என்ஜாய் எஞ்சாமி .. குக்கூ .. குக்கூ ..

130 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 4, 2021, 12:14:46 AM4/4/21
to மின்தமிழ்
Dhee ft. Arivu - Enjoy Enjaami (Prod. Santhosh Narayanan)
views: 100,429,150 
Premiered:  Mar 6, 2021
---
Santhosh Narayanan, Arivu and Dhee release 'Enjoy Enjaami'
---
என்ஜாய் எஞ்சாமி பாடல் வரிகள் - விளக்க 'முயற்சி'

--------


"இனி தேர்தல் கால ரீமிக்ஸ் .. .. "
-----------------------------------
☺️☺️☺️
[...] 
கொள்கையத்தான் காணோமடி 
அது எதுக்குடா   பேராண்டி 
அன்னக்கிளி .. அன்னக்கிளி ..
ஓட்டுக்கு காசு குடுத்தா  வாயேன் கிளி 
நல்லபடி ஆளச் சொல்லி 
ஓட்டு உரிமையா கொடுத்தானே பூர்வ குடி 
கோஷம் போட கூடப் போனா 
சரக்கு வாங்கி தருவானே ஊத்தி குடி 
மாட்டு வண்டி லாரிக்கும்தான் 
இந்த ஆத்து மண்ணு எல்லாம் சொந்தமடி 
என்ஜாய் எஞ்சாமி
கையில் மைய வைசாமி 
அம்மாடி  நம்பூமி இது மாற வழிய நீ  காமி 
குக்கூ .. குக்கூ .. 
குக்கூ .. குக்கூ .. 
என்ஜாய் எஞ்சாமி

தேமொழி

unread,
Apr 5, 2021, 12:13:25 AM4/5/21
to மின்தமிழ்

பணிகளின் விரட்டலில் விளைந்த மறதியால் எழுதாமல் விட்டதுதான் “எஞ்ஜாயி எஞ்சாமி” அனுபவம்.

மரபுச் சொற்களும், நவீன இசையும் கலந்து கொண்டாட்டம் போடுகிற பாட்டு அது. பாசியாய்ப் பச்சையைப் பூசும் இயற்கையின் இனிமையையும், நல்லபடி வாழச்சொல்லி பூமியைக் கொடுத்த பூர்வகுடிப் பெருமையையும் புதிய ஒலிப்பதிவு/ஒளிப்பதிவு நயங்களோடு பேசுவதால் இது மாறுபட்ட பாட்டு. அவற்றோடு கலந்துறவாடும் உணர்வாக. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பூமியில் பரிணமித்திருக்கும் சக உயிர்களுக்கான சமத்துவத்தைப் பேசுவதால் இது மாற்றத்துக்கான பாட்டு.

சாதியும் மதமும் இனமும் மொழியும் என பாகுபாட்டு வன்மங்கள் வளர்க்கப்படுவது கண்டு மனம் கொதிக்கவைக்கும் சொற்களைக் கோர்த்தளித்திருப்பதோடு, தனக்கே உரிய விலங்குடைத்துப் பறக்கும் வேட்கையைக் குரலாலும் ஆட்டத்தாலும் பொது லட்சியமாக்குகிறார் அறிவு. 

கொதித்திருக்கும் மனதைக் குளிர்விக்கும் குரலையும் கூடியாடும் கலையையும் கொடுத்து, அட இவங்க நம்ம வீட்டுல பொறந்திருக்கக்கூடாதா என்று எண்ண வைக்கிறார் தீ.

ஒளி / ஒலிப்பதிவின் நேர்த்திக்கும் சேர்த்துதான் ஒரே மாதத்தில் இத்தனை கோடிப்பேர் பார்த்திருக்கிறார்கள் என்ற உலகளாவிய கீர்த்தி. காட்சிப்பதிவும் தொகுப்பும் படைப்பாக்கத்தில் பங்கேற்பதை நிறுவுகின்றன பல இடங்கள். கடைசியில் ஊன்றிய கோலைப் பற்றியிருக்கும் முதிய கையின் மீது தீ தனது இளம் கையை வைக்கிற   உருவகத்திற்காகவே இயக்குநர் அமித் கிருஷ்ணா சிறப்புப் பாராட்டுக்கு உரியவராகிறார்.  
 
காணொளிப் பதிவில் பாட்டைக் கேட்கக்கேட்க, அசைவுகளைப் பார்க்கப்பார்க்க இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், ஒலிப்பதிவாளர், தொகுப்பாளர்… ஏன், இதற்கு விளக்குப் பிடித்திருக்கக்கூடிய தொழிலாளி உட்பட அனைவரையும் நேரில் சந்தித்துக் கைகுலுக்கப் பேராவல் கொள்கிறது உள்ளம்.

சுதந்திரக் கலைஞர்களைத் திக்கெட்டும் கொண்டுசெல்லும் மாஜா தளத்தை உருவாக்கியிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், தொகுப்பைத் தயாரித்திருக்கும் சந்தோஷ் நாராயண் இருவரின் இந்த முயற்சியில் இன்னொரு தனித்துவமும் இருக்கிறது. நெடுங்காலமாக இந்தியாவின், தமிழகத்தின் சங்கீதம்/நாட்டியம் என்றால் வெளிநாடுகளில் குறிப்பிட்ட வகையறாக்கள் (அவற்றின் கலைச்சிறப்பைப் புறக்கணிப்பதற்கில்லை என்றாலும்) மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளன. அந்த ஆதிக்கங்களையும் மீறி எளிய அடித்தட்டு மக்கள் பாதுகாத்துப் பராமரித்து வந்திருக்கிற உயிர்ப்பான கலைகளின்பால் புவிப் பரப்பின் கவனத்தை ஈர்ப்பதில் இதுவும் ஒரு தலையாய பங்களிப்பாகிறது.

இதைப் புரிந்துகொள்வது மனதைச் சுதந்திரமாக விசாலப்படுத்த உதவும்.  நான் சொல்வதன் உண்மையை அனுபவிக்க, இந்தப் புதிய “குக்கூ குக்கூ” அட்டகாசத்தை…

எஞ்ஜாய் எஞ்ஜாய் எஞ்சாமிகளே.

-குமரேசன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Apr 5, 2021, 1:08:53 AM4/5/21
to mintamil
பாடலின் முதலில் வருவது எஞ்சாயி எஞ்சாமி தான். ENJOY ENJAAMI அல்ல.

சாயி என்றால் மகனே என்று பொருள். இது சேய் என்னும் சொல்லின் திரிபே.

என் + சாய் + இ = எஞ்சாயி = என் மகனே
என் + சாமி = எஞ்சாமி = என் சாமியே

எஞ்சாயி எஞ்சாமி = என் மகனே என் சாமியே

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/f1b70e01-5e65-4173-bd21-03b6f9e7fb33n%40googlegroups.com.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகின் அனைத்து உயிரிலும் இறைவனை
உண்மையாய்க் காண்கிறார் மூலர் - அதைப்போல்
உலகின் அனைத்து மொழிகளின் வேர்களில்
உன்னையே காண்கிறேன் தமிழே !!!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

ARC

unread,
Apr 6, 2021, 4:10:04 AM4/6/21
to மின்தமிழ்
எஞ்சாயி என்பதை - என் தாயி என பேத்தியைப் பாட்டி அழைப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?

இறுதி காட்சியில் தாத்தா, பாட்டிகளை இருக்கையில் அமர வைத்து அவர்களின் முன்னால் கீழே அமர்ந்திருக்கும் இளைய தலைமுறையாக காட்டியுள்ளது வரையிலான அத்தனை ஃப்ரேம்களும் ஒவ்வொரு கதை பேசுகின்றன. ஒவ்வொரு வரியும் நம் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் மண்ணையும் பேசுகின்றன. அற்புதமான படைப்பு

தேமொழி

unread,
Apr 6, 2021, 4:19:47 AM4/6/21
to மின்தமிழ்

  ///எஞ்சாயி என்பதை - என் தாயி என பேத்தியைப் பாட்டி அழைப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?///

அப்படித்தான் என்ஜாய் எஞ்சாமி பாடல் வரிகள் - விளக்க 'முயற்சி'

இவர்கள் விளக்கம் சொல்கிறார்கள் 



தேமொழி

unread,
Apr 6, 2021, 11:24:28 PM4/6/21
to மின்தமிழ்
election time parody "Enjoy Enjaami" popular song-video attached

பார்க்க கேட்க சாலிக்காத பாடல் 
electionvideo.mp4
Reply all
Reply to author
Forward
0 new messages