ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க !

1,015 views
Skip to first unread message

annamalai sugumaran

unread,
Apr 21, 2009, 1:28:36 PM4/21/09
to minT...@googlegroups.com

ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க !--ஏ சுகுமாரன்

இந்த வரிகள் மாணிக்க வாசகரின் சிவபுராணத்தில் மிகவும் புகழ்பெற்ற வரிகளாகும் .திருவாசகம் ஒரு பக்தி நூலாகவும் அதேசமயத்தில் அது ஒரு சித்த நூலாகவும் விளங்குகிறது .
அதன் உருக்கமும் ,,இதயத்தை உருகவைக்கும் பக்திப் பாங்கும் தமிழ் மக்களின் உள்ளம் கொள்ளைகொண்டது ..
அதன் ஒவ்வொரு  வரிகளும் திருப்பெருந்துறையில் திருவாதவூரராக வந்தவரை 
குருவாக வந்து ஆட்கொண்டு மாணிக்கவாசகர் ஆகிய தென்னாடு உடைய
இறைவனை போற்றி புகழும் வழியாக ,ஆழ்ந்த சித்த பொருள்களையும் கூறும்
பாங்குடையது .அதிலேயே ஆழ்ந்த விளகங்களையும் கொண்டதாக விளங்குகிறது .

திருப்பெருந்துறை  இன்று ஆவுடையார் கோயில் என அழைக்கப்படுகிறது .
ஆனால் சித்தர் மரபில்  திருப்பெருந்துறை என்பதுவே மனிதனின் உடலில் உள்ள ,
உச்சியில் அமைந்த சகஸ்ரதளம் என்கிறது .
அதை உருவகப் படுத்தும் முறையிலேயே ஆவுடையார் கோயில் மனிதனின் ஆறு ஆதார நிலைகளை விளக்கும் மெய்ப்பொருள் விளக்கமாக அதன்  வடிவாகவே விளங்குகிறது .
மூலவரும்   ஐந்து ஆதாரம் தாண்டிய நிலையில் சகஸ்ரதளம்என்னும் நிலையில்   அரூபம் ஆக ,ஆவுடையார் மட்டுமே .ரூபம் கொண்டுள்ளார் .

ஆனால்  ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க ! என்ற வரிகள் குறிப்பிடுவது என்ன ?
இறைவன் ஒருவனாக இருக்கிறான் ,அதே சமயம் அநேகன்  என பலரா ?
அல்லது இறைவனே ஒருவனாகவும்  அவரே பலராகவும் இருக்கிறாரா ? எனக் கொள்ளவதா ?
அதன் மெய்ப் பொருள் என்ன ?
மாணிக்க வாசகர் நமக்கு என்ன கூறுகிறார் எனப் பார்ப்போம்

சாதாரணமாக நமது மக்களை  கடவுளர்கள் எத்தனை? என்று கேட்டால் 'பல   கடவுளர்கள் உள்ளனர்' என்று கூறுவார்கள். 'உலகில் உள்ள அனைத்தும் கடவுள்' என்று சொல்வார்கள். சூரியன், சந்திரன், மரம், செடி, கொடி, பிராணிகள், விலங்குகள் முதலியவற்றையும் கூட கடவுள் ,எல்லாவற்றிலும் கடவுள் இருக்கிறார் என்று குறிப்பிடுவார்கள். ஆனால் வேதங்களும் சான்றோர்களும் என்ன ஆதாரம் கூறியிருக்கிறார்கள் .
.
    விவேகனந்தர் தனது சிகாகோ பிரசங்கத்தில் இறைவனது இயல்பாக கூறும்போது
அவன் எங்கும் நிறைந்தவன், புனிதமானவன், உருவற்றவன், எல்லாம் வல்லவன், பெருங்கருணையாளன். 'அப்பனும் நீ, அன்னையும் நீ, அன்புடைய நண்பனும் நீ, ஆற்றல் அனைத்தின் தோற்றமும் நீ, எமக்கு வலிமை தந்தருள்வாய்! என வேதங்களால் போற்றப் படுபவன் என்கிறார் .

''தத் த்வமஸி'' -''அந்த பிரும்மமாகவே நீ இருக்கிறாய்'' என்று பொருள்படும் இந்தத் தத்துவத் தொடர்  ஒரு தலையாய கொள்கையாகும்.   சாமவேதத்தின் அடிப்படையாக விளங்குவது காரண பிரும்மமாகவும் காரிய பிரும்மமாகவும் ஆண்டவனே இருப்பதால் அவன் ஒருவனே ஆவான் என் வேதம் கூறும் ஒரே கடவுள் கொள்கையாகும்.


இன்றுகூட திரு தேவ் திருவாய்மொழி 1-1-3   இடுகையில் “அவனே அவனும் அவனுன் அவனும்” எனுமொரு தொடர்;
இதில் இடம்பெறும் மூன்று ‘அவன்’கள் யாவர்? என வினவி இருந்தார் .


அந்த    முழு பாசுரம் இதோ !


அவனே அகல்ஞா லம்படைத் திடந்தான்,

அவனே யதுண் டுமிழ்ந்தான் அளந்தான்,

அவனே யவனும் அவனும் அவனும்,

அவனே மற்றெல்லா மும் அறிந் தனமே. -  3696


என்று   இறைவனின் படைத்துக் காக்கும் வல்லமை காட்டப்பெறுகிறது . 
அவனே   மற்றெல்லாமும்  எனவும்  ஒருவனே  அவன்  ! அவனே அவன் ! என
மிக  அழகாக இறைவன் ஒருவனே என விள்ளக்கயுள்ளது .

 அப்போது மாணிக்கவாசகரும் இவ்வாறு  இறைவன் ஒருவனே ,அவனே அநேகனாகவும் இருக்கிறார் எனப்  பொருள் படத்தான்    பாடிஇருப்பாரா ?


நமது அருள்பெருன்ஜோதி வள்ளல் பெருமான் இதற்க்கு விடையாக கூறுகிறார்  ,

ஏகமோ அன்றி அனேகமோ என்றும்
          இயற்கையோ செயற்கையோ சித்தோ
தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ
          திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ
யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ
          உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர்
ஆகமோ டுரைத்து வழுத்தநின்று ஓங்கும்
          அருட்பெருஞ் ஜோதிஎன் அரசே.
 
       
            “கடவுள் ஏகமோ, அனேகமோ” ஒன்றோ பலவோ என்பது, வள்ளலார் இந்தப் பாடலில் கேட்கும் முதல் கேள்வி.
 
            ஏகம் என்றால் ஒன்று என்று பொருள். கடவுள் ஒருவரே என்பது உண்மை.
 
            ஆனால் அந்த ஒரே கடவுள் இந்த உலகத்தில் பல பொருள்களாகத் தோன்றி விளங்கிக் கொண்டிருக்கிறார்.
 
         கடவுள் ஒவ்வொரு உயிரிலும், ஒவ்வொரு பொருளிலும்,  உள்ளும் புறமும் இருக்கிறார். உள்ளே இருக்கும்போது ஏகமாக ஒளியாக இருக்கிறார். வெளியில் பல பொருள்களில் பல தோற்றங்களுடன் அனேகமாகவும் விளங்குகிறார்.
 
         “கடவுள் இயற்கையோ ? செயற்கையோ ?” என்று அடுத்த கேள்வியைக் கேட்கிறார் வள்ளலார்.
 
            முதலும் முடிவும் இல்லாமல் இருப்பதே இயற்கை. இப்படி இருப்பவர்தான் கடவுள்.

.
 
            கடவுள் மட்டும் தான் இயற்கையாக இருக்கிறது. மற்ற உயிர்களும், உயிர் அற்ற பொருள்களும் தோற்றத்தில் செயற்கையாகவே இருக்கின்றன.
 
            “எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே
          என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே
செவ்விடத்தே அருளொடுசேர்ந்து இரண்டெனக் கண்டறிநீ
          திகைப்படையேல் என்றெனக்குச் செப்பிய சற்குருவே”.
 
என அருள் விளக்க மாலையிலும் திரு அருட்பிரகாச வள்ளலார் தெளிவாகச் சொல்கிறார்.

            எந்த இடத்திலும் எந்த உயிரிலும் இருக்கும் கடவுள் ஒருவரே. இதுதான் உண்மை.
 
           
            எனவே இறைவன் ஒன்று. அவன் அருள் ஒன்று. ஆக இந்த இரண்டையும் தவிர, உலகில் வேறு ஒன்றுமில்லை.
 
          “கடவுள் ஒன்றோ, பலவோ என்று திகைக்காதே என்று எனக்குச் சொன்ன குருநாதரே !” என்று இறைவனைப் போற்றுகிறார் வள்ளலார்..

அப்போது அநேகன் என்று மாணிக்க வாசகர் சொன்ன வரிகளுக்கு என்னதான் பொருள் என்று பார்த்தால் ,,
திருமந்திரம் தான் துணைக்கு வருகிறது !

கடங்கடந்   தோறுங் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்
தடங்கிட நின்றதும் அப்பரிசாமே

அதாவது சூரியன் வானத்தில் ஒருவனாக நம் முன் தோன்றுகிறார் .
பல சிறிய குடங்களில் தண்ணீர் ஏந்தி சூரியன் எதிரில் வைக்கும் போது
ஒவ்வொரு குடத்து நீரிலும் சூரியனை  நாம் பார்க்கிறோம் .
அப்போது சூரியன் ஒருவனாகவும் ,அதேநேரத்தில் பலராகவும்  
புலப் படுகிறார் .
இறைவனின் தன்மையும் அத்தகையதே !
அவரே அனாதியான மூலப் பொருளாக விளங்கிய போதும் ,அவரே ஏகனாக
விளங்கியபோதும் அணைத்து உயிர்களிடத்தும் அவரே உறைகிறார் .
இந்தப் பாடளில்லேயே திரு மூலர் சூரியன் குடத்தில் நின்றபோதும் அதில் அடங்காது இருக்கிறார் .
அதோடு குடத்திற்கு உள்ளும் வெளியிலும் அவர் விளங்குகிறார் .
அவ்வாறே இறைவனும் உயிரில் இருந்தாலும் அதில் அடங்கியவர் அல்ல ,அவர்
என்றும் மூலப் பொருளாக ஏகனாக விளங்குகிறார் என்கிறார் .
இதையே மாணிக்க வாசகர்
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க ! என்கிறார் .

அன்புடன்
ஏ சுகுமாரன்

 

 



--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

devoo

unread,
Apr 21, 2009, 1:42:15 PM4/21/09
to மின்தமிழ்
*ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க !*

’ஒன்றாய்ப் பலவாய்’ என்று அடியார்கள் பலரும் பாடியுள்ளனர்.
வானில் ஒரு கதிரவன்;கொள்கலங்களில் படிந்தால் பல தோற்றம்.
உணர்வினுள் ’ஏகன்’; பார்வை உலகில் பதிந்தால் ’அநேகன்’.

தேவ்

shivan .

unread,
Apr 21, 2009, 2:10:40 PM4/21/09
to minT...@googlegroups.com
வ்யஷ்டியில் பலவாய் காட்டும்; சமஷ்டியில் ஒன்றாய் இருக்கும்.  இரண்டும் சரியே.



2009/4/21 annamalai sugumaran <amirth...@gmail.com>

நா.கண்ணன்

unread,
Apr 21, 2009, 8:08:01 PM4/21/09
to மின்தமிழ்
நம் ஜடாயு சொல்வது போல் சித்தாந்தமும் வேதாந்தமும் ஒன்று எனக்காட்டும்
விதமாக உங்கள் விளக்கம் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்!

க.>

On Apr 22, 2:28 am, annamalai sugumaran <amirthami...@gmail.com>
wrote:> இந்தப் பாடளில்லேயே திரு மூலர் சூரியன் குடத்தில் நின்றபோதும்

kamaladevi aravind

unread,
Apr 21, 2009, 8:59:12 PM4/21/09
to minT...@googlegroups.com
நிங்ஙள் எழுதியதிலேயே , இந்த எளிய சித்தாந்தம் தான் பாமரனுக்கும் இன்று தேவை.
ஒரே ஒரு  சம்சயம். சகஸ்ரதளம் என்ற பதம் ஞான் படித்தது  ஏனோ  ஸ்பஷ்டமாக மட்டுமே.
இன்னும் கொஞ்சம் விளக்கமுடியுமா
கமலம்


From: annamalai sugumaran <amirth...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Wednesday, April 22, 2009 1:28:36 AM
Subject: [MinTamil] ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க !

Geetha Sambasivam

unread,
Apr 22, 2009, 4:45:25 AM4/22/09
to minT...@googlegroups.com
//அதை உருவகப் படுத்தும் முறையிலேயே ஆவுடையார் கோயில் மனிதனின் ஆறு ஆதார நிலைகளை விளக்கும் மெய்ப்பொருள் விளக்கமாக அதன்  வடிவாகவே விளங்குகிறது .
மூலவரும்   ஐந்து ஆதாரம் தாண்டிய நிலையில் சகஸ்ரதளம்என்னும் நிலையில்   அரூபம் ஆக ,ஆவுடையார் மட்டுமே .ரூபம் கொண்டுள்ளார் .//

புதிய செய்தி நன்றி

2009/4/21 annamalai sugumaran <amirth...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Apr 22, 2009, 4:46:06 AM4/22/09
to minT...@googlegroups.com
மேலதிக விளக்கத்துக்கு நன்றி.

2009/4/21 devoo <rde...@gmail.com>

annamalai sugumaran

unread,
Apr 22, 2009, 9:13:24 PM4/22/09
to minT...@googlegroups.com

புதுவையில் மூன்று நாட்களாக தொடர்ந்து பகல் வேளையில் நகரத்தின் மையப் பகுதியில் மின்சாரம் இல்லை .பெரும் அவதி .கணினி இல்லாமல் எந்த வேலையும் ஓடவில்லை .
நேற்று இரவும் மின்சாரம் இல்லை .செய்தி போட்டு பார்த்தாகி விட்டது .
தொடரும் அவதி. இப்போதெல்லாம் வாழ்க்கையின் சாரமே மின்சாரம் தான் என்று ஆகிவிட்டது .

சகஸ்ரதளம் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை உருவகம் .
அதன் திறப்பு முதல் நிலை புருவ மததிதான்
நெற்றிக்கு நேரே புருவத்திடைவெளி
உற்றுப் பார்க்க ஒளி மிகு மந்திரம்

இது குண்டலினிய யோகசாதனை .மூலாதாரத்தில் தொடங்கி ஆறு ஆதாரம் .ஆனால் பயில்வது மிக மிக கடினம் .
அன்புடன்
,ஏ சுகுமாரன்

2009/4/22 kamaladevi aravind <gokulam1950.

ஒரே ஒரு  சம்சயம். சகஸ்ரதளம் என்ற பதம் ஞான் படித்தது  ஏனோ  ஸ்பஷ்டமாக
Reply all
Reply to author
Forward
0 new messages