மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள்... part 1

1,176 views
Skip to first unread message

rajam

unread,
Dec 6, 2010, 2:58:43 PM12/6/10
to மின்தமிழ், Subashini Kanagasundaram, Narayanan Kannan
"வான்கோழி வாரம் -- ஆபுத்திரன் கதை" என்று ஒரு சிறு செய்தியைத் தற்செயலாகப் பகிர்ந்துகொண்டபோது மேற்கொண்டு தொடர்ந்து சொல்லப் பல நல்லவர்கள் ஊக்கம் தந்தார்கள். எல்லாருக்கும் மிகவும் நன்றி!
"வான்கோழி வாரம்" (நவம்பர் மாத இறுதி வாரம்) முடிந்தது. இனியும் அதே தலைப்புக்குப் பொருள் இல்லை. அதனால் வேறு தலைப்பில் தொடங்கியிருக்கிறேன். பரவாயில்லை என்று நினைக்கிறேன். குழுமத்தினர்க்கும் ஒத்துவரும் என்று நம்புகிறேன். தவறாயின் என்னைத் திருத்தி நல்வழிப்படுத்தவும். நன்றி!
குறிப்பு: வினோத் ராஜன் குறிப்பிட்டபடி, ஆங்காங்கே மணிமேகலை இலக்கியத்தில் உள்ள வரிகளையே எடுத்துத் தந்திருக்கிறேன். பதம் பிரித்து இங்கே நான் கொடுத்திருக்கிற இலக்கிய வரிகளைப் புரிந்துகொள்ள ... ஒரு நல்ல அகராதி இருந்தால்கூடப் போதும் என்று நினைக்கிறேன். குழுமத்தில் உள்ள சில அறிஞர்கள், புலவர்களின் போக்கு அச்சமூட்டுவதாக இருக்கிறது!! அதனால் மிகவும் தயக்கத்தோடு உங்கள்முன் வைக்கும் பகுதிகள் இவை... . ஆசிகள், வாழ்த்துக்கள், ஊக்கம் ... எல்லாமே தேவை!
மக்கள் ஏன் ... வாழ்த்து, ஆசி, ஊக்கம், ... ... ... எல்லாம் வேண்டும் என்று வேண்டுகிறார்கள்?

வயித்துக்குச் சாப்பாடு இல்லாமெ ஒரு நாளாவது நல்லாப் போகுமா?! அது போலவே! 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மணிமேகலை: ஆபுத்திரன் கதை -- பகுதி 1
-------------------------------------------------

"மணிமேகலை" என்று சொன்னவுடனே "அமுதசுரபி" என்ற சொல்லும் சிலர் நினவுக்கு வரும். 

"அமுத சுரபி"
----------------
நம்மில் பலர் பொதுவாகவும் எளிமையாகவும் புரிந்துகொண்டிருக்கும் வகையில் சொல்லப் போனால்... "அமுத சுரபி" ஒரு பிச்சைப் பாத்திரம். அந்த "அமுத சுரபி"யில் இடப்பட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும்.

அந்தப் பாத்திரத்தில் பிச்சை பெற்று, அதிலிருந்து கிடைத்த உணவைக் கொடுத்துத்தான் மக்களின் பசிப்பிணியைத் தீர்த்தாள் மணிமேகலை.

மணிமேகலை கைக்கு அமுதசுரபி எங்கேயிருந்து வந்தது?

ஆபுத்திரன் என்பவனிடமிருந்து வந்தது. நேரடியாகவா? இல்லை... . சுற்றுவழியில் வந்தது. அந்தச் சுற்றுவழி எது?
 தென்மதுரைச் சிந்தாதேவி --> ஆபுத்திரன் --> மணிபல்லவத் தீவில் கோமுகி --> மணிமேகலை

சிந்தாதேவி யார்? ஆபுத்திரன் யார்? கோமுகி என்றால் என்ன? என்று பல கேள்விகள் எழும். பார்க்கலாம்.

ஆபுத்திரன் - அமுதசுரபி
-------------------------------
வாராணசியில் வேதம் ஓதுகிற அபஞ்சிகன் என்பவனுக்குச் சாலினி என்று ஒரு மனைவி. சாலினி இல்லறவழி தவறிவிடுகிறாள்; அந்தக் குற்றம் தீர்ப்பதற்காகத் தென் திசையில் உள்ள குமரியில் தீர்த்தமாட வருகிறாள். வழியில் ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை ஒரு தோட்டத்தில் போட்டுவிட்டுத் தன் பயணம் தொடர்கிறாள். அழுகின்ற குழந்தையை ஒரு பசு பாதுகாக்கிறது; ஏழு நாட்கள் அருகே இருந்து பாலூட்டிக் காக்கிறது. அப்போது அந்த வழியில் தன் மனைவியோடு போய்க்கொண்டிருந்த பூதி என்ற அந்தணன் அழுகின்ற குழந்தைக் குரல் கேட்டு அங்கே வந்து குழந்தையைக் கண்டு "இவன் பசுவின் மகனில்லை; என் மகன்" என்று அன்போடு சொல்லி எடுத்துக்கொண்டுபோய் வளர்க்கிறான். "பசுவின் மகன்" என்பது "ஆபுத்திரன்."

பூதியின் மகனாய் வேதம் ஓதி வளரும் சிறுவன் ஆபுத்திரன் ஒரு நாள் ஓர் அந்தணரின் வேள்விச்சாலையில் நுழைகிறான். அங்கே வேள்விக்காகக் கட்டிப்போட்டிருந்த பசுவைப் பார்த்து இரக்கம் கொள்கிறான். அந்தப் பசுவைக் காப்பாற்றவேண்டி, யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து இரவில் கடத்திக்கொண்டு செல்கிறான். பசுவைக் காணமல் தேடிப் போன அந்தணர்கள் பசுவைக் கடத்திச் சென்ற சிறுவனைக் "கையும் களவுமாக"ப் பிடித்துவிடுகிறார்கள். ஆபுத்திரனை அலைக்கோலால் அறைந்து ... 

"புலை-ச்-சிறுமகனே போக்கப்படுதி" என்று வெருட்டுகிறார்கள்.

சிறுவனை நையப்புடைத்த வேத வாத்தியாரை அந்தப் பசு முட்டி, அவர் குடலைக் கிழித்துவிட்டுக் காட்டுக்குள் ஓடிவிடிகிறது. 

ஆபுத்திரன் சொல்கிறான்: 

"நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்
விடு நில மருங்கின் படு புல் ஆர்ந்து
நெடு நில மருங்கின் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள் தொட்டும் சிறந்த தன் தீம்பால்
அறம் தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை"

["நொந்து போக வைக்கும் செயல்களைச் செய்யாதீர்கள். நான் சொல்வதைக் கேளுங்கள். தன்னை விட்ட நிலத்தில் விளைந்து கிடக்கும் புல்லைத் தின்று, பரந்த உலகில் உள்ள மக்களுக்கெல்லாம் பிறந்த நாள் முதல் தன் பாலைக் கொடுத்துக் காக்கும் இந்தப் பசுவின் மேல் உங்களுக்கு என்ன கோபம்?"]

அந்தணர்களுக்கும் ஆபுத்திரனுக்கும் இடையே மிக நல்ல வாக்குவாதம் நடக்கிறது. அந்த வாக்குவாதம் ஆபுத்திரன் பிறப்புப் பற்றி அந்த அந்தணர்கள் ஏசுவதாகவும் அதற்கு ஈடாக ஆபுத்திரன் பல முனிவர்களின் பிறப்புப் பற்றிச் சாடுவதாகவும் அமைகிறது. 

அந்தணர்: 

"பொன் அணி நேமி வலம் கொள் சக்கரக்கை
மன்னுயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய
அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை ...
... ... நீ அவ்-
ஆ மகன் ஆதற்கு ஒத்தனை; அறியா
நீ மகன் அல்லாய்"

["சக்கரத்தை வலக்கையில் தாங்கி மன்னுயிர் காக்கும் முதல்வனின் [திருமாலின்] மகன் [பிரமன்] எமக்கு அருளிய அருமையான நல்ல மறை நூலைத் தெரிந்துகொள்ளாமல் எங்களைப் பழிக்கிறாய். உனக்கு அறிவுக்குழப்பம். நீ அந்தப் பசுவின் மகன் என்பது பொருத்தமே. நீ ஒரு மகன் இல்லை."]

ஆபுத்திரன் பல முனிவர்களின் பெயர்களை அடுக்குகிறான். 

"ஆ மகன் அசலன்; மான் மகன் சிருங்கி
புலி மகன் விரிஞ்சி; புரையோர் போற்றும்
நரி மகன் அல்லனோ கேச கம்பளன்
ஈங்கு இவர் நும் குலத்து இருடி கணங்கள் என்று
ஓங்குயர் பெரும் சிறப்பு உரைத்தலும் உண்டால்
ஆவொடு வந்த அழி குலம் உண்டோ?"

"அந்த ஒவ்வொரு முனிவனின் பிறப்பிலும் ஒரு விலங்கிற்குப் பங்கு உண்டு, அப்படி இருக்கையில் பசுவிற்கு மகனாகிய எனக்கு என்ன குறை?" என்பது அவன் கேள்வி.

அப்போது ஓர் அந்தணன் ஆபுத்திரனின் தாய் சாலி பற்றிச் சொல்கிறான் -- அவள் இல்லற வழியில் தவறியவள்; அப்படிப் பிறந்தவன் ஆபுத்திரன் என்று. ஆபுத்திரன் சிரிக்கிறான். பிறகு கேட்கிறான்: "திலோத்தமைக்கும் பிரமனுக்கும் பிறந்தவர்கள் வசிட்டர், அகத்தியர் என்ற இருவரும். அது பொய்யா? அப்படியிருக்க, சாலி மேல் என்ன தவறு?"

"மா மறை மாக்கள் வரு குலம் கேண்மோ
முது மறை முதல்வன் முன் முன்னர்த் தோன்றிய
கடவுள் கணிகை காதலம் சிறுவர்
அருமறை முதல்வர் அந்தணர் இருவரும்
புரி நூல் மார்பீர் பொய் உரை ஆமோ
சாலிக்கு உண்டோ தவறு?"

இந்த உரையாடல் கேட்டு வருந்திய பூதி "ஒதும் அந்தணர்க்கு இவன் ஒத்துவராதவன்" என்று சொல்லி அவனை வீட்டைவிட்டு விரட்டிவிடுகிறான். 

ஆபுத்திரன் பிச்சை எடுக்கிறான். "பசுவைத் திருடின கள்வன்" என்று சொல்லி ஆபுத்திரனுக்கு யாரும் நல்ல பிச்சை இடாமல் அவனுடைய பிச்சைப்பாத்திரத்தில் கல்லைப் போடுகிறார்கள்.

மனம் நொந்த ஆபுத்திரன் தென்மதுரைக்கு வருகிறான். சிந்தாதேவியின் கோயிலின்முன் இருந்த அம்பலத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டு, ஊரில் வாங்கிய பிச்சையைப் பிறருடன் பகிர்ந்து காலம் கழிக்கிறான். ஒரு நள்ளிரவில் சிலர் அங்கே வந்து ஆபுத்திரனிடம் தங்கள் பசிக்கு உணவு கேட்கிறார்கள். அப்படிக் கேட்டவர்களின் பசித்துன்பத்தைப் போக்கமுடியாமல் ஆபுத்திரன் தவிக்கிறான். நள்ளிரவில் பிச்சைக்கு எங்கே போவது? அப்போதுதான் சிந்தாதேவி தோன்றி அவனுக்குத் தன் கையிலிருந்த பாத்திரத்தை ["அமுதசுரபி"யைக்] அவனுக்குக் கொடுக்கிறாள். "நாடு முழுவதும் வறுமை அடைந்தாலும் இந்த ஓடு வறுமை அடையாது" என்று உறுதியும் சொல்கிறாள்.

"கேள் இது ... கெடுக நின் தீது என
யாவரும் ஏத்தும் இருங்கலை நியமத்துத் 
தேவி சிந்தா விளக்குத் தோன்றி
ஏடா! அழியல்! எழுந்து இது கொள்ளாய்
நாடு வறம் கூரினும் இவ்-ஓடு வறம் கூராது
வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது 
தான் தொலைவு இல்லாத் தகைமையது"

ஆபுத்திரன் அவளை வாழ்த்தி வேண்டுகிறான்:

"சிந்தா தேவி! செழுங்கலை நியமத்து
நந்தா விளக்கே! நாமிசை-ப்-பாவாய்!
வானோர் தலவி! மண்ணோர் முதல்வி!
ஏனோர் உற்ற இடர் களைவாய்!"

அது முதல் அந்த ஓட்டில் பிச்சை எடுத்து மக்கள், விலங்கு, பறவை என்று எல்லார்க்கும் உணவளிக்கிறான் ஆபுத்திரன்.

ஆபுத்திரனின் இந்த நல்ல செய்கை தேவேந்திரனுக்கு நடுக்கம் தருகிறது. இந்திரன் ஆபுத்திரன் முன்னர் வருகிறான். "உன் புண்ணியச் செயலுக்கு வரம்கொடுக்க வந்தேன். என்ன வரம் வேண்டும்?" என்று கேட்கிறான். 

இந்திரனை எள்ளி நகையாடுகிறாண் ஆபுத்திரன்:

"ஈண்டுச் செய்வினை ஆண்டு நுகர்ந்திருத்தல்
காண் தகு சிறப்பின் நும் கடவுளர் அல்லது
அறம் செய் மாக்கள், புறம் காத்து ஓம்புநர்
நல் தவம் செய்வோர், பற்று அற முயல்வோர்
யாவரும் இல்லாத் தேவர் நன்னாட்டுக்கு
இறைவனாகிய பெரு விறல் வேந்தே!"

["இந்த உலகத்தில் செய்யும் நல்ல செயல்களின் பயனைத் தானே உங்கள் கடவுள்கள் அந்த உலகத்தில் நுகர்கிறார்கள்! அது தவிர, அறம் செய்பவர்களோ, பிறரைப் பாதுகாப்பவர்களோ, நல்ல தவம் செய்பவர்களோ, பற்றை அறுப்பதற்காக முயல்பவர்களோ, ... இப்படி யாரும் இல்லாத நல்ல ஒரு நாட்டுக்குத் தலவனே!"]

"வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர்
திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிஞை;
உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ
பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ
யாவை ஈங்கு அளிப்பன தேவர் கோன்?"

["பசி வாட்டுகிறது என்று வருந்தி வந்தவருடைய பசியைப் போக்கி, அவருடைய திருந்திய முகத்தைக் காட்டக் கூடிய தெய்வத் தன்மை பொருந்தியது என் பாத்திரம். தேவர் தலைவனாகிய நீர் இங்கே தருவது என்ன? உணவா? உடுப்பவையா? பெண்டிரா? பிறரைப் பாதுகாப்பவரா?"]

தொடர்ந்து "பசி தீர்ந்த மக்களின் இனிய முகத்தைக் காணச் செய்யும் இந்தப் பாத்திரம் ஒன்றே எனக்குப் போதும்" என்று சொல்லி ஆபுத்திரன் இந்திரனை விரட்டிவிடுகிறான். 

காட்டம் கொண்ட இந்திரன் 12 ஆண்டுகளாக மழையில்லாமல் வருந்திய பாண்டிய நாட்டில் வறுமை நீங்கும் வண்ணம் மழை பெய்யவைத்துச் செல்வம் பெருக்கி, ஆபுத்திரனுடைய உதவி யாருக்குமே தேவையில்லாதபடிச் செய்துவிடுகிறான். செல்வக்களிப்பால் யாருக்கும் ஆபுத்திரனுடைய பாத்திரத்திலிருந்து கிடைக்கும் உணவு தேவையில்லாமல் போகிறது; ஆபுத்திரன் மிகவும் வருந்துகிறான்.

அப்போது சாவக நாட்டிலிருந்து வந்த சில வணிகர்கள் சாவக நாட்டில் வறுமையால் மக்கள் பசிப்பிணியால் இறந்ததுபற்றிச் சொல்கிறார்கள். அதைக் கேட்ட ஆபுத்திரன் சாவக நாட்டுக்குச் செல்ல நினைத்துக் கப்பலேறுகிறான். அந்தக் கப்பல் மணிபல்லவத்தீவில் ஒரு நாள் தங்குகிறது. ஆபுத்திரன் அத்தீவில் இறங்குகிறான். தொடர்ந்த பயணத்துக்காக ஆபுத்திரன் ஏறாமலே கப்பல் புறப்பட்டுப் போய்விடுகிறது. 

ஆபுத்திரன் மணிபல்லவத்தீவில் தனித்து விடப்படுகிறான். "யாருமில்லாத தீவில், பலருக்கும் உணவளிக்க வேண்டிய இந்தப் பாத்திரத்தினால் எனக்கு என்ன பயன்?" என்று வருந்துகிறான். அங்கே இருந்த கோமுகிப் பொய்கையில், "மிகவும் கருணையோடு தருமம் செய்வதையே மேற்கொண்டு எல்லா உயிர்களையும் பாதுகாப்பவர் யாராவது வந்தால் அவர் கைக்குக் கிடைப்பாய்" என்று சொல்லி அந்தப் பாத்திரத்தைப் போட்டு ... 

"ஓர் யாண்டு ஒரு நாள் தோன்று என விடுவோன்
அருள் அறம் பூண்டு ஆங்கு ஆருயிர் ஓம்புநர்
உளர் எனில் அவர்கைப் புகுவாய்"

என்று விதிக்கிறான்.

பிறகு உண்ணாநோன்பு இருந்து உயிர்விடுகிறான்.

ஆபுத்திரன் கோமுகிப் பொய்கையில் விட்ட அந்தப் பாத்திரம்தான் பின்னர் ஒரு நல்ல நாளில் [கௌதம புத்தன் பிறந்த வைசாக பௌர்ணமி நாளில்] மணிமேகலை கைக்குக் கிடைத்தது.

மிகச் சுருக்கமாக ... அமுதசுரபியின் வரலாறு
-----------------------------------------------------
அமுதசுரபி ... தென்மதுரைச் சிந்தாதேவி கையிலிருந்து ஆபுத்திரனுக்குப் போனது; ஆபுத்திரன் கையிலிருந்து மணிபல்லவத் தீவில் இருந்த கோமுகிப் பொய்கையில் விடப்பட்டது; பிறகு அது மணிமேகலை கையில் புகுந்தது.

+++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்,
ராஜம்











Subashini Tremmel

unread,
Dec 6, 2010, 3:38:23 PM12/6/10
to rajam, மின்தமிழ், Subashini Kanagasundaram
ராஜம் அம்மா,
 
அருமையான  விளக்கம். பொறுத்தமான தலைப்பில் தொடங்கியது வாசிப்பிற்கும் தேடுதலுக்கும் உதவும். முழுதும் வாசித்து முடித்ததுமே இரண்டு கட்டுரைகளையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு விக்கியில் இணைத்துவிட்டேன். காப்பியங்கள் பகுதியில் உங்கள் கட்டுரைகள் தான் மணிமேகலைக்குத் தொடக்க கட்டுரையாக அமைந்திருக்கின்றன. இங்கே பாருங்கள்.
 
தொடர்ந்து நேரம் கிடைக்கும் போது கதைகளையும் மணிமேகலை தொடர்பான சிறு கட்டுரைகளையும் நீங்கள் வழங்கினால் நாம் தொகுத்து வரலாம்.
 
நன்றி
சுபா

2010/12/6 rajam <ra...@earthlink.net>

விஜயராகவன்

unread,
Dec 6, 2010, 6:17:31 PM12/6/10
to மின்தமிழ்
On Dec 6, 8:58 pm, rajam <ra...@earthlink.net> wrote:
> -------------------------------
> வாராணசியில் வேதம் ஓதுகிற  
> அபஞ்சிகன்  
> என்பவனுக்குச் சாலினி  
> என்று ஒரு மனைவி. சாலினி  
> இல்லறவழி தவறிவிடுகிறாள்;  
> அந்தக் குற்றம்  
> தீர்ப்பதற்காகத்

ஒரு சின்ன கேல்வி. சாலினி எந்த விதத்தில் ”இல்லறவழி தவறிவிடுகிறாள்” என்ற
தகவல்களும் உள்ளதா?

அந்த காலத்தில் வாரணாசியில் மனு நீதிகள் உக்கிரமாக அமல்படுத்தப்
பட்டிருக்கும். சாலினி பிராயச்சித்தம் செய்வதற்கு தெற்கே உள்ள
தீர்த்தங்களுக்கு பிரயாணம் செய்வது, அந்தக் கால நீதி நூல்கள் படியான
குற்றத்தீர்ப்பா?

இது food for thought தவிர, விமரிசனம் இல்லை.

தொடருங்கள்

விஜயராகவன்

Innamburan Innamburan

unread,
Dec 6, 2010, 8:12:03 PM12/6/10
to mint...@googlegroups.com
அவ்வப்பொழுது எனக்கு சில கவலைகள் வரும். ஒரு ஆசானின் முன்னால்
மண்டியிட்டு அமர்ந்து மணிமேகலை பாடம் கேட்கவேண்டும் என்ற ஆதங்கம்
தீர்ந்தது எனலாம். அதுவும் ஸுபாஷிணி, எள்ளுக்கு முன் எண்ணைய் ஆக, தொகுக்க
ஆரம்பித்தது, நல்லதே. என் ப்ரியாரிட்டிஸ் மாறி விட்டன.
இன்னம்பூரான்

rajam

unread,
Dec 6, 2010, 9:26:49 PM12/6/10
to mint...@googlegroups.com, விஜயராகவன்
ஆமாம்! நல்ல வேளை, கேட்டீர்கள், திரு விஜயராகவன்! நன்றி!

இந்த மாதிரிக் குறிப்பு இரண்டு இடங்களில் மணிமேகலையில் உண்டு! சொல்கிறேன்...
"வாரணாசி ஓர் மறை ஓம்பாளன்
ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்
பார்ப்பனி சாலி காப்புக் கடை கழிந்து
கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சி-த்
தென் திசைக் குமரி ஆடிய வருவோள்  
சூல் முதிர் பருவத்துத் துஞ்சு இருள் இயவிடை
ஈன்ற குழவிக்கு இரங்காள் ஆகி-த்
தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க..."
[சுருக்கமான பொருள்:
"வாரணசியில் மறை ஓம்புகின்ற அபஞ்சிகன் என்பவனுக்கு மனைவி சாலி என்ற பார்ப்பனப் பெண். அந்தப் பெண் காவலின் எல்லையைக் கடந்து, கொண்டவனைப் பிழைத்த தண்டம் அஞ்சியதனால் தென் திசையில் உள்ள குமரியில் [நீர்] ஆட வரும்போது சூல் முதிர்ந்து, நள்ளிரவில் தான் பெற்ற குழந்தைக்கு இரங்காமல் அதை மறைந்திருக்கும் ஒரு தோட்டத்தில் போட்டுவிட்டு நீங்க ..."]
இங்கே "காப்புக் கடை கழிந்து ... கொண்டோனைப் பிழைத்த தண்டம் அஞ்சி" என்று மட்டும் சொல்கிறார் சாத்தனார். மேல் விவரம் இல்லை.
உ. வே. சா உரையில் தெரிவது: "கணவனுக்குப் பிழை செய்தமையால் உண்டாகும் தண்டத்திற்குப் பயந்து"

பிறகு வருவது:
சாலி குமரியாடிவிட்டு வருத்தத்தோடு நடந்து வருகிறாள். வழியில் ஓர் அந்தணனைப் பார்க்கிறாள். அவன் அவளை யார் எங்கிருந்து வருகிறாள் என்று கேட்கிறான். அப்போது சொல்கிறாள்:
"வாரணாசி ஒர் மா மறை முதல்வன்
ஆரண உவாத்தி அரும் பெறல் மனைவி யான்
பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பில் ஒழுகி -க்
காப்புக் கடை கழிந்து கணவனை இழந்தேன்
எறி பயம் உடைமையின் இரியல் மாக்களொடு
தென் கண் குமரி ஆடிய வருவேன்
பொன்-தேர்-ச் செழியன் கொற்கையம் பேரூர்-க்
காவதம் கடந்து கோவலர் இருக்கையில்
ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகி-த்
தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன்"
இந்த இடத்தில் அவளே "பார்ப்பார்க்கு ஒவ்வாத பண்பில்" ஒழுகியதாகச் சொல்கிறாள். அதனால் "எறி பயம்" உண்டு எனவும் தெரிகிறது. அதாவது "அடித்தலால் உண்டாகும் அச்சம்" என்பது உ. வே. சா உரை.
[இதே போல .. மணிமேகலையின் தோழி சுதமதியும் ஒரு பார்ப்பனப்பெண். சண்பையில் (சீர்காழி?) கௌசிகன் என்பவன் மகள். அவளை இந்திர விழா நேரத்தில் மாருதவேகன் என்ற ஒரு விஞ்சையன் கவர்ந்துகொண்டு போய்விடுகிறான். பிறகு அவளைத் தேடிக்கொண்டு அவள் தந்தை குமரியில் நீராடச் செல்லும் மக்களொடு சென்று தேடுவதாகத் தெரிகிறது. இவள் கதையைத் தனியாகச்சொல்கிறேன், கூடிய விரைவில்.]
ஆகவே ...
நீங்கள் குறிப்பிட்டபடி ...

அந்த காலத்தில் வாரணாசியில் மனு நீதிகள் உக்கிரமாக அமல்படுத்தப்
பட்டிருக்கும்.  சாலினி பிராயச்சித்தம் செய்வதற்கு தெற்கே உள்ள
தீர்த்தங்களுக்கு பிரயாணம் செய்வது, அந்தக் கால நீதி நூல்கள் படியான
குற்றத் தீர்ப்புப் போலத்தான் தெரிகிறது.
இன்னொன்று ... திருத்தவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன்; மறந்துவிட்டேன்.
ஆபுத்திரன் தாய் பெயர் "சாலி." "சாலினி" இல்லை. என் தவறு! (நல்ல வேளை, இதற்காக நான் குமரியாடப் போகவேண்டாம்! ;-) )
சிலப்பதிகாரத்தில் "சாலினி" பற்றியும் படித்துக் கொண்டிருப்பதால் வந்த எழுத்துப் பிழை.
எல்லாரும் அன்போடு இதைத் திருத்திப் படிக்கவும் -- ஆபுத்திரன் தாய் பெயர் "சாலி"; "சாலினி" இல்லை.
அன்புடன்,
ராஜம்
-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

rajam

unread,
Dec 6, 2010, 9:56:06 PM12/6/10
to Subashini Tremmel, மின்தமிழ்
ஆஹா! சுபா! சும்மாவா சொல்கிறார்கள் "சுறு சுறு சுபா" என்று! சுடச் சுடத் தொகுத்துவிட்டீர்களே! மகிழ்ச்சியில் எப்படி நன்றி சொல்ல என்று தெரியவில்லை! மிக மிக நன்றி'மா!
அடிக்கடி எழுதப் பார்க்கிறேன். முழுக்கதையும் சொல்லாவிட்டால் எனக்கும் தூக்கம் வராதுபோல் இருக்கு!
மின் தமிழும் த.ம.அ. கட்டளையும் கொடுத்துவைத்ததனால் ஒரு சுபா கிடைத்திருக்கிறார்கள்!
அன்புடன்,
ராஜம்

coral shree

unread,
Dec 6, 2010, 10:03:20 PM12/6/10
to mint...@googlegroups.com
அருமை சுபா....

2010/12/7 Subashini Tremmel <ksuba...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

மின் செய்தி மாலை படியுங்கள்!

Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

coral shree

unread,
Dec 6, 2010, 10:04:06 PM12/6/10
to mint...@googlegroups.com
ஒரு வார்த்தை அது திருவார்த்தை அம்மா.....

2010/12/7 rajam <ra...@earthlink.net>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Dec 7, 2010, 7:15:25 AM12/7/10
to mint...@googlegroups.com
2010/12/7 rajam <ra...@earthlink.net>:

> அடிக்கடி எழுதப் பார்க்கிறேன். முழுக்கதையும் சொல்லாவிட்டால் எனக்கும் தூக்கம்
> வராதுபோல் இருக்கு!


ஒரு கதையா அது? எத்தனை விஷயங்களைச் சொல்லிப்போகிறது. இந்த மண்
அன்றிலிருந்து இன்றுவரை மாறவே இல்லை என்று தோன்றுகிறது. ஆச்சர்யமான
விஷயம்!!

சம்யுக் யுசா முன்னுரையில் மொழிபெயர்ப்பாளர் சொல்கிறார் இம்மாதிரிப்
பண்டைய கதையாடல்களிலிருந்துதான் சமகாலக் கொரிய மனதைப் புரிந்து கொள்ள
முடியுமென்று.

இது உங்கள் கதையாடலுக்கும் பொருந்தும். யாம் செய்த புண்ணியம் ராஜம் அம்மா
கிடைத்தது!

முழுக்கதையும் வாசிக்காவிடில் எமக்கும் தூக்கமில்லை!

க.>

வினோத் ராஜன்

unread,
Dec 7, 2010, 12:46:41 PM12/7/10
to மின்தமிழ்
Dear Rajam,

Thanks :-)

Please continue...

I vaguely remember that there is a story in Manimekhala about the
Buddha Visiting the Naagadviipa, and Manimekhala worshipping His foot
prints (or am I mixing up things ? Correct me if I am wrong)

This seems to have been common folklore among the Tamil & Sinhala
Buddhists. (The Same event is narrated in the Mahaavamsa of the
Sinhala's)

AFAIK The event is not in the Agama-s.

People seem to have developed this legend at some point of Time.

Well, I suppose Kannan was searching for Tamil Buddhism Legends :P

I am waiting for that Part :)

V

N. Kannan

unread,
Dec 7, 2010, 6:11:33 PM12/7/10
to mint...@googlegroups.com
Precisely Vinoth!

Tamils and Singhalese refer to Manipallava or Java because they were
seafaring people. They are familiar with these places in their Silk
Trade.
I'm looking exactly these clues! Interestingly there is a long island
in Phillipines called Pallavan (they spell it differently).

Kannan

2010/12/8 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Nagarajan Vadivel

unread,
Dec 8, 2010, 6:02:44 AM12/8/10
to mint...@googlegroups.com

அன்புடை ராஜம் அம்மா அவர்களுக்கு


Manimekalai The 6th century Tamil Buddhist work "Manimekalai" by Sattanar, is perhaps the most famous of the work done in Tamil Nadu. "The Manimekalai is a product of a tradition of learning cultivated in the leading monastic centres in Tamilakam (another name for Tamil Nadu).

It is essentially a work expounding the doctrines and propagating the values of Buddhism," says Prof Pathmanathan. "The Manimekalai does not seem to have been written with a view to promoting the claims of any particular sect of Buddhism to superiority over others.

It is essentially synthetic in character and the emphasis is uniformly on the fundamentals of Buddhist teaching and practice," he notes. Manimekalai was not about individual salvation only. It stressed the need for giving relief to those who were distressed and in want. "Kuntalakesi" was another great Tamil work written to propagate Buddhism.

சங்கமிட்டா என்ற பிக்குனி தமிழகத்தில் நாகபட்டினம் அல்லது கவிரிப்பூம்பட்டணம்  புத்த விஹாரில் இருந்து இலங்கைக்குச் சென்றதாக என் குறிப்பில் பார்த்தேன்.  மணிமேகலை என்பது நிகழ்வும் கற்பனையும் கலந்து உருவான காவியம் என்பதால் மணிமேகலை என்ற பாத்திரம் இந்த சங்கமித்தாவையோ அல்லது அசோகரின் மகள் (அவர் பாடலிபுத்திரத்தில் இருந்து இலங்கைக்குச் செல்லும்போது வழியனுப்ப அசோகர் வந்ததாகவும், சங்கமித்திரை இலங்கைக்குச் செல்லும் முன் தமிழகதில் இறங்கிச் சென்றதாகவும் குறிப்பு உள்ளது.  இவற்றை வைத்து இலங்கையோ அல்லது அதன் அருகில் அக்காலத்தில் இருந்த பல தீவுகளில் உள்ள ஒன்றொ மணிபல்லவம் என்று கருதலாமா
நாகராசன்

2010/12/8 N. Kannan <navan...@gmail.com>

rajam

unread,
Dec 8, 2010, 11:31:23 AM12/8/10
to mint...@googlegroups.com
அன்புள்ள பேராசிரியர் ஐயா,
எனக்கு உறுதியாகத் தெரியாவிட்டாலும் ... இலங்கை அல்லது அதன் பக்கத்தில் அந்தக்காலத்தில் இருந்த ஒரு தீவுதான் "மணிபல்லவத் தீவு" என்று நினைத்துக்கொள்வேன்.
அன்புடன்,
ராஜம்

N. Kannan

unread,
Dec 9, 2010, 7:48:17 AM12/9/10
to mint...@googlegroups.com
2010/12/9 rajam <ra...@earthlink.net>:

> அன்புள்ள பேராசிரியர் ஐயா,
> எனக்கு உறுதியாகத் தெரியாவிட்டாலும் ... இலங்கை அல்லது அதன் பக்கத்தில்
> அந்தக்காலத்தில் இருந்த ஒரு தீவுதான் "மணிபல்லவத் தீவு" என்று
> நினைத்துக்கொள்வேன்.

அதில் தவறில்லை.

ஆனால் சங்கப்புலவன், 21ம் நூற்றாண்டு ஆசாமி போல், `யாது ஊரே, யாவரும்
கேளிர்!` என்கிறானே? அதன் உண்மைப் பொருள் என்ன? வீச்சு என்ன என்பதைக்
கண்டறிவதே இவ்விழையின் நோக்கம்.

வெளிநாட்டுத்தரவுகள், நாம் அங்கு சென்றதாகச் சொல்கின்றன. ஆனால்
நம்மவூரில் தரவுகள் இல்லாமல் அல்லாடுகிறோம். இதில் எது உண்மை?

க.>

annamalai sugumaran

unread,
Dec 9, 2010, 9:00:48 AM12/9/10
to mint...@googlegroups.com
நா பார்த்தசாரதி அவர்கள் அந்தக்காலத்தில் மணிபல்லவம் என ஒரு பெரிய சரித்திர நாவல் எழுதியிருந்தார் ( 1960-1965).
அதைத் தொகுத்து அந்தக்காலத்து கலகியில் வந்த தொடர் கூட என்னிடம் இருக்கிறது என நினைக்கிறேன் . .
சிறப்பான நாவல் அந்தக்க்காலத்தில்  என மனம் கவர்ந்தது அது .
மீண்டும் தேடி எடுத்து படிக்கததூண்டுகிறது இந்த இழை .

அதில்மணிபல்லவத் தீவிற்கு அதன் நாயகன்  சென்றதாக கூட விவரணங்கள் உண்டு .
அன்புடன் 
சுகுமாரன் 
2010/12/9 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

My goal is simple.
 It is complete understanding of the universe, why it as it is     and why it exists as all !

Geetha Sambasivam

unread,
Dec 9, 2010, 10:33:54 AM12/9/10
to mint...@googlegroups.com
அருமையான விளக்கம் அம்மா. என்னுடைய தமிழாசிரியர் செல்வி நல்லையா அவர்கள் நினைவில் வந்தார்.

2010/12/7 rajam <ra...@earthlink.net>
"வான்கோழி வாரம் -- ஆபுத்திரன் கதை" என்று ஒரு சிறு செய்தியைத் தற்செயலாகப் பகிர்ந்துகொண்டபோது
அமுதசுரபி ... தென்மதுரைச் சிந்தாதேவி கையிலிருந்து ஆபுத்திரனுக்குப் போனது; ஆபுத்திரன் கையிலிருந்து மணிபல்லவத் தீவில் இருந்த கோமுகிப் பொய்கையில் விடப்பட்டது; பிறகு அது மணிமேகலை கையில் புகுந்தது.

+++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்,
ராஜம்











Geetha Sambasivam

unread,
Dec 9, 2010, 10:37:46 AM12/9/10
to mint...@googlegroups.com
ஆமாம், சுரமஞ்சரி, முல்லை என்ற இரு பெண்கள் கதாநாயகன் இளங்குமரனை விரும்புவார்கள். கடைசியில் சுரமஞ்சரியைத் திருமணம் செய்து கொள்வான். முல்லை புத்த பிக்ஷுணியாகப்போவாள்னு நினைக்கிறேன்.  திகில், ஆச்சரியம், அதிசயம் எல்லாம் நிறைந்த நாவல்.  பாண்டிமாதேவி கூட நா.பா. எழுதியது தான்.

2010/12/9 annamalai sugumaran <amirth...@gmail.com>
நா பார்த்தசாரதி அவர்கள் அந்தக்காலத்தில் மணிபல்லவம் என ஒரு பெரிய சரித்திர நாவல் எழுதியிருந்தார் ( 1960-1965).
அதைத் தொகுத்து அந்தக்காலத்து கலகியில் வந்த தொடர் கூட என்னிடம் இருக்கிறது என நினைக்கிறேன் . .
சிறப்பான நாவல் அந்தக்க்காலத்தில்  என மனம் கவர்ந்தது அது .
மீண்டும் தேடி எடுத்து படிக்கததூண்டுகிறது இந்த இழை .

அதில்மணிபல்லவத் தீவிற்கு அதன் நாயகன்  சென்றதாக கூட விவரணங்கள் உண்டு .
அன்புடன் 
சுகுமாரன் 

rajam

unread,
Dec 9, 2010, 10:47:51 AM12/9/10
to mint...@googlegroups.com
நல்ல சொல்லுக்கு நன்றி, கீதா!
அன்புடன்,
ராஜம்
Reply all
Reply to author
Forward
0 new messages