உண்மையிலேயே எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமான பெண் உலகின் எல்லா முக்கிய நிகழ்ச்சிகளிலும் பெரும்பங்கு வகிக்கிறாள். இதையெல்லாம் எழுத ஆரம்பித்தால் கூகிள் கொடுக்கும் ஸ்பேஸ் போதவே போதாது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2.
சரி, ஏற்கனவே சொல்லிவிட்டேன், நாகாம்பா தன் 20/25 ஆவது வயதில்தான் தன்னை வெளிக்காட்டிக்கொண்டாள் என்று. அதற்குள் இந்த 20/25 வருட தல வரலாறை ஒருமுறை சட்புட்டென பார்த்துவிடலாமே
இங்கு சொல்லப்படும் தலம் என்பது பல்நாடு அல்லது குர்ஜாலா எனும் ஒரு சிறிய மாநிலம் ஆகும். இது இன்றைய குண்டூர், பிரகாசம், பகுதிகளில் இருந்த இடம். மஹாதேவிசெருவுலா என்கிற மாச்சரலா தலைநகரம் (இன்றைக்கும் மாச்சர்லா என்ற பெயர்தான், குண்டூர் மாவட்டத்தின் மேற்கு கோடியில் உள்ளது) இந்த பல்நாடு பகுதியை நாம் சொல்லப்போகும் இந்தக் கட்டுரையின் காலத்தில் ஆண்டுவந்தவன் அனுகுராஜா என்கிறவன். (இவன் காலம் கி.பி 1125-60 என்பர்) இவன் சோழநாட்டின் கட்டுப்பாட்டுக்குள்ளும் சோழ ராஜனான இரண்டாம் குலோத்துங்கனை சக்கரவர்த்தியாக ஏற்றுக் கொண்டவன். அவர்களின் தெலுங்கு நண்பர்களான வெலநாட்டுச் சோழன் மகள் மயிலம்மையை மணம் செய்தவன். இந்தவெலநாட்டு சோழர் தம்மை வெலம நாயுடு வகுப்பில் சேர்த்துக் கொண்டனர். அனுகு ராஜா சத்திரிய வம்சம். இந்த ராஜா, நாயுடு வம்சத்து மயிலம்மை போதாதென பூரமா எனும் (கம்மா ஜாதி, பூ என்றால் பூமி, ரமா என்றால் லக்ஷ்மி) அரசியையும் ரெட்டி வம்சத்தவளான விஜ்ஜலா என்பவளையும் கலியாணம் செய்துகொண்டான். சாதித் தகராறு மிக அதிகமான சமயம் அது. சாதித் தலைவர்களைத் திருப்திப்படுத்த அனுகுராஜாவின் அமைச்சரான தொட்டநாயுடு என்பவரின் ஏற்பாடுதான் இது. மூன்று மனைவிகள் உள்ளவனானாலும் புத்திரபாக்கியம் இல்லாத நிலையில் மந்திரியின் முதல் மகனான
பாதாநாயுடு என்பவனை சுவீகாரம் ஏற்றுக் கொண்டான். அந்த மகனே தனக்கு அடுத்தபடியான அரசன் என்றும் அறிவித்துவிட்டான்.
இதுவரை கதை நன்றாகவே நடந்தாலும், விதி என்று ஒன்று இருக்குமே, அது எப்போதுமே மனிதனுக்கு எதிராகவே வேலை செய்யுமோ என்னவோ, எந்த நேரத்தில் தொட்டநாயுடுவின் முதல் மகனை தத்து எடுத்தானோ அந்த சமயம் இந்த மூன்று மனைவிகளுமே ஒவ்வொருவராக கருத்தரிக்க ஆரம்பித்தனர். மூன்று பேருமே ஆளுக்கொரு மகனையும் (!) பெற்றுத்தந்தார்கள். தத்துப்பிள்ளை வந்த அதிர்ஷ்டம் என்று வெளியே மன்னனிடம் சந்தோஷமாகவும், உள்ளுக்குள் வெறுப்பாகவும் இருந்த மந்திரி தொட்டநாயுடுவுக்கு இன்னொரு சோதனை வந்தது என்னவென்றால் அந்த தத்துப்பிள்ளை பக்கத்து நாட்டில் ஒரு விவகாரத்தில் சிக்கி தண்டனையாக மரணத்தின் பிடியில் சிக்கியதுதான்.. (விவகாரம் என்றால் ஏதோ பெண் விஷயம் என நினைக்கவேண்டாம். அந்தப் பக்கத்துநாடான சண்டோல் நாட்டுக் கொடி புறாக்கொடி. அதனால் அந்த நாட்டில் சென்று அங்கு புறாக்களை கொல்லக்கூடாது. ஆனாலும் இவன் அங்கே போய் அப்படி ஒரு புறாவை அம்புவிட்டுக் கொல்ல, அந்த நாட்டுச் சட்டப்படி அவனுக்கு உடனடியாக மரணதண்டனை கிடைத்துவிட்டது)
ஆக அனுகுராஜாவுக்கு சற்று வயது கூடிப்போனாலும் மகிழ்ச்சியும் கூடிப்போய்விட்டது. சம்பந்தமே இல்லாத தத்துப் பிள்ளைக்கு இனி முடிசூட்டவேண்டாம், இருக்கவே இருக்கிறார்கள் தன் ரத்தத்தின் ரத்தமான அருமந்தபுத்திரர்கள் மூவர்.. யாராவது ஒருவனுக்கு முடிசூட்டிவிட்டு ராஜ்ஜியபாரத்தை மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டால் தாம் இனி மீதியிருக்கும் காலத்தை வெகு சந்தோஷமாக கழித்துவிடலாம் என்று கணக்கு போட்டான்.
மந்திரியான தொட்டநாயுடு சோகத்தில் ஆழ்ந்ததைப் பார்த்த அவன் இரண்டாம் மகனான பிரமண்ணாநாயுடு தந்தைக்கு ஆறுதலாக இருந்ததோடு, அந்தத் தந்தைக்கு வாக்கும் கொடுத்தான். இந்த பல்நாடு எனும் நாடு பலமாக இருக்க வேண்டுமானால் தம்மால்தான் முடியும் என நிரூபிக்கவேண்டும்.. ஆகையினால் மன்னர்களின் மூன்று புத்திரர்களில் நாயுடு வம்சத்தைச் சேர்ந்த மயிலம்மை புத்திரனுக்கே முடிசூட்டவேண்டுமென அனுகுராஜாவுக்கு இந்த தந்தையும் இரண்டாம் மகனும் யோசனை கொடுத்தனர். இந்த யோசனை விஷயம் வெளியே சென்றதுமே மற்ற ஜாதித்தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதையும் அந்த ராஜாவும் அறிந்து கொண்டான். ஒவ்வொரு நாளும் அந்தந்த ஜாதிகாரர்கள் ஏதாவது உள்நாட்டுக் கலகம் செய்து தத்தம் ஜாதி பெரிது எனக் காண்பிக்க எல்லாவழிகளையும் கடைபிடித்தனர். பிரமண்ணா நாயுடு அதி சாமர்த்தியசாலியாதலால் நாட்டில் உள்ள நாயுடு மக்களையும் அவர்களோடு சத்திரிய வைஸ்ய, இதர ஜாதி மக்களையும் (ரெட்டி, கம்ம தவிர்த்து) மிகப் பெரிய கூட்டத்தைத் தமக்காக தயார் செய்துகொண்டு காலம் கனிய காத்திருந்தான். கலவரங்கள் நாளும் நடந்தாலும் அதை சுமூகமாக தான் தவிர்த்து அரசனுக்குப் பாதுகாப்பாக இருப்பது போல காண்பித்துக் கொண்டான். இவனுடைய சாமர்த்தியத்துக்குப் பரிசாக அனுகு ராஜாவின் மாமனாரும், வெலமநாயுடு வம்ச மயிலம்மையின் தகப்பனுமான வெலநாட்டு ராஜா பிரும்மண்ணாவுக்கு அந்த நாட்டு முதன்மந்திரி பதவியைக் கொடுக்க சிபாரிசு செய்தார். (அதுதானே ஜாதிக்கழகு?) இதனால் மேலும் ஆத்திரமடைந்த ரெட்டிக்களும், கம்மாக்களும் கலவரத்தைப் பலப்படுத்தினர்.
சக்தி வாய்ந்த மூன்று ஜாதிக்காரர்களை எதிர்த்துக் கொண்டு தம்மால் ராஜ்ஜியபாரம் சுமக்கமுடியாது என்ற நிலைக்கு வந்த அனுகுராஜா சொல்லாமல் கொள்ளாமல் ஒருநாள் இரவு அரண்மனையை விட்டு கால் போன போக்கில் நடந்தபோது ஊரின் முடிவில் அவன் முன்னே ஒரு ஒளி தோன்றியது போல ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. கண்ணைக் கசக்கி அந்தக் கிழராஜா எதிர்நோக்கியபோது அங்கே அந்த பெண் நிற்கக் கண்டான். ஆனால் அந்தப் பெண் திடீரென அவன் மேல் பாய்ந்து அந்த ராஜாவை ஒரு தூக்கு தூக்கி பாதை ஓரத்தில் எறிந்தாள். சடுதியில் நடந்த இந்த கோரத்தைப் பார்த்து பயந்து போனவன், அங்கே அவன் முன்னம் நின்ற இடத்தில் ஒரு வேங்கைப் புலி இருப்பதையும் பார்த்தான். வேடிக்கை என்னவென்றால் அது ஏதோ நாய் ஒன்று மனிதனுக்கு தோழமையாய் இருப்பது போல அந்தப் பெண்ணைப் பார்த்து அவள் காலடியை மோர்ந்து பார்த்துவிட்டு பிறகு சத்தம் போடாமல் காட்டுப்பக்கம் ஓடிவிட்டதையும் பார்த்து மயக்க மருந்து இல்லாமலே மயங்கும் நிலைக்கு வந்தான் அரசன். அந்தப் பெண் அந்த அரசனை எழுப்பி அவனை தன் நிலைக்குக் கொண்டு வந்தாள். “என்னை இன்று காப்பாற்றினாயே.. அது போல என்றும் என்னைக் காப்பாற்ற உன்னால் முடியுமா.. அப்படி முடிந்தால் நீ சொல்வதை எல்லாம் நான் செய்கிறேன்” என்றான்..
”முடியும் வரை பார்க்கலாம்” என்றாள் அந்தப் பெண். அவள் பெயர் கேட்டான் ‘நாகாம்பா’ என்றாள். எந்த ஊர் எனக் கேட்டான். எந்தக்குலம் எனக் கேட்டான். கலியாணம் ஆகிவிட்டதா..கணவன் பெயர் என்னவெனக் கேட்டான்.
அவள் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள்.” இனி எந்தக் கேள்வியும் கேட்காமல, நான் சொல்வதை மட்டும் கேட்டு அதன் படி நட.. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்..: என்று கிழராஜனை முன்னே செல்லவிட்டு பின்னே அவள் நடந்தாள். அரண்மனையில் மறுநாள் நாகாம்பாள்தான் தன்னுடைய மதி மந்திரி என்று அரசன் பிரகடனம் செய்தான். முதன் முதலாக தனக்கென ஒரு மிகப்பெரிய ஆதரவைப் பெற்ற அதே நாளில் ஒரு மிகப் பெரிய எதிரியையும் சம்பாதித்துக் கொண்டான்.
அவன் பிரம்மண்ணாதான்.
(வீரதேவதை தொடர்ந்து வருவாள்)
பி.கு. இந்தக் கட்டுரைக்கான எல்லா ஆதாரங்களையும் கடைசியில் கொடுக்கிறேன்.)
திவாகர்
மின்தமிழ் மகளிர் சமுதாயத்துக்காக அந்தக் காலப் பெண் ஒருத்தியின் வீரதீர சாகஸம் நிறைந்த வரலாறு ஒன்றினை கட்டுரை வடிவில் மின் தமிழில் எழுதுகிறேன். இங்குள்ள அத்தனைப் பெண்மணிகளுக்கும் இது சமர்ப்பணம். (இந்தக் கட்டுரை பூர்த்தி அடைந்தபின் திருமதி சுபா அவர்கள் மரபுவிக்கியில் சேர்க்கட்டும்)
3.
ஜாதிகள் பாரதத்தில் மனிதன் பிறந்தபோதே வந்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது. சனாதன தர்மத்தில் நான்கு வர்ணங்கள் என ஏற்பட்டதே ஒரு வசதிக்காகவும் அவர்கள் செய்யும் தொழிலால் மாறுபட்டவையே தவிர மனிதர் யாவரும் ஒருவரே என்பதை நம் முன்னோர்களான பாரதத்தின் சத்புத்திரர்கள் எத்தனையோ முறை போதித்துள்ளனர். மகாபாரதம் முழுதும் படித்தவர்கள், பாரதத்தில் வரும் பாத்திரங்கள் இவர் இன்ன சாதிதான் என்று யாரையுமே அறுதியிட்டுக் கூறமுடியாது. சாதி தொழிலால மட்டுமே பார்க்கப்பட்டது. யார் எப்போதெல்லாம் பிறப்பு வழியாக ஜாதிதர்மத்தை சுட்டிக்காட்டியபோதெல்லாம், அவர்களுக்கு அவ்வப்போது பெரியவர்களால் கண்டிக்கப்பட்டு திருதாஷ்டிரனும், பாண்டுவும், ஏன் வியாசமகரிஷியும் பிறந்த விதம் எடுத்துச் சொல்லப்பட்டு, சாதி என்பது பிறந்தவழியால் ஏற்படுவது அல்ல என்று திடமாக போதிக்கப்பட்டது. கடைசியில் முத்தாய்ப்பாக கீதையில் கண்ணனும் இதையே சொல்வதாகவும் வரும். ஆனால் காலாவட்டத்தில் இந்த சாதிமுறை பிறப்பு வழியாக பாரதத்தின் பலமூலைகளிலும் வேர்விட்டு வளர்ந்ததோடு, இது ஒரு விஷவிருட்சமாக மாறி பல குடும்பங்களையும் வேரோடு அழித்ததையும் நாம் எத்தனையோ முறை படித்திருக்கிறோம். அத்துடன் ஆண்வர்க்கம் தங்கள் சுய நலத்துக்காக இந்த சாதியெனும் விஷவிருட்சத்தை தமக்கு சாதகமாக வளைத்துக் கொள்வதிலும் சாதிவழியை அதிகாரமாகவும் அடக்குமுறையாகவும் ஆள ஆரம்பித்தனர்.
சரி, பிரும்மண்ணாநாயுடு கதைக்கு வருவோம். தன் தந்தை மிகச் சிறந்த அறிவாளிதான், ஆனால் வயதான முதல்மந்திரி, முதல்மகனை அநியாயமாக ஒரு புறா விஷயத்தில் பறிகொடுத்தவர், நிலைமை சாதகமாகவே இருந்திருந்தால் இந்த அரச பதவியே அண்ணனுக்குதான் போயிருக்கவேண்டும். பிரும்மண்ணா மனமும் கொதித்துதான் இருந்தது. ஆனால் இந்த சோகங்கள் தந்தையைப் பாதித்துவிட்ட நிலையில் அவர் மகன் எனும் பெயரில் எந்தப் பதவியும் இல்லாமல் அவர் பதவிக்கான அத்தனை அதிகாரத்தையும் தன் கைக்குள் எடுத்துக் கொண்டவன். நான்காம் வர்ணத்தவனாக தன்னைப் பெருமையாகப் பேசிக்கொண்டவன், தானும் ஸ்ரீகிருஷ்ணனும் சமமானவன் என்று சொன்னதோடு விடாமல் தனக்கென தாஸர்கள் என்ற மிகப் பெரிய கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டான். இந்த தாஸர்கள் இந்த நான்கு வர்ணங்களையும் சார்ந்தவர் அல்லர். பலவகைப் பிரிவுகளாக இருப்பவர்கள். எனினும் தமக்கு மேலான குருவாக பிரும்மநாயுடு அமைந்ததில் வெகு சந்தோஷம் அவர்களுக்கு. இந்த தாஸர்களோடு யாதவ குலமக்களும், பிரும்மண்ணா சார்ந்த வெலம நாயுடு மக்களும் மிக ஒற்றுமையாக இருந்து பிரும்மண்ணாவுக்கு மிகப் பெரிய பலமாக இருந்தனர். இது போதாதென தனக்கென ஒரு கொடியும் அந்தக் கொடியில் ஈட்டி சின்னத்தையும் பொறித்துக் கொண்டான். தன் தாஸாதிதாஸர்களுக்கு ஈட்டி எறிவது முதல் சண்டைப் பயிற்சியையும் சொல்லிகொடுத்தான். அந்த ஈட்டிக் கொடியை நாளாவட்டத்தில் குர்ஜலா தேசமான பல்நாட்டில் பொதுக் கொடியாகவும் தனது தாஸர்கள் மூலம் பிரபலப்படுத்தினான். அதற்கேற்றவாறு அவர்களுக்கெனெ வரிச் சலுகைகளையும் ஏராளமாக அள்ளிக்கொடுத்தான் பிரும்மண்ணா. அதே சமயம் மற்ற சாதிகளான, முக்கியமாக ரெட்டி, கம்மாக்களுக்கும், வைசியர்களுக்கும் அதிகவரி போட்டு ராஜ்ஜியத்தின் பொக்கிஷத்தை சரிசமானமாக வைத்திருந்தான். மூன்றில் ஒரு பங்கு வரியை இவர்களிடம் வசூலித்தவன் தம் மக்களுக்கு வரி கொடுக்காவிட்டால் கூட போகட்டுமே என விட்டுவைத்தான்.
ஆனால் இவையெல்லாம் நாகாம்பா தன்னை வெளிக்காட்டிக் கொண்டு மாச்சர்லா அரச சபை வரும் வரைதான். இந்த அனுகுராஜா ஒருவிதத்தில் புத்திசாலியாகவே செயல்பட்டான். நாகாம்பாவை தன் மதி மந்திரி என்றுதான் அறிவித்தானே தவிர தம் மூத்த முதல் மந்திரியான தொட்டநாயுடுவை அதே முக்கிய பதவியில்தான் வைத்திருந்தான். என்ன, அந்தப் பதவிக்குள்ள ’அந்த’ முக்கியத்துவத்தை மட்டும் நாகாம்பா எடுத்துக் கொள்ளும்போது அதைக் கண்டும் காணாமல் ஏதும் அறியாதவன் போல முகம் திருப்பிக்கொண்டதுதான் விசேஷம்.
வந்த புதிதில் நிலைமையை நன்றாகவே அப்படியே கணித்துக் கொண்ட நாகாம்பா, வந்த சில மாதங்களிலேயே செய்த முதல் உத்தரவு அதுவும் அரசனின் பெயரில் செய்தது, ஆறில் ஒரு பங்கு வரி அனைத்துத் தரப்பினருக்கும் ஒன்றுதான் என்று அதிகாரத்துடன் சொன்னது. அடுத்த உத்தரவாக நாட்டின் சின்னம் வில் என்று பறையறிவிக்கப்பட்டது. காரணம் கேட்ட பிரம்மண்ணாவுக்கு பதில் தரப்பட்டது. நாகாம்பா வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவள் என்ற ஒன்றுதான். அடுத்த வேலையாக எல்லா வீரர்களுக்கும், நாகாம்பாவின் ஆணைப்படி வில் பயிற்சி கட்டாயக் கல்வியாக ஆக்கப்பட்டது.
அடுத்த ஐந்து வருடங்களில் நாகாம்பா ஏறத்தாழ ஒரு அரசியைப் போலவே செயல்பட்டாள். மிகமுக்கியமான செயல், அவள் மக்களிடையே பரவலாக இருந்துகொண்டு, மக்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்துகொடுத்தாள். வரிச்சலுகையால் வளர்ச்சிபெற்றிருந்த தாஸர்களும் இன்ன பிறர்களும், முதலில் பிரும்மண்ணாவின் கடைக்கண் ஆதரவினால் மிகப்பலமாக எதிர்த்தாலும், வெகு தைரியமாக அவர்கள் மத்தியில் வில்லைக் கையிலேந்தி அம்பைச் செருகிக் கொண்டே கோபத்துடன் புலி ஒன்று உலாவுவது போல உலாவி நியாயத்தை எடுத்துச் சொல்லி அவர்களிடமிருந்து பதில் கேட்பாள். அவள் கலவரங்களை அடக்கும் விதமே அலாதிதான். வீராங்கனை போல அவள் உலாவி வருவது அவள் வழக்கப்படுத்திக்கொண்டாள் என்றால் அவள் வீரவசனம் அனைவரையும் ஒரு மயக்கு மயக்கியதும் ஒரு காரணம்தான். யார் கலவரம் செய்கிறார்களோ, அவர்களில் யார் கூப்பாடு போடுகிறார்களோ, அவர்களை தரதரவென எழுத்து சாலை மத்தியில் நிற்க வைப்பாள். வேறு சில பெரியவர்களையும் சுற்றி நிற்க வைப்பாள். பிறகு கலவரக் காரர்களை கலவரத்துக்கான காரணம் கேட்பாள்.
பொதுவாக இந்தப் பொதுமக்களில் பலருக்கு சூதுவாது தெரியாது. தலைவன் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக் கேட்கும் கும்பல்களாக வளர்ந்துவிட்டதால் திடீரெனக் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாக அவர்களையே ஏன் கலவரம் செய்கிறாய் என நீதி நியாயம் கேட்டால் திருதிருவென முழிப்பார்கள். உடனடியாக அவள் சுற்றி நின்ற பெரியவர்களையே அந்தக் கலவரக்காரர்களுக்கு நீதி வழங்கும்படி சொல்லுவாள். எந்தவிதத் தகுதியுமில்லாமல் திடீரென ஒரு தற்காலிக நீதிபதி பதவி கிடைத்த மகிழ்ச்சியில் அந்தப் பெரிசுகள் நாகாம்பாவைப் புகழ்ந்துகொண்டே, தங்கள் மனதுக்குப் பிடித்தவகையில் நீதி வழங்குவார்கள். இது முதலில் ஏதோ விளையாட்டுப் போல தோன்றினாலும் தினமும் சாதாரணமாக நடக்கும் கலவர நாடகத்துக்கு முடிவையும் ஒரு நல்ல திருப்பத்தையும் அந்த நாட்டுக்கு வழங்கியது. கலவரங்கள் அடியோடு ஒழிந்தன. ஒரு பெண் மாயவித்தை செய்வது போல ஒரு நாட்டையும், அதன் அரசனையும் அந்த நாட்டு மக்களையும் தன் சொல்படி ஆட்டுவிக்கிறாள். அவள் செயல்கள் அனைவருக்குமே நல்லதைத்தான் தருகின்றன. பெண்ணா இல்லை ஆகாயத் தேவதையா.. நாகாம்பாவின் பெயர் பிரசித்தி பெற்று அந்தப் பிராந்தியம் மட்டுமின்றி பிராந்தியும் வெளியேயும், ஏன மிகப் பெரிய அரசாங்கங்களுக்கும் சென்றது.
