ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

481 views
Skip to first unread message

Geetha Sambasivam

unread,
Dec 17, 2010, 5:52:58 AM12/17/10
to மின்தமிழ்
indexமாணிக்கவாசகர்.jpg
மின் தமிழில் சைவத்தைப் பற்றிய கட்டுரைகள் வருவதில்லை என்பது ஒரு கருத்து.  அதனால் மார்கழி மாதத்தை முன்னிட்டு மாணிக்க வாசகரின் திருவெம்பாவை பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.  எளிமையாகவே கூற முயற்சிக்கிறேன்.  கடினமான வார்த்தைகளைப் போட்டோ, தத்துவங்களைக் கூறியோ எழுதப்போவதில்லை.  என் போன்ற சாமானியருக்கும் மனதில் பதியுமாறு எழுத முயல்கிறேன்.
********************************************
முதலில் மாணிக்கவாசகர் பற்றிய சிறு குறிப்பு:

காலம் பற்றிய பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.  ஆனால் சைவப்பெரியோர்கள் பலரும் இவர் அப்பர், சுந்தரர், ஞாநசம்பந்தர் மூவருக்கும் மூத்தவர் என அறுதியிட்டுச் சொல்கின்றனர்.  பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்த இவர் அந்த ஊரின் பெயராலேயே வாதவூரார் எனவும் அழைக்கப் பட்டார். அமாத்ய பிராமணர் வகுப்பில் பிறந்த இவர் இளம் வயதிலேயே அனைத்துக் கலைகள், மொழியில் பாண்டித்தியம் பெற்றுத் திகழ்ந்தார்.  அமாத்யர் என்பது அமைச்சர் என்பது வடமொழிச் சொல்லாகும்.  இந்தக் குலத்தில் பிறந்தவர்கள் அமைச்சர்களாக இருந்து வந்தார்கள்.  அதை ஒட்டி இவரும் அரிமர்த்தன பாண்டியனின் அவையில் முதல் அமைச்சராக இருந்தார்.  இவரைத் தென்னவன் பிரமராயன் என்ற சிறப்புப் பெயரால் அலங்கரித்தான். 

எனினும் இவருக்கு அரண்மனையிலும், அரசபோக வாழ்விலும் மனம் ஒட்டவில்லை.  என்றுமே தில்லையில் நின்றாடும் அம்பலக்கூத்தனின் நினைவிலேயே மனம் சென்று கொண்டிருந்தது.  ஆனாலும் மன்னனுக்குத் தக்க சமயம் நல்ல அறிவுரைகள் கூறி அவனை நல்வழிப்படுத்தி வருவது தன் கடமை என்பதை மறக்காமல் மக்கள் பணியே மகேசன் பணி  எனத் தொண்டாற்றி வந்தார்.  ஒரு சமயம் சோழநாட்டுக் கடற்கரையில் நல்ல குதிரைகள் வந்திருப்பதைக் கேள்விப் பட்ட மன்னன் தன் குதிரைப் படைக்கு அவற்றை வாங்க நினைத்து திருவாதவூராரிடம் வேண்டிய பொருளைக் கொடுத்துக் குதிரைகள் வாங்கி வர அனுப்பி வைத்தான்.  பரிவாரங்கள் உடன்வர வாதவூரார் சொக்கநாதரைத் தொழுதேத்திவிட்டுக் கிளம்புகிறார். 

திருப்பெருந்துறை என்னும் ஊரைக் கடந்தே குதிரைகள் வந்திருக்கும் துறையை அடையவேண்டும்.  திருப்பெருந்துறைக்கு அருகே செல்லும்போது அங்கே ஓர் அழகான சோலையில், "ஹர ஹர" என்ற சிவநாம முழக்கம் கேட்டது.  வாதவூரார் மனம் உருகி சோலையை நோக்கிச் சென்றார்.  அங்கே ஓர் குருந்த மரத்தினடியில் தன் சீடர்கள் புடைசூழக் குருவாக அமர்ந்திருந்த ஈசனைக் கண்டு மெய்ம்மறந்தார் வாதவூரார்.  கண்ணீர் சோர ஈசனின் திருவடிகளில் விழுந்து பணிந்து, தம்மை ஆட்கொள்ளவேண்டும் என வேண்ட, ஈசனும் அவர் பால் மனம் கனிந்து அவருக்கு உண்மைப் பொருளை உபதேசித்தார்.  பேராநந்தப்பெருவெள்ளத்தில் திளைத்த வாதவூரார் ஈசனின் அடிகளை நினைந்து நினைந்து மனம் உருகித் தம்மை மறந்து அழகிய தமிழ்ப்பாடல்களைப் பாடி இறைவனுக்குப் பாமாலை சூட்டினார்.  அவற்றைக் கேட்ட ஈசன் மனம் மகிழ்ந்து ஒவ்வொன்றும் மாணிக்கம் போன்று மாசற்று ஒளிவீசித் திகழும் பாக்கள் எனப் பாராட்டிவிட்டு, வாதவூராரின் பெயரை இனி மாணிக்கவாசகர் என அழைக்கவேண்டும்  என்ற சிறப்புப் பெயரையும் சூட்டினார்.  சில நாட்கள் இங்கே தங்கி எமக்குப் பணிவிடைசெய்வாயாக என மாணிக்க வாசகரைப் பணித்துவிட்டு ஈசன் மறைகிறார்.

ஓர் அமைச்சனாக சர்வ பரிவாரங்களோடும், படைகளோடும் அரசவை வேலைக்குரிய ஆடைகள் அணிந்து வந்த மாணிக்க வாசகர் இப்போது அனைத்தையும் துறந்தார். ஓர் மெய்த்துறவியாக மாறினார்.  எந்நேரமும் சிவநாமமே தம் உயிர்மூச்சாய்க் கொண்டு வெண்ணீறணிந்து ஈசன் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டு அதனால் மனம் கனிந்து கண்ணீர் பெருக்கி ஈசன் நினைவாகவே இருந்தார்.  தாம் கொண்டு வந்த பொருளை எல்லாம் திருக்கோயில் பணிகளுக்கு எனச் செலவிட்டுவிட்டார்.  குதிரைகள் வாங்கவே இல்லை.  மாணிக்கவாசகரின் இந்தச் செயல் மன்னன் காதுகளுக்கு எட்ட அவரின் பக்திக்காக அரசாங்கப் பணத்தைச் செலவிட்டுவிட்டாரே எனக் கோபம் கொண்ட மன்னன் அவரை உடனே குதிரையுடன் வருமாறு ஓலை அனுப்பினான்.

எங்கே போவது குதிரைகளுக்கு?? மாணிக்கவாசகர் பெருந்தூக்கத்திலிருந்து விழித்தவர் போலானார்.  பாண்டியனது ஓலையைக் கண்டதும் செய்வதறியாது துடித்தார்.  பெருந்துறைப் பெருமானிடமே வேண்டினார்.  அவரின் துன்பம் கண்டு மனம் பொறுக்காத ஈசன், அவரைப் பாண்டிய நாடு செல்லுமாறும் தாம் ஆவணி மாதம் மூல நக்ஷத்திர தினத்தன்றுக் குதிரைகளோடு வருவதாயும் கூறி, ஒரு மாணிக்கக் கல்லையும் கொடுத்து அதை மன்னனுக்குக் கையுறையாகக் கொடுக்குமாறும் கூறினார்.  ஈசனின் இந்த வாக்குறுதியால் மனம் தெளிந்த மாணிக்க வாசகர் மதுரை புறப்பட்டுச் சென்றார்.  மதுரையை அடைந்து பாண்டியனைக் கண்டு மாணிக்க மணியைக் கொடுத்ததுமே மன்னனின் கோபம் சற்றுத் தணிந்தது.  குதிரைகளும் வந்து சேரும் என்ற செய்தியும் கேட்ட மன்னன் தனக்குச் செய்தி தவறாய் வந்திருக்கிறது, மாணிக்க வாசகர் தவறு செய்யவில்லை என நினைத்து மனம் மகிழ்ந்தான்.  அவருக்கு முதல் அமைச்சருக்குரிய மரியாதைகளைச் செய்து சிறப்பித்தான்.

நாளை மூல நக்ஷத்திரம்.  ஆனால் இன்று வரை குதிரைகள் வரவே இல்லையே?? மன்னன் கோபம் அடைவானே?? மாணிக்கவாசகர் தவிக்க, மன்னனுக்கு மீண்டும் சந்தேகம் வர, ஒற்றர்களை அனுப்பி விசாரித்து வரச் செய்திருந்தான்.  அவர்கள் கூறிய தகவல்களால் உண்மை தெரியவர மன்னனுக்குக் கோபம் எல்லை மீறியது.  மாணிக்க வாசகரைச் சிறையில் போட்டு அவரிடம் கொடுத்த பொருளை எல்லாம் அவர் திரும்பத் தர நிர்ப்பந்திக்குமாறு ஏவலாளர்களை ஏவினான்.  அவ்வாறே சென்ற மன்னனின் ஏவலாளர்கள் மாணிக்க வாசகரைச் சிறையிலிட்டுத் துன்புறுத்தினார்கள்.  மாணிக்கவாசகர் ஈசனை நினைந்து மனம் ஆறுதலுடன் அவன் நினைவாகவே இருந்தார்.  எவ்வாறேனும் ஈசன் வந்து தன்னைக் காப்பான் என்ற உறுதியுடன் இருந்தான்.

அந்த சர்வேசனோ தன் அடியார்கள் துன்புறத் தான் இன்புறுவானா? அவனுக்கு எல்லாமே விளையாட்டுத் தான் என்றாலும் அடியாரைச் சோதனை செய்வது என்பது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.  இப்போது மாணிக்கவாசகர் சிறையில் வருந்துவதைக்கண்டதும், சோதனை போதுமெனக் கருதிக் குதிரைச் சேவகனாக வேடமிட்டுக்கொண்டுக் காட்டில் உள்ள நரிகளை எல்லாம் பரிகளாக்கினார்.  என்னே இறைவன் திருவிளையாடல்? அவன் நினைத்தால் குதிரைகளையே கொடுத்திருக்கலாம் அல்லவா?? மீண்டும் ஏன் இப்படிச் செய்கிறான்? மாணிக்கவாசகரின் பெருமையை மன்னன் அறியவேண்டும் என்பதோடு  ஒரு சாமானியப்பெண்ணான வந்தி என்னும் கிழவிக்கும் இதன் மூலம் நன்மை செய்யவேண்டும். மன்னனும் குடிமக்கள் அனைவரும் தம் பிள்ளைகளே என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.  அனைத்துக்குடிமக்களையும் ஒன்றுபோல் நடத்தவேண்டும் என்பதற்காகவுமே.  மன்னன் என்ற மமதை இருக்கக் கூடாது என்பதால்.

நரிகளைப் பரிகளாக்கிய ஈசன் அவற்றை மன்னனிடம் அளிக்கக் குதிரைகளைப் பார்த்துப் பிரமித்த மன்னன் மனம் மகிழ்வடைந்து வாதவூராரைச் சிறையிலிருந்து விடுவிக்கச் செய்கிறான்.  குதிரைகளை எல்லாம் குதிரைச்சேவகனாக வந்த ஈசன் முறைப்படி நடத்திக்காட்டிக் கயிறு மாற்றி மன்னனிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தார்.  அன்றிரவு குதிரை லாயத்தில் நரி ஊளையிடும் சப்தம்.  ஏற்கெனவே லாயத்தில் இருந்த குதிரைகள் கனைத்துக்கொண்டும், கால்மாற்றி வைத்துக்கொண்டும் அவஸ்தைப்பட்டன.  என்னவென்று பார்த்தால் குதிரைச் சேவகன் கொடுத்த குதிரைகளெல்லாம் நரிகளாய் மாறியதோடல்லாம, ஏற்கெனவே இருந்த குதிரைகளையும் கடித்துக் கொன்று அவைகளுக்கு ஊறுகள் விளைவித்துக்கொண்டிருந்தன.  இவர்களைப் பார்த்ததும் அனைத்தும் ஓடி மறைந்தன.  மன்னின் கோபம் இப்போது கட்டுக்கடங்காமல் போகவே மாணிக்கவாசகரைக்கூட்டி வந்து அவர் முதுகில் கற்களை ஏற்றி வையை நதியின் நடுவில் நிறுத்தித் துன்புறுத்தினான்.  ஆனால் அப்போதும் மாணிக்க வாசகர் திருவாசகப் பாடல்களைப் பாடி மனம் ஆறுதல் கொண்டார்.

எனினும் தம் அன்பர் துன்புறுவதை ஈசன் பொறுப்பானா?? வையையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது.  எப்போதும் இல்லாத அளவுக்கு வெள்ளம்.  கரை புரண்டு ஓடிற்று. எப்படி அடைத்தாலும் வெள்ளம் அடைபடவே இல்லை.  பாண்டியன் அணைபோட்டு வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டான்.  வீட்டுக்கு ஒருவர் என மதுரை நகரின் ஆண்கள் அனைவரும் வெள்ளத்துக்கு அணை போட வரவேண்டும் என ஆணையிட்டான்.  அங்கே வந்தி என்னும் மூதாட்டி ஒருத்தி பிட்டுச் சுட்டு விற்று வாழ்க்கை நடத்தி வந்தாள்.  அவளுக்கென அளந்து விட்டிருந்த பங்கை அடைக்க ஆளே இல்லாமையால் மனம் வருந்தி ஈசனே துணை என முறையிட்டாள். 
வந்தார் ஈசன்.  தலையில் முண்டாசு, தோளில் மண்வெட்டி. அரைப்பாய்ச்சுக் கட்டிய வேட்டியோடு வந்தார். வந்திக்கிழவியிடம் தான் அவளின் பங்குக்கு உள்ள வேலையைச் செய்வதாய்க் கூறத் தன்னால் கூலியும் கொடுக்க இயலாது என அவள் மனம் வருந்தினாள்.  கூலியைப்பணமாய்க் கொடுக்க வேண்டாம் எனவும், பிட்டாய்க் கொடுக்குமாறும் ஈசன் வேண்ட, திகைப்புற்ற வந்தி பின்னர் அதற்குச் சம்மதித்தாள்.  ஆயிற்று கூலியாளை வேலைக்கு அனுப்பவேண்டும். அவனோ முதலில் உணவைக் கொடு உண்டுவிட்டுப் போகிறேன் என்றான்.  சரி என்று பிட்டைக் கொடுத்தால் உண்டுவிட்டு, உண்டபின்னர் உறங்குவது என் வழக்கம் உறங்கிவிட்டு வருகிறேன் என்று உறங்க ஆரம்பித்தான். 

மிகவும் கஷ்டத்தோடு அவனை எழுப்பி வேலைக்கு அனுப்பினாலோ, உறங்கி எழுந்த பின்னர் உண்ணவேண்டாமா என்றான்.  ஒருவழியாக அவனைச் சமாளித்து வேலைக்கு அனுப்பினால் மண்வெட்டியால் மண்ணை ஒரு முறை அள்ளுவான்.  பின்னர் நிமிர்ந்து ஓய்வெடுப்பான்.  பெருமூச்சுவிட்டுக்கொண்டே சும்மாட்டை அவிழ்த்து மண்ணைக் கொட்டுவது போலத் தட்டுவான்.  மீண்டும் மண்வெட்டியால் ஒரு போடு , மீண்டும் மேற்சொன்னவை அனைத்தும் நடக்கும்.  அதற்குள் பசி வந்துவிடும், பிட்டுச் சாப்பிடப் போவான். சாப்பிட்டதும் உறக்கம் வந்துவிடும்.  அப்படி ஒருமுறை உறங்கும்போது மேற்பார்வை பார்த்தவர்கள் கூறிய தகவலின் படி வந்தியின் பங்கு அடைபடாமல் இருப்பதைக் கவனிக்க வந்தான் மன்னன். 

வந்தால் வந்தி நியமித்த ஆள் நன்கு உறங்கிக்கொண்டிருந்தான்.  கோபம் கொண்ட மன்னன் தன் கையிலிருந்த பிரம்பால் அவன் முதுகில் ஓங்கி ஓர் அடி அடித்து எழுப்பினான். சுளீர்! என்ன இது? அடித்தது மன்னன், அடி வாங்கியதோ, வந்தியின் கூலியாள்!  ஆனால் மன்னனின் முதுகில் அடி விழுந்த உணர்வு! மன்னன் திகைக்க அங்கிருந்த மக்கள் அனைவருக்குமே அந்த அடி முதுகில் பட்டது. அனைவருமே அடி வாங்கிய உணர்வில் அலறித்துடிக்க,  வாதவூராருக்கு எந்த அடியுமே படவில்லை.  அவ்வளவில் கரை தானாக அடைபட்டுப் போக கூலியாள் மறைந்தான்.  வாதவூரார் உண்மையை உணர்ந்து ஈசனைப் போற்றிப் பாடினார்.  பாண்டியனுக்கு அப்போது தான் வாதவூராரின் பெருமையும், வந்தியின் பக்தியும், தன் மமதையும் புரிந்தது.   மன்னனை மன்னித்து அருளுமாறு வாதவூரார் வேண்ட அவ்வாறே ஆகட்டும் என ஈசன் திருவருள் புரிந்தார்.

அதன்பின்னர் அமைச்சர் பதவியைத் துறந்த மாணிக்கவாசகர் பல ஊர்களுக்கும் தல யாத்திரை மேற்கொண்டார்.  திருப்பெருந்துறை, திரு உத்தரகோசமங்கை போன்ற ஊர்களுக்குச் சென்று தில்லையை அடைந்தார். அங்கே தில்லை வாழ் அந்தணர்களோடு வாதப் போருக்கு வந்த புத்த பிக்ஷுவை வாதில் வென்று ஊமைப் பெண்ணைப் பேச வைத்தார்.  தில்லையம்பலவாணன் மாணிக்கவாசகர் கூறத் தன் திருக்கைகளால் திருவாசகத்தையும் திருக்கோவையாரையும்  எழுதிக்கொண்டு கடைசியில் திருவாதவூரன் சொல்லத் திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது எனக் கைச்சாத்திட்டுவிட்டுக் கனகசபையில் அவற்றை வைத்துவிட்டு மறைந்தார்.  தில்லைவாழ் அந்தணர்கள் அந்தச் சுவடியைக் கண்டு வியந்து மாணிக்கவாசகரிடம் காட்டிப் பொருள் கூறி விளக்கும்படி வேண்ட, அவரோ அனைத்துக்கும் பொருளே இந்தப் பரம்பொருள் எனக்கூறி தில்லையம்பலவாணனின் திருவடிகளில் சென்று மறைந்தார்.
indexமாணிக்கவாசகர்.jpg

Geetha Sambasivam

unread,
Dec 17, 2010, 5:54:36 AM12/17/10
to மின்தமிழ்
இதைத் தொடர்ந்து முதல் இரண்டு திருவெம்பாவைகளும் இன்றிரவுக்குள் இடுகிறேன்.  பின்னர் நாளை, நாளன்றைக்கு மற்றவைகளும் இரண்டிரண்டாக இட முயல்கிறேன்.  திங்களன்று சொந்த வேலையாக ஊருக்குச் செல்வதால் சனிக்கிழமை தான் திரும்ப இடுகையை அளிக்க இயலும்.  நன்றி.

2010/12/17 Geetha Sambasivam <geetha...@gmail.com>
indexமாணிக்கவாசகர்.jpg

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Dec 17, 2010, 5:58:49 AM12/17/10
to mint...@googlegroups.com
திருவாசகம் முழுமையும் தன்னை மறந்து மணிவாசகப் பெருமான் புலம்பிய
புலம்பலே... அவற்றை ஈசன் தானே எழுதித் தொகுத்ததாகப் பெரியோர்கள்
மொழிவார்கள்..
ஈசனடி போற்றி... எந்தையடி போற்றி...

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
என்றும் அன்புடன்
அன்னை அபிராமியின் அருள்
அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அடியேன்
மு. கந்தசாமி நாகராஜன்,
சுப்பிரமணியபுரம்.
--------------------------------
சலுகை போனால் போகட்டும் - என்
அலுவல் போனால் போகட்டும்.
தலைமுறை ஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலை ஆகட்டும்.
--------------------------------
www.chithiram.blogspot.com
www.subramanyapuram.blogspot.com

Mohanarangan V Srirangam

unread,
Dec 17, 2010, 6:47:13 AM12/17/10
to mint...@googlegroups.com
எளிமையாகவே கூற முயற்சிக்கிறேன்.  கடினமான வார்த்தைகளைப் போட்டோ, தத்துவங்களைக் கூறியோ எழுதப்போவதில்லை<<<<<<<< 

இது ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதே :-)) 

2010/12/17 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Dec 17, 2010, 6:51:26 AM12/17/10
to மின்தமிழ்
thiruvannaamalai.jpg

இவை திருவண்ணாமலையில் பாடப்பெற்றவை.  தன்னுள்ளே ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியைக் கண்டு கொண்ட மாணிக்க வாசகர், அப்படிக் கண்டு கொள்ளாமல் மாயையில் மூழ்கி அறியாமை என்னும் இருளில் ஆழ்ந்து, தூங்கிக்கொண்டிருக்கும் அனைவரையும் எழுப்புகிறார்.  மார்கழி மாதத்தில் பராசக்தியை நோக்கி வழிபாடுகள் செய்து நல்ல கணவனுக்காகவும்,நாட்டில் மழை பொழிந்து வளம் சிறக்கவும் பெண்கள் பிரார்த்தனைகள் செய்வார்கள்.  ஆகவே அந்தப்பாவை நோன்பின் போது ஒரு பெண் மற்றவளைப் பார்த்துக் கூறுவது போல் அமைந்த பாடல்களே இவை எல்லாமே. அனைத்துப்பாடல்களும் நாடு வளம் பெறவும், நாட்டு மக்கள் மனம் வளம் பெறவுமே பாடப்பெற்றதாகும்.
arunachal.jpg
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க்கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்!"

வாள் தடங்கண் மாதே,= வாளைப் போல் ஒளி வீசும் அழகிய அகன்ற கண்களை உடைய பெண்ணே,

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும்சோதியை யாம்பாடக் கேட்டேயும் வளருதியோ= அடியும் முடியும் காணமுடியாத பெரும் சோதி வடிவான ஈசனைக் குறித்துப் போற்றி நாங்கள் பாடிய பாடல்களைக் கேட்டும் இன்னமும் தூங்குகிறாயா?? என்ன அழகான சொல் வளருதியோ? வளருதியோ என்றால் தூங்குவது! இப்போ இத்தகைய சொற்பிரயோகங்களையே காணமுடிவதில்லை.

வன்செவியோ நின்செவிதான்=  உன்னுடைய காது என்ன செவிட்டுக் காதா? உனக்குக் கேட்கவே இல்லையே?

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க்கேட்டலுமே= அந்த மஹாதேவனின் சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் வாழ்த்திப் பாடிய வாழ்த்தொலியைக் கேட்டதுமே அந்த மற்றொருத்தி என்ன செய்தாள் தெரியுமா??  அவள் மனம் ஈசனின் நினைவால் நெக்குருகியது.  பக்தி மிகுதியால் கண்கள் கண்ணீரைப் பெருக்கியது.

விம்மி விம்மி மெய்ம்மறந்து=  விம்மி விம்மி தன்னை மறந்து ஈசன் திருவடி ஒன்றையே நினைத்த வண்ணம் இருந்தாள்.

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள்= போதார் அமளி இங்கே படுக்கையைக் குறிக்கும். படுக்கையிலிருந்து புரண்டு எழுந்து, நின்று, கிடந்து என என்ன செய்வது எனப் புரியாமல் அவன் திருவடி ஒன்றையே நினைத்து நினைத்து மனம் உருகிக்கொண்டிருக்கிறாள்.  நீயானால் நாங்கள் இவ்வளவு எழுப்பியும்  இன்னும் எழுந்திருக்காமல் இருக்கிறாயே?
********************************************

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல்நாம்
பேசும்போதெப்போதிப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசீ இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர்யாம் ஆரேலோர் எம்பாவாய்.

நேரிழையாய் நேரிழையீர்= உனக்கேற்ற அழகான ஆபரணங்களைப் பூண்ட பெண்ணே,

 பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம் பேசும்போதெப்போபோதிப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ = நாம் பேசும்போதெல்லாம் இரவும் பகலும் எல்லா நேரமும் என் அன்பு, பக்தி அனைத்தும் அந்தப் பரஞ்சோதியான ஈசனுக்கே என்பாயே? இப்போ என்னவென்றால் படுக்கையை விட்டே எழுந்திராமல் இந்தப் படுக்கையின் மேல் பாசமும், நேசமும் வைத்தாயோ?" துயிலெழுப்ப வந்த பெண்கள் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணைக் கேட்க அவள் பதில் கூறுகிறாள்.

சீசீ இவையும் சிலவோ விளையாடி=பெண்களே, இது என்ன விளையாட்டு??
ஏசும் இடம் ஈதோ=இப்படி என்னை ஏசிக்கொண்டு இத்தைய சொற்களைப் பேசும் இடம் இதுவல்லவே என்று அவர்களைக் கடிந்து கொள்கிறாள்.  வந்த பெண்களும் மனம் மகிழ்ந்தார்கள்.  மேலும் சொல்கின்றனர்.

விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்= விண்ணோர்களான தேவாதி தேவர்களே புகழ்ந்து பாராட்டக் கூசுகின்ற அழகான மலர்ப்பாதங்களை உடைய ஈசனின் திருவடிகளை நமக்குப் பற்றெனப் பிடிப்பதற்காகத் தந்தருள இவ்வுலகில் எழுந்தருளிய ஞானகுருவான

தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு =சிவலோகத்துக்கு அதிபதியும், தில்லைச் சிற்றம்பலத்தில் நித்தியம் நடனம் ஆடிக்கொண்டிருப்பவும் ஆன ஈசனுக்கு

அன்பு ஆர்யாம் ஆரேலோர் எம்பாவாய்= நாம் செய்யும் அன்பு எவ்வளவு உயர்ந்தது?? அன்பு செய்யும் அடிமைகளாகிய நாம் மேலும் மேலும் ஈசனிடம் அன்பு செய்யும் வண்ணம் எழுந்து வா என்றார்கள்.

arunachal.jpg
thiruvannaamalai.jpg

Geetha Sambasivam

unread,
Dec 17, 2010, 6:52:13 AM12/17/10
to mint...@googlegroups.com
 நான் மறுபடியும் ஊரிலே இல்லை!

2010/12/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
எளிமையாகவே கூற முயற்சிக்கிறேன்.  கடினமான வார்த்தைகளைப் போட்டோ, தத்துவங்களைக் கூறியோ எழுதப்போவதில்லை<<<<<<<< 

இது ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதே :-)) 

2010/12/17 Geetha Sambasivam <geetha...@gmail.com>
இதைத் தொடர்ந்து முதல் இரண்டு திருவெம்பாவைகளும் இன்றிரவுக்குள் இடுகிறேன்.  பின்னர் நாளை, நாளன்றைக்கு மற்றவைகளும் இரண்டிரண்டாக இட முயல்கிறேன்.  திங்களன்று சொந்த வேலையாக ஊருக்குச் செல்வதால் சனிக்கிழமை தான் திரும்ப இடுகையை அளிக்க இயலும்.  நன்றி.

360.gif

Mohanarangan V Srirangam

unread,
Dec 17, 2010, 7:16:48 AM12/17/10
to mint...@googlegroups.com
ஓ ஊரில இல்லைங்கறதுக்கு இதான் அர்த்தமா? 
360.gif

karuannam annam

unread,
Dec 17, 2010, 7:53:09 AM12/17/10
to mint...@googlegroups.com
நல்ல தொடக்கம் அம்மா. தொடர்ந்து படிக்க ஆவல்.

. கூலியைப்பணமாய்க் கொடுக்க வேண்டாம் எனவும், பிட்டாய்க் கொடுக்குமாறும் ஈசன் வேண்ட, திகைப்புற்ற வந்தி பின்னர் அதற்குச் சம்மதித்தாள். 

"வாடிக்கையாளர் குறைதீர் சட்டம், உரிமைகள்" வகுப்புகளில் நான் இக்கருத்தை மேற்கோள் காட்டுவதுண்டு. ஒரு சேவையையோ அல்லது பொருளையோ விலை கொடுத்துப் பெற்றவர் வாடிக்கையாளர் ஆகிறார். சிவபெருமான் கூலி கொண்டிராவிட்டால் அக்கோவால் மொத்துண்டிருக்க வேண்டாம். பிறருக்காகப் புண்சுமந்த பொன்மேனி, பாடுபட்ட சொரூபம் எங்கும் போற்றப்படுகிறது.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Geetha Sambasivam

unread,
Dec 18, 2010, 4:52:49 AM12/18/10
to மின்தமிழ்
முத்தன்ன வெண்ணகையாய் முன் வந்தெதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.

முத்தன்ன வெண்ணகையாய்= முத்துப் போன்ற வெள்ளைச் சிரிப்புடையவளே, முத்து ஒளிர்வது போல் உள்ளத்தில் கள்ளமில்லாமல் வெள்ளைச் சிரிப்புடையவளே என்றும் கூறலாம்.
தோழியை இவ்வாறு அழைத்து மேலும் கூறுகிறாள்.
முன் வந்து எதிர் எழுந்து= எங்களுக்கெல்லாம் முன்னாடியே நீ எழுந்துவிடுவாயே?

என் அத்தன் ஆநந்தன் அமுதன் என்றள்ளூறி= ஈசனை என் அப்பன், என் தந்தை இன்பமே வடிவானவன், அமுதமானது அதை உண்டவரை எவ்வாறு வாழ்விக்கிறதோ அவ்வாறே ஈசனின் நாமத்தை நினைப்பவரையும், சொல்பவரையும் வாழ்விப்பவன் என்று உன் வாயில் எச்சில் ஊறும் வண்ணம்

தித்திக்கப் பேசுவாய் வந்து உன் கடைதிறவாய்= இனிமையான மொழிகளைப் பேசுவாயே, இப்போது வந்து உன் வீட்டு வாசல் கதவைக் கூடத் திறக்காமல் இருக்கிறாயே?? வந்து கதவைத் திற. 

என்று இவ்விதம் தோழிப் பெண்கள் கூற வீட்டினுள் இருப்பவள் உள்ளே இருந்த வண்ணமே கூறுகிறாள்.
பத்துடையீர்= இந்தப் பத்துடையீருக்கு இருவிதமான பொருள் சொல்லப் படுகிறது.  ஒரு பொருளானது ஈசன் மேல் தீராத பற்றுடைய பக்தர்கள் என்றும், மற்றொரு பொருள், சிவனடியார்களுக்குப் பத்து குணங்கள் உண்டு எனவும் அதைச் சுட்டுவதாயும் கூறுகின்றனர்.  எது சரியான பொருள் எனக் கற்றறிந்த அறிஞர்களே தெளிவாக்கவேண்டும். அடியார்களுக்கான பத்து குணங்களாய்ச் சொல்லப்படுபவை:
1.நீறும், சிவமணியும் அணிதல்
2.குருவழிபாடு
3.சிவதோத்திரம் செய்தல்
4.மந்திரம் செபித்தல்
5.இறைவழிபாடான சிவபூசை செய்தல்
6.பதிபுண்ணியங்களைச் செய்தல்
7.சிவபுராணம் கேட்டல்
8.சிவாலய பரிபாலனம் செய்தல்
9.சிவனடியாரிடம் உணவு அருந்துதல், அருந்துவித்தல்,
10.அடியார்களுக்கெல்லாம் அடியானாக இருத்தல். மேற்கண்ட பத்து குணங்களையும் உடையவர்கள் என்று  உள்ளிருப்பவள் தன் தோழிப்பெண்களைச் சொல்வதாயும் பொருள் வருகிறது. 
ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்= ஈசனின் பழமையான அடியார்களான நீங்கள் அனைவரும் எனக்குத் தோழிகள் ஆவீர்கள்.
புத்தடியோம் புன்மை தீர்த்து= ஆ, ஆ, நானோ இப்போது தான் புதியவளாக ஈசனின் அடியாராக ஆகியுள்ளேன். அத்தகைய புத்தடியாரான எங்கள் சிறு சிறு குற்றங்களைப் பொறுத்துக்கொண்டு எம்மை மன்னித்து ஆட்கொண்டால் பொல்லாதோ=ஆட்கொண்டால் அது உமக்கு ஒருக்காலும் தீங்காகாதே?" என்று கேட்க, அழைக்க வந்த தோழிகள் மறுமொழியாய்
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ= நீ எவ்வளவு அன்புள்ளவள் என்பதை நாங்கள் அறியாமலா இருப்போம்?

சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை= உடல் மட்டுமில்லாமல் உள்ளமும் அந்த ஈசனையே நினைப்பதால் அழகியான பெண்கள் சிவனைப் பாடாமல் இருப்பார்களா?

இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்= உன்னை அழைக்க வந்த எங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும், சரி, போனால் போகட்டும் நீ எழுந்து வா பெண்ணே!

Tthamizth Tthenee

unread,
Dec 18, 2010, 5:11:05 AM12/18/10
to mint...@googlegroups.com
 
‘சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை= உடல் மட்டுமில்லாமல் உள்ளமும் அந்த ஈசனையே நினைப்பதால் அழகியான பெண்கள் சிவனைப் பாடாமல் இருப்பார்களா?”
 
சித்தம் அழகிய  ! ஆம்  சித்தத்திலே தெளிவுடன், பக்தியும் கொண்டு நேர்மையும் கொண்டு, நற்சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு  தங்கள் சித்தத்தையே தூய்மையாக வைத்திருந்து சித்தராகவே வாழும்  பெண்கள் சிவனைப் பாடாமல் இருப்பரோ?
 
அழகு அழகு
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/12/18 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 18, 2010, 6:11:59 AM12/18/10
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
நன்றி திருமதி.கீதா,
 
சிவ நாமம் ஒலிக்க இந்த இழையைத் தொடங்கியமைக்கு எமது நன்றிகள். மார்கழியில் இவ்வகை நல்ல காடுரைகளை வாசித்து உணர்ந்து இறை சிந்தனையில் இலயித்திருப்போம்.  
 
எனது உள்ளம் கவர்ந்த என்னை உருக வைக்கும் திருவெம்பாவையில் ஒரு  பாடல்.
 
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்
 
அன்புடன்
சுபா

2010/12/17 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Dec 18, 2010, 6:17:35 AM12/18/10
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
இந்தப் பாடலுக்கு சுபாவே ஒரு சிறப்பு விளக்கம் எழுதினால் நன்றாக இருக்குமே!

2010/12/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--

Subashini Tremmel

unread,
Dec 18, 2010, 6:34:20 AM12/18/10
to Mohanarangan V Srirangam, mint...@googlegroups.com
இது வம்பு தானே. பாடலை நான் உணர்ந்திருக்கின்றேன். இசையோடு பாடும் போது மனம் உருகுகின்றது. கண்களில் கண்ணீர் வருகின்றது இறையருளை நினைத்து. ஆனால் விளக்கம் எழுதும் அளவிற்கு எனக்கு புலைமை இல்லை ரங்கனாரே. திருமதி கீதாவின் விளக்கத்தை தொடர்ந்து வாசித்து இன்புறுவோம்.
 
இந்த திருவெம்பாவை பாடல்களை நன அறிந்து கொண்டதே மலேசிய இந்து சங்கம் என்ற அமைப்பின் வழியாகத்தான். இளம் வயதில் வருடா வருடம் தேவாரப் பாடல் போட்டிகளில் கலந்து பாடி பரிசு பெற்ற அந்த பொன்னான காலங்கள் மறக்க முடியாதவை. போட்டியில் பரிசு பெற வேண்டுமே என்ற பாடல்களை முன்னர் கற்றோம். ஆனால் அவை மனதிலேயே நிறைந்து நின்று இன்றளவும் புத்துணர்ச்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
 
அன்புடன்
சுபா

2010/12/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

LK

unread,
Dec 18, 2010, 6:36:31 AM12/18/10
to mint...@googlegroups.com
வம்பு இல்லை அம்மா. என்னை போன்றோர்களுக்கு உதவும் 

2010/12/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com

Mohanarangan V Srirangam

unread,
Dec 18, 2010, 6:40:53 AM12/18/10
to mint...@googlegroups.com
2010/12/18 LK <karthik.lv@gmail.com>
வம்பு இல்லை அம்மா. என்னை போன்றோர்களுக்கு உதவும் 

அருமைத் தம்பி கார்த்திக். அப்படிப் போடு. கீதாம்மாவின் அருமையான எளிய விளக்கம். 

உங்களுடைய அனுபவ ரீதியான தோய்ந்த சிறப்பு விளக்கம் 
அனைத்தும் சேர்ந்து ஏன் ஒரு நல்ல திரட்டாக ஆகக்கூடாது? 

Tthamizth Tthenee

unread,
Dec 18, 2010, 6:48:27 AM12/18/10
to mint...@googlegroups.com
”ஏன் ஒரு நல்ல திரட்டாக ஆகக்கூடாது?”
 
அதானே!
   நல்ல  யோசனை
 
சுபாவும் எழுதணும்
 
நாமெல்லாம் படிச்சு மகிழணும் 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/12/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
ஏன் ஒரு நல்ல திரட்டாக ஆகக்கூடாது? 

Astrologer Vighnesh சென்னை

unread,
Dec 18, 2010, 6:58:20 AM12/18/10
to mint...@googlegroups.com
சுபா 
அவர்கள் இருவரும் திரு ரங்கன்ஜி திரு தமிழ்தேனீ சாரும் சொன்னதையே கொஞ்சம் வித்தியாசமா கோறுகிறேன். உங்களுக்கு ஆனந்த பாஷ்பம் வரவைத்த அந்த அனுபவங்களை அந்த வரிகளை எவ்வாறு உணர்ந்தீர்கள் என்பதை எடுத்துச் சொல்லலாமே. திருவாசகத்திற்கு உறுகாதார் ஒரு வாசகத்திற்கும் உறுகார் என்பது பழையமொழி. எனக்கும் பாட்டிறகு விளக்கம் அளிக்கும் அளவிற்கு ஞானம் இல்லையென்றாலும் தருமபுரம் சுவாமிநாதன் பாடிய 10பாடல்கள் எனக்கு கண்களில் நீரை தாரையாக வரவழிக்கும்.  மனம் சஞ்சலம் அடைகிறபொது அதை கேட்பேன். உடனே மனம் லேசாகும்.
K V.Vighnesh
Chennai
mbl: +919382633377 or 9444961820
http://www.astrolovighnesh.com
skype: astrovighnesh

2010/12/18 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Subashini Tremmel

unread,
Dec 18, 2010, 8:24:26 AM12/18/10
to mint...@googlegroups.com
திரு.விக்னேஷ், எல்.கே. தேனீயார், ரங்கனார்,
 
உங்கள் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கு நன்றி. முயற்சிக்கின்றேன். சைவ சாஸ்திரங்களிலும் திருமந்திர தேவார திருவாசக பாடல்களில் ஆழ்ந்து செல்வதும் ஆத்மார்த்தமாக எனக்குப் பிடித்த விஷயம். என் சிந்தனைகளையும் கருத்துக்களையும் எழுத ஆரம்பித்தால் கேள்விகளும் பிறக்கும் அதற்கு பதில் எழுதும் நிலை ஏற்படும். அதற்கு அதிக நேரம் தேவைப்படும். ஆக சற்று ஓய்வாக அமையும் நேரத்தில் இந்த முயற்சியில் இறங்குகின்றேன். இப்போதல்ல அடுத்த ஆண்டு. இந்த ஆண்டிற்கான் எனது பங்களிப்புக்களின் பட்டியலில் ஒரு சில விஷயங்கள் எஞ்சியுள்ளன.  அவற்றை முடித்து பின்னர் முயற்சிக்கின்றேன். இன்னும் மூன்று நாட்களில் என் மலேசியா பயணம் இருக்கின்றது. அதற்குள் செய்து முடிக்க வேண்டிய பல பணிகள் உள்ளன. ரங்கனாருக்குத் தெரியுமே. .நான் திட்டமிட்டு நீண்ட பட்டியல் வைத்திருப்பேன் என்று..:-)
 
அன்புடன்
சுபா

2010/12/18 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>

kanniappan

unread,
Dec 18, 2010, 10:53:12 AM12/18/10
to mint...@googlegroups.com
பத்துடையீர் : இதற்கு வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். உடலின் கண் தோன்றும் மெய்ப்பாடுகள் :(1)  இறைவனைப் போற்றிப்பாடும் பொழுது மிடறு (தொண்டைப்பகுதி) பெருக்கம்.
                              (2) நாதழுதழுத்தல்
                              (3) இதழ் துடித்தல்
                              (4) உடல் குலுங்குதல்
                              (5) மயிர்சிலிர்த்தல் 
                              (6) வியர்த்தல்
                              (7) சொல்லெழாமை
                              (8) கண்ணீர் அரும்புதல்
                              (9) வாய்விம்முதல்
                              (10) மெய்ம் மறத்தல்
இப்பாடலில்  
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் ....
என்று கூறுகின்றபோது மேற் சொன்ன மெய்ப்படுகள் நிகழும் என்று பெரியோர் கூறக் கேட்டுள்ளேன்.

இவ்வாறு பகிர்ந்தமையினைத் தங்களுக்குச் சரியென்று தோன்றினால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் இதனை புறந்தள்ளி விடலாம். 

18 டிசம்பர், 2010 3:22 pm அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதியது:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!

என்றென்றும் அன்புடன்,
 வடிவேல் கன்னியப்பன்.

Geetha Sambasivam

unread,
Dec 18, 2010, 8:19:27 PM12/18/10
to மின்தமிழ்
ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக்கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ(டு) உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப்போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக்குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

எழுப்பவந்த பெண்கள் உள்ளே தூங்கும் பெண்ணைப் பார்த்து,

ஒண்ணித்தில நகையாய் இன்னமு புலர்ந்தின்றோ= ஒளி பொருந்திய முத்துப்பற்களை உடைய பெண்ணே, இன்னமுமா உனக்கு விடியவில்லை?? பொழுது எப்போதோ புலர்ந்துவிட்டதே! என்று கூறுகின்றனர்.  உள்ளே இருந்தவள் இதுக்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை.

வண்ணக்கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ= கிளியைப் போன்ற அழகான குரலில் இனிமையாக மிழற்றும் நம் மற்றத் தோழியர் அனைவரும் வந்தனரோ? என்று நிதானமாக விசாரிக்கிறாள்.

எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்= இங்கே வா பெண்ணே, எண்ணிக்கொள் , அத்தனை பேரையும் உள்ளபடியே சொல்லுவோம். 
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே= நாங்க எண்ணிண்டு இருக்கும்போது நீ பாட்டுக்குக்கண்ணை மூடிக்கொண்டு மறுபடியும் தூங்க ஆரம்பிச்சுப் ப்பொழுதை வீணாக்காதே.

விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப்பொருளை= விண்ணுக்கு ஒரு மருந்தை இங்கே தேவர்களுக்கு அமுதம் போன்றவன் என்ற பொருளில் எடுத்துக்கொண்டாலும் உள்ளார்ந்து யோசித்தால், பாற்கடலைக் கடைந்தபோது வந்த ஹாலாஹால விஷத்தை உண்டு அனைவரையும் காத்தவன் என்ற பொருளையும் கூறலாம் என்று தோன்றுகிறது.  ஈசன் புரிந்த இத்தகைய தியாகத்தாலேயே தேவர்களுக்கு அமுதம் கிடைத்தது.  ஈசனை விடவும் உயர்ந்த அமுதம் வேறு இல்லை எனினும்  தேவர்களைக் காக்கவேண்டி அவர்களுக்கு அமுதம் கிடைக்கச் செய்தான்.  அத்தகைய அமுதம் போன்ற ஈசன், வேதங்களுக்கெல்லாம் அவனே பொருளாய் இருப்பவன்,

கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்= நம் கண்களுக்கு இனியவனை, பார்ப்பவர்கள் கண்களுக்கெல்லாம் இனியவனை, அழகனை பாடி உள்ளம் காதலால் கசிந்து உருக

உள்நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக்குறையில் துயிலேலோர் எம்பாவாய்= உள்ளம் நெக்கு உருகி மனம் கசிந்து கண்கள் ஆறாய் நீரைப் பெருக்க, ஈசனைப் போற்றிப் புகழ்ந்து பாட வந்த எங்களால் இப்போது எவர் வந்தனர், எவர் வரவில்லை என்ற கணக்கெடுக்க இயலாது பெண்ணே! நீயே எழுந்து வா. வந்து நீயே எண்ணிக்கொள், எவரேனும் ஒருவர் குறைந்தாலும் மீண்டும் போய்த் தூங்கிக்கொள்வாய்.

Geetha Sambasivam

unread,
Dec 18, 2010, 8:21:39 PM12/18/10
to mint...@googlegroups.com
அப்படி எதுவும் இல்லை ஐயா, பொதுவாய்த் தத்துவார்த்தமான விளக்கங்களுக்குப் போனால் இளைஞர்கள் படிக்க சிரமமாய் இருக்கும் என்பதாலேயே மேல் விளக்கம் மட்டுமே சொல்லுவதை வழக்கமாய்க் கொண்டிருக்கிறேன்.  இதெல்லாம் ஆழ்ந்த பக்தி உள்ளவர்களுக்குப் பொருந்தும்.  இளைஞர்கள் முதலில் பக்தி வழியில் திரும்பவேண்டும் என்பதே என் நோக்கம்.  நன்றி.  இவற்றையும் சேர்த்துக்கொள்கிறேன்.

2010/12/18 kanniappan <vkte...@gmail.com>
பத்துடையீர் : இதற்கு வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். உடலின் கண் தோன்றும் மெய்ப்பாடுகள் :(1)  இறைவனைப் போற்றிப்பாடும் பொழுது மிடறு (தொண்டைப்பகுதி) பெருக்கம்.
                              (2) நாதழுதழுத்தல்
                              (3) இதழ் துடித்தல்
                              (4) உடல் குலுங்குதல்
                              (5) மயிர்சிலிர்த்தல் 
                              (6) வியர்த்தல்
                              (7) சொல்லெழாமை
                              (8) கண்ணீர் அரும்புதல்
                              (9) வாய்விம்முதல்
                              (10) மெய்ம் மறத்தல்
இப்பாடலில்  
அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் ....
என்று கூறுகின்றபோது மேற் சொன்ன மெய்ப்படுகள் நிகழும் என்று பெரியோர் கூறக் கேட்டுள்ளேன்.

இவ்வாறு பகிர்ந்தமையினைத் தங்களுக்குச் சரியென்று தோன்றினால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையெனில் இதனை புறந்தள்ளி விடலாம். 

1

Mohanarangan V Srirangam

unread,
Dec 18, 2010, 10:29:37 PM12/18/10
to mint...@googlegroups.com

2010/12/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>
நன்னாருக்கு....:-) 
338.gif

kanniappan

unread,
Dec 19, 2010, 12:20:19 AM12/19/10
to mint...@googlegroups.com
அம்மையீர் காலை வணக்கம். இதில் சிறிது கருத்து வேறுபாடு எனக்கு. இன்றைய இளைஞர்கள் நீங்கள் நினைப்பது போல் இல்லை. எதனையும் ஆழ்ந்தும், அகன்றும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையோராய் உள்ளனர். எனவே தாங்கள் இப்பாடல்களுக்கு ஆழ்ந்த அகன்ற பொருளைத் தருவீர்களேயானால் அவற்றை ஏற்பர் என்பது என் திண்ணமான நம்பிக்கை.தங்களை மறுத்துப் பேசுவதாக எண்ண வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

19 டிசம்பர், 2010 6:51 am அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதியது:

Mohanarangan V Srirangam

unread,
Dec 19, 2010, 12:25:10 AM12/19/10
to mint...@googlegroups.com

2010/12/19 kanniappan <vkte...@gmail.com>

அம்மையீர் காலை வணக்கம். இதில் சிறிது கருத்து வேறுபாடு எனக்கு. இன்றைய இளைஞர்கள் நீங்கள் நினைப்பது போல் இல்லை. எதனையும் ஆழ்ந்தும், அகன்றும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையோராய் உள்ளனர். எனவே தாங்கள் இப்பாடல்களுக்கு ஆழ்ந்த அகன்ற பொருளைத் தருவீர்களேயானால் அவற்றை ஏற்பர் என்பது என் திண்ணமான நம்பிக்கை.தங்களை மறுத்துப் பேசுவதாக எண்ண வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாம் ஒன்று நினைக்க 
தெய்வம் ஒன்று நினைக்கிறது என்பது இதுதானோ? :-))) 
(க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) 

kanniappan

unread,
Dec 19, 2010, 12:43:49 AM12/19/10
to mint...@googlegroups.com
ஒன்றும் புரியவில்லையே!

19 டிசம்பர், 2010 10:55 am அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:

Mohanarangan V Srirangam

unread,
Dec 19, 2010, 12:50:26 AM12/19/10
to mint...@googlegroups.com

2010/12/19 kanniappan <vkte...@gmail.com>

ஒன்றும் புரியவில்லையே! 

ஐயா! கீதாம்மா எளிமையாகச் சொன்னால்தான் 
இளைஞர்கள் ஏற்பார்கள் என்று நினைத்தார். ஆனால் நீங்களோ தெய்வ வாக்கு போன்று ஆன்மிக விஷயங்களை உள்ளது உள்ளபடி விளக்க வேண்டும். அதுதான் சொல்வோரின் கடமை. அதன் ஆழ்பொருட்களை நம்மால் முடிந்த அளவு புரிய வைக்க வேண்டும். எளிமைக்காக இறைவனின் பெருமையைச் சுருக்கிவிடக்கூடாது என்று தெய்வ வாக்கு போல் ஒலிக்கின்றீர்கள். அதை ரசித்தேன் சொன்னேன் --- :-))) 

கீதாம்மா என் குறிப்பைப் படித்துவிட்டு தமது வழக்கமான பாணியில் க்ர்ர்ர்ர்ர்ர்ரும்பாங்க. 

அதுதான் நகைச்சுவைக் குறிப்பு.

Geetha Sambasivam

unread,
Dec 19, 2010, 6:34:08 AM12/19/10
to மின்தமிழ்
நாளையிலிருந்து வெள்ளிக்கிழமை வரையிலும்  சொந்த வேலையாக  ஊருக்குச் செல்வதால் இடுகைகளை என் சார்பில் திரு எல்.கார்த்திக் இடுவார்.  பின்னூட்டங்கள் இடுபவர்களுக்குப் பதில் நான் வந்ததும் கொடுக்கிறேன்.  நன்றி.

2010/12/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Dec 19, 2010, 6:44:04 AM12/19/10
to mint...@googlegroups.com
க்ர்ர்ர்ர்ர்ர் முதல்லே, அப்புறமா பதில். இப்போதைக்கு மாத்திக்கலை. 

வடிவேல் கன்னியப்பன் அவர்களே,

தற்சமயம் இருக்கும் அவசரமான வேகமான உலகில் எல்லாருக்கும் குறைவாகவே படிக்கவேண்டி இருக்கிறது.  நீளமானவற்றைப் படிக்கிறதே இல்லை.  இதிலே ஆழ்ந்த தத்துவங்களைப் படிக்க முடியவில்லைனே சொல்கிறார்கள். ஆகவே தற்சமயம் இப்படியே போகட்டும். பின்னர் பார்க்கலாம்.  நன்றி.

2010/12/19 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

2010/12/19 kanniappan <vkte...@gmail.com>
ஒன்றும் புரியவில்லையே! 

Mohanarangan V Srirangam

unread,
Dec 19, 2010, 9:23:45 AM12/19/10
to mint...@googlegroups.com

2010/12/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>

க்ர்ர்ர்ர்ர்ர் முதல்லே, அப்புறமா பதில். இப்போதைக்கு மாத்திக்கலை. 

வடிவேல் கன்னியப்பன் அவர்களே,

தற்சமயம் இருக்கும் அவசரமான வேகமான உலகில் எல்லாருக்கும் குறைவாகவே படிக்கவேண்டி இருக்கிறது.  நீளமானவற்றைப் படிக்கிறதே இல்லை.  இதிலே ஆழ்ந்த தத்துவங்களைப் படிக்க முடியவில்லைனே சொல்கிறார்கள். ஆகவே தற்சமயம் இப்படியே போகட்டும். பின்னர் பார்க்கலாம்.  நன்றி.

கன்னியப்பன் சார் இது சமாளிப்பு :-)) 

kanniappan

unread,
Dec 19, 2010, 9:47:36 AM12/19/10
to mint...@googlegroups.com
ஐயா! நான் ஜூட்.................

19 டிசம்பர், 2010 7:53 pm அன்று, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> எழுதியது:

--
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!

என்றென்றும் அன்புடன்,
 வடிவேல் கன்னியப்பன்.

LK

unread,
Dec 19, 2010, 8:04:13 PM12/19/10
to mint...@googlegroups.com
திருவெம்பாவை ஐந்தாம் நாள்

மாலறியா நான்முகனும் காணா மலையினை  நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மையாட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

திருமாலும், பிரமனும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டையிட்டுக்கொள்ள இருவரும்  தாமே பெரியவர் என்று அறுதியிட்டுக் கூற, பின்னர் ஈசனிடம் சென்று கேட்டால் அவன் உண்மையுரைப்பான் எனத் தோன்ற ஈசனிடம் சென்று எங்கள் இருவரில் யார் பெரியவர் எனக் கேட்கிறார்கள்.  ஈசனும் அடிமுடி கண்டுபிடிக்க முடியாத பெரும் சோதி வடிவில் நின்றான்.  இருவரையும் இதற்கு மூலமும், முடிவும் கண்டு வரச் சொல்ல பிரம்மாவோ ஈசனின் தலையைக் காணவும், விஷ்ணுவோ அடியைப் பணியவும் தேடிச் சென்றனர்.  ஆனால் விஷ்ணுவால் காணமுடியாமல் திரும்பி வந்து தான் தோற்றதை ஒத்துக்கொண்டார்.  மேலே,மேலே, மேலே சென்ற பிரம்மாவோ,விண்ணையும் தாண்டிச் சென்றும் முடியைக்காண இயலவில்லை.  அப்போது ஈசன் சடாமுடியில் சூடி இருந்த தாழம்பூ ஒன்று கீழே விழுந்தது.  கீழே கீழே வந்த தாழம்பூவைப் பார்த்து மகிழ்ந்த பிரம்மா இது நிச்சயம் ஈசன் முடியிலிருந்து வந்ததால் நாம் முடியைக் கண்டோம் எனச் சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து, தாழம்பூவைச் சாட்சி சொல்ல அழைக்க, தாழம்பூவும் ஒத்துக்கொண்டது.

ஈசன் முடியைக் கண்டதாக பிரம்மா கூற ஈசன் உண்மை தெரிந்து பிரம்மாவை சபிக்கிறார். தாழம்பூவுக்கும் இனி என் வழிபாட்டில் நீ இடம்பெற மாட்டாய் என்று ஒதுக்கிவிடுகிறார்.  அப்படி அடிமுடி தேடிய விஷ்ணுவாலும், பிரம்மாவாலும் காண முடியாமல் நின்ற ஈசனை நாம் உணர்வோம் என்று பொய்யுரை பேசுகிறாளாம் இந்தப்பெண்.

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்=  ஆஹா இனிமையான சொற்களால் பொய்யுரைகளை பேசும் வஞ்சகப் பெண் இவள் அன்றோ, வாசற்கதவைத்திறப்பாயாக!

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்= இந்த மண்ணகத்தில் உள்ளவராயினும், விண்ணகத்தில் உள்ளவராயினும் மற்றும் உள்ள எவராலும் அறிய முடியாத, காண முடியாத பரம்பொருளின்

கோலமும் நம்மையாட்கொண்டருளிக் கோதாட்டும்= திருமேனியின் அழகும், நம்மையும் நம் போன்ற எளியோரையும் ஆட்கொண்டருளும் அருட்குணத்தையும்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று= ஐயனவன் சீலத்தையும் பாடி என் சிவனே என் சிவனே என்று

ஓலம் இடினும் உணராய் உணராய் காண்= எத்தனை முறை ஓலம் இட்டோம்.  அவ்வாறு கூவியும், நீ எழுந்துவரவே இல்லையே,

ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்= ஈசனுக்கல்லாது உன்னை அலங்கரித்துக்கொண்டிருக்கும் பெண்ணே, உன் பக்தி எங்கே போயிற்று? என்று எழுப்பவந்த தோழியர் அழைக்கின்றனர்

பி.கு : திருமதி கீதா சாம்பசிவம் ஊரில் இல்லாததால் ,அவர்களுக்கு பதில் நான் இதை அனுப்புகிறேன்.

LK

unread,
Dec 20, 2010, 7:49:06 PM12/20/10
to mint...@googlegroups.com
திருவெம்பாவை ஆறாம் நாள்

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்தாட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோருக்குன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.
 
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே = அழகிய மான் போன்ற பெண்ணே!  நாளைக்கு நானே வந்து உங்களை எல்லாம் எழுப்புவேன் என்று கூறி இருந்தாயே?  அப்படிச் சொன்னதை மறந்தாயோ?  எங்கே போயிற்று அந்த வார்த்தைகள்? உனக்கு நாணமாய் இல்லையா?

போனதிசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ= அவ்வார்த்தைகள் எந்தத் திசையில் சென்றன பெண்ணே, இன்னமுமா உனக்குப் பொழுது புலரவில்லை??

வானே நிலனே பிறவே அறிவரியான்= இந்த வானும் சரி, நிலமும் சரி, பிற எவ்வுலகங்களும் சரி, இறைவனைச் சரிவர அறிந்தவரில்லை.   எவர் அறிவார் அவன் பெருமையை?? இது உணர்வால் மட்டுமே இயலும் ஒன்று.

தானே வந்தெம்மைத் தலையளித்தாட்கொண்டருளும்= ஆனாலும் அந்தப் பரமன் தானே வலிய வந்து அவனிடம் பக்தி செலுத்தும் நம்மிடம் அன்பு பூண்டு நம்மை ஆட்கொண்டருளுகிறான்.

வான்வார் கழல்பாடி வந்தோருக்குன் வாய் திறவாய்=அப்படிப்பட்ட ஈசனின் வீரக் கழல் அணிந்த திருவடிகளைப் பணிந்து பாடித் துதித்து இங்கே வந்துள்ள எங்களுக்கு நீ வாயைத் திறந்து உன் பதிலையாவது கூறுவாய்.

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்= ஆ, ஆ, நீ இவ்வளவு கல்நெஞ்சுக்காரியாய் இருக்கிறாயே?  பரமன் பெயரை நாங்கள் சொன்னதைக் கேட்டதுமே நீ வாயையும் திறக்காததோடு உன் ஊனும் கூட உருகவில்லையே?? இது என்ன அதிசயம்? இத்தகைய நிலை உனக்கு ஒருத்திக்குத் தான் இருக்கும். அடிபெண்ணே,

ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்= ஈசன் எங்களுக்கு மட்டுமல்ல, உனக்கும், உன்னைச் சேர்ந்தவர்களுக்கும், மற்றும் இவ்வுலகத்து மாந்தர் அனைவருக்கும் தலைவன் ஆவான். அவன் புகழைப் பாட இனியாவது நீ வருவாயாக.

karuannam annam

unread,
Dec 21, 2010, 6:47:11 AM12/21/10
to mint...@googlegroups.com
தெளிவாகும் சிறப்பாகவும் எழுதுகிறீர்கள் திரு கார்த்திக். வாழ்த்துக்கள்.
2010/12/20 LK <karthik.lv@gmail.com>
திருவெம்பாவை ஐந்தாம் நாள்

மாலறியா நான்முகனும் காணா மலையினை  நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
பொய் பேசினாலும் சிவனைப் பேசியதால் அது பாலூறு தேன்வாய் ஆனது போலும். திருக்குறளும் பணிமொழி இருந்தால் தான் பாலோடு தேன் கலந்தாற்போல என்றது.
வாழ்த்துக்களுடன்
சொ.வினைதீர்த்தான்.

LK

unread,
Dec 21, 2010, 6:50:03 AM12/21/10
to mint...@googlegroups.com
ஐயா, நான் எழுதவில்லை. இது திருமதி கீதா சாம்பசிவம் எழுதியது. அவர்கள் ஊரில் இல்லை. அவர்கள் சார்பில் நான் மடலில் அனுப்புகிறேன் . 

2010/12/21 karuannam annam <karu...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

karuannam annam

unread,
Dec 21, 2010, 7:32:36 AM12/21/10
to mint...@googlegroups.com

2010/12/21 LK <karthik.lv@gmail.com>
ஐயா, நான் எழுதவில்லை. இது திருமதி கீதா சாம்பசிவம் எழுதியது. அவர்கள் ஊரில் இல்லை. அவர்கள் சார்பில் நான் மடலில் அனுப்புகிறேன் . 

தங்கள் பணியும் சிறப்புக்கு உரியதுதான்  திரு கார்த்திக். வாழ்த்துக்கள்.

LK

unread,
Dec 21, 2010, 8:14:40 PM12/21/10
to mint...@googlegroups.com
திருவெம்பாவை ஏழாம் நாள்

அன்னே இவையும் சிலவோ பலஅமரர்
உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாயின்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!

இவை வெளிப்படையாகத் தூங்கும் பெண்ணை எழுப்புவதைக் குறித்தாலும் நம் மனம் விழிப்புறுதலையே குறிக்கும்.  நம்முள்ளே உறையும் ஈசனை நாம் கண்டு கொள்ளவேண்டும் என்பதற்காகவே மாணிக்கவாசகர் தூங்கும் ஒரு பெண்ணை எழுப்புவதுபோல் நம் அனைவரையும் ஈசனின் சச்சிதானந்தப் பெருவெள்ளத்தில் மூழ்க அழைக்கிறார்.

எவ்வளவு எழுப்பியும் இன்னமும் தூங்குகிறாள் அந்தப் பெண்.  மாயையில் நாம் ஆழ்ந்து கிடக்கிறதையே இது உணர்த்தும்.  எத்தனையோ சோதனைகள் மூலம் ஈசன் தன்னிருப்பைக் காட்டினாலும் நாம் எங்கே புரிந்து கொள்கிறோம்?? திரும்பத் திரும்ப இவ்வுலக வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளிலேயே மனம் செல்கிறது.

அன்னே இவையும் சிலவோ பல அமரர்=அம்மா, தாயே என்று சொல்வோம் அல்லவா, அத்தகையதொரு விளி இது.  தாயே, இப்படியும் முன்னுக்குப் பின் முரணாகச் செய்வாயா நீயும்?  உனக்கு இப்படியும் நடந்து கொள்ளத் தெரியுமா?

உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்= ஈசனை உன்னி மனம் நினைக்கவும் அரியவன் ஆயிற்றே, தேவாதிதேவர்களாலும் இயலாத ஒன்றாயிற்றே, சீரும், சிறப்பும் நிறைந்தவன் அன்றோ,

சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய்திறப்பாய்=  அத்தகைய பெருமை வாய்ந்த ஈசனின் திருச்சின்னங்கள் ஆன எக்காளம், சங்கு போன்றவற்றின் ஒலிகளைக் கேட்ட மாத்திரத்திலேயே நீ சிவன் நாமத்தைக் கூறுவாயே!

தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்=தென்னாடுடைய சிவன் என்பதற்காக, தென்னா என்று ஆரம்பிக்கும்போதே தீயிலிட்ட மெழுகைப் போல் உருகுவாளாம். அப்படி இருந்த நீயா இவ்வாறு மாறிவிட்டாய்?
என்னானை என் அரையன் இன்னமுதென்றெல்லோரும்= என் அப்பன், என் அரசன், என் இன்னமுது,  என்று இங்கே உள்ள நாங்கள் அனைவரும் ஒவ்வொருவராக ஒவ்வொரு பெயரையும் சொல்லிவிட்டோம். அப்படியுமா தூக்கம்??

வன்னெஞ்சப் பேதையர் போல் வாளாகிடத்தியால்  என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்= இப்படி கடூரமான கடின இதயம் கொண்ட அறிவிலிகளைப் போல் சும்மா படுத்துக்கிடக்கிறாயே இன்னமும்?? இந்தத் தூக்கத்தின் வலிமைதான் எவ்வளவு ஆழமாய் உள்ளது?

எப்படிச் சொன்னாலும் திரும்பத் திரும்ப இருளாகிய அறியாமையின் பாலே மனம் செல்கிறது.  அதிலே கிடைக்கும் அற்ப சுகங்களிலே மனம் லயிக்கிறது. ஆனந்திக்கிறது.  அந்த மனத்தை விழிக்கச் செய்து தன்னுள்ளே ஒளிரும் ஒளியான ஈசனைக் காணச் செய்யவேண்டும். 

2010/12/21 karuannam annam <karu...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

LK

unread,
Dec 22, 2010, 7:56:26 PM12/22/10
to mint...@googlegroups.com
திருவெம்பாவை எட்டாம் நாள்

கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில்விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.

பொழுது விடியும்போது சேவலும், கோழியும் கூவித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். 

கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்= அவ்வாறு கோழி மட்டும் சிலம்பவில்லை, குருகு=பறவையினங்கள் அனைத்துமே விழித்துக்கொண்டு ஒலியெழுப்புகின்றன.

ஏழில் இயம்ப இயம்பும்வெண்சங்கெங்கும்=  உதய கீதங்கள் கோயிலில் இசைக்கப்படும், அவ்வொலியோடு வெண்சங்கு ஊதும் ஒலியும் கேட்கிறது.

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை= ஒளிச்சுடராய் விளங்கிய ஈசனின் ஒப்பற்ற பெரும் கருணையைப் புகழும்

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ= ஈசன் புகழ் பாடும் பொருள் கொண்ட சிறப்பான பாடல்களை நாங்கள் பாடினோமே? உனக்குக் கேட்கவில்லையா?

வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்= அடி பெண்ணே இப்படிக் கிடக்கிறாயே? நீ வாழி, உனக்கு ஒன்றும் நேராமல் இருக்கட்டும், வாயைத் திறக்க மாட்டாயா?

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ= ஆழி இங்கே கடல் . கடல் போன்ற அன்புள்ள ஈசனின் திருவடிக்கு அன்பு செய்யும் நெறிமுறை இதுவா??

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.= ஊழிக்காலத்திலும் அவன் ஒருவனே நிரந்தரமாய் இருப்பான்.  அத்தகைய உலக முதல்வனை, ஏழைகளுக்கெல்லாம் கருணை செய்பவனைப் பாடித் துதிக்கலாம் வா.  இங்கே ஏழைப்பங்காளன் வெளிப்படையான பொருளில் பணமில்லாமல் சிரமப்படும் ஏழைகளுக்கும் கடவுளே தெய்வம் என்ற கோணத்தில் திக்கற்றவர்களுக்கு தெய்வம் என்றும் கொள்ளலாம்.  இன்னொரு பொருளில் பக்தியில் ஏழையாக இருந்தாலும் அவன் அதைக் கண்டு கொள்ள மாட்டான்.  நீ அவனை மனமார ஒருமுறை நினைத்தாலே போதும், உன்னைத் தடுத்தாட்கொள்வான் என்றும் கொள்ள முடியும்.  பொதுவாய் ஆன்றோர் கூறுவது, இங்கே ஏழை என்பது பல்வேறு அணிகள்பூண்ட உமையைக் குறிக்கும், பங்காளன்=உமைக்குத் தன் உடலில் சரிபாதி பங்கு கொடுத்த ஈசன் என்றும் பொருள் கொள்கிறார்கள்.  மேலும் அன்னைக்குத் தன் உடலில் சமபாகம் கொடுத்தருளிய நிகழ்வு கார்த்திகைத் திருநாளில் திருவண்ணாமலையிலேயே நடைபெற்றது.  ஆகவே அதுவும் பொருந்தும்.

Mohanarangan V Srirangam

unread,
Dec 22, 2010, 8:56:44 PM12/22/10
to mint...@googlegroups.com
>>>>அன்னைக்குத் தன் உடலில் சமபாகம் கொடுத்தருளிய நிகழ்வு கார்த்திகைத் திருநாளில் திருவண்ணாமலையிலேயே நடைபெற்றது.  <<< 

இதைப் பற்றிய விவரம் என்ன? அதற்கு முன்னால் அர்த்தநாரி இல்லையா? ஏன் கார்த்திகைத் திருநாள்? சிதம்பரம் என்ற க்ஷேத்திரம் இருக்க ஏன் திருவண்ணாமலை?

LK

unread,
Dec 22, 2010, 8:59:14 PM12/22/10
to mint...@googlegroups.com
அய்யா திருமதி கீதா அவர்கள் ஊரில் இருந்து வந்தவுடன் விளக்கம் தருவார்கள்.

2010/12/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

LK

unread,
Dec 23, 2010, 8:35:56 PM12/23/10
to mint...@googlegroups.com

இப்போ சுபாவுக்குப் பிடித்த பாடல் ஒன்பதாம் நாள்

"முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப்ப்பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப்பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்னவகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்.

முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே= இவ்வுலகம் தோன்றியதற்கெல்லாம் கால நிர்ணயம் செய்கின்றனர்.  மற்ற வேத, வேதாந்தங்களுக்கு, காவியங்களுக்கு அனைத்துக்குமே ஒருவாறு கால நிர்ணயம் செய்ய முடிகிறது.  ஆனால் ஈசன் எப்போது தோன்றினான்? தோற்றுவித்தவர் யார்?  அவன் இருப்பைக்கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்றே சொல்லலாம்.  அத்தகைய கால நிர்ணயமே செய்ய முடியாத காலத்துக்கும் முன்னே தோன்றிய மிகப் பழைய, ஆதியான பொருளே, அவன் தான் ஈசன்,

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே= பின்னால் எத்தனையோ புதுமைகள் தோன்றின. தோன்றுகின்றன, தோன்றவும் தோன்றும்.  ஆனால் இவை எதுவுமே முன்னால் இல்லைனு சொல்ல முடியுமா? இல்லைஅல்லவா? ஏற்கெனவே இருந்த ஒன்றைத் தான் நாம் கண்டு பிடிக்கிறோம்.  புதுமை எனச் சொல்கிறோம்.  அத்தகைய புதுமைகளுக்கும் புதியவனாக இனி வரும் சமூகமும் காணவேண்டிய புதிய இளையவனாக ஈசன் இருக்கிறான்.  ஏனெனில் அவன் இல்லை எனக் கூறுபவர்களும் அவனை உணர வைக்கும் தன்மை கொண்டிருக்கிறான் அல்லவா? அவன் ஒருவன் இருக்கிறான் என்பதாலேயே இல்லை என்ற மறுப்பும் தோன்றுகிறது. இந்த வாதம் புதியது போல் இன்று பேசப்பட்டாலும் அநாதிகாலந்தொட்டே இவையும் பேசப்படுகிறது.  ஆகவே புதுமை என்றாலும் மீண்டும் மீண்டும் அதே தன்மை, பொருள் கொண்டவையாகவே இருக்கிறது.  அத்தகைய தன்மை உள்ளவன் ஈசன்.

உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம் உன்னடியார் தாள் பணிவோம்= அப்பா, உன்னை எங்கள் தலைவனாய்ப் பெற்ற நாங்கள் உன்னை எவர் தலைவராய் நினைந்து வணங்குகிறாரோ அத்தகைய சிறப்பான அடியார்களையே அவர்கள் திருவடிகளையே பணிந்து ஏத்துவோம்.

ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார்= அவர்களுக்கே நாங்கள் உரிமை உள்ளவர்கள் ஆவோம்.  அப்படிப்பட்ட சிவனடியார்களையே தேடித்தேடி எங்கள் கணவராக்கிக்கொள்வோம்.

அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்= அவ்வடியார்கள் தங்கள் மனம் மகிழ்ந்து சொன்ன ஆணைகளையே நாங்கள் அவர்களுக்குச் சேவகர்களாய் இருந்து நிறைவேற்றித் தருவோம். 

இன்னவகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்= எங்கள் ஈசனே எமக்கு எம் அரசனாகிய நீர் இவ்வண்ணம் அருள் புரியும்படி கேட்டுக்கொள்கிறோம்.  அத்தகைய அருள் பெற்றாலே நாங்கள் எக்குறையும் இல்லாதவராய் வாழ்வோம்.

N. Kannan

unread,
Dec 23, 2010, 9:49:47 PM12/23/10
to mint...@googlegroups.com
மிக, மிக அழகான பாடல். இத்தகைய அழகிய, எக்காலத்திற்கும்,
எந்நாட்டவர்க்கும் பொருந்துகின்ற மாதிரி நமக்காக அருளிச்செய்துவிட்டு
போயுள்ள தகைமையை என்னவென்று சொல்வது. குறிப்பாக அன்று என் அமெரிக்க
நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது இறைவன் எப்படி
“முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப்ப்பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும்
பேர்த்தும் அப்பெற்றியனே!” என்று இருக்கிறான் என்று சொன்னேன். He is a
source of immense potential. இனி என்ன நடக்கும்? என்னென்ன புதியன
உருவாகும்? சொல்ல முடியாது. அவனது ஆக்க சக்தியை அளவிட முடியாது. இப்படிச்
சொல்லி, `எனவே உலகிற்கு ஒரேயொரு தூதர், ஒரேயொரு வழி` எனச்சொல்லி
மதமாற்றம் செய்வது தவறு என்று எடுத்துரைத்தேன். நம்மாழ்வார் சொல்கிறார்,

வணங்கும் துறைகள் பல பலவாக்கி, மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவை அவை தொறும்
அணங்கும் பலபல ஆக்கி, நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண், வேட்கை எழுவிப்பனே

இதுதான் எவ்வளவு பரந்த பார்வை. எவ்வளவு நிதர்சனம். இந்த உலக நோக்கு
வரப்பெற்றால் பிரச்சனைகள் தானே குறையும்!

கண்ணன்

2010/12/24 LK <karth...@gmail.com>:

Geetha Sambasivam

unread,
Dec 25, 2010, 3:52:12 AM12/25/10
to mint...@googlegroups.com
விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்! :)))))))

2010/12/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
>>>>அன்னைக்குத் தன் உடலில் சமபாகம் கொடுத்தருளிய நிகழ்வு கார்த்திகைத் திருநாளில் திருவண்ணாமலையிலேயே நடைபெற்றது.  <<< 

இதைப் பற்றிய விவரம் என்ன? அதற்கு முன்னால் அர்த்தநாரி இல்லையா? ஏன் கார்த்திகைத் திருநாள்? சிதம்பரம் என்ற க்ஷேத்திரம் இருக்க ஏன் திருவண்ணாமலை?

Mohanarangan V Srirangam

unread,
Dec 25, 2010, 4:03:39 AM12/25/10
to mint...@googlegroups.com

2010/12/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>

விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்! :))))))) 

இன்று விண் அப்பத்தை அப்படியே ஏற்க வேண்டிய நாள் அல்லவோ? 
:-) 

Geetha Sambasivam

unread,
Dec 25, 2010, 4:17:03 AM12/25/10
to mint...@googlegroups.com
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாண்
ஏதவன் ஊர் ஏதவன்பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்

சிவன்.jpg

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே = பாதாளங்கள் என்று பூமிக்குக் கீழே ஏழு இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது.  மகாதலம், ரசாதலம், தராதலம், சுதலம், நிதலம், விதலம், அதலம் என்பவை அவை.  இவ்வாறு இத்தனை பாதாளங்களுக்கும் கீழே கீழே ஈசனின் திருவடி வியாபித்திருக்கிறது.  அப்படியும் அதைக் காண இயலவில்லை.   எல்லாவற்றுக்கும் கீழே சொல்லுக்கும் அடங்காத நிலையைப் பெற்ற அந்தத் திருவடிகளையும், அழகிய புத்தம்புது மலர்களால் அலங்கரிக்கப் பட்ட அவன் திருமுடியையும் எல்லாப் பொருள்களுக்கும் ஆரம்பமும், முடிவும் அதுவே எனப் படுகிறது. 

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்= அவன் உடலின் ஒருபாகத்தில் அம்பிகையும் இடம்பெற்றிருக்கிறாள்.  ஆகவே அவனுடைய திருமேனியும் ஒரே விதமானது அல்ல.  ஒரு பக்கம் ஆணின் மேனியும், இன்னொரு பக்கம் பெண்ணின் மேனியும் கொண்டு விளங்குகிறான்.  இந்த அர்த்தநாரீசுவரத் தத்துவம் உள்ளார்ந்த பொருள்பொதிந்த ஒன்று.  ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஆண், பெண் தன்மைகள் கலந்தே இருக்கின்றன்.  ஈசன் மேல் பக்தி மீதூறி, அவனைத் தியானித்து, அவன் பஞ்சாக்ஷரத்தை ஓதும் அடியார்களுக்கு, பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்குத் தங்களுக்குள்ளே உள்ள பெண் வடிவைக் காணவும் இயலும்.  ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கண்டது போல.  ஆகவே அவ்வளவு ஆழ்ந்து ஊறிப் போய் பக்தி செய்யவேண்டும்.  அர்த்தா.jpg

இப்படிப் பக்குவப்பட்ட ஆன்மா, பக்குவப்படாத மற்றவர்களைப் பார்த்து நீங்களும் விழித்தெழுங்கள், உங்களுள்ளே இருக்கும் சோதியைக் கண்ணார, மனமாரக் கண்டு மகிழுங்கள் என்பதே திருவெம்பாவையின் முழுத் தத்துவம்,  இது என்னோட கருத்து மட்டுமே. மாற்றுக்கருத்து இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம்.

வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்= வேதங்களுக்கு முதல்வன் இவனே. விண்ணோரான தேவாதிதேவர்களும் சரி, மண்ணுலகில் வாழும் மக்களும் சரி, இவனைப் புகழ்ந்து எவ்வளவு பாராட்டிப் பாடினாலும்

ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்= ஈசனின் புகழ்ச்சி என்பது முற்றுப் பெறா ஒன்றாகும்.  தொண்டர்களுக்கு எல்லாம் இவன் தோழனாகவே இருக்கிறான்.  சுந்தரருக்காகத் தூது போனதை அறிவோம் அல்லவா?

கோதில் குலத்து அரன் தன் கோய்ல் பிணாப்பிள்ளைகாள்= ஏ, பெண்களே, இவ்வளவு பெருமையும், புகழும் வாய்ந்த சொல்லுக்கடங்கா ஈசனின் திருக்கோயிலில் தொண்டு செய்வதையே உங்கள் முழுநேர வேலையாகக் கொண்டு சிவத் தொண்டு செய்யும் பெண்களாகிய நீங்கள்

ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்= ஈசனின் சொந்த ஊர் எது? அவனுடைய உண்மையான பெயர் என்ன?? அவனுடைய உற்றார் உறவினர் யார்? அவனுக்கு அயல் மனிதர்கள் எவர்?

இங்கே சொல்லி இருப்பது, முன்னைப் பழம்பொருளுக்கும் பழம்பொருளான ஈசனுக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை, உற்றார், உறவினரும் இல்லை.  அவனுக்குப் பெயரும் நாம் சூட்டியதே.  மேலும் இவர் உற்றார், இவர் அயலார் என்று அவன் பேதம் காட்டுவதில்லை.  எல்லாருக்குமே ஒரே மாதிரியாகத் தன் அருள் மழையைப் பொழிகிறான்.  அவனிடம் பேதம் ஏதும் இல்லை.

ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்=  இவ்வளவு புகழ் வாய்ந்த ஈசனைப் பாடும் தன்மை கூட நமக்குப் புரியவில்லை.  நாம் ஏதோ பாடுகிறோம், அவனோ அதையும் ஏற்றுக்கொண்டு நமக்கு அருள் செய்வது ஒன்றே அவன் குறிக்கோளாக வைத்திருக்கிறான்.
அர்த்தா.jpg
சிவன்.jpg

Geetha Sambasivam

unread,
Dec 25, 2010, 4:17:23 AM12/25/10
to mint...@googlegroups.com
:))))))

2010/12/25 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

2010/12/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>

விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்! :))))))) 

இன்று விண் அப்பத்தை அப்படியே ஏற்க வேண்டிய நாள் அல்லவோ? 
:-) 
 
Tthamizth Tthenee

unread,
Dec 25, 2010, 5:56:03 AM12/25/10
to mint...@googlegroups.com
விண்ணப்பமும்   விண் நகர்  அப்பனும் கவனிக்கப்படவேண்டியவையே
 
வா  நண்பா  கை கோர்க்கலாம்
நீ பிறந்தது  மாட்டுத் தொழுவத்தில்
நான் பிறந்தது  சிறைச்சாலையில்
பிறப்பு வளர்ப்பில் பேதமில்லை நமக்குள் 
 நீ ஆடு மேய்க்கிறாய் நான் மாடு மேய்க்கிறேன்
நீயும் மேய்ப்பன், நானும் மேய்ப்பன்
நீயும் நானும்  ஒன்றே மனிதர்க்கு புரியவில்லை 
பேதம் பார்க்கிறார்  நமக்குள்,  பேதையாய் வாழ்கிறார் அவர்க்குள்
நாமோ  ப்ரபஞ்சத்தை  மேய்த்துக்கொண்டிருக்கிறோம்
மனிதர் நம்மை  ஏய்த்துக்கொண்டிருக்கிறார்
பேதம் களைந்த வேதம் அளிப்போம்
பிடிவாதம் தவிர்த்து மனிதம் காப்போம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/12/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>

karuannam annam

unread,
Dec 25, 2010, 6:30:28 AM12/25/10
to mint...@googlegroups.com

2010/12/25 Geetha Sambasivam geetha...@gmail.com

ஏதவன் ஊர் ஏதவன்பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்
கேள்வியே பதிலாக அமையும் பாங்கு இன்புறத்தக்கது.

  அர்த்தா.jpg

மிக அழகான வடிவம். மூன்று கரங்களா?
   சிறப்பான படங்களுடன் தங்கள் பதிவு milirkirathu amma.
   anputan
   S.Vinaitheerthan  

Geetha Sambasivam

unread,
Dec 26, 2010, 5:21:14 AM12/26/10
to mint...@googlegroups.com
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
    கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
    செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
    ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
    எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.

imagesதிருவெம்பாவை.jpg

சிறந்த சிவபக்திச் செல்வத்தில் சிறந்து விளங்கிய மணிவாசகர் திருவண்ணாமலையில் தங்கி இருக்கும்போது அங்கிருந்த பெண்கள் தினமும் காலையிலே குளித்து நீராடி அருணாசலேஸ்வரரை வழிபட்டதும், அவரையே நினைந்து நினைந்து உருகியதையும் கண்டு தம்மையும் ஒரு பெண்பாலாக நினைந்து  அவர் பாடிய பாடல்களே திருவெம்பாவை என்ற ஒரு கூற்றும் உண்டு.  மேற்சொல்லி இருக்கும் திருவெம்பாவையில் குளத்தில் பெண்கள் அதிகாலையில் குளிப்பது பற்றிச் சொல்கையில் குளத்து நீரைக் கைகளால் அடித்துச் சத்தம் வரும்படி நீருக்குள் புகுந்து, குளித்ததாய்ச் சொல்கிறார்.

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையால் குடைந்து குடைந்து=  குளத்து நீரெல்லாம் அசுத்தமாகாத பொற்காலம் அது. தாமரைகள் பூத்திருக்கும்.  தாமரைப் பூவின் தேனை உண்ண வண்டுகள் மொய்க்கும்.  அப்படி வண்டுகள் நிறைந்திருக்கும் திருக்குளத்தில் அந்தத் தண்ணீரில் தங்கள் கைகளால் முகேர் என்ற சப்தம் வரும்படி நீரை அடித்துக்கொண்டு பாய்ந்து, நீருக்குள் புகுந்து, புறப்பட்டுக் குளித்து

உன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்= என் ஈசனே, என் ஐயனே, உன் திருவடிகளின் புகழைப்பாடுகின்றோம்; பரம்பரை பரம்பரையாக உன் புகழன்றி நாங்கள் வேறொருவரை நினைத்ததில்லை.  உன்னடியார்களாகவே உன்னாலேயே உன்னருளாலேயே நாங்கள் வாழ்ந்து வருகிறோம். 

ஆரழல் போல் செய்யாவெண்ணீறாடி செல்வா=  மாலுக்கும், அயனுக்கும் அடிமுடிகாணமுடியா அழல் போன்ற உருவெடுத்த உன் நிறமும் அத்தகைய நெருப்புப் போன்ற சிவந்த நிறமுடையது அன்றோ, செக்கச் சிவந்த மேனியன் அன்றோ, வெண்மையான திருநீற்றினால்  அன்றோ நீ குளிக்கிறாய்

சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா=  சிறுத்த இடையுடன் கூடிய, மை தீட்டப் பெற்ற அழகிய அகன்ற கண்களை உடைய மடந்தையாகிய உமையின் மணவாளனே
திருவெம்பாவை3.jpg

ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்=  ஐயா, என் ஈசனே உன்னுடைய திருவிளையாடல்கள் எல்லையற்றவை.  அவை அனைத்தும் எம்மை ஆட்கொள்ளவேண்டியே நீ நடத்துகிறாய். 

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோய்= அந்தத் திருவிளையாடல்களின் உய்யும் வழியெல்லாம் பெற்று அநுபவித்துக் கழித்துவிட்டோம்.

எய்யாமற்காப்பாய் எமையேலோர் எம்பாவாய்= எங்கள் வினையெல்லாம் தீர இனியேனும் நாங்கள் பிறவி என்னும் பெருங்கடலில் மூழ்கி இளைத்துச் சோர்ந்து போகாமல் எங்களைக் காப்பாற்றி மோக்ஷத்தை அருளுவாய்
imagesதிருவெம்பாவை.jpg
திருவெம்பாவை3.jpg

Geetha Sambasivam

unread,
Dec 28, 2010, 1:35:24 AM12/28/10
to mint...@googlegroups.com
ஆர்த்த பிறவித்துயர் கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.

நம் இருவினைப் பாசங்களால், அதாவது நல்வினை, தீவினை ஆகியவற்றால் கட்டுண்டு கிடக்கும் பிறவியால் ஏற்படும் துன்பம் ஒழிந்து ஈசனின் நாமம் ஒன்றே நம்மை உய்விக்கும் திறன் படைத்தது என்னும்படிக்கு அவன் நாமாவளியாகிய அமுதக் கடலில் மூழ்கும் தீர்த்தமாக ஐந்தெழுத்து மந்திரம் இங்கே விளங்குகிறது.

நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன்= சுற்றிலும் நெருப்பெரிய நடுவே தில்லையம்பலத்து நடராஜர் ஆடுவதாக ஐதீகம்.  ஆதிரை நக்ஷத்திரமும் செக்கச் சிவந்த ஒளி பொருந்திய தோற்றம் கொண்டு விண்ணில் அசைந்து ஆடுவது ஈசன் எல்லையில்லாப் பெருவெளியில் ஆடுவது போலவே தோற்றமளிக்கும் என்பதும் கூறப்படுகிறது.  அதே போல் அம்பலக்கூத்தனும் ஆடுகிறான்.  ஆட்டுவிக்கிறான்.  இது வெளிப்படையான பொருளென்றாலும் நம் உடலே பஞ்சாக்ஷரத்தால் ஆனது.  அந்தப் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓதி நம் உள்ளத்தினுள்ளே மனதுக்குள்ளே ஓதிக்கொண்டு வந்தோமானால் உள்ளே ஈசன் உறைந்திருப்பது கண்கூடு. மருவுந்துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் "சிவாய நம" என ஓதே." (உண்மை விளக்கம்-மாணிக்க வாசகர்)

"நமசிவாயா" என்னும் ஐந்தெழுத்துப் பஞ்சாட்சரம் தான் அவரின் உடலின் அங்கங்களும் கூட. அக்னியை ஏந்தும் கையானது "ந" என்னும் எழுத்தையும், கால்கள் "ம" என்னும் எழுத்தையும், கீழே தொங்கிக் கொண்டிருக்கும் கை "சி" என்னும் எழுத்தையும், டமரூ வைத்திருக்கும் கை "வ" என்னும் எழுத்தையும், அபய ஹஸ்தம் "யா" என்னும் எழுத்தையும் குறிக்கிறது.

இவ்வானும், குவலயமும் எல்லோமும் காத்தும், படைத்தும், கரந்தும் விளையாடி= எப்போப் பார்த்தாலும் ஆடுகிறாப் போல் இருக்கும் ஈசன் உண்மையில் அவன் ஆட்டத்தின் மூலமே பஞ்சத் தொழில்களையும் நடத்துகிறான் அன்றோ!  டமரூவின் ஓங்கார நாதத்தில் இருந்து தான் மொழி பிறந்தது என்று சொல்கிறார்கள். சிிருஷ்டி ஆரம்பித்தது இந்த ஓங்கார நாதத்தில் இருந்து தான். அபய ஹஸ்த முத்திரை காத்தல் தொழிலைச் செய்கிறது. நெருப்பு ஏந்தி இருக்கும் கை அழித்தலைக் குறிக்கிறது. முயலகனை அழுத்தும் வலக்கால் மாயையை அழுத்துவதையும் மறைத்தல் தொழிலையும், தூக்கிநிற்கும் இடக்கால் அருளுவதையும், அந்த இடக்காலைச் சுட்டும் கை என்னிடம் வந்து சேர் என்றும் தெரிவிக்கிறது. இதில் இருந்து இந்த ஐந்தொழில்களைச் செய்பவர்கள் ஆன பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து பேரும் நடராஜருக்குள் அடங்குபவர்கள் என்றும் இவ்வுலகு அவரில்லாமல் இல்லை எனவும் தெரிய வருகிறது. தத்துவங்களும், உரைகளும், பாக்களும் அவனருளன்றி இல்லை என்பதோடு அல்லாமல் அவன் கோவில்களில் மட்டும் அடியார்கள் காணவேண்டி ஆடவில்லை. இந்த ஆட்டத்தால் தான் அவன் இவ்வுலகை மட்டுமல்லாது ஈரேழு பதினாலு உலகங்களையும் ஆட்டுவிக்கிறான் என்று சொல்கிறது.

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்=அப்படிப்பட்ட ஈசனின் திருநாமத்தைப்பேசிக் கைவளைகள் ஒலிக்கும்படியும், இடையில் அணிந்துள்ள மேகலாபரணங்கள் ஒலிக்கும்படியும், நீண்ட கருங்கூந்தலில் வண்டுகள் மொய்க்கும்படியும்

பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.=பூக்கள் மலர்ந்து மணம் பரப்பி, பூக்களால் நிரம்பிய குளமோ என்னும்படிக்குஇருக்கும் இக்குளத்து நீரில் மூழ்கிக் குளித்து ஈசன் திருநாமத்தைப் பேசி மகிழ்வோம்.  பாடி ஆடுவோம்.

காண்பது திருவண்ணாமலை பஞ்சமுக தரிசனம்

DSC00483.JPG
DSC00483.JPG

Geetha Sambasivam

unread,
Dec 28, 2010, 1:42:31 AM12/28/10
to mint...@googlegroups.com
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் = குவளை மலர்களின் கருங்குவளைப் பூக்கள் நிறைந்தும், செந்தாமரை மலர்கள் நிறைந்தும் காணப்படும் திருக்குளத்தில், நீர்ப்பறவைகளும் நிறையவே இருந்தனவாம்.  குருகினம் என்றால் பறவையினம். அவைகள் போடும் கீச் கீச்சென்ற சப்தமும் நிரம்பிக் குளக்கரையே சல்லென்ற சப்தத்தால் நிரம்பி இருந்ததாம்.  ஒருபக்கம் வண்டுகளின் ரீங்காரம், மற்றொரு பக்கம் பறவைகளின் கலகலத்வனி. இன்னொரு பக்கம் குளிக்க வரும் பெண்களின் கைவளைகள் சப்தம், கால் சிலம்புகள் சப்தம், இதற்கு நடுவே மரங்களின் மர்மர சப்தம், அத்தனைக்கும் நடுவே குளிக்கும் பெண்களின் நமசிவாய என்னும் மந்திர சப்தம், என நிரம்பி இருக்கும் குளக்கரையில்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த= இதை வெளிப்படையாய்ப் பார்த்தால் மலம் கழித்துவிட்டு வந்து கழுவுவதை குறிப்பிடுவது போல் தோன்றினாலும் நம் மும்மலமாகிய ஆணவன், கன்மம், மாயை போன்றவற்றையே குறிக்கும்.   அத்தகைய மும்மலங்களை இத்திருக்குளத்தில் நீராடி ஈசன் திருநாமத்தை உச்சரித்து அவனையே தியானிப்பதன் மூலம் கழுவலாம் என்பது மணிவாசகர் கூற்று.  இங்கே திருக்குளத்தைப் பிராட்டியும் ஈசனும் போல எனக்குறிப்பிட்டிருப்பதும் பொருந்தி வரும்.  பொதுவாக நீர்நிலைகளைப் பெண்ணாகவே வழிபடுகிறோம்.  திருக்கைலையும், மானசரோவர் ஏரியும் ஈசனும் அம்மையும் இணைந்திருப்பதாகவே ஐதீகம்.  அதேபோல் மாணிக்கவாசகர் திருவண்ணாமலை ஐயனின் உருவமாக வழிபட்டதால், திருக்குளத்தை அம்பிகையாக எண்ணி இருவரும் இணைந்திருக்கும் அர்த்தநாரீசுவரக் கோலம் என்று கூறுகிறார்.  மேலும் குவளை மலரின் கரிய நிறமானது அம்பிகையின் கரிய நீண்ட கண்களையும் செந்தாமரை மலரின் செந்நிறமானது ஈசனின் சிவந்த திருமேனியையும் சுட்டுவதாயும் கூறுகிறார்.  அதோடு குருகு என்பதும் அம்பிகையின் கைவளையல்களையும் அவை எழுப்பும் சப்தத்தையும் குறிப்பதோடு அரவம் என்பது இங்கே பாம்பையும் குறிப்பதால் நீர்ப்பாம்புகள் ஐயனின் ஆபரணங்களாய்த் தோற்றமளித்ததாயும் கூறுகிறார்.

பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!=  ஊற்றிலிருந்து நீர் பொங்கிப் பொங்கி மேலெழுந்து வருகிறதாம்.  குளங்களுக்குள்ளே ஆழமாக மடுவென்று ஒரு இடம் உண்டு.   அதுதான் ஊற்றுக்கண் என்பார்கள். அந்த ஊற்றுக்கண் ஆழம் அதிகம் என்பதால் மடுப்பக்கம் போகவேண்டாம் என்பார்கள்.  ஆனால் இங்கேயோ இந்தப் பெண்கள் அத்தகைய ஆழமான பொங்கும் மடுவுக்குள்ளும் பாய்ந்து புகுந்து அவர்கள் கால் சிலம்புகள் சப்திக்கவும், ஈசன் திருநாமத்தைச் சொல்லி நீராடும்போது பூரிக்கும் மனதையும் கூறுகிறார்.  இத்தகைய பூரிப்பான மகிழ்வான எண்ணங்களோடு குடைந்து குடைந்து நீராடும்போது குளத்து ஆழத்து நீரும் மேலெழும்பும்.  அவாறு குளித்து ஈசன் புகழைப்பாடுவோம் என்கிறார் மாணிக்கவாசகர்.  இங்கே கொங்கைகள் என மார்பைச் சுட்டி இருப்பது பக்தியின் குறியீடு.  பக்தி மேலீட்டினால் இதயம் விம்முவதையும், மகிழ்வினால் விம்முவதையும், நாம் பலமுறை உணர்ந்திருப்போம் அல்லவா?

Geetha Sambasivam

unread,
Dec 29, 2010, 4:18:23 AM12/29/10
to mint...@googlegroups.com
திருவெம்பாவை ஐந்தாம் நாள்

மாலறியா நான்முகனும் காணா மலையினை  நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மையாட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

திருமாலும், பிரமனும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டையிட்டுக்கொள்ள இருவரும்  தாமே பெரியவர் என்று அறுதியிட்டுக் கூற, பின்னர் ஈசனிடம் சென்று கேட்டால் அவன் உண்மையுரைப்பான் எனத் தோன்ற ஈசனிடம் சென்று எங்கள் இருவரில் யார் பெரியவர் எனக் கேட்கிறார்கள்.  ஈசனும் அடிமுடி கண்டுபிடிக்க முடியாத பெரும் சோதி வடிவில் நின்றான்.  இருவரையும் இதற்கு மூலமும், முடிவும் கண்டு வரச் சொல்ல பிரம்மாவோ ஈசனின் தலையைக் காணவும், விஷ்ணுவோ அடியைப் பணியவும் தேடிச் சென்றனர்.  ஆனால் விஷ்ணுவால் காணமுடியாமல் திரும்பி வந்து தான் தோற்றதை ஒத்துக்கொண்டார்.  மேலே,மேலே, மேலே சென்ற பிரம்மாவோ,விண்ணையும் தாண்டிச் சென்றும் முடியைக்காண இயலவில்லை.  அப்போது ஈசன் சடாமுடியில் சூடி இருந்த தாழம்பூ ஒன்று கீழே விழுந்தது.  கீழே கீழே வந்த தாழம்பூவைப் பார்த்து மகிழ்ந்த பிரம்மா இது நிச்சயம் ஈசன் முடியிலிருந்து வந்ததால் நாம் முடியைக் கண்டோம் எனச் சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து, தாழம்பூவைச் சாட்சி சொல்ல அழைக்க, தாழம்பூவும் ஒத்துக்கொண்டது.

ஈசன் முடியைக் கண்டதாக பிரம்மா கூற ஈசன் உண்மை தெரிந்து பிரம்மாவை சபிக்கிறார். தாழம்பூவுக்கும் இனி என் வழிபாட்டில் நீ இடம்பெற மாட்டாய் என்று ஒதுக்கிவிடுகிறார்.  அப்படி அடிமுடி தேடிய விஷ்ணுவாலும், பிரம்மாவாலும் காண முடியாமல் நின்ற ஈசனை நாம் உணர்வோம் என்று பொய்யுரை பேசுகிறாளாம் இந்தப்பெண்.

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்=  ஆஹா இனிமையான சொற்களால் பொய்யுரைகளை பேசும் வஞ்சகப் பெண் இவள் அன்றோ, வாசற்கதவைத்திறப்பாயாக!

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்= இந்த மண்ணகத்தில் உள்ளவராயினும், விண்ணகத்தில் உள்ளவராயினும் மற்றும் உள்ள எவராலும் அறிய முடியாத, காண முடியாத பரம்பொருளின்

கோலமும் நம்மையாட்கொண்டருளிக் கோதாட்டும்= திருமேனியின் அழகும், நம்மையும் நம் போன்ற எளியோரையும் ஆட்கொண்டருளும் அருட்குணத்தையும்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று= ஐயனவன் சீலத்தையும் பாடி என் சிவனே என் சிவனே என்று

ஓலம் இடினும் உணராய் உணராய் காண்= எத்தனை முறை ஓலம் இட்டோம்.  அவ்வாறு கூவியும், நீ எழுந்துவரவே இல்லையே,

ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்= ஈசனுக்கல்லாது உன்னை அலங்கரித்துக்கொண்டிருக்கும் பெண்ணே, உன் பக்தி எங்கே போயிற்று? என்று எழுப்பவந்த தோழியர் அழைக்கின்றனர்.
*********************************************

திருவெம்பாவை ஆறாம் நாள்

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மைத் தலையளித்தாட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோருக்குன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.
 
மானே நீ நென்னலை நாளை வந்துங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே = அழகிய மான் போன்ற பெண்ணே!  நாளைக்கு நானே வந்து உங்களை எல்லாம் எழுப்புவேன் என்று கூறி இருந்தாயே?  அப்படிச் சொன்னதை மறந்தாயோ?  எங்கே போயிற்று அந்த வார்த்தைகள்? உனக்கு நாணமாய் இல்லையா?

போனதிசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ= அவ்வார்த்தைகள் எந்தத் திசையில் சென்றன பெண்ணே, இன்னமுமா உனக்குப் பொழுது புலரவில்லை??

வானே நிலனே பிறவே அறிவரியான்= இந்த வானும் சரி, நிலமும் சரி, பிற எவ்வுலகங்களும் சரி, இறைவனைச் சரிவர அறிந்தவரில்லை.   எவர் அறிவார் அவன் பெருமையை?? இது உணர்வால் மட்டுமே இயலும் ஒன்று.

தானே வந்தெம்மைத் தலையளித்தாட்கொண்டருளும்= ஆனாலும் அந்தப் பரமன் தானே வலிய வந்து அவனிடம் பக்தி செலுத்தும் நம்மிடம் அன்பு பூண்டு நம்மை ஆட்கொண்டருளுகிறான்.

வான்வார் கழல்பாடி வந்தோருக்குன் வாய் திறவாய்=அப்படிப்பட்ட ஈசனின் வீரக் கழல் அணிந்த திருவடிகளைப் பணிந்து பாடித் துதித்து இங்கே வந்துள்ள எங்களுக்கு நீ வாயைத் திறந்து உன் பதிலையாவது கூறுவாய்.

ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்= ஆ, ஆ, நீ இவ்வளவு கல்நெஞ்சுக்காரியாய் இருக்கிறாயே?  பரமன் பெயரை நாங்கள் சொன்னதைக் கேட்டதுமே நீ வாயையும் திறக்காததோடு உன் ஊனும் கூட உருகவில்லையே?? இது என்ன அதிசயம்? இத்தகைய நிலை உனக்கு ஒருத்திக்குத் தான் இருக்கும். அடிபெண்ணே,

ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்= ஈசன் எங்களுக்கு மட்டுமல்ல, உனக்கும், உன்னைச் சேர்ந்தவர்களுக்கும், மற்றும் இவ்வுலகத்து மாந்தர் அனைவருக்கும் தலைவன் ஆவான். அவன் புகழைப் பாட இனியாவது நீ வருவாயாக.
**********************************************

திருவெம்பாவை ஏழாம் நாள்

அன்னே இவையும் சிலவோ பலஅமரர்
உன்னற்கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாயின்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!

இவை வெளிப்படையாகத் தூங்கும் பெண்ணை எழுப்புவதைக் குறித்தாலும் நம் மனம் விழிப்புறுதலையே குறிக்கும்.  நம்முள்ளே உறையும் ஈசனை நாம் கண்டு கொள்ளவேண்டும் என்பதற்காகவே மாணிக்கவாசகர் தூங்கும் ஒரு பெண்ணை எழுப்புவதுபோல் நம் அனைவரையும் ஈசனின் சச்சிதானந்தப் பெருவெள்ளத்தில் மூழ்க அழைக்கிறார்.

எவ்வளவு எழுப்பியும் இன்னமும் தூங்குகிறாள் அந்தப் பெண்.  மாயையில் நாம் ஆழ்ந்து கிடக்கிறதையே இது உணர்த்தும்.  எத்தனையோ சோதனைகள் மூலம் ஈசன் தன்னிருப்பைக் காட்டினாலும் நாம் எங்கே புரிந்து கொள்கிறோம்?? திரும்பத் திரும்ப இவ்வுலக வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளிலேயே மனம் செல்கிறது.

அன்னே இவையும் சிலவோ பல அமரர்=அம்மா, தாயே என்று சொல்வோம் அல்லவா, அத்தகையதொரு விளி இது.  தாயே, இப்படியும் முன்னுக்குப் பின் முரணாகச் செய்வாயா நீயும்?  உனக்கு இப்படியும் நடந்து கொள்ளத் தெரியுமா?

உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்= ஈசனை உன்னி மனம் நினைக்கவும் அரியவன் ஆயிற்றே, தேவாதிதேவர்களாலும் இயலாத ஒன்றாயிற்றே, சீரும், சிறப்பும் நிறைந்தவன் அன்றோ,

சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய்திறப்பாய்=  அத்தகைய பெருமை வாய்ந்த ஈசனின் திருச்சின்னங்கள் ஆன எக்காளம், சங்கு போன்றவற்றின் ஒலிகளைக் கேட்ட மாத்திரத்திலேயே நீ சிவன் நாமத்தைக் கூறுவாயே!

தென்னா என்னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்=தென்னாடுடைய சிவன் என்பதற்காக, தென்னா என்று ஆரம்பிக்கும்போதே தீயிலிட்ட மெழுகைப் போல் உருகுவாளாம். அப்படி இருந்த நீயா இவ்வாறு மாறிவிட்டாய்?
என்னானை என் அரையன் இன்னமுதென்றெல்லோரும்= என் அப்பன், என் அரசன், என் இன்னமுது,  என்று இங்கே உள்ள நாங்கள் அனைவரும் ஒவ்வொருவராக ஒவ்வொரு பெயரையும் சொல்லிவிட்டோம். அப்படியுமா தூக்கம்??

வன்னெஞ்சப் பேதையர் போல் வாளாகிடத்தியால்  என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்= இப்படி கடூரமான கடின இதயம் கொண்ட அறிவிலிகளைப் போல் சும்மா படுத்துக்கிடக்கிறாயே இன்னமும்?? இந்தத் தூக்கத்தின் வலிமைதான் எவ்வளவு ஆழமாய் உள்ளது?

எப்படிச் சொன்னாலும் திரும்பத் திரும்ப இருளாகிய அறியாமையின் பாலே மனம் செல்கிறது.  அதிலே கிடைக்கும் அற்ப சுகங்களிலே மனம் லயிக்கிறது. ஆனந்திக்கிறது.  அந்த மனத்தை விழிக்கச் செய்து தன்னுள்ளே ஒளிரும் ஒளியான ஈசனைக் காணச் செய்யவேண்டும். 
***********************************************

திருவெம்பாவை எட்டாம் நாள்

கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில்விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.

பொழுது விடியும்போது சேவலும், கோழியும் கூவித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். 

கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்= அவ்வாறு கோழி மட்டும் சிலம்பவில்லை, குருகு=பறவையினங்கள் அனைத்துமே விழித்துக்கொண்டு ஒலியெழுப்புகின்றன.

ஏழில் இயம்ப இயம்பும்வெண்சங்கெங்கும்=  உதய கீதங்கள் கோயிலில் இசைக்கப்படும், அவ்வொலியோடு வெண்சங்கு ஊதும் ஒலியும் கேட்கிறது.

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை= ஒளிச்சுடராய் விளங்கிய ஈசனின் ஒப்பற்ற பெரும் கருணையைப் புகழும்

கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ= ஈசன் புகழ் பாடும் பொருள் கொண்ட சிறப்பான பாடல்களை நாங்கள் பாடினோமே? உனக்குக் கேட்கவில்லையா?

வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்= அடி பெண்ணே இப்படிக் கிடக்கிறாயே? நீ வாழி, உனக்கு ஒன்றும் நேராமல் இருக்கட்டும், வாயைத் திறக்க மாட்டாயா?

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ= ஆழி இங்கே கடல் . கடல் போன்ற அன்புள்ள ஈசனின் திருவடிக்கு அன்பு செய்யும் நெறிமுறை இதுவா??

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்.= ஊழிக்காலத்திலும் அவன் ஒருவனே நிரந்தரமாய் இருப்பான்.  அத்தகைய உலக முதல்வனை, ஏழைகளுக்கெல்லாம் கருணை செய்பவனைப் பாடித் துதிக்கலாம் வா.  இங்கே ஏழைப்பங்காளன் வெளிப்படையான பொருளில் பணமில்லாமல் சிரமப்படும் ஏழைகளுக்கும் கடவுளே தெய்வம் என்ற கோணத்தில் திக்கற்றவர்களுக்கு தெய்வம் என்றும் கொள்ளலாம்.  இன்னொரு பொருளில் பக்தியில் ஏழையாக இருந்தாலும் அவன் அதைக் கண்டு கொள்ள மாட்டான்.  நீ அவனை மனமார ஒருமுறை நினைத்தாலே போதும், உன்னைத் தடுத்தாட்கொள்வான் என்றும் கொள்ள முடியும்.  பொதுவாய் ஆன்றோர் கூறுவது, இங்கே ஏழை என்பது பல்வேறு அணிகள்பூண்ட உமையைக் குறிக்கும், பங்காளன்=உமைக்குத் தன் உடலில் சரிபாதி பங்கு கொடுத்த ஈசன் என்றும் பொருள் கொள்கிறார்கள்.  மேலும் அன்னைக்குத் தன் உடலில் சமபாகம் கொடுத்தருளிய நிகழ்வு கார்த்திகைத் திருநாளில் திருவண்ணாமலையிலேயே நடைபெற்றது.  ஆகவே அதுவும் பொருந்தும்.
*********************************************

இப்போ சுபாவுக்குப் பிடித்த பாடல் ஒன்பதாம் நாள்

"முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப்ப்பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப்பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்னவகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்.

முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே= இவ்வுலகம் தோன்றியதற்கெல்லாம் கால நிர்ணயம் செய்கின்றனர்.  மற்ற வேத, வேதாந்தங்களுக்கு, காவியங்களுக்கு அனைத்துக்குமே ஒருவாறு கால நிர்ணயம் செய்ய முடிகிறது.  ஆனால் ஈசன் எப்போது தோன்றினான்? தோற்றுவித்தவர் யார்?  அவன் இருப்பைக்கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்றே சொல்லலாம்.  அத்தகைய கால நிர்ணயமே செய்ய முடியாத காலத்துக்கும் முன்னே தோன்றிய மிகப் பழைய, ஆதியான பொருளே, அவன் தான் ஈசன்,

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே= பின்னால் எத்தனையோ புதுமைகள் தோன்றின. தோன்றுகின்றன, தோன்றவும் தோன்றும்.  ஆனால் இவை எதுவுமே முன்னால் இல்லைனு சொல்ல முடியுமா? இல்லைஅல்லவா? ஏற்கெனவே இருந்த ஒன்றைத் தான் நாம் கண்டு பிடிக்கிறோம்.  புதுமை எனச் சொல்கிறோம்.  அத்தகைய புதுமைகளுக்கும் புதியவனாக இனி வரும் சமூகமும் காணவேண்டிய புதிய இளையவனாக ஈசன் இருக்கிறான்.  ஏனெனில் அவன் இல்லை எனக் கூறுபவர்களும் அவனை உணர வைக்கும் தன்மை கொண்டிருக்கிறான் அல்லவா? அவன் ஒருவன் இருக்கிறான் என்பதாலேயே இல்லை என்ற மறுப்பும் தோன்றுகிறது. இந்த வாதம் புதியது போல் இன்று பேசப்பட்டாலும் அநாதிகாலந்தொட்டே இவையும் பேசப்படுகிறது.  ஆகவே புதுமை என்றாலும் மீண்டும் மீண்டும் அதே தன்மை, பொருள் கொண்டவையாகவே இருக்கிறது.  அத்தகைய தன்மை உள்ளவன் ஈசன்.

உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம் உன்னடியார் தாள் பணிவோம்= அப்பா, உன்னை எங்கள் தலைவனாய்ப் பெற்ற நாங்கள் உன்னை எவர் தலைவராய் நினைந்து வணங்குகிறாரோ அத்தகைய சிறப்பான அடியார்களையே அவர்கள் திருவடிகளையே பணிந்து ஏத்துவோம்.

ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார்= அவர்களுக்கே நாங்கள் உரிமை உள்ளவர்கள் ஆவோம்.  அப்படிப்பட்ட சிவனடியார்களையே தேடித்தேடி எங்கள் கணவராக்கிக்கொள்வோம்.

அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்= அவ்வடியார்கள் தங்கள் மனம் மகிழ்ந்து சொன்ன ஆணைகளையே நாங்கள் அவர்களுக்குச் சேவகர்களாய் இருந்து நிறைவேற்றித் தருவோம். 

இன்னவகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்= எங்கள் ஈசனே எமக்கு எம் அரசனாகிய நீர் இவ்வண்ணம் அருள் புரியும்படி கேட்டுக்கொள்கிறோம்.  அத்தகைய அருள் பெற்றாலே நாங்கள் எக்குறையும் இல்லாதவராய் வாழ்வோம்.
***********************************************

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாண்
ஏதவன் ஊர் ஏதவன்பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிவே = பாதாளங்கள் என்று பூமிக்குக் கீழே ஏழு இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது.  மகாதலம், ரசாதலம், தராதலம், சுதலம், நிதலம், விதலம், அதலம் என்பவை அவை.  இவ்வாறு இத்தனை பாதாளங்களுக்கும் கீழே கீழே ஈசனின் திருவடி வியாபித்திருக்கிறது.  அப்படியும் அதைக் காண இயலவில்லை.   எல்லாவற்றுக்கும் கீழே சொல்லுக்கும் அடங்காத நிலையைப் பெற்ற அந்தத் திருவடிகளையும், அழகிய புத்தம்புது மலர்களால் அலங்கரிக்கப் பட்ட அவன் திருமுடியையும் எல்லாப் பொருள்களுக்கும் ஆரம்பமும், முடிவும் அதுவே எனப் படுகிறது. 

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்= அவன் உடலின் ஒருபாகத்தில் அம்பிகையும் இடம்பெற்றிருக்கிறாள்.  ஆகவே அவனுடைய திருமேனியும் ஒரே விதமானது அல்ல.  ஒரு பக்கம் ஆணின் மேனியும், இன்னொரு பக்கம் பெண்ணின் மேனியும் கொண்டு விளங்குகிறான்.  இந்த அர்த்தநாரீசுவரத் தத்துவம் உள்ளார்ந்த பொருள்பொதிந்த ஒன்று.  ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஆண், பெண் தன்மைகள் கலந்தே இருக்கின்றன்.  ஈசன் மேல் பக்தி மீதூறி, அவனைத் தியானித்து, அவன் பஞ்சாக்ஷரத்தை ஓதும் அடியார்களுக்கு, பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்குத் தங்களுக்குள்ளே உள்ள பெண் வடிவைக் காணவும் இயலும்.  ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கண்டது போல.  ஆகவே அவ்வளவு ஆழ்ந்து ஊறிப் போய் பக்தி செய்யவேண்டும். 

இப்படிப் பக்குவப்பட்ட ஆன்மா, பக்குவப்படாத மற்றவர்களைப் பார்த்து நீங்களும் விழித்தெழுங்கள், உங்களுள்ளே இருக்கும் சோதியைக் கண்ணார, மனமாரக் கண்டு மகிழுங்கள் என்பதே திருவெம்பாவையின் முழுத் தத்துவம்,  இது என்னோட கருத்து மட்டுமே. மாற்றுக்கருத்து இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம்.

வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்= வேதங்களுக்கு முதல்வன் இவனே. விண்ணோரான தேவாதிதேவர்களும் சரி, மண்ணுலகில் வாழும் மக்களும் சரி, இவனைப் புகழ்ந்து எவ்வளவு பாராட்டிப் பாடினாலும்

ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்= ஈசனின் புகழ்ச்சி என்பது முற்றுப் பெறா ஒன்றாகும்.  தொண்டர்களுக்கு எல்லாம் இவன் தோழனாகவே இருக்கிறான்.  சுந்தரருக்காகத் தூது போனதை அறிவோம் அல்லவா?

கோதில் குலத்து அரன் தன் கோய்ல் பிணாப்பிள்ளைகாள்= ஏ, பெண்களே, இவ்வளவு பெருமையும், புகழும் வாய்ந்த சொல்லுக்கடங்கா ஈசனின் திருக்கோயிலில் தொண்டு செய்வதையே உங்கள் முழுநேர வேலையாகக் கொண்டு சிவத் தொண்டு செய்யும் பெண்களாகிய நீங்கள்

ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்= ஈசனின் சொந்த ஊர் எது? அவனுடைய உண்மையான பெயர் என்ன?? அவனுடைய உற்றார் உறவினர் யார்? அவனுக்கு அயல் மனிதர்கள் எவர்?

இங்கே சொல்லி இருப்பது, முன்னைப் பழம்பொருளுக்கும் பழம்பொருளான ஈசனுக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை, உற்றார், உறவினரும் இல்லை.  அவனுக்குப் பெயரும் நாம் சூட்டியதே.  மேலும் இவர் உற்றார், இவர் அயலார் என்று அவன் பேதம் காட்டுவதில்லை.  எல்லாருக்குமே ஒரே மாதிரியாகத் தன் அருள் மழையைப் பொழிகிறான்.  அவனிடம் பேதம் ஏதும் இல்லை.

ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்=  இவ்வளவு புகழ் வாய்ந்த ஈசனைப் பாடும் தன்மை கூட நமக்குப் புரியவில்லை.  நாம் ஏதோ பாடுகிறோம், அவனோ அதையும் ஏற்றுக்கொண்டு நமக்கு அருள் செய்வது ஒன்றே அவன் குறிக்கோளாக வைத்திருக்கிறான்.
**********************************************

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
    கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
    செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
    ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
    எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.

சிறந்த சிவபக்திச் செல்வத்தில் சிறந்து விளங்கிய மணிவாசகர் திருவண்ணாமலையில் தங்கி இருக்கும்போது அங்கிருந்த பெண்கள் தினமும் காலையிலே குளித்து நீராடி அருணாசலேஸ்வரரை வழிபட்டதும், அவரையே நினைந்து நினைந்து உருகியதையும் கண்டு தம்மையும் ஒரு பெண்பாலாக நினைந்து  அவர் பாடிய பாடல்களே திருவெம்பாவை என்ற ஒரு கூற்றும் உண்டு.  மேற்சொல்லி இருக்கும் திருவெம்பாவையில் குளத்தில் பெண்கள் அதிகாலையில் குளிப்பது பற்றிச் சொல்கையில் குளத்து நீரைக் கைகளால் அடித்துச் சத்தம் வரும்படி நீருக்குள் புகுந்து, குளித்ததாய்ச் சொல்கிறார்.

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையால் குடைந்து குடைந்து=  குளத்து நீரெல்லாம் அசுத்தமாகாத பொற்காலம் அது. தாமரைகள் பூத்திருக்கும்.  தாமரைப் பூவின் தேனை உண்ண வண்டுகள் மொய்க்கும்.  அப்படி வண்டுகள் நிறைந்திருக்கும் திருக்குளத்தில் அந்தத் தண்ணீரில் தங்கள் கைகளால் முகேர் என்ற சப்தம் வரும்படி நீரை அடித்துக்கொண்டு பாய்ந்து, நீருக்குள் புகுந்து, புறப்பட்டுக் குளித்து

உன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்= என் ஈசனே, என் ஐயனே, உன் திருவடிகளின் புகழைப்பாடுகின்றோம்; பரம்பரை பரம்பரையாக உன் புகழன்றி நாங்கள் வேறொருவரை நினைத்ததில்லை.  உன்னடியார்களாகவே உன்னாலேயே உன்னருளாலேயே நாங்கள் வாழ்ந்து வருகிறோம். 

ஆரழல் போல் செய்யாவெண்ணீறாடி செல்வா=  மாலுக்கும், அயனுக்கும் அடிமுடிகாணமுடியா அழல் போன்ற உருவெடுத்த உன் நிறமும் அத்தகைய நெருப்புப் போன்ற சிவந்த நிறமுடையது அன்றோ, செக்கச் சிவந்த மேனியன் அன்றோ, வெண்மையான திருநீற்றினால்  அன்றோ நீ குளிக்கிறாய்

சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா=  சிறுத்த இடையுடன் கூடிய, மை தீட்டப் பெற்ற அழகிய அகன்ற கண்களை உடைய மடந்தையாகிய உமையின் மணவாளனே

ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்=  ஐயா, என் ஈசனே உன்னுடைய திருவிளையாடல்கள் எல்லையற்றவை.  அவை அனைத்தும் எம்மை ஆட்கொள்ளவேண்டியே நீ நடத்துகிறாய். 

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோய்= அந்தத் திருவிளையாடல்களின் உய்யும் வழியெல்லாம் பெற்று அநுபவித்துக் கழித்துவிட்டோம்.

எய்யாமற்காப்பாய் எமையேலோர் எம்பாவாய்= எங்கள் வினையெல்லாம் தீர இனியேனும் நாங்கள் பிறவி என்னும் பெருங்கடலில் மூழ்கி இளைத்துச் சோர்ந்து போகாமல் எங்களைக் காப்பாற்றி மோக்ஷத்தை அருளுவாய்
***********************************************

ஆர்த்த பிறவித்துயர் கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.

நம் இருவினைப் பாசங்களால், அதாவது நல்வினை, தீவினை ஆகியவற்றால் கட்டுண்டு கிடக்கும் பிறவியால் ஏற்படும் துன்பம் ஒழிந்து ஈசனின் நாமம் ஒன்றே நம்மை உய்விக்கும் திறன் படைத்தது என்னும்படிக்கு அவன் நாமாவளியாகிய அமுதக் கடலில் மூழ்கும் தீர்த்தமாக ஐந்தெழுத்து மந்திரம் இங்கே விளங்குகிறது.

நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன்= சுற்றிலும் நெருப்பெரிய நடுவே தில்லையம்பலத்து நடராஜர் ஆடுவதாக ஐதீகம்.  ஆதிரை நக்ஷத்திரமும் செக்கச் சிவந்த ஒளி பொருந்திய தோற்றம் கொண்டு விண்ணில் அசைந்து ஆடுவது ஈசன் எல்லையில்லாப் பெருவெளியில் ஆடுவது போலவே தோற்றமளிக்கும் என்பதும் கூறப்படுகிறது.  அதே போல் அம்பலக்கூத்தனும் ஆடுகிறான்.  ஆட்டுவிக்கிறான்.  இது வெளிப்படையான பொருளென்றாலும் நம் உடலே பஞ்சாக்ஷரத்தால் ஆனது.  அந்தப் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓதி நம் உள்ளத்தினுள்ளே மனதுக்குள்ளே ஓதிக்கொண்டு வந்தோமானால் உள்ளே ஈசன் உறைந்திருப்பது கண்கூடு. மருவுந்துடியுடன் மன்னிய வீச்சு
மருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவின் மிதித்த கமலப் பதமும்
உருவில் "சிவாய நம" என ஓதே." (உண்மை விளக்கம்-மாணிக்க வாசகர்)

"நமசிவாயா" என்னும் ஐந்தெழுத்துப் பஞ்சாட்சரம் தான் அவரின் உடலின் அங்கங்களும் கூட. அக்னியை ஏந்தும் கையானது "ந" என்னும் எழுத்தையும், கால்கள் "ம" என்னும் எழுத்தையும், கீழே தொங்கிக் கொண்டிருக்கும் கை "சி" என்னும் எழுத்தையும், டமரூ வைத்திருக்கும் கை "வ" என்னும் எழுத்தையும், அபய ஹஸ்தம் "யா" என்னும் எழுத்தையும் குறிக்கிறது.

இவ்வானும், குவலயமும் எல்லோமும் காத்தும், படைத்தும், கரந்தும் விளையாடி= எப்போப் பார்த்தாலும் ஆடுகிறாப் போல் இருக்கும் ஈசன் உண்மையில் அவன் ஆட்டத்தின் மூலமே பஞ்சத் தொழில்களையும் நடத்துகிறான் அன்றோ!  டமரூவின் ஓங்கார நாதத்தில் இருந்து தான் மொழி பிறந்தது என்று சொல்கிறார்கள். சிிருஷ்டி ஆரம்பித்தது இந்த ஓங்கார நாதத்தில் இருந்து தான். அபய ஹஸ்த முத்திரை காத்தல் தொழிலைச் செய்கிறது. நெருப்பு ஏந்தி இருக்கும் கை அழித்தலைக் குறிக்கிறது. முயலகனை அழுத்தும் வலக்கால் மாயையை அழுத்துவதையும் மறைத்தல் தொழிலையும், தூக்கிநிற்கும் இடக்கால் அருளுவதையும், அந்த இடக்காலைச் சுட்டும் கை என்னிடம் வந்து சேர் என்றும் தெரிவிக்கிறது. இதில் இருந்து இந்த ஐந்தொழில்களைச் செய்பவர்கள் ஆன பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து பேரும் நடராஜருக்குள் அடங்குபவர்கள் என்றும் இவ்வுலகு அவரில்லாமல் இல்லை எனவும் தெரிய வருகிறது. தத்துவங்களும், உரைகளும், பாக்களும் அவனருளன்றி இல்லை என்பதோடு அல்லாமல் அவன் கோவில்களில் மட்டும் அடியார்கள் காணவேண்டி ஆடவில்லை. இந்த ஆட்டத்தால் தான் அவன் இவ்வுலகை மட்டுமல்லாது ஈரேழு பதினாலு உலகங்களையும் ஆட்டுவிக்கிறான் என்று சொல்கிறது.

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்=அப்படிப்பட்ட ஈசனின் திருநாமத்தைப்பேசிக் கைவளைகள் ஒலிக்கும்படியும், இடையில் அணிந்துள்ள மேகலாபரணங்கள் ஒலிக்கும்படியும், நீண்ட கருங்கூந்தலில் வண்டுகள் மொய்க்கும்படியும்

பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.=பூக்கள் மலர்ந்து மணம் பரப்பி, பூக்களால் நிரம்பிய குளமோ என்னும்படிக்குஇருக்கும் இக்குளத்து நீரில் மூழ்கிக் குளித்து ஈசன் திருநாமத்தைப் பேசி மகிழ்வோம்.  பாடி ஆடுவோம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் = குவளை மலர்களின் கருங்குவளைப் பூக்கள் நிறைந்தும், செந்தாமரை மலர்கள் நிறைந்தும் காணப்படும் திருக்குளத்தில், நீர்ப்பறவைகளும் நிறையவே இருந்தனவாம்.  குருகினம் என்றால் பறவையினம். அவைகள் போடும் கீச் கீச்சென்ற சப்தமும் நிரம்பிக் குளக்கரையே சல்லென்ற சப்தத்தால் நிரம்பி இருந்ததாம்.  ஒருபக்கம் வண்டுகளின் ரீங்காரம், மற்றொரு பக்கம் பறவைகளின் கலகலத்வனி. இன்னொரு பக்கம் குளிக்க வரும் பெண்களின் கைவளைகள் சப்தம், கால் சிலம்புகள் சப்தம், இதற்கு நடுவே மரங்களின் மர்மர சப்தம், அத்தனைக்கும் நடுவே குளிக்கும் பெண்களின் நமசிவாய என்னும் மந்திர சப்தம், என நிரம்பி இருக்கும் குளக்கரையில்

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த= இதை வெளிப்படையாய்ப் பார்த்தால் மலம் கழித்துவிட்டு வந்து கழுவுவதை குறிப்பிடுவது போல் தோன்றினாலும் நம் மும்மலமாகிய ஆணவன், கன்மம், மாயை போன்றவற்றையே குறிக்கும்.   அத்தகைய மும்மலங்களை இத்திருக்குளத்தில் நீராடி ஈசன் திருநாமத்தை உச்சரித்து அவனையே தியானிப்பதன் மூலம் கழுவலாம் என்பது மணிவாசகர் கூற்று.  இங்கே திருக்குளத்தைப் பிராட்டியும் ஈசனும் போல எனக்குறிப்பிட்டிருப்பதும் பொருந்தி வரும்.  பொதுவாக நீர்நிலைகளைப் பெண்ணாகவே வழிபடுகிறோம்.  திருக்கைலையும், மானசரோவர் ஏரியும் ஈசனும் அம்மையும் இணைந்திருப்பதாகவே ஐதீகம்.  அதேபோல் மாணிக்கவாசகர் திருவண்ணாமலை ஐயனின் உருவமாக வழிபட்டதால், திருக்குளத்தை அம்பிகையாக எண்ணி இருவரும் இணைந்திருக்கும் அர்த்தநாரீசுவரக் கோலம் என்று கூறுகிறார்.  மேலும் குவளை மலரின் கரிய நிறமானது அம்பிகையின் கரிய நீண்ட கண்களையும் செந்தாமரை மலரின் செந்நிறமானது ஈசனின் சிவந்த திருமேனியையும் சுட்டுவதாயும் கூறுகிறார்.  அதோடு குருகு என்பதும் அம்பிகையின் கைவளையல்களையும் அவை எழுப்பும் சப்தத்தையும் குறிப்பதோடு அரவம் என்பது இங்கே பாம்பையும் குறிப்பதால் நீர்ப்பாம்புகள் ஐயனின் ஆபரணங்களாய்த் தோற்றமளித்ததாயும் கூறுகிறார்.

பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!=  ஊற்றிலிருந்து நீர் பொங்கிப் பொங்கி மேலெழுந்து வருகிறதாம்.  குளங்களுக்குள்ளே ஆழமாக மடுவென்று ஒரு இடம் உண்டு.   அதுதான் ஊற்றுக்கண் என்பார்கள். அந்த ஊற்றுக்கண் ஆழம் அதிகம் என்பதால் மடுப்பக்கம் போகவேண்டாம் என்பார்கள்.  ஆனால் இங்கேயோ இந்தப் பெண்கள் அத்தகைய ஆழமான பொங்கும் மடுவுக்குள்ளும் பாய்ந்து புகுந்து அவர்கள் கால் சிலம்புகள் சப்திக்கவும், ஈசன் திருநாமத்தைச் சொல்லி நீராடும்போது பூரிக்கும் மனதையும் கூறுகிறார்.  இத்தகைய பூரிப்பான மகிழ்வான எண்ணங்களோடு குடைந்து குடைந்து நீராடும்போது குளத்து ஆழத்து நீரும் மேலெழும்பும்.  அவாறு குளித்து ஈசன் புகழைப்பாடுவோம் என்கிறார் மாணிக்கவாசகர்.  இங்கே கொங்கைகள் என மார்பைச் சுட்டி இருப்பது பக்தியின் குறியீடு.  பக்தி மேலீட்டினால் இதயம் விம்முவதையும், மகிழ்வினால் விம்முவதையும், நாம் பலமுறை உணர்ந்திருப்போம் அல்லவா?
***********************************************காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப்புனலாடிச் சிற்றம்பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத்திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

காதார் குழையாடப்பைம்பூண் கலனாடக்=  காதில் அணிந்திருக்கும் குழைகள் ஆடவும், கழுத்தில் அணிந்திருக்கும் மற்ற அணிகலன்கள் ஆடவும்,

கோதை குழலாட வண்டின் குழாமாடச்=  அழகிய பெண்களின் நீண்ட குழல் விரிந்து பரந்து ஊஞ்சல் ஆடுவதைப் போல் ஆடவும், அப்போது அந்தக் கூந்தலில் அந்தப் பெண்கள் சூடி இருக்கும் மலர்களும் சேர்ந்து ஆடவும் அதைக் கண்ட வண்டுகளின் கூட்டம் அந்தப் பூக்களின் தேனை மாந்தும் நோக்கத்தோடு ர்ரூம்ம்ம்ம்ம் என ரீங்காரமிட்டுக்கொண்டு ஆடிக்கொண்டே சுற்றிச் சுற்றி வரவும்

சீதப் புனலாடிச் சிற்றம்பலம்பாடி= இந்த அழகிய தண்மையான குளிர்ந்த நீரில் மூழ்கி நாமும் ஆடுவோம்.  அதுமட்டுமா?  ஆடும்போது அந்தச் சிற்றம்பலத்தானைக் குறித்துப் பாடி ஆடுவோம்.

வேதப் பொருள்பாடி அப்பொருளாமாபாடிச் =  வேதங்களின் பொருளாகவே அமைந்த அந்த சர்வேசனின் புகழைப் பாடி, அவர்தம் பெருமைகளைப் புகழ்ந்து கூறும் பாடல்களைப் பாடி, அனைத்துக்கும் அவனே காரணமும், காரியமுமாய் அமைந்ததைக் குறித்து வியந்து பாடுவோம்.

சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி= இறைவன் சோதி வடிவானவன்.  அத்தகையவனின் சோதியின் திறம் பற்றி நம்மால் இயன்றவரை எடுத்துப் பாடுவோம்  அவன் சூடும் கொன்றாஇ மலர்களால் ஆன மாலையைப்பாடுவோம்

ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்= ஆதியும் அவனே, அந்தமும் அவனே, அவனே முதலும், முடிவும் அவனே.  இதையும் நாம் உணர்ந்து பாடுவோம்.

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்= நம் ஒவ்வொருவரின்கர்ம வினைக்கேற்றவாறும், இயல்புக்கேற்றவாறும் நம்மை வகைப்படுத்தி, வேறுபடுத்தி நம்மை வளர்த்து ஆளாக்கும் அன்னை , அவள் கைகளின் வளையல்களும் ஆட,

பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.=  அவள் திருவடிகளின் பெருமையையும் புகழ்ந்து பாடி ஆடுவோமாக.

இங்கே மாணிக்க வாசகர் தில்லையில் இடைவிடாது ஆடிக்கொண்டே தன் கூத்தின் மூலம் இவ்வுலகை ஆட்டி வைக்கும், இயக்கும் நடராஜப் பெருமானின் ஆட்டத்தையும், அதன் உள்ளார்ந்த தத்துவத்தையும் குறித்துப் பாடுகிறார். அவனுடைய ஒவ்வொரு அசைவிலும் இவ்வுலகம் இயங்குவதையும் குறிப்பிடுகிறார். 

திருவெம்பாவை3.jpg
--
திருவெம்பாவை3.jpg

Geetha Sambasivam

unread,
Dec 29, 2010, 4:20:51 AM12/29/10
to mint...@googlegroups.com
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்

Dec 29, 2010, 4:33:32 AM12/29/10
to mint...@googlegroups.com
ஆஹா, தவறை இப்போதே கவனித்தேன்,  சேமிப்பைக் க்ளிக்கி செலக்ட் ஆல் கொடுத்திருக்கேன் போல, எல்லாம் ஐந்தாம் நாளில் இருந்து திரும்ப வந்திருக்கின்றது.  மன்னிக்கவும்.  :(((((((

2010/12/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>
திருவெம்பாவை3.jpg

Mohanarangan V Srirangam

unread,
Dec 29, 2010, 8:59:46 AM12/29/10
to mint...@googlegroups.com
அம்மா! உங்களைப் பார்த்தால் பொறாமையாகத்தான் இருக்கிறது. 

அத்தனை இனிப்பையும் ஒருவரே வாரி விழுங்கினால் :-)))

2010/12/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Dec 30, 2010, 12:00:37 AM12/30/10
to mint...@googlegroups.com
என்னைப் பார்த்தும் பொறாமையா????

2010/12/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
அம்மா! உங்களைப் பார்த்தால் பொறாமையாகத்தான் இருக்கிறது. 

அத்தனை இனிப்பையும் ஒருவரே வாரி விழுங்கினால் :-)))

2010/12/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>
ஆஹா, தவறை இப்போதே கவனித்தேன்,  சேமிப்பைக் க்ளிக்கி செலக்ட் ஆல் கொடுத்திருக்கேன் போல, எல்லாம் ஐந்தாம் நாளில் இருந்து திரும்ப வந்திருக்கின்றது.  மன்னிக்கவும்.  :(((((((
360.gif

Geetha Sambasivam

unread,
Dec 30, 2010, 12:05:28 AM12/30/10
to mint...@googlegroups.com
அண்ணாமலை.jpg

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங்களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம் பாடி
ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்= இங்கே ஈசன் திருநாமத்தைச் சொல்லும்போதும் அதை நினைக்கும்போதும் சிவனடியார்கள் அடையும் நிலை பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது.  அதிலும் இந்தப் பாவை நோன்பு வழிபாட்டு முறையில் ஈடுபட்டிருக்கும் அழகான கச்சணிந்த, ஆபரணங்களைப் பூண்ட பெண்கள் இருக்கின்றனரே அவர்களில் ஒருத்தி, ஓரொரு சமயம் ஈசன் நாமத்தைக் கூறும்போதெல்லாம் எம்பெருமான் அவன் நம்பெருமான் என்று பெருமூச்சு விடுகிறாள்.  மனதினுள்ளே சிவநாமத்தின் இனிமையில் தன்னை மறக்கிறாள்.

சீரொருகால் வாயோவாள் சித்தங்களிகூர= அவள் மனம் மகிழ்ந்து ஈசன் புகழை நினைத்ததை எல்லாம் வாய் ஓயாமல் கூறி இன்புறுகிறாள்.  அவளிடமிருந்து வேறு பேச்சுக்களே வருவதில்லை.  எந்நேரமும் சிவநாமத்தை நினைப்பதோடல்லாமல் அதன் ஈடு, இணையற்ற சிறப்புக்களை எடுத்துச் சொல்லவும் செய்கிறாள்.

நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்= அவ்வாறு கூறும்போது அவள் உள்ளம் ஈசன் மேல் கொண்ட காதலால் கனிந்து கண்களில் கண்ணீர் பனிக்கிறது. வாயோ தழுதழுக்கிறது.  உள்ளத்தில் நிறைந்திருக்கும் சிவாநந்தப்பெருவெள்ளம் கண்களின் வழியே தாரைதாரையாகக் கொட்டுகிறது.

பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத்தான் பணியாள்= செய்வதென்ன என அறியாமல் நிலத்தில் விழுந்து பலமுறை என் ஈசனே, என் பெருமானே, என் சிவனே என்றெல்லாம் கூறிக்கொண்டு வணங்கி எழுகிறாள்.  மற்றத்தெய்வங்களோ, தேவர்களோ அவள் கண்களில் படுவதில்லை. பட்டாலும் அவர்களை வணங்குவதும் இல்லை. 

பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்= அரசனுக்கெல்லாம் அரசனான, ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவான மாபெரும் அரசனாகிய சிவபெருமானுக்கு அடியார்கள் ஆனால் இப்படித்தான் பித்துப்பிடித்தவர் செயல்கள் போல் இருக்குமோ? அவ்வளவு ஆழமாக அவன் மேல் பக்தி மீதூறி பித்தர்கள் போல் நடந்துகொள்கின்றனரே!

ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தான்=  ஆஹா, இவ்வண்ணம் தன் பக்தர்களை ஆட்கொள்ளும் வித்தகரன்றோ நம்பெருமான்.

வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி= அழகிய கச்சணிந்த ஆபரணங்களால் அழகு செய்து கொண்ட பெண்களே, வாருங்கள்,

ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!= இந்த அழகான மலர்கள் நிறைந்திருக்கும் பொய்கைநீரில் துள்ளிக்குதித்துப் பாய்ந்து பாய்ந்து நீரைக் குடைந்து நீராடுவோம்.  ஈசன் புகழைச் சொல்லிப் பாடுவோம், ஆடுவோம்.

பத்துடையீர் : இதற்கு வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். உடலின் கண் தோன்றும் மெய்ப்பாடுகள் :(1)  இறைவனைப் போற்றிப்பாடும் பொழுது மிடறு (தொண்டைப்பகுதி) பெருக்கம்.
                              (2) நாதழுதழுத்தல்
                              (3) இதழ் துடித்தல்
                              (4) உடல் குலுங்குதல்
                              (5) மயிர்சிலிர்த்தல் 
                              (6) வியர்த்தல்
                              (7) சொல்லெழாமை
                              (8) கண்ணீர் அரும்புதல்
                              (9) வாய்விம்முதல்
                              (10) மெய்ம் மறத்தல்

திரு கன்னியப்பன் அவர்கள் கூறிய மேற்கண்ட விளக்கம் இந்தப் பாடலுக்கு முற்றும் பொருந்துகிறது.  நன்றி திரு வடிவேல் கன்னியப்பன் அவர்களுக்கு.
அண்ணாமலை.jpg

Geetha Sambasivam

unread,
Dec 31, 2010, 3:59:16 AM12/31/10
to mint...@googlegroups.com
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையான் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ்சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!

திருப்பாவையில் நான்காம் பாடலைப் போல் இந்தப்பாடலும் மழை வேண்டிப் பாடும் ஒரு பாட்டு. 

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்= மழை மேகமானது கடல் நீர் ஆவியாவதில் தோன்றுகிறதல்லவா! அதைச் சுட்டுகிறது.  கடல் நீரைச் சுருக்கி கடலின் நீர் குறையுமாறு நீரை உன்னுள் முகந்து கொண்டு ஏ, மேகமே நீ எழுந்து மேலே போய் விண்ணில் மழைமேகமாகி

என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையான் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்=  எம்மை ஆட்கொண்டு அருள் பார்வையை எம்மேல் செலுத்திக் கடாக்ஷிக்கும் அன்னையின் மெல்லிய இடையில் தரித்திருக்கும் மேகலாபரணங்களின் ஒளி மின்னல் போல் மின்னுகிறதே, அவ்வாறு நீயும் மின்னலைத் தோற்றுவித்து, மேலும் எம் பிராட்டியாரின் சிறிய திருவடிகளில்

பொன்னஞ்சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்= திருவடிகளில் அன்னை அணிந்திருக்கும் சிலம்பின் சப்தங்கள் போன்ற சப்தங்களை உண்டாக்கி, மேலும் அவளுடைய பிறைச்சந்திரன் போன்ற நெற்றியில் காணப்படும் வில் போன்ற புருவங்களைப் போல் விண்ணில் வானவில் கோலங்களையும் உருவாக்கி

தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு= பிராட்டியை கணநேரமும் பிரியக்கூடாதெனத் தன் உடலில் அவளுக்கும் ஒரு பாகம் அளித்து எந்நாளும் அவளைப் பிரியாத எம் கோமான் , நம் போன்ற பக்தர்களுக்கு

முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே=  அன்னை முன்னின்று அருள் செய்யத் தாமும் அருள் செய்யவென எழுந்தருளி இருக்கிறார்.  அத்தகைய அருள் மழையை ஈசனும், இறைவியும் நம் போன்ற பக்தர்களுக்குக் கேட்காமலே கொடுக்கிறார்கள் அன்றோ.

என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!=அத்தகைய கருணை மழை போல நீயும் பொழிவாய் மழையே!  இங்கு கருணாமூர்த்தியாகிய ஈசனின் கருணையை மழையோடு ஒப்பிட்டுச் சொல்லப் பட்டிருப்பதாயும் கொள்ளலாம். 

Geetha Sambasivam

unread,
Jan 1, 2011, 3:08:14 AM1/1/11
to mint...@googlegroups.com
அருணாசலம்.jpg

செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள் பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதாக்
கொங்குண் கருங்குழலில் நம்தாஆஅம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப்பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப்படி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்!

கொங்கண் கருங்குழலி நம் தம்மைக்கோதாட்டி=  இங்கே குளத்திற்கு வந்து எல்லாரும் நீராட ஆரம்பிச்சும் ஒரு பெண்ணுக்கு நீராட மனசில்லை.  குளிருகிறது.  திரும்பிண்டு நிற்கிறாள் போலும்.  அவளையும் அழைத்து தாமரை மலர்கள் நிறைந்த இந்தப் புனலில் குதித்துக் குளிக்க ஆரம்பித்துவிடு, பின்னர் குளிரே தெரியாது என்பது தான் கருத்து.  பக்தியாகிய கடலில் மூழ்கினால் நம் பாவங்கள் ஆகிய குளிர் நம்மை விட்டு விலகும்.

செங்கண் அவன் பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்= செந்தாமரை போன்ற செவ்வரி ஓடிய கண்களைக்கொண்ட திருமாலாகட்டும், ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு முகமாய் நான்கு முகங்களை உடைய நான்முகனாகட்டும், மற்ற தேவாதிதேவர்களாகட்டும் இவர்கள் எவரிடமும் இல்லாத வாறு

எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதாக்= உள்ள ஒப்பற்ற பேரின்பம் நம்மை நாடி, நம்மைத் தேடி வருமாறு

இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்= இந்நிலவுலகில் இங்கே நம்முடைய ஒவ்வொருத்தர் வீடுகளிலும் எழுந்தருளி,
ஈசன் வீதியுலா வந்தால் ஒவ்வொரு வீட்டிலும் சிறப்பான வழிபாடு நடத்துவார்கள், அதையும் சொல்லலாம். ஒவ்வொருத்தர் மனக்கோயிலிலும் ஈசன் இருப்பதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.  நாம் எவ்வளவு சிறியோர்களாக இருந்தாலும் நமக்காக நாம் உய்யும் பொருட்டு நம்மை ஆட்கொள்ள வேண்டி ஈசன் இறங்கி வருகிறான்.

செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை=  அவனுடைய செந்தாமரையைஇ ஒத்த பொற்பாதங்களின் நிழலை நமக்குத் தரும்படியாக நமக்கு நாம் ஏவிய ஏவலைச் செய்யும் சேவகனாக

அங்கண் அரசை அடியோங்கட்குஆரமுதை= அனைத்து உலகுக்கும், அரசனாக விளங்குபவனை.  அவனைத் தொழுது ஏத்தும் சிவனடியார்களுக்குக் கிடைத்தற்கரிய பேரமுதாக விளங்குபவனை

நங்கள் பெருமானைப்பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்= எங்கள் ஈசனாகிய, எங்கள் தலைவனாகிய பெருமானைப் பாடித் தொழுது நமக்கு மட்டுமல்லாமல், இவ்வுலகத்தினர் அனைவருக்கும் நலமும், நன்மையும் திகழும் வண்ணம் அவனைத் தொழுவோம்.  அதற்கு முன் தாமரைப்பூக்கள் நிறைந்த இந்தப் பூங்குளத்தில் துளைத்து விளையாடிக் குளிக்கலாம்.

நம் மனதில் ஈசனை இறுத்தி பக்தியாகிய கடலில் மூழ்கித் துதித்தால் ஈசன் நம்மை ஆட்கொள்ளுவான்.
அருணாசலம்.jpg

Geetha Sambasivam

unread,
Jan 2, 2011, 3:26:42 AM1/2/11
to mint...@googlegroups.com
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப்பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீறு அற்றாற்போல்= இறைவனின் திருவடித் தாமரைகளின் சிறப்பைச் சொல்லும் பாடல் இது.  அண்ணாமலையில் வீற்றிருக்கும் ஈசனின் திருவடிகளில் மண்ணுலகத்தோர் மட்டுமில்லாமல் விண்ணுலகத்துத் தேவர்களும் வந்து தொழுது ஏத்துகின்றனர்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த அண்ணலின் திருவடித் தாமரைகளின் ஒளியின் முன்னே அந்த மன்னாதிமன்னர்களும், தேவாதி தேவர்களும் அணிந்திருக்கும் முடிகளில் உள்ள பல்வேறுவிதமான நவரத்தினமணிகளும் ஒளி இழந்து, சோபை இன்றிக் காணப்படுகிறது.  அது போல

கண்ணார் இரவி கதிர் வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்=  இருண்ட வானில் ஒளி வீசிக்கொண்டிருந்த விண்மீன்கள், அருணன் உதித்து சூரியன் மேலெழும்பத் தொடங்கியதும், இருள் நீங்கி வெளிச்சம் பரவ, விண்மீன்களின் ஒளி மங்கி, மறைவதைப்போல

பெண்ணாகி ஆணாய் அலியாய்ப்பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்= ஈசன் ஒரு சமயம் பெண்ணாகி நிற்கிறான். ஒரு சமயம் ஆணாக நிற்கின்றான். வேறொரு சமயம் பெண்ணுமில்லாமல், ஆணுமில்லாமல் அலியாக மாறி நிற்கின்றான்.  அதைப் போலவே ஒரு சமயம் இருண்ட வானமாய்க் காட்சிதந்தது ஒளி மிகுந்த வானமாயும், ஒரு சமயம் வறண்ட பூமியானது, பசுமை நிறைந்த பூமியாகவும், இவை எல்லாவற்றுக்கும் மேல் அனைத்துக்கும் வேறுபட்டு நிற்கும் பரம்பொருளாகவும் எல்லாவற்றிலும் நிலைத்து நின்றும்

கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். = இவை எல்லாவற்றையும் காட்டி, மறைத்து, அருளிச் செய்து இத்தனையும் செய்யும் பேரமுதமாய் நிற்கின்றான் எங்கள் ஈசன்.  அத்தகைய ஈசனைப் போற்றி அவன் புகழைப்பாட ஏ, பெண்ணே இந்தப் பூம்புனலில் பாய்ந்து ஆடிக் குளித்து வணங்கச் செல்லுவோம் வா.

Geetha Sambasivam

unread,
Jan 3, 2011, 4:18:52 AM1/3/11
to mint...@googlegroups.com
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழில் என் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்!

பெண்களைத் திருமணத்தில் தாரை வார்த்துக்கொடுக்கும்போது மணமகனைப் பார்த்துப் பெண்ணின் தந்தை கூறுவார்: உன் கையில் ஒப்படைக்கும் இந்தப் பெண்ணின் உடல், பொருள், ஆவி அனைத்தும் உன்னைச் சேர்ந்தது.  இவளை நீ உன் கண்ணினும் மேலாகக் காத்துவரவேண்டும்."  என்று வேண்டுவார்.  இப்படி ஒரு உறுதிமொழி இன்றளவும் திருமணங்களில் கொடுக்கப் படுகிறது. 

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று=  உன்னிடம் கைப்பிடித்துக்கொடுத்திருக்கும் இந்தப்பெண்பிள்ளை உனக்கே அடைக்கலம் அப்பா, கவனம் எனப் பெண்ணின் தந்தை கூறுவது போல்

அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்=  இப்போது எங்களுக்கு வந்திருக்கும் அச்சமே என்னவெனில், ஒருவேளை அப்படி எங்களுக்குத் திருமணம் செய்விக்க வேண்டி எங்கள் தந்தையார்களால் பார்த்து நிச்சயிக்கும் மணமகன் சிவனைடியாராக இல்லாவிட்டால் என்ன செய்வது என் அப்பா, என் ஈசனே, ஆகவே எங்கள் வாழ்க்கையே பயனற்றுப் போகும் வண்ணம் அத்தகையதொரு மணமகன் எங்களுக்கு வேண்டாம் என்ற கோரிக்கையை நாங்கள் இப்போது புதுப்பிக்கின்றோம்.

ஈசா, எங்கள் பெருமானே, உனக்கொன்று சொல்லுகிறோம், விண்ணப்பம் வைக்கிறோம் உன்னிடம், தயவு செய்து உன் திருச்செவிகளால் அந்த விண்ணப்பத்தைக் கேட்டுப் பரிசீலித்து எங்கள் மனம் மகிழும் வண்ணம் நிறைவேற்றுவாய்.

எங்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க= எங்கள் ஈசனே, எங்களைத் திருமணம் செய்யும் அன்பர் சிவனடியாராக இல்லை எனில் எங்களால் முழுமனதோடு அவருடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது.  அவர் எங்களை வலிய அணைத்தால் நாங்களும் எங்கள் மார்பகங்கள் அழுந்தும் வண்ணம் அவரை அணைக்க முடியாது.  ஆகவே நின் அடியார்களாக இருப்பவர்களே அன்றி மற்றொருவர் எங்களைத் திருமணம் செய்யாமல் நீதான் அருள் புரியவேண்டும். 

மேலும் நாங்கள் செய்யும் சேவைகள், வழிபாடுகள், விரதங்கள் அனைத்தும் கணவரோடும் சேர்ந்து, அல்லது கணவர் இல்லாமல் பெண்டிர் மட்டும் நோற்கும் நோன்பு எதுவானாலும் அந்த வழிபாடுகள், விரதங்கள் அனைத்தும் உன் வழிபாட்டுக்கன்றி, உனக்காக நாங்கள் இருக்கும் விரதங்கள் அன்றி வேறொரு கடவுளுக்காக இருத்தல் வேண்டாம்.  எங்கள் கைகளால் பூத்தொடுத்தல், கோலமிடுதல், மற்றும் பலவேறு இறைப்பணிக்ள் செய்தல் எல்லாம் உனக்காகவே அன்றி மற்றக் கடவுளருக்காகச் செய்யாமல் இருக்கவேண்டும். 

கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க= இரவிலும், பகலிலும் எங்கள் கண்கள் உன் திருவுருவைத் தவிர மற்ற வேறு எந்தப்பொருளையும் காணக் கூடாது.  ஈசனின் நினைவிலேயே அழுந்தி அழுந்தி காணும் பொருளில் எல்லாம் ஈசனையே காண்கின்றனர் இந்த அடியார்கள்.  பரமனை அன்றி மற்றவர் எவரையும்  தங்கள் தலைவனாக ஏற்க மாட்டார்கள். 

இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழில் என் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்!=  இத்தகையதோர் அருமையான பரிசிலை நீ எங்களுக்குத் தந்தருளவேண்டும்.  எங்கள் கோவே, எங்கள் தலைவா, இதை மட்டும் நீ நாங்கள் கேட்டவண்ணம் அருளிச் செய்தால், இந்தச் சூரியன் உதித்தாலோ, அல்லது உதிக்காவிட்டாலும் கவலை இல்லை.    கிழக்கே உதிக்காமல் மேற்கே உதித்தாலும் கவலைப் படமாட்டோம்.  எங்களுக்குத் தேவை உன் அருள் ஒன்றே.  உன் கருணை ஒன்றே.  ஈசனின் கருணா கடாக்ஷம் இருந்துவிட்டால் இவ்வுலக வாழ்க்கையே துச்சம் என்கின்றனர் இந்தப் பெண்கள்.

Dhivakar

unread,
Jan 3, 2011, 4:23:05 AM1/3/11
to mint...@googlegroups.com
மிக அருமையான பொழிப்புரை. திருவெம்பாவையின் அடிப்படையே இந்தப் பாடல்தான்.

தி

2011/1/3 Geetha Sambasivam <geetha...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

Geetha Sambasivam

unread,
Jan 4, 2011, 4:06:57 AM1/4/11
to mint...@googlegroups.com
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நி ன் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.

இங்கே ஈசனின் திருவடித் தாமரைகளின் சிறப்புக்களையும் அவை செய்யும் அருள் பற்றியும் பேசப்படுகிறது.  பிரமனும், திருமாலும் எவ்வளவு முயன்றும் அடி,முடி காண முடியாமல் வியாபித்து சோதி வடிவில் எழும்பி நின்ற ஈசன், அடியார்களுக்கு எனத் தன் திருவடிகளைக் காட்டி அவர்களைக் காத்து அருள்கிறான்.  திருவடி தரிசனம் பொதுவாகவே சிறப்புப்பெற்றது.  ஈசனின் திருவடிகளைச் சரணம் எனப் பிடித்தவர்களை உய்விக்க வந்த ஐயனின் பெருமையைச் சொல்லவும் முடியுமோ?

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்=  ஆதியும் ஈசனே, அந்தமும் ஈசனே, அவனே முதலும், முடிவும் ஆவான்.  அத்தகைய ஈசனின் பாதாரவிந்தங்கள் இவ்வுலகில் ஆதியொ தோன்றியவை.  எல்லாவற்றுக்கும் முதலாகிய அந்தத் திருவடித் தாமரைகளைப் போற்றிப் பாடுவோம்.  ஈசன் நமக்கு அருள் செய்வான்.

போற்றி அருளுக நி ன் அந்தமாம் செந்தளிர்கள்= சம்ஹார காலத்தில் இந்தப்பாதங்களே சம்ஹாரத் தாண்டவம் ஆடி அனைத்தையும் தன்னுள் ஒடுங்கச் செய்யும்,  ஆகவே அந்தமும் இந்தப்பாதாரவிந்தங்களே. நம்மைப் பாதுகாக்கும் இந்தப் பாதாரவிந்தங்களிலேயே கடைசியில் நாம் சரணும் அடைகிறோம்.  அத்தகைய சிவந்த திருவடிகளை எமக்கு அருள்வாய் ஈசனே.

போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்= சிருஷ்டி ஆரம்பிக்கும்போது அனைத்து உயிர்களுக்கும் தோற்றமாய் அருளுவதும் ஈசனின் இந்தப்பொற்பாதங்களே ஆகும்.   அத்தகைய பாதங்களுக்குப் போற்றி பாடி வாழ்த்துவோம்.  ஈசனே எம்மைக்காத்தருளுக

போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்= உயிர்கள் தோன்றக் காரணமாய் இருந்த அந்தப் பொற்பாதங்களே, கொன்றை மலர்கள் அணிந்த அந்த வீரக் கழல்களே உயிர்களின் போக உணர்ச்சிக்கும் காரண்மாய் அமைந்தது.  அத்தகைய திருவடிகளுக்குப் போற்றி.  எம்மைக் காத்தருள்வாய் ஈசனே.

போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்=பிரளயம் வந்து உலகு ஒடுங்கும் வேளையில் அனைத்து உயிர்களையும் தம்முள் ஒடுங்கி ஓய்வு கொடுக்கும் இந்தத் திருவடிகளுக்குப் போற்றி.

போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம் =  நான்முகனும், திருமாலும் எவ்வளவு முயற்சித்தாலும் உன்னுடைய முடியையோ, அடியையோ காணமுடியவில்லையே.  அத்தகைய பெருமை வாய்ந்த உன் திருவடிகளை உன்னடியார்களாகிய எங்களுக்காகக் காட்டி அருள் செய்கின்றாயே?

போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்=எங்கள் தலைவா, எங்கள் ஈசா, உன் திருவடிகளுக்குப் போற்றி. எங்களை ஆட்கொண்டு எங்களைக் கடைத்தேற்றும் திருவடிகளுக்குப் போற்றி. உன் பொன் போன்ற திருவடிகள் எம்மைக் காத்து அருளட்டும். 

போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.= ஈசனே, நாங்கள் மார்கழிநீர் ஆடும் இந்தப் பொய்கையோ நீயும் உமை அன்னையும் சேர்ந்திருக்கும் சிவசக்தி ஐக்கியத்தை நினைவூட்டுகிறது.  உன் அருளைப் பெற்று பக்தியாகிய சாகரத்தில் மூழ்கி நாங்கள் உய்யும் பொருட்டே இந்தக் குளத்தில் நீராடி உன்னைக் குறித்த துதிகளைப் பாடி ஆடுகிறோம்.  ஈசா, எம்மைக் காத்தருள்வாய்.

\நாளையில் இருந்து திருப்பள்ளி எழுச்சி.

Geetha Sambasivam

unread,
Jan 5, 2011, 4:28:42 AM1/5/11
to mint...@googlegroups.com
திருப்பள்ளி எழுச்சி முதல் பாடல்

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கிணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடையாய், எனை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

திருப்பள்ளி எழுச்சி திருப்பெருந்துறையில் பாடியவை.  திருப்பெருந்துறை  நீர் வளமும், நில வளமும் பொருந்திய ஓர் ஊராகும்.  அங்குள்ள ஈசனைக்குறித்துப் பாடிய இப்பாடல்கள் மாணிக்கவாசகர் தம் உள்ளத்துள்ளே உறையும் இறைவனை உள்ளத்திலே பள்ளி எழுந்தருளச் செய்து பின் அவனோடு ஒன்றிணைவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் எனக் கூறுவார்கள்.

வளம் பொருந்திய திருப்பெருந்துறை வயல்களில் செந்தாமரை மலர்ந்து குலுங்குகிறாப் போல் நம் உள்ளத்தாமரையும்  ஈசனின் எல்லை இல்லாப்பெருங்கருணையால் மலர்ந்து கொள்கிறது. 

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கிணைதுணை மலர்கொண்டு= என் வாழ்க்கையின் அடிப்படையே ஈசனாகிய பரம்பொருளே ஆகும்.  அத்தகைய பரம்பொருளே உனக்குப் போறி.  நின் திருவடித் தாமரையைத் தொழுது கொள்கிறேன்.  அதிலே அருமையான பூங்கழல்களால் அர்ச்சிக்கிறேன்.  இப்போது இருள் நீங்கிப் பொழுது புலரும் வேளை ஆகிவிட்டது. 

ஏற்றி நின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்= என் ஐயனே, உன் திருமுகதரிசனமும், அதில் விளங்கும் குறுமுறுவலும் எமக்குச் செய்யும் அருளை என்னென்று கூறுவது?  உன் திருவடி நாதம் பிரணவநாத ஒலியன்றோ?? அத்தகைய நாதம் ஒலிக்க வீரக் கழல்களைத் தாங்கி நிற்கும் உன் திருவடித் துணை எங்களுக்கு எப்போதும் வேண்டும்.  அத்தகைய திருவடியை நாங்கள் தொழுது ஏத்துகிறோம். 

சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே= தாமரை மலருவது சேற்றிலே ஆனாலும் அது சேற்றை விட்டு மேலே எழும்பி நிற்கும்.  தனித்துத் தெரியும், சேறு மட்டுமில்லாமல் அந்தக் குளத்து நீரும் அதில் ஒட்டாது.  அவ்வாறே இவ்வுலகவாழ்க்கையில் பற்றில்லாமல் ஈசனிடம் கொண்ட பக்தியையே எந்நேரமும் நினைந்து திருப்பெருந்துறையாகிய இந்த ஊரில் குடி கொண்டிருக்கும் ஈசனை வழிபடுகிறோம்.   இங்கே தாமரை மலர்வது நம்முள்ளே மனத்தாமரை உள்ளே இருக்கும் அருட்பெரும்சோதியைக் கண்டு மலருவதைச் சுட்டுகிறது.  சேறு என்பது நம் மனதில் தோன்றும் இவ்வுலகத்துப் பற்றுடைய எண்ணங்களைக் குறிக்கும்.   அத்தகைய சேறு நிறைந்த எண்ணங்களையும் மீறிக்கொண்டு ஈசனிடம் வைத்த பக்தியானது மலர்ந்து தாமரை மலர் போல் முகம் காட்டிச் சிரிக்கிறது.

ஏற்றுயர் கொடியுடையாய், எனை உடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!=எருது பொறுமைக்குப் பெயர் போனது.  எவ்வளவு பாரமானாலும் தாங்கிக்கொள்ளும்.  எவ்வளவு துன்பமானாலும் தாங்கிக்கொள்ளும்.  அத்தகைய எருதைத் தனக்குக் கொடியாகவும், வாகனமாயும் கொண்டுள்ள ஈசனோ அவன் தன்மையையும், உண்மையையும் சொல்லி முடியுமா?  அவன் நம்மையும் ஆட்கொண்டுவிட்டானே.  ஆகவே நம்முள்ளே உள்ள ஜோதிவடிவான ஈசன் எழுந்தருளத் திருப்பள்ளி எழுச்சி பாடுவோம்.

Geetha Sambasivam

unread,
Jan 6, 2011, 3:38:07 AM1/6/11
to mint...@googlegroups.com
திருப்பள்ளி எழுச்சி இரண்டாம் பாடல்

அருணன் இந்திரன் திசை அணுகினான் இருள்போய்
அகன்றது உதயநின்மலர்த்திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலம் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன் இவையோர்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருள்வாயே!
imagesஆவுடையார்கோயில்.jpg
அருணன் இந்திரன் திசை அணுகினான் இருள்போய்
அகன்றது=  இந்திரன் கிழக்குத் திசையின் அதிபதி.  அந்தக் கீழ்வானில் உதயசூரியன் வரும்முன்னர் தோன்றும் செவ்வானம் அருணோதயம் உண்டாகிவிட்டது.  இருள் அகன்றது ஒளி பிறந்தது.  இங்கே மனமாகிய ஆகாயத்தில் இறைவனின் சோதிவடிவாகிய உதயத்தைக் கண்டதும், மனதின் மாசாகிய இருள் நீங்கி மனம் அந்த சோதி வடிவான ஒளியால் நிறைந்தது எனக் கொள்ளலாம்.

உதயநின்மலர்த்திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ நயனக்
கடிமலர் மலரமற்று அண்ணலம் கண்ணாம்=  ஈசனின் திருமுகம் ஒரு தாமரை மலர் போல் தோன்றுகிறது.  அதிலிருந்து அவன் அருளெல்லாம் கருணை எல்லாம் சோதிவடிவான சூரியன் போல் பிரகாசமாய் எழுகிறது.  அவனுடைய கருணையாகிய பிரகாசத்தின் காரணமாய் அவன் அருட்பார்வை பார்க்கும் கண்மலர்கள் மெல்ல மெல்ல விரிந்து மலர்கின்றன.  அவனுடைய கண்ணின் கருமணிகள் தெரியும் வண்ணம் மலர்ந்து தெரிகின்றன அந்தக் கண்கள்.

திரள்நிரை அறுபதம் முரல்வன் இவையோர்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே= அந்தக் கண்மணிகளைப் பார்த்தால் வண்டுகள் எனத் தோன்றுகின்றன.  மலர்களில் ரீங்காரம் செய்யும் வண்டுகள் அந்தக் கண்மணிகளைத் தங்கள் வண்டினம் என நினைக்கின்றன.  அந்தக் கருவண்டுகள் ரீங்காரமிட்டுக்கொண்டு சுற்றுவது இனிய கீதம் இசைப்பதைப் போல் இருக்கிறது.  ஈசனின் கண்களை வணங்க வந்த அடியார்களும், தேவாதிதேவர்களும் பாடும் பாமாலைகளைப் போல் அவை விளங்குகின்றன. திருப்பெருந்துறையில் விளங்கும் எம் பெருமானே,imagesதிருப்பெருந்துறை.jpg

அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகடலே பள்ளி எழுந்தருள்வாயே!= என் ஈசனே, எங்களுக்கெல்லாம் அருளாகிய பெரும் நிதியைத் தரவரும் ஆனந்த மலையே, கைலையில் நவரத்தினங்களும், குபேர பண்டாரமும் இருப்பதாக ஐதீகம்.  கைலை சென்றால் அவை கிடைக்கும், ஆனாலும் அவையும் ஒரு முடிவுக்கு வந்துவிடும், ஆனால்   ஈசனிடமோ அருளாகிய நிதி எடுக்க எடுக்கக் குறையாவண்ணம் கொட்டிக்கிடக்கிறது.   அடியார்களுக்கு அவன் அள்ளி அள்ளிக் கொடுக்கிறான். அனைவருக்கும் சொல்லவொண்ணாப் பேரின்பம் கிடைக்கிறது.
imagesதிருப்பெருந்துறை.jpg
imagesஆவுடையார்கோயில்.jpg

Geetha Sambasivam

unread,
Jan 7, 2011, 4:53:13 AM1/7/11
to mint...@googlegroups.com
திருப்பள்ளி எழுச்சி மூன்றாம் பாடல்:

கூவின பூங்குயில்கூவினகோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்
தேவநல் செறிகழல் தாள் இணை காட்டாய்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவு அரியாய் எமக்கு எளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்=  அதிகாலை நேரம் குயில் கூவித் துயில் எழுப்பும், கோழிகள் கொக்கரக்கோ எனக் கத்தும். அப்படி திருப்பெருந்துறையிலும் குயில்கள் கூவ, கோழிகள் கூவ, மற்றப் பறவைகளும், நாரைகளும் ஒலி எழுப்ப, கோயில்களிலும் வீடுகளிலும் எம்பெருமானின் வழிபாடலுக்கான சங்கங்கள் ஆர்ப்பரித்தன.

ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்=விண்ணிலே நக்ஷத்திரங்களின் ஒளி மங்கிக்கொண்டு உதய காலத்து அருணோதயத்தைத் தொடர்ந்து சூரியனின் ஒளி பரவத் தொடங்குகிறது.  இந்நிலையில் இவ்வுலக வாழ்க்கையில் பற்றும், பாசமும் கொண்டிருந்த எங்களுக்கு உன்னிடம் விருப்பமும், பக்தியும் ஏற்பட்டிருக்கிறது, எங்கள் ஈசனே.

தேவநல் செறிகழல் தாள் இணை காட்டாய்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே= திருப்பெருந்துறையில் உறையும் எங்கள் ஈசனே, சிவனே, எங்களின் இந்த பக்தியைக் கண்டு எங்கள் மேல் அன்பு பூண்டு எம்மை ஆட்கொள்ள உன் திருவடித் தாமரைகளை எங்களுக்குக் காட்ட மாட்டாயா?  உன்னை எங்கள் ஐம்பொறிகளாலும், அறிவாலும், மனத்தாலும் ஆழ்ந்து அநுபவிக்க முடியாது.  அருள் அநுபவம் பெற்றாலே அநுபவித்து உணர முடியும்.  அத்தகைய அநுபவத்தை எங்களுக்குக் கொடுத்து எங்களை ஆட்கொண்டு அருள் புரிவாய்.

யாவரும் அறிவு அரியாய் எமக்கு எளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.= அனைவராலும் அறிய முடியாதவனே, ஆனால் உன் அடியார்கள் மட்டுமே அறியக் கூடிய தன்மை கொண்டவனே, எமக்கு என்றும் எளியவனாக இருப்பவனே, இறை அருள் அநுபவம் இல்லை எனில் உன்னை அறிவது எங்கனம்?? பக்குவம் அடைந்த ஆன்மாக்களால் மட்டுமே இறைவனை அறியவும் உணரவும் முடியும்.  மாணிக்க வாசகர் உணர்ந்து அறிந்திருந்தார்.

Geetha Sambasivam

unread,
Jan 7, 2011, 11:29:02 PM1/7/11
to mint...@googlegroups.com
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

   இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்

துன்னியதிணை மலர்க்கையினர் ஒருபால்

   தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

   திருப்பெருந்துறை உறை சிவ பெருமானே

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்

   எம்பெருமான் பள்ளியெழுந் தருளாயே

நம்மைப் போல் ஈசனும் தூங்குவான் என எண்ணி அவனையும் பள்ளியறைக்கு அனுப்புவதை ஒரு மரபாகப் பின்பற்றி வருகிறோம்.  உண்மையில் ஈசன் எந்நேரமும் இயங்கிக்கொண்டே அல்லவா இருக்கிறான்??  பஞ்சபூதங்களால் ஆன இந்த மானுட உடல் அல்லவோ ஓய்வுக்குப் போகிறது?? அவ்வாறு உடலுக்கு ஓய்வு கொடுக்கும் நாம் நமது உள்ளத்துக்கும் ஓய்வு கொடுக்கக் கூடாது என்பதே இந்தப் பள்ளி எழுச்சியின் முக்கிய நோக்கம்.  நம் உள்ளே குடி கொண்டிருக்கும் ஈசனை எழுப்புவதான் ஐதீகத்தை முன்னிட்டு நம் உள்ளத்துள்ளே உறையும் இறை உணர்வை அன்றோ தட்டி எழுப்புகிறோம்.

இந்த அதிசயக்காட்சியில் வீணை இசைக்கிறது. யாழ் இசைக்கிறது.  அதோடு  வேத கோஷங்கள் எழும்புகின்றன. 

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

   இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்=  வீணைகளைக்கையில் எடுத்துக்கொண்டும், யாழை மீட்டிக்கொண்டும் இசை பாடுகிறவர்கள் ஒருபுறமும்,  ரிக் முதலான வேதங்களில் இருந்து வேத கோஷங்களைப் பாடுபவர்கள் ஒருபக்கமும்,

துன்னியதிணை மலர்க்கையினர் ஒருபால்=  இறைவனுக்குச் சூடுவதற்கெனவே மலர்மாலைகளை ஏந்தியவண்ணம் சிலரும்,

   தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்= மலர்மாலைகள் இல்லாமல் தங்கள் பக்தியையே அவனுக்கு மாலையாகச் சூட்டி தங்களை மறந்த பக்தியில் ஈசனின் திருவுருவைப் பார்த்து அழுது, தொழுது, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்குபவர்களும்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

   திருப்பெருந்துறை உறை சிவ பெருமானே= தங்கள் சிரத்துக்கும் மேல் இரு கைகளையும் கூப்பியவண்ணம் வணங்குபவர்கள் இன்னொரு புறமுமாகக் காண்கின்றனர்.  திருபெருந்துறை உறையும் சிவபெருமானே,

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்= இவ்வளவு பக்தர்களின் பக்திக்கு முன்னால் என் போன்ற சாமானியர்களின் பக்தியையும் ஏற்றுக்கொள்ளும் எம் ஈசனே, என்னையும் ஆட்கொண்டு அருளி, எனக்கென இன்னருளைப் பொழியும் தலைவனே,

   எம்பெருமான் பள்ளியெழுந் தருளாயே=என்னுள்ளே உள்ள இறை உணர்வைத் தட்டி எழுப்பச் செய், எம்பெருமானே பள்ளி எழுந்தருள்வாய், என்னுள்ளே நீ உனக்குரிய இடத்தில் அமர்வாய்.

Geetha Sambasivam

unread,
Jan 9, 2011, 5:09:14 AM1/9/11
to mint...@googlegroups.com
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
   போக்கிலன்  வரவு இலன் என நினைப்புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்  கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரைச்
சீதம்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா
   சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன் வந்து
ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும் 
   எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
   போக்கிலன்  வரவு இலன் என நினைப்புலவோர்= ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான்.  அவன் இல்லாத இடமே இல்லை.  இந்த மண், விண், நீர், காற்று, நெருப்பு என அனைத்திலும், பஞ்சபூதங்களிலும் அவன் நிறைந்துள்ளான்.  அதே போல் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரிடத்திலும் ஆண்டவனே உறைந்துள்ளான்.  அவனுக்குத் தோற்றமும் இல்லை, முடிவும் இல்லை என்பது போல் போவதும் இல்லை வருவதும் இல்லை.  அவன் நிரந்தரமானவன்.  குறைவற்றவன், பரிபூரணமானவன்.

கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
   கேட்டு அறியோம் உனைக் கண்டு அறிவாரைச்= எப்போதோ யாரோ ஒருவர் உம்மைக் கண்டிருக்கிறார்.  கண்டு மெய்ஞானத்தை உணர்ந்து அதைப் பாடலில் வடித்திருக்கிறார்.  அதைத் தொடர்ந்து உம் அடியார்கள் அனைவரும் உன் மேல் கீதங்களைப் பாடியும் ஆடியும் வருகின்றனர்.  எங்கும் நிறைந்துள்ள உன்னை வெளியில் மட்டும் காணமுடியும் என்று அவர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.  பாடி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.  இதைத் தவிர உன்னைக் கண்டு அநுபவித்தவர்களின் உணர்வைக் கேட்டு அறியோம்.  உள்ளும் புறமும் ஒன்றாக ஒரே நினைப்பாக உன்னைத் தியானித்தால் அன்றோ நாங்கள் உன்னை உள்ளே கண்டு உணர முடியும்??

சீதம்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா
   சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன் வந்து= குளிர்ந்த செழிப்பான வயல்கள் நிறைந்த திருப்பெருந்துறைக்கே நீ மன்னன் அல்லவோ, எம் தலைவா நீ எங்களால் சிந்தித்து உணர்தலுக்கும் அரியவன் அன்றோ?  உம்மைச் சிந்தித்து உணர்வது அன்றோ எம் தொழில்!  எங்கள் முன்னே நீ வந்து

ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள் புரியும்     எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. = எங்கள் அளப்பரிய துன்பங்களை எல்லாம் அகற்றி எம்மை ஆட்கொண்டு அருள் பாலிப்பாய் எம்பெருமானே.  எங்கள் உள்ளமாகிய பள்ளி அறையில் நாங்கள் காணும் வகையில் பள்ளி கொண்டு அருள்வாய்!

Geetha Sambasivam

unread,
Jan 10, 2011, 3:20:32 AM1/10/11
to mint...@googlegroups.com
பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்புறுகமலங்கள் மலரும் தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருள்வாயே!

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்=  இங்கே பப்பற வீட்டிருந்து என்பதற்குப் பொருள் பலவிதமாய்க் கொள்ளப் படுகிறது.  பரபரப்பும், அவசரமும் மிகுந்த இவ்வுலக வாழ்க்கையைக் குறிக்கும் என்பர் சிலர்.  இன்னும் சிலர் குறிப்பிட்ட பரப்பளவைக்குறிக்கும் இடத்தில் இருந்து எல்லையற்ற பெருவெளிக்கு வந்து இறைத்தத்துவத்தை உணர்ந்ததைக் குறிக்கும் என்பர் சிலர்.  மேலும் சிலர் பல்வேறு பிறவிகள் எடுத்துப் பல்வேறு விதமான இன்பங்களையும், துன்பங்களையும் அநுபவித்து மனம் நொந்து அலுத்துப் போய் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெறுவதைக் குறிக்கும் என்பார்.  இப்படியானதொரு துன்ப வாழ்க்கையிலிருந்து மீட்டு எம்மை உம்முடைய எல்லை இல்லாப் பெருங்கருணையால் ஆட்கொள்ளவேண்டும் என்று மாணிக்கவாசகர் கூறியதாய்க் கொள்ளலாம்.    இறைத் தத்துவத்தை அறிந்த உம் அடியார்கள் பந்த, பாசங்களையும் அறுத்தவர்கள் என இங்கே குறிப்பிடுகிறார். 

மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா=  எமை ஆட்கொண்ட உமையின் மணவாளனாகிய ஈசனே, அத்தகைய அடியார்கள் மானுடத்து மனிதர்களின் இயல்பை ஒட்டி உம்மைக் காதலனைப் பிரிந்த காதலி போல் நினைந்து நினைந்து உருகிக் கனிந்து கசிந்து வணங்குகின்றனர். 

செப்புறுகமலங்கள் மலரும் தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருள்வாயே!=  அழகிய சிறந்த தாமரை மலர்கள் மலர்ந்துள்ள குளங்கள் நிரம்பிய குளிர்ச்சி பொருந்திய வயல்கள் உடைய திருப்பெருந்துறை உறையும் ஈசனே, சிவகாமி நேசனே,   மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு என்று ஏற்பட்டு தொல்லைப்படாமல் எம்மைத் தடுத்து ஆட்கொண்டு இந்தப் பிறவியிலேயே இறவாமை பெற்று எம்மைச் சுத்தமான அருள் ஒளி பெற்று நிலைத்து இருக்க ஆட்கொண்டு அருள்வாய்.  எம்பெருமானே , என்னுள்ளே குடிகொண்டிருக்கும் உள்ளக் கோயிலில் பள்ளி எழுந்தருள்வாயாக.

Geetha Sambasivam

unread,
Jan 10, 2011, 11:48:41 PM1/10/11
to mint...@googlegroups.com

imagesசிவா.jpg

அதுபழச் சுவைஎன அமுதுஎன அறிதற்கு
   அரிதுஎன எளிதுஎன அமரரும் அறியார்
இதுஅவன் திரூஉரு இவன் அவன் எனவே
   எங்களை ஆண்டுகொண்டு இங்குஎழுந்து அருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
   மங்கை உள்ளாய்திருப் பெருந்துறை மன்னா
எது எமைப் பணிகொளும் ஆறுஅது கேட்போம்
   எம்பெரு மான்பள்ளி எழுந்தரு  ளாயே.

இத்தனை பாடல்களிலும் திருப்பெருந்துறையைப் பற்றி மட்டுமே பேசிய மாணிக்கவாசகர் இந்தப்பாடலில் திரு உத்தரகோசமங்கை உள்ளாய், எனவும் அழைத்துள்ளார்.  இது புராணப் படி ராமநாதபுரம் மாவட்டத்தின் ஊரான உத்தரகோசமங்கை ஈசனைக் குறிக்கிறது.  இந்தக் கோயிலில் தான் ஐயன் உமை அன்னைக்கு வேதாகம ரகசியங்களில் இருந்து அனைத்தையும் கூறினார் என்றும் அன்னைக்கு உபதேசம் செய்தமையால் உத்தரகோசமங்கை எனப் பெயர் பெற்றதாயும் கூறுவார்கள்.  மேலும் இந்தக் கோயிலிலேயே ஐயன் ஆடிய ஆநந்தத் தாண்டம் முதல் முதல் அன்னை மட்டுமே காணும்படி ஆடப் பட்டது என்றும் கூறுவார்கள்.  மேலும் இதை ஆதி சிதம்பரம் எனவும் அழைப்பார்கள்.

மிகவும் பழமையான இந்தத் தலம் ஒரு காலத்தில் இலவந்திகைப் பள்ளி என அழைக்கப்பட்டதாயும் தெரியவருகிறது.  மேலும் மண் தோன்றும்போதே தோன்றிய மங்கை என்றும் இந்த ஊரைக் குறிப்பிடுவதாயும் தெரியவருகிறது.  ராவணனின் மனைவியான மண்டோதரியின் பெயரை இந்தக் கோயிலின் வரலாற்றில் கூறப்பட்டிருக்கிறது.  அவளுக்குக் காக்ஷி கொடுக்கவேண்டி, தென்னிலங்கை சென்றாராம் ஈசன் உமை அன்னையுடன்.  அது தனியாப் பார்ப்போம்.  அறையில் ஆடினால் அம்பலத்துக்கு வராமல் இருக்குமா என்ற வழக்குச் சொல்லும் இந்தக் கோயிலில் ஈசன் ஆடிய ஆட்டத்தைக் குறிக்கும் விதமாகவே ஏற்பட்டது என்பார்கள்.  இங்கே அன்னை காண அறையில் ஆடிய ஈசன், அதன் பின்னரே சிதம்பரம் வந்து அம்பலத்தில் ஆடியதாய் ஐதீகம்.

இவை பொதுவான கருத்தாக இருந்தாலும் இதன் உட்கருத்து. நம்முள்ளே குடி கொண்டிருக்கும் அருட்பெரும் சோதியானது நம் மனமாகிய கோயிலில் எழுந்தருளி நம்மை அதனோடு ஒன்று படுத்தி நம்மை ஐக்கியப் படுத்திக்கொள்வதையே குறிக்கும் என்று ஆன்றோர் வாக்கு.  நம் உடல் ஐந்து கோசங்களால் ஆனது என்பதை அறிவோம் அல்லவா? அவை அன்னமய கோசம், பிராணமய கோசம், மநோமய கோசம், விக்ஞானமய கோசம், ஆநந்தமய கோசம் ஆகிய ஐந்து கோசங்கள் நம் உடலில் இருப்பதாக யோகிகள், ஞாநிகள் கூறுவார்கள்.  இவற்றில் ஆநந்த மயகோசத்தில் இருக்கும் இறைவனைக் கண்டறிவதே, கண்டறிந்து அவனுடன் ஒன்றிணைவதே நம் ஜீவனின் முக்கியக் குறிக்கோள்.  இந்த ஆநந்தமயகோசமே உத்தரகோசம், நம் உடலில் தலைப்பகுதியில் இருப்பதால் கூறப்படுகிறது.  அதனால் தன்னை ஒரு மங்கையாகப் பாவித்துக்கொண்டு மாணிக்கவாசகர் ஈசனோடு, அதாவது இறை உணர்வோடு ஒன்றுபட வேண்டியதே இந்தப் பள்ளி எழுச்சிப் பாடலின் முக்கியப்பொருள் ஆகும்.

அதுபழச் சுவைஎன அமுதுஎன அறிதற்கு
   அரிதுஎன எளிதுஎன அமரரும் அறியார்=  இறைவனைக் கண்டவர் இலர், அவன் எப்படிப்பட்டவன் என அறிந்தவர் இல்லை.  ஆகவே இறைவனின் அருள் சுவையானது இன்னமாதிரி, இன்ன சுவையில் இருக்கும், இந்தப் பழத்தைச் சாப்பிடு இதுதான் இறைத்தன்மை என்று கூற முடியுமா? முடியாதன்றோ. அவ்வாறு இதுதான் அமிர்தம் சாப்பிடு, கருத்தைச் சொல் எனக் கூற முடியுமா?  இறைத் தன்மை எங்கனம் என்பதை உணர்தலே முடியும்.  அதற்கு அவனடியார்களாக இருத்தல் வேண்டும்.  மற்றவர்களால் இயலாத ஒன்று. 

அதே போல் அவனை அறிதலும் கடினம்.  இறைவனை அறிவதற்கு ஞானக்கண் தேவை.  அவனுடைய அருளாலேயே ஞானம் சித்திக்கும்.  அந்த அருளைப் பெற்ற அடியார்களாலேயே ஈசனைக் கண்டு களிக்க முடியும்.  தேவாதிதேவரானாலும் ஈசனின் அருள் இல்லை எனில் அவரும் அறியமாட்டாரன்றோ.

இதுஅவன் திரூஉரு இவன் அவன் எனவே
   எங்களை ஆண்டுகொண்டு இங்குஎழுந்து அருளும்= அவன் திருவுருவம் இப்படி இருக்கும், இத்தனை உயரம் ஈசன், இத்தனை பருமன் ஈசன், கை இப்படி இருக்கும், கால் இப்படி இருக்கும் கண்கள் இவ்வாறு இருக்கும் என்றெல்லாம் எவரால் கூறமுடியும்?  எவரும் கண்டு, விண்டு,அறுதியிட்டுக் கூற முடியாதே.  உம்மைக் காண விரும்பி நாங்கள் தவிக்கிறோம்.  ஆகவே எங்களை நீர் ஆட்கொள்ள இங்கே வந்து எழுந்து அருளும்,

மதுவளர் பொழில்திரு உத்தர கோச
   மங்கை உள்ளாய்திருப் பெருந்துறை மன்னா=  திரு உத்தரகோசமங்கை மன்னா, நம் உடலில் உள்ள ஐந்து கோசங்களிலும் உச்சியில் உள்ள கோசம் உத்தரகோசம்,  அங்கேதான் ஈசனோடு ஐக்கியம் ஆதல் நடக்கும் என்பது யோகியர் கூற்று.  ஆகவே இந்த ஐந்து கோசங்களையும் கடந்து உத்தரகோசத்தில் இணையத் துடிக்கும் மங்கையாகிய என்னை , திருப்பெருந்துறை மன்னனாகிய நீர்

எது எமைப் பணிகொளும் ஆறுஅது கேட்போம்= உமக்கு எவ்விதம் நாங்கள் தொண்டாற்றினால் எங்கள் குறிக்கோள் நிறைவேறுமோ, அதை அந்த வழியை ஞானத்துக்கு இட்டுச் செல்லும் வழியை  நாங்கள் கேட்கிறோம்.  எங்களுக்கு உன் அருளாகிய சுவையைக் கொடுத்து எங்களுக்கு ஞானமாகிய கண்களைத் திறந்துவிட்டு, எங்களை ஆட்கொள்ளவேண்டி, எங்கள் உள்ளமாகிய பள்ளிஅறையில் இருந்து
   எம்பெரு மான்பள்ளி எழுந்தரு  ளாயே.= பள்ளி எழுந்து வந்து எங்களுக்கு அருள் புரிவாய்.
imagesசிவா.jpg

Geetha Sambasivam

unread,
Jan 12, 2011, 2:37:55 AM1/12/11
to mint...@googlegroups.com
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
         மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார்
      பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
         பழங்குடில் தொறும்எழுந்து அருளிய பரனே !
      செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
         திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
      அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய் !
         ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே !

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
         மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார்=  தொடக்கம் இல்லாதவன் இறைவன்.  அதே போல் முடிவும் இல்லாதவனும் அவனே.  முன்னைப் பழம்பொருள்கட்கும் முன்னைப் பழமையானவன்.  அதே சமயம் பின்னைப்புதுமைக்கும் புதுமையானவன் ஆவான்.   தோன்றி, மறையும் உயிர்களின் முதலும், நடுவும், முடிவுமாக ஈசன் இருந்து வருகிறார். 
இப்படித் தானே எல்லாவற்றுக்கும் காரணமாக அமைந்து, அவற்றின் முடிவுக்கும் காரணமாக அமைந்திருக்கும் ஈசனின் இந்த இருமையான நிலைப்பாட்டை பிரம்மாவோ, விஷ்ணுவோ அல்லது ருத்ரனோ அறியமாட்டார்கள்.  அவ்வாறிருக்கும்போது உன்னை வேறொருவரால் எளிதில் அறியமுடியுமா?

 பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
         பழங்குடில் தொறும்எழுந்து அருளிய பரனே != இங்கே பந்து வந்து அணையும் விரல்களை உடைய உமை என்ற பொருள் வந்தாலும், நம்முடைய ஆன்மாவையும் குறிக்கும்.  ஆன்மாவைச் சிவத்தோடு சேர்த்து இணைக்க உதவுவது சக்தியே.  அந்தச் சக்தியின் விரல்கள் என்ற பொருளிலும் வரும்.  அந்தச் சக்தியும், நீயும் இந்தப் பழைய ஓட்டைக் குடிசையில் வசிக்கும் என் போன்ற அடியார்களுக்கு அருளவென்று எழுந்தருளும் பராபரனே/ இங்கே பழங்குடில் என்பது நம் உடலைக் குறிக்கும்.   பிறவி தோறும் ஈசன் நம் உடலில் குடிகொண்டே இருப்பதால், நம்முடைய உடல் என்னும் குடிசை ஈசனுக்குப் புதியது அல்ல.  ஏற்கெனவே அவர் குடியிருந்த இடமே ஆகும்.  நாம் தான் அதைப் புரிந்து கொள்ளவில்லை.  ஆகையால் நம் ஆன்மாவைச் சிவத்தோடு ஒன்ற வைக்கும் சக்தி வாய்ந்த உமை அம்மை பந்தங்களில் இருந்து நம்மை விடுவித்து ஈசனோடு சேர்த்து வைக்கவேண்டும்.

செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
         திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி= .  சிவந்த தழல் போன்ற திருமேனியைக் காட்டித் திருப்பெருந்துறையையும், அந்த ஊரின் கோயிலையும் காட்டி.   அதாவது மாணிக்கவாச்கருக்குத் தம் உள்ளே இருக்கும் ஜோதி சொரூபமான இறைவனையும், அவன் இருக்குமிடமே சிற்றம்பலம் என்பதையும் காட்டித் தந்தது ஈசனே ஆவான்.
      அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய் !=இங்கே மாணிக்கவாசகர் அந்தணனாக ஈசன் அவர் முன்னே வந்து அவரை வலிய ஆட்கொண்டதைக் குறிப்பிடுகிறார். ஞானாசிரியனாகக் குருந்த மரத்தின் நிழலில் மாணிக்கவாசகருக்காகக் காத்திருந்து அவருக்கு உண்மைப்பொருளை உபதேசம் செய்ததை இங்கே கூறுகிறார்.
         ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே ! =இத்தகைய பெருமை வாய்ந்த அடைவதற்கு அமுதமான பரம்பொருளே, பள்ளி எழுந்தருள்வாயாக!

Geetha Sambasivam

unread,
Jan 13, 2011, 3:13:16 AM1/13/11
to mint...@googlegroups.com
imagesசிவனார்.jpg

விண்ணகத் தேவரும் நண்ணவு மாட்டா
   விழுப்பொரு ளேஉன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
   வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
   கடலமு தேகரும் பேவிரும்பு அடியார்
எண்ணகத் தாய்உல குக்குஉயிர் ஆனாய்
   எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

விண்ணகத் தேவரும் நண்ணவு மாட்டா
   விழுப்பொரு ளேஉன தொழுப்படி யோங்கள்=ஒளிமயமான விண்ணுலகில் வசிக்கும் தேவர்களும் அணுகமுடியாத , காணமுடியாத இறைவன், ஒளியும், இருளும் நிறைந்த பூமியில் வசிக்கும் நம் போன்ற  அடியார்களும் தொண்டு செய்து உய்யுமாறு

மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
   வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம்=  இந்த மண்ணகத்துக்கு வந்து நம்மை எல்லாம் வாழச் செய்தான். நாம் பிறவி எடுத்ததே இவ்வண்ணம் இறைத்தொண்டு செய்யவேண்டியே.  அதுவும் பரம்பரை பரம்பரையாய்ச் செய்து வருகிறோம்.  வண்மை பொருந்திய திருப்பெருந்துறை ஈசனே, உமக்கு நாங்கள் வழி வழியாய் அடியார்களாய் இருக்கின்றோம்.

கண்ணகத் தேநின்று களிதரு தேனே
   கடலமு தேகரும் பேவிரும்பு அடியார்= எங்கள் கண்ணின் மணியாக இருந்து எங்களுக்குப் பார்வையைத் தந்து களிப்படைய வைக்கும் தேனினும் இனியவனே, பாற்கடலில் வந்த அமுதானவனே, நற்கரும்பே,  இங்கே கரும்பைச் சுட்டியது அடிமுதல் நுனி வரையிலும் இனிப்பான கரும்பைப் போல் ஈசனும் இனிமையானவன் என்பதற்காக.   உம்மை விரும்பி நாடிடும் அடியார்கள்

எண்ணகத் தாய்உல குக்குஉயிர் ஆனாய்
   எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே= எண்ணத்திலே உணர்வு பூர்வமாய் எழுந்தருளி இருப்பவனே.  உலகத்து உயிர்கள் அனைத்துக்கும் உயிர் தந்து காத்து ரக்ஷித்து ஆள்பவனே, எம்பெருமானே, எம் உள்ளத்தில் வந்து பள்ளி எழுந்தருள்வாய்.
imagesசிவனார்.jpg

Innamburan Innamburan

unread,
Jan 13, 2011, 3:25:59 AM1/13/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
'கண்ணகத் தேநின்று களிதரு தேனே' இந்த சொற்றொடர் எனக்கு மிகவும் படித்தவஇகளில் ஒன்று.
இன்னம்பூரான்

Geetha Sambasivam

unread,
Jan 14, 2011, 3:30:20 AM1/14/11
to mint...@googlegroups.com
பாம்புத்தலை.jpg

 புவனியில் போய்ப்பிறவா மையில் நாள்நாம்
         போக்குகின் றோம்அவமே இந்தப் பூமி  
   சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கி
         திருப்பெருந் துறைஉறை வாய்திரு மாலாம்
      அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
         படவும்நின் அலர்ந்த மெய்க் கருனையும் நீயும்
      அவனியில் புகுந்துஎமை ஆட்கொள்ள வல்லாய்
         ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே !

புவனியில் போய்ப்பிறவா மையில் நாள்நாம்
         போக்குகின் றோம்அவமே இந்தப் பூமி      சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கி=  இந்த பூவுலகத்து மாந்தர்கள் அனைவருமே புண்ணியம் செய்தவர்கள்.  ஈசனின் அருள் நேரடியாக அவர்களுக்குக் கிட்டி விடுகிறது.  அவன் அவர்களை ஆட்கொண்டு அருள் புரிகிறான்.  ஆனால் விண்ணுலகில் இருக்கும் நாமோ பூவுலகில் போய்ப் பிறந்து ஈசனைத் துதிக்கும் நாள் எது எனப் புரியாமல் ஒவ்வொரு நாளையும் கடத்திக்கொண்டிருக்கிறோமே.  இந்த பூமியே சிவன் ஆட்கொள்ளவேண்டியே அன்றோ ஏற்பட்டிருக்கிறது!

 திருப்பெருந் துறைஉறை வாய்திரு மாலாம்
      அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
         படவும்=  திருப்பெருந்துறையில் இருக்கும் ஈசனை நினைந்து இவ்வாறு திருமாலும், பிரமனும் ஆசை கொள்கின்றனர்.  அத்ஹகைய பெருமை வாய்ந்த பெருந்துறை வாழ் ஈசனே!

ரிஷபம்.jpg

நின் அலர்ந்த மெய்க் கருனையும் நீயும்
      அவனியில் புகுந்துஎமை ஆட்கொள்ள வல்லாய்
         ஆரமுதே பள்ளி எழுந்தரு ளாயே ! =நீயும் உன்னுடன் கூடவே இருக்கும் உன்னை விட்டு எந்நாளும் பிரியாத சக்தியாகிய உமை அன்னையும் இந்த பூமிக்கு வந்து எம்மை ஆட்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.  கிடைக்காத பேரமுதே, ஈசனே பள்ளி எழுந்தருள்வாயாக.  குண்டலினி யோகத்தில் குண்டலினியைச் சக்தியாகவும், அது மேலே சென்று சஹஸ்ராரத்தைச் சென்றடைவதை சிவசக்தி ஐக்கியம் என்றும் கூறுவார்கள்.  தம் உள்ளத்தையே திருப்பெருந்துறை என்னும் ஊரில் இருக்கும் கோயிலாகக் கொண்ட மாணிக்கவாசகர், தம் உடலில் உள்ள சக்தி சிவனோடு சேர்ந்து ஐக்கியம் அடைந்து தாமும் இறைவனோடு ஒன்றுபடவேண்டும் என்று விரும்புகிறார்.  அதற்காகவே உள்ளக் கோயிலில் ஈசனைப் பள்ளி எழுந்தருளச் செய்கின்றார்.

உரை எழுத உதவி செய்த நூல்: திருவாசகம் எளிய உரை பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் அவர்கள்,  சிங்கப்பூர்  திருமுறை மாநாட்டுக்குழுவினரால் வெளியிடப் பட்டது. 
ரிஷபம்.jpg
பாம்புத்தலை.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages