திருமண நாள் வாழ்த்து

810 views
Skip to first unread message

karuannam annam

unread,
Jun 9, 2010, 6:54:41 AM6/9/10
to mintamil
8.6.2010
இனிய நண்பர்களுக்கு வணக்கம்.
ஜுன்8 ஆம் நாள் எங்கள் திருமண நாள்(8.6.1970). நாற்பதாவது ஆண்டு திருமண
நாளில் பெரியோர்களையும் நண்பர்களையும் வணங்குகிறோம்

தங்களின் அன்பான ஆசிகளையும் வாழ்த்துக் களையும்
நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
.
மிக்க அன்புடனும் நன்றியுடனும்
சொ.வினைதீர்த்தான்- அன்னபூரணி

9.6.2010
நான்கு போட்டோகளுடன் திருமண நாள் செய்தி அனுப்பியிருந்தேன். அதிக அளவு
இருந்ததால் செய்தி அனுப்பப்படவில்லை என்பதை இன்று பார்த்தேன். இன்று
மறுபடியும் நண்பர்கள் வாழ்த்துக்கள் வேண்டி செய்தி அனுப்புகிறேன்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Copy of DSC_0234.JPG

Annakannan

unread,
Jun 9, 2010, 7:04:49 AM6/9/10
to மின்தமிழ்
நாற்பதாவது ஆண்டு திருமண நாள் கண்டிருக்கும் சொ.வினைதீர்த்தான்-
அன்னபூரணி ஆகியோர்க்கு நல்வாழ்த்துகள். நீடூழி வாழ்க.

புகைப்படம் மிக அருமை.

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.

Tthamizth Tthenee

unread,
Jun 9, 2010, 7:45:19 AM6/9/10
to mint...@googlegroups.com
நாற்பதாவது  திருமண ஆண்டு விழாக் கொண்டாடும் திரு சொ. வினைதீர்த்தான் அவர்களுக்கும் அவருடைய சகதர்மிணிக்கும்  எங்களின் மனப்பூர்வமான  வாழ்த்துக்கள்
அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று இனிதே மகிழ்வோடிருக்க இறைவனைப் ப்ரார்த்திக்கின்றோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
தம்பதியர்
 
 
9-6-10 அன்று, Annakannan <annak...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

N. Kannan

unread,
Jun 9, 2010, 8:12:41 AM6/9/10
to mint...@googlegroups.com
நேரில் இருந்து வைபவத்தை அனுபவிப்பது போன்ற பிரமையை
உருவாக்கிவிட்டீர்கள். மின்தமிழ் ஒரு குடும்பம் என்பதை மீண்டும்
நினைவுறுத்தும் மடல். இணையம் என்பது உண்மையில் உள்ளங்களை இணைக்கும்
பாலமே!

வாழ்த்துக்கள்!!

நா.கண்ணன்

2010/6/9 karuannam annam <karu...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Jun 9, 2010, 8:12:40 AM6/9/10
to mint...@googlegroups.com
இனிய மணநாள் வாழ்த்துகள்.

2010/6/9 karuannam annam <karu...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Jun 9, 2010, 9:02:40 AM6/9/10
to mint...@googlegroups.com
அம்மாவையும், உங்களையும் போட்டோவில் பார்த்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
வாழ்த்துக்கள். வணக்கங்கள்.

 

meena muthu

unread,
Jun 9, 2010, 9:33:10 AM6/9/10
to mint...@googlegroups.com
திரு மிகு வினைதீர்த்தான் அன்னபூரணி இணையருக்கு மனம் நிறைந்த
இனிய திருமணநாள் நல் வாழ்த்துகள்!

அப்படியே தங்களின் அறுபதாம்ஆண்டு நிறைவு விழா படங்களையும் தாருங்கள் பார்க்க மிக ஆவல் :)

அன்புடன்
மீனா

2010/6/9 karuannam annam <karu...@gmail.com>

Kandavel Rajan

unread,
Jun 9, 2010, 9:35:55 AM6/9/10
to mint...@googlegroups.com
இனிய மணநாள் வாழ்த்துகள்.....



--
மறதி தான் மனிதனை இலேசாக்குகிறது. எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருப்பின் மனிதன் சோகம் தாங்காது வாழ்க்கை ஆரம்பத்திலேயே சரிந்து விடுவான் என்பதாலேயே மறதி இயல்பாயிற்று. ஆனால் மறுபடி மறுபடி அடி வாங்கவே மறதி உபயோகமாகிறது.


நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

ananda rasa thiruma

unread,
Jun 9, 2010, 9:41:51 AM6/9/10
to mint...@googlegroups.com
 நீவீர் இருவரும் எல்லா நலமும் வளமும் பெற்று இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ்க
அன்புடன்
ஆராதி

2010/6/9 Kandavel Rajan <kandav...@gmail.com>
--

Swaminathan Venkat

unread,
Jun 9, 2010, 10:14:42 AM6/9/10
to mint...@googlegroups.com
மிகவும் சந்தோஷம் தரும் விஷயம். என் வாழ்த்துக்கள்.

karuannam annam

unread,
Jun 9, 2010, 10:33:23 AM6/9/10
to mint...@googlegroups.com
On 6/9/10, meena muthu <ranga...@gmail.com> wrote:
> திரு மிகு வினைதீர்த்தான் அன்னபூரணி இணையருக்கு மனம் நிறைந்த
> இனிய திருமணநாள் நல் வாழ்த்துகள்!
>
> அப்படியே தங்களின் அறுபதாம்ஆண்டு நிறைவு விழா படங்களையும் தாருங்கள் பார்க்க
> மிக ஆவல் :)
>
> அன்புடன்
> மீனா
>
>அன்புமிகு மீனாம்மா,
தங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி. நிழற்படங்கள் அறுபதாம் ஆண்டு நிறைவு
விழாவில் எடுத்ததுவே. ஆனல் எனக்கு இணைப்பு அனுப்பக் கற்க
வேண்டியதிருப்பதால் இவ்விழையில் நாலைந்தை ஒவ்வொன்றாக இணைத்து
DSC_0066.JPG

karuannam annam

unread,
Jun 9, 2010, 11:03:28 AM6/9/10
to mint...@googlegroups.com
On 6/9/10, Annakannan <annakannan@

நன்றி திரு கண்ணன். தங்கள் இயல்பான அருமயானஉரையையும் சிரித்த முகத்தையும்
அம்பத்தூர் ஹுயுமர் கிளப் கூட்டத்தில் இரசித்தேன்

Copy of DSC_0058.JPG

karuannam annam

unread,
Jun 9, 2010, 11:26:39 AM6/9/10
to mint...@googlegroups.com
On 6/9/10, srirangammohanarangan v <ranga...@gmail.com> wrote:
> அம்மாவையும், உங்களையும் போட்டோவில் பார்த்தது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
> வாழ்த்துக்கள். வணக்கங்கள்.

நட்பாம் கிழமை அமைந்தது என் நற்பேறு

அன்று மாலை பிள்ளைகள் ஏற்பாட்டின்படி கேக் விழாவும் நடந்தது. என் பேத்தி
செல்வி வசந்தா பெரிய பெண் ஆனதற்கான வாழ்த்து விழாவும் அமைந்தது.


சொ.வினைதீர்த்தான்
>
>

> On 6/9/10, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
>>
>> இனிய மணநாள் வாழ்த்துகள்.

mikka nanRi ammaa
S.Vinaitheerthan

Copy of DSC_0136.JPG

karuannam annam

unread,
Jun 9, 2010, 11:45:07 AM6/9/10
to mint...@googlegroups.com
On 6/9/10, Tthamizth Tthenee <rkc1947@gmail

> நாற்பதாவது திருமண ஆண்டு விழாக் கொண்டாடும் திரு சொ. வினைதீர்த்தான்
> அவர்களுக்கும் அவருடைய சகதர்மிணிக்கும் எங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
> அனைத்து வளங்களும் நலங்களும் பெற்று இனிதே மகிழ்வோடிருக்க இறைவனைப்
> ப்ரார்த்திக்கின்றோம்
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
> தம்பதியர்
>
>ஓய்வறியாத் தேனி ஐயா
தம்பதியராய்த் தாங்கள் வாழ்த்துவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். நன்றிகள்.
ஆராதி ஐயாவிற்கும் பெரியவர்கள் வெங்கட் சாமினாதன் அவர்களுக்கும் எனது
இளங்கனிந்த நன்றிகள். நமது அன்பிற்கினிய திரு கண்ணன் குற்ப்பிட்டிருப்பது
போல ஒரு உலகு தழுவிய குடும்பமாக குழுமம் அமைந்துள்ளது.
அன்புடன்
Copy of DSC_0249.JPG

fonio sivakumar

unread,
Jun 9, 2010, 9:43:19 AM6/9/10
to mint...@googlegroups.com
ஐயனுக்கும் அம்மாளுக்கும்  வணக்கம்  இன்னும் ௧௦௦ ஆண்டுகள் வாழ  என்ன ஐயனை பிரதரனை  செய்வீன்

போனியோ


2010/6/9 karuannam annam <karu...@gmail.com>

fonio sivakumar

unread,
Jun 9, 2010, 10:21:05 AM6/9/10
to mint...@googlegroups.com
wed cake.jpg

2010/6/9 fonio sivakumar <fsiva...@gmail.com>
wed cake.jpg

vishalam raman

unread,
Jun 9, 2010, 12:05:18 PM6/9/10
to mint...@googlegroups.com
அன்பு வினை தீர்த்தான் அன்பு அன்னபூர்ணி   என் அன்பு கனிந்த வாழ்த்துகள்  நீண்ட ஆயுளும் நோய் நொடியில்லாமல் அமைதியான வாழ்க்கை அமைய பிரார்த்திக்கிறேன் 

2010/6/9 karuannam annam <karu...@gmail.com>
8.6.2010

karuannam annam

unread,
Jun 9, 2010, 12:10:12 PM6/9/10
to mint...@googlegroups.com
On 6/9/10, fonio sivakumar <fsiva...@gmail.com> wrote:
> [image: wed cake.jpg]
>
> 2010/6/9 fonio sivakumar <fsiva...@gmail.com>
>
>> ஐயனுக்கும் அம்மாளுக்கும் வணக்கம் இன்னும் ௧௦௦ ஆண்டுகள் வாழ என்ன ஐயனை
>> பிரதரனை செய்வீன்
>>
>> போனியோ
>>
அன்பிற்கினிய நண்பர் திரு போனியோ அருமையான கேக்கு நன்றி.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

இன்னும் ௧௦௦ ஆண்டுகள்??
சிறந்த வாழ்த்து! நோய் நொடிகள் இல்லாத 10 ஆண்டுகள் போதுமானது!

Copy of DSC_0054.JPG

Innamburan Innamburan

unread,
Jun 9, 2010, 12:16:57 PM6/9/10
to mint...@googlegroups.com
என் வாழ்த்துக்களும், ஆசியும்,வினைதீர்த்தான் தம்பதிக்கு.
இன்னம்பூரான்

2010/6/9 karuannam annam <karu...@gmail.com>:

Subashini Tremmel

unread,
Jun 9, 2010, 2:39:08 PM6/9/10
to mint...@googlegroups.com
படங்களுடன் இந்த செய்தியைப் பார்க்க மிகவும் அழகாகக் இருக்கின்றது. தம்பதியருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

2010/6/9 karuannam annam karu...@gmail.com

 
இன்னும் ௧௦௦ ஆண்டுகள்??
 சிறந்த வாழ்த்து! நோய் நொடிகள் இல்லாத 10 ஆண்டுகள் போதுமானது!
அப்படி சொல்வதற்கில்லை. நிறைய ஆண்டுகள் ஆரோக்கியமாக எல்லா சந்தோஷங்களுடன் வாழ்ந்து நிறைய தமிழ் பணிகளைத் தம்பதியர் இருவரும் செய்ய வேண்டும்.
 
சரி - நாற்பதாவது ஆண்டு திருமண நாள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.திருமணமாகி நாற்பது ஆண்டுகள் ஆகிய விழாவா இது? இருவரும் படத்தில் இளமையாக இருக்கின்றீர்கள் அதனால் தான் கேட்கிறேன்..:-)
 
அன்புடன்
சுபா

Chandra sekar

unread,
Jun 9, 2010, 2:58:16 PM6/9/10
to mint...@googlegroups.com
வாழ்த்த வயதில்லை! வணங்குகிறேன் அய்யா.
எல்லா வளமும் பெற இறைவனை வேண்டுகிறேன்

நன்றி,
மா சந்திரசேகர்

2010/6/10 Subashini Tremmel <ksuba...@gmail.com>

karuannam annam

unread,
Jun 10, 2010, 3:36:05 AM6/10/10
to mint...@googlegroups.com
On 6/10/10, Chandra sekar <chandrasekar.cs2@gmail.

> வாழ்த்த வயதில்லை! வணங்குகிறேன் அய்யா.
> எல்லா வளமும் பெற இறைவனை வேண்டுகிறேன்
>
>

மிக்க நன்றி திருசந்திரசேகரன்.வாழ்த்த வயசு தேவையில்லை. மனசு தான் தேவை.
நாம் பதங்கடந்தானுக்கே பல்லாண்டு பாடியவர்கள்! நல்ல மனதுடன் வாழ்த்திய
நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றி உரியது. தாயுள்ளத்தோடு வாழ்த்திய
அம்மா விசாலம் ராமன், இனியவர் இன்னம்புரான் ஐயா அவர்களை வணங்கி
மகிழ்கிறேன்

CSC_O110.JPG

N. Kannan

unread,
Jun 10, 2010, 3:52:59 AM6/10/10
to mint...@googlegroups.com
பலே! பலே! லக்ஷ்மி கல்யாணம் வைபோகமே!!
நேரில் இருப்பது போன்ற அனுபவம். படங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
குழந்தைகளின் பிரகாசமான கண்கள்!! இந்திய வம்சாவளியினரின் சொத்து :-)
எல்லோரும் ஒரே மாதிரி கெண்டைக்கரை வேஷ்டி கட்டி (சிறுவர்கள் கூட) அசத்திட்டீங்க!
தமிழ் விழா என்றால் இப்படி அல்லவோ இருக்க வேண்டும். (நானும் ஒவ்வொருமுறை இந்தியா வரும்போதும் பஞ்சகச்சம் கட்டிப் பழகி பின் மறந்துவிடுகிறேன் ;-)
பல்லாண்டு, பல்லாண்டு,
அடியோமோடும், தெய்வத்தோடும்
ஆயிரம் பல்லாண்டு!!
 
க.>

2010/6/10 karuannam annam karu...@gmail.com

karuannam annam

unread,
Jun 10, 2010, 4:34:12 AM6/10/10
to mint...@googlegroups.com
On 6/10/10, Subashini Tremmel <ksubashin

> படங்களுடன் இந்த செய்தியைப் பார்க்க மிகவும் அழகாகக் இருக்கின்றது.
> தம்பதியருக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


மிக்க நன்றி அம்மா. இத்துடன் ஒரு புகைப்படம் இணைத்துள்ளேன். விழாவில்
பிள்ளைகள்,அக்கா தங்கைகள், சம்மந்தப்புரத்தார் ஆகியோருக்கு வாங்கியுள்ள
புடைவை நிறம் நன்றாக உள்ளதா? விழாவை ஆறு வேத விற்பன்னர்களும், ஓதுவார்
மூர்த்தியும் நடத்தி வைத்தார்கள்.

>>>
>>
>> இன்னும் ௧௦௦ ஆண்டுகள்??
>> சிறந்த வாழ்த்து! நோய் நொடிகள் இல்லாத 10 ஆண்டுகள் போதுமானது!
>>
> அப்படி சொல்வதற்கில்லை. நிறைய ஆண்டுகள் ஆரோக்கியமாக எல்லா சந்தோஷங்களுடன்
> வாழ்ந்து நிறைய தமிழ் பணிகளைத் தம்பதியர் இருவரும் செய்ய வேண்டும்

மனதிற்கு இனிய தமிழ் பணி செய்ய வாழ்த்தியமைக்கு மகிழ்கிறேன். ஏழு
இளந்தமிழான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, நன்னெறி, உலக நீதி
ஆகியவற்றை 1000 பிரதிகள் புத்தகமாக நண்பர்களுக்கு கொடுத்து
மகிழ்ந்துள்ளேன்.
தற்போது பாரதி பாடல்களின் ஒலிப்பேழையும், அன்பர் ஆர்வலர் இனிய நண்பர்
ஆகிரா தரவிறக்கும் செய்து தந்த மதுரைத் திட்ட நூல்கள் கொண்ட குறுந்
தகடையும் நண்பர்களுக்கும் என்னிடம் பயிற்சிக்கு வருபவகளுக்கும் கொடுத்து
மகிழ்கிறேன். இதுவரை 600 குறுந்தகடு கொடுத்துள்ளேன்.
ஆயின் தாங்களும் திருமிகு கண்ணனும் மற்ற நண்பர்களும் ஆற்றும் பணிகளைக்
காணும் போது பிரமிப்பு அடைகிறேன்.
சோம்பலை ஒழித்து ஒல்லும் வாயெல்லாம் பணியாற்ற விழைகிறேன்.

>
> சரி - நாற்பதாவது ஆண்டு திருமண நாள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.திருமணமாகி
> நாற்பது ஆண்டுகள் ஆகிய விழாவா இது? இருவரும் படத்தில் இளமையாக இருக்கின்றீர்கள்
> அதனால் தான் கேட்கிறேன்..:-)
>
> அன்புடன்
> சுபா
>

>இளமைக்குக் காரணம் மாட்சிமையுடைய மனவியுடன் மக்களும் நிரம்பினர். தமிழுக்கு அமுதென்று பெயர்.

"மை" வேலையும் சிறிது உண்டு.

மிக்க அன்புடனும் நன்றியுடனும்

DSC_0076.JPG

V, Dhivakar

unread,
Jun 10, 2010, 4:37:32 AM6/10/10
to mint...@googlegroups.com
மென்மேலும் இனிய மணவாழ்க்கை சிறக்க இறைவனை வணங்குகிறோம்.

திவாகர்

2010/6/10 karuannam annam <karu...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

PENNESWARAN KRISHNA RAO

unread,
Jun 10, 2010, 5:02:04 AM6/10/10
to mint...@googlegroups.com


வினைதீர்த்தான் ஐயா மற்றும் அம்மையாரை வணங்கி வாழ்த்துக்கள் வேண்டுகிறேன்.

குருவருள் மற்றும் அன்னையின் அருள் என்றும் உங்கள் குடும்பத்தில் நிலவ பிரார்த்திக்கிறேன்.

ஒரு சின்ன விஷயம்.

ஹ்யூமர் கிளப்பில் அண்ணா கண்ணனின் அருமையான உரையின் போது அவருடைய சிரித்த முகத்தைக் கண்டதாகச் சொல்லி இருக்கிறீர்கள். 

பொதுவாக அதுபோன்ற கூட்டங்களில் ஜோக் கேட்பவர்கள்தானே சிரிக்க வேண்டும்.  ஜோக் சொன்ன கண்ணன் அங்கே எதற்கு சிரித்துக் கொண்டிருந்தார்?

(ஏதோ என்னால் ஆனது.  கல்யாண வீட்டில் கலாட்டா செய்யும் குசும்பு மாமாவாக மாறுவதற்கு ஒரு முயற்சி.  கொண்டாட்டங்கள் முழுமை அடைய வேண்டாமா?)

அன்புடன்

பென்னேஸ்வரன்

2010/6/10 V, Dhivakar <venkdh...@gmail.com>



--
http://www.vadakkuvaasal.com/

N. Kannan

unread,
Jun 10, 2010, 5:30:40 AM6/10/10
to mint...@googlegroups.com
2010/6/10 PENNESWARAN KRISHNA RAO <penne...@gmail.com>

>
> பொதுவாக அதுபோன்ற கூட்டங்களில் ஜோக் கேட்பவர்கள்தானே சிரிக்க வேண்டும்.  ஜோக் சொன்ன கண்ணன் அங்கே எதற்கு சிரித்துக் கொண்டிருந்தார்?
>

சிலபேர் தான் சிரிக்காமல் மற்றவரை சிரிக்க வைப்பார்
சிலர் தன் சிரிப்பாலேயே மற்றோரை சிரிக்க வைப்பார்.

முதல் ரகத்தில் ரசிகர்கள் ஜோராய் இருக்கணும் (ஜோக் புரியாவிடினும் சிலர்,
எதற்கு வம்பு என்று சிரித்து வைப்பர் ;-)
இரண்டாம் ரகத்திற்கு ஒரு தமிழ் சினிமா நடிகர் இருக்கிறார். அவர்
பேசுவதற்கு முன்னமே சிரித்துவிடுவார்.
என்.எஸ்.கிருஷ்ணனால் எல்லா வகையிலும் சிரிக்க வைக்க முடியும்.

http://www.youtube.com/watch?v=EMENDSKe3Po

இந்த வீடியோவைப் பார்த்துவிட்டும் ஒருவன் சிரிக்கவில்லையெனில் அவன்
வயிற்றுவலி வந்து சாகட்டும் :-)))

க.>

venkatachalam Dotthathri

unread,
Jun 10, 2010, 12:04:51 PM6/10/10
to mint...@googlegroups.com
ஓம்.அன்புசால் ஐயா அவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவுவிழா வைபவத்தைக் காண குழுமம் வகைசெய்தது.செய்தியுடன் படங்களும் தந்த நிறைவு மிகவும் அருமை. தீர்க்க ஆயுளும் குடும்ப ஆரோக்கியமும், ஆன்ம சுகமும் மேலும் மேலும் வழங்கியருள இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

விழாக்காலங்களில் அறநூல்களை அச்சிட்டு வழங்குதல் ஒரு சிறப்பான செயல்.உரையுடன் அறநூல்களை வழங்குதல் மூலம் ஆன்ம நலமும், மொழிநலமும் ஒரு சேர சென்றடைவது ஒரு மாபெரும் தொண்டு.
சிங்கப்பூர் மலேஷியா வாழ் தமிழ்க் குடும்பங்கள் இம்மாதிரி புத்தகங்கள்  விழாக்காலங்களில் அச்சிட்டு வழங்குகிறார்கள்.வாழ்க.
அன்புடன் வெ.சுப்பிரமணிய ன் ஓம்

2010/6/10 N. Kannan <navan...@gmail.com>

karuannam annam

unread,
Jun 10, 2010, 12:13:06 PM6/10/10
to mint...@googlegroups.com
வணக்கம் நண்பர் திரு பென்னேஸ்வரன் சார்
மடலுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். உயிர்கள் எல்லாம் ஒன்றை ஒன்று
வாழ்த்திடும் போது உள்ளிருந்து வாழ்த்துவது இறை அருள்.

தலைவா! திரு அண்ணா கண்ணன் தோற்றப் பொலிவு உள்ளவர். அதைத்தான் சிரித்த
முகம் என எழுதியிருந்தேன்.
கண்ணன் என்றாலே தோற்றப் பொலிவுதானே! சரிதானே நாவன்னா காவன்னா நண்பரே?
அன்புடன்


சொ.வினைதீர்த்தான்

karuannam annam

unread,
Jun 10, 2010, 12:59:56 PM6/10/10
to mint...@googlegroups.com
அன்புள்ள கண்ணன் சார் எங்களுக்கும் வேட்டி இடுப்பில் நிற்பது
பிரயத்தனமாகத்தான் உள்ளது. ஆனால் பெல்ட் போட்டு இருக்கியோ அல்லது துண்டை
இடுப்பில் கட்டியோ சமாளிக்கிறோம். இடுப்பில் துண்டு அணிவது அடக்கத்தைக்
காட்டுவதோடு இவ்வகையிலும் உதவும்.
எங்கள் பகுதியிலும் பஞ்சகச்சம் இருந்துள்ளது.எனக்கும் 1970 வதில்
திருமணம் நிகழ்ந்தபோது பஞ்சகச்சம் கட்டிவிட்டார்கள். தூர்ந்து போன காதில்
தோடு போட்டு காலில் மிஞ்சி மாமக்காரர் இட்டு குதிரை மேல் ஏற்றி
விட்டார்கள்.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

அன்பான திரு வெ.சுப்ரமணியன் அவர்களது அருமை வாழ்த்துக்களுக்கும் நண்பர்
திரு வெங்கட் திவாகர் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
இத்துடன் விழா நடந்த பிள்ளையார்பட்டிக்கு அருகில் உள்ள வயிரவன்பட்டி
நகரக் கோயிலின் முகப்புப் படம் இணைத்துள்ளேன். கிபி 800ல் எழுந்த
இக்கோவில் நகரத்தார் ஒன்பது கோவில்களில் ஒன்று. சுவாமி வளரொளி நாதர்.
அம்பாள் வடிவுடைஅம்மை. சிறந்த சிற்ப வேலைப்பாடு உள்ள கோவில். வயிரவர்
சன்னதி சிறப்பு.
பிள்ளையார்பட்டிக்கு வரும் அன்பர்கள் வயிரவன் அருளும் பெருக.

