தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

18 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Aug 30, 2026, 11:15:15 PM (5 days ago) Aug 30
to thiru thoazhamai, Dr. Namadhu MGR, Akar Aadhan, ara...@aol.com, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Casmir Raj, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, Chitraleka V, dgvcmut...@gmail.com, Dr Seenivasan Sappani, குவிகம் இலக்கிய அமைப்பு, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Dr. Ku.Muthukumar, Thamizh Pavai, Paramasivam Marudanayagam, Rajan Krishnan

தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 



தனி என்னும் சொல் சிறப்பு என்னும் பொருளுடையதே!

சட்டமன்றத்தில் மாண்பமை ச.ம.உறுப்பினர் சிந்து தனி(த் தொகுதி) என்னும் சொல் குறித்துப் பேசியுள்ளார்.

reservation என்னும் சொல்லிற்குத் தனி எனப் பொருள் இல்லை என்றும் பேசியுள்ளார்.

அச்சொல்லிற்குப் பொதுவாக ஒதுக்கீடு, பதிவு எனப் பொருள்கள் உள்ளன.

எனினும் தனி ஒதுக்கீடு என்று அகராதிகள் குறிப்பதைக் காணலாம்.

நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் பட்டியலின (SC), பழங்குடியின (ST) மக்கள் தங்களின் சார்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பிற இனப் போட்டியாளர்கள் இன்றித் தங்கள் இனத்தவரே போட்டியிட வேண்டும் என்பதற்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளே தனித் தொகுதிகள்.

தனித் தொகுதி என்று சொல்லாமல் சிறப்புத் தொகுதி, உரிமைத் தொகுதி எனச் சொல்ல வேண்டும் என்றும் அவ்வுறுப்பினர் தெரிவித்துள்ளார்.

தனி என்னும் சொல்லுக்குச் சிறப்பு என்றும் உரிமை என்றும் ஒப்பற்ற என்றும் பொருள்கள் உண்டு.

குறிப்பிட்ட இனத்தவருக்கு சார்பு உரிமையளிக்க வேண்டும் என்பதற்காகத் தனியாக ஒதுக்குவதால் தனித் தொகுதி எனப்படுகிறது.

அவ்வாறில்லாவிட்டால், பிற இனத்தவர் பெரும்பான்மை உள்ள தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழப்பர் எனக் கருதியே இந்த உரிமை தரப்பட்டுள்ளது.

இதனால், அவர்களுக்கு உரிமையான தொகுதி என்னும் பொருளும் தனித் தொகுதி என்பதற்கு உண்டு.

தனித்திறமை – ஒப்பற்ற திறமை, தனிப்பெருமை – ஒப்பற்ற பெருமை என்பதே வழக்கம்.

வள்ளலார் இராமலிங்க அடிகளார் திருவருட்பா நான்காம் திருமுறையில்


“தனி நடிப்பா தத்தா”

என ஒப்பற்ற கூத்தையுடைய பரதத்தையுடைய அத்தனே என்கிறார்.

சேக்கிழார், “ஒப்பற்ற தன்னுடைய பெருமையைப் பெற்ற புதல்வியாகிய புனிதவதிக்குச் செல்வம் மிகுதியாகப் பெற்று” எனக் குறிப்பிடும் வகையில்

“தனிப்
பெருமகட்குத் திருமலியும்”

என்கிறார் பெரிய புராணத்தில் காரைக்காலம்மையார் புராணப் பகுதியில்.

“தனிப் பெருமகட்குத் திருமலியும் செல்வன்”

என நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார் திருமொழி கூறுகிறது.

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதியில் அதிவீரராம பாண்டியர்

“மண்தனிஞா லத்தெளிய
மானுடரோ வழுத்துவார்!”


எனக் குறிப்பிடுகிறார்.

இதன் மூலம் மண்ணாலான ஒப்பில்லாத நிலவுலகத்துள்ள எளிய மக்கட் பிறப்பினர் அவன் திருவடிப் புகழைப் பேசுதற்கு உரியரோ என்கிறார்.

தனி என்றால் சிறப்பு என்னும் பொருளைக் குறிக்கும் பல சொற்கள் உள்ளன. சான்றுக்குச் சில சொற்களைப் பார்ப்போம்.

தனி அலுவலர்/
தனி அதிகாரி    – Special officer
தனி அமர்வு     – special session
தனி அறிக்கை  – special report
தனி ஆயம்      – special bench
தனி நடுவர் மன்றம்  – Special Magistrate Court
தனி நிதி        –  special fund
தனி நீதிபதி    –   Special judge
தனி நோக்கம்  –   special purpose
தனி வழக்கு    –   special case
தனி விதி       –  Special Rule
தனிக் குழு     –   special committee
தனிக் கூட்டம்  –  special meeting
தனிச் சூழல்கள் – special circumstances
தனிச் செயலர்  – Special Secretary
தனித் தீர்மானம் – special resolution
தனித் தேர்வு    – special test
தனிப் பெரும்பான்மை  – special majority

எனவே, சிறப்புத் தொகுதி என்றும் உரிமைத் தொகுதி என்றும் ஒப்பற்ற தொகுதி என்றும் பொருள் தரும் தனித்தொகுதி என்னும் பெயரை நீக்க வேண்டா;

இத்தகைய சிறப்பான பொருள்கள் உடைய தனி என்னும் சொல்லில் தாழ்த்தப்பட்ட உணர்வைப் புகுத்த வேண்டா.

ஆனால், தேர்தலின் பொழுது மட்டும் அவ்வாறு குறிப்பிட்டுவிட்டுப் பிற நேரங்களில் அவ்வாறு குறிப்பிடாமல் இருக்கலாம்.

தனித் தொகுதி என்று சொல்லப்படுவதை மாற்ற வேண்டும் எனப் பெரும்பான்மைத் தனித் தொகுதி உறுப்பினர்கள் கருதினால் மாண்புமிகு பேரவைத் தலைவர் அறிவித்ததுபோல் மாண்புமிகு முதல்வரைக் கலந்து பேசி முடிவெடுக்கட்டும்.

ஆனால், தனி என்னும் சொல்லுக்குத் தவறான பொருள் கொண்டு அதனை நீக்க வேண்டா.

– கலைச்சொல் வல்லுநர் இலக்குவனார் திருவள்ளுவன்

  • தாய் மின்னிதழ் 31.08.2026

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

தேமொழி

unread,
Aug 30, 2026, 11:41:12 PM (5 days ago) Aug 30
to மின்தமிழ்
அவர்கள் அரசு தனிப் பெரும்பான்மை பெறாததால்  தனி என்ற சொல் பிடிக்கவில்லை போல 
Reply all
Reply to author
Forward
0 new messages