உணர்வு சார் நுண்ணறிவு - 1

453 views
Skip to first unread message

திவாஜி

unread,
Oct 8, 2014, 10:23:41 AM10/8/14
to minT...@googlegroups.com

சாதாரணமாக மீள்பதிவு செய்வதில்லை. ஆனால் இப்போது இருக்கிற நிலமையை பார்த்தால் இப்ப இது கட்டாயம் மிந்தமிழுக்கு வேணும் போலத்தோணியது. ஆகவே இந்த தொடரை இங்கே இடுகிறேன்.

உணர்வு சார் நுண்ணறிவு - 1

ஆச்சு. ப்ளஸ் டூ ரிசல்ட் எல்லாம் வந்து எல்லா பத்திரிகையும் பக்கம் பக்கமா டுடோரியல் காலேஜ் விளம்பரம், ஸ்கூல்/ காலேஜ் விளம்பரம் ந்னு காசு பாத்தாச்சு. அப்புறம் ஸ்கூல் பர்ஸ்ட், மாவட்ட பர்ஸ்ட், தமிழக பர்ஸ்ட் அவங்க தெரு பர்ஸ்ட் ந்னு பல விதமா ஆளை தேடி தேடி கண்டு பிடிச்சு, முடிஞ்சா அவங்களோட சோகக் கதையும், இல்லாட்டா மருத்துவம் படிச்சு மக்களுக்கு சேவை செய்யப்போறேன் ந்னு ஃபீலிங்க்ஸையும் பத்தி பத்தியா போட்டாச்சு. பல வருஷங்களுக்கு முன்னேயே ஒரு சந்தேகம். இவங்க எல்லாம் என்ன ஆனாங்க? பத்தாவது ரிசல்ட் ல முதலிடம் வந்தவங்கள்ல எவ்வளோ பேர் ப்ளஸ் டூ ல ராங்க் வராங்க? இல்லைன்னா ஏன்? +2 ல வந்தவங்க வாழ்க்கையில் என்ன ஆனாங்க?

அமெரிக்காவில இதே போல சிலருக்கு சந்தேகம் வந்ததாம். ரைட் ந்னு ஆராய்ச்சிலஇறங்கிட்டாங்க. அங்கே பிரபலமான தேர்வு ஸாட் (SAT) டெஸ்ட். Scholastic Aptitude Test,  ந்னு முதல்ல சொல்லி அப்புறம்  Scholastic Assessment Test ந்னு பேரை மாத்திட்டங்க. இது காலேஜ் அட்மிஷனுக்கான டெஸ்ட்.  ஒத்தரோட புத்திசாலித்தனத்தை அளக்கிற பரிட்சை. அதுல எக்கச்சக்க மார்க் வாங்கறவங்க எல்லாம் பின்னால் வாழ்க்கையில என்ன ஆறாங்க? எக்கச்சக்க மார்க் காலேஜிலேயும் வாங்கி நல்ல வேலை, சம்பளம், குடும்ப, அமைதியான வாழ்க்கை இப்படித்தானே இருந்து இருக்கணும்?

அப்படி இல்லை என்கிறதுதான் ஆராய்ச்சியில கிடைச்ச விடை! மொத்தத்துல சிலருக்கே அப்படி வாழ்க்கை அமைஞ்சது. மத்தவங்க ஒவ்வொருவரும் ஒரு விதமாசாதாரண மார்க் வாங்கறது, போதை பழக்கம், சிதைஞ்ச குடும்பம், நல்ல மார்க் வாங்கியும் வேலையில் நீடிக்க முடியாமை ந்னு பிரச்சினைகள் லிஸ்ட் மிகவும் நீளம்!

 

ஏன்? ஏன்? ஏன்? 

 

அப்ப ஒரு விஷயம் நிச்சயம்! படிப்பு/ புத்திசாலித்தனத்துக்கும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதுக்கும் சம்பந்தம் இல்லை!  சம்பந்தமே இல்லைன்னு இல்லை. அதுவும் ஒரு காரணி. அவ்ளோதான். நல்ல படிப்பு, நல்ல வேலை நிறைவான வாழ்க்கை இருக்க முடியவே முடியும். ஆனா புத்திசாலித்தனம் ஆட்டோமேடிக்கா நல்ல மார்க் கொண்டு வராது; நல்ல மார்க் ஆட்டோமேடிக்கா நல்ல வேலையை கொடுக்காது, கொடுத்தாலும் அதில் நீடிப்பது காரண்டி இல்லை; நல்ல வேலை சம்பளம் ஆட்டோமேடிக்கா நல்ல வாழ்க்கையை கொடுப்பதும் காரண்டி இல்லை.

 

என்னய்யா குழப்புறீர்? அப்ப என்னதான் வேணும்?

 

மனது வசப்பட வேண்டும்!

 

இதுக்கு உணர்வு சார் நுண்ணறிவு தேவை என்கிறார்கள். ஆங்கிலத்துல emotional intelligence.



PRASATH

unread,
Oct 8, 2014, 10:29:06 AM10/8/14
to mint...@googlegroups.com

இதைப் படிச்சதும் டக்னு தோணுனதை எழுதுறேன்..

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை...

இந்த பாடல் வரிதான் நினைவு வந்துச்சு...

நீங்க தொடருங்க ஜி... நானும் தொடருறேன்...

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திவாஜி

unread,
Oct 8, 2014, 10:48:28 AM10/8/14
to mint...@googlegroups.com

2014-10-08 19:59 GMT+05:30 PRASATH <pras...@gmail.com>:

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை...


:-)) அது மகத்தான தத்துவப்பாடல்!

Oru Arizonan

unread,
Oct 8, 2014, 6:02:01 PM10/8/14
to mint...@googlegroups.com
உயர்திரு திவாஜி அவர்களே,

நல்ல பதிவு.  முன்பு அறிவு பெறக் கற்றார்கள்.  இப்பொழுது பொருளீட்ட மட்டுமே கற்கிறார்கள்.  ஒரு மாணவன்/மாணவிக்கு எந்தக் கலையில்  (இங்கு நான் கலை என்று பகர்ந்தது subject) நாட்டமும், திறமையும் இருக்கிறது என்பதைச் சிறிதும் கருத்தில் கொள்ளாமல், "இதைப்படி, நிறையச் சம்பாதிக்கலாம்" என்று தள்ளுகிறார்கள்.

எனவே, ஒருசில கலைகளைப் பயில்வதற்கு போட்டி மிகுகிறது.  எனவே, வடிகட்டவேண்டி, தேர்வுகள் (SAT, MCAT, GRE) போன்றவை.  இது இந்தியாவில் உள்ள IIT கல்வி நிலைய நேர்முகத் தேர்வுக்கும் ஒப்பாகும்.  அதில் தேறினாலும், மேலும் வடிகட்ட, personality test போன்ற தேர்வுகளை வைக்கிறார்கள்.  

இதில் தேறுவதற்கு பயிற்சி தருவதற்கென்ற பல நிறுவனகள் துவங்கப்பட்டு பொருளீட்ட ஆரம்பிக்கின்றன.  கல்வி தோழி ஆகி விடுகிறது.

கற்பதற்கென்று இவ்வளவு பொருள் செலவழித்தால், அதுவும் பொருளீட்டவேண்டும் என்று செலவிட்டால், அங்கு கல்விக்கு, அறிவுக்கோ முதலிடம் எப்படிக் கொடுக்கப்படும்.

இவ்வளவும் செய்து ஒருவர் கற்றால், ஒருசில ஆண்டுகளிலேயே அவரது கல்வி உபயோகத்தில் இல்லாது (obsolete) ஆகிப் போகிறது.  அவர்கள் மனதால் எரிந்து, உடலால் தளர்ந்து போகிறார்கள்.  அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனமும், சாறு பிழிந்த சக்கையாக அவர்களைத் தூக்கி எறிந்து  விடுகிறது.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Innamburan S.Soundararajan

unread,
Oct 9, 2014, 12:35:24 AM10/9/14
to mintamil, Innamburan S.Soundararajan
இதுக்கு உணர்வு சார் நுண்ணறிவு தேவை என்கிறார்கள். ஆங்கிலத்துல emotional intelligence.

~ திவாஜி! இந்த நூலின் மையகருத்துக்களை அலசுக: - Coleman, D : Emotional Intelligence: Bloomsbury India. 

இன்னம்பூரான்

திவாஜி

unread,
Oct 9, 2014, 12:41:32 AM10/9/14
to mint...@googlegroups.com

2014-10-09 3:31 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
உயர்திரு திவாஜி அவர்களே,

​arizone னரே,
தயை செய்து இந்த உயர்திரு எல்லாம் எனக்கு வேண்டாம். சங்கடமாக இருக்கிறது. தங்கள் குறிப்புகளுக்கு நன்றி!​


திவாஜி

unread,
Oct 9, 2014, 12:43:14 AM10/9/14
to mint...@googlegroups.com

On 9 October 2014 10:05, Innamburan S.Soundararajan <innam...@gmail.com> wrote:
திவாஜி! இந்த நூலின் மையகருத்துக்களை அலசுக: - Coleman, D : Emotional Intelligence: Bloomsbury India. 

இ சார்! அதுவே இதற்காக நான் முதலில் படித்த நூல்! அப்புறம் அது
​goleman.....​

Oru Arizonan

unread,
Oct 9, 2014, 12:58:12 AM10/9/14
to mint...@googlegroups.com
உயர்திரு திவாஜி அவர்களே,

நான் ஒருவரைத்  தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்ளும்வரை பணிவுடனேயே அழைக்க விரும்புகிறேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திவாஜி

unread,
Oct 9, 2014, 1:10:34 AM10/9/14
to mint...@googlegroups.com

2014-10-09 10:28 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
நான் ஒருவரைத்  தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்ளும்வரை பணிவுடனேயே அழைக்க விரும்புகிறேன்.

அப்படியா? என்ன தெரியணும்ன்னு சொல்லுங்க. தனி மடல்ல அனுப்பறேன்! :-))

திவாஜி

unread,
Oct 9, 2014, 1:11:19 AM10/9/14
to mint...@googlegroups.com

2014-10-09 10:40 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
அப்படியா? என்ன தெரியணும்ன்னு சொல்லுங்க. தனி மடல்ல அனுப்பறேன்! :-))

மெய்ல் கீழே இருக்கிற லிங்க்ல போய் பாத்தாலே என்னைப்பத்தி அனேகமா தெரிய வேண்டியது தெரிஞ்சுடும்!

Tthamizth Tthenee

unread,
Oct 9, 2014, 4:14:11 AM10/9/14
to mint...@googlegroups.com
​அன்பு நண்பர்  திரு திவாஜி அவர்களுக்கு 


மனது வசப்பட வேண்டும்!

 

இதுக்கு உணர்வு சார் நுண்ணறிவு தேவை என்கிறார்கள். ஆங்கிலத்துல emotional intelligence.


​தொடர்ந்து  எழுதுங்கள்  நல்ல விஷயங்களை படித்து  வெகு நாட்களாகின்றது​



அன்புடன்

​தமிழ்த்தேனீ​


அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--

திவாஜி

unread,
Oct 9, 2014, 4:19:52 AM10/9/14
to mint...@googlegroups.com

2014-10-09 13:43 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
​தொடர்ந்து  எழுதுங்கள்  நல்ல விஷயங்களை படித்து  வெகு நாட்களாகின்றது​

நன்றி தேனீ சார்!

திவாஜி

unread,
Oct 9, 2014, 4:23:50 AM10/9/14
to mint...@googlegroups.com

உணர்வு சார் நுண்ணறிவு - 2 சூடான ஐஸ்க்ரீம்!

 

Emotional intelligence ன்னாலே ஒரு சந்தேகம் வரலாம். அதென்னது கிறுக்குத்தனமா இருக்கு? எமோஷன் இருக்கற இடத்துல இண்டெலிஜன்ஸ் எப்படி இருக்கும்? அதாவது மனசும் அறிவும் எதிரானது இல்லையா? மனசுல உணர்ச்சிகள் இருக்கிறப்ப அறிவு சரியா வேலை செய்யாது. அறிவு வேலை செய்கிற இடத்துல உணர்ச்சிகளுக்கு வேலை இல்லை. சூடான ஐஸ்க்ரீம் என்கிறது போல இருக்கு Emotional intelligence ந்னு சொல்கிறது!

 

அப்படி இல்லை. இது உணர்ச்சிகளை புரிந்து கொள்கிறதான அறிவு. எமோஷன்ஸ் பத்திய இண்டெலிஜன்ஸ். அறிவும் மனசும் ஒரே விஷயம்தான். மனசு சலனமாகிறது. அறிவு நிலையானது. ஸ்திரமானது. இதை புரிந்து கொள்வது சலனமாகும் மனதை சரிப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க உதவும்.

நடவடிக்கைன்னா உணர்ச்சி வசப்படாம இருக்கணும்ன்னு இல்லை. அப்படி செய்யப்பார்க்கிறது ஒரு சன்யாசியா இருக்கலாம். இல்லை ஆன்மீகத்தை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு முன்னேறப் பார்க்கிறவரா இருக்கலாம். ஆனா உணர்ச்சி வசப்படாம இருக்கிறது சாதாரண ஜனங்களுக்கானது இல்லை. உணர்ச்சி எழலாம். அது இயற்கை.


ஆனால் அப்புறம்? இது தன்னைத்தானே பெருக்கிக்க விடப்படுமா இல்லை, அடக்கப்படுமா இல்லை, தணிக்கப்படுமா, ஆற்றுப்படுத்தப்படுமா? இதுல எது அந்த நேரத்துக்கு/ இடத்துக்கு / நபருக்கு சரியோ அதை செய்யத்தான் இந்த எமோஷனல் இண்டெலிஜன்ஸ் கத்துக்கொடுக்கும்.

 

இந்த சப்ஜக்ட்டை சரியா புரிஞ்சு கொண்டு, பயிற்சியும் செய்தால் நாளடைவில்

சிக்கலான நிலைகளை சரியான விதத்தில் கையாளமுடியும்.

தான் நினைப்பதை தெளிவாக சொல்ல முடியும்.

பிறரை கவர முடியும்; அவர்களுக்கு உதவிகளை செய்ய முடியும்; அவர்களை சரியாக வழி நடத்த முடியும்.

மன அழுத்தம் நிறைந்த நிலைகளிலே கூட சமநிலையில் இருக்க முடியும்.

மற்ற மக்கள் நிலைகளின் உணர்ச்சிகரமான எதிர்விளைவுகளை புரிந்து கொள்ள முடியும்.

மற்றவர்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தும் போது தன்னையும் மற்றவர்களையும் சரியாக மேலாண்மை செய்ய முடியும்.

வேலைகளை சரியாக விரைந்து செய்ய மற்றவர்களை ஊக்குவிக்க முடியும்.

மிகக்கடினமான நிலைகளில் கூட நேர்முறை அணுகு முறையுடன் இருக்க முடியும்.

 

இது அத்தனையும் உங்களுக்கு உடனே கிடைத்துவிடும் என்று ஒன்றுமில்லை. எந்த புள்ளியில் ஆரம்பிக்கிறோம் எப்படி பயிற்சி செய்கிறோம் என்பதை பொருத்தது அது. ஆனால் இதை எல்லாம் புரிந்து கொண்டு செய்யச்செய்ய வாழ்க்கை வெற்றிகரமானது ஆகும்!

Dev Raj

unread,
Oct 9, 2014, 5:06:06 AM10/9/14
to mint...@googlegroups.com
On Thursday, 9 October 2014 01:14:11 UTC-7, தமிழ்த்தேனீ wrote:

​தொடர்ந்து  எழுதுங்கள்  நல்ல விஷயங்களை படித்து  வெகு நாட்களாகின்றது​

:))

ஆமா, ஆமா, ஆமா, ஆமா !!!



தேவ்

திவாஜி

unread,
Oct 10, 2014, 11:43:00 AM10/10/14
to mint...@googlegroups.com

2014-10-09 13:53 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:

 

இது அத்தனையும் உங்களுக்கு உடனே கிடைத்துவிடும் என்று ஒன்றுமில்லை. எந்த புள்ளியில் ஆரம்பிக்கிறோம் எப்படி பயிற்சி செய்கிறோம் என்பதை பொருத்தது அது. ஆனால் இதை எல்லாம் புரிந்து கொண்டு செய்யச்செய்ய வாழ்க்கை வெற்றிகரமானது ஆகும்!


உணர்வு சார் நுண்ணறிவு 3 - கொஞ்சமே கொஞ்சம் சரித்திரம்!


வெய்ன் பெய்ன்
, கீத் பீஸ்லி,பெடோக், ல்யூனர், ஸ்டான்லி க்ரீன்ஸ்பான் ந்னு பலரும் {Wayne Payne (1985)  Keith Beasley (1987)  Beldoch (1964) Leuner (1966) Stanley Greenspan (1989)} இதை பத்தி பேசியிருந்தாலும், 1990 இல் யேல் பல்கலை கழகத்தை சேர்ந்த பீட்டர் ஸலோவே,  ஜான் மேயர் ன்னு ரெண்டு பேர் எமோஷனல் இண்டெலிஜன்ஸ் பற்றிய முதல் அறிவியல் ஆவணத்தை வெளியிட்டாங்க. அப்ப அவங்களுக்கே இதை யார் புரிஞ்சுக்கப்போறாங்க ந்னு தோணித்தாம். இப்ப அது நல்லா வளர்ந்துவிட்டது. பல நிறுவனங்களும் அதுக்கு தேவையான பணியாளர்களை நியமிக்கும் போது இதற்கான சோதனைகளை செய்ய ஆரம்பிச்சு இருக்காங்க. இவங்களோட கருதுகோளை எபிலிட்டி மாடல் என்கிறாங்க.

 

இதன் படி, நான்கு ஆற்றல் அல்லது திறமைகள் உண்டு.

முதலாவது தன்னுள்ளேயும் வெளியேவும் உணர்வுகளை கண்டு பிடித்து வகைப்படுத்துவது. இது மிகவும் முக்கியம். இது இல்லாமல் அடுத்த படிகள் இல்லை. இரண்டாவது இதை கட்டுப்படுத்தி,  பயன்படுத்தி யோசித்தல், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது போல சிலவற்றுக்கு பயன்படுத்துவது. தன் மனநிலைக்கு (mood) தக்கபடி இருக்கிற வேலையை அமைத்துக்கொள்வது. மூன்றாவதா உணச்சிகளை புரிந்து கொண்டு அவற்றில் இருக்கிற நுட்பமான வேறுபாடுகளை புரிந்து செயல்படுவது. கடைசியாக தன் /மற்றவர் உணர்வுகளை மேலாளுவது.

 

கோன்ஸ்டாடின்னு ஒத்தர் இன்னொரு வகையா இதை வெளிப்படுத்தினார். இதுட்ரெய்ட் மாடல். இவர் உணர்ச்சி பூர்வமாக தன்னால என்ன செய்ய முடியும்ன்னு ஒத்தர் நம்புவதுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

 

1995 இல் கோல்மேன் என்கிறவர் பிரபலமான புத்தகம் ஒண்ணை இது பத்தி எழுதி வெளியிட்டார். [Emotional Intelligence - Why it can matter more than IQ] இவர் முன்னே சொன்ன ரெண்டுத்தையும் கலந்து முன் வைச்சார்.மிக்ஸ்ட் மாடல்.

 

இவர் சொல்வது:

1. தன்னை அறிதல். தன்னோட உணர்வுகள், பலம், பலகீனம், உந்துதல், மதிப்புகள், இலக்குகள் இவற்றையும் இவற்றை பயன்படுத்தினால் மற்றவர் மீது அவற்றின் தாக்கத்தையும் சரியாக அறிந்திருத்தல்.

2. சுய கட்டுப்பாடு. தடையாக இருக்கிற உணர்வுகளை அடக்கியோ அல்லது திசை திருப்பியோ மேலாளுதல். மாறுகின்ற சூழல்களுக்கு தக்கபடி தன்னை மாற்றிக்கொள்ளுதல்.

3. உறவுகளை நாம் விரும்புகிற திசையில் நகர்த்துதல்.

4. எம்பதி என்கிற பரிந்துள்ளல்.

5. தன்முனைப்பாற்றல்.

 

ரொம்ப ட்ரையா இருக்கில்லே! கண்டுக்காதீங்க. வருகிற பதிவுகளில எளிமையா பார்த்துக்கொண்டு போகலாம். இப்போதைக்கு பட்டியல் போடணுமேன்னு எழுதினேன்!

 

இதை எல்லாம் போட்டு குழப்பிக்காம சில விஷயங்களை பார்த்துக்கொண்டு போகலாம்.

 

இதற்கான சில சோதனைகளும் உருவாக்கப்பட்டு இருக்கு. MSCEIT ன்னு ஒண்ணு.Goleman model க்கு  Emotional Competency Inventory (ECI),  Emotional and Social Competency Inventory (ESCI) The Emotional Intelligence Appraisal, ந்னு ரெண்டு. இதுக்குள்ள எல்லாம் நாம் போகப்போகிறதில்லை. (அப்பாடா!)

 

வளர்ந்துகிட்டு இருக்கிற இந்த சப்ஜெக்ட்ல மாற்றுக்கருத்துகளுக்கும் விவாதங்களுக்கும் குறைச்சலில்லை. இதெல்லாம் ஒரு அறிவுன்னே ஒப்புக்கொள்ளாதவங்களும் இருக்காங்க! இருந்தாலும் நாம் முடிஞ்ச வரை கொஞ்சம் இதை பத்தி உள்வாங்கிக்கொண்டு நம் உள்நாட்டு பாரம்பரிய அறிவியலுடன் சேர்ந்து போகிறதா என்று பார்க்கலாம். 

 

மேற்கொண்டு இதை புரிஞ்சுகொள்ள ந்யூரோ அனாடமி பார்க்கணும் என்ன! வேணாமா? கொஞ்சம்? கொஞ்சமே கொஞ்சம்? ரைட்! முடிஞ்ச வரை எளிமையாவே வெச்சுக்கொள்ளலாம். ஒரே ஒரு பதிவு!



பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Oct 11, 2014, 12:37:07 PM10/11/14
to மின்தமிழ்
தொடர்கிறேன்!.. 

//முடிஞ்ச வரை எளிமையாவே வெச்சுக்கொள்ளலாம்//
எளிமையா என்று தாங்கள் சொல்ல வேண்டியதேயில்லை.. தங்கள் எழுத்து நடை, கருத்துக்களை அத்தனை அழுத்தமாக மனதில் பதிய வைக்கிறது!...தொடருங்கள்..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.


2014-10-10 21:12 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
​  
​ 
​  
​ 
​   
​     

திவாஜி

unread,
Oct 13, 2014, 7:52:41 AM10/13/14
to mint...@googlegroups.com

2014-10-10 21:12 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:

மேற்கொண்டு இதை புரிஞ்சுகொள்ள ந்யூரோ அனாடமி பார்க்கணும் என்ன! வேணாமா? கொஞ்சம்? கொஞ்சமே கொஞ்சம்? ரைட்! முடிஞ்ச வரை எளிமையாவே வெச்சுக்கொள்ளலாம். ஒரே ஒரு பதிவு!


உணர்வு சார் நுண்ணறிவு - 4 ந்யூரோ அனாடமி





படம் நன்றி விக்கிபீடியா.


மேலே இருக்கிற படம் காட்டுவது மூளையின் நெடுக்கு வெட்டுத்தோற்றம்.
 இது மனுஷனோட மூளை. அதனால மஞ்சள் பகுதி அதிகமா இருக்கு. இந்த மஞ்சள் பகுதியை கார்டெக்ஸ் என்பாங்க.

சிவப்பா இருக்கிற பகுதியை கவனமா பாருங்க. இதுக்கு லிம்பிக் சிஸ்டம் ந்னு பெயர். இது நாம் இந்த பதிவுகளில பார்க்கிற சமாசாரங்களுக்கு ரொம்ப முக்கியம்.

 

பரிணாம வளர்ச்சில நீல பகுதியும் அதுக்கு கீழேயும் முதல்ல தோன்றி இருக்கிறதாகவும்; பின்னே மனிதன் வரை உயரும்போது கடைசியில் மேலே இருக்கிற மாதிரியும் மூளை இருக்கிறதா சிம்பிளா வெச்சுக்கலாம். எலி மாதிரி சின்ன பாலூட்டிகளுக்கு மஞ்சள் பகுதில இருக்கிற மடிப்புகள் இராது. இந்த மஞ்சள் பகுதியைநியோ கார்டெக்ஸ் என்பாங்க. இதிலதான் நரம்பு செல்களும் அவற்றோட இணைப்பு கம்பிகளும் இருக்கு. மடிப்புகள் இருக்கும்போது அதிக பரப்பு கிடைக்கிறதால அதிக செல்களும் அதனால அதிக மூளை செயல்பாடுகளும் மனுஷனுக்கு இருக்கு. சிம்பிள்தானே?

 

ஸ்பைனல் கார்ட் என்கிற தண்டு வடத்துலேந்துதான் உடம்பின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து உணர்ச்சி சிக்னல் எல்லாம் இந்த கார்டெக்ஸுக்கு வருது. கார்டெக்ஸூக்கு நேரடியாகவும் வரும். கீழே இருக்கிற ப்ரெய்ன் ஸ்டெம், தாலமஸ் மாதிரி பகுதிகளுக்கு போயிட்டு அங்கிருந்தும் வரும்.

 

இந்த நியோ கார்டக்ஸ்ல திசுக்கள் எல்லாம் ஆறு அடுக்கா அரை மில்லி மீட்டர் விட்டம் இருக்கிற தூண் மாதிரி அமைஞ்சு இருக்கு. ஆழம் 2 மி.மி. தான்! இப்படி தூண் தூணா இருக்கிறதால ஆராய்ச்சி செஞ்சு இன்னின்ன இடம் இன்னின்ன செயல்களை செய்யுது அல்லது இன்னின்ன விஷயத்தை உள் வாங்குதுன்னு சொல்ல முடியுது. இந்த இடம் பார்வைக்கு (மூளையின் பின் பகுதி) இந்த இடம் கேட்கிறதுக்கு (காதுகள் பக்கம்) என்பது போல! தலைக்கு முன் பக்கம்  இருக்கிற மூளைதான் மனிதனுக்கு அதிகமா வளர்ந்து இருக்கு! இங்கேதான் மொழியை அறிகிற, உருவாக்குகிற இடங்கள் இருக்கு! இதுக்கு பக்கத்திலேயே கண்களுக்கு மேலே இருக்கிற இடங்கள்தான் சமூக செயல்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் முக்கியமான இடங்கள். காதுகள் பக்கம் இருக்கிற மூளைதான் நினைவாற்றலுக்கு முக்கியம். அதுவேதான் முன்னே நடந்தவற்றை நினைவில் வைத்துக்கொண்டு இப்போதைய செயல்களை தகுந்தாற் போல மாற்றுகிறது. இப்படி ஆறு அடுக்கா அமைஞ்ச நியோ கார்டக்ஸ்தான் மனுஷனுக்கு கார்டக்ஸ் என்கிற பெரு மூளையில்  90%.

 

நம்ம சப்ஜக்டுக்கு முக்கியமானது லிம்பிக் சிஸ்டம். அது இந்த பெரு மூளைக்கு அடியில அமைஞ்சிருக்கு. இந்தியாவில இருக்கிற ஸ்டேட்ஸ் மாதிரி இது பலதாகவும் வெவ்வேறு இயல்புடனும் அமைஞ்சிருக்கு. இருந்தாலும் இதில நமக்கு இப்ப முக்கியமானது அமிக்டலா, ஹிப்போகாம்பஸ் என்கிற ரெண்டு உருப்புகள். ஹிப்போகாம்பஸ் எப்போ எங்கே என்ன நடந்தது என்கிற ரீதியிலான நினைவுகளுக்கு முக்கியமானதா இருக்கு. இங்கே இருக்கிற நரம்பு செல்கள்தான் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும்போது புதிய செயல்பாடு புதிய சர்க்யூட் என்று செயலாக இருக்கும்.

 

அமிக்டலா இன்னும் வித்தியாசமானது. நடக்கிற விஷயங்களை அடையாளம் காண்பதிலேயும் நினைவில வெச்சுக்கிறதிலேயும் இதுக்கு பங்கிருக்கு. ஹிப்போகாம்பஸ் மாதிரி நாள், இடம் ந்னு இல்லை. ஆனால் இது நடந்த நிகழ்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் முடிச்சு போட்டு வைச்சிருக்கு. ஒரு கடந்த கால நிகழ்வை நினைவுக்கு கொண்டு வர இது உதவறதோடு, இதுக்கான ஒரு குறியீட்டை உருவாக்கி அத்தோட எந்த உணர்ச்சி தொடர்பானது என்கிறதையும் நினைவுக்கு கொண்டு வரும்.

 

ஏனைய சிக்னலை எல்லாம் புறம் தள்ளி ஒரே விஷயத்தை கருத்தூன்றி கவனிக்கிறதும் (attention) இந்த உருப்பே. வருகிற சிக்னலை இன்னதுன்னு வகைப்படுத்தி அதுக்கு உரித்தான உணர்ச்சிகள் எழுவதிலும் ஹிப்போகாம்பஸ் உடன் இதுக்கு வேலையிருக்கு.

சமூக உறவுக்கும் இது முக்கியமானது. குறிப்பா ஒருவரை நம்பலாம் நம்பாதேன்னு எடை போடுவதில இது முக்கியம். 

 

உணர்ச்சிகளோட தொடர்பு இருக்கறதால இதுவே நாம் சட்டுன்னு ஒரு விஷயத்துக்கு ரியாக்ட் செய்வதில முக்கியமா இருக்கு. ஒரு அச்சுறுத்தலுக்கு எதிர்வினைக்கு இது சாதகமா இருந்தாலும் பல சமயம் கோபம் பயம் ஆகியவற்றை தூண்டி பாதகமாகவும் இருக்கும்!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா! போதும், சப்ஜெக்டை புரிஞ்சுக்க  இவ்ளோ போதும்!



Tthamizth Tthenee

unread,
Oct 13, 2014, 9:17:40 AM10/13/14
to mint...@googlegroups.com

2014-10-13 17:22 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
தலைக்கு முன் பக்கம்  இருக்கிற மூளைதான் மனிதனுக்கு அதிகமா வளர்ந்து இருக்கு! இங்கேதான் மொழியை அறிகிற, உருவாக்குகிற இடங்கள் இருக்கு! இதுக்கு பக்கத்திலேயே கண்களுக்கு மேலே இருக்கிற இடங்கள்தான் சமூக செயல்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் முக்கியமான இடங்கள்

​​
​அதுனாலேதான்  நெத்தியைப் பிடிச்சிண்டு ​ யோசிக்கிறோமா?
Thamizthenee.png

திவாஜி

unread,
Oct 13, 2014, 11:35:45 AM10/13/14
to mint...@googlegroups.com

2014-10-13 18:47 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
​அதுனாலேதான்  நெத்தியைப் பிடிச்சிண்டு ​ யோசிக்கிறோமா?

Oru Arizonan

unread,
Oct 13, 2014, 1:37:09 PM10/13/14
to mint...@googlegroups.com
மூளையையும், அதன் செயல்பாட்டைப்பற்றியும், மிக மிக எளிய தமிழில் எடுத்துரைத்தமைக்கு நன்றி, திவாஜி அவர்களே! (உயரதிருவை விட்டுவிட்டேன், கவனிக்கவும்).
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திவாஜி

unread,
Oct 14, 2014, 2:44:55 AM10/14/14
to mint...@googlegroups.com

2014-10-13 23:07 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
(உயரதிருவை விட்டுவிட்டேன், கவனிக்கவும்).

கவனித்தேன்! வாழிய!

திவாஜி

unread,
Oct 14, 2014, 2:47:18 AM10/14/14
to mint...@googlegroups.com

2014-10-13 17:22 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா! போதும், சப்ஜெக்டை புரிஞ்சுக்க  இவ்ளோ போதும்!

உணர்வு சார் நுண்ணறிவு 5 - கோபம் - 1

அனாடமி போரடிச்சு இருக்குமோன்னு  இருந்தாலும் இன்னும் ஒரு முக்கிய விஷயத்தை பாத்துட்டா அந்த சப்ஜெக்ட் நிஜமாவே முடிஞ்சுடும்.

 

அமிக்டலா உணர்ச்சிகளை தூண்டி விடுதுன்னு பார்த்தோம். இதை கண்ட்ரோல் செய்யறது நியோகார்டக்ஸ். இதுக்கு கொஞ்சம் நேரம் எடுத்தாலும் இதுவே எதிர்வினையை தீர்மானிக்கும். தாலமஸ்லேந்து நரம்புகளோட சிக்னல் கொஞ்சமேதான் அமிக்டலாவுக்கு போகும். பெரும்பாலும் அவை நியோகார்டக்ஸுக்கே போகும். நியோகார்டக்ஸ் அதை ஆராய்ஞ்சு முடிவு எடுக்கும். அது மேலும் சில எண்ணங்களை கிளரியும் விடலாம். இதனால ஒரு சோகமான விஷயம் முதலில உணரப்பட்டு பின்னே அது கோபத்தையும் தூண்டலாம்.

இந்த இடது பக்க நெற்றிப்பகுதிக்கு பின்னே இருக்கிற மூளையின் பகுதி (left pre frontal cortex) தான் இந்த உணர்ச்சிகளுக்கு ஆஃப் ஸ்விட்ச்! இதே மாதிரி வலது பக்கம் இருக்கிற மூளையின் பகுதிதான் பயம், தாக்குதல் போன்ற எதிர்மறை உணர்வுகளுக்கு இருப்பிடம். இதை இடது பக்கம் செக் செய்து உணர்ச்சிகளை கண்ட்ரோல்ல வைக்குது! அதே சமயம் அடங்குடா ந்னு லிம்பிக் சிஸ்டத்துக்கு சிக்னல் அனுப்புது. இந்த நியோகார்டக்ஸ் - லிம்பிக் சிஸ்டம் பாலன்ஸ்தான் நம்மோட உணர்ச்சிகளை தீர்மானிக்குது! அதாவது நம் மனச்சலனங்களை தீர்மானிக்குது.  (இங்கே இது வரை வலது இடதுன்னு சொன்னது எல்லாம் வலது கைப்பழக்கம் உள்ளவங்களுக்கு. இடது கை பழக்கமா இருந்தா நேர் எதிர்.)

 

வேலை செய்வதுக்கான நினைவகம் இந்த ப்ரீ ப்ராண்டல் கார்டக்ஸ்தான். அதனாலத்தான் சில கடுமையான பலமான உணர்ச்சிகள் நம்மை ஒரு வேலையும் செய்ய விடாம பாதிக்குது. ச்சே! நேரா யோசிக்கக்கூட முடியலைப்பா ந்னு சொல்கிறோம்.

 

யார் வேணுமானாலும் கோபப்படலாம். அது சுலபம். ஆனால் சரியான நபர்கிட்ட சரியான அளவுக்கு சரியான நேரத்தில சரியான வழியில கோபப்படுவது…. அது சுலபமில்லை.” – இப்படி சொன்னவர் அரிஸ்டாடில்.

 

நாட்டில கோபப்படாதவங்களே இருக்க மாட்டாங்க. காமத்துக்கு அடுத்ததா உலகெங்கும் பரவி இருக்கிறது கோபம்தான். கோபம் ஒத்தரை தன் நிலையை இழக்கசெய்யுது. மத்தவரோட சரியான உறவு வைத்துக்கொள்ள தடையா இருக்கு. கோபத்தால தன் வேலையை தொலைக்கிறவர்கள் பலர். தனக்கு உதவி செய்கிறவர்களை தொலைக்கிறவர்கள் சிலர். தன் காதலை தொலைக்கிறவர்கள் சிலர். நிறைய பேருக்கு இது தனக்கு ஒரு பிரச்சினையா இருக்கிறது தெரியும். இருந்தாலும் அதை பத்தி ஒண்ணும் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறாங்க. 

 

ஆனால் சிலர் இருக்காங்க. ஏம்பா கோபப்பட்டே ந்னு கேட்டா நானா? கோபமா? கோபப்படவேயில்லையே!என்பார்கள்! மத்தவங்களை கேட்டா அவனா? சரியான சிடு மூஞ்சி. அவன்கிட்டே ஒரு சம்பந்தமும் வெச்சுக்கக்கூடாதுந்னு சொல்லுவாங்க.ஆனா அந்த நபருக்கோ அது பத்தி ஒண்ணுமே தெரியாது! தனக்கு ஏன் நண்பர்களே இல்லைன்னு அவரு குழம்பிகிட்டு இருப்பாரு!

கோபம்ன்னு இல்லை. எல்லா உணர்ச்சிகளும் இப்படித்தான். காமமும் கோபமும் மிக ஆற்றல் வாய்ந்த கட்டுப்படுத்த வேண்டிய உணர்ச்சிகளாக இருக்கிறதால இதை உதாரணத்துக்குச்சொன்னேன்!

 

விதி விலக்கா சில விஷயங்கள் தவிர உணர்ச்சி வசப்பட்டு செய்கிற எந்த செயலும் சரியான விளைவைத் தராது!



shylaja

unread,
Oct 14, 2014, 5:23:52 AM10/14/14
to mintamil
தொடர்ந்து வாசிக்கறேன்.நன்றாக இருக்கிறது. கோபம்  பற்றீய  இந்த பதிவு மிகச்சிறப்பு.சினம்  பற்றீய குறள் பல சிறுவயதில்படித்தபோதே அதை விலக்கிவிடத்தோன்றிவிட்டது
 
 
.நாட்டில கோபப்படாதவங்களே இருக்க மாட்டாங்க//>>> இருக்காங்க திவாஜி!
 
//கோபம் ஒத்தரை தன் நிலையை இழக்கசெய்யுது. மத்தவரோட சரியான உறவு வைத்துக்கொள்ள தடையா இருக்கு. கோபத்தால தன் வேலையை தொலைக்கிறவர்கள் பலர். தனக்கு உதவி செய்கிறவர்களை தொலைக்கிறவர்கள் சிலர். தன் காதலை தொலைக்கிறவர்கள் சிலர். நிறைய பேருக்கு இது தனக்கு ஒரு பிரச்சினையா இருக்கிறது தெரியும். இருந்தாலும் அதை பத்தி ஒண்ணும் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறாங்க/>>
 
 கோபமா  இருக்கறவ்ங்ககூட  பேச நினைக்கிறவங்க நடுங்கவேண்டி இருக்கு! ஆனா கோபம் இருக்குமிடத்தில் குணம் இருக்கும் என்று பழமொழி இருக்கே அது முற்றிலும் உண்மையா?
 
(இடுகைக்கு இடையூறா கேள்விகேட்டேன் என நீங்கள்  கோபிக்கமாட்டீர்கள் அல்லவா?:)
 
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா


இனிய உளவாக இன்னாத கூறல் 
கனி இருப்பக்காய்கவர்ந்தற்று

திவாஜி

unread,
Oct 14, 2014, 7:12:04 AM10/14/14
to mint...@googlegroups.com
2014-10-14 14:53 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
தொடர்ந்து வாசிக்கறேன்.நன்றாக இருக்கிறது. கோபம்  பற்றீய  இந்த பதிவு மிகச்சிறப்பு.

​ஆகா!  நன்றி நன்றி!
 
சினம்  பற்றீய குறள் பல சிறுவயதில்படித்தபோதே அதை விலக்கிவிடத்தோன்றிவிட்டது
 
கொடுத்து வெச்சவங்க!
 
 
.நாட்டில கோபப்படாதவங்களே இருக்க மாட்டாங்க//>>> இருக்காங்க திவாஜி!
சொல்லுங்க! அவங்களுக்கு இப்பவே இங்கிருந்தே நம்ஸ்காரம் பண்ணிக்கிறேன்!
 
 கோபமா  இருக்கறவ்ங்ககூட  பேச நினைக்கிறவங்க நடுங்கவேண்டி இருக்கு! ஆனா கோபம் இருக்குமிடத்தில் குணம் இருக்கும் என்று பழமொழி இருக்கே அது முற்றிலும் உண்மையா?