Copy of DSC_0003.JPG

Subashini Tremmel

unread,
Jun 10, 2010, 2:42:47 PM6/10/10
to mint...@googlegroups.com


2010/6/10 karuannam annam karu...@gmail.com



 
மிக்க நன்றி அம்மா. இத்துடன் ஒரு புகைப்படம் இணைத்துள்ளேன். விழாவில்
பிள்ளைகள்,அக்கா தங்கைகள், சம்மந்தப்புரத்தார் ஆகியோருக்கு வாங்கியுள்ள
புடைவை நிறம் நன்றாக உள்ளதா?  
 
புடவை நிறம் மிக அழகு. நல்ல தேர்வு. திருமணப் பெண் மட்டும் தனியாக நீலத்தில் ஜொலிக்கின்றார்..
 
 

ஆயின் தாங்களும் திருமிகு கண்ணனும் மற்ற நண்பர்களும் ஆற்றும் பணிகளைக்
காணும் போது பிரமிப்பு அடைகிறேன்.
சோம்பலை ஒழித்து ஒல்லும் வாயெல்லாம் பணியாற்ற விழைகிறேன்.

 
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப்பணிகளிலும் நேரம் கிடைத்தால் உதவுங்கள். இம்முறை சென்னையில்  அல்லது கோவையில் முடிந்தால் சந்திப்போம்.

N. Kannan

unread,
Jun 10, 2010, 7:07:16 PM6/10/10
to mint...@googlegroups.com
2010/6/11 karuannam annam <karu...@gmail.com>:

> தலைவா! திரு அண்ணா கண்ணன் தோற்றப் பொலிவு உள்ளவர். அதைத்தான் சிரித்த
> முகம் என எழுதியிருந்தேன்.
> கண்ணன் என்றாலே தோற்றப் பொலிவுதானே! சரிதானே நாவன்னா காவன்னா நண்பரே?

அதுவும் சரிதேன்....;-)
இந்த பென்னேஸ்வரன் முகம் காட்ட மாட்டேன் என்கிறாரே? :-))

க.>

Innamburan Innamburan

unread,
Jun 10, 2010, 7:44:00 PM6/10/10
to mint...@googlegroups.com
எத்தனை கண்ணனடி, பேதாய்! அவனனவனுக்கு ஒரு மதுரம். எனக்கு வவுத்து வலி வராது, நா.கா.

2010/6/11 N. Kannan <navan...@gmail.com>:

N. Kannan

unread,
Jun 10, 2010, 8:21:01 PM6/10/10
to mint...@googlegroups.com
கலைவாணரின் இந்த சீன் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல். என்ன நூதனம்
பாருங்கள். சிரிப்பு எனும் அரிய உணர்வை இதைவிட கலை அழகுடன் வேறு யாரால்
வெளிக்காட்ட முடியும்? அமரஜீவிதமுள்ள காட்சி. கலைவாணரின் பாடல் திறமை,
கற்பனைவளம், நடிப்புத்திறன் இப்படி எல்லாம் பரிமளிக்கும் காட்சியது!
கமலஹாசன் ஒரு நல்ல ரசிகன். இதே போன்ற காட்சியை தனது ஒரு படத்திலும்
வைத்திருக்கிறார். அவருக்கு எல்லோரையும் விஞ்ச வேண்டுமென்ற ஆர்வம் ;-)

சிரித்து, சிரித்து, வவுத்துவலி வரும் சார்! தப்ப முடியாது :-))

க.>

2010/6/11 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

வினோத்-VINOTH

unread,
Jun 11, 2010, 1:22:27 AM6/11/10
to mint...@googlegroups.com
விக்ன விநாயகருக்கு திருமணநாள் வாழ்த்துகள்


( சின்னவங்க பெரியவங்களை வாழ்த்துவது சரியா தவறா தெரிந்தவர்கள் கூறவும். )




வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்ற வாசகம் அரசியலாகிப்போனதால் அது வெறுத்துவிட்டது :)
--
சாதாரணமாக சிந்தித்தால் சராசரி மனிதராகவே இருந்துவிடுவோம். கடினமாக வித்தியாசமாக சிந்தித்தால் தான் வாழ்வில் வெற்றிபெற முடியும்.
வினோத்
http://tamil2friends.com/friends/vinoth

Hari Krishnan

unread,
Jun 11, 2010, 2:36:25 AM6/11/10
to mint...@googlegroups.com


2010/6/11 வினோத்-VINOTH <vino...@gmail.com>

விக்ன விநாயகருக்கு திருமணநாள் வாழ்த்துகள்


( சின்னவங்க பெரியவங்களை வாழ்த்துவது சரியா தவறா தெரிந்தவர்கள் கூறவும். )

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் என்று கடவுள் வாழ்த்து பாடுகிறோம்.   ஆகவே கடவுள் அளவுக்கு வயதானவர் வரையில் வாழ்த்த முன் உதாரணம் இருக்கிறது.  கடவுளை விட வயதானவரை வாழ்த்த முடியாதுதான். :D

--
அன்புடன்,
ஹரிகி.

வினோத்-VINOTH

unread,
Jun 11, 2010, 2:39:54 AM6/11/10
to mint...@googlegroups.com


2010/6/11 Hari Krishnan <hari.har...@gmail.com>

என்ன சொல்ல வறீங்க?
இப்ப வாழ்த்தலாம்ன்னு சொல்றீங்களா
கூடாது என்று சொல்கிறீர்களா

இல்லை, தடைநீக்கியவரை குடுகுடு  என்று சொல்லாமல் சொல்கிறார்களா?

Geetha Sambasivam

unread,
Jun 11, 2010, 2:45:32 AM6/11/10
to mint...@googlegroups.com
சின்னவங்க பெரியவங்களை வாழ்த்துவது சரியா தவறா தெரிந்தவர்கள் கூறவும். )




வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்ற வாசகம் அரசியலாகிப்போனதால் அது வெறுத்துவிட்டது :)//

தாராளமாய் வாழ்த்தி வணங்குங்கள்.

--

வினோத்-VINOTH

unread,
Jun 11, 2010, 2:49:08 AM6/11/10
to mint...@googlegroups.com


2010/6/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>



தாராளமாய் வாழ்த்தி வணங்குங்கள்.

நன்றிங்க

N. Kannan

unread,
Jun 11, 2010, 7:00:22 AM6/11/10
to mint...@googlegroups.com
என்ன இது?
இந்த வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் வசனம் அம்மா காலத்தில் பிரபலமாகி
அக்கப்போர் ஆன கதையை எத்தனை முறை சொல்லியாச்சு.
மங்களாசாசனம் (வாழ்த்துதல்) எனும் ஒரு அழகிய மரபை ஆழ்வார்கள் உருவாக்கி
புதுமைக்குப் புதுமை செய்தனர்.
இவ்வளவு இருந்தும் ஒரு தமிழன் வாழ்த்த வயதில்லை என்று சொன்னால் அவனுக்கு
தமிழ் மரபு தெரியவில்லை என்று பொருள்.
வினோத் விளையாடுகிறாரோ?

க.>

2010/6/11 வினோத்-VINOTH <vino...@gmail.com>:

> நன்றிங்க
>

Kandavel Rajan

unread,
Jun 11, 2010, 7:20:54 AM6/11/10
to mint...@googlegroups.com
2010/6/11 வினோத்-VINOTH <vino...@gmail.com>


தமிழ் நண்பர்கள் குழுமத்தலைவர் வினோத் உங்க அறிமுகம் போடுங்களேன் இங்கே.....





--
மறதி தான் மனிதனை இலேசாக்குகிறது. எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருப்பின் மனிதன் சோகம் தாங்காது வாழ்க்கை ஆரம்பத்திலேயே சரிந்து விடுவான் என்பதாலேயே மறதி இயல்பாயிற்று. ஆனால் மறுபடி மறுபடி அடி வாங்கவே மறதி உபயோகமாகிறது.


நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச

Geetha Sambasivam

unread,
Jun 11, 2010, 8:51:08 AM6/11/10
to mint...@googlegroups.com
இது வேறே விநோத்.

2010/6/11 N. Kannan <navan...@gmail.com>
>

வினோத்-VINOTH

unread,
Jun 11, 2010, 11:09:47 AM6/11/10
to mint...@googlegroups.com


2010/6/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>

இது வேறே விநோத்.

ஆம். வேற வினோத் என்பதற்காக இப்படியா??
:)

வினோத்-VINOTH

unread,
Jun 11, 2010, 11:11:02 AM6/11/10
to mint...@googlegroups.com


2010/6/11 Kandavel Rajan <kandav...@gmail.com>



2010/6/11 வினோத்-VINOTH <vino...@gmail.com>


தமிழ் நண்பர்கள் குழுமத்தலைவர் வினோத் உங்க அறிமுகம் போடுங்களேன் இங்கே.....


போட்டுடுவோம்.

பலரை ஏற்கெனவே தமிழ் நண்பர்களிலும் முத்தமிழிலும், நம்பிக்கையிலும் அறிமுகமாகியிருக்கிறேன்.

வினோத்-VINOTH

unread,
Jun 11, 2010, 11:13:20 AM6/11/10
to mint...@googlegroups.com


2010/6/11 N. Kannan <navan...@gmail.com>

என்ன இது?
இந்த வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் வசனம் அம்மா காலத்தில் பிரபலமாகி
அக்கப்போர் ஆன கதையை எத்தனை முறை சொல்லியாச்சு.
மங்களாசாசனம் (வாழ்த்துதல்) எனும் ஒரு அழகிய மரபை ஆழ்வார்கள் உருவாக்கி
புதுமைக்குப் புதுமை செய்தனர்.
இவ்வளவு இருந்தும் ஒரு தமிழன் வாழ்த்த வயதில்லை என்று சொன்னால் அவனுக்கு
தமிழ் மரபு தெரியவில்லை என்று பொருள்.
வினோத் விளையாடுகிறாரோ?

வணக்கம் அன்பரே

நான் இங்கே புதிது.

நான் சொன்னது, "வாழ்த்த வயதில்லைm வணங்குகிறோம்" என்பது அரசியலாகிப்போனதால் அது பிடிக்கவில்லை என்றே.
:)

karuannam annam

unread,
Jun 11, 2010, 11:43:50 AM6/11/10
to mint...@googlegroups.com
> இத்துடன் விழா நடந்த பிள்ளையார்பட்டிக்கு அருகில் உள்ள வயிரவன்பட்டி
> நகரக் கோயிலின் முகப்புப் படம் இணைத்துள்ளேன். கிபி 800ல் எழுந்த
> இக்கோவில் நகரத்தார் ஒன்பது கோவில்களில் ஒன்று. சுவாமி வளரொளி நாதர்.
> அம்பாள் வடிவுடைஅம்மை. சிறந்த சிற்ப வேலைப்பாடு உள்ள கோவில். வயிரவர்
> சன்னதி சிறப்பு.
> பிள்ளையார்பட்டிக்கு வரும் அன்பர்கள் வயிரவன் அருளும் பெருக.
வயிரவன் கோவிலுக்கு திரு இன்னம்புரன் அவர்கள் வந்திருக்கக் கூடும்.
திருமிகு மீனாமுத்து ஒன்பது நகரக் கோவிலுக்கும் சென்று உள்ளீர்களா?
வயிரவன்பட்டியில் சமீபத்தில் நடந்த திருமுழுக்காட்டு விழாவில் மூலிகை
வர்ணம் கொண்டு விதானம் முழுமையும் ஓவியங்கள் தீட்டியுள்ளார்கள். காணக்
கண் கோடி வேண்டும். முன் மண்டபத்தில் தூண்களில் உள்ள பெரிய வினாயகர்,
ஆறுமுகர், கூத்தர், அம்மை சிலைகளும் மண்டபத்தில் இருக்கும் அங்கயல்கண்ணி
கல்யாணக் கோலம், மார்க்கண்டேயருக்கு அருளல், குதிரைவீரர்கள், குறவன்
குறத்தி, வயிரவர் அனைத்துச்சிற்பங்களும் கொள்ளை அழகு.
சண்டிகேசுவரர் ஆல்யம் ஒரே பெரும் கல்லால் ஆனது. அக்கல் வெட்டி
எடுக்கப்பட்ட பள்ளம் அருகில் உள்ள கிராமத்தில் சண்டிகேசுவரர் பள்ளம் என
இன்றும் அழைக்கப் படுகிறது. ஒலி எழுப்பும் இசைத்தூண்கள் தென்முகக் கடவுள்
சன்னிதியில் உள்ளன.
கோவிலும் விடுதியும் சிறந்த நிர்வாகத்தில் உள்ளன. நண்பர்களை குன்றக்குடி,
பிள்ளையார்பட்டி,வயிரவன்பட்டி, அரியகுடி ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள
அழைக்கிறேன்.
Copy of DSC_0003.JPG

meena muthu

unread,
Jun 11, 2010, 12:48:20 PM6/11/10
to mint...@googlegroups.com
திரு திருமதி வினைதீர்த்தான் அன்னம் அவர்களுக்கு,

தங்களின் அறுபதாண்டு நிறைவுவிழா புகைப்படங்கள் பார்த்து மகிழ்ந்தோம்!
சுபாவின் கேள்விக்கு : திரு வினைதீர்த்தான் அவர்கள் தன் இருபது வயதிலேயே திருமணம் முடித்துவிட்டார்கள் போல தெரிகிறது! என் மூத்த சகோதரிக்கும் ( வயிரவன் கோவில்)இப்படித்தான் ஆச்சி(அக்கா)க்கு வயது 18 அத்தானுக்கு 20!அது போன்று என்று நினைக்கிறேன்.

மீனாமுத்து ஒன்பது நகரக் கோவிலுக்கும் சென்று உள்ளீர்களா?

நான்கு கோவிலுக்குத்தான் சென்றுள்ளேன் அது:
(ஒக்கூர்) இளையத்தகுடி(எங்கள்) கோவில்,இரணிக்கோவில் பிள்ளையார்பட்டி ,வயிரவன் பட்டி .சிறுகூடல்பட்டிதான் நான் பிறந்த ஊர் ஆதலால் எத்தைனையோ முறை(2கிமீ)வயிரவன் கோவில் சென்றுள்ளேன். ஆனால் திருமுழுக்காட்டுக்கப்புறம் இன்னும் வரவில்லை.
மிகவும் அழகாக  இருக்கிறது கோவில் என்று ஆச்சிவீட்டில் எல்லோரும் சொல்ல கேள்விப்பட்டேன்.தாங்கள் எழுதி இருப்பதை படித்ததும் பார்க்க ஆவல் கூடுகிறது.அடுத்தமுறை வரும்பொழுது அவசியம் அங்கு வரவேண்டும்.
 

//குன்றக்குடி,பிள்ளையார்பட்டி,வயிரவன்பட்டி, அரியகுடி ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளஅழைக்கிறேன்.?//

ஆமாம் இப்பொழுது தமிழ் மாநாட்டுக்கு செல்பவர்களும் கூட சேர்ந்து கொள்ளலாம்!எல்லோரும் ஒரு சுற்றுப்பயணம் சென்று வாருங்கள் அழைப்பில் நானும் பங்கு கொள்கிறேன்.

அன்புடன்
மீனா

N. Kannan

unread,
Jun 11, 2010, 7:56:32 PM6/11/10
to mint...@googlegroups.com
இப்போது எல்லாம் புரிகிறது, முன்னவர் Vinodh பின்னவர் Vinoth, ’ட’கரத்தில் இருக்கிறது சூட்சுமம் :-))
 
நண்பரே என் பதில்கள் பல சமயம் time-integrated பதிலாக இருக்கும். மின்தமிழ் தோன்றிய காலத்திலிருந்து இம்மாதிரிப் பேச்சுக்கள் எத்தனை முறை வந்திருக்கிறதோ அதையெல்லாம் கணக்கில் கொண்டு வரும். பல நேரம் பதில் பொதுவாக இருக்கும். There is no individual என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. நான் இங்கு காண்பது ஒரு பொது தமிழ் மன நீரோட்டம்! எனவே பதில்கள் பொதுப்படையாக அமைவதும் உண்டு. உங்கள் அறிமுகத்திற்கு நன்றி. நான் ஒருவன்தான் மின்தமிழ் தவிர வேறு எங்கும் போவதில்லை என்று தெரிகிறது. ஊர் சுற்றி முடித்து யதாஸ்தானத்தில் குடியிருப்பு :-)) வாருங்கள். வாழ்த்துக்கள்.
 
க.>


நான் இங்கே புதிது.

வினோத்-VINOTH

unread,
Jun 11, 2010, 10:36:59 PM6/11/10
to mint...@googlegroups.com


2010/6/12 N. Kannan <navan...@gmail.com>

இப்போது எல்லாம் புரிகிறது, முன்னவர் Vinodh பின்னவர் Vinoth, ’ட’கரத்தில் இருக்கிறது சூட்சுமம் :-))
 

என் மின்னஞ்சல் vinoth.3v
 
நான் ஒருவன்தான் மின்தமிழ் தவிர வேறு எங்கும் போவதில்லை என்று தெரிகிறது.

ஹிஹி
ஆனா எங்க  தமிழ் நண்பர்கள் அப்படியில்லை. ஒரு குழுமமும் விட்டு வைக்கிறதில்லை.
:)))


ஊர் சுற்றி முடித்து யதாஸ்தானத்தில் குடியிருப்பு :-)) வாருங்கள். வாழ்த்துக்கள்.
 
 
க.>, யதாஸ்தானத்தில் இந்த இரண்டும் புரியவில்லை :(

வரவேற்பிற்கு நன்றி

V, Dhivakar

unread,
Jun 12, 2010, 3:49:54 AM6/12/10
to mint...@googlegroups.com
சிறுகூடல்பட்டி கவியரசர் பிறந்த ஊர் அல்லவா?

தி

2010/6/11 meena muthu <ranga...@gmail.com>

annamalai sugumaran

unread,
Jun 12, 2010, 6:20:02 AM6/12/10
to mint...@googlegroups.com
திரு திருமதி வினைதீர்த்தான் அன்னம் அவர்களுக்கு
எனது  தாமதமான ஆனால் அன்பார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
அன்புடன் 
அண்ணாமலை சுகுமாரன்   
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

karuannam annam

unread,
Jun 14, 2010, 3:23:57 AM6/14/10
to mint...@googlegroups.com
On 6/11/10, meena muthu <ranga...@gmail.com> wrote:
> திரு திருமதி வினைதீர்த்தான் அன்னம் அவர்களுக்கு,
>
> தங்களின் அறுபதாண்டு நிறைவுவிழா புகைப்படங்கள் பார்த்து மகிழ்ந்தோம்!
>
>
>>
>> மீனாமுத்து ஒன்பது நகரக் கோவிலுக்கும் சென்று உள்ளீர்களா?
>>
>
> நான்கு கோவிலுக்குத்தான் சென்றுள்ளேன் அது:
> (ஒக்கூர்) இளையத்தகுடி(எங்கள்) கோவில்,இரணிக்கோவில் பிள்ளையார்பட்டி ,வயிரவன்
> பட்டி .சிறுகூடல்பட்டிதான் நான் பிறந்த ஊர் ஆதலால் எத்தைனையோ
> முறை(2கிமீ)வயிரவன் கோவில் சென்றுள்ளேன். ஆனால் திருமுழுக்காட்டுக்கப்புறம்
> இன்னும் வரவில்லை.
> மிகவும் அழகாக இருக்கிறது கோவில் என்று ஆச்சிவீட்டில் எல்லோரும் சொல்ல
> கேள்விப்பட்டேன்.தாங்கள் எழுதி இருப்பதை படித்ததும் பார்க்க ஆவல்
> கூடுகிறது.அடுத்தமுறை வரும்பொழுது அவசியம் அங்கு வரவேண்டும்.
>
>
>>
>> //குன்றக்குடி,பிள்ளையார்பட்டி,வயிரவன்பட்டி, அரியகுடி ஆன்மிகப் பயணம்
>> மேற்கொள்ளஅழைக்கிறேன்.?//
>>
>
>
>
வணக்கம் திருமிகு மீனா அம்மா
அடுத்த மாதம் ஹுஸ்டன் செல்கிறோம். டிசம்பர் திரும்ப வருகிறோம். தாங்கள்
தாயகம் வரும்போது சொல்லுங்கள்.ஒன்பது நகரக் கோயில்களுக்கும் தகவல்
அறிவித்து குடும்பத்தாருடன் ஆன்மிகப் பயணம் சென்றுவரலாம். விருப்பம் உள்ள
நண்பர்கள் தெரிவித்தாலும் நண்பர்கள் மூலம் தகுந்த ஏற்பாடு செய்யலாம்.

நேமங்கோவில் ஒரு சிற்பக் களஞ்சியம். மாத்தூர் கோவில் பெரிய
கல் திருப்பணி. நான்கு பெரிய சிங்கங்கள் தாங்கும் கற்பலகையில்
வீற்றிருக்கும் நந்தி, கொடுங்கை வேலைப்பாடுகள், சிற்ப மண்டபங்கள்
அமைந்தது. இலுப்பக்குடியில் தாந்தோன்றி ஈஸ்வரர் - அழகம்மை. இரட்டை
வடுகவாகன வைரவர் சிறப்புச்சன்னதி.
நகரக்கோயில்கள் பாணியில்தான் அமைப்பில்தான் பாடல் பெற்ற தலங்களிலும் பிற
இடங்களிலும் நகரத்தார் திருப்பணி செய்த ஏறத்தாழ 100 கோவில்கள்
திருப்பணிகள் அமைந்துள்ளன.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

meena muthu

unread,
Jun 14, 2010, 10:48:20 AM6/14/10
to mint...@googlegroups.com

அடுத்த மாதம் ஹுஸ்டன் செல்கிறோம். டிசம்பர் திரும்ப வருகிறோம்.

>>தங்கள் பயணம் சிறக்க  பிரார்த்திக்கின்றேன்
 
தாங்கள் தாயகம் வரும்போது சொல்லுங்கள்.ஒன்பது நகரக் கோயில்களுக்கும் தகவல்அறிவித்து குடும்பத்தாருடன் ஆன்மிகப் பயணம் சென்றுவரலாம். விருப்பம் உள்ள நண்பர்கள் தெரிவித்தாலும் நண்பர்கள் மூலம் தகுந்த ஏற்பாடு செய்யலாம்.

தங்கள் அன்பிற்கு மிகவும் நன்றி .அவசியம் செல்வோம்.
 

நேமங்கோவில் ஒரு சிற்பக் களஞ்சியம். மாத்தூர் கோவில் பெரிய
கல் திருப்பணி. நான்கு பெரிய சிங்கங்கள் தாங்கும்  கற்பலகையில்
வீற்றிருக்கும் நந்தி, கொடுங்கை வேலைப்பாடுகள், சிற்ப மண்டபங்கள்
அமைந்தது. இலுப்பக்குடியில் தாந்தோன்றி ஈஸ்வரர் - அழகம்மை.  இரட்டை
வடுகவாகன வைரவர் சிறப்புச்சன்னதி.நகரக்கோயில்கள் பாணியில்தான் அமைப்பில்தான் பாடல் பெற்ற தலங்களிலும் பிற இடங்களிலும் நகரத்தார் திருப்பணி செய்த ஏறத்தாழ 100 கோவில்கள் திருப்பணிகள் அமைந்துள்ளன.

>>
சென்ற வருடம் இங்கு நகரத்தார் சங்கத்தில் இருந்து இளையதலைமுறை யினரை மட்டும்(அவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய  ஒன்று என்று! )ஒரு சுற்றுலா பயணமாக ஒன்பது நகரக்கோவில்களையும் கூட்டிச்சென்று காண்பித்து வந்தார்கள்! பிள்ளைகள் யாவரும் பல தகவல்களை சேகரித்து வந்தார்கள்!

எல்லாக்கோவில்களையும் புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன். ஆனாலும் நேரில் பார்ப்பது போல் வராது அவசியம் பார்க்கவேண்டும்தான். <<

நன்றி
மீனா
 

அன்புடன்
 சொ.வினைதீர்த்தான்

--
Reply all
Reply to author
Forward
0 new messages