தமிழ்மரபு அறக்கட்டளை நிகழ்வுகள் - ஆகஸ்ட் 2026

85 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 23, 2026, 3:23:14 AMJul 23
to மின்தமிழ்
silver jubilee event THFi.jpg

நண்பர்களே..

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா ஆய்வுக் கருத்தரங்கம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம். 

இந்த நிகழ்ச்சி சென்னையில் தமிழ் இணையக் கல்விக் கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்வுகள்: 

1. தனிநாயகம் அடிகள் பற்றிய குறும்பட வெளியீடு 
2. தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் ஐந்து ஆய்வு நூல்கள் வெளியீடு 
3. அறிஞர் பெருமக்களின் ஆய்வுரைகள் 

இந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொள்ளத் தயாராகுங்கள்☘️🪷

-- முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 

தேமொழி

unread,
Jul 26, 2026, 2:25:07 PMJul 26
to மின்தமிழ்

407.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
வழங்கும் இணையவழி திசைக்கூடல் - 407
_____________________________________________________

தலைப்பு: 
தனிநாயகம் அடிகளாரின் தமிழ்க்கொடை

சிறப்புரையாளர்:  
முனைவர் வா.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவர்,
முதல்வர் & தமிழ்த் துறைத் தலைவர், 
கொ.கந்தசாமி நாயுடு இருபாலர் கல்லூரி, சென்னை.
ஆட்சிக்குழு உறுப்பினர், தமிழ்ப் பல்கலைக்கழகம்.

நோக்கவுரை : 
முனைவர் நா.கண்ணன்,
இணைத் தோற்றுநர், தமிழ் மரபு அறக்கட்டளை.

நாள்: ஆகஸ்ட் 01, 2026, ஞாயிற்றுக்கிழமை, 
இந்திய  & இலங்கை நேரம் மாலை 6.00 மணி

Join Zoom Meeting: 
Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi

தொடர்புக்கு:
முனைவர் மு. இறைவாணி, திரு.வருண் பிரபு.
கருத்தரங்கப் பொறுப்பாளர்கள்.

தேமொழி

unread,
Jul 27, 2026, 2:25:33 PMJul 27
to மின்தமிழ்
📍முக்கிய அறிவிப்பு

வணக்கம் நண்பர்களே.

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் 25 ஆண்டுகால செயல்பாடுகளை கொண்டாடும் வகையில் வருகின்ற 22.8.2026 (சனிக்கிழமை) சென்னையில் தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நாம் 5 ஆய்வு நூல்களை வெளியிட உள்ளோம் என்ற இனிய செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

அதுமட்டுமல்ல..
தமிழுக்குத் தொண்டாற்றியவரும்,  உலகத் தமிழறிஞர்களை ஒன்றிணைத்தவருமான தமிழ்ப்பேரறிஞர் டாக்டர் எஸ்.சேவியர்  தனிநாயகம் பற்றிய ஆவணப்படம் ஒன்றை இந்த நிகழ்ச்சியில் வெளியிடுவதற்காகத் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம் என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வதிலும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இந்த வெள்ளிவிழா நிகழ்ச்சி ஓர் ஆய்வுக் கருத்தரங்கமாகவும் அதேவேளை சிறப்பு நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கி ஒரு நாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியைச் சிறப்பாக நமது அமைப்பு செய்து முடிக்க ஏற்படுகின்ற செலவுத் தொகையில் உங்கள் நன்கொடையும் இணைந்தால் அது தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளுக்கு உதவும்.

இந்த நிகழ்ச்சியில் ஏற்பட உள்ள நூல்கள் வெளியீடு, ஆவணப்பட வெளியீடு, உணவு, நிகழ்ச்சி ஏற்பாடுகள் ஆகியவற்றிற்குத் தேவைப்படும் தொகையில்  நீங்களும் உங்கள் பங்களிப்பை வழங்கி இந்த நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற உதவலாம்.

உங்களின் சிறு தொகையும் ஒரு முக்கியப் பங்களிப்பாக எங்களுக்கு அமையும்.

உங்கள் நன்கொடைகளை நமது அமைப்பின் வங்கிக் கணக்கிற்கு நீங்கள் அனுப்பி வைக்கலாம்.

Payment Details: (within India)
Tamil Heritage Foundation International
Account No: 1196050014474
IFSC: PUNB0119620
Bank: Punjab National Bank
Branch: Nungambakkam, Chennai

அல்லது, கீழ்காணும் தமிழ் மரபு அறக்கட்டளை QR code வழி உங்கள் நன்கொடைகளைச் செலுத்தலாம்.

WhatsApp Image 2026-07-27 at 7.03.38 AM.jpeg 

தமிழால் இணைவோம்.

நன்றி 🙏🏽☘️


தேமொழி

unread,
Aug 1, 2026, 9:02:32 PM (13 days ago) Aug 1
to மின்தமிழ்
407hznew.jpg 
தனிநாயகம் அடிகளாரின் தமிழ்க்கொடை
— முனைவர் வா.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவர்
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
திசைக்கூடல் - 407 [ஆகஸ்ட் 01, 2026]
https://youtu.be/YDy3GC9pLwg
```

தேமொழி

unread,
Aug 6, 2026, 11:34:47 AM (8 days ago) Aug 6
to மின்தமிழ்
நண்பர்களே, வருகின்ற 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரையில் மரபுப் பயணம் நடைபெற உள்ளது. 
ஆர்வம் உள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு பெயரைப் பதிந்து கொள்ளவும். 

THFi Heritage Tour.png
``````

தேமொழி

unread,
Aug 11, 2026, 12:14:51 PM (3 days ago) Aug 11
to மின்தமிழ்

Thaninayagam THFi Documentary.jpg
விரைவில்...  எதிர்பாருங்கள்
22.8.2026 - ”தனிநாயகம்”  ஆவணப்படம் வெளியீடு
இது ஒரு தமிழ் மரபு அறக்கட்டளை தயாரிப்பு

தேமொழி

unread,
Aug 12, 2026, 1:40:46 AM (3 days ago) Aug 12
to மின்தமிழ்

thaninayagam THFi documentary.jpeg

தனிநாயகம் ஆவணப்படம்

உலகத் தமிழ் மாநாடு என்ற கருத்தாக்கத்தை உருவாக்கித் தமிழை ஓர் உலக மொழியாக உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற தமிழ்ப் பேரறிஞர் தனிநாயகம் அடிகள்.

உலக நாடுகள் பலவற்றுக்கு - இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி , தாய்லாந்து, கம்போடியா, அமெரிக்கா உள்ளிட்ட
50க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் -    பயணம் செய்து பயணம் செய்த எல்லா நாடுகளிலும் தமிழ் இலக்கியம், பண்பாடு, கலை , வரலாறு  குறித்து ஆய்வுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர்.

ஏறக்குறைய 16 உலக மொழிகளைக் கற்றதனால் அந்தந்த நாடுகளில் அந்த மக்கள் பேசும் மொழிகளிலேயே    உரையாற்றி அவர்களைக் கவர்ந்து  தமிழை நோக்கி உலகின் கவனத்தை திருப்பியவர்.

தமிழில் அச்சான முதல்  நூல்கள் ஐரோப்பிய நூலகங்களில் இருப்பதைக் கண்டறிந்து முதன்முதலாக அவற்றை உலகுக்கு அறிவித்தவர். அதன் மூலம் அச்சுக் கலை வரலாற்றில் இந்தியாவிலேயே தமிழ்தான் முன்னோடி என்பதை நிறுவியவர்.

பயணம் செய்த எல்லா நாடுகளிலும் தமிழ்த் தடங்கள் இருக்கின்றனவா என்று தேடி தமிழர்களின் புலப்பெயர்வு பற்றிய ஆய்வை மேற்கொண்டவர்.

தமிழ் இலக்கியத்தை வடமொழி,  கிரேக்க, ரோமானிய  மற்றும் ஐரோப்பிய சிந்தனை மரபுகளோடு ஒப்பிட்டு தமிழில் ஒப்பிலக்கிய துறையை உருவாக்கியதோடு தமிழின் தனித்தன்மையான உலகப் பொதுமையை உலகிற்கு அறிவித்தவர்.

தமிழை தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் மட்டும் ஆய்வு செய்தால் போதாது;  அதை உலகறியச் செய்ய வேண்டும் என்றால் ஆங்கிலத்தில் தமிழைப் பற்றி ஆய்வு செய்து அதை உலகிற்குத்  தெரியப்படுத்தினால்தான் தமிழின் பெருமையை உலகிற்கு உணர்த்த முடியும் என்று முடிவு செய்து
தமிழ் கல்ச்சர், ஜர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடிஸ் ஆகிய ஆங்கில ஆய்விதழ்களை நடத்தி அவற்றை உலகின் பல்கலைக்கழகங்கள் பலவற்றுக்கு அனுப்பி வைத்து இன்று பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைய காரணமானவர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் தமிழைப் பற்றி இன்று ஆய்வு செய்து வருவதற்குத்  தனிநாயகம் அடிகளாரின் இந்த முயற்சியே காரணம்.

சென்னையில் இன்று அமைந்திருக்கின்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு முன்னோடியாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் கண்டவர். தஞ்சையில் ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைவதற்கு பல்லாண்டுகளுக்கு  முன்பே இலங்கையில் ஒரு தமிழ் பல்கலைக்கழகம் அமைய கனவு கண்டவர்.

இலங்கை, மலேசியா, பிரான்ஸ், முதலிய பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும், அவற்றைத் தவிர பல்வேறு உலக நாடுகளில் பல்கலைக்கழகங்களில் வருகை தரு பேராசிரியராகவும் பணியாற்றிப்  பன்னாட்டு மாணவர்கள் தமிழ் ஆய்வை மேற்கொள்ளச் செய்தவர்.

பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை,
தமிழ் இலக்கியத்தில் கல்வி சிந்தனைகள், ஒன்றே உலகம், தமிழ்த்  தூது , திருவள்ளுவர் முதலிய குறிப்பிடத்தக்க ஆய்வு நூல்களையும்,  தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டவர்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் தனிநாயகம் அடிகளாரின் பணிகளைப் பற்றி. இப்படி ஒரு மனிதர் எப்படி இவ்வளவு வேலைகளை ஒரு வாழ்வில் செய்து முடித்தார் என்று வியக்க வைக்கிற இந்த நூற்றாண்டின் மாபெரும் தமிழ் ஆளுமை.

அவரைப் பற்றிய ஓர் ஆவண படத்தைத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மூலம் தயாரித்திருக்கிறோம். தமிழ் மரபு  அறக்கட்டளையின் வெள்ளிவிழா ஆண்டான இந்த ஆண்டை தனிநாயகம் ஆண்டாகக் கொண்டாடுவது என்று சென்ற ஆகஸ்டில் அறிவித்தபோதே 'தனிநாயகம்' ஆவணப் படத்தை தயாரிக்க வேண்டும் என்கின்ற கருத்தை அதன் நிறுவனர் முனைவர் க. சுபாஷினி முன்வைத்தார். அன்றிலிருந்து தொடங்கி ஓர் ஆண்டில் இந்த ஆவணப்படம்  உருவாகி இருக்கிறோம். தனிநாயகம் அடிகளாரின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதாக இந்த ஆவணப்படம் அமைந்திருக்கும்.

கருத்தாக்கம்: முனைவர் க. சுபாஷினி; எழுத்து இயக்கம்: பிருந்தா சாரதி.
திரைப்பட இசையமைப்பாளர் ஜோகன் சிவனேஷ் இசையமைத்திருக்கிறார். திரைப்படப்  படத்தொகுப்பாளர் பன்னீர்செல்வம் படத்தொகுப்பு செய்கிறார்.

தமிழறிஞர்கள் தனிநாயகம் அடிகளாரின் பணிகளைப் பற்றிய தங்கள் கருத்துக்களை ஆவணப்படத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வருகிற 2026, ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னையில் தமிழ் இணையப் பல்கலைக்கழக அரங்கில்
அமைச்சர்கள், அறிஞர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளும் தமிழ் மரபு கட்டளையின் வெள்ளி விழாவின் நிறைவில் இந்த ஆவணப்படமும் திரையிடப்பட இருக்கிறது.

தமிழை உலக அரங்கிற்குக் கொண்டு சென்று   தனிநாயகம் அடிகளாரைத் தமிழ் உலகமே கூடிக் கொண்டாடுவோம்...

தமிழ் நாயகம் தனிநாயகம் புகழ் போற்றுவோம்.

வாருங்கள்.

பிருந்தா சாரதி
இயக்குநர்

தேமொழி

unread,
Aug 12, 2026, 1:45:27 AM (3 days ago) Aug 12
to மின்தமிழ்
editing 1.jpeg
editing.jpg

தனிநாயகம்
ஆவணப்பட வெளியீடு 22 ஆகஸ்ட் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. அந்த ஆவணப்பட தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்று எடிட்டிங் ஸ்டூடியோவில் இறுதிக் கட்ட எடிட்டிங் பணியில் இயக்குனர் பிருந்தா சாரதி மற்றும் எடிட்டர் ஆகியோருடன்.

-- சுபா 

தேமொழி

unread,
12:21 PM (7 hours ago) 12:21 PM
to மின்தமிழ்

மாண்புமிகு திரு ராஜ்மோகன்.jpg
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு ராஜ்மோகன் அவர்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா தொடக்க விழா நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கச் சென்றிருந்தோம். 
தமிழ் வளர்ச்சி தொல்லியல் மற்றும் ஆவணப் படுத்துதல் தொடர்பாக நல்லதொரு கலந்துரையாடலாகவும் இந்தச் சந்திப்பு அமைந்தது. 
நமது வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்ச்சியில் தொடக்க விழாவில் அமைச்சர் அவர்கள் நூல்களை வெளியிட்டுச் சிறப்பு சேர்க்க வருகின்றார் என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வது மகிழ்கின்றோம்.

சட்டமன்ற தலைவர் திரு ஜே.சி.டி பிரபாகர்.jpg
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்துச் சிறப்புரையாற்ற வருகைதர உள்ள மாண்புமிகு சட்டமன்றத் தலைவர் திரு ஜே.சி.டி பிரபாகர் அவர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கி மகிழ்ந்தோம்.

invitation.jpg

வெள்ளி விழா கருத்தரங்க நிகழ்ச்சி 22.8.2026 சனிக்கிழமை சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கத்தில் நடைபெற உள்ளது. 
அனைவரும் வருக  என அன்போடு அழைக்கின்றோம்.

முனைவர் க. சுபாஷிணி 

Reply all
Reply to author
Forward
0 new messages