இந்தியாவும் மனிதத் தோற்ற, வளர்ச்சியும்!

216 views
Skip to first unread message

N. Kannan

unread,
Dec 2, 2012, 7:02:57 AM12/2/12
to மின்தமிழ்
அன்புள்ள நண்பர்களே:

இவ்விழையை ஆங்கிலத்தில் தொடங்கவே முதலில் ஆசைப்பட்டேன், ஆயினும்
இவ்விழையில் பேசப்போகும் விஷயங்கள் தவறான புரிதலுடைய சில தமிழக
போக்குகளுக்கு விடையாக அமையும் என்பதால் தமிழில் எழுதத்துணிந்தேன்.
இவ்விழையில் சில துல்லிய புரிதலுக்கு அவ்வப்போது ஆங்கிலமும்
பயன்படுத்தப்படும்.

இவ்விழையின் பிரதான தரவுகள் பேராசிரியர் பிரியதர்ஷன் (Dr. Premendra
Priyadarshi) அவர்கள் ஆற்றிய உரையை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன.
நானறிந்தவரையில் மனிதத்தோற்றம் இந்தியாவில் அமைந்திருக்கும் வாய்ப்பு
குறித்த ஒரு தெளிவான உரையை நான் இதற்கு முன் கேட்டதில்லை. ஆய்வு பூர்வமான
உரையிது. அறிவியற் சங்கங்கள் அலசி வெளியிட்ட (peer reviewed) அறிக்கைகளை
ஆதாரமாகக் கொண்டு அவர் தன் கருத்தை முன்மொழிகிறார். எனவே கொஞ்சம்
காலமெடுத்து (60 நிமிடங்களுக்கு மேல்) இந்த ஆங்கில உரையை தாங்கள் கேட்க
வேண்டுமென வேண்டுகிறேன். இது முழுக்க, முழுக்க அறிவியல் உரை. எனவெ துறை
அறிவு இல்லாதோருக்கு இதைப்புரிந்து கொள்ள சிரமமிருக்கலாம். முடிந்தவரை
இங்கு விளங்கிக்கொள்ள முயலலாம். அறிவியல், குதிரையின் பாய்ச்சலில்
போய்க்கொண்டு இருக்கிறது. கால்நடையாக வருவோர்க்கு புரிதலில்
சிரமமிருக்கும்.

http://www.youtube.com/watch?v=1l7VsR-dW-c&feature=plcp

இந்த உரை தொடர்பான என் கருத்துக்களை முன் வைக்கிறேன் அடுத்த இடுகையில்.

நா.கண்ணன்

பிகு: பேராசிரியர் பிரியதர்ஷன் அவர்களின் உரைத்தொடுப்பு கொடுத்த
மின்தமிழ் அறிஞர் திரு.தேவராஜன் அவர்களுக்கு நன்றி.

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

s.bala subramani B+ve

unread,
Dec 2, 2012, 8:20:51 AM12/2/12
to mint...@googlegroups.com

About the Speaker:

Dr Premendra Priyadarshi, MBBS, MD, FRCP, a Fellow of the Royal College of Physicians of Edinburgh, and member of a large number of professional bodies like Indian Medical Association, Association of Physicians of India etc. He also cleared the Civil Services Examination of 1986 and served the Pondicherry Police Service for a short while.

Besides science, he has thoroughly pursued history, philosophy, religions, anthropology, political science and linguistics as his personal interest. He has written many books on Indology viz. India's Contributions to the West(2004), Zero is Not the Only Story (2007), The First Civilization of the World (2011) and Vishva Sabhyata ka Udbhava aur Prasar (2012). Focus of Dr. Priyadarshi's research is on correcting the distortions in Indian historiography.





நன்றி  கண்ணன் அவர்களே 

மிகவும் நன்றாக அறிவியல் முறையில் செய்து இருக்கிறார் வாழ்த்துக்கள் 

ஆனால் இன்னும் பல தரவுகள் அவரிடம் சேரவில்லை , 

குறிப்பாக மானிடவியல் களஆய்வுகள்  , புவியின்  சுழற்சி மாறுதல்கள்  ,பனி ஊழிகள ( இன்னும் முழுமை தேவை ) ,கடற்கரை கடற்கரை மாறுதல்கள் ,ஆற்றின் திசை மாறுதல்கள் , தெற்கில் இருந்து வடக்கு நோக்கிய பயணம் ,தெற்கில் இருந்து வடக்கு நோக்கிய பயணம் ,மொழிகள் தோற்றம் அதன் பரவல்கள் , monolithic and polygenies பற்றிய இன்னும் தீவீரமான ஆய்வுகள் 

மருத்துவர் ப்ரியதர்ஷி அவர்களை தொடர்பு கொண்டு தமிழகமும் வர வைப்போம் ,எங்களிடம் உள்ள அணைந்து தரவுகளையும் கொடுப்போம் 

இதையே தான் நாங்கள் பல பழங்கற்கால இடங்களுக்கு சென்று வந்ததில் ,

 மற்றும் இது வரை இந்தியாவில் நடந்த ஆய்வுகளையும் ,நண்பர் பிச்சப்பன் ,தங்கராஜ் அவர்களின் ஆய்வுகளை முழுமையாக அறிந்தவன் என்ற முறையிலும் 

தடயவியல் மருத்துவர் சந்திரசேகரன் ,சாந்திபப்பு ,அகிலேஷ் ,துளசிராமன் செல்வகுமார்,ராம்ஜி, சதாசிவ பிரதான்  மற்றும் பல மானுடிவியல் அறிஞர்களின் தொடர்பில் சொல்லி வருகின்றேன் 

கடல் நீரோட்டவழி  தொடர்புகளை பற்றி அதிகம் பேசவில்லை , பழங் கற்கால மக்கள் ஆமைகளை தெரிந்து வைத்து உள்ளார்கள் என்றும் தெரிகிறது 

என் நண்பர் ராஜேந்திரன் 2001 ஆய்வு செய்த புதுவை குழந்தை மண்டை ஓடு பற்றியும் சொல்லியும் இருக்கிறார் 

இன்னும் நிறைய அவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் 


உங்கள் மடல் கண்டதில் இருந்து 

 பழங்கற்கால மனிதர்களின் கடல் பரவல்களையும் ,கடலில் மூழ்கி உள்ள தீவுகளையும் நிலங்களையும் ,தமிழகத்தின் பழங்கற்கால ஆய்வுகளில் ,இன்னும் அதிகமாய் ஈடுபாடு கொண்டு சக ஆய்வாளர்களை சேர்த்துக்கொண்டு 

என்னால் முடியாது என்று சொன்னவற்றை செய்து காண்பிக்க முயலுவேன் 

முடியும் 

அதற்கான வழிமுறைகளையும் கையாளுவேன் 

மக்கள் மத்தியில் வாழ்ந்து பல நிகழ்வுகளை பார்த்து விட்டேன் 

இனி ஆய்வின் ஊடே மட்டும் வாழ்வேன் 

இலக்கு நோக்கி 

எதிலும் என் கவனம் இனி செல்லாது , உதவிக்கு என் அமைப்பு உள்ளது 

N. Kannan

unread,
Dec 2, 2012, 9:02:06 AM12/2/12
to mint...@googlegroups.com
அன்பின் பாலு:

உங்களை மனதில் வைத்துதான் இவ்விழையை ஆரம்பித்தேன். அவர் உரையைக் கேட்கும் போது உங்கள் களப்பணியை எண்ணிக்கொண்டேன். நண்பர் சேசாத்திரி, அவரது குரு மற்றும் பலர் இணைந்தால்தான் நமக்கு முழுமையான புரிதல் கிடைக்கும் என்பதை நம்புகிறேன்.

இவ்விழையை மெல்ல எடுத்துச் செல்லுகிறேன். பல விஷயங்கள் பேச உள்ளது. நீங்கள் (பி) பாசிடிவ் என்பது ரத்ததில் ஊறி இருக்கிறது :-)

வாழ்க, வளமுடன்.

நா.கண்ணன்

2012/12/2 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

N. Kannan

unread,
Dec 2, 2012, 9:41:20 AM12/2/12
to mint...@googlegroups.com
இந்தியாவில் மனிதன் தோன்றியிருக்க வேண்டும் என்று நம்புவதற்கான
முஸ்தீபுகள் (பூர்வபக்ஷம்) என்ன? இது வெறும் பழம் பெருமை பேசலா? என்றால்
இல்லை என்பேன். தொன்று தொட்டு இந்தியாவில் மானுடம் பற்றிய தொன்மங்கள்
இருந்திருக்கின்றன, உலகு தழுவிய ஒரு பார்வை பண்டைக் காலத்திலேயே
இருந்திருக்கிறது. பெரும்பாலான நமது காவியங்கள், பிற இலக்கியங்கள் உலகு
என்று தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கின்றன. இந்தியா ஒரு தீவாக
இருந்திருந்தால் இத்தகைய மனப்போக்கு இருந்திருக்காது. ஒரு தொன்மையான
கண்டத்தில்தான் காலம் கடக்கும் எண்ணங்கள் ஆழ்மன நினைவுகளாகப் பதிந்து
கிடக்கும். இன்றைய கருதுகோள்கள் ஆப்பிரிக்காவை மனித இனத்தின் பிறப்பிடம்
என்கின்றன. ஆயின் அங்கு இத்தகைய தொன்மனப்பதிவுகள் கிடையாது. அது பற்றிய
இலக்கியங்கள், தொன்மங்கள் கிடையாது. தொன்மையான மொழிகள், அதன் கிளை
மொழிகள், இலக்கண, இலக்கியங்கள் கிடையாது. இதற்கு ‘ஆப்பிரிக்காவிற்கு
வெளியே’ (out of Africa) எல்லாம் போய்விட்டன என்பதே பதில். அதற்கு மாறாக
இந்தியாவின் மிகத்தொன்மையான வேதங்கள் பிரபஞ்ச ஆக்கம் பற்றிப்பேசுகின்றன,
‘மனு’ எனும் அரசன் முதலாக மானுடம் தோன்றி விரிந்ததைப் பற்றிப்
பேசுகின்றன. சரஸ்வதி மகாலில் கிடைத்த பழம் ஓலைச்சுவடிகளில் முழு மானிட
வரலாறு பற்றிய காலக்கணிப்பு கொண்ட நூல்கள் கிடைக்கின்றன (விரைவில்
வெளியிடுகிறேன்). இது வெறும் coincidence அல்ல. ஒரு தொடர்ச்சியின்
அறுபட்ட துண்டுகளை நாம் காண்பதாகவே கொள்ள வேண்டும்.

வேத காலத்திலிருந்து இன்றுவரை நமது நினைவுகள் அறுபடாமல் உள்ளதை பாரதியின்
அழகிய கவிதை சுட்டும்:

தொன்று நிகழ்ந்த தனைத்து முனைந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தவள்
என்றுணராத இயல்பினளா மெங்கள் தாய்

எப்படி இவரால் இப்படி ஆணித்தரமாகச் சொல்லமுடிகிறது என்றால் அது நமது
ஆழ்மன குமுகாய நினைவின் பலத்தால் என்று உறுதியாகச் சொல்லலாம். எமது
தோற்றம் என்று நிகழ்ந்தது என்பதறியமுடியாததாய் இருக்கிறது என்று சொல்வது
நேற்றுப்பிறந்த சமுதாயங்களால் முடியுமோ? இதுவெறும் புகழுரை அல்ல என்று
எப்படித் தீர்மானிக்கலாமென்றால், பாரதி வெற்றுப் பழம் பெருமை பேசுவதை
எள்ளுபவன்.

மறைவாக நமக்குள்ளே பழம்கதைகள்
சொல்வதில் ஓர் மகிமை இல்லை
திறமான புலமை எனில் வெளிநாட்டோர்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்.

என்று செப்புகிறான். ஆயின் நாம் இதுவரை செய்யாத ஒன்று நம் புலமைத்திறத்தை
உலகம் மெச்சும்பட்டி சொல்லவில்லை (அல்லது தெரியவில்லை). எப்போதும்
மறைவாகப் பழம்பெருமை பேசித்திரிந்தோம். நம் மரபை, பழமையை போற்றினோமில்லை,
புரிந்து கொண்டோமில்லை. நமக்குள்ளே பகை வளர்த்து ஆடிக்குடைத்தை உடைத்தவன்
கதையாக நம் வாழ்வை வைத்திருந்தோம். நாம் பல்லக்குத்தூக்கிகளாய்
அடிமைப்பட்டுப் போனதால்...

பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமம் அது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!

எனக்கேலி செய்யும் அளவிற்கு ஆகிப்போனோம். ஆனால் இறையருளால் அவ்விருள்
மெல்லப்போய் வருகிறது.

வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்து இருக்கும் குருடர் எல்லாம்
விழி பெற்றுப் பதவி கொள்வார்,

உள்ளத்தில் கொஞ்சம் ஒளி வந்திருக்கிறது. அறிவியல் கைவசப்பட்டிருக்கிறது.
அதைச்செப்பும் திறனும் வளர்ந்து வருகிறது.

மக்கள் கணக்கும் வழங்கும் மொழியும்
மிக்குள பண்பையும் விளக்குகின்ற
கற்பனைத் திறத்தைக் காணுவீர்

என்று நம் பண்பாடு குறித்த பிரக்ஞை வளர்ந்து வருகிறது. எதற்காக
விண்ணையளக்கும் அலகுகளும், கடுகைத்துளைதேழ் கடலைப் புகுத்தும் நுண்கணித
அறிவும் (அலகும்) நம்மிடம் இருக்கின்றன என்ற கேள்வி வந்திருக்கிறது. ஒரு
மாபல்லியின் கற்பதிவு (fossil) சிறிதான வால்நுணி பார்த்து
கண்டுபிடிக்கப்படுவதைப் போல், இக்கேள்விகள் நம்மை இந்தியச் சிந்தனை மரபை,
நம் பண்டைய அறிவியலை அறியத்தூண்டுகின்றன.

இந்தப் பின்புலத்தில்தான் நாம் டாக்டர் பிரியதர்ஷியின் உரையைக் கேட்டு
விழிப்புற வேண்டும். அவரது உரையில் ஓரிடத்திலும் மிகை இல்லை.
தவறைத்திருத்தும் போதும் கனிவாகவே பேசுகிறார். ஆனால், தனது கருத்தை ஆழமான
தரவுகள் மூலமே நிருவுகிறார்.

சரி, இனி மேலே செல்வோம். அவரது உரையின் highlights என்னவென்று பார்ப்போம்

நா.கண்ணன்

DEV RAJ

unread,
Dec 2, 2012, 10:28:30 AM12/2/12
to மின்தமிழ்
Very glad that link in some other thread got the right attention;
Hope this 'll eliminate misconceptions from our mind


Dev

s.bala subramani B+ve

unread,
Dec 2, 2012, 10:41:40 AM12/2/12
to mint...@googlegroups.com

இன்னும்   பல  நாட்கள்  பல  முறைகள் இந்த காணொளியை பார்க்க வேண்டும் ,

அதில்விடப்பட்டு இருக்கும் அறிவியல் ஆய்வு தரவுகளை சேர்த்துக்கொண்டு ,

ஏற்கனவே அவரின் கவனத்தில்  வராத பல இதர தரவுகளையும் 

,மானிடவியல்  ஆய்வுகளை பல வருடங்களாய் செய்து வரும் சாந்திபாப்பு , பேராசிரியர்  ரவி கோரி செட்டார் ,ராஜன் ,செல்வகுமார் ,துளசி ராமன் ,வினோத் நோட்டியால் காந்தி வாரியார் போன்ற பலரையும் மருத்துவத்துறையின் நண்பர்களையும் ,ஒன்றிணைக்க வேண்டும் 

தீபகற்ப  தென் இந்திய மக்களின்  வாழ்க்கை கூட முழுமையாக ஆய்வு செய்ய பட வேண்டும் 

s.bala subramani B+ve

unread,
Dec 2, 2012, 10:50:11 AM12/2/12
to mint...@googlegroups.com





வேதகாலம் என்று நாம் வாய்மொழி கதைகளை  வைத்து நம்புவது அதன் காலநிலை 

தொன்மங்களின் கால நிலை 

பிரளயங்களின் கால நிலைகள் 

கடைசி பனி ஊழி ,இடையில் வந்த சிறு பனி ஊழிகள் 

எரிகற்கள் விழுந்த காலங்கள் 

நிலநடுக்கம் வந்த நாட்கள் 

கடல் கோள்கள் வந்த காலம் 

இன்றும் உள்ள பல  நாட்டார் வழக்கியல் கதைகள் 

நான் ஏற்கனவே என் ஆய்விற்காக பல தரவுகள் சேர்த்து வைத்து இருக்கிறேன் 

இன்னும் நிறைய பேச வேண்டும் அறிவியல் பார்வையில் 

N. Kannan

unread,
Dec 2, 2012, 11:56:53 AM12/2/12
to mint...@googlegroups.com
அந்த உரையின் முக்கிய கணிப்புகளை கவனிக்கும் முன், நாம் இங்கு அடிக்கடி
பேசும் peer review பற்றிக் கொஞ்சம் சிந்திப்போம். இந்த peer review
நமக்குப் புதிதா என்றால்? இல்லை. நாம் எப்படித் தொலைந்து போன ஒரு
நாகரீகத்தைத் தேடிக்கொண்டு இருக்கிறோமோ, அது போல்
தேடிக்கொண்டிருக்கிறோம், ‘தரக்கட்டுப்பாடு’ என்பதை. மனிதன்
நாடோடியாகத்திரிந்த காலத்தில் தரக்கட்டுப்பாடு தேவையில்லாதிருந்தது.
ஆனால் மனிதன் குமுகாய உயிரியாக மாற்றமுற்ற பின், குமுகாயம் ஒழுங்காக
நடக்க, முன்னேற ‘தரக்கட்டுப்பாடு’ மிக முக்கியம். நினைத்துப்பாருங்கள்,
3,84,400 கிலோ மீட்டருக்கு அப்பாலிருக்கும் நிலவிற்கு மனிதனை அனுப்பும்
போது எல்லாக் கணக்கும் தரக்கட்டுப்பாட்டுக்கு வர வேண்டும், செய்யும்
விண்கலம், அதை நடத்துநர் பயிற்சி என்று எல்லாமே மிக உயர்ந்த தரத்தில்
இருந்தால்தான், மனிதனை நிலவில் நிறுத்த முடியும். எதில் பிழைத்தாலும்
மரணம், அவமானம், கேவலம் என்றாகிவிடும். இல்லையா?

தரக்கட்டுப்பாடு, கணித வரைமுறைகளுக்கு ஆட்படுத்தப்படும் தரவு
(statistics), மீட்டெடுத்தல் (reproducibility), எங்கும் எவரும் நம்
கணிப்பை சரி பார்க்கும் தரம் இவையே ஒருவரது அறிவியலை ஊர்ஜிதம் செய்கிறது.
இவையில்லாமல் பேசப்படும் அனைத்தும் வெறும் ஊகங்கள்தான். அறிவியலுக்குள்
வாராது. இப்படி நாம் அறிவியல் தரவுகள் சேகரித்து, அதை வைத்து நம்
முன்மொழிவுகளை, நமது அவதானங்களை அறிவியல் கட்டுரையாக்கி சர்வதேச அறிவியல்
பார்வைக்கு வைத்து (கருத்தரங்குகளில்), பின் உயர்தர அறிவியல் சஞ்சிகையில்
வெளியிட முனைய வேண்டும். பொதுவாக நாம் செய்யும் கணிதமோ, அறிவியலோ நம்மைப்
பொறுத்தவரை நம்பத்தக்கதாய், உண்மை என்றே தோன்றும். ஆயினும் ‘கற்றது கைமண்
அளவு’. நமது பிழைகள் நம் கண்ணிற்குத் தெரியாது. அதை மற்றவர்
கண்காணிக்கும் போதே தென்படும். இப்படியானதொரு செயல்முறைதான் peer review
என்பது. இப்படி peer review செய்யப்பட்ட அறிவியல் கட்டுரைகள் நமபகத்தன்மை
பெறுகின்றன.

அறிவியல் என்றும் முற்றும் முடிவான முடிவு என்று எதையும்
முன்வைப்பதில்லை. ‘இது சாத்தியம்’ என்றே சொல்லும். காரணம், ‘கற்றது கைமண்
அளவு’ எனும் நிலையே.

சரி, நமக்கு இப்படியானதொரு துறை சார் கட்டுப்பாட்டு நிறுவனமோ, peer
review வோ இருந்ததா என்றால். ஆம் என்பதே பதில். ஆனால் அதைக் கோட்டை
விட்டு விட்டு பழம் கதைகள் பேசிக்கொண்டிருக்கிறோம். தமிழ் எனும் போதே
நாம் சங்கம் பற்றிப் பேசுகிறோம். சங்கம் என்றால் அகாதமி என்று பொருள்.
துறை சார் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் என்று பொருள். நமது
தரக்கட்டுப்பாடு எவ்வளவு இறுக்கமாக இருந்திருக்கிறது என்றால்,
‘நெற்றிக்கண் திறப்பினும், குற்றம், குற்றமே!’ என்று சொல்லும் அளவிற்கு.
'எங்குமுளன் கண்ணன்’ என்று சொன்னால் தூணைப் பிளந்து இங்குள்ளானா? காட்டு!
எனும் அளவிற்கு. ‘ஆழ்கின்றான் ஆழியான்’ என்றால், அது உண்மையா? என்று
அனல்வாதம், புனல்வாதம் வைக்கும் அளவிற்கு (நம்மாழ்வார் சரிதம்). இப்படி
இருந்த சமூகம் இன்று தானமாகக் கொடுக்கும் சேலையில் இரண்டு முழம்
உருவக்காத்திருக்கிறது. எந்தச் செயல்பாட்டிலும் ஊழல், தரமின்மை என்று
சீரழிந்து போய் இருக்கும் போது இங்கு அறிவியலில் தரத்தை எதிர்பார்க்க
முடியுமா?

அறிவியல் எனும் செயல்பாடு சுயகட்டுப்பாடு இருந்தால் மட்டுமே நடைபெறும்.
அங்கு திறனாய்வு, கடும் விமர்சனம் என்பது நாளாந்திர நடவடிக்கை.
விஞ்ஞானிகள் எப்போதும் விழிப்பாக, கிரிட்டிக்கலாக இருக்க வேண்டும். தனது
தரவையே ஆயிரம் முறை பார்த்து, பின்னும் சந்தேகம் கொள்ள வேண்டும்.
அப்படிச் செய்தால்தான் உண்மையின் ஒளி தெரியவரும். நம் மக்களுக்கு காலில்
விழுந்து, வானளவில் புகழ்ந்து, வாயார வாழ்த்தி அடிமை செய்தால் மட்டுமே
பிடிக்கும். இதுவொரு நோய். புகழ்ந்தல் ஒருவனை எளிதில் வீழ்த்திவிடும்.
விமர்சனங்களே உயிரோடு வைத்திருக்கும்.

இதை மனதில் வைத்துக்கொண்டுதான் நாம் நமது ஆய்வு அறிவியல் பாற்பட்டதா,
இல்லை வெறும் arm chair speculation ஆ என்று தீர்மானிக்க வேண்டும்.

இன்னும் வரும்..

நா.கண்ணன்

Prakash Sugumaran

unread,
Dec 2, 2012, 2:01:40 PM12/2/12
to mint...@googlegroups.com

மதிப்புக்கு உரிய பாலு ஐயா.. மேற்கத்திய கல்வியின் எச்சங்களில்  ஒருவருடன் புரிதல் ஏற்பட உங்கள் பொன்னான நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். அவர்களது தேவைகளான பன்னாட்டு பட்டங்களுக்கும், டாலர்களுக்கும் அவர்கள் வேலை செய்கிறார்கள். செய்து கொண்டே இருப்பார்கள்..



2012/12/2 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

Prakash Sugumaran

unread,
Dec 2, 2012, 2:05:35 PM12/2/12
to mint...@googlegroups.com
இந்த கண்ணன் ஐயா நல்லவரா, கெட்டவரா ? என்பதே பிடிபட மாட்டேங்குது :))

2012/12/3 Prakash Sugumaran <praka...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Dec 2, 2012, 2:07:20 PM12/2/12
to mint...@googlegroups.com
பாலுவுக்கு எப்படியெல்லாம் உதவமுடியும் என்று நாங்கள் கலங்கி நிற்கும் போது, இம்மாதிரியான பொத்தாம் பொதுவான அதுவும் தவறான அறிவுரை கூறி குழப்பவேண்டாம், பிரகாஷ். இது என் தாழ்மையான வேண்டுகோள்.
இன்னம்பூரான்

2012/12/2 Prakash Sugumaran <praka...@gmail.com>

Prakash Sugumaran

unread,
Dec 2, 2012, 2:07:46 PM12/2/12
to mint...@googlegroups.com

இந்த கண்ணன் ஐயா நல்லவரா, கெட்டவரா ? என்பதே பிடிபட மாட்டேங்குது:)) 

அவரையே கேட்டுட வேண்டியதுதான் போல :))



2012/12/3 Prakash Sugumaran <praka...@gmail.com>

மதிப்புக்கு உரிய பாலு ஐயா.. மேற்கத்திய கல்வியின் எச்சங்களில்  ஒருவருடன் புரிதல் ஏற்பட உங்கள் பொன்னான நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். அவர்களது தேவைகளான பன்னாட்டு பட்டங்களுக்கும், டாலர்களுக்கும் அவர்கள் வேலை செய்கிறார்கள். செய்து கொண்டே இருப்பார்கள்..

Prakash Sugumaran

unread,
Dec 2, 2012, 2:12:38 PM12/2/12
to mint...@googlegroups.com
இ ஐயா.. வணக்கம். வேரை இழந்த பின் பிடிமானம் கிடைக்க அல்லாடி கொடியை பிடிப்பது போல சிலர் இருக்கலாம். ஆணி வேருக்கு அக்கவலை தேவை இல்லை. பாலு ஆணி வேர். அவருக்கு கொடிகளின் பிடிமானம் தேவை இல்லை என்பது என் கருத்து.


2012/12/3 Innamburan Innamburan <innam...@gmail.com>

N. Kannan

unread,
Dec 2, 2012, 2:17:47 PM12/2/12
to mint...@googlegroups.com
2012/12/2 Prakash Sugumaran <praka...@gmail.com>:

> இந்த கண்ணன் ஐயா நல்லவரா, கெட்டவரா ? என்பதே பிடிபட மாட்டேங்குது:))
>
> அவரையே கேட்டுட வேண்டியதுதான் போல :))
>

இப்பத்தான் கதையே ஆரம்பிச்சுருக்கு. அதுள்ளாற முடிவு கட்டிட்டா எப்புடி? ;-)

க.>

N. Kannan

unread,
Dec 2, 2012, 2:20:15 PM12/2/12
to mint...@googlegroups.com
தயவு செய்து இதை தனிமனிதப்படுத்த வேண்டாம். நான் பொதுவாகப் பேசி
வருகிறேன். பாலு சொன்ன விஷயங்களுக்குப் பின்னால் வருவேன். நடையின் போக்கை
திசை திருப்ப வேண்டாம். நன்றி.

நா.கண்ணன்

2012/12/2 Prakash Sugumaran <praka...@gmail.com>:

N. Kannan

unread,
Dec 2, 2012, 3:09:05 PM12/2/12
to mint...@googlegroups.com
நாம் அறிவியலுக்கு தரக்கட்டுப்பாடு தேவையென்று பார்த்தோம். அது தமிழ்
மண்ணில் வேரூன்றி இருந்தது என்றும் சொன்னோம். எவ்வளவு துல்லியமான
தரக்கட்டுப்பாடு இருந்திருந்தால் அணுவை தச கூறு போடும் அலகுகள் பற்றி
இவர்கள் சிந்தித்து இருக்க வேண்டும்? நாம் மில்லி மீட்டர் பிழையில் தவறு
செய்தாலே பூட்டைச் சாவி திறக்காது. ஆனால் இவர்கள் மில்லிமீட்டருக்கு பல
அலகுகள் குறைவான பருமாணத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். அதில் பிழை
நேர்ந்தால் என்னாகும்? தெரியவில்லை. ஏதோ கற்றையியல் சூத்திரம் போல்
படுகிறது (பட்டாம்பூச்சியின் சிறகை ஒடித்தால் பருவ காலங்கள் மாறும் எனும்
கற்றையியல் போலும்). அது என்ன அறிவியல்? அது என்னவாயிற்று? தெரியவில்லை.
ஆனால் அந்த அறிவியலின் எச்சங்கள் இன்றும் காணக்கூடியதாக இருப்பது,
மாபல்லியின் வால்நுணியைப் பார்த்தது போல்தான் உள்ளது. என்னவாயிற்று அந்த
அறிவியல்?

கொரியாவில் இது பற்றி எனது மராட்டிய நண்பர், பொறிஞர் திரு.ஹரியுடன்
பேசிக்கொண்டிருந்த போது அவர் சிறு பிள்ளையாக இருந்த போது வீட்டின்
அருகேயுள்ள வயக்காட்டின் குடிசையில் வாழும் யோகி ஒருவர் மெல்ல புவிவிசையை
வென்று சில அடிகள் மேலே நகர்ந்து அமர்திருந்ததைப் பார்த்திருக்கிறார்.
ஹரிக்கு என்னிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் சாம்சுங்
கம்பெனியின் டெபுடி டிரைக்டராக இருந்தார். அவர் பயணிக்க கம்பனி
ஹெலிகாப்டர் கொடுத்திருந்தது. எனவே என்னை இம்ப்ரஸ் செய்ய அவர்
சொல்லவில்லை என்பது திண்ணம். திரு வி.கவின் சரிதத்தில் ஒரு பறவை யோகியார்
பற்றி வருவதாக இக்குழுமத்தில் பேசி இருக்கிறோம். Anti gravity
எனப்பேசப்படும் கற்றையியல் விஷயம் என்பது உறுதி.

ஓலைச்சுவடிகள் தேடிய காலத்தில் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது இந்த
இந்திய ஞானம்தான். காஞ்சிப்பெரியவர்கள் இருவரின் அன்பினாலும்,
ஆசியினாலும் மேரு நூலகத்திலிருக்கும் சமிஸ்கிருத ஓலைச்சுவடிகளைக் காணும்
வாய்ப்புக்கிட்டியது. அதிலொரு ஓலைச்சுவடி பிரளயகலக நாமளி பற்றியது.
ஊழிப்பெருக்கைப் பற்றிய பேச்சு சங்கப்பாடல்களிலும் (பரிபாடல்), பின்னால்
திருவாய்மொழி போன்ற பனுவல்களிலும், சைவசித்தாந்த மறைகளிலும், வள்ளலாரின்
அருள்மறைகளிலும் இருப்பதை அறிந்தேன். எனவே தமிழ், சமிஸ்கிருதம் என்ற
பாகுபாடெல்லாம் இல்லாமல் இந்த கற்றையியல் இந்தியா முழுவதும் அறியப்பட்டு
இருந்தது தெரிய வந்தது.

சரஸ்வதி மஹால் நூலகத்தில் நூலகராக இருக்கும் ஒரு வைணவரைக் கண்டேன். அவர்
வைகானஸ சாஸ்திரம் பற்றிய ஒரு நூலை வெளியிட்டு இருந்தார். அப்போது இது
பற்றிப் பேசிய போது அவர் எப்படி ஆகம விதிகளின் படி கோயில் காரியங்கள்
செய்ய வேண்டும் என்று சொல்லி வரும் போது பூமி (பூமாதேவி)யின் பிரதிமை
ஒன்றை முதலில் உருவாக்க வேண்டும். அது கொஞ்சம் சாய்ந்து இருக்குமாறு
அமைக்க வேண்டுமென்று சொன்னார். அதாவது பூமி தனது அச்சில் சில பாகைகள்
சாய்ந்து சுழல்வதை நம்மவர் அறிந்தே இருந்திருக்கின்றனர். இந்த ஞானம்
நாடோடிகளாக மத்திய ஆசியாவில் ஒட்டகம் ஓட்டிய ஆரியர்கள் தந்தது என்று
வெள்ளைக் காலனிக்காரர்கள் சொல்லலாம். ஆனால் நம் சாஸ்திரத்தில் ஒரு
இடத்தில் கூட இதற்கான சாத்தியம் இல்லை. இதை டாக்டர் பிரியதர்சி தெளிவாக
விளக்குகிறார். வேளாண் குமுகத்தில்தான் நாளைய சாப்பாட்டைப்பற்றிக் கவலை
இல்லாத போதுதான் கலை, இலக்கியம், அறிவியல் பேச முடியும். நாளைய உணவிற்கு
உத்திரவாதமில்லாத (ஆரிய) நாடோடிகளால் இவ்வளவு உயர்ந்த விஞ்ஞானம் பேச
முடியாது. எனவே அறிவியல் எங்கிருந்தோ இந்த மண்ணிற்கு வந்தது என்ற
பொய்மையை நாம் இனிமேலும் நம்ப வேண்டிய அவசியமில்லை.

நாம் நம் மொழிவாரி அரசியலுக்காக இன்று ஆரியம், திராவிடமென்று பேசி
இருக்கின்ற கொஞ்ச நஞ்ச பகுத்தறிவையும் மழுங்கடித்துக்கொண்டிருக்கும் போது
சமகால ஜீனோமிக் அறிவியல், இந்தியர்கள் ஒரே மரபைச் சேர்ந்தவர்கள் என்று
தெளிவாகச் சொல்வதை டாக்டர் பிரியதர்சி வற்புறுத்துகிறார். நாம் எவ்வளவு
தூரம் காலனித்துவ அரசியல் கலந்த அறிவியலை நம்புகிறோமெனில் லண்டனில் ஒரு
ஈழத்தவர் நாங்கள் இந்திய வம்சாவளியே அல்ல, சுமேரிய வம்சாவளியினர்
என்றார். சுமேரியர்கள் என்றால் நீங்கள் ஈராக்கியரா என்றால் ‘ஆம்’
என்கிறார். அந்த அளவு ஆரிய விஷம் அவருக்கு ஏற்றப்பட்டுள்ளதை அறிந்தேன்.
இது அறிவியல் விழிப்புள்ள ஒரு சமூகம் எடுக்க வேண்டிய நிலைப்பாடல்ல.

சங்கம் தொட்டு தமிழக சிந்தனை இந்திய முழுமை பற்றியே பேசி வந்துள்ளது.
இங்குள்ள சான்றோர்களைக் கேட்டால் வேண்டிய அளவு இலக்கியத்
தரவுகளைத்தருவர். தமிழனின் பங்களிப்பு என்பது எப்போதும் இந்தியப்
பொதுமையை முன்வைத்தே எழுந்திருக்கிறது. டாக்டர் பிரியதர்சியின் பேச்சில்
ஏன் அதிகமாக தமிழக பங்களிப்பு பற்றிய பேச்சில்லை என்றால், அவர்
அறிந்திருக்கவில்லை, அது பற்றிய ஒரு இந்தியப்புரிதலை இதுவரை நாம்
உருவாக்கவில்லை என்று பொருள். இந்தியக் கடலோடிகள் பற்றி அவர் பேசுகிறார்.
பழைய இந்திய அறிவியலில் தமிழகத்தின் பங்கு என்ன என்று நாம் தான்
விளக்கிச் சொல்ல வேண்டும். இதில் நண்பர் பாலுவின் நிலைப்பாடு
வரவேற்கத்தக்கது.

மிக அருகில் இருக்கும் கேரளம். அந்த மொழியில் நம் தேவார, திருவாசகம்
மொழிபெயர்க்கப்படவில்லை, அதற்கான உரைகள் கிடைக்கவில்லை என்று ஆற்றூர்
இரவிவர்மா என்னிடம் ஒருமுறை சொன்னார் (15 வருடங்களுக்கு முன்). இது யார்
தவறு? நம்மிடம் புலமை உள்ளது என்பதை வெளிநாட்டார் போற்ற வேண்டுமெனில்
அவர்கள் மொழியில் அதை அறியச் செய்ய வேண்டியது நமது கடமை இல்லையா? இந்திய
அளவில் ஆழ்வார்களின் கீர்த்தியைப் பரப்பிய ஸ்ரீஇராமானுஜர்
சமிஸ்கிருத்தில் எழுதி இருக்கிறார் என்று பெருமைப்படாமல் நம் சிற்றறிவு
அவர் தமிழில் எழுதவில்லை என்று குறை கூறுகிறது. நமது பரந்த நோக்கு
சமகாலத்தில் மிகவும் குறுகிவிட்டது. இந்திய முழுமைக்கும் ஆசி கூறிய
கடைசிக்கவியாக பாரதி இருப்பது நமக்கு வெட்கமில்லையா?

ஒருகாலத்தில் இந்தியா முழுவதும் பல்கிப்பெருகி இருந்த ஓர் அறிவியல்
தொடர்ந்த 400, 500 வருட அரசியல் குழப்பத்தில், மாற்றாரிடம் அடிமைப்பட்ட
காலங்களில் எங்கோ காணாமல் போய்விட்டது. அடிமைப்படுத்தியவரின் அறிவியலே
சிறந்தது எனும் எண்ணப்போக்கும் வளர்ந்தது. இதை மிகத்தெளிவாக டாக்டர்
பிரியதர்சி செப்புகிறார். இன்று நிலைபெற்றுவிட்ட Out of Africa theory
அசைக்க வேண்டுமெனில், அவர்கள் செய்யும் அறிவியல் கொண்டுதான்
நிறுவமுடியும். ஒரே அறிவியல் மொழியில்தான் பேசமுடியும். அதைச் செய்யும்
காலம் வந்துவிட்டது எனும் அறைகூவலாக டாக்டர் பிரியதர்சியின் பேச்சை நான்
காண்கிறேன்.

மேலும் வரும்..

Innamburan Innamburan

unread,
Dec 2, 2012, 4:18:55 PM12/2/12
to mint...@googlegroups.com
திரு வி.கவின் சரிதத்தில் ஒரு பறவை யோகியார்
பற்றி வருவதாக இக்குழுமத்தில் பேசி இருக்கிறோம். Anti gravity
எனப்பேசப்படும் கற்றையியல் விஷயம் என்பது உறுதி.
~ அவருக்கு திருவான்மியூரில் ஒரு கோயில் இருக்கிறது.
ஸ்வாமி விவேகானந்தரின் சென்னை வரவேற்பு கமிட்டியிலிருந்த
டா. நஞ்சுண்டராவ் அவர்களுக்கு அவர் பிரத்யக்ஷம். மைலாப்ப்பூர் மாடவீதியில்
உள்ள அவருடைய வீட்டு மொட்டைமாடியில் வந்து இறங்குவாராம், அந்த
சக்கரை அம்மா. அந்த கோயிலை டா. நஞ்சுண்டராவ் அவர்களின் வம்சாவளி, அவர் நியமித்த
அறக்கட்டளை மூலம் நிர்வக்கிறது. நன்கொடைகளை அவர்கள் ஏற்பதில்லை.

இன்னம்பூரான்
02 12 2012

செல்வன்

unread,
Dec 2, 2012, 4:56:56 PM12/2/12
to mint...@googlegroups.com
விடியோவை பார்த்தேன்.
 
அவுட் ஆஃப் ஆபிரிக்கா தியரி உருவாக காரணம் ஆபிரிக்காவில் ஏராளமாக கிடைத்த தொன்மையான எலும்புகூடுகள்.
 

ஆபிரிக்காவில் கிடைத்ததில் மிக தொன்மையான மனித ஆதிமூதாதையின் எலும்புகூடு 7 மில்லியன் ஆண்டுக்கு முற்பட்டது. பரிணாம வளர்ச்சியின் பல்வேறு காலகட்டங்களை விளக்கும் எலும்புபடிமங்கள் அனைத்தும் ஆபிரிக்காவில் தான் கிடைக்கின்றன. மிக, மிக பிற்பட்ட்ட காலத்தில் அதாவது 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புபடிவங்கள் தான் ஆசியாவில் கிடைக்க துவங்குகின்றன. அதுவும் சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில்

ஆதிமனிதனின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் ஒரே ஒரு எலும்புபடிமம் கூட இந்தியாவில் கிடைத்தது இல்லை.

அப்படி ஒரு தொன்மையான எலும்படிமம் இந்தியாவில் கிடைத்தால் மருத்துவர் ப்ரியதர்ஷனின் தியரிக்கு வலுவான ஆதாரம் கிட்டும்.

--
செல்வன்


N. Ganesan

unread,
Dec 2, 2012, 5:02:48 PM12/2/12
to மின்தமிழ், vall...@googlegroups.com

On Dec 2, 3:56 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> விடியோவை பார்த்தேன்.
>
> அவுட் ஆஃப் ஆபிரிக்கா தியரி உருவாக காரணம் ஆபிரிக்காவில் ஏராளமாக கிடைத்த
> தொன்மையான எலும்புகூடுகள்.
>
> http://en.wikipedia.org/wiki/List_of_human_evolution_fossils
>
> ஆபிரிக்காவில் கிடைத்ததில் மிக தொன்மையான மனித ஆதிமூதாதையின் எலும்புகூடு 7
> மில்லியன் ஆண்டுக்கு முற்பட்டது. பரிணாம வளர்ச்சியின் பல்வேறு காலகட்டங்களை
> விளக்கும் எலும்புபடிமங்கள் அனைத்தும் ஆபிரிக்காவில் தான் கிடைக்கின்றன. மிக,
> மிக பிற்பட்ட்ட காலத்தில் அதாவது 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய
> எலும்புபடிவங்கள் தான் ஆசியாவில் கிடைக்க துவங்குகின்றன. அதுவும் சீனா,
> இந்தோனேசியா போன்ற நாடுகளில்
>
> ஆதிமனிதனின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் ஒரே ஒரு எலும்புபடிமம் கூட
> இந்தியாவில் கிடைத்தது இல்லை.
>
> அப்படி ஒரு தொன்மையான எலும்படிமம் இந்தியாவில் கிடைத்தால் மருத்துவர்
> ப்ரியதர்ஷனின் தியரிக்கு வலுவான ஆதாரம் கிட்டும்.
>

நன்றி, திரு. செல்வன்,

தேவ் பரிந்துரைக்கும் மருத்துவர் ப்ரியதர்சி கொடுத்துள்ள குதிரை முத்திரை
சிந்து சம்வெளியினது அல்ல.

பிற பின்.

அன்புடன்,
நா. கணேசன்

> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>

> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

செல்வன்

unread,
Dec 2, 2012, 5:18:27 PM12/2/12
to mintamil
Inline image 1
ஆதிமனிதன் (ஹோமோ எரெக்டஸ்) எலும்பு படிமங்கள் தேதிவாரியாக கிடைத்த தகவ்ல்களை "evolution and human histiry" எனும் இந்த நூலில் இருந்து எடுத்தேன்.
 
தொன்மையான கற்கருவிகள். எலும்புபடிமங்கள் அனைத்தும் கிடைத்த இடம் ஆபிரிக்கா. 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கருவிகள் கென்யாவில் கிடைத்துள்ளன. பாகிஸ்தானில் 1.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கற்கருவிகள் கிடைத்துள்ளன.
 
 

 
--
செல்வன்


homo erectus spread.jpg

வேந்தன் அரசு

unread,
Dec 2, 2012, 6:20:09 PM12/2/12
to vall...@googlegroups.com, மின்தமிழ்


2 டிசம்பர், 2012 5:02 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Dec 2, 3:56 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> விடியோவை பார்த்தேன்.
>
> அவுட் ஆஃப் ஆபிரிக்கா தியரி உருவாக காரணம் ஆபிரிக்காவில் ஏராளமாக கிடைத்த
> தொன்மையான எலும்புகூடுகள்.
>
> http://en.wikipedia.org/wiki/List_of_human_evolution_fossils
>
> ஆபிரிக்காவில் கிடைத்ததில் மிக தொன்மையான மனித ஆதிமூதாதையின் எலும்புகூடு 7
> மில்லியன் ஆண்டுக்கு முற்பட்டது. பரிணாம வளர்ச்சியின் பல்வேறு காலகட்டங்களை
> விளக்கும் எலும்புபடிமங்கள் அனைத்தும் ஆபிரிக்காவில் தான் கிடைக்கின்றன. மிக,
> மிக பிற்பட்ட்ட காலத்தில் அதாவது 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய
> எலும்புபடிவங்கள் தான் ஆசியாவில் கிடைக்க துவங்குகின்றன. அதுவும் சீனா,
> இந்தோனேசியா போன்ற நாடுகளில்

இந்தியாவுக்கு வந்தபோது குரங்கர்கள் மனிதர்களாகி விட்டனர். அவன் பிணங்களை இடுகாடு அல்லது சுடுகாடுகளில் இட்டான்.

அதனால் எலும்பு படிமங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்க இயலாது.
 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

s.bala subramani B+ve

unread,
Dec 2, 2012, 9:32:08 PM12/2/12
to mint...@googlegroups.com
இறந்தவர்களின் உடலை இடுவதும் சுடுவதும் பின்னர் காலங்களிளிருந்தநிலை 

இறந்தவர் உடலை ஊர் எல்லைகளில் அப்படியே உட்கார வைத்து அந்த உடலில் பின்னர் எலும்பு மட்டுமே இருந்து ,அந்த எலும்பை வாங்கும் பழக்கம் ,இன்றும் சில தொல் பழங்குடிகளிடம் உள்ளது 

நம்முடிய குழப்பமே கால நிலைகளில் பிற கால நிலையை இணைப்பது தான் 


ஒவ்வொரு ஆயிரம் வருடமாக பகுத்து செல்வது நலம் 

இங்கும் பல பெரிய கட்டிடங்களுக்காக தோண்டும் போது எலும்புகள் கிடைக்கின்றன , போலீஸ் பயத்தில் மக்கள் சொல்வது இல்லை 

மண் அடுக்கியல் பார்க்க பல இடங்களுக்கு செல்லும் போது பார்த்து இருக்கிறேன் 

கண்ணன் அவர்களே இந்த தொடர் அருமையாக செல்கிறது ,தொடருங்கள் 


செல்வன்

unread,
Dec 2, 2012, 9:48:38 PM12/2/12
to mint...@googlegroups.com
2012/12/2 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
கண்ணன் அவர்களே இந்த தொடர் அருமையாக செல்கிறது ,தொடருங்கள்


I agree. Dr. Kannan is giving a great explanation about the epistemology of peer reviewed science. It would be of great benefit to future research scholars in Tamil speaking world.

What I meant to say was that we should fill the gaps in discovery of fossils. When we have ancient fossils in Indonesia and China why not in India? We have to search for ancient fossils or stone tools in India that might be a proof of prof. Priyadharshan's theory.



--
செல்வன்


Tthamizth Tthenee

unread,
Dec 2, 2012, 9:55:47 PM12/2/12
to mint...@googlegroups.com
"டா. நஞ்சுண்டராவ் அவர்களுக்கு அவர் பிரத்யக்ஷம். மைலாப்ப்பூர் மாடவீதியில்
உள்ள அவருடைய வீட்டு மொட்டைமாடியில் வந்து இறங்குவாராம், அந்த
சக்கரை அம்மா"

 

மேற்கண்ட   சர்க்கரையம்மா அவர்களைப் பற்றி ஏற்கெனவே  நான் மின் தமிழில் விவரமாக எழுதி உள்ளேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


2012/12/3 Innamburan Innamburan <innam...@gmail.com>

s.bala subramani B+ve

unread,
Dec 2, 2012, 9:56:14 PM12/2/12
to mint...@googlegroups.com
இதை இன்னும் பலரின் துணைக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் 

குடியம் அதிரம்பாக்கம்  குகை மனிதர்களை பற்றி ஆய்வு செய்பவர்கள் தமிழக எல்லையை தாண்டுவதில்லை 

இதை பொதுவாக தான் பார்க்கவேண்டும் , இதில் மாநில எல்லைகள் வரக்கூடாது ,

மனிதர்கள் பேசிய வட்டார மொழிகள் பரவிய விதம் நிலம் கடல் என்று பகுக்க வேண்டும் 

பழவேற்காடு ஏரியின் கரைகளில் பல தடயங்கள் கிடைக்கின்றான் ,அடையாறு ஆற்றின் வட்டாரத்தில் நிறைய தடயங்கள் கிடைக்கின்றன 

கடலியலும்  தொல் பழங்குடிகளும் ,கடல் நீரோட்டங்களும் அதை வழிக்காட்டிய ஆமைகளும் ஓங்கில் களும்  என் ஆய்வில் சரி பங்கு வகிக்கிறார்கள் 


டாக்டர் பிரியதர்சியின் பேச்சில்
ஏன் அதிகமாக தமிழக பங்களிப்பு பற்றிய பேச்சில்லை என்றால், அவர்
அறிந்திருக்கவில்லை,
 
பற்றிய ஒரு இந்தியப்புரிதலை இதுவரை நாம்

உருவாக்கவில்லை என்று பொருள்.

s.bala subramani B+ve

unread,
Dec 2, 2012, 9:58:22 PM12/2/12
to mint...@googlegroups.com
மிக சிலரே இதை பற்றி ஆய்வு செய்து வருகிறோம் செல்வன் 

நான் பல நூறு மக்களிடம் இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தேன் ,

சில மக்கள் என்  சொல் கேட்டு இயங்கவும் தொடங்கி விட்டார்கள் 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/

Nagarajan Vadivel

unread,
Dec 2, 2012, 10:03:55 PM12/2/12
to மின்தமிழ்
இந்தக் கட்டுரையை முழுதும் புரிந்து கருத்துச் சொல்லக் காலம் பிடிக்கும்.  ஆயினும் சமகால சமநிலை அறிஞர்கள் சேர்த்தியம் அமைத்து ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் ஆய்வுச் சஞ்சிகைகளை உருவாக்கி ஒரு புலம் வளரும் வகை தொகை அக்குழுமத்தில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளும் தரத்தில் வெளியிடுவதற்கும் அதற்கு முன்னர் இருந்த கற்றோர் மற்ற சான்றோர் அவையில் அவர்முன் தோன்றி அறிக்கை வெளியிட்டு அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை தரம் உள்ளது என்று நிறுவியதற்கும் நிறைய வேறுபாடுண்டு

தமிழ்ச் சங்கம் என்பது கற்றோர் நிறைந்த அவையாக நின்று தரமான சிந்தனைகளை ஏற்றுக்கொண்ட நிறுவனமா அல்லது நீங்கள் குறிப்பிடும் சமகாலச் சமநிலை அறிஞர்கள் ஒன்று கூடி கண்னுக்குப் புலப்படாத கல்லூரியாக இயங்கினார்களா என்பதை முதலில் தெளிவு படுத்த வேண்டும்

அறிவு வளர்ச்சிக்கான சமூகவியல் அறிவு வளர்ச்சிக்கான குமுக இயக்கங்கள வகைப் படுத்தும்போது Learned Socities என்றும்  Peer based invisible colleges என்றும் இரு நிலைப்படுத்திப் பார்ப்பதைக் கருத்தில் கொண்டு தமிழனின் சங்கம் வைத்து மொழி வளர்த்த பாங்கை நிறுவ வேண்டும்

தற்கால அமைப்பு முறையை முற்கால அமைப்புக்கு ஒப்பு நோக்குவது சரியான தீர்வை அளிக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து

இன்றைய தரவுகளைக்கொண்டு ஏற்கனவே நிறுவப்பட்ட நியதிகளைத் தகவில என்று புறம் தள்ளும்போது புதிய நியதிகள் தோன்றும்.   புதிய தரவுகளைக் கொண்டு பழைய நியதிகளை நிலை நிறுத்த முயற்சிப்பது ஆராய்ச்சி அன்று

நாகராசன்


rajam

unread,
Dec 2, 2012, 10:08:15 PM12/2/12
to mint...@googlegroups.com, s.bala subramani B+ve
On Dec 2, 2012, at 6:32 PM, s.bala subramani B+ve wrote:

> இறந்தவர்களின் உடலை
> இடுவதும் சுடுவதும்
> பின்னர்
> காலங்களிளிருந்தநிலை


"பின்னர் காலம்" என்று
எதைக் குறிக்கிறீர்கள்
என்று தெரியவில்லை.


மணிமேகலைக் காப்பியத்தின்
"சக்கரவாளக்கோட்டம்
உரைத்த காதை"யை
அறிந்திருப்பீர்கள்.
அந்தக் காதையில்
"சுடுவோர், இடுவோர்,
தொடுகுழிப் படுப்போர்,
தாழ்வயின் அடைப்போர்,
தாழியின் கவிப்போர்"
என்று பல வகையில்
இறந்தவரை
அப்புறப்படுத்தும்
செயல்கள்
சொல்லப்படுகின்றனவே?


>
> இறந்தவர் உடலை ஊர்
> எல்லைகளில் அப்படியே
> உட்கார வைத்து அந்த
> உடலில் பின்னர் எலும்பு
> மட்டுமே இருந்து ,அந்த
> எலும்பை வாங்கும்
> பழக்கம் ,இன்றும் சில
> தொல் பழங்குடிகளிடம்
> உள்ளது


இதைத்தான் மணிமேகலைக்
காப்பியத்தில்
ஆபுத்திரன் கதையிலும்
பார்க்கிறோம்.
மணிபல்லவத் தீவில் அவன்
உண்ணா நோன்பிருந்து
எப்படி
உட்கார்த்திருந்த
நிலையில் இறந்துபட்டான்
என்று தெரிகிறது.
அவனுடைய வெள்ளெலும்பு
அப்படியே உட்கார்ந்த
நிலையில் இருந்ததைக்
காப்பியம் சொல்லுகிறது.




>
> நம்முடிய குழப்பமே கால
> நிலைகளில் பிற கால நிலையை
> இணைப்பது தான்


ஆ! உண்மை, உண்மை! இலக்கிய/
இலக்கண ஆய்வுகளிலும் இதே
குழப்பம்!

DEV RAJ

unread,
Dec 2, 2012, 11:51:31 PM12/2/12
to மின்தமிழ்
On 3 Dec, 02:56, செல்வன் <holy...@gmail.com> wrote:
>>>> ஆதிமனிதனின் பரிணாம வளர்ச்சியை விளக்கும் ஒரே ஒரு எலும்புபடிமம் கூட
இந்தியாவில் கிடைத்தது இல்லை. <<<<


’முன்தோன்றிய மூத்த குடி’ எனும் கருத்தியலுக்கு
முதன்மைதந்து சண்டையிட வழியில்லாமல் செய்கிறீர்கள் :))

இந்த இழையில் முனைவர் கண்ணன் ஏதோ முக்கியமாகச்
சொல்ல நினைக்கிறார். அதற்கு இணக்கமாக நாம் இழை பிரிக்காமல்
இருப்பது நல்லது. அவர்தம் உரை முடிந்தபின் மாற்றுக்கருத்துகள்
இருக்கவே இருக்கின்றன.

இடையறாத குறுக்கீட்டால் இழைகளைத் தொடரமுடியாமல் போனது
எனது அனுபவம். நண்பர்கள் தவறாகக் கொள்ள வேண்டாம்

தேவ்

> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

செல்வன்

unread,
Dec 2, 2012, 11:54:14 PM12/2/12
to mint...@googlegroups.com
Correct Dev sir. We will wait for Kannan ji's posts and then later on open this for discussion.




--
செல்வன்


DEV RAJ

unread,
Dec 3, 2012, 12:10:49 AM12/3/12
to மின்தமிழ்
நன்றி, செல்வன்.

கண்ணன் ஒரு துணை இழை தொடங்கினாலும்
நல்லதே; இந்த இழை அவரது பதிவுகளுக்கு
மட்டும் என்றும், துணை இழை பிறரது கருத்துகளுக்காகவும்
என அமைத்துக்கொள்ளலாம். விடை
சொல்ல வேண்டுமானாலும் அந்த இழையில்
விளக்கம் சொல்லலாம்.பிரதான இழை
அமைதியாகத் தொடரும்


தேவ்

On 3 Dec, 09:54, செல்வன் <holy...@gmail.com> wrote:
> Correct Dev sir. We will wait for Kannan ji's posts and then later on open
> this for discussion.
>
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>

> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

செல்வன்

unread,
Dec 3, 2012, 12:16:11 AM12/3/12
to mint...@googlegroups.com
இதிலேயே அவர் தொடரலாம். அவர் எழுதி முடித்தபின் துணை இழையில் கருத்துக்களை பகிரலாம் என கருதுகிறேன். அவர் எழுதி முடிக்கும்வரை அனைவரும் காத்திருப்போம்.


--
செல்வன்


Innamburan Innamburan

unread,
Dec 3, 2012, 2:55:39 AM12/3/12
to mint...@googlegroups.com
நான் இதை பற்றி மிகவும் யோசித்தேன். நூலகம் சென்று பல நூல்களை படித்தேன். டாக்டர் பிரியதர்சினியின் வீடீயோவை உன்னித்துப் பார்த்தேன். செல்வன் "..அப்படி ஒரு தொன்மையான எலும்படிமம் இந்தியாவில் கிடைத்தால் மருத்துவர் ப்ரியதர்ஷனின் தியரிக்கு வலுவான ஆதாரம் கிட்டும்...' என்று சொல்வது நியாயமே. ராஜம் சொல்வது முற்றிலும் சரி. 'பின்னர்' பிரச்னை தான். ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் எழுதப்பட்ட The Martyrdom of Man by Winwood Reade இன்றளவும் உண்மை பகர்கிறது.
இன்னம்பூரான்
03 12 2012
 


N. Kannan

unread,
Dec 3, 2012, 4:48:51 AM12/3/12
to mint...@googlegroups.com
2012/12/3 DEV RAJ <rde...@gmail.com>:

> இந்த இழையில் முனைவர் கண்ணன் ஏதோ முக்கியமாகச்
> சொல்ல நினைக்கிறார். அதற்கு இணக்கமாக நாம் இழை பிரிக்காமல்
> இருப்பது நல்லது. அவர்தம் உரை முடிந்தபின் மாற்றுக்கருத்துகள்
> இருக்கவே இருக்கின்றன.
>

மிக்க நன்றி நண்பர்களே!

அடிப்படையில் நானொரு அறிவியல் மாணவன். பல்கலைக் கழகக் காலங்களில் ஒரு
inspiring lecture கேட்டுவிட்டால் கூடிக்கூடி உட்கார்ந்து சிலாகித்துப்
பேசுவோம். அந்த உணர்வு திடீரென்று பீரிட்டுக்கொண்டு வந்துவிட்டது.
அதற்கும் ஒரு காரணம் உள்ளது. மானுடக் கூர்தலியல் முதுகலைத்தேர்வில் நான்
பல்கலைக்கழக முதல் மாணவனாக தேர்வுற்றவன். எனக்கு மானுட கூர்தல் மிகவும்
பிடிக்கும். மேலும் நான் பரதேசியாக பல நாடுகளில் சுற்றியபோது நான்
பலவாறாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளேன். ஒரு அரேபியனாக, ஆப்பிரிக்கனாக
(துனிசியா), இந்தோனீசியனாக, மலேயாக, மெக்சிகனாக, பாகிஸ்தானியாக,
ஜப்பானியனாக, சீனனாக, of course இந்தியனாக. ஆக, உலகின் அனைத்து வகை
ஜீன்களும் என்னிடம் இருப்பது தெரிந்தது. இதுவொரு உணர்வுதான். அறிவியல்
என்பது உள்ளுணர்வை கடின உழைப்பின் பாற்பாட்டு பொதுவில் நிறுவுவது.
டாக்டர் பிரியதர்சியின் பேச்சு எங்கோ நான் உள்ளுணர்வாகக் கண்டதை அறிவியல்
பூர்வமாகச் சொல்வதாகப் பட்டது. பிடித்துப் போய்விட்டது.

முக்கியமாக இது முழுக்க, முழுக்க ஒரு அறிவியல் மாணவனின் குதூகல
நிலைப்பதிவு என்று கொள்ளுங்கள். இதற்கும் தமிழ் மரபு அறக்கட்டளைக்கும்
தொடர்பு படுத்தாதீர்கள். இது எவ்வகை official declaration ம் அல்ல. Just
joy of seeing science working. மேலும், இதுவொரு சாத்யப்பாடு பற்றித்தான்
பேசுகிறது. முற்றும் முடிவான முடிபு அல்ல.

சரி..தொடர்கிறேன்.

நா.கண்ணன்

N. Kannan

unread,
Dec 3, 2012, 5:55:23 AM12/3/12
to mint...@googlegroups.com
உலகில் சில இடங்களில்தான் மனிதத்தோற்றம் உருவாகியிருக்கலாமென்று
விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஒன்று ஆப்பிரிக்கா, மற்றொன்று போர்னியோ
காடுகள். உலகின் ‘ஆதாம்’ எங்கிருந்தாள் என்ற கேள்வி வந்த போது
ஆப்பிரிக்கா அல்லது போர்னியோ என்றனர். டாக்டர் பிரியதர்சி அழகாக
ஓரிடத்தில் சுட்டுகிறார், இவர்கள் சௌக்கியமாக இந்தியாவைக் கண்டு
கொள்ளாமல் தள்ளிப்போவது ஏன்? என்று.

ஏன்? கேட்க வேண்டிய கேள்வி.

ஆப்பிரிக்கா, போர்னியோ இவ்விரு இடங்களும் இன்றளவும் கன்னித்தன்மையுடன்,
சீரழியாமல் இருக்கின்றன. எனவே தேடினால் எலும்புக்கூடுகள் கிடைக்கும்.
ஆனால் இந்தியா அப்படியல்ல. கல் தோன்றா, மண் தோன்றாக்காலத்திற்கு
முன்பிருந்து மக்கள் வசித்து வருகின்றனர். எனவே ஒரு புதைகுழி, 100
ஆண்டுகளுக்கு மேல் இன்னொரு புதைகுழி, இப்படி இருக்கின்ற இடத்தில்
காலக்கணக்கு பிறழும் படி செயற்பாடுகள் நடந்திருக்கின்றன. மேலும் பாலு
இங்கு அடிக்கடி சொல்வது போல் அதிவேக நகரமயமாதலில் இருக்கின்ற இடுகாடுகள்,
முதுமையான இடங்களெல்லாம் வேகமாக ஆக்கிரமிக்கப்படுகின்றன. மதுரை
நகரைப்பற்றிய சங்க கால வருணனைகள் அப்போதே அதுவொரு பிசியான நகரமாக
இருந்திருப்பதைச் சுட்டுகிறது. காசியை நினைத்துப்பாருங்கள். எத்தனை
ஆயிரமாண்டுகளாக மக்கள் அங்கு வசித்து வருகின்றனர்? அங்கு, எங்கு போய்
எலும்புக்கூட்டைத்தேடுவது?

சமீபத்திய சுநாமி (ஆழிப்பேரலை) வந்த போது கடற்கரையில் மூன்று அடுக்கு
நிலைகளில் கோயில் இருந்திருப்பது அறியக்கிடைத்தது. ஒரு ஊழியில் அழிந்து,
அதே இடத்தில் இன்னொரு ஊழிக்கு முன் கோயில் கட்டி, அதுவும் அழிந்து
இன்னொரு விபத்து நடக்கும்வரை இன்னொரு கோயில்கட்டி அதுவும்
அழிந்து..இப்படி. இது தொன்மையைச் சுட்டுவதுடன் அடையாள அழிவு என்பது
எப்படி எளிதாக மக்கள் வாழும் இடத்தில் நடந்துவிடுகிறது என்று தெரிகிறது.

மிகப்பாதுகாப்பான இடத்தில் கூட அடையாளங்கள் மறைந்துவிடுவதைக் காண்கிறோம்.
நல்ல உதாரணம் அன்னமாச்சார்யாவின் 45,000 கீர்த்தனைகள் செப்பேடுகளில்
திருவேங்கடமுடையான் திருக்கோயிலிலேயே காணாமல் போய் மீண்டும்
கிடைத்திருக்கிறது. சமீபத்தில் ஒரு பாதள சுரங்கம் போல் அனந்தபத்மநாதனின்
பொன்குவியல் கிடைத்தது. இதுதான் இந்தியா!

இந்த நாட்டில் geological evidences த்தேடிக்கண்டு பிடிப்பது அரிது.
மானுடத்தோற்றம் என்பது ஏறக்குறைய geological scaleல் நிற்கிறது.

இன்னொரு முக்கியமான கருத்து என்னவெனில், அறிவியல் என்பது தரவுகள் இல்லாத
போது பேசாமடந்தையாகிவிடும். தரவுகள் இருந்தால் பேசும். நல்ல உதாரணம்
ரிச்சர்ட் லீகீயின் ஆப்பிரிக்க ஆய்வுகள். அவர் கால் நடையாக போனபோது
கிடைத்த எலும்புக்கூடுகளே இன்றைய அறிவியல் புரிதலுக்குக் காரணம். அது
அப்படியே இத்தனை காலம் கிடந்திருக்கிறது. இந்தியாவில் நடக்குமா?

மேலும் சமகால அறிவியல் என்பது ஐரோப்பாவை மையம் கொண்டு எழுந்தது.
அவர்களின் சிந்தனைப்போக்கு, தத்துவ விசாரணைப்போக்கு, வாழ்வியல்
போன்றவற்றைச் சார்ந்தே அது இன்றளவும் இயங்குகிறது. ஆங்கிலேயர்கள்
காலனிகளாக ஆப்பிரிக்காவையும், இந்தியாவையும் பிடித்தனர். ஆப்பிரிக்கா
இருண்ட கண்டமாக ஏதும் வளர்ச்சியுறாத நிலையில் இருந்தது. ஆனால், இந்தியா
என்பது ஆங்கிலேயர்களுக்கு பெருத்த சவாலைக் கொடுத்தது. இந்திய தத்துவம்,
இந்திய ஆன்மீகம், இந்திய இலக்கியம், இந்தியக் கலை இவை அவர்களது
நாகரீகத்தைவிட மிக உயர்ந்து இருந்தது. தங்களது மொழியும், நாகரீகமும்
இங்கிருந்து தோன்றியிருக்கலாம் எனும் எண்ணமே காலனிக்காரர்களுக்கு
கிலியைக் கொடுத்தது. இப்படியான பின்புலத்தில் ஆங்கிலேயர்கள் இங்கு
மானுடத்தோற்றம் பற்றி ஆராய விரும்பவில்லை. மெல்ல ஆப்பிரிக்காவிற்கு
போய்விட்டார்கள். அவர்களைக் காட்டுமிராண்டிகள் என்றால் யாரும் கேள்வி
கேட்கப்போவதில்லை. இந்தியாவில் அது முடியாது. இந்தியா மிக புத்திசாலியான
நாடாக இருந்தது. அது அவர்களுக்கு (Colonial Masters) மிகுந்த எரிச்சல்
தந்தது. இறுதியில் வேறு வழியில்லாமல் தோல்வியுற்று இந்தியாவைவிட்டு
நீங்கும் முன் இந்த மண்ணில் மீண்டும் தன்னம்பிக்கை தோன்றாத வண்ணம்
அரசியல், அறிவியல் குழப்பத்தை உண்டு பண்ணிவிட்டுப் போயினர். இந்த ஆரிய,
திராவிட இனவாதம் என்பது அதில் மிக முக்கியமான ஒன்று. இந்தியாவின்
முக்கியமான அறிவியல் தரவுகள் சமிஸ்கிருதத்தில் இருந்தால் அதை மீண்டும்
வாசித்துப்பழகினால்தானே தன் பெருமை பேச முடியும்? அதை அண்டவிடமுடியாத படி
பெரும் சூழ்ச்சி செய்துவிட்டுப் போயினர். மொழி வெறியைத் தூண்டிவிட்டனர்.
இல்லாத புதிய சித்தாந்தங்களை தந்துவிட்டுப் போயினர். நம் தன்னம்பிக்கையை
சிதைக்கும் முக்கிய கோட்பாடு இந்த ஆரிய வருகைக் கோட்பாடு. அதாவது மத்திய
ஆசியாவில் ஒட்டகம் ஓட்டிக்கொண்டிருந்த நாடோடிகள் கொடையாகத்தந்ததுதான்
நமது அடிப்படை ஆதாரமான வேதங்கள் அதன் பாற்பட்டு எழுந்த அறிவியல்,
ஆன்மீகம் இவை அனைத்துமென்றால் நமக்கு எங்கு நெஞ்சைத்தட்டும்
தைர்யம்வரும்? அன்று குனிந்த தோள்கள் இன்றுவரை எழுவில்லை. நாம் அடிமையாக
வாழப்பிறந்தவர்கள் என்று நம்பிவிட்டோம்.

ஆயினும் அன்னை பராசக்தியின் கடைக்கண் அருள் இந்திய தேசத்தின் மீது
விழாமல் இல்லை. இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது அடிப்படையில் ஒரு
தன்மானப்போராட்டம். நமது அடையாளத்தை மீட்டெடுக்கும் போராட்டம். அதற்கு
அடிகோலினார் சுவாமி விவேகாநந்தர். அந்த அருளாளர் அத்வைதம் எனும் அழகிய
தத்துவத்தைக் கண்டு மெய்சிலிர்த்தார். இந்தக் கோட்பாட்டை மீட்டுருவாக்கம்
செய்தவன் ஒரு மலையாளி என்று அவர் காணவில்லை. பண்டைய ரிஷிகளின் வழிவரும்
ஒரு “இந்திய ஆச்சார்யன்” என்று கண்டார். ஒரு வங்காலிக்கு, ஒரு
மலையாளியைத் தலையில் வைத்து ஆட வேண்டிய தேவை என்ன? இன்றைய பிரிவுபட்ட
இந்தியாவில் இப்படியெல்லாம் கேள்வி கேட்கலாம். ஆனால் விவேகாநந்தர்
இந்தியா ஒன்று என்று கண்டார். அத்வைதம் இந்திய முழுமைக்கும் பொது என்று
கண்டார். அத்தோடு நின்றாரா? மானுட முழுமைக்கும் விடிவு என்பது
அத்வைதத்தில் இருக்கிறது என்றார். இந்தியா மொழியால், நடைமுறையால்
வேறுபட்டுத்தோன்றினாலும் அது ஒரு அலகுதான் என்பதைப் பின்னால் மோகன்தாஸ்
காந்தியும் தமது “discovery of India" மூலம் கண்டு கொண்டார்.

இவர்களது வழியில் வந்த பண்டித ஜவஹர்லால் நேரு, நம் பெருமையை நாம் உணர
சுத்தமான அறிவியல் செய்ய வேண்டும் என்று சொன்னார். பல்கலைக்கழகங்களும்,
தொழிற்சாலைகளுமே இந்தியாவின் கோயில்கள் என்றார். இந்தியா, சங்க
காலத்திற்குப் பிறகு, 2000, 3000 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பரவலான
பொதுக்கல்வியைப் பெற்றது. நமது சமகால அறிவியல் என்பது இன்னும்
குழந்தைதான். 60 வருடங்கள்தான் ஆகின்றன. ஐரோப்பாவை நோக்குங்கள் 300/400
வருடப் பழைய பல்கலைக் கழகங்களெல்லாம் இன்றளவும் தொடர்ந்து
செயல்படுகின்றன.

இப்படி நலிவுற்ற நிலையில் நாம் தொடங்கினாலும் மிகக்குறுகிய காலத்தில்
இந்திய அறிவு பட்டொளிவீசிப் பிரகாசிக்கத்தொடங்கியது. நேரு காலத்திலேயே
கூட்டுச்சேரா கொள்கை நாடுகளின் தலமைப்பீடமாக இந்தியா நின்றது.
ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளுக்கு கல்வி புகட்டும் நாடாக இந்தியா 50-60
களிலேயே நின்றது. இது எப்படி சாத்தியம்? ஒன்றுமே பின்னணி இல்லாத
காட்டுமிராண்டிகள் நாட்டில் இது சாத்தியமா? நல்ல விளைநிலத்தில்தான் போட்ட
விதை தளிரும். பாலைவனத்தில் அரிதாகவே சோலைகளைக் காணமுடியும். இல்லையா?

இந்தியாவில் ஒரு அறிவியல் பாரம்பரியம் இல்லையெனில் திடீரென்று ஒரு
கணிதமேதை இராமானுஜன் தோன்றமாட்டான். அவனை எந்த மண், எப்படி விளைவித்து
இருக்கிறது? அவன் சரிதத்தை வாசித்துப்பாருங்கள். நான் டென்னிஸி
மாநிலத்தின் நாஷ்வெல்லியில் இருந்த போது ‘The Man Who Knew Infinity"
(http://en.wikipedia.org/wiki/The_Man_Who_Knew_Infinity) எனும்
புத்தகத்தை வாசித்து மிரண்டுவிட்டேன். நாமகிரித்தாயாரின் இன்னருள் பெற்ற
ஒரு இராமானுஜன் எனும் தமிழனைப் பற்றி ஒரு அமெரிக்கப் பேராசிரியர்
’அந்தமறிந்த மனிதன்’ என்று ஒரு புத்தகம் எழுதுகிறார் என்றால் என்ன மேதமை
அது? அந்த மேதமை அவருக்கு எப்படி வந்தது? காளிதாசனுக்கு அம்பாள் வந்து
தன் எச்சில் தாம்பூலத்தைத்தந்துவிட்டுப் போனது போல் இராமானுஜனுக்கு
நாமகிரித்தாயார் அருள் மழை பொழிந்திருக்கிறார். இது கட்டுக்கதை அல்ல.
இராமனுஜன் அப்படித்தான் சொல்கிறார். இது என்ன அறிவியல். இது என்ன
கற்றையியல் தொடர்பு? தெரியவில்லை. மாபல்லியின் வால்நுணி போல் ஏதோ
தென்படுகிறது. இந்த மேதமை இந்திய மேதமை. இந்த அறிவியல் இந்திய அறிவியல்.

அதனால்தான், குவாண்டம் பிசிக்ஸ் எனும் புதிய சித்தாந்தம் வீருகொண்டு
எழுந்த போது அவர்களுக்கு யூத, கிறிஸ்தவ தத்துவப்பின்னணி ஈடு
கொடுக்கவில்லை. இலத்திரன் போக்கைச் சரியாகப் பிரதிபலிக்கும், உளன் எனில்
உளன், இலன் எனில் இலன்’ எனும் வேத வாக்கே (திருவாய்மொழி) சரியாகப்
பிரதிபலித்தது. அந்தவொரு உயர்ந்த அறிவியல் இந்த மண்ணிற்குச் சொந்தம்.
ஆனால் அதை எப்படிச் சொல்லிக்கொடுப்பது எனும் பாடத்திட்டத்தை மிகச்
சாதுர்யமாக ஆங்கிலேயர்கள் அழித்துவிட்டுப்போய்விட்டனர். இந்தியர்கள்,
‘திக்குத்தெரியாத காட்டில் எதையோ தேடிக்கொண்டிருக்கின்றனர்’.

எனவே 60 ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னாவது நாம் கொஞ்சமாவது
சுயநம்பிக்கை கொண்டு நமது சுதேசி அறிவியலைக் கண்டுபிடிக்க வேண்டும்.
டாக்டர் பிரியதர்சி விவேகாநந்தர் கண்ட இந்தியா பற்றி அறிவியல் திறத்தோடு
பேசுகிறார். ஏதோ நாடோடிகளின் கொடையல்ல இந்திய நாகரீகம் என்பது, அது இந்த
மண்ணில் பிறந்து, இந்த மண்ணில் வளர்ந்து, பிற தேசங்களில் கிளைத்து
விரிவுகண்டது என்கிறார். இது சாத்தியமா?

மேலே இன்னும் பார்ப்போம்...

s.bala subramani B+ve

unread,
Dec 3, 2012, 5:58:24 AM12/3/12
to mint...@googlegroups.com


உணர்வு  வராமல் எப்படி போகும் கண்ணன் அவர்களே 

நீங்கள் பிறந்த நிலம் அதன் பொழுதுகளில் சில பகுதிகள் உலகின் மேலை பகுதிகளான இன்றைய ஐரோப்பிய ,பாரசிகம் ,மதிய ஆசியா போன்ற பகுதிகளில் இருந்து வந்த மக்கள் 

அவர்கள் கொண்டு வந்த பொருட்களை 

இலங்கை உட்பட்ட அகண்ட செந்தமிழ் தென்னவன் பகுதிகளில் இருந்து கீழை நாடுகளுக்கு அனுப்பியவர்களின் வம்சாவழியை  சேர்ந்த மஞ்சள் மனிதர்களின் கூறுகளையும் உங்கள் அணுக்களில் கொண்டவர் அல்லவா ,

பாய் மர கப்பல்கள் வராத முகவைகளின் (மிதப்புகளின் ) காலத்தில் இருந்த நிலபகுதிகளின் உள்ள இன்றைய நிலமும் அதன் பொழுதும் 

தடயங்களை ,தொன்மை எச்சங்களை பற்றி பேசும் போதும் உங்களை  ஈர்க்கிறது 

அவ்வளவு தான் ,

அதே உணர்வுகள் தான் புதுவை கூனிமேடு மற்றும் பழைய சாரத்தை பூர்விகமாக கொண்ட  தாத்த அப்பா வழி  வந்த எனக்கும் இருக்கிறது 

ஊழ் என்ற  genetically carry forward என்ற சமஸ்கரா 


சிவ பாலசுப்ரமணி 


மிக்க நன்றி நண்பர்களே!

s.bala subramani B+ve

unread,
Dec 3, 2012, 6:06:00 AM12/3/12
to mint...@googlegroups.com
மிகவும் அருமை ,இதை தான் எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன் 

நம்மை யார் இணைத்தது,

எல்லோரும் பொருளை தேட நாம்  ஏன் அலைந்து கொண்டு தவித்துக்கொண்டு இருக்கிறோம் 

யார் எப்படி நமக்கு வழிகாட்டி கொண்டு இருக்கிறார்கள் 

நமது தொன்மையை வெளிக்கொணர கிரியா ஊக்கிகள் தேவை 

அடுத்து அடுத்து நாம் செல்ல வேண்டிய இலக்குகள் எவ்வளவு  இடை ஊறுகள் வந்தாலும் அதனை நோக்கிய வழிகள் வந்துகொண்டு தான் இருக்கின்றன 

தேடலின் பிடியில் அல்லவா நாம் அனைவரும் 


2012/12/3 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

N. Kannan

unread,
Dec 3, 2012, 6:42:28 AM12/3/12
to mint...@googlegroups.com
2012/12/3 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:

> தேடலின் பிடியில் அல்லவா நாம் அனைவரும்
>

நன்றி பாலு.
உங்கள் ஆய்வின் முக்கியத்துவம் பற்றி பின்னால் வருகிறேன்.
இதுவரை நான் தருவதோர் பின்னணி.
அவர் காட்டுவது என்ன? விட்டுப்போனது என்ன? இன்னும் செய்ய வேண்டியது என்ன?
என்று சொல்லுகிறேன்.

கம்பன் பாடல்களை எடுத்துக் கொண்டு குற்றாலச்சாரலில் ரசிகமணி கோஷ்டி
குதூகலப்படுமாம், கி.இராஜநாராயணன் எழுதுவார். அது போல் தான் இதுவும்.

பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.

பாரதியின் ரத்ன வரிகள். பயம் கொல்லுவோம். பகை வெல்லுவோம்.

நா.கண்ணன்

N. Kannan

unread,
Dec 3, 2012, 8:12:39 AM12/3/12
to mint...@googlegroups.com
இந்தியாவில் கொஞ்சம் வித்தியாசமான அறிவியல் இருந்திருக்கிறது. அது என்ன வகையென்று தெரியவில்லை எனப்பார்த்தோம். சமீபத்திய களப்பணியில் தர்மபுரி அம்பாள் கோயிலில், அவள் சந்நிதியில் தரைமேல் பாவாத தூண்கள் இருப்பதைக் காட்டினர். கீழே தாளை (பேப்பரை) ஒருபக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு கொண்டு போக முடிந்தது. தரிசனத்திற்குப் பிறகு நம் பவளா ஏற்பாடு செய்திருந்த பொறியியல் கல்லூரியில் பேச்சு. அங்குள்ள பேராசிரியர்களிடம் கேட்டேன். தூண்தான் கூரையைத்தாங்க வேண்டும். இங்கு கூரைத்தூணைத்தாங்குகிறதே! இது என்ன விஞ்ஞானம்? என்று கேட்டேன். அந்தக்கல்லூரி முதல்வர் இதுபோல் கேள்விப்பட்டதே இல்லை! என்று உண்மையை ஒப்புக்கொண்டார். அருகிலிருந்த பேராசிரியர் hanging pillars என்றொரு வகை இருக்கிறது என்றார். மேலே பேச நேரமில்லை.

கற்றையியல் நிலைபெற்ற இந்த நூற்றாண்டில் பல்வேறு வகையான mind boggling அறிவியல் பற்றிய பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஒரே நேரத்தில் 14 வகையான பல்பரிமாண இருப்பு என்பது சாத்தியம் என்கின்றனர். போன நூற்றாண்டில் இவையெல்லாம் கவைக்குதவாத பேச்சு என்று சொல்லியிருப்பர். ஏன்? இந்த நூற்றாண்டில் காதில் ஒரு புளூடூத் கருவியை மாட்டிக்கொண்டு தானே தெருவில் பேசிக்கொண்டு போகும் மனிதர்களைக் காண்கிறோம். விமானநிலைய கக்கூஸில் காதலியோடு கதைக்கும் குரலைக் கேட்கிறோம் (செல்பேசி). ஈதெல்லாம் பயித்தியங்கள் என்று சொல்லுவான் 18ம் நூற்றாண்டு மனிதன் (ஏன் 15 வருடங்களுக்கு முன் கூட யோசித்து இருக்க முடியாது! இல்லையா?).

சிட்டி, தி.ஜானகிராமன் எழுதிய நடந்தாய் வாழி காவிரி எனும் பயணநூலில் குழந்தைகள் மதுரைச் சித்திரைத் திருவிழா பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டபோது அங்கிருந்த சித்தர் ஒருவர் எல்லோரையும் நினைத்த மாத்திரத்தில் மதுரைக்கு அழைத்துப் போய் திரும்பி வந்ததைப் பதிவு செய்கிறார். இது எப்படி சாத்தியமென்றால், பல்பரிமாண போக்குவரத்துத் தெரிந்தவருக்கு சாத்தியம் என்று கற்றையியல் சொல்லும். ஆக, ஏதோ உசத்தியான ஒரு அறிவியல் இந்த மண்ணில் இருந்திருக்கிறது. அது என்ன வகை என்று தெரியவில்லை.

சரி, இதுவரை மனிதக் கூர்தல் பற்றித் தரவுகள் காட்டுவோர் 19-20ம் நூற்றாண்டு அறிவியலை ஆதாரமாகக் கொண்டவைகளையே காட்டி மனிதன் ஆப்பிரிக்காவில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்கின்றனர். நான் முன்பே காட்டினேன், எப்படிக் காலனித்துவ அறிவியல் என்பது அரசியல் கலந்து பிறழ்வுற்று இருந்தது என்று. ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதன் அங்கு தங்காமல் ஏன் பரதேசி போல் வெளியே போனான்? என்பதற்கு இதுவரை பதில் இல்லை. மேலும் இக்கோட்பாட்டில் நிறைய missing link பிரச்சனைகள் உள்ளன. ஆயினும் அறிவுலகம் இதை ஒரு படிக்கட்டாக ஏற்றுக்கொண்டு மேலே போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் அதுதான் முற்றும் முழுவதுமான முடிபு என்றில்லை. நாளையத்தரவுகள் வேறொரு திசை காட்டினால் அறிவியல் அங்கு போகும்.

அப்படியொரு நிலை 21ம் நூற்றாண்டு உயிரியலில் வந்துள்ளது. அதுதான் Human Genomic studies என்பது. கூர்தல் அறிவு என்பது முன்பெல்லாம் பாறைப்பதிவுகளை (fossils) நம்பி இருந்தன. பின்னால் ஜெனிடிக்ஸ் வந்த பிறகு மெல்ல, மெல்ல உயிர்தலின் எச்சங்கள் உயிர்களில் உடலிலேயே பதிவு செய்யப்பட்டு உள்ளன என்பதை அறிந்து கொள்ளும் திறன் வந்தது.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

என்பான் வள்ளுவன். நான் மனிதன் என்பதற்கு நான் மனிதனாக இருப்பதற்கும் மேல் என்ன சான்று வேண்டும்? இல்லையா? இப்படித்தான் போகிறது இன்றைய அறிவியல். இது இங்கு ஆரியக்கொள்கை பேசும் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிந்து கொள்வதில் தவறில்லை. மாறும் தன்மையதே அறிவியல். அது நம்பிக்கையோ, தொழுதலோ அல்ல. நேற்றைய முடிவு தவறு என்று இன்றைய அறிவியல் காட்டினால் ஒரு உண்மையான விஞ்ஞானி ஏற்றுக்கொள்வான். ஆனால் இங்கு அறிவியலைச் சரியாகப் புரிந்து கொள்ளாதோர் அடம் பிடிப்பது வேடிக்கையாய் உள்ளது.

இன்றைய ஜினோமிக்ஸ் தரவுகள் பழைய கதையை எல்லாம் புரட்டிப்போட்டுக்கொண்டு இருக்கின்றன. பூதவியலுக்கு ஒரு குவாண்டம் தியரி என்றால் உயிரியலுக்கு ஒரு ஜீனோமிக்ஸ்.

டாக்டர். பிரியதர்ஷி தனது கோட்பாட்டை ஜினோமிக்ஸ் மூலம் முதலில் காட்டத்தொடங்குகிறார். நிலைத்துவிட்ட ஒரு கோட்பாட்டைத் தகர்ப்பதென்பது எளிதல்ல. நியூட்டோனியன் பூதவியல் படித்தோர்க்கு ஜன்ஸ்டைன் அறிவியல் புரியாத புதிர். உலகில் இரண்டு பேருக்கே அது புரியும். ஒன்று ஐன்ஸ்டைன் இன்னொன்று நான் என்று சொல்லும் ஜோக்குகள் பிரபலம். இன்று ஐன்ஸ்டைன் அறிவியல் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஐன்ஸ்டைன் அறிவியலுக்கும் ஒரு ஆப்பு வைத்தது கற்றையியல். இறைவன் என்றும் பகடை ஆடுவதில்லை! என்று ஐன்ஸ்டைனையே மிரட்டியது இந்தப்புதிய அறிவியல். அந்த நிலையில்தான் இன்றைய உயிரியல் நின்று கொண்டு இருக்கிறது.

எல்லோருக்கும் தெரிந்த தியரி கீழே:

Inline images 2

என்னைப் போல் ஒருவன் ஆப்பிரிக்காவில் இருக்கிறான் என்றால் ஒன்று என் மூதாதையர் அங்கு சென்றிருக்க வேண்டும், இல்லை அவர்கள் இங்கு வந்திருக்க வேண்டும். இரண்டும் சாத்தியம். ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கலாம் என்பது ஒரு பார்வை. டாக்டர் பிரியதர்ஷி இப்படியொரு ஜினோமிக்ஸ் தரவைக் காட்டுகிறார்.

Inline images 3

இது இந்தியாவிலிருந்துதான் மனிதப்பரவல் நடந்திருக்கிறது என்று சுட்டுகிறது. இதில் எதை நம்புவது?

யோசிப்போம்...(வரும்)
Out of India Theory2.jpg
Out of India Theory7.jpg

Kamala Devi

unread,
Dec 3, 2012, 8:43:46 AM12/3/12
to mint...@googlegroups.com
தயவுசெய்து தொடருங்கள்.
 வாசிக்க, யோசிக்க பல தகவல்கள் தருகிறீர்கள்,
படிக்க காத்திருக்கிறோம்
கமலம்
http://www.kamalagaanam.blogspot.com

--- On Mon, 3/12/12, N. Kannan <navan...@gmail.com> wrote:

Subashini Tremmel

unread,
Dec 3, 2012, 8:58:44 AM12/3/12
to மின்தமிழ், Subashini Tremmel
அருமையாக உங்கள் தொடர் விளக்கமும் பாலுவின் மடல்களும் சென்று கொண்டிருக்கின்றன கண்ணன். வாசித்துக் கொண்டிருக்கின்றேன். இன்னமும் டாக்டர்.ப்ரியத்ர்ஷியின் சொற்பொழிவைக் கேட்கவில்லை. விரைவில் கேட்கிறேன். 

சுபா


2012/12/3 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Out of India Theory7.jpg
Out of India Theory2.jpg

N. Kannan

unread,
Dec 3, 2012, 9:24:21 AM12/3/12
to mint...@googlegroups.com
2012/12/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>

>
> அருமையாக உங்கள் தொடர் விளக்கமும் பாலுவின் மடல்களும் சென்று
> கொண்டிருக்கின்றன கண்ணன். வாசித்துக் கொண்டிருக்கின்றேன். இன்னமும்
> டாக்டர்.ப்ரியத்ர்ஷியின் சொற்பொழிவைக் கேட்கவில்லை. விரைவில் கேட்கிறேன்.
>

நன்றி சுபா, கமலம்:

எனக்கு என்னவோ ஆகிவிட்டது :-)
இன்னும் சொல்ல நிறைய உள்ளது.
சொல்லுவேன். கொஞ்சம் பொறுமை காத்தால் நல்லது.

நா.கண்ணன்

s.bala subramani B+ve

unread,
Dec 3, 2012, 10:03:04 AM12/3/12
to mint...@googlegroups.com

கண்ணன்  அவர்களுக்கு  

நீங்கள் எழுதிய  குறளின் வலிமை என்னை இவ்வளவு எழுத வைத்து விட்டது , 
தடங்கலுக்கு மன்னிக்கவும் 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

உண்மை தான் 

உலகமெங்கும் உள்ள  கடற்கரைகளில் ஆயிரத்திற்கு மேலான தமிழ் பெயர்கள், தமிழின் பண்பாடு கூறுகள் உள்ளதற்கான காரணம் என்ன ?

இவர்களின் கடல் மேலாண்மையின்  சிறப்பு தான் என்ன ?

சூரியனை நோக்கிய புவியின் சாய்வான சுழற்சியில் ,சூரியனை சரியாக உள்வாங்கி இயற்கையால் உருவான கிழக்கு மேற்கு தொடர்ச்சி மலையில்  உருவாகும்  மின் காந்த அலைகளின் அமைப்பால்  அது ஏற்படுத்தும் விளைவுகளால் ஏற்படும் பருவ காற்றுகள் ,இங்கு மலைகளில் உள்ள நீர்சுனைகள் ,ஆறுகளின் சிறப்புகள் 

புவியின் வேகத்தின் காரணமாய் கூட   உலகை வளம் வரும் கடல் நீரோட்டங்கள் அதை புரிந்து கொண்டு நீத்மால் நீரோட்டங்களில் மிதந்து வந்த கடல் ஆமைகள்  

கடலை வேலியாக கொண்ட செந்தமிழ் நிலத்தில்  இனபெருக்கம் செய்ய வந்த உலகின் மூத்த இனமான கடல் ஆமைகள் வழியாக என் போன்றவர்கள் தமிழர்களின் உலகளாவிய பரவல்களை  இனம் கொண்டதை கூட புரியாதவர்கள் நாம் 


நமது செந்தமிழ்  நிலம்  மிகவும் சக்தி வாய்ந்த  தாவரங்கள் விலங்குகளை  ,மலைகளை மையமாக வைத்து கடலை எல்லையாக வைத்து  மட்டும் உருவாக வில்லை 

இங்கு தோன்றிய மனிதர்களும் நல்ல அறிவு சார் சக்தியை படைத்தவர்கள் , அவர்களால் இயற்கையின் பங்களிப்பை புரிந்து கொண்டு உலகின் பல பகுதிகளுக்கு சென்று தாம் அறிந்த பங்களிப்பை அளிக்க முடிந்தது 

பயிற்சிகள் மட்டும் தேவை 

இங்கு உள்ள  தொல் உயிர் எச்சங்களின் படிமங்கள் ,நிலக்கரி ,கனிம வளங்கள் ,

கடலில் இன்றும் உயிரோடு கிடைக்கும் வாழும்  தொல் உயிர் எச்சத்தின் மீன்களும் ,

ஊட்டி மலை தொடரில் இருக்கும் சோலாட்டியும் என்ற வாழும் தொல் உயிர் எச்ச தாவரங்கள் 

தொல் மாந்தர்கள்  வாழ்ந்தார்கள் என்பதற்கான குகை ஓவியங்களை ,அதன் கால நிலையை ஆய்வு செய்வதற்கான வழிமுறைக்கு கூட சிந்திக்காத நிலை 


இங்கு மிகவும் அதிகமாக அடர்த்தியாக வாழ்ந்த தொல் மனிதர்களின் தடயங்கள் ,அதை புரிந்து கொள்ளாத பணம் ஆசை  பிடித்த மனிதர்கள் 
செயல்கள் 

பிற காலத்தில் வாழும் மாந்தர்களுக்கு வழிகாட்டும் கல்வெட்டுகளை உடைத்து காசிற்கு விற்கும் மாந்தர்கள் கொண்ட இந்த நாட்டில் 

இந்தியாவின் மிக அதிகமான பழமையான இடுகாடுகளை கொண்ட தமிழகத்தில் 

எங்கு தோண்டினாலும் தொல்லுயிர் எச்சங்கள் கிடைக்கும் இந்த செந்தமிழ் நாட்டில் ,அதை உணராமல் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சீர் அழிக்கும் கூட்டதின் மத்தியில் 

ஆய்வுகளை முறைப்படுத்தினால் மட்டுமே போதும் ,இதற்கானவேலை வாய்ப்புகளை மாணவர்களை ஆர்வலர்களை உருவாக்கினால் போதும் 

வரலாறு என்ற மென்பொருளை கொண்டு அது சொல்லும் நல்லது கெட்டதுகளை இளைய தலைமுறைகளுக்கு எடுத்து சொன்னால் மட்டுமே 

நம் முன்னோர்கள் விட்டு சென்ற அறிவு சார் திறனை நம்மால் காக்க முடியும் 

என்னையும் சேர்த்து சிறு குழு ஒன்று புலம்பி கொன்டே உழைத்து கொண்டு தான் இருக்கின்றது 

 எங்கள் தொல்லியல் தோழி சாந்திபாப்பு சொன்னார் , 

உங்கள் தொன்மையால் தான் உங்கள் மொழி பண்பாடு வளமாய் இருக்கிறது என்றார் 

தமிழகத்தின் தொல் பழங்கற்காலத்தை , இருபத்து  ஒன்று வருடம் உழைத்து உலகறிய வாய்த்த அவருக்கு தெரிந்து இருக்கிறது 

எனக்கு புரிந்து இருக்கிறது 


உங்களுக்கு ?

s.bala subramani B+ve

unread,
Dec 3, 2012, 10:04:54 AM12/3/12
to mint...@googlegroups.com

N. Kannan

unread,
Dec 3, 2012, 10:17:13 AM12/3/12
to mint...@googlegroups.com
2012/12/3 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:

> உங்கள் தொன்மையால் தான் உங்கள் மொழி பண்பாடு வளமாய் இருக்கிறது என்றார்


>
> தமிழகத்தின் தொல் பழங்கற்காலத்தை , இருபத்து ஒன்று வருடம் உழைத்து உலகறிய
> வாய்த்த அவருக்கு தெரிந்து இருக்கிறது
>
> எனக்கு புரிந்து இருக்கிறது

> உங்களுக்கு ?
>

Here is an opportunity Balu.

We have invited Dr. Priyadarshi to join our group and discuss further
his views on Indian antiquity as revealed by modern science. He will
start a new threat as soon as he joins. Here is an opportunity to
express our anguish regarding Tamil contributions to pan Indian
culture and heritage and to develop together a pan-Indian Heritage
studies.

You please set your mind for a serious dialogue in English in the
coming days. Only inter disciplinary cross talks will take us further.

Jai Hind.

N.Kannan

s.bala subramani B+ve

unread,
Dec 3, 2012, 10:22:45 AM12/3/12
to mint...@googlegroups.com
Thanks

can explain about our pensiular sunkenland ,coastal morphologu and sea faring and orissa and southern portions of our India 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

N. Kannan

unread,
Dec 3, 2012, 10:29:29 AM12/3/12
to mint...@googlegroups.com
Yes, it is our duty to fill the gap and contribute positively towards
a pan-Indian understanding. Kindly alert your other connections as
well (archaeologists. linguists and the list you put it in this
thread.

Kannan

Nagarajan Vadivel

unread,
Dec 3, 2012, 12:32:09 PM12/3/12
to மின்தமிழ்
I was able to listen to the lecture.  My comments are: 
 
1.The genetic data chosen for this study is biased.  Genetic and bio informatic information availabel fron the southern part of India found no mention or no place
 
2. The interpretation of the genetic path is more based on the land route touching the rivers Saraswathi, Ganga and Brahmaputra.  The sea route as a possible genetic path is missing in the interpretation
 
3. The Archelogical studies in Southern India particularly in Tamilnadu are river based.As Mr.Balu repeated stresses the evidences are more under the sea and there is a dearth of data pertaining to the origin of ancient man with specific reference to Tamilnasdu.  More studies need to be conducted to explore the under water evidences.
 
4  The lecture presents the model as the ancient man has originated from India but the specific location is not mentioned categorically
 
5. There is a laqck of clarity while discussing the invasion of Aryan as myth.  He is rejecting the postulate of Aryan invasion and at the same time admits the invasion of the Aryan language
 
  In his book "Tamil Studies (1914) M.Srinivasa Iyengar enumerates four distinct theories on tof Tamil people. 
 
The writings on Kumari kandam and Lemuria, the cyclones in the eastern sea and the Tsunamis in the Indian ocean must be reviewed in the light of the alternate proposition the ancient man had originated from Tamilnadu
 
I am aware of the genesis of a project started in 1970s at the University of Madras pioneered by Dr.A.Aiyappan and Dr.A.Venugopal to study the genetics of Tamils according to the castes prevalent in Tamilnadu
 
Similarly the research studies undertaken at the Madurai Kamaraj University must be considered to establish the validity of this model
 
is my humble opinion that without having a recourse to the sea route it will be difficult to establish even a hypothesis of this nature.
 
 
 
I present the abstract of the lecture for favour of understanding the content in a nutshell.
 
Abstract:
The recent DNA studies have revealed that after origin in Africa, a small group of Individuals reached India in about 85,000 years before present, then early human expansion occurred in India from where rest of the world was populated. Even majority of the African humanity has genetically descended from this earliest Indian genetic stock. In year 74,000 Before Present, the Mount Toba eruption destroyed all human beings except about 1000 persons in India and 10,000 in Africa.

The period was marked by glacier (74,000-65,000 years back and 20,000-16,000 ybp) and inter-glacier periods. Every time glaciations occurred, it restricted the human populations to the warmer regions like India, equatorial Africa and the Southeast Asia. But when the globe warmed again, human population expanded to reach the northern regions. During all these expansion events, India played a crucial role in dissipation of man, language and culture to the world. The DNA studies also found that the Indians of today have not arrived from anywhere else, but have descended from the original human stock of the 85,000 years back. The Dravidian, Indo-European, and other languages of India are all indigenous in their respective locations of the sub-continent. On the other hand, the Europeans have reached there from India over the last 12,000 years or so. Not only this the genetic proof suggests that the Indians domesticated cow, goat, sheep, horse and buffalo, as well as wheat, barley, rice and pulses, which laid to the foundations of the modern civilization.
I wish to bring it to your attention that he has delivered this lecture as a two part series.  The second lecture is on "AnIndian Contribution"
 
There was a rich tradition of science in ancient India. Although not many ancient texts are available today, yet we get some information about the presence of physical sciences from the Vedic texts. The oldest science treatise available today is the Vaisheshika Sutra by Kanada from 6th century BC. The text discusses velocity, kinetic and potential energy, momentum among many other concepts.

India, the Origin of World's Civilizations as Evident from Genetic Studies

The genetic studies prove that the various Indian communities and tribes are the descendants of the original settlers of India, and that they did not arrive in India from Central Asia, West Asia, Southeast Asia or China. While leaving India, the early Indians took with them breeds of domestic cows and plant species, besides the art of farming, about 15,000 to 10,000 years back. The waves of expansion took place out of India, every time the glacial maximum receded.

Nagarajan
 
 


ஞானபாரதி

unread,
Dec 3, 2012, 1:15:06 PM12/3/12
to mint...@googlegroups.com, மின்தமிழ்
பொதுவாக அறிவியலில் ஒரு துளி தவறென்று ஆகும்போது மொத்த கோட்பாடும் கேள்விக்குறியாகிறது. Dr  பிரியதர்ஷன் அவ்வாறனவற்றை, ஒன்றுக்கும் மேலே கண்டறிந்து, நிறுவியதாக கருதப்பட்டவற்றை, கேள்விக்குறியாக்குகிறார்.

அதேவேளை, மாற்றாக என்நாடு, என்மக்கள் என்ற கருத்தை முன்னெடுத்துச் செல்வதாக எனக்குப் படுகிறது. நிறுவப்பட்ட கோட்பாடுகளில்  உள்ள ஓட்டைகளை அடையாள படுத்துபவர்  தன்  கோட்பாட்டில் எல்லாவற்றையும், எல்லா கோணத்திலும் நிறுவி காட்டாமல் மேலாட்டமாக, இருக்கலாம், வாய்ப்பிருக்கிறது, முன்மொழிகிறேன் என்றவாறு செல்கிறார்.

மொழி சார்ந்த கருத்துக்களில், மொழி வலிமை, மொழி அழியாது, ஒன்றாயிருந்த -பிரிந்த-இணைந்த போன்றவை எவ்வளவு சாத்தியம் என்று நிருபிக்கவில்லை.

1998-2004 ல் சிந்துசமவெளி நாகரிகம் பற்றி புதியதோர் கோட்பாட்டை உருவாக்க முனைந்தது போல் இதுவும் எனக்குப் படுகிறது.

-- 
அன்புடன்
பாரதி 
(வீடியோவை நிறைய நேரம் பார்த்ததால் பின்னூட்டங்களை அலசவில்லை) 

On Sunday, December 2, 2012 5:32:57 PM UTC+5:30, NaKa wrote:
அன்புள்ள நண்பர்களே:

இவ்விழையை ஆங்கிலத்தில் தொடங்கவே முதலில் ஆசைப்பட்டேன், ஆயினும்
இவ்விழையில் பேசப்போகும் விஷயங்கள் தவறான புரிதலுடைய சில தமிழக
போக்குகளுக்கு விடையாக அமையும் என்பதால் தமிழில் எழுதத்துணிந்தேன்.
இவ்விழையில் சில துல்லிய புரிதலுக்கு அவ்வப்போது ஆங்கிலமும்
பயன்படுத்தப்படும்.

இவ்விழையின் பிரதான தரவுகள் பேராசிரியர் பிரியதர்ஷன் (Dr. Premendra
Priyadarshi) அவர்கள் ஆற்றிய உரையை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன.
நானறிந்தவரையில் மனிதத்தோற்றம் இந்தியாவில் அமைந்திருக்கும் வாய்ப்பு
குறித்த ஒரு தெளிவான உரையை நான் இதற்கு முன் கேட்டதில்லை. ஆய்வு பூர்வமான
உரையிது. அறிவியற் சங்கங்கள் அலசி வெளியிட்ட (peer reviewed) அறிக்கைகளை
ஆதாரமாகக் கொண்டு அவர் தன் கருத்தை முன்மொழிகிறார். எனவே கொஞ்சம்
காலமெடுத்து (60 நிமிடங்களுக்கு மேல்) இந்த ஆங்கில உரையை தாங்கள் கேட்க
வேண்டுமென வேண்டுகிறேன். இது முழுக்க, முழுக்க அறிவியல் உரை. எனவெ துறை
அறிவு இல்லாதோருக்கு இதைப்புரிந்து கொள்ள சிரமமிருக்கலாம். முடிந்தவரை
இங்கு விளங்கிக்கொள்ள முயலலாம். அறிவியல், குதிரையின் பாய்ச்சலில்
போய்க்கொண்டு இருக்கிறது. கால்நடையாக வருவோர்க்கு புரிதலில்
சிரமமிருக்கும்.

http://www.youtube.com/watch?v=1l7VsR-dW-c&feature=plcp

இந்த உரை தொடர்பான என் கருத்துக்களை முன் வைக்கிறேன் அடுத்த இடுகையில்.

நா.கண்ணன்

பிகு: பேராசிரியர் பிரியதர்ஷன் அவர்களின் உரைத்தொடுப்பு கொடுத்த
மின்தமிழ் அறிஞர் திரு.தேவராஜன் அவர்களுக்கு நன்றி.

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Innamburan Innamburan

unread,
Dec 3, 2012, 1:29:17 PM12/3/12
to mint...@googlegroups.com
பேராசிரியர் சொல்வது சரியே. மேலும், மேற்கோள்களுக்கும், உகந்த இடங்களிலும் பொருத்தமான சான்றுகள் அளிக்கவில்லை. தன் கூற்றுக்கு எதிர்மறை கூற்றுக்களை புறக்கணித்து விட்டார். In sum, academic rigor, relevant citations, peer-reviewed data were conspicuous by absence.
இன்னம்பூரான்

2012/12/3 ஞானபாரதி <dgbha...@gmail.com>
--

N. Kannan

unread,
Dec 3, 2012, 2:00:43 PM12/3/12
to mint...@googlegroups.com
2012/12/3 Innamburan Innamburan <innam...@gmail.com>:
>In sum, academic rigor, relevant citations,
> peer-reviewed data were conspicuous by absence.


This is an over statement Sir. You can't judge one's science from an
hour's lecture. We (scientists) give talks according to the topic
given and we do not know the back ground of these talks. I fully agree
with Prof. Nagarajan that evidences from South India is lacking. But
the question is whether they have been published first of all in peer
reviewed journals?

Let's not be judgmental. Reserve your questions when he joins us.
Listen to him once more. Try to understand the 'lines in between'.

Thanks.
Kannan

N. Kannan

unread,
Dec 3, 2012, 3:22:45 PM12/3/12
to mint...@googlegroups.com
On 3 December 2012 18:32, Nagarajan Vadivel
<radius.co...@gmail.com> wrote:
> I was able to listen to the lecture. My comments are:
>
> 1.The genetic data chosen for this study is biased. Genetic and bio
> informatic information availabel fron the southern part of India found no
> mention or no place
>

Probably, the work of Prof. Pitchappan should be brought to his
attention. But he did mention about one Dr. Rajendran's work regarding
Y-Chromosome inheritance.


> 2. The interpretation of the genetic path is more based on the land route
> touching the rivers Saraswathi, Ganga and Brahmaputra. The sea route as a
> possible genetic path is missing in the interpretation
>

India has nearly 7,600 km of sea coast. Very less is spoken & written
about our maritime history. It is the duty of Tamil scholars to write
about it.


> 3. The Archelogical studies in Southern India particularly in Tamilnadu are
> river based.As Mr.Balu repeated stresses the evidences are more under the
> sea and there is a dearth of data pertaining to the origin of ancient man
> with specific reference to Tamilnasdu. More studies need to be conducted to
> explore the under water evidences.
>

Under water archaeology will yield lots of information. Only in
Dhuvaraka some studies have been done.


> 4 The lecture presents the model as the ancient man has originated from
> India but the specific location is not mentioned categorically
>

It is difficult. He did mention that it could have been in Gangetic belt.


> 5. There is a laqck of clarity while discussing the invasion of Aryan as
> myth. He is rejecting the postulate of Aryan invasion and at the same time
> admits the invasion of the Aryan language
>

I'm not sure how you derive this point. He never said that.


> In his book "Tamil Studies (1914) M.Srinivasa Iyengar enumerates four
> distinct theories on tof Tamil people.
>

Is it science or just postulations?


> The writings on Kumari kandam and Lemuria, the cyclones in the eastern sea
> and the Tsunamis in the Indian ocean must be reviewed in the light of the
> alternate proposition the ancient man had originated from Tamilnadu
>

That's where Balu is heading!


> I am aware of the genesis of a project started in 1970s at the University of
> Madras pioneered by Dr.A.Aiyappan and Dr.A.Venugopal to study the genetics
> of Tamils according to the castes prevalent in Tamilnadu
>

As for as I know, it is only Dr. Pitchappan has conducted and
published his genetic studies on castes in peer reviewed journals.
More studies are needed. But Tamils want their caste establishment
untouched as it is their livelihood.

> Similarly the research studies undertaken at the Madurai Kamaraj University
> must be considered to establish the validity of this model
>
Dr. Pitchappan in a private correspondence (as you know he is my super
senior) has mentioned his willingness for cross cultural and inter
disciplinary talks

> is my humble opinion that without having a recourse to the sea route it will
> be difficult to establish even a hypothesis of this nature.
>

well, that will enrich but not necessarily impede the proposal of a hypothesis.


> I present the abstract of the lecture for favour of understanding the
> content in a nutshell.

where did you get this excellent abstract?

> I wish to bring it to your attention that he has delivered this lecture as a
> two part series. The second lecture is on "AnIndian Contribution"
> http://www.youtube.com/watch?v=h8fVyBnNZk0

I don't think they were two part series. The Genetic talk was given in
a different auditorium and well recorded. The talk in your link seems
to be different. I have listened to it but still I think his talk on
human origins are much more inspiring and thought provoking.

Kannan

Innamburan Innamburan

unread,
Dec 3, 2012, 4:20:35 PM12/3/12
to mint...@googlegroups.com
I waited out for making a complete appraisal, Kannan. Having done that, I can comfortably 
differ from you. I refrain from overstatements. Good. I t refrain from understatements also.bad.
regards,
Innamburan

Nagarajan Vadivel

unread,
Dec 3, 2012, 8:42:50 PM12/3/12
to மின்தமிழ்
முன்னர் இந்த மடலாடல் குழுவில் தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழியா தமிழன் காட்டுமிரான்டியா என்ற இரு தலைப்புகளில் நான் அறிந்த தகவல்களை வெளியிட்டிருந்தேன்

அப்போது இருந்த அச்சுறுத்தலான அவற்றை மேலெடுத்துச் செல்லாமல் விட்டுவிட்டேன்

அங்கு நிறைய ஆய்வுத் தகவல்களைக் குறிப்பிட்டிருந்தேன்

மூன்று பக்கமும் கடல் சூழ்ந்து மூன்று சங்கங்களைக் கடலுக்கு இரையாக்கிய ஆழ்கடலில் தமிழன் தொன்மை பற்றிய ஆதாரங்கள் அமிழ்ந்து கிடக்கின்றன

ஆதிமனிதனின் எச்சம் நிச்சயம் ஏதாவது ஒரு கடலில் மூழ்கிக் கிடக்கும்

செய்மதி உதவியுடன் ஒற்றறியும் தொழில்நுணுக்கம் வளர்ந்துவரும் சூழலில் பாலு அவர்களின் ஆமை வழியையும் பழந்தமிழரின் கடல்வழிப் பட்டுப்பாதை மிளகுப்பாதைகளின் அடிமட்டத்தில் நிச்சயம் எச்சங்கள் இருக்கக்கூடும்

நாகராசன்

s.bala subramani B+ve

unread,
Dec 3, 2012, 9:30:53 PM12/3/12
to mint...@googlegroups.com
6.PNG

s.bala subramani B+ve

unread,
Dec 3, 2012, 9:40:42 PM12/3/12
to mint...@googlegroups.com
11.PNG

s.bala subramani B+ve

unread,
Dec 3, 2012, 9:50:14 PM12/3/12
to mint...@googlegroups.com
The oldest science treatise available today is the Vaisheshika Sutra by Kanada from 6th century BC. The text discusses velocity, kinetic and potential energy, momentum among many other concepts.



need to check the period , details of manuscript datas also required

Nagarajan Vadivel

unread,
Dec 3, 2012, 9:59:13 PM12/3/12
to மின்தமிழ்
எனக்கு என்னவோ ஆகிவிட்டது :-)
நாற்பதைத் தாண்டிவிட்டால் எல்லாருக்கும் எப்பவாவது என்னவாவது நடக்கும்
அது நல்லதில் முடியும் வாய்ப்புகளை நாம் இழந்துவிடக் கூடாது
மின் தமிழ் திருவிழாவில் குழந்தைகளைக் கவர்ந்து பெற்றொருக்குத் தலைக் குடைச்சல் கொடுக்கும் வல்லமை உள்ள ஜவ்வு மிட்டாய் வியாபாரி
விதம் விதமாக கைக் கடிகாரம் என்று பல பொம்மைகள் செய்து கொடுத்து சிறுவர்களைக் கட்டிப்போடுவதுபோல் இங்கும் ஜவ்வு மிட்டாய் வியாபாரம் ஜரூர்

நீங்கள் முயற்சி செய்தால் மின் தமிழில் இணைந்த ஒரு பீர் ரிவ்யூ ஆன்லைன் மாத சஜ்சிகை ஒன்றை உருவாக்கலாம்
ஐ எஸ் பி என் போன்று ஒரு ஐ எஸ் எஸ் என் எண் ஒன்றை வாங்கி ஆன்லைன் ஆய்வுச் சஞ்சிகையை சில நாட்களுக்குள் பதிவு செய்யலாம்

முதன்மை ஆசிரியர் செயல் ஆசிரியர் ஆற்றுப்படுத்தும் ஆசிரியர் குழு என்று துறை அறிஞர்களைத் தேடிப்பிடித்து இங்கு தன்னார்வத் தொண்டு செய்ய அழைக்கலாம்

பல்வேறு துறைகளிலும் சிறந்த படைப்புகளைப் படைக்கும் இணையத் தொடர்புகளைக் கண்டுபிடித்து ஒரு பீர் தரவுத் தளம் அமைக்கலாம்

மின் தமிழ் மடலாடல் குழுவில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஆய்வுக்கட்டுரை கேட்டு அறிவிப்புச் செய்யலாம்

சமர்ப்பித்த கட்டுதைகளைத் தரவுத் தளத்தில் அத்துறியில் சிறந்தவத்களிக்கு அனுப்பி படிக்கச் செய்து தகுதி அடிப்படையில் வெளியிடலாம்

ஓரெங்கும் தேடி ஒரு கற்றொர் சபை நடத்தும் ஆய்வுச் சஞ்சிகையில் வெளியிடுவயிஅவித மின் தமிழிலே ஒரு புதிய ஆய்வுச் சஞ்சிகையை உருவாக்கலாமே

இதுவும் உங்களுக்கு என்னம ஆகிப்போச்சு என்று மற்றவர்கள் சந்தேகப்பட்டாலும் அறிவுலகத்திக்கு தமிழ் ஆய்வுக்கு முதல் படிக்கட்டைப் போட்டதாக நான் நினைப்பேன்
நாகராசன்


2012/12/3 N. Kannan <navan...@gmail.com>

N. Kannan

unread,
Dec 4, 2012, 2:47:09 AM12/4/12
to mint...@googlegroups.com
கிராமப்புறத்தில் ஒரு சொலவடையுண்டு, ‘கிடக்கிறது கிடக்க கிழவியைத்தூக்கி மனையில் வை!’ என்று. அது போல் எல்லா நாடுகளும் சும்மா இருக்கும் போது இந்தியர்களுக்கு மட்டுமென்ன இந்த ஆர்வம், உலகம் என்னிடமிருந்து பிறந்தது? என்று சொல்ல? நியாயமான கேள்வி இல்லையா? டாக்டர்.பிரியதர்ஷிக்கு ஆகட்டும், நண்பர் பாலுக்கு ஆகட்டும், பேரா.நாகராஜனுக்கு ஆகட்டும் இந்த ஆர்வம் எங்கிருந்து முளைக்கிறது என்று பார்க்க வேண்டும்? உலகில் எத்தனையோ நாடுகள். ஒவ்வொரு நாட்டிலும் தமது தோற்றத்தைப்பற்றிய தொன்மங்கள். ஆயினும் யாரும் மானுட முழுமைக்கும் சொந்தம் கொண்டாடிப் பேசுவதில்லை. சரி, மானுடத்தின் முதல் தாய் ஆதாம் ஆப்பிரிக்காவில் பிறந்தாள் என்கிறார்களே அங்கு இப்படி ஏதாவது புராணம் இருக்கிறதா? என்றால் இல்லை. ஆனால் இந்தியாவில், ஒன்றல்ல, பல மண்டிக்கிடக்கின்றன!

அதாவது பிரபஞ்ச உற்பத்தி பற்றி, பூலோக உருவாக்கம் பற்றி, மானுடத்தோற்றம் பற்றி, மனு முதல் இன்றைய குப்புசாமிவரை இவர்களது வாரிசுகள் பற்றி விலா வாரியாக எழுதி வைத்திருக்கிறார்கள். சரி, இந்தக்கதைகளெல்லாம் ஆர்யன் எழுதி வைத்தது என்றால், ஆரியர்கள் இருக்கின்ற ஈரானிலோ, துருக்கியிலோ, ஆஃப்கானிஸ்தானிலோ இத்தகைய கதைகள், புராணங்கள் இருக்கின்றனவா? என்றால், இல்லையென்று சொல்லலாம் (தவறு என்றால் திருத்திக்கொள்கிறேன்). மேலும் நாடோடியாக நாளைய சாப்பாடு எங்கு கிடைக்கும் என்று தெரியாத கூட்டத்தார் ஆடி, அமர்ந்து, அலசி ஆராய்ந்து, இது இதிலிருந்து வந்தது, நான் யார், என் தோற்றமென்ன? என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்ததாக வரலாறு இல்லை. நதி தீரங்களில் விவசாயம் பண்ணி, சௌக்கியமாக வாழ்கின்ற சமுதாயத்திற்கே இம்மாதிரி விசாரணைகளில் ஈடுபட நேரமிருக்கும். அதுதான் இங்கு காண்கிறோம்.

கங்கை, காவேரி, தாமிரபரணி தீரத்து மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தவர்கள். தத்துவ விசாரங்களில் கை போனவர்கள். கடல்வழிச் செலவுகளை நன்கு அறிந்தவர்கள். உலகத்தின் விஸ்தாரணம் அறிந்தவர்கள். காலை, மாலையில் சந்தியா வந்தனம் செய்யும் தென்கோடித்தமிழன், ‘பாரத வருஷே, பரதக்கண்டே’ என்று ஆரம்பிக்கின்றான். உலகை முதலில் சொல்லி, அதில் எத்தனை தீவுகள் (கண்டங்கள்) இருக்கின்றன. அதில் எந்த கண்டத்தில் நான் இருக்கிறேன், எந்தத்திக்கில் இருக்கிறேன், நான் யாருடைய வம்சம், யாருக்குப் புத்திரன் என்று இத்தனை விவரங்களையும் சொல்கிறான். இவன் நாலு கிராமம் தாண்டிப் போயிருக்க மாட்டான். ஆனால் ஏழு தீவுகள் கொண்டது பூமி என்பான். இவனுக்கு பாரதம் எவ்வளவு பெரியது என்று தெரியாது ஆனால் பாரத கண்டத்தில் இருக்கிறேன் என்பான். இந்த அறிவு இவனுக்கு சுயமாக வந்தது அல்ல. இவனது சாத்திரங்கள் இவனுக்குக் கொடுத்தது. இவ்வளவு விவரமாக ஜி.பி.எஸ் சேதி சொல்லும் இவன் மந்திரத்தில் ஓரிடத்தில் கூட நான் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், நான் ஆர்ய இனத்தைச் சேர்ந்தவன், என் மூதாதையர் துருக்கியர் என்று இல்லை. உண்மை அதுவாக இருந்திருந்தால் இவன் அவசியம் சொல்லியிருப்பான்.

இதில் ஆச்சர்யம் என்னவெனில், இவனது சாத்திரங்கள் இவன் உருவாக்கிய கிரந்தலிபியில் இருக்கின்றன. அரேபிய லிபியில் இல்லை. இப்படித்தான் மதுராந்தகம், கே.வி.கோபாலன் என்பவரிடம் ‘ஸ்ரீமத்விகனஸோத்பத்தி சரித்ரம்’  எனும் ஓலைச்சுவடி இருந்தது. அதில் என்ன எழுதியிருக்கிறது?

"பிரயளத்தின் பின்பு ப்ரக்ருத்யாதி ஸகல சராசரங்களுக்கும் கர்த்தாவான புருஷச்ரேஷ்டரான மஹாவிஷ்ணுவானவர் க்ஷீராப்தியிலே (பார்கடலிலே) யோகநித்ரா, பரவசராய் இரண்டு லக்ஷத்து ஐம்பதினாயிரம் யோஜனை நீளமுள்ள ரூபமுடையவாய் சயனம் கொண்டிருந்தார். அந்த யோகநித்ரையில் வெகுகாலம் சென்றன.” என்று போகிறது.

இந்தப்பனுவலைக் கூர்ந்து கவனியுங்கள். ’ப்ரளயத்தின் பின்பு’ என்று ஆரம்பிக்கிறது. அதாவது இன்று நாம் பேசும் Big Bang அல்லது வேறுவகையான ப்ரபஞ்சத்தோற்றம் உருவான பின்பு என்று தெளிவாகச் சொல்கிறது. திருப்பாற்கடல் என்று Milky way Galaxy பற்றிய குறிப்பு வருகிறது. அதில் விஷ்ணு எவ்வளவு பெரியவராகப்படுத்து இருக்கிறார்? இரண்டு லக்ஷத்து ஐம்பதினாயிரம் யோஜனை நீளம்!! இன்றைய கணக்குப்படி பாற்கடலின் நீளம் 1,000,000,000,000,000,000 கி.மீ. நாம் முன்பொரு கேள்வி கேட்டோம். எதற்கு தமிழில் (சமிஸ்கிருதத்தில்) பிரம்மாண்டமான அலகுகள் (units) இருக்கின்றன என்று. இவர்கள் விண்ணை அளந்து கொண்டு இருந்திருக்கிறார்கள். பின், பிரம்மா தொடங்கி, விகனஸர் , ப்ருகு, அத்ரி, வஸிஷ்டர், , மரீசி,காச்யபவர்..... மனு என்று மானுடத்தோற்றம் பற்றிச் சொல்கிறது. பொதுவாக ஆர்யவாதம் பேசுபவர்கள் நம் சாத்திரங்களை முறையாகக் கற்றவர்கள் இல்லை. ஏதோ இங்கும் அங்கும் மொழி பெயர்க்கப்பட்ட பிரதிகளை வைத்துக்கொண்டு தியரிகளை உருவாக்கி மக்களை ஏமாற்றுகின்றனர்.

‘ஸ்ரீமத்விகனஸோத்பத்தி சரித்ரம்’ தமிழகத்தில் கிரந்த லிபியில் (திராவிட லிபி)தான் உள்ளது. எழுதியவன் ஆர்யன் அல்ல. சங்கப்பாடல் சொல்லுகின்ற, ‘பழுப்புப்பார்ப்பான்’. சங்ககாலத்தில் வானசாத்திரம் கற்றோர், ‘கணியன்’ என்று அழைக்கப்பட்டனர். இவன் ஈராக், ஈரானிலிருந்து வந்திருந்தால் நிச்சயம் சொல்லியிருப்பான். ஏன்?

“அப்போது பிரம்மாவானவர் அகில உலகங்களையும் ஸ்வாயம்பு முதலான மனுக்களையும் ஸ்ருஷ்டித்து; அவர்களில் ஒருவரான ஸ்வாயம்புவ மனுவை நோக்கி நீ பூலோகத்திற்குச் சென்று ஜனாப்வ்ருத்தி செய் என ஆக்ஞாபித்தார். அவர் ஜலமயமாயுள்ள கோளமத்தியில் பூமியைக் காணாததால் வசிக்க ஆதாரமான இடமில்லையே என்று பிரம்மாவிடம் சொல்ல; நான்முகன் ஹரியைப் ப்ராத்தித்தார். உடனே ஹரியானவர் யக்ஞவராஹம் என்னும் பன்றி அவதாரமெடுத்து ஜலாந்திரத்திலிருந்து பூமியை மேலே கொண்டுவந்து நிலை நாட்டினார்.”

இந்த அழகிய பனுவல் பல விஷயங்களைச் சொல்கிறது. பூமியின் தோற்றம் உருவாகும் முன்பிருந்த ஒரு நிலையை வருணிக்கிறது (இந்த ஞானம் இவர்களுக்கு எப்படி வந்தது? கற்பனையே என்றாலும் ஆதாரமில்லாமல் கற்பனை செய்ய முடியாது). பூமிக்கு உயிர் என்பது வேற்று கிரத்திலிருந்து வந்தது என்கிறது (extra terrestrial biology). (இது பற்றிய இன்னொரு பனுவலும் எம்மிடம் உண்டு அதுதான் ‘பூகோள பகோள விஷயம்’ என்பது. அதில் சந்திரனிலிருந்து பார்த்தால் பூமியின் தோற்றம் எப்படி இருக்குமென்ற வரைபடம் உள்ளது). ஆக, தங்களது தோற்றம் விண்ணிலிருந்து, பின் பூமிக்கு வந்தோம் என்று சொல்பவர்கள் ஏன் நாவலத்திற்குள் நேரடியாக வந்துவிடுகின்றனர். ஈரான், ஈராக்கில் இருந்து வந்ததாகச் சொல்ல எவ்வளவு நேரமெடுக்கும்?

இந்த ஆரியவாதிகள் நமது சாத்திரங்களின் அகச்சான்றுகள் பற்றியே பேசுவதில்லை. எப்போதும் அயலக ஆய்வாளர்கள் இது சொன்னார்கள், இப்படிச் சொன்னார்கள் என்று ஜால்ரா அடிக்கிறார்களே தவிர (அது மட்டுமல்ல அவர்களுக்கு விஷய தானம் நான் தான் செய்தேன் என்ற பெருமை வேறு!) நம் சாத்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறது. இதை நம் பெரியவர்கள் எப்படிப் புரிந்து கொண்டனர் என்ற மண்வாசனை கொஞ்சம் கூட இல்லாமல் அந்நியப்பட்டு போய்விட்டது பரிதாபத்திற்குரியது. எங்காவது, நமது சாத்திரங்களில் ஆர்யன் என்றால் ஓர் இனம் என்று சொல்கிறதா? பாரதி வரிஞ்சு, வரிஞ்சு தமிழனை ‘ஆர்ய புத்ரா’ என்கிறான். நம்மாழ்வாரின் பனுவல் தமிழ்ச் சங்கத்தால் ஏற்றுக்கொண்டதைக் கொண்டாடும் போது, ‘ஆர்யத்தமிழ் வென்ற மாறன் சடகோபன்’ என்கின்றனர். ஆர்யன் என்பது ஒரு இனமென்றால் தமிழனை எப்படி ஆர்யன் என்று பாரதி சொல்லலாம், இல்லை தமிழைத்தான் ஆர்யத்தமிழ் என்று எப்படிச் சொல்லலாம்? யோசிக்க மாட்டார்கள். ‘ஆர்ய’ என்றால் உயர்வானது, பீடுடையது, புகழத்தக்கது’ என்று பொருள். அவ்வளவுதான்.

சரி, இவன் யாரை ஆர்யன் என்று சொல்கிறானோ, அவனோட மரபில் ஐரோப்பிய ரத்தம் இருக்கிறது என்று ஜினோமிக்ஸ் காட்டுகிறதே என்றால். ஆம், ஏன் இவனது ரத்தம் ஐரோப்பாவிற்குப் போயிருக்கக்கூடாது?

ஏன்? ஆப்பிரிக்க மனிதர்கள் கூடத்தான் நம்மவர் போல் உள்ளனர். இம்முறை பயணித்த போது இருமுறை மயங்கிப்போனேன். முதல்முறை ஸ்ரீபெரும்புதூர் போகும் போது ஒருவர் வந்து அருகில் அமர்ந்தார். அவர் ஏதோ கானா, உகாண்டா நாட்டிலிருந்து வந்திருக்கிறார் என்று நினைத்தேன். அவர் செல்பேசியில் தமிழில் பேசியபோதுதான் அவர் தமிழர் என்று உணர்ந்தேன். சரி, சிவப்பா இருப்பவனெல்லாம் ஆர்யனா இல்லை பார்ப்பனரா என்றால், அப்படியும் சொல்லிவிட முடியாது. உயர்ஜாதி இந்துக்கள் எல்லோரிடமும் ஐரோப்பிய ரத்தம் இருப்பதைக் காணலாம். லண்டனில், பி.ஏ.கிருஷ்ணன் நூல் அறிமுக நிகழ்வின் போது ஒரு தம்பதியர் வந்தனர். அப்படியே அச்சாக ஸ்பானிஷ் அல்லது இத்தாலியர் என்று சொல்லிவிடலாம். கேட்டுப்பார்த்தேன் இவர்கள் யாரென்று. தேனீக்காரர்கள் என்றனர். சௌராஷ்டிராவா என்றால் இல்லை என்று பதில். ராஜூ மக்களா? என்றால் இல்லை. ஐயரா? என்றால் இல்லை. அதற்கு மேல் கேட்க வெட்கமாக இருந்தது. அவர் என்னைத்தவறாக எடை போட்டுவிடக்கூடுமென்று வாளாவிருந்தேன்.

அதே போல் ஜப்பான், கொரியா, தாய்லாந்து, இந்தோனீசியா போன்ற நாடுகளிலெல்லாம் தமிழர்களின் முகச்சாயலைக் காண்கிறேன். அப்படியெனில், அவர்களெல்லாம் இங்கு வந்து கலப்பு மணம் செய்தார்களா? ஏன், நம் ரத்தம் இவர்களுக்குப் போயிருக்கக்கூடாது? என்று யாரும் கேட்கத்துணியவில்லை. நம் புராணங்கள்தான் வழிந்து, வழிந்து சொல்கிறதே! ,’ஆழிசூல் உலகமெல்லாம் பரதன்’ ஆண்டான் என்று. அப்படியெனில் நம்மவர் எல்லா இடங்களுக்கும் போயிருக்கின்றனர் என்றுதானே பொருள். அது என்ன தாழ்வு மனப்பான்மை? வெள்ளைக்காரன் இங்கு வந்துதான் ஆர்ய இனம் தோன்றியது என்று நம்ப? ஹிட்லர் வைத்திருந்த ஸ்வஸ்திகா இந்தியச்சின்னமில்லையா? இங்கிருந்து ஏன் மத்திய கிழக்கிற்கும், ஐரோப்பாவிற்கும் போயிருக்கக்கூடாது? ஆங்கில மேலாத்திகத்திகத்தை நிலைநிறுத்த அங்கிருந்து இங்கு வந்தது என்றார்கள். நாமும் உடனே நம்பிவிட்டு, உள்ளூர்க்காரனை வெளிநாட்டான் என்கிறோம்! எவ்வளவு பேதமை?

சரி, ஐரோப்பிய கருத்தியல் எப்போதும் ஆர்ய ஆக்கிரமிப்பு (Aryan invasion) என்றுதான் சொல்கிறதா? என்றால், இல்லை என்பதே பதில். இந்திய ஐரோப்பிய மொழிகள் தொடர்பான ஒரு உரையை நான் கீல் பல்கலைக்கழகத்தில் கேட்டேன். இந்தியவியலில் ஆதி தொட்டு ஜெர்மானியர்கள் கெட்டிக்காரர்கள் என்பது தெரிந்திருக்கலாம். அதில் எப்படி சமிஸ்கிருதமும், ஜெர்மன் மொழியும் தொடர்புடையவை என்று விளக்கினார். குறிப்பாக குடும்ப உறவுகள் பற்றியச் சொற்கள் நம் ஆதி தொடர்பைக் காட்டிக்கொடுத்துவிடும். வேடிக்கை பாருங்கள். சமிஸ்கிருதத்தில் அப்பா என்பதைப் பிதா என்கிறோம் (மாதா, பிதா, குரு தெய்வம்!). இதே சொல் ஜெர்மனியில் Vater (Fater என்று உச்சரிக்க வேண்டும்) என்றாகி ஆங்கிலத்தில் Father என்றாகிறது. அம்மாவை, மாதா என்கிறோம். Matha என்பது ஜெர்மன் மொழியில் mutter என்றாகி ஆங்கிலத்தில் mother என்றாகிறது. சகோதரன் என்பதை சமிஸ்கிருதத்தில், ‘ப்ராதா, (Bradha) என்கிறோம். ஜெர்மனியில் Bruder, ஆங்கிலத்தில் Brother. இச்சொற்கள் எப்படி இந்தியாவை விட்டு ஜெர்மனிவரை வந்தது என்று விளக்கினார் ஜெர்மன் பேராசிரியர். அதாவது, கங்கைக்கரை தீரவாசிகள் மெல்ல, மெல்ல மேற்கே போகும் போது (பரதனின் அன்னை கைகேகி, Caucus மலைத்தொடரிலிருந்து வந்தவள் என்பது இங்கு குறிப்பு) இச்சொற்கள் பரவி இருக்கும் என்றார். இவர்கள் ஏன் மேற்கே போக வேண்டும்? மேற்கே என்றில்லை, இவர்கள் எல்லாத்திக்கிலும்தான் போனார்கள். குறிப்பாக இங்கு ஆர்ய ஆக்கிரமிப்பு என்பது எத்திசையில் என்பதை விளக்க வடமேற்கை எடுக்கிறோம். ஒரு விவசாயக்குடும்பம் 10 பிள்ளைகள் பெற்றுக்கொள்கிறது என்றால் பேரன், பேத்தி என்று வரும் போது விவசாயம் பண்ண புதிய நிலங்களை (காட்டை அழித்து கழனியாக்கி) உருவாக்க வேண்டிவரும். இப்படியாக மெல்ல, மெல்ல வட மேற்கே பரவி சில, பல தலைமுறைகளில் ஐரோப்பா வந்து சேர்ந்தனர் என்றார் அப்பேராசிரியர். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய தியரி. ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் இந்திய வேர்ச்சொற்களைக் காணலாம். நண்பர் இராம.கி ஆங்கிலமே தமிழிலிருந்து போயிருக்கலாம் என்று சொல்லுவார். பாவாணரின் வழியில் சிந்திக்கும் டாக்டர் பொன்னவைக்கோ இவ்வாறே கருதுகிறார்.

இவ்வருட ஆரம்பத்தில் அவரோடு ஒரு விருந்துண்ணும் போது இக்கருத்தை பனராஸ் இந்துப்பல்கலைக் கழக துணை வேந்தரிடம் சொன்னார். அவருக்கு இது புதிய சேதி. நாம் இவ்வகைக் கருத்தாக்கத்தை வட இந்தியர்களுக்குச் சொல்லித்தர வேண்டியது நம் கடமை.

சரி, இந்திய விவசாயி உலகமெல்லாம் பரவுகிறான் என்றால் அவன் மட்டுமா போவான்? அவனோடு அவன் கால்நடைகள் போகும். வீட்டு எலி போகும், வயக்காட்டு எலி போகும் இல்லையா? எனவே மானுடப்பரவல் என்று காணும் போது கூடவே இந்த ஜீவராசிகளின் பரவலையும் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. இங்குதான் எனக்கு பிரியதர்ஷியின் பேச்சுக் கவர்ந்தது. அவரது உரையில் உலகின் அனைத்துப் பசு இனங்களும் இந்தியாவிலிருந்து போனவையே என்பதற்கு ஆதாரம் காட்டினார்.

Inline images 1

இது மிகச்சரியாக இந்தோ ஐரோப்பிய மொழிப்பரவலுடன் ஒத்துப்போவதை அவதானிக்க வேண்டும்.

அடுத்து வீட்டுச் சுண்டெலியின் பரவலைக் கவனியுங்கள்:

Inline images 2

இதுவும் மொழிப்பரவலுடன் இயைந்து போகிறது.

அடுத்து வயக்காட்டு எலியின் பரவல்,

Inline images 3

இதுவும் இந்தியாலிவிருந்து வெளியே போகிறதே தவிர வெளியிலிருந்து இந்தியாவிற்குள் வரவில்லை. 

இறுதியாக அவர் ஆண்கள் மரபு வழித்தொடரை அவதானிக்கும் Y chromosome பரவலைக் காட்டுகிறார்.

Inline images 4

அதுவும் ஐரோப்பிய ரத்தம் என்பது இந்தியாவிலிருந்து போயிருக்கலாம் என்றே சொல்கிறது. இதை ஆங்கிலேயர்கள் உணர்ந்தனர். ஆயினும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. கேலியாக மாமா, மச்சான் என்று சொல்வார்களே தவிர உளப்பூர்வமாகச் சொன்னதில்லை.

இந்திய சரிதம் எனும் நூலை எழுதிய பேராசிரியர் ஹெர்மான் குல்க வேடிக்கையாகச்சொல்லுவார். எனது பெயர் கூட பூர்வத்தில் ஹரிமான் கல்கி (ஹரியின் மனதுடைய கல்கி) என்று இருந்திருக்கலாம் என்பார். அது உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது என்பதைத்தான் டாக்டர் பிரியதர்ஷியின் உரை சுட்டுகிறது.

(இன்னும் கொஞ்சம் வரும்)
Out of India Theory6.jpg
Out of India Theory5.jpg
Out of India Theory4.jpg
Out of India Theory3.jpg

s.bala subramani B+ve

unread,
Dec 4, 2012, 3:01:05 AM12/4/12
to mint...@googlegroups.com
மிகவும் அருமையாக செல்கிறது 

காளை மாட்டு சண்டை,சேவல் சண்டை ,தீயில் நடத்தல் , திசை நோக்கி வணங்குதல் ,தென் கடலை வணங்குதல் ,பல்லாங்குழி , வில்லுபாட்டு ,தாய் மாமன் திருமணம் ,கல்லு உப்பு வணங்குதல் ,துமுளை என்ற ஈம சின்னங்கள் ,கஞ்சி சாப்பிடுதல் , பெண்கள் முத்து சிப்பி இருப்பது என்று நிறைய இருக்கிறது 

உலக நாட்டார் ஒப்பிட்டு வழக்கியல் அறிதல் மிகவும் அவசியம் 




2012/12/4 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Out of India Theory6.jpg
Out of India Theory3.jpg
Out of India Theory5.jpg
Out of India Theory4.jpg

N. Kannan

unread,
Dec 4, 2012, 5:45:07 AM12/4/12
to mint...@googlegroups.com
இவ்வுரையின் இறுதியில் டாக்டர் பிரியதர்ஷி ஆரிய ஆக்கிரமிப்பு தியரியை மறுதலிக்கிறார்.   குதிரை என்பது மத்திய ஆசியப் புல்வெளிகளுக்கே உரிய பிராணி. எனவே குதிரை பற்றிய வருணனை வரும் பழைய வேதப்பாடல்கள் மத்திய ஆசிய மக்களால் கொண்டு வரப்பட்டவை என்பது பிரதிவாதம். இதற்கென தனியிழையே தொடங்கிவிட்டார் நண்பர் தேவ். அதிலும், முன்பு கொடுத்த தொடுப்புகளிலும் குதிரை என்பது இந்தியாவில் இருந்த, இருக்கின்ற பிராணிதான் என்ற தரவுகள் கொடுக்கப்பட்டுவிட்டன. அடுத்து தேர் பற்றிய வருணனை. தேர் என்பது இந்தியர்கள் அறியாதது அது ஆர்யர்கள் இங்கு கொண்டு வந்தது என்பது. அதையும் தொல்பொருள் விளக்கங்கள் தந்து மறுதலித்தாகிவிட்டது.

ஆக, அடிப்படைப் பிரச்சனை என்னவென்றால் மதுரைக்காரன், நெல்லைச்சீமை ஆள் போல் இருந்தால் இவன் இங்கிருந்து அங்கு போனானா? இல்லை அவன் அங்கிருந்து இங்கு வந்தானா? என்பதே. இவ்விழையில் ஏராளமான சான்றுகளுடன் அது இந்தியாவிலிருந்து வெளியே போயிருப்பதே சாத்தியம் என்று காட்டியிருக்கிறேன்.

மொழியின் பரவல் என்பதை கிழக்கும், மேற்கும், தெற்கும் போய் பார்த்தால் தெளிவாகப் புரிந்துவிடும். எப்படி சமிஸ்கிருத மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஜெர்மன் மொழி தன் குடும்ப உறவுகளுக்கானச் சொற்களைப் பெற்றன என்று ஜெர்மானிய இந்தியவியலரின் கூற்றைக் கண்டோம். அதே போல் கிழக்கே, பர்மா, மலேசியா, இந்தோனீசியா, தாய்லாந்து, கம்போடியா வரை சமிஸ்கிருத மொழித்தாக்கம் இருப்பதை எத்தனையோமுறை இம்மன்றத்தில் காட்டிப்பேசியிருக்கிறோம். எனவே மொழி, இனப்பரவல் என்பது இந்தியாவிலிருந்து வெளியே போயிருப்பது சர்வ நிச்சயம். பசு, எலி தரவுகளும், மனித மரபுத் தரவுகளும் இதையே காட்டுவதையும் கண்டோம்.

இதில் பிரதானமாக விட்டுப்போன சரக்கை மிக அழகாக பாலுவும், பேராசிரியரும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதுதான் கடல்வழிப் பரவல்.

மொழி என்று எடுத்தாலும் எங்கோ தூரக்கிழக்கில் இருக்கின்ற கொரிய மொழி தமிழ் மொழியின் சாயல் கொண்டு இருக்கிறது. காரணம் கேட்டால் கிறிஸ்து சகாப்த்தத்தின் ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து ஒரு இராணி வந்தாள், எங்கள் வம்சத்தைத் தந்தாள் என்று கொரியத் தொன்மங்கள் சொல்கின்றன.

நண்பர் பாலுவின் மிக முக்கிய பங்களிப்பு எப்படி ஆதித்தமிழன் பெரிய வித்தைகள் ஏதுமின்றி ஆமைகள் செல்லும் திசை வழி சென்று புதிய பரப்புகளை எட்டினான் என்பது. யாருமே யோசித்திராத ஒரு சுருக்கு வழி.

அடுத்து டாக்டர் ராஜன் போன்றோரின் அகழ்வாராய்ச்சித் தரவுகள். இவை மிகத்தெளிவாக கடல் வாணிபம் பற்றிய தடயங்களை முன் வைக்கிறது. தினமலர் கிருஷ்ணமூர்த்தியின் தொல்காசுகள் மிகத்தெளிவாக கிரேக்க, ரோமாபுரி கடல்வழித்தொடர்புகளை ஊர்ஜிதம் செய்கின்றன. 

உலகெங்கிலுமுள்ள கடற்கரைப் பட்டினங்களின் பெயர்கள் தமிழ்ச்சாயல் கொண்டிருப்பதை பாலு சுட்டுகிறார். மேலும் பல தமிழ் அறிஞர்கள் உலக மொழிகள் அனைத்திலும் தமிழின் தாக்கம் இருப்பதைக் காட்டுகின்றனர். இவையெல்லாம் வகைப்படுத்தப்பட்டு முறையாக சர்வதேச அளவில், ஒட்டு மொத்த இந்திய அளவில் அறியப்பட வேண்டுமென்பதில் ஐயமே இல்லை.

இந்தியா என்று பேசினால் இரண்டே மொழிகள் அனைத்து கலாச்சார, அறிவியல் ஞானத்தை தக்க வைத்துள்ளன. அவை சமிஸ்கிருதம், தமிழ். இவைகளுக்குள் போட்டி இருப்பது போல் காட்டப்பட்டாலும் இந்தியாவின் விஸ்தாரணத்தைக் கணக்கில் கொண்டு சமிஸ்கிருதம் எனும் மொழியை இந்தியாவின் lingua franca என்று ஆக்கியதில் பண்டையத் தமிழனுக்குப் பெரும் பங்குண்டு. இந்தியாவின் மாபெரும் தத்துவ தரிசனங்களான அத்வைதம், விசிட்டாத்வைதம், துவைதம் போன்றவற்றை நிறுவியவர்கள் தென்னிந்தியர்கள் என்பதை மறத்தல் கூடாது. ஆழமான சமிஸ்கிருத ஞானமும், மறைபொருள் விளக்கமும் அறிந்திராமல் இம்மாபெரும் செயல்களைச் செய்திருக்க முடியாது. பல புராணங்கள் இங்குதான் எழுதப்பட்டுள்ளன. இன்றுவரை வேத பாடாந்தரம் என்று வந்தால் தமிழகப் பாடாந்தரமே உயர்வாகக் கருதப்படுகிறது. வடமொழியை இவர்கள் அந்நியமாகக் கருதியதே இல்லை. வடமொழியை பயிற்றுவிக்க அதற்கென தென்னிந்திய வட்டெழுத்தின் சாயலில் கிரந்தம் எனும் குறியீட்டைக் கண்டவன் தமிழன். எப்படித்தமிழ் நமக்குச் சொந்தமோ, அதே போல் சமிஸ்கிருதமும் நம் முதுசொம். அதனால்தான் நண்பர் இரவிகுமார் அவர்கள் முன்னெடுப்பில் தமிழ், சமிஸ்கிருத கருத்தரங்கம் ஏற்பாடானபோது மிகவும் மகிழ்ந்தேன். சமிஸ்கிருதம் பார்ப்பனர்கள் சொத்து அல்ல. அது தமிழ் மக்கள் சொத்து. அதற்கு சொந்தம் கொண்டாட அனைவருக்கும் உரிமையுண்டு. அதுவே ஆரோக்யமானதும் கூட. பாரதி கனகவேலுக்குப் பூணூல் போட்டது இந்த பிதுர்ராஜ்ஜியச் சொத்து தலித்திற்கும் சொந்தம் என்று காட்டத்தான். நான் பெங்களூரில் இருக்கும் சூப்பர் கம்யூட்டர் ஆய்வகத்தில் டாக்டர் இராமானுஜன் என்பவரைச் சந்தித்தேன். பல விஷயங்கள் பேசிக்கொண்டிருந்த போது அவர் ஆணித்தரமாக ஒரு கருத்தைச் சொன்னார். என்னை வேதப்பொருள் பற்றி ஒரு ஆங்கிலேயர் நிறைந்த அரங்கிலும், தலித்துகள் நிரம்பிய அரங்கிலும் பேசச்சொன்னால் நான் தலித்துகள் அரங்கையே தேர்வு செய்வேன் என்றார். காரணம், தலித்துகள் இந்த மண்ணின் மனிதர்கள். இந்தியாவின் விழுமியச்சிறப்பு அறிந்து அதற்கு பங்களித்து இருப்பவர்கள். இவர்களுக்கு நான் அதிகச் சிரமமில்லாமல் விளக்கமுடியுமென்றார். அவ்வாறே பின்னால் ஒரு கருத்தரங்கிற்கும் சென்றார்.

அடுத்து தமிழ் மொழியில் புதைந்துள்ள அறிவியலைக் கண்டு எடுக்க வேண்டும். யாம் ஓலைச்சுவடிகளை மின்னாக்கம் செய்யத்துணிந்தது இந்த ஆசையில்தான். ஓலைச்சுவடிகள்தான் நமது Database. அது அழிந்துவிட்டால் நாம் நாளை பெருமையாகப் பேச ஏதுமில்லை. அதற்கான முயற்சியில் முனைவர் மா.இராஜேந்திரன் அவர்களோடு சேர்ந்து தஞ்சைப்பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டதில் எங்களுக்கு பாரிய திருப்தியுண்டு. முதலில் இருக்கின்ற விஷயங்களைக் காக்க வேண்டும்.

இந்தியாவின் ஆகப்பெரும்பான்மை கல்வெட்டுக்கள் தமிழகத்தில் உள்ளன. மிகத்தொன்மையான மனித ஈமச்சடங்கு குழிகள், முதுமக்கள் தாழிகள் தமிழகத்திலேயே உள்ளன. தமிழகமே இந்திய கலாசாரத்தின் தாயகமாக இருக்க நிரம்ப வாய்ப்புண்டு. அதை நாம் முறையாக நிறுவ வேண்டும். 

தமிழ் வளர்ச்சி என்பது சக இந்தியர்களை அரவணைத்து, அவர்களுக்கு பாடம் சொல்லி வழிநடத்தலிலும், உலக அளவில் பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலிலும் தான் உள்ளது. சும்மா குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு அருதப்பழசான, அறிவியலுக்கு ஒவ்வாத, காலனித்துவ ஆரிய, திராவிட பிளவுக்கொள்கைகளை கட்டி அழுவதால் நமக்கு கிஞ்சித்தும் பிரயோஜனமில்லை. நாம் செல்ல வேண்டிய திசை மிகத்தெளிவாகத் தெரிகிறது. பெரிய பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணிகளையெல்லாம் தனி ஆட்களாக பாலு போன்றோர் செய்கின்றனர். தமிழ் மரபு அறக்கட்டளை எந்த மானியமும் இல்லாமல் ஆர்வலர்களின் துணை கொண்டு 12 வருடங்களாக உழைத்து வருகிறது.  எனவே உழைப்போரிடன் குறைகள் கண்டு ‘ளொள்ளு’ சொல்வதை விட்டு, குழிபறிப்பதை தவிர்த்து இணையத்தமிழர்கள் உறவுக்கரம் நீட்டினால் இன்னும் எவ்வளவோ செய்ய முடியும். இங்கு யாரும், யாருக்கும் எதிரியல்ல. எல்லோரும் ஒரு தாயின் மக்கள்தான். இதை உணர்ந்துதானோ என்னவோ பாரதி, 

பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப் 
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.

என்றான். அது என்ன ஒரு தேசத்தின் பெயர் சொன்னால் பயம் எப்படிப்போகும்? நாம் ஒருவர் என்ற உணர்வு வந்தால் அது பலம். என்ன பகையை வெல்ல முடியும்? தாழ்வு மனப்பான்மை எனும் பகையை. அறிவின் வறுமை எனும் பகையை. முதுசொம் அறியா இருளெனும் பகையை. இவைதான் நம்மை ஆரியன், திராவிடன் என்று பிரித்து சூறையாடுகிறது. இப்பகையை வெல்லும் மந்திரம் என்னவென்று பாரதி கண்டு சொல்கிறான். பாரதிக்கும் மேல் தமிழ் மேல் பற்றுக்கொண்ட ஒருவனுண்டோ இந்த வையகத்தில். 

நாம் பயம் கொல்லுவோம். பகை வெல்லுவோம்.

மிக்க அன்புடன்
நா.கண்ணன்

N. Kannan

unread,
Dec 4, 2012, 5:47:00 AM12/4/12
to mint...@googlegroups.com
2012/12/4 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
மிகவும் அருமையாக செல்கிறது 



முடிச்சாசு பாலு. இனி நீங்கள் களத்தில் இறங்குங்கள். நாங்கள் அறியாதன சொல்லுங்கள்.

நன்றி வணக்கம்.

கண்ணன் 

s.bala subramani B+ve

unread,
Dec 4, 2012, 6:18:43 AM12/4/12
to mint...@googlegroups.com
இணையத்தில் நமது மருத நில பண்பாடுகளின் தரவுகள் பள்ளர் மள்ளர் என்ற உளவு சமுகம் மூலமாக ஆமைகளின் வழியில் கடலோடும் கடலர்களின் துணையோடு எப்படி கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களுக்கு தீவுகளுக்கு சென்றது என்பதற்கான இணைய வழி என்ற தேடலுக்கு இடையில் ,

மின்தமிழின் உங்கள் மடல்களை படித்து உங்கள் எழுத்து வடிவத்தை ரசிக்கும் வேளையில் , சிந்தனையின் ஒழுங்குபாட்டை அதன் போக்கில் விடமால் அதை கையாண்ட விதத்தை 
ரசித்து கொண்டு இருக்கும் போது 

மொபைல் போனின்   அழைப்பு 

மருதநில பண்பாடுகளின் ஆய்வுகளில் என்னோடு துணை இருக்கும் விஜய் டி வீ செல்வா கை பேசியில் பேசுகிறார் 

" பாலு சார் 


உங்களுக்கு லட்டு போன்ற ஒரு செய்தி 



நன்றாக தமிழ் பேசும் அமெரிக்க யூதர் பெண் விக்டோரியா 

எங்கள் மருத நில பண்பாடுகளை பற்றி ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறார் 

இன்று சென்னையில் என்னை பார்க்க வந்தார் ,உங்களை பார்க்க ஆசைப்பட்டார் ,டிசம்பர் முழுவதும் தமிழகத்தில்  இருக்கபோகிறார் 


நாட்டார் வழக்கியல் ஒப்பிட்டிவியல் ஆய்வுகள் அமெரிக்கா பல்கலைக்கழகதிற்காக   முனைவர் படிப்புக்காக உழைத்து வருகிறார் 

நாளை உங்கள் வீட்டிற்கு அழைத்து வருகின்றேன் என்றார் 


 உங்கள் மடல் படித்து கொண்டு இருக்கும் போது இந்த  செய்தியும் வந்ததால் 

சமையல் அறைக்கு சென்று பேரிச்சம்பழம்  சாப்பிட்டு கொண்டே 
மடலை முடிக்கிறேன் 

நாளை  முழு வீச்சுடன் எழுதுவேன் 



s.bala subramani B+ve

unread,
Dec 4, 2012, 6:44:45 AM12/4/12
to mint...@googlegroups.com
இணையத்தில் நமது மருத நில பண்பாடுகளின் தரவுகள் பள்ளர் மள்ளர் என்ற உழவு  சமுகம் மூலமாக 

s.bala subramani B+ve

unread,
Dec 4, 2012, 10:34:01 AM12/4/12
to mint...@googlegroups.com
ஆய்வின் பிணைப்பில் இருப்பதாலும் ,

இன்னும் என் இலக்கு பல தூரத்தில் கானல் நீர் போல் அருகில் வந்து தொலைவில் செல்வதாலும் 

சில முக்கிய குறிப்புகள் மட்டும் உங்கள் பார்வைக்கு 

ஆங்கிலேயர்களால் இணைக்கப்பட்ட சமஸ்தானங்களின் அடிப்படையில் உருவான அகண்ட இந்தியா 

விடுதலை அடைந்த பின் படேலின் செயல்களால் ஒன்றாகபட்ட இந்தியா  

( தால்ச்சர் ஜமினுகாக சேவைகள் புரிந்ததால் இது எனக்கு நன்றாக விரிவாக  தெரியும் )

ஆங்கிலேயர்களின் காலத்தில் சமஸ்க்ரிதத்தின் நிலை ,தமிழ் மொழியின் நிலை 

பதிப்புக்கலை வந்ததால் தமிழின் சிறப்புகள் அனைவருக்கும் தெரிய வந்த நிலை 

அந்த நிலை அக்காலத்தில் சம்ச்க்ரிதத்தற்கு கிடையாது 

இன்று இரண்டு மொழியும் அணைத்து   இந்தியாவின் பெருமைகளுக்கு இரண்டு மொழிகளும் ஒரு காரணம் 

இன்று ஆங்கிலம் செய்யும் தமிழியல் வேலைகளை அன்று சமஸ்க்ரிதம், மத்திய கிழக்கு (ஒரிசாவில் ) இந்தியாவில்  இருந்து வந்த க்ரந்தம்  செய்தலால் 

தமிழை பற்றிய கூறுகள் அந்த மொழியில் இருந்தும் நமக்கு அனைத்தும் தெரியாத நிலை 

ஏன் 
சங்க இலக்கியம் கூட என்னை போன்ற பிற துறை மக்களின் கையில் வரும் போது அதன் புரிதல் அதிகமாகின்றது , உதாரணம் : கடலியல் 

பிற மொழிகளின் உள்ள தமிழ் தொடர்புகளை எடுக்கும் போது வியப்பின் உச்சத்திற்கு சென்று விடுகிறோம் 

உதாரணம் ; 
பாம்பே அருகில் உள்ள கநோரி கல்வெட்டில் உள்ள தமிட வணிகா , நாகர்ஜுன டாமிட வணிய, காரவேலன் கல்வெட்டுகள் ,இலங்கை வாணிய கல்வெட்டுகள்  மற்றும் உலகமெங்கும் உள்ள வணிக தொடர்புகள் ,பண்பாடு தொடர்புகள், பிற மொழிகளில் உள்ள கூறுகள் 

"கடலில் சற்று அதிகமாக "



சாந்திபாப்பு சொல்கிறார்  தென் இந்தியாவை தொடாமால் இனி உலக பழங்கற்கால நாகரிகம் பற்றி ஆய்வு செய்ய முடியாது என்று 

அவரின் ஆய்வுகள் ,எனக்கு தெரிந்தவை கூட உலகத்திற்கு தெரிய இன்னும் பல வருடங்கள் ஆகும் .ஆய்வின் நுணுக்கமும் அதை உலகம் ஒப்பு கொள்ளும் படியாக ஆய்வு எழுத்தில் கொண்டு வர ஏற்படும் நுணுக்கமும் உங்கள் அனைவருக்கும் தெரியும் 

மனித  உடலே வெப்ப மண்டலத்திற்கு எடாற்போல் இருக்கிறது என்பதை ஆய்வுகள்நிரூபிக்கின்றன 

குறிப்பாக இன்றைய இந்தியாவின் வேர் என திகழும் தென்னகம் அதன் புவிஇயல் நிலை , சூரியனை சரியாக உள் வாங்கும் தன்மை ,

அடுப்பில் தோசை கல்லில் இருக்கும் தோசையை சிறிது அது வெப்பத்தை உள் வாங்கும் தன்மையை நினைத்து  பாருங்கள் 

அதனுடன் மனித உடலையும் ஒப்பிட்டு பாருங்கள் ,

நிறங்கள் நமக்கு யார் தந்தது ( இதை பற்றி தனி நூலே எழுதலாம் )

(நிலநடுக் கோட்டிற்கு 28 அகலாங்குகள் வடக்கிலும் தெற்கிற்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் உள்ள மழைக்காடுகளே வெப்பமண்டல மழைக்காடுகள் (இலங்கை வழக்கு: அயனமண்டல மழைக்காடுகள்) எனப்படும். வெப்பமண்டல மழைக்காடுகள் அதிகமான வெப்பத்தையும் மழைவீழ்ச்சியையும் கொண்டுள்ள மழைக்காடுகளாகும். )

கை கோடாரியின் கூர் போல் இருக்கும் நமக்கு 
மூன்று புறமும் கடலை கொண்ட நம் மக்களை பற்றி நமக்கு முழுமையாக தெரியுமா 

ஒரே காலத்தில் இபிரியன் கிரேக்க அயோனிய ,ஆப்ரிக்கா ,எகிப்து பாரசிக ,சுமேரிய  போன்ற பல  மேலை நாட்டையும் அறிந்து 


அதே சமயத்தில் சீனா ஆஸ்திரேலிய ஜப்பான் கொரியா மற்றும் ஏனைய தென்கிழக்கு ஆசியாவையும் முழுமையாக அறிந்த நமக்கு 

தென் அமெரிக்காவில் இருந்து கிழக்கு ஆப்ரிக்கா வரை முழுமையாக அறிந்து அதன் நடுவில் உள்ள அணைத்து தீவுகளிலும் தமது பண்பாட்டு சின்னங்களை ,மொழியை நிறம் மாறிய அந்த மக்களிடம் விட்டு வந்த நமது மக்களின் வரலாற்று தொன்மையை அவ்வளவு எளிதாக எடை போட முடியாது 

ஏன் நாம் ஆதிச்ச நல்லூரை பற்றி அதை போன்ற சில ஆயிரம் ஈம காடுகளை பற்றி பேசுவதில்லை 

செப்பு சின்னங்களை பற்றி பேசுவதில்லை ,

இரும்பு நாகரிகத்தை பற்றி முழுமையாக ஏன்  பேசுவதில்லை , 

(இரும்பு மற்றும் கனிம தொழிலில் தினம்  இருந்தவன் நான் )

தொலை தூர வணிக மேலாண்மை , மருத நில மேலாண்மை ,கடலியல் மேலாண்மையை பற்றி முழுமையாக ஏன் பேசுவதில்லை 

நீரோட்டத்தில் செல்லும் ஆமைகளின் உலக வரைபடத்தை நான் விரிவாக கொடுக்க ஆரம்பித்தால் அதற்கும் தமிழின் தடயங்களை ஒப்பிட்டு கொடுத்தால் 
பலரும் மயங்கி விடுவார்கள் 

இன்னும் எவ்வளவோ இருக்கிறது  

இன்னும் நிறைய உழைப்பு தேவை இருக்கிறது 

சொந்த மற்றும் இரந்து உண்டு வாழ்ந்து  ஆய்வு கட்டுரைகள் கொடுப்பது அவ்வளவு  எளிது அல்ல 


N. Kannan

unread,
Dec 4, 2012, 1:50:01 PM12/4/12
to mint...@googlegroups.com
2012/12/4 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:

> இன்று இரண்டு மொழியும் அணைத்து இந்தியாவின் பெருமைகளுக்கு இரண்டு மொழிகளும்
> ஒரு காரணம்
>

பாலு, தமிழகத்தில்தான் இப்படியொரு அசட்டுச்செயல் நடக்கிறது. ஏன்
சமிஸ்கிருதத்தை வெறுக்கிறோம் என்று தெரியாமலே நஞ்சூட்டப்பட்டுவிட்டனர்.

தமிழகத்தின் பிற மாநிலங்களில் இல்லாத ஒரு மனநிலையிது. இதனால் நாம்
இழப்பதுதான் அதிகம்.

வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து படிப்போர் எல்லோரும் சமிஸ்கிருதம்
கற்றுக்கொள்கின்றனர். (கற்றுக்கொண்டுதான் நம்மவருக்கு சூடேற்றும்
தியரிகளை முன்வைக்கின்றனர் :-(

இப்போது தமிழ் படிப்பதும் கூடி வருகிறது. இவ்விரு செம்மொழியறிவு
இல்லையெனில் இந்தியக்கலாச்சாரத்தை முறையாக அறியவியலாது என்பது நிதர்சனம்.
உண்மையில் ஜாதீயச்சாயல் பூசப்பட்டு ஒரு மொழியறிவு புறக்கணிக்கப்படுவது
எவ்வளவுதூரம் நாம் பகுத்தறிவிற்கப்பாற்பட்டு செயல்படுகிறோம் என்பதைக்
காட்டுகிறது.

சுதந்திரமான இந்தியாவில், தமிழகத்தில் தமிழ்க் குறியீட்டின் (கிரந்தம்)
துணை கொண்டு சமிஸ்கிருதம் அழகாகப் படிக்கலாம். ஈழத்தில் அப்படித்தான்
படித்துவருகிறார்கள், இன்றளவும். இந்த மாயை சமீபத்தில் உருவாக்கப்பட்டது.
நீங்கள் சொல்வது போல், ‘இதுவும் கடக்கும்’.

> உதாரணம் ;
> பாம்பே அருகில் உள்ள கநோரி கல்வெட்டில் உள்ள தமிட வணிகா , நாகர்ஜுன டாமிட வணிய,
> காரவேலன் கல்வெட்டுகள் ,இலங்கை வாணிய கல்வெட்டுகள் மற்றும் உலகமெங்கும் உள்ள
> வணிக தொடர்புகள் ,பண்பாடு தொடர்புகள், பிற மொழிகளில் உள்ள கூறுகள்
>

இது உங்களது மிக முக்கிய பங்களிப்பு என்று படுகிறது. இந்தியாவின் பிற
மாநிலங்களில் தமிழின் கூறுகள் என்றே ஆய்வு செய்ய வேண்டிய துறையிது.
உங்களது கலிங்கத்தமிழ் நிச்சயம் பேசப்படும்.


> சாந்திபாப்பு சொல்கிறார் தென் இந்தியாவை தொடாமால் இனி உலக பழங்கற்கால நாகரிகம்
> பற்றி ஆய்வு செய்ய முடியாது என்று
>
> அவரின் ஆய்வுகள் ,எனக்கு தெரிந்தவை கூட உலகத்திற்கு தெரிய இன்னும் பல வருடங்கள்
> ஆகும் .ஆய்வின் நுணுக்கமும் அதை உலகம் ஒப்பு கொள்ளும் படியாக ஆய்வு எழுத்தில்
> கொண்டு வர ஏற்படும் நுணுக்கமும் உங்கள் அனைவருக்கும் தெரியும்
>

பேரா.பிச்சப்பன் இத்தகைய தொல்லியல், வடமொழி அறிவுடையோருடன் தொடர்பு கொள்ள
ஆசைப்படுகிறார். பல்துறை இயக்கப்பேச்சு என்பது காலத்தின் கட்டாயம்.
உயிரியல் துறை வல்லுநர்கள், மொழியறிஞர்கள், தொல்லியல் நிபுணர்கள்
போன்றோர் கூடிப்பேச ஏற்பாடு செய்ய வேண்டும். அது நிச்சயம் தமிழின்
தொன்மையைநிலை நாட்ட உதவும்.

> ஒரே காலத்தில் இபிரியன் கிரேக்க அயோனிய ,ஆப்ரிக்கா ,எகிப்து பாரசிக ,சுமேரிய
> போன்ற பல மேலை நாட்டையும் அறிந்து

> அதே சமயத்தில் சீனா ஆஸ்திரேலிய ஜப்பான் கொரியா மற்றும் ஏனைய தென்கிழக்கு
> ஆசியாவையும் முழுமையாக அறிந்த நமக்கு
>
> தென் அமெரிக்காவில் இருந்து கிழக்கு ஆப்ரிக்கா வரை முழுமையாக அறிந்து அதன்
> நடுவில் உள்ள அணைத்து தீவுகளிலும் தமது பண்பாட்டு சின்னங்களை ,மொழியை நிறம்
> மாறிய அந்த மக்களிடம் விட்டு வந்த நமது மக்களின் வரலாற்று தொன்மையை அவ்வளவு
> எளிதாக எடை போட முடியாது
>

உண்மை. வெளிநாடுகளில் கிடைக்கும் பழம் தமிழ் தொல்லியற்பொருட்கள் பற்றிய
அட்டவணையொன்றைத் தயாரிக்க வேண்டும்.


> ஏன் நாம் ஆதிச்ச நல்லூரை பற்றி அதை போன்ற சில ஆயிரம் ஈம காடுகளை பற்றி
> பேசுவதில்லை
>
> செப்பு சின்னங்களை பற்றி பேசுவதில்லை ,
>
> இரும்பு நாகரிகத்தை பற்றி முழுமையாக ஏன் பேசுவதில்லை ,
>
> (இரும்பு மற்றும் கனிம தொழிலில் தினம் இருந்தவன் நான் )
>
> தொலை தூர வணிக மேலாண்மை , மருத நில மேலாண்மை ,கடலியல் மேலாண்மையை பற்றி
> முழுமையாக ஏன் பேசுவதில்லை
>
> நீரோட்டத்தில் செல்லும் ஆமைகளின் உலக வரைபடத்தை நான் விரிவாக கொடுக்க
> ஆரம்பித்தால் அதற்கும் தமிழின் தடயங்களை ஒப்பிட்டு கொடுத்தால்
> பலரும் மயங்கி விடுவார்கள்
>

இவையெல்லாம் மறுக்கமுடியாத உண்மைகள். கவலை வேண்டாம். இந்தியா
சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டிற்குள் நாம் எவ்வளவோ சாதித்துவிட்டோம்.
தளராமல் இச்சேதிகளை தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் வெளியிடுவோம்.

யுடூப் ஒரு வலுவான பரவல் ஊடகம். தாங்கள் சரியென்றால், மின்தமிழ்
ஒளிபரப்பை நாளையே தொடங்கலாம். அரைகுறை ஆங்கிலம் கூடத் தேவலை. இல்லை
பின்னால் subtitle போட்டுக்கொள்ளலாம். நீங்கள் முக்கியமென்று கருதுவதை
நாம் யுடூப் வழியாக ஒளிபரப்புவோம். நண்பர் செம்மல் இங்கு இருக்கிறார்.


> இன்னும் எவ்வளவோ இருக்கிறது
>
> இன்னும் நிறைய உழைப்பு தேவை இருக்கிறது
>

ஆர்வமுள்ள இளைஞர் படையொன்று உருவாக வேண்டும். இங்கு உதயன் வந்து, மெல்ல,
மெல்ல பாம்பு, ஓணானிலிருந்து தமிழக தொன்ம எச்சங்களுக்குள்
இறங்கியிருக்கிறார் பாருங்கள். ‘அது!’.

> சொந்த மற்றும் இரந்து உண்டு வாழ்ந்து ஆய்வு கட்டுரைகள் கொடுப்பது அவ்வளவு
> எளிது அல்ல
>

தாங்கள் உடல்நலம் பேணி சமகால தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உளைச்சல்
இல்லாமல் செயல்படும் முறைகளைக் கண்டு பிடியுங்கள். நிச்சம் வழி இருக்கு.
தளர வேண்டாம். உங்களுக்குத்துணையாக எத்துணையோ நண்பர்கள் இங்குள்ளார்கள்.

நட்புடன்
நா.கண்ணன்

செல்வன்

unread,
Dec 4, 2012, 11:14:29 PM12/4/12
to mint...@googlegroups.com

கண்ணன் ஜி,

மிக சிறப்பாக இழையை நகர்த்தி உள்ளீர்கள். பாலுவின் ஆய்வு, கொரியா சென்ற தமிழ் இளவரசி, தமிழ் நூல்கள் கூறும் தொன்மங்களின் உலகளாவிய பார்வை மற்றும் இந்திய பண்பாட்டின் உலகளாவிய பார்வை முதலிய அனைத்தையும் இணைக்கும் மிஸ்ஸீங் லிங்காக ப்ரியதர்ஷ்யின் உரையை முன்நிறுத்தி உள்ளீர்கள். இந்த கோணம் ஆய்வுலகில் ஆராயபடவேண்டும் என்பதன் அவசியத்தை உங்கள் கட்டுரைகள் நன்கு புலப்படுத்துகின்றன.



 

2012/12/4 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
செல்வன்


seshadri sridharan

unread,
Dec 5, 2012, 12:30:44 AM12/5/12
to mint...@googlegroups.com


2012/12/5 N. Kannan <navan...@gmail.com

//பாலு, தமிழகத்தில்தான் இப்படியொரு அசட்டுச்செயல் நடக்கிறது. ஏன் சமிஸ்கிருதத்தை வெறுக்கிறோம் என்று தெரியாமலே நஞ்சூட்டப்பட்டுவிட்டனர். //

எந்த ஒரு தொல்லியல் எச்சமும் தமிழில் இருந்தால் தான் அது தமிழருடையதாக ஏற்கப்படுகின்றது. அவ்வாறு அல்லாத நிலையில் அது ஆரியமாகவே கொள்ளப்படும் சூழல் உள்ளது. தமிழ் மட்டுமே சமற்கிருத்த்த்தோடு தொடர்பு இல்லாததால் அதை முழுதும் தமிழருடையதாக்க் காட்ட முடிகின்றது. மற்ற மொழி பேசப்படும் பகுதிகளில் கிட்டும் தொல்லியல் எச்சங்கள் அவருடைய பெருமையாக இதுவரை கொள்ளப்படவில்லை. 

இவ்வளவு ஏன் தமிழ்நாட்டில் ஈமத் தாழிகளில் கிட்டும் எலும்புக் கூடுகளை வைத்து இது எரித்த பின் தாழியில் இட்டு புதைக்கப்பட்டுள்ளது. எனவே இது ஆரியப் வழக்கம் தான். ஆதலால் இங்கு வேதம் எப்போதிருந்தோ (ஆதி முதலே) உள்ளது  எனப் பொய் கூறும் பல இணையதளங்கள் உள்ளன. இது மின்தமிழ் உறுப்பினர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் போகலாம்.  ஆதலால் சமற்கிருதத்தை விலக்கி வைப்பதில் எந்த தவறும் இல்லை. மீறி தமிழர் சமற்கிருத்த்தை தழுவுவாரேயானால் தமிழருக்கு நாகரிகம் கற்றக்கொடுத்தவரே ஆரியர் தான் என்ற பொய்யுரை பரவலாகிப் போகும். தமிழருக்கு வரலாறே கிடையாது என்று ஆகிப் போகும். தமிழர் தம்மைத் தமிழராக உணராததால் தான் திராவிடம் பேசிய பெரியார் கூட தமிழருக்கு நேர் வரலாறு இல்லை என்று சொல்லும் துணிவு ஏற்பட்டது. திராவிடமே இப்படி என்றால் ஆரியத்தை சொல்லவா வேண்டும்.

//வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து படிப்போர் எல்லோரும் சமிஸ்கிருதம் கற்றுக்கொள்கின்றனர். (கற்றுக்கொண்டுதான் நம்மவருக்கு சூடேற்றும் தியரிகளை முன்வைக்கின்றனர் :-( 

இப்போது தமிழ் படிப்பதும் கூடி வருகிறது. இவ்விரு செம்மொழியறிவு இல்லையெனில் இந்தியக்கலாச்சாரத்தை முறையாக அறியவியலாது என்பது நிதர்சனம் உண்மையில் ஜாதீயச்சாயல் பூசப்பட்டு ஒரு மொழியறிவு புறக்கணிக்கப்படுவது எவ்வளவுதூரம் நாம் பகுத்தறிவிற்கப்பாற்பட்டு செயல்படுகிறோம் என்பதைக் காட்டுகிறது. சுதந்திரமான இந்தியாவில், தமிழகத்தில் தமிழ்க் குறியீட்டின் (கிரந்தம்) துணை கொண்டு சமிஸ்கிருதம் அழகாகப் படிக்கலாம். ஈழத்தில் அப்படித்தான் படித்துவருகிறார்கள், இன்றளவும். இந்த மாயை சமீபத்தில் உருவாக்கப்பட்டது. நீங்கள் சொல்வது போல், ‘இதுவும் கடக்கும்’//

என்ன சமற்கிருதம் கற்றாலும்!! அந்த அறிவால் இந்தியப் பண்பாட்டை, அதன் வரலாற்றை 1,800 ஆண்டுகளுக்கு முற்பட அறிந்துகொள்ள இயலாது ஏனென்றால் கி.பி. 2 ஆம் நூற்றாணடிற்கு பிறகு தான் முதல் சமற்கிருத கல்வெட்டுப் பயன்பாடே தோன்றுகின்றது. இந்த நிலையில் சமற்கிருத அறிவு இல்லாவிட்டால் இந்தியப் பண்பாட்டை அறியமுடியாது என்பது பொய்ப் பரப்புரையே. இந்தியாவிற்கு 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டும் வரலாறு உண்டு. ஆனால் அவை சமற்கிருதத்தில் அல்ல என்பது உணரப்பட்ட உண்மை.



சேசாத்திரி



[பேரா.பிச்சப்பன் இத்தகைய தொல்லியல், வடமொழி அறிவுடையோருடன் தொடர்பு கொள்ள

ஆசைப்படுகிறார். பல்துறை இயக்கப்பேச்சு என்பது காலத்தின் கட்டாயம். உயிரியல் துறை வல்லுநர்கள், மொழியறிஞர்கள், தொல்லியல் நிபுணர்கள் போன்றோர் கூடிப்பேச ஏற்பாடு செய்ய வேண்டும். அது நிச்சயம் தமிழின் தொன்மையைநிலை நாட்ட உதவும்.
உண்மை. வெளிநாடுகளில் கிடைக்கும் பழம் தமிழ் தொல்லியற்பொருட்கள் பற்றிய
அட்டவணையொன்றைத் தயாரிக்க வேண்டும்.
இவையெல்லாம் மறுக்கமுடியாத உண்மைகள். கவலை வேண்டாம். இந்தியா
சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டிற்குள் நாம் எவ்வளவோ சாதித்துவிட்டோம்.
தளராமல் இச்சேதிகளை தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் வெளியிடுவோம்.]

N. Kannan

unread,
Dec 5, 2012, 3:35:58 AM12/5/12
to mint...@googlegroups.com
அன்பின் சேசாத்திரி:

உங்கள் துணிகரமான இந்த நிலைப்பாடு எனக்குப் பிடித்திருக்கிறது.

நான் ஏன் இந்த இழையில் சமிஸ்கிருதம் படிக்க வேண்டுமென்று சொல்கிறேன்
எனில் நம்ம புராணங்களில், இதிகாசங்களில் அப்படி என்னதான் சொல்லியுள்ளது
என நாம் முதலில் அறிதல் வேண்டும். நிறுவனப்படுத்தப்பட்ட கருத்தாக்கங்கள்
அனைத்தும் சமிஸ்கிருத அறிவின்பாற் பெறப்பட்டதே. இன்றுவரை சமிஸ்கிருதம்
கற்காத இந்தியவியல் என்பது உலகிலேயே இல்லை. இதற்கு மாற்று தமிழ் கற்பது
என்றால் அதை துரிதப்படுத்த வேண்டும். வளப்படுத்த வேண்டும். இருக்கின்ற
வளங்கள் பற்றி எல்லோரும் அறியத்தர வேண்டும். தொட்டவுடன் சேதி பரவும் இந்த
யுகத்தில் இருந்தும் கூட ஒவ்வொரு தமிழனும் தன் மரபை அறிந்து கொள்ளவும்,
அது பற்றி மற்றவர் தெரிந்து கொள்ளவும் வகை செய்யவில்லையெனில் எப்படி இது
தொன்மையான மரபு என்பது நிறுவனப்படும்?

நா.கண்ணன்

2012/12/5 seshadri sridharan <ssesh...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--

N. Kannan

unread,
Dec 5, 2012, 3:42:57 AM12/5/12
to mint...@googlegroups.com
இந்த இழைக்குத்தொடர்பான சேதியொன்று ஒரு சிங்கப்பூர் நண்பர் அனுப்ப இன்று
வந்தது. அது ‘ரோமா’ என்றும் ‘குரவர்கள் (ஜிப்ஸி)’ என்றும் அழைக்கபடும்
ஐரோப்பிய பழம்குடிகள் பற்றிய சேதியிது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
இந்திய ஆய்வாளர்களுடன் இணைந்து நடத்திய ஜினோமிக்ஸ் ஆய்வில் இவர்கள்
‘இந்திய வம்சத்தினர்’ என்பது நிரூபணமாகியுள்ளது. சிந்து சமவெளி காலத்தில்
இடம் பெயர்ததாக கருத்தப்படுகிறது. இணைப்பைப் பாருங்கள். இவர் இச்சேதியின்
மூலத்தைத் தரவில்லை. ஆயின் இணையத்தில் தேடினால் கிடைக்கும்.

நா.கண்ணன்

attachment2
attachment3

N. Kannan

unread,
Dec 5, 2012, 4:01:09 AM12/5/12
to mint...@googlegroups.com
அன்பின் செல்வன்:

மிக அழகாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். எனக்கு டாக்டர் பிரியதர்ஷி யார்,
அவரது பின்புலம் என்னவென்றெல்லாம் தெரியாது. ஆனால் அவர் முன் வைக்கும்
ஆய்வுக்குறிப்புகள் எனது நம்பிக்கைக்குக் வலுவூட்டுவதாக உள்ளது. ஏன்
துருக்கியில் உள்ள அந்தாலியா உலகின் அனைத்து மொழிகளின் தாயகமாக வேண்டும்?
ஏன் மத்திய ஆசியா மையமாகக் கருத்தப்படுகிறது? ஏனெனில் இதுவரை கிடைத்துள்ள
தரவுகளில் ‘எழுத்து’ என்பது அங்கு தோன்றியதாக நம்பப்படுகிறது. மிகப்பழைய
எழுத்துமுறைகளைப் புரிந்து கொள்ளும் வகையில் ரோசட்டா கல்வெட்டு போன்றவை
(இருமொழி மாற்று) அங்கு கிடைத்துள்ளன.

நான் இங்கு அழுத்திச் சொல்வது, “தரவுகள் இல்லையெனில் அறிவியல்
பேசாமடந்தையாகிவிடும்” என்பது. சிந்து சமவெளி குறியீடுகள் ”எழுத்துமுறை”
என்பதை அறிவியல் பூர்வமாக நிருவ வேண்டியது தொன் தமிழ் அறிந்த பெரியோர்
கடமை. நண்பர் நா.கணேசன் ‘சத்யமென’ நம்பும் அயலக ஆய்வாளர்களின் கட்டுரைகள்
நிறுவனப்படுத்தபட்ட நெறிமுறைகளின் வழியாகப்பேசுகிறது. நம்மவர் கையும்
ஓங்க வேண்டுமெனில் நாமும் அதே தரத்தில் கட்டுரைகள் வெளியிட வேண்டும்.

ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். அயலக ஆய்வாளர்கள் அடிப்படையில்
இந்தியர்களை நம்பித்தான் ஆய்வுகள் செய்கின்றனர். எனவே அவர்களுக்கு
convincing ஆகப் பேச நாம் கற்றுக்கொள்ள வேண்டும். சும்மாப் பழம்
பெருமையோ, இந்துத்துவா அடிப்படையிலோ பேசினால் எடுபடாது. நான் நொய்யலாறு
தொன்மச்சான்றுகளை அஸ்கோ பர்போலாவிற்கு அனுப்பியவுடன் அவர் கேட்ட முதல்
கேள்வி, ஐராவதம் மகாதேவன்’ என்ன சொல்கிறார்? என்பது. அவர் ஒருவரைத்தான்
அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் நம்பும்படி இவருக்கு தன் வாதத்தை
வைக்கத்தெரிகிறது. ஐராவதம் தமிழர்தானே? அவரால் முடிந்தால் ஏன்
மாற்றுக்கருத்துச் சொல்லும் மற்ற தமிழ் அறிஞர்களால் முடியவில்லை?

நமது திறமைக்கு சவால் வந்துள்ளது. நம்மவரே மயங்கிய நிலையில் உள்ளோம்.
கணேசன் போன்று அவர்களுக்குத் தரவு அளிக்கும் நம்மவர் நம் மக்கள் மீது
நம்பிக்கை வைக்க வேண்டும். நம் சான்றுகளை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
மாற்றம் என்பது உடனே ஏற்பட்டு விடாது. மெல்ல, மெல்லத்தான் ஏற்படும்.

நாம் நம் ஆழமான தரவுகளை (வாதங்களை) நம்பிக்கையோடு வைக்க வேண்டும்.
எறும்பூறக் கல்லும் தேயும்.

வாழிய செந்தமிழ்.
வாழ்க நற்றமிழர்.

நா.கண்ணன்

2012/12/5 செல்வன் <hol...@gmail.com>:

N. Kannan

unread,
Dec 5, 2012, 4:05:39 AM12/5/12
to mint...@googlegroups.com
நான் அனுப்பிய இணைப்பு சரியாகத்திறக்குமா என்று தெரியவில்லை (file extension is not correct). இதோ முழுக்கட்டுரையும்:
Inline images 1
Inline images 2

நா.கண்ணன்
Roma 2.jpg
Roma 1.jpg

seshadri sridharan

unread,
Dec 5, 2012, 6:17:37 AM12/5/12
to mint...@googlegroups.com
இவர்கள் தமிழ் மரபினரான அசுரர் வழி வந்தோர் என்று சர்க்கார் கூறியதை நான் ஏற்கெனவே இட்டுள்ளேன்.


“There is still another clan from this Koyel river basin – the Asuras. They originated here and developed their own separate culture. Later they left and headed northwest in the direction of Europe. A few words from their language can still be found among the Gypsies of central Asia and in the Romansch language of Europe.


by PR Sarkar, 29 September 1985, Calcutta, in his book:Shabda Cayaniká Part1chapter: Aunka to Aksa Discourse 3 


Roma 2.jpg
Roma 1.jpg

N. Kannan

unread,
Dec 5, 2012, 6:28:03 AM12/5/12
to mint...@googlegroups.com
2012/12/4 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
>
> இணையத்தில் நமது மருத நில பண்பாடுகளின் தரவுகள் பள்ளர் மள்ளர் என்ற உளவு
> சமுகம் மூலமாக ஆமைகளின் வழியில் கடலோடும் கடலர்களின் துணையோடு எப்படி கடலுக்கு
> அப்பால் உள்ள நிலங்களுக்கு தீவுகளுக்கு சென்றது என்பதற்கான இணைய வழி என்ற
> தேடலுக்கு இடையில் ,
>

அன்புள்ள பாலு:

தமிழ் மரபில் என்னையீர்ந்த இன்னொரு கூறு இந்தத் திணைசார் வாழ்வு.
திணையுடன் இயைந்த வாழ்வென்றால் மண்ணை நேசிப்பவர் வாழும் பூமி என்று
பொருள். எனக்குக் கல்யாணமான புதிது. புது மனைவியோடு இராமேஸ்வரம் வரை போய்
வந்தேன். அவள் வடக்கே வாழ்ந்தவள். இந்த மண்வாசனை அதிகம் தெரியாது.
இராமநாதபுரம், என்ன வரண்ட பூமி. வானம் பாத்த பூமி என்று இளக்காரமாகச்
சொல்வர். இது மாதிரி இவள் ஏதோ சொல்லப்போய் அருகிலிருந்த ஒரு பெரியவர்
கேட்டுவிட்டு பொல, பொலவென்று சண்டைக்கு வந்துவிட்டார். இவளுக்கு ஒன்றும்
புரியவில்லை. தமிழ்மண் எவ்வளவு நிலம் (திணை) சார்ந்தது என்று தெரியாது.
அதுவொரு ஆரோக்கியமான வாழ்வியல். மண்ணை நேசிக்காத வாழ்வென்ன வாழ்வு?

ஆனால் நகரமயமாகிவரும் தமிழ் நாட்டில் இந்த வாழ்வியல் எவ்வளவு நாள்
தாக்குப்பிடிக்கும்? முன்பு சுபமங்களாவில் இது குறித்து ‘பாலைத்தெய்வம்’
என்றொரு கதை எழுதினேன்.

http://www.subaonline.net/nakannan/sstory/short.html#SS2

நா.கண்ணன்

seshadri sridharan

unread,
Dec 5, 2012, 6:31:02 AM12/5/12
to mint...@googlegroups.com
ஐயா!

புராணங்கள் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையான காலத்தில் எழுதப்பட்டவை. இதற்கு சான்று கி.மு. 2 - கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை ஆண்ட சாதவாகன மன்னர்கள் 30 பேரது பெயர்ப் பட்டியலை மத்சய புராணம் தருகின்றது என்றால் மத்சய புராணம் இவர்களது காலத்திற்கு பிற்பட்டது தானே. அப்படியானால் சமற்கிருத இலக்கியங்கள் நமக்கு 1,500 ஆண்டுகால வரலாற்றைதான் தரும் என்பதில் தவறு இல்லையே! 

தெலுங்கர் என்ற முறையில் அவர்களது வரலாறு 1000 - 1,200 ஆண்டுகாலம் வரையானது தான் ஏனென்றால் அதற்கு முன்னம் தெலுங்கு இல்லை. ஆனால் ஆந்திரர் என்ற வகையில் அவர்களது வரலாறு அதனினும் பல நூற்றாண்டுகள் பழமையது என்பதை மறுக்க முடியாது. இதுவே தான் இந்திய வரலாற்றுக்கும் சமற்கிருத இலக்கியம் அளிக்கும் வரலாறறுக்கும் உள்ள வேறுபாடு. 

சேசாத்திரி

Puranic list of Satavahana rulers.[22] This list, the most complete one with 30 kings, is based on the Matsya Purana.

  • Simuka or Sisuka (r. 230–207 BCE).
  • Krishna (r. 207–189 BCE), ruled 18 years.
  • Sri Mallakarni (or Sri Satakarni) (r. 189–179 BCE), ruled 10 years.
  • Purnotsanga (r. 179–161 BCE), ruled 18 years
  • Skandhastambhi (r. 161–143 BCE), ruled 18 years
  • Sātakarnī I (r. 143–87 BCE), ruled 56 years
  • Lambodara, ruled 18 years.(r. 87–67 BCE)

Probably as vassals of Kanva dynasty (75–35 BCE):


2012/12/5 N. Kannan <navan...@gmail.com>

DEV RAJ

unread,
Dec 5, 2012, 8:03:43 AM12/5/12
to மின்தமிழ்

A pvt mail recd from Dr.P Priyadarshi jI about the five comments of
Prof.Nagarajan -

On 5 December 2012 18:13, Premendra Priyadarshi
<priyada...@hotmail.com> wrote:

Dear Dev Ji,

Thanks for letting me know about some comments.


"1.The genetic data chosen for this study is biased. Genetic and bio-
informatic information availabel
from the southern part of India found no mention or no place"

The lecture was presented to the IIT students, and the time alloted
was 40 minutes. It was far from comprhensive. However,
if one listens it carefully, wherever the word India has been used it
includes all parts of India including even up to Nagaland.
Far from the common notion, the Naga and Mize and other tribes have
not come to India from China,
but the Chinese and the Tibetans have evolved from them.
Rajendran's Laterite Baby from Tamil Nadu was specially discussed in
the lecture.

http://www-03.ibm.com/press/us/en/photo/35881.wss

http://www-03.ibm.com/press/us/en/pressrelease/35877.wss

http://www.ancient-asia-journal.com/article/view/aa.06102/3




"2. The interpretation of the genetic path is more based on the land
route touching the rivers
Saraswathi, Ganga and Brahmaputra. The sea route as a possible
genetic path is missing
in the interpretation"

The coastal route is the well established path. People even crossed
wide seas to reach Andaman (Onge Tribe)
and even Madagaskar from Tamil Nadu. In my hypothesis it was soon
after arrival into India before 74,000 BP,
and the Indians then spoke the ancestral Eurasian language, many
features of which are present in the modern
Austonesian languages (my theory, will need full work up in future).
Oppenheimer's slide was shown.
Sarasvati was not discussed. The Narmada-Son [ஸோன்] - Ganga -
Brahmaputra highway is my contribution
(you may say discovery) as an additional route. The oldest human
fossil we get from Narmada
(300,000 BCE). That is why it came in the discussion. However no
region of India can be said to be
devoid of humans over the long prehistory of India.




"3. The Archelogical studies in Southern India particularly in
Tamilnadu are river based.
As Mr.Balu repeated stresses the evidences are more under the sea and
there is a dearth of data pertaining
to the origin of ancient man with specific reference to Tamilnasdu.
More studies need to be conducted
to explore the under water evidences."

Well, evidence is on the land too. Two human Upper Paleolithic skulls
have been found from Sri Lanka
which was united with Tamil Nadu then. We cannot see Sri Lanka of
30,000 years back as not-India or
not-Tamil Nadu. Such a view would be parochial.




"4 The lecture presents the model as the ancient man has originated
from India but the specific location is not mentioned categorically"

Only God can give the exact location. I mentioned the oldest fossil
from Hathnora
(Narmada Valley). I think we need to consider the whole of India as
one unit for
long term evolutionary purposes.




"5. There is a lack of clarity while discussing the invasion of Aryan
as myth.
He is rejecting the postulate of Aryan invasion and at the same time
admits the
invasion of the Aryan language"

There is some misunderstanding. Aryan languages also did not come from
outside.
I have always found and said that all the major language families of
the world have
originated from India, possibly except a few African (Khoi-Saan
Family).

Tamil Nadu could have a (or the) place of origin. Normally all of
India acted like one unit.
Narrow regional demarcations did not exist then. All land south of the
Vindhyas
constituted one unit even during the Glacial Periods.


Thanks



On 3 Dec, 22:32, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> I was able to listen to the lecture.  My comments are:
>
> 1.The genetic data chosen for this study is biased.  Genetic and bio
> informatic information availabel fron the southern part of India found no
> mention or no place
>
> 2. The interpretation of the genetic path is more based on the land route
> touching the rivers Saraswathi, Ganga and Brahmaputra.  The sea route as a
> possible genetic path is missing in the interpretation
>
> 3. The Archelogical studies in Southern India particularly in Tamilnadu are
> river based.As Mr.Balu repeated stresses the evidences are more under the
> sea and there is a dearth of data pertaining to the origin of ancient man
> with specific reference to Tamilnasdu.  More studies need to be conducted
> to explore the under water evidences.
>
> 4  The lecture presents the model as the ancient man has originated from
> India but the specific location is not mentioned categorically
>
> 5. There is a laqck of clarity while discussing the invasion of Aryan as
> myth.  He is rejecting the postulate of Aryan invasion and at the same time
> admits the invasion of the Aryan language
>
>   In his book "Tamil Studies (1914) M.Srinivasa Iyengar enumerates four
> distinct theories on tof Tamil people.
>
> The writings on Kumari kandam and Lemuria, the cyclones in the eastern sea
> and the Tsunamis in the Indian ocean must be reviewed in the light of the
> alternate proposition the ancient man had originated from Tamilnadu
>
> I am aware of the genesis of a project started in 1970s at the University
> of Madras pioneered by Dr.A.Aiyappan and Dr.A.Venugopal to study the
> genetics of Tamils according to the castes prevalent in Tamilnadu
>
> Similarly the research studies undertaken at the Madurai Kamaraj University
> must be considered to establish the validity of this model
>
> is my humble opinion that without having a recourse to the sea route it
> will be difficult to establish even a hypothesis of this nature.
>
> I present the abstract of the lecture for favour of understanding the
> content in a nutshell.
>
> Abstract:
> The recent DNA studies have revealed that after origin in Africa, a small
> group of Individuals reached India in about 85,000 years before present,
> then early human expansion occurred in India from where rest of the world
> was populated. Even majority of the African humanity has genetically
> descended from this earliest Indian genetic stock. In year 74,000 Before
> Present, the Mount Toba eruption destroyed all human beings except about
> 1000 persons in India and 10,000 in Africa.
>
> The period was marked by glacier (74,000-65,000 years back and
> 20,000-16,000 ybp) and inter-glacier periods. Every time glaciations
> occurred, it restricted the human populations to the warmer regions like
> India, equatorial Africa and the Southeast Asia. But when the globe warmed
> again, human population expanded to reach the northern regions. During all
> these expansion events, India played a crucial role in dissipation of man,
> language and culture to the world. The DNA studies also found that the
> Indians of today have not arrived from anywhere else, but have descended
> from the original human stock of the 85,000 years back. The Dravidian,
> Indo-European, and other languages of India are all indigenous in their
> respective locations of the sub-continent. On the other hand, the Europeans
> have reached there from India over the last 12,000 years or so. Not only
> this the genetic proof suggests that the Indians domesticated cow, goat,
> sheep, horse and buffalo, as well as wheat, barley, rice and pulses, which
> laid to the foundations of the modern civilization.
> I wish to bring it to your attention that he has delivered this lecture as
> a two part series.  The second lecture is on "AnIndian Contribution"http://www.youtube.com/watch?v=h8fVyBnNZk0
>
> There was a rich tradition of science in ancient India. Although not many
> ancient texts are available today, yet we get some information about the
> presence of physical sciences from the Vedic texts. The oldest science
> treatise available today is the Vaisheshika Sutra by Kanada from 6th
> century BC. The text discusses velocity, kinetic and potential energy,
> momentum among many other concepts.
>
> India, the Origin of World's Civilizations as Evident from Genetic Studies
>
> The genetic studies prove that the various Indian communities and tribes
> are the descendants of the original settlers of India, and that they did
> not arrive in India from Central Asia, West Asia, Southeast Asia or China.
> While leaving India, the early Indians took with them breeds of domestic
> cows and plant species, besides the art of farming, about 15,000 to 10,000
> years back. The waves of expansion took place out of India, every time the
> glacial maximum receded.
>
> Nagarajan
> <http://www.iitk.ac.in/vs/>
>
>
>
>
>
>
>
> On Mon, Dec 3, 2012 at 8:59 PM, N. Kannan <navannak...@gmail.com> wrote:
> > Yes, it is our duty to fill the gap and contribute positively towards
> > a pan-Indian understanding. Kindly alert your other connections as
> > well (archaeologists. linguists and the list you put it in this
> > thread.
>
> > Kannan
>
> > On 3 December 2012 16:22, s.bala subramani B+ve <sunkenl...@gmail.com>
> > wrote:
> > > Thanks
>
> > > can explain about our pensiular sunkenland ,coastal morphologu and sea
> > > faring and orissa and southern portions of our India
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,

N. Kannan

unread,
Dec 5, 2012, 10:13:41 AM12/5/12
to mint...@googlegroups.com
My dear Devji

Thank you for taking this discussion out of MinTamil for the sack of
Science. Convey our appreciation to Dr. Priyadarshi for taking his
time to answer Prod.Nagarajan's questions.

As I answered specifically to some of Prof. Nagarajan's questions, Dr.
Priyadarshi did mention about Dr. Rajendran's work and a Sri Lankan
finding. He reflects the same sentiment as shown in this thread that
we need to consider India as ONE UNIT. The parochial approach has been
encouraged in the last 100 years for political reasons and one way or
other all of us are conditioned by that rhetoric. However, it is
absolutely encouraging to read Dr. Rajendran who states that, "The
human fossils from Odai and Hathnora probably bear significant
implications for the current "Out of Africa" verses "Multiregional"
debate concerning the place of origin and antiquity of humans, and
Asia's importance in the story of hominid evolution."

We need to consider India as a very potential candidate in this
"Multiregional" debate.

I want to see more papers from Tamilnadu, at least in this journal (if
not Nature or Science, though this paper contains every element to be
published in Nature. You need the right contact ;-). There are several
such 'Open Access Journals' started by scientists mainly to break the
Institutional/Publisher's constrains in revealing Science as it
evolves and available to everyone to appreciate. When Prof. Nagarajan
raised this issue, I was thinking 'Open Access'.

Kannan
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது

செல்வன்

unread,
Dec 5, 2012, 1:14:02 PM12/5/12
to mint...@googlegroups.com


2012/12/5 N. Kannan <navan...@gmail.com>

நிறுவனப்படுத்தப்பட்ட கருத்தாக்கங்கள்
அனைத்தும் சமிஸ்கிருத அறிவின்பாற் பெறப்பட்டதே. இன்றுவரை சமிஸ்கிருதம்
கற்காத இந்தியவியல் என்பது உலகிலேயே இல்லை. இதற்கு மாற்று தமிழ் கற்பது
என்றால் அதை துரிதப்படுத்த வேண்டும். வளப்படுத்த வேண்டும்.


நாம் சமஸ்கிருதம் படிக்க வேண்டியது இல்லை. அதை வெளிநாட்டு பேராசிரியர்கள் படித்து இந்திய வரலாற்றில் என்ன இருக்கிறது என்பதை நமக்கு ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதை நாம் படித்தால் போதாதா? நாமே எதற்கு படித்து தெரிந்துகொள்ல வேண்டும்?:-)

N. Kannan

unread,
Dec 5, 2012, 1:33:38 PM12/5/12
to mint...@googlegroups.com
2012/12/5 செல்வன் <hol...@gmail.com>:

> நாம் சமஸ்கிருதம் படிக்க வேண்டியது இல்லை. அதை வெளிநாட்டு பேராசிரியர்கள்


> படித்து இந்திய வரலாற்றில் என்ன இருக்கிறது என்பதை நமக்கு ஆங்கிலத்தில்
> சொல்வார்கள். அதை நாம் படித்தால் போதாதா? நாமே எதற்கு படித்து தெரிந்துகொள்ல
> வேண்டும்?:-)
>

அப்படியல்ல செல்வன்.

உதாரணமாக வேதம் இருக்கிறது. அதில் எத்தனையோ சாகைகள். வழி, வழியாக
எல்லோரும் மனனம் செய்து ஒப்பித்து வந்தனர். ஆனால், அதிலுள்ள மகா
வாக்கியங்கள் எவை? அதன் சாரம் என்ன? அதில் சாரதமமான விஷயங்கள் என்ன
உள்ளன? என்று கண்டறிய வேண்டுமெனில் நாம் மெனக்கெட்டால்தான் உண்டு. அப்படி
ஆதி சங்கரர் மெனக்கெட்டதால் இந்தியாவிற்கு அத்வைதம் கிடைத்தது. அதற்குப்
பின்னால் அதுவும் மனனம் செய்யப்பட்டு பொருள் பிறழ்ந்து போனது. பிறகோர்
இராமானுஜன் வந்து அதற்கு ஊட்டமளிக்க வேண்டியிருந்தது. மூலத்தை வாசித்து
நாம் புரிந்து கொள்வதுதான் ஆய்வு. நாங்கள் எத்தனை ஆயிரம் மூல ஆய்வுகளை
வாசித்து இருப்போம். அது முக்கியம்.

ஒரு ஆங்கிலேயர் இந்திய மறையின் ஆழ் பொருள் என்றும் அறியார். அது எழுத்து,
பயிற்சி என்பதற்கும் அப்பாற்பட்டது. எப்படியோ இங்குள்ளோரிடம்
கேட்டுத்தெரிந்து கொண்டதை, அவர் புரிந்து கொண்ட வகையில் இன்னொரு மொழியில்
சொல்ல வேண்டும். மொழி ஒத்துழைக்க வேண்டும். கடைசியில் நம்ம கைக்குக்
கிடைப்பது second hand, third hand interpretations! (சமிஸ்கிருதமென்றால்
‘வேதம்’ என்றில்லை. வெறும் உதாரணத்திற்குச் சொன்னேன்)

நம் கையில் உள்ள சரக்கைப் புரிந்து கொள்ள இத்துணை தூரம் போக வேண்டுமா?
எனவேதான் நாம் நம் மொழியைக் கற்க வேண்டும். நாமே புரிந்து கொள்ள முயல


வேண்டும்.

இங்கு மொழியை அண்டவிடாமல், ஆர்வத்தைக் கொல்லும் அரசியல் உள்ளது. இப்போது
புரிகிறது ஏன் திருமால் கூர்மவதாரம் எடுத்தார் என்று :-)

நா.கண்ணன்

செல்வன்

unread,
Dec 5, 2012, 2:50:37 PM12/5/12
to mint...@googlegroups.com


2012/12/5 N. Kannan <navan...@gmail.com>

நம் கையில் உள்ள சரக்கைப் புரிந்து கொள்ள இத்துணை தூரம் போக வேண்டுமா?
எனவேதான் நாம் நம் மொழியைக் கற்க வேண்டும். நாமே புரிந்து கொள்ள முயல
வேண்டும்.

இங்கு மொழியை அண்டவிடாமல், ஆர்வத்தைக் கொல்லும் அரசியல் உள்ளது. இப்போது
புரிகிறது ஏன் திருமால் கூர்மவதாரம் எடுத்தார் என்று :-)


Agreed. I wrote that satirically:-). "நம் கையில் உள்ள சரக்கைப் புரிந்து கொள்ள இத்துணை தூரம் போக வேண்டுமா?"..this is exactly what I meant when I said "foreign researchers will learn Sanskrit and will explain our culture to us in English".

Jean-Luc Chevillard

unread,
Dec 5, 2012, 4:41:55 PM12/5/12
to mint...@googlegroups.com, N. Kannan
Dear Kannan,

you write

<QUOTE>

ஒரு ஆங்கிலேயர் இந்திய மறையின் ஆழ் பொருள் என்றும் அறியார். அது எழுத்து,
பயிற்சி என்பதற்கும் அப்பாற்பட்டது. எப்படியோ இங்குள்ளோரிடம்
கேட்டுத்தெரிந்து கொண்டதை, அவர் புரிந்து கொண்ட வகையில் இன்னொரு மொழியில்
சொல்ல வேண்டும். மொழி ஒத்துழைக்க வேண்டும். கடைசியில் நம்ம கைக்குக்
கிடைப்பது second hand, third hand interpretations! (சமிஸ்கிருதமென்றால்
‘வேதம்’ என்றில்லை. வெறும் உதாரணத்திற்குச் சொன்னேன்)


</QUOTE>

That reminds me of what I once read in a book
about William Jones and the reason why he decided to study Sanskrit
(at a time when he was simply a famous Persian scholar).

See the attached PDF,
extracted from a 1990 book by Garland CANNON
partly available at

"http://books.google.co.in/books?id=LP0bwZpji2sC"

You can read, on pages 231 and 232 of that book
(included in the attached PDF) that

<QUOTE>
(p. 231)
Jones' decision to learn Sanskrit can be partly traced to .....

(p. 232)
The Persian version that he used was done "by a Muselman writer from the
Bengal dialect, in which one of the Brāhmans (the same who had corrected
my Sanskrit copy) explained it to him. A translation, in the third degree
from the original, must be, as you will easily imagine, very erroneous," as
Jones later evaluated the translation to a friend (2:821).^17
</QUOTE>

Therefore,
you are absolutely right,
everyone should seriously study Sanskrit:
I am sorry I have not yet had to time to do it in this life :-(

Cheers

-- Jean-Luc [ழான்] (Paris)
Why_William_Jones_learnt_Sanskrit.pdf

Kamala Devi

unread,
Dec 5, 2012, 7:34:44 PM12/5/12
to mint...@googlegroups.com
மிக ஆழமான அலசல்.தொடர வேண்டுகிறேப்

http://www.kamalagaanam.blogspot.com

--- On Wed, 5/12/12, N. Kannan <navan...@gmail.com> wrote:

s.bala subramani B+ve

unread,
Dec 5, 2012, 11:58:09 PM12/5/12
to mint...@googlegroups.com
இவர்கள் தமிழ் மரபினரான அசுரர் வழி வந்தோர் என்று சர்க்கார் கூறியதை நான் ஏற்கெனவே இட்டுள்ளேன்.


“There is still another clan from this Koyel river basin – the Asuras. They originated here and developed their own separate culture. Later they left and headed northwest in the direction of Europe. A few words from their language can still be found among the Gypsies of central Asia and in the Romansch language of Europe.





அருமை சேஷாத்ரி 


கோயல் நதி பிராமினி ஆற்றுடன் சேரும் rourkela  பகுதியில் நான் எழு வருடம் தொடர்ந்து  ஆற்று நீர் இரைப்பு திட்டத்தில் உபயா என்ற அமைப்பிற்காக நான் சார்ந்த bargaarh  கரும்பு தொழிற்சாலை  திட்டத்திற்காக ஒரிசா பீகார் jaarkaand   எல்லையில் பணி புரிந்து இருக்கிறேன் 


அங்கு உள்ள பழங்குடிகள் கோலா என்ற  திராவிட பழங்குடியை சேர்ந்தவர்கள் புலியை வணங்கும் தன்மையும் , அவர்கள் பேச்சில் அறுபது சதவிதம் பழந்தமிழ் இருக்கும் 

மொஹா ,கரஞ்சியா காய்ச்சுவதில் வழங்குபவர்கள் .ஒரு முறை எங்கள் வளர்ச்சி திட்டத்தால் பயந்து எனக்கு ,நாலு ஒத்தை அடி பாதையில் சேரும் இடத்தில பதுமை வைத்து ,இரண்டு நாள் பாதிக்கப்பட்டு , 

எங்கள் வளர்ச்சி திட்டத்தால் பயன் அடைந்தவர்களால் காப்பாற்ற பட்டேன் 

அதனால் ஒரு வருடம் அவதி பட்டேன் 

அவர்களின் போர் குணத்தை கண்டு ஒரிசா அரசாங்கமே பயந்தது 

நேரம் கிடைத்தால் ஒரிசா திராவிட பழங் குடிகளை பற்றி எழுத வேண்டும் 

அந்த பகுதிகளில் தமிழர்கள் நிறைய பேர்கள் பணி புரிகிறார்கள் இரும்பு,சுரங்கம்,மற்றும் சிமெண்ட்தொழிற்சாலைகளில் 

அறுபுதமான செல்வங்கள் நிறைந்த இடம் அது 
அங்கு தான் வில் அம்பு விட  பழகி கொண்டேன்  

எனக்காக நட்பு காட்டிய ஒரு அன்பு கிராமம் தப்ப பெர்ணா இன்றும் இருக்கிறது 
 


http://en.wikipedia.org/wiki/South_Koel_River

s.bala subramani B+ve

unread,
Dec 6, 2012, 12:04:35 AM12/6/12
to mint...@googlegroups.com
அவர்களின் பல பெயர்கள் மகாபாரத பெயர்களாக இருக்கும் துரியோதனன் ,துச்சாதனன் ஏகலைவன் என்று பாண்டவர்களுக்கு எதிரான பேர்களாக நிறைய  இருக்கும் 


2012/12/6 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

seshadri sridharan

unread,
Dec 6, 2012, 12:11:04 AM12/6/12
to mint...@googlegroups.com
2012/12/6 s.bala subramani B+ve <sunke...@gmail.com>
இவர்கள் தமிழ் மரபினரான அசுரர் வழி வந்தோர் என்று சர்க்கார் கூறியதை நான் ஏற்கெனவே இட்டுள்ளேன்.

“There is still another clan from this Koyel river basin – the Asuras. They originated here and developed their own separate culture. Later they left and headed northwest in the direction of Europe. A few words from their language can still be found among the Gypsies of central Asia and in the Romansch language of Europe.


[அருமை சேஷாத்ரி 


கோயல் நதி பிராமினி ஆற்றுடன் சேரும் rourkela  பகுதியில் நான் எழு வருடம் தொடர்ந்து  ஆற்று நீர் இரைப்பு திட்டத்தில் உபயா என்ற அமைப்பிற்காக நான் சார்ந்த bargaarh  கரும்பு தொழிற்சாலை  திட்டத்திற்காக ஒரிசா பீகார் jaarkaand   எல்லையில் பணி புரிந்து இருக்கிறேன் 


அங்கு உள்ள பழங்குடிகள் கோலா என்ற  திராவிட பழங்குடியை சேர்ந்தவர்கள் புலியை வணங்கும் தன்மையும் , அவர்கள் பேச்சில் அறுபது சதவிதம் பழந்தமிழ் இருக்கும் ]

சர்க்கார் இந்த செய்தியை தமது ஓக ஆற்றல் மூலம் அறிந்து சொன்னாரேயன்றி அதற்காக அவர் தன் நகத்தில் ஒட்டி இருக்கும் அழுக்களவு கூட சான்றுகளை எடுத்துப் போடவில்லை. ஆனால் அது இன்றைய அறிவியல் வளர்ச்சியால் மெய்ப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பது தான் வியப்பு. 

DEV RAJ

unread,
Dec 6, 2012, 1:35:01 AM12/6/12
to மின்தமிழ்
On 6 Dec, 10:04, "s.bala subramani B+ve" <sunkenl...@gmail.com> wrote:
>>> அவர்களின் பல பெயர்கள் மகாபாரத பெயர்களாக இருக்கும் துரியோதனன் ,துச்சாதனன்
ஏகலைவன் என்று பாண்டவர்களுக்கு எதிரான பேர்களாக நிறைய இருக்கும் <<<


இதில் பெரிது படுத்த ஒன்றுமில்லை.

துரியோதனனும், வீமனும் பலராமரிடம் ஆயுதப் பயிற்சி பெற்றனர்.
துரியோதனனின் மகள் லக்ஷ்மணையைக் கண்ணபிரானின்
மகன் ஸாம்பன் மணந்தான். கண்ணனின் படை துரியோதனனுக்கு
வசமானது. கண்ணபிரானிடம் விரோதம் பாராட்டிய ருக்மி
தன் தங்கை ருக்மிணியிடம் கொண்ட பாசத்தால் ப்ரத்யும்னனை
மாப்பிள்ளையாக்கிக் கொண்டான். மண உறவு அடுத்த
தலைமுறையிலும் தொடர்ந்தது. அதே ருக்மியை
பலராமர் கொன்றது அடுத்த கதை.


ராவணன் செய்த சோதிட நூல் வடபுலத்தில்
வழக்கத்தில் உள்ளது -
http://www.devshoppe.com/ravansamhita.html
ராவணன் பல்கலை வித்தகன் என்பதை வால்மீகி முனிவர்
மறைக்கவில்லை.


பரசுராமரிடம் போர் செய்த கார்த்தவீர்யார்ஜுநரின்
வழிவந்தோர் இன்றும் உள்ளனர். விஷ்ணு புராணம்
இவரது பெருமை பகர்கிறது. சேங்காலிபுரத்தில்
கார்த்தவீர்யார்ஜுந யந்திரம் பிரதிட்டையாகியுள்ளது.


ஸ்ரீராமனை தரிசித்தவாறே உயிர் துறந்த அரக்கர்களை
கோஸ்வாமி போற்றியுள்ளார்; அமரரும், அரக்கரும்
நமக்குள்ளேயே இருக்கின்றனர்

தேவ்


On 6 Dec, 10:04, "s.bala subramani B+ve" <sunkenl...@gmail.com> wrote:
> அவர்களின் பல பெயர்கள் மகாபாரத பெயர்களாக இருக்கும் துரியோதனன் ,துச்சாதனன்
> ஏகலைவன் என்று பாண்டவர்களுக்கு எதிரான பேர்களாக நிறைய  இருக்கும்
>

> 2012/12/6 s.bala subramani B+ve <sunkenl...@gmail.com>

s.bala subramani B+ve

unread,
Dec 6, 2012, 1:52:34 AM12/6/12
to mint...@googlegroups.com
மிக்க நன்றி தேவ் அவர்களே 

சமஸ்க்ரித்த மற்றும் பிற மொழிகளில் உள்ள தென் நில செய்திகளை சொன்னிர்கள் என்றால் நன்றாக இருக்கும் 



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

seshadri sridharan

unread,
Dec 6, 2012, 3:14:37 AM12/6/12
to mint...@googlegroups.com


2012/12/6 s.bala subramani B+ve <sunke...@gmail.com>


ஐயா பாலு மேலே உள்ள தொடுப்பைக் காண வேண்டுகிறேன்.

s.bala subramani B+ve

unread,
Dec 6, 2012, 3:31:19 AM12/6/12
to mint...@googlegroups.com
நான் ஒரிசாவில் சுற்றிய பல வருடங்கள் இப்பொழுது போல் ஆய்வுகள் செய்ய வில்லை . 1999 இல் இருந்து தான் தமிழ் தொடர்புகளை தேட துவங்கினேன் 

கலிங்கத்தமிழ் உறவு ஆய்வு திட்டத்தில் மறுபடி ஒரிசா செல்ல போகிறேன் 

இந்த முறை என் ஆய்வுகள் மிகுந்த பலம் பெரும் 


என் வீட்டில் இருக்கும் நூலில் கூட யாரவது எதை பற்றி சொல்லும் பொது புதிதாக  நான் படிக்கும் நூலிலே கூட எனக்கு பல முறை குறிப்புகள் கிடக்கும் கிடைக்கும் 

எல்லாம் நமக்குள் வைக்கபடுகிறது ,தேவைபடுகின்ற போது பயன் படுகிறது 

இன்னும் சில  வருடம் பொறுங்கள் தமிழர்களை அவர்கள் பேசும் மொழியை ,பண்பாட்டை பற்றிய சிந்தனை பலருக்கும் வரும் 

தமிழ் மொழியை அவர்களே மீண்டும் முதல் பத்து  இடத்திற்கு பேசும் மொழியாக கொண்டு வருவார்கள் 







--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Dec 6, 2012, 5:47:53 AM12/6/12
to mint...@googlegroups.com
2012/12/6 Kamala Devi <saahi...@yahoo.com.sg>

>
> மிக ஆழமான அலசல்.தொடர வேண்டுகிறேப்
> க

நன்றி கமலம்.

இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் மிகுந்த வித்தியாசமுள்ளது. மனித
வளர்ச்சியின் தொடக்க நிலையிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியானதொரு
சரித்திரம் உள்ளது. அதன் மகிமையை இந்தியர்களாம் மட்டுமே உள்ளத்தளவில்
ஆழமாக உணரமுடியும். ஏனெனில் பிரபஞ்சம் தொடங்கியதிலிருந்த கதையை ‘ஹரிகதா
காலாட்சேபங்களில்’ குழந்தைப் பருவத்திலிருந்து கேட்கிறோம். உண்மையில் என்
ஆர்வத்தைத் தூண்டி விட்டர் ஸ்ரீஹரிஜி. அப்போது அவர் கல்லூரி மாணவர்.
கிருஷ்ண பக்தையான என் மாமியார் மீது அவருக்கு நிரம்ப மரியாதையுண்டு.
எங்கள் வீட்டிலேயெ பாகவத சப்தாகம் செய்தார். அதில் முதல் அத்தியாயம்
முழுவதும் பிரபஞ்சத்தோற்ற வளர்ச்சி பற்றியது. அவர் கொடுத்த விவரங்களைக்
கேட்டு ஆடிப்போய்விட்டேன். இத்தனை விஷயங்கள் நம் பண்டைய
இந்தியர்களுக்குத் தெரிந்திருந்ததா? என்று. இப்படி உலகில் வேறு எங்கும்
வானவியல் வேடிக்கையாகப் பாமரனுக்கும் புரியும் வண்ணம் கதை, கதையாய்ச்
சொல்வதில்லை. இது மிகை இல்லாத உண்மை. இதுதான் ஒரு இந்தியனை
மற்றோரிடமிருந்து பிரிக்கிறது.

அடுத்த நிலையில் லண்டன் ஸ்வாமி நாராயண் கோயிலில் பிரம்மாண்டமான ஒரு
Indian Science Exhibition உள்ளது. அதில் மிக அழகாக பல விஷயங்களைக்
கோர்த்துள்ளனர். அது போன்ற ஒரு முயற்சி தமிழ்ப் பனுவல்களை அடிப்படையாகக்
கொண்டு உருவாக்க வேண்டுமென்று இதே மன்றத்தில் நான் முன்பு எழுதியுள்ளேன்.
ஸ்வாமி நாராயண் கோயிலில் உள்ள இந்திய அறிவியல் பாடம் பலரை கண் விழிக்க
வைத்துள்ளது. இது போல் ஆப்பிரிக்காவிலோ, சீனாவிலோ இல்லை. நமக்குத்தான்
இந்தப் பாரம்பரியம் இருக்கிறது. இதையறிந்துதான் மேலை நாட்டு அறிஞர்கள்
இந்தியா வரத்தொடங்கினர். உதாரணமாக வானவியல் பற்றிய ஒரு
அமெரிக்கத்தொலைக்காட்சியில் பேசும் கார்ல் சாகன் என்ன சொல்கிறார் எனும்
விழியம் நம் சேகரத்தில் உள்ளது.

http://video-thf.blogspot.de/2008/06/blog-post_30.html

ஒரு பிரிவற்ற தொடர் கலாச்சாரம் இந்தியாவில் உள்ளது. இது கண்டு
பூரித்துப்போக வேண்டாமோ? அதை விடுத்து சில்லறைத்தனமாக நம்முள் பிரிவு
சொல்லி வீணே காலத்தைக் கழிக்கிறோம். பிரிஷதர்ஷியின் பேச்சு, இதை அறிவியல்
திறத்தோடு சொல்ல முடியும் என்று காட்டியது. எனது பாசுர மடல்களையும்,
சிறுகதைகளிலும் அறிவியல்-ஆன்மீக இணைப்புப் பற்றி தொடர்ந்து பேசியிருப்பது
தெரியும். அதைத்தான் அவரும் செய்கிறார். இந்த ஜினோமிக்ஸ் தரவுகள் நான்
அறியாதன. மெல்ல, மெல்ல முழுத்தோற்றமும் பொலிவுறும்.

இந்தியா முழுவதும் சுற்றி அலையும் பாலு, சாஸ்திர அறிஞர் தேவ்,
இலக்கியத்தேடல் ஹரிகி, வைணவ மரபு பற்றி ஆழமாக அலசும் அரங்கன், சங்க
இலக்கியத் தரவுகள் தரும் முனைவர் ராஜம் (அவரது பௌத்தம் குறித்த தரவுகள்
இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன) தமிழ் மண்ணின் வேர் காணும் சேசாத்திரி
இப்படியொரு கோஷ்டி சேர்ந்திருப்பதும் தெய்வ சங்கல்பம்தான் போலும்.
இன்னும் பலரும் அவ்வப்போது தரவுகள் அளித்தவண்ணமுள்ளனர். மிகவும் மகிழ்வாக
உள்ளது.

நா.கண்ணன்

N. Kannan

unread,
Dec 6, 2012, 6:15:49 AM12/6/12
to மின்தமிழ்
2012/12/5 Jean-Luc Chevillard <jeanluc.c...@gmail.com>:

> Therefore,
> you are absolutely right,
> everyone should seriously study Sanskrit:
> I am sorry I have not yet had to time to do it in this life :-(
>

Thank you so much Jean-Luc [ழான்]

Though I was born in India I never studied Sanskrit. It's a pity
(தமிழறிவும் போதாது என்பது வேறு விஷயம் :-) உங்களுக்கு தமிழ்
இலக்கணத்தில் உள்ள பரிட்சயம் எங்களில் பலருக்குக் கிடையாது என்பது உண்மை.

இது பற்றி சிந்திப்பதே பாக்யம் என்று இருக்கிறேன் ;-)

நா.கண்ணன்

--

s.bala subramani B+ve

unread,
Dec 6, 2012, 6:47:27 AM12/6/12
to mint...@googlegroups.com
நமக்கு கடல் எந்த அளவு பலத்தை தந்தது என்று வியக்கும் வேளையில் மலைகளும் ,ஆறுகளும் ,பனிமலைகளும் ,பாலைவனங்களும் மிகவும் அழகாக திணை கோட்பாட்டை தெரிவிக்கிறது 

இலக்கியங்கள் வடசெலவு தென் செலவு பற்றி பேசுகின்றார்கள் 

ஒட்டகம் ,குதிரை  உலக நிலைகளை பற்றி தெளிவாக பேசுகிறது 

நமது குறளும்  ,மூதுரையும் கடல் சூழ்ந்த நிலத்தை வாழ்வியல்  பாடல்களில் கூட சொல்கின்றது 

உலக மொழிகள் கடவுள் சொன்ன கருத்தக்கள் என்று நம்பிய போது,பெரும் பாலான பாடல்கள் 

மானுடன் மானுடனுக்கு  சொன்னதாக நமது பாடல்கள் தெரிந்த வாழ்வியல் செய்திகளை சொல்லி தெரியாத வாழ்வியலை சொல்லி கொடுக்கின்றது 

பிரிட்டிஷ் இந்தியா தனது நிர்வாக திறனுக்காக பல பெரிய சிற்று அரசுகளை ஒன்று சேர்த்து இந்தியா என்ற போது மயங்கினோம் 

ஆனால் பாரத கதைகள்  கலிங்க மன்னன் காரவேலன் ,அசோகர் ,சந்திரகுப்த மௌரியர் ,குப்தர், சுங்க மன்னர் கனிஷ்கர் ,பாண்டியர்கள் ,சோழர்கள் போன்றவர்கள் பல இடங்களை பிடித்து திறை வாங்கியதை கற்பனை என்கின்றோம் 

போர்கள் வரும் போது மன்னர்கள் கூட்டு சேர்த்ததையும்  மறந்து விட்டோம் 

ஆங்கிலேயர்கள் நிலத்தை அளந்தார்கள் என்று வியக்கும் நேரத்தில் 

ஒரிசா பவானிபாட்னாவில் சோழர்கள நிலத்தை அளந்து ,இன்றும் அதே கோல் அளவு ஒரிசாவில் இன்று பயன்படுத்துவதையும் 

உலகளந்தவன் என்று ராஜா ராஜனுக்கு உள்ள பெயரை கூட நாம் நினைவில் கொள்வதில்லை  

கீழை கடலை சோழர்கள் பல்லவர்கள் ஆண்டார்கள் என்ன்னும்  போது 

எகிப்து கிரேக்க சீனா தொடர்புகளை மிகவும் எளிதாக பாண்டியர்கள் கையாண்டார்கள் என்பது நமக்கு சிந்தனையில் ஒப்புதல் இராது 

இன்றளவும் உலகில் கடலியல் ஆய்வுகளில் திறமையாக  தமிழர்களும் ,இலக்கதீவு மாலத்தீவு மக்களும் ,உள்ளது அனைவருக்கும் தெரியும் 

புவியின் அமைப்பில் பார்க்கும் போது வட இந்திய மக்களை விட 

கடற்கரை , இந்திய மக்களுக்கு இருந்த அனுகூலமும் , சம்ச்க்ரிதத்தை கூட அதிகம் கடல் வழியாக கொண்டு சென்றதில் புறம் முதல் ஈரான் வரை இருந்த திராவிட மக்கள் என்று சொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கும் உண்டு 

வட நாட்டில் மாலை  பொழுது அதிகம் நிறைய புராணம் கேட்டார்கள் 

தென் நாட்டில் உழைப்பு அதிகம் ஈரடி குறள்,நான்கடி வெண்பா கேட்டார்கள் 

சுருக்க சொல்லப்பா என்பார்கள் 
 
வட நாட்டில் கடலை பயன் படுத்துதல் பாவம் என்று சொல்லப்பட்ட போது கடலை எளிதாக பயன் படுத்தியவர்களை இன்னும் அதிகமாக பேச வேண்டும் 

வந்தாரை வாழவைத்தவர்கள் ,

மதங்களுக்கு அதனால் உருவான புது மொழிகளை அந்த மக்களுக்கு கொடுத்த மதிப்புக்காக தந்து முன் தோன்றிய  மொழியை விட்டு கொடுத்தவர்கள , இன்று அந்த மொழிகளுள் உள்ள நமது தடயங்களை தேடுகிறோம் 

நமது பழமொழிகளை ஒழுங்காக ஆய்வு செய்தாலே நமது கடந்த வாழ்வியல் தெரியும் 

ஒண்ட வந்த பிடரி ஊர் பிடாரியை விரட்டியது  (ஈழத்தின் தமிழகத்தின் கதை )   )

இது ஒன்றே போதும் நாம் எப்படி நிலத்தை ,மொழியை இழந்தோம் என்று 

"வந்தாரை வாழ வைப்போர் 

யாதும் ஊரே யாவரும் கேளிர் 

திரைகடலோடி திரவியம் தேடி "

என்று சொல்லி உலகமெல்லாம் நீ சென்றாய் ,இங்கு வரும் மற்றவரையும் மதித்து அவரை வாழவிடு என்று சொன்ன வழியை சேர்ந்தவர் நாம் 

முதலில் மற்றவரை திட்டுவதை விட நம்மை மேன்மை படுத்துவது நல்லது 

என்ன இல்லை இந்த திருநாட்டில் 

..........................................................

தேவை என்றால் இன்னும்வரும் 


Kamala Devi

unread,
Dec 6, 2012, 6:51:59 AM12/6/12
to mint...@googlegroups.com
பால சுப்ரமணியம்
நிங்ஙளை நேரம் கிட்டும்போதெல்லாம் விடாது வாசிப்பவள் ஞான்.
பயனுள்ள பல தகவல்கள் நிங்ஙளிடமிருந்து அறியக்கிட்டும்போது மகிழ்ச்சி
யாக உள்ளது
.அன்புடன் கமலம்

http://www.kamalagaanam.blogspot.com

--- On Thu, 6/12/12, s.bala subramani B+ve <sunke...@gmail.com> wrote:

From: s.bala subramani B+ve <sunke...@gmail.com>
Subject: Re: [MinTamil] Re: இந்தியாவும் மனிதத் தோற்ற, வளர்ச்சியும்!
To: mint...@googlegroups.com

Kamala Devi

unread,
Dec 6, 2012, 6:55:51 AM12/6/12
to mint...@googlegroups.com
நிங்ஙள் எழுதி முடியுங்கள். மிக ஆழமாகப்பேசலாம்
இடையில் கேள்வி கேட்டால் சரளம் போய்விடுமோ என்றஞ்சுகிறேன்.
நாங்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய உரை இது.
கமலம்

http://www.kamalagaanam.blogspot.com


--- On Thu, 6/12/12, N. Kannan <navan...@gmail.com> wrote:

From: N. Kannan <navan...@gmail.com>
Subject: Re: [MinTamil] Re: இந்தியாவும் மனிதத் தோற்ற, வளர்ச்சியும்!
To: mint...@googlegroups.com

N. Kannan

unread,
Dec 6, 2012, 7:14:05 AM12/6/12
to mint...@googlegroups.com
இதில் இன்னொரு முக்கிய குறிப்பும் உள்ளது பாலு.

இம்முறை சுபாவுடன் கிருஷ்ணகிரியில் அலைந்த போதுதான் முதுகற்கால,
பழங்கற்கால சமுதாயம் பற்றி அறிய முடிந்தது. இன்னும் அறிஞர்களால் தெளிவு
பெறாத ஒரு விஷயம் பெருங்கற்கால வாழ்வியல் என்பது (ஓவியங்கள் தீட்டுவது,
கல்லறைகள் சமைப்பது) இங்கிலாந்து தொடங்கி, இந்தியா, கொரியாவரை ஒரே மாதிரி
இருப்பது. கிருஷ்ணகிரி குகைகளில், செட்டிநாடு திருமலையில் நான் கண்ட
ஓவியங்கள் அச்சாக எகிப்திய ஓவியங்கள் போல் இருப்பது எதைக் காட்டுகிறது?
இவர்களுக்கு கடல் பயணம் தெரிந்து இருந்தது என்பதைத்தான். இதை என்
கணையாழிக் கட்டுரையில் சொல்லியுள்ளேன். இங்குதான் கடல்சார்
மானுட/கலாச்சாரப் பரவல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய ரத்தம்
கொரியாவிற்குப் போனது நிச்சயம் கடல்வழி என்று தொன்மங்கள் சுட்டுகின்றன.

எனவே தமிழ்நாட்டில் உள்ள கற்காலச்சான்றுகளை முறையாகப் பாதுகாத்து
ஆராய்ச்சி செய்ய வேண்டும். அது இந்த சிந்து சமவெளி விவாதத்திற்கோர்
முற்றுப்புள்ளி வைக்கும்.

நா.கண்ணன்

2012/12/6 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:

> இலக்கியங்கள் வடசெலவு தென் செலவு பற்றி பேசுகின்றார்கள்
>
> ஒட்டகம் ,குதிரை உலக நிலைகளை பற்றி தெளிவாக பேசுகிறது
>

s.bala subramani B+ve

unread,
Dec 6, 2012, 7:24:49 AM12/6/12
to mint...@googlegroups.com
நன்றி 

இந்தியா என்பது உணர்வை வர வைப்பது ,

 இந்தியாவின் பல இடங்களுக்கு சென்று வந்தவன் ,

 பூமியை மனிதர்களை  நேசிப்பவன் 

உலக நிலங்களுக்கு ஆறாம் அறிவால் வாய் பேச முடிந்த மனிதர்கள் தான் எல்லாம் 

விலங்குகளுக்கும் ,தாவரங்களுக்கும் அந்த உரிமை இல்லை 


ஒவ்வொருவரும் தாம் தாம் இடத்தை பற்றி பேசினால் அனைவருக்கும் தெரிய வரும் நாம் யார் என்று 

இது பிரிவினை பற்றி பேசுவதற்கு அல்ல 

இந்தியாவின் அணைத்து எல்லைபகுதிகளுக்கும் சென்று வந்தவன் என்ற முறையில் 

ஒரு ராணுவ வீரரின் மகன் என்ற முறையில்  இன்று கூட நமது தேசிய கீதத்திற்கு மயங்குவது என்பது எனக்கு மழலையில் சொல்லி கொடுக்கப்பட்டது 

படியுங்கள் கருத்துக்கள் சொல்லுங்கள் 



நமக்கு கடல் எந்த அளவு பலத்தை தந்தது என்று வியக்கும் வேளையில் மலைகளும் ,ஆறுகளும் ,பனிமலைகளும் ,பாலைவனங்களை பற்றி  மிகவும் அழகாக திணை கோட்பாடுகள் விவரிக்கின்றது 


இலக்கியங்கள் 

பூமியின் வடசெலவு தென் செலவு பற்றி பேசுகின்றது 

ஒட்டகம் ,குதிரை  உலக நிலைகளை பற்றி தெளிவாக பேசுகிறது 

நமது குறளும்  ,மூதுரையும் கடல் சூழ்ந்த நிலத்தை வாழ்வியல்  பாடல்களில் கூட சொல்கின்றது 

உலக மொழிகள் கடவுள் சொன்ன கருத்துக்கள்  என்று நம்பிய போது,பெரும் பாலான பாடல்கள் 

மானுடன் மானுடனுக்கு  சொன்னதாக நமது பாடல்கள் தெரிந்த வாழ்வியல் செய்திகளை சொல்லி தெரியாத வாழ்வியலை சொல்லி கொடுக்கின்றது 

பிரிட்டிஷ் இந்தியா தனது நிர்வாக திறனுக்காக பல பெரிய சிற்று அரசுகளை ஒன்று சேர்த்து இந்தியா என்ற போது மயங்கினோம் 

ஆனால் பாரத கதைகள்  கலிங்க மன்னன் காரவேலன் ,அசோகர் ,சந்திரகுப்த மௌரியர் ,குப்தர், சுங்க மன்னர் கனிஷ்கர் ,பாண்டியர்கள் ,சோழர்கள் போன்றவர்கள் பல இடங்களை பிடித்து திறை வாங்கியதை கற்பனை என்கின்றோம் 

போர்கள் வரும் போது மன்னர்கள் கூட்டு சேர்ந்தததையும்   மறந்து விட்டோம் 

ஆங்கிலேயர்கள் நிலத்தை அளந்தார்கள் என்று வியக்கும் நேரத்தில் 

ஒரிசா பவானிபாட்னாவில் சோழர்கள நிலத்தை அளந்து ,இன்றும் அதே கோல் அளவு ஒரிசாவில் இன்று பயன்படுத்துவதையும் 

உலகளந்தவன் என்று ராஜா ராஜனுக்கு உள்ள பெயரை கூட நாம் நினைவில் கொள்வதில்லை  

கீழை கடலை சோழர்கள் பல்லவர்கள் ஆண்டார்கள் என்ன்னும்  போது 

எகிப்து கிரேக்க சீனா தொடர்புகளை மிகவும் எளிதாக பாண்டியர்கள் கையாண்டார்கள் என்பது நமக்கு சிந்தனையில் ஒப்புதல் இராது 

இன்றளவும் உலகில் கடலியல் ஆய்வுகளில் திறமையாக  தமிழர்களும் ,இலக்கதீவு மாலத்தீவு மக்களும் ,உள்ளது அனைவருக்கும் தெரியும் 

புவியின் அமைப்பில் பார்க்கும் போது வட இந்திய மக்களை விட 

கடற்கரை , இந்திய மக்களுக்கு இருந்த அனுகூலமும் , சம்ச்க்ரிதத்தை கூட அதிகம் கடல் வழியாக கொண்டு சென்றதில் புறம் முதல் ஈரான் வரை இருந்த திராவிட மக்கள் என்று சொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கும் உண்டு 

வட நாட்டில் மாலை  பொழுது அதிகம் நிறைய புராணம் கேட்டார்கள் 

தென் நாட்டில் உழைப்பு அதிகம் ஈரடி குறள்,நான்கடி வெண்பா கேட்டார்கள் 

சுருக்க சொல்லப்பா என்பார்கள் 
 
வட நாட்டில் கடலை பயன் படுத்துதல் பாவம் என்று சொல்லப்பட்ட போது கடலை எளிதாக பயன் படுத்தியவர்களை இன்னும் அதிகமாக பேச வேண்டும் 

வந்தாரை வாழவைத்தவர்கள் ,

மதங்களுக்கு அதனால் உருவான புது மொழிகளை அந்த மக்களுக்கு கொடுத்த மதிப்புக்காக தந்து முன் தோன்றிய  மொழியை விட்டு கொடுத்தவர்கள , இன்று அந்த மொழிகளுள் உள்ள நமது தடயங்களை தேடுகிறோம் 

நமது பழமொழிகளை ஒழுங்காக ஆய்வு செய்தாலே நமது கடந்த வாழ்வியல் தெரியும் 

ஒண்ட வந்த பிடரி ஊர் பிடாரியை விரட்டியது  (ஈழத்தின் தமிழகத்தின் கதை )   )

இது ஒன்றே போதும் நாம் எப்படி நிலத்தை ,மொழியை இழந்தோம் என்று 

"வந்தாரை வாழ வைப்போர் 

யாதும் ஊரே யாவரும் கேளிர் 

திரைகடலோடி திரவியம் தேடி "

என்று சொல்லி உலகமெல்லாம் நீ சென்றாய் ,இங்கு வரும் மற்றவரையும் மதித்து அவரை வாழவிடு என்று சொன்ன வழியை சேர்ந்தவர் நாம் 

முதலில் மற்றவரை திட்டுவதை விட நம்மை மேன்மை படுத்துவது நல்லது 

K R A Narasiah

unread,
Dec 6, 2012, 10:23:37 AM12/6/12
to mint...@googlegroups.com
ஆழமாக எந்த விஷயத்தையும் இப்போது அதிகமான இந்தியர்கள் பார்ப்பதில்லை என்பதும் ஒரு கருத்து. அமெரிக்காவிலோ அல்லது ஏனை மேற்கத்திய நாடுகளிலோ செய்யப்படும் ஆழமான ஆய்வுகள் இங்கில்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். personal glorification takes precedence and one starts to believe the eulogy and I think what once kodumudi shaNmukam told was right. He said மெய்க்கீர்த்திகள் எல்லாமே பொய்க்கீர்த்திகள்!

இது இப்போது தமிழகத்தில் நாம் பார்த்துக் கொண்டிருப்பது! புகழ்வதில் அளவே கிடையாத நிலை!

அன்பின் ழான், 
I read somewhere that William Jones said, that he would not translate certain sringara portions of Kalidaasa as the western audience is not mature enough to understand. Is that right?

Narasiah

2012/12/6 N. Kannan <navan...@gmail.com>

s.bala subramani B+ve

unread,
Dec 6, 2012, 8:16:37 PM12/6/12
to mint...@googlegroups.com
உலக நாகரிகத்தின் வளர்ச்சிக்கு ,அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள உதவி செய்தது இந்திய பெருங்கடல்  தான் ,அதிலும் குறிப்பாக பிரிக்கபடாத தென் தமிழக கடற்கரைகளும் ,ஈழமும் தான் 

இன்று இலங்கை என்று அழைக்கப்படும் அந்த நிலமும் மேற்கையும் கிழக்கையும் இணைத்த தமிழர்களின் வசம் தான் இருந்தது என்பதற்கான தரவுகளை ,என்னுடிய இருபது வருட ஒரிசா மற்றும் தென் கிழக்கு மாநில வாழ்கையின் தொடர்பாக ஓரளவு பெற்று விட்டேன்  

தென் கிழக்கு இந்தியாவின் கடற்கரைகளின் அதன் கடலோடும் தன்மையின் வரலாற்றையும் அதன் காலநிலையை நூறு நூறு வருடமாக பகுத்து தொடர்ந்து தேடி வருகின்றேன் 

கடலர்கள் என்று அழைக்கப்பட்ட பாண்டியர்கள் உலகமெங்கும் இருந்ததற்கான தரவுகள் வந்த வண்ணம் உள்ளன 

மிகவும் வியப்பான செய்தி ,கடல் நீரோட்டங்களின் தன்மையும் ஆமைகளின் கடல் வழி பயணங்களும் , மீனவர்கள் புரிந்து கொண்டு சுறா மற்றும் திமிங்கல வேட்டை செலுத்தும் கடல் நீரோட்டங்களும் 

அவர்கள் தங்கிய கடற்கரைகளும் அதை ஒட்டிய நிலங்களும் என்று ஆய்வு செய்து வரும் போது

நமது ஈழதமிழர்கள் புகலிடம் சென்ற அணைத்து நாடுகளும் ஒன்று கொண்டு தொடர்பு உடையதாக முதல் கட்ட ஆய்வுகளில் தெரிகின்றது 

முதல் புலம் பெயர்ந்த நிகழ்வுகள் கடல் வழியாக தான் நடந்தது 

புலம் பெயர்ந்த ஈழ தமிழர்கள் ஈழத்தின் முழு வரலாற்று கடல் செலவுகளை பற்றி தெரியபடுத்தினால் 

கலிங்கர்கள் தமிழர்கள் இவர்களின் கடல் செலவுகள் பற்றிய ஆய்வுகளில் முன்னேற்றம் ஏற்படும் 

தமிழர்களின்  கடல் சார் மேலாண்மைக்கு மிகவும் உதவும் 


இதை படிப்பவர்கள் உலக கடற்கரைகளின் வசித்தால் அல்லது கடலோடும் சமுகமாய் இருந்தால் உடன் என்னை தொடர்பு கொள்ளவும் 

கலிங்கத்தின் ,ஈழத்தை முழுமையாக ஆய்வுகள் செய்யாமல் தமிழர்களின் கடல் சார் வரலாற்றை ஆய்வு செய்ய முடியாது

seshadri sridharan

unread,
Dec 6, 2012, 11:40:02 PM12/6/12
to mint...@googlegroups.com


2012/12/7 s.bala subramani B+ve <sunke...@gmail.com>



கடலர்கள் என்று அழைக்கப்பட்ட பாண்டியர்கள் உலகமெங்கும் இருந்ததற்கான தரவுகள் வந்த வண்ணம் உள்ளன 

மிகவும் வியப்பான செய்தி ,கடல் நீரோட்டங்களின் தன்மையும் ஆமைகளின் கடல் வழி பயணங்களும் , மீனவர்கள் புரிந்து கொண்டு சுறா மற்றும் திமிங்கல வேட்டை செலுத்தும் கடல் நீரோட்டங்களும் 

அவர்கள் தங்கிய கடற்கரைகளும் அதை ஒட்டிய நிலங்களும் என்று ஆய்வு செய்து வரும் போது

நமது ஈழதமிழர்கள் புகலிடம் சென்ற அணைத்து நாடுகளும் ஒன்று கொண்டு தொடர்பு உடையதாக முதல் கட்ட ஆய்வுகளில் தெரிகின்றது 

முதல் புலம் பெயர்ந்த நிகழ்வுகள் கடல் வழியாக தான் நடந்தது 


திரு பாலு நீங்கள் நேற்று தொலைபேசியில் கேட்டதற்கு இணங்க அசுர்ர் பற்றிய குறிப்பை தந்துள்ளேன்.

When the Asuras, who were most hated by the Aryans, approached Shiva for protection from the Aryans, He readily gave them shelter. Who were these Asuras? In Central Asia, there was a country called Assyria, whose inhabitants were non-Aryans, and very hostile to the Aryans. The Aryans used to hate them intensely. Even today, some of the descendants of this Asura community can be found in the district of Palamau and some other parts of modern India. Asuras were not abnormal creatures fifty feet tall, with over-sized noses, ears and teeth. Rather they were ordinary humans, like us. The only difference was that they would not accept anything Aryan – the Aryan code of conduct, the Aryan religion, etc. Anything related to Aryanism was repugnant to them. This was the only difference between the Aryans and the Asuras, and for this reason the Aryans considered it an act of virtue to kill the Asuras. Those Asuras approached Shiva for shelter, and He granted it.

by PR Sarkar on18 April 1982, Calcutta, Published in: Namah Shiváya Shántáya


There is another allusion to Lakśmii. It is said that once when Lord Krśńa was absent from His capital, Dwaraka, a demon named Narakasura launched an attack on Dwaraka. I have already told you that asura does not mean any weird creature. They are a group, a community, of people who originally lived in Assyria. Later on the Scythians, both in India and outside, were a branch of the Asura community. The Scythians were mainly earth-coloured; they were short but stocky. They were not actually Asuras, but a sub-tribe of the Asuras. As I said, Krśńa was absent from His capital when it was raided by Narakasura. Then Satyabhámá fought a battle against this Asura and killed him.

23 May 1982, Calcutta, Published in:Namah Shiváya Shántáya, chapter: all Bask in the Glory of Shiva 2 Discourse 7

முருங்கை மூங்க ஆனது >
The pods of this vegetable are shaped like drumsticks, hence the name “drumstick”. Drumstick is called “muuṋgá” in the Scythian language, which means “that which grows fast”. The Scythians came to India just after the Aryans. The non-Brahmins of Maharastra and Madya Pradesh who are short with a dark complexion are of Scythian origin. The Brahmins of Maharastra are tall and have a fair complexion. “Muuṋgá” is the Scythian word for drumstick, and “muuṋgi” is the Scythian word for ants which go on moving continuously.

February 1988, Calcutta, Published in: Ideal Farming Part 2 chapter: Some Important Crops

In the days of Shiva, the Aryans started entering India from the northwest. Many of them had already arrived, many were on the way, and many were still making preparations to come. The Vedic language of the Aryans who had already arrived in India had exerted a widespread influence on the spoken dialects of the indigenous population of India, such as the Kash, the Scythians, the Euchi, the South Kuśán, etc. Obviously, Sanskrit, the common language of the indigenous people of the then India, was not outside the orbit of influence of the Vedic language; but that influence was not unilateral; that is, the Vedic language was also influenced by the Sanskrit language. Tantra had its origin in India, and Shiva gave a systematic form to it. Of course, Tantra in its Káshmiirii and Gaod́iiya Schools did exist before Shiva, but in a scattered and crude form. So naturally one has to admit that Shiva was born and brought up in an environment of Tantra, although it was not classical Tantra.

on 11 April 1982, Calcutta Published in: Namah Shiváya Shántáya  chapter: An Introduction of shiva 1

 In olden times there was a community of people called Asuras who lived in central Asia. Certain branches and subbranches of this Asura community still exist today in India in small numbers in the Gondowana region, especially in the Palamu-Sarguja areas. The Asuras had many qualities, many merits, but they had no one to lead them properly. Shukracharya was the name of a learned and wise man who came forward to help these neglected people despite the abuse that was heaped on his head. Kavi also refers to this Shukracharya. He introduced many kinds of battle tactics and composed many rules and regulations to build a nice society. During the time of the Deva-Asura war, he saved the Asuras from destruction through proper counsel. He also pursued scientific knowledge. According to many people he was the first person to make distilled wine. Devásuraeryuddhakále Shukrena parinirmitam [It was made by Shukracárya during the battle between the gods and the demons].


2nd February 1986, Calcutta, Published in: Shabda Cayaniká Part 3, chapter : Kabala to Kamsari Discourse 20

கி.காளைராசன்

unread,
Dec 7, 2012, 6:25:39 AM12/7/12
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2012/12/4 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
மூன்று பக்கமும் கடல் சூழ்ந்து மூன்று சங்கங்களைக் கடலுக்கு இரையாக்கிய ஆழ்கடலில் தமிழன் தொன்மை பற்றிய ஆதாரங்கள் அமிழ்ந்து கிடக்கின்றன
ஆதிமனிதனின் எச்சம் நிச்சயம் ஏதாவது ஒரு கடலில் மூழ்கிக் கிடக்கும் 

கடலிலிருந்து தரைக்கு அரித்து வரப்பட்டனவெல்லாம் மதுரையின் மேற்கே உள்ள நாகமலைத் தொடரில் கிடைக்கலாம்.
தரையிலிருந்து கடலுக்கு அரித்துச் செல்லப்பட்டனவெல்லாம் திருவந்திபுரம், சேதுக்கரைகளில் கிடைக்கலாம்.

அன்பன்
கி.காளைராசன்

It is loading more messages.
0 new messages