பொங்கலோ பொங்கல்

8 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jan 14, 2026, 10:14:47 PM (15 hours ago) Jan 14
to மின்தமிழ்

THFi Pongal Greetings.jpg
குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
முனைவர் க. சுபாஷிணி 
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை  

தேமொழி

unread,
Jan 14, 2026, 10:34:09 PM (15 hours ago) Jan 14
to மின்தமிழ்
periyar pongal malar 2026.jpg 
அருமைத் தமிழ் நெஞ்சங்களே , உலகெங்கும் வாழும் பெரியார் பற்றாளர்களே , தொண்டர்களே !

திராவிடத்திருநாளாம் பொங்கல் உலகெங்கும் வாழும் தமிழர்கட்குத் தனிச்சிறப்பு வாய்ந்த பெருநாளாம் . ஊரில் அமர்க்களமாக கொண்டாடும் வேளையில் நாம் உலகெங்கும் நமக்கு உவந்த வகையில் கொண்டாடி மகிழ்கின்றோம் . தமிழ்ப் புத்தாண்டு , திருவள்ளுவர் விழா என்றும் சிறப்புடன் கொண்டாடி மகிழ்வோம் .
அனைவர்க்கும் பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில்
பொங்கல் , தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

பொங்கல் பரிசாக இந்த மலரைத் தருகின்றோம் . மகிழுங்கள் !

https://online.fliphtml5.com/kdsmi/jxoo/

- பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கா

தேமொழி

unread,
Jan 14, 2026, 10:57:04 PM (15 hours ago) Jan 14
to மின்தமிழ்


arunagirinathar.jpg 
இந்தி எதிர்ப்பு போரின் முதல் சர்வாதிகாரி சுவாமி அருணகிரிநாதர் எனும் செம்மலை அண்ணலாரடிகள் இயற்றிய பொங்கல் விழா பாடல்

பொங்கல் விழா பாட்டு: செந்தமிழ் நாடெனும் போதினிலே இசை மெட்டு

பொங்கல் விழாவென்னும் போதினிலே – இன்பம்
பொங்குந் தமிழக மீதினிலே- தைத்
திங்கள் கொண் டாடுந்தென்னாட்டினிலே – பல
செல்வங் குடிபுகும் வீட்டினிலே (1)

சங்குமு ழங்குதைப் பொங்கல்விழா – ஏறு
தாவிக் குதிகொள்ளும் பொங்கல்விழாப் – புது
மங்கை மணள ரிருவர்கட்கும் – நல்
வரிசை யளிப்பது பொங்கல் விழா (2)

நாட்டிற் குயிராகும் நல்லுழவர் – பல
நாட்கள் விழிப்புடன் பாடுபட்டு – வயற்
காட்டில் விளைந்த கதிரறுத்துப் – பயன்
கண்டு களிக்குந்தைப் பொங்கல் விழா (3)

வீடு முழுதும்வெண் சுண்ணம்வைத்து – முற்றும்
வீதிக ளெங்குஞ்சிங் காரஞ்செய்து – காளை
மாடுகட் கெல்லாஞ்செங் காவிபூசி – வீரர்
மஞ்சி வெருட்டுந்தைப் பொங்கல் விழா (4)

புத்தாடை கட்டியே பூமுடித்து – உயர்
பொன்னனி பூண்டு பொடிதிமிர்ந்து – தூய
முத்தமிழ்ப் பாடல் முழக்கிக் கொண்டு – பெண்கள்
முற்றத்தி லாடுந்தைப் பொங்கல் விழா (5)

ஏழிசை யாழிசை இன்னிசையோர் – தமிழ்
இயலிசை நாடகப் பண்ணிசையோர்க் – கெல்லாம்
வாழிசை வள்ளல்கள் மாமணியும் – பொன்னும்
வாரி வழங்குந்தைப் பொங்கல் விழா (6)

மார்கழி முப்பதும் வைகையிற் – கோதை
மாணிக்க வாசகர் பாவை பாடித் – தமிழ்ப்
பார்விழிப் புற்றிட வேண்டி இறைவர்க்குப்
பாற்பொங்கல் வைக்குந்தைப் பொங்கல் விழா (7)

காயுங் கிழங்குங் கனிகரும்பும்- நல்ல
கட்டித் தயிர்வெண்ணெய் பாலமுதுந் – திரு
மாயன் முருகன் சிவன் கொற்றவை கட்கு
வைத்து படைக்குந்தைப் பொங்கல் விழா (😎

செந்தமிழ் நாடு செழிக்கும் விழா – வேண்டும்
செல்வங்கள் யாவும் கொழிக்கும் விழா – இறை
கந்தழி வள்ளி கொடிநிலைகள் – நம்மைக்
காப்பாற்ற வேண்டுந்தைப் பொங்கல் விழா (9)

தமிழர்கள் உரிமை வேட்கைக்காக பல பாடல்கள் பாடியவர் சுவாமி அருணகிரிநாதர்.

இவர் பாடல்கள் பெரும்பாலும் தமிழ்நாடு, தமிழரினம், தமிழரசு, தமிழர் நலம், தமிழ்மொழி முதலியவற்றுக்காக உரிமைகளைப் பெற்று தன்மானத் தமிழர்களாக பெருமிதமாக வாழ்வதற்காக இந்தி எதிர்ப்பு போர் பாடல்கள் உட்பட 1925 முதல் 1956 வரை தமிழர்களின் எழுச்சிப் பாடல்களாக பாடியவர்.

தமிழர் உரிமை வேட்கைப் பாடல் தொகுப்பில் இருந்து பொங்கல் விழா பாடல் இங்கு பதியப்படுகிறது.
Reply all
Reply to author
Forward
0 new messages