தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கீழ் தகவல் தருமாறு கோரும் மனுவை எழுதுவது எப்படி?

535 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Dec 17, 2013, 4:25:12 AM12/17/13
to seshadri sridharan
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கீழ் தகவல் தருமாறு கோரும் மனுவை எழுதுவது எப்படி?

மிகப் பலருக்கு தகவல்அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி தெரிந்திருந்தாலும் அதைத் தக்கபடி எழுதி மனுச் செய்வது எப்படி என்று தெரியாது. எனவே கீழே ஒரு மாத்திரி(Model)க்காக ஒருவர் எழுதி மனுச்செய்வது போல கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுத விரும்புவோர் ஆங்கில எழுத்தில் உள்ளவற்றையும் தமிழில் எழுத விரும்புவோர் தமிழில் உள்ளவற்றையும் தேர்ந்து கொள்ளலாம். மனுச்செய்த 30 நாள்கள் வரை தகவல் தருவதற்கான காலக்கெடு உள்ளது. மேலும் 10 நாள்கள் கூட குறிப்பிட்ட அதிகாரி எடுத்துக் கொள்ளலாம்.  ஆனால் 30 நாள்கள் கடந்து விட்டால் அதற்கு கட்டணம் ஏதும் கட்டத் தேவையில்லை. 40 நாள்கள் கடந்தும் தராவிட்டால் மேல் அதிகாரியிடம் முறையீடு செய்து அவர் மூலம் தகவல்களைப் பெற முயலலாம்.



Request for information under Right To Information Act 2005
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கீழ் தகவல் தருமாறு கோரிக்கை 


To 
Public Information Officer(PIO)
Address of concerned office

From, 

Senders name and address


பெறுநர், 

தகவல் அளிக்கும் அலுவலர்(PIO),
வட்டாட்சியர் அலுவலகம்,
- - - - - - - - - - - - - - - - - - ---
- - - - - - - - - -  - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - 
சென்னை - 600 060. 


விடுநர்,

S. சுந்தரேசன்,
- - -  - - - - - - -  - - - - -
- - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - -
சென்னை - 600 099. 
மின்முகவரி: 9999999@gmail.com 
கைபேசி: 00000 00000 


Sub: Request for Information under Right to Information Act 2005 from concerned office
பொருள்:  மாதவரம் வட்டாட்சியர்  அலுவலகத்தில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கீழ் தகவல் தருமாறு கோரிக்கை 

Respected Madam/Sir,
மதிப்பிற்குரிய ஐயா,

I wish to seek  the below information under RTI Act 2005.
கீழ்கண்ட தகவல்களை RTI சட்டம் 2005 இன் படி அறிய விரும்புகிறேன்.

On 2nd Feb 2011, I submitted an application patta for two plots registered under my name. The details of the plots are as follows:
கடந்த 2 பிப்ரவரி 2011 அன்று, நான் என் பெயரில் பதியப்பட்ட இரண்டு மனைப் பிரிவிற்கு பட்டா கோரி மனு செய்திருந்தேன். மனைப் பிரிவின் விவரங்கள் பின்வருமாறு:  

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் வட்டம், நெம். 50 மாதவரம் கிராமத்தில் சர்வே நெம். 1340 இல் அமைந்த R.S. நகர் பிளாட் நெம்  24.

The concerned officer in Taluk office DI D NOT accept and rejected the patta application
மாதவரம் வட்டாட்சியர் பட்டா மனுவை ஏற்க மறுத்து அதை மறுதலித்துத் திருப்பி அனுப்பிவிட்டார்        

Under the RTI Act, please provide the following information with respect to the same:
Question 1.
Question 2
Question 3
Question 4
Question 5

தகவல் அறியும் உரிமைச் (RTI) சட்டம் 2005 இன் கீழ், எனக்கு சர்வே நெம். 1340 தொடர்பில் பின்வரும் தகவல்களைத் தருமாறு வேண்டிக் கொள்கிறேன்.  

கேள்வி 1 சர்வே நெம்.1340 தொடங்கிய ஆண்டு முதல் இன்று வரை எத்தனை முறை பட்டா வழங்கி இருக்கிறீர்கள்? எந்தெந்த ஆண்டில் வழங்கினீர்கள்? யார் யாருக்கு வழங்கி இருக்கிறீர்கள்? என்பதற்கு பதிவேட்டு நகல் தரவேண்டுகிறேன்.   

கேள்வி 2 சர்வே நெம். 1340 தொடர்பாக விற்றவர் வாங்கியவர் யார் யார் என்ற விவரம் உங்களது 8A பதிவேட்டில் (8A Register) என்னென்ன உள்ளது? அதன் ஒரு நகல் வேண்டும். 

கேள்வி 3 சர்வே நெம். 1340 குறித்த புல வரை படம் (FMB) உள்ளதா? அண்மையாக அதில் எப்போது மாறுதல் நிகழ்ந்தது? அதன் ஒரு நகல் வேண்டும்.  

கேள்வி 4 சர்வே நெம். 1340 தொடர்பில் உங்களிடம் சிட்டா அடங்கல் உள்ளதா? அதில் உள்ள விவரம் என்ன? என்பதற்கு நகல் வேண்டும்.  

கேள்வி 5  


6. According to your rules or citizens charter or any other order, in how many days should the above said matters be dealt with and resolved?
6. உங்களது விதிகள் அல்லது குடிமக்கள் தனியுரிமை ஆவணத்தின்படி அல்லது வேறு ஏதேனும் நடைமுறைப்படி, மேற்சொன்ன விஷயங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காண எத்தனை நாட்கள்  ஆகும்? 

7. By when the above action would be taken?
7. எப்போது மேற்சொன்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும்?

I hereby inform that following formalities have been completed by me:
பின்வரும் நெறிமுறைகள் என்னால் நிறைவு செய்யப்பட்டு உள்ளன என்ற தகவலை நான் தருகிறேன்:

1. That I have deposited the requisite fees of Rs. 10 by way of court fee stamp.
1. நான் கட்டவேண்டிய கட்டணத் தொகை உரூ.10 ஐ கோர்ட் ஃபீ ஸ்டாம்பு வாயிலாகக் கட்டியுள்ளேன். நகல்களுக்கு ஆகும் செலவை நானே ஏற்கின்றேன்.  

2. That I am a ‘Citizen of India’ and I am asking the information as ‘Citizen’. (should enclose Voter Id, Passport or Ration card copy)
2. நான் ஒரு â€˜இந்தியக் குடிமகன் €™ என்பதால் ஒரு €˜குடிமகனாக€™ தகவல் கோருகிறேன். (வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு, ரேஷன் அட்டைப் படிவம் இணைக்க வேண்டும்) 

3. I assure that I shall not allow/ cause to use/ pass/share/display/ or circulate the information received in any case and under any circumstances, with any person or in any manner which would be detrimental to the Unity and Sovereignty or against the Interest of India.
3. நான் உங்களிடம் இருந்து பெற்ற தகவலை எந்த நிகழ்விலும் எந்த சூழலிலும், இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் இறையாண்மைக்கும் கேடாகவோ அல்லது நலனுக்கு எதிராகவோ அமையும்படியாக எந்தஒரு நபரோடும் அல்லது எந்த வகையிலும் பயன்படுத்தக் காரணமாக / வழங்குவதற்கு காரணமாக / பகிர்ந்து கொள்ளக் காரணமாக / பார்வையில் வைக்க காரணமாக அல்லது சுற்றலுக்கு (circulate) காரணமாக அமைய அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.    

Thanking You,
Yours sincerely,


(Name)

நன்றி,
தங்கள் பால் உண்மையுள்ள,



(S. சுந்தரேசன்)     

நாள்: 28/07/2011
சென்னை - 600 099.


தமிழ் மொழியர்ப்பு சேசாத்தரி

seshadri sridharan

unread,
Dec 23, 2013, 5:22:38 AM12/23/13
to mintamil
தகவல் அறியும் சட்ட மனுவிற்கு உரிய மதிப்பை தந்து குறிப்பிட்ட அரசு அலுவலக தகவல் அதிகாரி 30 நாளகளுக்குள் தகவல் தராவிட்டால் அது பற்றிய முதல் மேல் முறையீட்டை மாவட்ட ஆட்சியருக்கு மனுவாக அளிக்க வேண்டும். அவர் குறிப்பிட்ட தகவல் அதிகாரிக்கு கடிதம் எழுதி தகவல் அளிக்க உத்தரவிடுவார். அப்படியும் தகவல் அதிகாரி தகவல் அளிக்க தாமதித்தால் 30 நாள்கள் கழித்து இரண்டாவது மேல்முறையீட்டை மாநில தகவல் ஆணையர், (P B NO 6405) எண்: 2, சர் தியாகராயர் சாலை, ஆலையம்மன் கோவில் அருகில், தேனாம்பேட்டை, சென்னை 600 018. என்ற முகவரிக்கு முதல் மனுவையும், இரண்டாவதாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனுவையும் பற்றிக் குறிப்பிட்டு எழுதினால் அவர் குறிப்பிட்ட அரசு அலுவலக தகவல் அதிகாரிக்கு தகவல் தர உத்தரவிடுவார். தகவல் தராத அதிகாரிக்கு உரூபாய் 2,000/- முதல் 25,000/- வரை சம்பளத்தில் தண்டம் விதித்திடுவார். தகவல் தரத் தாமதித்த தகவல் அதிகாரி தண்டம் கட்டினாலும் நமக்கு தர வேண்டிய தகவல்களை தராமல் இருக்க முடியாது.

தகவல் கோருபவர் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மனு என்று கொடுத்தால் அதை மறுக்காமல் தகவல் அதிகாரி தந்தாக வேண்டும். ஒரே மனுவில் பல கேள்விகளுக்கான தகவல்களைக் கேட்டால் ஏதேனும் ஒன்றனுக்கு தந்தால் போதும் என்ற அடிப்படையில் ஒன்றை மட்டுமே தந்திடுவார். அதைத் தடுக்கவே ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மனு என்ற உத்தி.


அரசு அலுவலகங்களில் உங்களிடம் கையூட்டு பெற்றால் அதை directorate of  vigilance and anti corruption deparment, Tamilnadu, chennai - 28 ற்கு 24615989 / 5949 / 5929  என்ற எண்களில் புகாராக தெரிவிக்கலாம். http://www.dvac.tn.gov.in/.

சேசாத்தரி


2013/12/17 seshadri sridharan <ssesh...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages