திருப்பாவை - முடிவுரை

443 views
Skip to first unread message

O தோழன்:-}

unread,
Jan 13, 2009, 1:45:54 PM1/13/09
to minT...@googlegroups.com

திருப்பாவை - முடிவுரை

திருப்பாவை எளிய விளக்கங்கள்

கடந்த ஒரு மாத காலமாக தேசிகன் அவர்களுடைய பதிவில் தினமும் வந்த திருப்பாவையை படித்த எல்லோருக்கும்  நன்றிகள். நான் எதுவும் பெரிதாக செய்யவில்லை.ஸ்ரீமான் தேசிகன் அவர்களின் தனது வலைப்பதில் படைத்ததை தங்கள் முன் பகிர்ந்தளித்தேன்.உங்கள் எல்லோருடைய அன்பும் ஆதரவும் ஆசிகளும் தேசிகன் அவர்களுக்கே சாரும்.பரிமாறும் அவசர வேளையில் குற்றங்களும் குறைகள்  ஏதேனும் ஏற்ப்ட்டிருப்பின் இச்சிறியவனை மன்னித்தருள வேண்டுகிறேன்.மின் தமிழ் கலைச்சிற்பிகள் நிச்சயமாக பொறுத்தருள்வார்கள் என்ற நம்பிக்கையோடு எமது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்தினை

தெரிவித்துக்கொள்கிறேன்.


வாசக தோஷஹ க்ஷந்தவ்யஹ

கல்யாண்ஜி


மேலும் தேசிகன் (வலை)வீட்டுப் பக்கம் ஒரு முறை சென்று வாருங்களேன்


http://www.desikan.com/blogcms/wiki/


தேசிகன் அவர்களின் முடிவரையையும் படித்து எம்பெருமானி திருவருளை பெற்றுய்ய ப்ரார்த்திக்கிறேம்




ஆண்டாள் எழுதிய திருப்பாவைக்கு பலர் உரை எழுதியிருந்தார்கள். அவற்றை படித்து கொஞ்சம் எளிய முறையில் உங்களுக்கு அளித்தேன்; அப்படி எழுதிய போது விளக்கமும் எட்டு அடியில் இருக்குமாறு பார்த்துக்கொண்டேன்.அவ்வளவே. எனக்கு பயன் பட்ட நூல்கள் உங்களுக்கும் பயன்படும் என்ற எண்ணத்தில் இங்கு தந்துள்ளேன்.

தமிழ்:
1. சங்கத்தமிழ் மாலை - ப்ரபன்னா திருமதி கோதை வேங்கடாபதி
2. ஸ்ரீ தேசிகப் பிரபந்தம் - ஸ்ரீராமதேசிகாசார்யர் ஸ்வாமி - லிப்கோ
3. திருப்பாவை விளக்கவுரை - ஸ்ரீலக்ஷ்மிநாராயண ராமாநுஜ தாஸர் - ஆழ்வார்கள் அமுத நிலையம்
4. திருப்பாவை உரை - சாண்டில்யன் - வானதி பதிப்பகம்.
5. திருப்பாவை - கழக வெளியீடு
6. கோதை என்னும் ஆண்டாள் - பூ.ஜெயராமன் - அநுராகம்
7. திருப்பாவை, நாச்சியார் திருமொழி - Dr.M.A.வேங்கடகிருஷ்ணன்
8. நாலாயிர திவ்வியபிரபந்தம் - மதி.சீனிவாசன் - ஸ்ரீவராகி பிரிண்டர்ஸ்
9. திருப்பாவை - பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமி
10. திவ்வியப் பிரபந்த இலக்கிய வகைகள் - ம.பெ.சினிவாசன் - மெய்யப்பன் தமிழாய்வகம்.
11. ஆண்டாள் - கே.ஏ.மணவாளன் - சாகித்திய அக்காதெமி.
12. மணவாளமாமுநிகள் உபதேசரத்தின மாலை வ்யாக்யாநம் - பிள்ளைலோகார்யஜீயர்.

ஆங்கிலம்:
1. The Thiruppavai of Sri Andal - V.K.S.N Raghavan (Univ of Madras)
2. The Sacred Book of Four Thousand - SriRama Bharathi.
3. Concepts of Sri Andal Thiruppavai - Dr.Chenni Padmanabhan

நான் எழுதியவற்றை பிழை திருத்தம் செய்த ஜெயஸ்ரீக்கும், தமிழ்மணத்தில் 301 x 517 pixel பட்டா இடம் ஒதுக்கிய காசிக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள்.

திருப்பாவை ஓவியங்கள்

திருப்பாவைக்கு தினமும் ஒரு ஒவியத்தை பார்த்திர்பீர்கள். பலர் ஓவியங்களை நான் வரைந்தேன் என்று நினைத்து பாராட்டினார்கள். அவை நான் வரைந்தது இல்லை.

1871ஆம் ஆண்டு ஒரு மணிப்பிரவாள மொழி உரை புத்தகத்தில் முதன் முதலில் வந்தவை. இவை கோட்டோவியங்கள்; வரைந்தது யாரென்று தெரியவில்லை. ஓவியங்கள் யாவும் சிறப்புமிக்க பழமையான தஞ்சாவூர் பாணியில் வரைந்தவை. தஞ்சாவூர் ஓவியங்களின் வளர்ச்சி 18-19ஆம் நூற்றாண்டுகளில் உச்சத்தை அடைந்தது. இந்திய அரசியலில் காலனிகள் ஆதிக்கம் செலுத்திய தொடங்கிய காலத்தில் ஓவியர்கள் தங்களை ஊக்குவித்தவர்கள் வீடுகள், விளக்குகள், படுக்கை முதலியவற்றை மாதிரியாக வைத்து ஓவியங்களை தீட்டினார்கள். ஓவியங்கள் அனைத்திலும் ஐரோப்பிய சாயல் இருந்தாலும், உடை, நகை, தலையலங்காரம், உடம்பு முதலியவை இந்திய சாயலே இருக்கிறது. வைஷ்ணவத்தில் ஆண்டாள் ஒரு தெய்வமாக கருதப்படுகிறாள். ஓவியங்களில் ஆண்டாள் ஒரு கவிஞராக வீட்டுக்கு வீடு தன் தோழிகளுடன் செல்லவதாக சித்தரிக்கபட்டுள்ளாள். ஓவியர் ஆண்டாளுக்கே உரிய சயனகொண்டை வைத்து ஓவியங்களில் அடையாளம் காட்டியுள்ளார். கிருஷ்ணரை அளவுக்குமீரிய குண்டு குழந்தையாக சித்தரிப்பது பழைய இந்திய கலையின் வழக்கம்.

நான் செய்தது இதுதான் இந்த ஓவியங்களை ஆங்காங்கே கொஞ்சம் டச்சப் செய்து, ஸ்கேன் செய்து பிறகு Adobe Photoshop கொண்டு திரும்பவும் டச்சப் செய்து உங்களுக்கு அளித்தேன்.

கோலங்கள்
கோலம் என்றால் தமிழில் 'அழகு', 'அலங்காரம்' என்ற அர்த்தம் உள்ளது. 18வது நூற்றாண்டில் வியாசர் எழுதியதாகக் கருதப்படுகின்ற வராக புராணத்தில் வாசல் தெளித்து கோலமிடுதலைப் பற்றிக் கூறியிருக்கிறார். கோலம் வரைவது அறுபத்து நான்கு கலைகளில் ஒரு கலையாக காமசூத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுக்க இந்த கலை பல்வேறு விதமாக அழைக்கபடுகிறது. உத்திரபிரதேசத்தில் 'ஸாஞ்சி' ;, ராஜஸ்தானத்தில் 'மந்தனா' ; மஹாராஷ்டிரத்தில் ரங்கவல்லி ;, வங்கத்தில் 'அல்பனா' ; ஆந்திரத்தில் 'முக்கு' ; கர்நாடகத்தில் 'ரங்கோலி' ; கேரளத்தில் 'புதுவை' என்று கோலம் குறிப்பிடப்படுகிறது. கேரளத்தில் ஓணத்தின் போது மலர்க் கோலம் வரையப்படுகிறது. புத்தர் இந்த கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் என்று கருதப்படுகிறது.

தமிழ் நாடு, இலங்கையில் கோலங்கள் பெரும்பாலும் அரிசி மா கொண்டு வரையப்படுகிறது. பொதுவாக வீட்டு வாசலில் கோலம் காணப்பட்டால் "எல்லாம் சுபம்" என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். கோலங்கள் சூரியன் உதிக்கும் முன் பஞ்சாணத்தால் வாசல் தெளித்து சுத்தம் செய்து பின்பு கோலம் இடுவர். இழைகளை வலப்புறமாக மட்டுமே இழுக்க வேண்டும், இடப்புறமாக இழுக்க கூடாது!. விசேஷ நாட்களில் கோலமிட்டு காவி பூசுவது வழக்கத்தில் உள்ளது.

கம்பி கோலம், புள்ளி(நேர்ப் புள்ளி, ஊடு புள்ளி) கோலம் என்று இருவகை உண்டு. இதை தவிர ஐயர், ஐயங்கார் ஆத்து கோலம் என்றும் உண்டு.

மார்கழி மாதம் முழுவதும் தினமும் அதிகாலையில் தெருவடைத்துக் கோலம் இட்டு அதில் சாணி உருண்டையில் பூசணிப்பூ, பரங்கிப்பூ சொருகி வைத்து அலங்கரிப்பது வழக்கம். இன்று சென்னையில் கோலங்களை தமிழ் டிவி சீரியலிலும், தி.நகர் பிளாட்பாரங்களில் ஸ்டிக்கராகவும் பார்க்க முடிகிறது.

