மயிலாடும்பாறைக் கல்வெட்டு

120 views
Skip to first unread message

dorai sundaram

unread,
Sep 21, 2015, 12:06:52 PM9/21/15
to mint...@googlegroups.com
விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், பொ.மெய்யூர்
என்னும் சிற்றூரில்  மயிலாடும்பாறை என ஊர் மக்கள் குறிப்பிடும் பாறையில் ஒரு கல்வெட்டைக் கண்டிருக்கிறார் அவ்வூரைச் சேர்ந்த ச.குப்பன் என்பவர். அக்கல்வெட்டின் ஒளிப்படத்தை அனுப்பியிருந்தார்.
அது ஓர் அருமையான கல்வெட்டு. இராசராசனின் தமையன் ஆதித்த கரிகாலன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு. கல்வெட்டில் ஆதித்த கரிகாலன் ”வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி” எனக்குறிப்பிடப்பெறுகிறான். 
ஒளக் கண்டனாகிய சிங்க முத்தரையன் என்பவன் ஊருக்கான ஏரியைப் பராமரிப்பதற்காக அரைக்(காணி) நிலம் வரி நீக்கிக் கொடுத்ததோடு  ஏரியின் மேலைப் பகுதியில் கல்லால் ஆகிய தூம்பும் செய்து கொடுத்துள்ளான்.  ஏரியைப் பராமரிக்க அளிக்கப்படும் நிலக்கொடை
“ஏரிப்பட்டி” என்று குறிப்பிடப்படுகிறது.  ”பட்டி” என்பது நிலத்தைக்குறிக்கும். சில நடுகற்களில் வருகின்ற “உதிரப்பட்டி” என்னும் சொல்லை ஒப்பிடுக. இறந்த வீரனின் குடும்பத்தாருக்கு (இரத்த உறவு உள்ளவர்) நிலம் கொடையாக அளிக்கப்படுவதை “உதிரப்பட்டி” என்பார்கள். கல்வெட்டுப்பாடமும் கல்வெட்டுப்படமும் கீழே தரப்பட்டுள்ளன.

ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டியனைத்தலை
கொண்ட கோப்பரகேசரி ப(ந்)மற்கு யாண்டு
............வது மிலாடுக்குறுக்கைக் கூற்றத்து
..... உடைய ...ஒளகண்டனாகிய சிங்க
....னேன்  இவூர்க்கு நஞ்செயரை
..(ஏ)ரிப்பட்டியாக இறைஇழிச்சி உ(ப)
யஞ்செய்த அட்டிக்குடுத்தேன் சிங்க(மு)
தரையனேந் இத்தர்மம் ரக்‌ஷித்தான் பா
தம் என்றலைமேலன இதிறக்கினான் கெ
ங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்
தார் செய்த பாவமெல்லாங்கொள்வான்
மேலை கற்றூபும் இட்டாருமிவரே

”கற்றூபும்” எனப்பிழையாகப் பொறித்திருக்கிறார்க்ள். “கற்றூம்பும்”
என்பதே சரி. கல்+தூம்பு=கற்றூம்பு.
துரை.சுந்தரம்.

Mayilaadumpaarai(Thirukkovilur) kalvettu.jpg

N. Ganesan

unread,
Sep 21, 2015, 9:35:42 PM9/21/15
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Santhavasantham, panb...@googlegroups.com, tiruva...@googlegroups.com, thami...@googlegroups.com
 ஆதித்தசோழன் காலத்து அரிய கல்வெட்டு. கொலைசெய்யப்பட்ட சோழன் தானே இவன்?
ஆவணம் இதழில் கட்டுரை ஆக்குங்கள்.

(1) நஞ்செய் அரை ... என இப்பொழுது நாமெழுதும் நஞ்சை நஞ்செய் என்றே பழைய வடிவில் உள்ளது.

(2) இழிசு:இழிச்சு - தன்வினை:பிறவினை ஜோடி. சங்ககாலச் சொல்லாட்சியின் - இழிசினன் - பொருள்
புரிய இந்த இழிச்சு உதவும்.  சென்னைப் பேரகராதியில் இழி- எனத் தொடங்கும் சொற்களைப் பார்க்கலாம்:
இழிச்சு-தல் iḻiccu-

5 v. tr. Var. of இழித்து- 1. To lower, let down, help or hand down; இறக்குதல். அரிவழிபட் டிழிச்சிய விமானத் திறையவன் (தேவா. 584, 7). 2. To remit, as taxes; தள்ளிக் கொடுத்தல். இறையிழிச்சிக் கொடுத்தோம் (S.I.I. i, 69). 3. To pull down, dismantle, as a building; இடித்தல். திருமண்டப மிழிச்சி யெடுப்பதற்கு (S.I.I. iii, 93). 4. To disgrace; அவமதித்தல். (W.)

(3) தூபு என்பது சரியெனக் கருதுகிறேன். கொடுமுடி சண்முகத்தின் நூல்களைப்

பார்க்கவேண்டும்:  (a) ஏரிப்பாசனவரலாறு (History of Tanks and Irrigation, Sekar Pathippakam) (b) பண்டைப் பாசனப் பொறியியல் (தேனோலை வெளியீடு). கோ. செங்குட்டுவன் போன்றோரிடம் இருக்கலாம். பெற்று பிடிஎப் செய்தால் ஒரு நல்ல ஆய்வறிஞரின் நூல்கள் எல்லோரும் படிக்கலாம். இல்லாவிடில் அழிபடும்.

கொடுமுடியாரின் பிஎச்டி தீஸிஸ் இங்கே (117 Mb!): மிக நல்ல ஆய்வு.

http://dspace.pondiuni.edu.in/jspui/handle/pdy/153

தமிழ்நாட்டுப் பல்கலைகள் தங்கள் உயராய்வுகளை உலகுக்குக் கொடுத்தால் சிறப்பு.

http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=768

தூபு = தூம்பு: சொல்லாய்வு

தூ- என்பது தாது என்றால் தூவு, தூபு ஆகும். அதுவே தூம்பு என மருவும்.

(1) யானை (< யால்- யாலுதல்/நாலுதல். யால்/ஆல் மரப்பெயரும் நாலும் விழுதுகளால், 

(2) தும்பி (< தூம்பு), (3) ஆம்பல் (< காம்பு +அல், அறுகு < கறுகு போல)  (4) வேழம் (< வே(ய்) ) ....... எல்லாம்

துதிக்கை குழாயாக இருப்பதால் தான்.

DEDR 3323 Ta. tuppu (tuppi-)

3323 Ta. tuppu (tuppi-) to spit; n. spittle; tuppal saliva, spittle. Ma. tuppuka to spit; tuppu, tuppal spittle. To. tüf ïn- (ïḏ-) to spit. Ka. tū imit. sound of spitting and puffing away with the breath; tūntiṟi to spit; tūpu to spit, blow, puff away. Koḍ. tupp- (tuppi-) to spit. Te. tupukku, tuppu the sound made in spitting suddenly; (K.) tuppuna with the sound tuppu; tūpoḍucu (i.e.tū-poḍucu) to spit. Go. (Mand.) tuhkul spit, saliva (Voc. 1765). Pe. cup- (-t-) to spit. Kui sūpa (sūpi-) id.; n. expectoration. Kuwi (F.) hūpali to spit; hūpki aiyali to vomit; (S.) hūpinai to spew; hūpkinai to vomit; hūpki vomiting; (Su.) hūp- (-it-) to spit; hūpka (pl.) saliva, spittle; (Isr.) hūp- (-it-) to spit; hūpki- to vomit; hūpka vomit, spittle; (Mah.) dopoki spittle. Kur. tuppnāto spit; tuppalxō saliva, spittle (for -xō, see 2249 Ta. kōr̤ai). Malt. tupe to spit; tupgle, tulgpe splittle (or with 2862 Ta. coḷḷu). DED(S, N) 2725.

DEDR 3332 Ta. tumpu

3332 Ta. tumpu dust. Ka. dumbu id. Te. dummu, dumārumu, duvva id.; (VPKtūva, tuva, tuvva, dubba fine sand; (B.) turumu powder; vb. to reduce to powder. Kol. dubba small dust cloud; (Kin.) dust. Go. (L.) dubā dust; (SR.) ḍuba id., earth; (S.) dumu dust (Voc. 1571); (Ko.) dumul id. (Voc. 1876); (ASu.) dubbā dirt. Kuwi (S.) dūmbru id. DED(S) 2736.

பா- என்ற தாதுவின் உற்பத்தி பாம்பு, பாவு (கன்னடம்(, பாமு (தெலுங்கு) நினைவூட்டுவது

தூ- என்ற தாதுவின் உற்பத்தி தூம்பு, தூபு, தும்பி, தும்பை

DEDR 4085 Ta. pāmpu

4085 Ta. pāmpu snake; pāppu, in: pāppu-ppakai Garuḍa, the enemy of serpents (cf. 3808); (lex.) pā snake. Ma. pāmpu id. Ko. pa·b id. To. po·b id.; o·f id. (in songs; < Badaga ha·vu). Ka.pāvu id. Koḍ. pa·mbï id. Tu. hāvu id. (< Ka.); pāmbolů a kind of flat, long fish; pāmbolů-kērè rat-snake (cf. 2011). Te. pāmu snake. Kol. pa·m id. Nk. pām id. Nk. (Ch.) pām id. Pa. bām id.Ga. 

உயர்பு:உயர்ப்பு, ஓர்பு:ஓர்ப்பு ...

தூம்பு தூபு எனச் சொல்லும் கல்வெட்டுகள் இன்னும் இருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக
நன்னூல் உரைகாரர் கொடுத்துள்ளார். பாருங்கள்:
230.செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென
அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி.
[...]

ஒரு தொழிற்கண்ணே   வேறுபட   வாராமையுடைய   அத்தொழில்
எல்லாவற்றிலும் உழூஉ எனவும், உழுபு எனவும், உழுதென எனவும்;

உண்ணூஉ  எனவும்,   உண்குபு    எனவும்,   உண்டென    எனவும்;
தின்னூஉ  எனவும்;  தின்குபு  எனவும்; தின்றென எனவும்; புகூஉ, புகுபு,
புக்கென  எனவும்;  ஓடூஉ, ஓடுபு, ஓட்டென  எனவும்; 
தூஉ, தூபு, தூய்
எனவும் வேறுபடாது வருதலுடைமையின்
வேறுகூறினார் என்பது,

அன்புடன்
நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 22, 2015, 12:45:53 AM9/22/15
to வல்லமை, mintamil

On Monday, September 21, 2015 at 7:18:50 PM UTC-7, seshadri sridharan wrote:

 தூம்பு என்பது துளைப் பொருளில் தோன்றிய சொல். நீர் வடியும்படி துளை அமைப்பு கொண்ட குழாய். பெரிய கதவில்  அமைந்த சிறிய கதவும் தூம்பு எனப்படும். துளைப் பொருள்  கொண்டது. துப்பும் போது இதழ்கள் துளை போல் அமைவதை காணுங்கள்.

நன்றி. தும்பு என்றால் துளையுடைய சுரைக்காய். குன்னு/குஞ்ஞு அதற்கு ர (possessive suffix) சேர்ந்து  குஞ்ஞரம்/குஞ்சரம் (ஒப்பு: மஞ்ஞை:மஞ்சை)
என்பது போல, ர possessive suffix சேர்ந்து தும்புரு முனிவர். தும்புரு > தம்புரா (இசைக்கருவி). நாரதர் நார்/நரம்பு என்னும் யாழ்க்கருவி.
நாரத தும்புரு சங்கீத முனிகளின் பெயரில் தமிழ் இருக்கிறது.
 
இந்தியில் தூம்ரபான் என சுருட்டை குறிப்பர். ஏன்? முதலில் இலையை சுருட்டி மடித்து அதில் உள்ள துளையில் புகையிலையை அடைப்பதாலேயே.  

தூமம்/தூபம் = புகை என்பது வேறு. தூம்ரகேது (அ) தூமகேது. காஞ்சி பெரியவர் சொல்வதைப் பாருங்கள்.

தூம்பு/தூபு (tuumpu/tuupu) என நன்னூலும், ஆதித்தசோழன் கல்வெட்டும் காட்டும் துளைப்பொருள் கொண்டது தமிழ்ச்சொல்.
தூம்ரம்/தூமம் (dhuumra/dhuuma) வடசொல்.

நா. கணேசன்
 
 தூம்பு : n. [T. tūmu, K. M.tūmbu.] 1. Tubularity; உட்டுளை. தூம்புடைத்தடக்கை (புறநா. 19). 2. Tube; உட்டுளைப்பொருள். (பிங்.) 3. Sluice, outlet; மதகு. குளந்தூம்பு ...     

dorai sundaram

unread,
Sep 22, 2015, 8:46:58 AM9/22/15
to mint...@googlegroups.com
கல்வெட்டில் தூம்பு என்பது தூபு எனப்பிழைபட எழுதப்பட்டுள்ளது என நினைத்திருந்தேன். உங்கள்
சொல்லாய்வு தூபு என்னும் சொல் சரியான சொல்லே எனக்காட்டுகிறது. உங்கள் சொல்லாய்வு
மலைக்கவைக்கிறது. பின்னால் தூம்பு என மாற்றம் பெற்றிருக்கலாம். 
தூம்புக்கல்வெட்டுகள்  தொண்டை மண்டலப்பகுதியில் நிறைய இருந்திருக்கும்.  கொடுமுடி சண்முகனார் தூம்புக்கல்வெட்டுகளை க் கண்டறிந்துள்ளார் எனக்கேள்வியுற்றிருக்கிறேன். நீர்ப்பாசனம், தூம்பு, கலிங்கு ஆகியவை பற்றிய கல்வெட்டுகள் வட தமிழகத்தில் நிறைய உள்ளன எனத்தெரிகிறது. சோழர் ஆட்சியில்,ஏரிகளைப்பராமரிக்க ஏரி,கலிங்கு வாரியங்கள் செயல்பட்டன. 
கொலையுண்ட ஆதித்த கரிகாலனின் கல்வெட்டு என்பதில் இக்கல்வெட்டு சிறப்புப் பெறுகிறது. ஆட்சியில்
அமராத இளவரசரும் தம் பெயரில் கல்வெட்டுகள் வெட்டுவிக்கும் உரிமை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஆவணம் இதழில் இக்கல்வெட்டைத் தவறாது பதிக்கவேண்டும். 
உங்கள் விரிந்த ஆய்வுக்கு நன்றி கணேசன் அவர்களே.
சுந்தரம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Sep 22, 2015, 9:11:37 AM9/22/15
to மின்தமிழ்

On Tuesday, September 22, 2015 at 5:46:58 AM UTC-7, dorai sundaram wrote:
கல்வெட்டில் தூம்பு என்பது தூபு எனப்பிழைபட எழுதப்பட்டுள்ளது என நினைத்திருந்தேன். உங்கள்
சொல்லாய்வு தூபு என்னும் சொல் சரியான சொல்லே எனக்காட்டுகிறது. உங்கள் சொல்லாய்வு
மலைக்கவைக்கிறது. பின்னால் தூம்பு என மாற்றம் பெற்றிருக்கலாம். 
தூம்புக்கல்வெட்டுகள்  தொண்டை மண்டலப்பகுதியில் நிறைய இருந்திருக்கும்.  கொடுமுடி சண்முகனார் தூம்புக்கல்வெட்டுகளை க் கண்டறிந்துள்ளார் எனக்கேள்வியுற்றிருக்கிறேன். நீர்ப்பாசனம், தூம்பு, கலிங்கு ஆகியவை பற்றிய கல்வெட்டுகள் வட தமிழகத்தில் நிறைய உள்ளன எனத்தெரிகிறது. சோழர் ஆட்சியில்,ஏரிகளைப்பராமரிக்க ஏரி,கலிங்கு வாரியங்கள் செயல்பட்டன. 
கொலையுண்ட ஆதித்த கரிகாலனின் கல்வெட்டு என்பதில் இக்கல்வெட்டு சிறப்புப் பெறுகிறது. ஆட்சியில்
அமராத இளவரசரும் தம் பெயரில் கல்வெட்டுகள் வெட்டுவிக்கும் உரிமை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஆவணம் இதழில் இக்கல்வெட்டைத் தவறாது பதிக்கவேண்டும். 
உங்கள் விரிந்த ஆய்வுக்கு நன்றி கணேசன் அவர்களே.
சுந்தரம்.

தூபு இன்னும் சில கல்வெட்டுக்களில் தூம்புக்கு இருக்கலாம்.
நன்னூல் உரை இதற்குச் சீரிய சான்று.

தவறு என்று நினைத்து பல சொற்கள் திருத்தப்பட்டுவிடுகின்றன.
பா- பாவு, பாமு எல்லாம் இருக்கின்றன திராவிட மொழிகளில்.
பாபு என்பதும் பாம்புக்கு வழங்கியிருக்கும். பின்வந்தோர் பாம்பு எனத்
திருத்தியிருப்பர்.

நிழற்றிய/நிழத்திய சொற்கள் பற்றி, சுவடிகள் தொல்காப்பிய சூத்திரத்திற்கு
உள்ளமை பற்றி, பாண்டியராசாவுடன் மடலாடியுள்ளேன்.

N. Ganesan

unread,
Sep 23, 2015, 9:05:24 PM9/23/15
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, V Murugan, Dr. Krishnaswamy Nachimuthu

On Tuesday, September 22, 2015 at 5:46:58 AM UTC-7, dorai sundaram wrote:
கல்வெட்டில் தூம்பு என்பது தூபு எனப்பிழைபட எழுதப்பட்டுள்ளது என நினைத்திருந்தேன். உங்கள்
சொல்லாய்வு தூபு என்னும் சொல் சரியான சொல்லே எனக்காட்டுகிறது. உங்கள் சொல்லாய்வு
மலைக்கவைக்கிறது. பின்னால் தூம்பு என மாற்றம் பெற்றிருக்கலாம். 
தூம்புக்கல்வெட்டுகள்  தொண்டை மண்டலப்பகுதியில் நிறைய இருந்திருக்கும்.  கொடுமுடி சண்முகனார் தூம்புக்கல்வெட்டுகளை க் கண்டறிந்துள்ளார் எனக்கேள்வியுற்றிருக்கிறேன். நீர்ப்பாசனம், தூம்பு, கலிங்கு ஆகியவை பற்றிய கல்வெட்டுகள் வட தமிழகத்தில் நிறைய உள்ளன எனத்தெரிகிறது. சோழர் ஆட்சியில்,ஏரிகளைப்பராமரிக்க ஏரி,கலிங்கு வாரியங்கள் செயல்பட்டன. 
கொலையுண்ட ஆதித்த கரிகாலனின் கல்வெட்டு என்பதில் இக்கல்வெட்டு சிறப்புப் பெறுகிறது. ஆட்சியில்
அமராத இளவரசரும் தம் பெயரில் கல்வெட்டுகள் வெட்டுவிக்கும் உரிமை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு ஆவணம் இதழில் இக்கல்வெட்டைத் தவறாது பதிக்கவேண்டும். 
உங்கள் விரிந்த ஆய்வுக்கு நன்றி கணேசன் அவர்களே.
சுந்தரம்.

தூம்பு/தூபு என்ற அரிய சொல்லாட்சிகளை ஆதித்தசோழன் கல்வெட்டில் துரை. சுந்தரம் காட்டினார். தூ- என்னும் தாதுவேரால் தூபு=தூம்பு எனப் பிறக்கும் எனச் சொல்லினேன். கொடுமுடி சண்முகனாரின் பிஎச்டி தீஸிஸ், பாசனவரலாற்று நூல்கள், கட்டுரைகள், பொதுவாக கலிங்கு, தூம்பு பற்றிய கல்வெட்டுகள் எல்லாம் ஆராய்ந்தால் மேலும் “தூபு” என்பதன் ஆட்சி சிக்கும் எனக் கருதுகிறேன். விரிவான பழையமடல் இவ்விழையில். 

அதேபோல், பா- என்னும் தாதுவேரால் பிறப்பது பாபு = பாம்பு. இதுவும் தமிழிலே வெகுவாக வழங்கியிருக்கிறது. பாபு (paapu = paampu) என்ற வார்த்தை தமிழில் இன்றில்லாது போய்விட்டது. மேலும், baabu என்ற வடசொல் பழைய பாபு எனுந் தமிழ்ச்சொல்லை முடக்கிவிட்டது. 7-ஆம் நூற்றாண்டு ஆதாரம் பின்னர்ப் பார்ப்போம். குமாரிலபட்டர் ( https://en.wikipedia.org/wiki/Kum%C4%81rila_Bha%E1%B9%AD%E1%B9%ADa ) ஆதிசங்கரர்க்கு இரண்டு நூற்றாண்டு முன்னர் வாழ்ந்தவர். அவரது தந்திர வார்த்திகத்தில்தான் முதன்முதலாக சம்ஸ்கிருதத்தில் த்ராவிடபாஷை என அழைத்து தமிழ்வார்த்தைகள் அலசப்படுகின்றன. இதனை முதலில் காட்டியவர் ஆர்தர் கோக் பர்னல். அவரது கட்டுரையுடன் பின்னர் பார்ப்போம். சோறு சோர் எனவும், பாபு (=பாம்பு) பாப் எனவும் குமாரிலர் பதிவு செய்துள்ளார் 1300 வருஷம் முன்னாடி பேச்சுத்தமிழில் பாபு, சோறு போன்ற குற்றியல் உகரங்கள் மிகக்குறுகி ஒலித்தன போலும். மலையாளத்தில் ஆறு ஆற் kallaar, adayaar,
பெங்களூர்:பெங்களூரு போல. 

கோபு/கோம்பு - கோபுரம் (kOpura > gOpura)

கோம்பை = கோம்பைக் கலயம், அடியற்ற கூம்பு போன்ற மண்பாண்டம்.
கோம்பைக்கலசம் போல அடியற்ற, மட்டையுடன் கூடிய அரைத் தேங்காய், பாக்கு, (அ) பனம்பழத்தின் ஓடு. கூம்பியிருப்பது கோம்பை.
கோம்பி = பச்சோந்தி, கூம்பு போன்ற வாயுடையது. கோம்பிவிருத்தம் என்று மணிவாசகரை நினைந்து வெள்ளகால ப. சு. முதலியாரவர்கள் ஆங்கிலப்பாடலை முன்பு மொழிபெயர்த்தார்கள்.  u/o alteration: kOmpu/kUmpu.
பாரம்பரியமான வீடுகள் குடிசை, ஓடுவேய்ந்தது எதுவானாலும் /\ வடிவில் சேரும். இதனைக் கோப்பு/கோம்பு எடுத்தல் என்போம். கோம்பு என்பதன் ஒரு பழைய வடிவம் கோபு (kOpu). தூ- தூபு(=தூம்பு); பா- பாபு(=பாம்பு) போல, கோபு=கோம்பு/கோப்பு.

குன்னு/குஞ்ஞு அதற்கு ர (possessive suffix) சேர்ந்து  குஞ்ஞரம்/குஞ்சரம் (ஒப்பு: மஞ்ஞை:மஞ்சை) என்பது போல, ர possessive suffix சேர்ந்து தும்புரு முனிவர். தும்புரு > தம்புரா (இசைக்கருவி). நாரதர் நார்/நரம்பு என்னும் யாழ்க்கருவி. நாரத தும்புரு சங்கீத முனிகளின் பெயரில் தமிழ் இருக்கிறது. குஞ்ஞர என்பதுபோல, கோபு-(=கோம்பு) என்னும் தமிழ்ச் சொல்லுடன் -ர விகுதி சேர்ந்து கோபுரம் என்ற சொல் தோன்றுகிறது. இன்னொருமுறை நூ- (ஒலித்தல்/இசைத்தல்) என்னும் சொல்லில் இருந்து நூபு-ரம் “சிலம்பு” பார்ப்போம்.

நா. கணேசன்

உசாத்துணை:
(1) Jean Filliozat, 1959, Gopura 'Porte de ville', Journal Asiatique 247, pp. 251-255.

(2) Siegfied Lienhard, Notes sur l'emploi du mot go-pura dans le kAvya sanskrit.  = Notes on the use of the word go-pura' in kāvya Sanskrit.
Bulletin d'études indiennes, 2001, 19, pp. 353-358.
Abstract: This article attempts to shed some light on the Sanskrit word gopura, which, in dictionaries, is generally rendered as town-gate or door. M. Mayrhofer, too, translates gopura as town-gate, but adds the following remark: properly speaking, gate-way for the cows… It is difficult to ascertain the etymology of the word: as the first member of the compound, go-, permits various interpretations. J. Filliozat saw in Sanskrit go a loan-word from Tamil, namely kŌ, King or Lord, and thus interpreted gopura as entrance to the temple (Tamil kŌyil, kŌvil). The present author examines a number of descriptions given by Sanskrit poets and finds that in kavya gopuras, as well as palaces or certain parts of palaces (pura), are often said to be very lofty and elevated (uñca, uttunga). More elaborated, though characteristic literary attributes are abhramkasa, abhramliha, and (gagana-)ullekhin, which all mean rubbing, touching (literally, licking) or scrapping the clouds, or the sky. It may thus not be wide of the mark to understand go in gopura as cloud(s) or sky, which, in fact, are two of the numerous meanings of Sanskrit go. Interestingly, cows are never mentioned in poetical contexts.

(3) Francoise L'Hernault, Le gopura, pavillon d'entree des temples sud-indiens. AION 62/1-4, 2002.
(ஓர் உதவி: இதனை தரவிறக்கி வொர்டு டாக்குமெண்ட் ஆக்கி தர முடியுமா? நன்றி.)

தமிழில் அக்கறை கொண்ட இந்த மூன்று சம்ஸ்கிருத/இந்தியவியல் அறிஞர்கள் கோபுரம் என்னும் சொல்லை ஆராய்ந்துள்ளனர். கி.பி. 5-ஆம் நூற்றாண்டுவாக்கில் உருவாகும் கோபுரம் என்பது கோபு/கோம்பு என்பதுடன் -ர விகுதி சேர்ந்து கோபுரம் என்ற சொல் தமிழர்கள் செய்தது என அவர்கள் தமிழ் பேசவோ, ஆழமான பயிற்சி இல்லாததாலோ சொல்ல இயலவில்லை. ஆனால், ஏராளமான வடமொழி இலக்கியச் சான்றுகளைக் கொடுத்துள்ளனர். அவற்றைப் படித்து தமிழின் தாக்கம் வடமொழிகளில் என்று காட்ட நம் இளைய சமுதாயம் முன்வர வேண்டும். அதற்கான உழைப்பும் தேவை.

On Monday, September 21, 2015 at 7:18:50 PM UTC-7, seshadri sridharan wrote:
>தூம்பு என்பது துளைப் பொருளில் தோன்றிய சொல். நீர் வடியும்படி துளை 
>அமைப்பு கொண்ட குழாய். பெரிய கதவில்  அமைந்த சிறிய கதவும் தூம்பு 
>எனப்படும். துளைப் பொருள்  கொண்டது. துப்பும் போது இதழ்கள் துளை போல் >அமைவதை காணுங்கள்.

நன்றி. தும்பு என்றால் துளையுடைய சுரைக்காய். குன்னு/குஞ்ஞு அதற்கு ர (possessive suffix) சேர்ந்து  குஞ்ஞரம்/குஞ்சரம் (ஒப்பு: மஞ்ஞை:மஞ்சை)
என்பது போல, ர possessive suffix சேர்ந்து தும்புரு முனிவர். தும்புரு > தம்புரா (இசைக்கருவி). நாரதர் நார்/நரம்பு என்னும் யாழ்க்கருவி.
நாரத தும்புரு சங்கீத முனிகளின் பெயரில் தமிழ் இருக்கிறது. ~NG

தேமொழி

unread,
Sep 23, 2015, 9:18:25 PM9/23/15
to மின்தமிழ்

On Wednesday, September 23, 2015 at 6:05:24 PM UTC-7, N. Ganesan wrote:
கோபு/கோம்பு - கோபுரம் (kOpura > gOpura)

கோம்பை = கோம்பைக் கலயம், அடியற்ற கூம்பு போன்ற மண்பாண்டம்.
கோம்பைக்கலசம் போல அடியற்ற, மட்டையுடன் கூடிய அரைத் தேங்காய், பாக்கு, (அ) பனம்பழத்தின் ஓடு. கூம்பியிருப்பது கோம்பை.
கோம்பி = பச்சோந்தி, கூம்பு போன்ற வாயுடையது. கோம்பிவிருத்தம் என்று மணிவாசகரை நினைந்து வெள்ளகால ப. சு. முதலியாரவர்கள் ஆங்கிலப்பாடலை முன்பு மொழிபெயர்த்தார்கள்.  u/o alteration: kOmpu/kUmpu.
பாரம்பரியமான வீடுகள் குடிசை, ஓடுவேய்ந்தது எதுவானாலும் /\ வடிவில் சேரும். இதனைக் கோப்பு/கோம்பு எடுத்தல் என்போம். கோம்பு என்பதன் ஒரு பழைய வடிவம் கோபு (kOpu). தூ- தூபு(=தூம்பு); பா- பாபு(=பாம்பு) போல, கோபு=கோம்பு/கோப்பு.

குன்னு/குஞ்ஞு அதற்கு ர (possessive suffix) சேர்ந்து  குஞ்ஞரம்/குஞ்சரம் (ஒப்பு: மஞ்ஞை:மஞ்சை) என்பது போல, ர possessive suffix சேர்ந்து தும்புரு முனிவர். தும்புரு > தம்புரா (இசைக்கருவி). நாரதர் நார்/நரம்பு என்னும் யாழ்க்கருவி. நாரத தும்புரு சங்கீத முனிகளின் பெயரில் தமிழ் இருக்கிறது. குஞ்ஞர என்பதுபோல, கோபு-(=கோம்பு) என்னும் தமிழ்ச் சொல்லுடன் -ர விகுதி சேர்ந்து கோபுரம் என்ற சொல் தோன்றுகிறது. இன்னொருமுறை நூ- (ஒலித்தல்/இசைத்தல்) என்னும் சொல்லில் இருந்து நூபு-ரம் “சிலம்பு” பார்ப்போம்.

நா. கணேசன்

உசாத்துணை:
(1) Jean Filliozat, 1959, Gopura 'Porte de ville', Journal Asiatique 247, pp. 251-255.

(2) Siegfied Lienhard, Notes sur l'emploi du mot go-pura dans le kAvya sanskrit.  = Notes on the use of the word go-pura' in kāvya Sanskrit.
Bulletin d'études indiennes, 2001, 19, pp. 353-358.
Abstract: This article attempts to shed some light on the Sanskrit word gopura, which, in dictionaries, is generally rendered as town-gate or door. M. Mayrhofer, too, translates gopura as town-gate, but adds the following remark: properly speaking, gate-way for the cows… It is difficult to ascertain the etymology of the word: as the first member of the compound, go-, permits various interpretations. J. Filliozat saw in Sanskrit go a loan-word from Tamil, namely kŌ, King or Lord, and thus interpreted gopura as entrance to the temple (Tamil kŌyil, kŌvil). The present author examines a number of descriptions given by Sanskrit poets and finds that in kavya gopuras, as well as palaces or certain parts of palaces (pura), are often said to be very lofty and elevated (uñca, uttunga). More elaborated, though characteristic literary attributes are abhramkasa, abhramliha, and (gagana-)ullekhin, which all mean rubbing, touching (literally, licking) or scrapping the clouds, or the sky. It may thus not be wide of the mark to understand go in gopura as cloud(s) or sky, which, in fact, are two of the numerous meanings of Sanskrit go. Interestingly, cows are never mentioned in poetical contexts.

(3) Francoise L'Hernault, Le gopura, pavillon d'entree des temples sud-indiens. AION 62/1-4, 2002.
(ஓர் உதவி: இதனை தரவிறக்கி வொர்டு டாக்குமெண்ட் ஆக்கி தர முடியுமா? நன்றி.)

தமிழில் அக்கறை கொண்ட இந்த மூன்று சம்ஸ்கிருத/இந்தியவியல் அறிஞர்கள் கோபுரம் என்னும் சொல்லை ஆராய்ந்துள்ளனர். கி.பி. 5-ஆம் நூற்றாண்டுவாக்கில் உருவாகும் கோபுரம் என்பது கோபு/கோம்பு என்பதுடன் -ர விகுதி சேர்ந்து கோபுரம் என்ற சொல் தமிழர்கள் செய்தது என அவர்கள் தமிழ் பேசவோ, ஆழமான பயிற்சி இல்லாததாலோ சொல்ல இயலவில்லை. ஆனால், ஏராளமான வடமொழி இலக்கியச் சான்றுகளைக் கொடுத்துள்ளனர். அவற்றைப் படித்து தமிழின் தாக்கம் வடமொழிகளில் என்று காட்ட நம் இளைய சமுதாயம் முன்வர வேண்டும். அதற்கான உழைப்பும் தேவை.

திரு. கணேசன்

இந்த கோபுரம் என்ற சொல் பற்றி நாம் முன்னர் ஒருமுறை குழுமத்தில் விவாதித்த நினைவுள்ளது
இங்கு பொருத்தமாக இருக்கும், மேலும் சில தகவல்களும் தரும் என்ற நோக்கில் ....அதனை மீண்டும் கீழே கொடுக்கிறேன்... 

கோபுரம் உயர்ந்தது - விமானம் தாழ்ந்தது

ஆறாம் நூற்றாண்டு என்று நான் அறிந்தவரைக் குறிப்பிடுகிறேன்.

பாண்டியராஜா ஐயா வழங்கிய தளத்தின் உதவி கொண்டு தேடியதில் சங்க காலத்தில் கோபுரங்கள் இல்லை.

அதாவது சங்க இலக்கிய நூல்களில் "கோபுரம்" என்ற சொல் பயன்பாட்டில் இல்லை.

அத்தளத்தில் தேடிய நூல்களின் முடிவுகள் கீழே.....

தொல்காப்பியம் = இல்லை
இறையனார் அகப்பொருள் = இல்லை
பத்துப்பாட்டு = இல்லை
எட்டுத்தொகை = இல்லை
பதினெண்கீழ்க்கணக்கு  = இல்லை 
ஐம்பெருங்காப்பியங்கள்:
சிலப்பதிகாரம் = இல்லை 
மணிமேகலை = இல்லை
வளையாபதி = இல்லை 
குண்டலகேசி = இல்லை 

முத்தொள்ளாயிரம் = இல்லை 
நளவெண்பா = இல்லை 

காலத்தில் பின்பட்ட ஐம்பெருங்காப்பியத்தில் ஒன்றான சீவகசிந்தாமணி நூலில் கோபுரம் என்ற சொல் காணக் கிடைக்கிறது.

பத்தாம் நூற்றாண்டு 
சீவக சிந்தாமணி 
 கோபுர (3)
குமரி கொடி மதில் கோபுர மூதூர் - சிந்தா:1 336/2
கோபுர மாட மூதூர் கூற்று உண விளிக என்பார் - சிந்தா:4 1111/4
சூலம் நெற்றிய கோபுர தோற்றமும் - சிந்தா:13 3003/2
 
    கோபுரங்கள் (2)
மெய் உரை விளங்கும் மணி மேல் உலக கோபுரங்கள்
   ஐயம் இலை நின்ற புகழ் வையகத்து மன்னும் - சிந்தா:13 2869/1,2
மையல் விளை மா நரக கோபுரங்கள் கண்டீர் - சிந்தா:13 2869/3
 
    கோபுரம் (2)
ஒத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்று ஒளிர்வன - சிந்தா:1 144/2
திகழ் மணி கோபுரம் திங்கள் வாள் முகம் - சிந்தா:6 1444/3

______________

பிறகு கம்பராமாயணம், பெரியபுராணம் போன்ற நூல்களிலும் "கோபுரம்" என்ற சொல் உண்டு.

இதனால் .... திருமறைகளில் துவங்கிய தேடலில் ஆறாம் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் கோபுரம் என்ற சொல்லைப் பயன்படுத்தியது தெரிகிறது. 

தேவாரம் -  நான்காம் திருமுறை - (அப்பர்)
90 கால்களால் பயன் என்? -கறைக் கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்?

இதன் பிறகு சம்பந்தர், சுந்தரர் எனவும் தேடியதில் அப்பருக்கு  சமகாலத்தவர், பிற்காலத்தவர் இருவரும் பயன்படுத்தியுள்ளனர்.  

மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் இல்லை.  ஆனால் அவருடைய திருக்கோவையார் காப்பு செய்யுளில் எழு கோபுரம் என்ற சொல் உள்ள தகவல் உள்ளது, எனினும் செய்யுள் காணக் கிடைக்கவில்லை.  
தென்தமிழக நம்மாழ்வார் கோபுரம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். 

கோபுரம் என்ற சொல்லிற்கு  இலக்கிய கால நிர்ணயித்தலில்  பங்கு உள்ளது என்றால், திருமூலர் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார் என்பது உண்மையல்ல என்பதாகிறது..

பத்தாம் திருமுறை - திருமூலர் இயற்றிய - திருமந்திரம்
11. சிவபூசை

1792. உள்ளம் பெருங்கோயில் 1ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கங்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.

இது போலவே நம்மாழ்வாரும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ( Nammalwar was born in 43rd Kali of 3059 BC?) பிறந்தவரல்ல என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது 

நாலாயிர திவ்யப் பிரபந்தம்
திருமங்கையாழ்வார்
1244
குலவும் இடம்-கொடி மதிள்கள் மாளிகை கோபுரங்கள் 
துன்று மணி மண்டபங்கள் சாலைகள் தூ மறையோர் 

நம்மாழ்வார்
3853
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான் 
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே 

3869
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர் 
வடிவு உடை மாதவன் வைகுந்தம் புகவே

கீழ் காணும் நெறி நூல்களில் கோபுரம் என்ற சொல் இல்லை....
ஆத்திசூடி = இல்லை 
கொன்றைவேந்தன் = இல்லை
மூதுரை = இல்லை
நல்வழி = இல்லை 
நறுந்தொகை = இல்லை
உலகநீதி = இல்லை 
நீதிநெறி விளக்கம் = இல்லை
அறநெறிச்சாரம் = இல்லை 
நீதி நூல் = இல்லை 

இல்லை என்பதும் ஒரு முக்கியமான ஆய்வு முடிவு என்ற கோணத்தில் இல்லாதது பற்றிய  தகவல்களும் இங்கு  கொடுக்கப்பட்டுள்ளது. 

எனவே சமய இலக்கியங்கள் தோன்றிய காலங்களுக்கும் கோபுரம் என்ற சொல்லுக்கும் தொடர்பு தெரிகிறது.

..... தேமொழி

N. Ganesan

unread,
Sep 24, 2015, 12:29:08 AM9/24/15
to மின்தமிழ், vallamai

On Wednesday, September 23, 2015 at 6:18:25 PM UTC-7, தேமொழி wrote:

இந்த கோபுரம் என்ற சொல் பற்றி நாம் முன்னர் ஒருமுறை குழுமத்தில் விவாதித்த நினைவுள்ளது
இங்கு பொருத்தமாக இருக்கும், மேலும் சில தகவல்களும் தரும் என்ற நோக்கில் ....அதனை மீண்டும் கீழே கொடுக்கிறேன்... 

நன்றி. வடக்கே  தான் முதன்முதலில் கோபுரம் ஆளப்படுகிறது. இதிகாசங்களில்.
பிலியோசா கோ-புர எனப் பிரித்தார். லியன்ஹார்ட் கோ ‘பசு’ என்பதோடு இவ்வார்த்தை இல்லை எனக் காட்டினார்.
ல’ஹெர்னால்ட் கோட்டை, கொத்தளத்தில் உள்ள முகப்பு என்றார். கோபு-கோம்பு (ஒப்பு: தூபு-தூம்பு) +ர விகுதி
எனப் பிரிக்கலாம் என்பது என் கருத்து.

கோபுரம் உயர்ந்தது - விமானம் தாழ்ந்தது

ஆறாம் நூற்றாண்டு என்று நான் அறிந்தவரைக் குறிப்பிடுகிறேன்.

இருக்கலாம். ஆனால், வடக்கே கி.பி. 1-ஆம் நூற்றாண்டிலே அல்லது அதற்கு முன்னரே கோபுரம் வந்துவிட்டது.

இதனால் .... திருமறைகளில் துவங்கிய தேடலில் ஆறாம் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் கோபுரம் என்ற சொல்லைப் பயன்படுத்தியது தெரிகிறது. 

தேவாரம் -  நான்காம் திருமுறை - (அப்பர்)
90 கால்களால் பயன் என்? -கறைக் கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகரணம் சூழாக் கால்களால் பயன் என்?

இதன் பிறகு சம்பந்தர், சுந்தரர் எனவும் தேடியதில் அப்பருக்கு  சமகாலத்தவர், பிற்காலத்தவர் இருவரும் பயன்படுத்தியுள்ளனர்.  

தேவாரத்தில் உள்ள சொற்களைப் பார்க்குமிடம்:
(தமிழ் இங்கே ஆங்கில எழுத்தில் காண்க)

  1. kōpurak: 1
    • 4-009_(9) kōlak kōpurak kōkaraṇam cūḻāk kālkaḷāl payaṉ _eṉ
  2. kōpuraṅkaḷ: 1
    • 2-088_(5) aṇi kōpuraṅkaḷ, _aḻaku _ār
  3. kōpuraṅkaḷmēl: 1
    • 2-051_(8) kuṉṟu _aṭutta nal māḷikaik koṭi, māṭam nīṭu _uyar kōpuraṅkaḷmēl
  4. kōpurattiṉmēl: 2
    • 7-087_(7) maraṅkaḷmēl mayil _āla, maṇṭapam māṭa māḷikai kōpurattiṉmēl
    • 7-087_(8) maṇ_elām muḻavam _atirtara, māṭa māḷikai kōpurattiṉmēl
  5. kōpurattu: 1
    • 7-101_(10) tiṟai koṇṭu _amarar ciṟantu _iṟaiñcit tiruk kōpurattu nerukka, malarc
  6. kōpurattoṭu: 1
    • 7-087_(1) māṭa māḷikai kōpurattoṭu maṇṭapam vaḷarum vaḷar poḻil
  7. kōpuram: 6
    • 1-071_(6) īṇṭu māṭam, _eḻil _ār cōlai, _ilaṅku kōpuram
    • 3-032_(2) koṭi neṭumāḷikai, kōpuram, kuḷirmati
    • 2-109_(7) māṭa māḷikai, kōpuram, kūṭaṅkaḷ, maṇi _araṅku, _aṇi cālai
    • 3-031_(2) koṇṭal cēr kōpuram, kōlam _ār māḷikai
    • 3-120_(4) kuṇamkoṭu paṇiyum kulacciṟai paravum kōpuram cūḻ maṇik kōyil
    • 7-043_(5) māṭam, matil, _aṇi kōpuram, maṇi maṇṭapam
  8. kōpuramum: 2
    • 7-042_(2) vaḷam koḷ matil māḷikai, kōpuramum
    • 7-016_(3) maṇṭapamum kōpuramum māḷikai cūḷikaiyum

கிளிக்கினால் பாடல்களைப் பெறலாம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 24, 2015, 10:17:31 AM9/24/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, Santhavasantham, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, thami...@googlegroups.com

(1) தூ- : தூபு = தூம்பு (நன்னூல் உரை, மெய்யூர் ஆதித்தசோழன் கல்வெட்டு)
(2) நூ- : நூபு > நூபுர (=சிலம்பு, கிண்கிணி) 
நூ- ஒலித்தல், இசைத்தல். சிலம்பியின் வாயில் வருவது நூல்.
புல்லி > பல்லி போல, நுவ்வி > நவ்வி (மயில்). நுவலு-/நுவ்வலு- < நூலு-
{தும்புரு:தம்புரா. குஞ்சர போல -ர விகுதி}
(3) பா- : பாபு = பாம்பு (குமாரிலபட்டர் 7-ஆம் நூற்றாண்டு)
(4) கோ- : கோபு = கோம்பு. -ர விகுதி ஏற்று கோபுர. கூம்பி இருக்கும் பெருமாள் திருமண் நாமத்தைக் கோபி (< கோபு-) என்கிறோம். கொங்கில் கோபிச்செட்டிபாளையம் உள்ளது.

கொடுமுடி சண்முகனாரின் முனைவர் பட்ட ஆய்வேட்டிலிருந்து ஓர் உதாரணம்:
ஓகூர் என்று திண்டிவனம் வட்டத்தில் ஓர் ஊர். ஓகு = ஓங்கு. ஓகூர் என்ற ஊர்கள் பல தமிழ்நாட்டில் உண்டு. யாரோ புண்ணியவான் ஓகூர் என்றால் சரியில்லை, ஓங்கூர் என்று மாற்றியிருக்கிறார். இவ்வாறுதான் தூபு மறந்து தூம்பு மட்டும், பாபு மறந்து பாம்பு மட்டும், கோபு மறந்து கோம்பு மட்டும் என தமிழின் பரப்பு இன்று குறுகியுளது. ஓகு = ஓங்கு. நல்ல சான்று: திண்டிவனத்து ஓகூர் ஓங்கூர் ஆன வரலாறு. எனவே, ஓங்கில் = ஓகில் = dolphin.

N. Ganesan

பழந்தமிழர் பொறியியல் நுட்புத்திறன்
Authors: சண்முகம், ச,கொடுமுடி
Keywords: திறனாய்வு, பொறியியல், நுட்புத்திறன்
Issue Date: 1993
Publisher: தமிழியற் துறை, புதுவைப் பல்கலைக்கழகம்
Series/Report no.: T930;
பக். 190-191

Suba.T.

unread,
Sep 24, 2015, 2:59:41 PM9/24/15
to மின்தமிழ், Subashini Tremmel
​மிக அருமை.

இந்தப் பதிவை மின் தமிழ் மேடையில் இணைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

ஆதித்த கரிகாலனின் இக்கல்வெட்டைக் கண்டதில் மிக மகிழ்ச்சி.
சோழநாட்டில் குடந்தை கீழ்க்கோட்டம் எனும் நாகேஸ்வரசுவாமி கோயிலில் ஆதித்த கரிகாலன் கல்வெட்டுக்கள் உள்ளன. வேறு ஏதேனும் கோயில்களில் இந்த இளவரசனின் கல்வெட்டுக்கள் பார்த்திருக்கின்றீர்களா?

சுபா

senguttuvan k

unread,
Sep 25, 2015, 9:06:20 AM9/25/15
to mint...@googlegroups.com

பொறிஞர் கொடுமுடி ச.சண்முகன் அவர்கள், “தூம்புஎனும் சொல்லையே பயன்படுத்தியிருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவலூர் வட்டம் மேல்வாலையில் உள்ள ஏரி மதகுக் கல்வெட்டு (கி.பி.920) கீழக்காணும் தகவலைத் தருகிறது.

“ஸ்வஸ்திஸ்ரீ

மதிரை கொண்ட கோ விராஜகேசரி பன்மற்கு

யாண்டு பதினஞ் சாவது

சேதிப் பற்றான இவ்வேரியும்

இக் கழனியும் இத் தூம்பும் கண்டான்

கற்பூண்டி நாட்டுக் கருத்துஉருடைய

இலாடன்மற் மகல் லடாம்பி.

இதே போல் திருக்கோவலூர் வட்டம் ஆமூர் ஏரி, சென்னகுணம் ஏரி, ஆலூர் ஏரி, நத்தமேடு ஏரி, பழங்கூர் ஏரி, திண்டிவனம் வட்டம் திருவம்பட்டு ஏரி, கிடங்கில் ஏரி, உளுந்தூர்ப்பேட்டை வட்டம் திருநறுங்குன்றம் ஏரி மற்றும் சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேரூர் ஏரி உள்ளிட்டவற்றிலும் “தூம்புஎனும் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விவரங்களுடன் “ஏரிகளில் கல் ஆவணங்கள்  எனும் தலைப்பில் முனைவர் கொடுமுடி சண்முகன் அவர்கள் கட்டுரை எழுதியுள்ளார். அதில், இந்த ஆவணங்களில் இருந்து கிடைக்கும் அரிய செய்திகளாகக் கீழ்க்கண்டவற்றை அவர்  பட்டியலிட்டுள்ளார்:

ஏரிகள் அமைக்கப்பட்ட காலம் அறிய முடிகிறது.

ஏரிகள் அமைக்கும் தொழில்நுட்பம் அவ்வப்போது மாறி முன்னேறிய வடிவமைப்புகள் தோன்றியுள்ளன.

எல்லோராலும் ஏரிகளின் தூம்புகள் அமைக்க உதவிகள் நல்கப்பட்டமை தெரிகின்றன.

கரையும் கலிங்கும் பொது நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ளன. பின்னர் தூம்பு பல்வகை மக்களின் உதவியால் அமைந்தன.

மடை, தூம்பு, மதகு என்ற மூன்றுவித கட்டுமானங்கள் இருந்தன.

இன்னொருவர் பெயரில் தூம்பு அமைக்கப் பணம் வழங்கப்பட்டது.

தூம்புகள் தனிப் பெயர் பெற்றிருந்தன.

- - - - - -

கொடுமுடியார் அவர்களின் மேற்காணும் கட்டுரை இடம்பெற்றுள்ள நூல்,

தமிழில் ஆவணங்கள்,

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

வெளியீடு: 2001.

- - - - -

தகவலுக்காக, கோ.செங்குட்டுவன் 

25 செப்டம்பர், 2015 ’அன்று’ 12:29 முற்பகல் அன்று, Suba.T. <ksuba...@gmail.com> எழுதியது:
Page 30-31.JPG
Page 32-33.JPG

N. Ganesan

unread,
Sep 25, 2015, 1:47:48 PM9/25/15
to மின்தமிழ்

On Friday, September 25, 2015 at 6:06:20 AM UTC-7, ko.senguttuvan wrote:

பொறிஞர் கொடுமுடி ச.சண்முகன் அவர்கள், “தூம்புஎனும் சொல்லையே பயன்படுத்தியிருக்கிறார்.

கொடுமுடியார் கட்டுரை பார்த்துச் சொன்னதற்கு  நன்றி, திரு. செங்குட்டுவன். தூம்பு என்பது பல இடங்களிலும் வருவது. தூபு அரிய பயன்பாடு. மெய்யூர்க் கல்வெட்டுச் சான்று நன்னூல் உரைஆளுமைக்கு நல்ல விளக்கமாக அமைந்துள்ளது.

நா. கணேசன்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவலூர் வட்டம் மேல்வாலையில் உள்ள ஏரி மதகுக் கல்வெட்டு (கி.பி.920) கீழக்காணும் தகவலைத் தருகிறது.

தேமொழி

unread,
Sep 26, 2015, 5:18:01 AM9/26/15
to மின்தமிழ், ksuba...@gmail.com

On Thursday, September 24, 2015 at 11:59:41 AM UTC-7, Suba.T. wrote:

2015-09-21 18:06 GMT+02:00 dorai sundaram <doraisu...@gmail.com>:
விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், பொ.மெய்யூர்
என்னும் சிற்றூரில்  மயிலாடும்பாறை என ஊர் மக்கள் குறிப்பிடும் பாறையில் ஒரு கல்வெட்டைக் கண்டிருக்கிறார் அவ்வூரைச் சேர்ந்த ச.குப்பன் என்பவர். அக்கல்வெட்டின் ஒளிப்படத்தை அனுப்பியிருந்தார்.
அது ஓர் அருமையான கல்வெட்டு. இராசராசனின் தமையன் ஆதித்த கரிகாலன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு. கல்வெட்டில் ஆதித்த கரிகாலன் ”வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி” எனக்குறிப்பிடப்பெறுகிறான். 
ஒளக் கண்டனாகிய சிங்க முத்தரையன் என்பவன் ஊருக்கான ஏரியைப் பராமரிப்பதற்காக அரைக்(காணி) நிலம் வரி நீக்கிக் கொடுத்ததோடு  ஏரியின் மேலைப் பகுதியில் கல்லால் ஆகிய தூம்பும் செய்து கொடுத்துள்ளான்.  ஏரியைப் பராமரிக்க அளிக்கப்படும் நிலக்கொடை
“ஏரிப்பட்டி” என்று குறிப்பிடப்படுகிறது.  ”பட்டி” என்பது நிலத்தைக்குறிக்கும். சில நடுகற்களில் வருகின்ற “உதிரப்பட்டி” என்னும் சொல்லை ஒப்பிடுக. இறந்த வீரனின் குடும்பத்தாருக்கு (இரத்த உறவு உள்ளவர்) நிலம் கொடையாக அளிக்கப்படுவதை “உதிரப்பட்டி” என்பார்கள். கல்வெட்டுப்பாடமும் கல்வெட்டுப்படமும் கீழே தரப்பட்டுள்ளன.

ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டியனைத்தலை
கொண்ட கோப்பரகேசரி ப(ந்)மற்கு யாண்டு
............வது மிலாடுக்குறுக்கைக் கூற்றத்து
..... உடைய ...ஒளகண்டனாகிய சிங்க
....னேன்  இவூர்க்கு நஞ்செயரை
..(ஏ)ரிப்பட்டியாக இறைஇழிச்சி உ(ப)
யஞ்செய்த அட்டிக்குடுத்தேன் சிங்க(மு)
தரையனேந் இத்தர்மம் ரக்‌ஷித்தான் பா
தம் என்றலைமேலன இதிறக்கினான் கெ
ங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்
தார் செய்த பாவமெல்லாங்கொள்வான்
மேலை கற்றூபும் இட்டாருமிவரே

”கற்றூபும்” எனப்பிழையாகப் பொறித்திருக்கிறார்க்ள். “கற்றூம்பும்”
என்பதே சரி. கல்+தூம்பு=கற்றூம்பு.
துரை.சுந்தரம்.

​மிக அருமை.

இந்தப் பதிவை மின் தமிழ் மேடையில் இணைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

மின்தமிழ் மேடையில் ...
மயிலாடும்பாறைக் கல்வெட்டு 

சுபா

N. Ganesan

unread,
Oct 1, 2015, 2:30:13 AM10/1/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
கோபுரம் என்னும் தலைப்பில் விக்கியில் கோ + புறம் எனப் பிரித்து ஒரு விநோத விளக்கம்:
”The Tamil derivation is from the two words: கோ (kō) and புறம் (puram) meaning 'King' and 'exterior' respectively.[5] It originates from the Sangam age when it was known as ஓங்கு நிலை வாயில் (ōnggu nilai vāyil) meaning 'imperishable gateway'.[6]

கோபுர என்பது தமிழில் மிகப் பிற்காலத்தில் - உ-ம்: பல்லவர் ஆட்சியில் எழுந்த தேவாரங்கள் - வருகிறது எனப் பார்த்தோம். ஆனால், அதற்கும் சுமார் 1000 ஆண்டு முன்னரே வட இந்தியாவில் இதிஹாசங்களில் ஆளப்படுகிறது. கோபுரம் என்னும் த்ராவிடச்சொல்லை go+pura என்று வடமொழிச் சொற்களால் பிரிப்பது வழக்கம்.
மெய்ர்ஃகாபர் அவ்வாறு செய்தார்.  அதன்பிறகு பல சம்ஸ்கிருத அறிஞரும் அவ்வாறே. ”Siegfried Lienhard considers this Tamil derivation but offers a new derivation from the Sanskrit word, गोपुर, is often translated as "town gate". Separately, it consists of two words go, with the possible meanings of "cow" or "sky", and pura, meaning city.[7]

விக்கி தரும் விளக்கம் இரண்டுமே தமிழின் இயல்புக்குப் பொருந்தாது உள்ளது. எனவே, gOpura = gOpu (< kOpu) + ra (& not go + pura)
See the following examples:
(1) தூ- : தூபு = தூம்பு (நன்னூல் உரை, மெய்யூர் ஆதித்தசோழன் கல்வெட்டு)
(2) நூ- : நூபு > நூபுர (=சிலம்பு, கிண்கிணி) 
நூ- ஒலித்தல், இசைத்தல். சிலம்பியின் வாயில் வருவது நூல்.
புல்லி > பல்லி போல, நுவ்வி > நவ்வி (மயில்). நுவலு-/நுவ்வலு- < நூலு-
{தும்புரு:தம்புரா. குஞ்சர போல -ர விகுதி}
(3) பா- : பாபு = பாம்பு (குமாரிலபட்டர் 7-ஆம் நூற்றாண்டு)
(4) கோ- : கோபு = கோம்பு. -ர விகுதி ஏற்று கோபுர. கூம்பி இருக்கும் பெருமாள் திருமண் நாமத்தைக் கோபி (< கோபு-) என்கிறோம். கொங்கில் கோபிச்செட்டிபாளையம் உள்ளது.

"மழையாடு மலையின் நிவந்த மாடமொடு 
வையை யன்ன வழக்குடை வாயில்" (355-6)
                             - மதுரைக்காஞ்சி
"கோபுர மன்றி வாசலை மாடமாகவுஞ் சமைத்தலின், மாட மென்றார்." 
மாடம் செவ்வகமாகவும் இருக்கும். உ-ம்: பூம்புகார் எழுநிலை மாடம். ஆனால், கோபுரம்
கோபு/கோம்பு போலக் கூம்பி இருக்கும். கோபுர = கோபு+ர.

உயரமான கோபுரம் முதலில் வட இந்தியாவில் எழுப்பப்பட்டது. இதனை go + pura என்னும் வடசொற்களால் பிரித்தால்
கட்டிடக்கலைக்கும் கோபுரம் என்னும் த்ராவிடச்சொல்லுக்கும் பொருள் இல்லாது போய்விடுகிறது. கோபு+ர எனப் பிரித்து
(ra-pratya, where the final -ra is possessive suffix as in kunjara, tambura etc.,) பொருள் காணலாம்.

ஐரோப்பிய மொழிகளில் நிகழ்ந்துள்ள கோபுரம் மீதான 3 ஆய்வுகள்:
ஆனால், தூபு/தூம்பு போல கோபு/கோம்பு என்பது குறிக்கப்படவில்லை.
கோபுரம் என்னும் த்ராவிட வார்த்தை ஸம்ஸ்கிருத இதிஹாசங்களில்
உருவாகும் விதத்தை உணர தூபு/தூம்பு, நூபு/நூம்பு, கோபு/கோம்பு
போன்ற இணைச்சொற்களைப் பார்த்தல் அவசியம்.

~NG

N. Ganesan

unread,
Oct 1, 2015, 10:42:49 AM10/1/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
முனைவர் காளைராஜன் எழுதினார்:

NG> உயரமான கோபுரம் முதலில் வட இந்தியாவில் எழுப்பப்பட்டது. இதனை go + pura என்னும் வடசொற்களால் பிரித்தால்

> கட்டிடக்கலைக்கும் கோபுரம் என்னும் த்ராவிடச்சொல்லுக்கும் பொருள் இல்லாது போய்விடுகிறது. கோபு+ர எனப் பிரித்து
> (ra-pratya, where the final -ra is possessive suffix as in kunjara, tambura etc.,) பொருள் காணலாம்.

இலக்கணப்படி,
கோபுரம் = கோ(நெடில்)+ புரம்(குறில்+குறில்+மெய்) என்றுதான் பிரித்துப் பொருள் கூற வேண்டியுள்ளது.

எந்த இலக்கணம் இவ்வாறு கூறுகிறது? நீங்கள் கூறுவது பொருள் கூறுவதற்காக அல்ல.
செய்யுள்களில் சீருக்குச் சீர், அடிக்கு அடி ஓசைநயத்துக்காக.

சொற்பிறப்பியலுக்கும் அதற்கும் ஒரு தொடர்புமில்லை. கோபு/கோம்பு > கோபு+ர (cf. தூபு/தூம்பு, பாபு/பாம்பு, நூபு/நூம்பு (நூபுர)).

பாம்பு -ர விகுதி ஏற்று பாம்புரம் என ஊர்ப்பெயர் வருகிறது. தேவார ஸ்தலம். பாம்பு+ர > பாம்புரம், கோபு+ர கோபுரம்,
தும்பு > தம்பு+ர தம்புர (நரம்புக்கருவி) போல.
துஞ்சுநாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடுசோதி எம்பெருமான்
நஞ்சுசேர் கண்டம் உடைய என்நாதர் நள்ளிருள் நடம்செயும் நம்பர் 
மஞ்சுதோய் சோலை மாமயில் ஆட மாட மாளிகை தன்மேல் ஏறிப் 
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் ’பாம்புர’ நன்னகராரே. -திருஞானசம்பந்தர்

திருப்பாம்புரம் (= பாம்பு +ர ) நடராஜசுந்தரம்பிள்ளை மகன் சுவாமிநாதபிள்ளை
சீர்காழி கோவிந்தராஜனுக்கு இசை கற்பித்தவர். பாம்புரம் சேஷபுரி என வடமொழிப்படுத்தப்பட்டுள்ளது.

நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 1, 2015, 11:30:56 AM10/1/15
to mintamil

On 01-Oct-2015 8:12 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>
> முனைவர் காளைராஜன் எழுதினார்:
>>
>> NG> உயரமான கோபுரம் முதலில் வட இந்தியாவில் எழுப்பப்பட்டது. இதனை go + pura என்னும் வடசொற்களால் பிரித்தால்
>>
>> > கட்டிடக்கலைக்கும் கோபுரம் என்னும் த்ராவிடச்சொல்லுக்கும் பொருள் இல்லாது போய்விடுகிறது. கோபு+ர எனப் பிரித்து
>> > (ra-pratya, where the final -ra is possessive suffix as in kunjara, tambura etc.,) பொருள் காணலாம்.
>>
>> இலக்கணப்படி,
>> கோபுரம் = கோ(நெடில்)+ புரம்(குறில்+குறில்+மெய்) என்றுதான் பிரித்துப் பொருள் கூற வேண்டியுள்ளது.
>
>
> எந்த இலக்கணம் இவ்வாறு கூறுகிறது? நீங்கள் கூறுவது பொருள் கூறுவதற்காக அல்ல.
> செய்யுள்களில் சீருக்குச் சீர், அடிக்கு அடி ஓசைநயத்துக்காக.
>
> சொற்பிறப்பியலுக்கும் அதற்கும் ஒரு தொடர்புமில்லை.

அப்படியா ஐயா!
தாங்கள் மேலே சொல்லியுள்ளபடிச் சொல்லியுள்ள இலக்கண நூல் எது ஐயா?

N. Ganesan

unread,
Oct 1, 2015, 12:10:35 PM10/1/15
to மின்தமிழ், kalair...@gmail.com

On Thursday, October 1, 2015 at 8:30:56 AM UTC-7, kalai wrote:

On 01-Oct-2015 8:12 pm, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>
> முனைவர் காளைராஜன் எழுதினார்:
>>
>> NG> உயரமான கோபுரம் முதலில் வட இந்தியாவில் எழுப்பப்பட்டது. இதனை go + pura என்னும் வடசொற்களால் பிரித்தால்
>>
>> > கட்டிடக்கலைக்கும் கோபுரம் என்னும் த்ராவிடச்சொல்லுக்கும் பொருள் இல்லாது போய்விடுகிறது. கோபு+ர எனப் பிரித்து
>> > (ra-pratya, where the final -ra is possessive suffix as in kunjara, tambura etc.,) பொருள் காணலாம்.
>>
>> இலக்கணப்படி,
>> கோபுரம் = கோ(நெடில்)+ புரம்(குறில்+குறில்+மெய்) என்றுதான் பிரித்துப் பொருள் கூற வேண்டியுள்ளது.
>
>
> எந்த இலக்கணம் இவ்வாறு கூறுகிறது? நீங்கள் கூறுவது பொருள் கூறுவதற்காக அல்ல.
> செய்யுள்களில் சீருக்குச் சீர், அடிக்கு அடி ஓசைநயத்துக்காக.
>
> சொற்பிறப்பியலுக்கும் அதற்கும் ஒரு தொடர்புமில்லை.

அப்படியா ஐயா!
தாங்கள் மேலே சொல்லியுள்ளபடிச் சொல்லியுள்ள இலக்கண நூல் எது ஐயா?

Yes, Aiya.

தமிழறிஞர்கள் எழுதிய இலக்கண நூல்கள். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணங்கள்.
தமிழில் எந்த இலக்கண நூலும் பொருள்கொள்ள
ஓசை நயத்துக்ககப் பிரிப்பது  போலப் பிரித்துப் பொருள் கொள்க எனச் சொல்லவில்லை.
Reply all
Reply to author
Forward
0 new messages