இந்து , சைவம்

138 views
Skip to first unread message

Gowri Vimalendran

unread,
Jul 28, 2013, 2:30:37 PM7/28/13
to mint...@googlegroups.com
இந்து,  சைவம், இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன...நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள் என்றால், சிலர் இந்து மதம் என்கிறார்கள், சிலர் சைவம் என்கிறார்கள். இதை விளக்க வேண்டுகிறேன். 

--
அன்புடன்
கெளரி விமலேந்திரன்

தேமொழி

unread,
Jul 28, 2013, 8:46:09 PM7/28/13
to mint...@googlegroups.com
எனக்கு ஆன்மீக ....தத்துவ வகையில் விளக்கமோ வேறுபாடோ தெரியவில்லை...


இது நான் கவனித்த வரையில் ......
தான் இந்து மதம் என்று சொல்பவர்கள் எல்லா மதமும் தன்  மதம் எனப்  பரந்த மனதுடன் அனைத்து மதங்களையும் ஏற்றுக் கொள்வார்கள்.
சைவம், வைணவம் ... பிரிவினைப்  பற்றியக் கவலை இல்லை, கொஞ்சம் கொஞ்சமாக பிற மதங்கள் என்பதையும் அப்படி இப்படி கொஞ்சம் மாற்றி அவற்றையும் இந்து மதத்தின் ஒரு சாரம் என்று சொல்லி விடுவார்கள்... 
வைதீக மதங்களில் இருந்து விலகிய புத்த மதத்தின் புத்தரையும் அன்புடனும் ஆதரவுடனும் திருமாலின் அவதாரம் என்று சொல்லி புத்த மதமும் இந்து மதத்தின் ஒரு சாரமே என்று சொல்வார்கள்.
மேரியம்மாவுக்கு மாரியம்மா போல புடவை கட்டி பொங்கல் பொங்கி வழி படுவார்கள். 


சைவர்கள் ஒருபடி மேலே சென்று தங்களுக்குப் பிடித்த பெரியோர்களுக்கெல்லாம் பட்டை போட்டுவிடுவார்கள்.














அன்புடன் 
..... தேமொழி 


 

seshadri sridharan

unread,
Jul 28, 2013, 10:07:21 PM7/28/13
to mint...@googlegroups.com
இந்து என்பது இசுலாம் கிறித்தவம் அல்லாத இந்நாட்டில் தோன்றிய முன்னோர் வழிபாடு இற்ந்தோர் வழிபாடு முதல் சைவம் வைணம், சக்தி வழிபாடு. சூரிய வழிபாடு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது.  இது ஆங்கிலர் ஆட்சி ஏற்பட்ட பின் தோன்றிய அணுகுமுறை. இதன் வழிகாட்டி விவேகானந்தர்.


சைவம் என்பது சிவன் உள்ளிட்ட முருகன் கணபதி சக்தியை மட்டும் வணக்குவதாக இப்போது கொள்ளப்படுகின்றது. வைணவர் இதில் அடங்காது.


சேசாத்திரி


2013/7/29 Gowri Vimalendran <gowri...@gmail.com>

Gopalan Venkataraman

unread,
Jul 29, 2013, 1:30:06 AM7/29/13
to mint...@googlegroups.com
To whomsoever it may concern. On seeing the question seeking clarification on the difference between Hindu and Saivam I give below my observation.

இந்து என்பது ஒரு மதம் அல்ல; அது ஒரு பண்டைய பண்பாட்டு வாழ்க்கை முறை. இதைத் தோற்றுவித்தவர் என்று எவருமில்லை. காலம் காலமாக பாரத தேசத்தில் மக்கள் வாழ்ந்த முறை அது; அவ்வப்போது இதில் மாற்றங்கள் உருவாகியிருந்தன. இந்த வாழ்க்கைத் தத்துவத்தை ஒருமுகப்படுத்தி இதற்கென்று ஆறு வெவ்வேறு வழிபாட்டு வழிமுறைகளை வகுத்த பெருமை ஆதி சங்கரருக்கு உண்டு. அவர்தான் "ஷண்மதங்களை" உருவாக்கியவர். ஷஷ்டி, ஷண் இதற்கு ஆறு என்பது பொருள். சைவம், வைணவம், சாக்தம், காணாபத்யம், கெளமாரம், செளரம் இவை முறையே சிவனை, விஷ்ணுவை, சக்தியை, கண்பதியை, முருகனை, சூரியனை வழிபடும் வழிகளாகும். காலவோட்டத்தில் தாங்கள் வேறு வேறு கடவுளை வணங்குபவர்களாக இருந்தாலும் ஒரே குறிக்கோள் நோக்கிச் செல்கிறோம் என்ற ஒற்றுமை உணர்வை மறந்து ஒருவருக்கொருவர் மோதல் போக்கைக் கையாண்டார்கள். சைவர்கள் வட கர்நாடகத்தில் லிங்காயத்துக்கள் என்று இருக்கிறார்கள். இவர்கள் கழுத்தில் உருத்திராட்சம் அணிவார்கள். தமிழகத்திலும் சைவ சித்தாந்தத்தைக் கடைபிடித்து சைவ இலக்கியங்கள், சிவ வழிபாடு செய்பவர்கள் உண்டு. இதில் எந்தவொரு கடுமையான கட்டுப்பாடும் கிடையாது எனினும் இந்தப் பிரிவுகள் அவரவர் விரும்பும் தெய்வத்தை வழிபடுவதற்காக ஏற்பட்ட பிரிவுகள்.


2013/7/29 seshadri sridharan <ssesh...@gmail.com>
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
VGopalan

Gowri Vimalendran

unread,
Jul 30, 2013, 12:27:38 PM7/30/13
to mint...@googlegroups.com
.. தேமொழிக்கும்,    சேசாத்திரி ஐயா அவர்களுக்கும், கோபாலன் ஐயா அவர்களுக்கும் நன்றிகள் பல. இந்து என்ற சொல் இடையில் புகுத்தப்பட்டது என்று ஒரு விழாவின் மேடையில் ஒருவர் பேசியதைக் கேட்டேன். எனக்கு அதில் உடன்பாடில்லை. சனாதன சமயம் (தர்மம்) தான் இந்து என்ற பெயரில் புகுந்தது என்பது சரியா.. இதிகாசக் காலங்களில் இந்து மதம் ஒன்றுதான் இருந்ததா? இந்து ஆரியர்களால் இந்து மதம் உருவானதா..இந்து சமவெளி சிந்து சமவெளியாக மாறியதா..அறிய வேண்டும்போல் இருக்கிறது.

உங்கள் அருமையான விளக்கங்களுக்கு மீண்டும் என் நன்றிகள்.  


2013/7/29 Gopalan Venkataraman <priv...@gmail.com>

DEV RAJ

unread,
Jul 30, 2013, 3:18:52 PM7/30/13
to mint...@googlegroups.com
On Tuesday, 30 July 2013 09:27:38 UTC-7, Gowri Vimalendran wrote:
சனாதன சமயம் (தர்மம்) தான் இந்து என்ற பெயரில் புகுந்தது என்பது சரியா.. இதிகாசக் காலங்களில் இந்து மதம் ஒன்றுதான் இருந்ததா? இந்து ஆரியர்களால் இந்து மதம் உருவானதா..இந்து சமவெளி சிந்து சமவெளியாக மாறியதா..அறிய வேண்டும்போல் இருக்கிறது.

 
உங்கள் ஐயப்பாடு நியாயமானதே.
 
சனாதனம் எனும் சொல் பலருக்கும் ஒவ்வாமை தருவது;
பாரதம் முழுவதும் ஒரே cultural zone என்பதால் 
ஒரு தொல் பண்பாட்டின் குறியீடாக அச்சொல்லை
ஏற்பதில் தவறில்லை. பல நம்பிக்கைகள், வழிபாட்டு
முறைகளுக்கு அதில் இடமுள்ளது. தொல்தமிழரின்
நடுகல் வழிபாட்டைப் பண்பாடு சார்ந்ததாகவும்
எடுத்துக் கொள்ளலாம். சமயக் கண்ணோட்டத்திற்கும்
அதில் இடமுள்ளது.

’சைவம்’ ஒரு முழுமைக்குள் அடங்கிய தனியான துறை 
என்றே மரபுசார் சைவமும் பேசுகிறது -
“வேதநெறி தழைத்தோங்க, மிகுசைவத் துறை விளங்க...”


அன்புடன்
தேவ்


seshadri sridharan

unread,
Jul 31, 2013, 1:15:39 AM7/31/13
to mint...@googlegroups.com
இந்து என்ற பெயரை இந்துகள் எவரும் இடவில்லை. அது அயலவர் இட்டபெயர். 8 -9ஆம் நூற்றண்டளவில் தான் பிராமணர்களிடையே சைவ வைணவ பிரிவினை வந்தது. புராணம் பரவலுராத போது இந்த பிரிவினை தமிழக பிராமணரிடையே இருக்கவில்லை. சனாதன தர்மம் என்பது வேதம் சாரந்த சமயநெறியை மட்டுமே குறிக்கும். இந்து என்பது இன்னும் விரிந்தமுறையில் நாக வழிபாடு, முன்னோர் வழிபாடு போன்ற வழிபாடுகளையும் உள்ளடக்கி அயலவரால் சுட்டப்பட்டது. 

1,500 ஆண்டுகள் முன் தான் புராணங்கள் தோன்றின எனவே இந்தியாவில் அதற்கு முன் சில வழிபாடுகள் இருந்துள்ளன அவை இன்றைய இந்து மதத்தில் இருந்து மாறுபட்டவை. ஆகவே இந்து மதம் ஒன்றே இருந்தது என்பது தவறு.     .  


சேசாத்திரி           

2013/7/30 Gowri Vimalendran <gowri...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages