
வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய இராமானுஜமுனி ஒரு முறை பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும் சேர்ந்து காட்சி தரும் போது தான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசனகவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார். சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்த போது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம், மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம். அன்றிலிருந்து இராமானுஜர் 'உடையவர்' என்ற திருநாமத்தாலும் அழைக்கப் படுகிறார்.
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்வனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே!
என் தலைவனை, என் தந்தை, அவர் தந்தை, அவர் தந்தை இப்படி என் முன்னோர் அனைவருக்கும் தலைவனை, குளிர்ந்த தாமரைக் கண்களை உடையவனை, பூங்கொம்பினை ஒத்த நுண் இடையாளான திருமகளைத் தன் மார்பில் உடையவனை, என் இறைவனைத் தொழாய் மட நெஞ்சமே!
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனை
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்!
என் மனமே! உன்னை நான் பெற்றதால் நன்றாகப் போனது. என்றும் இளையவனை, மலராளாகிய பெரியபிராட்டியின் மணவாளனை நான் தூங்கும் போதும் (என் உயிர் பிரியும் போதும்) நீ விடாது தொடர்ந்து போகிறாய். நன்று. நன்று. உன்னைப் பெற்று நான் என்ன தான் செய்ய முடியாது? இனி எனக்கு என்ன குறை?
நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே
என் நெஞ்சமே! நீயும் நானும் இப்படி கூட்டணி அமைத்து அவனை வணங்கி வந்தால், இவ்வுலகத்தில் நமக்குத் தாயும் தந்தையுமாய் இருக்கும் ஈசன் மணிவண்ணன் என் தந்தை வேறெந்த பிறவி நோயும் நமக்கு வரும்படி விடமாட்டான். சொன்னேன் கேட்டுக் கொள்.
எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே
வானவர்கள் எல்லாம் 'என் தந்தையே! என் தலைவனே' என்று தங்கள் சிந்தையில் வைத்து வணங்கும் செல்வனை (சம்பத் குமாரனை) இந்த உலகினில் பிறந்து எண்ணற்ற பாவங்களைச் செய்த நானும் 'எந்தையே' என்றும் 'எம்பெருமான்' என்றும் சொல்லி சிந்தையில் வைப்பேன். என்ன பேறு பெற்றேன்?
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே.
வழியில் போகும் ஒருவர் செல்வநாராயணன் என்று சொல்லவும் அதனைக் கேட்டு என் கண்களில் நீர் நிரம்பி வழியும். இது என்ன மாயம்? எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்த நான் எப்படி ஆகிவிட்டேன்? இரவும் பகலும் இடைவீடு இன்றி என்னை நம்பித் தன்னை எனக்குத் தந்து என்னை விடான் என் அழகிய மணவாள நம்பி.
(இவை மாறன் சடகோபனாகிய நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள்)
***
கோதை பிறந்த ஊராம் தென்புதுவை நகரில் (ஸ்ரீவில்லிபுத்தூரில்) பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவம். கோதை நாச்சியாரும் ரெங்க மன்னாரும் மகிழ்ந்திருக்கும் காட்சி இங்கே.

***
மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கப் படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்தவாரிக்காகக் குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே.

(பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆற்றில் இறங்கும் படம் இல்லாததால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் படத்தை இங்கு இடுகிறேன்)
***
துர்வாச முனிவர் வந்து கொண்டிருக்கிறார். கோபத்திற்குப் பெயர் போனவர். ஆனால் இன்றோ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் போல் இருக்கிறது. அவரது திருக்கரத்தில் ஒளிவீசும் ஒரு அழகிய மலர் மாலை இருக்கிறது. அதனை மிகவும் பெருமையுடனும் பக்தியுடனும் ஏந்திக் கொண்டு வருகிறார். அப்போது அந்த வழியாகத் தேவர்களின் தலைவனான இந்திரன் தன் ஐராவதம் என்னும் யானையில் ஏறிக் கொண்டு பவனி வருகிறான். தேவர்களின் தலைவனான தன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுவதைக் கேட்டுக் கேட்டு மிக்கப் பெருமிதம் அவன் முகத்தில் தெரிகிறது.
