உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் (IATR) சென்னையில் நடத்தும் "தமிழின் தொன்மை"என்ற இரண்டு நாள் கருத்தரங்கம் "தமிழின் தொன்மை" என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கினைச் சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்தின், கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில், விவேகானந்தர் அரங்கில் சனவரி, 23-24 ஆகிய நாள்களில் நடத்தவிருப்பதைத் தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இக்கருத்தரங்கு ஐந்து முக்கிய தலைப்புகளை மையமாகக் கொண்டு நடைபெறும்:
-தமிழரைச் சார்ந்த தொல்லியல் ஆய்வுகளில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்
-தமிழ்மரபு சார்ந்த மருத்துவம் (சித்த மருத்துவம்)
-சங்க இலக்கியம்
-தமிழ் மற்றும் தமிழரைப் பற்றிய மாணவர் ஆராய்ச்சி கட்டுரைகள்
-பல்வேறு நாடுகளில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் (IATR)
கிளைகள் குறித்த கலந்துரையாடல்
இந்நிகழ்வு மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வருங்காலத்தில் அவர்களின் ஆய்வுகளை வெளியிடுவதற்கும் மாநாடுகளில் பங்கேற்பதற்கும் உதவக்கூடும். இது குறித்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விளக்க குறிப்பை (information brochure) தங்கள் கல்லூரி மாணவர்களின் கவனத்திற்குக் கொணர்ந்து கருத்தரங்க நிகழ்வில் பங்கேற்கச் செய்யுமாறு கோருகிறோம்.
* இணைப்பிலும் அறிவிப்பு இணைக்கப் பட்டுள்ளது