கோசலை மாண்பு!

18 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Dec 12, 2009, 7:24:26 PM12/12/09
to Min Thamizh
அயோத்தி மக்​கள் இராம​னுக்கு முடி​சூட்டு விழா என்று வள்​ளு​வன் பறை​ய​றைந்​தது கேட்டு மகிழ்ச்சி வெள்​ளத்​தில் திளைத்​தார்​கள்.​
 
முதிய பெண்​ம​ணி​கள் கோச​லை​யைப் போல​வும்,​​ வேதம் வல்ல அந்​த​ணர்​கள் வசிட்​ட​னைப் போல​வும்,​​ மண​மான இளம்​பெண்​கள் சீதை​யைப் போல​வும்,​​ சீதை திரு​ம​க​ளைப் போல​வும்,​​ அவ்​வூ​ரில் வாழ்ந்த ஆன்று அவிந்து அடங்​கிய சான்​றோர்​கள் தய​ர​த​னைப் போல​வும் மகிழ்ச்​சி​யான மன​நி​லை​யில் இருந்​தார்​கள்.​
 
இதனை,​​​
மாதர்​கள் கற்​பின் மிக்​கார்
கோ​சலை மனத்தை ஒத்​தார்;​
வேதி​யர் வசிட்​டன் ஒத்​தார்;​
வே​றுள மக​ளிர் எல்​லாம்
சீதையை ஒத்​தார்;​ அன்​னாள்
தி​ரு​வினை ஒத்​தாள்;​ அவ்​வூர்ச்
சாதுகை மாந்​தர் எல்​லாம்
த​ய​ர​தன் தன்னை ஒத்​தார்​.
என்று அழ​காக விளக்​கி​யுள்​ளார் கம்​பர்.​
ஒவ்​வொரு கம்​பர் பாட்​டை​யும் சுண்​டிப் பார்த்து "இது கம்​பன் பாட்டு", "இது கம்​பன் பாட்டு அன்று" என்று விளக்​கி​ய​வர் இரசி​க​மணி டி.கே.சி.​ அவர் சொல்​லும் திருத்​தங்​கள் எல்​லா​வற்​றை​யும் ஏற்​றுக்​கொள்ள இய​லாது என்​பது அறி​ஞர் உல​கம் அறிந்த உண்மை.​ ஆயி​னும் சில பாடல்​க​ளுக்கு அவர் செய்​துள்ள திருத்​தங்​கள் நம்​மைச் சிந்​திக்க வைக்​கின்​றன.​
 
இப்​பாட்​டில் இரு திருத்​தங்​களை இரசி​க​மணி டி.கே.சி.​ செய்து,​​ தமது "கம்​பர் தரும் இராமா​ய​ணம்" முதற்​பா​கத்​தில் வெளி​யிட்​டுள்​ளார்.​
 
  • "மாதர்​கள் கற்​பின் மிக்​கார்" என்​ப​தற்கு மாறாக,​​ "மாதர்​கள் ஆண்​டின் மிக்​கார்" என்​பது முதல் திருத்​தம்.​
  • "சாதுகை மாந்​தர் எல்​லாம்" என்​ப​தற்கு மாறாக,​​ "சாதன மாந்​தர் எல்​லாம்" என்​பது இரண்​டா​வது திருத்​தம்.​
இவற்​றில் இரண்​டா​வது திருத்​தம் அவ்​வ​ளவு பொருத்​த​மாக அமை​ய​வில்லை.​
 
மகா​வித்​து​வான் மே.வீ.வேணு​கோ​பா​லப்​பிள்ளை,​​ "திரு​ம​ழி​சைப்​பி​ரா​னின் நான்​மு​கம் திரு​வந்​தா​தி​யில் உள்ள,​​​
 
"சாது​வ​ராய்ப் போது​மின்​கள்" என்​றான் நம​னும் ​தன்
 தூது​வ​ரைக் கூவிச் செவிக்கு". ​(68)​
​என்​னும் வெண்​பா​வைக் காட்டி,​​ "சாதுகை மாந்​தர்" என்​பது "சாதுவ மாந்​தர்" என்று இருத்​தல் வேண்​டும் என்று குறித்​துள்​ளார்.​
 
இது நல்ல பாட​மா​கத் தோன்​று​கி​றது.​
 
மு​தல் திருத்​தம் இரசி​க​ம​ணி​யின் அறிவு நுட்​பத்​தைக் காட்​டு​கி​றது.​ கோசலை கற்​பில் சிறந்​த​வள் என்​பது உண்​மையே.​ இராமன் அவ்​வன்​னையை,​​
"அருங்​கற்​பி​னோய்" ​(1619) என்று விளித்​துப் பேசு​கி​றான்.​ கம்​பர் அவ​ளைக் "கற்​பு​றுத்​திய கற்​பு​டை​யாள்" ​(1620) என்று குறிக்​கி​றார்.​ ஆனால் இராம​னுக்கு முடி​சூட்டு விழா என்​ப​தைக் கேட்​டுக் கோச​லை​யைப் போல மகிழ்​வ​தற்​கும் கற்​பொ​ழுக்​கத்​திற்​கும் என்ன தொடர்பு இருக்​கி​றது?​
இங்கு மாதர்​கள் கற்​பைப் பற்​றிய பேச்சு வேண்​டா​த​தாக அமை​கி​றது.​ அத​னால் அவர் "ஆண்​டின் மிக்​கார்" என்று திருத்​தம் செய்​தார்.​
 
நீதி​பதி மக​ரா​ஜன்,​​ தென்​மா​வட்​டத்​தில் கிடைத்த ஓர் ஏட்​டுச்​சு​வ​டி​யில் "ஆண்​டின்" என்​ப​தற்கு மாறாக "வய​தின்" என்​னும் பாடம் காணப்​பட்​ட​தா​கத் தம் கட்​டுரை
ஒன்​றில் தெரி​வித்​துள்​ளார்.​ இத்​தி​ருத்​தங்​க​ளின் பொருத்​தத்தை அறு​தி​யி​டக் கோச​லை​யின் பண்​பு​ந​ல​னைப் பற்​றிய தெளிவு துணை​பு​ரி​யும்.​
கோ​சலை மற்ற பட்​டத்​த​ர​சி​க​ளைப் போல அரச குடும்​பத்​தில் பிறந்​த​வள்.​
  • கோசல மன்​ன​னின் மகள் கோசலை என்​றும்,​
  • மக​த​நாட்​ட​ர​சன் மகள் சுமித்​திரை என்​றும்,​​
  • கேக​ய​நாட்டு மன்​ன​னின் மகள் கைகேயி ​
என்று இரகு வம்​சம் ​(சருக்​கம்  -​ 11,17) தெரி​விக்​கி​றது.
 
கோ​சலை நான்கு பிள்​ளை​க​ளை​யும் "தன் பிள்ளை இவன்",​ "மற்​ற​வர் பிள்​ளை​கள் இவர்​கள்" என்​னும் எண்​ண​மின்றி எல்​லோ​ரை​யும் சம​மா​கக் கரு​தி​னாள்.​
அவளை மற்ற இரு​வ​ரி​ட​மி​ருந்து பிரித்​துக் காட்​டும் பண்பு அவள் பிள்​ளை​க​ளி​டம் கொண்ட அள​வற்ற அன்பு ஆகும்.​ கம்​பர் அவளை,​​ "நால்​வர்க்​கும் மறு​வில்
அன்​பி​னில்​ வேற்​றுமை மாற்​றி​னாள்" (1609) என்று குறிக்​கி​றார்.
 
​கோ​ச​லை​ கேக​யத்தி​லி​ருந்து திரும்​பிய பர​த​னி​டம் கைகே​யி​யின் வஞ்​ச​னையை அறி​யாயோ என்று வின​வி​னாள்.​ அவன் அது கேட்​டுக் குமு​றி​னான்.​
 
"யான் அவ்​வஞ்​ச​னையை அறிந்​தி​ருந்​தால் பற்​பல தீமை​கள் செய்த பாவத்தை அடை​வ​தற்​கு​ரி​ய​வன் ஆவேன்" என்று சூளு​ரைத்​தான்.​
 
அ​வன் கூறி​ய​வற்​றைக் கேட்​டுக் காட்​டுக்​குச் சென்ற இராமன் திரும்பி வரக் கண்​ட​து​போல மகிழ்ந்து அன்​பி​னால் அழுது அவ​னைத் தழு​விக்​கொண்​டாள்.​ அவள் மார்​ப​கத்தி​லி​ருந்து பால் உக,​​ விம்மி, விம்மி அவ​னோடு பேசி​னாள் என்​கி​றார் கம்​பர்.​
 
இத்​த​கைய தன்மை தாயன்பு மிக்​க​வர்​க​ளி​டம் காணப்​ப​டு​வது ஒன்​றா​கும்.​
 
திரு​ஞா​ன​சம்​பந்​த​ரைக் கண்ட மங்​கை​யர்க்​க​ர​சி​யார் இத்​த​கைய நிலை​யினை அடைந்​தார் என்​கி​றார் சிவப்​பி​ர​கா​சர் தம்​மு​டைய "நால்​வர் நான்​மணி மாலை"யில்.​
 
இத​னால் அன்​பின் மிக்க மாதர்​கள் கோசலை மனத்தை ஒத்​தார்​கள் என்று கூறு​வதே பொருத்​த​மாக அமை​யும்.​
 
அன்பு என்​ப​தனை "அற்பு" என்று வழங்​கு​வது பொது​வா​கக் கவி​ஞர்​க​ளி​டம் சிறப்​பா​கக் கம்​ப​ரி​ட​மும் காணப்​ப​டும் போக்கு ஆகும்.​
​​
​"அற்​பின் நின்​றன அறங்​கள்;​ அன்​ன​வர்
​ ​கற்​பின் நின்​றன கால மாரியே". (90)
 
​"அற்​பின்​நல் திரை​பு​ரள் ஆசை வேலை​யி​னான்". (3344)
"தற்​பி​ரிந்து அருள்​புரி தரு​மம் போலியை
​​ அற்​பின்​அத் தலை​வ​னும் அமைய நோக்​கி​னான்".(10011)​
​ ​​ ​
என்று சில இடங்​க​ளில் அன்​பினை அற்பு என்று குறித்​துள்​ளார்.​
 
இவ்​வி​டங்​க​ளில் எல்​லாம் எதுகை நோக்கி அவ்​வாறு அமைந்​துள்​ளன.​
 
இப்​பாட​லில் எதுகை நோக்கி அவ்​வாறு அமை​யா​மல் ஓசை​யின்​பம் நோக்கி அவ்​வாறு அமைந்​துள்​ளது.​
 
மு​த​ல​டி​யின் பிற்​பாதி "கோசலை மனத்தை ஒத்​தார்" என்று வல்​லொற்​றுப் பெற்று வரு​வ​தால் அதற்​கேற்ப வல்​லோசை அமைந்​தால் இனி​மை​ப​யக்​கும் என்​ப​தால் அற்​பின் என்று பெய்​துள்​ளார்.​
​ ​ ​
பாட​வே​று​பா​டு​கள் பெரும்​பா​லும் ஓர் எழுத்​தைப் பிறி​தோர் எழுத்​தா​கக் கொள்​வ​தால் நிகழ்​வன.​ அத​னி​னும் குறை​வாக ஒரு சீருக்கு மாறாக மற்​றொரு சீரி​னைப் பெய்​வ​தா​லும்,​​ அத​னி​னும் மிகக் குறை​வாக ஓர் அடிக்கு மாறாக வேறோர் அடி​யினை மற​தி​யால் அமைப்​ப​தா​லும் நேரி​டு​கின்​றன.​
 
எ​ழுத்து மாற்​றத்​தால் ஏற்​ப​டும் பாட வேறு​பா​டு​கள் மிகு​தி​யும் ஏட்​டில் உள்ள எழுத்​தி​னைத் தவ​றா​கக் கொள்​வ​தால் ​ நிகழ்​வ​ன​வா​கும்.​
 
இப்​பாட்​டில் "மாதர்க ளற்​பின்" என்​ப​தைத் தவ​றாக "மாதர்​கள் கற்​பின்" என்று படித்​த​தால் பிழை நேர்ந்​துள்​ளது.​
​ ​
இரசி​க​மணி "கற்​பின்" என்​பது பிழை என்று கண்​ட​றிந்​தார்,​​ நோய் முதல்​நாடி அறி​யும் தேர்ந்த மருத்​து​வர்​போல.​ ஆனால்,​​ அதற்கு ​ மாற்​றாக அவர்
பரிந்​து​ரைத்த மருந்து வீரி​யம் மிக்​க​தாக இல்லை.​
 
நோய் கண்​ட​றிந்து சொன்ன மருத்​து​வ​ரைப் போற்றி,​​ அப்​பாட்​டினை,​​
​ ​ ​​ ​
மாதர்​கள் அற்​பின் மிக்​கார்
​கோசலை மனத்தை ஒத்​தார்;​
​வேதி​யர் வசிட்​டன் ஒத்​தார்;​
​வேறுள மக​ளிர் எல்​லாம்
​சீதையை ஒத்​தார்;​ அன்​னாள்
​திரு​வினை ஒத்​தாள்;​ அவ்​வூர்ச்
​சாதுவ மாந்​தர் எல்​லாம்
​தய​ர​தன் தன்னை ஒத்​தார்.​
 
​என்று படித்து மகிழ்​வோ​மாக!
 
முனைவர் தெ.ஞானசுந்தரம்
 
நன்றி:- தினமணி
Reply all
Reply to author
Forward
0 new messages