நூல்- : நுவல்-

94 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 10, 2011, 3:04:44 PM4/10/11
to மின்தமிழ்
வேந்தன் கேட்டார்:
>நுவல்தன் என்னு சொல்லின் பிறப்புதானே நூல்
>நூல் - சூத்திரம் உறவு இருக்கா?

நூ- வாயில் இருந்து உருவாவதற்கு அடிப்படை
வேராய்த் தெரிகிறது. மா- என்ற வேரில்
இருந்து மாலுதல். நூ- > நூலு-, ...
சிலம்பி நூல் அதன் வாய் உற்பவிக்கும் பொருள்.
அதுபோல மனிதச் சொற்களும் நூல் ஆகின்றன.
அதனைப் பன்னி/பின்னினால் பனுவல்.
சூத்திரம் = நூல்+பா என்று மொழிபெயர்க்கிறோம்.

இக்கருத்துக்கள் பல மொழிகளில் மனிதர்களிடை
உள்ளன: text & textile in English.
தந்து, தந்த்ரம் - வடமொழியில்.

”குறில் நெடிலாயிற்று என்பது பலர் கருத்து. நெடிலே குறிலாயிற்று என்பது
பாவாணர் கருத்து. இதற்குப் பிற திராவிட மொழிகள் வலுவூட்டுகின்றன.”

கோடு > குவடு
ஊறு > உவறு
சூறு > சுவறு (அழிதல்)
ஓச்சு > உகச்சர், உவச்சர் (உகை-)
சூல் > சுவல்
தூள் > துகள்

வே > வெய்ய, சே > செய்ய, மா > மய்யல்/மையல்
வா- > வவ்வல், பா- (பரவை) > பவ்வம்/பௌவம்
நூ- > நுவல், சே- > செவலை, ....

நா. கணேசன்


தமிழ்நாட்டு விளையாட்டுகள் - பாவாணர்
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்.
--------------------------------


பதிப்பாசிரியர் உரை xxxvii

ஊற்றுகளை நாடிக் கண்டுபிடிப்பது போலவும் அறிஞர்களைத் தேடிக் கண்டு
பிடித்து அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நிலை என்று
போற்றப்படுகிறதோ அன்றுதான் நாடு உயரும்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்டம்
தமிழக அரசு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தை
1974-ல் தொடங்கியது. அது பாவாணரைத் தவைராகக் கொண்டு இயங்கியது. தக்க
கட்டமும் ஏந்துகளும் இல்லாது பல இடங்களுக்கு மாற்றப்பட்டது. 74 அகவை
கொண்ட பாவாணர் அலுவலகம் சென்றுவர ஊர்தி எதுவும் அளிக்கப்படவில்லை.
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு 1981-ல் மதுரையில் நடைபெற்றது. மாநாட்டில்
உரையாற்றிய பாவாணர் 16.01.1981-ல் மறைந்தார். அவர் விட்டுச் சென்ற
செ.சொ.பி.அகரமுதலிப் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை
நான்கு மடலங்கள் வெளிவந்துள்ளன. எஞ்சியவை இனி வரவேண்டும்.

சொன்னிலை
விதை; விதையிலிருந்து முளை தோன்றுகிறது; அம் முனையினின்று வேர் தோன்றி
நிலத்தில் காலூன்றுகின்றது; வேர் ஆணிவேராக உறுதி பெறுகின்றது. ஆணி
வேரினின்று பக்க வேர்களும், பக்க வேரிலிருந்து கல்லிவேர்களும் தோன்றி
மரஞ் செழித்து வாழ வகைசெய்கின்றன. நிலத்துக்கு மேல் அடியாகவும், அதனின்று
கிளை, கொப்பு, வளார், இலை தோன்றி யாவருக்கும் புலப்பட நிற்கின்றது. வேரோ
கண்ணுக்குப் புலப்படுவதில்லை.
சொன்னிலையும் அப்படியே. சொற்களின் வேர் சொல்லாய் வறிஞர்க்கு மட்டுமே
புலப்படும்.

பாவாணர், பெரும்பான்மையான சொற்கள் கட்டடியினின்றே பிறந்தன என்பார்.
ஆகாரச்சுட்டு, ஈகாரச்சுட்டு, ஊகாரச்சுட்டு என்று முறைப்படி நின்றாலும்
ஊகாரச் சுட்டடிப் பிறந்த சொற்களே மிகுதியாதலான் தலைதடுமாறலாக ஊகாரச்
சுட்டடி, ஆகாரச் சுட்டடி, ஈகாரச்சுட்டடி என்று வேர்ச்சொற் கட்டுரைகளில்
தலைப்பமைத்தார்.

குறில் நெடிலாயிற்று என்பது பலர் கருத்து. நெடிலே குறிலாயிற்று என்பது
பாவாணர் கருத்து. இதற்குப் பிற திராவிட மொழிகள் வலுவூட்டுகின்றன.
"உல் என்னும் முதலடி, சொன்முதன் மெய்கள் ஆறொடு கூடிக் குரல், சுல், துல்,
நுல், புல், முல் என்னும் வழியடிகளைத் தோற்றுவிக்கும்" (வட. வர.
முன்னுரை)
உ - உல்
உ - முளை
உல் - ஆணிவேர்
குல் - சுல் - துல் - நுல் - புல் - முல் என்பன பக்கவேர். அவற்றினின்று
கிளைப்பன சல்லிவேர்.

xxxviii

தமிழ்நாட்டு விளையாட்டுகள்
"சொன்மூலம் வேர் (root), அடி (stem), முதனிலை (theme) என மூவகைப்படும்.
வேரும் முதல்வேர் (ஆணிவேர்), வழிவேர் (பக்கவேர்), சார்புவேர்
(சல்லிவேர்) என முத்திறப்படும். முதல் வேருக்கு மூலம் முளையாகும்.
முளைக்கு மூலம் வித்தே. அடி என்பது சுவையுங் கொப்புங் கிளையும் போத்துங்
குச்சுமாகப் பிரியும். இவையெல்லாம் தமிழ் போன்ற இயன்மொழியிலேயே தெளிவாகக்
காணப்பெறும்" ( வட. வர. பகுதி 2, ப.117).

சொல்லாய்வறிஞர் பலர் பாவாணர் வழிநின்ற சொல்லாய்வில் ஈடுபட்டு
வருகின்றனர். சொல்லாய்வறிஞர்க்குப் பொறுமை, இலக்கணப் புலமை,
அயராவுழைப்பு, மொழியார்வம் நிறைந்திருக்க வேண்டும். முனைவர்
இரா.மதிவாணன், ப.அருளி, முனைவர் கு.அரசேந்திரன், புலவர் இரா.இளங்குமரன்,
முனைவர் இரா.கு.ஆல்துரை, சாத்தூர்ச் சேகரன் ஆகியோர் தம்மைச் சொல்லாய்வில்
ஈடுபடுத்தி உழைத்துவருகின்றனர். இப் பணி மேலும் பெருக வேண்டும்.

பாவாணர் கோட்பாடுகள்

1. மாந்தன் தோன்றிய இடம், அழிந்துபோன குமரிக்கண்டமே.
2. மாந்தன் பேசிய முதன்மொழி தமிழே; அதுவே ஞால முதன்மொழி.
3 . தமிழ் திரவிடத்துக்குத் தாயும், ஆரியத்துக்கு மூலமும் ஆகும்.
4. தமிழை வடமொழிப் பிணிப்பினின்று மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோள்.
5. இற்றைத் தமிழிலக்கியத்திற்கு அணியாய் இருப்பதும், தமிழன் தான் இழந்த
உரிமைகளைப் பெறதற்கு ஆவணம்போல் உதவுவது தொல்காப்பியம் ஒன்றே.

தன்னம்பிக்கை

1. அகரமுதலிப் பணிக்காகவே இறைவன் என்னைப் படைத்தான்.

2. என் நூல்களுள் தலைசிறந்ததும், வேறெவராலும் செய்ய முடியாததும், தமிழின்
தலைமையை நிலைநாட்டுவதும் அகரமுதலிப் பணி ஒன்றே. என் ஆராய்ச்சியின் முழு
விளைவும் அஃதே.

3. இறுதியில் என் நூல்களால்தாம் தமிழுக்கும் தமிழர்க்கும் நலம்
பிறக்கும். அதனைப் பின்னர்க் காண்பீர்கள்.

4. மறைமலையடிகட்குப் பின் தமிழ்த் தூய்மை பேணும் பேராசிரியன் யான்
ஒருவனே.

5. என் புலமையைப் பொறுத்த வரையில் மறைமலையடிகள் ஒருவரே மதிப்புரையோ
முன்னுரையோ வழங்கத் தக்கவர்.

6. என் திருக்குறள் தமிழ் மரபுரை ஒன்றே என் தகுதியைப் பெயர் காட்டப்
போதும்.

வேந்தன் அரசு

unread,
Apr 10, 2011, 3:40:41 PM4/10/11
to mint...@googlegroups.com


10 ஏப்ரல், 2011 3:04 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

வேந்தன் கேட்டார்:
>நுவல்தன் என்னு சொல்லின் பிறப்புதானே நூல்
>நூல் - சூத்திரம் உறவு இருக்கா?

நூ- வாயில் இருந்து உருவாவதற்கு அடிப்படை
வேராய்த் தெரிகிறது. மா- என்ற வேரில்
இருந்து மாலுதல். நூ- > நூலு-, ...
சிலம்பி நூல் அதன் வாய் உற்பவிக்கும் பொருள்.
அதுபோல மனிதச் சொற்களும் நூல் ஆகின்றன.
அதனைப் பன்னி/பின்னினால் பனுவல்.
சூத்திரம் = நூல்+பா என்று மொழிபெயர்க்கிறோம்.
 
 
 
வினைச்சொல்லில் இருந்துதான் பெயர் சொல் தோன்றி இருக்கணும். அப்படித்தானே தமிழ் இருக்கு
 
நுவல் - நூல்
 
நூல் என்பது முழுமை. சூத்திரம், பனுவல்  அதில் ஒரு பாகம்
 
”மூவர்கோவையும் மூஇளன்கோவையும்
பாடிய எந்தன் பனுவல் வாயால்
நும்மையும் பாடுக என்றனிர்”
எங்கனம் பாடுகேன்?
 
அவ்வை
 
இந்த அவ்வை சங்கத்து அவ்வை அல்ல. ஆனால் மூவேந்தர் காலத்திலேயே இன்னும் ஒரு அவ்வை வாழ்ந்துள்ளாள் என தெரிகிறது.
 
 
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

Reply all
Reply to author
Forward
0 new messages