பெரியாரும் மணியம்மையும்

64 views
Skip to first unread message

iraamaki

unread,
Mar 8, 2018, 12:12:26 AM3/8/18
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com, mint...@googlegroups.com
 
என்ற இடுகையில் இன்றுபடித்தது இது. புரியாதவர் படிக்கவேண்டிய பதிவென்பதால், வெட்டியொட்டுகிறேன். தேவையற்றுப் பெரியாரைக் கரித்துக்கொட்டி இருப்பதற்கு மாறாய், மகளிர் நாளில் கொஞ்சமாவது புரியட்டும்.
 
அன்புடன்,
இராம.கி.
-----------------------------------------
 
கே: மகள் வயதுடைய பெண்ணை பெரியார் 70 வயதில் திருமணம் செய்து கொண்டது ஏன்? மகளாய்த் தத்தெடுக்காமல் ஏன் திருமணம்?
 
பதில்: முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் அன்றைய இந்துத் திருமணச் சட்டப்படி ஒருவரைத் தத்தெடுக்க, தத்து எடுப்பவரும், எடுக்கப்படுபவரும் ஒரே சாதியாய் இருக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்படித் தத்தெடுக்க முடியாது. இது அம்பத்கரின் இந்து சட்டத் திருத்தங்கள் 1956-ல் அமலுக்கு வந்த பின்னே இந்த விதி நீக்கப்பட்டது.
 
பெரியாரை விமர்சிக்க ஏதும் காரணம் கிடைக்காத போது சிலர் அவரின் தனிப்பட்ட வாழ்வை/மணியம்மையார் திருமணம் குறித்தே விமர்சிப்பர். பெரியார்-மணியம்மை திருமணம் 9.7.1949 அன்று பதிவு செய்யப்பட்டது. அப்போது பெரியாருக்கு வயது 70; மணியம்மையின் வயது 30. இத்திருமணம் மணியம்மையாரின் சொந்த விருப்பத்தின் பேரில் சுயமாய்ச் சிந்தித்து, விரும்பி எடுக்கப்பட்ட முடிவே. இதில் யாருடையக் கட்டாயமும் இருக்க வில்லை.
பெரியாரிடம் வருவதற்கு முன்பே மணியம்மையார் தன் வீட்டில் தனக்குத் திருமணமே வேண்டாம் என்று முடிவுடன்தான் இருந்திருக்கிறார். பெரியாரிடம் வந்து சேர்ந்தப் பின்பும் அவருக்கு மணம் முடிக்க முயற்சிகள் செய்யப்பட்ட போது இயக்கப் பணியே வேண்டும் திருமணம் வேண்டாம் என்ற முடிவையே முன் வைத்தார்.
 
பழைய இந்துச் சட்டத்தின் படி பெண் மகள்களுக்குச் சட்டப்படிச் சொத்துரிமை இல்லை. 1956-க்கு முன் பழைய இந்து சட்டத்தின் படி பெண்ணுக்குத் தகப்பன் வீட்டில் தங்கும் உரிமை + சீதனம் மட்டுமே !. எனவே மணியம்மையை மகளாய்த் தத்தெடுத்தாலும் பெரியாரின் எண்ணம் நிறைவேற வாய்ப்பில்லை. பெரியார் 28.6.1949 அன்று திராவிடர் கழகத்தின் சொத்துக்கள் பற்றி ஒரு அறிக்கை எழுதுகிறார்.
 
"எனக்கும், எனது பொருளுக்கும் சட்டப்படியான வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி கொள்ள வேண்டியது அவசியமும், அவசரமுமாகையால் நான் 5,6 வருஷ காலமாகப் பழகி நம்பிக்கைக் கொண்டதும், என் நலத்திலும், இயக்க நலத்திலும் பற்றும், கவலையும் கொண்டு நடந்தது வந்திருக்கிறதுமான மணியம்மையை எப்பிடியாவது வாரிசுரிமையாக ஆக்கிக் கொண்டு அந்த உரிமையையும், தனிப்பட்டத் தன்மையையும் சேர்த்து மற்றும் 4,5 பேர்களையும் சேர்த்து இயக்க நடப்புக்கும், பொருள் பாதுக்காப்புக் குமாகச் சேர்த்து ஒரு ட்ரஸ்ட்டு பத்திரம் எழுத ஏற்பாடு செய்திருக்கிறேன். அப்பத்திரமும் எழுதப்பட்டு வருகிறது." (28.6.1949 - விடுதலை) ஆக, மணியம்மையை சட்டப்படி வாரிசாக்க மட்டுமே பெரியார் முடிவு செய்கிறார். இந்தத் திருமணம் ஒரு சட்டப் பாதுக்காப்பு மட்டுமே என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.
 
"மணியம்மை வாரிசு என்பது, டிரஸ்ட்டு சம்பந்த உரிமை என்பதும், மணியம்மைக்கு சுதந்திர பாத்தியமுடையதல்ல. பரம்பரை பாத்தியமுடையதுமல்ல ! ஆதனால் இந்தத் திருமணம், பொருத்தத்தை அல்லது மணியம்மையை ஏமாற்றும் திருமணமும் அல்ல. ஏன் ? பொருந்தாதத் திருமணமும் அல்ல, மணியம்மை உள்பட யாருக்கும் எந்தவிதமான நிர்பந்தமோ, அவருக்கு இஷ்டமில்லாத துன்பங்களைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய அதாவது வாழ்நாள் அடிமைத்தன்மைக்கு ஆளானதோ ஆனத் திருமணம் அல்ல." (7.7. 1949 - விடுதலை) இதிலிருந்து பெரியார் மணியம்மைக்கு இயக்கத்தைத் தாரை வார்க்கவில்லை என்பது நன்கு தெரிகிறது. அன்றைய/இன்றைய விமர்சனங்கள் மணியம்மையைத் தலைவராக ஏற்கவேண்டி வரும் என்றும் பெரியார் மணியம்மையைத் தவிர வேறு யாரையும் நம்பவில்லை என்று புகார் கூறினார். பெரியார் எந்த இடத்திலும் மணியம்மையாரை இயக்கத் தலைமைக்குக் கொண்டு வருவதாகச் சொல்லவில்லை.அத்தோடு அவர் மணியம்மை + 4/5 பேர் கொண்டு குழுவை டிரஸ்ட்டாக அமைப்பது பற்றியே சொல்கிறார். வேறு யாரையும் நம்பாதவர் எப்பிடி இதைச் செய்ய முடியும்? அத்தோடு பெரியார்-மணியம்மை திருமணம் என்ற தலைப்பில் 16.7.1949 அன்று குடி அரசில் எழுதிய அறிக்கையில் பெரியார் கூறுகிறார், " பெரியார் தலைமைப் பதவியை மனியம்மைக்குச் சூட்டுவதற்கு மணியம்மையை மனைவியாகவோ, வாரிசாகவோ பெற வேண்டிய அவசியம் என்ன?" - (16.7.1949 - குடி அரசு)
 
அன்று பெரியாருடன் இருந்தவர்களில் ஒருவரான தி.பொ.வேதாசலம் பெரியாரின் திருமணம் பற்றிக் கூறுவது இந்தக் கேள்விக்கு ஒரு நல்ல பதிலைத் தரும்.
 
"ஒரு மனிதன் எதற்காக மணம் செய்கிறான்?
 
1. தனக்கு வாழ்க்கைத் துணைவியைத் தேடிக் கொள்ளவும், மற்ற உதவிகள் புரியவும்.
2. பிள்ளைப் பேறு கருதி
3. தன் காம இச்சைக்கு உதவியாக
 
மேற்சொன்ன காரணங்கள் பெரியார் செய்து கொள்ளும் திருமனத்திற்குக் கொஞ்சமும் பொருந்தாது. மணியம்மை கடந்த 6 வருடங்களாக உணவு சமைத்தும், மற்ற பணிகள் ஆற்றியும் வருகிறார். பிள்ளைப் பேறு கருதியிருக்க முடியாது. காம இச்சைக்கு மணப் பதிவு முக்கியமல்ல. " (9.7.1949 - விடுதலை)
 
நாகம்மையார் மறைந்தது 1933-ல். அப்போது பெரியார்க்கு வயது 55. அப்போதே பெரியாரை இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அவரின் தாயார் உட்படப் பலரும் வலியிறுத்தினர். பெரியார் அதை மறுத்துவிட்டார். தன் வாழ்நாள் முழுவதும் சமூக நீதி காணத் தொண்டு செய்ய அதுத் தடையாய் இருக்குமென எண்ணினார். பெரியார் அதைக் கேட்டு திருமணம் செய்திருந்தாலோ, மணியம்மை அப்போதே இருந்து பெரியாரை திருமணம் செய்து இருந்தால் இத்தனை விமர்சனம் வந்திருக்காது. வேதாசலம் கூறுவது போல இது வெறும் உடல் இச்சையைத் தணிக்கச் செய்தத் திருமணமும் அல்ல. அந்நாளைய பெரிய மனிதர்கள் மத்தியில் பலதாரமணம் பெரிய விசயமே இல்லை. அத்தோடு மணியம்மையாரே பெரியாருடன் தனிப் பயணங்கள் பல சென்றிருக்கிறார். அது பற்றிய அறிக்கைகள் விடுதலையில் காணக் கிடைக்குறது.
 
எப்பிடிப் பார்த்தாலும் இது உடல் இச்சையைத் தீர்க்கும் திருமணம் இல்லை என்பதும், மணியம்மையார்க்கு இயக்கத்தைக் கொடுக்க இல்லை என்பதும், பெரியாரின் சொத்துக்களை, இன்னபிற விசயங்களை சட்டப்படிப் பாதுக்காக்க ஒரு வாரிசு ஏற்படுத்த மட்டுமே என்பது உறுதியாகிறது.
 
இதைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா தலைமையில் பலர்கழகத்தை விட்டு வெளியேறி தி.மு.க கண்டது வரலாறு. பின்னர் ஒருநாள் க.அன்பழகன் அவர்கள் மணியம்மையார் முன்னிலையில் ஒரு கூட்டத்தில் பேசும் போது, " நாங்கள் கட்சி அரசியலுக்கு வர விரும்பினோம். அதை பெரியார்-மணியம்மை திருமணத்தை ஒரு சாக்காகக் காட்டி வெளியேறினோம்" என்று உண்மையைப் போட்டு உடைத்தார். 1967 தேர்தல் வெற்றிக்குப் பிறகு பெரியாரைச் சந்தித்த அண்ணா மணியம்மையாரை விமர்சித்தற்கு மன்னிப்புக் கேட்டு அவரின் அருந்தொண்டை பாராட்டினார். பெரியாரின் நீண்ட ஆயுளுக்கு மணியம்மையாரின் தொண்டே காரணம் என்றார்.
 
மணியம்மையார் குறித்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் குயில் இதழில் எழுதிய தலையங்கமே மணியம்மையாரின் தொண்டுக்குச் சாட்சி.
 
"பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால், பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு; மக்கள் மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.ஆயினும், காற்றிறங்கிய பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக்காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது; அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை. அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?
 
பெரியார் மேடை மேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப் பொருளாலும் அழகு பெறக்கூடிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள். அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள். ஒரே ஒரு மாலையை எந்துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை. எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி _ அம் மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தலையில் வைத்தார் என்பதுமில்லை." - (‘குயில்’ இதழ், 10.04.1960)
 
nkantan r

unread,
Mar 8, 2018, 2:20:12 AM3/8/18
to மின்தமிழ்
Thank you sir.

I succinctly pointed out in another related thread to read the Hindu Property disposition Rules to understand the marriage.

You have brought out the facts lot more clearly. Especially as there were no laws concerning adoption of a female child and property disposition to an adopted daughter.

The legal wrangle forced the situation. And though Anna used the marriage and DMK was formed, there was a mistrust as Anna wanted to move to electoral politics and EVR was against that. This also forced EVR's hands

rnk

S. Jayabarathan

unread,
Mar 8, 2018, 9:00:33 AM3/8/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Asan Buhari, Oru Arizonan, Raju Rajendran, kanmani tamil
ஒரு குறைபாடு. கிழவர் - குமரி திருமணங்கள் சமூகத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை.  அவற்றால் விதவைப் பெண்டிர் எண்ணிக்கை பெருகி, அவரது வாழ்க்கை பாழாகும்.  குறிப்பாகப் பெரியார் போன்ற பகுத்தறிவு வாதிகள் கண்டிக்க வேண்டியவை. 

சி. ஜெயபாரதன்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சேது

unread,
Mar 9, 2018, 12:01:31 AM3/9/18
to மின்தமிழ்
திருவமை,செயபாரதன்,கிழவர்-குமரிதிருமணங்கள்தவிர்க்கப்கடவேண்டியவை என்று குறிப்பிட்டுள்ளார். குமரன்-சிறுமிதிருமணங்கள் எப்படி?வடபுலத்தில்இப்போதும் நடைபெறுகின்றன. குமரன்-சிறுமி திருமணங்களில்  சிறுமி  மாதவிலக்கு என்றால்என்ன?என்றுதெரியாமலே 2,3பிள்ளைகளுக்கும்தாயாகி விடுவார்.

தேமொழி

unread,
Mar 9, 2018, 12:40:30 AM3/9/18
to மின்தமிழ்

On Thursday, March 8, 2018 at 9:01:31 PM UTC-8, சேது wrote:
திருவமை,செயபாரதன்,கிழவர்-குமரிதிருமணங்கள்தவிர்க்கப்கடவேண்டியவை என்று குறிப்பிட்டுள்ளார். குமரன்-சிறுமிதிருமணங்கள் எப்படி?வடபுலத்தில்இப்போதும் நடைபெறுகின்றன.

கைம்பெண்கள் அதிகம் உருவாகியதே குழந்தைகள் திருமணத்தில்தான்.
பெண்களின் வாழ்க்கை பாழானதே குழந்தைகள்  திருமணத்தில்தான். 

நூறாண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையின் தரவு....

--------------------------------------------

1921 ஆம் வருஷத்திய ஜனசங்கியைப்படி இந்துக் கைம்பெண்ணின் தொகையினை நோக்குகையில், அய்யகோ! என்நெஞ்சம் துடிக்கின்றது
1 வயதுள்ள விதவைகள் = 597 
1 முதல் 2 வயதுள்ள விதவைகள் = 494 
2 முதல் 3 வயதுள்ள விதவைகள் = 1,257 
3 முதல் 4 வயதுள்ள விதவைகள் = 2,837
4 முதல் 5 வயதுள்ள விதவைகள் = 6,707
5 முதல்10 வயதுள்ள விதவைகள் = 85,937
10 முதல் 15 வயதுள்ள விதவைகள் =  2,32,147 
15 முதல் 20 வயதுள்ள விதவைகள் =  3,96,172 
20 முதல் 25 வயதுள்ள விதவைகள் =  7,42,820 
25 முதல் 30 வயதுள்ள விதவைகள் =  11,63,720 
ஆக மொத்த விதவைகள் 26,31,788

மேலும், இத்தகைய விதவைத் தன்மையானது பிரஜா உற்பத்திக்குப் பேரிடராயிருக்கிறது. இந்து மதத்திலிருந்து எவரேனும் இரண்டொருவர் பிற மதத்திற்கு மாற்றப்பட்டால், இந்து மக்கள் தங்கட்குப் பெரும் துன்பம் நேரிட்டுவிட்டதாகக் கருதி பரிதாப்படுகின்றார்கள். இதன் காரணம் என்ன? தமது சமயத்தில் இருவர் குறைந்துவிட்டதால், இந்துசமூகத்திற்கே ஒர் பெரும் கஷ்டமும் நஷ்டமும் ஏற்பட்டுவிட்டது என்ற எண்ணத்தினால், இந்த இரண்டு நபருக்காக இவ்வளவு துக்கமும் துயரமும் ஏற்படுமானால் தற்காலம் நமது இந்திய நாட்டிலள்ள இருபத்தாறு லட்சத்து முப்போத்தோராயிரத்து எழுநூற்று எண்பத்தெட்டு விதவைகள் (இப்போது சுமார் 5 லட்சம் அதிகம் பெருகியிருப்பர்) கல்யாணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கை நடத்துவதாயிருந்தால் எத்தனை குழந்தைகள் பெறக்கூடும்? சராசரி மொத்தத்தில் மூன்றில் இருமடங்குப் பெண்கள் 2 வருடத்திற்கு ஒரு குழந்தை வீதம் பெறுவதாக வைத்துக் கொண்டாலும், தடவை ஒன்றுக்கு 87,726 குழந்தைகள் வீதம் வருடம் பத்துக்கு 4,38,631 பிரஜா உற்பத்தியை நாம் தடுத்துக்கொண்டு வருகின்றோம். இது இரண்டொருவர் மதம் மாறுவதால் நஷ்டம் வந்துவட்டதாகக் கருதுவோருக்குப் புலப்படுவதில்லை. பால்மணம் மாறாத 5 வயதிற்குட்பட்ட இளங்குழந்தைகள் மாத்திரம்18,892 பேர்கள் இருக்கிறார்களென்பதையும், தன் பிறவிப் பயனையே நாடுதற்கில்லாது - இன்பந் துய்த்தற்கில்லாது அடக்கி வைக்கப்பட்டிருக்கும் 15 வயதிற்குட்பட்ட கைம்பெண்கள் 2,32,147 பேர் இருக்கிறார்கள் என்பதையும் கேட்க என் குலை நடுங்குகிறது. இத்தகைய படுமோசமான விதவைத் தன்மையை எந்த நாகரிக உலகம் ஏற்கும்? 

______________________________

பெண் ஏன் அடிமையானாள்
பெரியார் ஈ. வெ. ரா.

..... தேமொழி 

S. Jayabarathan

unread,
Mar 9, 2018, 7:11:02 AM3/9/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Asan Buhari, Raju Rajendran
குழந்தைத் திருமணங்கள் சட்டப்படி, சமூக விதிப்படி தவறான முறைபாடுகள்.  இவையும் சொத்துகள்
வேறு யாருக்கும் போகக் கூடாது என்னும் பகுத்தறிவுப் பெரியார் செய்துகாட்டிய கிழவர்-குமரி திருமண பார்முலாவில்தான் ஒரு கிளைதான்.

கிழவர்-குமரி திருமணங்கள் விதவைகளைப் பெருக்கும் என்று நான் எழுதிய போது, பெண்டிர் விரும்பினால்
மறுமணம் செய்து கொள்ளலாம் என்று ஒரு பெண்ணியவாதி பெரியார் செயலை நியாயப் படுத்தினார்.  இப்போது காத்திருக்கும் விதவைகள் நிரலைக் காட்டுகிறார். பாராட்டுகள்.

/////1921 ஆம் வருஷத்திய ஜனசங்கியைப்படி இந்துக் கைம்பெண்ணின் தொகையினை நோக்குகையில், அய்யகோ! என்நெஞ்சம் துடிக்கின்றது

1 வயதுள்ள விதவைகள் = 597 
1 முதல் 2 வயதுள்ள விதவைகள் = 494 
2 முதல் 3 வயதுள்ள விதவைகள் = 1,257 
3 முதல் 4 வயதுள்ள விதவைகள் = 2,837
4 முதல் 5 வயதுள்ள விதவைகள் = 6,707
5 முதல்10 வயதுள்ள விதவைகள் = 85,937
10 முதல் 15 வயதுள்ள விதவைகள் =  2,32,147 
15 முதல் 20 வயதுள்ள விதவைகள் =  3,96,172 
20 முதல் 25 வயதுள்ள விதவைகள் =  7,42,820 
25 முதல் 30 வயதுள்ள விதவைகள் =  11,63,720 
ஆக மொத்த விதவைகள் 26,31,788.

பெரியார் இந்தசமூகப் பிரச்சனைக்குத் தன் வாழ்வில் என்ன செய்தார் ???

சி. ஜெயபாரதன்

--

S. Jayabarathan

unread,
Mar 9, 2018, 7:17:10 AM3/9/18
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Asan Buhari, Raju Rajendran
நண்பர்களே,

பெரியார் பிறந்த தமிழ்நாட்டிலே, இப்போதும் குப்பை அள்ளுபவன் குப்பை அள்ளிக் கொண்டுதான் இருக்கிறான்.

கழிப்பறை சுத்தம் செய்பவர் இன்னும் கழிப்பறை சுத்தம் செய்து கொண்டுதான் இருக்கிறார். 

பாராட்டுகள்

சி. ஜெயபாரதன்

iraamaki

unread,
Mar 9, 2018, 8:16:12 AM3/9/18
to mint...@googlegroups.com
திரு. ஜெயபாரதனுக்கு “எது எந்த இழை” என்றே தெரியாது போலும். கண்மண் தெரியாமல் தன் கூற்றுகளை எல்லா இழைகளிலும் விரவிவிடுகிறார். . அவருக்குப் பெரியாரைத் திட்டவேண்டும். அதை எங்கெலாம் முடியுமோ, அங்கெலாம் செய்ய அவர் முற்படுகிறார். கண்மண் தெரியாத கோவங் கொண்டவரோடு எப்படி ஒழுங்குபட உரையாடுவது?  புரிந்த நாம் தான், அமைதியாக வேண்டும்.  மீண்டும் மீண்டும் உரையாடி அவர் கோவத்தைக் கூட்டுவதிற் பலனில்லை.  உரையாட்டைக் குறையுங்கள்.
 
கீழே அவர் எழுதியுள்ளதற்கும் நான் இங்கு வெட்டியொட்டியதற்கும் தொடர்பில்லை. இதையாவது நண்பர் புரிந்துகொள்ளட்டும்.
அவைநாகரிகம் என்றவொன்று இருக்கிறது.
 
அன்புடன்,
இராம.கி.
Sent: Friday, March 09, 2018 5:46 PM
Subject: Re: [MinTamil] Re: பெரியாரும் மணியம்மையும்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேனீ

unread,
Mar 9, 2018, 8:27:17 AM3/9/18
to மின்தமிழ்
பெரியார் மணியம்மை திருமணம் என்பது 70க்கும் 30க்கும். இது ஏதோ காமத்தை வேண்டி மணம் புரிந்து கொண்டு பிள்ளைப் பேறு பெற்று விதவையாகுவது போன்று கற்பனை பண்ணினால் அது மனதால் ஏற்படும் குற்றம்.

இது சர்ந்தர்ப்ப சூழ்நிலைக்காக ஏற்படுத்தப் பட்ட திருமணமென்று தெளிவாக விளக்கம் கொடுக்கப் பட்டும் அதை கொச்சைப்படுத்தினால் அது ஊனக்கண்ணால் காண்பதாகும். 

On Thursday, March 8, 2018 at 10:00:33 PM UTC+8, jayabarathans wrote:
ஒரு குறைபாடு. கிழவர் - குமரி திருமணங்கள் சமூகத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை.  அவற்றால் விதவைப் பெண்டிர் எண்ணிக்கை பெருகி, அவரது வாழ்க்கை பாழாகும்.  குறிப்பாகப் பெரியார் போன்ற பகுத்தறிவு வாதிகள் கண்டிக்க வேண்டியவை. 

சி. ஜெயபாரதன்.
On Thu, Mar 8, 2018 at 2:20 AM, nkantan r <rnka...@gmail.com> wrote:
Thank you sir.

I succinctly pointed out in another related thread to read the Hindu Property disposition Rules to understand the marriage.

You have brought out the facts lot more clearly. Especially as there were no laws concerning adoption of a female child and property disposition to an adopted daughter.

The legal wrangle forced the situation. And though Anna used the marriage and DMK was formed, there was a mistrust as Anna wanted to move to electoral politics and EVR was against that. This also forced EVR's hands

rnk

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேனீ

unread,
Mar 9, 2018, 8:35:34 AM3/9/18
to மின்தமிழ்
குப்பை அள்ளுவதும் கழிப்பறை சுத்தம் செய்வதும் ஒரு தொழில் அவ்வளவே.

அந்த தொழில் வேண்டாமென்று தூக்கிப் போட்டு விட்டுப் போனால் அதை தடுப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை.

இந்த நிலை அனைத்து நாடுகளிலும் உண்டு. வெள்ளைக்காரனும் அவனவன் நாட்டில் குப்பை அள்ளுகிறான். கழிவரையை சுத்தம் செய்கிறான்.

தமிழர் குப்பை அள்ளக்கூடாது  கழிப்பறை சுத்தம் செய்யக் கூடாதென்று பெரியார் மட்டும் நினைத்தால் போதாது அனைத்து தமிழரும் நினைக்க வேண்டும். அப்படி நினைக்காமல் போனதால்தான் தமிழ் நாட்டில் இன்றும் இத்தகைய இழிவு நிலை தொடர்கிறது. அதற்கு பெரியார் என்ன செய்வார்? 
 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Mar 9, 2018, 10:36:16 AM3/9/18
to mintamil
​மதிப்புக்குரிய இராம. கி. ஐயா,

தந்தை பெரியார் மீது எனக்குப் பற்று அதிகம்.   ஆயினும்  இந்த இழையில் நான் வேறு தலைப்பை எழுதியது என் தவறே.  இப்போது அத்தலைப்பை நானிங்கு தொடர வில்லை. 

சி. ஜெயபாரதன்

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Mar 9, 2018, 3:01:32 PM3/9/18
to S. Jayabarathan, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Aravindan Neelakandan, Asan Buhari, Oru Arizonan, kanmani tamil
2018-03-08 5:59 GMT-08:00 S. Jayabarathan <jayaba...@gmail.com>:
ஒரு குறைபாடு. கிழவர் - குமரி திருமணங்கள் சமூகத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை.  அவற்றால் விதவைப் பெண்டிர் எண்ணிக்கை பெருகி, அவரது வாழ்க்கை பாழாகும்.  குறிப்பாகப் பெரியார் போன்ற பகுத்தறிவு வாதிகள் கண்டிக்க வேண்டியவை. 

சி. ஜெயபாரதன்.

கைம்பெண்கள் மறுமணம் செய்துகொள்ளணும் என்று வலியுறுத்தினாரே. 
Reply all
Reply to author
Forward
0 new messages