Re: [தமிழ் உலகம்] ஆவுளி dugong

34 views
Skip to first unread message

iraamaki

unread,
Jan 20, 2017, 4:53:44 AM1/20/17
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, mint...@googlegroups.com
அன்பிற்குரிய இளங்குமரன்,
 
ஓங்கில் என்ற பெயரை நானுங் கேள்விப்பட்டிருக்கிறேன். அது dolphin ஐக் குறிக்கலாம். (அதன் சொர்பிறப்பிலும் எனக்குக் கேள்விகளுண்டு.)  ஆனால் அது சங்க இலக்கியத்தில் இருக்கிறதென்பதெல்லாம் வெறுங்கதை. திரு.நா.கணேசன் சொன்னாலே, ஒருமுறைக்கு இருமுறை மூலத்திற்குப்போய்ப் பார்க்க வேண்டும். பலமுறை இப்படியான பட்டறிவு அவர்மூலம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ”யாரும் மூலத்தைப் பார்க்கமாட்டார்” என்றெண்ணிக்கொண்டு போகிறபோக்கில் அவர் அடித்துவிடுவார். நானறிந்தவரை அப்படியொரு சொல் சங்க இலக்கியத்திற் கிடையாது. யாரேனும் ஒருவேளை கண்டிருந்தாற் நூல், வரிகளோடு சொல்லுங்கள், தெரிந்துகொள்கிறேன்.
 
ஆவுளி என்ற சொல்லையும் நான் விக்கிப்பீடியா தவிர வேறெங்கணும் பார்க்கவில்லை. ஒருவேளை மீனவரிடையே இது வழக்கில் இருக்கலாம். மீனவரோடு பழக்கம் வைத்திருக்கும் நண்பர் ஒரிசா பாலு போன்றோர் சொன்னால் நாம் நம்பலாம். அவரைக் கேட்டுப்பார்ப்போம்.
 
அன்புடன்,
இராம.கி.   
 
Sent: Friday, January 20, 2017 11:17 AM
Subject: Re: [தமிழ் உலகம்] ஆவுளி dugong
 
இனம்: ஆண். 26 / NA. புதிய/பைழய வீட்டு எண்: கணவர் பெயர்: ஆவுளி. வாக்காளர் பெயர்: பெரியம்மாள். 286. TN/22/150/0234632. வயது: 65. இனம்: பெண்.
 
இணையத்தில் தேடியபோது கிடைத்தது. ஒருவரின் பெயர் ஆவுளி என்று உள்ளது.
 
(ஏதேனும் பயன்படலாம் என்று பதிவு செய்கின்றேன்)
----------------------
https://groups.google.com/forum/#!msg/tamilmanram/S09_mmJkyYA/6IJBFEEXPcMJ இந்த இணைப்பில் சில செய்திகள் உள்ளன.
   
 

 
On Friday, 20 January 2017 11:09 AM, iraamaki <iraa...@bsnl.in> wrote:

Dugong என்னும் கடற்பசுவிற்கு ஆவுளி என்ற ஒரு பெயரை தமிழ் விக்கிப்பீடியாவிற் பார்த்தேன். ஆனால் தமிழ் அகரமுதலிகளில் அதைக் காணவில்லை. இந்த ஆவுளி தமிழகக் கடற்கரையோரங்களில் இருக்கும் கடற்பாசி, கடற்திணைகளைச் சாப்பிட்டு உயிர்வாழும் பாலூட்டி. எத்தனையோ மீன்களை அறிந்த தமிழன் இதையும் பழங்காலத்தில் உணவாகக்கொண்டிருக்க வாய்ப்புண்டு. எனவே இதற்கான பழையபெயர் வேறேதேனுமுண்டா?  சங்க இலக்கியங்களில், பற்றி (பக்தி) இலக்கியத்தில், கம்பராமாயணத்தில் இதைக் குறித்துக் குறிப்புகளுண்டா? ஆவுளி என்றபெயர் எப்படிவந்தது? அதன் சொற்பிறப்பு என்ன? ஆ, பசு போன்றவை பெண்ணுயிரையைக் குறிக்குஞ் சொற்கள். ஒரு விலங்கின் பொதுப்பெயராகக் கடற்பசு என்பது சரியாகுமா? நீர்வீழ்ச்சி போல “கடற்பசு” என்பது பின்னால்வந்த பெயராய்த் தோன்றுகிறது.
 
விவரம் தெரிந்தவர்கள் சொன்னால் நன்றியுடையேன்.
 
அன்புடன்,
இராம.கி.

N. Ganesan

unread,
Jan 20, 2017, 9:16:40 AM1/20/17
to மின்தமிழ், tamil...@googlegroups.com, ssda...@yahoo.com


On Friday, January 20, 2017 at 1:53:44 AM UTC-8, இராம.கி wrote:
அன்பிற்குரிய இளங்குமரன்,
 
ஓங்கில் என்ற பெயரை நானுங் கேள்விப்பட்டிருக்கிறேன். அது dolphin ஐக் குறிக்கலாம். (அதன் சொர்பிறப்பிலும் எனக்குக் கேள்விகளுண்டு.)  ஆனால் அது சங்க இலக்கியத்தில் இருக்கிறதென்பதெல்லாம் வெறுங்கதை. திரு.நா.கணேசன் சொன்னாலே, ஒருமுறைக்கு இருமுறை மூலத்திற்குப்போய்ப் பார்க்க வேண்டும். பலமுறை இப்படியான பட்டறிவு அவர்மூலம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ”யாரும் மூலத்தைப் பார்க்கமாட்டார்” என்றெண்ணிக்கொண்டு போகிறபோக்கில் அவர் அடித்துவிடுவார். நானறிந்தவரை அப்படியொரு சொல் சங்க இலக்கியத்திற் கிடையாது. யாரேனும் ஒருவேளை கண்டிருந்தாற் நூல், வரிகளோடு சொல்லுங்கள், தெரிந்துகொள்கிறேன்.
 

அன்பின் சகாயராஜ்,

நலமா?  பழைய பேப்பர்களில் வந்த செய்தியை அப்போது அளித்திருந்தேன். தியடோர் பாஸ்கரன் ஓங்கில் பற்றி எழுதிய செய்தி. திரு. இராமகி மடலைப் படித்தாரா? நானறிந்தவரை அப்படியொரு சொல் சங்க இலக்கியத்திற் கிடையாது.

 ஓங்கில் என்ற பெயரைப் பல மீனவர்கள் எழுதியுள்ளனர். திரு. இராமகிக்கு “அதன் சொர்பிறப்பிலும் எனக்குக் கேள்விகளுண்டு’ என்கிறார்.. இராமகி எழுதும் பல சொர்பிறப்பு போன்றவற்றில் பலருக்கும் ஐயமுண்டு, எனக்கும் அவரது பழைய மடல்களில் படித்த பட்டறிவு உண்டு. கண்னியில் தமிழ், சிலம்பின் காலம், ...  ”யாரும் மூலத்தைப் பார்க்கமாட்டார்” என்றெண்ணிக்கொண்டு போகிறபோக்கில் அவர் அடித்துவிடுவார். 

ஓங்கில் பற்றிய பழைய செய்திமடலைக் கண்டுபிடித்துக் கொடுத்தமைக்கு நன்றி. தியடோர் பாஸ்கரன் ஓங்கில் என்ற மீனவர் சொல்லை டால்பினுக்கு இளந்தமிழர்களிடையே அறிமுகப்படுத்திவருகிறார்.
2010-ல் மீனவர்களின் ஆவுள் என்ற சொல் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். 

டால்பினுக்கு மரியாதை -தேசிய நீர் விலங்குஅக்டோபர் 24,2009,17:10   IST

பார்த்தவுடன் கட்டிப்பிடித்து "உம்மா' கொடுக்கத் தோன்றுகிற நீர்வாழ்
உயிரினம் டால்பின்தான். இனி பாசத்தோடு பாதுகாப்பும் டால்பினுக்குக்
கிடைக்கிற விதத்தில், அதை தேசிய நீர்நிலை மிருகமாக இந்தியஅரசு
அறிவித்திருக்கிறது. இதோ, சுற்றுச்சுழல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன்
சொல்லும் டால்பின் புராணம்.

""ஓங்கில். இதுதான் சங்க இலக்கியங்களில் டால்பினுக்குச் சொல்லப்படுகிற
பேர். நம்மூர் கடற்கரைகள்ல வாழ்ற மக்கள் கூட "ஓங்கில்'ன்னுதான்
டால்பினைச் சொல்வாங்க. டால்பின் மீன் இனத்தைச் சேர்ந்ததுன்னு பலர் தவறா
நினைச்சிட்டிருக்காங்க. டால்பின் குட்டி போட்டு பால் கொடுக்குற பாலூட்டி
இனம். நீர்மட்டத்துக்கு மேலே வந்துதான் டால்பினால் சுவாசிக்க முடியும்.
டால்பின் கூட்டம் கூட்டமா வாழ்ற விலங்கு. விஞ்ஞானிகளையே வியக்க வைக்கிற
அறிவுக்கூர்மை தான் டால்பினின் ஸ்பெஷாலிட்டி. மனுஷங்களோட ரொம்ப நட்பா
பழகும். ஒருமுறை நான் கொச்சியிலிருந்து லட்சத் தீவுக்கு கப்பலில்
போனபோது, முப்பத்துக்கும் மேற்பட்ட டால்பின்கள் எங்க கப்பலைக் கொஞ்சநேரம்
பின் தொடர்ந்து வந்தது மறக்கமுடியாத அனுபவம். வலையில் சிக்கிக்கிட்ட ஒரு
டால்பினை மற்ற டால்பின்கள் சேர்ந்து காப்பாற்றியதற்கும், கடலில் முழ்கிய
மனுஷங்களை டால்பின் பாதுகாப்பா கரை சேர்த்ததுக்கும் நிரூபிக்கப்பட்ட
ஆதாரங்கள் இருக்கு. ஒரு யானை இறந்துட்டா, அதைச் சுற்றி மற்ற யானைகள்
துக்கத்துல கூடி நிற்கிற பழக்கம் டால்பின்கள்ட்டயும் உண்டு. டால்பினின்
இன்னொரு விநோதமான பழக்கம். அது ஒரு கண்ணைத் திறந்து வச்சுகிட்டே தான்
தூங்கும்.
டால்பின் எப்பவும் விளையாடிட்டே இருக்குற விலங்கு நம்மளோட கை அசைவுகளை
புரிஞ்சுக்கிற அபாரமான அறிவும் டால்பினுக்கு உண்டு. எண்ணெய்
தயாரிக்குறதுக்காகவும் வெளிநாடுகளில் டால்பின் சரமாரியா
வேட்டையாடப்படுது. இந்தியாவில் வாழ்ற டால்பின்களுக்கு வேறுவிதமான ஆபத்து.
நம்மூரில் பிரமாண்டமான வலைகளை வீசி, மீன்களை மொத்தமா அள்ளுற "ட்ராலர்
ஷிப்பிங்' முறை டால்பினுக்கு மிகப்பெரிய பிரச்னை. மீன்களைக் குறிவைக்குற
அந்த வலையில் டால்பின்களும் சிக்கி உயிரிழக்குற சம்பவங்கள் ஒவ்வொரு
வருடமும் அதிகம். பெரிய கப்பல்களின் புரொபலர்களில் டால்பின்கள்,
வெட்டுப்பட்டு சாகுறதும் அடிக்கடி நடக்குது. கடல்நீரின் வெப்பநிலை கொஞ்ம்
மாறுபட்டால்கூட டால்பினுக்கு ஒத்துக்காது. இந்தியக் காடுகளில் வேட்டையால்
அதிரடியா காணாமல் போயிட்டிருந்த புலிகள் தேசிய விலங்கா
அறிவிக்கப்பட்டதால்தான் ஓரளாவது மிஞ்சியிருக்குது. டால்பின்களை தேசிய
நீர்நிலை விலங்காக அறிவிச்சிருக்குறது வரவேற்க வேண்டிய நடவடிக்கை'' என
நம்பிக்கையுடன் சொல்கிறார் தியடோர் பாஸ்கரன்.

(a) OGkil (ஓங்கில்) is the Tamil name
for dolphins. They are not "kaDalpanRi",
and so a correction to this effect can
be done in Tamil Wiki entry:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

A Tamil proverb: "aazam aRiyum OGkil, mELam aRiyum aravam"
(Is mELam here refers to makuTi of snake charmers?)
Given the fact that fisherfolks employ the word, OGkil
for dolphins, see the naturalist Theodore Baskaran's
statement:
http://groups.google.com/group/tamilmanram/msg/16de0c0591782130

Another word application is for a kind of leaping tuna fish called
OGkiR-cuRaa/cuuRai.

(b) Some more thoughts on "sea cows" names.
http://www.biosearch.in/publicOrganismPage.php?id=5044
Tamil names like Avilliah or Avolia seem to be
from ancient ஆவுள்/ஆவுளி (aavuL(i)) where "aa" denotes cow,
(Cf. cevuL "upper part of ear (cevi)  & so on).

aa "cattle" form part of the name of gaurs also.
aamaa - kaaTTu maaTu, Indian gaur bison.

N. Ganesan

Reply all
Reply to author
Forward
0 new messages