துர்வாச முனிவர் இந்திரனின் முன்னால் சென்று 'தேவேந்திரா. உன் புகழ் எல்லா உலகங்களிலும் நிறைந்து இருக்கிறது. இப்போது அன்னை மகாலக்ஷ்மியைத் தரிசித்துவிட்டு அவர் அன்போடு அளித்த இந்த மலர் மாலையுடன் வந்து கொண்டிருக்கிறேன். அன்னை கொடுத்த இந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்ள தேவர்களின் தலைவனான உனக்குத் தான் உரிமை இருக்கிறது. இதோ வாங்கிக் கொள்' என்று சொன்னார்.
விண்ணோர் தலைவனும் அந்த மலர் மாலையை அலட்சியமாக அங்குசத்தால் வாங்கி ஐராவதத்தின் தலையில் வைத்தான். தேவர்களின் தலைவனான தான் கேவலம் இன்னொரு தெய்வம் கொடுத்த மலர்மாலையை பிரசாதம் என்று வணங்கி வாங்கி கொள்வதா என்ற எண்ணம். ஆனாலும் கொடுப்பவர் துர்வாசர் என்பதால் பேசாமல் வாங்கி கொண்டான். யானையோ தன் தலையில் வைக்கப்பட்ட மலர்மாலையை உடனே எடுத்துத் தன் கால்களின் கீழே போட்டு துவைத்துவிட்டது. அன்னையின் பிரசாதத்திற்கு ஏற்பட்ட அவமரியாதையைக் கண்டதும் வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம் வந்து விட்டது.
'தேவேந்திரா. தேவர்களின் தலைவன், இத்தனைச் செல்வங்களின் தலைவன் என்ற மமதை, அகில உலகங்களுக்கும் அன்னையான மகாலக்ஷ்மியின் பிரசாதத்தையே அவமதிக்கும் அளவுக்கு உன்னிடம் இருக்கிறது. எந்த செல்வம் இருப்பதால் இந்த விதமாய் நீ நடந்து கொண்டாயோ அந்த செல்வங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும்' என்று சாபம் கொடுத்தார்.
துர்வாச முனிவரின் சாபத்தின் படி இந்திர லோகத்தில் இருந்த எல்லா செல்வங்களும் பாற்கடலில் வீழ்ந்துவிட்டன. அன்னை லக்ஷ்மியும் பாற்கடலில் மறைந்தாள். தேவர்கள் எல்லோரும் துன்பம் வரும்போது செய்யும் வழக்கம் போல் பாற்கடலில் பள்ளி கொண்டவனைப் போய் வணங்கினார்கள். இறைவனின் கட்டளைப்படி அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையத் துவங்கினார்கள்.
மந்தர மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்கள் ஒரு பக்கமாகவும் தேவர்கள் ஒரு பக்கமாகவும் பாற்கடலைக் கடைந்து கொண்டிருக்கின்றனர். நாட்கள் பல சென்று விட்டன. அழிந்து போன செல்வங்கள் திரும்பி வருவதைப் போல் தெரியவில்லை. ஆனால் திடீரென்று வெப்பம் அதிகமாகிவிட்டது. பாற்கடலில் இருந்து ஆலமென்னும் விஷம் வெளிவருகிறது. அதே நேரத்தில் வாசுகிப் பாம்பும் உடல்வலி தாங்காமல் விஷத்தைக் கக்குகிறது. இரண்டு விஷமும் சேர்ந்து கொண்டு ஆலகாலமாகி எல்லா உலகையும் அழித்துவிடும் போல் இருக்கிறது.
உலகங்களின் துன்பத்தைக் கண்டு பொறுக்காத கருணாமூர்த்தியாகிய மகேசன் உடனே அந்த ஆலகாலத்தை கையினில் ஏந்தி விழுங்கிவிட்டார். காலகாலனாகிய அவரை எந்த விஷம் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அன்னை பார்வதியால் அதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அண்ணல் உண்ட விஷம் கழுத்திலேயே தங்கிவிடும் படி அவரின் கழுத்தில் கையை வைத்தாள். விஷம் அங்கேயே நின்றது. விஷத்தின் வலிமையால் அண்ணலின் கழுத்து நீல நிறம் பெற்றது. அண்ணலும் 'நீலகண்டன்' என்ற திருப்பெயரைப் பெற்றார்.
இன்னும் சில நாட்கள் சென்றன. எல்லா செல்வங்களும் ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளிவரத் தொடங்கின.



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
--
அகநானூறில் காதலனைப் பிரிந்து வாடும் காதலியின் முகத்தை காவிரி ஆற்றின்
மணலுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. திருவரங்கத்தில் நடைபெரும் பங்குனி
உத்திரத் திருவிழா பற்றிய குறிப்பு சுவாரசியம்.
அகம் 137. பாலை - உறையூர் முதுகூத்தனார்
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்
சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர்
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்
தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,
தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
நல் எழில் நெடு வேய் புரையும்
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.
சிலப்பதிகாரத்தில் ஸ்ரீரங்கம் பற்றிய குறிப்பில் "விரிந்த அலைகளோடு கூடிய
மிகப் பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும்
மார்பை உடையவரும், நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், ஆயிரம் தலைகளுடைய
ஆதிசேஷன் என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுறச்சாய்ந்து
கொண்டிருக்கும் தன்மை, நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினைச் சூழ்ந்து
படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது" என்று கூறப்பட்டுள்ளது.
மதுரைக் காண்டம், காடுகாண் காதை(11)
மாமுது மறையோன் வந்திருந் தோனை
யாது நும்மூர் ஈங்கென் வரவெனக்
கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின்
மாமறை யாளன் வருபொருள் உரைப்போன்
நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்
பால்விரிந் தகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற்
பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
வீங்குநீ ரருவி வேங்கட மென்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையி னேந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
விஜயராகவன்
On 27 Mar, 17:07, vishalam raman <rvisha...@gmail.com> wrote:
> பங்குனி மாதம் உத்தரம் நக்ஷத்திரத்தில் பௌர்ணமியில் ஒரு நாலு
> திருமணங்கள்,,அதுவும்
> கடவுளுக்கு நடந்தன அப்படி என்றால் எத்தனைச் சிற்ந்த நாள் ஆக இருக்கும் ,இந்த
> நாள்
> வைஷ்ண்வர் ,சைவர்கள் இரு சாரார்களும் கொண்டாடும் நாள் ,
> இன்று தான் பார்வதி. பரமேஸ்வருட்ன் திருமணம் செய்துக்கொண்டாள்...முருகப்
> பெருமான்
> தேவி தெய்வயானையை மணம் புரிந்த நாள்,ஸ்ரீஆண்டாள்
> ஸ்ரீ ரங்கநாதனை மண்ந்துக் கொண்டாள்.
> .ஸ்ரீராமர் சீதையின்
> கல்யாணமும் இந்த நாளில் தான் தவிர ஸ்ரீ ராமரின் சகோதர்களின் திருமணங்களும் இநத
> நாளில் நடந்தன என்றும் தெரியவந்தது
> திருப்பதியின் ஏழு புனிதகுளங்களில் ஒன்றான தும்புரு
> தீர்த்தம் இன்றுதான்வந்ததாம் ,,பல கோவில்களில்
> அதாவது ஸ்ரீரங்கம் பேரூர், மைலாப்பூர் திருப்பதி
> சிங்கப்பூர் போன்ற இடங்களில் இன்று திருவிழாக்கோலம் பார்க்க கண்கள் கோடி
> வேண்டும் ,
> மிக நல்ல பகிர்வு திரு குமரன் அவர்களே
>
> 2010/3/27 Kumaran Malli <kumaran.ma...@gmail.com>
>
>
>
> > மார்ச் 29, 2010 பங்குனி உத்திரத் திருநாள். ஆன்மிக ஆர்வலர்களுக்கு இந்த
> > நாளின் பெருமை மிக நன்றாகத் தெரியும். பலவிதங்களிலும் பெருமை வாய்ந்த திருநாள்
> > இது.
>
> > கங்கையில் புனிதமான காவிரி நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க
> > நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன்
> > திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது
> > இந்த உன்னதமான திருநாளில் தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்விய
> > தரிசனம் கிடைக்காது. அண்ணலும் அவளும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத்
> > திருக்கோலத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய்
> > வரும் நம்பிக்கை.
>
> > வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய இராமானுஜமுனி ஒரு முறை
> > பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும்
> > சேர்ந்து காட்சி தரும் போது தான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம்,
> > ஸ்ரீரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசனகவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார்.
> > சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்த போது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு
> > திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம்,
> > மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம். அன்றிலிருந்து இராமானுஜர்
> > 'உடையவர்' என்ற திருநாமத்தாலும் அழைக்கப் படுகிறார்.
>
> > *எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
> > தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
> > கொம்பராவு நுண்ணேரிடை மார்வனை
> > எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே!
> > *
> > என் தலைவனை, என் தந்தை, அவர் தந்தை, அவர் தந்தை இப்படி என் முன்னோர்
> > அனைவருக்கும் தலைவனை, குளிர்ந்த தாமரைக் கண்களை உடையவனை, பூங்கொம்பினை ஒத்த
> > நுண் இடையாளான திருமகளைத் தன் மார்பில் உடையவனை, என் இறைவனைத் தொழாய் மட
> > நெஞ்சமே!
>
> > *நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
> > என் செய்யோம் இனி என்ன குறைவினம்
> > மைந்தனை மலராள் மணவாளனை
> > துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்!
> > *
> > என் மனமே! உன்னை நான் பெற்றதால் நன்றாகப் போனது. என்றும் இளையவனை, மலராளாகிய
> > பெரியபிராட்டியின் மணவாளனை நான் தூங்கும் போதும் (என் உயிர் பிரியும் போதும்)
> > நீ விடாது தொடர்ந்து போகிறாய். நன்று. நன்று. உன்னைப் பெற்று நான் என்ன தான்
> > செய்ய முடியாது? இனி எனக்கு என்ன குறை?
>
> > *நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
> > நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
> > தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
> > வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே
> > *
> > என் நெஞ்சமே! நீயும் நானும் இப்படி கூட்டணி அமைத்து அவனை வணங்கி வந்தால்,
> > இவ்வுலகத்தில் நமக்குத் தாயும் தந்தையுமாய் இருக்கும் ஈசன் மணிவண்ணன் என் தந்தை
> > வேறெந்த பிறவி நோயும் நமக்கு வரும்படி விடமாட்டான். சொன்னேன் கேட்டுக் கொள்.
>
> > *எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
> > சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
> > எந்தை எம்பெருமான் என்று வானவர்
> > சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே
> > *
> > வானவர்கள் எல்லாம் 'என் தந்தையே! என் தலைவனே' என்று தங்கள் சிந்தையில் வைத்து
> > வணங்கும் செல்வனை (சம்பத் குமாரனை) இந்த உலகினில் பிறந்து எண்ணற்ற பாவங்களைச்
> > செய்த நானும் 'எந்தையே' என்றும் 'எம்பெருமான்' என்றும் சொல்லி சிந்தையில்
> > வைப்பேன். என்ன பேறு பெற்றேன்?
>
> > *செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
> > மல்கும் கண்பனி நாடுவன் மாயமே
> > அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
> > நல்கி என்னை விடான் நம்பி நம்பியே.
> > *
> > வழியில் போகும் ஒருவர் செல்வநாராயணன் என்று சொல்லவும்
>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
--
Dev
On Mar 27, 12:32 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> பங்குனி உத்திரம் ஸ்ரீரங்கத்தில் கொண்டாடுவதை சிலப்பதிகாரமும்,
> அகநானூறும் விவரிக்கிறன.
>
> http://www.desikan.com/blogcms/?query=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%...
> ...
>
> read more »
கலகம்-ன்னா அவ்ளோ ஆசையா நுமக்கு?
இக்கட சூடண்டி!
<a href="http://madhavipanthal.blogspot.com/2007/03/blog-
post.html">மட்டையால் தர்ம அடி வாங்கிய பெருமாள்!</a>
<a href="http://madhavipanthal.blogspot.com/2007/04/2.html">சிற்றாதே
பேசாதே செல்வப் பெண்டாட்டி!</a>
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Mar 27, 1:42 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:
> திருமகளும், குமர நல் தந்தையும்
> பெருவளங்கள் அனைத்தும் பெற்று வாழ்க
>
> குமரன் இந்தப் பங்குனித் திருநாளுக்குப் பிரணய கலஹம் இருந்தா
> போடுங்களேன்.
>
> On 3/27/10, Kumaran Malli <kumaran.ma...@gmail.com> wrote:
>
>
>
> > மார்ச் 29, 2010 பங்குனி உத்திரத் திருநாள். ஆன்மிக ஆர்வலர்களுக்கு இந்த
> > நாளின் பெருமை மிக நன்றாகத் தெரியும். பலவிதங்களிலும் பெருமை வாய்ந்த திருநாள்
> > இது.
>
> > கங்கையில் புனிதமான காவிரி நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க
> > நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன்
> > திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது
> > இந்த உன்னதமான திருநாளில் தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்விய
> > தரிசனம் கிடைக்காது. அண்ணலும் அவளும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத்
> > திருக்கோலத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய்
> > வரும் நம்பிக்கை.
>
> > வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய இராமானுஜமுனி ஒரு முறை
> > பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும்
> > சேர்ந்து காட்சி தரும் போது தான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம்,
> > ஸ்ரீரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசனகவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார்.
> > சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்த போது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு
> > திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம்,
> > மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம். அன்றிலிருந்து இராமானுஜர்
> > 'உடையவர்' என்ற திருநாமத்தாலும் அழைக்கப் படுகிறார்.
>
> > *எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
> > தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
> > கொம்பராவு நுண்ணேரிடை மார்வனை
> > எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே!
> > *
> > என் தலைவனை, என் தந்தை, அவர் தந்தை, அவர் தந்தை இப்படி என் முன்னோர்
> > அனைவருக்கும் தலைவனை, குளிர்ந்த தாமரைக் கண்களை உடையவனை, பூங்கொம்பினை ஒத்த
> > நுண் இடையாளான திருமகளைத் தன் மார்பில் உடையவனை, என் இறைவனைத் தொழாய் மட
> > நெஞ்சமே!
>
> > *நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
> > என் செய்யோம் இனி என்ன குறைவினம்
> > மைந்தனை மலராள் மணவாளனை
> > துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்!
> > *
> > என் மனமே! உன்னை நான் பெற்றதால் நன்றாகப் போனது. என்றும் இளையவனை, மலராளாகிய
> > பெரியபிராட்டியின் மணவாளனை நான் தூங்கும் போதும் (என் உயிர் பிரியும் போதும்)
> > நீ விடாது தொடர்ந்து போகிறாய். நன்று. நன்று. உன்னைப் பெற்று நான் என்ன தான்
> > செய்ய முடியாது? இனி எனக்கு என்ன குறை?
>
> > *நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
> > நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
> > தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
> > வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே
> > *
> > என் நெஞ்சமே! நீயும் நானும் இப்படி கூட்டணி அமைத்து அவனை வணங்கி வந்தால்,
> > இவ்வுலகத்தில் நமக்குத் தாயும் தந்தையுமாய் இருக்கும் ஈசன் மணிவண்ணன் என் தந்தை
> > வேறெந்த பிறவி நோயும் நமக்கு வரும்படி விடமாட்டான். சொன்னேன் கேட்டுக் கொள்.
>
> > *எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
> > சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
> > எந்தை எம்பெருமான் என்று வானவர்
> > சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே
> > *
> > வானவர்கள் எல்லாம் 'என் தந்தையே! என் தலைவனே' என்று தங்கள் சிந்தையில் வைத்து
> > வணங்கும் செல்வனை (சம்பத் குமாரனை) இந்த உலகினில் பிறந்து எண்ணற்ற பாவங்களைச்
> > செய்த நானும் 'எந்தையே' என்றும் 'எம்பெருமான்' என்றும் சொல்லி சிந்தையில்
> > வைப்பேன். என்ன பேறு பெற்றேன்?
>
> > *செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
> > மல்கும் கண்பனி நாடுவன் மாயமே
> > அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
> > நல்கி என்னை விடான் நம்பி நம்பியே.
> > *
> > வழியில் போகும் ஒருவர் செல்வநாராயணன் என்று சொல்லவும் அதனைக் கேட்டு என்
> > கண்களில் நீர் நிரம்பி வழியும். இது என்ன மாயம்? எவ்வளவு தாழ்ந்த நிலையில்
> > இருந்த நான் எப்படி ஆகிவிட்டேன்? இரவும் பகலும் இடைவீடு இன்றி என்னை நம்பித்
> > தன்னை எனக்குத் தந்து என்னை விடான் என் அழகிய மணவாள நம்பி.
>
> > (இவை மாறன் சடகோபனாகிய நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள்)
> > ***
>
> > கோதை பிறந்த ஊராம் தென்புதுவை நகரில் (ஸ்ரீவில்லிபுத்தூரில்) பங்குனிப்
> > பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க
> > மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவம். கோதை
> > நாச்சியாரும் ரெங்க மன்னாரும் மகிழ்ந்திருக்கும் காட்சி இங்கே.
