வெங்காயம் வெங்காயம் வெங்கா ... யம் வேண்டும் எந்தன் வாழ்விலே ... (onions)

39 views
Skip to first unread message

rajam

unread,
Aug 25, 2015, 8:09:13 PM8/25/15
to mintamil, Suba.T.
வெங்காயம் (https://en.wikipedia.org/wiki/Onion) என்பது சிலருக்கு ஒதுக்கப்பட்ட உணவுப்பொருள். அந்தக் கருத்தைப் பற்றி விவாதிக்க ஏகப்பட்டவர்கள் இங்கே இருக்கலாம்!

யோவ், நான் விதவை இல்லை, என்னை உவக்கும் கணவனும் இல்லை. ஆனாலும் எனக்குப் பிடித்த நேரத்தில் வெங்காயத்தைப் பயன்படுத்திச் சுவைக்கிறேன். அதன் மருத்துவப் பயனை நான் ஏன் இழக்கணும்? இதில் என்ன தவறு, ஹ்ஹாங்?

என் தொட்டிச் செடியில் வளர்த்த வெங்காயத்தின் வரலாறு:

வெங்காயப்பூ:




பூத்தண்டின் உயரத்தைக் காட்டுவதற்காக ...




சரி, இன்று பிடுங்கினேன்! 


என்ன சமைக்கலாம் என்பதுவே இப்போதைய யோசனை.

வீட்டில் பயிரிடுங்கள்!

பயிரி,
ராஜம்

துரை.ந.உ

unread,
Aug 26, 2015, 1:11:47 AM8/26/15
to Groups, Suba.T.
Inline image 1 பார்க்க நல்லா இருக்கு வெங்காயம் :))

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Nagarajan Vadivel

unread,
Aug 26, 2015, 2:24:34 AM8/26/15
to மின்தமிழ்
இப்புடிப் படுத்துக்கிடந்தா எப்புடி
எழுந்திருக்க வேண்டும்
தோலை உரிக்க வேண்டும்
உரிக்க உரிக்கக் கடைசியில் ஒன்றும் இல்லை என்ற உண்மை தெரியவேண்டும்
அப்புறம் அல்லவா கண்கலங்கிக் குப்புறப் படுக்கவேண்டும்
அ.த

rajam

unread,
Aug 26, 2015, 1:03:25 PM8/26/15
to மின்தமிழ், hari.har...@gmail.com
சரி, ஐயா. எளுந்தாச்சு. ரெண்டு அடுக்குத் தோலெ உரிச்சாச்சு. 

இந்தா பாருங்கோ ... நம்ம தூத்துக்குடி வெங்காயத்தைவிடக் கருஞ்சிவப்பானவை. ஆகவே, இனிப்பும்/உறைப்பும்/காட்டமும் கூடுதலாக்கும்!:



மேக்கொண்டு உரிக்க எனக்கென்ன பயித்தியமா? இப்ப உள்ளதெ வச்சு என்ன செய்யலாமுன்னு குசினிக்குள்ள போவோணும்.

ஊடாலே யாரோ ரெண்டுபேரு ஒரு சங்க எலக்கியப் பாட்டெப்பத்திக் கேட்ருக்காங்க. பதில் தேடோணும்.

++++++++++

ஐயன்மீரே ... இலக்கியமும் வெங்காயம்தான். 

'ஜாதி' பற்றிப் புறநானூறு அப்பட்டமாகச் சொல்லியிருக்காம். அதுக்கு நீ என்ன சொல்றே-னு சில பெரியவர்கள் கேட்டிருக்கிறார்கள்.

பாரதி என்னடான்னா, கருப்பியான பாஞ்சாலியை "பொன்னிறப் பாஞ்சாலி"-னு சொல்லியிருக்கானே அதுக்கு நீ என்ன சொல்றே-னு நம்ம ஹரி கேட்டிருக்கிறார். எப்படியோ என்னோடு வம்படிக்க அவர் எழுந்து உட்காரும்படி அவருடைய முதுகுவலி விட்டுக்கொடுத்ததே, அதுபற்றி அவருடைய முதுகுக்கு நன்றி.

திரைப்படக்கவிஞர் என்று நான் கொண்டாடுபவர் என்னடான்னா ... "நீலவண்ணக் கண்ணா வாடா ... தங்கநிறம் உந்தன் அங்கம், அன்புமுகம் சந்த்ர பிம்பம் ..." என்று சொல்லி மயக்குகிறார்.

இப்ப சொல்லுங்க வெங்காயம்-னா என்னா?

++++++++++

இந்த வெங்காயத்தை வைத்து ஏதோ ஒன்றைச் சமைக்கப்போகிறேன். வூட்டுல என்னை அதட்டிக் கேக்க ஆளில்லையா, எல்லாம் இன்பமயம்!

உணவுப்பொருளை வீட்டில் பயிரிடுங்கள்.

அன்புடன்,
ராஜம்

Suba.T.

unread,
Aug 26, 2015, 2:41:45 PM8/26/15
to rajam, மின்தமிழ், Subashini Tremmel
2015-08-26 2:09 GMT+02:00 rajam <ra...@earthlink.net>:
வெங்காயம் (https://en.wikipedia.org/wiki/Onion) என்பது சிலருக்கு ஒதுக்கப்பட்ட உணவுப்பொருள். அந்தக் கருத்தைப் பற்றி விவாதிக்க ஏகப்பட்டவர்கள் இங்கே இருக்கலாம்!

யோவ், நான் விதவை இல்லை, என்னை உவக்கும் கணவனும் இல்லை. ஆனாலும் எனக்குப் பிடித்த நேரத்தில் வெங்காயத்தைப் பயன்படுத்திச் சுவைக்கிறேன். அதன் மருத்துவப் பயனை நான் ஏன் இழக்கணும்? இதில் என்ன தவறு, ஹ்ஹாங்?

​நானும் ஒரு வெங்காயம் நட்டு வைத்திருந்தேன். முளைத்து வெளியே தலையைக் காட்டிக் கொண்டிருக்கின்றது.
எங்கள் ஊர் மலேசிய சமையலில் மிக அதிகமாக வெங்காயத்தாளை சேர்ப்போம். நல்ல சுவை தரும்.
மலேசிய நாசி கோரேங் செய்து சாப்பிடுங்கள்.:-))

சுபா

 
Reply all
Reply to author
Forward
0 new messages