ராதா கல்யாண வைபோகமே (ப்ரம்மவைவர்த்த புராணத்தில் உள்ளபடி)

476 views
Skip to first unread message

venkatachalam Dotthathri

unread,
Dec 1, 2010, 6:36:53 AM12/1/10
to mint...@googlegroups.com

 


 

 

ஓம்.

 ஸ்ரீ ராதா சரிதம் 

ஸீதா கல்யாணம், ருக்மணி கல்யாணம் விஷயமாய் ப்ரவசனம் ஹரிகதை நடப்பதைப் போன்றே ராதா கல்யாணம் ப்ரவசனமோ ஹரிகதையோ நடப்பதில்லை. ஆகையால் ராதா கல்யாண கதை பாகம் தெரிந்தவர்கள் சிலரே. பஜனை பத்ததி ராதா கல்யாணம் எழுதுவதற்கு முன்பு ராதா கல்யாண கதா பாகத்தை எழுதுவோம்.

    பஜனைகளில்  ஸ்ரீ ராதா கல்யாணம் வருஷா வருஷம் கொண்டாடுகிறோம். இவைகளின் எண்ணிக்கை  கணக்கில் அடங்கா. கால நியமுமில்லை. பன்னீரண்டு மாதங்களிலும்  நடக்கின்றன. ஸீதா கல்யாணமோ,ருக்மணி கல்யாணமோ ராதா கல்யாணத்தை விட எண்ணிக்கையில் குறைவு. காலவரம்பும் இருகிறது. ராதா கிருஷ்ணன் என்ற பெயர் பாரதம் எங்கும் பரவி யிருக்கிறது. வட இந்தியாவில் ராதா கிருஷ்ண மந்திர் இல்லாத ஊரே கிடையாது. இவ்விதம் ராதைக்கு  கியாதி இருந்தும், ஸ்ரீமத் பாகவதத்திலோ, பாரதத்திலோ ராதா என்ற வார்த்தையே இல்லை ஏன்?  ராதா விஷயமாக விரிவாகத் தனி புராணமே இருப்பதால், ஸ்ரீ வ்யாச பகவான் ராதையைப் பற்றி  பாகவதத்திலோ, பாரதத்திலோ சொல்லவில்லை என்று தோன்றுகிறது.  ராதையைப் பற்றி ஸ்ரீ ப்ரம்மவைவர்த்த புராணத்தில் ஸ்ரீ வ்யாசர் விரிவாகச் சொல்லியிருக்கிறார். மேலும் ஸ்ரீ தேவி பாகவதம், கர்க ஸம்ஹிதை, பாத்ம புராணம், பிரம்மாண்ட புராணம் முதலியவைகளிலும் ராதையின் பிரபாவம் சொல்லப்பட்டிருக்கிறது.  ப்ரம்மவைவர்த்த புராணத்தில் உள்ளபடி இங்கு ராதா சரித்திரம் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. 


    கீழுலகங்கள் ஏழு; மேலுலகங்கள் ஏழு; இந்த ஈரேழு பதினான்கு  லோகங்களும் சேர்ந்து ப்ரம்மாண்டம்.   பிர்ம்மாண்டத்திற்கு ஊர்த்துவ பாகத்தில் ‘ஸத்ய லோகம்’ உள்ளது.

‘வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணனின் வாசஸ்தலம். வைகுண்டத்திற்கும்  ஊர்த்தவ பாகத்தில் விளங்குவது விளங்குவது கோலோகம். இதற்கு அதிஷ்டான தேவன் ஸ்ரீ கிருஷ்ணன், ஸ்ரீ கிருஷ்ணன், ஸ்ரீ ராதா தேவியுடன் வீற்றிருக்கிறார். வைகுண்டபதி வேறல்ல, கோலோகாதிபதி இருவரும் ஒருவரே.

      தத்ராஹம் த்விபுஜ: கோபீபி

      ராதயா ஸஹ (ப்ரம்ம வைவர்தம்).

ஒரு சமயம் கோலோகத்தில் ராஸ மண்டலத்தில் ஸ்ரீ க்ருஷ்ணன் ராதையுடன் லீலைகள் புரிந்து கொண்டிருந்தபோது, ராதை தன் பரத்வத்தை மறந்தாள். உடனே பகவான் மறைந்தார். ‘விரஜா’ என்ற மற்றொரு கோபியுடன் காலம் கழித்தார். ராதை தன் தோழிகளின் மூலம் கிருஷ்ணன் இருப்பிடம் அறிந்து விரஜாவின் வீடு வந்தாள். விரஜாவும் க்ருஷ்ணனும் மறைந்தனர். ராதை தன் வீடு வந்து துக்கம் தாளாமல் படுத்திருந்தாள். அது ஸமயம் க்ருஷ்ணன் ராதையைத் தேடி அங்கு வர, ராதை கோபத்துடன் க்ருஷ்ணனைத் தாறுமாறாய்ப் பேசி வெளியேறச் செய்தாள். ராதையின் கடுமையான  வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதாமா (க்ருஷ்ணனின் பரிவாரத்தில் ஒருவன்) ராதையைப் பார்த்து “தாயே! தாங்கள்  ஹரியிடம் இவ்விதம் நடந்து கொள்ளலாமா? உங்களுடைய பதவிக்கு அவர் தானே காரணம்” என்று சொல்ல, ராதையும் கோபம் கொண்டு ஸ்ரீதாமாவைப் பார்த்து, நீ அஸுரனாகக் கடவாய்; கோலோகத்தை விட்டு வெளிச் செல்வாய்”  எனச் சபித்தாள். ஸ்ரீ தாமாவும் ராதைக்கு பிரதி சாபம்கொடுத்தான்.

      மனுஷ்ய இவ கோபஸ்தே, தஸ்மாத் த்வம் மானுஷ்பவ மூடராயான பத்னீம் த்வாம், வக்ஷ்யந்தி தரணீதலே கோகுலே  ப்ராப்ய தம் க்ருஷ்ணம், விஹ்ருத்ய வஸகானனே

பவிதா தே வர்ஷசதம், விச்சேதோ ஹரிணா ஸஹ புன: ப்ராப்ய தம் ஈசம் ச, கோலோகம் ஆக மிஷ்யஸி.


நீ மனிதனைப்போல் கோபமடைந்ததால் நீயும் மானுஷியாகக் கடவாய், ப்ருந்தாவனத்தில் ‘ராயனன்’ என்ற வைச்யனுடைய பத்னீ என்று உன்னைச் சொல்லுவார்கள். பிறகு, கோகுலத்தில் கிருஷ்ணனை அடைந்து, ஸுகித்து, பல வருஷங்கள் பிரிந்திருந்து மறுபடி கூடிக் கடைசியில் கோலோகம் திரும்புவாய் என்று சொன்னான். பிறகு விஷயங்களை அறிந்து ஸ்ரீ க்ருஷ்ணன் ராதையைப் பார்த்து,

    “வ்ருஷபானு க்ருஹம் கச்ச க்ஷிப்ரம் த்வமபி ராதிகே

த்வாமஹம் பால ரூபேண, க்ருஹ்ணாமி கமலானனே  ”

“நீ வ்ருஷபானுவின் புத்ரியாய் ஜனிப்பாய்,நான் அங்குவந்து பால ரூபனாய் உன்னை ஏற்றுக் கொள்கிறேன்” என்றார். ராதையும் அவ்விதமே வ்ருஷபானு கலாவதி தம்பதிகளுக்கு புத்ரியாய் ஜனித்து, ஸ்ரீ க்ருஷ்ணனின் அனுக்ரஹத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள்.

”ராதா ஜகாம தரணீம் வாராஹே ஹரிணா ஸஹ வ்ருஷபானுக்ருஹே ஜன்ம லேபே கோகுலே முனே”

வ்ருஷபானு புத்ரி ராதையின் அவதார தினம் மார்கழி மாதம், சுக்லபக்ஷ அஷ்டமி என்று  பாத்ம புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

     பிறகு,ஸ்ரீ க்ருஷ்ணனும் மதுராபுரியில் வஸுதேவ தேவகி தனயனாய்ப் பிறந்து, பிறந்தவுடனேயே கோகுலம் சேர்க்கப்பட்டு, நதகோபன் யசோதா தம்பதிகளால் வளர்க்கப் பட்டு, பால லீலைகள் பல செய்த விவரம் ப்ரஹ்ம வைவர்த்த புராணம் ஸ்ரீ க்ருஷ்ணா ஜன்ம காண்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.


      ராதைக்கு வயது பன்னீரண்டாக இருந்தபோது அவளை ‘ராயனன்’என்ற ஒரு வைச்யனுக்கு விவாஹம் செய்து கொடுப்பதாய் வ்ருஷபானு நிச்சயம்செய்தார்  இதை அறிந்த ராதை தன் யோக சக்தியால் தன் ஸ்தானத்தில் தன் சாயையை வைத்துவிட்டு மறந்தாள். ராயனன் விவாஹம் செய்துகொண்டது  ராதையை அல்ல. ராதையின் சாயையை. சில வருஷங்களுக்குப்  பிறகு ராதை புண்யமான ரமணீயமான ப்ருந்தாவனத்தில் நிர்ஜனமான வனத்தில் ப்ரம்மாவின் மூலமாக க்ருஷ்ணனை மணந்தாள்.

க்ருஷ்ணேன ஸஹ ராதாயா:

புண்யே ப்ருந்தாவனே வனே விவாஹம் காரயமாஸ விதினா, ஜகதாம்பதி:

(ப்ரமஹ்மவைவர்தம், ப்ரக்ருதி காண்டம்)

ஒரு ஸமயம் நந்த கோபன் ஸ்ரீ க்ருஷ்ணனுடன் ப்ருந்தாவனம் சென்று, மாடுகன்றுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். ஒரு மரத்தடியில் படுத்துக்கொண்டு பால க்ருஷ்ணனை மார்பின் மேல் போட்டுக் கொண்டு லாலனம் செய்து கொண்டிருந்தார். திடீரென மேகம் மிகுந்து வானம் இருண்டது. சூரியன் அஸ்தமித்தது. இடியின் சப்தமும் காற்றின் வேகமும்,மழையின் கடுமையும் நந்தகோபனைப் பயப்படும்படி செய்தன. நான் எவ்விதம் இக்குழந்தைய வீடு சேர்ப்பேன் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருக்கும் போது க்ருஷ்ணன் அழுதான். பயத்தால் பிதாவின் கழுத்தைக் கெட்டியாகக் கட்டிக் கொண்டான். இப்படி இருக்கும் பொழுது பகவத் ஸங்கல்பத்தால் ராதை அவ்விடம் வந்து சேர்ந்தாள். நிர்ஜனமான அந்தப் பிரதேசத்தில் அந்த சமயம் ராதையைப் பார்த்த நந்தகோபன் க்ஷணம் ஆச்சரியம் அடைந்தான். பிறகு,தெளிந்து நமஸ்கரித்து,

ஜானாமித்வாம் கர்கமுகாத்பத்மாதி சுப்ரியாம்ஹரே: ஜானாமீமம் மஹா விஷ்ணோ, பரம் நிர்குணமச்யுதம் ததாபிமோஹிதோஹம் ச , மானவோ விஷ்ணுமாயயா க்ருஹாண ப்ராணநாதம் ச கச்ச பத்ரேயதாஸுகம் பச்சாத் தாஸ்யஸிமத்புத்ரம் க்ருத்வா பூர்ணம் மனோரதம் இத்யுக்த்வா ப்ரததௌ தஸ்யை ருதந்தம் பாலகம்பியா||

”தாயே! தாங்கள் ஸாக்ஷாத் லக்ஷ்மீ என்றும் இந்த பாலகன் ஸ்ரீமன் நாராயணன் என்றும் கர்க ரிஷியின்  வாக்கால் அறிவேன். எனினும் விஷ்ணு மாயையால் மதி மயங்கினேன். தாங்கள் பிராணநாதனைப் பெற்றுக் கொண்டு,மனோ ரதங்களைப் பூர்த்தி செய்து கொண்டு, பிறகு என்னிடம்கொடுப்பீர்களாக” என்று சொல்லி பயத்தால் அழுதுக்கொண்டிருந்த பாலகனை ராதையிடம் கொடுத்தார். ராதை மந்தஹாஸத்துடன் குழந்தையைப் பெற்றுக்கொண்டாள். குழந்தையும் அழுகையை நிறுத்தியது. ராதை நந்தனிடம் “பல ஜன்ம பலத்தால் நீ என்னைப் பார்த்தாய். கர்கருடைய வாக்கால் நீ எல்லாம் அறிவாய். எங்களுடைய கோப்யமான(ரஹஸ்யமான) சரித்திரத்தை யாரிடமும் சொல்லக் கூடாது” எனக் கூறி, ”வேண்டும் வரமளிப்பேன் கேட்பபாய் என, நந்தன் “ உங்கள் இருவரிடமும் பாத பக்தியை அருளுங்கள். மற்றெதிலும் எனக்கு ஆசையில்லை.” என்று வேண்டினான்.

”யுவயோ சரணேபக்திம் தேஹி நான்யத்ர மேஸ்ப்ருஹா”

”அவ்விதமே அளித்தோம். இந்த மனித ஜன்மா முடிந்தவுடன் கோலோகம் வருவாய்” என அனுக்கிரஹம் செய்துவிட்டு ராதை குழந்தையை எடுத்துச் சென்றாள். குழந்தையை மார்பில் அணைத்துக்கொண்டு அடிக்கடி முத்தமிட்டாள். வழியில் கோலோகம் ராஸ மண்டலம்  ஞாபகம் வந்தது. உட்ன், அங்கே விதம் விதமாக அலங்கரிக்கப்பட்ட ரத்ன மண்டபத்தைப் பார்த்தாள். உள்ளே சென்றாள். தாம்பூலம், பக்ஷ்யம் முதலியவற்றைக் கண்டாள்.  அலக்கரிக்கப்பட்ட மஞ்சத்தில் புஷ்ப சயனத்தில் கோடி மன்மதாகார யௌவன புருஷனைப் பார்த்தாள். இத்தருணம் ஸ்ரீ க்ருஷ்ணன் “ராதே! கோலோக விருத்தாந்தம் ஞாபகமிருக்கிறதா? மனோ ரதத்தை இப்பொழுது பூர்த்தி செய்கிறேன் ” என்றார்.

”ராதே ஸ்மரஸி கோலோக வ்ருத்தாந்தம் ஸுரஸம்மதி அத்யபூர்ணம் கரிஷ்யாமி, ஸ்வீக்ருதம்யத் புராப்ரியே த்வன் மனோரத பூர்ணஸ்ய, ஸ்வயம் கால:ஸமாஹித:”

கையிலிருந்த பாலகிருஷ்ணனைக் காணவில்லை.

      இந்த விருத்தாந்தங்களைக ஆதாரமாகக் கொண்டு தான் ஸ்ரீஜெயதேவ காவ்யத்தில் ஆரம்ப ஸ்லோகமாகிய மங்களா சரணத்தைச் செய்திருக்கிறார். ராதா கல்யாண சூர்ணிகையும் இதையே வர்ணிக்கிறது. ( கீத  கோவிந்த காவ்யத்தில் ராதா மாதவ விவாஹத்தை ஸூசிக்கக் கூட இல்லை.) பிரிந்திருந்த ராதையையும் க்ருஷ்ணனையும் ராதையின் ஸஹி (ப்ரியஸஹி) தன் முயற்சியால் மறுபடியும் சேர்ப்பித்த விருத்தாந்தத்தைக் கவி தன் சாதுர்யமான கல்பனைகளாலும், கவனங்களாலும் வர்ணிக்கிறார். மங்கள கரமாக முடிக்கிறார். ஸ்ரீக்ருஷ்ணன் ராதையைக் கோலோக வ்ருத்தாந்தத்தை ஞாபகப் ப்டுத்திக்கொண்டிருக்கும் பொழுதே பரமாத்மாவின் ஸங்கல்பத்தால் ப்ரம்மதேவன் அங்கு வந்து சேர்ந்தார்.. ராதையையும், கிருஷ்ணனையும் வணங்கினார்.

“ஹே மாத:! த்வத் பாதாம்புஜம் த்ருஷ்டம் க்ருஷ்ண ப்ரஸாதத:”

பகவானின் ப்ரேரணையால் ப்ரஹ்ம தேவன் ராதைக்கும் க்ருஷ்ணனுக்கும் அக்னிசாக்ஷியாக விவாஹம் செய்துவைத்தார். ப்ரம்மா அக்னி மூட்டி ஹோமம் செய்தார். படுத்திருந்த க்ருஷ்ணன் எழுந்துவந்து அக்னியின் முன் உட்கார்ந்து, விதிப்படி ஹோமம் செய்து, ராதையின் கையைப் பிடித்துக் கொண்டு பாணிக்ரஹணம், அம்மி மிதித்து (ஸப்தபதி) அக்னி வலம் வந்தார். க்ருஷ்ணனைக் கொண்டு ராதைக்கும், ராதையைகொண்டு க்ருஷ்ணனுக்கும் பாரிஜாத மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை அணிவித்தார். க்ருஷ்ணனுக்கு இடது பக்கம் ராதையை உட்காரவைத்து லாஜ் ஹோமம் செய்வித்தார். எவ்விதம் தகப்பன் தன் பெண்ணுக்கு கல்யாணம் செய்வித்து ஆனந்திப்பானோ, அவ்விதம் ப்ரம்மா ராதாக்ருஷ்ணர்களுக்கு விவாஹம் செய்வித்து  ஆனந்தம் அடைந்தார். பக்தியுடன் ஹரியின் முன் நின்றார்.

      “தஸ்யா ஹஸ்தம் ச ஸ்ரீக்ருஷ்ணம் க்ராஹயாமாஸ தம் விதி: பாரிஜாதப்ரஸுனானாம் மாலாம் ஜானுவிலம்பிதாம் ஸ்ரீக்ருஷ்ணஸ்ய களேப்ரம்மா ராதாத்வாரா ததௌமுதா ராதாகளே ஹரித்வாரா ததௌமாலாம் மனோஹராம் தத்வாம பார்சவே ராதாம் ச ஸஸ்மிதாம் க்ருஷ்ண சேதஸம் புடாஞ்சலிம் காரயித்வா, மாதவம் ராதிகாம் விதி: கன்யகாம் சயதாதாதோ பக்த்யா தஸ்தௌ ஹரே: புர:

      இவ்வைபவத்தைப் பார்க்க தேவர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள் முதலியவர்கள் ப்ருந்தாவனம் வந்து சேர்ந்தனர். துந்துபி, ஆனகம், முரஜம் முதலிய வாத்யங்கள் கோஷித்தன. தேவர்கள் பாரிஜாத புஷ்பத்தை வர்ஷித்தனர். கந்தர்வர்கள் கானம் செய்தனர். அப்ஸரஸ்கள் நடனமாடினர். பிரம்மா முதலிய தேவர்கள் துதித்தனர். ப்ரம்மா தக்ஷிணையாக ராதாக்ருஷ்ண பாத பக்தியை வரம் கேட்டார். தேவர்கள் பக்தியைக் கோரினர். திவ்ய தம்பதிகள், எல்லோரும் கோரிய வரங்களை அளித்து, அவர்களின்  ஸ்வஸ்தானம் அனுப்பிவைத்தனர். ஸ்ரீ ராதா தேவி நமஸ்கரித்துவிட்டு சயனத்தை அடைந்தாள். அவர்கள் ஆனந்த ஸாகரத்தில் மூழ்கினர். கண் அயர்ந்த ராதை விடியற்காலையில் விழித்துக் கொண்டாள். பக்கத்தில் பரம புருஷனைக் காணவில்லை.  நந்தன் தன்னிடம் தந்த பாலகனைக் கண்டாள். துக்கம் தாளாமல் அழுதாள். குழந்தையும் அழுதுகொண்டே இருந்தது. அப்பொழுது அசரீரி வாக் கேட்டது.

கதம் ரோதிஷிராதேத்வம் ஸ்மர க்ருஷ்ண் பதாம்புஜம்|

ஆராஸமண்டலம் யாவத்நக்தம் அத்ராகமிஷ்யஸி||

கரிஷ்யஸி ரதிம் நித்யம், ஹரிணா ஸார்தமீப்ஸிதம்|

சாயாம் விதாய ஸ்வக்ருஹே ஸ்வயமசகத்ய மா ருத||

“ஹே ராதே! ஏன் அழுகிறாய்? ஸ்ரீ க்ருஷ்ணனின் பாத ஸ்மரணம் செய், தினமும் இரவு வீட்டில் உன் ஸாயையை வைத்துவிட்டு இங்கு வந்து ஹரியுடன் ரமிப்பாய் அழாதே” என்ற அசரீரி வாக்கைக் கேட்டு சற்று நிம்மதி அடைந்தாள் ராதை.

ராதை குழந்தையை  எடுத்துக்கொண்டு நந்தன் வீடு சென்று யசோதையிடம் ஒப்புவித்தாள். (ராதை குழந்தையை எடுத்துக்கொண்டவுடன் குழந்தை அழுகையை நிறுத்திவிட்டது.) பிறகு தன் வீடு சென்று வேலையில் ஈடுபடலானாள். தினமும் ப்ருந்தாவனம் சென்று ஹரியுடன் ரமித்துவந்தாள்.

“நித்யம் நக்தம் ரதிம் தத்ர, சஹார ஹரிணா ஸஹ”

      கோகுல ப்ருந்தாவன  வாஸம் லீலைகள் முடிந்து ஸ்ரீ க்ருஷ்ணன் த்வரகா நிர்மாணம் செய்து அங்கு சென்று பல வருஷங்கள் பராக்ரம லீலாபூர்வம் விளங்கினார். இவ்வளவு காலமும் ராதை ஸ்ரீக்ருஷ்ணனை  விட்டுப் பிரிந்திருக்க வேண்டியிருந்தது.

“பவிதா தே வர்ஷ சதம் விச்சேதோஹரிணா ஸஹ” என்ற பக்த ஸ்ரீ தாமாவின் வாக்யத்திற்கிணங்க ஸ்ரீ  க்ருஷ்ணாவதார காரணமாகிய பூபாரஹரணம் முடிந்தவுடன், அவர் ராதையுடன் பூலோகம் விட்டு, ஸ்வஸ்தானமாகிய கோலோகம் சேர்ந்தார்.

ரத்ன யானம் ஸமாருஹ்ய யபௌகோலோகமுத்தமம்........... ராதா கோபிகணைஸ்ஸஹ.

கோலோகத்தில் ராதா ஸமேதராய் இருந்துகொண்டு, ஸ்ரீ க்ருஷ்ண பகவான் ஸகல ஜீவராசிகளையும் அனுக்ரஹித்துக் கொண்டு விளங்குகிறார். ராதாவின் சரண ரேணுவை நாம் ஸ்மரிப்போம்.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

நன்றி: ”ஆங்கரை ராதாகல்யாண பத்ததி” கொள்ளிடத்தின் வடகரையில் ஸ்ரீரங்க க்ஷேத்ரத்திற்கு கிழக்கே அமைந்துள்ள கிராமம். அஹம்ஹரா (மருவி ஆங்கரை ஆயிற்று. பாபத்தைப் போக்குவது என்று பொருள்.)

மருதாந்த நாதன் என்ற அரசனால் தன் மாத்ருகமனம் செய்த பாபத்திலிருந்து விடுபட உருவாக்கப்பட்டது. இந்த கிராமத்திற்கு மேற்கே உள்ளது மாந்துறை. என்ற ஸ்தலம். அருணகிரியார் போன்ற தெய்வீகக் கவிகளால் பாடல் பெற்ற ஸ்தலம்.

மாந்துறையில் அகஸ்தியர் அருளினால் மருதாந்த நாதன் தான் செய்த பாபம் நீங்கி அவருடைய உத்த்ரவினால் கட்டப்பட்ட் பெருமையுடையது (அகம்ஹரா)

கொள்ளிடத்தின் உப நதியான காயத்த்ரி அங்கு தவழ்கிறது.

தமிழ்த்தாத்தா அவர்களால் எழுதப்பட்ட “அன்னதான சுப்பையர்” போன்ற மஹான்களை உலகிற்கு அளித்த பெருமையுடையது.

-=-=

வெ.சுப்பிரமணியன்

ஓம்

“தம் ராதிகா சரணரேணும் அனுஸ்மராமி”ஓம்

 


aum



 

devoo

unread,
Dec 1, 2010, 7:59:03 AM12/1/10
to மின்தமிழ்
மிக அருமையாக உள்ளது ஓம் ஐயா
நன்றி
‘அஹம்ஹரா’ இன்னும் அருமை;
ஒரு சிற்றூரின் பெயரில் பெரிய ஆன்மிகப் பாடம்


தேவ்

On Dec 1, 5:36 am, venkatachalam Dotthathri <v.dotthat...@gmail.com>
wrote:
> *

>    -
>
>  *

Geetha Sambasivam

unread,
Dec 3, 2010, 2:06:02 AM12/3/10
to mint...@googlegroups.com
அருமையான தகவல்கள், இன்றுதான் பார்த்தேன், நன்றி பகிர்வுக்கு. ஆங்கரை என்று திருநெல்வேலிப்பக்கம் ஓர் ஊர் உண்டு என்பார்கள், அதுவோனு நினைச்சேன், இந்தப் பெயரும், பெயர்க்காரணமும் புதிய செய்திகள்.

2010/12/1 venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Reply all
Reply to author
Forward
0 new messages