எந்த ஒரு சொல்லை எடுத்தாலும் இது தமிழா ? சங்கதமா ? என்ற பஞ்சாயத்து பல ஆண்டுகளாகவே தமிழ்க் குமுகாயத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.
தனித்தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த சிலர் பல ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களை ஆய்வே செய்யாமல் காழ்ப்புணர்ச்சியால் "இவை தமிழ் அல்ல" என்று ஒதுக்கி வைத்து விட்டனர். இதனை முழுமையாக நம்பிய கூட்டம் ஒன்று இன்றளவும் அவ்வாறே பரப்புரை செய்து வருகிறது.
"இவை சங்கதம் அல்ல; தமிழே!" என்று யாரேனும் கூறினால் சான்று உள்ளதா? நிறுவ முடியுமா? என்று கேட்கின்றனர். ஆனால் இதே கேள்விகளை "இவை தமிழ் அல்ல" என்று கூறுவோரிடம் கேட்கிறார்களா என்றால் இல்லை. :(
தமிழா சங்கதமா என்ற குழப்பத்தைத் தீர்க்க சொற்பிறப்பியல் என்ற வழிமுறையைக் கையில் எடுத்திருக்கிறேன். ஒரு சொல்லின் பிறப்பியல் முறை, குறிக்கும் பொருட்கள், வழங்கும் இடங்கள் போன்ற பல செய்திகளைக் காட்டிவிட்டு அது தமிழா சங்கதமா என்று முடிவெடுக்கும் வாய்ப்பை வாசகரிடமே விட்டுவிடலாம் என்று எண்ணி கீழ்க்காணும் இணையதளத்தை உருவாக்கி வெளியிட்டுள்ளேன்.
இத் தளத்தில் தொடர்ந்து சொற்களை ஏற்றிக்கொண்டிருக்கும் நிலையில் உங்களது கருத்துக்களை இடவும் சொற்பட்டியலைக் காணவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
உங்களது கருத்துக்களை வரவேற்கிறேன்.
அன்புடன்,
திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகின் அனைத்து உயிரிலும் இறைவனை
உண்மையாய்க் காண்கிறார் மூலர் - அதைப்போல்
உலகின் அனைத்து மொழிகளின் வேர்களில்
உன்னையே காண்கிறேன் தமிழே !!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------