ஊ
‘யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத்’
ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் குரு அம்மா, இரண்டாம் குரு தந்தை, மூன்றாம் குருதான் அந்தக் குழந்தையை சரியான வழி காட்டி இறைவனின் பாதாரவிந்தத்தை நினைக்க வைத்து, கல்வி கேள்விகளில் சிறக்க வைத்து . வாழ்வில் ஒரு நல்ல தகுதியை ஏற்படுத்தி, இறைவன் பெருமைகளை உபதேசம் செய்து . முறையாக வாழ வழி காட்டுபவர் மூன்றாவதாக குரு அமைகிறார்.
ஆகவேதான் மாதா, பிதா, குரு, தெய்வம். என்னும் முறையான அடுக்கை அமைத்து சொல் வழக்கு ஏற்பட்டது
முதலிலேயே தாயானவளுக்கு தொப்புள் கொடி வழியே எல்லா பந்தங்களும் ஏற்பட்டு விடுகின்றன, வயிற்றிலே , அதுவும் கருவறையிலே குழந்தை அசைகிறதா, மூச்சு விடுகிறதா, தூங்குகிறதா, எட்டி உதைக்கிறதா, என்றெல்லாம் தாய்மையால் உணர்ந்து, அதற்க்கேற்றார்ப் போல் அந்தக் குழந்தையிடம் உதைக்காதடா வலிக்கறது, என்னடா தூங்கறியா, டேய் என்ன செஞ்சிண்டு இருக்கே? சத்தமே காணும் என்றெல்லாம் பேசிக்கொண்டே இருப்பாள் தாய். குழந்தையிடம் மானசீகமாகவும், ஆத்மார்த்தமாகவும், அதன் பிறகு செய்கையாலும் , எடுத்து அணைத்துக் கொள்வதாலும், முத்தமாரி பொழிவதாலும், கனகமுலைப் பால் அளிப்பதாலும்,
அதுவும் குறிப்பாக குழந்தை பால் குடிக்கும் போது எங்கே பால் எங்கே பால் பசிக்கிறதே என்று குழந்தை தேடும்போதெல்லாம் ,இதோ இங்கே இதோ இங்கே என்று தன் குருதியையே தாய்மையாக்கி, பாலாக்கி, தன் கனகமுலை வழியே குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தை பாலைக் குடிக்க முறையாக அதற்கு சொல்லித் தர தாயைத் தவிர யாரால் முடியும்?
'பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி...'
என்று திருவாசகத்திலே மாணிக்கவாசகப் பெருமான் கூறியதைப் போல கருவறை என்னும் அந்தகாரத்திலிருந்து நம்மை மீட்டு, அறியாமை என்னும் இருளிலிருந்து நம்மை மீட்டு, நம் வயிற்றுக்கும் உணவளித்து ஊனைப் பெருக்கி உள்ளொளியையும் பெருக்கி ,தவழ்ந்து கீழே விழும்போதும், விளையாடும் போதும் கீழே விழாமல் தாங்கிப் பிடித்து நம்மை எழச் செய்து தன்னலம் கருதாது நம்மைப் பேணும் தாய்தானே முதல் குரு!
குரு. ‘கு’ என்றால் அந்தகாரம். இருட்டு. அறியாமை என்கிற இருட்டு. ‘ரு’ என்றால் அதை அகற்றுபவர். அதில் முதல் இடம் பிடிப்பவள் தாய்தான்.
களிமண்ணாவது இருந்தால்தானே பிள்ளையார் பிடிக்க முடியும்? அப்படி முதல் ஆங்கிலத்தில் Basic meterial என்று சொல்வார்கள் . அதைப் போல அடிப்படை மூலப்பொருளாக தாய் குழந்தையை பெற்றெடுத்து கணவன் கையில் கொடுத்தவுடன்தானே தகப்பன் என்னும் தகுதியே அவனுக்கு கிடைக்கிறது. அந்தத் தகுதியை வைத்துக் கொண்டுதானே அந்தத் தகப்பன் அந்த மூலப் பொருளாகிய குழந்தையை வளர்க்கிறான்.
"ஆமாம் குழந்தை ஒரு மூலப் பொருள். அதனால்தான் குழந்தைகளை தெய்வத்துக்கு சமானமாக ஒப்பிடுவார்கள்."
ஒரு குழந்தைக்கு தந்தைதான் கதாநாயகன், தோழன், , மந்திரி, ஆசான், எப்போதும் கையைப் பிடித்துக் கொண்டு வழி நடத்தி அனைத்தையும் கற்றுக் கொடுப்பவன் தந்தை. இரண்டாவதாக தந்தை,ஆக இரண்டாம் இடத்தைப் பிடிப்பவன் தந்தை.
ஆகவே தந்தையானவன் தன் குழந்தைக்கு தகுதிகளை, அறிவை ஞானத்தை வளர்க்க ஒரு குருவிடம் கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒரு குருவிடம் ஒப்படைக்க அடிப்படைத் தகுதியாவது வேண்டும்.
அந்த அடிப்படைத் தகுதிதான் உபநயனம். ஆமாம் அறிவுக் கண்ணைத் தான் சொல்கிறேன் உபநயனம் என்று.
முப்புரி நூல் என்பது பூணூலின் சரியான வடிவம்
மூன்று நூல்களை "பிரும்ம முடிச்சு" என்னும் முடிச்சால் ஒன்றாக இணைத்து அதைப் பூணூல் என்பர். அந்தப் பூணூலை அணிவிக்கும் வைபவத்தை "பிரும்மோபதேசம்" என்று கூறுவர். அதாவது குழந்தையின் தகப்பன் "பிரும்மாவின்" ஸ்தானத்தில் இருந்து குழந்தைக்கு உபதேசம் செய்வித்தல் என்று பொருள்.
பூணுவது என்றால் அணிவது. அந்தப் பூணூலை அணிய வேண்டுமென்றால் அதை அணியத்தக்க தகுதி நமக்கு வேண்டும். அதற்குதான் மந்திரங்கள் வாயிலாக அந்தச் சிறுவனுக்கு தகப்பன் மூலமாக பிரும்மோபதேசம் செய்வித்து
முப்புரி நூலை அணிய வைத்து இரண்டாம் குருவான
எல்லோரும் கிரீடம் அணியலாம் ஆனால் , தகுதி வாய்ந்தவர் அணியும்போது அது அந்தக் கிரீடத்துக்கே பெருமை சேர்க்கிறது
அதைப் போல பூணூல் அணிய அந்தப் பூணூலை அணியத் தம்மை தகுதியாக்கிக் கொள்ளல்
அப்படி தகுதியாக்கிக் கொள்ளலை உபநயனம் என்பார்கள்
ப்ரதானமாக பல புராணங்கள் இருந்தாலும் அவற்றிர்க்கெல்லாம் உப புராணங்களும் உண்டு
அதாவது ப்ரதான புராணத்தின் இன்னொரு முகம், இன்னொரு தகுதி, என்று எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம்
ஒரு மனிதனுக்கு நயனம் என்பது கண்களைக் குறிக்கும். சாதாரண கண் வேறு ஞானக் கண் வேறு, சாதாரண கண்ணை ஞானக் கண்ணாக மாற்ற கல்வி கற்க வேண்டும். கல்வி கற்க தகுதியாக மாறுவதே உபநயனம்.
யார் கல்வி கற்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்குஅடிப்படைத் தகுதியான " உபநயனம்" செய்வித்து ஒரு குருவிடம் அவரைச் சீடனாக அனுப்புவது ஆதிகாலம் முதலே வழக்கமாயிருந்தது.
அதனால் ஞானக் கண் திறக்க வேண்டுமானால் நமக்கு இருக்கும் கண் போதாது. உப நயனம் வேண்டும். அதாவது இன்னொரு கண், அறிவுக் கண் , வேண்டும். அந்த உபநயனத்தை அடைய நாம் நம் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதைப் போல அடிப்படை மூலப்பொருளான குழந்தையை குருவிடம் அனுப்பும் தகுதியை ஏற்படுத்தி குருவிடம் கொண்டு செல்பவன் தகப்பன்
அதனால்தான் அந்தக் குழந்தைக்கு முதல் பிரும்மோபதேசம் செய்ய தகப்பனுக்கே முதல் தகுதி வருகிறது .அப்படி அடிப்படைத் தகுதிகளை கைக்கொண்டு குருவை அடைந்து குருகுலவாசம் செய்து ,குருவுக்கு முறையாக பணிவிடைகள் செய்து ,அவர்தம் அடிதொட்டு நடந்து முறையாக கல்வி கற்க வேண்டும். அப்படி கல்வி கேள்விகளில் முழுமை பெற்றவனே முழு மனிதன் என்னும் தகுதியை அடைகிறான் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.
நமது முன்னோர்கள் பித்ருக்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கர்மாக்களை செய்ய பூணூல் என்னும் முப்புரி நூல் அணிந்தவர்க்கே தகுதி உண்டு என்று சாத்திரங்கள் சொல்கின்றன.
சுப காரியங்கள் செய்யும் போது முப்புரி நூலை இடவலமாகவும் அதாவது இடது தோளிலிருந்து வலது பக்கமாக தொங்கும் படியாகவும், அசுப காரியங்கள் செய்யும்போது வல இடமாகவும் அதாவது வலது தோளிலிருந்து இடது புறமாக தொங்கும் படியாகவும் இந்த முப்புரி நூலை அணிந்து கொள்ளவேண்டும் என்பது சாத்திர விதி.
பொதுவாக ஒரு கல்யாணத்தை எப்படிக் கொண்டாடுகிறார்களோ அப்படி நல்ல நாள் குறித்து, நல்ல சுபயோக வேளை குறித்து, மண்டபம் ஏற்பாடு செய்து உறவினர்களுக்கெல்லாம் பத்திரிகை அனுப்பி முறையாக அழைத்து உதக சாந்தி , நாந்தி என்ற இரண்டையும் முதல் நாள் செய்வார்கள் .
மறுநாள் குமார போஜனமும், பின்னர் உபநயனமும், பிரும்மோபதேசமும் நடக்கும் .
படைத்த பிரும்மனின் அருள் பெற்று பிரும்மச்சரிய விரதம் கடைப்பிடிக்க பிரும்மச்சாரியாய் இருக்க வேண்டும். பிரும்மோபதேசம் பெற்று முப்புரிநூலை அணிந்து பிரும்மச்சாரி என்னும் தகுதியை அடையவேண்டும். திருமணம் செய்து கொள்ளாதவர் அனைவரும் பிரும்மச்சாரிகள் அல்லர். குழந்தை என்னும் பருவத்தைக் கடந்து பிரும்மச்சாரியாய் மலர்ந்து பிரும்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடிப்பவனே பிரும்மச்சாரி என்று அழைக்கப் படுவான்.
பிரும்மச்சாரியாக பிரும்மோபதேசம் பெற்று முப்புரி நூல் அணிபவன் பிரும்மச்சாரியாகிறான். அடுத்து ஒரு பெண்ணை கன்னிகாதானம் பெற்று திருமண பந்தத்தில் இணைத்துக் கொள்ளும்போது கிருகஸ்தனாகிறான்.
அப்போது அவனுக்கு இரண்டு முப்புரி நூல்கள் அணிவிக்கப்படும்.
பிரும்மச்சாரியாகத் தகுதி பெறும்போது ஒற்றை வஸ்திரம், இடுப்பில் நாலு முழத் துண்டு ஒன்றுதான், ஒற்றை முப்புரி நூல்தான்.
கிருஹஸ்தனாக தகுதி பெறும்போது இரட்டை வஸ்திரம். இடுப்பில் பஞ்சகச்சம் என்னும் வேட்டியும் , அதன் மேல் உத்ரீயம் என்னும் மேல் வஸ்திரமும் இரட்டை முப்புரி நூலும் தகுதியானவை.
ஆகவே பிரும்மோபதேசம் பெற்றவன் தினமும் மூன்று வேளைகளிலும் சந்தியாகாலத்திலும், மதிய வேளையிலும், சாயங்காலம் என்னும் மாலைவேளையிலும் அதாவது சூரிய உதய நேரத்திலும் , உச்சிகால சூரியன் வேளையிலும் , மாலை சூரியன் அஸ்தமனமாகும் வேளையிலும் சந்தியா வந்தனம் என்னும் கிரமத்தை செய்ய வேண்டும். சூரிய உபாசனைக்கு காயத்ரி மந்திரம் மிகவும் உகந்தது. இப்படிப்பட்ட தகுதிகள் கிடைக்க வேண்டுமானால் பிரும்மோபதேசம் பெற்று உபநயனம் செய்து கொண்டு முப்புரி நூல் அணிய வேண்டும் எனப்து சாத்திரம்.
இந்த பிரும்மோபதேசம் என்பதே காயத்ரி மூல மந்திரத்தை அடிப்படையாக வைத்து செய்யப் படுவதே. காயத்ரி மூல மந்திரமாகிய
" ஓம் பூர்ப்ப வசுஹு தசவிதுர் வர்ரெண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோய ந பரசோதயாத்" என்பதே
இந்த மூல மந்திரத்தை ஏற்படுத்தியவர் விஸ்வாமித்ர மஹரிஷி
தன்னுடைய காயத்தையே அதாவது உடலையே குத்து விளக்கின் ஐந்து முனைகளில் தலையை ஒரு முனையிலும், கால்கள் இரண்டையும் மற்ற இரு முனைகளிலும், கைகள் இரண்டையும் மற்ற இரு முனைகளிலும் வைத்துக் கொண்டு கூறிய மந்திரம் ஆகவே உடலையே அதாவது காயத்தையே திரியாகப் போட்டு தன்னையே தீபமாக உயர்த்திக் கொண்டவர் விஸ்வாமித்ரர்.
ஆகவேதான் காயத்ரி மந்திரம் என்னும் பெயர் ஏற்பட்டது. காயத்ரி தேவியை பூஜிக்க தகுந்த மந்திரமாக காயத்ரி மந்திரம் இருக்கிறது.
அறிவுக் கண் திறக்க வேண்டுமென்றால் கல்வி வேண்டும், எல்லோருக்கும் கல்வி வேண்டும். கல்வி கற்பவன் பூணூல் என்னும் முப்புரி நூலை அணிந்துகொண்டு குருவிடம் செல்வான். ‘கல்வி கற்க வந்திருக்கும் மாணவன் அவன் என்பதை ’ என்பதை குரு தெரிந்துகொள்வார். அரசர்கள், வியாபாரிகள் போன்றவர்களுக்குப் பூணூல் என்னும் முப்புரி நூல் இருக்கும்.
பிள்ளைக்கு தந்தை பிரும்மோபதேசம் செய்யும் காட்சி
--
You received this message because you are subscribed to the Google Groups "Mazalais" group.
To post to this group, send an email to maza...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to mazalais+u...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/mazalais?hl=en-GB.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

"ஒரு மனிதனுக்கு நயனம் என்பது கண்களைக் குறிக்கும். சாதாரண கண் வேறு ஞானக் கண் வேறு, சாதாரண கண்ணை ஞானக் கண்ணாக மாற்ற கல்வி கற்க வேண்டும். கல்வி கற்க தகுதியாக மாறுவதே உபநயனம்.
யார் கல்வி கற்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்குஅடிப்படைத் தகுதியான " உபநயனம்" செய்வித்து ஒரு குருவிடம் அவரைச் சீடனாக அனுப்புவது ஆதிகாலம் முதலே வழக்கமாயிருந்தது.
அதனால் ஞானக் கண் திறக்க வேண்டுமானால் நமக்கு இருக்கும் கண் போதாது. உப நயனம் வேண்டும். அதாவது இன்னொரு கண், அறிவுக் கண் , வேண்டும். அந்த உபநயனத்தை அடைய நாம் நம் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். "
அன்புடன்
தமிழ்த்தேனீ
முடியை வளர்த்துக் குடுமியாக்கியதும் அதை நீக்குவது கூடாது என்பார்கள்.
ஆத்மசக்தி விரயம் ஆகாமல் மனோபலத்தை அதிகரித்துக் கட்டிப் போடுவதால்
குடுமியைக் கட்டாயமாக அந்த நாட்களில் அனைவரும் வைத்துக்கொண்டார்கள்.
மஹாபாரதப் போரில் பாண்டவர்களின் வாரிசுகளை அடியோடு அழித்த அஸ்வத்தாமாவைப்
பழிவாங்க நினைத்த அர்ஜுனன் குரு புத்திரனைக் கொல்வது எப்படி எனத்
திகைத்துப் பின்னர் சிகையை அடியோடு வெட்டியதாகப் படித்திருக்கிறோம்
அல்லவா! அது அவன் ஆத்மபலத்தை அடியோடு அழித்துவிடவில்லையா? அது போல்
தான். பெண்களுக்கு இந்தக் குடுமிக் கல்யாணம் இல்லை என்றாலும் தலைமுடியை
அவர்களும் வாரிப் பின்னித் தூக்கிக் கட்டிக்கொள்ள வேண்டும், நுனி வெளியே
தெரியக் கூடாது என்று சொல்வார்கள். தூக்கிக் கட்டினால் நுனி மேல் நோக்கி
இருக்கலாம் என்றும் கூறுவார்கள். ஆனால் இந்தக் காலத்தில் அது
நடப்பதில்லை. எல்லாருமே தலையை விரித்துத் தான் போட்டுக் கொள்கின்றனர்.
வட மாநிலங்களில் மத்ரா அருகே கோகுலத்தில் பிரிஜ்பாசி பிராமணர்களில்
இப்போதும் இந்தக் குடுமிக் கல்யாணம் கட்டாயமாக நடைபெற்று வருவதைக் காண
முடியும்.
இதற்குப் பின்னர் வருவதே உபநயனம் ஆகும். உபநயனம் என்றால் குருவிடம்
அழைத்துச் செல்வது என்று பார்த்தோம். குரு வந்து கையைப்
பிடித்துக்கொண்டு கூட்டிச் செல்வது என்ற பொருளில் அல்ல. உபநயனத்தின்
போது தந்தையானவர் மகனுக்கு குருவைக் காட்டி, “இனி இவர் தான் சில
காலங்களுக்கு உனக்குத் தந்தை.” என்று காட்டுவார். குரு மூலமே காயத்ரி
மந்திர உபதேசமும் நடக்கும். அதன் பின்னர் குறைந்தது பனிரண்டு வருஷங்கள்
குருவிடம் மாணவனாக குருகுலத்தில் இருக்க வேண்டும். பொதுவாக இதற்கு
வயசும் உண்டு. எட்டு வயதில் உபநயனம் செய்ய வேண்டும் என்பார்கள்.
நாமெல்லாம் பிறந்த தேதியை வைத்து வருடத்தைக் கணக்கிட்டாலும் சாஸ்திர,
சம்பிரதாயங்கள் கர்ப்ப காலத்தையும் சேர்த்துக்கொள்ளும். ஆகவே கர்ப்ப
காலத்தையும் சேர்த்தெ எட்டு வயசு ஆக வேண்டும். பிறந்து ஏழு வயதும்
இரண்டு அல்லது மூன்று மாதமும் ஆகி இருந்தால் சரியாக இருக்கும். ஏனெனில்
இந்த வயதில் குழந்தை குழந்தையாகவே இருப்பான். மனதில் விகார எண்ணங்கள்
இராது. தவிர்க்க முடியாமல் போனால் தான் பதினாறு வயதுக்குள்ளாக உபநயனம்
செய்விக்கலாம். இது பிராமணருக்கானது.
க்ஷத்திரியர்களுக்கான காலகட்டம் பதினொரு வயதில் இருந்து 22 வயது
வரைக்கும். வைசியர்களுக்கான கால கட்டம் 12 வயதில் இருந்து 24
வயதுக்குள்ளாக. அதற்குள்ளாக உபநயனம் செய்துவிட வேண்டும். இந்த உபநயனம்
செய்விப்பதன் மூல காரணமே அந்தக் குழந்தை ஜபிக்கும் காயத்ரி மந்திரத்தின்
ஆன்மீக அதிர்வலைகள் அவனுக்கு மட்டுமின்றிச் சுற்றி உள்ளவர்களுக்கும்
ஏற்படுத்தும் நன்மையைக் கருத்தில் கொண்டே செய்யப்படுகிறது. குழந்தையின்
மனதில் காமம் புகுந்து கொள்ளுமுன்னர் உபநயனம் செய்விக்க வேண்டும். மனதை
ஒருநிலைப்படுத்த காயத்ரி மந்திரம் துணை நிற்கும். ப்ரம்ஹ தேஜஸை உபநயனம்
செய்வித்த பிள்ளை சம்பாதித்துக்கொண்டு மற்றவர்களுக்கும் அதன் மூலம்
நன்மையை ஏற்படுத்த முடியும். உபநயனம் பற்றி அடுத்துப் பார்ப்போம்.
பதிவுக்கான தகவல்கள் உதவி: தி.வா.ஜி. மற்றும் தெய்வத்தின் குரல்
2012/7/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
ஒன்று மட்டும் நிச்சயம் காயத்தையே திரியாக உபயோகித்து காயத்ரி மந்திரத்தின் பெருமையை நமக்கு உணர்த்தியவர் விஸ்வாமித்ரர் என்று கொள்ளலாம்
காயத் திரி அதனால் காயத்ரி என்றேன்
உபநயன ஸம்ஸ்காரம் பிராமணர்களுக்கு மட்டுமல்ல, என்பதைக் குறிக்கும்
ஸ்லோகம் கீழே கொடுத்திருக்கிறேன்.
கர்ப்பாஷ்டமேஷு ப்ராமண உபநயீத
கர்ப்பைகாதெசேஷு ராஜன்யம்
கர்ப்பத்வாத்யசேஷு வைஸ்யம்
என்ற இந்த ஸ்லோகம் இது ராஜாக்களான க்ஷத்திரியர்களுக்கும்,
வைசியர்களுக்கும் கூட இருந்ததைக் காட்டுகிறது. ஆகவே உபநயனம் என்பது
பிராமணர்களுக்கு மட்டுமே என்றானது பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரே
ஆகும். இந்த உபநயனத்தின் மூலம் குழந்தையை குருவிடம் சேர்ப்பித்துக் கல்வி
கற்க ஏற்பாடு செய்வதற்கான ஒரு முக்கியமான சம்ஸ்காரமே உபநயனம் ஆகும்.
கல்விக்காக மாணவனைத் தயார் செய்யும் ஒரு சம்ஸ்காரம் என்றும் சொல்லலாம்.
இதற்கு அப்தோபதேசம் என்னும் பெயரும் வழங்கப்படுகிறது.
கல்வியே மாணவனுக்கு உள்ளத் தூய்மையை ஏற்படுத்தி உயர்ந்த சிந்தனைகள்
தோன்றும். நல்லது, கெட்டதை ஆராயும் போக்கு உருவாகும். உண்மை எது, பொய்
எது எனப் பிரித்துப் பார்க்கத் தெரியும், அன்றாட வாழ்க்கையின் தேவைகளைப்
பூர்த்தி செய்யும்படியாயும் அதே சமயம் ஆன்மிகத்திலும் ஈடுபடும்படியாகவும்
செய்யக் கூடியது குருகுலக் கல்வி முறையே. இந்த குருகுலக் கல்வி முறையில்
மாணவன் குருவிடம் தங்கி இருந்து அவரோடு ஒவ்வொரு நாட்களையும் கழித்து அவர்
வாய் மூலமாகப் பாடங்களைக் கேட்டு மூளையில் பதிய வைத்துக்கொள்கிறான்.
வேதக்கல்வி அனைவருக்கும் பொதுவான ஒன்றாக இருந்தாலும் அவரவருக்கு எந்தக்
கல்வியில் இஷ்டமோ அந்தக் கல்வியில் ஞானத்தையும், அறிவையும் மேன்மேலும்
வளர்த்துக்கொள்ள முடிந்தது. இதற்கு குருவின் அருகாமையிலேயே இருக்க
வேண்டும்.
ஒவ்வொருத்தரும் அவரவருக்குத் தேவையானதைக் கற்க முடிந்த காலம் அது,
அரசர்கள் ராஜ்ய பரிபாலனம் பற்றியும் வியாபாரிகள் வியாபாரம் குறித்தும்,
வீரர்கள் ஆயுதப் பயிற்சிகளும், பிராமணர்கள் வேதக்கல்வியோடு சேர்ந்து
ஆயுதங்களைக் கையாளவும் தெரிந்து வைத்திருந்தார்கள். வழிவழியாக இவை
எல்லாம் காப்பாற்றப்பட்டு ஒவ்வொருத்தரிடம் முறையாக ஒப்புவிக்கப்
படுகிறது. வாய்மொழியாகவே வேதம் எப்படிப் பரவி இருக்கிறது என்பதிலிருந்து
இதைத் தெரிந்து கொள்ளலாம். அத்தகையதோர் கல்விக்கு மாணவனைத் தயார் செய்து
அனுப்புவதே உபநயன சம்ஸ்காரம். இப்போது உபநயனம் செய்யப்படும் வடுவிற்கு
என்ன என்ன முறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன என்பதைப் பார்ப்போம்.
முதலில் "வடு" என அழைக்கப்படும் சிறுவனை மங்கள நீராட்டுவார்கள்.
சின்னஞ்சிறு பாலகனை வடு என அழைப்பார்கள். மங்கள நீராட்டிற்கு உதகசாந்தி
எனப் பெயர். குடத்தில் நீரை நிரப்பி தேவர்களையும், தேவதைகளையும்
மந்திரத்தால் வரவழைத்து அந்த மந்திர ஜபங்களால் அவற்றுக்கு வலுவூட்டி அந்த
நீரை உபநயனம் செய்து கொள்ளப் போகும் சிறுவனுக்கு அபிஷேஹம் செய்வது போல்
தலையில் விடுவார்கள். இதன் மூலம் அந்தச் சிறுவனின் உடலும் , உள்ளமும்
மாசற்றதாக ஆகும் என ஐதீகம். இது உபநயனம் செய்யப் போகும் நாளுக்கு முதல்
நாளே நடக்கும். உபநயனத்திற்குச் சிறுவனின் நக்ஷத்திரத்துக்கு ஏற்றவாறு
நாள் கணிப்பார்கள். அதற்கு முதல்நாள் இந்த உதகசாந்தி நடைபெறும். மனதில்
விபரீத எண்ணங்கள் ஏற்படாமல் இருக்கவும் இந்த மந்திரசக்தி வாய்ந்த புனித
நீர் தடுக்கும். மாணவன் மனம் அமைதி பெறச் செய்யும். பின்னர் மாணவனின்
வலக்கரத்தில் மஞ்சள் கயிறால் காப்புக் கட்டுவார்கள். இதற்கு
ரக்ஷாபந்தனம் எனப் பெயர். இன்னல்களிலிருந்து காக்கும் ரக்ஷை அது.
அதன் பின்னர் குடும்பத்து, குலத்து முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு
உணவு படைப்பது. இதற்கு "நாந்தீ என்று பெயர். இதில் ஒன்பது
அந்தணர்களுக்கு உணவு படைக்கும் வழக்கம் உண்டு. முன்னோர்களிடம்
பிரார்த்தித்துக்கொண்டு உபநயனம் நடைபெறப்போகும் சிறுவனுக்காக ஆசிகளை
வேண்டும் விதமாகச் செய்யப்படுவது. பிராமணர்களுக்கு உணவு படைத்த பின்னரே
மற்றவர்கள் உணவு உண்ணலாம். பொதுவாக நாந்தி நடைபெறும் வீடுகளில்
அவர்களின் சகோத்திரத்தைச் சேர்ந்தவர்கள், தாயாதிகள் மட்டுமே
முன்காலங்களில் எல்லாம் சாப்பிடுவார்கள். மற்றவர்களுக்குத் தனியாக உணவு
சமைக்கப் பட்டிருக்கும். ஆனால் இப்போதெல்லாம் பொதுவிலே உணவு சமைத்து
எடுத்து வரும் வழக்கம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து, நாந்தி
பிராமணர்களுக்கு உணவு படைக்காமல் வாழைக்காய், அரிசி, பருப்பு கொடுக்கும்
வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் அனைவரும் இதையே
விரும்புகின்றனர். ஆசாரக் குறைவு என்பதால் வெளியில் சமைத்து எடுத்து
வருவதைப் புரோகிதர்கள் சாப்பிடுவது கிடையாது. ஆகவே இன்றைய சூழ்நிலையில்
இதுவே நடைபெற்று வருகிறது. இந்த நாந்தியோடு முதல்நாள் விசேஷங்கள்
முடிவடைகின்றன.
தகவல்கள் உதவி: தெய்வத்தின் குரல், திரு திவாஜி, திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
குறுக்கீடெல்லாம் எதுவும் இல்லை ஐயா. பெண்களுக்கு அந்த ஏழாம் வயதிலேயே
திருமணம் என வைத்திருந்தார்கள். அவர்களுக்கும் மனதில் காமம் புகும்
முன்னரே கணவனைக் காட்டிக் கொடுத்தார்கள். கணவனையே குருவாக வரித்த
பெண்களும் உண்டு. அத்ரி-அநுசுயா, யாக்ஞவல்கியர்-மைத்ரேயி போல!
அதன் பின்னரும் பிற்காலங்களில் பெண்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில்
வைத்தே தமிழும், வடமொழியும், பாட்டும் சொல்லிக் கொடுத்து வளர்த்தார்கள்
எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆகப் பெண்கள் கல்வி கற்காமலேயோ,
கல்வியில் மோசமாகவோ இருந்ததில்லை. எனினும் மிகப் பிற்காலத்தில்
பதினேழாம் நூற்றாண்டின் பின்னர் பெண்களை வீட்டில் பூட்டி வைக்க வேண்டிய
அவசியம் ஏற்பட்டது. மதமாற்றங்களுக்கும், பெண்களைத் தூக்கிச் சென்று
வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து கொண்டதைத் தடுப்பதற்காகவும். ஆகவே இரு
நூற்றாண்டுகள் பெண்கள் இருண்ட காலத்தில் இருக்க நேரிட்டது
துரதிர்ஷ்டவசமானது. உங்கள் பார்வைக்காக ஒரு சுட்டி. நேரமிருக்கையில்
படிக்கவும்.
http://sivamgss.blogspot.in/2011/03/blog-post_08.html
நன்றி.
2012/7/25 Karuannam Annam <karu...@gmail.com>:
>
> குறுக்கிடுவதற்குப் பொறுத்துக் கொள்ளவும் அமமா. மக்களில் பாதியான பெண்
> குழந்தைகளைக் கல்வி கற்கச் சேர்ப்பிக்கும் சம்ஸ்காரம் வேறேதும் இருந்ததா என்பது
> அறிய ஆவல்.
> அல்லது ஆண்களுக்கு உபநயனம் வேதக்கல்வி கற்க ஏற்பட்டதா.
> அன்புடன்
> சொ.வினைதீர்த்தான்.
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Mazalais" group.
> To post to this group, send an email to maza...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> mazalais+u...@googlegroups.com.
> For more options, visit this group at
//குறுக்கிடுவதற்குப் பொறுத்துக் கொள்ளவும் அமமா.//
குறுக்கீடெல்லாம் எதுவும் இல்லை ஐயா. பெண்களுக்கு அந்த ஏழாம் வயதிலேயே
திருமணம் என வைத்திருந்தார்கள்.
முதல்நாளன்றே நடக்கும் இன்னொரு சடங்கு அங்குரார்ப்பணம் என்னும் பாலிகை
தெளித்தல். முதலில் புண்யாஹம் செய்வார்கள். பின்னர் நெல், கடுகு, எள்,
உளுந்து, பச்சைப்பயறு ஆகியவற்றை நீரில் நனைத்து வைத்திருப்பார்கள்.
மந்திரபூர்வமாக இவற்றிற்கு பூஜை செய்து ஓஷதி சூக்தம் சொல்லி, 5, 7 என
எண்ணிக்கையில் சுமங்கலிகளை விட்டு மண்ணாலான கிண்ணங்களில் ஜலத்தோடு
தெளிக்கச் சொல்வார்கள். பாலிகைக் கிண்ணங்கள் தனியாக உண்டு. பின்னர்
தினமும் அவற்றிற்கு நீர் தெளித்து வந்து ஐந்தாம் நாள் அவற்றை நீர்
நிலைகளில் கரைக்க வேண்டும். இப்போதெல்லாம் நீர்நிலை இல்லாததால் ஒரு
பெரிய வாளியில் நீரை நிரப்பிக் கொண்டு அவற்றில் கரைக்க வேண்டி
இருக்கிறது. :(
மறுநாள் காலையில் பையருக்கு மங்கள நீராட்டி, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹம்
போன்றவைகள் முடிந்து பூணூல் போடப்பட்ட சில பிரம்மசாரி பிள்ளைகளோடு
அமர்த்தி வைத்துப் பூணூல் போடப் போகும் சிறுவனுக்கு நெய்யும், பாலும்
சேர்த்த உணவு படைப்பார்கள். அநேகமாய் இது பொங்கலாய் இருக்கும். அதிகக்
காரமான உணவு கொடுக்க மாட்டார்கள். இதற்குக்குமார போஜனம் என்று பெயர்.
கூட உணவருந்தும் பிரமசாரிப் பிள்ளைகளுக்கு தக்ஷிணை கொடுப்பது உண்டு.
பின்னர் சிறுவனின் உடல் சுத்திக்காக சிகையை மழிப்பார்கள். சாதாரணமாகக்
குடுமி வைக்கும் போது வெட்டுவது போல் அரை வட்டமாக முன் நெற்றியிலும் பின்
இன்னொரு அரைவட்டமாகப் பின்னங்கழுத்து அருகேயும் வெட்டி விடுவார்கள். இதை
அப்பளக்குடுமி எனச் சொல்வதுண்டு. இது ரிக், யஜுர் வேதக்
காரர்களுக்கானது. சாம வேதக்காரர்களுக்கு முழு மொட்டையாகப் போட்டு
விடுவார்கள். பின்னர் பையனுக்கு மாமாவின் சீராகக் கொடுக்கப்படும்
வெண்பட்டு உடுத்தி முஞ்சம்புல் என்கிற புல்லை முப்புரி நூலாகச் சிறுவனின்
இடுப்பில் கட்டி நாபிக்கருகே முடி போடுவார்கள். இது
சிறுநீர்க்கோளாறுகளைத் தடுக்கும் சக்தி வாய்ந்தது என்று அதர்வ வேதத்தில்
வருவதாய்ச் சொல்கிறார்கள்.
பின்னர் சிறுவனுக்கு மாலை போட்டு மான் தோலையும் தோளில் அணிவிப்பார்கள்.
இப்போதெல்லாம் மான் தோல் தடை செய்யப் பட்டிருப்பதால் அணிவித்தல் கஷ்டம்.
பின்னர் ஆசாரியனிடம் ஊர்வலமாக அழைத்து வருவார்கள்.இப்போது தான் பையனின்
மாமா அவனைத் தன் தோளில் தூக்கிக் கொள்வார். கழுத்தில் மாலையையும் மாமா
தான் போடுவார். பின்னர் தாய் வீட்டு சீதனங்களை வரிசையாக எடுத்து
வருவார்கள். அதில் முறுக்கு, அதிரசம், லட்டு, திரட்டுப்பால், பருப்புத்
தேங்காய் ஆகிய ஐந்து பக்ஷணங்கள் முக்கியமாக இருக்கும். பின்னர் பையனின்
தாய்க்குப் புடைவை, தந்தைக்கு வேஷ்டி, துண்டு, பையனுக்கு வெண்பட்டு,
மோதிரம் போடும் வசதி உள்ளவர்கள் மோதிரம் போடுவார்கள். பூ, பழ வகைகள்,
மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு என வரிசை கொன்டு வந்து மணையில்
வைப்பார்கள். பின்னர் உபநயனம் நடக்கப் போகும் பையனை மணையில் உட்கார்த்தி
வைத்து ஆசாரியர் வேத மந்திரங்களைச் சொல்லி ஹோமம் செய்து லெளகீக அக்னியை
வளர்த்துக் குழந்தைக்குப் பலாச தண்டம் அளித்துப் பின்னர் குழந்தையை
அம்மியின் மேல் நிற்க வைத்து ஆசீர்வாதங்கள் செய்வார். பலாச தண்டம் ஞாபக
சக்தியை வளர்க்கும் எனச் சொல்லப்படுகிறது. மேலும் தேவர்கள் காயத்ரியை
ஜபிக்கையில் பலாச மரம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு காயத்ரியின் மூன்று
பாதங்களைப் போல மூன்று மூன்று இலைகளாத் துளிர் விட்டதாம். ஆகவே பலாச
தண்டம் அளிப்பது முக்கியமாய்ச் சொல்லப்படுகிறது. அம்மியில் நிற்க வைத்து
ஆசிகள் கொடுத்த பின்னர் தன் சீடனாகப் போகும் மாணவனோடு ஆசாரியர்
உரையாடுவார். இந்த உரையாடல் எதைக் குறித்து என விபரம் தெரியவில்லை.
அதன் பின்னர் சிறுவனின் கையைப் பிடித்துக்கொண்டு ஹோமம் செய்வித்துப்
பின்னர் ஆசாரியரே ஹோமத்தை முழுதும் செய்து முடிப்பார். அதன் பின்னர்
பிரஹ்மோபதேசம்.
இதுதான் முக்கியமானது. முப்புரி நூல் முன்னாலேயே
அணிவிக்கப்பட்டிருக்கும். இதில் பையனின் மாமா சீராகத் தங்கப் பூணூல்,
வெள்ளிப் பூணூலும் சேர்த்து அணிவித்திருப்பார்கள். இத்தோடு பூணூலும்
அணிவித்திருப்பார்கள். பூணூல், தக்ளியில் நூல் நூற்று மூன்று இழைகள்
கொண்டதாய்ச் செய்து அதைக் கட்டை விரலை விடுத்து மற்ற நான்கு விரல்களால்
96 முறை சுற்றித் துணித்துப்பின்னர் நனைத்து மீண்டும் முறுக்கி மூன்றாக
முடி போடுவார்கள். இது ஒன்பது இழை கொண்டதாக இருக்கும். பூணூலில்
போடப்படும் முடிச்சை பிரம்ம முடிச்சு என்பார்கள். மும்மூர்த்திகளையும்
குறிக்கும் இந்த பிரம்ம முடிச்சு. பூணூல் தொப்புள் வரை நீளமாக
இருக்கும். இந்தப் பூணூல் என்பது பிராமணர் என்பதைக் குறிக்கும்
அடையாளமோ, அணிகலனோ இல்லை. இதன் தொண்ணூற்று ஆறு சுற்றுக்களையும்
வாழ்க்கைத் தத்துவமாகவே கூறுவார்கள். நம் உடலின் 25 தத்துவங்கள்,
ஸத்வம், ரஜோ, தமஸ் போன்ற 3 குணங்கள், திதிகள் 15, கிழமைகள் 7,
நக்ஷத்திரங்கள் 27, வேதங்கள் 4, காலங்கள் 3, மாதங்கள் 12 ஆகியன சேர்ந்து
96 என்று கணக்கு. இதற்கான ஸ்லோகம் ஒன்றும் உள்ளது. “திதி வாரம்
சநக்ஷத்ரம் தத்வவேதகுணான்விதம். காலத்ரயம் ச மாஸா: ச ப்ரம்ம ஸூத்ரம் ஹி
ஷண்ணவம்” என்ற ஸ்லோகம் இதற்கான பொருளைச் சுட்டுகிறது.
தகவல்கள் உதவி: தெய்வத்தின் குரல், திரு தி.வா. திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
//அம்மியில் நிற்க வைத்து
ஆசிகள் கொடுத்த பின்னர் தன் சீடனாகப் போகும் மாணவனோடு ஆசாரியர்
உரையாடுவார். இந்த உரையாடல் எதைக் குறித்து என விபரம் தெரியவில்லை.//
போன பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். இதைப் படித்த திரு திவா
அவர்கள் இது முக்கியம் என்று சொல்லிவிட்டு இதற்கான சுட்டியையும் கொடுத்து
உதவினார். முதலில் சுட்டி கிடைத்தபோது சேமித்துக்கொள்ளவில்லை. பின்னால்
தேடியபோது சுட்டி கிடைக்கவில்லை. ஆகவே என்னனு தெரியலைனு எழுதிட்டேன்.
:((( மிகவும் மன்னிக்கவும். முன்னாலேயே அவரிடம் கேட்டிருக்கணும்.
தாமதமாகவாவது தெரிய வந்ததுக்கு நன்றியைச் சொல்லிவிட்டு இதைக் குறித்து
எழுதியதும் அடுத்த பதிவைப் பின்னர் போடுகிறேன்.
பூணூலே போடாத குழந்தைக்கு அப்பா, அம்மாவிடம் சொல்லி உபநயனம் செய்யச்
சொல்லு என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். உபநயனத்துக்குத் தயாராக
இருக்கும் வடுவிடம் உபநயனத்திற்குப் பின்னர் அவன் செய்ய வேண்டிய நித்ய
கர்மாநுஷ்டானங்களைக் குறித்து அவனுக்குப் புரிய வைக்க வேண்டும். இது
தான் ஆசாரியர் முக்கியமாய்ப் பையனுடன் நடத்தும் சம்பாஷணை ஆகும்.
சந்தியா வந்தனம் செய்ய வேண்டியது மிக முக்கியம் என்பதாலும்,
ப்ரமசாரியாகப் போகும் சிறுவனுக்கு குருகுலத்தில் இருந்து வேத அத்யயனம்
செய்ய வேண்டியதும் கட்டாயம் என்பதாலும், உபநயன காலத்திலேயே ஆசாரியர்கள்
உபநயனம் செய்து கொள்ளப் போகும் சிறுவனிடம் சில விஷயங்களைச் சொல்லிவிட்டு
அதற்கான தக்க பதிலையும் பெற்றுக் கொள்வார்கள். எல்லாம் வடமொழியில்
இருப்பதால் இந்தக் காலத்தில் எல்லாருக்கும் இது புரியும் என்று சொல்ல
முடியாது. ஆசாரியார் கேட்டதற்குத் தக்க பதிலைச் சொல்லு என்று சொல்லிக்
கொடுப்பதால் அப்படியே குழந்தைகள் சொல்வார்கள். ஆனாலும் இதைக்
கடைப்பிடிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
ஆசாரியர் மாணாக்கனாகப் போகிறவனிடம்,
"ப்ரும்மசார்யஸி= ப்ரும்மசாரியாக இருக்க வேண்டும்." என்று சொல்கிறார்.
மாணவன் ஆசாரியரிடம்,
"அப்படியே ஆகட்டும். நன்றாக இருப்பேன்." என்கிறான்.
ஆசாரியர்: தினமும் உணவு உண்ணும் முன் இத்தனை நாட்கள் நீ பாட்டுக்குச்
சாப்பிட்டுக் கொண்டு இருந்தாய். அதைப் போல் இப்போது செய்ய முடியாது. நீ
பரிசேஷணம் பண்ண வேண்டும்." என்கிறார்.
மாணவனும், அப்படியே செய்வதாகச் சொல்கிறான்.
அடுத்து ஆசாரியர் பிக்ஷை எடுத்துத் தான் உண்ண வேண்டும் என்கிறார்.
பிக்ஷாசர்யஞ்சரா= என்றும் பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவதோடு அல்லாமல் வேத
அத்யயனமும் செய்ய வேண்டும் என்றும் கேட்கிறார்.
மாணவனும் சரி, அப்படியெ பண்ணுகிறேன் என்பான்.
பின்னர் ஆசார்யதீனோபவ என்று சொல்வார். அதாவது குருவுக்குப் பலன் தரக்
கூடியவனாய் இருக்க வேண்டும். உனக்கு எந்த ஒரு குரு வேதத்தைக் கற்றுக்
கொடுக்கிறாரோ அவர் சொல்வதை நீ கேட்க வேண்டும்."
மாணவன் அதற்கும் அப்படியே ஆகட்டும் என்பான்
பின்னர் தினசரி ஒரு நியமம் நீ தூங்காதே என்று சொல்லுவார்.
இதற்கு அர்த்தம் தூங்காமல் இருக்கக் கூடாது என்பதல்ல. தூங்குவதிலும் ஒரு
ஒழுங்குமுறை இருத்தல் வேண்டும். என்பதுவே. இதன் அர்த்தம் பகலில்
தூங்காதே என்பதுவே.
மாணவனும் ஒத்துக்கொள்வான்.
இப்போதெல்லாம் இதன் முழுப் பொருளும் தெரியாமல் யந்திரத்தனமாக ஆசாரியர்
சொல்ல மாணவனும் அப்படியே சொல்லப் பழகிவிட்டான். உண்மையில் அர்த்தம்
புரிந்து கொண்டிருந்தால் இம்மாதிரிப் பிரதிக்ஞைகள் செய்துவிட்டு அதைக்
காப்பாற்றமல் இருக்கக் கூடாது அல்லவோ! ஆனால் இன்று அப்படி நடப்பதில்லை.
பிரமசாரியாய் இருப்பதில்லை. பிக்ஷை எடுத்து உண்பதில்லை. பகலில்
தூங்காமல் இருப்பதில்லை. ஆனால் க்ருஹஸ்தனான பின்னராவது அநுஷ்டிக்க
வேண்டியதை அநுசரிக்கலாம் எனப் பரமாசாரியார் கூறுகிறார்.
தகவல் உதவிக்கு நன்றி: திரு திவாஜி.
வாமன அவதாரத்தில் வாமனனாக வந்த மஹா விஷ்ணுவுக்கு உபநயனம் நடந்தபோது
சூரியன் காயத்திரியை உபதேசம் செய்ததாகவும், உபவீதத்தை ப்ரஹஸ்பதியும்;
மேகலையை கச்யப ப்ரஜாபதியும்; நீண்ட ஆயுள், யஷஸ் தரும் மான்தோலை
பூமிதேவியும்; நல்ல புத்தி, வேதத்தை காத்தல் இதன் பொருட்டு பலாச தண்டத்தை
ஸோமனும்; இந்திரிய நிக்ரஹத்தைத் தர கௌபீனத்தை அதிதியும்; குடையை
தேவலோகமும்; தீர்த்த பாத்திரத்தை ப்ரம்மாவும்; சுத்தம் தரும் குச புற்களை
ஸப்த ரிஷிகளும்; ஜப மாலையை ஸரஸ்வதியும் பிட்சை எடுக்கும் பாத்திரத்தை
குபேரனும்; உலகுக்கே தாயாரான உமாதேவி பிக்ஷையையும் அளித்ததாகச் சொல்லி
இருக்கிறது. இவ்வளவு சக்தி வாய்ந்த உபநயனம் என்பது வெறும் பூணூலைப்
போடும் ஒரு நிகழ்ச்சி மட்டுமில்லை என்பதைப் புரிந்து கொள்வோம்.
தற்காலங்களில் கெளபீனத்துக்குப் பதிலாக வெண்பட்டு வந்துவிட்டது; அதே
போல் பெற்றோரும் ஆடம்பரமாகவே ஒரு திருவிழாவைப்போலவே உபநயன சமஸ்காரத்தை
நடத்துகின்றனர். யாருக்கும் இதன் அருமை தெரியவில்லை என்றே சொல்ல
வேண்டும்.
இந்த ப்ரஹ்மோபதேசம் தான் உபநயனத்தில் மிக முக்கியமான சடங்கு ஆகும்.
கூடி இருக்கும் பெரியோர்களிடம் அநுமதி பெற்றுக்கொண்டு, நவக்ரஹங்களுக்கு
வழிபாடுகள் செய்து அவற்றைத் திருப்தி செய்து, ஆசாரியருக்குப் பாத பூஜை
செய்து, அவரிடம், “ஸாவித்ரியை எனக்கு உபதேசம் செய்யுங்கள்.” என
விண்ணப்பிக்க வேண்டும். வெண்பட்டால் தந்தை, குரு, மாணவன் மூவரையும்
மூடிக் கொண்டு உபதேசம் நடக்கும். குரு உபதேசம் செய்ததும், பலாச தண்டம்
எடுத்துக் கொண்டு மாணவனே ஆசாரியருக்கு தக்ஷிணை கொடுப்பான். பின்னர்
குருவானவர் சூரிய வழிபாட்டைப் பற்றியும் சொல்லிக் கொடுப்பார்.
மந்திரங்கள் மூலம் பல்வேறு விதமான உபதேசங்கள் செய்வார். பிரமசரியத்தை
அநுஷ்டிக்கும் விதம் குறித்தும் சொல்லிக் கொடுப்பார். பிரமசரியம்
அநுஷ்டிக்கும் மாணவன் பிக்ஷை எடுக்க வேண்டும்; பிக்ஷை எடுத்தே உணவு உண்ண
வேண்டும் என்று சொல்வார். மாணவன் “அப்படியே செய்வதாக” வாக்குக்
கொடுப்பான். இதன் பின்னரே மாணவன் பிக்ஷை எடுக்க வேண்டும். முதல் பிக்ஷை
தாயார் இருந்தால் தாயாரும், பின்னர் பிக்ஷையை மறுக்காத எந்தப்
பெண்மணியானாலும் பிக்ஷை இடலாம். அதன் பின்னர் தந்தை இன்னும் வேறு
யாரேனும் பிக்ஷை இட்டால் வாங்கிக் கொண்டு ஆசாரியரிடம் அதைக் காட்டி அவர்
அநுமதி கொடுத்த பின்னரே உணவு உட்கொள்ள வேண்டும். இதுதான் நடைமுறை.
இப்போதெல்லாம் இப்படி நடைபெறுவதில்லை. பிக்ஷை என்னமோ எடுக்கிறாங்க தான்.
அரிசியும் போடுவார்கள் தான். ஒவ்வொரு கிண்ணம் அரிசியும் தனியாக அவரவர்
கொண்டு வந்து போட்டுக் கொண்டிருந்தது போய்விட்டது இப்போதெல்லாம்.
அதற்குப் பதிலாக உபநயனம் நடக்கும் வீட்டுக்காரர்களே குறிப்பிட்ட அளவு
அரிசியை ஒரு பெரிய அடுக்கில் அல்லது அண்டாவில் வைத்துவிடுகிறார்கள்.
யாருக்கெல்லாம் பிக்ஷை போட ஆசையோ அவர்கள் எல்லாம் அந்த அண்டாவில் இருந்து
எடுத்துப் போட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான். திரும்ப அதே அண்டாவில்
கொட்டப்பட்டு மீண்டும் வேறு யாரானும் அதே அரிசியை பிக்ஷை போடுவார்கள்.
இவை சமீப காலங்களில் நடைபெறுகிறது. எங்கள் பக்கம் பிக்ஷை இடுகையில்
கையில் மட்டைத்தேங்காயோடு வெள்ளிக்காசு ஒன்றும் வைத்துக்கொண்டு பிக்ஷை
இடுவார்கள். இப்போதெல்லாம் மட்டைத்தேங்காய் வைத்துக்கொள்வது குறித்து
யாருக்கும் தெரியவில்லை. காசு வைத்துக்கொள்வது என்பது ஒரே காசைத்
திரும்பத் திரும்ப பிக்ஷை இடும் அனைவரும் பயன்படுத்துகின்றனர். :((
உபநயனம் முடிந்ததும் அந்த பிரமசாரி உப்பு, காரம் மிதமான அளவில் உள்ள
உணவையே உட்கொள்ள வேண்டும் . மிகவும் ஆசாரமாக இருப்பவர்கள் உப்பு,
காரத்தையே விலக்குவார்கள். குறைந்தது மூன்று நாட்களாவது பிக்ஷை எடுக்க
வேண்டும். அரிசியாகவோ, அன்னமாகவோ பிக்ஷை எடுக்கலாம். சந்தியா உபாசனையை
விடாமல் செய்ய வேண்டும். காலையில் தினம் சமிதா தானம் செய்ய வேண்டும்.
பகலில் உறங்கக் கூடாது. நான்கு நாட்கள் உபநயனத்தன்று அணிந்த அதே துணியை
அணிய வேண்டும். நான்காம் நாள் ஆசாரியர் வேறு துணியை உடுத்தக்
கொடுத்ததும் துணியை மாற்றலாம். நான்காம் நாள் பலாச கர்மா என்பது
நடக்கும். இப்போதெல்லாம் அது யாருக்கும் தெரியாது. ஆசாரியரோடு சென்று
தேவதைகளை ஆவாஹனம் செய்து பழைய பலாச தண்டத்தை விட்டு விட்டு, புதியதாக
ஒன்று எடுத்துக்கொள்வார்கள். இது தான் பலாச கர்மா. இதற்கு கிழக்கு
அல்லது வடக்குத் திசையில் செல்லவேண்டும் என்றும் புரச மரத்தடியில்
மண்ணால் பிரணவ தேவி, ஷ்ரத்தா தேவி, மேதா தேவி ஆகியோருக்குத் திட்டுகள்
அமைத்து மந்திரங்களால் போற்றி ஆவாஹனம் செய்து வழிபடுவார்கள் என தி.வா.
சொல்கிறார்.
இந்த உபநயனம் நடைபெறும் முன்னரே வீட்டில் இருந்த பெரியோர்களில்
சுமங்கலிகளாக இறந்த பெண்மணிகளை நினைத்து சுமங்கலிப் பிரார்த்தனை எனச்
செய்வதுண்டு. இதற்கு நாள் பார்க்க வேண்டும். சாதாரணமாக புதன், வெள்ளி,
திங்கள் கிழமைகளில் தான் செய்வார்கள். இதை உபநயனத்துக்குக்
குறிப்பிட்டிருக்கும் நாளுக்கு முன்னாலேயே செய்து விட வேண்டும். இதை
அடுத்து வெங்கடாசலபதி சமாராதனையும் பல வீடுகளில் வழக்கம் உண்டு.
அநேகமாய் வெள்ளிக்கிழமை சுமங்கலிப் பிரார்த்தனையும், சனிக்கிழமை
சமாராதனையும் செய்வார்கள். இதை எல்லாம் செய்து முன்னோர்களிடமும்,
கடவுளிடமும் உபநயனம் நல்லபடியாக முடியப் பிரார்த்திப்பார்கள். பூணூல்
இல்லாமல் செய்யும் எந்தக் கர்மாவும் பலனைத் தராது என்பதாலேயே பூணூலே
போடாத ஆண்களுக்கும் தேவைப்பட்ட நேரத்தில் சட்டைக்கு மேலேயாவது பூணூலை
மாட்டிச் செய்ய வைக்கிறார்கள். இதை பிரம்ம சூத்திரம் என்றும்
சொல்வதுண்டு. இதுவே மனிதனின் மனதை ஒருமைப் படுத்தி அவன் தவத்தைக்
காக்கும் கவசமாகச் செயல்படுகிறது என்பது ஆன்றோர் வாக்கு.
சரி, இப்போ காயத்ரி அல்லது சரஸ்வதி என்றால் என்னனு பார்ப்போமா?
ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்
இதுதான் மந்திரம். எல்லா பூஜைகளிலும் முதன் முதல் சொல்லப்படுவதும்
இதுவே. இதைச் சொல்லாமல் எந்த வழிபாடும் ஆரம்பிக்காது. இதில் இருந்தே
இதன் முக்கியத்துவம் தெரிகிறது அல்லவா? இதைக் கண்டறிந்தவர்
விஸ்வாமித்திரர். இந்த காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற
மந்திரங்கள் சொல்லி எந்த வழிபாடும் ஆரம்பிக்கும். பெண்களால்
செய்யப்படும் வழிபாடுகள் உள்பட. பெண்களும் அவர்கள் செய்யும் எந்த
வழிபாட்டிலும் இந்த மந்திரத்தை முதலில் சொல்ல வேண்டும். இந்த
மந்திரத்திற்கு காயத்ரி என்ற பெயரைத் தவிர சாவித்ரி, சரஸ்வதி என்ற
பெயர்களும் உண்டு. ஏனெனில் இந்த மந்திரத்தைக் காலையில்
காயத்ரிக்காகவும், நண்பகலில் சாவித்ரிக்காகவும், மாலையில் செய்யும்
சந்தியாவந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்க வேண்டும் என்பார்கள். அதே
போல ஜபிக்கும் முறையும் காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்துக்
கொண்டு கைகளை முகத்துக்கு நேரே கூப்பியும், நண்பகலில் கிழக்குப்
பார்த்து அமர்ந்து கைகளை மார்புக்கு நேரே கூப்பியும், சூரிய அஸ்தமனம்
ஆகும் மாலை நேரத்தில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு நேரே
கூப்பியும் இருந்த வண்ணம் ஜபிப்பார்கள்.
24 அக்ஷரங்கள் கொண்ட இதில் "ௐ" என்ற பிரணவம் தவிர 3 வ்யாஹ்ருதிகள், 3
பாதங்கள் இருப்பதாய்ச் சொல்வார்கள். இதைச் சொல்லும் முறையும்
இருக்கிறது. எனக்கு அவ்வளவெல்லாம் தெரியாது. ஆனால் அவசரம் அவசரமாக
ஜபிக்கக் கூடாது. மனம் ஏதோ ஒன்றை நினைத்திருக்க கடனுக்கு காயத்ரியை
ஜபிக்கலாகாது.
இதன் பொருளானது பூ உலகம், மத்ய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தியான
அந்தப் பரம ஜோதி ஸ்வரூபத்தைத் தியானிப்போம். அந்த சக்தியை தியானிப்பதால்
நமக்கு ஞானமாகிய வெளிச்சம் கிட்டட்டும். என்பதுவே.
இந்த வருட காயத்ரி ஜபம் அன்று இதை வெளியிட நினைத்தேன். முடியவில்லை. :(
ஆனாலும் இதன் பிறகாவது அனைவரும் சொல்லும் காயத்ரி
மந்திரத்தைப்பொருளுணர்ந்து அனைவரும் சொல்லி லோக க்ஷேமத்துக்குப்
பிரார்த்திப்போம்.
அனைவரும் நலமான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகளுடன் உபநயன சம்ஸ்காரம்
பற்றிய பதிவு முடிவடைந்தது.
தகவல்கள் உதவி: தெய்வத்தின் குரல், திரு திவாஜி, திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.