உடல்பயிற்சி என்றால் சும்மா ஜாகிங், வாக்கிங் போன்ற ஏரோபிக் பயிர்சியுடன் (Aerobic) முடிந்தது என பலரும் நினைத்துவிடுகிறார்கள். ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் எனப்படும் பளு தூக்குதல்/பாடி பில்டிங் வகை பயிற்சிகளை 1) பலரும் அறிவது இல்லை அல்லது 2) தவறாக புரிந்து வைத்துள்ளனர்.
ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் ஏன் வேண்டும்?
ஆரோக்கியமான உடலின் அடிப்படை மூன்று. 1) ஆரோக்கியமான உணவு 2) ஏரோபிக் பயிற்சி 3) ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங். ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் உங்கள் உடலின் மெடபாலிசத்தை அதிகரிக்கும்.ஏரோபிக் பயிற்சிகளை செய்தால் அந்த பயிர்சிகளை செய்யும்போது மட்டும்தான் கலோரிகளை எரிப்பீர்கள்.ஆனால் ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் செய்தால் உங்கள் உடலின் மெடபாலிசம் அதிகரிக்கும்.அதன்பின் 24 மணிநேரமும் உங்கள் உடல் தானாக காலரிகளை எரிக்கும்.
ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் செய்தால் உடல் எடை அதிகரிக்க மட்டும் செய்யும் என பலரும் தவறாக கருதுகின்றனர். இது தவறு.ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் உடல் எடை குறைக்கவும் பயன்படும். சொல்லபோனால் உடல் எடையை குறைப்பதில் வெறும் ஏரோபிக் பயிற்சிகலை விட ஏரோபிக்+ ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் உள்ள ரெஜிமென் அதிக பலன் அளிக்கும்.
ஆக நீங்கள் ஆணோ, பெண்ணோ, இளவயதோ, சிறுவயதோ உங்கள் நோக்கம் எதுவானாலும் உதாரணமாக 1) எடை இழப்பு, 2) எடை அதிகரிப்பு 3) ஆரோக்கியம் பேணுதல் 4) தோற்ற அழகை அதிகரித்தல் ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் அதில் முக்கிய பங்கு வகிக்கவேண்டும்.
ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங்குக்கு அதிக நேரம் செலவாகும், அதிக சிரமபடவேண்டும் என பலரும் கருதுகின்றனர். அது தவறு. உங்கள் நோக்கம் மிஸ்டர் ஒலிம்பியாவாக ஆவதனாலும் சரி அல்லது சர்க்கரை வியாதியை குணப்படுத்துவதாக இருந்தாலும் சரி ஒரு நாளுக்கு 15 நிமிடம் விதம் வாரம் வெறும் மூன்றே நாட்கள் ஜிம்மில் செலவழித்தால் போதும்.வாரம் வெறும் 45 நிமிடம்....இது நம்ப கடினமாக இருக்கும்.காரணம் தினமும் மூன்று மணிநேரம் ஜிம்மில் எடை தூக்குபவர்கள் உண்டு.அவர்களை பார்த்து பலரும் பயந்துவிடுகிறார்கள்.ஆனால் அது தேவையில்லை, அது அவர்களுக்கு எந்த பலனையும் அளிப்பதும் இல்லை.அத்தகைய உடர்பயிற்சி அவர்களை விரைவில் பர்ன் அவுட் செய்து ஜிம்மை விட்டு துரத்திவிடும். எளிமையான ஆனால் பவர்புல்லான ஸ்கெட்யூல் ஒன்று தருகிறேன்.அதை பின்பற்றினால் போதும். நீங்கள் மிஸ்டர் இந்தியா வரை செல்ல அந்த ஸ்கெட்யூலே உதவும்.
