எதைக் குறிககின்றது?

97 views
Skip to first unread message

Kandiah MURUGATHASAN

unread,
May 22, 2023, 5:16:36 AM5/22/23
to mint...@googlegroups.com
கண்ணீரும் கம்பலையுமாக என்பதில் கம்பலை என்பது எதைக் குறிககின்றது

தேமொழி

unread,
May 22, 2023, 12:59:02 PM5/22/23
to மின்தமிழ்
“கண்ணீரும் கம்பலையுமாக” என்பதில் “கம்பலை” என்பதன் பொருள் என்ன?
https://ta.quora.com/கண்ணீரும்-கம்பலையுமாக

///கண்ணீரும் , கம்பலையுமாக என்றால் → கண்ணீரோடு, தலைவிரி கோலத்தில், அரற்றியபடி/ குரலெடுத்துப் புலம்பியபடி , அலையும், விரையும் ( மதுரைவீதிகளில் , நீதி கேட்கச் செல்லும் கண்ணகிபோல்) என்று பொருளாகிறது.

மிக நெருக்கமான, நேரடிப்பொருளை கண்டறிந்து விட்டதாகவே நினைக்கிறேன் ..///

இவ்வாறு துரை சொல்வதே என் கருத்தும் கூட.   

விரிவாக அவர் தரும் விளக்கத்தை  https://ta.quora.com/கண்ணீரும்-கம்பலையுமாக    தளத்தில் படியுங்கள் 

Dr. Mrs. S. Sridas

unread,
May 22, 2023, 9:49:24 PM5/22/23
to mint...@googlegroups.com
வணக்கம், ஐயா.

இதனைப் பாருங்கள். விளக்கம் மேலும் வேண்டுமானால் தரப்படும்.

அகராதிகளின்படி கம்பலை என்னும் சொல், நடுக்கம், அச்சம், துன்பம், ஆரவாரம், ஓசை என்னும் பொருள் தரும். இப் பொருளில் சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளது. இன்றும் வழக்கில் உள்ளது.

தொல்காப்பியம் சொல்லதிகாரம், உரியியல்,

“உரிச் சொற் கிளவி விரிக்கும் காலை

இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி…

பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி …..”  - தொல்., சொல்லதிகாரம், உரியியல் – நூ.1

அதாவது, உரிச் சொல் – இசை, குறிப்பு, பண்பு ஆகியவற்றை உணர்த்த வருவதாகக் கூறப்படுகிறது.

“பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி” – என்பதற்கு உரை கண்ட சேனாவரையர் “அவை பெயரும் வினையும் போல ஈறு பற்றிப் பொருள் உணர்த்தலாகாமையின் வெளிப்படாதவற்றை வெளிப்பட்டவற்றோடு சார்த்தி தம்மை எடுத்தோதியே அப் பொருள் உணர்த்தப்படும்” என்று உரிச் சொல்லுக்கு பொது இலக்கணமும் ……. கூறப்படுகிறது” என்கிறார்.  

இதனை விளக்குவதானால், உரிச் சொல்லை அதற்கு முன்னும் பின்னும் வரும் சொற்களோடு இணைத்து, இடம் நோக்கிப் பொருள் கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறது எனலாம்.

உரியியலில் சொற் பொருள் விளக்கம் கொடுக்கும் தொல்காப்பியர்,

கம்பலை, சும்மை, கலியே, அழுங்கல்

என்றிவை நான்கும் அரவப் பொருள” – உரியியல் நூ.53.

இது ஒரு பொருளுக்கு உரிமை கொள்ளும் பல சொற்கள் என்னும் அடிப்படையில் நான்கு சொற்களுடன் இணைத்துக் கூறுப்படுகிறது. கம்பலை என்பது அரவப் பொருளில் வரும் என்கிறார். அதற்கு எடுத்துக்காட்டாக புறநானூறு 54 ஆம் பாடல் தரப்பட்டுள்ளது.

“எங்கோன் இருந்த கம்பலை மூதூர்..” . இப் பாடலில் கம்பலை “ஓசை” என்னும் பொருளில் ஆளப்பட்டுள்ளது. ஓசையையுடைய பழைய ஊர் என்பது பொருள். 

அன்புடன்

Dr. Mrs. S. Sridas

On Mon, May 22, 2023 at 5:16 AM Kandiah MURUGATHASAN <tamilsto...@gmail.com> wrote:
கண்ணீரும் கம்பலையுமாக என்பதில் கம்பலை என்பது எதைக் குறிககின்றது

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAH%2BSpBwGi179trL0LqLANKmiZ%2ByTGpb3%3Dxn3%2B%3DBS6ODZRRn9XQ%40mail.gmail.com.

Mohanarangan V Srirangam

unread,
May 23, 2023, 2:07:05 AM5/23/23
to mint...@googlegroups.com
கம்பலை - நடுக்கம் என்னும் பொருள் பொருத்தமாக இருக்கும் என்று படுகிறது.
குழந்தைகள் அழும்போது இது நன்கு வெளிப்படையாகத் தெரியும்.

***

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Gowri Vimalendran

unread,
May 25, 2023, 1:48:41 PM5/25/23
to mint...@googlegroups.com

கண்ணீரும் கம்பலையும் 

கம்பலை என்றால் துன்பம்

தாங்கமுடியாத இழப்பு ஏற்படும்போது…ஏற்படும் கடும் துயரம் 

கணவனை இழக்கும்போது

பிள்ளைகளை இழக்கும்போது 

நல்ல வாழ்ககை வாழ்ந்துபிள்ளைகளால் கைவிடப்பட்டு வயோதிபர் 

மடத்தில் இருக்கும்போது,

கேள்விக் குறியக இருக்கும் எதிர்கால வாழ்க்கையை எண்ணும்போது..

கால்களை இழந்து பிறரிடம் கையேந்தும்போது ,

குடும்பத்திலிருந்ந்து  விரட்டி விடும்போது,

எத்தனை எத்தனை

அத்தனையும் கூடுதலாக பெண்களுக்கே பொருந்துகிறது

பெண்களோடு சம்பந்தப்படுத்தி எழுதுவார்கள் ஆனால் பெண்களுகானதாக இல்லை

கண்ணீரும் கம்பலையுமாக அலைந்தான் என்பதைவிடஅலைந்தாள் என்பதே

பெரும்பாலும் காட்டப்படுகிறது.

Sent from my iPad

On 22 May 2023, at 14:46, Kandiah MURUGATHASAN <tamilsto...@gmail.com> wrote:

கண்ணீரும் கம்பலையுமாக என்பதில் கம்பலை என்பது எதைக் குறிககின்றது

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Kandiah MURUGATHASAN

unread,
May 31, 2023, 5:20:09 AM5/31/23
to mint...@googlegroups.com
சிறந்த விளக்கங்களைத் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.'நிர்க்கதியாய் .........' என்பதும் இதற்குப் பொருந்துமா?

INGERSOL

unread,
May 31, 2023, 10:01:15 AM5/31/23
to mint...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம்

எனது https://valluvarvallalarvattam.com/ இணையதளத்திலிருந்து மேலும் சில சான்றுகள் உங்கள் பார்வைக்காக

--------------------------
கம்பலை - யாழோசை
கம்பலை - பேசுதலால் எழும் ஒலி - வடமலை நிகண்டு - ஈசுரபாரதி
கம்பலை - கிலுகிலுப்பை - சித்த மருத்துவ அகராதி - சுந்தரராசன்
கம்பலை - மயக்கம் - அகராதி நிகண்டு - இரா. நாகசாமி
கம்பலை - துன்பம் - அகராதி நிகண்டு - இரா. நாகசாமி
கம்பலை - ஒலி - அகராதி நிகண்டு - இரா. நாகசாமி
கம்பலை - கிலுகிலுப்பை - மர இனப் பெயர்த் தொகுதி - பெ.மாதையன்
கம்பலை - அச்சம்
கம்பலை - ஆரவாரம்
கம்பலை - சச்சரவு
கம்பலை - துன்பம்

கம்பலை - நடுக்கம்
கம்பலை - யாழோசை
கம்பலை - நடுக்கம் - வடமலை நிகண்டு - ஈசுரபாரதி
கம்பலை - அச்சம் - வடமலை நிகண்டு - ஈசுரபாரதி
கம்பலை - துன்பம் - வடமலை நிகண்டு - ஈசுரபாரதி
கம்பலை - பேசுதலால் எழும் ஒலி - வடமலை நிகண்டு - ஈசுரபாரதி
அடங்காக் கம்பலை - கட்டுப்பாடற்றபேரோசை - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி - தமிழக அரசு
அடங்காக் கம்பலை - Uproar - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி - தமிழ்நாடு அரசு

------------------------------
நெல்லின் ஓதை அரிநர் கம்பலை மதுரைக்காஞ்சி → அடி110
நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை மதுரைக்காஞ்சி → அடி116
நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை மலைபடுகடாம் → அடி335
நாளங்காடி நனம் தலை கம்பலை மதுரைக்காஞ்சி → அடி430
விழைவு கொள் கம்பலை கடுப்ப பல உடன் மதுரைக்காஞ்சி → அடி526
அல்லங்காடி அழிதரு கம்பலை மதுரைக்காஞ்சி → அடி544
வேறுவேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி மதுரைக்காஞ்சி → அடி617
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் ( அகநானூறு → அடி 1581 → பாடல் : 86 → தலைப்பு : அகமலி உவகையள்‌ → வரி : 9 → பகுதி : களிற்றியானை நிரை → திணை : மருதம் → பாடியவர்‌ : நல்லாவூர் கிழார் )
களிறு கவர் கம்பலை போல ( அகநானூறு → அடி 1770 → பாடல் : 96 → தலைப்பு : பலர்‌ வாய்ப்பட்ட அலர்‌ → வரி : 17 → பகுதி : களிற்றியானை நிரை → திணை : மருதம் → பாடியவர்‌ : மருதம் )
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ ( அகநானூறு → அடி 3001 → பாடல் : 165 → தலைப்பு : அருமகளே என அழுமே → வரி : 2 → பகுதி : மணிமிடை பவளம் → திணை : பாலை → பாடியவர்‌ : பெயர் கிடைக்கவில்லை )
வம்ப புள்ளின் கம்பலை பெரும் தோடு ( அகநானூறு → அடி 3278 → பாடல் : 181 → தலைப்பு : என்‌ நிலைமை உரைப்பாய்‌ → வரி : 9 → பகுதி : மணிமிடை பவளம் → திணை : பாலை → பாடியவர்‌ : பரணர் )
கல்லென் கம்பலை செய்து அகன்றோரே ( அகநானூறு → அடி 4111 → பாடல் : 227 → தலைப்பு : நோயின்றி வாழ்க → வரி : 22 → பகுதி : மணிமிடை பவளம் → திணை : பாலை → பாடியவர்‌ : நக்கீரர் )
மலிதரு கம்பலை போல ( அகநானூறு → அடி 5289 → பாடல் : 296 → தலைப்பு : ஊரலரோ பெரிதாயிற்று → வரி : 13 → பகுதி : மணிமிடை பவளம் → திணை : மருதம் → பாடியவர்‌ : மதுரை பேராலவாயார் )
சாகாட்டாளர் கம்பலை அல்லது ( பதிற்றுப்பத்து → அடி 412 → பாடல் : 27 → பகுதி : மூன்றாம் பத்து → தொடர்ந்த குவளை! → வென்றிச் சிறப்பு → வஞ்சி நகர் → பாடப்பட்டோன் : இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் → பாடியவர் : பாலைக் கௌதமனார் )
துஞ்சா கம்பலை ( பரிபாடல் → அடி 695 → பாடல் : 8 → பாடப்பெற்றவை : செவ்வேள் → தலைப்பு : திருப்பரங்குன்றத்தின் அமைப்பும் சிறப்பும் → பாடியவர் நல்லந்துவனார் → பண் அமைத்தவர் மருத்துவன் நல்லச்சுதனார் → பண் பாலையாழ் )
கம்பலை சும்மை கலியே அழுங்கல் ( தொல்காப்பியம் → அடி 1823 → சொல்லதிகாரம் → பாடல் 51 → நூற்பா 832 → இயல் 8 → உரியியல் : சிறப்பிலக்கணம் → இயற்றியவர் : தொல்காப்பியர் )
வள முடி நடுபவர் வரம்பு இல் கம்பலை ( சீவகசிந்தாமணி → அடி 193 → பாடல் : 49 → நாட்டு வளம் → நாமகள் இலம்பகம் → ஆசிரியர் : திருத்தக்கதேவர் )
ஊர் சுடு விளக்கத்து அழு விளி கம்பலை (புறநானூறு → அடி 127 → பாடல் :7 → தலைப்பு : வளநாடும் வற்றிவிடும் → பாடலடி : 8 → பாடப்பட்டோன் : சோழன் கரிகாற் பெருவளத்தான் → திணை : வஞ்சி → துறை : கொற்ற → சிறப்பு / குறிப்பு : மழபுல வஞ்சியும் ஆம் → ஆசிரியர் : கருங்குழல் ஆதனார்)
எம் கோன் இருந்த கம்பலை மூதூர் (புறநானூறு → அடி 957 → பாடல் :54 → தலைப்பு : எளிதும் கடிதும் → பாடலடி : 1 → பாடப்பட்டோன் : சேரமான் குட்டுவன் கோதை. → திணை : வாகை → துறை : அரசவாகை → ஆசிரியர் : கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார்)
ஓடு கழல் கம்பலை கண்ட (புறநானூறு → அடி 1724 → பாடல் :120 → தலைப்பு : கம்பலை கண்ட நாடு → பாடலடி : 20 → பாடப்பட்டோன் : பெயர் தெரிந்திலது → திணை : பொதுவியல் → துறை : கையறு நிலை → ஆசிரியர் : கபிலர்)
வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை ( சிலப்பதிகாரம் → அடி 922 → பாடல் : 6 → தலைப்பு : கடலாடு காதை → அடி 161 → புகார்க் காண்டம் → அடி 922 → ஆசிரியர் : இளங்கோ அடிகள் )
அடங்கா கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப ( சிலப்பதிகாரம் → அடி 926 → பாடல் : 6 → தலைப்பு : கடலாடு காதை → அடி 165 → புகார்க் காண்டம் → அடி 926 → ஆசிரியர் : இளங்கோ அடிகள் )
கம்பலை மாக்கள் கணவனை தாம் காட்ட ( சிலப்பதிகாரம் → அடி 3140 → பாடல் : 19 → தலைப்பு : ஊர்சூழ் வரி → அடி 29 → மதுரைக் காண்டம் → அடி 1483 → ஆசிரியர் : இளங்கோ அடிகள் )
வம்ப மாக்கள் கம்பலை மூதூர் ( மணிமேகலை → அடி 371 → பாடல் : 3 மலர்வனம் புக்க காதை → பாடலடி 126 → ஆசிரியர் : சீத்தலைச் சாத்தனார் )
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின் ( மணிமேகலை → அடி 392 → பாடல் : 3 மலர்வனம் புக்க காதை → பாடலடி 147 → ஆசிரியர் : சீத்தலைச் சாத்தனார் )
டேங்கு கம்பலை யிரவினும் பகலினு மிகலி ( நீலகேசி → அடி 107 → பாடல் : 27 → தர்ம உரைச் சுருக்கம் → தருக்க நூல் → ஆசிரியர் : தெரியவில்லை )
காறு கொண்டவர் கம்பலை யென்றிவை (சூளாமணி → அடி 55 → பாடல் : 14 → தலைப்பு : முல்லை நிலம் → சருக்கம் : 1 → நாட்டுச் சருக்கம் → ஆசிரியர் : தோலாமொழித்தேவர் )
கரும்பிடு கவள மூட்டும் கம்பலை கலந்த காவின் (சூளாமணி → அடி 154 → பாடல் : 39 → தலைப்பு : அம்மதிற் புறத்தே அமைந்த யானைகட்டுமிட மாண்பு → சருக்கம் : 2 → நகரச் சருக்கம் → ஆசிரியர் : தோலாமொழித்தேவர் )
கம்பலை யாம்வினை யில்கறிக் கீபொருள் ( நீலகேசி → அடி 1373 → பாடல் : 338 → மொக்கல வாதச் சுருக்கம் → தருக்க நூல் → ஆசிரியர் : தெரியவில்லை )
----------------------

அடங்காக் கம்பலை அடங்காக் கம்பலை aṭaṅkākkampalai, பெ.. (n.)
கட்டுப்பாடற்றபேரோசை; uproar.
     “நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை உடங்கு இயைத்து ஒலிப்ப.” (சிலப்.6:164-5);.
     [அடங்காத+கம்பலை]
நித்தியகம்பலை  நித்தியகம்பலை nittiyagambalai, பெ. (n.)
   ஒயாச்சண்டை (யாழ்ப்.);; constant quarrelling.
     [நித்தியம் + கம்பலை.]
நில் → நிற்றல் → நித்தம் → நித்தியம். கும் → கம் → கம்பல் → கம்பலை = திரண்டெழும் பேரோசை, சண்டை.
ஊரிலி கம்பலை  ஊரிலி கம்பலைūriligambalai, பெ. (n.)
   ஊர்க்கலகம்; village quarrel, lumult, civil disorder. (W.);.
     [ஊர் → ஊரில் + கம்பலை. ஊரில் → ஊரிலி எனத்திரிந்தது கொச்சைத்திரிபு.]
கண்ணீரும் கம்பலையுமாய்  கண்ணீரும் கம்பலையுமாய் kannairurum-kambalaiyumay, வி.எ.(adv.)
   பெருந்துன்பத்தில் கண்ணீ ருடன் புலம்பலும் சேர்ந்தது; tearful, grief stricken.
கணவனை இழந்தவள் கண்ணீரும் கம்பலையுமாய் இருந்தாள்(உ.வ.);.
     [கண்ணீர் + உம் + கம்பலை + உம் + ஆய். ‘உம்’ எண்ணும்மை.]
கம்பலைகட்டு-தல் கம்பலைகட்டு-தல் kambalai-kattu-,    5 செ.கு.வி. (v.i.)
   கம்பலைப்படு; see kambalai-p-padu.
     [கம்பலை + கட்டு.]
கம்பலைப்படு-தல் கம்பலைப்படு-தல் kambalai-p-padu-,    20 செ.கு.வி (v.i.)
   சச்சரவு செய்தல்; to quarrel, raise a tumult.
     [கம்பலை + படு.]
கம்பலைமாரி கம்பலைமாரி kambalai-mari, பெ.(n.)
   1. வேடர் வணங்கும் ஒரு பெண் தெய்வம்; female demor worshipped especially by hunters.
   2. சீற்றங் கொண்டவள்; termagant, Kirago (செ.அக.);.
     [கம்பலை + மாரி. கம்பலை = ஆரவாரம், போர், போரூக்கம், சினம், மாரி, பெண் தெய்வம்.]
கம்பலை கம்பலை1 kambali, பெ.(n.)
   1. ஒலி; sound, noise, clamour, roar.
     “வம்பமாக்கள் கம்பலை முதூர்” (மணிமே.3:126);.
   2. யாழோசை (திவா.);; sound of a lute.
   3. மருதநிலம் (திவா.);; agriculturaltract.
   4. யானையின் பிளிறல்; trumpetingofanelephant.
     “களிறு விளிப்படுத்த கம்பலை வெறிஇ” (அகநா.165:2);.
   5. பறவைகள் பேரிரைச்சல்; noise of the birds.
     “வம்பப் புள்ளின் கம்பலை” (அகநா.181:9);.
   6. அலர்மொழி; the idle talk in a village about any two lovers.
     “கல் என் கம்பலை செய்து அகன்றோர்” (அகநா.227:22);.
   7. ஓசை; sound.
     “எங்கோனிருந்த கம்பலை மூதூர்” (புறநா.51:1);.
   8. சுழலோசை; roar.
     “சுழற்கம்பலை”(புறநா.120:20);.
     [கும் → கம் → கம்பல் → கம்பலை = திரண்டெழும் பேரோசை. யாழ்கள் பல இயைந்து எழுப்பத்தக்க இன்னோசை, இசை முழக்கம் அல்லும் பகலும் அறாத மருதநிலம்.]
 கம்பலை2 kambalai, பெ.(n.)
   1. நடுக்கம் (சூடா);; trembling: fuivering, quaking.
     “கண்ணீருங் கம்பலையுமாகி” (தாயு. நினைவொன்று.9);.
   2. அச்சம் (பிங்.);; fear. dread.
   3. துன்பம் (திவா.);; distress, suffering.
   4. சச்சரவு (வின்.);; uproar, tumult, quarrelling.
த. கம்பல → Skt. kampa.
     [கம் → கம்பல் → கம்பலை. கம்பல் = நடுக்கம்.]
 கம்பலை1 kambalai-,    4.செ.கு.வி.(v.i.)
   பேரொலிசெய்தல்; to roar, shout
     “கம்பலைத்தெழு காமுறு காளையர்”(தேவா.3,4.);.
து. கம்பியுனி (நடுங்குமாறு செய்);.
     [கம்பல் → கம்பலை.]
கம்பலை கம்பலை – (பெ) ஆரவாரம், din, clamour, roar
நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை – மது 116
வரிசையாக வருகின்ற படகின் மீன்பிடிப்போர் கரையில் இறங்கும் ஆராவார ஓசையும்,
கம்பல் கம்பல்1 kambaட, பெ.(n,)
   ஆடை; garment, clothing.
     “தறைந்த தலையுந் தன் கம்பலும்” (கலித்.65:6);.
     [கம் = நீர். கம் → கம்பல் = ஈரத்துணி.]
 கம்பல்2 kambal, பெ.(n.)
   பேரொலி (பெருங். இலாவாண. 2: 138);; roar, noise.
     [கும் → கம் → கம்பல் → கம்பலை = திரண்டெழும் பேரோசை முழங்கும் பேரோசை எழுப்பும் சங்கும், கம்பு அல்லது கம்பம் என வழங்கியது. ஐந்திர விடமொழிகளுள் ஒன்றான மராத்தியில் கம்பு எனுஞ்சொல் ஊதுசங்கைக் குறிக்கும். கண்ணிரும் கம்பலையுமாய் என்னும் வழக்கை ஒப்புநோக்குக.]
 கம்பல்3மீன் பிடிப்பதற்கு ஏதுவாகச் சிறுகுச்சிகளையும், மரத்து இலைகளையும் கொண்டு ஆற்றின் குறுக்கே எழுப்பப்படும் தடை; a small barrage of twigs and leaves of trees put up across a  canal for fishing. o
ம. கம்பல்
கம்பு → கம்பல்.]

இவண் மின்னச்சன்
தமிழன்.திரு. இங்கர்சால், நார்வே
வள்ளுவர் வள்ளலார் வட்டம்

சக்திவேலு கந்தசாமி

unread,
May 31, 2023, 10:07:20 PM5/31/23
to mint...@googlegroups.com
சொல்லின் பொருளை உணரும் போது உவகை மேலிடுகிறது.  மெதுவாக மீண்டும் படிக்க வேண்டும்.  தங்களாய்வை படிக்கத் தந்ததற்கு நன்றி.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
May 31, 2023, 11:04:30 PM5/31/23
to mint...@googlegroups.com
அருமையான சொற்பொருள் தொகுப்பு,
விரிவான மேற்கோள் பட்டியலுடன் மிகவும் பயனுள்ளது.
நன்றி ஐயா.

***

On Wed, May 31, 2023 at 7:31 PM INGERSOL <ingersol...@gmail.com> wrote:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jun 1, 2023, 3:33:31 AM6/1/23
to மின்தமிழ்

பல்வேறு கோணங்களும் தரவுகளும் பகிரப்பட்ட பயன்தரும் ஓர் இழை இது !!!
அனைவருக்கும் நன்றி 

Kandiah MURUGATHASAN

unread,
Jun 1, 2023, 6:28:52 AM6/1/23
to mint...@googlegroups.com
தேடல் தொடர்கின்றது தேடித் தந்து கொண்டிருக்கும் பெருந்தகைகளுக்கு மனமார்ந்த நன்றிகள்

தேமொழி

unread,
Jun 21, 2023, 3:59:34 AM6/21/23
to மின்தமிழ்
கம்பலை என்ற சொல்லுக்கு 
இன்று ஒரு விளக்கம் கேட்டேன் தோழர் 

Kandiah MURUGATHASAN

unread,
Jun 23, 2023, 12:14:18 PM6/23/23
to mint...@googlegroups.com
மிக நன்றி

K. Jeyapalan

unread,
Jun 26, 2023, 10:57:41 AM6/26/23
to மின்தமிழ்

நூல்: பெரும்பாண் ஆற்றுப்படை
அடி எண்: 260

மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்
மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து
அணங்கு உடை யாளி தாக்கலின் பல உடன்
கணம் சால் வேழம் கதழ்வு உற்று ஆஅங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலை தொறும்
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை மின்
வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ
தாழை முடித்து தருப்பை வேய்ந்த
Reply all
Reply to author
Forward
0 new messages