>
> > *கோதை பிறந்த ஊர் கோவிந்த வாழும் ஊர்*
> > *சோதி மணி மாடம்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe from this group, send email to mintamil+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
சைவ சமய வழிபாடுகளிலும், வைணவ சமய வழிபாடுகளிலும் பங்குனி உத்திரத்
திருநாள் (இவ்வாண்டு மார்ச் 29) முக்கியப் பங்கு வகிக்கிறது. பல்வேறு
தெய்வீகத் திருமணங்கள் இந்நாளில் நடந்ததாகப் புராணம் இயம்புகிறது.
முக்கியமாக,
1. பரமேஸ்வரன் - பார்வதி
2. இராமர் - சீதை
3. முருகப் பெருமான் - வள்ளி
கல்யாணங்கள் இத்திருநாளில் தான் நடைபெற்றதாகப் பெரியோர்கள்
கூறுகின்றனர்.
ஹரிஹர அம்சமான ஐயப்பன் அவதரித்த திருநாளும் இதுவே.
இந்த பங்குனி உத்திரத் திருநாள் பல்வேறு ஆலயங்களிலும், சமய
நிலையங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
வைணவர்களால் பெரிய கோயில் என்று சிறப்பித்து அழைக்கும் திருவரங்கத்தில்
வருடத்தில் பன்னிரண்டு மாதங்களிலும் உத்சவங்கள் நடைபெற்று வருவதை இன்றும்
கண்குளிர, மனங்குளிர சேவிக்கலாம்.
பங்குனியில் நடைபெறும் உத்சவத்தில் 9வது திருநாளில் (பங்குனி உத்திரம்)
பெருமாள் தன் பிரதான தேவியாரான ஸ்ரீரங்க நாச்சியாரைக் காண புறப்பட்டு
வருவார்.
அதற்கு இரண்டு நாட்கள் முன்பாக ஸ்ரீரங்கநாதன், சோழநங்கைக்காக உறையூர்
சென்று ஒரு நாள் தங்கியிருந்து வந்த விவரத்தை அறிந்து, தன்னையல்லாமல்
வேறொருவரைத் தன்னருளுக்குப் பாத்திரமாக்கிக் கொண்டதைக் காணப் பொறாமல்,
"பெருமாள் தன்னைப் பார்க்க வரக்கூடாது" எனத் தாயார் தடை செய்வாள். இந்தப்
பிணக்கை நம்மாழ்வார் இருந்து தீர்த்து வைக்கிறார். தன் தவற்றைப் பெருமாள்
ஒப்புக் கொள்ள, பெருமாளை நாச்சியார் ஏற்றுக் கொள்கிறார். பிறகு
பெருமாளும், தாயாரும் அருகருகே கல்யாணக் கோலமாக அன்பே வடிவமாக
எழுந்தருளி, "சேர்த்தி" என்னும் சேவையில் காட்சி தருவார்கள்.
இந்த உத்சவம் "மட்டையடி உத்சவம்" என்ற பெயரில் ஆலயத்தில் உள்ள ஐந்தாவது
திருச்சுற்று பிரகாரத்தில் உள்ள பங்குனி உத்திர மண்டபத்தில் நடைபெறும்.
இந்த பங்குனி உத்திர மண்டபமே சரணாகதி தத்துவம் வெளிப்படும் இடமாக
அமைகிறது.
ஆம், உடையவர் என்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜர் பெருமாளும், தாயாரும்
சேர்த்தியாகச் சேவை சாதித்த காலத்தில் தான் வடமொழியில் உரைநடையாக உள்ள
"கத்யத்ரய"த்தை அருளிச் செய்தார். பிராட்டியாரிடமும், பெருமாளிடமும்
முழுவதுமாக சரணாகதி அடைவதை உணர்த்தும் ஒரு விண்ணப்பமாக இதனைப் பாராயணம்
செய்வது மரபு.
இந்த ஆனந்தம் ஒருபுறமிருக்க, பார்வதி - பரமேஸ்வரரின் திருமண வைபவத்தை
மகாகவி காளிதாஸரின் "குமார சம்பவம் காவியம்" மற்றோர் ஆனந்தமயமாக
அடியார்களுக்குக் காட்டுகிறது. காளிதாஸ் தன் குமார சம்பவத்தில் தெய்வத்
தன்மையின் முழுமையும் பெற்றுள்ள சிவபிரானைக் காவியத் தலைவராகவும்,
பார்வதியைக் காவியத் தலைவியாகவும் அமைத்துள்ளார்.
