எழுத ஆசை எழுதுகிறேன்

408 views
Skip to first unread message

selva kumaran

unread,
Mar 4, 2011, 2:56:43 PM3/4/11
to mint...@googlegroups.com
விமரிசனம் இழையை பார்த்தவுடன்  முதலில் நினைவிற்கு வந்தது, வெங்கடாசலத்தைப் பற்றிதான் (கற்பனை பெயர்).

அப்போதெல்லாம் ராமசாமி சார் வீட்டு மாடியில்தான் கூடுவோம். எங்களுக்கெல்லாம் 'ராமு மாமா'!
ராமு மாமாவின் மனைவி எங்கள் அசட்டுத்தனங்களை, இம்சைகளை கண்டுக் கொள்ள மாட்டார்கள். 
"இந்த காலத்து குழந்தைகள் சினிமா, அது இதுன்னு கெட்டுப் போகும் போது இதுகள் கவிதை, கதை எதையாவது சொல்லிண்டு சமர்த்தா இருக்கே! இதுவே பெரீய விஷயம்!",என்பார் அந்த மாமீ.

மாமி இதை முதல்முறை சொன்னபோது எனக்கு 'பக்'கென்றிருந்தது. அப்போது எங்களோடு இருந்த ராஜூ எழுதிய கதை ஒன்று இப்போதைய பிட்டு படங்களை விட கோரமானது. எங்களுக்கு அம்மா போன்றிருந்த மாமியிடம் இதை சொல்லவும் முடியாது, முழுங்கவும் முடியாது  சிந்து பைரவி ஜனகராஜ் போல திணறியது எனக்குத்தான் தெரியும்.

அட இராமா! மனதில் வந்த விஷயத்தைச் சொல்லப் போக, மனம் போன போக்கிலேயே போய் விட்டேன்.

  எங்களுடைய  கோஷ்டியில் இருந்தவனில் முக்கியமானவன் வெங்கடாசலம். அப்போது பத்திரிகைகளில் அவனது கதை, கவிதை, துணுக்கு என ஏதாவது ஒன்று பிரசுரமாகி விடும். நானும் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் விமரிசனம் என்று எதையாவது சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்வேன்.

எங்களுக்கு அவன்தான் 'ரங்கநாத பெருமாள்' போல.

அவன் கதை, கவிதை என எதையாவது படிக்க ஆரம்பித்தவுடன் எங்கள் கோஷ்டி கலைந்துவிடும். எங்கள் கும்பலின் ' கோஷ்டி கலைப்பான்' அவன்தான்.

அவன் என்னிடம் அன்று வந்து அருகில் அமர்ந்தான். தன் கையில் இருந்த பேப்பரை கொடுத்து படிக்க சொன்னான்.


படித்தேன்.

பேப்பரில் தலைப்பாக,

'கலையா மௌனம் கலைத்து நீ பேச, கலையா மௌனம் என்னுள் குடியேறியதென்ன' என்பது போல்  இரண்டு மூன்று வரிகளில் பெரிதாக ஏதோ இருந்தது.

கீழே கவிதை இருக்க வேண்டிய  இடத்தில்,

'மௌன மூச்சு'  என்று இருந்தது.

என் குழப்பத்தைப் புரிந்துக் கொண்ட வெங்கடாசலம்,

"இல்லே! இதுதான் கவிதை! பெரிசா இருக்கறதுதான் தலைப்பு!", என்றான்.



"என்ன புது ட்ரெண்டா?"

"ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! போன வாட்டி நீதானே சொன்னே! என் கவிதையை விட தலைப்புதான் நல்லா இருக்குன்னு! அதான்!", என்று சொல்லி விட்டு எழுந்து போய்விட்டான்.


பாவி! பழி வாங்கத்தான் பணிவாக பேசியிருக்கிறான் என்பது புரிந்தது.



Geetha Sambasivam

unread,
Mar 4, 2011, 9:02:27 PM3/4/11
to mint...@googlegroups.com
ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! போன வாட்டி நீதானே சொன்னே! என் கவிதையை விட தலைப்புதான் நல்லா இருக்குன்னு! அதான்!", என்று சொல்லி விட்டு எழுந்து போய்விட்டான்//

நல்லாச் சிரிச்சேன்.  நன்றி.

2011/3/5 selva kumaran <selvakumaran.ma@gmail.com>
விமரிசனம் இழையை பார்த்தவுடன்  முதலில் நினைவிற்கு வந்தது, வெங்கடாசலத்தைப் பற்றிதான் (கற்பனை பெயர்).


"ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! போன வாட்டி நீதானே சொன்னே! என் கவிதையை விட தலைப்புதான் நல்லா இருக்குன்னு! அதான்!", என்று சொல்லி விட்டு எழுந்து போய்விட்டான்.


பாவி! பழி வாங்கத்தான் பணிவாக பேசியிருக்கிறான் என்பது புரிந்தது.



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

360.gif

Tthamizth Tthenee

unread,
Mar 4, 2011, 11:31:56 PM3/4/11
to mint...@googlegroups.com
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஅ

பழி வாங்கிட்டாரு வெங்கடாசலம் 

அது சரி நீங்கள் பீடிகை போடுவதைப் பார்த்தால் ஏதோ பெரிய செய்தி பின்னால் வரப் போகிறது
என்று தோன்றுகிறது தொடருங்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/3/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

karuannam annam

unread,
Mar 5, 2011, 12:15:43 AM3/5/11
to mint...@googlegroups.com
திரு செல்வகுமரன் பதிவு சிறப்பாக உள்ளது.

2011/3/5 selva kumaran <selvakumaran.ma@gmail.com>


மாமி இதை முதல்முறை சொன்னபோது எனக்கு 'பக்'கென்றிருந்தது. அப்போது எங்களோடு இருந்த ராஜூ எழுதிய கதை ஒன்று இப்போதைய பிட்டு படங்களை விட கோரமானது. எங்களுக்கு அம்மா போன்றிருந்த மாமியிடம் இதை சொல்லவும் முடியாது, முழுங்கவும் முடியாது  சிந்து பைரவி ஜனகராஜ் போல திணறியது எனக்குத்தான் தெரியும்.
இரசித்தேன். 



'கலையா மௌனம் கலைத்து நீ பேச, கலையா மௌனம் என்னுள் குடியேறியதென்ன' என்பது போல் 
நண்பர்கள் எழுதியது பெரிதாகத்தெரியாதே!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான். 

selva kumaran

unread,
Mar 5, 2011, 2:46:04 AM3/5/11
to mint...@googlegroups.com
பெரிய செய்தி ஏதுமில்லை தேனீயாரே!

அவ்வப்போது மன குட்டையில் தானாக துள்ளி எழுந்து வெளியே வந்து நீந்தும்  எண்ண ங்களின் பதிப்பே இந்த இழை.

எல்லோரும் படிக்கக் கூடிய என் பர்ஸனல் டைரியின் பக்கங்கள் எனலாம்.

எனக்கும் எழுதுவதற்கு ஆசை.   படிக்க ஒன்றிரண்டு பேர் மாட்டினால் போதாதா?  :)))

2011/3/5 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
360.gif

N. Kannan

unread,
Mar 5, 2011, 3:05:03 AM3/5/11
to mint...@googlegroups.com
நன்றாக உள்ளது!

ஸ்ரீரங்கத்து பரிபாஷை ஊடாட சுகமாக உள்ளது!

நான் கவி வடிவம் குறித்து முன்பொரு கவிதை செய்தேன்!


வடிவம்

புள்ளையார் பிடிப்பது சுலபம். பிள்ளையார் பிடிப்பது
போல. முருக்கு பிழியும் போது முன்னால் விழும்
துண்டு பிள்ளையார். பெண்கள் கூடும் போது
சின்ன மஞ்சள் துண்டு பிள்ளையார்.
சாணி உருண்டை கூட பிள்ளையார்தான்.
அழுக்கைத் திரட்டி பிள்ளையாய் சமர்த்தாய்
இரு என்று குளிக்கப் போனாள்.
உள் கிடக்கை உயிர் பெற்றது. கோயில்
வேண்டாம், கூறை வேண்டாம். இந்தியப்
பிரஜைக்குத் துணையாக
வானம் பார்த்து ஆற்றங்கரையில்...
பேனா எழுதுமா? மை உண்டா? என்றால்
போடு ஒரு புள்ளையார் சுழி. இப்படி புடிக்கப்
புடிக்கப் புள்ளையார். வடிவம் முதன்மை அல்ல.
இக்கவிதை போல.

உள்ளக்கிடக்கை உயிர் பெரும்.

நா.கண்ணன்


2011/3/5 selva kumaran <selvaku...@gmail.com>


>
> பெரிய செய்தி ஏதுமில்லை தேனீயாரே!
>
> அவ்வப்போது மன குட்டையில் தானாக துள்ளி எழுந்து வெளியே வந்து நீந்தும்  எண்ண ங்களின் பதிப்பே இந்த இழை.
>
> எல்லோரும் படிக்கக் கூடிய என் பர்ஸனல் டைரியின் பக்கங்கள் எனலாம்.
>
> எனக்கும் எழுதுவதற்கு ஆசை.   படிக்க ஒன்றிரண்டு பேர் மாட்டினால் போதாதா?  :)))
>
> 2011/3/5 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
>>
>> ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஅ
>> பழி வாங்கிட்டாரு வெங்கடாசலம்

>> அது சரி நீங்கள் பீடிகை போடுவதைப் பார்த்தால் ஏதோ பெரிய செய்தி பின்னால் வரப் போகிறது
>> என்று தோன்றுகிறது தொடருங்கள்
>> அன்புடன்
>> தமிழ்த்தேனீ
>>
>> 2011/3/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>
>>>
>>> ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! போன வாட்டி நீதானே சொன்னே! என் கவிதையை விட தலைப்புதான் நல்லா இருக்குன்னு! அதான்!", என்று சொல்லி விட்டு எழுந்து போய்விட்டான்//
>>>
>>> நல்லாச் சிரிச்சேன்.  நன்றி.
>>>

>>> 2011/3/5 selva kumaran <selvaku...@gmail.com>


>>>>
>>>> விமரிசனம் இழையை பார்த்தவுடன்  முதலில் நினைவிற்கு வந்தது, வெங்கடாசலத்தைப் பற்றிதான் (கற்பனை பெயர்).
>>>>
>>>>
>>>> "ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! போன வாட்டி நீதானே சொன்னே! என் கவிதையை விட தலைப்புதான் நல்லா இருக்குன்னு! அதான்!", என்று சொல்லி விட்டு எழுந்து போய்விட்டான்.
>>>>
>>>>
>>>> பாவி! பழி வாங்கத்தான் பணிவாக பேசியிருக்கிறான் என்பது புரிந்தது.
>>>>
>>>>
>>>>
>>>> --
>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Message has been deleted

selva kumaran

unread,
Mar 5, 2011, 4:02:37 AM3/5/11
to mint...@googlegroups.com
முன்னால் அனுப்பிய மடலில் சில வரிகள் அழிந்திருக்கின்றன. ஏற்கனவே கூகுளுக்கு என் எழுத்தைப் பற்றி தீர்மானம் வந்துவிட்டிருக்கலாம்.

மீண்டும் விட்ட வரிகளைச் சேர்த்து அனுப்பி இருக்கிறேன்.


2.  Etymology

சொல்லாய்வு என்றால் சரியாக இருக்குமா? சொற்மூல ஆய்வு? சரி! எப்படியும் இதை எப்படி சொல்ல வேண்டும் என்று  புழுதிப்  பறக்க அடித்து விவாதிக்க ஜாம்பவான்கள் இருக்கும்போது, நான் கொஞ்சம் அடக்கி வாசிப்பதுதான் சரியாக இருக்கும். நான் Etymology என்றே எழுதுகிறேன்.


மின்தமிழில் இரண்டு அல்லது மூன்று இழைகளில் சொல் மூலத்தை பற்றிப் பேச்சு  போய்க்கொண்டிருப்பதைப் படித்ததும் சாரங்கபாணியை நினைத்துக் கொண்டேன்.

இப்போதும் அவன் இதை கணினியில் படித்துக் கொண்டிருக்கலாம். அவன் என்னை விட ஒரு வயது பெரியவன். உலகத்தின் எந்த மூலையில் இருக்கிறானோ?! எங்கு இருந்தாலும் அவன் அடிப்படைக் குணத்தில் ஒன்றும் மாறுதல் வந்திருக்காது.

அவனது தமிழாசிரியரால் அவனுக்கு அபார தமிழ்ப் பற்று ஏற்பட்டது. காய்ந்த கிளையில் விழும்  தீப்பொறி தீயாக மாறுவதைப் போல அது தமிழ் வெறியாக நாளடைவில் மாறிவிட்டது. அதைப் போன்ற வெறியை இது வரை நேரில் நான் கண்டதில்லை.

கலைச்செல்வன் என்ற நண்பர் எங்கள் கூட்டத்திற்கு வருவதுண்டு. அவர் ஒரு உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர். அது  S.S.L.C.  பதினோராம் வகுப்பாய் இருந்த நேரம். எனவே மேல்நிலைப் பள்ளி என்ற பெயர் வரவில்லை.

இலக்கியக் கும்பல்; இலக்கிய வட்டம் என்பதற்கு அடிப்படை தகுதியாக இருக்க வேண்டியவைகள் எல்லாம் எங்கள் இடத்திலும் இருந்தன. பேச ஆரம்பித்து ஐந்து நிமிடத்திற்கெல்லாம் அடித்துக் கொள்ளாத  குறையாக பேச்சு தடித்து விடும். ஆனால் அதை சூடான கருத்துப் பரிமாற்றம் எனச் சொல்லிக் கொள்வோம். பத்தாவது நிமிடம் ஒருவர் வெளிநடப்பு செய்வார். சில சமயம் கிட்டத்தட்ட எல்லோருமே வெளி நடப்பு செய்து விடுவார்கள்.


கலைச்செல்வன் அன்று வந்திருந்தார். அன்று கவிதைப் பற்றிய பேச்சு திசை திரும்பி  ஏதோ ஒரு சொல்லைப் பற்றிக் கொண்டு நின்றது. அடுத்து என்ன நிகழ்ந்திருக்கும் என்பதில் யூகம் வேறு வேண்டுமா? Etymologyதான்.

கந்தகக் கிடங்கினுள் தீவட்டியைப் போட்டாற் போல ஆகி விட்டது.

அந்த கந்தகக் கிடங்கினுள்தான்  சாரங்கபாணி என்னும் டி.என்.டியும் இருந்தது.

சாரங்கபாணி பேயாட்டம் ஆடி விட்டான்.  அதில்  சிறிது Ego  பாதிக்கப்பட்ட கலைச்செல்வன்,
"சாரங்கபாணி என்ற பெயரே வட மொழியாயிருக்க, அப்புறம் என்ன பெரிய தமிழ்ப்பற்று வேண்டியிருக்கிறது?", என்று வார்த்தையை விட்டு விட்டார்.

ஐயையோ, ஏற்கனவே கள்ளுண்ட கவியாய் (கவிக்கு இன்னொரு பொருள் தெரியுமில்லையா?)  வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் சாரங்கபாணியின் கையில் சூட்டுக் கோலையும் தந்து விட்டானே என்று மிரண்டு விட்டோம்.

அதற்குப் பிறகு அங்கே நடந்த உரையாடலின் சாராம்சத்தை முடிந்த வரை தவறின்றி தருகிறேன்.

"சாரங்கபாணி வடமொழிப் பெயரா? யார் சொன்னது?", இது சாரங்கபாணி.

"ஊரே சொல்லும்!", இது கலைச்செல்வன்.

"சாரங்கபாணி என்றால் என்ன பொருள் என்றாவது தெரியுமா? தெரிந்து விட்டு பேசுங்கள்!"

"விஷ்ணுவின் கையிலுள்ள வில்லின் பெயர் சாரங்கம்! கலைமானின் கொம்பினால் ஆன வில் என்பதால் அந்த பெயர்!"

"ஹே ஹே ஹே! தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லுங்கள்!"

"அப்படியா? நீங்களே சொல்லுங்களேன்! சாரங்கம் என்றால் என்ன? சாரங்கபாணிக்கு என்ன பொருள்?"

"சார் அங்கம் பாணி! சார்'னா சார்தல்; அங்கம்னா அங்கேனு தமிழில் பொருள்; பாணினா அழகு, அன்புனு அர்த்தம்! அன்பால் அங்கே சார்ந்து இருப்பவன் என்று பொருள்!"

"என்ன உளறல்? அப்போது திருமாலுக்கு அந்த பெயர் எப்படி பொருந்தும்?"

"திருமாலுக்கு வைத்திருப்பது வடமொழி பெயர்; என்னுடையது வடமொழிப் பெயரல்ல"

கலைச்செல்வன் வெளிநடப்பு செய்துவிட்டார்.

நான் காபி குடித்து விட்டு அதன் பிறகு வெளி நடப்பு செய்யலாம் என்பதால் அங்கேயே இருந்தேன். அங்கே இருந்த சிலருக்கும் அதே நினைப்புதான் இருந்திருக்கும்.

சாரங்கபாணி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.


2011/3/5 selva kumaran <selvakumaran.ma@gmail.com>
2.  Etymology

சொல்லாய்வு என்றால் சரியாக இருக்குமா? சொற்மூல ஆய்வு? சரி! எப்படியும் இதை எப்படி சொல்ல வேண்டும் என்று  புழுதிப்  பறக்க அடித்து விவாதிக்க ஜாம்பவான்கள் இருக்கும்போது, நான் கொஞ்சம் அடக்கி வாசிப்பதுதான் சரியாக இருக்கும். நான் Etymology


மின்தமிழில் இரண்டு அல்லது மூன்று இழைகளில் சொல் மூலத்தை பற்றிப் பேச்சு  போய்க்கொண்டிருப்பதைப் படித்ததும் சாரங்கபாணியை நினைத்துக் கொண்டேன்.

இப்போதும் அவன் இதை கணினியில் படித்துக் கொண்டிருக்கலாம். அவன் என்னை விட ஒரு வயது பெரியவன். உலகத்தின் எந்த மூலையில் இருக்கிறானோ?! எங்கு இருந்தாலும் அவன் அடிப்படைக் குணத்தில் ஒன்று

அவனது தமிழாசிரியரால் அவனுக்கு அபார தமிழ்ப் பற்று ஏற்பட்டது. காய்ந்த கிளையில் விழும்  தீப்பொறி தீயாக மாறுவதைப் போல அது தமிழ் வெறியாக நாளடைவில் மாறிவிட்டது. அதைப் போன்ற வெறியை இது வரை நேரில் நான் கண்டதில்லை.

கலைச்செல்வன் என்ற நண்பர் எங்கள் கூட்டத்திற்கு வருவதுண்டு. அவர் ஒரு உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர். அது  S.S.L.C.  பதினோராம் வகுப்பாய் இருந்த நேரம். எனவே மேல்நிலைப் பள்ளி என்ற பெயர் வரவில்லை.

இலக்கியக் கும்பல்; இலக்கிய வட்டம் என்பதற்கு அடிப்படை தகுதியாக இருக்க வேண்டியவைகள் எல்லாம் எங்கள் இடத்திலும் இருந்தன. பேச ஆரம்பித்து ஐந்து நிமிடத்திற்கெல்லாம் அடித்துக் கொள்ளாத  குறையாக பேச்சு தடித்து விடும். ஆனால் அதை சூடான கருத்துப் பரிமாற்றம் எனச் சொல்லிக் கொள்வோம். பத்தாவது நிமிடம் ஒருவர் வெளிநடப்பு செய்வார். சில சமயம் கிட்டத்தட்ட எல்லோருமே வெளி நடப்பு செய்து விடுவார்கள்.


கலைச்செல்வன் அன்று வந்திருந்தார். அன்று கவிதைப் பற்றிய பேச்சு திசை திரும்பி  ஏதோ ஒரு சொல்லைப் பற்றிக் கொண்டு நின்றது. அடுத்து என்ன நிகழ்ந்திருக்கும் என்பதில் யூகம் வேறு வேண்டுமா? Etymologyதான்.

கந்தகக் கிடங்கினுள் தீவட்டியைப் போட்டாற் போல ஆகி விட்டது.

அந்த கந்தகக் கிடங்கினுள்தான்  சாரங்கபாணி என்னும் டி.என்.டியும் இருந்தது.

சாரங்கபாணி பேயாட்டம் ஆடி விட்டான்.  அதில்  சிறிது Ego  பாதிக்கப்பட்ட கலைச்செல்வன்,
"சாரங்கபாணி என்ற பெயரே வட மொழியாயிருக்க, அப்புறம் என்ன பெரிய தமிழ்ப்பற்று வேண்டியிருக்கிறது?", என்று வார்த்தையை விட்டு விட்டார்.

ஐயையோ, ஏற்கனவே கள்ளுண்ட கவியாய் (கவிக்கு இன்னொரு பொருள் தெரியுமில்லையா?)  வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் சாரங்கபாணியின் கையில் சூட்டுக் கோலையும் தந்து விட்டானே என்று மிரண்டு விட்டோம்.

அதற்குப் பிறகு அங்கே நடந்த உரையாடலின் சாராம்சத்தை முடிந்த வரை தவறின்றி தருகிறேன்.

"சாரங்கபாணி வடமொழிப் பெயரா? யார் சொன்னது?", இது சாரங்கபாணி.

"ஊரே சொல்லும்!", இது கலைச்செல்வன்.

"சாரங்கபாணி என்றால் என்ன பொருள் என்றாவது தெரியுமா? தெரிந்து விட்டு பேசுங்கள்!"

"விஷ்ணுவின் கையிலுள்ள வில்லின் பெயர் சாரங்கம்! கலைமானின் கொம்பினால் ஆன வில் என்பதால் அந்த பெயர்!"

"ஹே ஹே ஹே! தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லுங்கள்!"

"அப்படியா? நீங்களே சொல்லுங்களேன்! சாரங்கம் என்றால் என்ன? சாரங்கபாணிக்கு என்ன பொருள்?"

"சார் அங்கம் பாணி! சார்'னா சார்தல்; அங்கம்னா அங்கேனு தமிழில் பொருள்; பாணினா அழகு, அன்புனு அர்த்தம்! அன்பால் அங்கே சார்ந்து இருப்பவன் என்று பொருள்!"

"என்ன உளறல்? அப்போது திருமாலுக்கு அந்த பெயர் எப்படி பொருந்தும்?"

"திருமாலுக்கு வைத்திருப்பது வடமொழி பெயர்; என்னுடையது வடமொழிப் பெயரல்ல"

கலைச்செல்வன் வெளிநடப்பு செய்துவிட்டார்.

நான் காபி குடித்து விட்டு அதன் பிறகு வெளி நடப்பு செய்யலாம் என்பதால் அங்கேயே இருந்தேன். அங்கே இருந்த சிலருக்கும் அதே நினைப்புதான் இருந்திருக்கும்.

சாரங்கபாணி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.











Geetha Sambasivam

unread,
Mar 5, 2011, 6:55:38 AM3/5/11
to mint...@googlegroups.com
//நான் காபி குடித்து விட்டு அதன் பிறகு வெளி நடப்பு செய்யலாம் என்பதால் அங்கேயே இருந்தேன். அங்கே இருந்த சிலருக்கும் அதே நினைப்புதான் இருந்திருக்கும்.//

கொஞ்சம் சுஜாதா, கொஞ்சம் அசோகமித்திரன் கலந்து செய்த கலவை மாதிரி இருக்கு. படிக்கும்போது அவங்க நினைப்பு வருது!   


2011/3/5 selva kumaran <selvakumaran.ma@gmail.com>
முன்னால் அனுப்பிய மடலில் சில வரிகள் அழிந்திருக்கின்றன. ஏற்கனவே கூகுளுக்கு என் எழுத்தைப் பற்றி தீர்மானம் வந்துவிட்டிருக்கலாம்.

மீண்டும் விட்ட வரிகளைச் சேர்த்து அனுப்பி இருக்கிறேன்.


சாரங்கபாணி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
360.gif

selva kumaran

unread,
Mar 5, 2011, 6:59:31 AM3/5/11
to mint...@googlegroups.com
பெரியவர்கள் என்னை கோபிக்காமல் இருக்கட்டும்.

2011/3/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

LK

unread,
Mar 5, 2011, 7:21:02 AM3/5/11
to mint...@googlegroups.com
//
எழுத்தாளனைவிட உயரத்தில் பறக்க ஒரு வாசகனால் தான் முடியு///

உண்மை 

2011/3/5 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>
சந்தவசந்தத்தில் 'வாருமையா எழுத்தாளரே' என்று தொ மு சி ரகுநாதனின் ஆரம்ப
வரிகளை எடுத்துக் கொண்டு அரங்கனார் எழுதிய கவிதையை இன்றைக்கும் ரசித்து
விமரிசித்துக் கொண்டிருக்கிற செல்வ குமரன் இங்கேயும்!!

எழுத ஆசை! எழுதுகிறேன்! என்ன ஒரு அட்டகாசமான தலைப்பு!

முதல் பகிர்விலேயே


"பேப்பரில் தலைப்பாக,

'கலையா மௌனம் கலைத்து நீ பேச, கலையா மௌனம் என்னுள் குடியேறியதென்ன'
என்பது
போல்  இரண்டு மூன்று வரிகளில் பெரிதாக ஏதோ இருந்தது.


கீழே கவிதை இருக்க வேண்டிய  இடத்தில்,

'மௌன மூச்சு'  என்று இருந்தது.

என் குழப்பத்தைப் புரிந்துக் கொண்ட வெங்கடாசலம்,

"இல்லே! இதுதான் கவிதை! பெரிசா இருக்கறதுதான் தலைப்பு!", என்றான்.

"என்ன புது ட்ரெண்டா?"

"ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! போன வாட்டி நீதானே சொன்னே! என் கவிதையை விட
தலைப்புதான் நல்லா இருக்குன்னு! அதான்!", என்று சொல்லி விட்டு எழுந்து
போய்விட்டான்.

பாவி! பழி வாங்கத்தான் பணிவாக பேசியிருக்கிறான் என்பது புரிந்தது. "


ஒரு ஆளைக் கத்தியால் குத்தித்தான் சாகடிக்க வேண்டுமா என்ன!!

ஆசை தீரும் மட்டும் எழுதுங்கள் ஸ்வாமி! கொஞ்சம் கூர்மையான பகடியோடு
எழுதுபவர்களை வாசித்து நான்தா காலமாயிற்று!

இது என் வரவேற்புக் கட்டியம்!!


-----------------------------

வாசிப்பதில் தான் எனக்குக் கொள்ளை ஆசை!

எழுத்தாளனைவிட உயரத்தில் பறக்க ஒரு வாசகனால் தான் முடியும்!

---கிருஷ்ணமூர்த்தி




On Mar 5, 4:59 pm, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> பெரியவர்கள் என்னை கோபிக்காமல் இருக்கட்டும்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

selva kumaran

unread,
Mar 5, 2011, 7:23:21 AM3/5/11
to mint...@googlegroups.com
அன்பின் கிருஷ்ணமூர்த்தி

உண்மையில் இனி வரப்போகும் விஷயங்களில் எல்லாம்  என்னை எப்படியெல்லாம் இந்த பெரியவர்கள் (உண்மையில் ஜாம்பவான்கள்) கலாய்த்து மண்ணைக் கவ்வ வைத்தார்கள் என்பது வரும்.

இந்த விஷயங்கள் நடந்தக் காலக்கட்டத்தில் எனக்கு கோபம் வந்தது. இப்போது நினைத்துப் பார்த்தால் சுகமாக இருக்கிறது.

2011/3/5 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>
சந்தவசந்தத்தில் 'வாருமையா எழுத்தாளரே' என்று தொ மு சி ரகுநாதனின் ஆரம்ப
வரிகளை எடுத்துக் கொண்டு அரங்கனார் எழுதிய கவிதையை இன்றைக்கும் ரசித்து
விமரிசித்துக் கொண்டிருக்கிற செல்வ குமரன் இங்கேயும்!!

எழுத ஆசை! எழுதுகிறேன்! என்ன ஒரு அட்டகாசமான தலைப்பு!

முதல் பகிர்விலேயே


"பேப்பரில் தலைப்பாக,

'கலையா மௌனம் கலைத்து நீ பேச, கலையா மௌனம் என்னுள் குடியேறியதென்ன'
என்பது
போல்  இரண்டு மூன்று வரிகளில் பெரிதாக ஏதோ இருந்தது.


கீழே கவிதை இருக்க வேண்டிய  இடத்தில்,

'மௌன மூச்சு'  என்று இருந்தது.

என் குழப்பத்தைப் புரிந்துக் கொண்ட வெங்கடாசலம்,

"இல்லே! இதுதான் கவிதை! பெரிசா இருக்கறதுதான் தலைப்பு!", என்றான்.

"என்ன புது ட்ரெண்டா?"

"ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! போன வாட்டி நீதானே சொன்னே! என் கவிதையை விட
தலைப்புதான் நல்லா இருக்குன்னு! அதான்!", என்று சொல்லி விட்டு எழுந்து
போய்விட்டான்.

பாவி! பழி வாங்கத்தான் பணிவாக பேசியிருக்கிறான் என்பது புரிந்தது. "


ஒரு ஆளைக் கத்தியால் குத்தித்தான் சாகடிக்க வேண்டுமா என்ன!!

ஆசை தீரும் மட்டும் எழுதுங்கள் ஸ்வாமி! கொஞ்சம் கூர்மையான பகடியோடு
எழுதுபவர்களை வாசித்து நான்தா காலமாயிற்று!

இது என் வரவேற்புக் கட்டியம்!!


-----------------------------

வாசிப்பதில் தான் எனக்குக் கொள்ளை ஆசை!

எழுத்தாளனைவிட உயரத்தில் பறக்க ஒரு வாசகனால் தான் முடியும்!

---கிருஷ்ணமூர்த்தி




On Mar 5, 4:59 pm, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> பெரியவர்கள் என்னை கோபிக்காமல் இருக்கட்டும்.

selva kumaran

unread,
Mar 5, 2011, 7:28:34 AM3/5/11
to mint...@googlegroups.com
"நண்பர்கள் எழுதியது பெரிதாகத்தெரியாதே!"-சொ.வினைதீர்த்தான்.

உண்மைதான்!

காசியில் குடியிருப்பவர்கள் இராமேஸ்வரம் தேடி போவார்களாம். நானும் அதற்கு விதிவிலக்காய் இருக்கவில்லை.

2011/3/5 karuannam annam <karu...@gmail.com>

--

கிருஷ்ணமூர்த்தி

unread,
Mar 5, 2011, 7:32:20 AM3/5/11
to மின்தமிழ்
சுகமான நினைவுகளை எழுதுங்கள்! ஆனால், நான் எழுதிய கட்டியத்தைக் காணோமே!
என்னையும் ஃ பில்டரில் வடிகட்ட ஆரம்பித்துவிட்டார்களா என்ன!

:-))))
-------------------------
எனக்கு ஃ பில்டர் காப்பி மட்டும் தான் பிடிக்கும்!
ஃ பில்டர்களை அல்ல!

கிருஷ்ணமூர்த்தி

கிருஷ்ணமூர்த்தி

unread,
Mar 5, 2011, 7:18:18 AM3/5/11
to மின்தமிழ்
சந்தவசந்தத்தில் 'வாருமையா எழுத்தாளரே' என்று தொ மு சி ரகுநாதனின் ஆரம்ப
வரிகளை எடுத்துக் கொண்டு அரங்கனார் எழுதிய கவிதையை இன்றைக்கும் ரசித்து
விமரிசித்துக் கொண்டிருக்கிற செல்வ குமரன் இங்கேயும்!!

எழுத ஆசை! எழுதுகிறேன்! என்ன ஒரு அட்டகாசமான தலைப்பு!

முதல் பகிர்விலேயே

"பேப்பரில் தலைப்பாக,

'கலையா மௌனம் கலைத்து நீ பேச, கலையா மௌனம் என்னுள் குடியேறியதென்ன'
என்பது

போல் இரண்டு மூன்று வரிகளில் பெரிதாக ஏதோ இருந்தது.

கீழே கவிதை இருக்க வேண்டிய இடத்தில்,

'மௌன மூச்சு' என்று இருந்தது.

என் குழப்பத்தைப் புரிந்துக் கொண்ட வெங்கடாசலம்,

"இல்லே! இதுதான் கவிதை! பெரிசா இருக்கறதுதான் தலைப்பு!", என்றான்.

"என்ன புது ட்ரெண்டா?"

"ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! போன வாட்டி நீதானே சொன்னே! என் கவிதையை விட
தலைப்புதான் நல்லா இருக்குன்னு! அதான்!", என்று சொல்லி விட்டு எழுந்து
போய்விட்டான்.

பாவி! பழி வாங்கத்தான் பணிவாக பேசியிருக்கிறான் என்பது புரிந்தது. "

ஒரு ஆளைக் கத்தியால் குத்தித்தான் சாகடிக்க வேண்டுமா என்ன!!

ஆசை தீரும் மட்டும் எழுதுங்கள் ஸ்வாமி! கொஞ்சம் கூர்மையான பகடியோடு
எழுதுபவர்களை வாசித்து நான்தா காலமாயிற்று!

இது என் வரவேற்புக் கட்டியம்!!


-----------------------------

வாசிப்பதில் தான் எனக்குக் கொள்ளை ஆசை!

எழுத்தாளனைவிட உயரத்தில் பறக்க ஒரு வாசகனால் தான் முடியும்!

---கிருஷ்ணமூர்த்தி

வேந்தன் அரசு

unread,
Mar 5, 2011, 11:25:45 AM3/5/11
to mint...@googlegroups.com


5 மார்ச், 2011 3:59 am அன்று, selva kumaran <selvakumaran.ma@gmail.com> எழுதியது:
2.  Etymology

ஐயையோ, ஏற்கனவே கள்ளுண்ட கவியாய் (கவிக்கு இன்னொரு பொருள் தெரியுமில்லையா?) 

ஓ கள்ளடிச்சுட்டு கவுந்துட்டாரா?
ஆனால் அப்படி கதை போகலையே
 
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?


--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

selva kumaran

unread,
Mar 5, 2011, 3:19:40 PM3/5/11
to mint...@googlegroups.com
"ஓ கள்ளடிச்சுட்டு கவுந்துட்டாரா?"

அதென்ன கள்ளில் ஓ கள்ளு? இனிஷியலா?



"ஆனால் அப்படி கதை போகலையே"

அட...அந்த கழுதை போகாட்டி போகுது. விட்டுத் தொலைங்க.


"கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்? "

நீங்கதான் :)

2011/3/5 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

N. Ganesan

unread,
Mar 5, 2011, 3:23:46 PM3/5/11
to மின்தமிழ்

On Mar 5, 6:23 am, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:
> அன்பின் கிருஷ்ணமூர்த்தி
>
> உண்மையில் இனி வரப்போகும் விஷயங்களில் எல்லாம்  என்னை எப்படியெல்லாம் இந்த
> பெரியவர்கள் (உண்மையில் ஜாம்பவான்கள்) கலாய்த்து மண்ணைக் கவ்வ வைத்தார்கள்
> என்பது வரும்.
>
> இந்த விஷயங்கள் நடந்தக் காலக்கட்டத்தில் எனக்கு கோபம் வந்தது.

”நடந்த காலக்கட்டத்தில் எனக்குக் கோபம் வந்தது”

புதிய பார்வை. “புதியப் பார்வை” என ஒற்று மிகத் தேவையில்லை.


இப்போது
> நினைத்துப் பார்த்தால் சுகமாக இருக்கிறது.
>

> 2011/3/5 கிருஷ்ணமூர்த்தி <krishn...@gmail.com>

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -

selva kumaran

unread,
Mar 5, 2011, 3:29:08 PM3/5/11
to mint...@googlegroups.com
திருத்தியமைக்கு மிகவும் நன்றி. திருத்திக் கொள்கிறேன்.

2011/3/6 N. Ganesan <naa.g...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

selva kumaran

unread,
Mar 7, 2011, 2:41:08 PM3/7/11
to mint...@googlegroups.com
3.எல்லை


எனக்கு இன்று வரை சரியாகப் புரியாத சில விஷயங்கள் உண்டு.  பாக்கி இருக்கும் பல விஷயங்கள் அடியோடு புரியாது.


ஒருவரின் சுதந்திர எல்லை எது? தனி மனித சுதந்திரத்தின் எல்லை எது? எவ்வளவு தூரம்?

தனி மனித சுதந்திரம் இன்னொருவரின் சுதந்திரத்தைப் பாதிக்கக் கூடாது  என்றால், எந்த மாதிரியான பாதிப்பைக் கணக்கில் கொள்ள வேண்டும்?

தனி மனித சுதந்திரத்தில் ஏன் இவ்வளவு குழப்பம் ஏற்படுகிறதென்றால், ஒவ்வொருவருமே இதில் நீதிபதிகள்! ஒவ்வொருவருமே இதில் வாதி, பிரதிவாதிகள்!

வாதியே திடீரென நீதிபதியாக, பிரதிவாதியும் அதே நேரத்தில் நீதிபதியாக உருமாறிக் கொண்டிருப்பார்.

வாதப் பிரதிவாதங்களை வைத்துதான் இதுவரை உலகில் நீதிபதி தீர்ப்பை தருகிறார் என்று நம்புபவர் யாரேனும் உண்டா?

தனி மனித சுதந்திரத்தின் எல்லை அவ்வப்போது மாறும். வல்லான் வகுத்ததே வாய்க்கால்.

கிளிக்கூண்டில் கையை விட்டால் அது நம் கையைக் கொத்தவே செய்கிறது. இறகை வெட்டி கூண்டில் இட்ட ஜோதிடக்காரன்  கையை கொத்துவதில்லை.

தனிமனிதச் சுதந்திரம் பரந்து தம்மின் மெலியாரிடம் விசுவரூபம் எடுப்பதையும், தம்மின் வலியாரிடத்து அது வாமனமாய் குறுக்கிக் கொண்டு ஒடுங்குவதையும் காண்கிறோம்.

ஆனால் மேற்கூறிய இரண்டு இடத்திலும் உண்மையான எல்லைக் கோடு தெரிவதில்லை.

மூக்குமுனை சுதந்திர எல்லை எனும்போது, என் அன்பு நண்பர் நாதன் எழுதிய கவிதையின் நான்கு வரிகள் நினைவிற்கு வருகின்றன.


The nose of  Pinnochio and
The nose of a Sparrow !
Where lies the Boundary?
Who decides that Boundary?


மேலே கூறிய கவிதை வரிகளில் ஒற்றுப் பிழை இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. :)

செல்வன்

unread,
Mar 7, 2011, 3:58:46 PM3/7/11
to mint...@googlegroups.com
அரசுக்கு இல்லாத அதிகாரங்கள் அனைத்தும் தனிமனிதனுக்கே சொந்தம்.

அரசின் அதிகாரம் பொதுவாக எல்லையற்றது.அதற்கு வரம்பு விதிக்கவே அரசியல் சட்டங்கள் உருவாக்கபடுகின்றன.

தனிமனித சுதந்திரம் குறித்து அமெரிக்க அரசியல்சட்டம் அறிவித்த வரலாற்று சிறப்புமிக்க பிரகடனம் பின்வருமாறு

IN CONGRESS, JULY 4, 1776
The unanimous Declaration of the thirteen united States of America

When in the Course of human events it becomes necessary for one people to dissolve the political bands which have connected them with another and to assume among the powers of the earth, the separate and equal station to which the Laws of Nature and of Nature's God entitle them, a decent respect to the opinions of mankind requires that they should declare the causes which impel them to the separation.

We hold these truths to be self-evident, that all men are created equal, that they are endowed by their Creator with certain unalienable Rights, that among these are Life, Liberty and the pursuit of Happiness. — That to secure these rights, Governments are instituted among Men, deriving their just powers from the consent of the governed, — That whenever any Form of Government becomes destructive of these ends, it is the Right of the People to alter or to abolish it, and to institute new Government, laying its foundation on such principles and organizing its powers in such form, as to them shall seem most likely to effect their Safety and Happiness.

பேச்சு சுதந்திரத்தை மக்களுக்கு அளித்த முதலாம் சட்டதிருத்தம்


Congress shall make no law respecting an establishment of religion, or prohibiting the free exercise thereof; or abridging the freedom of speech, or of the press; or the right of the people peaceably to assemble, and to petition the Government for a redress of grievances.

--
செல்வன்

"Democracy is worth dying for, because it's the most deeply honorable form of government ever devised by man" - Ronald Reagan

www.holyox.blogspot.com


Innamburan Innamburan

unread,
Mar 7, 2011, 4:21:40 PM3/7/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
செல்வனை 'பேஷ்! பேஷ்!' என்று பராட்டுவதில், ஒரு குஷி.
இன்னம்பூரான்07 03 2011

2011/3/7 செல்வன் <hol...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Mar 7, 2011, 4:38:30 PM3/7/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
செல்வன்!
அலெக்ஸேண்டர் ஹாமில்டன் என்ன சொன்னார் என்றால்:
'...The origin of all civil government, justly established, must be a voluntary compact between the rulers and the ruled, and must be liable to such limitations as are necessary for the security of the absolute rights of the latter; for what original title can any man, or set of men, have to govern others, except their own consent? To usurp dominion over a people in their own despite, or to grasp at a more extensive power than they are willing to intrust, is to violate that law of nature which gives every man a right to his personal liberty, and can therefore confer no obligation to obedience...'

நன்றி, காப்புரிமை: கூடன்பர்க் அமைப்பு.
இன்னம்பூரான்
07 03 2011


2011/3/7 Innamburan Innamburan <innam...@gmail.com>

N. Kannan

unread,
Mar 7, 2011, 5:47:57 PM3/7/11
to mint...@googlegroups.com
2011/3/8 selva kumaran <selvaku...@gmail.com>:

> The nose of  Pinnochio and
> The nose of a Sparrow !
> Where lies the Boundary?
> Who decides that Boundary?
>
>
> மேலே கூறிய கவிதை வரிகளில் ஒற்றுப் பிழை இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. :)
>

Ship + yard

இதைத் தமிழில் எழுதும் போது எப்படிப் புணரும்? இதை திசைச்சொல்லாகக்
கருதாமல் தமிழ்ச் சொல்லாக பாவித்து விடை கூறவும். ஒரு ஆய்விற்குத்தேவை.

அன்புடன்
நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
Mar 7, 2011, 6:30:35 PM3/7/11
to mint...@googlegroups.com
naavaay murram
Nagarajan


2011/3/8 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Mar 7, 2011, 6:51:18 PM3/7/11
to mint...@googlegroups.com
2011/3/8 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
> naavaay murram
> Nagarajan
>

ஷிப் + யார்டு

ஷிப்பார்டு என்று வருமா?

ஷிம்யார்டு என்று வருமா?

க.>

Nagarajan Vadivel

unread,
Mar 7, 2011, 8:24:09 PM3/7/11
to mint...@googlegroups.com
ஷிப்பார்டு

2011/3/8 N. Kannan <navan...@gmail.com>

--

செல்வன்

unread,
Mar 8, 2011, 12:36:35 AM3/8/11
to mint...@googlegroups.com


2011/3/7 Innamburan Innamburan <innam...@gmail.com>

செல்வனை 'பேஷ்! பேஷ்!' என்று பராட்டுவதில், ஒரு குஷி.


உங்க கிட்ட வாழ்த்து பெறுவதில் எனக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி..

(குட்டு வாங்கினாலும் அதிக மகிழ்ச்சிதான்..மோதிரகுட்டல்ல?:-))

selva kumaran

unread,
Mar 8, 2011, 4:15:36 AM3/8/11
to mint...@googlegroups.com
திரு.செல்வன்

அந்த அதிகாரங்களெல்லாம் என்ன என்ன?

எந்த எந்த விஷயங்கள் எல்லாம் தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் நம்மை அறியாமல் மீறப்படுகின்றன?

உதாரணமாம, ஒரு கோயிலில்  ஒரு இளம்பெண்  கோபுரத்திற்கு அருகே கண்ணை மூடிக் கொண்டு வேண்டிக் கொண்டிருக்கிறாள். ஒரு நல்ல கலைஞர் கோயில் கோபுரததை படம் பிடிக்கும் போதே அந்தப் பெண்ணையும் சேர்த்துப் படம் பிடிக்கிறார். இன்னொருவரோ செல்ஃபோன் காமெராவால் சுற்றிலும் படம் பிடித்துக் கொண்டிருக்கிறார். சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் அனைவரும் அந்தப் படத்தில் வருவர். இதைக் கற்பனையாகச் சொல்லவில்லை, நேரடியாக அனுபவத்தில் பார்த்துவிட்டே சொல்லுகிறேன்.

கோயிலில் இருக்கும் அந்த பெண்ணுக்கோ இதைப் போல் புகைப்படம் எடுக்கப்படுவது தொந்தரவாக இருக்கலாம்.  கோயிலில் அமைதியாக கும்பிட்டுக் கொண்டிருப்பவருக்கும் தொந்தரவாக இருக்கலாம். மேலும் இவை பொதுவில் வெளியிடப்படுவதும் அவர்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.

இதில் தனி மனித சுதந்திரம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

அந்த பெண்ணின் பார்வையில், கும்பிட்டுக் கொண்டிருக்கும் மனிதரின் சுதந்திரத்தைக் கணக்கில் கொண்டால், கலைஞரின் சுதந்திரம் பாதிக்கப்பட்டு அவர் அதன் பிறகு மலையையும், வானத்தையும், கடலையுமே படம் எடுத்துக் கொள்ள வேண்டி வரும்.

கலைஞரின் சுதந்திரத்தைக் கணக்கில் கொண்டால்,  கோயிலில் சாமி நிம்மதியாகக் கும்பிட முடியாது. நம்மைச் சுற்றி யாராவது செல்ஃபோனில் படம் எடுத்துக் கொண்டே இருப்பர்.

பேருந்தில், காரில், புகைவண்டியில், ஹோட்டலில் என எங்கும் இப்படி படம் எடுத்துக் கொண்டே இருப்பதைப் பார்க்கிறேன். நம் விருப்பமின்றி புகைப்படத்தில் நாம் விழுவதை நாம் விரும்புவதில்லை.

ஆக, எல்லைக் கோடு எங்கே எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?

இஷ்டத்திற்கு மாட்டுபவர்களைப் புகைப்படம் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார் ஒரு பத்திரிகையின் ஆசிரியர். வேறொரு பத்திரிகை தற்செயலாக அவரின்  மனைவியையும் மகளையும் புகைப்படமாக எடுத்துப் மறு இதழில் போடத் தயாராக, அது எப்படியோ அவருக்குத் தெரிந்து அன்றிரவிற்குள் அதை அந்த பத்திரிகையில் இருந்து நீக்கிய விஷயத்தை நேரடியாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஒவ்வொருவருக்கும் இரு முகங்கள் உண்டு. தான், தன் குடும்பம் என சுயநலம் மிகுந்த முகம், சமுதாயம், சமுதாய பார்வை எனப் பரந்த நோக்குடைய முகம்.

முதல் முகம் தான் சம்பந்தப்பட விஷயத்திற்கும், இரண்டாவது முகம் தான் சம்பந்தப்படாத  பிரச்சனைகளுக்கும் காண்பிக்கப்படுகிறது.

நான் எழுத்தாளனாய் இருக்கும்போது, அதில் இன்னொருவர் சுதந்திரத்தை ஆழ்ந்து எடுத்துக் கொள்ளாமல், எழுத்தாள சுதந்திரத்தைப் பிரதானமாகக் கொள்வேன்.

அதே என்னைப் பற்றி யாராவது எழுதினால், என்னுடைய சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் தருவேன்.

தனி மனித சுதந்திரம் என்பது வல்லவன் எடுத்துக் கொள்வது. அங்கே அறம் எது என்பதை சரியாக வரையறுத்துக் கூற முடிவதில்லை.


சில சமயம் சக்தி வாய்ந்த ஒருவரது மூக்கு  நம் கண்ணைக் குத்தினாலும், நாம் அவரிடம் "Sorry" என்று சொல்லி விட்டுப் பணிவாகப் போய் விடுவோம்.

நம்மை விட மெலியார் ஒருவரது நிழல், மாலைச் சுடரால் நீண்டு நம் அருகே வந்தாலும் வெகுண்டு எழுவோம்.

தனி மனித சுதந்திரம் என்பதன் மெய்ப்பொருள் உண்மையில் அறத்தில் நிலைத்த, பிறர் நிலையை ஒரு பொருட்டாகக் கொண்ட அதிசயப் பிறவி யாரிடத்திலாவது இருக்கலாம்.




2011/3/8 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Mar 8, 2011, 11:07:41 AM3/8/11
to mint...@googlegroups.com
செல்வகுமரன்,

பலநாடுகளில் சட்டங்கள் பலவாறு இருக்கலாம்...நான் சொல்வது என் கருத்து என்ற அடிப்படையில் என் பதிலை அணுகவும்.

தனிமனித சுதந்திரம் என்பது பிறருக்கு/தனக்கு கெடுதி விளைவிக்காமல் செய்யபடும் எந்த செயலையும் குறிக்கும்.கெடுதி என்பதை எப்படி டிஃபைன் செய்வது என கேட்டால் அரசியல் சட்டத்தில் எது எல்லாம் குற்ரம் என குறிப்பிட்டிருக்கோ அதை எல்லாம் செய்வது குற்றம்..உதாரணமாக கூட்டம் நிரம்பிய திரையரங்கில் "தீ,தீ" என கத்தி பலர் மரணத்துக்கு காரணமாவது பேச்சு சுதந்திரத்தில் வராது.அது ஹார்ம்புல் ஸ்பீச் என்ற வகையில் வரும்.போர்னொகிராபி சட்டபடி குற்றம் என்பதால் அது பேச்சுரிமையில் வராது.போர்னோகிராபி சட்டபடி தடுக்கபடவேண்டுமா என கேட்டால் அது வேறு விஷயம்..போர்னோகிராபி, விபசாரம் எல்லாம் சட்டபூர்வமாக அனுமதிக்கபட்ட நாடுகள் உண்டு.அனுமதி மறுக்கபட்ட நாடுகளும் உண்டு.என்னை பொறுத்தவரை போர்னோவுக்கும் விபசாரத்துக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதால் அதை தடுப்பதில் உடன்பாடே.


கோயிலில் அனுமதி இன்றி புகைப்படம் எடுப்பதும், அதை பதிப்பிப்பதும் பேச்சுரிமையில் அடங்கும் என்ரே கருதுகிறேன்.பொதுஇடங்களில் ஒருவர் வரும்போது தன்னை யாரும் புகைப்படம் எடுக்க கூடாது என சொல்ல முடியாது.ஒருவர் வீடுபுகுந்து புகைப்படம் எடுப்பது சட்டபடி தவறு.ஆனால் பொதுஇடத்தில் புகைப்படம் எடுப்பது குற்றம் அல்ல.அது எதிகலா, நல்ல நெறிமுரையா என்றால் இல்லை என சொல்லலாம்.ஆனால் அது பேச்சு சுதந்திரமா இல்லையா என்றால் ஆம் என்றுதான் சொல்லமுடியும்.

இச்டத்துக்கு அடுத்தவரை புகைப்படம் எடுத்துபோடுபவர் தான்,தன் மனைவி,குழந்தைகள் புகைப்படம் இன்னொரு பத்திரிக்கையில் வெளியானால் அதை குறைகூற இயலாது என்ரே நினைக்கிறேன்.அதற்கான தார்மிக உரிமையை அவர் இழந்துவிடுகிறார்.அப்படி யாரையும் புகைப்படம் எடுக்காத பொதுசனம் தன் புகைப்படம் பத்திரிக்கையில் வெளியாக கூடாது என கூறுவதில் சட்டரீதியான நியாயம் இல்லையெனினும் தார்மிக ரீதியான அறம் அதில் உண்டு.அது ஜர்னலிஸ்ட் எதிக்ஸ் அல்ல.ஆனால் எதிக்ஸ் மீறலுக்கும் சட்டரீதியான குற்றத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு

ஜான் எட்வர்ட்ஸ் என்ற அமெரிக்க துனைஜனாதிபதி வேட்பாளர் தன் கள்ளகாதலியை ரகசியமாக சந்தித்ததை எக்சாமினர் என்ர பத்திரிக்கை துரத்தி பிடித்து புகைப்பட ஆதாரங்களுடன் நிருபித்தது.பத்திரிக்கை நிருபர் காமிராவுடன் துரத்த ஜான் எட்வர்ட்ஸ் ஓட்டல் பாத்ரூமுக்குள் ஒளிந்துகொண்டதை நாடே பார்த்து சிரித்தது..இங்கே ஜான் எட்வர்ட்ஸின் அனுமதியுடன் அவர் புகைப்படம் எடுக்கபடவில்லை.அவர் மறுக்க,மறுக்க விடாபிடியாக துரத்தி தான் அவரது புகைப்படத்தை எடுத்தார்கள்.இது அனெதிகலாக இருக்கலாம்..ஆனால் சட்டபடியான குற்ரம் அல்ல.

Nagarajan Vadivel

unread,
Mar 8, 2011, 11:20:55 AM3/8/11
to mint...@googlegroups.com
பத்திரிக்கைப் புகைப்படக்காரர்களும் தனியார் தொலைக்காட்சியினரும் படிப்பவர்/பார்ப்பவரின் கண்ணுக்கு விருந்துகொடுக்க பிரபலங்களித்தொடர்ந்து தொல்லை கொடுத்த பாபராஸிக்கள் எந்த நாட்டுச் சட்டத்துக்கும் அடங்குபவர்கள் அல்ல.  பிடிடிஷ் இளவரசி டயானாவின் மரணம் பாப்பராஸிகளின் துரத்தல் வேட்டையால் நடந்ததல்லவா.  நான்காம் தூண் என்று கூறிக்கொண்டு தனி மனித உரிமையிலும் சுதந்திரத்திலும் தலையைவிடுவது ஃப்ரீடம் என்று சொல்ல முடியுமா?
நாகராசன்

செல்வன்

unread,
Mar 8, 2011, 11:32:57 AM3/8/11
to mint...@googlegroups.com
சட்டரீதியாக நிறைய கொடுமைகளை இழைக்கலாம் ஐயா...டயானாவுக்கு நடந்ததும் அதுபோன்றதுதான்..பாப்பராசி என்பது மெயின்லைன் பத்திரிக்கை நிருபர்கள் அல்லர்.காசுக்கு புகைப்படம் எடுத்து விற்பவர்கள்..

2011/3/8 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

selva kumaran

unread,
Mar 10, 2011, 2:10:56 PM3/10/11
to mint...@googlegroups.com
4. பாண்டித்திய தளை


பெரிய குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஒரு பிரச்சினையை அறிந்திருக்கலாம். வீட்டில் ஒரு கல்யாணமோ, வேறு விசேஷமோ முடிவாகி இருக்கும் காலக்கட்டத்தில், வீட்டில் இருக்கும் பெரும்பாலானோர் நாட்டாமை ஆகி விடுவர். இதில் யார் விருப்பப்படி நடப்பது, யார் சொல்லை விடுவது எனத் தீர்மானிக்க முடியாமல் திணறுவோம்.

என்ன செய்தாலும், முடிவில் ஒரு பத்து பேர் அதிருப்திக்காவது ஆளாகி இருப்போம். மீதி பேரும் அவ்வளவாகத் திருப்தி அடைந்திருக்க மாட்டார்கள்.

இதே லட்சணம்தான் இந்த பண்டிதர்களாகிய அறிஞர் பெருமக்கள் கூட்டதிலும் ஏற்படக் கண்டிருக்கிறேன்.

அப்போதுதான்  தொலைக்காட்சி வந்த புதிது!  அந்தப் பகுதியிலேயே எங்காவது ஓரிரண்டு வீடுகளின் மேல்தான்  ஆண்டெனாவே தெரியும்.

இலக்கிய நாட்டம் கொண்டவர்கள் ஆங்காங்கே நடைப்பெறும் ஏதாவது கூட்டத்திற்கு போய்விடுவோம்.

கம்பன் விழா என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக எல்லா இடத்திலும் நடைப்பெறும்.

அப்படி ஒரு விழாவிற்கு நானும் போயிருந்தேன். என் பாட்டியும் என்னுடன் வந்திருந்தாள். கம்ப இராமாயணத்தில் தேர்ந்த அறிஞர்கள், பாண்டித்தியம் ஆனவர்கள் பேசுவார்கள். அவர்களைக் கௌரவிப்பதும் நடக்கும்.


நடந்த நிகழ்ச்சியை என் நினைவில் நின்றிருக்கும் அளவிற்கு, என் எழுத்து நடையில் தட்டச்சு செய்கிறேன்.

இராமாயணத்தில் நம் மனதில் நின்றவர் யார் என்பது போல தலைப்பு

அறிஞர் ஒருவர் பேச ஆரமபித்தார்.ஏதோ ஒரு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் என்று அறிமுகப்படுத்தினார்கள். ஐம்பது வயதுக்கு மேலே இருக்கும்.

"இராமாயணத்துலே ஒவ்வொருப் பாத்திரத்தையும் கம்பன் தெளிவுப்படுத்தினாப்போல யாரும் தெளிவுப்படுத்தலை!...."

என் அருகே அமர்ந்திருந்தவர் கவிஞர் பாலைய்யன், " இவன் படுத்தறா மாதிரிகூடத்தான் எவனும் படுத்தினதில்லை", என்றார். இவரும் கல்லூரிப் பேராசிரியர் தான்.

சிரிக்காவிட்டால் கோபித்துக் கொள்ளப் போகிறாரே என்று யாரும் பார்க்காத வண்ணம் ஒரு புன்னகையை உதிர்த்தேன்.

மேடையிலே அறிஞர் பேசிக் கொண்டிருந்தார்.

"சாம்பவான் (ஜாம்பவான்) என்றொரு பாத்திரம் இல்லாவிடில் இலக்குவன் என்ற பாத்திரம் யுத்தக்காண்டத்தோடு போயிருக்கும்!  இலக்குவன் மட்டுமா போயிருப்பான்! அவனைப் பிரியா இராமனும் உடலை நீக்கி இருப்பான்! வீடணனும் அம்முடிவிலேயே இருந்தான்! ஆக இத்தனைப் பேர் உயிரும் சாம்பவானால் காப்பாற்றப்பட்டது! இப்போது புரிகிறதா... எதற்கு பெரிய பெரிய அறிஞர்களை சாம்பவான் என்று அடைமொழி இட்டு அழைக்கிறார்கள் என்று?!"


"சாம்பவான் என்ன பெரிய சாம்பவான்? இலக்குவன் உயிரை இல்ல காப்பாற்றினான்! இங்கே இத்தனைப் பேர் பிராணனை இவன் வாங்கறான்? காப்பாற்ற எந்த சாம்பவானும் இல்லையே!", என்றார் பாலைய்யன்.


மேடையில் இருந்த அறிஞர்,

"விபீடணன் உயிரை விட தயாராகும் போது  சஞ்சீவி மலையைப் பற்றிச் சொல்லி, அதைக் கொண்டு வர வைக்கிறான்! சாம்பவானே சஞ்சீவி மலையினும் உயிர் தந்த சஞ்சீவி!", என்றார்.


கரகோஷம் அந்த இடத்தையே அதிர வைத்தது. பாலைய்யன் முகம் என் எழுத்தைப் படித்தாற் போல் இறுகிப் போய் விட்டது.

பாலைய்யன் மேடைக்குப் போனார்.

"கம்ப இராமாயணத்தை எப்படி வேண்டுமானாலும் வளைச்சு நமக்கேற்றார் போல புரிந்துக் கொள்ளலாம்!  ஆனால் கம்பர் என்ன சொல்ல வருகிறார் என்பது முக்கியமல்லவா?

சும்மாவா வீடணன் சாகத் தயாரானான்? இராவணன் ஒரு வேலை விடறான். அந்த வேலை யாராலும் ஒண்ணும் செய்ய முடியலை. எவனையாவது பலி வாங்கிட்டுத்தான் அது நிற்கும்!

முன்நின் றாரெலாம்  பின்னுறக் காலின் முடுகி,
"நின்மின், யானிது விலக்குவன்" என்றுரை நேரா,
மின்னும் வேலினை, விண்ணவர் கண்புடைத்து இரங்க,
பொன்னின் மார்பிடை ஏற்றனன், முதுகிடைப் போக.

பாய்ந்து வந்த அந்த வேலின் முன் இலக்குவன் பாய்ந்து சென்று முன்னால் நிற்க, அவனது  பொன்னான மார்பில் அது பாய்ந்து முதுகு வழியாக வந்து விட்டது.

இங்கே கூட்டத்திலேயே யாராவது ஒரு கல்லை எடுத்து அடிங்க! உயிர் நண்பன் சொல்லிக்கிறவன் கூட ஆளுக்கொருப் பக்கம் தெறிச்சு ஓடிடுவான்! ஆனால் அங்கே அசையா மலையென நின்று அந்த வேலை நெஞ்சில் வாங்கிக் கொண்டான்! மருந்தைப் பற்றிச் சொல்ல வந்த சாம்பவான் அப்போ எங்கேயப்பா போனார்? அந்த வேலை வாங்க முன்னேறி வந்த பெயரில் இவர் பெயரைக் காணோமே! இலக்குவனின் பெருமையை இங்கே தான் காட்டினான் கம்பன்! ", என்றுப் பலத்தக் கைத்தட்டல்களுக்கிடையே உரையை முடித்தார்  பாலைய்யன்.


சற்று இளைஞரான ஒருவர் அடுத்து மேடையில் ஏறினார். பெரிய எழுத்தாளர் என்று, நிறைய புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார் என்றும்  சொனனர்கள்.

"அறிவினுக்கு அறிவு போல்வான் வீடணன், அலங்கல் தோளான்.... என்று கம்பர் ஒரு அழகான அடைமொழியை  வீடணனுக்குத் தருகிறார், கம்ப நாட்டாழ்வார்! அறிவே தெய்வம் என்று சொல்லாத மூதறிஞர்கள் இல்லை! அத்தகு அறிவிற்கே அறிவு போல்வன் என்றார். ஏனென்றால் அறிவு தெய்வமாய் இருந்தப் போதும் மனித உடலில் கீழ்மையான விஷயங்களை மேய்ந்து மேய்ந்து தன் தன்மையை இழந்து போய் நிற்கும். வீடணன் போன்றோர் அத்தகு அறிவு மீண்டும் தன் சுய இடத்திற்கு வர உதவுகின்றனர். வீடணன் சாதாரணமானவனா? ஒரு பலசாலியான, வல்லமை மிகுந்த அரக்கனிடம் சென்று யாராவது அறத்தைத் தைரியமாகக் கூற இயலுமா? வீடணன் செய்கிறான். இராவணன் அறம் தவறுகிறான் என அறிந்து அக்கணமே அவ்விடத்தை விட்டு இராமனிடம் சென்றானே...அவனுக்கு நிகர் யாருமில்லை!"

மீண்டும் அசாத்திய கைத்தட்டல் எங்கும் ஒலித்தது.

அடுத்து ஒரு பெண்மணி பேசத்  தொடங்கினார். சொல்லவே வேண்டியதில்லை! இவரும் பேராசிரியர்!

"அனுமன் நிற்க, நாம் ஆருயிர்க் கிரங்குவது அறிவோ?
நினையும் அத்துணை மாத்திரத்து உலகெலாம் நிமிர்வான்,
வினையின் நல்மருந்து அளிக்கின்றான், உயிர்க்கின்றான், வீரன்
தினையும் அல்லலுற்று அழுங்கல்மின் என்று இடர் தீர்த்தான்


இதை சொன்னவன் சாம்பவான்! ஐயா, நீங்கள் யாரைப் போற்றி சொன்னீர்களோ அதே சாம்பவான்தான் இதைச் சொல்கிறான்! அனுமன் இருக்கும் போது கவலை எதற்கப்பா என்று சொல்கிறான் சாம்பவான்!", என்று பேசிக் கொண்டே போனார்.

விழா முடிவில் சிற்றுண்டி அளிக்கப்பட்டது. அப்போது ஒரே தகராறு. மேடையில் இவர்கள் பேசியது மேடையோடு போகவில்லை. கீழே இறங்கியப் பிறகு சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல், காரசாரமாகி ஒரே ரசாபாசமாகி விட்டது.

"கம்ப இராமாயணத்தை சிலபஸ்ஸில் படிச்சது மாதிரி படிச்சா இப்படித்தானய்யா புரியும்!"

"கம்பன் சொல்லறதை புரிஞ்சுக்கறதுக்கே தகுதி வேணும்! வெறும் தமிழ் அறிவு மட்டும் பத்தாது! ஹூம்!"

"ஏம்பா....நீயா நேரடியா செய்யுளில் இருந்துப் படிக்கறியா? இல்லை....யாரோ எழுதின பொழிப்புரையை கூட வச்சுக்கிட்டு படிச்சியா?"

"கம்ப இராமாயணத்துலேமுத்துக் குளிச்சிருக்கேன்!"

"அது சரி! முத்துக் குளிக்கறவனுக்கு எல்லாம் கடலைப் பற்றி தெரியும்னா...கடல் விஞ்ஞானிகளைக் கடலிலேயே தள்ளி வுட்டுருவமா?இன்னும் முங்கி முத்துக் குளிக்கற உதாரணத்தையே எத்தனைக் காலம் பேசிக்கிட்டிருக்கப் போறீங்க?"



எனக்கு கொஞ்சம் அவமானமாக இருந்தது. இதைப் போன்ற இடத்திற்குத்தான் நான் வாராவாரம் வருகிறேன் என்று என் பாட்டி நினைத்து விட்டால்......?!

பேருந்தில் ஏறி வீட்டிற்குத் திரும்பியப் பின், அன்றிரவு பாட்டியிடம் சாவகாசமாகக் கேட்டேன்.

"பாட்டி விழா எப்படி இருந்தது?"


"என்னடாப்பா இது? இராமாயணத்துலே மனசுலே நின்னவங்க யாருன்னு கேட்டா ஒருத்தன் கூட இராமர்னு சொல்லலையே?"

Mohanarangan V Srirangam

unread,
Mar 10, 2011, 2:22:37 PM3/10/11
to mint...@googlegroups.com, selva kumaran
>>>>"என்னடாப்பா இது? இராமாயணத்துலே மனசுலே நின்னவங்க யாருன்னு கேட்டா ஒருத்தன் கூட இராமர்னு சொல்லலையே?"<<<< 

சூப்பர். பஞ்சோ பஞ்ச் :-))

N. Kannan

unread,
Mar 10, 2011, 6:39:29 PM3/10/11
to mint...@googlegroups.com
உண்மை! உண்மை!

என்னமா எழுதறார்!

ஆதிப்பிரான் என்று இவரும் அந்தக்காலம் தொட்டுத்தான் நிற்கிறார். யார்
கண்டு கொள்கிறார்கள்!! :-)

நா.கண்ணன்

2011/3/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:


>>>>>"என்னடாப்பா இது? இராமாயணத்துலே மனசுலே நின்னவங்க யாருன்னு கேட்டா ஒருத்தன்
>>>>> கூட இராமர்னு சொல்லலையே?"<<<<
>
> சூப்பர். பஞ்சோ பஞ்ச் :-))
>

> 2011/3/11 selva kumaran <selvaku...@gmail.com>


>>
>> 4. பாண்டித்திய தளை
>>
>>
>>>>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Geetha Sambasivam

unread,
Mar 10, 2011, 9:02:59 PM3/10/11
to mint...@googlegroups.com
"என்னடாப்பா இது? இராமாயணத்துலே மனசுலே நின்னவங்க யாருன்னு கேட்டா ஒருத்தன் கூட இராமர்னு சொல்லலையே?"//

sirichu sirichu, vayiru valikkuthu.  something happened to my tamil fonts.  windows 7 google ime kuda thakararu pola!

2011/3/11 selva kumaran <selvakumaran.ma@gmail.com>
4. பாண்டித்திய தளை



"பாட்டி விழா எப்படி இருந்தது?"


"என்னடாப்பா இது? இராமாயணத்துலே மனசுலே நின்னவங்க யாருன்னு கேட்டா ஒருத்தன் கூட இராமர்னு சொல்லலையே?"

333.gif

Raja sankar

unread,
Mar 11, 2011, 12:08:03 AM3/11/11
to mint...@googlegroups.com
:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

ராஜசங்கர்

கிருஷ்ணமூர்த்தி

unread,
Mar 11, 2011, 12:17:47 AM3/11/11
to மின்தமிழ்
:-))) நானும் ஸ்மைலி போட்டுக்கறேன், இல்லாவிட்டால் இது சீரியசான காமெடி
ஆகிவிடக் கூடும்.

சிலருக்கு ராம காவியம்! வேறு சிலருக்கோ அது ராவண காவியம்!

லோகோ பின்ன ருசி என்று தெரியாமலா சொல்லி வைத்தார்கள்!!

-------------------------
எதுவாக இருந்தாலும் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும்!
ஏனென்றால்,இது ஒலிபெருக்கிகளின், ஊதுகுழல்களின் காலம்!!

Raja sankar

unread,
Mar 11, 2011, 12:21:44 AM3/11/11
to mint...@googlegroups.com
சிலருக்கு கம்ப ரசம்

:-))))

ராஜசங்கர்



2011/3/11 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Mar 11, 2011, 12:31:03 AM3/11/11
to mint...@googlegroups.com
இன்னும் சிலருக்கு கீ(கை)மாயணம்
நாகராசன்


2011/3/11 Raja sankar <errajasa...@gmail.com>

selva kumaran

unread,
Mar 11, 2011, 4:04:05 AM3/11/11
to mint...@googlegroups.com
ஆஹா! மொத்த அன்பர்களும் நான் போய் விட்டு வருவதற்குள், வந்து விட்டு போய் வீட்டீர்கள். 

உண்மையில் எழுதுவதில் கூட அவ்வளவு விருப்பமில்லை. முன்பு போல வெளியே வந்து நண்பர்கள் குழாமுடன் அளவளாவ நேரம் ஒத்துழைப்பதில்லை.

இப்படி உங்களுடன் எல்லாம் ஒரு ஆனந்த கூத்தடிக்கும் நோக்கம்தான் இணையத்தில் எதையாவது கிறுக்க வைக்கிறது!

2011/3/11 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Mar 11, 2011, 6:47:10 AM3/11/11
to mint...@googlegroups.com


11 மார்ச், 2011 12:21 am அன்று, Raja sankar <errajasa...@gmail.com> எழுதியது:

சிலருக்கு கம்ப ரசம்

 
அறிஞர் எனு சொல்லிக்க வெட்கப்பட்டு இருக்கணும்
 
அன்னைக்கு நான் இல்லாமல் போயிட்டேன்
அண்ணாவை பின்னாவா ஆக்கி இருப்பேன்

selva kumaran

unread,
Mar 13, 2011, 3:33:52 PM3/13/11
to mint...@googlegroups.com
5.  ஒரு துளிக் கண்ணீர்


ஒரு நாடகம் ஒன்று எழுதியிருந்தேன். அது ஏனோ இன்று என் நினைவிற்கு வருகிறது.  என்னுடைய கல்லூரியில் அதை அரங்கேற்றுவதாக இருந்து, எல்லோருடைய விதியும் நல்லபடியாக இருந்தக் காரணத்தால், அது அரங்கேறாமல் போய் விட்டது.

அந்த நாடகக் கதையை இங்கே சொல்லுகிறேன்.


அவனைக் கொலைக்காரன், திருடன், கயவன், வஞ்சகன் என்று எந்த ஒரு தனிப்பட்ட அடைமொழியையும் கொடுக்கமுடியாதபடி, எல்லாவித கேடுகெட்ட அடைமொழிகளுக்கும் சொந்தமானவன்.

அவன் அப்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அந்நாட்டு அரசன் அவனைக் கழுவேற்றச் சொல்லித் தீர்ப்பு வழங்கி இருந்தான்.

அப்போது ஒரு சமணத்துறவி அரசனைக் காண வந்தார். கொல்லாமையைப் பற்றியும், பிற உயிர்களைத் துன்புறுத்துவதில் உள்ள நேச நாசத்தையும் உபதேசிக்கிறார். அஹிம்சை இல்லாது போனால் மனிதப் பிறவி வீணாகி விடும் என்று அறிவுறுத்தினார்.

அரசனால் அதை மறுக்கவும் முடியவில்லை; ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை.

இந்தச் சிறைக் கைதியைப் பற்றிக் குறிப்பிட்டு, அவன் செய்த கொடுஞ் செயல்களைச் சொல்லி, அவனிடம் ஜீவகாருண்யம் காட்டுவது எங்ஙனம் சாத்தியம் என வினவினான்.

சமணத் துறவியோ  அனைத்து  உயிர்களின் உள்ளிலும்  நல்லவனாகக் கூடிய நல்விதைகள் உண்டு என உறுதியுடன் சொன்னார்.

அரசனும், சரி, அவ்வாறாயின் அந்தக் கொடியவன் தன் செயலுக்காய் கடுகளவு மனம் வருந்தினாலும் போதும், அவனை மன்னித்து விடுவதாக வாக்களித்தான்.

சமணத்துறவியும் அந்தக் கொடியவன் இடம் சென்றார். அவனோ தன் செயல்களைப் பெருமையாகக் கருதினான்.  தன்னையொத்தவர் அந்த நாட்டிலேயே இல்லை எனும் கர்வம் அவனிடத்தே பொங்கியது. கழுவேறுவதையும் வீர மரணமாக, புகழாகக் கருதி மார்புப் புடைக்க மகிழ்நதான்.

சமணத்துறவியோ அவனிடம் அறங்களை உபதேசிக்க முயன்றார். அவன் இவரைக் காதால் கேட்க முடியாத அளவு ஏசினான். சிறைக்கதவு மட்டும் திறந்திருந்தால் அவரையும் சித்திரவதைச் செய்துக் கொன்று  ஒரு துறவியைக் கொன்ற சாதனையும் தன் பிரதாபத்தில் சேர்ந்திருக்குமே, அது முடியாமல்  போனதே என ஏங்கினான்.

உயிர்களைக் கொல்வதால் அவ்வுயிர்கள் படும் பாட்டை பரிதாபமாக இவர் சொல்ல, அவனோ அந்த விவரங்களை இரசித்து இன்னும் அவ்வாறு செய்ய முடியவில்லையே எனத் தவித்தான்.

எள்ளத்தனையும் இவனை மாற்ற முடியாத துறவி மனம் சோர்ந்து கிளம்பினார். அருகே நின்ற சிறைச்சாலை அதிகாரி, துறவியின் நிலையைக் கண்டு பரிதாபமுற்றார்.

துறவியோ என்னை நினைந்து நீங்கள் பரிதாபமுறுவதை விட இந்த நாட்டை நினைந்து அச்சப்படுங்கள். இவனைப் பார்த்து இன்னும் எத்தனைப் பேர் இப்படி ஆகப் போகிறார்களோ என எண்ணுங்கள்; இவனை விட பெருங்கொடுமைக்காரர்கள் தோன்றினாலும் வியப்பதற்கில்லை என்று மிகுந்த துயரத்துடன் சொல்லி விட்டு கிளம்பினார்.

மறுநாள், கழுவேற்ற இவனைக் கொண்டுப் போகும் போது, அதைக் காணப் பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர்.

கழுவில் ஏறுவதற்கு முன்னால், தன்னை பேச அனுமதிக்குமாறு அந்த கயவன் கேட்டுக் கொண்டான்.

கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட, வாயில் சொற்கள் வாராதுத் திக்கித் திணற, தன்னுடைய ஒவ்வொரு கொடுஞ்செயலையும் சொல்லி  அழலானான். சிறுக சிறுக அவன் குரல் ஓங்கி பெருத்தக் குரலில் ஓலமிட்டுக் கதறினான்.பேச்சு ஏதுமின்றி அழுகையே பேருரை நிகழ்த்திக் கொண்டிருந்தது. ஒரு முகூர்த்தக் காலம் சற்றும் இடைவெளி விடாமல் அழுதான். அழுதே அவன் இதயம் வெடித்து விடுமோ என கண்டோர் ஐயுறும் அளவு அது நிகழ்ந்தது.

கண்டோர் நெஞ்சமெல்லாம் உருகின. கண்ட கண்கள் எல்லாம் நீரைப் பெருக்கின. மன்னரின் இதயத்தையும் அவன் சொற்கள் அசைத்தன. அவன் அழுதுக் கொண்டே இருந்தான்.

துறவியின் மனமோ ஆனந்தக் கூத்தாடியது.

அவன் விடுவிக்கப்பட்டான்.

அந்த நாட்டின் எல்லையில் துறவியைச் சந்தித்தான்.

அப்போது அவன் சொல்லுவான்:

விடைப்பெற்று செல்லும்போது துறவியாகிய நீர் சொன்ன ஒரு சொல்தான் என்னை உலுக்கி விட்டது. என்னை விட பெருங் கொடுமைக்காரர்கள் தோன்றுவார்கள் என்பதே அது. புவியில் என்னை ஒப்பார் இருக்கக் கூடாது. என் அழுகையை கண்டோர் யாரும் என்னை மிஞ்ச முடியாது எனக் கூறி பெருமிதத்துடன் செல்வான்.

மனித மனத்தின் ஆழத்தில் வீழ்ந்த துறவி கரையேற முடியாமல் மூழ்கிப் போனார்.

*******


நான் எழுதிய இந்தக் கதை வழியாக எனக்குப் புரிந்தது ஒன்றுதான். மனதை அறிந்தவன் அந்த மாசிலாமணி மட்டுமே என்பதே அது. மனம் சிறு குளமா, குட்டையா, பேராழியா என புரிவதேயில்லை.

எனக்கே கோமணம் இதில் அம்மணிக்கு எப்படி பட்டுசேலை எடுப்பது?

sk natarajan

unread,
Mar 13, 2011, 10:19:58 PM3/13/11
to mint...@googlegroups.com, N. Kannan
உண்மையின் நிதர்சனம் உங்களின் வரிகளில் அமைந்துள்ளது
கவிதை அருமை ஐயா
கண்ணனை (கிருஷ்ணர் ) பற்றியும் ஒரு கவிதை தாருங்களேன்
Posted Image
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/3/5 N. Kannan <navan...@gmail.com>
நன்றாக உள்ளது!

ஸ்ரீரங்கத்து பரிபாஷை ஊடாட சுகமாக உள்ளது!

நான் கவி வடிவம் குறித்து முன்பொரு கவிதை செய்தேன்!


வடிவம்

புள்ளையார் பிடிப்பது சுலபம். பிள்ளையார் பிடிப்பது
போல. முருக்கு பிழியும் போது முன்னால் விழும்
துண்டு பிள்ளையார். பெண்கள் கூடும் போது
சின்ன மஞ்சள் துண்டு பிள்ளையார்.
சாணி உருண்டை கூட பிள்ளையார்தான்.
அழுக்கைத் திரட்டி பிள்ளையாய் சமர்த்தாய்
இரு என்று குளிக்கப் போனாள்.
உள் கிடக்கை உயிர் பெற்றது. கோயில்
வேண்டாம், கூறை வேண்டாம். இந்தியப்
பிரஜைக்குத் துணையாக
வானம் பார்த்து ஆற்றங்கரையில்...
பேனா எழுதுமா? மை உண்டா? என்றால்
போடு ஒரு புள்ளையார் சுழி. இப்படி புடிக்கப்
புடிக்கப் புள்ளையார். வடிவம் முதன்மை அல்ல.
இக்கவிதை போல.

உள்ளக்கிடக்கை உயிர் பெரும்.



நா.கண்ணன்


2011/3/5 selva kumaran <selvakumaran.ma@gmail.com>
>
> பெரிய செய்தி ஏதுமில்லை தேனீயாரே!
>
> அவ்வப்போது மன குட்டையில் தானாக துள்ளி எழுந்து வெளியே வந்து நீந்தும்  எண்ண ங்களின் பதிப்பே இந்த இழை.
>
> எல்லோரும் படிக்கக் கூடிய என் பர்ஸனல் டைரியின் பக்கங்கள் எனலாம்.
>
> எனக்கும் எழுதுவதற்கு ஆசை.   படிக்க ஒன்றிரண்டு பேர் மாட்டினால் போதாதா?  :)))
>
> 2011/3/5 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
>>
>> ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஅ
>> பழி வாங்கிட்டாரு வெங்கடாசலம்
>> அது சரி நீங்கள் பீடிகை போடுவதைப் பார்த்தால் ஏதோ பெரிய செய்தி பின்னால் வரப் போகிறது
>> என்று தோன்றுகிறது தொடருங்கள்
>> அன்புடன்
>> தமிழ்த்தேனீ
>>
>> 2011/3/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>
>>>
>>> ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! போன வாட்டி நீதானே சொன்னே! என் கவிதையை விட தலைப்புதான் நல்லா இருக்குன்னு! அதான்!", என்று சொல்லி விட்டு எழுந்து போய்விட்டான்//
>>>
>>> நல்லாச் சிரிச்சேன்.  நன்றி.
>>>
>>> 2011/3/5 selva kumaran <selvakumaran.ma@gmail.com>
>>>>
>>>> விமரிசனம் இழையை பார்த்தவுடன்  முதலில் நினைவிற்கு வந்தது, வெங்கடாசலத்தைப் பற்றிதான் (கற்பனை பெயர்).
>>>>
>>>>
>>>> "ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை! போன வாட்டி நீதானே சொன்னே! என் கவிதையை விட தலைப்புதான் நல்லா இருக்குன்னு! அதான்!", என்று சொல்லி விட்டு எழுந்து போய்விட்டான்.
>>>>
>>>>
>>>> பாவி! பழி வாங்கத்தான் பணிவாக பேசியிருக்கிறான் என்பது புரிந்தது.

>>>>
>>>>
>>>>
>>>> --
>>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>>
>>> --
>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil


--

வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

sk natarajan

unread,
Mar 13, 2011, 10:25:16 PM3/13/11
to mint...@googlegroups.com, selva kumaran
அருமையான முடிச்சுக்கள் கொண்ட கதை இது
பிரமாதம்
ஒரு திரைக்கதைக் குரிய அத்தனை சாராம்சங்களும் இதில்   உள்ளன 
வாழ்த்துகள் ஐயா
மேலும் இது போன்ற கதைகளை உங்களிடமிருந்து எதிர்நோக்குகின்றேன்
Posted Image
என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
http://tamizhswasam.blogspot.com/

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்



2011/3/14 selva kumaran <selvakumaran.ma@gmail.com>

செல்வன்

unread,
Mar 14, 2011, 1:17:45 AM3/14/11
to mint...@googlegroups.com
2011/3/13 selva kumaran <selvakumaran.ma@gmail.com>
5.  ஒரு துளிக் கண்ணீர்



நல்ல கருத்தோட்டமான கதை.

(ஆனால் என்னதான் திருந்தினாலும் இத்தகைய கொடியோர் தூக்கிலிடப்பட வேண்டும் என்பதே என் கருத்து )

selva kumaran

unread,
Mar 14, 2011, 4:44:02 AM3/14/11
to mint...@googlegroups.com
"(ஆனால் என்னதான் திருந்தினாலும் இத்தகைய கொடியோர் தூக்கிலிடப்பட வேண்டும் என்பதே என் கருத்து )"

செல்வன்! அவன் திருந்தவில்லை! கடைசி பத்தியில் இருக்கிறது விஷயம்!


2011/3/14 செல்வன் <hol...@gmail.com>
--

selva kumaran

unread,
Mar 18, 2011, 10:00:23 AM3/18/11
to mint...@googlegroups.com
6.அது ஒரு காவியமா?

பதினைந்து வருடங்களுக்கு முன் இருக்கலாம். ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர்,பேச்சாளர் ஒரு பத்திரிகையில் (தொலைக்காட்சியிலாகவும் இருக்கலாம்) ஒரு காவியத்தைப் பற்றி பேசினார்.

"எல்லோரும்  அந்த கவிஞரின் படைப்பை ஆஹா, ஓஹோ எனப் புகழ்கின்றனர். நான் படித்துப் பார்த்தப் போது அது மிகச் சாதரணமாகத்தான் இருந்தது. அவர் கவிஞர் என்பதில் எனக்கு ஒன்றும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்தப் படைப்பை உயர்வானது என்றே ஒப்புக் கொள்ள மாட்டேன். அது சராசரிக்கும் கொஞ்சம் கீழாகத்தான் இருந்தது."

அவர் சொன்னதைக் படித்ததும் (அல்லது கேட்டப்போது)  எனக்கும் மனம் வலித்தது. அவர் சாதாரண கவிஞர் மட்டுமா? எத்தகைய ஞானி. ஞானி மட்டுமா? அந்தப் படைப்பின் உள்ளே இருக்கும் சாராம்சம் என்ன சாதாரணமானதா? அதை எளிதில் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பது போலவா விமரிசிப்பது?!


அந்தக் கவிஞர் என் நண்பன் சம்பத்தின் தந்தையாருடன் மிக நெருங்கிப் பழகுபவர். அவர்கள் இருவருக்கும் இடையே இருந்தது ஆன்ம நட்பு. சம்பத்தின் தந்தையார் அந்த கவிஞரிடம் ஒரு மஹாத்மாவின் சரிதையை எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார்.

அப்போது, அந்த கவிஞர் சம்பத்தின் அப்பாவிற்கு, தபால் அட்டைகளில் பதில் அனுப்பி இருந்தார். அது ஆங்கிலத்தில் இருந்தது. அதில் இருந்த சாரம்சத்தை தருகிறேன். வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருக்காது எனவும் சொல்லிக் கொள்கிறேன்.

"எனக்கு எழுத முழுச் சம்மதமே! ஆனால் எப்படி முன்னால் நான் எழுதிய ---------------(அந்த படைப்பின் பெயரைக் குறிப்பிட்டு) போது, பல மாதங்கள் முழு மௌனத்துடன் தவத்தில் இருந்து எழுதினேனோ, அதே போல் இதை எழுதுவதற்கும் அப்படி இருக்க வேண்டி வரும். அப்படி இருந்து  எழுதுகிறேன்"

"மேலும் வெறுமனே என்னால் எழுதி விட முடியாது! உள்ளிருந்து ஒரு தெய்வீக உள்ளுணர்வு கிளம்ப வேண்டும்! அதன் வழிக்காட்டலில்தான் என்னால் எழுத முடியும்! அப்படித்தான் இந்த பெரியவரின் சரிதத்தை எழுதப் போகிறேன்!"



அந்த கவிஞர், யோகியின் பெயர் கவியோகி சுத்தானந்தப் பாரதியார்! அவர் பலமாதங்கள் மௌனத்தில்இருந்து, தவத்தில் ஆழ்ந்து எழுதிய காவியம் "பாரதசக்தி மஹா காவியம்".


"மோனத் தவமிருந்து  மயிர்காலில் மெய்வழிய வானம் வசப்படவே ஞானப் பால் கறந்தான்", என்று என் நண்பன் சம்பத்குமார்  ஒரு முறை அவரைக் குறித்து எழுதியிருந்தான்.

ஆயிரம் காலம் தவமிருந்து ஆரமுதை எழுதினாலும், சிலவற்றை சிலர் புரிந்துக் கொள்ள தெய்வம் தவமிருக்க வேண்டி வருமோ என்னவோ?





பின்குறிப்பு:
சம்பத் குமாரிடம் அனுமதிப் பெற்று  ஒரு தபால் அட்டையில் இருந்த சில வரிகளை மட்டும் இங்கே ஸ்கேன் செய்து இடுகிறேன்.

ksbmail.JPG

கிருஷ்ணமூர்த்தி

unread,
Mar 18, 2011, 11:49:18 AM3/18/11
to மின்தமிழ்
கவியோகி சுத்தானந்த பாரதியாருடைய கையெழுத்தைப் பார்த்ததில், மிகவும்
மகிழ்ச்சி!

பாரதசக்தி காவியம், கவியோகியாருடைய மனதில் நீண்ட நாட்களாகத்தங்கி
வளர்ந்துகொண்டிருந்த வடிவம். ஒரு சில மாதங்களில் முடிவானது அல்ல. ஒரு
தரம், எழுதிவைத்திருந்தது திருடுபோனதும், மறுபடி ஆரம்பத்தில் இருந்தே
எழுத ஆரம்பித்த சூழ்நிலையைப் பற்றியும் யோகியார் தன்னுடைய சுயசரிதையில்
தெளிவாகவே சொல்லி இருக்கிறார். ஆத்மசோதனை என்று முதல் பாகமாகவும்,
சோதனையும் சாதனையும் என்று அடுத்த பகுதியாகவும் வந்த இந்த சுயசரிதை,
இப்போது ஒரே புத்தகமாக சோதனையும் சாதனையும் என்ற தலைப்பில் சுத்தானந்த
நூலகத்தாரால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

சோதனையும் சாதனையும் என்று தலைப்பில் உள்ள மாதிரியே, கவியோகி தன்னுடைய
வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும், சாதனைகளையும் 1975 ஆம் ஆண்டு இதை
வெளியிடும் தருணம் வரை உள்ள பல நிகழ்ச்சிகளைச் சுவையோடு
விவரித்திருக்கிறார். நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவுகிற நூல்
இது!

------------------------------------
எழுத நினைத்தேன், எழுதிவிட்டேன்!


கிருஷ்ணமூர்த்தி

On Mar 18, 7:00 pm, selva kumaran <selvakumaran...@gmail.com> wrote:

selva kumaran

unread,
Mar 18, 2011, 3:07:25 PM3/18/11
to mint...@googlegroups.com
"பாரதசக்தி காவியம், கவியோகியாருடைய மனதில் நீண்ட நாட்களாகத்தங்கி
வளர்ந்துகொண்டிருந்த வடிவம். ஒரு சில மாதங்களில் முடிவானது அல்ல. ஒரு
தரம், எழுதிவைத்திருந்தது திருடுபோனதும், மறுபடி ஆரம்பத்தில் இருந்தே
எழுத ஆரம்பித்த சூழ்நிலையைப் பற்றியும் யோகியார் தன்னுடைய சுயசரிதையில்
தெளிவாகவே சொல்லி இருக்கிறார். "



திரு.கிருஷ்ணமூர்த்தி ஜி

பாரதசக்தி காவியம் எழுதப்பட்டது மாதங்களா, வருடங்களா என்பதில் நான் கவனம் வைக்கவில்லை. அதற்கு நான் முக்கியத்துவமும் தரவில்லை என்பதை என் எழுத்திலேயே அறிந்திருப்பீர்கள். இங்கே  கவியோகியார் எப்படி அதை எழுதினார் என்பதைத்தான் சொல்ல விரும்பினேன்.

பேனாவை எடுத்தோமா, கிறுக்கினோமா என்று எழுதியவரில்லை அவர்! அவர் உள்ளிருந்து மிளிர்ந்து வடிவெடுத்த தவம்! உண்மையில் சராசரியான எழுத்தோ என பலரை மயங்க வைக்கலாம். சற்றே உற்று நோக்கினால் போதும் உள்ளே மறைந்திருக்கும் தவஒளி விசுவரூபம் எடுத்து நிற்கும்.

அதை சொல்லவே இதை எழுதினேன். மற்றபடி மேற்கொண்டு அவர் கடிதங்கள் வழி அறிந்திருந்த விஷயங்கள் மிகவும் தனிப்பட்டவை. அவை இன்னும் அதி அற்புதமானவை. ஆனால் இங்கே தேவைப்படாது.

பாரதசக்தி மகா காவியம் கவியோகியின் தவம்.


2011/3/18 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>

N. Kannan

unread,
Mar 18, 2011, 9:17:49 PM3/18/11
to mint...@googlegroups.com
2011/3/18 selva kumaran <selvaku...@gmail.com>:

> ஆயிரம் காலம் தவமிருந்து ஆரமுதை எழுதினாலும், சிலவற்றை சிலர் புரிந்துக் கொள்ள
> தெய்வம் தவமிருக்க வேண்டி வருமோ என்னவோ?
>


ஆகா! திருவரங்கத்து தாமரைப் புரட்சியின் அடிநாதம் கேட்கிறதே!

திருவாய்மொழியின் ஒரு பாசுரத்தில் நம்மாழ்வார் ஆதிப்பிரான் நிற்க என
இருமுறை வருமாறு எழுதுவார். அதற்கு இப்படித்தான் வியாக்கியானம் போகும்.
நாம் இறைவனை அடைய வேண்டும் என் யத்தனப்படுவதை(??????)விட அவன் நம்மை
அடையச் செய்யும் பிரயர்த்தனம் வலியது!!

எனவேதான் ஏ.கே.இராமனுஜன் திருவாய்மொழி மொழிபெயர்ப்பில் பேசும் போது
ஒன்றுக்கு இரண்டுமுறை என்று விழுந்து, விழுந்து ஏன் சேவிக்கிறாய்? அவன்
உள்ளம் வருத்தப்படும்! என்று எழுதுகிறார். அதுதான் அவன் நிலை.

இறைவனைப் பற்றி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றுதானே இருக்கிறது
நமது அணுகுமுறை!!

அன்புடன்
நா.கண்ணன்

Geetha Sambasivam

unread,
Mar 18, 2011, 9:46:09 PM3/18/11
to mint...@googlegroups.com
படிக்கும்போதே கவியோகியைத் தான் கூறுகிறீர்கள் என்ற எண்ணத்துடனேயே படித்தேன். அவரே தான்.  அவருடைய கையெழுத்து இங்கேயும் ஒருவரிடம் பாரதசக்தி மஹா காவியத்தில் உள்ளது.  அதன் முதல் பதிப்பில். நன்றி உங்களுக்கு கவியோகியிடமும் பரிச்சயம் இருப்பது குறித்து மகிழ்ச்சி.  உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  மிகவும் எளிமையான வார்த்தைகளில் மனதைத் தொடும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள்வதில் மகிழ்ச்சி.

2011/3/18 selva kumaran <selvakumaran.ma@gmail.com>
6.அது ஒரு காவியமா?



"எ

karuannam annam

unread,
Mar 18, 2011, 11:36:53 PM3/18/11
to mint...@googlegroups.com, navan...@gmail.com


2011/3/18 N. Kannan navan...@gmail.com


ஆகா! திருவரங்கத்து தாமரைப் புரட்சியின் அடிநாதம் கேட்கிறதே!

அன்பிற்கினிய திரு கண்ணன்,
திருவரங்கத்துத் தாமரைப் புரட்சி என்ற சொற்றொடர் தங்களிடமிருந்து மிகுந்த உணர்வுடன் பலமுறை கேட்டுள்ளேன். அப்புரட்சி பற்றித் தனி இழையில் எங்களுக்கு அறியத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
!

எனவேதான் ஏ.கே.இராமனுஜன் திருவாய்மொழி மொழிபெயர்ப்பில் பேசும் போது
ஒன்றுக்கு இரண்டுமுறை என்று விழுந்து, விழுந்து ஏன் சேவிக்கிறாய்? அவன்
உள்ளம் வருத்தப்படும்! என்று எழுதுகிறார். 

அருமை
சொ.வி

coral shree

unread,
Mar 18, 2011, 11:43:53 PM3/18/11
to mint...@googlegroups.com
ஆம் ஐயா. நானும் நினைத்தேன் தாமரை புரட்சி பற்றி அறியும் ஆவலில் ....நன்றி.

2011/3/19 karuannam annam <karu...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Innamburan Innamburan

unread,
Mar 19, 2011, 3:33:00 AM3/19/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
'ஆயிரம் காலம் தவமிருந்து ஆரமுதை எழுதினாலும், சிலவற்றை சிலர் புரிந்துக் கொள்ள
தெய்வம் தவமிருக்க வேண்டி வருமோ என்னவோ?'

- சொல்லுக்குச் சொல் மந்திரமாக இருந்து, அமரிக்கையாக, தவமிருக்கத்
தூண்டும் சொற்றொடரிது. 'மனம் பேசுகிறது. இதல்லவோ ஆன்மீகம்! அடடா! ஓரளவு
புரிகிறதே' என்று சிந்திக்க வைக்கிறது. இத்தகைய அருமையான சொற்றொடரை
பார்த்து பல நாட்கள் ஆயின.
இன்னம்பூரான்
19 03 2011
2011/3/19 coral shree <cor...@gmail.com>:

selva kumaran

unread,
Mar 19, 2011, 3:41:37 AM3/19/11
to mint...@googlegroups.com
"திருவாய்மொழியின் ஒரு பாசுரத்தில் நம்மாழ்வார் ஆதிப்பிரான் நிற்க என
இருமுறை வருமாறு எழுதுவார். அதற்கு இப்படித்தான் வியாக்கியானம் போகும்.
நாம் இறைவனை அடைய வேண்டும் என் யத்தனப்படுவதை(??????)விட அவன் நம்மை
அடையச் செய்யும் பிரயர்த்தனம் வலியது!!"


திரு. கண்ணன்

உங்களை என்னவென்று சொல்லலாம்?!

உங்கள் ஒவ்வொரு சொல்லிலும்  எம்பெருமானை அன்போடு வருடி அன்பைக் கொட்டும் மந்திரஜாலம்.

உங்கள் இழை ஒன்றில் 'கோகுலத்தின் கோக்குமாக்கு' என்று உங்கள் பெயரை வேடிக்கையாக இட்டிருந்தீர்கள். மெய்யாகவே கோகுல கோக்குமாக்கேதான்.



2011/3/19 N. Kannan <navan...@gmail.com>

--

selva kumaran

unread,
Mar 19, 2011, 3:50:51 AM3/19/11
to mint...@googlegroups.com
" நன்றி உங்களுக்கு கவியோகியிடமும் பரிச்சயம் இருப்பது குறித்து மகிழ்ச்சி.  உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்"

கீதா ஜி

எனக்கு கவியோகியின் பரிச்சயம் மிகக் குறைவே! என் நண்பர் சம்பத்தின் அப்பாவிற்குதான் நெருக்கம் அதிகம்! மேலும் அந்த Scan செய்த மடலும் சம்பத்தின் அப்பாவிற்கு வந்த ஒன்றே!




2011/3/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Mar 19, 2011, 3:54:06 AM3/19/11
to mint...@googlegroups.com
ஓ, அப்படியா?? :( நல்லது.  உங்கள் எழுத்தின் தெளிவு அற்புதம்!

2011/3/19 selva kumaran <selvakumaran.ma@gmail.com>
" நன்றி உங்களுக்கு கவியோகியிடமும் பரிச்சயம் இருப்பது குறித்து மகிழ்ச்சி.  உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்"

கீதா ஜி

எனக்கு கவியோகியின் பரிச்சயம் மிகக் குறைவே! என் நண்பர் சம்பத்தின் அப்பாவிற்குதான் நெருக்கம் அதிகம்! மேலும் அந்த Scan செய்த மடலும் சம்பத்தின் அப்பாவிற்கு வந்த ஒன்றே!




























--

--

Tthamizth Tthenee

unread,
Mar 19, 2011, 4:06:43 AM3/19/11
to mint...@googlegroups.com
ஆஹா கவியோகி சுத்தானந்த பாரதி அவர்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட படி

சொற்களை தட்டச்சு செய்ய இயந்திரங்கள் உள்ளன 

ஆனால் மனதில் உள்ள கருத்தை புரிந்துகொண்டு தட்டச்சு செய்ய  
இதயம் புரிந்த மனிதர்கள் இல்லை என்றே தோன்றுகிறது

அன்புடன்
தமிழ்த்தேனீ
2011/3/18 selva kumaran <selvakumaran.ma@gmail.com>

selva kumaran

unread,
Mar 21, 2011, 7:58:45 AM3/21/11
to mint...@googlegroups.com
7. அப்போதுதான் புரிந்தது

இப்போது சொல்லப்போவது உமக்கு கதை என்று தோன்றினாலும் சரி, நிஜம் என்று தோன்றினாலும் சரி! நான் மேல் விளக்கம் ஏதும் தரப்போவதில்லை. விஷயம் புரிந்தால் சரி.

ஏ.ஆர்.ஆர்  அவரது துறையில் மிகப் பெரிய நிபுணர்; பிஸ்தா.  இந்த வருடத்தோடு அவர் இப்பூவுலகை நீத்துப் பதினான்கு வருடங்கள் ஆகின்றன.

அவர் வாழ்ந்த காலத்தில், அவர் நிகழ்த்தும் சொற்பொழிவுகளைக் கேட்க அத்துறையில் உள்ளவர் முண்டியடித்து ஓடுவர். அவ்வளவு நன்றாக இருக்கும். பத்து வருடங்கள் கடின உழைப்பை இட்டு அவர் துறைக்கான ஒரு ஆய்வு நூலையும் எழுதி வெளியிட இருந்தார்.  மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும், ஏன் அவர் துறையின் நிபுணர்களுக்குமே கூட அது ஒரு அற்புதமான நூல். இப்போதும் ஏ. ஆர்.ஆரின் நூல்கள் இணையத்தில் உண்டு. அவர் சொற்களை அங்கே இங்கே என நிபுணர்கள் சொல்லி பேசிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

அவர் வந்தாலே எனக்குக் கொஞ்சம் ஒவ்வாமை. இரண்டு, மூன்று விதமான பிரிவுகள் எங்கள் கும்பலிலேயே உண்டு. அதிலொன்று ஆத்திக கும்பல். இலக்கியக் கூட்டம் முடிவடைந்தப் பின்னர் அந்தக் கூட்டத்தில், ஒத்த மனமுடையவர்கள் இந்த ஆத்திக கும்பலாய் ஒன்று சேர்வார்கள். இரமண மஹரிஷியில் ஆரம்பித்து அப்போது இருந்த பாண்டிச்சேரி மதர் வரையிலும் எல்லாவிதப் பேச்சுக்களும் ஓடும்.

ஏ.ஆர்.ஆர். இந்த ஆத்திகக் கும்பலைத் தேர்ந்தெடுத்து வந்து கலந்துக் கொள்வார். இவர் வயதில் மிகப் பெரியவர். நல்ல கல்வியாளர். அதனால் அந்தக் கும்பலில் இவர் கருத்துக்கு எதிர் கருத்து கூற அனைவருக்கும் தயக்கம் உண்டு.

ஏ. ஆர். ஆருக்கு இரமண மஹரிஷியிடமோ இல்லை அப்போதுதான் வெளிப்படத் தெரிந்திருக்கும் சாமியாரிடமோ எந்த வித எதிர்ப்பும் இல்லை. ஆனால் விசித்திரத்திலும் விசித்திரமாக அவருக்குப் பெரிய புராணத்திலும், திருஞானசம்பந்தப் பெருமானிடத்திலும் அப்படி ஒரு எதிர்மறைக் கருத்து.

எப்படியாவது இந்த தலைப்பை உட்புகுத்தி, அன்றைக்குப் பெரிய தர்ம சங்கடத்தை உண்டு பண்ணி விடுவார். திருஞானசம்பந்தப் பெருமான் பாடியவைகளிலிருந்து ஏகப்பட்ட பிழைகளை கண்டறிந்ததாகச் சொல்லிச் சித்திரவதை செய்து விடுவார். பாவம் யாரோ ஒரு தமிழறிஞர் பாடியவைகளை ஒரு பெருமானார் பாடியதைப் போல சொல்லிவிட்டார்கள் என்று அழுத்தந்திருத்தமாகச் சொல்லுவார். எனக்கு பக்தி அவ்வளவாக இல்லை என்றாலும், இவர் இப்படி பேசுவது அச்சமாக இருக்கும். நாமும் இப்படி மேதையாகி விட்டால், இதைப் போல்தான் செய்வோமோ என்ற பயமும் கூடவே வரும்.

அறிவெனும் மழை பொழியும் மழைக்காலத்தில், அகங்காரம் எனும் கொசுக்களும் சேர்ந்தல்லவா வந்து விடுகின்றன!

அவர் திருஞானசம்பந்தர் பாடல்களில் சொன்ன குறைகளை இங்கே இடப்போவதில்லை. அந்த பாவத்தைச் செய்யவும் நான் தயாரில்லை.


ஆத்திக கும்பலில் அமர்ந்திருக்கும் ஒரு சிலருக்கு, சில சமயம் குறிஞ்சிபபூ போல ரோஷம் வந்து விடும்.

"சார்! டக்குனு அப்படி ஞானசம்பந்தரை எடைப் போட்டுடாதீங்க! அது ஞானப்பால் குடித்தக் குழந்தை!"

"நீ தான் நேரில் பார்த்தியாக்கும்! தெருவிலே கண்ணெதிரே நடக்கும் நிகழ்ச்சியையே சரியா பார்க்கிறோமோ இல்லையோ? இதில் அவர் அதைக் குடிச்சார், இதைக் குடிச்சார்னு!  இதோ பாரு,  மணி! பால் குடிச்சிருந்தா  அது பாட்டுலே தெரியும்டா!"

"என்ன சார் இது! பாட்டுலேதான் அபாரமா தெரியுதே!"

"என்ன தெரியுது?! இலக்கணப்படி பாட்டு இருந்துட்டா , எழுதிட்டா அது ஞானமா? இலக்கண அறிவு, சுத்த ஞானம் ஆகாதுடா!"

"அதுலே அப்படி என்ன ஞானம் இல்லை?"

"என்ன இருக்கு சொல்லேன் பார்ப்போம்? இராவணனை கர்வ பங்கம் பண்ணான், கிருஷ்ணனே வணங்கினான் அது இதுன்னு சொன்னதேதான் எலலா பாட்டிலும் வரும்! இதுலே ஞானம் எங்கேடா இருக்கு?

திருமாலை மாற்று என்று சொன்னால், அதிலும் ஒரு விதண்டாவாதம் வைத்திருப்பார். அவருடைய அறிவு கொசப்பேட்டை ரவுடியிடம் மாட்டிக் கொண்ட பிச்சுவா மாதிரி!

அவர் சொல்வது தப்பு என்று புரியும்; ஆனால் வாதம் செய்ய யாருக்கும் திறனில்லை.

அடுத்து சேக்கிழார் மாட்டிக் கொள்வார்.

இவர் பேசிக் கேட்டால், அன்று முழுக்கச் சிவராத்திரி விரதமாய் விழித்திருந்து சிவசிவா என்று சொன்னால் மனம் கொஞ்சம் சாந்தி பெறும். அப்படி குட்டையைக் கலக்கி விட்டு விடுவார்.



அதற்கடுத்த மாதம், எங்கள் கும்பலில் வந்து வழக்கம்போல் திடீரென அமர்ந்தார்.

யாராலும் சட்டென ஓடிப் போக முடியவில்லை.  எழுந்து படிக்கட்டு அருகே போன ஒருவரையும் 'வா' எனக் கூப்பிட்டுத் தன்னருகே அமர்ட்திக் கொண்டார்.

அன்று ஏ.ஆர். ஆர் முகம் கடுகடு என இருந்தது. அதற்கு முன்பெல்லாம் அவர் முகம் பச்சை மிளகாய் கடித்தாற் போல்தான் இருக்கும்.

என்னடா இது, கோளறு பதிகம் பாடியவருக்கு இவ்வளவு நூற்றாண்டுக்குப் பிறகா இப்படி ஒரு ஏழரை என்று தோன்றியது.

அன்று ஏ. ஆர். ஆர் சேக்கிழாரைப் பற்றியும் பேசவில்லை; திருஞானசம்பந்தரைப் பற்றியும் பேசவில்லை.

"மன்னார்குடியைத் தாண்டாதவன் மதுரையைப் பற்றிப் பேசினார் போல இருக்கு! தெரியாத மரமண்டைகள் தனக்குத் தெரியலைன்னு ஒத்துக்கணும்!"

என்னடா இங்கே இருக்கறவர்களில் யாருக்கோ ஏழரை திரும்பி விட்டதா என்று ஒரு யோசனை ஓடியது.

"நாற்பத்தஞ்சு வருஷ அனுபவம்!  ஒவ்வொரு நாளும் அதிலேயே ஊறிப் போய் அதிலேயே வாழறவன் நான்!  இவனுங்க ஊரைப் பொறுக்கிட்டு, பொழுது போகலைன்னா என் சப்ஜெக்டைப் படிப்பாங்க! இந்த லட்சணத்துலே என் எழுத்துலே குறை இருக்குன்றான்! மிஸ்டேக் பண்ணிட்டேனாம்! அட குருமுட்டை! அது என்ன வரின்னு புரிஞ்சுக்க உனக்கு இந்த ஆயுசு போதுமாடா?"

ஓஹோ! யாரோ இவர் புத்தகத்தை ஏடாகூடமாக விமரிசித்து விட்டார்கள் போலும்!

"பெரிய புரபொஸராம்! மனப்பாடம் பண்ணா இன்னி பொழுதுக்கு கழுதைக் கூட புரபெஸராகும்! உண்மையான புரபொஸரை சல்லடைப் போட்டுத்தான் தேடணும்!  அதெப்படி இரண்டு வாரத்துக்குள்ளே என் புக்கைப் படிச்சுட்டி, தப்பெல்லாம் இவனுக்குத் தெரியறது? பேசாம அந்த புக்கை புஸ்தகக் கடைலே போட்டுட்டு பேரீச்சம்பழம் வாங்கித் தின்ன வேண்டியதுதானே!"

முதன்முறையாக் எங்களுக்குள் இறுக்கம் தளர்ந்து சிரிப்பு வந்தது. ஆனால் சிரிக்கப் பயம்!

"அந்த ஸ்வீடன்காரன் எழுதினதை கோட் பண்ணி என்னோடது தப்புன்றான்! அந்த ஸ்வீடன்காரன் என்ன எழுதி இருக்கான்னாவது இவனுக்கு புரியுமா? மக்கப் கேஸெல்லாம் என் புஸ்தகத்தைப் படிக்கலைன்னு எவன் அழுதான்? சரி! ஒனக்கு புரியலையா...நீ என்னப் பண்ணி இருக்கணும்! என்கிட்டே வந்து என்ன அர்தத்துலே சார் எழுதி இருக்கீங்கன்னு கேட்டா சொல்லிட்டு போறேன்! நீயா என்னத்தையாவது நினைச்சுக்கிட்டு என் பிராணனை ஏன் வாங்கணும்? பத்து வருஷ உழைப்புடா!  ஒன் டெகேட்! பொட்டிக்கடையிலே கமர்கட் மாதிரி தின்னுப் பார்த்துட்டு சுமார்ங்கறான்!"


"விடுங்க சார்! போகப் போக புரிஞ்சுப்பாங்க சார்!"

"போகப் போகவா? நான் உயிரோட இருக்கறப்பவே இப்படி ஏடாகுடமா உளர்றானே....நான் செத்துப் பூட்டா அவன் என்ன வேணா உளறிட்டுத் திரிவான்! உண்மையைச் சொல்லக் கூட ஆளிருக்காது!"


"கரெக்ட் சார்! இங்கே திருஞானசம்பந்தருக்கே அப்படி ஆகலையா?"

விருட்டென திரும்பி அப்படிப் பேசிய இராமலிங்கத்தைத் திரும்பிப் பார்த்தார். மேற்கொண்டு பேசாமல் எழுந்துப் போய்விட்டார்.


நாங்களெல்லாம் உறைந்துப் போய் அமர்ந்திருந்தோம்.

Geetha Sambasivam

unread,
Mar 21, 2011, 11:39:38 AM3/21/11
to mint...@googlegroups.com
என்னடா இது, கோளறு பதிகம் பாடியவருக்கு இவ்வளவு நூற்றாண்டுக்குப் பிறகா இப்படி ஒரு ஏழரை என்று தோன்றியது.//

சிரிச்சு மாளலை.  அடுத்தது எப்போனு ஏங்க வைக்கிறது. அந்தக் கடைசி வரி, பஞ்ச், நல்ல நயம்!

2011/3/21 selva kumaran <selvakumaran.ma@gmail.com>
7. அப்போதுதான் புரிந்தது


விருட்டென திரும்பி அப்படிப் பேசிய இராமலிங்கத்தைத் திரும்பிப் பார்த்தார். மேற்கொண்டு பேசாமல் எழுந்துப் போய்விட்டார்.


நாங்களெல்லாம் உறைந்துப் போய் அமர்ந்திருந்தோம்.
360.gif

selva kumaran

unread,
Mar 21, 2011, 11:47:47 AM3/21/11
to mint...@googlegroups.com
நீங்க மதுரைப் பக்கமா? வேற யாரும் இந்த ஏழரைங்கற சொல்லை இவ்வளவு இரசித்து சிரிக்க மாட்டார்கள்! :)))

2011/3/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>
360.gif

Geetha Sambasivam

unread,
Mar 21, 2011, 10:09:48 PM3/21/11
to mint...@googlegroups.com
ஹாஹாஹா ஆமாம், மதுரையே தான்! (எப்படியோ கண்டு பிடிச்சுடறாங்கப்பா)

2011/3/21 selva kumaran <selvakumaran.ma@gmail.com>
நீங்க மதுரைப் பக்கமா? வேற யாரும் இந்த ஏழரைங்கற சொல்லை இவ்வளவு இரசித்து சிரிக்க மாட்டார்கள்! :)))


2011/3/21 Geetha Sambasivam <geetha...@gmail.com>
என்னடா இது, கோளறு பதிகம் பாடியவருக்கு இவ்வளவு நூற்றாண்டுக்குப் பிறகா இப்படி ஒரு ஏழரை என்று தோன்றியது.//

சிரிச்சு மாளலை.  அடுத்தது எப்போனு ஏங்க வைக்கிறது. அந்தக் கடைசி வரி, பஞ்ச், நல்ல நயம்!


--
360.gif

selva kumaran

unread,
Mar 29, 2011, 3:04:35 PM3/29/11
to mint...@googlegroups.com
8. ஒட்டாத சென்மம்

திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சிவபெருமானை உள்ளத்தில் வைக்காத பாவி என்ற பொருளில் 'ஒட்டாத பாவி' என்ற சொல்லாடலை உபயோகித்து இருப்பார்.

சிவபெருமானிடத்தில் அப்படி நான் இல்லாவிட்டாலும், இந்த அறிஞர்களின் கும்பலில் அடியேன் எப்போதுமே ஒரு ஒட்டாத பாவி.
அதே சமயம் அவர்களைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஆவி.
அவர்கள் கவனிக்காவிட்டாலும் கூவிக்கொண்டிருப்பேன் கூவி.
( தற்செயலாக டிவியில் ஒரு படத்தை கால் மணி நேரம் பார்த்துவிட்டேன்.  அதன் பாதிப்புதான் இதைப் போன்ற வசனம். என்ன படம், யார் படம் என்று விளக்க வேண்டிய அவசியமே இல்லை)

ஆவிக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம்தான். ஆவிக்கு கால் இல்லை; எனக்கு மூளை இல்லை அம்புட்டே! சூடு சுரணை இத்யாதி எல்லாம் உண்டா என்று கேட்காதீர்கள். ஒருவன் தனிப்பட்ட எல்லா விஷயத்தையுமா பொதுவில் போட்டு சொல்லிக் கொண்டிருக்க முடியும்.


அப்படி என்ன இந்த அறிஞர்களோடு ஒட்டவில்லை என்கிறீர்களா?! அவை பல கொடுமைகள். அதில் ஒன்றை சொல்லுகிறேன். இது எந்ன மாதிரி படைப்பு என சட்டென்று நீங்களே ஒரு முடிவுக்கு வந்து விடுவீர்கள்.


கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம்  இந்த இலக்கியக் கும்பலில் கலந்துக் கொள்வேன்.

இந்த இலக்கிய கும்பலிலும் வடிக்கட்டிய மேதைகளாக சிலர் இருந்தனர்.


திரைப்படங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தப்போதுதான் இந்த மேதைகளின் வட்டத்திற்குள் மாட்டிக் கொண்டேன். பொதேர் பொஞ்சொலி, ஒபரொஜிதோ, சோருலொதொ என்றெல்லாம் பேசினார்கள். எனக்கு முந்தி குழம்பி, அப்புறம் விசாரித்து தெளிவடைந்திருந்த வெங்கடாசலம்தான் விஷயத்தை சொன்னான்.

பதேர் பாஞ்சாலி, அபராஜிதா, சாருலதா என்ற வங்காளப் படங்களே அவை. சத்யஜித் ரேயின் படங்கள்.

அவற்றை புகழோ புகழ் என்று புகழ்ந்துத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். அந்த படங்களை ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அப்படியே சொன்னார்கள். இவற்றைப் பிடித்திருந்தால்தான் ஒருவன் மேதையாகவே ஆக முடியும் என்று உள்ளே படிந்து விட்டது.

புசு புசுவென பூந்துடைப்பம் போல் இருக்கும் கோஷ் (அது வங்காள உச்சரிப்பு. காஷ்ஃபூல் என்பது பெயர்)  பூக்களின் நடுவே  துர்க்கா என்ற பெயர் கொண்ட சிறுமி ஓடி வருவதையும்,  பெரிய மின்சார ட்ரான்ஸ்பார்மர் தூணில் காதை வைத்து சத்தம் கேட்பதையும், அவளை தொடர்ந்து  வரும் சிறுவன் அதே போல் கேட்பதையும் அரை மணி நேரம் விவரித்துச் சொல்வர்.  கேமரா ஆங்கிள்! கேமிரா படிப்படியாக ஜூம் ஆகி துர்க்கா முகத்தைக் காட்டும்போது அவள் முகத்தில் அனைத்தையும் அறிந்துக் கொள்ள துடிக்கும் சிறு வயதின் ஆர்வம் எப்படித் தெரிகிறது என்று பேசும்போது அவர்கள் கண்கள் மின்னும்..

எனக்கோ தரிசனம் அடைந்த ஞானிகளுக்கு பக்கத்தில் நின்று அவர்கள் தரிசனம் மஹாத்மியத்தை பரிதவிப்புடன் பார்க்கும் கற்றுக்குட்டியின் நிலை.

"அந்த கரண்ட் கம்பத்தையும், கம்பிகளையும் காமிச்சு அப்படியே அந்த பொண்ணை காமிப்பான் பாரு......என்னென்னவோ புரியும்!"

"ஆக்சுவலி அட் தட் டைம்  ஹீ ஷோட், த கர்ல் வாஸ் சூவிங் அட் அ ஷுகர் கேன்!ஆனால் அந்த பொண்ணு இன்ன பண்ணுதுன்னா அதை மெல்லறதை நிறுத்திட்டு அப்படியே பார்க்கும். அ    ஃப்ரீஸ் ஷாட்! நல்லா கவனிப்பா.....என்னா விஷயம் அது! கரும்பு ருசியை கூட அந்த பொண்ணு கவனிக்கலை. ஆனால் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்ற ஆர்வம், துன்ற ருசியை கூட மிஞ்சிடுச்சுனு காமிக்கிறாரு!"

எனக்கா.... பட படவென் ஆர்வம் மேலோங்கி அந்த கரண்ட் கம்பத்தின் மேலேயே நின்றுக் கொண்டு காட்சிகளை மனக்கண்ணில் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சார்மினார் சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்து,  மீசையை நீவி விட்டுக்  கொண்ட  பாசு ,

"அப்போ என்ன காமிச்சாருன்னு பார்த்தீங்களா?"

"யாரு? என்னத்தை?"

எல்லோரும் கேட்டவரை ஒரு முறை முறைக்க, அவர் சுதாரித்துக் கொண்டார்.

"எதை சொல்லறீங்க பாசு சார்?"

"அந்த பொண்ணு கரும்பு தின்னறதை மட்டும் காமிக்கலை, அந்த பொண்ணோட மூக்குத்தி நல்லா நம்ம கண்ணுல படறா மாதிரியும் காமிக்கிறாரு! நானே இதை மூணாந் தடவை பார்க்கும் போதுதான் கவனிச்சேன்!"

"ஆமா ஆமாம்!"

"அது என்னான்னா....அவ்வளோ சின்னப்பொண்ணை நம்ம சமூகம் பெரிய மனுஷியாக்கி வுட்டுடுது! ஆனாலும்  சின்னப்பொண்ணு சின்னப்பொண்ணுதான்! அதோட இயற்கை குணமா இருக்கற விளையாட்டுத்தனம் போவுமா? அதை காமிக்கிறாரு!"

"மொத்தம் அஞ்சு நிமிச சாட்டு!  நூறு வருசம் பேசும்!", என்றார் ஒருவர் சுள் கொட்டிக் கொண்டு.

"அதுலே காமிக்கிறானே புதரு புதரா பூவுங்க! அது நடுவிலே இல்லாம உதிர்ந்துப் போச்சாம்! அதுக்காக எட்டு மாசத்துக்கு மேலே காத்திருந்து  அந்த ஷாட்டை எடுத்திருக்கான்! என்ன டெடிகேஷன்!"


ஐயோ.....இப்படி ஒரு வீண் பிறவியாக ஆகி விட்டேனே என்று துடித்தேன்.

சுற்றி  இருக்கும் தியேட்டர்களில் எல்லாம் எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர் படங்களாகப் போட்டு என்னை வளர விட மாட்டேன் என்கிறார்களே என்ற வருத்தம் கோபமாகி எல்லா தியேட்டர் ஓனர்களையும் சபிக்கும் அளவுக்குப் போய்விட்டேன்.


அந்த வருடம் சென்னையிலேயே இந்த படங்களை எல்லாம், ஒருவாரம் தொடர்ந்து போட்டார்கள்.

சிதம்பரத்துக்கு போக நந்தனாருக்கு அனுமதி கிடைத்ததும், அவர் குதித்தாற்போல, நானும் குதிக்க ஆரம்பித்து விட்டேன்.

வெங்கடாசலத்திடம் பணம் இல்லாததால் அவன் வர முடியவில்லை.

முதல் நாளே பதேர் பஞ்சாலி! போய் உட்கார்ந்தேன்.

படம் போகிறது. போகிறது. போ.......................கிறது. போய்க் கொண்ட இருக்கிறது.  ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.கூட இருந்தவர் எட்டாவது முறை வந்ததாக சொல்லிக் கொண்டார். நியாயம்தான் என எண்ணிக் கொண்டேன்.

படம் முடிந்ததும் எல்லோரும் எழுந்து நின்று கைத்தட்டினார்கள்.

நானும் தட்டினேன். என் பள்ளியில், வகுப்பு எல்லாம் முடிந்தவுடன், மாலையில் அந்த விழா இந்த விழா என்று வைத்து ஆறு மணி வரை உட்கார வைத்து விடுவார்கள். அந்த விழா முடியும்போது எல்லோரும் பலமாகக் கைதட்டுவோம். அதே போல்தான் அன்று கைதட்டினேன்.

பஸ்ஸில் வீட்டிற்குத் திரும்பும் போது ஒரே கவலை. இன்னும் மூன்று நாள் படங்களை எப்படி பார்க்கப் போகிறேன் என.

மறுநாள் காலையில் வெங்கடாசலம் உர் என்ற முகத்துடன் வந்தான். அவனால் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் தெரிந்தது.

"படம் எப்படி?"

பதில் சொல்ல வாயைத் திறக்கும்போது, அருகிலேயே நின்றுக் கொண்டு  டீ குடித்துக் கொண்டிருந்த பாசு சாரை பார்த்து விட்டேன். உண்மையைச் சொல்லி 'உருப்படாதவன்' என்ற பட்டத்தை வாங்கிக் கொள்ள நான் தயாரில்லை.

விழித்துக் கொண்டிருந்தப் போதெல்லாம் கண்ணில் பட்ட சீன்களை எனக்கே உரிய டகால்டி வேலைகளுடன் விவரித்தேன். பாசு சாரின் கண்கன் மின்னின.


வெங்கடாசலத்தின் முகம் அப்படியே தொங்கி விட்டது.

"என்னடா படம் போக முடியவில்லையே என்ற வருத்தமா?", என்றேன்.

ஆமாம் என்று தலையாட்டினான்.

"இந்தா நீ போய் பார்! காலேஜில் எனக்கு டெஸ்ட் வைக்கிறார்களாம்! லீவ் போட்டால் வம்பு!", என்று டிக்கெட்டுகளை நீட்டினேன்.

அவனால் அவன் கண்களையே நம்ப முடியவில்லை. அந்த டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு தரையில் கால் பாவாமல் அப்படியே பறந்து வீட்டிற்குச் சென்றான்.

என் வீட்டிற்கு வெளியே எங்க வீட்டுப் பிள்ளை போஸ்டர் ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.

புரட்சித் தலைவரை அப்படி ஒரு பாசம் பொங்கப் பார்த்தேன்.

Mohanarangan V Srirangam

unread,
Mar 29, 2011, 3:58:49 PM3/29/11
to mint...@googlegroups.com, selva kumaran
ஐயா! நான் மிக ரசிக்கும் எழுத்துகளில் ஒன்று உங்களுடையது. 

நிறைய பதில் எழுதணும்னு நினைச்சு சிலதை அப்படியே போட்டு வச்சுருக்கேன். 

நிறுத்திப்பிடாதீங்க. நல்ல எழுத்து கம்மியாத்தான் வருது. 
:-))

2011/3/30 selva kumaran <selvakumaran.ma@gmail.com>

Geetha Sambasivam

unread,
Mar 30, 2011, 12:28:19 AM3/30/11
to mint...@googlegroups.com
படம் போகிறது. போகிறது. போ.......................கிறது
. போய்க் கொண்ட இருக்கிறது.  ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.கூட இருந்தவர் எட்டாவது முறை வந்ததாக சொல்லிக் கொண்டார். நியாயம்தான் என எண்ணிக் கொண்டேன்.//

ஹையோ, முடியலைங்க, எப்படிச் சிரிக்காமல் எழுதினீங்க?? தாங்கலை, கண்ணிலே தண்ணி வந்துடுச்சு, எனக்கு என்னமோ ஆயிடுச்சுனு என்னோட கணவருக்குப் பயம் வந்துடப் போகுதுனூ சிரிப்பை நிறுத்த முயன்றேன், முடியலை!   அதிலும் அந்த எட்டாவது முறை வந்ததுக்கு நியாயம் தான் னு நினைச்சீங்க பாருங்க. அம்ம்ம்ம்ம்மாடி, அந்த பஞ்சு!! போதுண்டா சாமி!   நாலு நாளாக் காணோமேனு நினைச்சேன்.


2011/3/30 selva kumaran <selvakumaran.ma@gmail.com>
8. ஒட்டாத சென்மம்



படம் போகிறது. போகிறது. போ.......................கிறது. போய்க் கொண்ட இருக்கிறது.  ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.கூட இருந்தவர் எட்டாவது முறை வந்ததாக சொல்லிக் கொண்டார். நியாயம்தான் என எண்ணிக் கொண்டேன்.










333.gif
360.gif

karuannam annam

unread,
Mar 30, 2011, 12:48:55 AM3/30/11
to mint...@googlegroups.com
மிகவும் இரசித்தேன் திரு செல்வகுமரன்.
 
சொ.வினைதீர்த்தான்

2011/3/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>
333.gif
360.gif

Madhurabharathi

unread,
Mar 30, 2011, 1:18:42 AM3/30/11
to mint...@googlegroups.com
லகுவான நகைச்சுவை நடை. எளிதில் கைவருவதில்லை. உங்கள் பலம் இது. கலக்குங்கள்.
 
அன்புடன்
மதுரபாரதி

Tthamizth Tthenee

unread,
Mar 30, 2011, 1:17:46 AM3/30/11
to mint...@googlegroups.com, selva kumaran
செல்வகுமரன் இந்த நடைக்காகவே படிக்கிறேன் நீர் எழுதுவதையெல்லாம்

இல்லேன்னா படிக்க மாட்டேனா ன்னு கேக்காதீங்க

படிப்பேன் படிச்சிட்டு லேசா மறந்துருவேன், ஆனா உங்க எழுத்தைப் படிச்சிட்டு 
  என்னை மறக்கிறேன் சிரிக்கிறேன்

அனேகமாக இது போன்ற அனுபவங்கள் எனக்கும் உண்டு

நானே சத்யஜித்ராய் அவர்களின் ரசிகன்

சரி எதுக்கும் நீங்க ” கீத் காயா பத்ரோனே “  படம் பாருங்க

நான் மிகவும் ரசித்த படம்

அன்புடன்
தமிழ்த்தேனீ



2011/3/30 selva kumaran <selvakumaran.ma@gmail.com>
330.gif

Geetha Sambasivam

unread,
Mar 30, 2011, 1:29:07 AM3/30/11
to mint...@googlegroups.com

சரி எதுக்கும் நீங்க ” கீத் காயா பத்ரோனே “  படம் பாருங்க

கீத் காயா பத்தரோனே, சாந்தாராம் படம். மராட்டிக்காரர்.  கதாநாயகி அவர் மனைவிதான். சந்தியா. அவங்க பெண் ராஜஸ்ரீ என்னும் நடிகை.  திடீர்னு அப்பாகிட்டே சொல்லாமலே வெளிநாடு போயிட்டாங்கனு சொல்வாங்க.  குடும்பமே திரைக்குடும்பம்.

2011/3/30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>


சரி எதுக்கும் நீங்க ” கீத் காயா பத்ரோனே “  படம் பாருங்க

நான் மிகவும் ரசித்த படம்

அன்புடன்
தமிழ்த்தேனீ
330.gif
360.gif

Geetha Sambasivam

unread,
Mar 30, 2011, 1:29:58 AM3/30/11
to mint...@googlegroups.com
சத்யஜித் ரே வங்காளி.  செல்வகுமரன் சொல்லி இருப்பவை வங்காளப் படங்கள்.  சாந்தாராம் ஹிந்திப் படங்கள் தான் எடுத்தார்.

2011/3/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>
330.gif
360.gif

Tthamizth Tthenee

unread,
Mar 30, 2011, 1:59:35 AM3/30/11
to mint...@googlegroups.com
”கீத் காயா பத்தரோனே, சாந்தாராம் படம். மராட்டிக்காரர். ”

சாந்தாராமும் சத்யஜித் ரே வுக்கு சமமான இயக்குனர் என்பதற்காக சொன்னேன் கீதாம்மா

எனக்கு சத்யஜித்ரே, சாந்தாராம் இருவரின் படங்களும் பிடிக்கும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/3/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>
--
330.gif
360.gif

Raja sankar

unread,
Mar 30, 2011, 6:02:03 AM3/30/11
to mint...@googlegroups.com
இது தான் பஞ்ச் டயலாக்கா?  :-)))

நல்லாயிருக்கு.

ராஜசங்கர்

selva kumaran

unread,
Mar 30, 2011, 6:14:28 AM3/30/11
to mint...@googlegroups.com
"இது தான் பஞ்ச் டயலாக்கா?  :-)))"- rajasankar


?????????

ஏம்பா இது நியாயமா? :))))

நானா பஞ்ச் டயலாக்குனு சொன்னேன்?

அய்யம்பேட்டை குறும்பு என்று சொல்வார்கள். அதை போல் அல்லவா இருக்கிறது?


தெருவில் ஒருவர் ' தேமே' என்று போய்க் கொண்டிருப்பார்.  இரண்டு பேர் வாசலில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

அதில் ஒருவர்,

"அங்கே போறானே அந்த பிள்ளையாண்டான் பாகதவராட்டம் (தியாகராஜ பாகவதர்) பாடுவான்!" என்பார்.

அடுத்தவர், தெருவில் போகிறவரைப் பார்த்து,

"ஓய்!  உம்மோட மொகரகட்டைக்கு பாகவதர்னு வேற நினைப்பா? ஒழுங்கா சாதகம் பண்ணி உருப்படற வழியைப் பாரும் ஓய்!", என்பார்.


இதில் என்ன கொடுமை என்றால் அந்த 'பிள்ளையாண்டான்'  ஏதோ கோயிலில் முதல் தடவையாகக் கச்சேரி செய்திருப்பான். தன்னைப் பற்றி அவனுக்கே அப்படி ஒன்றும் அபிப்பிராயம் இருந்திருக்காது. எதுவுமே செய்யாமல் இந்த பெரிசு கிட்டே திட்டு வாங்கியிருப்பான்.


அந்தக் கதையாக ஆகி விட்டதே என் நிலைமை.  :))))))))))

பஞ்ச்  டயலாக் இல்லை சுவாமி! எழுத்து பஞ்சத்தில் வந்த டயலாக் ஐயா அது! பெரியவங்க எல்லாம் கொஞ்சம் தயவு பண்ணி போடுங்க சாமி! :)))))))))







2011/3/30 Raja sankar <errajasa...@gmail.com>

Raja sankar

unread,
Mar 30, 2011, 6:23:26 AM3/30/11
to mint...@googlegroups.com
ஐயம்பேட்டை குறும்புக்கு குழுமத்தில் காப்பிரைட் இருக்கு தெரியுமா? :-)))

நிஜமாகவே அந்த டைமிங் நல்லாயிருந்தது. அதை நீங்கள் சொன்னவிதமும் நல்லாயிருந்தது.

ராஜசங்கர்

devoo

unread,
Mar 30, 2011, 6:38:54 AM3/30/11
to மின்தமிழ்
>> கூட இருந்தவர் எட்டாவது முறை வந்ததாக சொல்லிக் கொண்டார்.
நியாயம்தான் என எண்ணிக் கொண்டேன்.<<

சிறந்த நகைச்சுவை; மிகவும் ரசித்தேன். உமது எழுத்தாசை பலருக்கும்
படிக்கும் ஆசையைத் தூண்டுகிறது.

மும்பையில் நடந்த திரைப்பட விழாவில் ஆர்ட் மூவீன்னு சொல்லி நண்பன் ஒருவன்
அழைத்துச் சென்றான். செகோஸ்லோவேகிய படமாம். ஓசி டிக்கெட்; யாரு இவென்
தலைல கட்டினாகளோ !


தேவ்

> போச்சாம்! அதுக்காக ...
>
> read more »

N. Kannan

unread,
Mar 30, 2011, 6:48:20 AM3/30/11
to mint...@googlegroups.com
கீதா!
 
நீங்க The Apu Trilogy பார்த்து இருக்கிறீர்களா?
 
செல்வ குமரன் எழுத்து எனக்கும் விருப்பமெனிலும் இதை என்னால் ஒப்புக்கொள்ளமுடியாது. சத்யஜித்ரேயை மிஞ்ச இன்னொரு இயக்குநர் இன்னும் வரவில்லை. சும்மா, தலைப்பை அவிழ்த்துவிட்டு லாங்க ஷாட்டில் சோரம் பேசும் இயக்குநருக்கெல்லாம் இங்கு `இயக்குநர் திலகம்` என்று பட்டம். சத்யஜித் ரேயின் முன் தூசு பெறமாட்டார்கள்.
 
வங்கத் திரைப்படம், எழுத்து, சிந்தனை, இசை என்று ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் இருக்கிறது. நம்மவர்கள் அந்த நிலையை அடைய இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகலாம்.
 
என்னால் சிரிக்க முடியவில்லை :-(
 
நா.கண்ணன்

2011/3/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>
333.gif
360.gif

devoo

unread,
Mar 30, 2011, 7:02:36 AM3/30/11
to மின்தமிழ்
>> என்னால் சிரிக்க முடியவில்லை :-( ... <<

இது அவருடைய கோணத்திலிருந்து எழுதுவது, கண்ணன் சார்.
‘ஸ்வாமி’ நல்ல கதை , நல்ல படம்,நல்ல இசை என்றாலும் ஒரிஜினல் வங்கச்சாயல்
இல்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.
தயாரிப்பாளர் - நடிகை ஹேமமாலிநியின் தாயார்.

'ரே’ அபூர்வமான கலவை; கற்பனையில் உதிப்பதற்கு
அப்படியே முப்பரிமாணம் கொடுக்கும் வல்லமை
மிக்கவர்

தேவ்

On Mar 30, 5:48 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> கீதா!
>
> நீங்க The Apu Trilogy பார்த்து இருக்கிறீர்களா?
>
> செல்வ குமரன் எழுத்து எனக்கும் விருப்பமெனிலும் இதை என்னால்
> ஒப்புக்கொள்ளமுடியாது. சத்யஜித்ரேயை மிஞ்ச இன்னொரு இயக்குநர் இன்னும் வரவில்லை.
> சும்மா, தலைப்பை அவிழ்த்துவிட்டு லாங்க ஷாட்டில் சோரம் பேசும்
> இயக்குநருக்கெல்லாம் இங்கு `இயக்குநர் திலகம்` என்று பட்டம். சத்யஜித் ரேயின்
> முன் தூசு பெறமாட்டார்கள்.
>
> வங்கத் திரைப்படம், எழுத்து, சிந்தனை, இசை என்று ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம்
> இருக்கிறது. நம்மவர்கள் அந்த நிலையை அடைய இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகலாம்.
>
> என்னால் சிரிக்க முடியவில்லை :-(
>
> நா.கண்ணன்
>

> 2011/3/30 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>


>
> > படம் போகிறது. போகிறது. போ.......................கிறது
> > . போய்க் கொண்ட இருக்கிறது.  ஆனால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.கூட இருந்தவர்
> > எட்டாவது முறை வந்ததாக சொல்லிக் கொண்டார். நியாயம்தான் என எண்ணிக் கொண்டேன்.//
>
> > ஹையோ, முடியலைங்க, எப்படிச் சிரிக்காமல் எழுதினீங்க?? தாங்கலை, கண்ணிலே தண்ணி
> > வந்துடுச்சு, எனக்கு என்னமோ ஆயிடுச்சுனு என்னோட கணவருக்குப் பயம் வந்துடப்

> > போகுதுனூ சிரிப்பை நிறுத்த முயன்றேன், முடியலை! [?][?][?][?][?][?][?][?]  அதிலும்


> > அந்த எட்டாவது முறை வந்ததுக்கு நியாயம் தான் னு நினைச்சீங்க பாருங்க.

> > அம்ம்ம்ம்ம்மாடி, அந்த பஞ்சு!! போதுண்டா சாமி! [?][?][?][?][?]  நாலு நாளாக்
> > காணோமேனு நினைச்சேன். [?][?]
>
>
>
>  333.gif
> < 1KViewDownload
>
>  360.gif
> < 1KViewDownload

selva kumaran

unread,
Mar 30, 2011, 7:39:47 AM3/30/11
to mint...@googlegroups.com
திரு.கண்ணன்

வயலில் வைக்கோல் மாட்டுக்கு, அரிசி மனிதனுக்கு!

மாடுதான் உழைக்கிறதே என அதற்கு அரிசியைப் போட்டால் அஜீரணம் ஆகி விடும்.

எனக்கு சத்யஜித்ரே  ஸ்டைல் அஜீரணம் தரும். அதனால் சத்ய ஜித் ரேயை மட்டமென்று சொல்லவில்லை. அரிசி தின்னும் அறிஞர் கூட்டத்தோடு இந்த விஷயத்தில் மட்டும் ஒட்ட முடியாத பாவப்பட்ட சென்மம் நான்.

என் லட்சணம் அவ்வளவுதான்.

நிச்சயமாக இது  சத்யஜித் ரேவைப் பற்றிய தீர்மானம் இல்லை!

நீங்களாவது கருணை வைத்து, அன்புடன் உங்கள் கருத்தைச் சொன்னீர்கள். அறிஞர் குழாத்திடம் இவை சென்றால் என்னை உரித்து, கரும்புள்ளி செம்புள்ளி வைத்து ஓட விட்டிருப்பார்கள்.

என்ன செய்வது?

முப்பது வருடம் கழித்தாவது  இப்படி ஒரு மடலாடல் குழுவில் என் எண்ணத்தை உரக்கச் சொல்ல முடிகிறதே!

"இராஜா காது கழுதை காது' என்று மண்ணை நோண்டி கத்தியப்பிறகல்லவா மனசு ஆறுகிறது. :)


". சும்மா, தலைப்பை அவிழ்த்துவிட்டு லாங்க ஷாட்டில் சோரம் பேசும் இயக்குநருக்கெல்லாம் இங்கு `இயக்குநர் திலகம்` என்று பட்டம். சத்யஜித் ரேயின் முன் தூசு பெறமாட்டார்கள்."

ஐயையோ....அடுத்து நான் எழுதப் போவதற்கு என்ன சொல்லப் போகிறீர்களோ :))))))))

சத்யஜித் ரே அற்புதமான டைரக்டர் ஆகவே இருக்கட்டும்.   தூரத்தில் இருந்து கும்புட்டுக் கொள்கிறேன். அவர் படத்தை இரசிப்பது எனக்கு,

'ஐயே மெத்தக் கடினம்...சாமீ
ஐயே மெத்தக் கடினம்'



2011/3/30 N. Kannan <navan...@gmail.com>
333.gif
360.gif

selva kumaran

unread,
Mar 30, 2011, 7:49:14 AM3/30/11
to mint...@googlegroups.com
"மும்பையில் நடந்த திரைப்பட விழாவில் ஆர்ட் மூவீன்னு சொல்லி நண்பன் ஒருவன்
அழைத்துச் சென்றான். செகோஸ்லோவேகிய படமாம். ஓசி டிக்கெட்; யாரு இவென்
தலைல கட்டினாகளோ !"

தேவ் ஜி! இதை விடவா ஒரு நகைச்சுவைப் பஞ்ச் இருக்க முடியும்? :))))))))))))))))))))))))

ஆனால் உங்கள் நண்பருக்கு அதை தள்ளி விட்டது நானில்லை. அந்த அநியாயத்தை ஒரே ஒரு முறைதான் செய்திருக்கிறேன். அதுவே கடைசியாகவும் ஆகி விட்டது. :)


2011/3/30 devoo <rde...@gmail.com>

Dhivakar

unread,
Mar 30, 2011, 7:52:34 AM3/30/11
to mint...@googlegroups.com
செல்வகுமரன்,
நானும் உங்களை[ப் போல க்ருத்துள்ளவன் ரே விஷயத்தில்.
சத்யஜித் ரே தேர்ந்த புத்திசாலி, ஏழ்மையைக் காண்பித்து பணம் செய்தவர் என்பதில் யாருக்குமே கருத்து வேற்றுமை இருக்காது என்றே நினைக்கிறேன். ரேயைப் புகழ்ந்தால்தான் அது அறிவாளிகளின் செயல் என்று மற்றவரைப் பேசவைத்த புத்திசாலி. 

’ஸ்டேஷனரியாக காமிராவை வைத்து விட்டு, கதாநாயகனை கோவணத்துடன் மெல்ல அரைக் கிலோ மீட்டர் நடக்கச் செய்து, குளக்கரை வந்தவுடன் ஒரு சிறு கல் எடுத்து குளத்தில் போட்டதும் அந்தக் குளத்தில் ஏற்படும் சலன வட்டங்களை காமிராவில் காண்பிக்கச் செய்து, இது ஏதோ அறிவு ஜீவித்தனமானது போலும்’  என்று பேசவைத்தவர்.

வாழ்க்கையில் வெறுப்புற்றோர், காதல் தோல்வி அடைந்தோர், கன்னியாகுமரி-ஜம்முதாவி ரயிலில் முழுவதுமாக பிரயாணம் செய்தோர் மட்டுமே பார்க்கக்கூடிய படங்கள்தான் இவரது படங்கள் - என ஒரு காலத்தில் ஜோக் இருந்தது.

ஆனால் சத்யஜித ரே யின் ஊரிலிருந்து பல நல்ல இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை ஏனோ காலம் மறந்துவிட்டது. அவர்களில் முக்கியமானவர் - பாசு சாட்டர்ஜி.. ச்சோடி சி பா, சிட்ச்சோர் என அருமையான படங்கள் கொடுத்தவர்.
333.gif
360.gif

selva kumaran

unread,
Mar 30, 2011, 7:53:08 AM3/30/11
to mint...@googlegroups.com, Mohanarangan V Srirangam
திரு, மோகனரங்கன்

இப்போதைக்கு நிறுத்த மாட்டேன்.

அடப்பாவமே இவர்ளை ரொம்ப சித்திரவதைப்படுத்தறனேன்னு எனக்கே புத்தி வரும்போதுதான் அது நடக்கும். அதுவரை இம்சை நிற்காது. :)

2011/3/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

selva kumaran

unread,
Mar 30, 2011, 7:56:55 AM3/30/11
to mint...@googlegroups.com
" பாசு சாட்டர்ஜி.. ச்சோடி சி பாத்," -Dhivakar



யாரிந்த தேவகுமாரன்? இந்த மண்ணுலகில் எனக்கே எனக்காக வந்தவரோ?  I am not alone.  :)))

சிட்சோர், சோடி ஸி பாத் அப்புறம் சீரியஸ் படங்களான அபிமான் இதெல்லாம் என் ஃபேவரைட்ஸ். மதுமதி படம் பாதி வரைக்கும் பிடிக்கும்.
சலீல் சௌத்திரியின் இசைக்காகவே அது பிடிக்கும்.

ஆஹா இப்போதே உங்களைப் பார்க்க வேண்டும் போலுள்ளதே! :)





2011/3/30 Dhivakar <venkdh...@gmail.com>
333.gif
360.gif

N. Kannan

unread,
Mar 30, 2011, 8:38:15 AM3/30/11
to mint...@googlegroups.com
திவாகரின் சிந்தனை பிழை என்று சொல்லமாட்டேன்.
 
ஆனால், இந்தியாவில் எல்லோரும் ஆஸ்கார் விருத்திற்காகக் கனவு கண்டு அலமந்து போயிருக்கும் போது அவ்விருது இவருக்கு தானாக வந்தது. இவர் ஆஸ்கார் விருதிற்காகப் படம் எடுத்தவர் இல்லை. இது சாதாரண அங்கீகாரம் என்று நம்மில் யாராலும் சொல்ல முடியுமா?
 
நமக்கு சினிமா என்றால் என்னவென்று தெரியாது. தென்னகத்தவர் பொதுவாகவே உடம்புச்சூட்டினால் உணர்ச்சி வசப்படுபவர்கள். நமக்குக் காட்டுக்கத்துக் கத்தினால்தான் பிடிக்கும் (நம்ம சினிமாக் கொட்டகையின் சத்தத்தைப் பாருங்களேன் :-)
 
சத்யஜித்ரே முன்னோடி. அவருக்குப் பின் பல நல்ல இயக்குநர்களை வங்கம் தந்திருக்கிறது.
 
அபர்ணாசென் இயக்கிய திருமதி & திரு. ஐயர் படம் என்ன அழகான இயக்கம்.
 
நம்மவர்க்கு இன்னும் படம் எடுக்கத்தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்வது கடினம்.
 
அவ்வளவுதான். இனிப்பேச்சில்லை!
 
நா.கண்ணன்

2011/3/30 Dhivakar <venkdh...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Mar 30, 2011, 8:43:17 AM3/30/11
to mint...@googlegroups.com
பாசு சாட்டர்ஜி.. //

என்னோட பேவரிட் இவரே.  நன்றி திவாகர், சொல்லலாமா வேண்டாமானு தயக்கத்தில் இருந்தேன். 

2011/3/30 Dhivakar <venkdh...@gmail.com>
செல்வகுமரன்,

Geetha Sambasivam

unread,
Mar 30, 2011, 8:44:00 AM3/30/11
to mint...@googlegroups.com
சிட் சோர் படம் எத்தனை முறை பார்த்தாலும், ஆஹா!!!!!!!!!!!!!!!!
333.gif
360.gif

selva kumaran

unread,
Mar 30, 2011, 8:45:58 AM3/30/11
to mint...@googlegroups.com
"நம்மவர்க்கு இன்னும் படம் எடுக்கத்தெரியவில்லை என்பதை ஏற்றுக்கொள்வது கடினம்."


திரு. கண்ணன்


எவர் இரசிகர், எது இரசனை, எது கலை, யார் கலைஞர் என்பது அவரவர் தனிப்பட்ட மனம் உருவாக்கும் தீர்மானங்கள்.  இதில் இரண்டு மனம் கூட ஒத்துப் போக முடியும் என்று தோன்றவில்லை.

பன்றியின் தோலுரித்து, அதை வாட்டி, அதன் வாயில் ஆப்பிளை வைத்து, அதை சாப்பாட்டு மேசை மேல் வைத்து,  அழகுப் பார்க்கும் மேற்கத்திய கலாசாரம் நம் நாட்டினரை, கலாசாரம் தெரியாத 'Barbarians' என்று நினைத்திருந்ததும் உண்டு.

என்னைக் கேட்டால் எதுவும் உயர்ந்தது, தாழ்ந்தது என்றில்லை.

குயில் நிச்சயமாக சேஷகோபாலன் கச்சேரிக்கு வராது. ஆனால் அதற்கென்று குயிலின் கத்தல் பண்படவேண்டுமென்பதும் சரியில்லை.

குயில் குயிலுக்காகவும், சேஷகோபாலன் தன் இரசிகர்களுக்காகவும் பாடிக் கொண்டே இருககட்டும்.










2011/3/30 N. Kannan <navan...@gmail.com>
--

Geetha Sambasivam

unread,
Mar 30, 2011, 8:47:07 AM3/30/11
to mint...@googlegroups.com
செல்வ குமரன் எழுத்து எனக்கும் விருப்பமெனிலும் இதை என்னால் ஒப்புக்கொள்ளமுடியாது. சத்யஜித்ரேயை மிஞ்ச இன்னொரு இயக்குநர் இன்னும் வரவில்லை. //

கண்ணன்,

சிரிப்பு செல்வகுமரனின் எழுத்துக்கு மட்டுமே. ரே படங்களுக்கு அல்ல. உங்களைப் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.  இயக்குநர் இமயங்களையோ,  சிகரங்களையோ, திலகங்களையோ நானும் ரசிப்பதில்லை.    நிச்சயமாத் தமிழ்ப்படம் நீங்க சொல்லும் நிலைக்கு வர எத்தனை யுகங்கள் ஆகுமோ! இதிலே வீடு படம் கொஞ்சம் பரவாயில்லை ரகம்.  மல்லி, குட்டி போன்ற குறும்படங்கள், காஞ்சீபுரம் போன்ற படங்கள். இவை எல்லாம் ஓரளவு தேவலை.

2011/3/30 N. Kannan <navan...@gmail.com>
கீதா!
 
நீங்க The Apu Trilogy பார்த்து இருக்கிறீர்களா?
 

360.gif

Geetha Sambasivam

unread,
Mar 30, 2011, 8:47:59 AM3/30/11
to mint...@googlegroups.com
ஸ்வாமி நல்ல கதை. கிரிஷ் கர்நாடுக்குப் பதிலா வேறே யாரையானும் போட்டிருந்தால் நல்லா இருந்திருக்கலாமோ என்னமோ!

2011/3/30 devoo <rde...@gmail.com>

N. Kannan

unread,
Mar 30, 2011, 9:00:40 AM3/30/11
to mint...@googlegroups.com
யெஸ் கீதா! உங்களுடன் உடன் படுகிறேன்.
 
பதேர் பாஞ்சாலி என்னைப் பொறுத்தவரை செல்லுலாய்ட் கவிதை.
 
நா.கண்ணன்

2011/3/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>
செல்வ குமரன் எழுத்து எனக்கும் விருப்பமெனிலும் இதை என்னால் ஒப்புக்கொள்ளமுடியாது. சத்யஜித்ரேயை மிஞ்ச இன்னொரு இயக்குநர் இன்னும் வரவில்லை. //
360.gif

N. Kannan

unread,
Mar 30, 2011, 9:05:43 AM3/30/11
to mint...@googlegroups.com
நான் உயர்வு, தாழ்வு என்ற ரீதியில் சொல்லவில்லை.

Science & Technology ல் மேலை உலகம் எங்கோ நிற்கிறது, நம்மால் ஏணி
வைத்தும் ஏறமுடியாது என்று சொல்வது நாம் தாழ்ச்சி என்ற பொருளில் அல்ல.
அது யதார்த்தம். அவ்வளவுதான்.

ரேயைப் பார்க்கும் போது வேற மூடு. அதனால் எம்.ஜி.ஆர் படம்
பார்க்கமாட்டேன் என்றில்லை.

ஹைகூ கவிதை என்றால் அதற்கொரு இலக்கணம் உண்டு. அது போல் சினிமாவிற்கு
இலக்கணங்கள் உண்டு. ரே ஏழமையைக் காட்டி புகழ் பெற்றார் என்று சொல்வது
`பாபம்`. ஏழ்மையிலும் கவிதைக்கு இடமுண்டு என்று காட்டியவர் ரே.

வங்க சினிமாவின் உயரம் இன்னும் நமக்கு எட்டாக்கனி என்பது உண்மை.

நா.கண்ணன்


2011/3/30 selva kumaran <selvaku...@gmail.com>:

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Innamburan Innamburan

unread,
Mar 30, 2011, 9:12:54 AM3/30/11
to mint...@googlegroups.com
1. செல்வகுமரனின் கிடுகிடு உரைநடையை அனுபவித்துப் படித்தேன். நன்றி.
2. 'வங்க சினிமாவின் உயரம் இன்னும் நமக்கு எட்டாக்கனி என்பது உண்மை.'
- ஆனால், மலையாளத்தில் பாருங்கோ, ஆதூர் கோபாலகிருஷ்ணனை. ஒரு சமயம்
புபனேஷ்வர் ஓட்டை தியேட்டர் ஒன்றில், என் விருந்தாளியாக வந்திருந்த
அவருடன், 'எலிபத்தயம் பார்த்ததும், பிறகு அவர் தன்னிச்சையாக பேசிய படி
வந்ததை மறக்ககுடியாது.

இன்னம்பூரான்
30 03 2011

2011/3/30 N. Kannan <navan...@gmail.com>:

selva kumaran

unread,
Mar 30, 2011, 9:13:43 AM3/30/11
to mint...@googlegroups.com
" ரே ஏழமையைக் காட்டி புகழ் பெற்றார் என்று சொல்வது
`பாபம்`. ஏழ்மையிலும் கவிதைக்கு இடமுண்டு என்று காட்டியவர் ரே."

நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை :)))))))

அப்படியே அடுத்த எபிஸோடுக்கு எஸ்கேப் ஆகிறேன்.

2011/3/30 N. Kannan <navan...@gmail.com>
நான் உயர்வு, தாழ்வு என்ற ரீதியில் சொல்லவில்லை.

selva kumaran

unread,
Mar 30, 2011, 9:15:13 AM3/30/11
to mint...@googlegroups.com
"'எலிபத்தயம் பார்த்ததும், பிறகு அவர் தன்னிச்சையாக பேசிய படி
வந்ததை மறக்ககுடியாது."


ஐயோ....எலிப்பத்தயாமா?

இருங்கள்.....போய் ஒரு டம்ளர் காபி குடித்து விடு வருகிறேன். எனக்கு பட படவென வரும்படி செய்து விட்டீர்களே. :)

2011/3/30 Innamburan Innamburan <innam...@gmail.com>

Mohanarangan V Srirangam

unread,
Mar 30, 2011, 9:39:40 AM3/30/11
to mint...@googlegroups.com
இதுதான் ஒரு வேளை தென்னிந்திய மன நிலையோ! 

தான் ரசித்ததை ஒரு நாளும் கேலி நகைச்சுவைக்கு இலக்காக்க சகிக்காமல் இருப்பது. 

தான் உயர்வு என்று கருதுவதை ஒரு நாளும் இலேசான நரம்பில் நகையுணர்வுக்கு இலக்காக்கிவிட்டால் எங்காவது கவுந்தியடிகளின் சாபம் ‘நரியாகத் திரிவாய்’ என்பது பலித்துவிடுமோ என்ற பயம். 

அப்படி ஒரு வேளை கேலி என்று ஆரம்பித்தால் வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் வகையில் அது உயர்வாக இருப்பதற்கும் தான் அண்ணாந்து பார்க்கும்படியாக இருப்பதற்கும் பழி வாங்கும் விதத்தில் உளவியல் திருப்திக்காகக் கேவலப் படுத்துவது. 

ஷேக்ஸ்பியர் மாபெரும் கவிக்கோமான் தான். அவரின் உயரம் இமயத்தினும் உயர்ந்தது. விரிவு பாரினும் மிக்கது -- இந்த எண்ணம் உடையவன் நான். 

ஆனாலும் கல்கி செய்த நகைச்சுவை ஹாம்லெட் பற்றி இன்றும் நினைத்தால் சிரிப்பு வருகிறது. 

“என்ன நாடகம் அது! ஐயோ....முடிவில் கதாநாயகன், அவன் அம்மா, அவன் சிற்றப்பா, சிற்றப்பாவின் மகன், ஹாம்லெட்டின் நண்பர்கள், காதலி என்று அனைவரும் இறக்கின்றார்கள். நாடகம் பார்க்கின்றவர்களாவது உயிரோடு திரும்புகின்றார்களே...அதுவே ஏதோ புண்ணியம் தான்” 

இந்தப் பொருள்படும் நகைச்சுவை எழுத்து இன்றும் சிரிப்பு வருகிறது. ஆனல் அதற்கென்று இந்தச் சிரிப்பு என் ஷேக்ஸ்பியர்பால் ஆன வியப்பையும் ரசிப்பையும் ஓரணு கூட மாற்றிவிடவில்லையே. 

இன்னம்பூராரின் எழுத்து ஒன்றுக்குக் கூறினேன் -- நகைச்சுவை மிளகு தூவல் போட்ட எழுத்து தமிழில் துர்லபம்; எல்லாம் முகத்தைத் தொங்கப்போட்ட எழுத்து; -- என்று. 

ஏதோ அத்தி பூத்தாமாதிரி தமிழ்ல இப்படி நகைச்சுவை எழுத்து வருதுங்கண்ணா...... 

ஏதோ ஓரம்சத்தில் நாமும் இப்படி மனசில ஓரமா நினைக்கிறதுண்டு என்பதுதான் சிரிப்புக்கான காரணம். அந்தச் சிரிப்பு எல்லாம் விமரிசன அறுதிப்பாடுகள் இல்லைங்கண்ணா... 

:-)) 


2011/3/30 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Mar 30, 2011, 9:42:40 AM3/30/11
to mint...@googlegroups.com
ஓஒ!...யாரது..

கையிலே பாட்டிலோட ஒரு படம் பார்த்த நினைவு :-))

அது கூட நல்ல நகைச்சுவைதான். நான் உண்மையில் ரசித்தேன், ஆனால்....

நா.கண்ணன்

2011/3/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

N. Kannan

unread,
Mar 30, 2011, 9:43:47 AM3/30/11
to mint...@googlegroups.com
ஓகே! செல்வ குமரன். உங்க மூடு புரியுது.
இனிமேல் குறுக்க வரமாட்டேன்! ஜமாய்யுங்கள்.

க.>

2011/3/30 selva kumaran <selvaku...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Mar 30, 2011, 9:49:18 AM3/30/11
to mint...@googlegroups.com
நான் சொல்லும் தருணமும் பாட்டில் இருந்தது, அப்பனே. ஜார்ஜ் வேறே
கம்பெனிக்கு. ஶ்ரீமோஹனரங்கனிடம் ஒரு வார்த்தை சொல்லணும்.
கூடப்பிறந்துவிட்டால், அதுவும் வம்சத்தின் கொடுப்பினையாக வந்த,
நகைச்சுவைக்கு பிரயத்தனம் தேவையில்லை. அஹோ பாக்கியம்!

இன்னம்பூரான்
30 03 2011

2011/3/30 N. Kannan <navan...@gmail.com>:

Mohanarangan V Srirangam

unread,
Mar 30, 2011, 9:54:44 AM3/30/11
to mint...@googlegroups.com


2011/3/30 N. Kannan <navan...@gmail.com>

ஓகே! செல்வ குமரன். உங்க மூடு புரியுது.
இனிமேல் குறுக்க வரமாட்டேன்! ஜமாய்யுங்கள்.

க.>


குறுக்க வரணும் ஸ்வாமி. 
குறுக்கலா வரணுமா? 

ஆஹா! அப்பப்ப எனக்கும் இப்படி ஏதாவது வந்துடுதுப்பா 
:-))) 

 
2011/3/30 selva kumaran <selvakumaran.ma@gmail.com>:
> ஐயோ....எலிப்பத்தயாமா?
>
> இருங்கள்.....போய் ஒரு டம்ளர் காபி குடித்து விடு வருகிறேன். எனக்கு பட படவென
> வரும்படி செய்து விட்டீர்களே. :)
>

meena muthu

unread,
Mar 30, 2011, 9:55:20 AM3/30/11
to mint...@googlegroups.com
//அடப்பாவமே இவர்ளை ரொம்ப சித்திரவதைப்படுத்தறனேன்னு எனக்கே புத்தி வரும்போதுதான் அது நடக்கும். அதுவரை இம்சை நிற்காது. :) //


மௌனமாக... இல்லை இல்லை..ரசித்து மகிழ்ந்து சிரித்து மிகவும் ஆர்வமாக 
படித்துக்கொண்டிருக்கிறேன்..

 இனிய இம்சையை தொடர்ந்து..தொடருங்கள்.

 //இவர்ளை ரொம்ப சித்திரவதைப்படுத்தறனேன்னு எனக்கே புத்தி வரும்போதுதான் 
அது நடக்கும்// அந்த புத்தி வராமல் இருக்கக்கடவது :))))  

It is loading more messages.
0 new messages