கரிகாலன் - Elephantiasis/Filariasis

250 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Jan 16, 2012, 1:55:15 PM1/16/12
to mint...@googlegroups.com
அன்புள்ள மின்தமிழருக்கு
கரிகாலன் பற்றிய ஓர் கட்டுரை வல்லமை மின்-இதழில் வைத்தேன்
ஈங்கு அதன் நகலைக்  காண்க 
அன்புடன்
நூ த லோ சு
மயிலை
---------------
 கரிகாலன்
 நூ த லோகசுந்தரம், மயிலை
 
சங்ககால சோழமன்னர்களில் புகழ்பெற்ற ஒரு பெருமன்னன் 'கரிகால்வளவன்' (அ) 'கரிகால் பெருவளத்தான்'. கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப்பாலை, முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருநர் ஆற்றுப்படை முதலிய பத்துப்பாட்டு பாட்டுடைத் தலைவனும், அகநானூறு 55, 125, 141, 246, 376 புறநானூறு 7, 65, 66, 224, சிலப்பதிகாரம் 6-கடலாடு காதை, 21-வஞ்சின மாலை, மணிமேகலை 1-விழாவறை காதை, குலோத்துங்க சோழனுலா கண்ணி-18, முதலிய வற்றில் பெருவீரன் புகழ்பல சேர்ந்தவன் என குறிகப்பட்டுள்ளவன் ஆவான். ஈங்கு நான் குறிக்க இருப்பது அப்பெருமன்னன் தொடர்புடைய வரலாறு ஏதும் இல்லை கரிகாலன் என்னும் பெயரில் காணப்படும் சொற்களின் விளக்கம் மட்டும். உடற்கூற்றியல் பற்றியதாகக் காண்பது .
 
இப்பெயர் வந்தமைக்கு பலர் இம்மன்னன் அரசுகட்டிலில் ஏறியபோது எழுந்த ஓர் நிகழ்சியில் உடன் பிறந்தோருடன் முரண்பட்டு ஆட்சிப் பொருப்பு ஏற்பதில் நிகழ்ந்த தீயில் தப்பி வந்தபோது கால் கரிகியது அதனால் கரிந்த புண்வந்த கால் உடைவனாதலால் அவ்வாறு வழங்கப் பெற்றான் என எழுதிச் சென்றனர். தமிழர் 'வீரம்'-'காதல்' என இருபொருளுக்கே முதன்மை தருவோர் என வரலாறு காட்டுகின்றது. வெண்ணிப் பரந்தலைப் போர் எனப் பற்பல போரில் வீரத்தில் திகழ்ந்த ஓர் பெருமன்னனுக்கு அதை விடுத்து தப்பிவந்த நிகழ்ச்சியின்வழி அடைமொழி அமைய விளிக்கப் பெற்றான் என்பது ஐயத்தின் பால்படும்.
 
 கருங்குழல் ஆதனார் இயற்றிய புறநானூறு (7) "களிறு கடைஇய தாள்-கழல் உரீஇய திருந்தடி" என காட்டும் வரிகளால் ஐயம் இன்றி அகச்சான்று உள்ளது எனலாம். அஃதாவது களிற்றின் தாள் (யானையின் கால்) போன்று கடைஇய = கடைந்த உரு கொண்டது (உருண்ட வடிவம்) உவமையின் உருபும் பயனும் உடன்தொக்க தொகையாகக் காண்கின்றது "யானையின் கால் போன்ற உருண்ட வடிவினதான சோழ மன்னனது தாள்" என வரும்.
 
 மேலும் கரிக்கு(யானைக்கு) காலன்(யமன்) போன்று உடற்றிரம் மனத்திண்மைக் கொண்டவன் என இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையாகக் கொள்வதில் பழுதுள்ளது.. மன்னன் 'கரிகால்பெருவளத்தான்', 'கரிகால்வளவன்' என குறிக்கப்படுகின்றானே அன்றி காலன் என 'னகர' மெய்ஈறு உடைய சொல் நூல்களில் வழங்கவில்லை. பிற்காலத்தோர்தான் 'கரிகாலன்' ஒர் புதிய விளியினைப்பயன் கொண்டனர்.
 
 'வெண்ணிக் குயத்தியார்' என்னும் பெண்பாற் புலவர் இயற்றிய புறநானூற்றுப் பாடலில் (66) "களி இயல் யானைக் கரிகால் வளவ" எனவரும் வரிகள் யானை நடையின் தோற்றத்தைத்தான் குறிப்பிடுகின்றது. எனவே  யானையின் கால் போன்று ஒருவரது தாள் உளவாதல் ஐயமின்றிப் பெறப்படுகினறது.
 
 யானையின்கால் போன்று ஒருவன் கால் உருண்ட உருவத்திலும் நடையிலும் அமைந்தருப்பது எப்போது ??
 
நமக்கு நன்கே தெரிந்த காலில் தோன்றும் அத்தனித்தன்மை (குறை)  'யானைக்கால்' என்பதே. இந்நோய் உற்றோர்தம் கால்கள் இயல்பில்லாமல் பெருத்து உருண்ட வடிவினதாவதை நன்கறி வோம். ஆதலால் அச்சோழமன்னன் 'யானைக்கால்' என்னும் உடற்கூற்றியல் (குறை) உடையவன் ஆதல் வேண்டும். இங்ஙணம் இயற்கையின் வழி பிறப்புக் குறைதனை காட்டுவது மரபிற்கும் ஓர் மன்னனின் மாண் பினுக்கும் அப்பாற்பட்டது ஆகாதா ? என்றக்கால் ஆகா எனலாம். ஈங்கு அச்சொல் பயன்கொள்நிலையில் இகழ்ச்சி ஏதும் இல்லாமல் தனிஒருவனை பலரினின்று வேறுபடுத்திக் காட்டும் நிலை மட்டும் ஆகும். இஃது மரபில் ஏற்புடையதே. புறநானூறு பாடல் (51) இயற்றிய புலவர் ஐயூர் முடவனார் எனக் குறிக்கப் படுகின்றார். ஈங்கு புலவரை குறைகாண் நிலை ஏதும் இல்லை.  ஓருவரை மற்றொருவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் கருத்தில் அச்சொல் பயன்பட்டுள்ளது. பின் இணைப்பு காண்க. ஆங்கே ஓர் மன்னன் (யானைக்கண்சேய்) அவ்வாறே குறிக்கப்பெறுகின்றான்.
 
எனவே 'கரிகால்வளவன்', 'கரிகால் பெருவளத்தான்' என்றெல்லாம் விளிக்கப்படும் மாமன்னன்தன் கால்கள் யானையின் கால்கள் போன்று கடைந்த (உருண்ட) வடிவினதாக இருந்ததால் அவ்வாறு வேறுபடுத்திக் காட்டப்பெற்றான் எனலாம். அஃதே இக்காலத்தில் யானைக்கால் என்று குறிக்கப்படும் ஓர் நோய் ஆகும்.
 
மேலும் நோய் பற்றிய   விவரங்கள்   காண்க
http://en.wikipedia.org/wiki/Filariasis
                                                                                                                            () () () () () () () () () () () () () () () () ()
பின் இணைப்பு
மின்தமிழ் மடலாடல் குழுவில் 7-8 ஆண்டுகளுக்கு முன், அப்போது இதற்கு 'இசுவடி'என்பது பெயர், ஓர் உடல் கூற்றியல் தொடர்புடைய சொல் ஒன்றினைக் காட்டி ஓர் குறுவிளக்கமும் வைத்திருந்தேன். அஃது புறநானூறு 17, 20 - பாடிய புலவர் குறுங்கோழியூர் கிழார், புறநானூறு 229 பாடியவர் கூடலூர் கிழார். இவர்களால் பாடப்பட்ட பாட்டுடைத் தலைவன் 'யானைக் கண்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை' என்னும் சேர மன்னன் ஆகும் 'யானைக்கண்' என்பது 'நாகர்க்கண்' (Mangloism) எனும் சொல்லால் குறிக்கப்படும் ஓர் மகவுப் பிறப்பினில் வரும் ஓர் குறைபாடு ஆகும் எனக்காட்டி இருந்தேன். இவ்வகை பிறவிக் குறைபாடு உடையோர்தம் கண்களின் நடுவில் கற்பனையாக ஓர் கோடு கீறினால் அஃது நிலமட்டத்திற்கு  இணையாக இராமல் யானையைப் போல் கவைநிகர் அமைப்புடன் காணப்படும் (மஞ்சள் இன மக்களிடை காணும் ஓர் பொதுத் தன்மை = கவட்டின் மெல்புற வடிவு = ஆங்கில V ).
 
மற்றும் யானைக்கண் உடையோருடைய தலை சிறுத்தும், அறிவு வளர்ச்சியில் முதிர்ச்சி மிகமிகக் குறைந்தும், வாழும் காலம் 16 அகவைக்கு மேல்படாது என Mangloism அதனின் பண்பினைக் சுட்டி இருந்தேன். புறநானூற்றுப் பாடல் கொளுவினில் காணப்படும் விளக்கம் தமிழ்மக்கள் இதனை ஈராயிரம் ஆண்டுகல் முன்பபே அறிந்திருந்தனர் எனக்காட்டுகின்றது.
       புறநானூறு 229
      "மறந்தனன் கொல்லோ" //
       பாடியவர்: கூடலூர் கிழார் //
       பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கண் சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை //
      திணை: பொதுவியல் //துறை: கையறுநிலை //
      குறிப்பு: :: அவன் இன்னநாளில் துஞ்சும்என அஞ்சி அவன் அவ்வாறே துஞ்சியபோது பாடியது
.
 
மேலும் அதே மடலில்,
திருவிளையாடல் புராணத்தில் காணும் 'தடாதகை பிராட்டியார் திருஅவதாரப்படல'த்தில் காணும் இயல்பில்லாது பெண்மகவு 3 முலைக் காம்புகளுடன் பிறப்பதும் அவற்றில் (நடுவில்) ஒன்று சிறப்புற அமையாமல் / வளராமல் இருப்பதும் "அம்மகள் (தடாதகை பிராட்டி = மீனாட்சி) தான் மணக்கப் போகும் கணவனைக் காணும் காலத்தில் மறைந்துவிடும் கவலை விடும்" என வந்த அசரீரி வாக்கு முதலிய குறிப்புகள் உள்ளவற்றைக் காட்டி இருந்தேன். இஃதே ரஷ்யநாட்டு ஆசிரியர் ஒருவர் எழுதிய உயிர் இனங்களின் உடற்கூற்றியல் பண்புகள் (ஆயிரக்கினதானவை நுணுக்கி தொகுத்தது) விளக்கும் நூலில் ('Physiology For Everyone') அவர் ஜப்பானிய மகளிர் 5 ல் ஒருவருக்கு இவ்வாறு இருப்பதாகக் குறித்துள்ளதும் இணைத்திருந்தேன்.

Geetha Sambasivam

unread,
Jan 16, 2012, 2:02:15 PM1/16/12
to mint...@googlegroups.com
அதிசயமான செய்தி.  வேறொரு குழுமத்தில் சிநேகிதி ஒருவர் கரிகாலனை அவன் கால் கறுப்பு என்பதாலோ எரிந்த கால் என்பதாலோ அப்பெயர் சொல்லி விளிப்பது தவறு என மிகக்கடுமையாக வாதிட்டார்.  காலம் காலமாக முன்னோர் அழைத்த பெயர் எனச் சொல்லியும் அவர் சமாதானம் அடையவில்லை.

2012/1/16 N D Logasundaram <selvi...@gmail.com>
அன்புள்ள மின்தமிழருக்கு
கரிகாலன் பற்றிய ஓர் கட்டுரை வல்லமை மின்-இதழில் வைத்தேன்
ஈங்கு அதன் நகலைக்  காண்க 
அன்புடன்
நூ த லோ சு
மயிலை

மின்தமிழ் மடலாடல் குழுவில் 7-8 ஆண்டுகளுக்கு முன், அப்போது இதற்கு 'இசுவடி'என்பது பெயர், ஓர் உடல் கூற்றியல் தொடர்புடைய சொல் ஒன்றினைக் காட்டி ஓர் குறுவிளக்கமும் வைத்திருந்தேன். அஃது புறநானூறு 17, 20 - பாடிய புலவர் குறுங்கோழியூர் கிழார், புறநானூறு 229 பாடியவர் கூடலூர் கிழார். இவர்களால் பாடப்பட்ட பாட்டுடைத் தலைவன் 'யானைக் கண்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை' என்னும் சேர மன்னன் ஆகும் 'யானைக்கண்' என்பது 'நாகர்க்கண்' (Mangloism) எனும் சொல்லால் குறிக்கப்படும் ஓர் மகவுப் பிறப்பினில் வரும் ஓர் குறைபாடு ஆகும் எனக்காட்டி இருந்தேன். இவ்வகை பிறவிக் குறைபாடு உடையோர்தம் கண்களின் நடுவில் கற்பனையாக ஓர் கோடு கீறினால் அஃது நிலமட்டத்திற்கு  இணையாக இராமல் யானையைப் போல் கவைநிகர் அமைப்புடன் காணப்படும் (மஞ்சள் இன மக்களிடை காணும் ஓர் பொதுத் தன்மை = கவட்டின் மெல்புற வடிவு = ஆங்கில V ).
 
மற்றும் யானைக்கண் உடையோருடைய தலை சிறுத்தும், அறிவு வளர்ச்சியில் முதிர்ச்சி மிகமிகக் குறைந்தும், வாழும் காலம் 16 அகவைக்கு மேல்படாது என Mangloism அதனின் பண்பினைக் சுட்டி இருந்தேன். புறநானூற்றுப் பாடல் கொளுவினில் காணப்படும் விளக்கம் தமிழ்மக்கள் இதனை ஈராயிரம் ஆண்டுகல் முன்பபே அறிந்திருந்தனர் எனக்காட்டுகின்றது.
       புறநானூறு 229
      "மறந்தனன் கொல்லோ" //
       பாடியவர்: கூடலூர் கிழார் //
       பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கண் சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை //
      திணை: பொதுவியல் //துறை: கையறுநிலை //
      குறிப்பு: :: அவன் இன்னநாளில் துஞ்சும்என அஞ்சி அவன் அவ்வாறே துஞ்சியபோது பாடியது
.
 
மேலும் அதே மடலில்,
திருவிளையாடல் புராணத்தில் காணும் 'தடாதகை பிராட்டியார் திருஅவதாரப்படல'த்தில் காணும் இயல்பில்லாது பெண்மகவு 3 முலைக் காம்புகளுடன் பிறப்பதும் அவற்றில் (நடுவில்) ஒன்று சிறப்புற அமையாமல் / வளராமல் இருப்பதும் "அம்மகள் (தடாதகை பிராட்டி = மீனாட்சி) தான் மணக்கப் போகும் கணவனைக் காணும் காலத்தில் மறைந்துவிடும் கவலை விடும்" என வந்த அசரீரி வாக்கு முதலிய குறிப்புகள் உள்ளவற்றைக் காட்டி இருந்தேன். இஃதே ரஷ்யநாட்டு ஆசிரியர் ஒருவர் எழுதிய உயிர் இனங்களின் உடற்கூற்றியல் பண்புகள் (ஆயிரக்கினதானவை நுணுக்கி தொகுத்தது) விளக்கும் நூலில் ('Physiology For Everyone') அவர் ஜப்பானிய மகளிர் 5 ல் ஒருவருக்கு இவ்வாறு இருப்பதாகக் குறித்துள்ளதும் இணைத்திருந்தேன்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Jan 16, 2012, 6:28:24 PM1/16/12
to mint...@googlegroups.com
இந்த காரணம் தவறு என படுகிறது. யானைக்கால் வியாதி இருக்கும் மன்னன் வென்ணிபறந்தலைபோரில் வென்றான், பகைவரை முறியடித்தான் என கூற இயலுமா?

--
செல்வன்

"வரி செலுத்துபவர் யாரெனில் சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதாமல் அரசுக்கு உழைப்பவர்" - ரோனல்ட் ரேகன்




N. Ganesan

unread,
Jan 16, 2012, 8:17:29 PM1/16/12
to மின்தமிழ்

On Jan 16, 3:28 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> இந்த காரணம் தவறு என படுகிறது. யானைக்கால் வியாதி இருக்கும் மன்னன்
> வென்ணிபறந்தலைபோரில் வென்றான், பகைவரை முறியடித்தான் என கூற இயலுமா?
>
>

அவ்வாறே எனக்கும் படுகிறது. புறநானூறு 66-ஆம் பாட்டு இது:

நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் னாற்ற றோன்ற
வென்றோய் நின்னினு நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே.

”களியியல் யானைக் கரிகால் வளவ”
- மதம் பொருந்திய யானையைக் கொண்ட கரிகால் பெருவளவன்
- இந்தப் பழைய உரை பொருந்துகிறது என நினைக்கிறேன்.

யானைக்கால் நோயால் அவதியுறும் மன்னவனாகப்
பாடலில் தெரியவில்லையே.

நா. கணேசன்

Raja sankar

unread,
Jan 16, 2012, 10:02:29 PM1/16/12
to mint...@googlegroups.com
வழக்கமாக எல்லோருக்கும் கெண்டைக்கால் சதை உருண்டு திரண்டு இருக்கும். ஆங்கிலத்தில் Calf என்று சொல்வார்கள். ஒருவேளை கரிகாலனுக்கு அப்படி இல்லாமல் இருந்திருக்கலாம். அதை ஓர் பெருமையாகவோ அல்லது சிறப்பாகவோ எண்ணி பாடியிருக்கலாம்.

மற்றபடி செல்வன் சொன்னது போல் யானைக்கால் வியாதி இருக்கும் மன்னன் போரிட்டான், வென்றான் என்பதெல்லாம் நடக்கமுடியாது.

ராஜசங்கர்



2012/1/17 செல்வன் <hol...@gmail.com>

ஆமாச்சு

unread,
Jan 16, 2012, 10:06:45 PM1/16/12
to mint...@googlegroups.com
On Tuesday 17 January 2012 04:58 AM, செல்வன் wrote:
> இந்த காரணம் தவறு என படுகிறது. யானைக்கால் வியாதி இருக்கும் மன்னன்
> வென்ணிபறந்தலைபோரில் வென்றான், பகைவரை முறியடித்தான் என கூற இயலுமா?
முறத்தால் புலிவிரட்ட முடிஞ்சிருக்குல்ல..

--

ஆமாச்சு

Hari Krishnan

unread,
Jan 16, 2012, 10:37:22 PM1/16/12
to mint...@googlegroups.com


2012/1/17 Raja sankar <errajasa...@gmail.com>

வழக்கமாக எல்லோருக்கும் கெண்டைக்கால் சதை உருண்டு திரண்டு இருக்கும். ஆங்கிலத்தில் Calf என்று சொல்வார்கள். ஒருவேளை கரிகாலனுக்கு அப்படி இல்லாமல் இருந்திருக்கலாம். அதை ஓர் பெருமையாகவோ அல்லது சிறப்பாகவோ எண்ணி பாடியிருக்கலாம்.

நீங்கள் சொல்லும் காஃப் எனப்படுவது தொல்பழமாதி ஆங்கிலத்தில் Caugh என்று எழுதப்பட்டது.  இருமல் என்று பொருள்பட்டது.  ஆகவே, காஃப் உருண்டு திரண்டிருந்த மன்னன் இருமல் வியாதியான சயரோகம் (க்ஷயரோகம் என்மனார் வடசொற் புலவர்) கொண்டவன் என்பது ஆணித்தரமாக நிறுவப்படுகிறது.

பாண்டுவுக்கு சருமரோகம் இருந்தது; பாண்டு என்றாலே வெண்குட்டம் என்று பொருள்.  அவனுடைய அப்பனான விசித்திரி வீரியன் இளம் வயதில் இறந்ததும் இதே க்ஷயரோகத்தால்தான்.  எனவே, இதற்கு முன்னுதாரணமும் உண்டாம் என்பதறிக.

கரி>காஃப்>இருமல்.

மற்றபடி செல்வன் சொன்னது போல் யானைக்கால் வியாதி இருக்கும் மன்னன் போரிட்டான், வென்றான் என்பதெல்லாம் நடக்கமுடியாது.

யானைக்கால் வியாதி இருப்பவனால் நடக்க முடியாதுதான்.  :D

--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Jan 17, 2012, 7:50:45 AM1/17/12
to மின்தமிழ்
On Jan 16, 10:55 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
>  கருங்குழல் ஆதனார் இயற்றிய புறநானூறு (7) "*களிறு கடைஇய தாள்-கழல் உரீஇய
> திருந்தடி*" என காட்டும் வரிகளால் ஐயம் இன்றி அகச்சான்று உள்ளது எனலாம்.
> அஃதாவது களிற்றின் தாள் (யானையின் கால்) போன்று கடைஇய = *கடைந்த உரு
> கொண்டது*(உருண்ட வடிவம்) உவமையின் உருபும் பயனும் உடன்தொக்க தொகையாகக்

> காண்கின்றது "
> *யானையின் கால் போன்ற உருண்ட வடிவினதான சோழ மன்னனது தாள்*" என வரும்.
>

இல்லை, ஐயா. புறம் 7 - பழைய உரையைப் படிப்போம்:

களிறு கடைஇயதாட்
கழலுரீஇய திருந்தடிக்
கணைபொருது கவிவண்கையாற்
கண்ணொளிர்வரூஉங் கவின்சாபத்து
மாமறுத்த மலர்மார்பிற்
றோல்பெயரிய வெறுழ்முன்பின்
எல்லையு மிரவு மெண்ணாய் பகைவர்
ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலி னல்ல
இல்லவா குபவா லியறேர் வளவ
தண்புனல் பரந்த பூசன் மண்மறுத்து
மீனிற் செறுக்கும் யாணர்ப்
பயன்றிகழ் வைப்பிற்பிற ரகன்றலை நாடே.
(பி - ம்.) 3 ‘கணைக்கால் பொருத’ 7 ‘மென்னாய்’

திணை - வஞ்சி; துறை - கொற்றவள்ளை;மழபுலவஞ்சியுமாம்.

சோழன் கரிகாற் பெருவளத்தானைக்கருங்குழலாதனார் பாடியது.

(இ - ள்.) களிற்றைச்செலுத்திய தாளையும்,
வீரக்கழலுரிஞ்சியஇலக்கணத்தாற்றிருந்திய அடியினையும், அம்பொடுபொருது (பி -
ம்.. பொருத) இடக் கவிந்த வள்ளியகையுடனே கண்ணிற்கு விளங்கும்
அழகினையுடையவில்லையும், திருமகள் பிறர்மார்பை மறுத்தற்குஏதுவாகிய பரந்த
மார்பினையும்,யானையைப்பெயர்த்த மிக்க வலியினையுமுடைய,பகலுமிரவும் எண்ணாது
பகைவரது ஊரைச் சுடுகின்றதீயினது ஒளியின்கண்ணே தம்சுற்றத்தைஅழைத்தலுடனே
அழுகின்ற கூவுதலை யுடைய ஆரவாரத்தோடுகூடிய கொள்ளையை விரும்புதலுடையை;
ஆதலான், நல்லபொருள்கள் இல்லையாகுவனவால்; இயற்றப்பட்டதேரையுடைய வளவ!
குளிர்ந்த நீர்பரந்த ஓசையையுடையஉடைப்புக்களை மண்மறுத்தலான்
மீனாலடைக்கும்புதுவருவாயினையுடைய பயன் விளங்கும் ஊர்களையுடையமாற்றாரது
அகன்ற இடத்தையுடைய நாடுகள் - எ - று.

---------------

>இப்பெயர் வந்தமைக்கு பலர் இம்மன்னன் அரசுகட்டிலில் ஏறியபோது எழுந்த ஓர்
>நிகழ்சியில் உடன் பிறந்தோருடன் முரண்பட்டு ஆட்சிப் பொருப்பு ஏற்பதில் நிகழ்ந்த
>தீயில் தப்பி வந்தபோது கால் கரிகியது அதனால் கரிந்த புண்வந்த கால் உடைவனாதலால்
> அவ்வாறு வழங்கப் பெற்றான் என எழுதிச் சென்றனர். தமிழர் 'வீரம்'-'காதல்' என
>இருபொருளுக்கே முதன்மை தருவோர் என வரலாறு காட்டுகின்றது. வெண்ணிப்
>பரந்தலைப் போர் எனப் பற்பல போரில் வீரத்தில் திகழ்ந்த ஓர் பெருமன்னனுக்கு
>அதை விடுத்து தப்பிவந்த நிகழ்ச்சியின்வழி அடைமொழி அமைய விளிக்கப்
>பெற்றான் என்பது ஐயத்தின் பால்படும்.

கரிகாலனின் பெருவீரமும், பேராற்றலும் தமிழர் என்றும் போற்றிவந்தனர்.
அரசகுலத்தில் பிறந்து அரசாட்சி செய்யும் அறிவு குலப்பிறப்பாலேயே
50% வந்துவிடுகிறது என்பதற்கு அவன் வாழ்க்கையை உதாரணமாகக்
காட்டுதல் பண்டைத் தமிழ்மரபு.

பழமொழி வெண்பா:
உரை முடிவு காணான் இளமையோன், என்ற
நரைமுது மக்கள் உவப்ப,-நரை முடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன், குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்.

மீன்குஞ்சுக்கு நீஞ்சப் பழகணுமா? என்பதற்குப்
பழைய பழமொழியாய் கரிகால்பெருவளத்தான்
வரலாறு தமிழரிடையே வழங்குகிறது.

நா. கணேசன்

MANICKAM POOPATHI

unread,
Jan 17, 2012, 4:30:09 PM1/17/12
to mint...@googlegroups.com
:-)  :-)  :-)

வணக்கம் நண்பர்களே:  _/\_

கரிகால் பெருவளத்தான் என்பது
சில உரையாசிரியர்களின்  தனிப்பாடல்களில்..
கரிகாலன் என -அன்- எனும் விகுதி ஏறி   இருப்பதைக்
கண்ட  செடுவினை  இங்கே இறக்கி வைக்க விழைகிறேன்.

கணைக்கால் (இரும்பொறை) என்பது
கணுக்கால்/கெண்டைக்கால் போன்ற  பொருள்பட வாராது..
மாறாக.. சங்கநாதன் என்பது (வரி/விளிசங்கு)(கணைக்கால் = சங்கு))
அதன்  உள்ளுரைப் பொருள் என்பதே  துணிபு.

கணைக்காலன் என்றால்..
பொருள் அடியோடுப் மாறி விடும்.. இல்லீங்களா..?
(சீர் தளை சாக்தனுக்கு நேர்ந்ததைப் போல..?)

(ஆமாம்..!   அன்றைக்கெல்லாம்   அகவல்தானே  (Akaval Meter)
அதனை அடுத்துத்தானே   ஆசிரியம்  இன்னபிறவெல்லாம்...!?)

கரிகை என்றால்  தரும சக்கரம்.
இன்னும்..   கருங்கோட்டு  கவரிமா....
என்றெல்லாம் பொருள்படும்..?

காரி அல்லது கரிக்கா (கரிகை)  என்பது பேச்சுவழக்கு..
ஆதலினால்தானோ .. அவன்  கரிகால் பெருவளத்தான்..?

மற்றபடி...
கரிகால் பெருவளவனுக்கு..
ஆனைக்கால் வியாதி இருந்ததற்கான
இலக்கிய குறிப்புகள்..  ஏதும் இருப்பதாகக் காணோம்.

கருப்புத்  தமிழன் கரிகாற்
பெருவளத்தானின் கால்கள்.. கருகினால் என்ன.. 
இல்லை.. கருகா விட்டால் என்ன..அவனுடைய  கால்கள் 
நல்ல கருப்பாகத் தானே இருந்திருக்கும். இருந்திருக்க முடியும்...??

மேற்படி கூறுகளுக்கு / தனிப்பாடல்களுக்கு (?)
நண்பர்கள்  வசம் ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால்.. (?)
அவற்றினை இங்கே தயவுடன்   வெட்டி ஓட்ட வேண்டுகிறேன்...

மிக்க  நன்றி...!

அன்புடன்.../பூபதி

பிகு: 
கரி/கரிதம் = அச்சம்
இன்னும் கண்ணெழுதும்   மை..   (அஞ்சனம் )
இ / மருள் என்ரெல்லாம்  பொருள்படும்..
(கரி = அச்சத்தினை |  காலன் = அழிப்பவன் )

நண்பர்கள் அறியாதது அல்ல..
உள்ளங்கால் அற்ற (flatfeet)
தட்டையான  பாதத்தினை.. (அதாங்' மொக்கை ..)
ஆனைக்கால் என்பதுமுண்டு..?

அத்தகைய பாதத்துடன் நாட்டியம்
கற்றுக்கொள்வதே  கொஞ்ஞம் சிரமம்தானே..?

[... நடந்தால் 'அதிரும்' இராஜ நடை
நாற்புறம் 'பறக்கும்' உனது படை...." (அழுத்தம் அடியேனது)
என்று பாடியது எதற்காகவாம் ..?]  (:o|

பிறகு..?
தைத்  தைஐ   திமுசுக்கட்டை என
ஆடுவதுதான்.. மெய்யாலும்   மெய் அடவா..?

இல்லை.. இட்ட அடி நோக..
எடுத்த அடி கொப்பளிக்க (with proper curves)
சலங்கை கொஞ்ச ஒடிந்து நடப்பது  .. பொய்யடவா..??

PPS:  Flatfeet/Vertical Talus/Tarsal Coalition is a common
genetically predisposed Orthopedic Disorder widely prevalent
in some strictly endogamous quarters  (= among isolated people)
____________________________

seshadri sridharan

unread,
Jan 17, 2012, 3:52:43 AM1/17/12
to mint...@googlegroups.com
கரி + காலன்  என்பது  இரு  வேறு   பெயர்களின்   சேர்க்கை . In babylon there were two kassite kings by name kurigalzu some 3,500 years ago. so the explanations given hereunder are not relevant. Right now i do not have tamil type writer so i am giving my  inputs in english. sorry! for the inconvenience.

seshadri .s

2012/1/16 N D Logasundaram <selvi...@gmail.com>
அன்புள்ள மின்தமிழருக்கு

--

Nagarajan Vadivel

unread,
Jan 18, 2012, 7:01:39 AM1/18/12
to mint...@googlegroups.com
கரிகாலன் என்ற பெயருக்கான காரணம் தொடர்பாக இரு அனுமானங்கள் முன் மொழியப்பட்டுள்ளன
1. யானைக்கால் நோய்
2. தீயினால் சுட்ட வடு

முதல் அனுமானத்தை ஏற்றுக்கொள்ள நோய்க்கான காரணியை அறிய வேன்டும்.  இந்நோய் ஏற்படக் காரணம் கொசு.
விவிலியத்தில் ஆதி மனிதர் ஆதாமும் ஏவாளும் ஏடன் தோட்டத்தில் இருந்தபோது கொசு இல்லையென்றும் அவர்கள் செய்த பாவத்திற்குத் தன்டனையாக அவர்களைக் கொசு கடிக்கும் என்று ஆண்டவன் கட்டளையால் கொசு உருவானதாகக் குறிப்புள்ளது
சங்க இலக்கியத்தில் கொசு கொசுக்கடி பற்றிய குறிப்பு உண்டா?
கொசு இருப்பது நிறுவினால் கரிகால் என்பது யானைக்கால் என்பது உறுதி
தீ இருந்ததற்கு ஆதாரம் இருப்பதுபோல் கொசு இருந்ததற்கு ஆதாரம் கிடைக்கவில்லை
நாகராசன்

2012/1/17 seshadri sridharan <ssesh...@gmail.com>

Hari Krishnan

unread,
Jan 18, 2012, 9:09:06 AM1/18/12
to mint...@googlegroups.com


2012/1/18 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

சங்க இலக்கியத்தில் கொசு கொசுக்கடி பற்றிய குறிப்பு உண்டா?

கம்பனைக் கடித்த கொசு என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை வேண்டுமானால் உள்ளது.  ‘நினைவில் நின்ற சுவைகள்’ என்ற தலைப்பில் எல்கேஎம் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள என்னுடைய கட்டுரைத் தொகுப்பில் இருக்கிறது. 

தலைப்பைக் கலச்சிட்டேன்னு அழுவாச்சி கௌம்பறதுக்கு மின்னாடி ஒரு பிட் மட்டும் போட்டுட்டு ஓட்யே பூட்றேன்...னா.... தோ கீது ஃபஸ்ட்டாரம்ப ஃபேராக்ராஃபு......

===================================================
கம்பனைக் கடித்த கொசு
 
அனுமார் லங்காபுரியில் சீதையைப் பார்த்தார்.  அதற்குப் பிறகு அட்டகாசம் செய்ய ஆரம்பித்தார்.  ராவணனுக்கு ஒரே கவலையாகிவிட்டது.  என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது அவனுடைய ஐந்து சேனாதிபதிகள் வந்தனர்.  ஒருவன் சொன்னான்.  'சர்வ சக்தி வாய்ந்த கருடன் போயும் போயும் ஒரு கொசுவோடு போரிட நினைப்பதுபோல நீ இப்படிக் கவலையோடு இருக்கலாமா?'
 
இலங்கு வெஞ்சினத்து அம்சிறை எறுழ்வலிக் கலுழன்
உலங்கின் மேல் உருத்தன்ன நீ குரங்கின் மேல் உருத்தால்...
(உலங்கு - கொசு)
 
கம்பன் நன்றாகத்தான் கொசுக்கடியால் கஷ்டப்பட்டிருக்கிறான்.  அதனால்தான் பொருத்தமான உருவகத்தைச் சொன்னான்.  இராவணனைக் கருடனாகவும் அனுமாரைக் கொசுவாகவும் உருவகித்திருப்பதைப் பார்த்தாலே தெரியவில்லையா?  கடைசியில் யார் ஜெயித்தார்கள்?  கொசுவாக உருவகிக்கப்பட்ட அனுமார்தானே? கொசு, சர்வ வல்லமையுள்ள அனுமாருக்குச் சமமானதென்று கம்பனே ஒப்புக்கொண்டிருக்கிறான். அதுமட்டுமா?  கொசு என்பது சாதாரண ஜீவனல்ல.  ஆதிகாலத்திலிருந்தே இந்தப் பூமியை ஆண்டு வரும், சகலரும் நடுநடுங்கும் தேவதை என்பது இந்தக் கம்பராமாயணப் பாடலால் உள்ளங்கை நெல்லிக்கனியெனவும், வெள்ளிடை மலையெனவும் தெற்றென விளங்காநின்றது என்மனார் புலவர்.
 
அங்கிங்கெனாதபடி எங்கும்ரீங்காரமாய் கடியொடு பூர்த்தியாகி அருள்பாலிக்கும் அருள்திரு கொஸ்வாஹ்ய பரப்ரும்மம் (கொசுவாகிய பரபிரும்மம் என்று சொல்வாரும் உளர்) ஒரு காலத்தில் சைதாப்பேட்டையையும் பழைய மாம்பலத்தையும் திருத்தலமாகவும் திவ்யதேசமாகவும் கொண்டிருந்தார்.  இப்போது (இனி எப்போதும்?) நங்கநல்லூரில் எழுந்தருளியிருக்கிறார். 'அந்த ஆள் எனக்கொரு கொசு. ஓடஓட விரட்டுவேன்' என்று அரசியல் தலைவர்கள் சவால் விடுகிறார்கள்.  வந்து பார்க்கச் சொல்லுங்கள் நங்கநல்லூருக்கு. ஓரிரவு.  ஒரே ஓர் இரவு நங்கநல்லூரில் தங்கச் சொல்லுங்கள். வேண்டாம். பகல் கூடப் போதும். சுவாமிகள் அருட்கடாக்ஷம் வழங்க இப்போதெல்லாம் சமயம் பொழுது பார்ப்பதில்லை.  'ஆதி மூலமே' என்று அழைத்தால்தான் அவர் வருவார்.  அனந்த காலமும் அழையாமலே வருவதற்குக் காத்திருக்கும் கொஸ்வாஹ்ய பரப்ரும்மத்தின் சக்தியையும், மஹிமையையும் பரிபூரணமாக அறியலாம்.
 
எல்லா நாஸ்திகர்களும் கொசுவுக்கு எதிரான போர் முழக்கங்களைத் தேர்தலுக்குத் தேர்தல் எழுப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எலக்ஷன் ஜுரத்தில் புகைபோட்டு உபாசனையும் செய்கிறார்கள்.  என்ன செய்தாலும் பரப்ரும்மத்தை ஒன்றும் செய்ய முடிவதில்லை,..................

==================

இன்ட்ரஸ்ட்டா இப்பத்தான் ஒரு கொசு என்மேல குந்திக்கினு இஷ்டெடி பண்ணிக்கினு மூக்க வெக்கப் போஓஓ.....

rajam

unread,
Jan 18, 2012, 1:15:30 PM1/18/12
to mint...@googlegroups.com, Nagarajan Vadivel
அவர்களைக் கொசு கடிக்கும் என்று ஆண்டவன் கட்டளையால் கொசு உருவானதாகக் குறிப்புள்ளது
சங்க இலக்கியத்தில் கொசு கொசுக்கடி பற்றிய குறிப்பு உண்டா? 
கொசு இருப்பது நிறுவினால் கரிகால் என்பது யானைக்கால் என்பது உறுதி
தீ இருந்ததற்கு ஆதாரம் இருப்பதுபோல் கொசு இருந்ததற்கு ஆதாரம் கிடைக்கவில்லை


பேராசிரியர் ஐயா,
1. சங்க இலக்கியங்களில் "கொசு" என்ற சொல்லோ "கொசுக்கடி" போன்ற குறிப்போ என் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை.
 
இலக்கண நூலான தொல்காப்பியத்தில் "உச்சகாரம் இரு மொழிக்கு உரித்தே" என்ற நூற்பாவிற்கு உரையாசிரியர்கள் தரும் எடுத்துக்காட்டு: "உசு, முசு" என்ற இரண்டு சொற்கள். இங்கே "உசு" என்பது ஒருவகைப் புழு, "முசு" என்பது ஒருவகைக் குரங்கு என்பதாகப் பொருள் சொல்லுகிறார்கள். 
"பசு" என்பதை "ஆரியச் சிதைவு" என்று சொன்னார்கள்.
 
2. சங்க இலக்கியங்களில் "முயிறு" என்று ஒன்று சொல்லப்படுகிறது, அந்த "முயிறு" வயல் பகுதியில் இருக்கும் பாகல் (== பாவக்காய்?) என்ற தாவரத்தை "மூசுவதாக"ச் சொல்கிறார்கள். அந்த நாள் "முயிறு"தான் இந்த நாளில் நம் "கொசு"வோ என்று நினைக்கத் தோன்றுகிறது. திட்டமாகத் தெரியவில்லை. ஆனால், ஒன்று தெளிவாகச் சொல்லலாம் -- "மூசு" என்ற வினைச்சொல் பின்னாளில் "மொய்" என்று திரிந்திருக்கலாம். "மூசு வண்டறை பொய்கை" என்ற தேவாரப் பாடல் வரி சிலருக்கு நினவில் வரும்! :-) 
3. "கொசு" என்ற சொல்லைச் சில நூல்களில் "கொதுகு" என்று பார்த்த நினைவு. இப்போது மீண்டும் பார்த்து விளக்க நேரமில்லை.
++++++++++++++++++++++++
ஒரு சொல் இன்றைக்கு நாம் புழங்குவதுபோலவே அன்றும் இன்றும் என்றும் புழங்கும் என்று சொல்ல முடியாது. ஒரு சின்ன உயிர் ("கொசு" போல) அந்தந்த இடத்துக்குத் தக்கபடிப் பெயர் பெற்று வாழும்!
அன்புடன்,
ராஜம்

சீனுத்தாத்தா

unread,
Jan 18, 2012, 1:32:15 PM1/18/12
to மின்தமிழ்
நடுவே குறுக்கிடும் இந்த முதியவனை (நேரடியாகச் சொன்னால் 'கிழவனை'!
_மன்னிக்கவும்.

நான் அடிக்கடி எனக்கே நினைவு படுத்திக் கொள்வது லத்தீன் பழமொழி "Nil Nici
Nihilam Bonum" (English Meaning: "Of The Dead, Nothing But The
Good" (நானே செய்து கொண்ட தமிழாக்கம் "மறைந்தவர்களைப் பற்றி நல்லதைத்
தவிர வேறொன்றையும் கூறாதே".

அந்தப் பழமொழியின் அடிப்படியில் கரிகால சோழனைப் பற்றி எனக்குக் கிடைத்த
தகவலை குழுவினருடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அதனைக் கீழே
கொடுக்கிறேன்.:

"கங்க அரசர்களில் கி.பி. 550லிருந்து 600க்குள் ஆண்ட துர்விநீதன் என்ற
சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால
சோழனின் வழிவந்தவனும் பரம க்ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று
குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம
க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால்
கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள்.
கரிகாலன் சிறுவனாக இருந்த போது தீயிலிருந்து தப்பினான். அப்பொழுது அவனது
காலைத் தீ சுட்டதால் கரிகாலன் எனப் பெயர்"

On Jan 17, 1:52 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> கரி + காலன்  என்பது  இரு  வேறு   பெயர்களின்   சேர்க்கை . In babylon there
> were two kassite kings by name kurigalzu some 3,500 years ago. so the
> explanations given hereunder are not relevant. Right now i do not have
> tamil type writer so i am giving my  inputs in english. sorry! for the
> inconvenience.
>
> seshadri .s
>

> 2012/1/16 N D Logasundaram <selvindl...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > அன்புள்ள மின்தமிழருக்கு

> > கரிகாலன் பற்றிய ஓர் கட்டுரை *வல்லமை *மின்-இதழில் வைத்தேன்


> > ஈங்கு அதன் நகலைக்  காண்க
> > அன்புடன்
> > நூ த லோ சு
> > மயிலை
> > ---------------

> >  *கரிகாலன்*
> >  *நூ த லோகசுந்தரம், மயிலை
> > *


> > சங்ககால சோழமன்னர்களில் புகழ்பெற்ற ஒரு பெருமன்னன் 'கரிகால்வளவன்' (அ) 'கரிகால்
> > பெருவளத்தான்'. கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப்பாலை, முடத்தாமக்
> > கண்ணியார் பாடிய பொருநர் ஆற்றுப்படை முதலிய பத்துப்பாட்டு பாட்டுடைத்

> > தலைவனும், *அகநானூறு* 55, 125, 141, 246, 376 *புறநானூறு* 7, 65, 66, 224, *
> > சிலப்பதிகாரம்* 6-கடலாடு காதை, 21-வஞ்சின மாலை, *மணிமேகலை* 1-விழாவறை காதை, *குலோத்துங்க
> > சோழனுலா* கண்ணி-18, முதலிய வற்றில் பெருவீரன் புகழ்பல சேர்ந்தவன் என


> > குறிகப்பட்டுள்ளவன் ஆவான். ஈங்கு நான் குறிக்க இருப்பது அப்பெருமன்னன்

> > தொடர்புடைய வரலாறு ஏதும் இல்லை *கரிகாலன்* என்னும் பெயரில் காணப்படும்


> > சொற்களின் விளக்கம் மட்டும். உடற்கூற்றியல் பற்றியதாகக் காண்பது .
>
> > இப்பெயர் வந்தமைக்கு பலர் இம்மன்னன் அரசுகட்டிலில் ஏறியபோது எழுந்த ஓர்
> > நிகழ்சியில் உடன் பிறந்தோருடன் முரண்பட்டு ஆட்சிப் பொருப்பு ஏற்பதில் நிகழ்ந்த
> > தீயில் தப்பி வந்தபோது கால் கரிகியது அதனால் கரிந்த புண்வந்த கால் உடைவனாதலால்
> > அவ்வாறு வழங்கப் பெற்றான் என எழுதிச் சென்றனர். தமிழர் 'வீரம்'-'காதல்' என
> > இருபொருளுக்கே முதன்மை தருவோர் என வரலாறு காட்டுகின்றது. வெண்ணிப் பரந்தலைப்
> > போர் எனப் பற்பல போரில் வீரத்தில் திகழ்ந்த ஓர் பெருமன்னனுக்கு அதை விடுத்து
> > தப்பிவந்த நிகழ்ச்சியின்வழி அடைமொழி அமைய விளிக்கப் பெற்றான் என்பது ஐயத்தின்
> > பால்படும்.
>

> >  கருங்குழல் ஆதனார் இயற்றிய புறநானூறு (7) "*களிறு கடைஇய தாள்-கழல் உரீஇய
> > திருந்தடி*" என காட்டும் வரிகளால் ஐயம் இன்றி அகச்சான்று உள்ளது எனலாம்.
> > அஃதாவது களிற்றின் தாள் (யானையின் கால்) போன்று கடைஇய = *கடைந்த உரு கொண்டது*(உருண்ட வடிவம்) உவமையின் உருபும் பயனும் உடன்தொக்க தொகையாகக் காண்கின்றது "
> > *யானையின் கால் போன்ற உருண்ட வடிவினதான சோழ மன்னனது தாள்*" என வரும்.


>
> >  மேலும் கரிக்கு(யானைக்கு) காலன்(யமன்) போன்று உடற்றிரம் மனத்திண்மைக்
> > கொண்டவன் என இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையாகக்
> > கொள்வதில் பழுதுள்ளது.. மன்னன் 'கரிகால்பெருவளத்தான்', 'கரிகால்வளவன்' என

> > குறிக்கப்படுகின்றானே அன்றி *காலன் என 'னகர' மெய்ஈறு* உடைய சொல் நூல்களில்


> > வழங்கவில்லை. பிற்காலத்தோர்தான் 'கரிகாலன்' ஒர் புதிய விளியினைப்பயன் கொண்டனர்.
>

> >  '*வெண்ணிக் குயத்தியார்*' என்னும் பெண்பாற் புலவர் இயற்றிய புறநானூற்றுப்
> > பாடலில் (66) *"களி இயல் யானைக் கரிகால் வளவ*" எனவரும் வரிகள் *யானை நடையின்
> > தோற்ற*த்தைத்தான் குறிப்பிடுகின்றது. எனவே  யானையின் கால் போன்று ஒருவரது


> > தாள் உளவாதல் ஐயமின்றிப் பெறப்படுகினறது.
>
> >  யானையின்கால் போன்று ஒருவன் கால் உருண்ட உருவத்திலும் நடையிலும்
> > அமைந்தருப்பது எப்போது ??
>

> > நமக்கு நன்கே தெரிந்த காலில் தோன்றும் அத்தனித்தன்மை (குறை)  '*யானைக்கால்*'


> > என்பதே. இந்நோய் உற்றோர்தம் கால்கள் இயல்பில்லாமல் பெருத்து உருண்ட
> > வடிவினதாவதை நன்கறி வோம். ஆதலால் அச்சோழமன்னன் 'யானைக்கால்' என்னும்
> > உடற்கூற்றியல் (குறை) உடையவன் ஆதல் வேண்டும். இங்ஙணம் இயற்கையின் வழி
> > பிறப்புக் குறைதனை காட்டுவது மரபிற்கும் ஓர் மன்னனின் மாண் பினுக்கும்
> > அப்பாற்பட்டது ஆகாதா ? என்றக்கால் ஆகா எனலாம். ஈங்கு அச்சொல் பயன்கொள்நிலையில்
> > இகழ்ச்சி ஏதும் இல்லாமல் தனிஒருவனை பலரினின்று வேறுபடுத்திக் காட்டும் நிலை
> > மட்டும் ஆகும். இஃது மரபில் ஏற்புடையதே. புறநானூறு பாடல் (51) இயற்றிய புலவர்

> > *ஐயூர் முடவனார்* எனக் குறிக்கப் படுகின்றார். ஈங்கு புலவரை குறைகாண் நிலை


> > ஏதும் இல்லை.  ஓருவரை மற்றொருவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் கருத்தில்

> > அச்சொல் பயன்பட்டுள்ளது. பின் இணைப்பு காண்க. ஆங்கே ஓர் மன்னன் (*
> > யானைக்கண்சேய்*) அவ்வாறே குறிக்கப்பெறுகின்றான்.


>
> > எனவே 'கரிகால்வளவன்', 'கரிகால் பெருவளத்தான்' என்றெல்லாம் விளிக்கப்படும்
> > மாமன்னன்தன் கால்கள் யானையின் கால்கள் போன்று கடைந்த (உருண்ட) வடிவினதாக
> > இருந்ததால் அவ்வாறு வேறுபடுத்திக் காட்டப்பெற்றான் எனலாம். அஃதே இக்காலத்தில்
> > யானைக்கால் என்று குறிக்கப்படும் ஓர் நோய் ஆகும்.
>

> > *மேலும் நோய் பற்றிய   விவரங்கள்   காண்க*
> >http://en.wikipedia.org/wiki/Elephantiasis
>
> ...
>
> read more »

N. Ganesan

unread,
Jan 18, 2012, 1:50:58 PM1/18/12
to மின்தமிழ்

On Jan 18, 10:32 am, சீனுத்தாத்தா <see...@gmail.com> wrote:
> நடுவே குறுக்கிடும் இந்த முதியவனை (நேரடியாகச் சொன்னால் 'கிழவனை'!
> _மன்னிக்கவும்.
>
> நான் அடிக்கடி எனக்கே நினைவு படுத்திக் கொள்வது லத்தீன் பழமொழி "Nil Nici
> Nihilam Bonum" (English Meaning: "Of The Dead, Nothing But The
> Good" (நானே செய்து கொண்ட தமிழாக்கம் "மறைந்தவர்களைப் பற்றி நல்லதைத்
> தவிர வேறொன்றையும் கூறாதே".
>
> அந்தப் பழமொழியின் அடிப்படியில் கரிகால சோழனைப் பற்றி எனக்குக் கிடைத்த
> தகவலை குழுவினருடன் பகிர்ந்து கொள்ள  விழைகிறேன். அதனைக் கீழே
> கொடுக்கிறேன்.:
>
> "கங்க அரசர்களில் கி.பி. 550லிருந்து 600க்குள் ஆண்ட துர்விநீதன் என்ற
> சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால
> சோழனின் வழிவந்தவனும் பரம க்ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று
> குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம
> க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால்
> கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள்.
> கரிகாலன் சிறுவனாக இருந்த போது தீயிலிருந்து தப்பினான். அப்பொழுது அவனது
> காலைத் தீ சுட்டதால் கரிகாலன் எனப் பெயர்"
>

கரிந்தகாலன் கரிகாலனுக்கும் சுமேரிய குரிகல்ஷு என்ன
தொடர்பு என விளங்கவில்லை தாத்தா. சேசாத்திரி தான்
உதவணும்.

உரகபுரம் - சோழர் தலைநகர் உறையூர்.

நா. கணேசன்

> On Jan 17, 1:52 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:

> ...
>
> read more »

ஆமாச்சு

unread,
Jan 18, 2012, 2:03:07 PM1/18/12
to mint...@googlegroups.com
On Thursday 19 January 2012 12:20 AM, N. Ganesan wrote:
> உரகபுரம் - சோழர் தலைநகர் உறையூர்.
உறையூர் தேசியம் மறுமலர்ச்சியடையட்டும். ;-)

--

ஆமாச்சு

Nagarajan Vadivel

unread,
Jan 18, 2012, 8:34:13 PM1/18/12
to mint...@googlegroups.com
தாத்தா சேசாத்திரி - கிழிஞ்சது கிருஷ்ணகிரி
கடந்த 15 ஆம் தேதி மின் தமிழ் கூட்ட்த்துக்கு வந்த என் அருகில் அமர்ந்திருந்தர்.  பாவம் படுகிழம் பக்கத்தில் என்று பார்த்தால் அவர் ஒரு நல்லிளைஞர்
நாகராசன்

2012/1/19 N. Ganesan <naa.g...@gmail.com>
> ...
>
> read more »

N D Logasundaram

unread,
Jan 18, 2012, 10:38:17 PM1/18/12
to mint...@googlegroups.com
அன்புள்ள  சேசாத்திரி   அவர்களுக்கு, 
கரிகாலன் என்னும் சொல்லாட்சி சங்க நூல்களில் இல்லை.
கரிகால் பெருவளத்தான் // கரிகால்  //   கரிகால் வளவன்
எனத்தான் உள்ளது
 
1 பட்டினப்பாலை
பாடியவர் :: கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடப்பட்டவன் :: திருமாவளவன் ( கரிகால்  பெருவளத்தான்)
2 பொருநர் ஆற்றுப்படை
பாடியவர் :: முடத்தாமக் கண்ணியார்
பாடப்பட்டவன் :: சோழன்  கரிகால்  பெருவளத்தான் >>>>> தலைப்பு
3 கண்ணார் கண்ணிக்  கரிகால்  வளவன் ........ நூல் வரிஎண் 148
4 கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலை 10 >>>>> அகநானூறு 55
5 பெருவளக்  கரிகால்  முன்னிலைச் செல்லார் 18  >>>>> அகநானூறு 125
6 செல்குடி நிறுத்த பெரும்பெயர்க்  கரிகால்  22   >>>>> அகநானூறு 141
7 காய்சின மொய்ம்பின் பெரும்பெயர்க்  கரிகால்  >>>>> அகநானூறு 246
8 கலிகொள் சுற்றமொடு  கரிகால்  காணத் 5  >>>>> அகநானூறு 376
9  கரிகால்  பெருவளத்தான் >>>>> புறநானூறு 7  >>>>> தலைப்பு
10  கரிகால்  பெருவளத்தானெடு >>>>> புறநானூறு 65  >>>>> தலைப்பு
11  கரிகால்  பெருவளத்தான் >>>>> புறநானூறு 66  >>>>> தலைப்பு
12 களி இயல் யானைக்  கரிகால்  வளவ  >>>>> புறநானூறு பாடல்வரி 66
13 பாடியவர்: கருங்குழல் ஆதனார்
பாடப்பட்டோன்: சோழன்  கரிகால்  பெருவளத்தான் >>>>> புறநானூறு 224  >>>>> தலைப்பு
விண்பொரு பெரும்புகழ்க்  கரிகால்  வளவன் 159 >>>>>>>>>>>>> கடலாடு காதை-சிலம்பு
மன்னன்  கரிகால்  வளவன்மகள் வஞ்சிக்கோன் 11 >>>>>>>>>>>>> வஞ்சின மாலை-சிலம்பு
மன்னன்  கரிகால் வளவன் நீங்கிய நாள் 39 >>>>>>>>>>>>> மணிமேகலை-விழாவறை காதை
 
அன்புடன்
நூ த லோ சு
 
 
2012/1/17 seshadri sridharan <ssesh...@gmail.com>

Hari Krishnan

unread,
Jan 18, 2012, 10:57:11 PM1/18/12
to mint...@googlegroups.com


2012/1/19 N D Logasundaram <selvi...@gmail.com>

 
1 பட்டினப்பாலை
பாடியவர் :: கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடப்பட்டவன் :: திருமாவளவன் ( கரிகால்  பெருவளத்தான்)

கரி என்றால் யானை என்ற பொருளும் இருக்கிறது.  சாட்சி என்ற பொருளும் இருக்கிறது.  (இந்திரனே சாலும் கரி.)  கால் என்றால் நான்கில் ஒரு பங்கு என்றும் பொருளிருக்கிறது.  எனவே, பொதுவாக ஒரு வழக்கில் தீர்ப்புச் சொல்ல எவ்வளவு சாட்சியம் தேவைப்படுமோ, அதற்கு நான்கில் ஒருபங்கு இருந்தாலே போதும்; அதை வைத்துக்கொண்டே தீர்ப்பைச் சொல்லக்கூடிய திறம் படைத்தவன் என்றும் பொருள் காண இடமிருக்கிறதல்லவா?  அவன் நீதி வழங்கியதைப் பற்றிய பாடல் இருக்கிறதே... அதுவே நான்கில் மூன்று பங்கு சாட்சியம் அல்லவா?  கரி-கால்=சாட்சியம் நான்கில் ஒருபங்கு. 

ஏன் இவ்வாறு பொருள் காணக்கூடாது என்று காரணங்களைத் தெளிவுபடுத்தலாம்.

Dhivakar

unread,
Jan 19, 2012, 1:09:50 AM1/19/12
to mint...@googlegroups.com
>>>கரிகாலன் என்னும் சொல்லாட்சி சங்க நூல்களில் இல்லை.
கரிகால் பெருவளத்தான் // கரிகால்  //   கரிகால் வளவன்
எனத்தான் உள்ளது<<<

But Jeyamkondaar sang him as KARIKALAN only during 1100 CE

இமயத்தில் புலிக்கொடி

178
செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிமயச்
சிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப்
பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்
பாய்பு லிக்குறிபொ றித்தது மறித்த பொழுதே.

2012/1/19 N D Logasundaram <selvi...@gmail.com>:

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Dhivakar

unread,
Jan 19, 2012, 1:25:12 AM1/19/12
to mint...@googlegroups.com
ஆராய்ச்சி விவரங்கள் படிப்பதற்கு நன்றாக உள்ளன என்றாலும் சில விஷயங்களை
நாம் மனதில் எடுத்துக் கொள்ள வேணும்.

குறிப்பாக யானைக் கால் நோய் என்பது கொடிய நோய்.. அந்த நோய் அனுபவிப்பவனை
அடிக்கடி யானைக் கால் நோய் வந்தவனே என அழைப்பது எந்தப் பண்பில் சேரும்
என்று தெளிவாக இல்லை. அதுவும் இங்கே அரசன் எனக்
குறிப்பிடப்பட்டுள்ளதாலும், வலிவான அரசன், புகழ் பெற்ற அரசன், எதிரிகள்
அனைவரையும் அடியோடு அழித்தவன், இமயத்தில் புலிச் சின்னம் பொறித்தவன் இன்ன
பிற புகழ்களைப் பெற்றவனைப் பார்த்து எப்படி’யானைக் கால் வந்தவன்’ என்று
புதிதாகக் கண்டுபிடித்த பொருளால் பாடியிருக்கமுடியும்.

கரிகாலன் என்றால் தீயினால் சுட்ட வடு, பகைவரில் சதியிலிருந்து தப்பி
வந்தாலும் தீக்காயம் பட்டு விழுப்புண்ணோடு வந்தவனை முற்காலச் சோழர்களும்,
பிற்காலச் சோழர்களும் பெருமையாக அழைத்தார்கள். விழுப்புண் தாங்கியவன்
மகாவீரன் என்பது சங்கத் தமிழிலிருந்து ‘கழக’ தமிழ் வரை ஒரே வரிசையில்தான்
பெருமையாகப் பார்க்கிறது என்பது பொருத்தம்தான்.

ராஜராஜசோழனுக்கு கரிகாலன் என்ற பெயர் உண்டு.. முன்னோர் பெயரைத் தாங்கி
சிறப்பு செய்கின்றான்.

ஆகையினால் யானைக்கால், கொசு என்பதெல்லாம் ’ச்சும்மாச்சுக்கும்’ கற்பனை
செய்து பார்க்கலாமே தவிர அறிவார்ந்த தகவலுக்கும் ஆராய்ச்சிக்குக் உதவாது
என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திவாகர்

2012/1/19 N D Logasundaram <selvi...@gmail.com>:

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

N D Logasundaram

unread,
Jan 19, 2012, 1:27:10 AM1/19/12
to mint...@googlegroups.com
அன்புள்ள செல்வன் அவர்களுக்கு,
 
ஓர் மன்னன் வெற்றிபெற்றான் என்றால் அவனே நேரில் சென்று
போரிட்டான் என்பது உறுதியானது அல்ல. பெரும்பாலும் தன்
மகனையோ அல்லது அவன் சேனைத் தலைவரையோ விடுத்தே
போரினை நடத்தி இருப்பது என்பது உலக வழக்கம்
 
உதரணமாக இராஜராஜன்  மெய்கீர்த்தியில் காணப்படும் வெற்றிகள்
யாவும் அவன் நேரில் சென்று பெற்ற வெற்றியாக கொள்ளவே
முடியாது அல்லவா?
 
எனவே அம்மன்னன் யார் வழியாகவும் பெற்ற வெற்றியை பெருமன்னன்
 சோழன் பெற்ற வெற்றியாகப் பாடுவது தானே மரபு அய்யா
 
மேலும் ஓர் சிறு காணிக்கையாக கோயிலுக்கோ மற்ற அறச்சாலைகளுக்கோ
 செய்யப்படும் நிவந்தங்கள் மன்னன் கீழ் உள்ள சிற்றரசர் யார் செய்தாலும்
நாட்டினை ஆளும் மன்னவன் பெயராலேயே குறிப்பது தானே முறை அல்லது
மரபு என்றும் அறிவீர்கள்
 
எனவே மன்னனே   போர்முனைக்கு சென்றிருக்கவேண்டும் என்பது
எளிமையாக மறுக்கக் கூடியதே. .
 
மன்னர்களில்  சிலர் பெற்றுள்ள மாண்புகளில் போர் வெற்றிகளால்
மட்டும் குறிக்கப்படுபவர்  நிரலைக் காண்க
 
பாண்டியன்  தலையனங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் கானப்  பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
பாண்டியன் கருங்கை பெறும் பெயர் ஒள்வாள் வழுதி i
பாண்டியன் பல்யாகசாலை முது குடுமிப்   பெருவழுதி
பாண்டியன் வெள்ளியம்பலத் துத்  துஞ்சிய பெருவழுதி
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
 
சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கொப்பெரும்செறல் இரும்பொறை
சேரமான்  கடலோட்டிய  வெல்குழு  குட்டுவன்
சேரமான் கோட்டம்பலத்துச் துஞ்சிய   மாக்கோதை
சேரமான் சிக்கல்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழி ஆதன்
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
சேரமான் பாமளூர் எறிந்த நெய்தலங்கானல் இளம்செட்சென்னி
சேரமன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் 
 
சோழன் ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி  
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி
சோழன் உருவப் பல்தேர் இலஞ்சேட்   சென்னி  
சோழன் குராப் பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் குராப் பள்ளித்  துஞ்சிய பெருந்திருமாவளவன்
சோழன்  குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் செருப்பாழி எறிந்த இலஞ்சேட் சென்னி
சோழன் நெய்தலங்கானல் இலஞ்சேட் சென்னி
சோழன் போர்வைப் கோ பெருநற்கிள்ளி
சோழன் முடித் தலைக் கோ பெருநற்கிள்ளி 
சோழன் வேல்பல்தடக்கை பெருவிறல் கிள்ளி
 
கரிகால் வளவனின் வெண்ணிப் பறந்தலை வெற்றி ஏன்
அவன் பெயருடன் இணைத்துக் குறிப்பிடப்படவில்லை
                                 சிந்திக்க !!!!!!
நூ த லோ சு
மயிலை  
2012/1/17 செல்வன் <hol...@gmail.com>
இந்த காரணம் தவறு என படுகிறது. யானைக்கால் வியாதி இருக்கும் மன்னன் வென்ணிபறந்தலைபோரில் வென்றான், பகைவரை முறியடித்தான் என கூற இயலுமா?

N D Logasundaram

unread,
Jan 19, 2012, 1:51:30 AM1/19/12
to mint...@googlegroups.com
திரு  திவாகர் அவர்களுக்கு  
தக்கயாகப் பரணி அல்லாமல்
ஒட்டக்கூத்தர்  பாடிய (மூவருலா வில்)
குலோத்துங்க சோழனுலா கண்ணி-18 ல்
 
கண்கொண்ட சென்னிக் கரிகாலன் - எண்கொள்௧
 
என முதல் மடலிலேயே வைத்தேனே 

நூ த லோ சு

மயிலை 

 2012/1/19 Dhivakar <venkdh...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jan 19, 2012, 2:44:52 AM1/19/12
to mint...@googlegroups.com
இந்த  ’ச்சும்மாச்சுக்கும்’ சுவையற்றது; ரசனை அற்றது. நற்கற்பனையும் அல்ல.

seshadri sridharan

unread,
Jan 19, 2012, 1:26:58 AM1/19/12
to mint...@googlegroups.com
  குரிகல்ஷு ல்ல கரிகால்zஎன்
தே
ரி.

please remember that curry which you eat as side dish is being spelt as  கரி and not  குரி. same pronounciation is to be adopted here.

In the below reconstructed chozha dynasty list by Dr. R. Mativanan on the basis of the book narkudi velalar varalaru one may come across three kurigal chozhas. Does  this mean that all the three had burnt legs certainly not. This particular name is very ancient than the available sangam literature's that has mention about the name kurigal and for this reason i have quoted those kassite kings names of babylon.

கரிந்தகாலன் என்து பியான  விளக்மாக இருக்லாம். later both  the literary works and  copper plates might have  followed the wrong explanation is what i presume.

சோழர் தலைமுறை மீட்டமைப்பு 

கி.மு. 450 - 380       முதற் கரிகாலன் 
கி.மு. 380-320 சேரமான் பாமளுர் எறிந்த  நெய்தலங்கானல் இளஞ்  சேட் சென்னி 
கி.மு. 320 - 270   செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி 
கி.மு. 270 - 245    பெரும்பூண் சென்னி 
கி.மு. 245 - 232    உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி 
கி.மு. 232 - 200    கரிகாலன் II 
கி.மு. 200 - 180      மணக்கிள்ளி 
கி.மு. 180 - 160    வேல் ப்றடக்கை பெருவிற் கிள்ளி 
கி.மு. 160 -125     போரவைக் கோல் பெருநற் கிள்ளி 
கி.மு. 125 - 87     முடித்தலை கோல் பெருநற்கிள்ளி 
கி.மு. 87- 62        கோப்பெருஞ் சோழன் 
கி.மு. 62- 40        ஒற்றுமை வேட்ட பெருநற் கிள்ளி (ராசசூய) 
கி.மு. 40 - 22       சேட்சென்னி நலங்கிள்ளி + மாவளத்தான் 
கி.மு. 22 -   1      குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன் 
கி.பி. 1  - 40         குராப்பள்ளி துஞ்சிய கிள்ளி வளவன் 
கி.பி. 40 - 60        நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி 
கி.பி. 60 - 110      கரிகாலன் III 

seshadri

.//கரிந்தகாலன் கரிகாலனுக்கும் சுமேரிய குரிகல்ஷு என்ன தொடர்பு என விளங்கவில்லை தாத்தா. சேசாத்திரி தான் உதவணும்.

உரகபுரம் - சோழர் தலைநகர் உறையூர்.//

நா. கணேசன்

Raja sankar

unread,
Jan 19, 2012, 4:07:23 AM1/19/12
to mint...@googlegroups.com
ராஜராஜனை கூடத்தான் தஞ்சாவூர் கோயில் எடுத்த ராஜராஜன் என சொல்வதில்லை. ராஜேந்திரனை கூடத்தான் கங்கை கொண்ட சோழன் என சொல்வதில்லை. இதெல்லாம் ஏன்?

நீங்கள் கொடுத்திருக்கும் பட்டியலில் பெரும்பாலானோர் துஞ்சியவர்கள் அதாவது போரிலே இறந்தவர்கள். அதனால் அப்படி சொல்லப்படுகிறார்கள். யானைமேல் துஞ்சிய தேவர் என இராஜாதித்தருக்கு பெயர். அதாவது யானை மேல் இருக்கும் போது இறந்தவர்.

அடுத்து போர் வெற்றி மட்டும் இல்லாமல் செய்த அரும் செயல் சொல்லப்படுகிறது. அது பல்யாகசாலை, கடலோட்டிய, ராஜசூயம் வேட்ட என்று சொல்லப்படுகிறது. அரசன் செய்தது எல்லாம் அரும் செயலாக இருந்தால் அவர் வெறுமனே சொல்லப்படுவார். ராஜராஜன், ராஜேந்திரன், சுந்திரபாண்டியன், கழற்றிறைவார் என்போருக்கு அடைமொழி ஏதும் தேவையில்லை. எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள் என்று தான் சுந்திரபாண்டியனுக்கு மெய்க்கீர்த்தி. ஆனால் அதை சொல்லாமலே சுந்திரபாண்டியன் என்றாலே நினைவுக்கு வருவது ஓர் சுந்திரபாண்டியன் தான்.

ஆக மன்னர்கள் பெற்ற வெற்றியை போட்டே ஆகவேண்டும் இணைத்தே பேசப்படவேண்டும் என்று அவசியமில்லை.

ராஜசங்கர்



2012/1/19 N D Logasundaram <selvi...@gmail.com>
கரிகால் வளவனின் வெண்ணிப் பறந்தலை வெற்றி ஏன்

N D Logasundaram

unread,
Jan 19, 2012, 4:56:59 AM1/19/12
to mint...@googlegroups.com
அன்புள்ள  இன்னம்பூரானுக்கு,
தங்களுக்கு இவ்விழையில் ஏனோ ஒரு பிடித்தம் இல்லை போலும்
அதனால் தங்கள் பாணியில்  ’ச்சும்மாச்சுக்கும்’  என்றெல்லாம்
சீசீ சீசீ இந்தப் பழம் புளிக்கும் எனும் கருத்திற்கு ஒப்ப சுவை, ரசனை, கற்பனை,
என்ற சொற்களைப் பயன் கொண்டீர்கள் போலும்
நூ த லோ சு  
2012/1/19 Innamburan Innamburan <innam...@gmail.com>

N. Ganesan

unread,
Jan 19, 2012, 8:27:34 AM1/19/12
to மின்தமிழ்
On Jan 18, 10:26 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>   குரிகல்ஷு அல்ல கரிகால்zu என்ப
> தே
> சரி.
>

I do not know anything about Tamil names in Sumeria, Ethiopia,
Japan, China, .... kings.

குரிகல்ஷு பற்றி:
http://en.wikipedia.org/wiki/Kurigalzu_I
http://en.wikipedia.org/wiki/Kurigalzu_II

Is there any scholarly work by Sumerian specialists
who say kuri has to be read as kari?

Thanks
N. Ganesan

Nagarajan Vadivel

unread,
Jan 19, 2012, 8:49:36 AM1/19/12
to mint...@googlegroups.com
மன்னர்களின் பெயர்ப்பட்டி  ஆய்வு செய்யும்போது போர்க்களத்தில் துஞ்சிய என்பதுபோல் கரிகால்  பெருவளத்தான் என்பதற்கு என்ன விளக்கம்?
Nagarajan

N D Logasundaram

unread,
Jan 19, 2012, 9:07:16 AM1/19/12
to mint...@googlegroups.com
திரு ராஜசங்கர் அவர்களுக்கு,
 
 நானும் அக்கருத்தைத் தான் முதலில் வைத்துள்ளேன் அய்யா
 நன்கு பாருங்கள்
 ஒரு மன்னன் என்றால் அவனை தனித்து பிறரிடமிருந்து எப்படி ஐயம்
ஏதும் இன்றி வேறுபடுத்திக்காட்ட முடியுமோ அவ்வாறு குறிப்பிடும்
நிலையில் தான் அவரவர் களுக்கு மட்டும் தொடர்புடைய ஓர் குறிப்பினை
பெயராகவோ அல்லது பெயருடனோ இணைத்து வைத்துள்ளனர்
அஃதும்  ஓர் மாண்புடன் அமைவது சிறப்பு என்பதில் வேறு கருத்துடையவன் அல்ல
 
கரிகால் என்னும் சொல்  அக்காலத்தே  அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்க முடியாது
என்று இக்காலத்திலிருந்து பலர் அளிக்கும் கருத்து தானே மறுப்பினுக்கு வைக்கும்
வாதம் 
 
மேலும்,
நான் வைத்துள்ளது (கரியைப் போன்ற கால்) மன்னனைப் பற்றிய  பாடல் களிலேயே உள்ள = 'உள்சான்று'.
யாரும் மறுக்க முடியாதது. சொற்களுக்கு  பொருள் கொள்ளும் நிலையில் தடம்  மாறலாம்
அப்போது ஐயம் கொண்டுவரமுடியுமே அன்றி மறுக்கமுடியாது. ஆனால் மறுப்பதற்கு வேறு  ஒன்றினால்
நிறுவப்படவேண்டும்
இரண்டாம் கருத்தாகிய (அதற்கு மறுதலை) தீயில்  கரிந்த கால் என்றால் அதற்குரிய சான்றினை
வைத்து பேசவேண்டும் யார் எப்போது அவ்வளவு  நுணுக்கமான வரலாறுச் செய்திகளைப் எங்கிருந்து
பெற்றார்கள் என்று நான் அறியேன் அவ்வாறு ஏதும் இருந்தால் அதனை அறிய ஆவல்.
 
நான்தான் அதனைக் நினைவினில் இருந்து குறித்துள்ளேன் எங்கோ எப்போதோ படித்த  நினைவு
அதனால் தான் ஐயம் என எழுதினேன்
 
சீனு அவர்களின் செப்பேட்டுக்   கருத்து மொழி மாற்றம் செய்தது அஃது  7  நூற்றாண்டுகளுக்கு பிறகு
வந்த செப்பேட்டு   ஆசிரியர்  செவி வழி நேரடியாகவோ மறைமுகமாகவோ கற்றதும் அதற்கு அவருக்கு
தெரிந்த அளவில் செய்த மொழி மாற்றம் அன்றி வேறில்லை.
(அவ்வாசிரியர்தம்  மொழிமாற்றம் பற்றி அறிய ஓர் ஆவல்வினா - உரகபுரம் என்றால் உறையூர் 
எனக் கொள்ளவேண்டும் என்றால் உரகபுரம்  (உரகம்= பாம்பு) எப்படி உறையூர் ஆகும் ???)
   
அதான்று,
கரிகால் உடைவன் என்றால் எந்த நிலையில் அக்குறை  இருந்தது அறியோம் ?
எப்படி இருந்தாலும் மனத் திண்மையுடன் வீரத்துடன் செயலாற்றி இருக்கவும்
முடியும் அல்லவா ?  
ஓர் மாமன்னவன் தனி மனிதன் போல் நடந்து செல்பவன் அல்லவே எப்போதும்
பரிமாவோ தேரோ யானையோ ஊர்தி ஆகும் அல்லவா?
 
அக்காலத்தே அந்த குறை (நோய்) ஓரளவிற்கு அறிந்த / பரவலானதாக 
 இருந்திருந்தால் அச்சொல்லால் விளித்தல் இழிபு என ஆகாது அல்லவா ? 
 
மேலும் அச்சொல்லால் விளித்துள்ளவர் ஓர் புலவர் அல்லவா ?
அல்லது இகழ்வதுபோல் புகழ்தல் ஆகாதா?
 
மீண்டும் எழுதுவோம்
 
நூ த லோ சு  
2012/1/19 Raja sankar <errajasa...@gmail.com>

DEV RAJ

unread,
Jan 19, 2012, 10:54:00 AM1/19/12
to மின்தமிழ்
உருவ அமைப்பை ஒட்டிப் பெயர்கள் அமைவதும் வழக்கம்தான்;
ஐயூர் முடவனார்,வருமுலை ஆரித்தி போன்ற பெயர்களை
உருவ அமைப்பை ஒட்டி ஏற்பட்டதாகக் கொள்ள இடமுள்ளது.
'கோச்செங்கணான் ' அத்தகைய பெயர்தான்.

உறையூர் உரகபுரமா , ஐயமே;
உறையூரை 'நிசுளாபுரி' என அழைப்பது வைணவ மரபு


தேவ்

> 2012/1/19 Raja sankar <errajasankarc...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > ராஜராஜனை கூடத்தான் தஞ்சாவூர் கோயில் எடுத்த ராஜராஜன் என சொல்வதில்லை.
> > ராஜேந்திரனை கூடத்தான் கங்கை கொண்ட சோழன் என சொல்வதில்லை. இதெல்லாம் ஏன்?
>
> > நீங்கள் கொடுத்திருக்கும் பட்டியலில் பெரும்பாலானோர் துஞ்சியவர்கள் அதாவது
> > போரிலே இறந்தவர்கள். அதனால் அப்படி சொல்லப்படுகிறார்கள். யானைமேல் துஞ்சிய
> > தேவர் என இராஜாதித்தருக்கு பெயர். அதாவது யானை மேல் இருக்கும் போது இறந்தவர்.
>
> > அடுத்து போர் வெற்றி மட்டும் இல்லாமல் செய்த அரும் செயல் சொல்லப்படுகிறது.
> > அது பல்யாகசாலை, கடலோட்டிய, ராஜசூயம் வேட்ட என்று சொல்லப்படுகிறது. அரசன்
> > செய்தது எல்லாம் அரும் செயலாக இருந்தால் அவர் வெறுமனே சொல்லப்படுவார்.
> > ராஜராஜன், ராஜேந்திரன், சுந்திரபாண்டியன், கழற்றிறைவார் என்போருக்கு அடைமொழி
> > ஏதும் தேவையில்லை. எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள் என்று தான்
> > சுந்திரபாண்டியனுக்கு மெய்க்கீர்த்தி. ஆனால் அதை சொல்லாமலே சுந்திரபாண்டியன்
> > என்றாலே நினைவுக்கு வருவது ஓர் சுந்திரபாண்டியன் தான்.
>
> > ஆக மன்னர்கள் பெற்ற வெற்றியை போட்டே ஆகவேண்டும் இணைத்தே பேசப்படவேண்டும்
> > என்று அவசியமில்லை.
>
> > ராஜசங்கர்
>

> >  2012/1/19 N D Logasundaram <selvindl...@gmail.com>


>
> >> கரிகால் வளவனின் வெண்ணிப் பறந்தலை வெற்றி ஏன்
> >> அவன் பெயருடன் இணைத்துக் குறிப்பிடப்படவில்லை
> >>                                  சிந்திக்க !!!!!!
>
> >   --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

Dhivakar

unread,
Jan 19, 2012, 11:18:21 AM1/19/12
to mint...@googlegroups.com
உறையூர் உரகபுரமா , ஐயமே;
உறையூரை 'நிசுளாபுரி' என அழைப்பது வைணவ மரபு

'பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கிகோயிலொடு குடிநிறீஇ (பட்டினப்பாலை-285)

உறையூரின் அந்தக் காலப் பெயர் - உறந்தை. - .உரகபுரத்தைப் பற்றி தமிழில் விவரங்கள் இல்லையென்றாலும், கரிகாலன் உறையூரை விடுத்து காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டான். இதே காவிரிபூம்பட்டினம் கடல் கொண்டதைப் பற்றி அச்சுதக் களப்பிரக் காலத்து (நான்காம்/ஐந்தாம் நூற்றாண்டு??) பாலி இலக்கியம் பேசுகிறது. புத்ததத்தா எனும் புலவர் பாலி மொழியில் எழுதிய 'வினயவினிச்சயா' வில் விரிவாக எழுதியும், அதன் பின் உறையூர் அருகில் பூதமங்கலத்தில் பெரிய பெரிய மாளிகைகள் எழுப்பி பௌத்த மடங்கள் ஸ்தாபித்ததையும் விவரிக்கிறார்.(உபயம் - History of the Tamils by PTS)

வைணவ மரபு என்பது பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் தானே தேவ் காரு.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

DEV RAJ

unread,
Jan 19, 2012, 11:29:02 AM1/19/12
to மின்தமிழ்
>> உறையூரின் அந்தக் காலப் பெயர் - உறந்தை<<

இலக்கியம் தரும் பெயர் இருக்கட்டும்;
'கோழி' என்றுகூடப் பெயர் இருந்துள்ளது.
'உரகபுரம்' (தக்த சரண) கல்வெட்டு தரும் பெயர் ;
அது எந்த நூற்றாண்டு ?


தேவ்

> ...
>
> read more »

Dhivakar

unread,
Jan 19, 2012, 11:30:42 AM1/19/12
to mint...@googlegroups.com
all simple stone inscriptions (by rulers) are from 5th or 6th CE only.

2012/1/19 DEV RAJ <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

DEV RAJ

unread,
Jan 19, 2012, 1:07:48 PM1/19/12
to மின்தமிழ்
On Jan 19, 7:07 pm, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
>>>> இரண்டாம் கருத்தாகிய (அதற்கு மறுதலை) தீயில் கரிந்த கால் என்றால் அதற்குரிய
சான்றினை வைத்து பேசவேண்டும்
யார் எப்போது அவ்வளவு நுணுக்கமான வரலாறுச் செய்திகளைப்
எங்கிருந்து பெற்றார்கள் .............. அதனை அறிய ஆவல். <<<<


திரு. நூ த லோ சு அவர்களின் அணுகுமுறை தெளிவாக உள்ளது;
எந்த ஒரு கருத்தையும் அவர் ஒதுக்கவில்லை

தேவ்

On Jan 19, 7:07 pm, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:

> 2012/1/19 Raja sankar <errajasankarc...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > ராஜராஜனை கூடத்தான் தஞ்சாவூர் கோயில் எடுத்த ராஜராஜன் என சொல்வதில்லை.
> > ராஜேந்திரனை கூடத்தான் கங்கை கொண்ட சோழன் என சொல்வதில்லை. இதெல்லாம் ஏன்?
>
> > நீங்கள் கொடுத்திருக்கும் பட்டியலில் பெரும்பாலானோர் துஞ்சியவர்கள் அதாவது
> > போரிலே இறந்தவர்கள். அதனால் அப்படி சொல்லப்படுகிறார்கள். யானைமேல் துஞ்சிய
> > தேவர் என இராஜாதித்தருக்கு பெயர். அதாவது யானை மேல் இருக்கும் போது இறந்தவர்.
>
> > அடுத்து போர் வெற்றி மட்டும் இல்லாமல் செய்த அரும் செயல் சொல்லப்படுகிறது.
> > அது பல்யாகசாலை, கடலோட்டிய, ராஜசூயம் வேட்ட என்று சொல்லப்படுகிறது. அரசன்
> > செய்தது எல்லாம் அரும் செயலாக இருந்தால் அவர் வெறுமனே சொல்லப்படுவார்.
> > ராஜராஜன், ராஜேந்திரன், சுந்திரபாண்டியன், கழற்றிறைவார் என்போருக்கு அடைமொழி
> > ஏதும் தேவையில்லை. எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள் என்று தான்
> > சுந்திரபாண்டியனுக்கு மெய்க்கீர்த்தி. ஆனால் அதை சொல்லாமலே சுந்திரபாண்டியன்
> > என்றாலே நினைவுக்கு வருவது ஓர் சுந்திரபாண்டியன் தான்.
>
> > ஆக மன்னர்கள் பெற்ற வெற்றியை போட்டே ஆகவேண்டும் இணைத்தே பேசப்படவேண்டும்
> > என்று அவசியமில்லை.
>
> > ராஜசங்கர்
>

> >  2012/1/19 N D Logasundaram <selvindl...@gmail.com>


>
> >> கரிகால் வளவனின் வெண்ணிப் பறந்தலை வெற்றி ஏன்
> >> அவன் பெயருடன் இணைத்துக் குறிப்பிடப்படவில்லை
> >>                                  சிந்திக்க !!!!!!
>
> >   --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

ஆமாச்சு

unread,
Jan 19, 2012, 10:21:14 PM1/19/12
to mint...@googlegroups.com
காலன் என்றால் எமன்.

கரி என்றால் யானை.

எதிரிகளின் யானைப்படைக்கு எமனாய் திகழ்ந்ததால் கரிகாலன்.

இப்படி கூட ஏன் யோசிக்கக்கூடாதுன்னேன்?

--

ஆமாச்சு

சீனுத்தாத்தா

unread,
Jan 20, 2012, 12:04:55 AM1/20/12
to மின்தமிழ்
என்னை மன்னிக்க் வேண்டி அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். தமிழ்
மூதாட்டியின் 'நல்வழியில்' வரும் கடவுள் வாழ்த்து கீழ்க் கண்டவாரு
அமைந்துள்ளது:அதை நினைவிற்கு கொண்டு வந்த பின்பு'கரிகாலன்' என்ற
பெயரைப்பற்றிய எனது கருத்துக்களை மாற்றிக் கொள்ளும்படி நேரிட்டுவிட்டது

ஔவையார் இயற்றிய ' கடவுள் வாழ்த்து
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-
கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத்
தமிழ்மூன்றுந் தா

(பதவுரை) கோலம் செய் - அழகினைச் செய்கின்ற, துங்கம் - உயாவாகிய,
கரிமுகத்து - யானை முகத்தையுடைய, தூமணியே-பரிசுத்தமாகிய மாணிக்கம்போலும்
விநாயகக் கடவுளே, பாலுந் தெளி தேனும் பாகும் பருப்பும்- ஆவின் பாலும்
தெளிந்த தேனும் வெல்லப்பாகும் பருப்பும்ஆகிய, இவை நாலும் கலந்து-
இந்நான்கையும் கலந்து, நான்உனக்குத் தருவேன் - அடியேன் தேவரீருக்கு
நிவேதிப்பேன்;சங்கத் தமிழ் மூன்றும் - சங்கத்தில் வளர்க்கப்பட்ட
முத்தமிழையும், நீ எனக்குத் தா - தேவரீர்

(ந.மு.வேங்கடசாமி நாட்டார்)

> > > வடிவினதாவதை நன்கறி வோம்....
>
> read more »

Hari Krishnan

unread,
Jan 20, 2012, 12:22:12 AM1/20/12
to mint...@googlegroups.com


2012/1/20 சீனுத்தாத்தா <see...@gmail.com>

என்னை மன்னிக்க் வேண்டி அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். தமிழ்
மூதாட்டியின் 'நல்வழியில்' வரும் கடவுள் வாழ்த்து கீழ்க் கண்டவாரு
அமைந்துள்ளது:அதை நினைவிற்கு கொண்டு வந்த பின்பு'கரிகாலன்' என்ற
பெயரைப்பற்றிய எனது கருத்துக்களை மாற்றிக் கொள்ளும்படி நேரிட்டுவிட்டது

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலும் கரி

என்ற குறட்பாவால் கரி என்றால் சாட்சி என்ற பொருள் பெறப்படுவதையும்; கால் என்றால் நாலிலொரு பங்கு என்ற பொருள் இருப்பதையும்; இக்காரணத்தால், எந்த ஒரு வழக்கையும் (மற்றவர்களுக்குத் தீர்ப்புச் சொல்லத் தேவைப்படுவதில்) நாலில் ஒரு பங்கு சாட்சியத்தின் அளவிலேயே மிகச் சரியாக அறிந்து, தீர்ப்பு சொல்ல வல்லவனே கரி--கால் சோழன் எனப்படுபவன் என்று நான் ஒரு தீஸிஸ் எழுதியிருக்கிறேனே! 

கருத்தை இப்போது மறுபடியும் மாற்றிக் கொள்ளலாமா?  இல்லை அப்படியே விட்டுவிடலாமா? 

Dhivakar

unread,
Jan 20, 2012, 1:32:48 AM1/20/12
to mint...@googlegroups.com
அன்புள்ள தாத்தாவுக்கு

வணக்கம். உங்கள் முதல் தகவலில் எந்தவித தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. கரிகாலன் என்றால் தீயில் கருகி, கருப்பாக மாறிவிட்ட தோல் வடுவால் ஏற்பட்ட மாற்றத்தால்தான் பெயர் வந்திருக்கவேண்டும். இது சாதாரண விஷயமன்று.. பகைவர்களின் தீச்செயலிலிருந்து ஒரு குழந்தை அல்லது சிறுவன்  தப்பிப்பது என்பது மிகப்பெரிய வீரச்செயல். இந்த வீரச்செயலால அந்த நிகழ்ச்சியை எப்போதும் நினைவில் கொள்ளும் வகையில் திருமாவளவனுக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது எனும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கூறி வரும் கூற்று சரியானதே.

உங்களுக்கு பரந்தாமன் எனும் எழுத்தாளர், பிரவசனகர்த்தா வை தெரிந்திருக்கலாம். துக்ளக் பத்திரிகையில் முன்பெல்லாம் எழுதிவந்தார். திருமுருக கிருபானந்த வாரியாரிடம் குழந்தை முதல் வளர்ந்தவர். காஞ்சிப் பெரியவரின் அன்புக்குகந்தவர். தமிழில் வல்லவர். சில ஆண்டுகளுக்கு முன்பு விசாகப்பட்டினம் வந்தபோது அவர் கண்ணதாசனின் ஒரு பாடலுக்கு - தனிப்பாடல் - விளக்கம் தெரிவித்தார். ’புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’ என்ற பாட்டின் உட்பொருளில் கோபிகா நாயகிகளின் ஊடல், கூடல் போன்றவை எவ்வாறெல்லாம் வருவதாக விளக்கமளித்தார்.

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்ற பாடலின் உட்கருத்தை கண்ணதாசனிடமே அவர் சொல்லியபோது, கவிஞர் சிரித்துவிட்டு, ’அந்தப் பாடலை எழுதியபோது எனக்கு இத்தனை பொருள் இருக்கிறதென்பது சத்தியமாகத் தெரியாது.. நான் எழுதியது அந்த கண்ணனின் மகத்துவத்தை வர்ணிக்க மட்டுமே.. இத்தனை உட்பொருள்களை எப்படித்தான் கண்டுபிடித்தீரோ, எனக்குத் தெரிந்து அப்படி எழுதவில்லை..’ என்று பாராட்டினாராம். இதையும் திரு பரந்தாமனே சொன்னதுதான். அவருடன் யாராவது தொடர்பு வைத்திருந்தால் இதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

எதற்கு இதை எழுதுகிறேன் என்றால், ஒரு சொல்லுக்கு பல பொருள் தமிழில் இருப்பது நம் மொழியின் சிறப்பு. ஆனால் அந்த காரணப் பெயரின் காரணப்பொருளை பல பெரியவர்கள் பல வருடங்களாகச் சொல்லி அது மனதில் பதிவாகிய பிறகு, புதிதாக வேறு வேறு அர்த்தங்கள் கற்பிப்பது ஏன்.. 

ஏற்கனவே யானைக் கால் வேந்தன் என்று சொல்வதில் உள்ள இழுக்குகளை எழுதியுள்ளேன். ஒருபோதும் மிகப் பெரிய மன்னனை அவன் நோயால் சம்பந்தப்படுத்தி யாரும் ‘புகழ’ மாட்டார்கள் இல்லையா.. அப்படியும் அவனுக்கு யானைக்கால் இருந்திருந்தால் அவனுடைய காலத்தவர் அதைச் சம்பந்தப்படுத்தி அவன் பெயரைப் பாடிப் புகழமாட்டார்கள். அவன் பெயரையே பெருமையாக வைத்திருக்க மாட்டார்கள்.பிற்காலப்புலவர்கள் தம் காவியங்களில் புகழமாட்டார்கள்.

கூன் பாண்டியன் என்ற பெயரால் பாண்டியமன்னன் இருந்தபோது, அவனுக்கு கூன் நிமிர்த்தப்பட்டு, நின்ற சீர் நெடுமாறன், என்ற பெயரும் ஏற்பட்டதை இங்கு குறிப்பிடவிரும்புகிறேன். கூன் பாண்டியன் என்ற அமங்கல்ப் பெயர் சமணசமயத்தில் இருந்தபோது அவனுக்கு இருந்தது என்பதும் ஞானசம்பந்தர் அந்தக் கூனை நிமிர்த்தியபோது ;நின்ற சீர் நெடுமாறன்’ என்ற பெயர் ஏற்பட்டதும், பாண்டியன் நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்ந்ததும் அனைவரும் அறிந்ததே.

தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் பல அர்த்தங்கள் உண்டு என்பதால் எந்த விஷயத்தையும் பல அர்த்தங்கள் கொள்ள இத்தகைய ஆராய்ச்சிகள் கொண்டுவிடும். இதைத்தான் முன்பு குறிப்பிட்டுள்ளேன். வீணான அர்த்தங்கள் வீணானதுதான்.

அன்புடன்
திவாகர்


2012/1/20 சீனுத்தாத்தா <see...@gmail.com>
>
> read more »

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

seshadri sridharan

unread,
Jan 19, 2012, 10:42:43 AM1/19/12
to mint...@googlegroups.com
ஐயா நீங்கள் சொல்லும் குரி என்பது தான் சரி என்பதற்கு என்ன அடிப்படை உள்ளது. kurigalzu II  தந்தை பெயர் பரண பூரி என தமிழாய் உள்ளதை நோக்குக. ஆதலால் குரிகல்சு என வராது. எதியோபிய மன்னன் ஒருவன் பெயர் esaki katir  என உள்ளது அதே பெயர் elam  மன்னன் பெயரில் kutir  nakunte என ஆங்கில உகரத்தில் தவறாக குறிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துப் பிழை ஆப்பு எழுத்தைப் படித்து ஆங்கல எழுத்தில் குறித்தவரின் தவறு என்றே சொல்ல முடியும். 

சீனு தாத்தா என கூறிக் கொள்பவர் கங்க மன்னன் துர்விநீதனின் மாமானாராக ஒரு கரிகாலனைக் குறிப்பிடுகிறார். அந்த சமற்கிருத செப்பேட்டில் தக்த - கருகிய என குறிக்கப்பட்டுள்ளதாக சுட்டுகிறார். எனவே இந்த கால் கருகி' செய்தி கி.மு. 500 இல் சிறுவனாக இருந்து கிழவன் வேடத்தில் முறை சொன்னவனுக்கும், கி.பி. 1 ஆம் நூற்றாண்டில் கல்லணை கட்டிய கரிகாலனுக்கும் என கரிகால மன்னர் பலருக்கும் சொல்லப்படுவதால் இது வழிவழியாக சொல்லிவரப்பட்ட சான்றுக்கு பொருந்தாத செய்தி என விடுக்க.

இது கரி என்றும் காலன் என்றும் உள்ள இரு வேறு பெயர்களின் கூட்டு என்பது ஒரு எளிய கருத்து இதற்கு எந்த சான்றும் தேவைப்படாது. சிந்து முத்திரையில் காலன் என்ற பெயர் தனியே புழங்குகிறது.

காலன் அதிஅன்.gif

இதில் அடைப்புக் கொட்டில் உள்ள பறவை லகரம் ஆகும். அடைப்புப்போடு ன்கர மெய் முதல் எழுத்து கா.

சேசாத்திரி
2012/1/19 N. Ganesan <naa.g...@gmail.com>
காலன் அதிஅன்.gif

Raja sankar

unread,
Jan 20, 2012, 3:31:45 AM1/20/12
to mint...@googlegroups.com
சேசாத்திரி அவர்களே

சீனு தாத்தா என்பது அவருடைய பெயராக நீங்கள் கருதவேண்டும். கூறிக்கொள்பவர் என்றெல்லாம் சொல்வது நாகரீகம் அல்ல.

அடுத்த முறை இந்த தவறு நேராமல் இருப்பது இந்த விவாதத்திற்கும் மின் தமிழுக்கும் நல்லது.

ராஜசங்கர்



2012/1/19 seshadri sridharan <ssesh...@gmail.com>

Dhivakar

unread,
Jan 20, 2012, 10:15:19 AM1/20/12
to mint...@googlegroups.com
>>உறையூர் உரகபுரமா , ஐயமே;<<

அன்புள்ள தேவ் ஜி!

உரகபுரம் உறையூரே!

Uragapura nivaasikEna AcaariyEna bhadantha Budhdhadattena kato Abhidammavaataaro nmym.

This work named Abhidhammavataro was composed by Bhadanta Bhuddhadatta Acariya, inhibitant of Uragapuram (Uraiyur)
(Ref: PTS History of Tamils, 'The eclipse of the early dynasties)

வினயவிச்சயா எழுதிய புதத தத்தரின் இந்த நூலைப் பற்றி அவருக்குப் பின் வந்தவர் ஒருவர் இப்படி மேற்கண்டவாறு எழுதியதாக ஆசிரியர் கூறுகிறார்.வினயவிச்சயா கூறும் பூதமங்கலம் இன்றைய பூதலூர், உறையூர் அருகே உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சீனு தாத்தா முதலில் கூறியது சரிதான்.

2012/1/19 DEV RAJ <rde...@gmail.com>
உருவ அமைப்பை ஒட்டிப் பெயர்கள் அமைவதும் வழக்கம்தான்;
ஐயூர் முடவனார்,வருமுலை ஆரித்தி போன்ற பெயர்களை
உருவ அமைப்பை ஒட்டி ஏற்பட்டதாகக் கொள்ள இடமுள்ளது.
'கோச்செங்கணான் ' அத்தகைய பெயர்தான்.


"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Jan 20, 2012, 10:20:23 AM1/20/12
to மின்தமிழ்

On Jan 20, 7:15 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> >>உறையூர் உரகபுரமா , ஐயமே;<<
>
> அன்புள்ள தேவ் ஜி!
>
> உரகபுரம் உறையூரே!
>
> Uragapura nivaasikEna AcaariyEna bhadantha Budhdhadattena kato
> Abhidammavaataaro nmym.
>
> This work named Abhidhammavataro was composed by Bhadanta Bhuddhadatta
> Acariya, inhibitant of Uragapuram (Uraiyur)
> (Ref: PTS History of Tamils, 'The eclipse of the early dynasties)
>
> வினயவிச்சயா எழுதிய புதத தத்தரின் இந்த நூலைப் பற்றி அவருக்குப் பின் வந்தவர்
> ஒருவர் இப்படி மேற்கண்டவாறு எழுதியதாக ஆசிரியர் கூறுகிறார்.வினயவிச்சயா கூறும்
> பூதமங்கலம் இன்றைய பூதலூர், உறையூர் அருகே உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
>
> சீனு தாத்தா முதலில் கூறியது சரிதான்.
>

ஐயா அவர்களுக்கு,

சீனுத்தாத்தா உரகபுரம் = உறையூர்
என்று எங்கே கூறினார்?
http://groups.google.com/group/mintamil/msg/edbacd3ae16a5ab3

நா. கணேசன்

> ...
>
> read more »

Dhivakar

unread,
Jan 20, 2012, 10:24:52 AM1/20/12
to mint...@googlegroups.com
கவனிக்கவில்லை திரு கணேசன். நீங்கள் கூறியிருந்தாலும் அது சரிதான். 

2012/1/20 N. Ganesan <naa.g...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

N. Ganesan

unread,
Jan 20, 2012, 10:25:47 AM1/20/12
to மின்தமிழ்

On Jan 20, 7:24 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> கவனிக்கவில்லை திரு கணேசன். நீங்கள் கூறியிருந்தாலும் அது சரிதான்.
>

நன்றி ஐயா

> 2012/1/20 N. Ganesan <naa.gane...@gmail.com>

> ...
>
> read more »

N D Logasundaram

unread,
Jan 20, 2012, 10:33:28 AM1/20/12
to mint...@googlegroups.com

திரு ஆமாச்சு  அவர்களுக்கு,
 
"கரி என்றால் யானை.எதிரிகளின் யானைப்படைக்கு எமனாய் திகழ்ந்ததால் கரிகாலன்".
இதனை நான் முதல் இடுகையிலேயே குரிதுள்ளேனே அய்யா !!!!
 
நூ த லோ சு
மயிலை
 
2012/1/20 ஆமாச்சு <rama...@amachu.net>


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

ஆமாச்சு

unread,
Jan 20, 2012, 10:38:18 AM1/20/12
to mint...@googlegroups.com
On Friday 20 January 2012 10:52 AM, Hari Krishnan wrote:
>
> கருத்தை இப்போது மறுபடியும் மாற்றிக் கொள்ளலாமா? இல்லை அப்படியே விட்டுவிடலாமா?

1) எதிரிகளின் யானைப்படைக்கு எமன்.
2) யானைபலம் கொண்டவனுக்கும் எமன்.
3) ஊத்துக்காட்டார் குவலயபீட மர்த்தன என்றாரே! சரியா கண்டுபிடிச்சேனா? அந்த குவலயபீட
மர்த்தனனின் நினைவாக கூட பேர் வைக்கப்பட்டிருக்கலாம்.

என்ன சொல்றீங்க?


ஆமாச்சு

unread,
Jan 20, 2012, 10:39:57 AM1/20/12
to mint...@googlegroups.com
On Friday 20 January 2012 09:03 PM, N D Logasundaram wrote:
"கரி என்றால் யானை.எதிரிகளின் யானைப்படைக்கு எமனாய் திகழ்ந்ததால் கரிகாலன்".
இதனை நான் முதல் இடுகையிலேயே குரிதுள்ளேனே அய்யா !!!!

I am in sync

Nagarajan Vadivel

unread,
Jan 20, 2012, 11:11:54 AM1/20/12
to mint...@googlegroups.com
//கருத்தை இப்போது மறுபடியும் மாற்றிக் கொள்ளலாமா?  இல்லை அப்படியே விட்டுவிடலாமா? //
அப்புடியே வுட்டுட்டா அப்புறம் மின் தமிழ் என்னாகும்? அழுத்திப்புடிச்சு நூறு வரைக்கும் கொண்டுபோவாகலே
கரிகாலன் ஓகே பெருவளத்தான் அப்புடியே நிக்குதே அதையும் கொஞ்சம் பாக்கலாமே
2012/1/20 ஆமாச்சு <rama...@amachu.net>
On Friday 20 January 2012 10:52 AM, Hari Krishnan wrote:

N D Logasundaram

unread,
Jan 20, 2012, 11:25:37 AM1/20/12
to mint...@googlegroups.com
இந்த  இழையில் பங்கு கொள்வோருக்கு,
 
கரிகாலன் எனும் சொல் இடையே வரும் ஆனால்  நான் கொண்ட மடலாடலுக்கு புறம்பாகும்
என்று அறிந்துதான் தான் முதலிலேயே நீக்கும் (preempt) கருத்தாக வைத்தேன்  அய்யா
எனினும்  பிறகு திரு சேஷாத்ரி அவர்களுடைய மடலுக்கு பதிலாக கரிகால் எனும்  சொல்தான்
சங்க நூல்களில் உள்ளது என மீண்டும் விளக்கியுள்ளேன் எனவே கரிகால் பற்றி தொடரலாம் 
என கேட்டுக் கொள்கிறேன்  

நூ த லோ சு
 
 
2012/1/20 ஆமாச்சு <rama...@amachu.net>
On Friday 20 January 2012 10:52 AM, Hari Krishnan wrote:

N D Logasundaram

unread,
Jan 20, 2012, 11:28:51 AM1/20/12
to mint...@googlegroups.com
அன்புள்ள 
நாகராஜன் அவர்களுக்கு,
 
எப்படி வழுதி, மாறன் என்பது பாண்டியற்கு  ஆவதுபோல்,
பொறை  ஆதன் சென்னி என்பது சேரற்கு  ஆவதுபோல்,
கிள்ளி, வளவன் என சோழர்களைக்  குறிக்கும் குல மரபுச்
சொல்லால் விளிக்கப்படுகின்றான் ஆனால் தனி  ஒரு
மன்னனின்  பெயர் கரிகால்பெருவளத்தான் என கொளல்
வேண்டும் அதாவது யானையைப்போல் நடை(காலின் 
உருவமும்) கொண்டவன் எனவரும். உருவமும்
அமைந்ததால்தான்
1. "களிறு கடைஇய தாள்-கழல் உரீஇய திருந்தடி"
2. "களி இயல் யானைக் கரிகால் வளவ"
 என பாடலில் காண்பது என்பது என் கருத்து
 (பிற்காலத் தோரால்தான்  கரிகாலன் என குறிக்கப் பெறுகின்றான்)
 
அதான்று
தாங்கள் குறித்த கொசு பற்றி ஓர் கருத்து,
யானைக்கால் நோய் கொசுவினால் மட்டும் பரவுவது இல்லை
விக்கிபீடியா ஈயையும் காட்டுகின்றது காண்க  
மேலும் நான்  என் அனுபவத்தில் கண்டது பார்க்க  
 
1960 ல் நான் ரயில்வே சர்விஸ் கமிஷன் தேர்ச்சி பெற்று சிக்னல் இன்ஸ்பெக்டர் (ட்ரைநீ யாக)
சேர்ந்தபோது போத்தனூர் மையத்தில் பயிற்சி அப்போது நாங்கள் கூனூர் சென்றிருந்தோம் 
அங்கு ஒரு காபி தோட்டம் காபி எப்படி விளைகிறது எனப் பார்க்கும் ஆவலால் ஒருவரைக்  கேட்டு
ஒரு தோட்டத்திற்குள்  சென்றோம் அங்கு ஒரு பள்ளி நடந்து கொண்டிருந்தது  அது ஓர் ஒற்றை
வாத்தியார் பள்ளி புது முகமாக எங்களைப் பார்த்த அவர் வாருங்கள் பாருங்கள் என்றெல்லாம்
விருந்தோம்பினார். அப்போது காப்பிப் பூக்கும் காலம் போலும் வெண்மை நிறப் பூக்கள் நிறைந்து இருந்தது  
எங்களுக்கு ஒரு முன்ஜாக்கிரதை அறிவுரை கூறினார் நீங்கள் எல்லாம் புதியவர் எங்களுக்கு பழகி விட்டது
இங்கு பூக்கள் மேல் மொய்க்கும் கொசு போன்றதொரு பூச்சியினம் கடித்தால் தாங்கமாட்டீர்கள் என்றார்
நாங்கள் திரும்பி வந்த போது மூன்று நான்கு நாள் கழித்து (gestation period) எனக்கு  காய்ச்சல்  வந்தது 
ரயில்வே மருத்துவ மனையில்  காட்டினேன் மருந்துகள் கொடுத்தனர் நான்கு நாள் ஆகியும் சாதாரணமான
காய்ச்சல் போகவில்லை பிறகுதான் பெரிய மருத்துவர் பார்த்து சோதித்து பைலேரியா பாசிடிவ் என்றார்
பிறகு சரியான மருந்தினால் குணம் அடைந்து விட்டேன் நான் இங்கு கூற வந்தது கொசு ஒன்றினால்
மட்டும் அல்ல அது போன்ற ஆயிரக்கனக்கான பூசிகளாலும் நோய்கள் பரவக்கூடும் பழங்காலத்தில் எந்த எந்த
வகை பூச்சி இனங்கள் இருந்தன என ஆவணங்களில் காணமுடியவில்லையே.
 
தேவாரப் பாடல் களில்  7  ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞான  சம்பந்தர் கொடிமாடச் செங்குன்றூர் என்னும்
ஊரில் வழிபாடு செய்த போது அங்கு ஆயிரமக்கள் மக்கள் ஓர் விதவிஷக்  காய்ச்சலால் அவதியுற்றனர்
சம்பந்தர் கடவுளிடம் வேண்டுகோள் விடுத்துப்பாடி  அவர்களது துயரம் தீர்த்தார் என்பது வரலாறு. நான் இங்கு
சொல்ல நினைப்பது இஃது ஓர் ஆவணப்படுத்தப்பட்ட அந்த  நூறாண்டு  அவ்விடத்தில் வந்த  கொள்ளை நோய்
பற்றிய செய்தி என்பதே.
 
தேவை எனில் தொடருவோம்
நூ த லோ சு

2012/1/19 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Jan 20, 2012, 12:42:50 PM1/20/12
to mint...@googlegroups.com
தாங்கள் குறித்த கொசு பற்றி ஓர் கருத்து,
யானைக்கால் நோய் கொசுவினால் மட்டும் பரவுவது இல்லை. கீழே உள்ள குறிப்பு
The most common cause of lymphatic obstruction is filariasis, an
infection with parasitic roundworms known as filariae. Filariasis is caused chiefly by the species Wuchereria ban-crofti and Brugia malayi and is common in some tropical and subtropical parts of the world. Elephantiasis develops only after the infection has been present for many years. It is preceded by chronic swelling of the affected part and by acute attacks of inflammation within it. 
கொசுவால் யானைக்கால் வருவதில்லை என்பதை நிறுவுகிறது.  பொதுவாக நீர்நிலைகளில் காலை நனைத்து நின்று வேலை பார்ப்பவர்களுக்கு யானைக் கால் நோய் வருவதுண்டு. இப்போது ஆய்வு முடிவு யானக்கால் கொசுவால் பரவுவதில்லை என்று நிறுவுகிறது
2012/1/20 N D Logasundaram <selvi...@gmail.com>

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Jan 21, 2012, 12:11:32 AM1/21/12
to mint...@googlegroups.com
நூதலோசு ஐயா

கரிகாலன் என்பது 

யானைப்படைக்கு எமன் என்றால் 

ஏனைபடைகளுக்கு நண்பன் 

என்று கொள்ள இடமளிக்கிறதே.

அன்புடன்,

தி.பொ.ச.

2012/1/20 N D Logasundaram <selvi...@gmail.com>
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

N. Ganesan

unread,
Jan 21, 2012, 12:45:21 AM1/21/12
to மின்தமிழ்

On Jan 20, 8:25 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> இந்த  இழையில் பங்கு கொள்வோருக்கு,
>

> கரி*காலன்* எனும் சொல் இடையே வரும் ஆனால்  நான் கொண்ட மடலாடலுக்கு புறம்பாகும்


> என்று அறிந்துதான் தான் முதலிலேயே நீக்கும் (preempt) கருத்தாக வைத்தேன்  அய்யா
> எனினும்  பிறகு திரு சேஷாத்ரி அவர்களுடைய மடலுக்கு பதிலாக கரிகால் எனும்
> சொல்தான்

> சங்க நூல்களில் உள்ளது என மீண்டும் விளக்கியுள்ளேன் எனவே *கரிகால்*


>  பற்றி தொடரலாம்
> என கேட்டுக் கொள்கிறேன்
>
> நூ த லோ சு

யானைக்குக் காலன் பொருந்தாது. கரி - கரம் என்னும் வடசொல் - ஹஸ்தி போல.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 21, 2012, 12:46:28 AM1/21/12
to மின்தமிழ்

On Jan 20, 8:28 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> அன்புள்ள
> நாகராஜன் அவர்களுக்கு,
>
> எப்படி வழுதி, மாறன் என்பது பாண்டியற்கு  ஆவதுபோல்,
> பொறை  ஆதன் சென்னி என்பது சேரற்கு  ஆவதுபோல்,

சென்னி - சோழர்களுக்கு ஒரு பெயர்.

சென்னி செங்கோல் அது ஓச்சி - சிலம்பு.

நா. கணேசன்

>  கிள்ளி, வளவன் என சோழர்களைக்  குறிக்கும் குல மரபுச்
> சொல்லால் விளிக்கப்படுகின்றான் ஆனால் தனி  ஒரு
> மன்னனின்  பெயர் கரிகால்பெருவளத்தான் என கொளல்
> வேண்டும் அதாவது யானையைப்போல் நடை(காலின்
> உருவமும்) கொண்டவன் எனவரும். உருவமும்
> அமைந்ததால்தான்

> 1. "களிறு *கடைஇய* தாள்-கழல் உரீஇய திருந்தடி"
> 2. "களி *இயல் யானை*க் கரிகால் வளவ"

> சொல்ல நினைப்பது இஃது ஓர் *ஆவணப்படுத்தப்பட்ட
> அந்த  நூறாண்டு  அவ்விடத்தில் வந்த  கொள்ளை நோய்*
> பற்றிய செய்தி *என்பதே*.


>
> தேவை எனில் தொடருவோம்
> நூ த லோ சு
>

> 2012/1/19 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > மன்னர்களின் பெயர்ப்பட்டி  ஆய்வு செய்யும்போது போர்க்களத்தில் துஞ்சிய
> > என்பதுபோல் கரிகால்  பெருவளத்தான் என்பதற்கு என்ன விளக்கம்?
> > Nagarajan
>
> > அ

> > 2012/1/19 N D Logasundaram <selvindl...@gmail.com>


>
> >> அன்புள்ள  இன்னம்பூரானுக்கு,
> >> தங்களுக்கு இவ்விழையில் ஏனோ ஒரு பிடித்தம் இல்லை போலும்
> >> அதனால் தங்கள் பாணியில்  ’ச்சும்மாச்சுக்கும்’  என்றெல்லாம்
> >> சீசீ சீசீ இந்தப் பழம் புளிக்கும் எனும்
> >> கருத்திற்கு ஒப்ப சுவை, ரசனை, கற்பனை,
> >> என்ற சொற்களைப் பயன் கொண்டீர்கள் போலும்
> >> நூ த லோ சு

> >>  2012/1/19 Innamburan Innamburan <innambu...@gmail.com>


>
> >>> இந்த  ’ச்சும்மாச்சுக்கும்’ சுவையற்றது; ரசனை அற்றது. நற்கற்பனையும் அல்ல.
> >>>  இ
>

> >>> 2012/1/19 N D Logasundaram <selvindl...@gmail.com>


>
> >>>> திரு  திவாகர் அவர்களுக்கு
> >>>> தக்கயாகப் பரணி அல்லாமல்
> >>>> ஒட்டக்கூத்தர்  பாடிய (மூவருலா வில்)
> >>>> குலோத்துங்க சோழனுலா கண்ணி-18 ல்
>

> >>>> *கண்கொண்ட சென்னிக் கரிகாலன் - எண்கொள்௧*
> >>>> **


> >>>> என முதல் மடலிலேயே வைத்தேனே
>
> >>>> நூ த லோ சு
>
> >>>> மயிலை

> >>>>   2012/1/19 Dhivakar <venkdhiva...@gmail.com>


>
> >>>>> >>>கரிகாலன் என்னும் சொல்லாட்சி சங்க நூல்களில் இல்லை.
> >>>>> கரிகால் பெருவளத்தான் // கரிகால்  //   கரிகால் வளவன்
> >>>>> எனத்தான் உள்ளது<<<
>
> >>>>> But Jeyamkondaar sang him as KARIKALAN only during 1100 CE
>
> >>>>> இமயத்தில் புலிக்கொடி
>
> >>>>> 178
> >>>>> செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிமயச்
> >>>>> சிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப்
> >>>>> பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்
> >>>>> பாய்பு லிக்குறிபொ றித்தது மறித்த பொழுதே.
>

> >>>>> 2012/1/19 N D Logasundaram <selvindl...@gmail.com>:


> >>>>>  > அன்புள்ள  சேசாத்திரி   அவர்களுக்கு,
> >>>>> > கரிகாலன் என்னும் சொல்லாட்சி சங்க நூல்களில் இல்லை.
> >>>>> > கரிகால் பெருவளத்தான் // கரிகால்  //   கரிகால் வளவன்
> >>>>> > எனத்தான்
>

> ...
>
> read more »

DEV RAJ

unread,
Jan 21, 2012, 1:13:37 AM1/21/12
to மின்தமிழ்
On Jan 21, 10:45 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>>> யானைக்குக் காலன் பொருந்தாது<<<

கணேசர் ஐயா,

காலகால - அரனார்
அஸுரகுலகால - திருமால்
போல 'கரிகால' ஒரு ஸமஸ்த பதம்.
கரிந்த கால் என்று தமிழ்வழியே
பொருள் கொள்ளவும் இடமுள்ளது.
வடமொழிப் பதமாக எடுத்துக்கொண்டால்
யானைக்குக் காலன் பொருந்தும்.

'கௌல கஜமர்தநம்' (தாந்த்ரிகம்)
எனும் நூல் உள்ளது;
கஜமர்தந, கரிகால இரண்டுக்கும்
பொருள் ஒன்றே.

பிரபல இண்டாலஜிஸ்டான உங்களுக்குத்
தெரியாததில்லை


தேவ்

N D Logasundaram

unread,
Jan 21, 2012, 12:33:45 PM1/21/12
to mint...@googlegroups.com
அன்புள்ள  நாகராஜன்  அவர்களுக்கு  
முன்பு படித்த ஞாபகம் கேரளாவில் இன்நோய் பரவலாகக்
இன்றும் காணப்படும் என்பது அங்குதான் (நல்ல) நீர் தேங்கி
நிற்கும் பல  கிமீ நீண்ட கழிமுகங்கள்  உண்டு
 
நூ த லோ சு
 
 

 
2012/1/20 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

N D Logasundaram

unread,
Jan 21, 2012, 1:23:08 PM1/21/12
to mint...@googlegroups.com
திருவாளர்   கணேசன் அவர்களுக்கு,
 
சென்னி என்பது சேரர்க்கும் வருவது காண்க
மேலும் சென்னியர் என்னும் சொல் பொதுவாக சேரரைக் குறிக்கின்றது
 
கணையன் அகப்படக் கழுமலம் தந்த
பிணையல்அம் கண்ணிப் பெரும்பூட் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர்     15                     அகம் 44
 
பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்
பாடப்பட்டோன்: சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
திணை:பாடாண் துறை:பரிசில்                                      புறநானூறு ௨௦௩
 
நல்மரம் துவன்றிய நாடுபல தரீஇப்
பொன்அவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண்
ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்               பதிற்றுப்பத்து பாட்டு -
 
சென்னிமலை என்பது சேரநாட்டில் உள்ளது எனலாம்
ஓர் பெயரல்லாது சென்னி தமிழ் மொழியில்   தலையைக்
குறிக்கும் என்பதை நன்கே அறிவீர்கள்
நீங்கள் காட்டியதுபோல் சோழர்க்கும் உள்ளது அறிவேன்
 
எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன் 10
விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி
குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார்                                                             அகம் 375
"தாயற்ற குழந்தை" பாடியவர்: பரணர்
பாடப்பட்டோன் : சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி
திணை: வஞ்சி துறை: கொற்ற வள்ளை
சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும் இச் சோழனது வெற்றி மேம்பாடும்       புறம் 4

குற்றமும் தண்டனையும்
பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார்
பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி                   புறம் 10

நூ த லோ சு
2012/1/21 N. Ganesan <naa.g...@gmail.com>

N D Logasundaram

unread,
Jan 21, 2012, 1:41:53 PM1/21/12
to mint...@googlegroups.com
திருவாளர்  பொன்  சரவணன்
ஓர் தமிழ்ச் சொல் என்று இவ்விழையில் கலக்காது நோக்க,
 
கரிகாலன் எனும் சொல்லை தாங்கள் குறித்துள்ளது போல் அதாவது
 கரிக்கு காலன் (இரண்டாம்  வேற்றுமைத் தொகை) அல்லது
சிறிதே நீட்டி யானைப் படைக்கு காலன் போன்றவன் எனக்
கொள்ளுங்கால் சிறப்பு காட்டு நிலை அல்லது தேற்றப் பொருளே அன்றி
அதற்கு இனமான குதிரை முதலிய  வற்றைத் தள்ளாது / நீக்காது 
 
நூ த லோ சு   


 
2012/1/21 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Jan 21, 2012, 2:23:48 PM1/21/12
to mint...@googlegroups.com
வணக்கம்.
அருமையானதொரு தொடர்.
தொடர்ந்து படித்துவருகிறேன் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

N D Logasundaram

unread,
Jan 21, 2012, 9:23:20 PM1/21/12
to mint...@googlegroups.com
பூபதி எழுதினார்
ஆமாம்..!   அன்றைக்கெல்லாம்   அகவல்தானே  (Akaval Meter)
அதனை அடுத்துத்தானே   ஆசிரியம்  இன்னபிறவெல்லாம்...!?)
 
நீங்கள் காட்டும் கருத்து சரியே சங்க நூல்களில்
பல அகவற்பா யாப்பினால் ஆனது.
 ஆனால் அகவல் ஆசிரியம் இரண்டும் ஒன்றுதானே அய்யா
அகவல் ஓசை நிலையில்
ஆசிரியம் ஓர்  பா / பாடல் வகை
(அதற்குரிய இயல் கொண்டு யாப்பது)
 ஏந்தும் கருத்து நிலையில் ஆசிரியர் முன் நின்ற மாணவனுக்கு
ஓர் பொருளை கற்பிக்கும் தொனியில் செல்வது அகவல் ஓசை
உடைய ஆசிரியப்பா என படித்த நினைவு  
 
நூ த லோ சு 
  
2012/1/18 MANICKAM POOPATHI <poop...@gmail.com>
:-)  :-)  :-)

வணக்கம் நண்பர்களே:  _/\_

கரிகால் பெருவளத்தான் என்பது
சில உரையாசிரியர்களின்  தனிப்பாடல்களில்..
கரிகாலன் என -அன்- எனும் விகுதி ஏறி   இருப்பதைக்
கண்ட  செடுவினை  இங்கே இறக்கி வைக்க விழைகிறேன்.

கணைக்கால் (இரும்பொறை) என்பது
கணுக்கால்/கெண்டைக்கால் போன்ற  பொருள்பட வாராது..
மாறாக.. சங்கநாதன் என்பது (வரி/விளிசங்கு)(கணைக்கால் = சங்கு))
அதன்  உள்ளுரைப் பொருள் என்பதே  துணிபு.

கணைக்காலன் என்றால்..
பொருள் அடியோடுப் மாறி விடும்.. இல்லீங்களா..?
(சீர் தளை சாக்தனுக்கு நேர்ந்ததைப் போல..?)

(ஆமாம்..!   அன்றைக்கெல்லாம்   அகவல்தானே  (Akaval Meter)
அதனை அடுத்துத்தானே   ஆசிரியம்  இன்னபிறவெல்லாம்...!?)

கரிகை என்றால்  தரும சக்கரம்.
இன்னும்..   கருங்கோட்டு  கவரிமா....
என்றெல்லாம் பொருள்படும்..?

காரி அல்லது கரிக்கா (கரிகை)  என்பது பேச்சுவழக்கு..
ஆதலினால்தானோ .. அவன்  கரிகால் பெருவளத்தான்..?

மற்றபடி...
கரிகால் பெருவளவனுக்கு..
ஆனைக்கால் வியாதி இருந்ததற்கான
இலக்கிய குறிப்புகள்..  ஏதும் இருப்பதாகக் காணோம்.

கருப்புத்  தமிழன் கரிகாற்
பெருவளத்தானின் கால்கள்.. கருகினால் என்ன.. 
இல்லை.. கருகா விட்டால் என்ன..அவனுடைய  கால்கள் 
நல்ல கருப்பாகத் தானே இருந்திருக்கும். இருந்திருக்க முடியும்...??

மேற்படி கூறுகளுக்கு / தனிப்பாடல்களுக்கு (?)
நண்பர்கள்  வசம் ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால்.. (?)
அவற்றினை இங்கே தயவுடன்   வெட்டி ஓட்ட வேண்டுகிறேன்...

மிக்க  நன்றி...!

அன்புடன்.../பூபதி

பிகு: 
கரி/கரிதம் = அச்சம்
இன்னும் கண்ணெழுதும்   மை..   (அஞ்சனம் )
இ / மருள் என்ரெல்லாம்  பொருள்படும்..
(கரி = அச்சத்தினை |  காலன் = அழிப்பவன் )

நண்பர்கள் அறியாதது அல்ல..
உள்ளங்கால் அற்ற (flatfeet)
தட்டையான  பாதத்தினை.. (அதாங்' மொக்கை ..)
ஆனைக்கால் என்பதுமுண்டு..?

அத்தகைய பாதத்துடன் நாட்டியம்
கற்றுக்கொள்வதே  கொஞ்ஞம் சிரமம்தானே..?

[... நடந்தால் 'அதிரும்' இராஜ நடை
நாற்புறம் 'பறக்கும்' உனது படை...." (அழுத்தம் அடியேனது)
என்று பாடியது எதற்காகவாம் ..?]  (:o|

பிறகு..?
தைத்  தைஐ   திமுசுக்கட்டை என
ஆடுவதுதான்.. மெய்யாலும்   மெய் அடவா..?

இல்லை.. இட்ட அடி நோக..
எடுத்த அடி கொப்பளிக்க (with proper curves)
சலங்கை கொஞ்ச ஒடிந்து நடப்பது  .. பொய்யடவா..??

PPS:  Flatfeet/Vertical Talus/Tarsal Coalition is a common
genetically predisposed Orthopedic Disorder widely prevalent
in some strictly endogamous quarters  (= among isolated people)
____________________________

N. Ganesan

unread,
Jan 21, 2012, 9:30:41 PM1/21/12
to மின்தமிழ்

On Jan 21, 10:23 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
> திருவாளர்   கணேசன் அவர்களுக்கு,
>
> சென்னி என்பது சேரர்க்கும் வருவது காண்க

> மேலும் *சென்னியர்* என்னும் சொல் பொதுவாக சேரரைக் குறிக்கின்றது
>
> கணையன் அகப்படக் *கழுமலம்* தந்த
> பிணையல்அம் கண்ணிப் பெரும்பூட்* சென்னி
> *அழும்பில் அன்ன அறாஅ யாணர்     15                     அகம் 44


>
> பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்

> பாடப்பட்டோன்: சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் *சென்னி
> *திணை:பாடாண் துறை:பரிசில்                                      புறநானூறு ௨௦௩


>
> நல்மரம் துவன்றிய நாடுபல தரீஇப்
> பொன்அவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண்

> ஒன்னாப் பூட்கைச் *சென்னியர்* பெருமான்               பதிற்றுப்பத்து பாட்டு -
>
> *சென்னிமலை* என்பது சேரநாட்டில் உள்ளது எனலாம்
> ஓர் பெயரல்லாது *சென்னி *தமிழ் மொழியில்   தலையைக்


> குறிக்கும் என்பதை நன்கே அறிவீர்கள்

> நீங்கள் காட்டியதுபோல் *சோழர்க்கும்* உள்ளது அறிவேன்
>
> எழாஅத் திணிதோள் *சோழர்* பெருமகன் 10
> விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ்* சென்னி
> *குடிக்கடன் ஆகலின் குறைவினை


> முடிமார்                                                             அகம்
> 375
> "தாயற்ற குழந்தை" பாடியவர்: பரணர்

> பாடப்பட்டோன் : சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் *சென்னி
> *திணை: வஞ்சி துறை: கொற்ற வள்ளை


> சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும் இச் சோழனது வெற்றி மேம்பாடும்       புறம்
> 4
>
> குற்றமும் தண்டனையும்
> பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார்

> பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் *சென்னி*
> புறம் 10
>

Aren't these examples confirm that Cenni = Chozha-s?

N. Ganesan

> நூ த லோ சு
> 2012/1/21 N. Ganesan <naa.gane...@gmail.com>

> ...
>
> read more »

ஆமாச்சு

unread,
Jan 21, 2012, 9:37:19 PM1/21/12
to mint...@googlegroups.com
On Sunday 22 January 2012 08:00 AM, N. Ganesan wrote:
> Aren't these examples confirm that Cenni = Chozha-s?
தமிழ்நாட்டிஸத்திடமிருந்து சோழர்கள் தங்கள் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும்.

seshadri sridharan

unread,
Jan 20, 2012, 5:43:27 AM1/20/12
to mint...@googlegroups.com
ஐயா என்னையும் ஒருவர் தாத்தா என்று சொல்லிவிட்டார் ஆனால் நான் எதிர் காலத்தில் ஆக வேண்டியவனே என்பதில் ஐயம் இல்லை ஆனால் இன்று இளைஞன். அதுபோல் நானும் சீனு தாத்தா என்று சொல்லி அதுவும் தவறாகி விட்டால் என்ற ஐயத்தில் தான் அவ்வாறு குறிப்பிட்டேன். நாகரீகக்கேடாக நான் எதையும் சொல்ல விழையவில்லை. தவறாகப் புரிந்து கொண்டு இதை ஒரு விவாதப் பொருளாக்கியது ராசசங்கர் தான் என்பதை யாவரும் உணருவர்.


சேசாத்திரி
2012/1/20 Raja sankar <errajasa...@gmail.com>

seshadri sridharan

unread,
Jan 21, 2012, 10:46:54 AM1/21/12
to mint...@googlegroups.com
Dear All,

In elam there was a king by name Khutran Temti  >  கூற்ன்  திண்டி . Elephant is also meant by the word திண்டி. கூற்ன் means  எமன்  .எதிரிகளின் யானைப் படைக்கு எமனாய் திகழ்ந்ததால் கூற்ன்  திண்டி  என  தோ? 
This name is also very old. The same explanation was given by Dr. R. Mativanan, decipherer of Indus script, for kurikalan. 

when was the usage of elephants in the war field has started has tobe ascertained first with evidence only then this explanation will fetch its value.

seshadri

again i encounte problem in tamil typing.


N. Ganesan

unread,
Jan 22, 2012, 9:48:00 AM1/22/12
to மின்தமிழ்
On Jan 19, 7:42 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> ஐயா நீங்கள் சொல்லும் குரி என்பது தான் சரி என்பதற்கு என்ன அடிப்படை உள்ளது.
> kurigalzu II  தந்தை பெயர் பரண பூரி என தமிழாய் உள்ளதை நோக்குக. ஆதலால்
> குரிகல்சு என வராது. எதியோபிய மன்னன் ஒருவன் பெயர் esaki katir  என உள்ளது அதே
> பெயர் elam  மன்னன் பெயரில் kutir  nakunte என ஆங்கில உகரத்தில் தவறாக
> குறிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துப் பிழை ஆப்பு எழுத்தைப் படித்து ஆங்கல
> எழுத்தில் குறித்தவரின் தவறு என்றே சொல்ல முடியும்.
>

சுமேரிய களிமண் பலகை எழுத்துக்களில்
அகர உயிர்மெய்யும் உண்டு, உகர உயிர்மெய்யும் உண்டு.

ஓர் உதாரணம்:
http://etcsl.orinst.ox.ac.uk/cgi-bin/etcsl.cgi?text=c.1.1.1&display=Crit&charenc=gcirc#
http://etcsl.orinst.ox.ac.uk/cgi-bin/etcsl.cgi?text=c.1*#

http://etcsl.orinst.ox.ac.uk/cgi-bin/etcsl.cgi?text=all#

முக்கியமாக, மறைந்த பேரா. சாமுவேல் கிரேமர் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளப்
படிக்கவும். இந்தியவியல் பேராசிரியர்கள் சுமேரியா, சிந்து வணிக
தொடர்புகளைக் காட்டி உள்ளனர். ஆனால், சுமேரிய மன்னர்கள்
பெயர்கள் தமிழாக தெரியவில்லை. எத்தியோப்பியா, கொரியா,
ஜப்பான் பாண்டிய மன்னர்களைப் போன்ற ஆராய்ச்சிகளில்
நிறுவுதற்கு நிறைய வெற்றிடங்கள் உள்ளன.

நா. கணேசன்

> சீனு தாத்தா என கூறிக் கொள்பவர் கங்க மன்னன் துர்விநீதனின் மாமானாராக ஒரு

> கரிகாலனைக் குறிப்பிடுகிறார். அந்த சமற்கிருத செப்பேட்டில் தக்த - கருகிய என
> குறிக்கப்பட்டுள்ளதாக சுட்டுகிறார். எனவே இந்த கால் கருகி' செய்தி கி.மு. 500
> இல் சிறுவனாக இருந்து கிழவன் வேடத்தில் முறை சொன்னவனுக்கும், கி.பி. 1 ஆம்
> நூற்றாண்டில் கல்லணை கட்டிய கரிகாலனுக்கும் என கரிகால மன்னர் பலருக்கும்
> சொல்லப்படுவதால் இது வழிவழியாக சொல்லிவரப்பட்ட சான்றுக்கு பொருந்தாத செய்தி என
> விடுக்க.
>
> இது கரி என்றும் காலன் என்றும் உள்ள இரு வேறு பெயர்களின் கூட்டு என்பது ஒரு
> எளிய கருத்து இதற்கு எந்த சான்றும் தேவைப்படாது. சிந்து முத்திரையில் காலன்
> என்ற பெயர் தனியே புழங்குகிறது.
>
> [image: காலன் அதிஅன்.gif]
>
> இதில் அடைப்புக் கொட்டில் உள்ள பறவை லகரம் ஆகும். அடைப்புப்போடு ன்கர மெய்
> முதல் எழுத்து கா.


>
> சேசாத்திரி

> 2012/1/19 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > On Jan 18, 10:26 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> > >   குரிகல்ஷு அல்ல கரிகால்zu என்ப
> > > தே
> > > சரி.
>
> > I do not know anything about Tamil names in Sumeria, Ethiopia,
> > Japan, China, .... kings.
>
> > குரிகல்ஷு பற்றி:
> >http://en.wikipedia.org/wiki/Kurigalzu_I
> >http://en.wikipedia.org/wiki/Kurigalzu_II
>
> > Is there any scholarly work by Sumerian specialists
> > who say kuri has to be read as kari?
>
> > Thanks
> > N. Ganesan
>
> > > please remember that curry which you eat as side dish is being spelt as
> >  கரி
> > > and not  குரி. same pronounciation is to be adopted here.
>
> > > In the below reconstructed chozha dynasty list by Dr. R. Mativanan on the
> > > basis of the book narkudi velalar varalaru one may come across three
> > > kurigal chozhas. Does  this mean that all the three had burnt legs
> > > certainly not. This particular name is very ancient than the available
> > > sangam literature's that has mention about the name kurigal and for this
> > > reason i have quoted those kassite kings names of babylon.
>
> > > கரிந்தகாலன் என்பது பிழயான  விளக்கமாக இருக்கலாம். later both  the literary
> > > works and  copper plates might have  followed the wrong explanation is
> > what
> > > i presume.
>
> > > சோழர் தலைமுறை மீட்டமைப்பு
>
> > > கி.மு. 450 - 380       முதற் கரிகாலன்
> > > கி.மு. 380-320 சேரமான் பாமளுர் எறிந்த  நெய்தலங்கானல் இளஞ்  சேட் சென்னி
> > > கி.மு. 320 - 270   செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி
> > > கி.மு. 270 - 245    பெரும்பூண் சென்னி
> > > கி.மு. 245 - 232    உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி
> > > கி.மு. 232 - 200    கரிகாலன் II
> > > கி.மு. 200 - 180      மணக்கிள்ளி
> > > கி.மு. 180 - 160    வேல் ப்றடக்கை பெருவிற் கிள்ளி
> > > கி.மு. 160 -125     போரவைக் கோல் பெருநற் கிள்ளி
> > > கி.மு. 125 - 87     முடித்தலை கோல் பெருநற்கிள்ளி
> > > கி.மு. 87- 62        கோப்பெருஞ் சோழன்
> > > கி.மு. 62- 40        ஒற்றுமை வேட்ட பெருநற் கிள்ளி (ராசசூய)
> > > கி.மு. 40 - 22       சேட்சென்னி நலங்கிள்ளி + மாவளத்தான்
> > > கி.மு. 22 -   1      குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்
> > > கி.பி. 1  - 40         குராப்பள்ளி துஞ்சிய கிள்ளி வளவன்
> > > கி.பி. 40 - 60        நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி
> > > கி.பி. 60 - 110      கரிகாலன் III
> > > seshadri
>
> > > .//கரிந்தகாலன் கரிகாலனுக்கும் சுமேரிய குரிகல்ஷு என்ன தொடர்பு என
>
> > > > விளங்கவில்லை தாத்தா. சேசாத்திரி தான் உதவணும்.
>
> > > > உரகபுரம் - சோழர் தலைநகர் உறையூர்.//
>
> > > > நா. கணேசன்


>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
>
>

>  காலன் அதிஅன்.gif
> 86KViewDownload

seshadri sridharan

unread,
Jan 23, 2012, 8:20:16 AM1/23/12
to mint...@googlegroups.com
இந்த Kassite  மன்னர்கள் செமிட்டிக், இந்தோ-ஐரோப்பியம் அல்லாத மொழி பேசியவர். Mac alpin எலாமியர் elamo Dravidian  என்ற மொழி பேசியதாக சொல்கிறார். இந்த எலாமும் , பாபிலோனும் நெருக்கமாக அமைந்த நாகரிகங்கள் என்பதை நோக்குக.



சேசாத்திரி
2012/1/22 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N D Logasundaram

unread,
Jan 23, 2012, 12:41:19 PM1/23/12
to mint...@googlegroups.com
Ganesan wrote
 "Aren't these examples confirm that Cenni = Chozha-s?
N. கணேசன்"

 I have clearly stated as
 
> சென்னி என்பது சேரர்க்கும் வருவது காண்க
> மேலும் *சென்னியர்* என்னும் சொல் பொதுவாக சேரரைக் குறிக்கின்றது
 
(1 )
> கணையன் அகப்படக் *கழுமலம்* தந்த
> பிணையல்அம் கண்ணிப் பெரும்பூட்* சென்னி*
> அழும்பில் அன்ன அறாஅ யாணர்     15                     அகம் 44
(2 )
> பாடியவர்: ஊன்பொதி பசுங்குடையார்
> பாடப்பட்டோன்: சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் *சென்னி*
> திணை:பாடாண் துறை:பரிசில்                                      புறநானூறு ௨௦௩
( 3 )

> நல்மரம் துவன்றிய நாடுபல தரீஇப்
> பொன்அவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண்
> ஒன்னாப் பூட்கைச் *சென்னியர்* பெருமான்               பதிற்றுப்பத்து பாட்டு
 
(1 )
கழுமலம் ஒரு சேரநாட்டு ஊராகும்
சோழநாட்டு கழுமலம் (ஞானசம்பந்தர் )  ஊர் வேறு  
(2 )
தலைப்பிலேய சேரமான் என உள்ளதே
(3 )
பதிற்றுப்பத்து  முற்றிலும் சேரரை ப் பாடியதே  
 
அன்புடன்
நூ த லோ சு  
 
 
 

>

> *சென்னிமலை* என்பது சேரநாட்டில் உள்ளது எனலாம்
> ஓர் பெயரல்லாது *சென்னி *தமிழ் மொழியில்   தலையைக்

> குறிக்கும் என்பதை நன்கே அறிவீர்கள்

> நீங்கள் காட்டியதுபோல் *சோழர்க்கும்* உள்ளது அறிவேன்
>
> எழாஅத் திணிதோள் *சோழர்* பெருமகன் 10
> விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ்* சென்னி
> *குடிக்கடன் ஆகலின் குறைவினை

> முடிமார்                                                             அகம்
> 375
> "தாயற்ற குழந்தை" பாடியவர்: பரணர்

> பாடப்பட்டோன் : சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் *சென்னி
> *திணை: வஞ்சி துறை: கொற்ற வள்ளை

> சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும் இச் சோழனது வெற்றி மேம்பாடும்       புறம்
> 4
>
> குற்றமும் தண்டனையும்
> பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார்

> பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் *சென்னி*
> புறம் 10
>

Aren't these examples confirm that Cenni = Chozha-s?

2012/1/22 N. Ganesan <naa.g...@gmail.com>
> ...
>
> read more »

Reply all
Reply to author
Forward
0 new messages