**கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி 2026 அறிவிப்பு**
தமிழ் இலக்கியத்தில் எளிய மனிதர்களின் வாழ்வை முற்போக்கு கருத்தியலோடும் மார்க்சிய அழகியலோடும் எழுதியவர் கவிஞர் கந்தர்வன்.
த.மு.எ.க.ச வின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான அவரது படைப்புகளை தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கி பெருமை சேர்த்துள்ளது.
அவரது நினைவாக சிறுகதைப் போட்டிகளை த.மு.எ.க.ச நடத்திவருகிறது. அதன் தொடர்ச்சியாக இப்போது 6-ஆவது கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி அறிவிக்கப்படுகிறது.
போட்டிக்கான விதிமுறைகள்: கதைகள் எப்பொருளிலேனும் ஆறு பக்கங்களுக்கு மிகாமல் அமைய வேண்டும். ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். கதைகள் ஏ4 தாளின் ஒரு பக்கத்தில் மட்டும் எழுத்திலோ, கணினி அச்சிலோ இருக்கலாம்.
கதைகளின் பக்கங்களில் ஆசிரியர் குறித்த எவ்வித விபரங்களும் இருத்தல் கூடாது. ஆசிரியர் பெயர். முகவரி, மின் அஞ்சல், அலைபேசி எண் ஆகியன தனித்தாளில். மட்டுமே எழுதப்பட்டு முகப்பில் இணைக்கப் படவேண்டும். கதைகள் மொழிபெயர்ப்பாகவோ அல்லது தழுவலாகவோ இருத்தல் கூடாது. கதைகள் எவ்வித ஊடகத்திலும் இதுவரை வெளிவராதவையாக இருக்கவேண்டும். தேர்வுபெறும் படைப்புகளுக்கு கீழ்க்கண்டவாறு பரிசுத்தொகை, விருதுக்கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
முதற்பரிசு ரூ.10000, இரண்டாம் பரிசு ரூ.7600, மூன்றாம் பரிசு ரூ.5000, ஆறுதல் பரிசுகள் ரூ.2000 வீதம் 5 கதைகளுக்கு வழங்கப்படும்.
பரிசளிப்பு நிகழ்வு புதுக்கோட்டையில் 07.02.2026 அன்று நடைபெறும் கந்தர்வன் கலை விழாவில் வழங்கப்படும்.
தேர்வு பெறும் கதைகள் செம்மலர் இதழில் பிரசுரிக்கப்படும்.
கதைகள் வந்து சேரக் கடைசி நாள் 25.01.2026.
கதைகளைத் தபால் மூலமாகவோ, மின் அஞ்சலிலோ அனுப்பலாம்.
கதைகளை அனுப்பவேண்டிய முகவரி:
கவிஞர் நா.முத்துநிலவன், மாநில துணைத்தலைவர் தமுஎகச
2711, சீனிவாசாநகர், மூன்றாம் வீதி, மச்சுவாடி. புதுக்கோட்டை-622 004.
அலைபேசி 94431 93293
த.மு.எ.க.ச புதுக்கோட்டை மாவட்டக்குழு
செம்மலர், ஜன.2026