தமிழ் இலக்கிய வகைகள்- திகைப்பு

389 views
Skip to first unread message

K. Loganathan

unread,
Mar 2, 2013, 1:47:04 AM3/2/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, meyk...@yahoogroups.com, tolkaa...@egroups.com

தமிழ் இலக்கிய வகைகள்- திகைப்பு

 

முனைவர் கி. லோகநாதன் 3-3-13

 

ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக என் மனதில் ஓர் அழகிய கனவாக இருந்த ஒன்றுதான் ‘திராவிட மெய்யறிவு வரலாறு’ எனும் பெருநூலை எழுதவேண்டும் எனும் ஆர்வம். என்று சுமேரு மொழி தொல் தமிழே என்றும் பிறகு வடமொழியும் அதன் திரிபே என்றும் அறிய வந்தேனோ அன்றிலிருந்தே இந்த ஆர்வமும் வந்து விட்டது. ஓர் வேகத்தில் 1993 ஆம் ஆண்டு இந்த நூலை சுருக்கமாக எழுதியும் விட்டேன் ஆயினும் இப்பொழுதுதான் அதனை அகப்படுத்தி தக்க முறையில் விரிவாக்கி ஓர் பெரும் நூலாக எழுதி வருகின்றேன். ஆயினும் அன்று எழுதிய ‘ஆகமீயம்’ எனும் பகுதி இன்று வரை மாறாதே இருக்கின்றது. சில நாட்களுக்கு முன்புதான் இதனை மரபு விக்கியில் பதிவு செய்தேன். நல்ல ஆதரவையும் பெற்று வருகின்றது.

 

கடந்த ஆண்டுதான் அதாவது 2012ஆம் ஆண்டுதான் அதன் அடுத்த பகுதியாக எழுதப்பட்டது ‘தமிழ் இலக்கிய வகைகள்’ எனும் படலம் சுமேருத் தமிழ் இலக்கியங்களையும் அகப்படுத்தி எழுந்தது. ஒர் அசாதாரண வேகம். எப்படியோ முடித்து விட்டேன். அந்த பிரமிப்பிலிருந்து இன்னும் நான் விடுபடவில்லை. ஓர் 5000 ஆண்டுகளை உட்படுத்திய, என்று மாந்தர்கள் எழுதத் தொடங்கினார்களோ அன்றிலிருந்தே வரும் ஓர் இலக்கிய பாரம்பரியத்தை தொகுத்து பருந்தின் பார்வையில் காணும் போது ஓர் வியப்பு திகைப்பு உண்டாகிறது. ஓர் பெருங் குன்றின் உச்சியிலிருந்து உலகையே காண்பது போன்று. அதனை மகிழ்ந்தவாறு இருக்கின்றேன். யாரிடமாவது பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்பில் இதனை இப்பொழுது எழுதவும் செய்கின்றேன்

 

என் இளமைக் காலத்திலிருந்தே பலவகையான நூற்களை சேகரிக்கும் பழக்கம் உண்டு.  எனது இல்லத்தில் ஓர் பெரிய அறையில் இந்த நூற்களெல்லாம் கிடக்கின்றன.

 

இந்தப் பகுதியை எழுதத் தொடங்கியதும் இந்த இல்லக நூலகத்தை அலசி அல்சி வேண்டிய நூற்களை எல்லாம் சேகரித்து  என் அருகிலேயே அடுக்கி வைத்து அவற்றை நோட்டமிட்டவாறு இந்தப் பகுதியை எழுதத் தொடங்கினேன்

 

முதல் வகைகளாக நயவிசாரணையின் ‘கீழ்கணக்கு’ நூற்களும் அதன் அடிப்படையில் காதல் காமம் வீரம் தொடர்பான மேற்கணக்கு நூற்களும் வரும்.  இதற்கு ஒத்த சுமேரு இலக்கியங்களையும் தேடிப் பிடித்து எழுதி விட்டேன். என்னிடம் சுமேரு இலக்கிய தொகுதி ஒன்றும் எனது சேகரிப்பாக இருக்கின்றது.

 

இவற்றிக்கு அடுத்தாற்போல் வருவது தொல்காப்பியம் போன்ற இலக்கண நூற்கள். சுமேரியத்திலும் உண்டு ஆனால் சான்றாக எதையும் தராதே விட்டு விட்டேன்.

 

நயவிசாரணையின் கீழ்கணக்கு நூற்களின் உள்வகுப்பு மனநிறைவைத் தருவதாக இன்றும் இருக்கின்றது.

 

இதன் பின் பத்தி இலக்கியங்கள் தல புராணங்கள், தொண்டர் புராணங்கள் தெய்வ புராணங்கள் என்றெல்லாம் பல சான்றுகளோடு தருகின்றேன். சுமேருத் தமிழிலும் இவை விரிவாக இருக்க, உலகாயதம் தமிழர்களின் பண்டைய நெறியே அல்ல என்றேப் படுகின்றது,

 

பூதவாதம் தொல்காப்பிய காலத்தில் தோன்றிய ஒன்று என்றும் இதன காரணமாக சுமேருத் திருத் தொண்டர் புராணம் கடைச் சஙக காலத்தில் அரசர்களை வீணாகப் புகழும் பொய்யடிமை புலமையாக திரிந்துள்ளது என்றும் நினைக்கின்றேன்,

 

மேலும் சைவத்தில் திருத்தொண்டர் புராணங்கள் நிறைய இருக்க திருமாலியத்தில் காணமுடியவில்லை. இதனால் திருமாலியத்தில் தொண்டர் புராணங்கள் யாதோ ஓர் காரணமாக தோண்றவில்லை என்றே படுகின்றது,.

 

இதன் பிறகு வருவனவே நுண்கலை இலக்கியங்கள், சித்தர்களின் தவயோக இலக்கியங்கள் போன்றவை.

 

இந்த மீள் பார்வையில் சமயம் சார்ந்த புராண இலக்கியங்கள் பத்தி இலக்கியங்கள்  போன்றவை மிகுதியாக இருப்பதைக் காண முடிகின்றது

 

ஆகமீயச் சிந்தனை.

 

இவ்வாறான தொகுப்பினைக் காண, உடன் ஓர் கேள்வி எழுகின்றது. ஏன் இப்படிப்பட்ட இலக்கிய வகைகள். ஏன் மாந்தர்கள் இத்தகைய இலக்கியங்களைப் படைத்து பாதுகாத்து போற்ற வேண்டும்? 

 

பல வகைய அறிவின் செலவுகளை- அறிமானங்களைக் காண முடிகின்றது. ஏன் இவை? எதனைத் தேடிச் சென்று மனிதன்  இத்தகைய இலக்கியகளைப் படைக்கின்றான்?

 

இந்த கேள்வியோடு எனது  திராவிட மெய்யறிவு வரலாறும் தொடங்குகின்றது. அதனைத் தான் ஆகமீயக் கருத்துக்கள் வழியாகவும் தோன்றியுள்ள மெய்ஞானப் பனுவல்கள் வழியாகவும் உணர்ந்து வருகின்றேன். வேண்டிய அளவிற்கு தெளிவு பிறக்கும் போது அடுத்தடுத்துப்  பல படலங்களாக எழுதியும் வருகின்றேன்

 

 

வியப்பு:

 

இந்த பரந்து விரிந்து பலவாறு வளர்ந்துள்ள இலக்கியப் பரப்பைக் காணும் போது கண்கள் அகல விரிய ஓர் பிரமிப்பு ஏற்படுகின்றது. பிறகு இவற்றை ஆகமீயக் கண்களோடு அதாவது எந்திராயணம் மந்திராயணம் தந்திராயணம் என்றவாறு காணும் போது, இறைவனது அற்புதமான திருவிளையாடல்களை தில்லையாடியின் திருகூத்தைக் நேராகக் காண்பது  போன்றே ஓர் தெய்வீகமான உணர்வு தோன்றுகின்றது.

 

மேலும் இந்த பரந்து பட்ட தொகுதியை மீண்டும் மீண்டும் கண்டு சிந்த்திக்க தமிழ் மெய்யறிவுப் பனுவல்கள் எவ்வாறு தோன்றின என்றும், திராவிட மெய்யறிவு வரலாறு எவ்வாறுதான் ஓர் வடிவத்தைப் பெற்றது என்றும் புலனாகின்றது.

 

இந்த புரிவு தெளிவாகிட அடுத்தடுத்து பல படலங்களை எழுதிய வண்ணம் இருக்கிண்றேன். மிக அழகான ஓர் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் படுகின்றது.

 

உலகன்

 

Karuannam Annam

unread,
Mar 2, 2013, 3:07:19 AM3/2/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


2013/3/2 K. Loganathan <k.ula...@gmail.com>


 

இந்த புரிவு தெளிவாகிட அடுத்தடுத்து பல படலங்களை எழுதிய வண்ணம் இருக்கிண்றேன். மிக அழகான ஓர் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் படுகின்றது.

 

வாழ்க்கையை அழகாக உணரும் பேறு பெற்ற தங்களை வணங்குகிறேன் ஐயா. 

சுமேரு இலக்கியம், ஆகமீயச் சிந்தனை, நயவிசாரணை முதலிய சொற்களின் சுருங்கிய விளக்கக் குறிப்பு தரவேண்டுகிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான் 

K. Loganathan

unread,
Mar 2, 2013, 5:34:12 AM3/2/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
அன்பரே

தங்களது கேள்விகட்கு மிக்க நன்றி

சுமேரு இலக்கியம் என்பது பண்டைய சுமேரிய நாட்டில் விளங்கிய இலக்கியங்கள் ஆகும். இப்பொழுது ஈராக் எனப்படும் நாடே கி.மு 2000 ஆண்டுக்கு முன் சுமேரிய என்றும் பிறகு மெசபதோமியா என்றும் அழைக்கப்ப்ட்டது. அக்காலத்தில் அங்கு பயின்ற மொழி தொல் தமிழே என்பது  என் கருத்து, மேலும் இதுவே முதற் சங்கத் தமிழ் என்பதும் என் கருத்து. இது தொடர்வான ஆய்வுக் கட்டுரைகளை மரபு விக்கியில் 'சுமேரியா' எனும் பகுப்பில் காணலாம்.

அடுத்து ஆகமீயம் என்பது ஓர் தெரிவி(theory) . ஆகமங்கள் எனப்படும் நூற்களின் உட்கிடக்கை எனக் கொள்ள வேண்டாம். இந்த தெரிவி என்பது நியூட்டனின் புவி ஈர்ப்புக் கோட்பாடு போன்றது, கோள்களின் இயக்கத்தை விளங்கிக்கொள்ள உதவும். அதேப் போல அறிவின் பலவேறு செலவுகளை இயக்கங்களை புரிந்துகொள்ள ஆகமீயம் எனும் தெரிவி உதவும் 

இனி நய விசாரணை என்பது நந்நய விசாரனை. இனிய இன்னா நல்ல தீய அறம் மறம் என்றவாறு இருவினை சிந்தனையின் போக்குகளை விளக்குவது. பதிணெண்   கீழ்கணக்கு நூற்கள விசாரிப்பது இதனைத் தான்.

இது போதும் என்றே நினைக்கின்றேன். 

உலகன்



2013/3/2 Karuannam Annam <karu...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

K. Loganathan

unread,
Mar 2, 2013, 10:05:58 PM3/2/13
to meyk...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com

அன்பின் முனைவர் கணேசலிங்கம் அவர்களே

 

நல்ல கவிஞரும் சைவ சித்தாந்தத்தில் ஆழ்ந்த புலமையும் உள்ள பெரியாராகிய தங்கள கருத்துக்களை பெரிதும் மதிக்கின்றேன். ஆயினும் என் திகைப்பின் வியப்பின் காரணங்களை இன்னும் சற்றுத் தெளிவாக நான் கூற வேண்டி இருக்கின்றது. ஓர் பெரும் மலைப்போடு கலந்த மகிழ்ச்சியின் காரணங்கள் அப்பொழுதான் முற்றாக புலப்படும் என்று கருதுகின்றேன்

 

1.

 முதலில் தமிழ் இலக்கிய வரலாற்றை அறிஞர்கள் தொல்காப்பியத்திலிருந்து தொடங்கி 2500 ஆண்டுகள் பழமையானது என்றும் அதனால் அது செம்மொழி எனும் தகுதியை பெற்றுள்ளது என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் எனது ஆய்வில்  சுமேருத் தமிழ் இலக்கிய்ங்களையும் அகப்படுத்திச் செல்ல, தமிழ் இலக்கிய வரலாறு ஏறக்குறைய 5000 ஆயிரம் ஆண்டுகள் உடைத்த ஒன்றாகப் பட, கண்கள் விரிகின்றன, ஓர் வியப்பு மேலிடுகின்றது.

 

2.

 

மேலும் இதனை ஓர் செருக்கு என்றும் கூறலாம். ஆனால் உண்மையைச் சார்ந்து வருவதால் தவறில்லை என்றே நினைக்கின்றேன் ஐரோப்பிய ஆரிய ஆதிக்கம் திராவிட பண்பாட்டின் சாதனைகளை புறந்தள்ளி இருக்கின்ற நிலையில், இது தேவைபடும் ஒன்றுமாகும். உலகில் வேறெந்த மொழியிலும், வடமொழி உட்பட, 5000 ஆண்டுகள் பரந்து விரிந்துள்ள எழுத்திலக்கிய வரலாறு முடியாத ஒன்றுமாகும். ஏனெனில் சுமேருத் தமிழர்கள் தான் முதன் முதலில் பேச்சு மொழியை எழுத்து மொழியாக்கியுள்ளனர். சுமேரு இலக்கியங்களை விட இன்னும் பல் வேறு மொழிகளில் நிச்சயமாக இலக்கிய்ங்கள் இருந்திருக வேண்டும் ஆயினும் அவை எழுதபடாது போக இன்று அவை நமக்குக் கிடைக்கவில்லை.

 

3.

 இனி தொடக்க கால இலக்கியங்கள் கவிதைகளாக  பாட்டுகளாக மந்திரங்களாக இருந்திருப்பதும் உண்மைதான். தாங்கள் கூறுவது போல. மானிட மொழி பாட்டாகவே பிறந்திருக்கலாம். ஆயினும் சுமேருத் தமிழ் இலக்கியத்தில் ஓர் வேற்றுமையை காண்கின்றோம். கி.மு. 3000 ஆண்டு வாக்கில் எழுந்த சூருப்பாக்கின் நெறி எனும் நூல் பாட்டாக அன்றி உரைநடையாகவே இருக்கின்றது, மேலும் இந்நூலில் தொல்காப்பியத்தின் ‘ஏது நுதலிய முதுமொழி’ என்பதின் தோற்றத்தையேக் காண்கின்றோம். இங்குதான் தொல்காப்பிய மரபியலில் மிகத் தெளிவாகவும் விரிவாகவும் விளங்கும் ஏரணவியலையும் காண்கின்றோம்.  இந்த ஏரணவியலைத்தானே மெய்கண்டாரின் சிவஞான் போதத்திலும் காண்கின்றோம்?

 

இது ஓர் பெரும் வியப்பிற்குரிய ஒன்றாகும் தமிழ் சிந்தனை தொடக்க காலத்திலிருந்தே ஏரனவியல் பட்ட ஒன்றாக இருக்கின்றது.

 

4,

இனி இலக்கிய இன்பம் எனும் போது தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை, செவிக்கும் அறிவிற்கும் ஆன்மாவிற்கும் இண்பம பயப்பது உண்மைதான, இங்கு என்னை வியப்பில் ஆழ்த்திய இந்த இலக்கிய வகைகளின் பெருந்தொகுப்புக் காட்டும் அறிவின் பல்வேறு ஓட்டங்களை, அறிமானங்களைக் காண, அங்கு தில்லைக் கூத்தாடியின் திருகூத்தையேக் காண முடிகின்றது என்பதுதான. இப்படடிபட்ட வரலாற்றுத் தொகுப்பு தெய்வ தரிசனத்தையே மகிழத் தரும் என்பது எனக்குப் புதுமையாகப் படுகின்றது, எல்லா வகை இலக்கிய அழகுணர்ச்சிகளைக் கடந்த ஒன்றாகவும் படுகின்றது.

 

5.

 

இன்னொன்றையும் கூறி முடிக்கின்றேன். இந்த பரந்து ஆழ்ந்த பல்வகைப் பட்ட இலக்கியங்கள் அவை காட்டும் அறிவின் ஓட்டங்களை எப்படித்தான் புரிந்து கொள்வது? ஐரோப்பியர்களின் Behaviorism, Cognitive Psychology, Analytical Psychology, Phenomenology  போன்ற கோட்பாடுகள் உதுவுமா? உதவாது என்றே நினைக்கின்றேன். இங்கு தான் எந்திராயணம் மந்திராயணம் தந்திராயணம் சார்ந்த ஆகமீயம் எனும் கோட்பாடு தேவைப் படுகின்றது.  இவ்வாறு இந்த இலக்கிய வகைகளை தொகுக்கும் முகத்தானே ஆகமியத்தை உருவாக்கிய சிறப்பையும் நினைத்து ஓர் பெருமிதமும் உவப்பும் தோன்றுகின்றது. இதுவும் என் வியப்பிற்கும் திகைப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் ஓர் காரணமாகும்.

 

இந்த இலக்கிய வகைகளை எட்டுப் பகுதிகளாக பிரித்து  தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு விக்கியில், சுமேரியா பகுப்பில் பதிவு செய்துள்ளேன்,  செல்க:

 

http://www.heritagewiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE

 

மேலும் இவை எனது கீழ்வரும் வலைபக்கத்திலும் கிடைக்கும்.

 

https://sites.google.com/site/ulagansbooks/hist-of-drav-phil-tamil

 

 

அன்பன் உலகன்

 

 


2013/3/3 Dr.K.Ganesalingam <kganes...@yahoo.com>
 

அன்புள்ள உலகன்,
 
இலக்கியத்தில் ஈடுபட்டுத் திளைத்தல் இனியதொரு  அனுபவம்.. அதிலும் தமிழ் இலக்கியம் தனித்தன்மை வாய்ந்த ஒன்று.  நீண்ட காலமாக தமிழ் இலக்கிய வடிவம் கவிதையாகவே இருந்தது. கவிதையும் வெவ்வேறு வகையாக இருந்தது. ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, விருத்தப்பா என்ற வகைகள் உருவாகி, கோவை, சிலேடை, அந்தாதி என்று பல்வேறு வகைகளாக விரிந்தன. ஒவ்வொரு வகையும்  ஒவ்வொரு வகை அனுபவத்தையும் இன்பத்தையும் தந்து வாழ்வுக்கு வளமூட்டுகின்றது. பொருள் வளம், கற்பனை நயம், ஓசை நயம் முதலியன மிக்கு உணர்விற்கும் அறிவுக்கும் விருந்தாக அமைவது  தமிழ்க் கவிதை இலக்கியம். இது தமிழில் வளர்ந்ததுபோல் வேறெந்த மொழியிலும் வளரவில்லை. இன்று தமிழர்கள் தமது இலக்கியச் செல்வங்களை  அறிந்து பயன்பெற முடியாத நிலையில் இருப்பது கவலையளிப்பது.
 
தமிழின் இலக்கிய வகைகள், வாழ்வியல், தத்துவவியல், அறிவியல், சமயவியல், தமிழியல், சமூகவியல் முதலியவற்றை பிரதிபலிக்கின்றன. நுண்கலை, பக்திநெறி முதலியனவும் தரப்படுகின்றன
 
தாங்கள் எழுதும் தொடர், தமிழர் தமது இலக்கியத்தின் ஆழத்தையும் சிறப்பையும் பெருமையையும் தனித்தன்மையையும் உணரவும் வேறுபட்ட துறைகளில் அறிவு பெறவும் உதவும் என நம்புகிறேன்.
 
பூதவாதம் இயல்பாகவே தோன்றியது என்பதும், அது தொல்காப்பியருக்கு முற்பட்டது என்பதும் எனது கருத்து. இதனைச் சார்ந்து சாங்கியம் தோன்றியிருக்கலாம்.
 
கணேசலிங்கம் 


From: K. Loganathan <k.ula...@gmail.com>
To: mint...@googlegroups.com; vall...@googlegroups.com; meyk...@yahoogroups.com; tolkaa...@egroups.com
Sent: Saturday, 2 March 2013 5:47 PM
Subject: [meykandar] தமிழ் இலக்கிய வகைகள்- திகைப்பு

__._,_.___
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (2)
Recent Activity:
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.

__,_._,___

Karuannam Annam

unread,
Mar 3, 2013, 1:56:15 AM3/3/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
விளக்கமளித்துப் பதிலுரைத்தமைக்கு நன்றி.
தங்கள் ஆர்வமும் தமிழும் கவர்கின்றன. தொடர்ந்து படித்துவருகிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

2013/3/2 K. Loganathan <k.ula...@gmail.com>

K. Loganathan

unread,
Mar 4, 2013, 1:47:45 AM3/4/13
to meyk...@yahoogroups.com, mint...@googlegroups.com, vall...@googlegroups.com
முனைவர் கணேசலிங்கம் அவர்களே

உண்மைதான் எனது திராவிட மெய்யறிவு விசாரணை  மொழியியல் ஆய்வுகள் போன்றவை சுமேருத் தமிழ் காலத்துலிருந்துதான் தொடங்குகின்றன.  சுமேரு மொழி தொல் தமிழே என்ற கருத்திற்கு உடன்பட்டு அதில் இன்னும் ஆய்வு செய்வார் தொகை மிகவும் குறைவு எனினும் கூடி வருகின்றது, இதில் அன்றும் இன்றும் ஈழத் தமிழர்கட்கு மிகச் சிறப்பான பங்குண்டு.  ஏன் என்று தெரியவில்லை. இந்தக் கண்டு பிடிப்பை இப்பொழுது உலகெல்லாம் பரப்பி வருகின்றவர்கள் பெரும்பாலோர் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களே யாகும்

உலகன்

2013/3/4 Dr.K.Ganesalingam <kganes...@yahoo.com>
 

அன்பின் உலகன்,
உங்கள் ஆராய்ச்சியும் அறிவுத் தேடலும் மிகவும் பயனளிப்பது. பொதுவாக சங்க காலத்திலிருந்துதான் தமிழ் தொடர்பான ஆய்வைப் பலரும் மேற்கொண்டுள்ளனர். நீங்கள்  அதற்கு முன்பிருந்தே ஆய்வினைத் தொடர விழைவது ஆய்வாளருக்கு உந்துதல் அளிக்கும். காலப்போக்கில் பலர் இதில் ஈடுபடலாம். 
அன்புடன் 
கணேசலிங்கம் 


From: K. Loganathan <k.ula...@gmail.com>
To: meyk...@yahoogroups.com
Cc: mint...@googlegroups.com; vall...@googlegroups.com; tolkaa...@egroups.com
Sent: Sunday, 3 March 2013 2:05 PM
Subject: Re: [meykandar] தமிழ் இலக்கிய வகைகள்- திகைப்பு

__._,_.___
Recent Activity:
............................................
Tamil Software Download (eMail, Internet, word processing, KeyBoard)
http://www.tamil.net/newtamil/ekalappai_1.html
.............................................
eMail setup:
http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
..................................
Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.gbizg.com/tamil/Using_ekalappai.htm
..................................
PDF-Adobe instructions for installing Tamil font and eKalappai
http://www.tamil.net/special/ekalappai3.pdf
..................................
.

__,_._,___

Reply all
Reply to author
Forward
0 new messages