சலம் என்பது கானல் நீரைக் குறிக்கும் என்று முன்னர் கண்டோம்.
இதிலிருந்து சலம் என்பது கானல் நீரின் தன்மையான வஞ்சித்தல் என்ற பொருளையும் கொள்ளும்.
இப்படி சலத்தால் அதாவது பிறரை வஞ்சித்து ஏமாற்றிச் சேர்த்த பொருள் என்னாகும்?. நிற்காது.
அதுவும் வஞ்சிக்கப்பட்டு பறிபோய்விடும் என்கிறார் வள்ளுவர். எப்படி?