Please

48 views
Skip to first unread message

Kandiah MURUGATHASAN

unread,
Feb 22, 2024, 7:33:20 AMFeb 22
to mint...@googlegroups.com

அன்புடையீர்,

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி  என்ற சொற்றொடர் கோள்களின் பிறப்புடன் ஒப்பிடுகையில் ஏற்றுக் கொள்ளக்கூடியதா.இச்சொற்றொடரின் விளக்கம் என்ன?

தேமொழி

unread,
Feb 22, 2024, 2:51:13 PMFeb 22
to மின்தமிழ்
///கோள்களின் பிறப்புடன் ஒப்பிடுகையில் ஏற்றுக் கொள்ளக்கூடியதா///

இலக்கியம் என்பது அறிவியல் அல்ல.
உண்மையை மிகைப்படுத்திக் கூறுவது இலக்கியத்தின் கூறுகளில் ஒன்று.
அடிப்படையில் சொல்லப்படும் கருத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டு, அவ்வாறு  சொல்லப்பட்ட முறையின்  அழகுணர்ச்சியைப் பாராட்டிக் கடந்துவிட வேண்டும்.
 
அறிவியல் கோணத்தில் பார்ப்பது ஏற்புடையதல்ல. தேவையற்ற சொற்கள், தேவையற்ற விளக்கம் ஆகியவை தவிர்க்கப்பட எல்லோரும் ஒரே பொருள் கொள்ளும்வகையில் அதே சொற்களை மாற்றாமல் மீண்டும் மீண்டும் ஒரு குறியீடாகக்  கொண்டு  எழுதுவது அறிவியலின் அடிப்படை, அல்லாமல் மாற்றி எழுதினால் தவறு.
அதாவது thesaurus பயன்பாடு தேவையில்லாதது.
ஆனால் இலக்கியத்தில் ஒரே சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் சிறப்பாகக் கருதப்படுவதில்லை.

 //கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி//
சொல்ல வருவது வீரம் மிக்க ஆதிக்குடி என்ற கருத்து மட்டுமே.

கல்தோன்றி = இதற்கு மனித இனம் மலை(கல்)குகைகளில் தோன்றி வேட்டையாடி வாழ்ந்த காலம்,
மண் தோன்றா = சமவெளிகளுக்கு (மண்) புலம் பெயர்ந்து வேளாண்மை செய்ய முன்னேறாத  முற்காலம் என்ற பொருள் விளக்கமும் படித்துள்ளேன்.
 
அண்மையில் பேஸ்புக் பதிவு ஒன்றும் சில மறுமொழிகளும் . . .  
 
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே ...

இந்தப் பாடல் வரிகள் பலராலும் மேற்கோள் காட்டப் பட்டாலும் இதைப் பற்றிப் பலருக்கும் தெரியாது. இது ஏதோ திராவிட இயக்கத்தினர் 20ம் நூற்றாண்டில் இட்டுக் கட்டிய எதுகை மோனை என்று பலர் நினைக்கிறார்கள். இவ்வரிகள், ஐயாரிதனார் என்ற புலவர் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலை என்ற இலக்கண நூலில் வருபவை:

பொய் அகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர் - கைஅகலக்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு
முன் தோன்றி மூத்த குடி

உலகம் முழுதும் பிரளயத்தால் முழுகிய பின்னர், வெள்ளம் வடிய முதலில் மலைகளின் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தைக் குறிப்பிடுவதாகக் கொள்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். அவர் வாதத்தை ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ, இது 1000 ஆண்டுக்கு முந்தைய பாடல். இதன் பொருள் தற்காலத்தில் புரியாதுதான். ஆனால், வெறும் எதுகை மோனை மட்டுமல்ல. கடந்த பெரும்பனிக் காலத்தின் போது ஈழமும் தமிழகமும் இணைந்திருந்தன. பின்னர் குமரிக்குத் தெற்கே உள்ள சிறு நிலமும், கோடிக்கரையிலிருந்து தலைமன்னார் வரையுள்ள நிலமும் கடலில் மூழ்கின. இந்த வெள்ளத்தின் நினைவாகப் பல மரபுக் கதைகள் உள்ளன. சிலம்பு இதைப் பற்றிச் சொல்கிறது. இதன் முழுப் பொருள் நமக்கு இன்னும் புலப்படவில்லை. 
 --------------------------

மறுமொழிகள் . . . 
எனக்கு புரிந்த பொருள் இது தான்
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
முன்தோன்றி மூத்த குடி”
இதன் பொருள் கல் தோன்றி > ‘காலத்தை உணர்ந்த பின் - இரவு பகல்… உணர்ந்த பின் ’
மண் > வேளாண்மைக்கு மண்ணைப் பயன்படுத்துவதை அறியும் முன், என்றே பொருள்
மற்றபடி கல்தோன்றி மண் தோன்றுவதற்கு முன்பே என்றால் அது பொருளற்றது, மண் இல்லை என்றால் காடுகளே இல்லை, மண்ணே உடைந்த கற்களின் துகள்கள் தான், மணிதன் தாவரங்கள் இல்லாமல் வாழ்ந்திருக்க முடியாது, தாவரங்களும் மண் இன்றி காடுகளாக வளர்ந்திருக்க முடியாது

'வாளோடு முன் தோன்றிய' என்பது இரும்புயுகத்தைக்
குறிப்பதாகும்.
Christopher Jayakaran
-------------------------------Kandiah MURUGATHASAN

unread,
Feb 23, 2024, 8:14:40 AMFeb 23
to mint...@googlegroups.com
மிக்க நன்றி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/16c9c9e3-de6c-454e-ad0a-0608b874e059n%40googlegroups.com.

தேமொழி

unread,
Apr 2, 2024, 9:42:11 PMApr 2
to மின்தமிழ்
தோழர்  ஏலையா க. முருகதாசன்

பாரதிதாசனின் . . .  

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்
பிறந்தோம் நாங்கள்

[https://www.tamilvu.org/courses/degree/c011/c0114/html/c0114405.htm]
இந்த வரிகள் குறித்த உங்கள் கருத்தையும் அறிய விரும்புகிறேன். 

நன்றி. On Thursday, February 22, 2024 at 4:33:20 AM UTC-8 tamilstorywriters wrote:

Kandiah MURUGATHASAN

unread,
Apr 15, 2024, 6:46:26 AM (2 days ago) Apr 15
to mint...@googlegroups.com
திருமதி.தேமொழி அவர்களுக்கு

கால தாமதத்திற்கு மன்னிக்கவும் பாடலுக்கான விளக்கத்தை விரைவில் அனுப்பி வைக்கிறேன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages