதற்கு இல்லாமற்போய்விடுவதைப்பாருங்கள்.

(ஒரு தனிச்சொல்லானது தனிச்சொல்லாயிருக்கும்போது தனக்குரிய சிறப்பை பெற்றேயிருக்குமென்றாலும், அதைக்காட்டிலும் அது ஒரு தொடர்மொழிக்கு முதற்சொல்லாயிருக்கும்போது மிகுதியானசிறப்பைப்பெற்றதாயிருக்குமென்பது அறிந்துகொள்ளவேண்டியவொன்றாகும்.)

‘கணவனோடு சேர்ந்திருப்பதுதான் ஒரு பெண்ணுக்கு அழகு’

இது, ‘சேர்ந்திருப்பதுதான்’ என்பதை சிறப்பித்துச்சொன்னதாகும். இதில், ‘கணவனோடு’ என்பது தனித்திருக்கிறதே, அதை ‘சேர்ந்திருப்பதுதான்’ என்பதுடன் புணர்த்திச்சொன்னால் அதற்கு பொருட்சிறப்புதந்ததாயிருக்குமென்பதற்காக புணர்த்தலாமாவென்றால், அப்படி புணர்த்தினால் பொருள் என்னாகிறதென்றுபாருங்கள்:

‘கணவனோடுசேர்ந்திருப்பதுதான் ஒரு பெண்ணுக்கு அழகு’

இதன் பொருள் என்னாயிற்றென்றால், அவள் கணவனோடுசேர்ந்திராமல் வேறொருவரோடுசேர்ந்திருப்பதாயிற்று. (பெற்றோரோடிருப்பதை சேர்ந்திருப்பதாய்ச்சொல்லமாட்டார்களன்றோ?)

கருத்தாப்பொருள்:

(ஒரு பெயர் ஒரு செயலை செய்துவிக்கும்போதுகொள்வது)

‘திருக்குறள் வள்ளுவராலெழுதப்பட்டது’

இது யாராலெழுதப்பட்டதென்பதைச்சொல்வது. இதை பிரித்தெழுதினால், ‘திருக்குறள் வள்ளுவரால் எழுதப்பட்டது’ எனவரும். இது, திருக்குறள் வள்ளுவரால் என்னசெய்யப்பட்டதென்பதைச்சொல்வது. திருக்குறள் திருவள்ளுவரால் எழுதப்பட்டதென்பதைச்சொல்வதைக்காட்டிலும் அது எழுதப்பட்டது திருவள்ளுவராலென்பதன்றோ சொல்லவேண்டிய பொருள்? எனவே, ‘திருக்குறள் வள்ளுவரால் எழுதப்பட்டது’  என்னும் இந்தப்பொருள் பொருந்தாதென்பதை சொல்லத்தேவையில்லை.

‘கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது’

இதன் பொருள் சரியாயுள்ளதாவென்பதை எண்ணிப்பாருங்கள். கரிகாலன் கல்லணையை கட்டினானா, அல்லது இடித்தானாவென்பது ஒரு வினாவாயிருக்கமுடியாது. அன்றோ? எனவே,

கல்லணை கரிகாலனாற்கட்டப்பட்டது’ என்பதுதானே சரியாயிருக்கும்?

‘ஆநிரைகள் வீர்ர்களால் கவரப்பட்டன’

இது ‘கவரப்பட்டன’ என்பதை சிறப்பித்துச்சொன்னது. இதை புணர்த்தினால், ‘ஆநிரைகள் வீர்ர்களாற்கவரப்பட்டன’ என்றாகும். இது யாவராற்கவரப்பட்டதென்பதைச்சொல்வது. வீரர்களாலன்றி வேறெவராலும் ஆநிரைகள் கவரப்படாவாகையால் இங்கே புணர்த்திச்சொல்வது பொருந்தாதென்பதை எண்ணிப்பாருங்கள்.

இதுவரை நாம் பார்த்துவந்த எடுத்துக்காட்டுகள் சொல்லும் பொருளுக்கேற்றவாறு சொற்களை மூன்றாம்வேற்றுமையில் புணர்த்திச்சொல்வதும் பிரித்துச்சொல்வதும் உண்டென்பதையும் இடத்துக்கேற்றவாறு சரியாயெழுதினால்மட்டுமே சொல்லவரும் பொருளை சரியாய்ச்சொன்னதாகுமென்பதும் அறிந்துகொள்ளத்தகதாயிருக்குமென நம்புகிறேன். 

அடுத்ததில் நான்காம்வேற்றுமையைப்பார்ப்போம்.

On Tuesday, July 8, 2014 at 1:03:26 AM UTC+5:30, Suba.T. wrote:
மிக அவசியமான ஒரு இழையாக இது இருக்கும் என்பதால் இத்தலைப்பிலேயே தொடங்கியிருக்கின்றேன். புணர்ச்சி விதிகள் தொடர்பாக ஐயம் உள்ளவர்கள் தொடர்ந்து இந்த இழையில் தங்கள் கேள்விகளையும் ஐயங்களையும் பகிர்ந்து கொள்ள டாக்டர்.பொன்முடி அவர்கள் தமது கருத்துக்களை இங்கே வழங்கினால் சிறப்பாக இந்த இழை அமையும்.

அன்புடன்
சுபா

இனியும் தாமதியாமல், தமிழ்ச் சமூகத்தில் ஒவ்வொரு துறையிலும் செயல்நெறிகள் செயல்பட துவங்கியாக வேண்டும். அந்த நோக்கில்   முதலில் பள்ளி, கல்லூரிகளில் உள்ள தமிழ்ப் பாடப் புத்தகங்களில் உள்ள இலக்கணப் பிழைகளையும், தமிழ்த் தலைவர்கள், முக்கிய பேச்சாளர்கள் ஒலிப்பதிவுகளிலும் உள்ள குறைகளையும் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து சரி செய்யும் செயல்நெறி முயற்சியாக நான் எனது நண்பர்கள் திருச்சி ('பெல்' பணி நிறைவு பணியாளர்)  சமுத்திரராசன், (லண்டன்) தொல்காப்பியன் துணையோடு 'தமிழ்க் கண்காணிப்பு மையம்' துவங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். பணி ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களை உரிய சன்மானத்துடன் பணியில் அமர்த்தி செயல்பாடுகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இது போன்ற முயற்சிகளில் உள்ளவர்களுடன், தனி மனித முக்கியத்துவம் இன்றி, கூட்டாக செயல்படவும் எண்ணியுள்ளோம்.
 
செ . அ . வீரபாண்டியன்

On Sunday, 6 July 2014 12:44 PM, Suba.T. <ksuba...@gmail.com> wrote:

வணக்கம் டாக்டர்.பொன்முடி.

இங்கு தொடர்ந்து தாங்கள் தங்களது கட்டுரைகளை இதே போல பகிர்ந்து வரலாம்.

அன்புடன்
சுபா

2014-07-06 0:57 GMT+02:00 dr.ponmudi <dr.pon...@gmail.com>:
சொற்களை சேர்த்தெழுதுவது புணர்ச்சியெனப்படும். தனிச்சொற்கள் ஒன்றுடனொன்று புணர்ந்து தொடர்மொழிகளாகின்றன. தனிச்சொற்களோடு தனிச்சொற்களைச்சேர்ப்பதுமட்டுமன்றி, ஒரு பெயர்ச்சொல்லுடன் வேற்றுமையுருபுகளைச்சேர்த்தலும் உம்மையைச்சேர்த்தலும் ஒரு வினைச்சொல்லுடன் (பகுதி) இடைநிலை, சாரியை, விகுதியாகியவற்றைச்சேர்ப்பதும் புணர்ச்சியே. தமிழில் எழுத்தென்பது பாக்களாகமட்டுமேயிருந்தகாலத்தில் புணர்ச்சியானது சரியாயிருந்திருக்கக்கூடும். ஆனால் இக்காலத்தில் உரைநடையில் அது முற்றிலும் கைவிடப்பட்டுவிட்டதென்பதே உண்மை.

வேற்றுமையுருபுகளும், உம்மையும் பகுபதவுறுப்புகளும் சேர்க்கப்பட்டேயிருப்பதால் அவை பிரிக்கப்படுவதில்லை. ஆனால் தனித்தனிச்சொற்களாலானவையான தொடர்மொழிகள் இடத்துக்கேற்றவாறு ஓரிடத்தில் சேர்ந்தும் வேறிடத்தில் பிரிந்தும்நிற்பதால் அவை இக்காலத்தில் அனைத்திடங்களிலும் பிரித்தேயெழுதப்படுகின்றன. 

புணர்ச்சியென்பது ஏதோ அடுத்தடுத்தசொற்களையெல்லாம் எந்தக்காரணமுமின்றி புணர்த்திவிடுவதன்று. எந்தவிருசொற்கள் புணர்வதானாலும் அதற்கு சரியான காரணமிருக்கவேண்டும்.

சொற்கள் காரணமில்லாமல் புணரும்போதும் காரணமிருந்தும் புணராதபோதும் சொல்லவரும் பொருளில் குற்றமுண்டாவதை தடுக்கமுடியாது. சொல்லவரும் பொருளை குற்றமின்றியும் குழப்பமின்றியும் தெளிவாக எவரும் ஒன்றேபோலறிந்துகொள்ளுமாறும் சரியாயெழுதுவதற்கு ஒரு கருவி உண்டென்றால் அது புணர்ச்சியைத்தவிர வேறொன்றுமில்லை.

வேறாய்ச்சொல்வதானால், புணர்ச்சியின் உதவியில்லாமல் சொல்லவந்த பொருளை சரியாகச்சொல்வதென்பது எவருக்கும் இயலாததாகும். இதன்படிப்பார்த்தால், இன்று காணக்கிடைக்கின்ற அனைத்துநூல்களும், அவை கதைநூல்களாகட்டும், கவிதைநூல்களாகட்டும், கட்டுரைகளாகட்டும், ஏன் பாடநூல்களும் இலக்கணநூல்களுமேயாகட்டும், இன்று பக்கத்துக்குப்பக்கம் பிழைபட்டேயுள்ளனவென்றால் அது மிகையில்லை!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages