என்று உரைக்கிறது.
பாலை என்பது பகலவன் ஆட்சி செய்யும் இடம். வெய்யோனின் வெப்பத்தால் மரங்களெல்லாம் இலையை இழந்துவிட்டு, நிழல் தர முகில் வருமோ என்று வானம் பார்த்து வாழுமிடம். விலங்குகள் கூட, வில்லங்கமான விளங்காத இடம் என அஞ்சி பதுங்கும் இடமே இப்பாலை நிலம்.
கலித்தொகை காட்டும் பாலைக் காட்சி ஒன்று இதோ;
வெப்பத்தின் கொடுமையை தாங்காத பெண் மானை தன்நிழலில் ஓய்வு கொள்ளச் செய்கிறது ஆண்மான். இப்படி வாழ்வதற்கரிய பாலையில் கூட மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். கடப்பதற்கரிய இந்த பாலை நிலத்தை ஆடவன் பொருள் தேடச் செல்லும்போது கடப்பான் தன் இல்லறத்தாலின் இன்பத்தை நிலைநாட்ட. மனமொத்த காதலர்கள் மனமொன்றி மணம்கொண்டு வாழ்வதற்காக வீடு துறந்து உடன்போக்கு செய்வதுண்டு செல்வதற்கரிய பாலையைக் கடந்து. இதை புலவர்கள் காட்சிப் படுத்தியிருப்பது கற்பனையின் அற்புதமா? இல்லை, நிகழ்வுகளின் கோர்வை. நம் முன்னோர்களின் வாழ்வியலுக்கான பார்வை.
பாலை பாடுவதில் தன்னிகரற்ற தலைவன் பெருங்கடுக்கோ பாடிய தலைவன் கூற்றாய் அமைந்தது இப்பாடல்.
வழிப்போவாரது உயிரை தாங்குதற்குரிய அறத்தைச் செய்யும் நெல்லி மரத்தினது அழகிய பசுங்காய்கள், வலிமை மிகுந்த புலிக்குட்டிகள் வாழ்வதற்குரிய இடத்தில், உதிர்ந்து உருளுகின்ற கடத்தற்கரிய மலைகளை கடந்து சென்ற யாம் அங்ஙனம் சென்றவிடத்து பல பொருள்களை நினைத்தேமல்லேம். வழியினிடத்தே தழைத்த வளைந்த கிளைகளையுடைய வெட்சியினது முறுக்கழிந்த பல பேரரும்புகள் மணக்கின்ற மை போன்ற கரிய கூந்தலை உடைய தலைவியினது நட்பையே நினைத்திருந்தோம்.
தற்செயலாய் சந்தித்துக் கொண்ட அவனும் அவளும் கண்டவுடனே காதல் கொண்டு இன்பமாய் சுற்றித் திரிகிறார்கள். மணம் புரிவதற்கு பொருள் தேடி தலைவியை பிரிந்து செல்கிறான் தலைவன். இத்தனை நாள் இன்பமாய் இனிதாய் பொழுதைக் கழித்தவர்கள் பிரிவுத் துன்பத்தில் வாடுகிறார்கள். தலைவன் குடிப்பதற்கு நீர்கூட இல்லாத பாலை நிலத்தில் கொடிய விலங்குகள் வாழும் காட்டில், கதிரவனின் கடும் சூட்டையும் பொறுத்துக் கொண்டு முட்களும் கற்களும் நிறைந்த பாதையில் தலைவியை எண்ணிக் கொண்டே பொருள் தேடச் செல்கிறான். தலைவன் எவ்வளவு பெரிய செல்வரின் மகனாய் இருந்தாலும் தானே பொருள் தேடி தலைவியை மணக்க வேண்டும் என்பது சங்ககால முறைபோலும்.
கச்சிப்பேட்டுக் காஞ்சிக்கொற்றன் என்பவர் பாடிய தோழி கூற்றாய் அமைந்த பாடல் இது.
தலைவர் நின்பால் மிக விருப்பம் உடையவர். நம்மோடு செய்யும் இனிய துயிலை வெறுத்துப் பிரிந்து சென்ற அவர் போன வழியில், விரைவாக கிளைத்த கொம்பை உடைய தலையைப் பெற்ற முதிய ஆண்மான் காலால் உதைத்து பசிநோயைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு விளைந்த பருத்த பெரிய மரப் பட்டையை தனது குட்டி உண்டபின் எஞ்சினால் தான் உண்டு, குற்றம் இல்லாத நெஞ்சினோடு துள்ளி நடக்கும் இயல்பினை உடைய தனது குட்டிக்கு நிழலாகி நின்று வெயிலை நீக்கும்.
தலைவன் ஊடல் கொண்டு தலைவியை பிரிந்து செல்கிறான். அதனால் தலைவி துன்பத்தில் துவண்டு போகிறாள். தலைவியின் நிலையைக் கண்ட தோழி, தலைவர் உன்மேல் மிகுந்த விருப்பம் உடையவர். அவர் செல்கின்ற இடமாகிய பாலை நிலம் வரண்டு மரங்களெல்லாம் கிளைகளோடு இருக்கும். உணவும் நீரும் உண்ணக் கிடைக்காது. ஆனால் அவர் செல்லும் வழியில் பல காட்சிகளைக் கண்டு செல்வர். மழையின்றி வறண்டு போனதால் உண்ண எதுவும் கிடைக்காமல் ஆண்மானானது தனது பசிப்பிணியையும் தன் குட்டியின் பசிப்பிணியையும் போக்கிக் கொள்ளும் பொருட்டு, பருத்த மரங்களின் பட்டைகளை விரித்து தன் குட்டிக்குத் தரும். குட்டி உண்டபின் எஞ்சியிருந்தால் தான் உண்ணும் இயல்பினுடையதாக அந்த ஆண்மான் இருக்கும். மேலும் வெயிலின் தாக்கம் மிகுதியான காரணத்தால் ஓடித் திரியும் குட்டியானது களைத்துப் போகும். வெயிலின் மிகுதி தாளாது குட்டியானது ஓய்வுகொள்ளும் பொருட்டு தன் நிழலில் அதை ஓய்வு கொள்ளச் செய்யும். இக்காட்சியைக் கண்ட நம் தலைவர் ஊடல் நீங்கி திரும்பி வருவார் என்று கூறுகிறாள் தோழி.
அன்பும் பண்பும் ஒருங்கே அமையப்பெற்ற தலைவி தலைவன் மேல் கொண்ட அன்பால் அவனோடு செல்கிறாள். வளமான குடும்பத்தில் பிறந்த தலைவி தலைவன் மேல் கொண்ட காதலால் கடப்பதற்கரிய பாலை நிலத்தை எப்படிக் கடப்பாளோ என்று செவிலித்தாய் கவலையுறுகிறாள். ஏனென்றால், பாலை உண்பது கூட அவளுக்கு கடிய செயலாய் இருந்திருக்கிறது. இப்போது பாலையை கடக்கும் துணிவு எப்படி வந்ததோ? எனப் புலம்புகிறாள்.