பெரியாரின் கடவுள் பற்றிய சிந்தனைகள்- ஒரு விளக்கம்

596 views
Skip to first unread message

செல்வன்

unread,
Sep 16, 2016, 12:01:12 PM9/16/16
to mintamil
பெரியாரின் கடவுள் பற்றிய சிந்தனைகள்

பொதுவாக அதை படித்ததில் அவரது சுயசிந்தனையின் விளைவாக எழுந்த பகுத்தறிவு கருத்துக்கள் இருப்பதை கண்டு மகிழ்ச்சியுறுகிறேன். ஆனால் இதற்கான பதில்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்து சமயம் மற்று பவுத்தம், சமணம் ஆகியவற்றுகிடையே ஆழ்ந்த தத்துவவிவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டு வந்த கருத்துக்கள் மூலம் ஏற்கனவே நம் நூல்களில் உள்ளது. அதனால் மிக சுருக்கமாக அவற்றை எழுதுகிறேன்

பெரியார் கேள்வி:

தோற்றம்: கடவுளின் தோற்றத்தைப் பற்றி தந்தை பெரியாரின் சிந்தனைகள் இவ்வாறு செல்கின்றன.

(1) சோம்பேறிகள், வஞ்சகர்கள் ஆகியோர் மக்களை ஏமாற்றுவதற்காகவே மனிதர்களுடைய பொதுக்குறைகளுக்குத் தெய்வத்தைக் கற்பித்துக் காரணம் காட்டி வருகின்றனர். தெய்வம் என்கின்ற கற்பனை மக்களின் மூடத்தனத்தினால் ஏற்பட்டது என்பது ஒருசாராரின் முடிவு. ஆனால் சிறிதளவுக்கு அப்படி ஒருகால் இருக்கலாம். பெரும்பாலும் தெய்வக் கற்பனைக்கு ஏமாற்றும் தன்மையே காரணமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது கருத்து என்பது தெளிவாகத் தெரிகின்றது. 

பதில்: சிலரை பலநாள் எமாற்றலாம், பலரை சிலநாள் ஏமாற்றலாம். ஆனால் எல்லாரையும் 10,000 ஆண்டுகாலமாக ஏமாற்றுவது என்பது சாத்தியமா?

உலகில் எங்கோ அமேசான் காட்டு மூலையில் உள்ள ஆதிவாசி குடி முதல் சென்னைபெருநகர் வரை நீக்கமற கடவுள் நம்பிக்கை நிறைந்திருக்க காண்கிறோம்...கடவுள்நம்பிக்கை இல்லாத தொல்குடி எதுவுமில்லை. சுமேரியர்கள், அசிரியர்கள் என வரலாற்றின் எக்காலகட்டத்துக்கு போனாலும் சமூகத்தில் கடவுள் நம்பிக்கை இருந்திருக்கவெ செய்கிறது....கொபிலிக்கி டெப்பி எனும் உலகின் முதல் கோயில் கற்காலத்தில் சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்பு துருக்கியில் கட்டபட்டதாக வரலாறு கூறுகிறது..அன்றைய காலகட்டத்தில் மனிதன் சக்கரத்தை கூட கண்டுபிடித்திருக்கவில்லை.

அதனால் இதை "பிராடு, ஏமாற்றுவேலை" என மட்டுமே கூறுவது மிக எளிமைப்படுத்தபட்ட புரிதல் என கருதுகிறேன்.

கேள்வி: இன்று நடைமுறையில் இருக்கும் கடவுளர்களின் 100க்கு 98 விழுக்காடு ஆரியர்களால் இறக்குமதி செய்யப்பெற்றவர்கள் என்பது ஒருதலை.


பதில்: சிந்துசமவெளி தெய்வம் சிவன்,கொற்ரவை. தமிழ் மண்ணின் தெய்வங்கள் மாயோனும், சேயோனும்...ஆக முக்கிய தெய்வங்கள் நம்முடையவை. சமஸ்கிருத வழிபாட்டு முரை ஆரியருடையவை. மற்றபடி ஆரியர், திராவிடர் எல்லாரையும் படைத்தவர் ஒரே கடவுள் என்பதால் யார் தெய்வத்தை நாம் வணங்குகிறோம் என்பது ஆன்மிகரீதியில் பொருளற்ற கேள்வி ஆகிறது. சமூகரீதியில் பார்த்தாலும் மேலைநாடுகளின் மாக்ர்சிக்சம், சோஷலிசம், கேபிடலிசம் ஆகிய கருத்துக்களை ஏற்பதில் நாம் தயக்கம் காட்டவில்லை. இஸ்லாம், கிறிஸ்துவம், சமணம் என வடக்கிருந்தும் மற்ற நாடுகளில் இருந்து வந்த மதங்கள்/கொள்கைகள் எனவும் பெரியாரோ,நாமோ தயக்கம் காட்டி அதை ஏற்காமல் இருக்கவில்லை...அதனால் எங்கிருந்து ஒரு கொள்கை வந்தது என்பதை விட அது என்ன சொல்கிறது என்பதே முக்கியம்...


3)  புத்தர் ஏற்பட்டு அறிவும் ஒழுக்கமும் ஏற்பட்டவற்றை ஒழிக்கவே அவதாரக் கதைகள்-அவற்றுள்ளும் முக்கியமாக கிருட்டிணாவதாரம்; அதிலும் சிறப்பாக கிருட்டிணனின் திருவிளையாடல்கள் சிருட்டிக்கப் பெற்றன. அதாவது மூடநம்பிக்கைக்காகக் கிருட்டிணனும் ஒழுக்கக்கேடு ஏற்பட அவனது திரு விளையாடல்கள், லீலைகள் ஆகியவை கற்பிக்கப்பெற்றுள்ளன. இவ்வளவும் செய்துவிட்டு அவை கடவுள் நடத்தை- வாக்கு என்பதற்காகக் கீதையும் பன்னாட்களுக்குப்பின் எழுதிச் சேர்க்கப்பெற்றது.

பதில்:---மாயோன் எனும் தமிழ்தெய்வத்தின் புராணவரலாறு தமிழ் நூல்களில் காணப்படுகிறது. அவன் தமிழ் மனைவி நப்பின்னை. ஏழு எருதுகளை அடக்கி நப்பின்னையை கண்ணன் மணக்கிறான். வடக்கே மாயோன் கிருஷ்ணனாகி அவன் மனைவியாக ராதை ஆகிறார்.

தெய்வங்கள் உலகுமுழுவதற்கும் சொந்தம் என்கையில் இப்படி உள்ளூர் தலபுராணங்கள் எழுவதும், அவற்றில் சில பிரபலமாவதையும் தடுக்க இயலாது. மேரிமாதா மெக்சிகோவில் ஒரு பூர்வகுடி பெண்ணுக்கு காட்சியளித்ததாக சொல்லி "க்வாடலுப்பே வர்ஜின்" எனும் பெயரில் மிகபிரபலமான மேரிமாதா கோயில் எழுந்துள்ளது. ஜப்பானில் புத்தரை கண்டதாக சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். இவை பரவசநிலையில் காணும் உருவெளி தோற்றங்களா, கிருஷ்ணன் எனும் வடநாட்டு மன்னன் மாயோனின் அவதாரமாக கருதபட்டதால் எழுந்த அம்மன்ன்னனின் வரலாற்று புனைவுகளா என்பது வரலாற்றுரீதியான கேள்வி. ஆனால் கடவுள் இருக்கிராரா, இல்லையா என்பதை இதன் விளைவுகள் பாதிப்பதில்லை...கிருஷ்ணன் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கீதாஇயை சொன்னனா என்பது முக்கியமான விஷயமாக எனக்கு படவில்லை. ஏனெனில் புராணநூல்களில் இருப்பதில் 70,80% உண்மையாக நிகழ்ந்திருக்ககூடிய நிகழ்வுகள் அல்ல. வேதம், புராணங்கள், இதிகாசங்களை நம்பி நம் சமயம் இல்லை.


4) மனிதன் பிறந்து வளர்ந்து நினைக்கத் தொடங்கிய பிறகுதான் கடவுள் பற்றி எண்ணம் தோற்றுவிக்கப் பெற்றிருக்க வேண்டும். அதை யாரும் மறுக்க முடியாது. இப்போதுகூட மக்களுக்குப் பிறர் சொல்லிக் கொடுத்த பிறகுதான் கடவுள் என்கின்ற பேச்சும் நினைப்பும் ஏற்படுகின்றனவே தவிரத் தானாக ஏற்படுவதில்லை

பதில்: இது ஆய்வுக்குரியது...தானாக யாரும் எடுத்து வளர்க்காமல் காட்டில் ஒரு குழந்தை வளர்கிறது என வைத்துக்கொள்வோம்...அது நெருப்பு, இயற்கைவழிபாடு என துவக்க ஆரம்பிக்கும்/ஆரம்பிக்காது என உறுதியகா சொல்ல இயலுமா? ஆதியில் மனிதன் இயற்கையை வழிபட துவங்கியது யாரும் சொல்லி அல்லவே? தன்னிச்சையாக நிகழ்ந்த விளைவே இது.

5) அதன்படி பார்த்தால் சிவன்தான் முழுமுதற் கடவுளாக இருந்திருத்தல் கூடும்; பிறகு நாகரிகமடைந்த காலத்தில்தான்விஷ்ணு அல்லது திருமால் ஏற்பட்டிருக்க வேண்டும்.

பதில்: சிந்துசமவெளி காலக்ட்டத்தில் சிவன் இருந்திருக்கிரார். சுமேரியர் காலக்ட்டத்தில் திருமால் இருந்ததாக உல்கன் ஐயா குழுவில் எழுதியுள்லார். ஆனால் அன்று இருந்த ஏதோ சுமேரிய, சிந்துசமவெளி தெய்வங்களின் இன்றைய தொடர்ச்சிதான் சிவனும், திருமாலும் என்பதே என் கணிப்பு

6) 6) நமக்கு எத்தனை ஆயிரம் கடவுளர்கள்? அவர்களின் பெயர்களை எழுதவேண்டுமென்று தொடங்கினால் ஊற்றுப் பேனாவிலுள்ள மைதான் தீர்ந்து விடும்; பெயர்கள் முடிவு அடையா. பெரியார் போன்றோர் தலையெடுத்து இதைக் கேட்காமல் விட்டிருந்தால் மைல்கற்கள், ஃபர்லாங் கற்கள் எல்லாம் கடவுளர்களாகி இருக்கும். அம்மிக்கல்லையும் நிறுத்தி வைத்துக் குங்குமம் மஞ்சள் பூசிவிட்டால் அதுவும் ஒரு கடவுளாகக் காட்சியளிக்கும் என்கின்றார்.

பதில்:"யாரை வணங்கினாலும் நீ என்னையே வழிபடுகிராய்" என்பதே கீதையின் வாக்கு. பல்வேறுவடிவங்களில் , பல்வேறுபெயர்களில் இறையை காண்பதில் தவறில்லை.

இலிங்கத் திட்ட புராணத் தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாதுசெய்வீர் களும்மற்று நும்தெய்வமு மாகிநின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குரு கூர்அதனுள்
பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.

    பொ-ரை : ‘இலிங்கபுராணத்தைப் பிரமாணமாகவுடைய நீங்களும் சமணர்களும் பௌத்தர்களும் மேலும் மேலிட்டு வாது செய்கின்ற வைசேடிகர்களான நீங்களும் நீங்கள் வணங்குகின்ற தெய்வங்களும் ஆகி நிற்கின்றவன், செந்நெற்பயிர்கள் மிக ஓங்கி வளர்ந்து கவரியைப் போல வீசுகின்ற திருக்குருகூர் என்னும் திவ்விய தேசத்தில் எல்லாக் குணங்களோடும் பொலிந்து நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற பிரானே ஆவான்; ஆதலால், யான் கூறுகின்றவை சிறிதும் பொய்யில்லை; அவனையே துதிசெய்யுங்கோள்,’ என்கிரார் நம்மாழ்வார்

ஆக எத்தனைவடிவங்களில், எத்தனை பெயர்களில் யாரை வணங்கினாலும் அது எல்லாம் அப்பரப்பிரும்மனையே போய்சேர்கிரது என்பதில் ஐயமேதுமில்லை.


7) 7) கடவுளைக் கற்பித்தவனை மன்னித்துவிடலாம். ஏனெனில் அவன் மடையன். அறிவில்லாத காரணத்தால் கற்பிக்க வேண்டியவனானான். கடவுளைக் கற்பித்தவன் "உலக உற்பத்திக்கு அது நடைபெறுதற்கு ஒரு கர்த்தா இருக்க வேண்டும். அந்தக் கர்த்தாதான் கடவுள்" என்று ஒரு சந்தேகத்தின்மீது உறுதிபடுத்திச் சொல்லுகிறான். அதாவது சந்தேகத்தின் பயனைக் (Bஎனெfஇட் ஒf டொஉப்ட்) கடவுளுக்குக் கொடுக்கிறான்.

பதில்: இன்றுவரை பிரபஞ்சம் தோன்றியது எப்படி, உயிர்கள் உருவானது எப்படி என்பதற்கு எப்பதிலையும் அறிவியலால் கூரமுடியவில்லை என்பதை அறிந்தால் "இதை சொன்னவன் மடையனாக இருந்திருக்கமுடியாது" என உணரலாம்

8) 8) சைவன் வீட்டில் பிறந்தால் சிவன் கடவுள். வைணவன் வீட்டில் பிறந்தால் விஷ்ணு கடவுள். இஸ்லாமியன் வீட்டில் பிறந்தால் அல்லா கடவுள். கிறித்தவன் வீட்டில் பிறந்தால் கிறித்து கடவுள். நாத்திகன் வீட்டில் பிறந்தால் யார் கடவுள்? எனவே கடவுள் என்பது தற்செயலாக ஏற்பட்டதேயன்றி இயற்கையாக ஏற்பட்டது அன்று என்கின்றார்.

பதில்:"ஈஸ்வர அல்லா தேரே நாம்" என்பதை மனதில் கொண்டால் இவை அனைத்தும் ஒரே இறையின் வேறு வடிவங்கள், பெயர்கள் என உணரலாம்.

9) 9) பார்ப்பான் நினைத்தபடி எல்லாம் கடவுளர்கள் தோன்றியபடி உள்ளார்கள். மனிதக் கடவுள்; மாட்டுக் கடவுள்; குரங்குக்கடவுள்; பட்சிக் கடவுள்; பலதலைகளுள்ள, பல கைகளுள்ள கடவுள்; ஏன் இவை? எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த யாவையுமான கடவுள் என்கின்றபோது ஏன் இத்தனைக் கடவுளர்கள்? என வினவுகின்றார் அய்யா அவர்கள்.

பதில்:இவை அனைத்தும் ஒன்றே என முன்பு கண்டோம்

10) 10) பிறப்பு இறப்பு இல்லாதவன் கடவுள் என்ற பிறகு தாய் வயிற்றில் பிறந்தவன் கடவுள் ஆக முடியுமா? இராமன், கிருட்டிணன் அப்படிப் பிறந்தவர்கள்தாமே? ஒரு கடவுளுக்குத் தாய், தகப்பன் ஏற்பட்டால் அந்தத் தாய் தகப்பன்களான கடவுளர்களுக்கும் தாய் தகப்பன் ஏற்பட்டுத்தானே தீரும்? இவற்றை நோக்கும்போது கடவுளர்கள் தாமாக ஏற்பட்டவர்கள் என்பதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

பதில்: அவதார கான்செப்ட்டை புரிந்துகொண்டால் இப்படி கேட்கமாட்டோம். அவதாரங்கள் கடவுள் எடுத்த தற்காலிக வடிவங்களே

(வளரும்..)

--

Oru Arizonan

unread,
Sep 16, 2016, 4:46:20 PM9/16/16
to mintamil
விளக்கம் களைகட்டுகிறது, செல்வரே!  தொடருங்கள்!
ஒரு அரிசோனன் 

Innamburan S.Soundararajan

unread,
Sep 16, 2016, 9:24:01 PM9/16/16
to mintamil
வளரட்டும், செல்வன். மிகவும் பொருத்தமான பதிவு.மனிதனின் மனமும், இறை வணக்கமும் பற்றி பல கருத்துக்கள் கூறலாம். ஒரு காலகட்டத்தில் தொன்மவியல், இறைவணக்கம்,மதாபிமானம், மதப்பற்று, மதவெறி, நாத்திகமும் பகுத்தறிவும் ஒன்றே எந்த மாயை, சனாதனத்தில் உள்ளுறையும் நாத்திகம் பற்றியும் எழுத நினைத்தேன். அறியாமையும், இயலாமையும் குறுக்கே நிற்கின்றன. எதற்கும் கொஞ்சம் Joseph Campbell பாருங்கள், ஏற்கனவே பார்வையிடாவிடின்.
அன்புடன்,
இன்னம்பூரான்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply all
Reply to author
Forward
0 new messages