செய்திச் சுரங்கம்

95 views
Skip to first unread message

Rama Samy

unread,
Oct 30, 2012, 7:08:26 AM10/30/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com

”பாவையர் மலர்” வான்மதி கன்டெய்னர் நகரை நிர்மாணிக்கட்டும் !



 
தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தால் வாழ்க்கைப்ப் பாதையில் புதிய  திருப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைக் கண்டு தளர்ச்சியடைந்து விடாமல் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கவேண்டும். சுய சிந்தனையுடன் முடிவெடுக்கும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது இருக்கும் நிலையிலிருந்து கீழிறங்கிவிடாமல் தக்க வைத்துக்கொள்ளவும் வேண்டும். அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கான வழிமுறைகளிலும் ஈடுபட வேண்டும்.

அப்படிப்பட்ட துணிச்சலும் திறமையும் கொண்டதொரு பாரதி விரும்புகின்ற புதுமைப் பெண்ணின் அறிமுகம் அண்மையில் கிடைத்தது. எழும்பூர் கென்னட் லேனில் உள்ள மதுரா ட்ராவல்ஸ்  கலைமாமணி வீ.கே.டி. பாலனைப்  பொது வாழ்க்கையில் சிறிதேனும் அக்கறை கொண்டோர் அனைவரும் அறிந்திருப்பர்.

ஏனெனில், அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையின் உச்சக்கட்ட நிலையை திட்டமிடுதலாலும், முயற்சியாலும் எய்தியவர். இந்நிலையில், அவர் ஆண்டுதோறும், தன் மகன், பிறந்த நாளை வித்தியாசமான முறையில் கொண்ட்டாடி வருகின்றார்.

மெய்யான மானுட விசுவாசியைத் தேடிப்பிடித்து, மேடை ஏற்றி, மதுரா மாமனிதர் என்ற பட்டமும் ஒரு லட்சம் பணமுடிப்பும் வழங்கி வருகின்றார். சென்ற 22 தேதி இவ்வாண்டும் அதே போன்று விழா நிகழ்ந்தது. பரிசு பெற்றவர், மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் நோவா அவர்கள். அவரது சாதனை, சிறைக்கைதிகள் பலரைப் பட்டதாரிகளாக்கியது. அவர்களில் சிலர் பல்கலைக் கழகங்களில் சில துறைகளுக்குத் தலைவர்களாகவும் உள்ளனர். சிரைக்குச் சென்றோருக்கு வேலை கிடைப்பதே கடினம். குடும்பம் எப்படி அமையும்? எனவே, அவர்களது வாரிசுகளுக்குள்ளேயே குடும்பப்பப் பிணைப்பையும் ஏற்படுத்தி வைத்தார். ஒவ்வொரு திருமணமும் அந்த மாவட்டக் கலெக்டர் தலைமையில், நீதிபதிகள் முன்னிலையிதான் நடக்கும். நோவா குறித்து மேலும் அறிந்து கொள்ள,

http://rssairam.blogspot.in/2012/10/go-ms-no-1244-dt-19-04-1982.html

 சிறைக்குள் சென்று சேவை செய்திட, எம்.ஜி..ஆர் அளித்த அரசு ஆணை :G.O. MS. NO. 1244 Dt. 19-04-1982 & ” மதுரா மாமனிதர்” பட்டத்துடன் ஒரு லட்சம் பரிசு பெற்றவர் !
                      ”மதுரா மாமனிதர்” நான்காம் ஆண்டு விழா ! சென்று காண்க.

இந்த விழாவில்தான் அந்த “பாவையர் மலர் “ ஆசிரியப் பெண்மணியைக் கண்டேன். பெரிய நிறுவனங்கள் நடத்துகின்றனவற்றை விட மிகவும் தரமுள்ள  மாத இதழாகவே அது இருந்தது. அந்தப் புத்தகத்தை அவர் கொடுத்திராவிட்டால், அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பே கிடைத்திருக்காது.

புதிதாக வரும் தமிழ் இதழ் எதுவாக இருந்தாலும் முதலில் வாங்கிப் படிப்பேன். நன்றாக இருந்தால் தொடர்ந்து வாங்குவேன். இல்லை என்றால் வாங்குவதை நிறுத்தி விடுவேன். பாவையர் மலர் என் பார்வையில் படாமற் போனது ஏனோ தெரியவில்லை. ஒரு வேளை, எங்கள் பகுதிக்கு இன்னும் அறிமுகமாகாமல் இருக்கக்கூடும்.

நேற்று, மனைவியுடன் கடைக்குச் சென்று திரும்பும்போது சில்லறை தேவைப்பட்டது. 10ரூபாய் கொடுத்து குங்குமம் வாங்கினேன். சில காலம், என் திண்டுக்கல் நண்பர், கெளதம் அதில் ஆசிரியராக இருந்தார். அதனால் அதனை வாங்கினேன். 

வீட்டிற்கு வந்து புரட்டிக் கொண்டிருந்தபோது,  அந்த விழாவில் சந்தித்த பெண், கன்டெய்னர் வீட்டு முன்னால் நின்று கொண்டிருந்த படம் இடம்பெற்றிருந்தது. 4 பக்கக் கட்டுரையும் இருந்தது. தந்தை ய்டன் நெய்வேலியில் வழ்ந்தது, தந்தையின் திடீர் மரணம், வேலை பார்த்துக்கொண்டே படிப்பை முடித்தது, கன்டெய்னர் கம்பெனியில் வேலைக்குச் சென்றது,  உரிமையாளருக்கு நெருங்கிய உயர் நிலைக்கு வளர்ந்தது, ஒரு கட்டத்தில், கோவைக் கிளையின் பொறுப்பாளராகத் தந்த பதவி உயர்வு காரணமாக வேலையை விட்டது என கட்டுரை தொடர்ந்தது.

பின்னர், கன்டெய்னர்களை வாங்கிச் சரிப்படுத்தி விற்கும் வேலையில் சொந்தக் கம்பெனியே தொடங்கி விடுகின்றார். இளம் வயதிலிருந்தே உடன் படித்த நண்பரையே காதலித்துத் திருமணமும் செய்து கொள்கின்றார். வேறு எப்படியெல்லாம்  கம்பெனியை வளர்க்கலாம் என்ற  எண்ணத்தின் வெளிப்பாடே கண்டெய்னர் வீடுகள். சகல வசதிகளும் உண்டு. புதிய கட்டிடங்களக் கட்டிக் கொடுக்கும் கான்ட்ராக்டர்களுக்கு இது நன்கு பயன் படுகின்றது. ஓரிடத்தில் வேலை முடிந்தவுடன், அடுத்து வேலை நடக்கும் இடத்திற்குக் கொண்டு சென்று விடுகின்றனர் . என்றெல்லாம் கட்டுரையில் இடம்பெற்றிருந்தது. அடுத்து, ட்யூசன் சென்டர் போன்றவற்றைச் செய்து குடிசைவாழ் மக்கல் வாழும் பகுத்திக்குத் தரப்போவதாகப் மகிழ்ச்சியோடு கூறுவதாகக் கட்டுரை முடிக்கப் பெற்றிருந்தது.

அவருடன் தொடர்பு கொண்டு படத்தைப் பெற்றுப் பதிவிட விருப்பம். இயலவில்லலை. எனவே, கணினியில் கிடைத்த கன்டெய்னர்ப்  படங்களுடன் இந்தப் பதிவு. விவரங்களுக்கு இந்தவாரக் குங்குமம் படிக்கவும்.

தொடர்ந்து முயன்று ஏழை வாழ் மக்களைக் கொண்ட கன்டெய்னர்க் காலனி, கன்டெய்னர் ஊர், கன்டெய்னர் நகரம் என்று அவர் வளர வேண்டும் என்று வாழ்த்துவோம்.

இத்தகைய பெருமைகளுக்கெல்லாம் சொந்தமாக்கிக் கொண்டவர்  பெயர், வான்மதி. காதல்மணம் புரிந்த கணவர் பெயர், மணிகண்டன்.

வானம் வசப்படும் என்பது இதுதானே ?

பாவையர் மலர்,

55, வ.உ.சி.நகர், மார்க்கெட் தெரு,

தண்டையார்ப்பேட்டை,

சென்னை, 600 081

ANdus sawthaa ruu.120/-

AyuL sawthaa ruu.2000/-

 pavaiv...@yahoo.com

mwccvm2yahoo.co.in

--



சீராசை சேதுபாலா

india.azhagi.com :: service to mankind

http://rssairam.blogspot.com/

Rama Samy

unread,
Oct 30, 2012, 9:57:44 AM10/30/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com

சாண்டி புயல் தாக்குதல் : அமெரிக்காவின் பழமையான அணுஉலை மூடப்பட்டது !



அமெரிக்காவைத் தாக்கிய சக்திவாய்ந்த புயலான சாண்டி தாக்கியதால் கிழக்குக் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர்.

நியூயார்க் நகரம் முழுவதும் வெள்ளக் காடாகக் காட்சியளிக்கிறது. சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஏராளமான இந்தியக் குடும்பங்கள் வசிக்கும் நியூ ஜெர்சியிலும் கன மழை பெய்து வருகிறது. இந்த சூப்பர் சாண்டி புயல் தாக்கத்தால் அமெரிக்காவில் வரலாறு காணாத அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடல் அலைகள் மிக உயரமாக எழுந்து மிரட்டியதால், நியூஜெர்சில் உள்ள அமெரிக்காவின் மிகப் பழைமையான ஓய்ஸ்டர் கிரீக் அணுமின் நிலையம் உடனடியாக மூடப்பட்டது. அசாதாரண சம்பவங்கள் நடக்கலாம் என முதலில் அபாய எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அது விலக்கிக் கொள்ளப்பட்டது.

அனைத்து அணுசக்தி நிலையங்களும் பாதுகாப்புடன் இருப்பதாகவும், ஓய்ஸ்டர் கிரீக் அணுமின் நிலையம் அருகே முன்னேறி வந்த கடல் நீரின் வேகம் படிப்படியாக குறைந்ததால் ஆபத்து இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

1969-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஓய்ஸ்டர் கிரீக் அணு உலையில் தயாராகும் மின்சாரம், நியூஜெர்சியின் 9 சதவீத மின்தேவையைப் பூர்த்தி செய்வது குறிப்பிடத்தக்கது.                                                                       

நன்றி:- மாலை மலர், 30-10-2012

Rama Samy

unread,
Oct 31, 2012, 12:11:53 AM10/31/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com

பெரோஸ் காந்தி முதல் வதேரா வரை...-இரா.செழியன்

மன்னராட்சி முறையில் கொடுங்கோல் ஆட்சி பெருகியதால், அல்லற்பட்ட மக்கள் தம்மால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பெரும்பான்மை ஆதரவைப் பெறுபவர் ஆட்சித் தலைவராகும் வகையில் குறிப்பிட்ட காலவரையறையில் தேர்தல்கள் மூலம், மக்களாட்சி முறையை அமைத்துக்கொண்டனர்.                 



 ( பிரதமர் நேருவின் மருமகன் பெரோஸ் காந்தி தமது தன்மானத்தையும் அரசியல் கொள்கைகளையும் விட்டுக்கொடுக்கவே இல்லை. முக்கிய பிரச்னைகள் எழும்பொழுது அரசாங்கத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தார்.பிரபல செல்வந்தரான ராமகிருஷ்ண டால்மியாவின் வங்கி-இன்சூரன்ஸ் அமைப்புகளில் செய்த ஊழல்களைத் தக்க ஆதாரங்களுடன் மக்கள் சபையில் பெரோஸ் எழுப்பினார்.)

அதிகாரம் குவிந்துவிட்டால், ஆட்சிக்கு வருகிற அனைவரும் நல்லவர்களாக நாட்டு மக்களுக்கு நல்வாழ்வு தருபவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆட்சிக்கு வந்ததும், ஆணவம், அடக்குமுறை, எதேச்சாதிகாரம் ஆகியவை வளரும். தடியெடுத்தவன் தாண்டவராயன் என்பதுபோல், கட்டுப்பாடற்ற தடியாட்சி முறை வந்துவிடும்.

முடியாட்சி, குடியாட்சி, தடியாட்சி ஆகியவற்றில் ஒன்றுக்குள் மற்றொரு முறை கலந்துவிடுவதை பல நாடுகளில் தவிர்க்க முடியவில்லை. இருபதாம் நூற்றாண்டில் முதலாவது உலகப் போருக்குப் பிறகு மக்களாட்சி முறையில்தான் ஜெர்மன் நாட்டில் அரசாங்கம் உருவானது.

ஆயினும் 1930-இல் அதே மக்களாட்சி அடிப்படைச் சட்டத்தின்கீழ் ஹிட்லரால் கொடூரமான சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த முடிந்தது.

ஏன், இந்தியாவில்கூட டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்டத்துறையில் மேதாவிகள் என்று கருதப்பட்ட பலர் மூன்றாண்டு காலம் அரும்பாடுபட்டு 1950-இல் அமைத்த ஜனநாயக ஆட்சிக்கான இந்திய அரசமைப்புச் சட்டம் என்ன ஆயிற்று? அதே சட்டத்தின்கீழ் 1975 ஜூன் 25 நள்ளிரவில் ஒரு இருண்டகால எதேச்சாதிகாரம் தலையெடுக்கவில்லையா?

மன்னராட்சிகளில் குடும்பப் பாரம்பரியம் என்பது வெளிப்படையாகப் பின்பற்றப்பட்டது. ஆயினும் சுதந்திர ஜனநாயக நாடான இந்தியாவில் குடும்பப் பாரம்பரிய ஆட்சிமுறை மறைமுகமாக நிலவி வருகிறது.

அதிலும் ஒரு குடும்ப அளவில் பார்த்தால், ஜவாஹர்லால் நேரு, (1947-64), இந்திரா காந்தி (1966-77, 1980-84) ராஜீவ் காந்தி (1984-89) ஆகியவர்கள் பிரதமர்களாக இருந்தனர்.

இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற முறையைப் பின்பற்றித்தான் இந்தியாவின் அரசியல் அமைப்பும் உருவாக்கப்பட்டது. இன்றும் இங்கிலாந்தில் மன்னர் பரம்பரை இருந்தாலும், கடந்த நானூறு ஆண்டுகளில் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் சபைக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட நிலைமையில்தான் ஆட்சிமுறை அங்கு நிலவுகிறது.

மேலும் தேர்தலில் போட்டியிட்டு "காமன்ஸ்' (மக்கள்சபை) உறுப்பினராக இருப்பவர் மட்டுமே பிரதமராகப் பொறுப்பேற்க முடியும். இங்கிலாந்து நாடாளுமன்ற முறையைப் பின்பற்றும் இந்தியாவில் பிரதமராக ஆகும் தகுதி மன்மோகன் சிங்குக்குத் துளியும் இல்லை. காரணம், மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் அங்கே பிரதமராக முடியாது.

மன்மோகன் சிங் "பெயரளவில்' பிரதமராக இருந்தாலும், நடைமுறையில் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைமையிலுள்ள அரசாங்கத்தையும் நடத்திச் செல்பவர் சோனியா காந்திதான். 1999 முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் பதவி வகிக்கிறார்.

127 ஆண்டுகாலத் தேசியக் காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலம் தொடர்ந்து தலைவராக இருப்பவர் அவர்தான். சுதந்திர இந்தியாவின் 65 ஆண்டுகளில் 47 ஆண்டுகள் நேரு பரம்பரைக்குத்தான் இந்தியாவை ஆட்சி செலுத்தும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

"குடும்பப் பாரம்பரியம்' என்ற அளவில் இதுவரை விரிவாக இங்கு ஆராய்வதற்கான காரணம் இந்தியாவில் இருந்துவந்த "பாரம்பரிய ஆட்சிமுறை' அண்மைக் காலத்தில் விரிவடைந்துவிட்டது.

ஜவாஹர்லால் நேரு காலத்தில் அவரின் மருமகன் பெரோஸ் காந்தி இருந்தார். தற்பொழுது இந்திரா காந்தியின் மருமகளின் மருமகன் ராபர்ட் வதேரா என்பவர் குறுகிய காலத்தில் பெரும் செல்வாக்குடையவராக ஆகிவிட்டார். இந்த இரு மருமகன்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் அரசியல் எவ்வாறு மாறிவிட்டது என்பதைப் பார்த்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது.

காந்தி, குஜராத் என்ற இரு பெயர்களைச் சொன்னதும், மகாத்மா காந்தி நினைவுக்கு வந்து, அவருக்கு பெரோஸ் காந்தி உறவினர் என்ற எண்ணம் பலருக்கு ஏற்படக் கூடும். பெரோஸ் காந்தி பார்சி வகுப்பைச் சேர்ந்தவர். நெருப்பை வழிபடும் ஸோராஸ்ட்ரியர்.

மகாத்மா காந்தி இந்து மதத்தைச் சேர்ந்தவர். குஜராத்தில் பார்சிகளுக்கும் இந்துக்களுக்கும் பொதுவான குடும்பப் பெயராக "காந்தி' என்பது நீண்டகாலமாக இருந்து வருகிறது.

பெரோஸ் காந்தியின் தந்தை இறந்த பிறகு, அவரும் அவர் தாயாரும் அலாகாபாத் வந்துவிட்டனர். 1930-இல் இர்விங் கிறிஸ்தவக் கல்லூரியில் பெரோஸ் படிக்கும்பொழுது, ஆங்கில ஆட்சியை எதிர்த்து சுதந்திரப் போராட்டம் அலாகாபாதிலும் நடைபெற்றது.

அதில் ஜவாஹர்லால் நேருவின் மனைவி கமலா நேருவும், 13 வயதான மகள் இந்திரா பிரியதர்சினியும் கலந்துகொண்டனர். கடும் வெயிலில் கமலா நேரு மயக்கமடைந்து விழுந்துவிட்டார். அதைக் கவனித்த பெரோஸ் ஓடிவந்து தண்ணீர் தெளித்து, அவரை ஆனந்த பவன் மாளிகையில் சேர்த்தார்.

கல்லூரிப் படிப்பை விட்டு சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார் பெரோஸ். 1930-இல் கைது செய்யப்பட்டு லால் பகதூர் சாஸ்திரியுடன் சிறையில் இருந்தார். கமலா நேரு எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபொழுது அவருடன் பெரோஸ் இருந்து உதவினார்.

 நோய் முற்றிய நிலையில் கமலா நேரு மருத்துவச் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்றபொழுது பெரோஸ் காந்தியும் அவருடன் சென்றார். கமலா நேரு 1936 பிப்ரவரியில் இறந்தபொழுது பெரோஸ் உடனிருந்தார்.

அந்த அளவுக்கு நேரு குடும்பத்தினருடன் நெருங்கி இருந்த பெரோஸ் மீது இந்திராவுக்கு நம்பிக்கையும் நட்பும் நாளடைவில் காதலும் உண்டானதில் ஆச்சரியமில்லை. முதலில் பெரோஸ் - இந்திரா திருமணத்துக்கு ஜவாஹர்லால் நேரு சம்மதிக்கவில்லை.

மகாத்மா காந்தி தலையிட்டு இந்திராவுடன் பேசிச் சமாதானப்படுத்த முயற்சி செய்தார். கடைசியில் ஜவாஹர்லால் நேரு உடன்பட்டு 1942 மார்ச் மாதத்தில் இருவருக்கும் திருமணத்தை நடத்திவைத்தார். திருமணத்துக்குப் பிறகுதான் கணவன் பெயரை இணைத்து "இந்திரா காந்தி' என்று இந்திரா அழைக்கப்பட்டார்.

திருமணமான ஆறு மாதத்திற்குள் இருவரும் 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் சிறைக்குச் சென்றனர். பின்பு வெளிவந்ததும் 1944-இல் ராஜீவ் காந்தியும் 1946-இல் சஞ்சய் காந்தியும் பிறந்தனர்.

1947-இல் ஜவாஹர்லால் நேரு, பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதும் ,இந்திரா காந்தி தந்தையுடன் பெரும்பாலும் இருக்கவேண்டி வந்தது.

பிரதமர் மாளிகையில் இருப்பது பிடிக்காமல் பெரோஸ் தம் அளவில் தில்லியில் வேறொரு இடத்தில் தங்கிவிட்டார்.

1950-52-இல் இந்திய அரசியல் நிர்ணய சபையில் பெரோஸ் காந்தி உறுப்பினராக இருந்தார், பிறகு 1952 பொதுத்தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு மக்கள் சபை உறுப்பினராக ஆனார்.

மாமனார் ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தாலும், பெரோஸ் காந்தி தமது தன்மானத்தையும் அரசியல் கொள்கைகளையும் விட்டுக்கொடுக்கவே இல்லை. முக்கிய பிரச்னைகள் எழும்பொழுது அரசாங்கத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தார்.

குறிப்பாக 1955 டிசம்பர் மாதத்தில் பிரபல செல்வந்தரான ராமகிருஷ்ண டால்மியாவின் வங்கி-இன்சூரன்ஸ் அமைப்புகளில் செய்த ஊழல்களைத் தக்க ஆதாரங்களுடன் மக்கள் சபையில் பெரோஸ் எழுப்பினார்.

எதிர்க்கட்சியினரைவிட அதிகமாக அவர் எழுப்பிய குரலும் ஊழலை எதிர்த்த கண்டனமும் பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாயின. அவருடைய கண்டனத்தின் விளைவாக, டால்மியா மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்குச் சிறைத் தண்டனை கிடைத்தது.

மக்கள் பணத்தில் இயங்கும் இன்சூரன்ஸ் துறையைத் தேசியமயமாக்கும் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியது பெரோஸ் காந்தி அந்தப் பிரச்னையை எழுப்பியதால்தான்.

1957 பொதுத்தேர்தலில் பெரோஸ் காந்தி மீண்டும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு மக்கள் சபைக்கு வந்தார். 1958-இல் முந்திரா ஊழல் என்பதை பெரோஸ் அம்பலப்படுத்த முன்வந்தார்.

ஹரிதாஸ் முந்திரா என்னும் முதலாளிக்குச் சொந்தமான சில கம்பெனிகளின் பங்குகளை ஆயுள் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.1.54 கோடி கொடுத்து வாங்கியது. அந்தப் பங்குகளின் உண்மையான மதிப்பீட்டைவிட அதிகமான விலைக்கு அரசாங்க ஆதரவினால் வாங்கப்பட்டுவிட்டன என்பதற்கான விவரங்களைப் பெரோஸ், மக்கள் சபையில் 1957 டிசம்பர் 16 அன்று வெளிப்படுத்தினார். அவருடைய ஊழல் எதிர்ப்பினால் இரண்டாவது புயல் கிளம்பியது.

பெரோஸ் காந்தியின் குற்றச்சாட்டு நேரடியாக அப்பொழுதைய நிதி அமைச்சர் டி.டி. கிருஷ்ணாமாச்சாரியாரைத் தாக்கியது. முந்திரா விவகாரத்தை விசாரணை செய்யப் பம்பாய் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.சி. சாக்ளா தலைமையில் விசாரணைக் குழுவை நேரு அரசாங்கம் அமைத்தது.

சாக்ளா குழுவின் பரிந்துரைக்குப் பிறகு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி விவியன் போஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, நிதி அமைச்சர் மீது முழுக் குற்றச்சாட்டையும் போட்டது. கடைசியில் நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணாமாச்சாரி பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. முதலாளி முந்திரா குற்றவாளியாகச் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

முந்திரா ஊழலைப் பற்றி மக்கள்சபையில் பேசும்பொழுது பெரோஸ் காந்தி உணர்ச்சிபூர்வமாக ஒரு கருத்தை வலியுறுத்தினார். ""நான் மிகவும் உறுதியுடன் இந்த விவாதத்தைத் துவக்குகிறேன். இப்பொழுது ஒன்றை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன். பொதுமக்களின் நிதி தனிப்பட்ட ஒருவரின் தேவைகளுக்காகப் பயன்படுவது தவறானது, குற்றமானது. ஒரு குற்றம் நிகழும்பொழுது அதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பது பெரிய குற்றமாகும்''.

மற்றொரு வகையில் முற்போக்கான ஒரு சட்டத்தை உருவாக்குவதில் பெரோஸ் காந்தி வெற்றிபெற்றார். அவருடைய முயற்சியினால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய சட்டம் 1956-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தவறுகள் எதுவும் இல்லாமல் நாடாளுமன்ற நடவடிக்கைகளை வெளியிடுபவர் மீது எந்த நீதிமன்றத்திலும் எந்த வகையிலும் குற்றம் சாட்டப்படக்கூடாது என்று சட்டபூர்வமான பாதுகாப்பு செய்தியாளர்களுக்குத் தரப்பட்டது.

1956-இல் பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டம் பெரோஸ் காந்தியால் நிறைவேற்றப்பட்டது. 20 ஆண்டுகள் கழித்து அந்தச் சட்டத்தை இந்திய அரசாங்கம் மற்றொரு சட்டம் போட்டு நீக்கிவிட்டது. அதாவது, 1975-76 நெருக்கடி காலத்தில் அந்தச் சட்டத்தை நீக்கியவர் வேறு யாருமில்லை பெரோஸ் காந்தியின் மனைவி பிரதமர் இந்திரா காந்தி அவர்கள்தாம். நெருக்கடிகாலம் நீங்கியதும், ஜனதா ஆட்சியில் பத்திரிகையாளர் சட்டம் மீண்டும் உயிர் பெற்றது என்பதும் இங்கே குறிப்பிடத் தகுந்தது.

முற்போக்கான சட்டத்தை முன்மொழியும் துணிவும், கடமை உணர்வும் பெரோஸ் காந்திக்கு இருந்தது, அதை ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மையும், ஜனநாயகப் பண்பும் ஜவாஹர்லால் நேருவுக்கு இருந்தது. ஆனால், அதை நீக்கிடும் எதேச்சாதிகார உணர்வு இந்திரா காந்திக்கு 1975-76-இல் ஏற்பட்டது. இருபது ஆண்டுகளில் காங்கிரஸ் குடும்பப் பாரம்பரிய அரசியல் அந்த அளவு மாறி மாசு படிந்துவிட்டது.

நாள்தோறும் காலையில் மக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுப்பார் பெரோஸ். 1958 செப்டம்பர் மாதத்தில் இதயநோய் அவரைத் தாக்கியது. இந்திரா காந்தி உடனடியாக வந்து அவரைக் கவனித்து உடல் நலம் பெறும்வரை உடனிருந்தார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து 1960 செப்டம்பர் 8 இரண்டாவது முறையாக இதயத் தாக்குதல் வந்தது, அதிலிருந்து மீளமுடியாமல், 48-வது வயது நிறைவு பெறுவதற்கு நான்கு நாள்கள் முன்னதாக பெரோஸ் காந்தி இறந்தார்.

அரசியல் நண்பர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியவர்களின் கூட்டத்தைவிட பெரிய அளவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரோஸ் காந்தி இல்லத்தின் முன் திரண்டு அவருக்கு அஞ்சலி செய்யக் காத்திருந்தனர். அந்தக் கூட்டத்தைக் கண்ணுற்ற ஜவாஹர்லால் நேரு கூறினாராம், ""இந்த அளவுக்கு மக்களுடைய பாசமும் செல்வாக்கும் பெரோஸýக்கு இருக்கும் என்பது எனக்குத் தெரியாது'' என்று. ஒரு மனிதனின் பெருமை அவன் மறைந்த பிறகுதான் அவனுடைய நெருங்கிய உறவினர்களுக்கேகூடத் தெரியவருகிறது.

பெரோஸ் காந்தி பிறந்த நாள் 1912 செப்டம்பர் 12; அவரின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு 2012-இல் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். அதற்கான அவசியம் தற்கால காங்கிரஸ் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இல்லை என்றாலும், பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்புத் தரும் சட்டத்தை உருவாக்கியவருக்கு நூற்றாண்டு விழா எடுக்காமற் போனாலும், தனிப்பட்ட முறையில் செய்தித் துறையும் வாசகர் வட்டங்களும் அவரை நினைவில் வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும்.

பிரதமர் நேருவின் மருமகன் பெரோஸ் காந்தி ஊழல் பெருச்சாளிகளைத் தண்டிக்க, தமது பதவியை முழுமையாகப் பயன்படுத்தினார். அது 1950-60 வரை இருந்த குடும்ப அரசியல் நிலவரம். தற்பொழுதைய காங்கிரஸ் அரசியல் பாரம்பரியத்தில், பிரதமர் பதவிக்கும் மேலாக உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமது மருமகன் ராபர்ட் வதேரா மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்துவதுடன், ""வதேரா மீது நடத்தப்படும் தாக்குதல் காங்கிரஸ் மீது போடப்படும் தாக்குதல்'' என்கிறார்.

என்ன கொடுமை இது? ""வதேரா என்றால் காங்கிரஸ் கட்சி'' என்று ஆகிவிட்டது! நல்லவேளை, இதையெல்லாம் பார்த்துக் கொதித்து எழ பெரோஸ் காந்தி உயிருடன் இல்லை!

நன்றி :- தினமணி, 31-10-2012, கட்டுரையாக்கம், இரா.செழியன்

Rama Samy

unread,
Nov 1, 2012, 10:02:28 PM11/1/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, vallamai editor

ஒத்து ஊதிக்கொண்டேஉறவு ! இல்லை என்றால் துறவு ! தாழ்வுறும்போதெல்லாம் ஜாதியை இழுக்கலாமா, கலைஞர் கருணாநிதி ?


பார்ப்பன சாதியில் பிறந்திருந்தால் எழுதியிருப்பார்களா?:

நக்கீரனுக்கு கருணாநிதி கேள்வி

 நன்றி  Sriram Senkottai,  அவர்களே ! தினமணி ,
First Published : 28 October 2012 06:20 PM IST

நக்கீரன் இதழ் கட்டுரை ஒன்றைக் குறிப்பிட்டு, பார்ப்பன சாதியில் நானும், இராசாத்தி அம்மாளும், கனிமொழியும் பிறந்திருந்தால், இப்படி எழுதியிருப்பார்களா? என்று கருணாநிதி அந்த இதழுக்குக் கேள்விக் கணை தொடுத்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 கருணாநிதியின் "கருணைப் பார்வை”க்கு நக்கீரனும் தப்பவில்லை என்பதைக் காட்டும் அந்தக் கேள்வி பதில் அறிக்கை...




கேள்வி:- “நக்கீரன்” வார இதழிலேயே “யாருக்கு யார் எதிரி” என்ற தலைப்பில்தங்கள் துணைவியாரைப் பற்றியும், மகளைப் பற்றியும், மகன்களைப் பற்றியும் பரபரப்பு காட்சிகள் என்றெல்லாம் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்களே?






கருணாநிதி:- தம்பிகள் டி.ஆர். பாலு, பழனி மாணிக்கம் இருவருக்கும் இடையேஉருவான பிரச்சினையில் நான் உடனடியாக எழுதிய “உடன்பிறப்பு” கடிதத்திற்குப் பிறகு இருவருமே அமைதியாகி விட்டார்கள். பிரச்சினையும் முடிந்துவிட்டது.

ஆனால் “நக்கீரன்” போன்ற பத்திரிகைகள் நம்முடைய இயக்கத் தலைவர் களின்பால் பரிவு கொண்ட ஏடுகள் என்று வெளியிலே சொல்லிக் கொண்டாலும், உள்ளூர அவர்களுக்கு இருக்கின்ற உணர் வினை வெளிக்காட்டிச் செய்தி வெளியிட்டிருக் கிறார்கள்.

இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால், இந்தப் பிரச்சினை பேசப்பட்ட போது, இதில் துளியும் சம்மந்தம் இல்லாத என் துணைவியார் ராஜாத்தி அம்மையார் பற்றியும், என் மகள் கனிமொழியைப் பற்றியும் எழுதியிருப்பது வேதனை அளிக்கக் கூடியது. என் செய்வது?  

இருவரும் பார்ப்பன சாதியிலே பிறந்த பெண்களாக இருந்திருந்தால், தங்கள் மீது முன்போலப் பயங்கர வழக்குகள் பாயுமே என்ற பயம் இருந்திருக்கும். 

இராஜாத்தி அம்மாளும், கனிமொழியும், நானும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிற்றே; 

அதனால் எதையும் எழுதலாம் என்ற நெஞ்சுரமும் மனப்பான்மையும் “நக்கீரன்” போன்ற ஏடுகளுக்கு ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லை. 

வாழ்க; தமிழ்ச் சமுதாயம்! வாழ்க, வாழ்கவே!

Rama Samy

unread,
Nov 2, 2012, 12:43:35 AM11/2/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, mo...@madurawelcome.com, vallamai editor, winmani wordpress

அட்சயதிருதியை நாளில் நான்கு பேருக்கு அன்னதானம் செய்தாலே செல்வம் நம்மை தேடி வரும். -வின்மணி சிந்தனைகள் - பகுதி -1



01. உண்மையும் முயற்சியும் இருந்தால் கிடைக்கும்
      வெற்றி ஒரு போதும் நம்மை விட்டு விலகாது.

02  கடவுள் உண்மையிலே கல்நெஞ்சக்காரன் தான்
      நல்லவர்களைத்தான் அதிகம் சோதிக்க்கிறான்.

03. அழகான நண்பர்கள் வாழ்க்கையில் கிடைப்பது
       பூர்வ ஜென்மத்தில் நாம் செய்த புண்ணியம்.

04.  நல்லவர்களுக்குத்தான் சோதனை அதிகமாக வரும்
      ஒரு போதும் அதைக்கண்டு வருந்தி நிற்க வேண்டாம்.

05.  பயிற்சியும் முயற்சியும் இருந்தால் வெற்றி என்பது
       நம் அருகில் தான் இருக்கிறது.

06.  மகிழ்ச்சியையும் அன்பையும் நம்
      விரோதிகளுக்கும் பரிசாக அளிப்போம்.

07. பொன்னும் பொருளும் நிரந்தரமல்ல
      அன்பு மட்டுமே நிரந்தரம்.

08.  சரியான துறையில் கிடைக்கும் தகுந்த வேலைக்காக
       பல காலம் காத்திருப்பதில் எந்த தவறும் இல்லை.

09.  அட்சயதிருதியை நாளில் நான்கு பேருக்கு அன்னதானம்
       செய்தாலே செல்வம் நம்மை தேடி வரும்.

10.   மனதில் இரக்கம் இல்லாதவன் மிருகத்தை
       விடக் கொடிய உயிரினம்.                                               

நன்றி :- வின்மணி

Rama Samy

unread,
Nov 1, 2012, 11:07:33 PM11/1/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com

Rama Samy

unread,
Nov 1, 2012, 11:05:04 PM11/1/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, tparames...@gmail.com, vallamai editor, winmani wordpress

National Means-Cum-Merit Scholarship (NMMS) Scheme தேர்வு ! இன்று முதல் விண்ணப்பம் !









மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: 2011-12ம் கல்வியாண்டில் 7ம் வகுப்பு பயின்று முழு ஆண்டுத் தேர்வில், பொதுப்பிரிவு மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களும்,  எஸ்சி. எஸ்டி மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இன்று முதல் செப்.,9ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைத் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களிடமிருந்து பெற்று அப்பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் சேர்ந்து தேர்வுக் கட்டணம் ஒரே செலுத்துச் சீட்டில் செப்.,12ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

மேலும் விரிவான தகவல்கள் அறிய www.dge.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

நன்றி :- தினமணி, 02-11-2012

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும் இது பழமொழி !\
வாய்ப்புள்ளபோதே பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது அனுபவமொழி!

திறமைமிகு ஏழை/ நடுத்தர மாணாக்கர்களுக்கு இத்திட்டத்தின் நற்பலன்களை ஆசிரியப் பெருமக்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.

குறித்த காலத்திற்குள் பணம் செலுத்த இயலாத மாணாக்கர்களுக்குப் பணமும் செலுத்தி உதவி ந்செய்யலாம்.

Rama Samy

unread,
Nov 2, 2012, 10:45:39 AM11/2/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com

87ஆண்டுகளாகச் சேர்ந்து வாழும் தம்பதி: உலகின் நீண்ட நாள் ஜோடி சாதனை !

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் கரம்சந்த். இவருக்கும், கதாரி என்பவருக்கும் 1925-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கரம்சந்த்- கதாரி தம்பதியருக்கு 8 குழந்தைகள் பிறந்தன. அவர்கள் மூலம் இத்தம்பதிக்கு 28 பேரன், பேத்திகள் உள்ளனர்.

பஞ்சாபில் இருந்து லண்டனுக்குக் குடிபெயர்ந்த இத்தம்பதிகள் கடந்த 87 ஆண்டுகளாகக் கணவன்- மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். இதன்மூலம் உலகில் நீண்ட நாட்களாகச் சேர்ந்து வாழும் தம்பதி என்ற புதிய சாதனையைக் கரம்சந்த்- கதாரி தம்பதியினர் படைத்துள்ளனர்.

அவர்களது இந்த சாதனை விரைவில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற உள்ளது. கரம்சந்துக்கு தற்போது 107 வயதாகிறது. அவரது மனைவி கதாரிக்கு 100 வயதாகிறது. உலகின் நீண்டநாள் தம்பதியரான இவர்கள் பற்றி லண்டனில் உள்ள பத்திரிகைகள் சிறப்புச் செய்திகள் வெளியிட்டுள்ளன.

அவர்கள் தங்கள் வாழ்க்கை வெற்றி பற்றிக் கூறுகையில், நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதே இல்லை. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம். அதனால்தான் இவ்வளவு நாட்கள் சேர்ந்து வாழ முடிந்துள்ளது என்று கூறியுள்ளனர்.

நன்றி :- மாலை மலர், 02-11-2012

Rama Samy

unread,
Nov 2, 2012, 11:05:04 AM11/2/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com

எம்.ஜி.ஆரின் 23 பக்க உயில்-30-10-2012- மாலைமலர்- காலப் பெட்டகம் :-




எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோது 28.4.1986ல் ஒரு உயில் எழுதினார். பின்னர் அதனை ரத்து செய்துவிட்டு 18.1.1987ல் (2வது முறையாக அமெரிக்கா செல்வதற்கு முன்பு) புதிய உயில் ஒன்றை எழுதி வைத்தார். எம்.ஜி.ஆர். மரணம் அடைந்த பிறகு 9.1.1988 அன்று இந்த உயில் வெளியிடப்பட்டது.

சென்னை இராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. தலைமை நிலையத்தில், நிருபர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆரின் வக்கீல் என்.சி.ராகவாச்சாரி உயிலில் எழுதப்பட்டிருந்த விவரங்களைப் படித்தார். அப்போது எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் அங்கிருந்தார்.

அ.தி.மு.க. அவைத்தலைவர் ஈ.வெ.அ.வள்ளிமுத்து, மூத்த துணைப் பொதுச்செயலாளர் இராகவானந்தம், பொருளாளர் மாதவன் ஆகியோரும் உடன் இருந்தனர். உயில் மொத்தம் 23 பக்கங்கள் கொண்டதாகும். அது தமிழில் எழுதப்பட்டு உள்ளது. உயில் விவரம் வருமாறு:-

செங்கல்பட்டு மாவட்டம் மணப் பாக்கத்தில் இருக்கும் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்தில் குடியிருக்கும் எம்.கோபாலன் அவர்களின் குமாரனாகவும், தமிழக முதல் அமைச்சராகவும் பணியாற்றி வரும் எம்.ஜி.ராமச்சந்திரன் என்னும் நான் இந்த புதிய உயில் பத்திரத்தை சுய நினைவோடும், மனப்பூர்வமாகவும், பிறர் தூண்டுதல் இன்றியும் எழுதி வைத்து இருக்கிறேன்.

எனக்குக் குழந்தைகள் கிடையாது. என்னுடைய ஒரே வழிமுறை (வாரிசு) என் மனைவி திருமதி. ஜானகி அம்மாள்தான். அவளைத் தவிர வேறு யாரும் எனக்கு வாரிசு இல்லை. என் காலத்துக்குப்பிறகு என் சொத்துக்கள் சம்பந்தமாக எந்தவித வழக்குகள், தகராறுகள் ஏற்படாமல் இருக்கவும், எனது உறவினர்கள் எவரும் பாத்தியதை உரிமை கொண்டாடாமல் இருக்கவும் சுய சம்பாத்தியத்தின் மூலம் நான் வாங்கிய சொத்துக்கள் விஷயமாக இந்த உயிலில் ஏற்பாடுகளை செய்து இருக்கிறேன்.

சென்னை தேசிகாச்சாரி ரோட்டில் 24 எண் உள்ள வீட்டில் குடியிருக்கும் மூத்த வழக்கறிஞர் என்.கி.ரங்கசாமியின் குமாரரான என்.சி.ராகவாச்சாரி மற்றும் சென்னை வீனஸ் காலனியில் குடியிருக்கும் எனது மருமகன் ராஜேந்திரன் அவர்களையும் இந்த உயிலை நிறைவேற்றுபவராக நியமிக்கிறேன்.

அவர்கள் காலத்திற்குப் பிறகு சட்டப்படி சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறைவேற்றுபவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடியில் கண்ட அசையாத மற்றும் அசையும் சொத்துக்கள் எனக்குச் சொந்தமானவை. அவைகளில் வேறு யாருக்கும் எந்தப் பாகமும், எந்த உரிமையும் கிடையாது.

1) நான் குடியிருக்கும் மணப்பாக்கம் கிராமத்தில் ராமாவரத்தில் என் பெயரிலுள்ள "எம்.ஜி.ஆர். கார்டன்" என்னும் பங்களாவும், தோட்டமும்.

2) சென்னை தியாகராயநகர் ஆற்காடு சாலையில் 27வது எண்ணில் இருக்கும் கட்டிடமும், அடி மனையும்.

3) சென்னை சாலிக்கிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டம்.

4) ஆலந்தூர் மார்க்கெட் சந்தில் எண் 43 ல் இருந்து 47 வரை உள்ள கட்டிடங்களும் அடிமனையும்.

5) நான் குடியிருக்கும் இராமாவரத் தோட்டப் பங்களாவில் உள்ள அசையும் சொத்துக்களான எனக்கு சினிமா துறையில் கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும், மற்றபடி கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும். என் சொந்த மர, இரும்புச் சாமான்கள், வெள்ளிப் பாத்திரங்களும், மோட்டார் வாகனங்கள், பசு முதலிய கால்நடைகள்.

6) சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் என் பெயரில் உள்ள பங்குகள்.

7) இவைகள் எல்லாம் என் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டவை. எனக்கு சர்வ சுதந்திரமாகப் பயன்படுத்தப்பட்டவை ஆகும்.

மேலே சொல்லப்பட்ட நான் குடியிருக்கும் எம்.ஜி.ஆர். கார்டன் என்று பெயருள்ள மணப்பாக்கம் இராமாவரம் தோட்டத்தில் பங்களா, கார்செட், கோவில், பழத்தோட்டம் ஆகியவை என் மனைவி திருமதி வி.என்.ஜானகி அவருடைய ஆயுள் பரியாந்தம் ஆண்டு அனுபவித்துக்கொள்ள வேண்டியது. அவைகளை விற்கவோ, அடமானம் வைக்கவோ, தானமாகக் கொடுக்கவோ உரிமை கிடையாது.

என் மனைவி காலத்திற்குப் பிறகு அவருடைய சொந்தக்காரப் பெண்ணான கீதா (மதுமோகன் மனைவி), நிர்மலா (அப்புவின் மனைவி), ராதா (கோபாலகிருஷ்ணன் மனைவி), ஜனம், சுதா ஆகியோர் ராமாவரம் தோட்டத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட ஏ.பி.சி.டி. என்று வரைபடத்தில் குறிப்பிட்ட கட்டிடங்களை அவரவர் ஆண்டு அனுபவித்துக் கொள்ளவேண்டியது.

அவர்கள் மேற்படி சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு விடவோ போன்றவை செய்ய உரிமையில்லை. அவர்கள் காலத்திற்குப் பிறகு இந்த சொத்துக்களை அவரவர் வாரிசுகள் பெறவேண்டும். மேற்சொன்ன ராமாவரம் தோட்டத்தில் காலி இடங்களை எல்லாம் சேர்த்து இந்த உயிலை நிறைவேற்றுபவர், அதில் "எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லம் என்ற பெயரில் ஊமைகள், காது கேளாதவர்கள் இல்லமாக அதை ஏற்படுத்தவேண்டும்.

அந்த ஏழைகள் இலவசமாகத் தங்கியிருப்பதற்கும், உணவுக்கும் காது கேளாதவர்கள் இலவசமாகக் கருவிகள் பெறுவதற்கும், உடுத்த உடை, மருந்துகள் வசதி, கல்வி, தொழில் முதலியவைகளுக்காக அந்த காலி இடங்களில் செட்டுகளும், கட்டிடங்களும் போட்டுக்கொள்ள வேண்டும். ஊமைகள் பேசுவதற்குச் சிகிச்சையும், பேச்சுப் பயிற்சியும் ஏற்பாடு செய்தாக வேண்டும்.

இதே மாதிரி காது கேளாதவர்களுக்கு இந்த இடத்தில் இதுபோல் தங்கும் வசதி, காது கேட்பதற்கான கருவிகள் வாங்கிக் கொடுத்தல் போன்றவற்றைச் செய்தல் வேண்டும். இந்த "எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்திற்கான செட்டுகள், கட்டிடங்கள் அமைக்கவும், இதரச் செலவுகளுக்கும் சாலிக்கிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டத்தின் வருமானத்தில் இருந்து மேற்படி காரியங்களுக்கான செலவைச் செய்யவேண்டியது.

என்னுடைய வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள் ஆற்காடு ரோடு 27ம் நம்பர் வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள், புத்தகங்கள், நூல்கள், மேற்சொன்ன தி.நகர் ஆற்காடு 27ம் நம்பர் கட்டிடத்தில் வைக்கப்பட வேண்டும். 27ம் நம்பர் வீட்டில் உள்ள மனையும், கட்டிடங்களும் என் காலத்துக்குப் பிறகு "எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்" என்று பெயரிட்டுப் பாதுகாக்கப்படவேண்டும்.

என் நினைவு இல்ல பராமரிப்புகளைச் சரியாக மேற்கொண்டு அதில் உள்ள பொருட்களையும், அந்த இடத்தையும் மக்கள் பார்வையிட வசதி செய்து கொடுக்க வேண்டும். மேற்சொன்ன எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை யாரும் விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை கிடையாது.

இந்த இல்லத்தின் பராமரிப்புச் செலவுக்காகவும், காவல் காப்பது போன்றவைகளுக்காகவும் ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்களில் இருந்து வரும் வருமானத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது. அதற்காக அந்த மார்க்கெட் கட்டிடங்களை எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு எழுதி வைக்கிறேன்.

பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரது நினைவு இல்லங்கள் எல்லாம் தமிழக அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன.

அரசுக்கு இந்த செலவை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன். சத்யா ஸ்டூடியோ கம்பெனியில் எனக்குள்ள பங்குகள் அனைத்தும் நான் ஆரம்பித்த அ.தி.மு.க. கட்சிக்கு கீழே சொல்லப்பட்ட நிபந்தனைக்குட்பட்டு சேரவேண்டும். சத்யா ஸ்டூடியோ கம்பெனி பங்குகளை அகில இந்திய அ.தி.மு.க. கட்சி பெற்றுக்கொண்டு நிர்வாகம் செய்து வருகிற வருமானத்தை கட்சியின் பயனுக்காக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை கட்சி பிளவுபட்டாலோ அல்லது கலைக்கப்பட்டாலோ மேற்படி சத்யா ஸ்டூடியோ கம்பெனியின் பங்குகளை எல்லாம் இந்த உயிலை நிறைவேற்றுபவர் கைப்பற்றி மேலே குறிப்பிட்ட எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்ல செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும். சத்யா ஸ்டூடியோ கட்டிடத்துக்கு என் தாயின் பெயரான "சத்யபாமா எம்.ஜி.ஆர். மாளிகை" என்று பெயர் வைக்கவேண்டும்.

என்னுடைய ராமாவரம் தோட்டத்தில் உள்ள விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் போக மீதி உள்ள மோட்டார் வாகனங்கள், மர இரும்பு சாமான்கள், கால்நடைகள் எல்லாம் என் மனைவிக்கு உரியதாகும்.

இந்த உயிலில் கண்டுள்ள எல்லா செயல்களையும், நடவடிக்கைகளையும் அடுத்த 6 மாதத்தில் அமலுக்கு கொண்டு வரவேண்டும். இந்த உயிலில் கூறாமல் விடப்பட்டவை மற்றும் ரொக்கப்பணம் எதுவும் இருந்தால் அவை எல்லாம் என் மனைவி ஜானகி அம்மாளுக்கே சேரும்.

இவ்வாறு அந்த உயிலில் எம்.ஜி.ஆர். எழுதி இருந்தார்......

பின்னர் வக்கீல் ராகவாச்சாரி சத்யா ஸ்டூடியோ மற்றும் நிலங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

சத்யா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆருக்கு 95 சதவீத பங்கும் ஜானகி அம்மாளுக்கு 5 சதவீத பங்கும் உள்ளன. சத்யா ஸ்டூடியோ 95 கிரவுண்டு பரப்பு உள்ளது. சாலிக்கிராமம் சத்யா தோட்டம் 8 ஏக்கர் பரப்பு உள்ளது. ராமாவரம் தோட்டம் 6 ஏக்கர் 34 செண்டு பரப்பு உள்ளது. இதில் எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்துக்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு வக்கீல் என்.சி.ராகவாச்சாரி கூறினார்....

அ.தி.மு.க. மூத்த துணைப்பொதுச்செயலாளர் ராகவானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-

"இந்தத் தலைமை கழகக் கட்டிடமும், அடிமனையும் ஜானகி அம்மாளுக்குத்தான் சொந்தம். அதைக் கட்சிக்காகப் பரிசாகக் கொடுத்துப் பதிவு செய்துவிட்டார்."                                                                                                   

நன்றி :- மாலை மலர், காலப் பெட்டகம்.

Rama Samy

unread,
Nov 2, 2012, 11:16:32 PM11/2/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, T Parameswari

உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நாளை தொடக்கம் !

சென்னை உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் , 04, 2012-ல் நடைபெறுகிறது.

அண்ணாநகர், சாந்தி காலனியில் உள்ள டாக்டர் நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலைய அரங்கில் நடைபெற உள்ள தொடக்க விழாவில், நீதிபதி வி.ராமசுப்ரமணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

விழாவில், சென்னை உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கின்னஸ் க.வீரபத்திரன், பொதுச் செயலாளர் மு.அரங்கசுவாமி உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தமிழக அரசின் தலைமை தகவல் ஆணையர் சா.ஸ்ரீபதி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம.திருமலை, முன்னாள் உள்துறைச் செயலர் கே.மலைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் தொடங்க உள்ள விழாவில், பள்ளி மாணவ, மாணவியர்களின் செம்மொழி மற்றும் முத்தமிழ் நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.                                                                                     

நன்றி :- தினமணி, 03-11-2012

Rama Samy

unread,
Nov 2, 2012, 9:16:58 PM11/2/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com

பாடப் புத்தகத்தை மட்டுமே படிப்பதால் பயனில்லை. -வெ.இறையன்பு !

பாடத்தை தாண்டி பிற புத்தகங்களையும் படியுங்கள்: வெ.இறையன்பு அறிவுரை !

பாடப் புத்தகத்தைத் தாண்டி பிற புத்தகங்களையும் கல்லூரி மாணவ, மாணவிகள் படிக்க வேண்டுமென, தமிழக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் வெ.இறையன்பு பேசினார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் நிகழ்ச்சியில், மாணவர்களும், சமுதாயமும் என்ற தலைப்பில் அவர் பேசியது:

மாணவர்கள் என்றால் வாசிப்பவர் என்று பொருள். எனவே, மாணவர்கள் வாசிப்புப் பழக்கத்தை எப்போதும் மேற்கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். இயற்கையைப் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி நடக்க வேண்டும்.

மனித வாழ்க்கைக்குக் கூடுதல் வசதியை ஏற்படுத்த அறிவியல் தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. ஒவ்வொரு மணித்துளிகளையும் புத்தகங்களை வாசித்தல், நண்பர்களுடன் கலந்துரையாடுதல் எனப் பயனுள்ளதாகப் பயன்படுத்த வேண்டும்.  அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக 90 சதவீத நோய்களுக்குத் தீர்வுகாணக்கூடிய நிலை உள்ளது. நிலநடுக்கம், புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை கண்டறியக்கூடிய தொழில்நுட்பங்கள் இப்போது உள்ளன.

படித்துப் பட்டம் பெற்று, திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு வசதியாக வாழவேண்டும் என்பதற்காக மட்டுமே படிக்கக்கூடாது. சமுதாயத்தில் இருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றிருக்கிறோம். அந்தச் சமுதாயத்துக்கு ஏதாவது திருப்பிச் செய்வது குறித்து சிந்திக்க வேண்டும்.

சுயநலத்தைக் கைவிட்டு சமுதாயத்துக்காக உழைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் தன்னைச் சுற்றி இருக்கும் நண்பர்கள், பொதுமக்கள், மரம், செடி, கொடி, விலங்குகள் உள்ளிட்டவற்றில் இருந்து பாடம் கற்க வேண்டும். கற்றல் என்பது தொடர் நிகழ்வு. பாடப் புத்தகத்தை மட்டுமே படிப்பதால் பயனில்லை. கற்பதற்கு எல்லை இல்லையென சாதனையாளர்கள் எண்ணுகின்றனர். நூலகத்துக்குச் செல்லும்போதுதான் சாதனையாளராக மாற முடியும். பள்ளிப்படிப்புக்கும், கல்லூரிப் படிப்புக்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன.

பள்ளிப் பருவத்தை சந்தோஷமாகக் கழிக்க வேண்டும். ஆனால், கல்லூரிப் பருவத்தை மிகக் கவனமுடன் கையாள வேண்டும். பாடப் புத்தகத்தை மட்டுமே படிக்கக் கூடாது. அதையும் தாண்டி பிற புத்தகங்களையும் படிக்க வேண்டும். ஒவ்வொரு மணித்துளிகளையும் பயன்படுத்த வேண்டும். வித்தியாசமாகச் சிந்தித்துக் கருத்துக்களைச் சொல்லும் நபர்களைச் சமுதாயம் உடனடியாக ஏற்றுக்கொள்வதில்லை.

 மார்க்ஸ், அமெரிக்கச் சிந்தனையாளர் இங்கர்சால், குரங்கில் இருந்துதான் மனிதன் உருவானான் என்ற கொள்கையை உருவாக்கிய டார்வின் உள்ளிட்டோரைச் சமுதாயம் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. வாய்ப்புக் கிடைக்குமென மாணவர்கள் காத்திருக்கக் கூடாது; வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றார்.


நன்றி :- தினமணி, 05-09-2012
Posted 1 minute ago by Rama Samy

Rama Samy

unread,
Nov 2, 2012, 8:59:18 PM11/2/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com

புற்றுநோய் முற்றியவர்களுக்கு வலியைக் குறைக்கும் படிப்பு !

புற்றுநோய் போன்றவைகளால் பாதிக்கப்படுவர்கள் தங்களின் நோய் முற்றிய இறுதிக் கட்டத்தில், வலியால் மிகவும் வேதனைப்படுவார்கள். அத்தகைய வலியைக் குறைக்க உதவும் மருத்துவத்துறை ஒன்று இருக்கிறது. ஆங்கிலத்தில் Palliative Care எனப்படும் இந்தத் துறையில் பல வேலைவாய்ப்புக்கள் உள்ளன.

ஒரு நோயாளியினுடைய வாழ்க்கையின் மிகவும் சோகமான மற்றும் வேதனை மிகுந்த கட்டத்தில், அவரின் துயரை ஓரளவு துடைக்க உதவும் ஒரு உன்னதமான பணி இதுவாகும். இச்சேவையின் மூலம், நோயாளிக்கு மனத்தளவிலும் தைரியம் கொடுக்க முடியும். இப்படிப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கானது.

இந்த வலி நிவாரணி தொடர்பான மருத்துவத் துறையில் பணியாற்றுவது சற்றே சாவாலான விஷயம் தான். இத்துறையானது இந்தியாவில் ஆரம்பக் கட்டத்தில் இருந்தாலும், இதன் முக்கியத்துவம் நாளுக்குநாள் கூடி வருகிறது.

The Indian Association of Palliative Care (IAPC) என்ற அமைப்பானது கடந்த 1995ம் ஆண்டு நிறுவப்பட்டது.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய அரசின் ஆலோசனையில் நிறுவப்பட்ட இந்த அமைப்பானது இத்துறையில் கல்விச் செயல்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது.

வழங்கப்படும் படிப்புகள்:

IAPC மற்றும் பல கல்வி நிறுவனங்கள் Palliative Care தொடர்பான பல அடிப்படைப் படிப்புகளை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வழங்குகின்றன.

இந்தப்படிப்பு 2 வகைப்படும். முதல் பாகமானது 8 வாரங்கள் தொலைநிலைக் கல்வியைக் கொண்டது மற்றும் Palliative Care தொடர்பான அறிமுக அம்சங்களும் உண்டு.

இரண்டாம் பாகமானது விருப்பப்பட்ட கிளீனிக்கில், Palliative Care படிப்பில் Communication skills. Psychological Issues. Ethical and Spiritual Issues. Pain Management. Symptom management. Bereaement Counselling, Palliative Care emergencies. End of life care and Practical issues related to death போன்றவையும் அடங்கும்.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:

Institute of Palliative Medicine (AIIMS), Delhi

Institute of Palliative Medicine (Calicut)

TMCH (Mumbai), Bangalore Baptist Hospital. IPC (Thrissur)
                                                            


நன்றி :- தினமணி, 03-11-2012

Rama Samy

unread,
Nov 3, 2012, 7:41:22 PM11/3/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, vallamai editor, T Parameswari, winmani wordpress

முதன்முறையாக 1330 குறட்பாக்களும் இசை வடிவில் !02 May 2009 21:14 - பனைநிலம் !

”பனைநிலம் நாடுகளையும், 

மதங்களையும் கடந்து, 

தமிழால் இணைந்திருக்கும் ஒரு சங்கம்.

http://panainilam.blogspot.com/feeds/posts/default




திருக்குறளுக்கு விளக்கவுரைகள் எழுதியோர் பலர். ஆனால் எத்தனை பேருக்குக் குறளை முழுமையாகப் படிக்க முடிந்திருக்கிறது? நாம் திரைப்படப் பாடல்களை எவ்வாறு மனப்பாடம் செய்கிறோம்? பாட்டுப் புத்தகத்தை வாங்கியா படிக்கிறோம்? இல்லையே, கேட்பதனாலேயே பாடல்கள் நமக்கு மனதில் பதிகின்றன.  அதனைப் போலவே பலவிதமான பாடல்களும் நாம் கேட்பதன்மூலமாகவே நன்கு மனதில் பதிகின்ற.. படிக்கும் வரிகளை மனதில் பதிப்பதும், மீண்டும் நினைவுபடுத்தி எடுப்பதும் சற்றே கடினம். ஆனால் கேட்கின்ற வரிகளைச் சுலபமாக நினைவில் ஏற்றிக் கொள்ளலாம், அதே போல மீண்டும் ஞாபகப்படுத்துவதும் சுலபம். குழந்தைகள் கற்பதற்கு வெகு முன்னமேயே கேட்கத் தொடங்கி விடுகின்றனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். அதனாலேயே கற்றலின் கேட்டல் நன்று என்றார்கள். திருவள்ளுவரும் "செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" என்றார்.                 








எப்படிப் பார்க்கும்போது, எத்தனைத் தமிழ் நூல்களை நாம் இசை வடிவில் பதிவு செய்திருக்கிறோம்? தமிழ் நூல்களையும், இலக்கியங்களையும் பரப்ப முன்வரும் பலரும் அதனை ஏட்டிலும், எழுத்திலுமே பதிய முற்படுவதைக் காண்கிறோம். பத்திரிகையாக இருக்கட்டும், மின் பக்கங்களாக இருக்கட்டும் அவை பெரும்பாலும் எழுத்திலேயே முன்வைக்கப்படுகின்றன.

மதுரைத் திட்டம் போன்றவை அரும்பெரும் முயற்சிகள். ஆனாலும் அவை இன்று எத்தனைத் தமிழர்களைச் சென்றடைந்திருக்கின்றன? கணினி இருந்தாலுமே அத்தகைய பக்கங்களை அடிக்கடி எடுத்துப் பார்க்கின்றோமா?

அதே நேரத்தில்,திரைப்பாடல்களைப் பாருங்கள். அவை இசை வடிவில் வந்ததனாலேயே புகழ்பெறுகின்றன. இசையின் மூலமே நல்ல பல இலக்கியங்களை மக்கள் மத்தியில் பரப்ப இயலும். இந்த நோக்கில் தொடங்கப்பட்டதுதான் எங்களது பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் திருக்குறளை இசைவடிவில் பதியும் திட்டம்.                                                                                                   

                                                                           


இத்திட்டத்துக்கான தொகைகளை அளித்து ஊக்குவித்த புரவலர்கள் அகஸ்டாவிலிருக்கும் முனைவர் சிவக்குமார் ஜெயபாலன்-மருத்துவர் ஜானகி நடராஜா மற்றும் சார்லஸ்டனிலிருக்கும் முனைவர் தண்டபானி குப்புசாமி-வளர்மதி குப்புசாமி ஆகியோர். இதில் பங்குகொண்ட அனைவரும் அமெரிக்காவின் தென்கரோலின மாநிலத்தில் இருக்கும் பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள். இளைய தலைமுறையினர்!                                              

          



ஏழு பெண்களும், ஏழு ஆண்களும் அடங்கிய இரு குழுக்கள், ஒவ்வொன்றும் மாறி மாறி அவ்வைந்து அதிகாரங்களாகப் பாடியிருக்கிறோம். எளிமையான இசையோடு மறைமொழியின் (மந்திரம் என்ற சொல்லுக்குத் தமிழில் மறைமொழி) மெட்டில் 1330 குறட்பாக்களும் பாடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரத்தின் தலைப்பும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அதிகாரமும் சுமார் ஒன்றரை நிமிடங்கள் இசைக்கின்றன. மொத்த குறட்பாக்களைக் கேட்க ஆகும் நேரம் சுமார் மூன்று மணி நேரம். இதற்கான ஒலிப்பதிவு Island Sounds என்ற ஒலிப்பதிவகத்தில் Steve Green என்பவரால் செய்யப்பட்டது. ஒலிப்பதிய நாங்கள் எடுத்துக்கொண்ட நேரம் சுமார் ஆறு மணி நேரம். குறுந்தகட்டுக்கான முன்னுரையை அன்புகூர்ந்து வழங்கியிருப்பவர் திருச்சி திருவள்ளுவர் தவச்சாலையைச் சார்ந்த தமிழ்த்திரு அய்யா இளங்குமரனார் அவர்கள். இத்திட்டத்தில் பங்குகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் பனைநிலத் தமிழ்ச் சங்கம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. திருக்குறள்  மறைமொழியின் முதல் அதிகாரத்தைக் கேட்க இங்கே அழுத்தவும்.                                                                




"திருக்குறள் மறைமொழி" என்ற இந்த MP3 குறுந்தகட்டினைக் கடந்த ஜனவரி 24ம் தேதி நிகழ்ந்த எங்களது தமிழ்ச்சங்கப் பொங்கல் விழாவில் வெளியிட்டோம். இக்குறுந்தகடு விற்பனைக்குத் தயாராக உள்ளது. எங்கள் வலைப்பதிவின் இடப்புறம் இருக்கும் "Buy Now! Thirukkural Maraimozhi MP3 CD" என்ற பொத்தானை அழுத்தி, Google Checkout மூலம் இதனை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் விற்பனை முகவர்கள் தேவை! திருக்குறளை இந்தப் புதிய இசை வடிவில் பரப்ப முன் வாருங்கள்!  ஒவ்வொரு குறுந்தகடும் 5 அமெரிக்க டாலர்கள். இதிலிருந்து வரும் தொகை முழுவதும், எங்களது அடுத்த இசைத் திட்டத்துக்காகப் பயன்படுத்தப்படும்.






இக்குறுந்தகடு இலாப நோக்கில் தயாரிக்கப்பட்டதன்று. இதனை வாங்கிக் கேட்பதும், பரப்புவதும் தமிழரிடையே திருக்குறள் பரவ உதவும். திருக்குறளில் இருக்கின்ற எண்ணற்ற அரிய கருத்துக்களை இத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவராலும் பாட்டுப் பயிற்சிகளின்போதும், ஒலிப்பதிந்து திருத்தும்போதும் உணர்ந்துகொள்ள முடிந்தது. எங்கள் தமிழ்ச் சங்கத்தினரின் குடும்ப விழாக்களிலும், தமிழ்ப் பள்ளியிலும், சங்க விழாக்களிலும், கார்ப் பயணங்களிலும் திருக்குறள் ஒரு இனிய இசையாக ஒலிக்கப்படுகிறது, ஓதப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், ஆலயங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் தமிழர் கூடும் இடங்களிலெல்லாம் திருக்குறள் ஒலிக்க வேண்டும் என்பது எம் அவா. அது வாழ்க்கைக்கான அத்தனைப் பாடங்களையும் தன்னுள்ளே வைத்திருக்கின்றது. அய்யா இளங்குமரனார் கூறியிருப்பதுபோல், திருக்குறளைப் படிப்போம், கேட்போம், சிந்திப்போம், சீர்த்தி பெறுவோம், பிறவிப் பயனை அடைவோம்! வாழிய நலனே, வாழிய நிலனே!எதை எழுத



நமது துத்துக்குடி வலைப்பதிவு அன்பர் ந.உ.துரை அவர்களது, திருக்குறளுக்குத் திருக்குறள் வடிவிலேயே கருத்துரை என்ன்னும் நூலினை வெளியிடத் துவங்க முற்பட்டபொழுது, கிடைத்த அதிசயத் தகவலே இந்தப்பதிவு.

அடுத்ததாகத் துரை ம்செல்லவேண்டிய இடம்,  திருச்சி திருவள்ளுவர் தவச்சாலையைச் சார்ந்த தமிழ்த்திரு அய்யா இளங்குமரனார் அவர்கள்

எல்லோரும் ஆளுக்கொரு திருக்குறள்  குறுந்தகட்டினை வாங்குவோம் !
தமிழ் நாட்டில் தமிழரென்று சொல்லிக்கொண்டு வாழ்வோர் செய்யாத

அருஞ்சாதனையை நிகழ்த்தியுள்ள,
அந்நியதேசத்தில் வாழும் ,
பனைநிலத்தவரின்,
முயற்சியை ,
வெற்றிபெறச் செய்வது,
 நமது கடமையன்றோ?

Rama Samy

unread,
Nov 3, 2012, 10:18:59 PM11/3/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com

கொள்ளைக்குத் துணைபோகும் கொள்கை! -ஜி. ராமகிருஷ்ணன் -தீக்கதிரும், ஜனசக்தியும் மீள்பதிவு செய்யவேண்டிய கட்டுரை !

"கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக அல்ல - கடந்த 15-20 ஆண்டுகளாகவே அமலாக்கப்பட்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கையினால் மக்களுக்குப் பலன் கிடைக்கும், நாடு வல்லரசாக மாறும்'' என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியிருக்கிறார். நிதியமைச்சரின் கூற்று உண்மைக்கு மூடுதிரை போடுவதாக உள்ளது.

 1991-ஆம் ஆண்டு துவங்கி மத்திய அரசு அமலாக்கிவரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் ஆக்கிடுவதற்கே வழி வகுத்துள்ளது.

 ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையில் இமாலய இடைவெளியை உருவாக்கியுள்ளது. மேலும், நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட இக்காலத்தில் வரலாறு காணாத ஊழல்கள் நடந்தேறி வருகின்றன.

 இரண்டாண்டுகளுக்கு முன்புவரை விவசாயம், தொழில், சேவைத்துறை ஆகிய மூன்றும் சேர்ந்து நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார உற்பத்தி மதிப்பு 7-8 சதவிகிதம் வரை அதிகரித்தது. இந்த வளர்ச்சியைச் சுட்டிக்காட்டி, நாடு வல்லரசாகப் போகிறது என மார்தட்டிக் கொண்டார்கள். மொத்த உற்பத்தி அதிகரித்து வந்த இதே காலத்தில்தான் வறுமையில் வாடுவோரின் மொத்த எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது என்பதைப் புறம்தள்ளக் கூடாது.

 தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் அளித்துள்ள புள்ளிவிவரத்தின்படி 1993-1994-ஆம் ஆண்டில் கிராமப்புறத்தில் 59 சதவிகிதமாக இருந்த வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை 2009-2010-இல் 76 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

 நகர்ப்புறங்களில் வறுமையில் வாடுவோர் 1993-1994-இல் 57 சதவிகிதமாக இருந்தது.  2009-2010-இல் 73 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

 நகர்ப்புறங்களில் ஒரு நாளைக்கு 2,100 கலோரி சத்துள்ள உணவும், கிராமப்புறங்களில் 2,200 கலோரி சத்துள்ள உணவும் கிடைக்காதவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளதாகக் கணக்கிடப்படுகிறது. (இதற்கு முன்பு 2,400 கலோரி என்று இருந்ததை 2,200 கலோரி ஆக அரசு குறைத்திருக்கிறது)

 வளர்ச்சி 8 சதவிகிதத்தை எட்டினாலும், அதன் பலன் சாதாரண மக்களுக்குக் கிடைக்காதது மட்டுமல்ல, வளர்ச்சியின் பலன் பன்னாட்டு முதலாளிகளுக்கும், உள்நாட்டுப் பெரிய முதலாளிகளுக்கும் கிடைத்துள்ளது என்பதே உண்மை.

 கடந்த 20 ஆண்டுகளில் இந்திய பெரிய வர்த்தக நிறுவனங்களின் சொத்து மதிப்பு வேகமாகப் பலமடங்கு உயர்ந்துள்ளது. 2003-இல் "டாலர் பில்லியனர்'களின் எண்ணிக்கை (ஒரு பில்லியன் டாலர் உத்தேச மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி) 13 ஆக இருந்ததிலிருந்து 2011-ல் 55 ஆக உயர்ந்துள்ளது.

 அரசின் கொள்கையும், இவர்களுக்கு அரசு அளித்த சலுகையும், இன்றையப் பொருளாதார அமைப்பு முறையும்தான் டாலர் பில்லியனர்களின் சொத்து பலமடங்கு அதிகரிக்க வழி வகுத்துள்ளது.

 மேலும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்ட காலத்தில் ஆளும் அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள், அதிகாரிகள், கூட்டுக் கொள்ளையும் இத்தகைய போக்குக்குத் துணையாக இருந்துள்ளது.

 வறுமை ஒருபக்கமும், செழிப்பு மறுபக்கமும் உருவாவதற்கு இன்னொரு காரணம் தொழில் துறையில் நிகர மதிப்புக் கூட்டலில் 1980-களில் ஊதியத்தின் பங்கு 30 சதவிகிதமாக இருந்தது 2010-இல் 10 சதவிகித அளவுக்குக் குறைந்து விட்டது.

 முறைசார் அல்லது நிரந்தரத்தன்மையுள்ள துறையில் வேலைவாய்ப்பு 1998-இல் 2.82 கோடியாக இருந்தது. 2008-இல் 2.75 கோடியாகக் குறைந்துள்ளது. நிரந்தரத்தன்மையுள்ள வேலைவாய்ப்புக் குறைந்து, உத்தரவாதமும், சமூகப் பாதுகாப்பும் இல்லாத முறைசாராத் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது நவீன தாராளமயப் பொருளாதார கொள்கையின் விளைவேயாகும்.

  நாட்டின் ஒட்டுமொத்த உழைப்பாளர்கள் எண்ணிக்கையில் (45.6 கோடி) 86
சதவிகிதம் (39.3கோடி) முறைசாராத் தொழிலாளர்கள்தான். குழந்தைகள், முதியோர் ஆகிய பிரிவைத் தவிர்த்து மற்ற பகுதியினரில் ஒட்டுமொத்த உழைப்பாளர்கள் எண்ணிக்கை 45.6 கோடி. மேற்கண்ட முறைசாராத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் கடந்த 20 ஆண்டுகளில் உயரவில்லை. மாறாக, சரிந்துள்ளது.

 நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமலாக்கம் தொடங்கிய இக்காலத்தில், அரசு திட்டமிட்டுப் பன்னாட்டு முதலாளிகளுக்கும், உள்நாட்டுப் பெரிய முதலாளிகளுக்கும் மூலதனம் சேர்க்க, தங்கள் சொத்தைப் பெருக்கிக்கொள்ளச் சலுகை அளித்து வருகிறது.

 உண்மையில், சில அம்சங்களில் சலுகையல்ல - முறைகேடுகள் மூலமாக - மூலதனம் ஈட்ட முதலாளிகளுக்கு அரசு தன்னுடைய தவறான கொள்கை மூலம் துணை போயுள்ளது. இது நாட்டினுடைய இயற்கை வளத்தை முதலாளிகள் கொள்ளையடிக்கவே வழி வகுத்துள்ளது.

  "2ஜி' அலைக்கற்றை ஊழலில், 1,76,000 கோடி ரூபாயும், நிலக்கரி ஒதுக்கீட்டில் 1,86,000 கோடி ரூபாயும், கர்நாடக மாநிலத்தில் இரும்புத்தாதுவை வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்ததன் மூலம் ரூ.50,000 கோடியும், தமிழகத்தில் உரிய அனுமதியின்றித் தனியார் கிரானைட் வெட்டி எடுத்து விற்பனை செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாயும் என இயற்கை வளங்களை முதலாளிகள் கொள்ளையடிக்க அனுமதிப்பதும் நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதியே.

 ரிலையன்சுக்குச் சொந்தமான "சாசன் அல்ட்ரா' மெகா மின் திட்டத்துக்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்ததில் மட்டும் அரசுக்கு ரூ.29,033 கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை (சி.ஏ.ஜி.) அதிகாரியின் அறிக்கை கூறுகிறது.

 ப.சிதம்பரம் நிதியமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, அரசுக்கு "வோடாபோன்' நிறுவனம் செலுத்த வேண்டிய வரி ரூ.12,000 கோடியை வசூலிக்கத் தேவை இல்லை என அறிவித்துவிட்டார். (இத்தொகையை வசூலிக்க ஏற்கெனவே சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது).

 தில்லி சர்வதேச விமான நிலையக் கட்டுமானத்திற்கு ஜி.எம்.ஆர். என்ற தனியார்  நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்தது. விமான நிலையத்திற்கான மொத்த நிலத்தில் பெரும் பகுதியை ஜி.எம்.ஆர். கம்பெனிக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.100-க்கு குத்தகைக்கு விட்டது. ஆனால், ஜி.எம்.ஆர். கம்பெனி, "வளர்ச்சிக் கட்டணம்' என்ற பெயரில் பயணிகளிடமிருந்து ரூ.3,415 கோடி அளவுக்குச் சட்டவிரோதமாக வசூலித்துள்ளது!

 கிருஷ்ணா-கோதாவரி நதிப் படுகையில் இயற்கை எரிவாயு எடுப்பதை ரிலையன்ஸ் கம்பெனிக்கு அளித்ததையே மார்க்சிட் கட்சி ஆட்சேபித்தது. தான் உற்பத்தி செய்கிற எரிவாயுவுக்கு மிக அதிகமாகச் செலவாகிறது என்று கணக்கை மிகைப்படுத்திக் காட்டி, மிக அதிகபட்சமான விலையை நிர்ணயிக்க வேண்டுமென அரசை நிர்பந்தித்து, திட்டமிட்டு ஒரு விலை உயர்வை ஏற்படுத்தி ரிலையன்ஸ் நிறுவனம் கொள்ளை லாபம் அடித்தது.

 இதன் விளைவாக மின்சாரம் மற்றும் உர விலை அதிகரித்தது போன்ற அனைத்து அம்சங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்திருக்கிறார்கள்.

 மீண்டும் விலையை உயர்த்திட அரசுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் பல வகைகளில் நிர்பந்தம் கொடுத்து வருகிறது. ரிலையன்ஸ் கம்பெனி நிர்பந்தத்தை ஏற்று எரிவாயு விலையை உயர்த்தக் கூடாது என 2012 மே மாதத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தபன் சென், பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதினார்.

 விலையை உயர்த்த வேண்டும் என்று ரிலையன்ஸ் கம்பெனியின் கோரிக்கையை பெட்ரோலிய அமைச்சகம் நிராகரித்த பின்னரும்கூட ரிலையன்ஸ் நிறுவனத்தின் கோரிக்கையைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று பெட்ரோலிய அமைச்சகத்திற்குப் பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது!

 2014 ஏப்ரல் வரையில் விலை உயர்வு இல்லை என்று ஏற்கெனவே அரசுக்கும் ரிலையன்ஸ்  கம்பெனிக்கும் ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு முரணாக விலையை உயர்த்த முடியாது என பெட்ரோலியத்துறை அமைச்சராக இதற்கு முன் பதவி வகித்த ஜெய்பால் ரெட்டி கூறியிருக்கிறார்.

 ரிலையன்ஸ்  கம்பெனியின் விலை உயர்வு கோரிக்கையை நிராகரித்த ஜெய்பால் ரெட்டியை மாற்றிவிட்டு வீரப்ப மொய்லியைப் பெட்ரோலியத்துறை அமைச்சராகக் கொண்டு வந்ததே ரிலையன்ஸ் கம்பெனியின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகத்தான் என பிரதமர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 மத்திய அமைச்சரவை உருவாக்கத்தில் பெரு முதலாளிகளின் தலையீடு எந்த அளவுக்கு உள்ளது என்பதை முன்னர் வெளியான "நீரா ராடியா டேப்' உரையாடல் மூலம் புரிந்துகொள்ள முடியும்.

 இயற்கை வளங்களை அன்னியக் கம்பெனிகளும், உள்நாட்டுப் பெரு முதலாளிகளும் "கொள்ளை அடிக்க' அனுமதிப்பதையே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு "கொள்கை'யாகக் கொண்டு உள்ளது.

 இத்தகைய கொள்கையைத்தான், "கொஞ்சம் கொஞ்சமாக ஏழை,எளிய மக்களின் வறுமையைப் போக்கும்' என மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறுகிறார். இவர்களுடைய பார்வையில் அம்பானிபோன்ற பெரு முதலாளிகள்தான் "பரம ஏழைகள்' போலும்.

 ரிலையன்ஸýக்குச் சலுகை வழங்கத் துடிக்கும் இவர்கள்தான், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என அனைத்தின் விலைகளையும் ஏற்றி இந்திய மக்களின் தலையில் மேலும் மேலும் சுமையை ஏற்றுகிறார்கள்.

 ""பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ, நாங்கள் சாகவோ'  என்று அன்று நாடு அடிமைப்பட்டிருந்தபோது மகாகவி பாரதி கண்டனக் குரல் எழுப்பினார். இன்று நாடு சுதந்திரம்பெற்ற பிறகும், நாட்டின் சொத்துகள் - கொள்கை என்ற பெயரில் - கொள்ளையடிக்கப்படும்போது பாரதியின் முழக்கத்தை மீண்டும் எழுப்பவேண்டிய தேவை உள்ளது.                  

நன்றி :-தினமணி, 03-11-2912                   

Rama Samy

unread,
Nov 4, 2012, 8:28:58 AM11/4/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress

தீபாவளி முதல் தந்தி டி.வி. ஆரம்பம் !







 
மழைக்குக் கூடப் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத பாமரனையும் தமிழைக் கற்றுக் கொள்ள வைத்தது தினத்தந்தி.!

காலம் தந்த கட்டாயத்தால் - சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தால், திராவிட முன்னேற்றக் கழகக் “கொள்கைகளை”  ( ? )பட்டி தொட்டி எங்கும் பரப்புரை செய்திடக் காரணமாக இருந்தது தினத்தந்தி.

விரும்பும் பெயரில் பத்திரிக்கையின் பெயரைப் பதிவு செய்ய இயலாவிட்டால், பெயருக்கு முன் ஒரு பெயரைச் சேர்த்துக் கொண்டு, பதிவு செய்து கொள்ளலாம் என்ற புதிய பாதையைக் காட்டியது தினத்தந்தி. உதாரணம், வாராந்தரி ராணி. ஆனால், ராணி என்றே மக்கள் மத்தியில் இன்றும் பிரபலம்.

மாதமொரு நாவலுக்கு வழிவகுத்ததும், தினத்தந்தி, “ராணி முத்து”

மாவட்டம்தோறும் பதிப்புக்களைக் கொண்டுவர வழிகாட்டியதும் தினத்தந்தி !

இரவில் கடைசி நிமிடம் வரை காத்திருந்து புதிய புதிய செய்திகளைத் தலைப்புச் செய்திகளாகத் தந்து கொண்டிருப்பதும் தினத்தந்தி.

உலகச் செய்திகளை-புதுமைச் செய்திகளை முதலில்,பிழையின்றி வழங்கி வருவதும் தினத்தந்தி.
தற்பொழுது,   வருகின்ற தீபாவளித் திருநாள் முதல் தொலைக் காட்சித் துறையிலும்  பீடுநடை இடப் போகின்றது. புதுமைகளை எதிர்பார்ப்போம் !

Posted 1 minute ago by Rama Samy

Rama Samy

unread,
Nov 4, 2012, 6:19:18 PM11/4/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, vallamai editor

இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல் !

இந்தியாவில் தாம் குடித்த அமுத பானமே தம்மை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வைத்துள்ளது என்று மனம் திறந்தார் 110 வயது பிரிட்டிஷ் காரர்.

பிரிட்டனில் மிகவும் வயதான நபர் எனக் கூறப்படும் ரெக் டீன், தனது 110 வது பிறந்த நாளை ஞாயிற்றுக் கிழமை கொண்டாடினார்.

இந்த வயதிலும் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருக்க என்ன காரணம் என்று பலரும் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு அவரின் மகன் கிறிஸ்டோபர், என் அப்பா இளைய வயதில் ஒரு முறை இந்தியாவில் பயணம் செய்தாராம். அப்போது இந்தியாவில் மருத்துவர் ஒருவர், சேற்றைப் போன்ற நிறமுடைய பானம் ஒன்றைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னாராம். இந்த பானத்தைக் குடித்தால் நூறு வயது வாழலாம் என்றாராம். அந்த விநோத அமுதத்தைக் குடித்ததால் தாம் புத்துணர்ச்சியுடன் இருந்ததாக அவர் கூறியுள்ளார் என்றார் கிறிஸ்டோபர்.

ரெக் டீன், தேவாலயம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அவர் அதில் இருந்து 80 வது வயதில்தான் ஓய்வு பெற்றார்.                                                                                         

Rama Samy

unread,
Nov 4, 2012, 7:52:47 PM11/4/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress

”வாவ்.....நியூஸ்” - தேனி மாரியப்பன், விஜயா பதிப்பகம், கோவை 641 001

வெள்ளை மாளிகைக்கு வயது 2012.
01. அமெரிக்க ஜனாதிபதியின் வெல்ளை மாளிகை மூன்று அடுக்குகளைக் கொண்டது. இதில் மொத்தம் 100 அறைகள் உள்ளன. ஐரிஷ் நாட்டுக் கட்டிட நிபுணரால் வடிவமைக்கப்பட்டு 1800 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

பணி ஓய்வே இல்லாதவர்கள்

02. அமெரிக்காவில் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓய்வு வயது வரம்பு என்பதே கிடையாது. அவர்களாகவே விரும்பிப் பதவியைவிட்டுப் போனால்தான் உண்டு.

தினத்தந்தியில் ஒரு சுவையான செய்தி
03. ஆதித்தனார் காலத்தில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள், அவர்கள் விரும்பும் போது ஓய்வெடுத்துக் கொள்ளலாம். மேலும் பெண்களைப் பணிக்கு எடுப்பதில்லை. சென்னை தலைமை அலுவலகத்தில் ஒரே ஒரு டெலிபோன் ஆப்பரேட்டர் மட்டும் விதிவிலக்கு.

உலகிலேயே அதிகக் கண்தானம் செய்த கண் வங்கி :-

04. இலங்கையில் உள்ள சர்வதேசக் கண் வங்கி இதுவரை (2004) இலட்சம் பேர்களுக்குக் கந்தானம் செய்திருக்கிறது. இது ஒர் உலக சாதனையாகும்.

 மாணிக்க கங்கையிலிருந்து ஓம் ஒலி

05. கதிர்காமம் இலங்கையில் உள்ளது. முருகனின் புண்னிய பூமி. அதன் அருகில் ஓடும் மாணிக்க கங்கை ஆற்றிலிருந்து எப்பொழுதும் “ஓம்’ என்ற ஒலி கேட்பதாகக் கூறப்படுகின்றது.

உலகப் போரில் சிக்காத நாடு
06. ஐரோப்பாக் கண்டத்தில் உள்ல ஸ்வீடன், உலகப் போரின் கோரப்பிடியில் சிக்காத நாடு. இந்நாட்டின் பரப்பளவு, 1,73,000 சதுர மைல். பாதிப் பரப்ளவு காடுகளாகவே உள்ளன.மக்கள் தொகை ( 2004 ) 80 லட்சம். தீக்குச்சி, குளிர்சாதனப்பெட்டி, தெர்மாமீட்டர், மண்ணெண்ணெய் அடுப்பு ஆகிய அனைத்தும் ஸ்வீடனின் கண்டுபிடிப்புகள்.

சரியான சட்டம்

07. தேர்தல் விளம்பரப் போர்டுகள் மரங்களிலோ, விளக்குக் கம்பங்களிலோ அரசுக்குச் சொந்தமான விளம்பரப் பலகைகளிலோ தொங்கவிடக்கூடாது என்ற சட்டம் சிங்கப்பூர் நாட்டில் உண்டு.

சொத்துக்குரியவரின் உடையின் நிறம் சிவப்பு

08. ரஸாவ் பள்ளத்தாக்கு பிரன்ஸில் உள்லது. குடும்பச் சொத்துக்கு வாரிசான பெண் மட்டும்தான் சிவப்பு உடைகளை அணிய வேண்டும். அப்பெண்னின் உடன்பிறப்புக்கள் அனைவரும் கருமை நிறமுடைய ஆடைகளையே அணிதல் வேண்டும். இது அங்கு நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஓர் மரபு.

இஷ்டம்போல்  குழந்தைகளுக்குப் பெயர் வைக்க முடியாது

09. பிரான்ஸ் நாட்டில் யாரும் தங்கள் குழந்தைகளுக்குத் தங்கள் இஷ்டம்போல் பெயர் சூட்ட முடியாது. அரசாங்கப் பட்டியலில் உள்ள பெயர்களில் ஒன்றையே தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்.

தேவையற்ற பயன்படுத்தும் நிலையில் உள்ள பொருட்களைச் சாலையோரம் வைத்துவிடலாம்
10. இது ஆஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ளது. அவற்றைத் தேவைப்படுவோர் தாராளமாகத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று விடலாம்.

இந்தப் பதிவுகள் அனைத்தும் நெட்டில் சுட்டவை / கேட்டுத் தெரிந்து கொண்டவை என்று “ரீல்” விட மனமில்லை.

 இரண்டு கேட்டுத் தெரிந்து கொண்டவை.

எஞ்சியவை, தேனி.எஸ். மாரியப்பன் அரும்பாடுபட்டுத் தொகுத்தவை. அவரது முகவரி, 170/185 பழைய டி.வி.எஸ்.தெரு, தேனி-625 531.

விஜயா பதிப்பகம், 20, இராஜ வீதி, கோயமுத்தூர்-641 001,
வாவ்....நியூஸ்! ( உலகில் நடந்த ஆச்சர்ய சம்பவங்கள் ) 
என்னும் தலைப்பில் மார்ச் 2004-ல் வெளியிட்டது.
96 பக்கங்கள். விலை ரூபாய் 25/-

Rama Samy

unread,
Nov 4, 2012, 11:17:51 PM11/4/12
to நட்புடன், Thamizhthendral, pavai...@yahoo.com, dhillita...@gmail.com, mint...@googlegroups.com, winmani wordpress, T Parameswari

காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் உலகத் தமிழ் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் !

காரைக்குடி கம்பன் கழகத்தின் 75ஆம் ஆண்டு பவள விழாவையொட்டி கம்பன் தமிழ் ஆய்வு மையம் சார்பில் உலகத் தமிழ் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கம் அடுத்த ஆண்டு மார்ச் 23, 24 தேதிகளில் நடைபெற உள்ளது.

காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளில் இருந்து பேராசிரியர்களும், அறிஞர்களும் பங்கேற்கின்றனர். அதில் "காலந்தோறும் கம்பன்' என்ற தலைப்பில் கம்பன் நேற்று - இன்று- நாளை என்ற மூன்று பிரிவுகளில் இக் கருத்தரங்கம் நடைபெறும்.

பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழில் பி.எச்.டி, எம்.பில். மற்றும் பொது ஆராய்ச்சிகளுக்கு பதிவு செய்துள்ள மாணவர்கள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை கருத்தரங்கில் வாசிக்கலாம். இக்கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு கருத்தரங்கத்தின்போது, "கம்பன் தமிழ் ஆய்வுக் கோவை' என்ற பெயரில்  நூலாக வெளியிடப்படும்.

மேலும் விவரங்கள் பெற: 

கம்பன் தமிழ் ஆய்வு மையம், கம்பன் பணி மண்டபம், காரைக்குடி. 

மின்னஞ்சல்:kambanta...@gmail.com   அலைபேசி: 9445022137  இந்தப் 

பதிவுக்கான கடைசித் தேதி இந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி.  

ஆராய்ச்சி மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொள்ளும் வகையில் உள்நாட்டு ஆசிரியர்களுக்கு ரூ.500-ம் மாணவர்களுக்கு ரூ.350-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கு நடைபெறும் 2 நாள்களுக்குத் தங்கும் வசதி, உணவு மற்றும் ஆய்வுக் கோவை நூலும் இலவசமாக அளிக்கப்படும்.

பரிசு: ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2012 வரையுள்ள காலங்களில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிகளிலும் வெளியாகியுள்ள கம்பன், கம்பராமாயணம் பற்றிய சிறந்த ஆய்வு நூலை எழுதிய ஆசிரியர்களுக்கு ரூ.5,000, பதிப்பாளர்களுக்கு ரூ.2,500 பரிசாக அளிக்கப்படும்.                                         

நன்றி :- தினமணி, 05-11-2012             

Rama Samy

unread,
Nov 4, 2012, 10:37:53 PM11/4/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress

மதுரை ,முனைவர் மா.தச. பூர்ணாச்சாரி, ஆலோசனைகளக் கேட்டால்தான் சில்லறை வணிகர்கள் தாக்குப்பிடிக்க முடியும் !

அன்னிய முதலீடும் ஆடும் தராசுகளும்-தினமணி-கருத்துக்களம்-05-11-2012



பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி கூடி, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை  அனுமதிப்பதென்ற முடிவை எடுத்து அரசாணையும் வெளியிட்டது. ஒற்றை இலச்சினை சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீதமும் பல் இலச்சினை வர்த்தகத்தில் 51 சதவீதமும் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.

1996இல் சீனாவில் 19,20,604 பாரம்பரிய பல சரக்குக் கடைகளும் 13,079 சூப்பர் மார்க்கெட் கடைகளும் இருந்தன. 2001இல் அவை 25,65,028 பலசரக்கு கடைகளாகவும் 1,52,194 சூப்பர் மார்க்கெட்டுகளாகவும் 18,091 பல்நோக்கு வணிக வளாகமாகவும் 593 ஹைப்பர் மார்க்கெட்டுகளாகவும் (குண்டூசி முதல் விமானம்வரை விற்கும் ஒரே கடை) அதிகரித்துவிட்டன.

நம் நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் (2000-01 முதல் 2010-11 நிதியாண்டுகளில்) அன்னிய நேரடி முதலீடு 10,733 கோடிகளில் தொடங்கி 88,250 கோடிகளாக உயர்ந்திருக்கிறது. ஜனவரி 2000 முதல் ஜனவரி 2012 வரையில் ரூ.7,23,367 கோடிகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதில் மோரிஷஸ் மூலம் 5016.4 கோடி (42%) பெறப்பட்டுள்ளது.

அன்னிய முதலீட்டால் கம்பெனிகள் நேரடியாக விவசாயிகளை அணுகிப் பொருள்களின் சுவை, தரம், அளவு, தனித்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சரக்குகளைக் கொள்முதல்செய்யவும் அதற்காக நீண்ட கால, குறுகிய கால ஒப்பந்தங்கள் செய்துகொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதற்காகப் படித்த இளைஞர்களைக் கம்பெனிகள் நியமிக்கும்.

இந்தியாவில் சராசரியாக ஆயிரம் பேருக்கு 11 சிறு கடைகள்தான் உள்ளன. இவற்றில் கடன் வியாபாரம் அதிகம் கிடையாது. அனைத்துமே ரொக்கம்தான். எனவே விற்க விற்க உடனடி லாபம்தான். 4 கோடிப்பேர் சில்லறைக் கடைகளில் வேலை செய்கிறார்கள் அல்லது உரிமையாளர்களாக உள்ளனர். 140 லட்சம் சிறு கடைகள் உள்ளன. அனைத்தும் 40 சதுர அடி முதல் 100 சதுர அடி பரப்பில் உள்ளவை. 4 சதவீதக் கடைகள் மட்டுமே 500 சதுர அடி பரப்பில் உள்ளன.

சில்லறை விற்பனைக் கடையின் மொத்த மதிப்பு ரூ.5,000 முதல் ரூ.20 லட்சம் வரை. பெரும்பாலும் வரிகளைச் செலுத்துவதில்லை. அரசு வரையறைகள் இல்லை. தரக்கட்டுப்பாடு ஏதும் கிடையாது. வாடிக்கையாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடையாது. பொருள்களை வாடிக்கையாளர்கள் கடைக்குள் சென்று பார்க்க முடியாது. கடைக்காரர் தருவதைத்தான் பார்க்க முடியும், வாங்க முடியும்.

வாடிக்கையாளர் கேட்கும் பொருள் தங்களிடம் இல்லாவிட்டால் மாற்றுப் பொருளை வியாபாரிகள் தருவார்கள். தங்களுக்கு அதிக லாபம் இல்லாதவற்றை விற்க மாட்டார்கள்.

முறையான பேக்கிங்குகள் கிடையாது. பல பொருள்களை பழைய செய்தித்தாள் காகிதத்தில் கையால் மடித்துக் கட்டித் தருவார்கள். பாதுகாப்பு வசதி, குளிர்பதன வசதி கிடையாது. கடைக்குள் பாச்சை, பல்லி, பெருச்சாளி நடமாட்டம் இருக்கும். தினசரி 4% பொருள்களைக் கெட்டுப் போய்க் குப்பையில் கொட்டுகிறார்கள். எடை அளவு, தரம் ஆகியவற்றில் வாடிக்கையாளருக்குச் சந்தேகம் வந்தாலும் ஏதும் கேட்க முடியாது.

கடைகள் சுகாதாரமாக இருப்பதில்லை. விற்பனைக்குப் பிந்தைய சேவை என்று எதுவும் கிடையாது. விற்ற பொருளைத் திரும்பப் பெறும் பழக்கமும் கிடையாது.

இந்தக் குறைகளைத்தான் குறிவைத்து வெளிநாட்டு பகாசுர நிறுவனங்கள் இந்தியாவில் விற்க முன்வந்துள்ளன.

அன்னிய நிறுவனங்களை எதிர்கொள்ள இந்தியச் சில்லறை, மொத்த வியாபாரிகள் தங்களுக்குள் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களைக் கவரும் உத்திகளை அடையாளம் காண வேண்டும். தரம், எடை, விலை ஆகியவற்றில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் விரும்பும் சரக்குகளை விரும்பும் வகைகளில் தருவதற்கு வசதிகளை ஏற்படுத்தவேண்டும்.

விவசாயிகளிடமிருந்து பொருள்களை நேரடியாகக் கொள்முதல்செய்ய வேண்டும். இடைத் தரகர்களைப் படிப்படியாக வெளியேற்ற வேண்டும். விளைபொருள்களைத்  தங்கள் பகுதிக்குக் கொண்டுவரவும் பாதுகாத்து வைக்கவும் போக்குவரத்து, கிடங்கு வசதிகளில் முதலீடு செய்ய வேண்டும். குளிர்பதனக் கிடங்குகள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

உணவு தானியங்களை வாங்கி மதிப்புகூட்டு முறையில் அவற்றின் தன்மையை மாற்ற வேண்டும். விநியோக முறையைச் சிக்கனமாகவும் விரிவாகவும் மேற்கொள்ள வேண்டும். கூட்டாகச் சேர்ந்து சூப்பர் மார்க்கெட்டுகளை நடத்த வேண்டும். உள்நாட்டில் விளையும் பொருள்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். வியாபாரத்தில் நுகர்வோர்தான் முக்கியமானவர் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.                                                                        

சர்வதேசச் சந்தை என்று வந்துவிட்டபின் அஞ்சிப் பயனில்லை. அன்னிய முதலீட்டார்களுக்கு ஈடாகத் தரமுள்ள ,சுத்தமான, வாடிக்கையாளர் விரும்புகின்ற பொருட்களை விற்பதற்கு உள்ளூர் சில்லறை வியாபாரிகள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.                                                      

Rama Samy

unread,
Nov 4, 2012, 11:30:04 PM11/4/12
to நட்புடன், Thamizhthendral, pavai...@yahoo.com, mint...@googlegroups.com, winmani wordpress

நேபாளத்தில் கால்பதிக்கும் சீனத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்: "ரா' எச்சரிக்கை

நேபாளத்தில் சீனத் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகவும், இது இந்தியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசுக்கு "ரா' உளவு நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக  மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு "ரா' எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

""நேபாள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றுக்கு சீனாவின் ஜிங்ஸிங் தொலைத்தொடர்பு கருவிகள் தயாரிப்பு நிறுவனம் உதவி வருகிறது.

அங்கு 4 உயர்தரத் தகவல் மையங்களை அமைக்கும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த மையங்கள் காத்மாண்டு, பிரத்நகர், ஹெதெளதா, போக்ரா ஆகிய நகரங்களில் அமைக்கப்படுகின்றன. இதற்கென, அத்தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ. 134 கோடியை செலவிடுகிறது.

ஜிங்ஸிங் தொலைத்தொடர்பு நிறுவனம், சீன ராணுவத்துடன் இணைந்து பணியாற்றி வரும் நிறுவனமாகும். அந்நாட்டில் வயர்லெஸ் தொழில்நுட்ப சேவையில் இந்நிறுவனம் முதன்மையாக உள்ளது.

நேபாளத்தில் தனது கருவிகளை நிறுவுவதன் மூலம், இந்தியாவின் தொலைத்தொடர்பு நடவடிக்கைகளை சீனா கண்காணிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பாக நேபாள அரசுடன் பேசி, இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களை அந்நாட்டில் செயல்பட மத்திய வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று "ரா' அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாகத் தனது நிறுவனங்களின் அறிவுசார் தகவல்களைத் திருடும் பணியில் சீனாவைச் சேர்ந்த 2 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக கடந்த மாதம் அமெரிக்க உளவுத்துறை குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்தப் புகாரைச் சீன நிறுவனங்கள் மறுத்துவிட்டன.                                 

Rama Samy

unread,
Nov 4, 2012, 8:34:45 PM11/4/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress

”எதிர்காலம் என்பது என்ன நேரிடுகிறது என்பதல்ல. எதைப் பெறுகிறீர்கள் என்பதுதான்”’ -”விப்ரோ” -அசிம் பிரேம்ஜி


‘நீங்கள் தன்னம்பிக்கையோடு இருங்கள். உங்கள் குறிக்கோளை அடையப் பாடுபடுங்கள். மிகச் சாதரணமானவர்களாலும் அசாதாரணமானவற்றைச் செய்ய முடியும்

‘எது உங்களை ஊக்குவிக்கிறதோ எது உங்களுக்குச் சவாலாய்த் தெரிகின்றதோ, அதனை உங்கள் குறிக்கோளாய்க் கொள்ளுங்கள்.

கடுமையாகவும், அறிவுக் கூர்மையோடும் உழைக்க வேண்டும். உங்கள் உழைப்பு பெரிய அளவில் உஙளுக்கு மன நிறைவை அளிப்பதாக இருக்க வேண்டும்.

இளந்தொழில் முனைவோர்கள் தங்கள் மீதெ நம்பிக்கையுடையவர்களாயிருப்பது முக்கியம். அந்த நம்பிக்கை ஒருபோதும் தளர்ந்து விடக்கூடாது. கடுமையாய் உழைக்கத் தயாராய் இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையிலும் ஒழுக்கவியலைப் ( ETHICS ) போற்றுவதும் அவசியம். அது சரியான பாதை வழியில் நடத்தும். சீரிய பண்புகளை நிலைப்படுத்திக் கொள்ள உதவும்.

புரிந்து கொள்வதற்கும், செய்வதற்கும் கடினமாக உள்ளதை ‘இது சிக்கலானது’ என்கிறோம். சிக்கல் ( COMPLEXITY ) என்பது பல உட்பகுதிகளக் கொண்ட ஒரு அமைப்பு. சிக்கலான ஒன்றுக்குள் எத்தனையோ வாய்ப்புக்கள் உள்ளடங்கியிருக்கும்.

உற்பத்தியின் தரத்தை, வெளிப்பாட்டின் தரத்தை எப்போதும் பராமரியுங்கள்.

கற்றுக் கொள்வதால் ஏற்படும் புலமை சீக்கிரமே வழக்கற்றுப் போய்விடும். எனவே, தொடர்ந்து படிப்பது, கருத்தரங்குகளில் கலந்து கொள்வது, தகவலறிவைப் புதுப்பித்துக் கொள்வது முக்கியம்.

வாய்ப்புக்களைச் சுறுசுறுப்பாய்க் கண்டறியுங்கள். அவற்றைக் கண்டிபிடித்ததும் விடாமல் இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். எதிர்காலம் என்பது என்ன நேரிடுகிறது என்பதல்ல. எதைப் பெறுகிறீர்கள் என்பதுதான்.’                    

சாதனையாளர் அசிம் பிரேம்ஜி
( விப்ரோ நிறுவனம் வென்ற கதை )

நரேந்திரன் எழுத கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

பதிப்புரிமை என்ற வார்த்தை இல்லாமல் யாம் கண்ட முதல் புத்தகம் இதுதான்.

கலைஞன் பதிப்பகம்,
19, கண்ணதாசன் சாலை
தியாகராய நகர்
சென்னை-600 017.

( வாய்ப்புக்கள் நிறைந்த புதிய பாதையில்- அசிம் பிரேம்ஜியின் தலைமைப் பன்புகள்- இளைய தலைமுறைக்கு ஓர் நற்செய்தி- தந்தையும் மகனும்- கட்டிக் காக்கும் ஆற்றல்- வியக்கத் தக்க மனிதர் )

52 பக்கங்கள், ரூபாய் 20/- ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கவேண்டிய நூல்.

Rama Samy

unread,
Nov 4, 2012, 9:55:52 PM11/4/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress

படத்தில் உள்ளது சீனத்துப் பெண் ! சொல்லப்போவது சென்னையில் நடந்த உண்மைக்கதை !





சென்னையில், பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை,  டைடல் பார்க்  என்ற பெருகி வந்த I T   அலுவலகங்கள்  தற்பொழுது தொழிற்பேட்டைகளையும் விட்டு வைக்கவில்லை. படிக்காத மேதை காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில், தொழில் துறை அமைச்சராகத் தமிழகத்தில் இருந்தவர், ஆர்.வெங்கட்ராமன். பிற்காலத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆகத் திகழ்ந்தவரான அதே ஆர்.வி. தான்.

அப்பொழுது ஏற்படுத்தப்பட்ட தொழிற்பேட்டைகளுள் ஒன்றுதான், AMBATHUR INDUSTRLIAL ESTATE சிறு தொழில்கள் வளர்ச்சிக்காகக் குறைந்த விலைக்கோ அல்லது நீண்டகாலக் குத்தகைக்கோ வழங்கப்பட்ட நிலப்பகுதிகள், இன்று காணாமற் போய்க் கொண்டிருக்கின்றன.

பெரிய பெரிய கட்டிடங்கள்  கட்டப்பட்டு  I T அலுவலங்களாக உருமாறி வருகின்றன.  மேற்படி சாலைகளுக்கும், அப்பகுதிகளுக்கும்  இரவில் சென்று விட்டால், ஒளிரும் வண்ணமயமான மின் விளக்குகளும், அவற்றில்  பிரதிபலிக்கும் கட்டிடங்களும் நாம் இருப்பது சென்னையிலா அல்லது வெளிநாட்டிலா என்ற ”திக்பிரமையை” த்தான்  ( பழைய எழுத்தாளர்கள் பயன்படுத்திய வார்த்தை இது ) ஏற்படுத்துகின்றன.

சென்னை அண்ணா சாலையில், ஸ்பென்ஸர் பிளாஸாவிற்கு எதிர்ப்புறத்தில் இருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இயங்கிய அலுவலகங்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு வந்து விட்டன.

பிரம்மாண்டமான  கட்டிடங்களில் இயங்கும் I T  அலுவலகங்களில் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற சம்பளம் கொடுக்கப்படுகின்றதா என்றால், அதுவும் இல்லை. எங்கு சம்பளம் அதிகம் கொடுக்கப்படுகிறதோ அங்கு தாவிக் கொண்டே இருக்கின்றார்கள், கணினிப் பொறியாளர்கள். கிடைத்தது போதும் என்று திருப்தி அடைந்து அடங்கிப்போய்விடுவோரும் உண்டு.


முன்பெல்லாம்  தொழிற்சாலை வாயில்களில் நின்று வேடிக்கை பார்த்தால், உள்ளே வேலைக்குப் போகும், திரும்பி வரும் ஊழியர்களின் உடம்பு முழுவதையும் தடவிப் பார்த்த பின்பும், உணவுப் பாத்திரங்களைத் திறந்து பார்த்தபின்புமே அனுமதிக்கப்படும் காட்சிகளைக் கண்டு வருந்த நேரும். எந்தத் தொழிற்சங்கமும் இதற்கு எதிராகக் குரலெழுப்பியதாக நினைவில் இல்லை. இத்தகைய செயல்கள் நடைமுறைப்பழக்கமாகிவிட்டன

இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் புதிய I.T. நிறுவனங்கள் என்ன செய்கின்றன ? விசாரித்தபோது ஒரு கம்பெனியில் கிடைத்த தகவல் ! உள்ளே நுழையும்பொழுது, அடையாள அட்டையைத் தேய்த்தபின், இரண்டு சிறு பந்துகள்  இரு வேறு வண்ணங்களில் வைக்கப்பட்டிருக்குமாம். அவற்றில் ஏதேனும் ஒரு பந்தை எடுக்க வேண்டுமாம். அன்று நிர்வாகம் தீர்மானித்துள்ளபடியான வண்ணப் பந்தை எடுத்தவர்கள் முற்றிலுமாகச் சோதனைக்குட்படுத்திய பின்னரே, உள்ளே அனுமதிக்கப்படுவார்களாம்.இரு பாலருக்கும் இது பொதுவே. கார் என்றால் வெ4டி குண்டுப் பரிசோதனை நிச்சயம் உண்டு.

அண்மையில் ஒரு நிறுவனத்தில், ஒரு பெண்மணி, திடீரென்று என் பர்ஸைக் காணவில்லை; அலுவலகத்திற்குள்தான் தொலந்து போய் விட்டது. கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று சத்தியம் செய்திட, அலுவலகமே களேபரமானது. ( பழைய எழுத்தாளர்கள் பயன்படுத்திய வார்த்தை.)

 எந்த வகையிலும் அந்தப் பெண்மணியை யாராலும் சமாதானப்படுத்த இயலவில்லை. பார்த்தார், உயர் அதிகாரி. எல்லோரையும் பெரிய ஹாலுக்கு வரவழைத்தார். அலுவலகத்திற்குள் நுழைந்ததிலிருந்து, திரும்பும் வரை புகைப்பபடமெட்டிருக்கும் அனைவரது அனைத்துச் செயல்களையும் உள்ளடக்கியவற்றைத் திரைப்படமாகக் காட்டினார். எந்தப் பயனும் ஏற்படவில்லை.

அப்பொழுது அந்த அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பு பிரச்சினையத் தீர்த்து வைத்தது.  தொலந்து போன பர்ஸைப்பற்றியும், வந்து வாங்கிக் கொள்ள வேண்டிய இடத்தையும் பற்றிய தகவலைப் பற்றிய செய்தியையும் கூறியது.

புகார் கொடுத்த பெண்மணியின் முகத்தில் அசடு வழிந்ததைச் சொல்லவும் வேண்டுமோ ?

Rama Samy

unread,
Nov 4, 2012, 10:56:02 PM11/4/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress

மனைவியால் மனம் மாறிய மரண வியாபாரி நோபல் எழுதிய , சொத்தில் 94 % விகிதமே நோபல் பரிசுக்கான களஞ்சியம் !


ஆல்பிரட் நோபல் 1833ஆம் ஆண்டு அக்டோபர் 21இல் ஸ்வீடன் நாட்டுத் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பொறியாளர் குடும்பத்தில் பிறந்தார். இவர் மிகச் சிறந்த வேதியியலாளர், பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர்.

இவர் 1894இல் இரும்பு எஃகு ஆலை ஒன்றை வாங்கி அதைப் போர்க்கருவிகள் தயாரிக்கப் பயன்படுத்தினார். பாலிசைட், கார்டைட் என்ற புகையற்ற வெடிபொருள்களைக் கண்டுபிடித்தார். இதில் கார்டைட் குறிப்பிடத்தக்கது. இதற்காகக் காப்புரிமையும் பெற்றார். இப்படி மொத்தம் 355 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி  பெரும் கோடீஸ்வரரானார்.

 இவருடைய கண்டுபிடிப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது "டைனமைட்' என்ற வெடிமருந்துதான். ஆரம்ப காலத்தில் மிகப்பெரிய பாறைகளை  உடைக்க, பழைய கட்டடங்களை இடிக்க மட்டுமே இது பயன்படுத்தப்பட்டது. நாள்கள் செல்லச்செல்ல இதையே வெடிகுண்டுகள் தயாரிக்கவும் பயன்படுத்தினார்கள்.

 நோபலின் கண்டுபிடிப்பால் அவருக்கு ஏராளமாகப் பணம் கிடைத்தாலும் அப்பாவி மனித உயிர்கள் ஆயிரக்கணக்கில் பலியாகின்றனவே என்று அவருடைய மனைவி பிரித்தான்ஸ்கி மிகவும் கவலையுற்றார்.

எனவே, நோபல் மீதே அவருக்கு வெறுப்பு வந்தது. அடிக்கடி அவருடன் சண்டையிட்டார். இந்த டைனமைட் தயாரிப்பைத் தடுத்து நிறுத்துங்கள் என்றார். நோபல் அவருடைய பேச்சைக் கேட்கவில்லை. இதனால் அவர் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்தார்.

கணவரை விட்டுப் பிரிந்த நிலையிலும் டைனமைட் உற்பத்தியை நிறுத்துமாறு  அவருக்குத் தினமும் கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார். அப்போதும் நோபல் நிறுத்தவில்லை. ஒரு நாள் நோபலின் சகோதரர் விபத்தில் இறந்தார்.

பத்திரிகைகள் ஆல்பிரட் நோபல்தான் இறந்துவிட்டார் என்று தவறாகப் புரிந்துகொண்டு செய்திகளை வெளியிட்டன. ஒரு பத்திரிகை "மரண வியாபாரி' நோபல் இறந்தார் என்றே தலைப்பிட்டிருந்தது.

 வேறொரு நகரத்தில் அந்த நேரத்தில் இருந்த நோபல் இச் செய்தியைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். தன்னுடைய மனைவியின் வருத்தம், மன்றாட்டு, கோபம் அனைத்தும் எவ்வளவு உண்மையானது என்று உணர்ந்தார். ஆக்கப் பணிகளுக்காகப் பயன்பட வேண்டிய நம்முடைய கண்டுபிடிப்பு அழிவுக்குப் பயன்படுகிறதே என்று வேதனைப்பட்டார்.

 இனி, மனித குலத்துக்கு மிகுந்த பயனும் மகிழ்ச்சியும் அளிக்கும் வண்ணம் கண்டுபிடிப்பில் ஈடுபடுகிறவர்களுக்கும் இலக்கியக் கர்த்தாக்களுக்கும் பொதுச் சேவகர்களுக்கும் விருதுகளையும் ஊக்குவிப்புகளையும் வழங்க தன்னுடைய சொத்துகளைப் பயன்படுத்துவது என்று முடிவெடுத்தார்.

இதற்காக தன்னுடைய சொத்தில் 94 சதவீதத்தைச் செலவிட 1895 நவம்பர் 27-ல் உயில் எழுதிக் கையெழுத்திட்டார்.

 அவருடைய இறப்புக்குப் பிறகு முதல்முறையாக 1901இல் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளிலும் உலக அமைதிக்காகப் பாடுபட்டவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. 1969இல் இருந்து பொருளாதார அறிஞர்களுக்கும் விருது வழங்கப்படுகிறது.

இந்தியாவிலிருந்து இதுவரை 10 பேர் நோபல் விருதுகளைப் பெற்றுள்ளனர். அவர்களில் இந்த நாட்டில் வசித்த வெளிநாட்டவர்களும் அடங்குவர். விவரம் வருமாறு:

1902 ரொனால்ட் ரோஸ், மருத்துவம், இந்தியாவில் பிறந்த வெளிநாட்டவர்.

1907 ருட்யார்ட் கிப்ளிங், இலக்கியம், இந்தியாவில் பிறந்த வெளிநாட்டவர்.

1913 ரவீந்திரநாத் தாகூர், இலக்கியம், இந்தியர்.

1930 சர். சி.வி. ராமன், இயற்பியல், இந்தியர்.

1968 ஹர்கோவிந்த கொரானா, மருத்துவம், இந்திய வம்சாவளியினர்.

1979 அன்னை தெரசா, அமைதி, இந்தியர்.

1983 எஸ். சந்திரசேகர், இயற்பியல், அமெரிக்கா வாழ் இந்தியர்.

1998 அமார்த்திய சென், பொருளாதாரம், இந்தியர்.

2001 வி.எஸ். நைய்பால், இலக்கியம்,  இந்திய வம்சாவளியினர்.

2009 வி. ராமகிருஷ்ணன், வேதியியல், அமெரிக்கா வாழ் இந்தியர்.

 நம் நாடு விடுதலை பெறுவதற்கு முன் (1901 - 1930) 30 ஆண்டுகளில் 4 நோபல் விருதுகளைப் பெற்றுள்ளோம்.

 1930 முதல் 2012 வரை 82 ஆண்டுகளில் 6 நோபல் விருதுகளைத்தான் பெற்றுள்ளோம். இந்த எண்ணிக்கையை எவ்வாறு உயர்த்துவது?  ஆர்வமுள்ள மாணவர்களை அடையாளம்கண்டு ஊக்குவித் தால் இது சாத்தியம்.

 இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் குர்டன், ஜப்பானைச் சேர்ந்த சின்ய யமனகா ஆகிய இருவருக்கு "ஸ்டெம் செல்' ஆராய்ச்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஜான் குர்டன் பள்ளியில் படித்தபோது உயிரியல் பாடத்தில், 250 மாணவர்களில் அவர்தான் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வாங்குவாராம். ஆசிரியர்கள் கேட்கும்போது, ""நான் பெரிய ஆராய்ச்சியாளனாக வருவேன்'' என்று நம்பிக்கையோடு பதில் அளிப்பாராம். ""மக்குப் பையனுக்கு ஆசையைப் பாருங்கள்'' என்று எல்லோரும் கேலி செய்வார்களாம்.

 ஜான் குர்டன் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஸ்டெம் செல் குளோனிங் ஆராய்ச்சியின் தந்தையாக இப்போது விளங்குகிறார்.                                                                                                      


நன்றி :- தினமணி, கருத்துக்களம், முனைவர், ச.வின்சென்ட் இலயோலா கல்லூரி, சென்னை, 05-11-2012.

Rama Samy

unread,
Nov 5, 2012, 4:40:44 AM11/5/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, winmani wordpress

டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள் அவுட் : முக்கிய குற்றாவளி கைது !

 டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ஒடிசாவைச் சேர்ந்த அச்சக ஊழியர் ஒருவரை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

சென்னையை சேர்ந்த தியாகராஜன், செந்தில்குமார், ஸ்ரீதர்ராஜ் (எ) பாலன் ஆகியோர் மூலம்தான் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வினாத்தாள் வெளியானது என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஒடிசா புவனேஸ்வரில் ரயில்வே துறையில் பணியாற்றிய ஆனந்தராவ் கைது செய்யப்பட்டப்பின் இவ்வழக்கு விசாரணை மந்தகதியிலேயே இருந்தது.

 இதைத் தொடர்ந்து இவ்வழக்கு ஈரோடு நகர காவல் நிலையத்தில் இருந்து சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

ஒடிசா வழக்கறிஞர் கைது

இந்நிலையில், நவம்பர் ஒன்றாம் தேதியன்று ஒடிசாவை சேர்ந்த வழக்கறிஞர் ககூன் சேனாதி பிகாரி (49) என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், ஒடிசாவில் உள்ள ஒரு அச்சகத்தில் பணியாற்றி வந்த புவனேஸ்வரைச் சேர்ந்த கோத்ரா மோகன் மந்த்ராவிடம் இருந்து ககூன் கேள்வித்தாளைப் பெற்றதும், தனது நண்பரான ஆனந்தராவ் மூலம் தமிழகத்தில் கேள்வித்தாளைப் பல லட்சத்துக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பதுங்கி இருந்த கோத்ரா மோகன் மந்த்ராவை ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்து பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகப் போலீஸார் தெரிவித்தனர்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற்றது.

அப்போது ஈரோட்டில் உள்ள ஓர் மையத்தில் கேள்வித்தாளின் நகலை கையில் வைத்திருந்ததாகப் பவானியைச் சேர்ந்த தனக்கொடி, அவரது கணவர் செந்தில், கல்லூரிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட 15 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.                                                           

நன்றி :- ஒன் இந்தியா, 05-11-2012

Rama Samy

unread,
Nov 5, 2012, 5:05:58 AM11/5/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com

மூளை இல்லாத அதிசய குழந்தை மூன்று வருடத்திற்குப் பின் திடீர் மரணம் !


கொலரடோ: அமெரிக்காவின் கொலரோடா நகரில் வசித்த ஒரு தம்பதியருக்குப் பிறந்த மூளை இல்லாத அதிசயச் சிறுவன் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் சனிக்கிழமை உயிரிழந்தான்.

யாராவது ஏதாவது தவறு செய்தால் உனக்கு மூளை இருக்கா இல்லையா என்று கேட்பது வழக்கம். ஆனால் அதிசயமாக மூளை இல்லாத குழந்தை ஒன்று பிறந்து அது மூன்றாண்டுகள் வரை உயிர் வாழ்ந்துள்ளது.

கொலரடோவைச் சேர்ந்த ஷீனாவிற்குக் கடந்த 2008 ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. தலைப் பகுதியில் மூளை என்ற பாகமே இல்லாமல் இருந்தது.

பிறந்து சில மணிநேரங்கள் மட்டுமே உயிரோடு இருக்கும் என்று மருத்துவர்கள் கூறினாலும் அந்த கூற்றினை உடைத்துவிட்டு உலகில் வெற்றிகரமாகத் தனது பயணத்தைத் தொடங்கியது அந்த அதிசயக் குழந்தை. அவனுக்கு நிகோலஸ் கோக் என்று பெயர்சூட்டி மகிழ்ந்தனர் அவனது பெற்றோர்.

அவனுக்கு எவ்வித மருத்துவ உபகரணங்களும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் அவனது சீரான உடல் இயக்கங்களுக்காக உணவை விட அதிகமாக ஏராளமான மாத்திரைகள் அவனுக்குக் கொடுக்கப்பட்டன.

மூன்று ஆண்டுகள் வரை உயிர்வாழ்ந்த சிறுவன் நிக்கோலஸ் பற்றி அனைவரும் வியந்து பாராட்டினர். ஃபேஸ்புக்கில் கூட அவனது போட்டோக்கள் வெளியிடப்பட்டன.

அந்த அதிசயச் சிறுவன் நிக்கோலஸ் சனிக்கிழமையன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தான். உலகில் பிறக்கும் பத்தாயிரம் குழந்தைகளில் ஒருவர் மூளை இல்லாமல் பிறக்கின்றனர் என்று மருத்துவ உலகம் குறிப்பிட்டுள்ளது.

இத்தகைய குறைபாடுள்ள குழந்தைகள் சில நிமிடங்களோ, சில மணிநேரமோதான் உயிர்வாழ்வார்கள். அதையும் தாண்டி மூன்று ஆண்கள் வரை உயிர்வாழ்ந்துள்ளான் நிக்.

மூளையே இல்லாமல் பிறந்தாலும் அவனுடன் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமானது. அன்பு என்றால் என்னவென்பதையும், வாழ்க்கை என்றால் என்ன என்பதையும் நிக்கோலஸ் கற்றுக் கொடுத்தான் என்று அவனது பாட்டி குறிப்பிட்டுள்ளார்.                                                                                                                  


நன்றி :- ஒன் இந்தியா, 05-11-2012
Posted 2 minutes ago by Rama Samy

Rama Samy

unread,
Nov 5, 2012, 8:36:37 AM11/5/12
to நட்புடன், Thamizhthendral, mint...@googlegroups.com, pavai...@yahoo.com, T Parameswari, winmani wordpress, vallamai editor

எல்லாமே திருவருளால்தான் நிகழும் !- தெய்வத்திரு. திருமுருக. கிருபானந்த வாரியார் சுவாமிகள் !

திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் 19-ஆம் ஆண்டு நினைந்து,
அவர்தம் குருவருளைப் பெற்றிடச் சிந்திப்போமாக !        06-11-2012



நாம் என்ணிய எண்ணப்படி எதனையும் செய்துவிட முடியாது. எல்லாம் இறைவன் ஆணையின் வண்ணமே நடக்கும்.

   அவையே தானே யாயிரு வினையில்
   போக்கு வரவு புரிய ஆணையின்
   நீக்கம் இன்றி நிற்கும் அன்றே. - சிவஞான போதம்.

மனிதன் எண்ணியதை எண்ணியவாறு முடிப்பானானால் கீழ் மேலிராது. வாயு தேவன் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாமல் வாடியதும், அக்கினி தேவன் அத்துரும்பை எரிக்க முடியாது இளைத்ததும், இந்திரன் அசைவற்று அலைக்கணுற்றதும் கேநோபநிடத்தால் புலனாகிறதன்றோ ? 

எல்லாந் தன்னாலேயே ஆகின்றன என்று எண்ணி இறுமாந்து சிலர் திரிகின்றனர். இதனை முடிக்க வேண்டும், இதனை ஈட்ட வேண்டும் என்று பலகாலும் முயன்று நிற்பினும் அவை முடியாமற் போகின்றன.

சில விஷயங்களில் முயற்சியின்றி வாளா இருப்பினும் அவை வந்து முன்னே நிற்கின்றன. தேடிக்கொண்டு போகும் பொருள் கிடையாமல் திகைப்பதும், தேடாத பொருள் தெருவில் வந்து கிடைப்பதும் கண்கூடு.

      வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
      தொகுத்தார்க்குந் துய்த்த லரிது.

என்றார் பொய்யிற் புலவர். ஆதலினால், “இதை இப்படி முடிக்க வேண்டும், அதை அப்படி முடிக்க வேண்டும்” என்று மனக்கோட்டை கட்டக் கூடாது. திருவருளை முன்னிட்டு எதனையுஞ் செய்தல் வேண்டும். இறைவனுடைய இன்னருள் துணை செய்து முடித்துக் கொடுக்கும். இவ்வுண்மையை அடியிற்காணும் எடுத்துக்காட்டால் கண்டு தெளிமின்.                                        

கரிய நிறமும், பெரிய திறமும், திரண்ட புயமும், இருண்ட மனமும், மருண்ட சினமும் உடைய  ஒரு வேடன் இருந்தான். அவ்வேடன் ஒரு நாள் காட்டை வளைது வேஐயாடி மத யானையைக் கண்டான். அதனைக் கணையால் எய்திக் கொள்ளும் பொருட்டு ஒரு புற்றில் மறைந்து நின்றான். யானை அருகில் வந்ததும் கணை தொடுத்துக் கொன்றான். யானை வீழ்ந்து மாய்ந்தது. அதுசமயம், அவன் காலடியில் மிதியுற்று நொந்த ஒரு  நாகம் சீறி அவனைக் கடித்தது. அதனால் வருந்திய வேடன் வெகுண்டு அப்பாம்பையும் ஒரு பாணத்தால் கொன்றான். சிறிது நேரத்திற்குள் விடந்தலைக்கேறி வேடன் இறந்தான்.                                                                                                                     


 இங்கனம் யானை, வேடன், பாம்பு மூன்றும் இறந்து கிடந்தன. அங்கு நரி ஒன்று வந்து சேர்ந்தது. பசியால் வாடி இரையை நாடி வந்த அந்த நரி, இறந்து கிடந்த மூன்று பிணங்களையும் கண்டு “நமக்கு நல்ல உணவு கிடைத்தது” என்று உள்ளம் மகிழ்ந்தது. “ஆகா என்ன அதிர்ஷ்டம்? என்னைப் போல் கொடுத்து வைத்தவர்கள் யார் ? உலகில் ஒருவனுக்கு ஏதாவது ஒரு சிறந்த பொருள் கிடைத்தால், ’நரி முகத்தில் விழித்தனையோ’ என்பர். இப்போது நாம் யார் முகத்தில் விழித்தோம் என்று கூறுவது ? எவ்வளவு பெரிய பாக்கியங் கிடைத்தது? என் வயிறு செய்த புண்ணியந்தான் யாதோ?” என்று எண்ணி அளப்பற்ற ஆனந்தமுற்ரு ஆடிப் பாடியது.                                                        

பின்னர் நரி அம்மூன்று பொருள்களையுஞ் சுற்றிச் சுற்றிப் பார்த்து “இந்த யானை 6 மாதங்களுக்கும், இம்மனிதன் 3 நாட்களுக்கும், இந்த நாகம் 2 நாட்களுக்கும் உணவாகும்க். எனவே, 185 நாட்களுக்கு உணவைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை. வெகு சுகமாகத் தின்று கொண்டிருக்கலாம். ஆனால், இந்த வேடன் கையில் உள்ள வில்லின் நாணை முதலில் கடித்துத் தின்போம். அது ஒரு பாதி வயிற்றுக்கு உணவாகும். அதைத்தான் ஏன் விட்டு விட வேண்டும் ?” என்று எண்ணியது. அதற்கிருந்த மகிழ்ச்சிக்கு வரம்பே இல்லை. ஒரு குதி குதித்து ஓடி வேடன் கையிலிருந்த வில்லின் நாணைக் கடித்தது. கடித்தலும் வில்முனை விரைவில் நிமிர நரியின் தலை நறுக்குண்டு விழுந்தது. நரி தான் எண்ணிய எண்ணமெல்லாம் அடிமாண்டு இறந்தது.

ஆதலினால், நமது எண்ணம் எண்ணியபடியே ஈடேற மாட்டாது. எல்லாம் திருவருளாலே நிகழும்.

    கரியொரு திங்க ளாறும் கானவன் மூன்று நாளும்
    இரிதலைப் புற்று நாகம் இரண்டுநாள் இரையாமென்றே
    விரிதலை வேடன் கையின் விற்குதை நரம்பைக் கவ்வி
    நரியனார் பட்ட பாடு நாளைநாம் படவே நிற்போம்.                                       




வாரியாரின் சிறுகதைகள்,

வெளியீடு
குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்
107, சிங்கண்ண செட்டித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600 002.
Reply all
Reply to author
Forward
0 new messages