முதலில் அந்த ராஜா மகிழ்ச்சி அடைந்தான். தள்ளாத வயதில் இப்படி ஒரு ஆனந்தமா என்று பொங்கினான். நாகாம்பாவை தன் ஆனந்தத்துக்கு ஏற்ற விதத்தில் புகழ ஆரம்பித்தான். ஆனால் இன்பம் அதிகமாகும்போது துன்பமும் கூடவே வர ஆரம்பிக்குமே.. இதுவரை நாகாம்பாவை ஒளிந்திருந்து வேடிக்கைப் பார்த்த பிரும்மண்ணா இனியும் தன்னால் ஒளிந்துகொண்டிருக்க முடியவே முடியாது என்ற நிலையில் மிக வேகமாக தன் திட்டங்களை நகர்த்த ஆரம்பித்தான். தன் திட்டத்தின் முதல் பலியாக நாகாம்பாவை இழிவு படுத்தத் தொடங்கினான். அடுத்தடுத்துத் திட்டங்கள் மூலம் நாகாம்பாவை தீர்த்துக் கட்டவும் முடிவு செய்தான்.
மக்கள் முட்டாள்கள். தற்சமயம் இந்த நாகாம்பாவைக் கொண்டாடும் இந்த மக்கள், தான் கள்ளத்தனமாக வேலை செய்து, பெண்ணாகப் பிறந்து விட்ட நாகாம்பாவைக் கொன்றுவிட்டால் தன் மீதுதான் பாய்வார்கள். ஸ்ரீகிருஷ்ண பகவான் என்று பெயர் எடுத்திருக்கும் தன்னைக் காறித் துப்பி அதள பாதாளத்தில் தள்ளி விடுவார்கள். அதைவிட இந்த மக்களே இவளைக் கல்லெடுத்து அடிக்கும் நிலைக்குத் தள்ளவேண்டும் என்ற முதல் திட்டத்தின் அடிப்படையில் தன் காய்களை நகர்த்த ஆரம்பித்தான்.
(தொடர்ந்து வருவாள்)
தாஸர்களின்இந்த செல்வாக்கும், ஏக்கமும் தான் பிரம்ம நாயுடுவுக்கு வெகுவாக
கை கொடுத்தது. பிரம்ம நாயுடுதான் முதன் முதலில் இந்த பிராந்தியங்களில்
ஜாதி வெறியைக் கிளப்பிய நாயகன் ஆவான் என்ற பட்டத்தையும் பெறுகிறான் என்றே
சரித்திர ஆய்வு ஆசிரியர்கள் எழுதுகிறார். தாஸர்களை தனது சீடர்கள், அதனால்
அவர்கள் ஜாதியின் ஐந்தாம் நிலையிலிருந்து நான்காம் நிலைக்கு
ஏற்றபட்டுள்ளனர் எனப் பெருமைப்பட பேசி அவர்களை முழுவதும் தம் பக்கம்
நிலையாக நிறுத்திக் கொண்டான்.
ஏற்கனவே சொன்னபடி நாகாம்பா தன்னை ஜாதியின் பெயரால் தன்னை வெளிக்காட்டாமல்
இருந்தது ஒருவகையில் அவளுக்கு வெற்றியைத் தந்தது என்றாலும் பிரும்ம
நாயுடு அவளை மேல்சாதியின் ஆதிக்கசக்தியாகப் பார்த்தான். ஒரு சில
ஆசிரியர்கள் நாகாம்பாவை ரெட்டி சாதியினர் எனக் குறிப்பு தருகிறார்கள்.
அவள் பூர்வீகத்தில் ரெட்டி சாதியைச் சார்ந்தவனைத் திருமணம் செய்து
கொண்டதை சில குறிப்புகளாகத் தருகிறார்கள். இந்த சிலரின் கருத்து
பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளவில்லை. எப்ப்டி இருந்தாலும் ரெட்டி, நாயுடு,
மற்றும் கம்மா இவர்கள் மூவருமே நாலாவது வர்ணத்தைச் சார்ந்தவர்தாமே என்று
வாதம் செய்கிறார்கள்.
ஆனால் நாகாம்பாவை உயர்சாதியாகவே காண்பிக்கத் தலைப்பட்டான் பிரும்மண்ணா.
தாஸர்கள் மூலமாக இந்தச் செய்தியை மக்களிடையே சுலபமாகப் ப்ரப்பினான்.
மேலும் அவள் தன் கணவனைக் கள்ளத்தனமாக சூன்யம் வைத்துக் கொலை செய்ததாக
செய்தியையும் அந்த சூன்யம் இந்த நாட்டு அரசனுக்கு வைக்கப்படும் காலமும்
வெகு தூரம் இல்லை என்றும் வதந்தி தாஸர்களில் அழகு தெலுங்கில் வெகு
தாராளமாக பரப்பப்பட்டது. நாகாம்பா செவியிலும் இவை ஏராளமாக விழுந்தாலும்,
அவைகளை அவள் ஏளனம் செய்து சமாளித்தாள். சூன்யக் காரியின் ஆட்சியிலா
மக்கள் நல்மாக வாழ்கிறார்களா எனத் திருப்பி மக்களையே கேள்வி கேட்டாள்
சூன்யக் காரியின் ஆட்சி என்றால் நாடே சுபிட்சமற்று வறட்சியும்
மழையின்மையும் பெருகி வரிச் சுமை சாதாரண மக்களை வாட்டுமே.. எங்கே அந்தச்
சுமை என்று கேட்டு மக்களிடையே வலம் வந்தாள். நாகாம்பா எதற்கெடுத்தாலும்
மக்களிடையே நேரிடையாகச் சென்று பதிலுக்குப் பதிலடி கொடுப்பது
பிரும்மண்ணாவுக்கு எரிச்சலைத் தந்தது. அதன் விளைவு அடுத்த் நாள் மிகப்
பெரிதாக வெளிப்பட்டது.
முதல்நாள் இரவு நேரத்தில் அவன் தந்தையால் தோழமையுடன் விருந்துக்கு
அழைக்கப்பட்ட போது அந்த நாட்டு கிழ அரசனான அனுகு ராஜா உற்சாகமாகத்தான்
சென்றிருக்கவேண்டும்..தொட்டநாயுடு வயதில் பெரியவன். நண்பனாகத் தன்
வாழ்க்கையில் தன் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டவனாக இருப்பதால் அரசனும்
அவன் அழைத்த விருந்துக்கு உடனடியாகச் சென்றான். அங்கு விருந்தும்
திருப்தியாக அளிக்கப்பட்டு சற்று நேரம் கழித்தே அரண்மனை திரும்பிய அரசனை
கோபத்துடன் நாகாம்பா கடிந்து கொண்டது கூட அனைவரும் வேடிக்கைப்
பார்த்தனர்தாம்.ஆனால் அடுத்தநாள் காலைதான் தெரிந்தது. மன்னன் இரவு
நேரத்தில் படுக்கையில் படுத்தவன் எழுந்திருக்கவே இல்லை என்பது. எப்படி
இறந்துபோனான் அவன் என்பது யாருமே அன்றைக்கு என்றல்ல என்றைக்குமே தெரியாத
ரகசியமாக போய்விட்டது..
நாகாம்பா, பிரும்மண்ணா இருவருமே இந்த நிலையை தமக்குச் சாதகமாகப் பயன்
படுத்திக் கொண்டனர் என்றே எல்லோரும் (சரித்திர ஆய்வாளர்கள்)
சொல்கிறார்கள். நாகாம்பா இரவு விருந்தில் விஷம் வைக்கப்பட்டது என்று
குற்றம் சாற்றினாள். பிரும்மண்ணாவோ அரசர் வெகு மகிழ்ச்சியாக அரண்மனை
திரும்பியதை அத்தனை பேரும் பார்த்தார்களே என்று சொல்லியவன்,
சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்த நாகாம்பா அநியாயத்துக்குக் கொன்று
போட்டுவிட்டாள் என்றும் இவள் கணவனைக் கொன்றவிதத்திலேயே நாட்டை ஆளும்
ராஜாவுக்கே சூன்யம் வைத்துவிட்டதாகவும் கோபத்தோடு பேசினான். தாஸர்கள்
மூலம் இந்தச் செய்தியும் படுவேகமாகப் பரப்பப்பட்டது.
நாகாம்பா முதன் முதலாக தடுமாறினாள் என்றே சொல்லலாம். மக்களிடையே
சிரமப்பட்டு சேமித்துவைத்திருந்த நம்பிக்கை எனும் செல்வத்தை வெகுவேகமாக
அவள் இழக்க நேர்ந்தது. ஏனெனில் மக்களிடையே எதற்கும் செல்லத் தயங்காத
நாகாம்பா முதன் முதலாக அதன் எதிர் விளைவு (ஒருவேளை சென்றால்) தனக்கு
பாதகத்தை விளைவிக்கும் என்று எதிர்பார்த்தவள்தான்.
அவள் மக்களிடையே வராதது ஒரு பெரும் வெற்றியைத் தந்தது பிரும்மண்ணாவுக்கு.
சூன்யக்காரி பயந்துவிட்டாள் என்று தாஸர்கள் பாடினார்கள். பிரும்மநாயுடு
ஸ்ரீகிருஷ்ணனாக மாறி பூதகி எனும் நாகாம்பா எனும் சூன்யக் காரியின் தோலை
உரித்துவிட்டார் என்றும் கூடச் சேர்த்துப் பாடினார்கள். ஆனால் அடுத்த
கட்டம் அடுத்த பட்டம் யாருக்கு என்பதில் ஆரம்பித்தது. சற்றே தயக்க
ச்நிலையில் இருந்த நாகாம்பா ரெட்டி ராணியின் குமாரனை (நரசிம்மராஜு)
பிரஸ்தாபிக்க, பிரும்மண்ணாவோ நாயுடு ராணியான மயிலம்மை புத்திரனுக்கு
(நலகாமன்)அரசப்பட்டம் என்று சட்டம் பேசினான். மக்கள் மத்தியிலும்
மயிலம்மை புத்திரனுக்கே தாஸர்கள் மூலம் ஆதரவு கூட்டினான்.
நிலைமையை வெகு நிதானமாகவே சமாளித்தாள் நாகாம்பா. எப்படியோ மக்கள்
பெரிதும் பேசுகின்ற நாயுடு புத்திரனான நலகாமனுக்கே அரச பதவி என்றும்,
பிரமா நாயுடு இனி, தன் தந்தையின் ஸ்தானத்தில் நலகாமனுக்கு துணையாக
மந்திரி எனும் அந்தஸ்துடன் இருப்பதற்கு சம்மதம் தெரிவித்தாள். எப்போது
சாதி தலைவிரித்து ஆடுகிறதோ, அதன் போக்கில் விட்டுப் பிடித்து பிறகு
இழுத்துக் கட்டுவது என்றும் முடிவெடுத்தவள் தனக்கு சாதகமாக ஏனைய
சாதியினர் இருப்பதையும் புரிந்துகொண்டு, ரெட்டிகுமாரனான நரசிம்ம
ராஜுவுக்கு இளைய பட்டமும் கட்டவேண்டும் என்ற நிபந்தனையும், மாச்சர்ல
அரசபீடத்தில் அமரும் அரசன் யாராக இருந்தாலும் அவன் தன் சொல்படி கேட்டு
நடக்கவேண்டும் என்ற நிபந்தனையும் விதித்தாள்.
இது பிரும்மண்ணவால் ஒப்புக் கொள்ளப்பட்டது. தம்முடையை சாதியான் அரசனானால்
தன்னால் எதுவும் செய்யமுடியும், காலாவட்டத்தில் நாகாம்பாவை
அரண்மனையிலிருந்தும் விரட்டமுடியுமெனவும் திட்டமிட்டவன் இந்த சுமுக
உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டான்.
வயதில் இளையவர்களான அரசரும் சிற்றரசரும் தங்கள் குலதர்மப்படி குலங்களைச்
சார்ந்து ஒத்துழைத்தார்கள். எனினும் முதல் இரண்டு மூன்று மாதங்களிலேயே
புது அரசனான நலகாமனுக்கு பிரம்மநாயுடுவின் தந்திரம் புரிந்துவிட்டது. தன்
மந்திரி தன்னை காப்பது போல காத்து தனக்கு வேண்டாத சமயத்தில் தன் தந்தையை
ஒழித்துக் கட்டியது போல தன்னையும் ஒழித்துவிடுவான் என்பதை நாகாம்பா மெல்ல
மெல்லப் போதித்தாள். நாகாம்பா இந்த நாட்டுக்கு வருவதற்கு முன்பு இருந்த
நிலையையும், வந்த பின்பு நாடு மாறிய நிலையையும் நலகாமனை உணரச்செய்தாள்.
நலகாமன் நாகாம்பாவை தெய்வமாகப் பார்க்க ஆரம்பித்தான். அவள் சொல்படி
திடீரென ஒருநாள் பிரும்மண்ணா வீட்டில் சோதனை செய்யும்படி தன் காவலரை
அனுப்பினான் அரசன். அன்று தடாலடியாக பி்ரும்மண்ணா வீட்டில் நுழைந்த
காவலர்கள் பொன்னும், மணியும், மாணிக்கங்களும் முத்துக்களையும் அப்படியே
அள்ளி வந்து அரசன் காலடியில் வைத்தனர். அரசனுக்கே இல்லாத அனைத்துச்
செல்வமும் பி்ரும்மண்ணா வீட்டில் எப்படி வந்தது என்ற ஒருநாள் விசாரணையில்
பிரும்மநாயுடு விசாரிக்கப்பட்டு, மக்கள் முன்னிலையில் அவமானப்
படுத்தப்பட்டான்.
தன்னால் அமர்த்தப்பட்ட தன் சாதி அரசனே தனக்கு மோசம் செய்ததை அவனால்
தாங்கிக் கொள்ளமுடியவில்லை. நாகாம்பாவில் இந்த வெற்றி பிரும்மண்ணாவின்
ரத்தக் கொதிப்பை மேலும் வெறியேற்றியது. அந்த வெறி, மூன்றாம் இளவரசனான
சிறுவன் கம்மசாதி மலிதேவா வை தன் பக்கம் இழுக்கவைத்தது. தம் முழு
பலத்தையும் அவனுக்காக செலவழிக்கவும் முடிவு செய்தவன், ஒருநாள் இரவு
எல்லோரும் தூங்குகையில், மடிதேவாவின் துணையோடும், தாஸர்களின் துணையோடும்
மாச்சேர்லா நகரையே முற்றுகை இட்டு, அதன் உள்ளே நுழைந்து அரண்மனையும்
பாதுகாப்போடு கைப்பற்றினான். ரத்தசேதம் இல்லாமல் அந்த அதிகாலையில்
அரண்மனை அதிகாரம் நாகாம்பா கைகளிலிருந்தும் நலகாமன்
அரசாட்சியிடமிருந்தும் பறிக்கப்பட்டது.
2010/8/31 Dhivakar <venkdh...@gmail.com>:
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
இன்னும் இரண்டு அத்தியாயம் போகும் என நினைக்கிறேன்.. ஆனால் விவரங்கள்
சுருக்கப்படுகின்றன.. சாறு மட்டும் தரப்படவேண்டுமென்பதால் காலதாமதம்
ஆகிறது.
சாதிப்பேயும், ஈகோ பிசாசும் சேர்ந்து தலைவிரித்தாடிய ஒரு பிரதேசத்தில்
வாழ்ந்த ஒரு வீரப்பெண்மணியின் வரலாறு இது.
அன்புடன்
திவாகர்
2010/9/7 ஆராதி <aara...@gmail.com>:
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
இந்த சின்ன நீதி விஷயம் பிரும்மண்ணாவும் நாகாம்பாவும் நன்கே அறிந்தவர்.
அந்த அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட திடீர் புரட்சி குர்ஜாலா என்கிற
மாச்சர்லா நாட்டு மக்களை கலக்கியதுதான். ஆனால் எதற்கும் கலங்காத நாகாம்பா
மறுபடியும் பிரும்மண்ணாவிடம் சமாதானம் கோரினாள். அவள் நினைத்தால்
தப்பியோடி பக்கத்தில் உள்ள அரசுகளை துணைக்கு அழைத்துத் தன்னைக்
கணநேரத்தில் தோற்கடிக்க முடியும். ஆனால் அதே சமயத்தில் இவன் புத்தி
பேதலித்து இந்தக் கணத்தில் எதையும் செய்யக்கூடும் என்பதால் தற்காலிகமாக
அவனிடம் சமாதானக் கொடி காட்டினாள். அதே சமயத்தில் பிரும்மண்ணாவின் கர்வம்
தலைக்கேறியது. முதன்முதலாக நாகாம்பா தனக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளச்
சொல்கிறாள். அவன் கர்வம் அவனுக்கு வேண்டியதைக் கேட்க வைத்தது. முதலில்
நாட்டைப் பிரிக்கச் சொன்னான். மாச்சர்லாவைத் தலைநகராகக் கொண்ட நாடு
இரண்டு பிரிவானது கிழக்குப் பகுதி பிரும்மண்ணாவின் தலைமையில் மலிதேவா
அரசனாக்கினான். மாச்சர்லாவின் மேற்கு பகுதி நாகாம்பாவின் ஆணையின் கீழ்
நலகாமன் ஆட்சி புரியவும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
அடுத்த ஐந்து வருடங்கள் சின்னச் சின்ன தகராறுகள் இருந்தாலும் அவை
பெரிதாக்கப்படவில்லை. இருந்தாலும் நாகாம்பா எப்படியும் பிரிக்கப்பட்ட
நாடுகளை ஒன்று சேர்க்கவேண்டும் என பிரதிக்ஞையுடன் செயல்பட்டாள். தன்னுடைய
நாட்டின் படைகளைப் பலப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கிருஷ்ணா நதியின்
வடக்கே பலம் பெற்றுக் கொண்டிருந்த காகதீய அரசின் உதவியை நாடினாள்.
வாரங்கல் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காகதீயர்கள் இவளின் அதீத
தீரத்தைப் பாராட்டி உதவி செய்வதாக வாக்களித்தனர். காகதீயர்களுக்கும்
தெற்கே கிருஷ்ணை நதியின் தென்கரையில் நல்ல துணை தேவைப்பட்டது.
நாகாம்பாவின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்த பிரும்மண்ணா மேற்கே
மேலை சாளுக்கியர் மகளைத் தன் அரசனுக்கு மணம் செய்வித்து தன் பலமும்
சேர்ந்தது போல காட்டினான். ஆனால் இந்தக் காலகட்டத்தில் மேலைச்
சாளுக்கியர் பலவீனமான காலமாக இருந்தது. காக்தீயர்கள் பலம் பெற்று
மேலைச்சாளுக்கியரின் முக்கியப்பகுதிகளையெல்லாம் கைபற்றி தங்கள் வசம்
வைத்துக் கொண்டிருந்த சமயம்.
இந்த சமயத்தில்தான் பிரும்மண்ணா தங்கள் அரசனின் கல்யாண விருந்துக்கு
மாச்சர்லாவில் ஏற்பாடு செய்தான். நாகாம்பாவையும் அழைத்தான். முக்கியமாக,
அரண்மனைகளில் நடக்கும் பெரிய விருந்தாக இருந்தாலும் விசேஷமாக இருந்தாலும்
பல அரசியல் பகைகள் வெளிப்படவும், நட்புகள் வலுப்படவும் அவை சந்தர்ப்பம்
வகுத்துக் கொடுக்கும். மகாபாரதத்தில் ஹஸ்தினாபுரத்துக்கு விருந்துக்கு
அழைத்துத்தானே ஐவர்களை சூதாடவைத்து காட்டுக்கு அனுப்பி
வைதக்கப்பட்டார்கள். அதே போல விருந்துக்குப் போன இடத்தில் நாகாம்பாவும்
பிரும்மண்ணாவை வம்புக்கு அழைத்தாள்.
அவன் எத்தனையோ முறை அவளை அவமானப்படுத்த முயற்சி செய்திருக்கிறான். என்ன
இருந்தாலும் பெண் என்ற ஏளனத்தில் அவன் செய்யும் ஒவ்வொரு அநீதியான
செய்கையையும் அவள் பொறுத்துக் கொள்ளவே செய்தாள். ஒருகாலத்தில் அவன்
வீட்டைச் சோதனையிட அரசன் மூலம் ஏற்பாடு செய்தது கூட அவன் சம்பாதனை எத்தனை
மடங்கு உயர்ந்தது என்பதை அரசனுக்குக் காண்பிக்க மட்டும்தான். அது அவள்
ராஜாங்கக் கடமையும் கூட. ஆனால் தப்பித் தவறியும் அவன் மீதோ அவன்
குடும்பங்கள் மீதோ, அல்லது அவனது தாஸர்கள் கூட்டத்தைப் போல இன்னொரு
கூட்டத்தார் மூலமாக அவன் இழிசெயலை அம்பலப்படுத்தி கேவலமாகப் பேசவேயில்லை
நாகாம்பா. அவள் நினைத்தால் எளிதாகப் பேசியிருக்கலாம். ஆனால் அவள் அப்படி
ஈனமாகச் செய்யவில்லை. அவனை வீரனாகவே மதித்தாள். சூன்யக் காரி, சகுனியின்
பெண்பால், அரக்கி, கணவனைக் கொன்றவள், கெட்டவள் என்று தன்னை எவ்வளவோ
கேவலமாகப் பேசியிருக்கிறான் பிரும்மண்ணா. அதே சமயத்தில் எத்தனையோ
சந்தர்ப்பங்களில் பிரும்மண்ணாவைக் கொல்லக் கூட அவளுக்கு வாய்ப்பிருந்தது.
இன்னமும் சொல்லப்போனால் அவள் இடத்தில் பிரும்மண்ணா இருந்திருந்தானால்
அந்தப் பணியை அவனே செவ்வெனச் செய்திருப்பான். ஆனால் பெண்மனம் கருணை
காட்டி அவனைப் பிழைக்கவைத்தது.
அப்படிப்பட்ட கருணை மனத்தினாள் அவளை விருந்துக்குக் கூப்பிட்ட இடத்தில்
அவனை வீணாக வம்புக்கு ஏன் இழுக்க வேண்டும்.. இந்த விருந்து மிகப் பெரிய
அவகாசம். இந்த அவகாசத்தை கைவிட்டால் வேறெப்போதும் இந்த நாட்டை
ஒன்றாக்கமுடியாது. இது ஒரு ராஜதந்திரமாகவே கருதியிருக்கவேண்டும்
என்றுதான் சரித்திர ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள். இன்னொரு விஷயம், இவள்
இழுத்த வம்பில் இவளுக்கே அபாயம் கூட இருந்தது.
அதுவும் சாதாரண வம்பா,, இல்லை.. அவனுடைய அரசனின் சார்பில் ஒரு சேவலும்,
தன்னுடைய அரசனின் சார்பில் ஒரு சேவலும் சண்டையிடவேண்டும். அந்தச்
சண்டையில் எந்தச் சேவல் ஜெயிக்கிறதோ அந்தச் சேவலுக்கு சொந்தக்காரன் முழு
நாட்டையும் ஆளவேண்டும். தோற்ற சேவலின் சொந்தக்காரன் நாட்டை விட்டு
ஓடவேண்டும். சம்மதமா.. தானும் இந்த அரசன் நலகாமனும் இந்த மேற்குப்
பகுதியைக் கொடுத்துவிட்டு ஓடிவிடுவதாகவும் பிரும்மண்ணாவின் சேவல்
தோற்குமானால் அவர்கள் இருவரும் அதே போல செய்யவேண்டும், ’என்ன சம்மதமா..’
என்று சவால் விட்டாள்.
சபையில் அனைவர் முன்னிலையிலும் அவள் விட்ட சவாலை அவன் சந்தோஷமாக ஏற்றுக்
கொண்டான். காரணம் ஏற்கனவே இம்மாதிரிப் பந்தயங்கள் அந்தப் பிராந்தியத்தில்
சர்வ சகஜம் என்ற ஒன்றும் சண்டைக் கோழிகள் (சேவல்கள்) வளர்ப்பது
கௌரவத்துக்கான ஒன்று, என்பதும் காரணம். பிரும்மண்ணா என்ற பெரிய மனிதன்
வளர்ப்பில் அப்படிப்பட்ட சண்டைக் கோழிகள் ஏராளமாக இருந்தன என்பதும்
நாகாம்பாவின் வளர்ப்பில் கூட அப்படிப்பட்ட சண்டைக் கோழிகள் இருப்பதும்
கூட பெரிய விஷயங்களாக இருந்ததில்லை. ஆனால் பெரிய மனிதர்கள் பணயமாக பணம்
அல்லது அதிகபட்சமாக தங்கநகைகளை வைத்தோதான் சண்டைக் கோழிகளை மோதவிடுவர்.
வெற்றி அடைந்தவர் பரிசைப் பெறுவதோடு, இறந்துபோன சேவலையும் எடுத்துச்
சென்று விருந்து படைத்து தான் சண்டையில் வெற்றி பெற்ற கோழியைச்
சாப்பிட்டு பெருமை கொள்வதும் சர்வ சகஜம்.
இந்த சேவல் சண்டை இத்தனை விவகாரமாகப் போகும் என்று யாருமே
எதிர்பார்க்கவில்லை. ஆனால் பிரும்மண்ணா மட்டும் இந்த முறை நாகாம்பாவே
வந்து வலையில் விழுந்துவிட்டதாக நினைத்தான். சவால் விட்டபடி சேவல் சண்டை
பெரும் எதிர்பார்ப்புடன் இரு மாதங்களுக்குப் பிறகு நடக்கவே செய்தது.
இரண்டு சேவல்கள், புஷ்டியாக வளர்க்கப்பட்டிருந்த சேவல்கள், மத்து மருந்து
என்ச் சொல்லப்படும் பச்சையிலை மயக்க மருந்து மிதமாக்கொடுத்துச் சண்டையிட
பழக்கப்படுத்தியே வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் மிகவும்
வீரியத்துடன் ஒன்றுக்கொன்று மோதும். கொண்டைகள் சிலிர்த்துக் கொண்டே
சண்டையிடும் காட்சிகள் அவை. சில சமயம் சில அடி தூரம் மேலே பறந்து மோதிக்
கொள்ளும். மாச்செர்லாவில் நடந்த அந்தக் கோரச் சண்டையில் இருவர் மானம்
மட்டுமல்ல.. இருவர் நாடுகளும் பணயம் வைக்கப்பட்டு போராடுவதால் பொது
மக்களும் பெரிய வளையமாக நின்றுகொண்டு ஆரவாரக்கூச்சலோடும் எந்தக் கட்சி
பலம் பெறுகிறதோ அந்தக் கட்சியை போற்றிகொண்டும் கத்திக் கொண்டும்
இருந்தனர்.
நம்பிக்கையோடும் நாணயத்தோடும் சாதகமான வெற்றியை எதிர்பார்த்தே நாகாம்பா
அங்கே நின்றிருந்தாள். கடைசியில் நாகாம்பாவின் அரசன் சார்பில்
போட்டியிட்ட சேவல் பிரும்மண்ணவின் சேவலைக் கடித்துத் தலையைக் கீழே
தள்ளியதும்தான் அங்கே வெற்றிக் கூச்சல் மிகப்பலமாக எழுந்தது..
நாகாம்பாவின் சார்பில் போட்டியிட்ட சேவலே வெற்றி பெற்றது. பிரும்மண்ணா
சர்வ சாதாரணமாக நாட்டையும் பதவியையும் இழந்தான்.
இந்த இழப்பு அவன் கர்வத்துக்கு கிடைத்த மாபெரும் பங்கம். அவனை
நம்பியிருந்த மலிதேவா வேதனைவயப்பட்டான். தாஸர்களில் பலர் இந்தத்
தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சகுனிப் பெண்ணே, என்றே கத்தினர்.
பிரும்மண்ணாவை அவர்களில் சிலபேர் த்ங்கள் தோள் மேல் தூக்கிகொண்டு
அங்கிருந்து ஓடினர். இந்தத் தோல்வி சாதாரணமானதல்ல.
கத்தியின்றி ரத்தமின்றி நாகாம்பா வெற்றி பெறவிட்டு விட்டோம் என்ற
பிரும்மண்ணா அடுத்த ஒருமாத காலத்தில் போருக்கு சித்தமானான். இது கடைசிப்
போர் என தாஸர்களிடம் சொன்னான். நாகாம்பாவை வெற்றி கொள்ளாமல் தன் உயிர்
போகாது. சூன்யக்காரி தன் சேவலுக்கு சூன்யம் வைத்துவிட்டாள் என்றும்
அவர்களிடம் சொல்லி ஆறுதல் பட்டுக் கொண்டாலும், ஆறாத புண்களை நெஞ்சில்
சுமந்து அந்த சூன்யக்காரியை இந்தமுறை தன் கைகளால் கொன்றுவிடப்போவதாக
சூளுரைத்தான். ஸ்ரீகிருஷ்ணர் பெண்களைக் கொல்வதில்லை என்பதால் இதுவரை
நாகாம்பாவை உயிரோடு விட்டு விட்டதாகவும், ஆனால் அதே ஸ்ரீகிருஷ்ணர்
பூதகியை பெண்ணென்றும் பாராமல் கொன்றதையும் காரணம் காட்டிப் பேசினான்.
நியாயமாக போரில் அழைத்து அவளைக் கொல்லப்போவதாகவும், அவள் கொல்லப்பட்ட
காட்சியை தாஸர்கள் மிகப் பெரிய பாடலாக உலகமெங்கும் எடுத்துச்
செல்லவேண்டுமென்றும் உணர்ச்சிவசமாக தாஸர்களைக் கேட்டுக்கொண்டான். இந்தப்
பாடலுக்குத் தலைப்பாக ‘பல்நாட்டி வீரசரித்ரா’ என்று பெயரிடுங்கள். நம்
வீரச் செயலையும், நாகாம்பாவின் துரோகச் செயலையும் ஊரெங்கும் பறை
சாட்டுங்கள். அவள் அழியப்போகும் கதை தரணியெங்கும் ஒலிக்கட்டும்.. என்று
அவர்களை வேண்டிக்கொண்டான்.
(ஆவலுடன் எதிர்பார்க்கும் கடைசிப்பகுதி அடுத்து வரும். ஆனால் சிலநாட்கள்
கழித்துதான்)
2010/9/7 Dhivakar <venkdh...@gmail.com>:
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
http://www.kamalagaanam.blogspot.com
----- Original Message ----
From: Dhivakar <venkdh...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Wednesday, 8 September 2010 01:15:49
Subject: [MinTamil] Re: வீர தேவதை
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
--
தாஸரிகள் மிக வேகமாக ஊர் ஊராக சென்று பரப்பிய ’பல்நாடு வீரசரித்திர’ வை
அப்படியே எடுத்துகொண்டால் பிரும்மண்ணா நாயுடுதான் நாயகன். அவன்
அதிபுத்திசாலியானாலும், அத்தனை வகையான ஜாதிகளையும் ஒன்று சேர்த்து
சமபந்தி போஜனம் செய்வித்த நாயகன். தாழ்த்தப்பட்ட ஜாதிகளை ஒன்று
சேர்த்தவன் என்ற பெயர் இன்றளவும் அவன் ஒருவனுக்கே உண்டு. நான்காம்
வர்ணத்துக்கும் கீழ்ப்பட்டவரை சமமாக பாவித்தவன் என்ற பெயர் பெற்றவன்.
இந்த ஒரு விஷயம் அவன் செய்த அத்தனை அரசியல் சதிகளையும் (அவன் சொந்த
நாட்டு அரசனையே விஷம் வைத்துக் கொன்றதைச் சேர்த்து) தூக்கிச் சாப்பிட்டு
விடுகிறது என்பது இன்றைய நோக்கில் பார்க்கும்போது புரிகிறது. ஆனால் இது
துரியோதனனுக்குக் கூட பொருந்தும். தன்னளவில் உபயோகப்படும்போது,
பாண்டவர்களால் சூதபுத்திரன் என்று ஒதுக்கப்பட்ட கர்ணன், துரியோதனனால்
அரவணைக்கப்பட்டு அவனுக்கு சிறந்த தோழனாகிறான். ஒரு ஒடுக்கப்பட்ட ஜாதிகளை
அரவணைத்துச் சென்றதால் ஒருவனின் மற்ற தீயசெயல்கள் மறக்கடிக்கப்படவேண்டும்
என்பது என்ன நியதி எனக் கேள்வி எழுகிறது. தாஸரிகளுக்குப் பிடித்த
மகாபாரதக் கதை இவனுக்கென ஏற்றாற்போல திருத்தப்படுகிறது. இவன்
ஸ்ரீகிருஷ்ணன் என்பதால், இவன் எதிரியான நாகாம்பா துரோகியாக
வர்ணிக்கப்படுகிறாள். நாகாம்பா அரசியலில் ஈடுபட்டு அவன் வாழ்க்கையைக்
கெடுத்ததால் கிடைத்த பழியை அவள் ஏற்றுக்கொண்டாள் என்றே சொல்லலாம்.
ஆனாலும் அவன் அரசியல் தந்திரங்களுக்கு நேர் சமமாக அவளும் சிந்தித்ததால்
தாஸரிகளால் அவள் ஒதுக்கப்படுவது கொடுமையிலும் கொடுமையாகப் படுகிறது.
தாஸரி கதைகளில் பல்வேறுபட்ட நிலைகளில் இந்தக் கதை திரிக்கப்படுகிறது,
மகாபாரதம் போல பிரும்மண்ணா நாயுடுவும் ஏழு ஆண்டுகளுக்கு காட்டில் மறைந்து
வாழும் நிலை ஏற்பட்டதாக தாஸரிகளின் ஒரு பகுதியினர் பாடுகிறார்கள். இரண்டு
மாதமோ, ஏழு வருடங்களோ, எப்படியோ நடந்து விட்ட அந்த பல்நாட்டி
யுத்தத்துக்கு வருவோம்.
மாச்சர்லா பக்கத்தில் காரம்புடி என்றொரு ஊர். இப்போது குக்கிராமம்.
முந்தைய நாளில், அதுவும் இந்த நிகழ்ச்சி நடக்கின்ற வேளையில் வெட்டவெளிப்
பொட்டல் காடு. மகாபாரத யுத்தத்தில் குருக்ஷேத்திரம் எப்படி
தேர்ந்தெடுக்கப்பட்டதோ, அப்படியே காரம்புடி என்ற ஊரையே இந்தக் கடைசிப்
போருக்காக தேர்வு செய்த பெருமை கூட பிரும்மண்ணா நாயுடுவுக்குப் போய்ச்
சேரும். மகாபாரதக் கதை மக்களிடையே மிகப் பரவலாகப் பேசப்பட்டிருந்தது
என்பது மிக நிதர்சனமாக தெரிந்தாலும், அந்த மகாபாரதப் போரை பாண்டவருக்காக
முன்னிருந்து நடத்திக் கொடுத்து வெற்றியையும் பெற்றுத் தந்த
ஸ்ரீகிருஷ்ணனாக தாஸ்ர்கள் மத்தியில் பேர் பெற்றிருந்த பிரும்மண்ணா இந்தப்
போரில் சகுனியாகப் பெயர் பெற்ற நாகாம்பாவின் சொல்படி கேட்டு ஆடும்
துரியோதனான நலகாமன் கொல்லப்பட்டு அங்கே அந்த அரசாட்சியில் தர்மத்தின்
(இங்கே தர்மம் என்றால் பிரும்மண்ணா’வின் வேதம்தான்) சொல்படி கேட்கும்
நலகாமனின் மாற்றாந்தாய் மகனும், தம்பியுமான மலிதேவா அமர்த்தப்படுவான்
என்றும் தாஸர்களால் பாடப்பட்டு செய்தி நாடெங்கும் பரப்பப்பட்டது.
மகாபாரதப் போர் என்று ஒருபக்கத்து வர்க்கத்தினரால் முடிவு செய்யப்பட்டது
என்றாலும், அந்தப் போரில் யார் வெற்றி பெற்றாலும் போரில் இறப்பவர்
அனைவரும் குர்ஜாரா (மாச்சர்லா) தேசத்து மக்களே என்பதில் நாகாம்பா
அனைவருக்கும் தெரியப்படுத்தினாள். அதே சமயத்தில் தான் ஏன் போருக்கு
செல்வதாக ஒப்புக்கொண்டேன் என்பதையும், இந்தப் போரில் முடிந்தவரை
நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் எதிரிகளை மட்டுமே அழிக்கத் தான்
பாடுபடுவதாக மக்கள் மத்தியில் சென்று அனைவருக்கும் எடுத்துரைத்தாள்
நாகாம்பா. தங்களின் வில்படை வெற்றி பெற்று நாடெங்கிலும் வில்கொடி
உற்சாகமாகப் பறக்க விடப்படும் என்றும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை
அளித்தாள். பிரும்மண்ணா சார்பில் வந்த தூதுவர்கள் போரை எப்படி நடத்துவது
என்ற முறையையும் பிரும்மண்ணா வகுத்துத் தந்திருப்பதாக சொன்னபோது கூட
உற்சாகமாக ஒப்புக் கொண்டாள்.
காரெம்புடி போரைப் பற்றிய அதிக விளக்கங்கள் எதுவும் தேவையில்லை.
குருக்ஷேத்திர அளவுக்கு இந்தப் போர் நடக்கவில்லை. வில்லேந்திய
வீரப்பெண்மணியாக போரில் நாகாம்பா ஒரு பக்கத்துக்கு தலைமை தாங்கியதாகவும்,
பிரும்மண்ணா ஈட்டி ஏந்திய கையோடு தலைமை தாங்கி தன் வீரர்களை ஒழுங்கு
படுத்தி போர் செய்ததாகவும்தான் சரித்திரம் சொல்கிறது, இரண்டு நாட்கள்
போரில் நாகாம்பா வெற்றி பெற்று பிரும்மண்ணாவை இந்தப் பக்கமே வராதபடி ஓடச்
செய்தாள் என்றுதான் குறிப்புகள் சொல்கின்றன. பிரும்மண்ணாவின் மகனான
பாலச்சந்திரன் போரில் மரணமடைந்ததால் பிரும்மண்ணா தளர்ச்சியுற்றான் என்று
சில குறிப்புகள் கொடுத்தாலும், அந்த மகன் போரில் கொல்லப்படவில்லை,
தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட தகறாறு ஒன்றினால் மரணமடைந்ததாக வேறு சில
குறிப்புகள் சொல்கின்றன. ஆனால் இந்த பாலசந்திரன் தாஸரிகள் கதையில்
அபிமன்யுக்கு நிகராக வர்ணிக்கப்படுகிறான். அதே சமயத்தில் யுத்த களத்தில்
நாகாம்பாவின் வீரத்தனம் பிரும்மண்ணாவைத் திருத்தியதாகவும், தோல்வியை
ஒப்புக்கொண்டு அவன் காட்டுக்குள் திரும்பி தவநிலை ஏற்றுக் கொண்டதாகவும்
வேறு சில குறிப்புகள் சொல்கின்றன. வில்வீரர்கள் சர் சர்ரென அம்புகளை
வீசும்போது ஈட்டி வீரர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்று பொதுவாக சில
குறிப்புகள் சொல்கின்றன. பிரும்மண்ணாவின் ஆதரவு பெற்ற மகன் மலிதேவா
சிறைப் பிடிக்கப்பட்டு தேசத் துரோகம் குற்றத்துக்காக, தன் சொந்த அண்ணனால்
தண்டிக்கப்பட்டான், என்றுதான் குறிப்புகள் சொல்கின்றனவே தவிர அது என்ன
தண்டனை என்று தெரியவில்லை.
மொத்தத்தில் வீரதேவதை கடைசிவரை தன் மீது சுமத்தப்பட்ட பழிகளை மௌனமாகவே
தாங்கிக் கொண்டு, அந்தப் பொறுமை எனும் பெரும் ஆயுதத்தால்தான்
காரெம்புடியில் யுத்தத்தில் வெற்றி பெற்றாள் என்று சொல்லப்படுகிறது.
யுத்தத்தைக் கூடிய வரை தடுக்க முயன்றதாகவும், உண்மையில் இவள்தான்
ஸ்ரீகிருஷ்ணன் தங்கையான மாயாவிஷ்ணுவாக வந்திருந்து கௌரவர்களாக மாறி
துரோகம் செய்த பிரும்மண்ணாவின் படைகளை வென்றாள் என ’வீர காவியம்’ எனும்
தெலுங்குப் பாடல் தொகுப்பு விரிவாகக் கூறுகிறது. தாஸர்களோ மனம் ஒடிந்த
நிலையில் பல்நாட்டிலிருந்து பாரிப்போனார்கள் (ஓடிப்போனதை ‘பாரிப் போவது
என்று சொல்வார்கள்) ஆனால் சென்ற் இடங்களிலெல்லாம் தம் குருவின் புகழை
பரப்ப மட்டும் தவறுவதில்லை. மகாபாரதப் போருக்கு நிகராகப் பேசப்பட்ட
காரெம்புடிப் போரை ‘பல்நாட்டி யுத்தம்’ என்ற பெயரில் தாஸர்களில் சிலர்
தெலுங்கு வீர வசன நாடகமாக தொகுத்ததோடு, அதனைத் தம் பிற்காலச்
சமுதாயத்தினர் பலரும் புரிந்து கொள்ளும் வகையில் மிகச் சிறப்பாகப்
பாதுகாத்துவந்தனர் என்றும் சொல்லலாம்..
பர்டன் ஸ்டெயின் எனும் ஆங்கில ஆய்வாளர், தெலுங்கு பாஷையை முதன் முதலில்
அறிமுகப்படுத்தியதே இந்த ‘பல்நாட்டி வீரசரித்ரா’ தான் என்று எழுதுகிறார்.
13 ஆம் நூற்றாண்டிம் இறுதிப்பகுதியில் இந்த நாடகம் வசன பாணியில் எழுதி
தாஸர்களின் சந்ததிகளால் பாடப்பட்டதாக அவர் தகவல் தருகிறார். வீரகாவியம்
என்ற பெயரில் பண்டித தெலுங்கு பாஷையில் காகிதீயப் புலவர்களால்
எழுதப்பட்டதாக வரலாறு சொல்கிறது, பண்டிதர்களால் எழுதப்பட்டதால் இது
காவியம் எனப் பேசப்பட்டது. இந்தக் காவியத்தின் காட்சிகளை ஓவியம் போல
படைத்து வாரங்கல் அரண்மனைச் சுவர்களில் நாகாம்பா புலியை அடக்குவது
போலவும் வில்லேந்தி போர் புரிந்து பிரும்மண்ணாவின் வீரர்களை அடக்குவது
போலவும் பல காட்சிகள் இருந்ததாக சரித்திரத் தகவல்கள் காகதீயர் ஆட்சி யில்
கிடைக்கின்றது. இந்த பல்நாட்டி கதையை பின்னாளில் பண்டித தெலுங்கில்
ஸ்ரீநாத பட்டர் எனும் புலவர் (16ஆம் நூற்றாண்டு) காவியமாக படைத்தார்.
இந்தக் காவியத்திலும் நாகாம்பாவுக்கு நல்ல பெயர் உண்டுதான். ஆனால் இந்தக்
காவியம் தாஸர்களின் பாடல்களை அடித்தளம் கொண்டதால் பிரும்மண்ணா
நாயுடுவுக்கு சிறப்பு இடம் உண்டு
முத்தாய்ப்பாக சில வார்த்தைகள். என்னதான் பிரும்மண்ணா தன்னை ஸ்ரீகிருஷ்ணா
எனக் கூறிக்கொண்டாலும் அவனால் வெற்றி பெற முடியவில்லை என்பது உண்மைதான்.
நாகாம்பா எனும் வீரப்பெண்ணின் முன்னால், அவளால் கடைசியில்
தோற்கடிக்கப்பட்டது கூட வாஸ்தவம்தான் என இரு தரப்பினருமே ஒப்புக்
கொள்கின்றனர். தாஸர்கள் மட்டுமே ’பல்நாட்டி வீர சரித்திரத்தில்’
நாகாம்பாவைக் கடைசி வரை எதிரியாகவே வர்ணித்தாலும் வீரகாவியம் முதற்கொண்டு
சரித்திரக் குறிப்புகள் அனைத்தும் குர்ஜாரா என்கிற பல்நாடு அரசியல்
வாழ்க்கையில் வீர தேவதையாக நாகாம்பா பரிணிமித்தாள் என்றே சொல்கின்றன.
இதனை 1947 இல் திரைப்படமாக எல்.வி.பிரசாத் எடுத்தார். அதில் நாகாம்பா
பாத்திரத்தில் சிறப்பாக கண்ணாம்பா நடித்து பெரும் புகழ் பெற்றார். இதே
படத்தை மறுபடியும் 1966 இல் எடுத்தனர். இதில் நாகாம்பா பாத்திரத்தை
பானுமதி விரும்பிச் செய்ததாகவும், என்.டி.ராமாராவ் பிரும்மண்ணா நாயுடு
பாத்திரத்தில் செய்ததாகவும் தகவல்கள் உண்டு. நாகாம்பா எனும் வீரப்பெண்ணாக
நடித்த பானுமதியின் ஒரு சின்ன வீடியோ காட்சி.
http://www.youtube.com/watch?v=qFnCE4qJ0i
சாதாரணமாக கடந்த ஆயிரம் ஆண்டு பாரத வரலாற்றில் சில வீரப்பெண்மணிகள்
வரலாறு மட்டும் நிலைத்து நின்று விட்டது. தமிழ்நாட்டில் ராணி மங்கம்மா,
வேலு நாச்சியார், வடநாட்டில் ராணி ஜான்ஸி லட்சுமி, ஆந்திராவில்
(வாரங்கல்) காகதீய ருத்ரம்மா போன்றோர் ராணிகளின் வம்சத்தில் வந்து
சிறப்பு பெற்றனர். ஆனால் ராணிகளின் வம்சம் இல்லாத பட்சத்தில் ஒரு ராணி
போல செயல்பட்டு, பெண்கள் குலத்துக்கே மங்காத புகழைப் பெற்றுத் தந்து வீர
தேவதையானவள் நாகாம்பா ஒருத்திதான். அதனால்தான் காலம் அவளை மட்டும்
மறக்காமல் செய்வதற்கு அவளை ஒரு தேவதையாக்கி, ஒரு சில ஊர்களில் அவளுக்கென
கோயிலும் அமைத்து இந்த மண் உள்ளளவும் மக்கள் மனதில் இடம் பெற வைத்தது
போலும். அவள் இருந்த போதும் தம்மை நம்பிய மக்களைப் பாதுகாத்தாள். அவள்
இறந்த பின்னும் அவளை தேவதையாக நம்பி வழிபடுகின்ற மக்களையும் தன் ஆத்ம
சக்தியால் பாதுகாத்து வருகிறாள். பெண்ணாய்ப் பிறந்து பெண்ணாய் வாழ்ந்து,
ஆண்களுக்கு சமமாக அரசியல் செய்து, ஆண்களின் அடக்குமுறைக்கும், அவர்தம்
பழிச்சொல்லுக்கும் அஞ்சாமல் கடைசிவரை போராடினாலும், பெண்ணுக்கே உரிய
கருணை என்ற உத்தம குணத்தைக் கடைசிவரைப் பெற்று, பெண்களுக்கு காலா
காலத்துக்கும் பெருமை சேர்த்த அந்த வீரதேவதைக்கு நம் தலை தாழ்ந்த
வணக்கங்கள்.
இந்தக் கட்டுரைக்கான முக்கிய தகவல்கள் பெறப்பட்ட புத்தகங்கள்:
1. பல்நாட்டி வீர சரித்திர மற்றும் வீரகாவியம்
2. பி.எஸ்,என். ராவ் எழுதிய Social Movements of Medieval Andhra
3. Narasaraopet Inscriptions of SII
4. Epigraphical reports 402 of 1912
5. Thurston E, Caste and Tribes of Southern India
6. Ramaraju B’s Telugu Gnanapadha Geya Sahithyamu
7. Art and Culture of Marginalised Nomadic Tribes in AP by P. Sadanandan
8. N. Venkatramanayya’s History of Andhra Pradesh (Chalukyas and Kakatiyas)
9. Miscellaneous sources from various types of Articles.
2010/9/7 Dhivakar <venkdh...@gmail.com>:
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Small correction
’தெலுங்கு பாஷையின் வரிவடிவத்தை’ அறிமுகப்படுத்தியதே, என்றிருக்கவேண்டும்.
திவாகர்
2010/9/13 Dhivakar <venkdh...@gmail.com>:
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
திவாகர் சார் உங்கள் நடை, நிஜமாகிலுமே திரைப்படம் பார்த்த அனுபவத்தைத் தந்தது. நாகாம்பாள் வழிபடும் சில சிலைகளை புகைப்படம் எடுத்து மின் தமிழில் போட முடியுமா?இதை யாராகினும் பாடுபவர்கள் (தாஸர்கள் இன்று உள்ளார்களா) இருந்தால், அந்த ஒலி/ஒளிக் காட்சியையும் நாம் மரபு விக்கியில் பதியலாமே?சந்திரா
--
சந்திரா!
நாகாம்பாவின் கோவில்களுக்குப் போகவேண்டுமென அவ்வப்போது நினைப்பதுண்டு.
செல்லும்போது நிச்சயம் கையில் கேமரா இருக்கும்.
ஆந்திராவில் பெண் தெய்வ சிறப்புகள் அதிகம். நாகம்மாவை விட சிறப்பு பெற்று
பெனுகொண்டாவில் கோவில் கொண்டவள் கன்னிகா பரமேஸ்வரி.
இவள் தியாகி, தியாகத்தின் சிகரம். ஒரு குலத்தைக் காக்க தீயில் பாய்ந்தவள்
என்று சொல்கிறார்கள்.
இன்று வைசியர்களின் குலதேவதையாக அவர்கள் எங்கெல்லாம் கொஞ்சம் கூடுதலாக
இருக்கிறார்களோ, அங்கெல்லாம் கோயில் கொண்டுள்ள கன்னிகா பரமேஸ்வரிக்கு நம்
சென்னையிலும் (பூக்கடைப் பக்கம்) கோயில் உண்டு.
அதே போல விசாகப்பட்டினம் தாண்டியதும் வரும் விஜயநகரத்தில் 'பைடதல்லி'
அம்மன் கோயில் இன்னமும் விசேஷம். இங்கு தசரா உற்சவத்துக்குப் பிறகு வரும்
'சிரிமாநு' உற்சவம் ஆந்திராவெங்கும் பேசப்படும் வைபவம். பைடதல்லி (தல்லி
என்றாலே தாய்தான்) முந்தின வாரம் கோயில் தலைமை பூசாரிக்கு கனவில் சொன்ன
மரத்தின் நீண்ட கிளைக் கொம்பை வெட்டி, அதன் உச்சியில் உற்சவத்தின் போது
இந்த பூசாரி ஊர்வலம் வருவதுதான் 'சிரிமாநு' எனச் சொல்வார்கள்.
விஜயநகரத்தில் மத்தியில் நின்றுகொண்டு, 'பைடராஜு' என்று கத்தினால்
பதிலுக்கு ஆயிரம் பத்தாயிரம் பேர் 'கூப்பிட்டிங்களா' என்று கேட்பார்கள்.
இவ்வளவு ஏன், விசாகப்பட்டினத்துக்கு முன்பு இருக்கும் அனகாபள்ளியில்
கோயில் கொண்டிருக்கும் நூகாலம்மா தல்லி கோயில் மிக மிக விசேஷம். நான்
செல்லமாக அவளுக்கு வைத்த பெயர் 'அழகி'. அவள் கோயிலுக்குப் போய் 'அழகி'
என்று பெயர் சொல்லியே பிரார்த்திப்பேன். கொள்ளை அழகு.
நூகாலம்மா டெம்பிள், அனகாபள்ளி என்று கூகிளில் தேடினால் நிச்சயம் அவள்
படம் கிடைக்கும்.
கன்னிகா பரமேஸ்வரியின் பூர்த்தி கதையை 'விசித்திர சித்தனி'ல்,
பைடதல்லியின் சிரிமாநு உற்சவம், 'வம்சதாரா' ஆரம்பகட்ட அத்தியாயங்களிலும்
வரும்.
பாரத மாதா என சக்தி பெயர் கொண்டு அழைக்கிறோம் இல்லையா.. எங்கெங்கும்
சக்தியடா.. என்று பாரதம் முழுமைக்கும் தாளம் போட்டு குதிக்கலாம்.
அன்புடன்
திவாகர்
2010/9/14 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
அவ்வப்போது ஹாட்-பாலிடிக்ஸ் இங்கு உண்டு. எல்லாத் தலைவர்க
ளும் கட்டாயமாக தலையில் குடம் - நீர், கொண்டு தாய்க்கு அபிஷேகம் செய்வார்கள்.
2010/9/14 Dhivakar <venkdh...@gmail.com>:
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
ஊம்ஹூம். அழகியின் படம் கிடைக்கவில்லை..
http://en.wikipedia.org/wiki/Sri_Sri_Nookambika_Ammavari_Temple
என்னிடம் படம் உள்ளது. ஸ்கேன்' செய்து அனுப்புகிறேன் (பிறகு).
2010/9/14 Dhivakar <venkdh...@gmail.com>:
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
இப்போதெல்லாம் இவைகள் டி.விக்களில் வருவதால் அரசியல் பெண் தலைவர்களும்
மிகப் பெரிய ஆதரவு காண்பிக்கிறார்கள். விஜயசாந்தி போன்றோர் கூட தலையில்
பால் குடம் (பாவம் இல்ல..) கஷ்டப்பட்டு சுமந்து நடந்து போவதை டி.வி
செய்தி சானல்களில் வழக்கமாக காணலாம்.
நீங்கள் சொன்ன தலையில் பூக்கொம்பு் ஏந்துவது கூட தெலுங்கானா பக்கம்
இருக்கவேண்டும். விசாரித்து சொல்லிவிட்டால் போயிற்று..
அன்புடன்
திவாகர்
2010/9/14 Swarna Lakshmi <lakshm...@yahoo.com>:
நூகாலம்மா டெம்பிள், அனகாபள்ளி என்று கூகிளில் தேடினால் நிச்சயம் அவள்ஊம்ஹூம். அழகியின் படம் கிடைக்கவில்லை..
படம் கிடைக்கும்.
http://en.wikipedia.org/wiki/Sri_Sri_Nookambika_Ammavari_Temple
என்னிடம் படம் உள்ளது. ஸ்கேன்' செய்து அனுப்புகிறேன் (பிறகு).
http://www.kamalagaanam.blogspot.com
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கன்னிகா பரமேஸ்வரியின் கதையில் பல்வேறு கோணங்கள் இங்கே ஆந்திராவில்
உள்ளன, சிலர் பத்தாம் நூற்றாண்டு கதையாக பாவிக்கின்றனர் (வேங்கி அரசன்
விஷ்ணுவர்த்தன சாளுக்கியன் இவளை அடைய நினைத்ததாகவும், அது நடக்காமல்
இருக்க தீப்பாய்ந்ததாகவும் கதை உண்டு, அதுதான் கோதாவரிக்கரை பெனுகொண்டா),
வேறு சிலர் ஆறாம் நூற்றாண்டில் செட்டியார்களை சமண மதத்திலிருந்து சனாதன
தர்மத்துக்கு மாற்றியதாகவும், அந்த மாற்றத்தின் முடிவில் செட்டியார்
குலத்துத் தலைவன் மகள் தீப்பாய்ந்ததாகவும், (கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள
அமராவதி, தான்யகடகம்)அவளுக்குப் பின்னர் கோயிலெழுப்பி செட்டியார்கள்
கன்னிகா பரமேஸ்வரி எனக் கொண்டாடி வருவதாகவும் கதைகள் உள்ளது. இந்த
இரண்டாம் கதைதான் நான் என் புதினத்துக்கு எடுத்துக் கொண்டது. தெலுங்கு
செட்டிமார்கள் இவளை வம்ச தேவதையாக தத்து எடுத்துக் கொண்டதால் வாசவி
கன்னிகா பரமேஸ்வரி என்றும் அழைக்கிறார்கள்.
நீங்கள் சொன்ன அம்பிகைதான் அனைத்துமே ஆவாள். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு
விதமாய் மக்களுக்கு தன்னைத் தெரியப்படுத்துகிறாள். அவ்வளவுதான்.
கமலம்! ஆரம்பியுங்கள் உங்கள் அம்பிகை அம்பலத்தைப் பற்றி..
அன்புடன்
திவாகர்
2010/9/15 Kamala Devi <saahi...@yahoo.com.sg>:
தி
2010/9/15 Dhivakar <venkdh...@gmail.com>:
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
மேகா
On Sep 15, 10:22 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> சொல்ல மறந்துவிட்டேன் கமலம்!
> பம்பா நதிக்கரையில் உள்ள செங்கண்ணூர் சிவன் கோயிலில் அம்பிகைக்குப் பெயர்
> பார்வதி என ஞாபகம், அவளை மூன்று முறை தரிசனம் செய்துள்ளேன். அவளுக்கும்
> நான் இட்ட பெயர் அழகி’தான்.
>
> தி
>
> 2010/9/15 Dhivakar <venkdhiva...@gmail.com>:
>
> > நன்றி கமலம்,
>
> > கன்னிகா பரமேஸ்வரியின் கதையில் பல்வேறு கோணங்கள் இங்கே ஆந்திராவில்
> > உள்ளன, சிலர் பத்தாம் நூற்றாண்டு கதையாக பாவிக்கின்றனர் (வேங்கி அரசன்
> > விஷ்ணுவர்த்தன சாளுக்கியன் இவளை அடைய நினைத்ததாகவும், அது நடக்காமல்
> > இருக்க தீப்பாய்ந்ததாகவும் கதை உண்டு, அதுதான் கோதாவரிக்கரை பெனுகொண்டா),
> > வேறு சிலர் ஆறாம் நூற்றாண்டில் செட்டியார்களை சமண மதத்திலிருந்து சனாதன
> > தர்மத்துக்கு மாற்றியதாகவும், அந்த மாற்றத்தின் முடிவில் செட்டியார்
> > குலத்துத் தலைவன் மகள் தீப்பாய்ந்ததாகவும், (கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள
> > அமராவதி, தான்யகடகம்)அவளுக்குப் பின்னர் கோயிலெழுப்பி செட்டியார்கள்
> > கன்னிகா பரமேஸ்வரி எனக் கொண்டாடி வருவதாகவும் கதைகள் உள்ளது. இந்த
> > இரண்டாம் கதைதான் நான் என் புதினத்துக்கு எடுத்துக் கொண்டது. தெலுங்கு
> > செட்டிமார்கள் இவளை வம்ச தேவதையாக தத்து எடுத்துக் கொண்டதால் வாசவி
> > கன்னிகா பரமேஸ்வரி என்றும் அழைக்கிறார்கள்.
>
> > நீங்கள் சொன்ன அம்பிகைதான் அனைத்துமே ஆவாள். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு
> > விதமாய் மக்களுக்கு தன்னைத் தெரியப்படுத்துகிறாள். அவ்வளவுதான்.
>
> > கமலம்! ஆரம்பியுங்கள் உங்கள் அம்பிகை அம்பலத்தைப் பற்றி..
>
> > அன்புடன்
> > திவாகர்
>
> > 2010/9/15 Kamala Devi <saahith...@yahoo.com.sg>:
> >> திவாகர்,
> >> நிங்ஙளின் முழுக்கட்டுரையும் வாசிக்கக்கிட்டியமைக்கு நன்றி.
> >> ஆனால் கன்னிகா பரமேஸ்வரி பற்றி வேறொரு சுவாரஸ்ய தகவலும் உண்டு.
> >> இவ்விழையில் தொடரலாமா என்று தெரியவில்லை.தனிமடலில் எழுதுகிறேன்.
> >> திவாகர், ஒரு சதயம் சொல்லட்டுமா? தமிழ்நாட்டில் நிங்ஙளின் பார்வதிதான் எங்களின்
> >> அம்பிகை,
> >> இந்த கன்னிகா பரமேஸ்வரிதான் கேரளத்தில் செக்குளத்து அம்மனாக வீற்றிருக்கிறாள்.
> >> இதுகுறித்து வரலாறு உண்டு
> >> அதைப் பராமரிப்பவர்கள் கடல் வாழ் சம்பந்தப்பட்ட மக்கள்.
> >> ஆண்டுதோறும் எங்கள் இல்லத்திலிருந்து பரிபாலன பணம் அந்த அம்பலத்துக்கு
> >> கொடுத்தனுப்புவார்கள்.
> >> பதிலுக்கு அவர்கள் பூஜை செய்த குங்குமம் கொண்டு வந்து தருவார்கள்.
> >> மிக விசேஷமான அம்பலம்.
> >> அம்பலம் பற்றி தனிமடலில் எழுதுகிறேன்.
> >> வாழ்த்துக்கள் திவாகர்.
> >> அன்பு கமலம்
>
> >> http://www.kamalagaanam.blogspot.com
>
> >> 2010/9/14 Dhivakar <venkdhiva...@gmail.com>
> ...
>
> read more »
அன்புடன்
திவாகர்
2010/9/16 Manimegalai Megalai <megalai.m...@gmail.com>:
> வீர தேவதையே எங்கள்
> வீரமான தேவதையே
> வாராது வந்த மாமணியாய்
> வானிலிருந்து வந்தாயே
> எங்களிதயம் கவர்ந்தாயே
> மண்ணில் மகளிர் ஆள்வதில்லை
> மண்ணின் ஆடவர் தீர்ப்போமேக
நீங்கள் பெண் தெய்வங்கள் பற்றிய விவரங்கள் எழுதவேண்டும் எனக்
கேட்டிருந்தீர்கள். திருமதி சாரதா சுப்ரமணியம் ஒரு விவரத்தை
வீரதேவதைக்காக எனக்கு தனிமடலில் அனுப்பி இருந்தார். அவர் அனுமதி பெற்று
அதை இந்தப் பதிவில் சேர்க்கிறேன்.
சாரதா அவர்கள் எழுத்தாளர், ஆன்மீக பத்திரிகைகளில் எழுதுபவர். மின்
தமிழில் உறுப்பினர் என்றே நினைக்கிறேன் (வீரதேவதை படித்ததில் இருந்து
ஊகித்தது). அவர் மின் தமிழில் பெண் தெய்வங்கள் பற்றி எழுதலாமே. கமலம் கூட
ஒரு பதிவு தொடர இருக்கிறார்கள். சாரதா அவர்களும், நம் கீதாம்மா அவர்களும்
சேர்ந்து கொண்டால் பெண் தெய்வங்கள் நிச்சயமாக மகிழ்ந்து போகும்.
இதோ அவரது மடல்
2010/9/18 sharadha subramanian <shara...@yahoo.co.in>:
வணக்க்ம்
தங்களீன் வீரதேவதை மற்றும் மயான தெய்வங்கள் விஷயங்களூக்கு
நானும் எனக்கு தெரிந்த தகவலை தருகிறேன்.மாயவரத்தில் நெஸவுததொழிலைக்கொண்ட
கணவ்னும் மனவியும் குடும்பம் இனிதே நட்த்தி வாழந்து வந்தனர். தேக
இச்சைக்கு இடம் இல்லாமல் இறைவன் இடத்தி்ல் தம் பக்தியை வைதது வாழ்ந்து
வந்த இருவ்ரும் .ஒருவரை ஒருவர் அவ்வளவு அன்பு்டன் அன்யேஈன்யமாக
இருந்தன்ர்.ஆனால் இறைவன் இவ்ர்களுக்கு குழந்தைச்செல்வத்தை தரவில்லை.ஆனாலும்
இறைவனிடத்தில் விடாபபூசை செய்து வ்ழிபட்டு வ்ந்தன்ர்.இப்படி இருக்கையில் ஓர்
நாள் காலன் கணவரின் உயிரைப் பறித்துவிடுகிறான் அந்த அம்மாள் கலங்குகிறாள், தன்
சுகம் சொத்து,ம்ங்கலம் எல்லாமே பேஈய் விட்டதாக உணர்ந்து. மனதளவில் பெரிய பாதிப்பு
ஆயிற்று. கணவன் உடல் மயாநத்திற்கு எடுத்து செல்லப்படுகிற்து அந்த
அம்மாவும் உட்ன் செல்கிறார்கள். க்ண்வன் உடலுக்கு ஈமக்கிரியைகள் ந்டந்து
சிதைக்கு தீ மூட்டியவுடன் அந்த பத்தினி தெய்வம் அந்தக்காட்சியைக்
காண சகியாது அவரின் எரியும் உடல் மீது விழுந்து தாமும் அவருடனே உடன் கட்டை ஏறி
விடுகிறாள்.ஊரில் எல்லாரும் க்தறின்ர் மறுநாள் அந்த் சாம்பலை எடுக்கப்பேஈகும்
நேரம் அங்கு ஒர் அதிசயம் காத்திருந்த்து.அங்கு சாம்பலுக்குப் பதில் இரண்டு
சிலைக்ள ஒனறாய் ஒட்டிய் வண்ணம் நின்று இருந்தது. சுய்ம்புவாக இன்றும்
மாயவரத்தில இந்த ஆலயத்தை தீய்ப்பாய்ந்தாள் அமமன் என வண்ங்கி வருகிறார்கள்
காவடி,கரகம் தீமிதி என் உற்சவங்க்ள் நடை பெறுகிற்து.(கௌரிமாயவரம் காவேரியின்
வடகரையயில் உள்ளது.) அம்மன் பெய்ர் தீப்பாய்ந்தாள் அம்மன் ரொம்ப
சக்திஉள்ளவள்.
--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com
6/ இறுதி பாகம்!!!
அன்புடையீர்! வணக்கம். இதே கன்னிகா பரமேஸ்வரி அம்மையை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த செட்டியார் மரபினர் திருக்கழுக்குன்றத்தில் ஒரு கோயிலை திருக்கழுக்குன்றம் பெரிய தெருவில் சமீபத்தில் ஸ்தாபித்து குடம்ழுக்கும் செய்தும், அம்மரபினைச் சேர்ந்தவர்களைக் கொண்டு தினசரி வழிபாடும் செய்தும் வருகின்றனர். அவ்வம்மையின் வரலாற்றினை அளித்த திரு. திவாகர் ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
--