ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 12 June 2026
(வெருளி நோய்கள் 1551-1555 : தொடர்ச்சி)
பச்சை நிறம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பச்சை வெருளி.
பச்சைப்பாம்பு கண்டு அஞ்சிப் பின்னர் பச்சை நிறம் என்றாலே அஞ்சுவோரும் உள்ளனர்.
chloros என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் மஞ்சள் பச்சை நிறம்.
prasinos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பச்சை நிறம்.
சிலர் பாசிகம்(குளோரின்-chlorine) மீதான அளவுகடந்த பேரச்சம். எனவே, பாசிக வெருளி என்பதையும் Chlorophobia என்கின்றனர்.
00
பஞ்சுருண்டை தொடர்பான தேவையற்ற வரம்பற்ற பேரச்சம் பஞ்சுருண்டை வெருளி.
பஞ்சு உருண்டை என்றில்லாமல் பஞ்சு எந்த வடிவத்தில் இருந்தாலும் அதைத் தொடும்பொழுதோ பயன்படுத்தும் பொழுதோ பகுத்தறிவிற்குப் பொருந்தாத பேரச்சம் சிலருக்கு வருகிறது.
பஞ்சாலையில் பணிபுரிபவர்கள் மூச்சுவிடும் பொழுது பஞ்சு தூசியைத் தொடர்ந்து இழுப்பதால், மஞ்சள் பழுப்பு நுரையீரல் என்றும் பஞ்சுத் தொழில் நுரையீரல் (Byssinosis) என்றும் அழைக்கப்படும் நோய் வருகிறது. இந்நுரையீரல் நோய் வந்து விடும் என்ற அச்சத்தாலும் பஞ்சு மீது பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வோரும் உள்ளனர்.
bambaki என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பஞ்சு.
00
பஞ்சு தித்தி இயந்திரம்(candy machine) குறித்த வரம்பற்ற பேரச்சம் பஞ்சு தித்தி இயந்திர வெருளி.
விற்பனைப் பொறி வெருளி(Zidongshophobia) போன்றதே இதுவும்.
00
நாட்டு வழக்கில் பஞ்சு மிட்டாய் எனப்படும் பஞ்சு தித்தி (cotton candy) மீதான மிகையான பேரச்சம் பஞ்சு தித்தி வெருளி.
வளை தித்தி வெருளி (Candycanephobia), கூம்பு தித்தி வெருளி (Candycornphobia)போன்று இவ்வெருளியும் தித்தி வெருளி (Caramelaphobia/Karamelaphobia)யின் பகுதியாக அமைகிறது.
00
புனைவுரு இலிசு(Liz) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பல்லியன் வெருளி.
பல்லியன் என்றால் அசைவூட்டப் படங்களில் இடம் பெறும் இலிசு பல்லி என்னும் புனைவுரு.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5