இமயமலையில், சிவபெருமானின் திருக்கரம் பற்றும் பேறு பெறத் தவம்
செய்கிறாள் உமையன்னை. மஹாதேவர், அன்னையின் தவத்தை மெச்சுகிறார்! தம்
சார்பில் "சப்த முனிவர்களை" அனுப்பி, ஹிமவானிடம் பெண் கேட்கிறார்.
ஹிமவானின் சம்மதம் பெற்ற பின், பார்வதியை மணந்து கொள்ள சிவபெருமான்
மாப்பிள்ளை கோலத்தில் வருகின்றார். அந்த அழகைக் கண்ணுற்ற பெண்கள்,
சிவபெருமான் கோபத்தினால் மன்மதனுடைய உடலை எரிக்கவில்லை; மன்மதன் தன்னைவிட
அழகுவாய்ந்த சிவபிரானைக் கண்டவுடன் வெட்கமுற்றான்; "தான் இனி உயிருடன்
வாழ்தல் கூடாது" எனக்கருதி யோக முறையினால் உடலை சாம்பலாக்கிக் கொண்டான்
போலும், என தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள் என்று கவி காளிதாசன்
பாடுகின்றார்.
இதைவிட சிவபெருமானின் சுந்தர ரூபத்தை வர்ணிக்க வார்த்தைகள் வேண்டுமா?
சிவ - பார்வதி கல்யாணம், பல்வேறு சிவாலயங்களில் வருடாந்திரப்
பெருவிழாவின் ஒரு பகுதியாக, பங்குனி உத்திர தினத்தன்று சிறப்பாகக்
கொண்டாடப்படுகிறது. சென்னை தங்கசாலைத் தெருவில் உள்ள சைவ சமய பக்த ஜன சபை
வளாகத்தில் (கந்த கோட்டம் அருகில்) மார்ச் 29ம் தேதியன்று மீனாட்சி -
சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க, சபையின் செயலரை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி:
சரவணன், +91-44-25354490
http://www.dinamani.com/Images/article/2010/3/23/lordlakshmiperumal.jpg
பங்குனி உத்திரத் தினத்தன்று அருகிலுள்ள சிவன், பெருமாள் ஆலயங்களுக்குச்
சென்று தெய்வீகத் திருமண விழாவில் பங்கேற்று மகிழ்வோமாகுக!
எஸ். வெங்கட்ராமன்
நன்றி:- தினமணி
அருமையான கட்டுரை. வாழ்த்துகள்.
இன்னுமொரு நூற்றாண்டு இனிது இரும்
திருவேங்கடமணி
நன்றி தமிழ்த்தேனீ ஐயா, விசாலம் அம்மா, மோகனரங்கன் ஐயா, கமலம் அம்மா, திருவேங்கடமணி ஐயா.
நஞ்சீயர் திருவடிகளே சரணம். நஞ்சீயரின் திருநட்சத்திரமும் பங்குனி உத்திரம் தான் என்று சொன்னதற்கு நன்றி ஷைலஜா அக்கா.
என்னடாது மின்தமிழுக்குக் கொஞ்ச நாளா கந்தன் கருணையே இல்லாமல் இருக்கிறதே
என்று ஏங்கினேன். வந்தார் குமரன்!
குமரன்! இங்கு துஞ்சுதல் என்பதை உறக்கமென்றே கொண்டும் பொருள் சொல்லலாம்.
அது இன்னும் சுவையாய் இருக்கும். உதாரணமாக, பகல் பொழுதில் லூட்டி
அடித்துவிட்டு, இரவில் உறங்கப்புகுகிறோம். தூங்கவிடாது சிந்தனை மூட்டம்.
பின் மெல்ல, மெல்லக் கனவு நிலை. அப்போதும் உள்ளுக்குளே ஒரே சினிமா!
திடீரென்று பிளாக் அவுட்! நினைவேதுமற்ற ஆழ்துயில். பகலில் நம்மை
இயக்குவது நான் எனும் அகங்காரம். மார் தட்டிக் கொண்டே ஓட்டி விடுகிறோம்.
கனவு நிலையில் கூட `கனவு காண்பவன்` விழிப்பாக இருக்கிறான். `நான்`
அப்போதுமுண்டு. ஆனால், நான்` அற்ற நிலை என்பது ஆழ்துயில்தான். `நான்`
அழிந்த நிலையில் ஆத்மாவாகிய நமது உறைவிடம் எது? தினப்படி ஒருநாள்
என்பதைப் ஒரு பிரளய காலம் என்றும் நோக்கலாம். ஏனெனில் தூங்கியவன்
விழித்தால்தானே மறுநாள். அவனைப் பொறுத்தவரை ஆழ்நிலை உறக்கம் என்பது
சாவிற்கு ஒப்பாகும். எனவேதான் பிரளய காலத்தில் ஆலிலைக்கண்ணன் அனைத்து
ஜீவன்களையும் தன் மணி வயிற்றில் காத்துத் தருகிறான் என்பது ஐதீகம்.
உண்மையில் ஆழ்துயிலில் `நாம்` எங்கிருக்கிறோம்? அப்போது நமக்குத் துணை
எது?
”துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்”
பகலில் நம்மைக் காப்பது ஒருபுறமிருக்க துஞ்சும் போது விடாது தொடர்ந்து
அவன் நம்மைக் காக்கிறான்! இல்லையா ;-)?
>
> மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கப் படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்தவாரிக்காகக் குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே.
>
குமரன்! தல்லாகுளத்திலும் ஒரு பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயிலுண்டு!
>
> பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர்மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் பிறந்த நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப் படுகிறது.
>
இதைத்தான் சிலாகித்து புருஷசூக்தம் போன்ற வேதங்கள் பேசுகின்றன.
ஆழ்வார்களும் வேதத்தின் அடியொட்டி இந்நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம்
தருகின்றன. கடல் மகள் மாலையுடன் வந்த பின், `தேவாதி தேவன்` யார்? தன்
மணாளன் யார் என்று தேடுகிறாள். ஏனெனில் அப்போது அங்கு எல்லாத்
தேவர்களும், அசுரர்களும் இருக்கிறார்கள். நேரே போய் நாரணன் கழுத்தில்
மாலையிடுகிறாள். அவள் அடையாளம் காட்டவில்லையெனில் பலருக்கு யார், தேவாதி
தேவன் என்று தெரிந்திருக்காது. இது குறித்த பரனூர் பெரியவரின் விளக்கத்தை
ஆழ்வார்கடியான் வலைப்பதிவில் கேட்டு அறியலாம்!
http://thirumozi.blogspot.com/
> >பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவு தான் நமக்கு வருகிறது. எனக்கும் அப்படித் தான். ஆனால் நாள் செல்லச் செல்ல நம் சமயத்தில் உள்ள மற்ற கடவுளர்களுக்கும் இந்த திருநாளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கும் மேலாக பல பெருமைகள் இந்தத் திருநாளுக்கு இருக்கலாம். படிப்பவர்கள் நான் எதையாவது விட்டிருந்தால் தயைசெய்து சொல்லுங்கள்.
>>
நான் அரங்கத்து ஆளோ, ஆழ்வார் திருநகரி ஆளோ இல்லை. சிவ ஸ்தலத்தில் பிறந்து
சிவன் கோயிலே கதி என்று கிடந்தவன். எனக்கும் பங்குனி என்றால் கந்தன்
கோயில்தான் நினைவிற்கு வரும். பால் காவடி, புஷ்பக் காவடி என்று
அமர்க்களப்படும்!
உண்மையில் தமிழகத்தின் சிற்றூரில் பிறக்கும் ஒரு வைஷ்ணவனை தன் மடியில்
வைத்துக் காப்பது சிவனும், முருகனுமே என்பதில் சந்தேகமில்லை!!
க.>
> குமரன்! தல்லாகுளத்திலும் ஒரு பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயிலுண்டு!
>
There is a Prasanna Venkatesa Perumal kovil in NSC Bose Road in
Chennai.
http://shanthiraju.wordpress.com/temples-within-chennai/
It is at the commercial heart of old Madras.
75 years back, NSC Bose Road/Waltax Road were for Madras what Times
Square is to New York.
Vijayaraghavan
முகப்புக் கோயில்? எந்த ஊர்? என்ன அழகு? (சோழர் கோயிலோ?)
க.>
2010/3/28 விஜயராகவன் <vij...@gmail.com>:
> http://shanthiraju.wordpress.com/temples-within-chennai/
>