அடையாளமாகும் அணிகலன் # 2

85 views
Skip to first unread message

Krishnan S

unread,
Jul 22, 2016, 2:32:51 AM7/22/16
to : minTamil@googlegroups.com, tamil_ulagam, thami...@googlegroups.com, vallamai, Uma Mageswari, puva...@icloud.com, Varadarajan Chinnapillai, thulasi vengadasalam, rajagopalan gopalan, Parvathy ramanathan, shum...@gmail.com, Krishnan Kutty Raman
 கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள பேரரசர் இராஜ ராஜனின் ஆணை. இதில் சிறப்பு என்ன வெனில் ஒவ்வொரு அணிகலனின் 
முழுவிபரமும் குறிக்கப்பட்டுள்ளது.நகையின் எடை, அது செய்யப்பட்ட தன்மை, அதில் பொருந்திருக்கும் முத்து, பவளம், 
வைரம் போன்றவற்றின் விபரம், அதன் மாதிரி ஆகிய எல்லாம் மிகத் துல்லியமாக எழுதப்பட்டிருகின்றன. எடுத்துக்காட்டாக
 பேரரசர் இராஜராஜன், ஒரு தெய்வத்திற்கு 16 தங்க வளையல்களை அளித்திருந்தார். அவை ஒவ்வொன்றின் எடை ஐந்து 
கழஞ்சி ஆறு மஞ்சடி. ஒவ்வொரு வளையலிலும் ஏறத்தாழ 316 முத்துக்கள் கோர்க்கப்பட்டிருந்தன அவற்றின் எடை 155 கல்.
 
​  ​இந்த பதினாறு வளையல்களின் மொத்த மதிப்பு 403 காசுகள். பேரரசரின் பட்டத்துஅரசி லோக மகாதேவி    13 வகை நகைகள் 
அளித்திருந்தார். அவற்றில் 471 முத்துக்களும் 20 பவளங்களும் இருந்தன. பேரரசர் மாத்திரம் கொடுத்திருந்த நகைகள் 42,000 
கழஞ்சுப் பொன்.அணிகலன்களில் பயன்படுத்தப்பட்ட தங்கம்,முத்து போன்றவை எப்படி எடை போடப்பட்டனஎன்ற செய்திகளும்
 தரப்பட்டுள்ளன். சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட '' குடிஞைக்கல்'' முறையில் ''ஆடவல்லான் மேரு விடங்கன் '' என்ற 
பெயர் கொண்ட கல்லாலும் எடை போடப்பட்டன. அணிகலன்களை நிறுக்கும்போது, நகைகளின் சரடு,சட்டம்,செப்பாணி,
அரக்கு ஆகியவையும் நகைகளின் பகுதிகளாகவே கொண்டு எடை போடப்பட்டன என்கின்றன கல்வெட்டுகள். தங்கத்தின் 
மாற்று அளவிடப்பட்டது பற்றிய சுவையான செய்தியும் காணப்படுகிறது. பேரரசர் அளித்த பொன் நகையில் தரத்திற்கு 
கால் மாற்று குறைவாகவே இருந்ததாம்.
 
 தண்டவாணிக்கு கால் கால் காந்திகை     ( கழுத்து அணி)
கடகம்,கொப்பு        ( காதணி)
மகுடம், குதம்பை    ( காதணி)
பட்டம்                   (மகுடம்)
பட்டக் காறை       ( தாலியை கோர்க்கும் பூண் நூல்)
சப்தசரி                 ( ஏழு சங்கிலிகள்)
சிடுக்கு,சூடகம்      (வளையல்)
பாத சாயலம்        ( கால் அணி)
சூரி சுட்டி             (நெற்றியில் அணிவது)
வீரப்பட்டம்          (தலையில் அணிவது)
வாளி                    (காதணி)
காறை கம்பி        (காதணி)
திருகு, மகரம்        (காதணி)
உருட்டு திரிசரம்   ( கழுத்து அணி)
தூக்கம்              (காதணி)
நயனம்                (கண்மூடி)
பொற்பூ,பொட்டு.
பாசமாலை
தோள் வளை
தாலி
தாலி மணிவடம்
தாழ்வடம்
தகடு
திரள்மணி வடம்
வளையல்
வடுக வாளி
வடம்
தோடு
திருவடிக்காறை
கால் வடம்
கால் மோதிரம்
சன்ன வடம் திருகு
கால் காறை
கைக் காறை மாலை
​ ​  பயன் படுத்தப்பட்ட முத்துக்களில் 23 வகையும் இரத்தினங்களில் 11 வகையும், வைரங்களில் 11 இருந்தன என்று தெரிகிறது.
 சில நகைளின் பயன்பாடு இப்போது வழக்கில் இல்லாது போய்விட்டது. இப்படி மிகுந்த இறை உணர்வுடனும் கலைச் 
சிந்தையுடனும் உருவாக்கப்பட்டபடிமங்களும் அவற்றிற்கு அணிவித்து அழகு பார்க்க அளிக்கப்பட்ட அணிகலன்களும் உலகின் 
எந்தக் கோடியில் உள்ளனவா... தெரியவில்லை.          
 
 ’’அணிகலன்
 "      பெண்கள் ஏன் நகைகளை குறிப்பாக தங்க நகைகளை,ஆபரணங்களை விரும்பி அணிகிறார்கள். முதலில் ஒரு பாலியல் 
ஆய்வாளர் சொல்வதைக் காண்போம் :--
    ஆதி காலம் தொட்டே பெண்களின் கவர்ச்சிரமான உடல் அம்சங்களை குறிப்பால் உணர்த்தி ஆண்களின் கவனத்தை கவர்ந்து 
அவர்களை மகிழ்விப்பதற்காக ஆடைஅணிகலன்களாக பெண்கள் ஆபரங்களை அணிகிறார்கள். பெண்கள் ஆபரணங்கள்அணிவது ஆண்களுக்குத்தான்.பெண்கள் அணியும் ஒட்டியாணம் அவர்களுடைய குறுகலான இடையை வெளிப்படுத்தும்.கழுத்தில் அணியும்
 சங்கிலி, நெக்லஸ் போன்றவை பெண்களின் மார்பழகை உயர்த்துவத்துடன் மார்பு மேட்டின் கவர்ச்சியையும் வெளிப்படுத்த
 உதவுகிறது. அதேபோல், காதணி கவர்ச்சிகரமான காதமைப்பையும், மூக்கு அணிகள் மூக்கின் அழகை எடுத்துக் காட்டவும் 
உதவுகிறது. பெண்களின் கவர்ச்சிமிக்க பகுதியில் கால் பாதங்கள் முக்கியமானவைகள் அதனால்தான் சிலம்பு, கொலுசு, மெட்டி 
இவற்றை அணிந்து ஆண்களின் கவனத்தை கவர்கிறார்கள்
 
 [ பழைய காலத்தில் பெண்களின் மிக முக்கிய கவர்ச்சி பகுதியை சுட்டிக்காட்ட இடையில் முன்புறமாக '' மேகலை '' என்ற 
ஆடையை அணிவார்கள்  இப்போது அதுவே ' ஸ்விம் ஸூட்' ஆகிவிட்டது]
      சரி.... இது பாலியல் ஆய்வார்கள் கருத்து.
 இயற்கையோடு இணைந்த நமது தமிழர் வாழ்க்கையில் இந்த அணிகலன எப்படி மருத்துவ ரீதியாக பயன்படுகிறது என்பதனை 
காண்போம்.
     நம்மவர்களின் ஆடை அணிகலன்கள் உடல் ¡£தியாக, மருத்துவம் சம்பந்தப்பட்டது.நம் முன்னோர்கள் பின்பற்றும் சம்பிரதாயச்
 செயல்களுக்கு எல்லாம் கண்டிப்பாக ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.
திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு மெட்டி அணிவிப்பதை காணலாம்.திருமணமான பெண்கள் கால் விரலில் மிஞ்சி அணிய
வேண்டும் என்பது காலங் காலமாய்ப்பின்பற்றப்படும் தமிழ் மக்களின் சம்பிராதாயச் செயலாகும். [பெருவிரலுக்கு அடுத்த விரலில்
 இந்த மெட்டி அணிவிக்கப்படுகிறது.]
     ஆனால் நாகரிகம் வளர்ந்து விட்ட இக்காலத்தில் திருமணமான பெண்கள் மிஞ்சி அணிய வெட்கப்படுகின்றனர். திருமணமானதற்கு
 அடையாளமாய் தாலி இருந்தால் மட்டும் போதும், மிஞ்சி தேவையில்லை என அவர்கள் எண்ணுகிறார்கள்.
   அந்த விரலிருந்து ஒரு நரம்பு கர்ப்பபைக்கு செல்கிறது.பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித
 தொடர்பு உள்ளது.கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும்   இருப்படைவதில்லை.
  பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை 
அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளி
யிலான மெட்டி அணிவித்தார்கள்.
காரணம், நடக்கும் இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை  பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் 
காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள்  உருவாக்கியிருக்கின்றார்கள்.
 
   கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷயம்.
    பொதுவாக, உடல் திராக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்ளை விட மிஞ்சி விடக்கூடாது  
என்பதற்குதான்  இந்த கொலுசு.உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்குஏறுகிறது.
வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது.
 [  சில விவாகரமான விஷயங்கள்  * இலை மறை கனியாக* இருக்க வேண்டும் என்பதற்காக   
இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்]
       அரைநாண்க் கொடி[அரணாக்கொடி] உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக,கீழ்லிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு 
வரும்போது [ + / - ] சம நிலைக்கு கொநுச் வர இந்த அரைநாண்க்கொடி உதவுகிறது.
        மகாபாரத்தில் திருடாஸ்தரன் தன் மகன் து¡¢யோதனன் போருக்கு போகுமுன் தலையிருந்து தொட்டு ஆசீர்வாதம் செய்து, 
வழங்கி வரும்போது இடுப்புக்கு வந்தவுடன துரியோதனன் கட்டியிருந்த அரைநாண்க் கொடியால் இடுப்புக்கு கீழ் ஆசீர்வாதம் 
வழங்க முடியவில்லை. பின் துரியோதனன் தொடை பிளந்து இறந்த கதை எல்லோரும் அறிந்ததே.
   இந்த அரைநாண்க் கொடி உடல் பாதுகாப்புக்கும் பயன்படுகிறது. மூக்கு குத்துவது, காது குத்துவது
[   துளையிடுவது] உடலில் உள்ள வாயுவை [காற்றை] வெளியேற்றுவதற்கு.  [ release ]  கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள்  
ஆண்களுக்கு வலது கையும் இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு 
 இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.
 
  ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு  தியானம் செய்வார்கள். 
இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் 
வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். 
அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது  பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும்.
 
 அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு
 மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி 
பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை 
அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை
 நன்றாக செயல் படவைக்கும். இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும்.
வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு 
அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை,
 வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.
     பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல் சில நரம்புகள் நாசி
துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும்.
ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால்,
 அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல
, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். 
சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது.
  பரு​வ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது,தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.
 இந்த வாயுக்களை வெளிக்கொண்ர  ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது.மூக்கு குத்துவதால் பெண்களுக்கு

இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக 
இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை 
ஒரு நிலைப்படுத்துகிறது.மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.
 
  ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும்
 ரிஷிகளும் கூறியிருக்கின்றனர். தங்கத்தை மிக உயர்வாக நம்மவர்கள். உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக 
வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் 
 உடையவர்களாகத் திகழ முடியும்.
  தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல்வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் 
அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.
தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):-
 
1.      தலையணி:-
                     தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை,
                     அரசிலை,பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.
 
2.      காதணி :-
                     தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை,
                     கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல்.
 
3.      கழுத்தணிகள்:-
                     கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை,
                     நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை,
                     மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம்,
                     மலர்ச்சரம், கண்டசரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.
 
4.      புய அணிகலன்கள்:--
                     கொந்திக்காய்.
 
5.      கை அணிகலன்:-
                     காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு.
 
6.      கைவிரல் அணிகலன்கள்:-
                     சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப்பூ.
 
7.      கால் அணிகலன்கள்:--
                     மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு.
 
8.      கால்விரல் அணிகள்:- 
                           கான் மோதிரம், காலாழி, தாழ், செறி, நல்லணி,
                           பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி.
 
9.      ஆண்களின் அணிகலன்கள் :-
                           வீரக்கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைஞாண்,
                           பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம்,
                           கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம்,
                           முத்து வடம், கடுக்கண், குண்டலம் -- ஆகியனவாகும்.
 
(குறிப்பு உதவி)..நன்றி: தமிழ் நாட்டு அணிகலன், சாத்தான் குளம் அ. இராகவன்)
 
 

🍀அன்பொடு,

கிருஷ்ணன்,
சிங்கை

Inline images 2 தமிழ் எமது மொழி
      இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 22, 2016, 11:32:46 AM7/22/16
to mintamil, tamil_ulagam, தமிழாயம், vallamai, Uma Mageswari, puva...@icloud.com, Varadarajan Chinnapillai, thulasi vengadasalam, rajagopalan gopalan, Parvathy ramanathan, shum...@gmail.com, Krishnan Kutty Raman
வணக்கம் ஐயா.
அணிகலன்கள் பற்றிய தொகுப்பு அருமை.
நல்லதொரு ஆவணச் செய்தி.
நன்றி ஐயா.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Oru Arizonan

unread,
Jul 22, 2016, 2:48:40 PM7/22/16
to mintamil, tamil_ulagam, thami...@googlegroups.com, vallamai, Uma Mageswari, puva...@icloud.com, Varadarajan Chinnapillai, thulasi vengadasalam, rajagopalan gopalan, Parvathy ramanathan, shum...@gmail.com, Krishnan Kutty Raman
அருமை, கிருஷ்ணன் அவர்களே!
அன்புடன்,
ஒரு அரிசோனன் 
Reply all
Reply to author
Forward
0 new messages