Thiruppavai - Meaning

Thanks for reading Thiruppavai in my blog for the last one month. I did not do anything great, It was Andal's Thiruppavai and there were many books about it in both Tamil and English. ( Refer to the list which I have shared above ). I just read and wrote some simple explanation which did not exceeded 8 lines.

Illustrations

You would have noticed the image for each Thiruppavai. Many thought I had done these sketches. I did not do these.

The illustrations presented here first appeared in a book of Manipravala commentary on the work, in 1871. They are pen and ink drawings; the artist is unknown. The style is the sublime spiritual art of Tanjore, tradition in which art was a means of contemplating. The tradition attained its peak with patronage during the 18th-19th centuries, when colonial power was gaining a political hold over the Indian aristocracy.At the time, artists used in their interiors what they saw in the rich lavish homes of their patrons. The drapes, the candle bars, the couches all bear a distinct European character, while the dress, the ornaments, the coiffure and the body features remain Indian. Andal is a deified figure in Vishnava lore. In the illustrations she is shown as the poetess, moving from house to house with her friends. She can be made out from the others by the Cayakkotai that she wears, a tuft of hair coiffured to the side of the head. The tradition of representing Krishna as a plump, sensuous, overgrown child is very old in Indian art.

All I did was to improve the quality of the image. I did some touch-up's manually - scanned those then again did some modifications using using Adobe PhotoShop and then presented to you.

Kolams
Kolams meaning 'beauty' or 'decoration' in Tamil language have references to Varaha Purana (18 Century).

It has also listed as one of the 64 forms of art in Vatsyayana's Kamasutra. The art of kolam is known throughout India but by different names - Sanjhi in Uttar Pradesh, Alpana in Bengal, Mandana in Rajasthan, Chaukpurna in Madhya Pradesh, Rangoli in Maharashtra and Karnataka, Muggulu in Andhra Pradesh and Puvidal in Kerala. Although essentially a Hindu tradition, kolam is also known to the Jains, Buddhists and Parsis. It is said that Gautama Buddha was himself an expert in this art.

In Tamil Nadu, Sri Lanka Kolams ( or Rangoli) is usually drawn using rice flour as the medium. Generally kolams are a symbol of auspiciousness. Usually before dawn a mixture of cow dung and water was splashed on the mud floor before drawing Kolams. The strokes should be from left to right only. During some important occations bright red border or kaavi enclosing it is drawn. There two main types of kolam designs. There are line kolams, where there is the free hand drawing of lines to make a geometrical pattern and Pulli Kolam (dots) are arranged in a specific sequence and order & these pullis are joined to make pictorial designs.

In the pulli kolam type, there is an another type of forming twisted chains by linking one loop with the next & forming wonderful designs with the basic pattern. This is called Chuzhi kolam.

While the kolam is drawn throughout the year, it is specially important during Margazhi. During this month, the kolam is much larger and a lump of cow-dung is placed at the centre. The yellow flower of the ash-gourd creeper is placed on the cow-dung.

Today in Chennai we see kolams only in TV-Seials and as stickers in T.Nagar platforms.



--
அன்புடன்.....
கல்யாண்ஜி

"மண் பயனுற வேண்டும்"

மார்கழி மஹோத்ஸவம்
http://markazhimahotsavam.blogspot.com/
http://velmurugantemple.org.uk/

Narayanan Kannan

unread,
Jan 13, 2009, 6:13:44 PM1/13/09
to minT...@googlegroups.com
குருக்கள் ஸ்வாமி!

இது தேசிகன் கொடுப்பா? நான் இத்தனை நாள் சென்னை ஆன்லைன்னுக்கு நன்றி
சொல்லி வந்திருக்கிறேனே. பாவம், அவர் எவ்வளவு மெனக்கெட்டு சித்திரங்களைப்
போட்டிருக்கிறார்!

இனிமேல் நாம் முறையாக எடுத்தாளும் போது உரியவருக்கு சிறப்புச் செய்துவிட வேண்டும்.

நோன்பை இனிதாக நடத்திக் கொடுத்ததற்கு நன்றி. அக்கார அட்சிலையுல் அப்படியே
பார்சல் செய்துவிடவும்!

நன்றி..நன்றி..

க.>

2009/1/14 O தோழன்:-} <guru...@gmail.com>:

annamalai sugumaran

unread,
Jan 14, 2009, 5:11:19 AM1/14/09
to minT...@googlegroups.com
குருக்கள் ஐயா ,
எனது உளமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் !
இந்த மார்கழியை மணக்க வைத்து விட்டீர்கள் .
மிகப்பெரிய இறைப் பணி.
மிக்க நன்றி
அன்புடன் ,
ஏ. சுகுமாரன்
"மண் மட்டும் அல்ல மனமும்  பயனுற வேண்டும் "


 
2009/1/14 O தோழன்:-} <guru...@gmail.com>

திருப்பாவை - முடிவுரை

Reply all
Reply to author
Forward
0 new messages