சமண சிற்பங்கள் ஆய்வு தேடலில் கொல்லி மலையில் காணும் ஒன்று சமணம் சார்ந்ததா என ஐயமுள்ளது

10 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
Feb 18, 2019, 5:28:49 AM2/18/19
to mintamil, vallamai, தமிழ் மன்றம், thamizayam, Kanaka Ajithadoss, Banukumar Rajendran, podhuvan sengai, SivaKumar, Vasudevan Letchumanan, Maravanpulavu K. Sachithananthan, Seshadri Sridharan, Muthu muthali, Thenee MK
நூ த லோ சு
மயிலை

இணைய பதிவுகளில் சமண சிற்பங்கள் ஆய்வு தேடலில் கொல்லி மலையில்
 காணும் ஒன்று  என கீழ் காணும் வலைப்பூவாளர் அவ்வாறு குறித்துள்ளார் 
ஆனால் இது  சமணம் சார்ந்ததா தெரியவில்லை கண்ட சுட்டியின்வழி
 சமணர்கள் முழுநிலவு நாட்களில் இங்கு சென்று வழிபடுகின்றனராம் 
மேலும்  இதன் நுண்ணிய இருப்பிடம் காட்டப்படவில்லை 

சமணம் சார்ந்ததாக இருக்க முடியாது என் பதற்கான சான்றுகள் 

* அமர்ந்த தியான நிலையில் கைகள் மரபு வழி ஒன்றின்மேல் ஒன்றாக
  சேர்ந்திருக்கவில்லை  கால்களின் நிலை மறைந்துள்ளது

* முக்குடை சாமரமேந்திகள் காணவில்லை 
 
* மார்பில் குறுக்காகக் காண்பது பூணூல் /மேலாடை ஆகும்
   இடுப்பிலும் ஆடைகளின் மடிப்பு உள்ளது  திகம்பருக்கு பொருந்தாது 

* தோளில்  கழுத்தில் மணிக்கட்டில் உந்தியில் காணும் அணிகலன்கள் திகம்பருக்கு பொருந்தாது 

* இந்து முனிகள் போல் பரந்து விரிந்த சடை.இது  தெய்வங்களுக்கான ஒளிவட்டம் ஆகாது 
   இருந்தும் தலையில் வைக்கும் இண்டை வளையமும் ஆகலாம் என நினைக்கின்றேன் 

சமண வலைப்பக்கங்களை நிர்வகிக்கும் தென்னக தமிழ் திகம்பர சமணர் முன்பே அறிந்
திருக்கலாம் இது பற்றி பானுகுமார் அசிததாசு போன்றோர்கள்  கருத்தும்  வைக்கலாம் 


image.png

மேலும் இப்பதிவில் ஓர் செக்கு கல்வெ ட்டும் காண்கின்றது 
இது முன் பே பதிவானது என தொல்லியல் கழகத்தினர் உறுதி படுத்தினால் நலம் 
ஒரு குறை இடம் தெரியவில்லை இருந்தாலும் படம் மற்றும் படிப்பினை வைத்து 
தெளிவு படுத்த முடியும் 

koolimalali sekku kalvettu.gif
koolimalali sekku kalvettuG.gif
Reply all
Reply to author
Forward
0 new messages