நாள் 1:
பெஞ்ச் பிரஸ் 1 செட்
க்ளோஸ் க்ரிப் பெஞ்ச் பிரஸ் 1 செட்
நாள் 2
சின்ஸ் (Chins) எனப்படும் புல் அப்ஸ் 1 செட்
பென்ட் ஓவர் பார்பல் ரோ (Bent over barbell row) 1 செட்
க்ளோஸ் க்ரிப் சின்ஸ் (Close grip chins) அல்லது பார்பெல் கர்ல் Barbell curl 1 செட்
நாள் 3
ஸ்க்வாட் 1 செட்
ஸ்ட்ரெய்ட் லெக் டெட் லிஃப்ட் 1 செட்
கால்ஃப் ரைஸ் 1 செட்
வெறும் எட்டே செட் தானா என கேட்கவேண்டாம். ஒரே நாளில் பெஞ்ச் பிரஸ் மட்டும் 10 செட் செய்பவர்கள் உண்டு.அது முட்டாள்தனம்.மேலே சொன்ன 8 செட்களையும் ஒரு வாரத்தில் அல்லது 8, 9 நாட்களுக்குள் செய்தால் போதும்.உடனே சரி என ஜிம்முக்கு கிளம்ப வேண்டாம்:-)..எப்படி செய்ய வேண்டும், ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங்கின் அறிவியல், கினிஸியாலஜி துறை பற்றி மேலே எழுதுகிறேன்.அதன்பின் உடல்பயிற்சி ரெஜிமெனை துவக்கலாம்:-)
--
செல்வன்

நிறைய விசயங்கள் அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மறவாது தொடருங்கள்..
உடல்பயிற்சி என்றால் சும்மா ஜாகிங், வாக்கிங் போன்ற ஏரோபிக் பயிர்சியுடன் (Aerobic) முடிந்தது என பலரும் நினைத்துவிடுகிறார்கள். ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் எனப்படும் பளு தூக்குதல்/பாடி பில்டிங் வகை பயிற்சிகளை 1) பலரும் அறிவது இல்லை அல்லது 2) தவறாக புரிந்து வைத்துள்ளனர்.
இதுவரை நான் வாரத்திற்க்கு 6 மணிகளாவது ஜிம்மில் அப்யாசம் செய்கிறேன்.
இனிமேல் 1 மணி போதும்போல இருக்கே. ஜிம்மே வேண்டாம், வேகமாக சைக்கிளில்
போனால் போதும்போல் இருக்கு.
http://www.bbc.co.uk/news/health-17177251
வகொவி
தினமும்,காலையில் இரண்டு கி.மி.தூரம் நன்றாக் நடந்தாலே போதும்
60வது வயதுக்கு மேல் ஜிம் அவ்வளவுனல்லதல்ல,நடக்கும்போதே கைகளையும் சுழற்றி நன்றாக் வீசி நடக்கவேண்டும் நடக்கும்போது கூட
வருபவர்களுடன் பேசக்கூடாது,செல்ஃபோன் எடுக்கவேண்டாம்,தினமும் நடை ப்யிற்சி உடல் எடையை நன்றாகக்குறைக்கிறது சர்கரை அளவும் கட்டுப்பாட்டில் இருக்கிற்து உணவில் கொள்ளூ சேர்த்துக்கொள்வது நல்லது,
1கொள்ளுப்பொடி2கொள்ளூரசம்3கொள்ளுசுண்டல்4கொள்ளூகுருமாஎன்
வகைவகையாக் வாரம் ஒரு முறைசேர்த்துகொள்வது நல்லது அரிசி
குறைவாகவும் சாப்பிடலாம் கேழ்வரகும் அப்பபோசாப்பிடலாம் |
--- On Tue, 28/2/12, Innamburan Innamburan <innam...@gmail.com> wrote: இ சார் நான் சொன்னது இந்தியக்கொள்ளூ ஒங்க ஊர் கொள்ளு இல்ல |
2. Today the well known cardiac surgeon told a very important
information. He said regular exercises helps to drive away blood
pressure related problems..he also said that exercises combined with
meditation is the surest way of living 100 years without heart
problems...
3. I am not sure earlier writings on meditation, the art mastered so
well by the siddhars and so should wait until someone says it could be
information..
I thought of writing on medical benefits of doing exercises but am
afraid it may take your time..
thank you for your kind patience..
Jayaraman
2012/2/28 விஜயராகவன் <vij...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
SRM..Jhayaraaman MFSc MA BL Ph.D
Professor and Head
Deparment of Fisheries Economics and Management
Fisheries College and Research Institute
Tamilnadu Veterinary and Animal Sciences University
Thoothukudi 628008
Tamilnadu, INDIA
Mobile number (0) 94891 20392
Good One Selvan, complenting my Nutrition thread. Is this common for both sex or only for men...?
இப்போ புது ஆராய்ச்சி என்ன சொல்றதுனா, ஒவ்வொரு வாரமும் 3 நிமிடங்கள்
அதிதீவிர அப்யாசம் போதுமாம். அதிதீவிர என்றால் உங்களால் எவ்வளவு வேகமாக
சைக்கிள் ஓட்ட முடியுமோ அல்லது எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ. ஒரு நாளைக்கு
3 தடவை 20 விநாடி, அதைப்போல் வாரத்திற்க்கு 3 தடவை போதுமாம். அதனால் நம்
இன்சுலின் பயன் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏரோபிக் பயனும் ஏற்படும்.
இருக்கலாம். ஆனால் நான் இதுவிஷயத்தில் சற்று கன்சர்வேடிவ். வாரம் மூன்று நாள் உடல்பயிற்சி செய்கிரேன்,1 ம்ணிநேரம் ஏரோபிக்ஸ் (4 மைல் டிரெட்மில்லில்) மற்றும் ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் 15 நிமிடத்துக்கு.இது போன்ற கன்சர்வேடிவான ஸ்கெட்யூல்கள் டிரைட் அன்ட் டெஸ்டட். ஆனாலும் புதிய வழிமுறைகளை முயல்வதில் தவறில்லை என்பது என் கருத்து. நான் போகும் ஜிம்மில் புதிய இயந்திரங்கள், டிரெய்னிங் முறைகள் நிறைய உண்டு. ஆனால் 1993ல் கோவையில் மாதம் 35 ரூபாய் பீஸ் கட்டிய ஜிம்மில் என்ன உடல்பயிர்சிகளை செய்தேனோ அதை மட்டுமே இப்போதும் செய்கிறேன். காரணம் அவை பேஸிக் எக்சர்சைஸ்கள். எக்காலத்துக்கும் நிலைத்திருப்பவை.ஸ்மித் மெஷினில் ஸ்க்வாட் அடிப்பதுக்கும், பார்பெல்லில் அடிப்பதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.



இ சார் நான் சொன்னது இந்தியக்கொள்ளூ ஒங்க ஊர் கொள்ளு இல்
தினமும்,காலையில் இரண்டு கி.மி.தூரம் நன்றாக் நடந்தாலே போதும்60வது வயதுக்கு மேல் ஜிம் அவ்வளவுனல்லதல்ல,நடக்கும்போதே கைகளையும் சுழற்றி நன்றாக் வீசி நடக்கவேண்டும் நடக்கும்போது கூட
uscle strength decreases naturally as people age. This reduction in muscle strength could affect older adults carrying out daily activities. Progressive resistance strength training is a type of strength training that uses free weights, exercise machines, or elastic bands to strengthen muscles. Key to this type of this exercise is adjusting the resistance, or weight, according to the person's progress. This exercise can be prescribed to help older adults gain the strength necessary to carry out everyday activities such as walking, climbing stairs, bathing or doing housework.
"Older adults seem to benefit from this type of exercise even at the age of 80, and even with some type of health condition. The data support the idea that muscle strength is largely improved after the training, and the impact on older adults' daily activities can be significant. Simply having enough strength to do things such as carrying groceries would make a difference for seniors" says lead researcher Chiung-ju Liu of the Department of Occupational Therapy at the Indiana University at Indianapolis in the US.
நிறையத் தகவல்கள் - தொடர்ந்து வாசிக்கின்றேன்
இதை படித்த பிறகாவது எனக்கு சுறு சுறுப்பு வர வேண்டும்
வெயில் காலத்தில் நீச்சலுக்குப் போவேன். 40-45 வயதிலும் தினமும் 5 மைல் ஜாக்கிங் போவேன். உடற்பயிற்சிக் களத்தில் 45 பவுண்டு எடையுள்ள இரும்பு வட்டத்தைத் தூக்கிக்கொண்டுபோய் அந்தக் கால் ப்ரெஸ் கம்பில் மாட்டி கால் ப்ரெஸ் செய்வேன் (60+ வயதிலும்). அண்மையில் (2010 ஜூலைத் தொடக்கமுதல்) இதெல்லாம் நின்றுவிட்டன ... கால் வீக்கத்தால். மருத்துவர் சொன்னது ... பரம்பரை உடல்வாகு ... சப்பட்டைப் பாதம் ... முதுகெலும்புத் தளர்ச்சி ... போன்றவை இடையூறு என்று. அதனால் வீட்டிலேயே என் உடற்பயிற்சி இப்போது தொடருகிறது. வீட்டிலேயே கையில் தூக்கிப் பயன்படுத்த என்று weights வைத்திருக்கிறேன். தரையில் படுத்துக்கொண்டு பயிற்சி செய்தும், நாற்காலியைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுந்திருந்தும், மாடிப்படி ஏறியும், பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போட்டும் ... என்னால் முடிந்தவரை என் உடம்பை அலட்டிவருகிறேன்! :-) இதெல்லாம் பற்றித் தனியாக எழுதினால் என் வயதுக்காரர்களுக்கு உதவும். இயன்றபோது சொல்கிறேன். என் பழைய கால (61 வயது) training chart-ஐயும் ஒருநாள் ஸ்கேன் செய்து போடுகிறேன். 61~62 வயதில் 125 பவுண்ட் உடல் எடை; உடற்பயிற்சிக் களத்தில் அசந்துபோனார்கள் -- இந்தியர்கள், அதிலும் முதிய பெண்கள், உடற்பயிற்சிக் களத்துக்கு வருவதில்லை. நான் அங்கே தனியாளாகத் துருத்தி நிற்பேன்.
--
புரதம் எனக்கு பால், சீரியல், பருப்பு, தானியம் மூலமே கிடைக்கிறது.
நான் சொன்ன பிற training (weight lift, ஜாக்கிங், மாதிரி) எல்லாம் ... அமெரிக்காவில்தான். இங்கே முடிந்தபோது எப்போ வேண்டுமென்றாலும் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். நடக்கலாம், ஓடலாம், ஜாக்கிங் செய்யலாம், நீச்சலுக்குப் போகலாம். நீச்சல் என்பது எந்த வயதினருக்கும் பயன்படும். உடல் முட்டுக்களைத் தாக்காமல் உடல் வலுவைத் தரும் பயிற்சி நீச்சல் ஒன்றே.அண்மையில் ...இந்தியாவில் பல முறை கேட்டும் தேடியும் நான் வேண்டிய உடற்பயிற்சி வசதி எனக்குக் கிடைக்கவில்லை! :-) என்ன செய்ய!
என்னுடைய எல்லா வேலைகளையும் நானே என் கையால் செய்வது
ராஜம் அவர்களே
தமிழ்நாட்டில் ஜிம்-கல்சர் , ஃபிட்னஸ்-கல்சர், ஸ்போர்ட்ஸ்-கல்சர் ரொம்ப
கம்மி. பெற்றோர்கள் ஆண் பெண் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் இருந்தே அந்த
பக்கத்திற்க்கு போவதர்கு ஊக்குவிப்பதில்லை.
பெண்கள் என்றால் இன்னும் மோசம். ஊக்கம் இல்லை என்பது மட்டும் இல்லை,
அந்தப்பக்கமே போகாதே என ஆயிரம் வழிகளில் சூக்ஷுமமாகவும், நேரடியாகவும்
உபதேசம் வரும்,
வகொவி


அன்பின் செல்வன்,இது (உடற்பயிற்சி) எனக்கு மிகவும் பிடித்த தலைப்பு. இங்கே நான் சொல்வது என் சுய புராணத் தம்பட்டம் இல்லை. என் அனுபவம் பிறருக்கும் உதவலாம் என்ற முறையில் சில கருத்துக்களை மட்டும் இப்போது பகிர்ந்துகொள்கிறேன்.+++++++++++++++++++++++++++++++இந்தப் பகுதியை "நறுக்" செய்துவிடலாம்! :-)
இந்தியாவில் எப்போதும் நான் கொண்டாடியது:5. வீட்டில் செய்யக் கூடிய வேலைகளை எல்லாரும், ஆணோ/பெண்ணோ தயங்காமல் செய்யவேண்டும் -- அதாவது ... குனிந்து வீடு/வாசல் பெருக்குவது, அம்மி. ஆட்டுரல் பயன்படுத்துவது, துணி துவைப்பது, ... இன்ன பிற. ஆனால் ... இதையெல்லாம் செய்ய வீட்டில் உள்ள எல்லாரும் ஒத்துழைக்கவேண்டும்.இன்னும் சொல்ல நிறைய இருக்கு, ஆனால் இது செல்வன் தொடங்கிய இழை. மேலும் குறுக்கிட விரும்பவில்லை. தனியாகச் சொல்கிறேன் (இயன்றபோது).பிற பின்னர்,அன்புடன்,ராஜம்On Feb 28, 2012, at 4:38 PM, செல்வன் wrote:
இந்தியப் பெண்களுக்கு வீட்டுவேலை அதிகம் ... பிள்ளை, கணவன், உறவினர் என்று மற்றவர்களைக் கவனிக்கவேண்டிய தேவை மிகுதி. இதில் அவர்கள் தங்கள் உடலைக் கவனித்துக்கொள்வது என்ற சிந்தனையே ... மிகவும் புதிதாகவும் வினோதமாகவும் அசிங்கமாகவும் கருதப்படும். பிறருக்காக வாழும் பெண்ணே "ideal" இல்லத்தரசி என்று நினைக்கும் சமுதாயத்தில் ... ஒரு பெண் தன் உடல் நலனைப் பற்றி நினைக்க முடியுமா?எனக்கு என் அம்மா நினைவுதான் வருது.பால், பழம் என எது கிடைத்தாலும் அதை அவர் உண்ணாமல் வைத்திருந்து சாயந்திரம் பள்ளியிலிருந்து வந்ததும் எனக்கு கொடுப்பார்.நான் அப்போதெல்லாம் சாப்பிடாமல் அடம் பிடிப்பேன். தினம் மூன்று வேளை எனக்கு என்ன பிடிக்குமோ அதை தனியாக சமைத்து கொடுப்பார். அதை எல்லாம் பின்னாட்களில் எண்ணி மிக வருந்தியிருக்கிறேன்.இப்போதும் வருந்துகிறேன்.நம் பெண்களின் உழைப்பையும், உடல்நலத்தையும் நாம் மிக எளிதாக பிடுங்கி கொண்டு என்பது தெரிகிறது.
--
செல்வன்"ஒன்று அணு உலை நம் ஊரில் அமையவேண்டும். அல்லது அணு உலை இருக்கும் ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க, பொருளாதார அகதிகளாக நாம் குடியேற வேண்டும்.இரண்டில் எது தேவை என நாம் முடிவு செய்யும் காலம் நெருங்கிவிட்டது" - செல்வன்
இந்தியப் பெண்களுக்கு வீட்டுவேலை அதிகம் ... பிள்ளை, கணவன், உறவினர் என்று மற்றவர்களைக் கவனிக்கவேண்டிய தேவை மிகுதி. இதில் அவர்கள் தங்கள் உடலைக் கவனித்துக்கொள்வது என்ற சிந்தனையே ... மிகவும் புதிதாகவும் வினோதமாகவும் அசிங்கமாகவும் கருதப்படும். பிறருக்காக வாழும் பெண்ணே "ideal" இல்லத்தரசி என்று நினைக்கும் சமுதாயத்தில் ... ஒரு பெண் தன் உடல் நலனைப் பற்றி நினைக்க முடியுமா?//எனக்குத் தெரிந்த பல பெண்கள் ஒரு வேலையும் செய்யாமல் இரண்டு கிலோ சர்க்கரையை பாட்டிலில் போடவே கணவனோ, மற்ற ஆண்களோ உதவிக்கு வரவேண்டும் என இருப்பவர்களையும் பார்த்திருக்கிறேன். முக்கியமாய் இந்தப்பெருக்கித் துடைப்பது, அம்மியில் அரைப்பது, துணிதுவைப்பது போன்ற காரியங்களை விருப்பத்துடன் செய்யும் பெண்களைக்குறைவாகவே பார்த்திருக்கிறேன். துணிக்கு சோப் போட்டு ஊற வைத்தாலே கை வலி வந்துவிடும், சப்பாத்தி மாவு பிசைந்தால் கைவலிக்கும் எனச் சொல்லி அதைத் தவிர்க்கும் பெண்களும் பார்க்கிறேன். ஆகவே எல்லாப் பெண்களுமே பிறருக்காக வாழவில்லை. உடல்நலனைத் தேவைக்கு மேல் கவனிக்கும் பெண்களும் இருக்கின்றனர். எல்லாவற்றுக்குமே இரண்டு பக்கம் உண்டு.




முழுக்க முழுக்க உண்மை. நான் பெருக்குவது, வீடு துடைப்பது போன்ற வேலைகளை இன்னமும் நான் தான் செய்து வருகிறேன். அம்மியில் அரைப்பதும் உண்டு. துணியும் தோய்க்கும் கல்லிலேயே துவைப்போம். என் துணிகளை நானும், அவர் துணிகளை அவரும் துவைத்து விடுவோம். கடினமான போர்வை, பெட்ஷீட் போன்றவற்றை ஊற வைத்துவிடுவேன். அவர் தோய்ப்பார். இருவருமாகப் பிழிந்து உலரத்துவோம். வாஷிங் மெஷின் இருக்கு. அதிலே அதிகம் ஸ்பின்னர் தான் பயன்படுத்துவேன். முக்கியமாய்ப் போர்வை, ஒன்பது கஜம் புடைவை போன்றவை பிழிய வசதி.
--
உடல்பயிற்சி என்றால் சும்மா ஜாகிங், வாக்கிங் போன்ற ஏரோபிக் பயிர்சியுடன் (Aerobic) முடிந்தது என பலரும் நினைத்துவிடுகிறார்கள். ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் எனப்படும் பளு தூக்குதல்/பாடி பில்டிங் வகை பயிற்சிகளை 1) பலரும் அறிவது இல்லை அல்லது 2) தவறாக புரிந்து வைத்துள்ளனர்.
ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் ஏன் வேண்டும்?
ஆரோக்கியமான உடலின் அடிப்படை மூன்று. 1) ஆரோக்கியமான உணவு 2) ஏரோபிக் பயிற்சி 3) ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங். ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் உங்கள் உடலின் மெடபாலிசத்தை அதிகரிக்கும்.ஏரோபிக் பயிற்சிகளை செய்தால் அந்த பயிர்சிகளை செய்யும்போது மட்டும்தான் கலோரிகளை எரிப்பீர்கள்.ஆனால் ரெசிஸ்டென்ஸ் டிரெய்னிங் செய்தால் உங்கள் உடலின் மெடபாலிசம் அதிகரிக்கும்.அதன்பின் 24 மணிநேரமும் உங்கள் உடல் தானாக காலரிகளை எரிக்கும்.
ஒரு சின்ன குறுக்கீடு, செல்வன். மன்னிக்கவும்.எனக்கு அந்தக் காலத்தில் (1965~1975) இந்தியாவில் இருந்த வசதிகள் பல பெண்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை;
இந்தியப் பெண்களுக்கு வீட்டுவேலை அதிகம் ... பிள்ளை, கணவன், உறவினர் என்று மற்றவர்களைக் கவனிக்கவேண்டிய தேவை மிகுதி. இதில் அவர்கள் தங்கள் உடலைக் கவனித்துக்கொள்வது என்ற சிந்தனையே ... மிகவும் புதிதாகவும் வினோதமாகவும் அசிங்கமாகவும் கருதப்படும். பிறருக்காக வாழும் பெண்ணே "ideal" இல்லத்தரசி என்று நினைக்கும் சமுதாயத்தில் ... ஒரு பெண் தன் உடல் நலனைப் பற்றி நினைக்க முடியுமா?
நான் வாரத்திற்கு இரண்டு முறை ஜோகிங் போவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
1 வருடத்திற்கு மேலாக ஜிம் பயிற்சி விடுபட்டு விட்டது. தொடர்ந்த அலுவலகப் பயணங்கள்.
வசந்த காலம் தொடங்கி விட்டால் தோட்ட வேலையும் சேர்ந்து விடும். எனக்குப் பிடித்த ஒரு விஷயமும் கூட.
நம் தமிழ் நாட்டு உணவு பழக்கத்தில் உள்ள குறையை குறிப்பிடவேண்டும். இங்கே கார்போஹைட்ரேட் அதிகம் உட்கொள்கிரார்கள். குறிப்பாக அரிசியை போட்டு (அதுவும் தீட்டிய அரிசி) சாம்பார், ரசம்,மோர்,அப்பளம்,ஊறுகாய்,பாயாசம், வடை என ஒரே வேளையில் என புகுந்து விளாசுகிறார்கள். இத்தனை அரிசி உடலுக்கு தேவையற்றது.இதில் மாற்றங்கள் கொண்டுவர சாம்பாரில் நிறைய பருப்பு போடலாம், காய்கறி பொறியலை அதிகம் வைக்கலாம், அப்பளத்தை எண்னெயில் பொறிப்பதற்கு பதில் மைக்ரவேவில் சுடலாம்.ரசத்தை அரிசியில் ஊற்றி உண்பதற்கு பதில் சூப் மாதிரி பருகலாம்.தயிரை அரிசியில் கலந்து உண்பதற்கு பதில் கெட்டி தயிரை அல்லது மோரை அப்படியே பருகலாம். பாயாசம், வடை போன்றவற்றை புறக்கணிக்கலாம் அல்லது அளவை குறைக்கலாம்.
புரதம். ப்ரோட்டீன்
செய் பெண்ணே, செய்! அதாவது ... முடிந்த அளவில் உடல் பயிற்சியை ... செய் பெண்ணே, செய்! அது எந்த வடிவில் அமைந்தாலும் சரி, செய் பெண்ணே, செய்! :-) :-) :-)
நான் வாரத்திற்கு இரண்டு முறை ஜோகிங் போவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
தொடர்ந்து செய்யுங்கள், சுபா!
1 வருடத்திற்கு மேலாக ஜிம் பயிற்சி விடுபட்டு விட்டது. தொடர்ந்த அலுவலகப் பயணங்கள்.இதுபோல வேறு சில காரணங்களால் என்னுடைய ஜிம் பயிற்சியும் விடுபட்டது. எனக்கு மிகவும் வருத்தம். என்ன செய்ய. உங்கள் வயதிலேயே இதை விட்டுவிட வேண்டாம். முடிந்த அளவு தொடரப் பாருங்கள். (எனக்குத் தெரியும் எவ்வளவு தொல்லை இருக்கும் என்று.)
.
அன்புடன்,ராஜம்
பி.கு: இந்த இழையைத் தொடங்கிய நம் செல்வனுக்கு இப்படி ஒரு சில பெண்கள் பேசுவது பிடிக்குமோ இல்லையோ. ஒரு தனி இழை (பெண்களுக்காக) என்று நாம் தொடங்கணுமோ? எனக்கு விருப்பம். ஆனால் உடனுக்குடன் மறுமடல் எழுத நேரம் கிடைக்காது. அதனால் தயக்கம். புத்தக வேலை முடிந்த பிறகு வருவேன் பழைய வலிமையுடன்! :-) :-) :-)
செல்வன் குறை சொல்லாதவரை நாமும் இப்படி இதே இழையில் பேசிக் கொள்ளலாம் என நினைக்கிறேன். என்ன செல்வன் சரிதானே..!
செல்லவன் நல்ல விளக்கம். தமிழக உணவு முறையை எப்படி திட்டமிட்டு உண்பதன் மூலம் உடலை குறைக்க இயலும் என்று விரிவாக ஒரு கட்டுரையாக எழுதினால் நிறைய பேருக்கு உபயோகமா இருக்கும்.
புரதம் பற்றிய ஒரு சிறு குறிப்பு, என் அனுபவத்திலிருந்து ... "சீஸ் cheese" பற்றி மட்டும்:1. மிருகக் கொழுப்பிலிருந்து வரும் புரதச் சத்தோ/எதுவோ ... அது எளிமையாக நம் இதயக் குழாய்களிலிருந்து வெளியேறாது. அதாவது பாலடைக்கட்டி என்று பழைய காலத்தில் அறியப்பட்ட இன்றைய "சீஸ் cheese" போன்றவை.வெளிநாட்டவரின் பழக்கத்தைப் பார்த்தீர்களென்றால் ... அவர்கள் "சீஸ் cheese" உடன் ஏதாவது ஆல்கஹால் (alcohol: http://en.wikipedia.org/wiki/Alcoholic_beverage) உட்கொள்ளுவார்கள். அந்த alcohol அந்த உணவுப்பொருளின் கொழுப்பு நம் இதயக் குழாய்களில் உறைந்துவிடாமல் பாதுகாக்கும் என்பது எனக்குத் தெரிந்த உண்மை.
(பாடிபில்டிங் பற்றி இன்னும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம். நாளை மீண்டும் புரதம், வைடமின்களுக்குள் குதிக்கலாம் என உள்ளேன்).

உபயோகமா இருக்கும் என்று நம்புகிறேன்...
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நூடில்ஸ், இனிப்புவகைகள், கேக்,மிக்சர் போன்றவற்றி எப்போதாவது மட்டுமே சாப்பிடலாம்.நேரமின்மை கருதி பலர் தம் குழந்தைகளுக்கு டக் என நூடில்ஸ் செய்து கொடுக்கின்றனர்.அதில் எந்த சத்தும் இல்லை
கடலைமிட்டாயும், பொரிஉருண்டையும், பட்டாணியும், பொட்டுக்கடலையும் மிகவும் நல்லது என்று நினைக்கிறேன்.
நண்பர் ஆண்டோவின் இல்லத்தில் நான் சாப்பிட்ட வரையில் எப்போதும் பற்பல காய்கறிகள் சாம்பார், கூட்டு வகைகளில் இருக்கும். வீட்டிலும் முருங்கை பொண்ணாங்கண்ணி என பல மூலிகை செடிகளும் இருக்கின்றன. டாக்டர் பத்மாவும் காய்கறிகளை தேர்ந்தெடுத்து சமைப்பவர். சாதத்தை விட காய்கறிகள் கூடுதலாக இருக்கும்.
ஆண்டோவுக்கு பிடித்தது என்னமோ தயிர்ச்சாதம். நான் அவரை பார்க்கப்போனபோது, எனக்கு வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்தத் தயிர்ச்சாதம் தந்தார். சுகம்.இன்னம்பூரான்