இதென்ன கேள்வி! எல்லாருக்கும் குணம் எப்பவுமே இருக்கும்தான்! அது நல்ல குணமா கெட்ட குணமா என்கிறது வேற விஷயம்.

 
(இடுகைக்கு இடையூறா கேள்விகேட்டேன் என நீங்கள்  கோபிக்கமாட்டீர்கள் அல்லவா?:)
சேச்சே! நல்லா இருக்குன்னு சொல்கிறவங்ககிட்ட எப்படி கோபம் வரும்? வெல்கம்!

திவாஜி

unread,
Oct 14, 2014, 7:14:23 AM10/14/14
to mint...@googlegroups.com
2014-10-14 14:53 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
கோபமா  இருக்கறவ்ங்ககூட  பேச நினைக்கிறவங்க நடுங்கவேண்டி இருக்கு! ஆனா கோபம் இருக்குமிடத்தில் குணம் இருக்கும் என்று பழமொழி இருக்கே அது முற்றிலும் உண்மையா?

சிலருக்கு கோபம் வருவதன் காரணம் இது இது இப்படித்தான் இருக்கணும்; இதுவே சரி ந்னு ஒரு பலமான எண்ணம் இருப்பதால. எது எப்படி வேணுமானாலும் இருக்கலாம் ந்னு இருக்கறதில்லை. நீங்க சொல்கிற கோபமிருக்கும் இடத்தில் குணம் இதுவா இருக்கலாம்!

PRASATH

unread,
Oct 14, 2014, 7:17:47 AM10/14/14
to மின்தமிழ்
:)))

Tthamizth Tthenee

unread,
Oct 14, 2014, 7:18:17 AM10/14/14
to mint...@googlegroups.com

2014-10-14 16:44 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
எது எப்படி வேணுமானாலும் இருக்கலாம் ந்னு இருக்கறதில்லை.

​அங்கதான்  ப்ரச்சனையே  ஆரம்பிக்குது

டீவீஎஸ் ஸிலே  34  வருஷம்  வேலை செஞ்சேன்

அதோட விளைவு   அது அது அந்த  இடத்திலே  இருக்கணும்

எது எப்பிடி வேணும்னாலும் இருக்கக் கூடாது எனக்கு

கோவம் வராம  என்ன செய்யும்?

நானும் கோவத்தைக் கட்டுப் படுத்தணும்னு தான் பாக்கறேன்

இன்னும் கோவத்தை   ஜெயிக்க முடியலே:-)

PRASATH

unread,
Oct 14, 2014, 7:24:49 AM10/14/14
to மின்தமிழ்
உணர்ச்சி வசப்படாமல் அல்லது ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்னும் உணர்வு வராமல் ஒரு செயலைச் செய்ய முடியுமா ஜி.????

திவாஜி

unread,
Oct 14, 2014, 7:45:14 AM10/14/14
to mint...@googlegroups.com

2014-10-14 16:47 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
இன்னும் கோவத்தை   ஜெயிக்க முடியலே:-)

திவாஜி

unread,
Oct 14, 2014, 7:47:11 AM10/14/14
to mint...@googlegroups.com

2014-10-14 16:54 GMT+05:30 PRASATH <pras...@gmail.com>:
உணர்ச்சி வசப்படாமல் அல்லது ஒரு
​​
செயலைச் செய்ய வேண்டும் என்னும் உணர்வு வராமல் ஒரு செயலைச் செய்ய முடியுமா ஜி.????

புத்தி பூர்வமா செய்கிற செயல்களை உணர்ச்சி வசப்பட்டு செய்வதாக சொல்வதில்லை.
​​செயலைச் செய்ய வேண்டும் என்னும் எண்ணத்தை உணர்வுன்னு சொல்ல முடியுமா?
நீங்க முடியும்ன்னு சொன்னா அது நான் இங்கே சொல்கிற உணர்ச்சி இல்லை!

PRASATH

unread,
Oct 14, 2014, 8:00:50 AM10/14/14
to மின்தமிழ்
விளக்கத்திற்கு நன்றி ஜி...

திவாஜி

unread,
Oct 15, 2014, 4:21:49 AM10/15/14
to mint...@googlegroups.com

2014-10-14 12:16 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
விதி விலக்கா சில விஷயங்கள் தவிர உணர்ச்சி வசப்பட்டு செய்கிற எந்த செயலும் சரியான விளைவைத் தராது!

உணர்வு சார் நுண்ணறிவு 6 - கோபம் 2

இப்படி அடிக்கடி கோபப்படுகிறவங்க நிறைய தடவை ஒரு முடிவு எடுப்பாங்க! நான் இனிமே கோபப்பட மாட்டேன். ஆனாலும் அவர் வேலையில ஈடுபடும் போது நடக்கிற முதல் விஷயமே அவர் எதிர்பார்க்கிறா மாதிரி நடக்காம போகும் போது….

 

தன் கற்பனைப்படி தப்பா நடக்கிற விஷயம் கண்ணில் பட்டவுடனேயே சிக்னல் மூளைக்கு போகும். போன பதிவுல பார்த்தோம் இல்லையா? இது நியோ கார்டக்ஸுக்கு போகு முன் அமிக்டலாவுக்குப்போகும். அது முன்னேயே பதிவு செய்து வைத்திருக்கிற விஷயங்களை ஆராய்ஞ்சு பாத்து இதுக்கு இப்படித்தான் எதிர்வினை இருக்கணும்ன்னு முடிவெடுத்து செயலாக்க ஆரம்பிச்சுடும். நியோ கார்டெக்ஸ் கவனத்துக்கு இது போய் அது என்ன ஆச்சுன்னு பார்க்கறதுக்குள்ள எதிர்வினை துவங்கி இருக்கும்! இந்த நியோ கார்டக்ஸ் முழிச்சிகிட்டு அடடா கோபப்படக்கூடாதுன்னு முடிவு பண்ணோம்மேந்னு யோசிச்சு பார்க்கிறப்ப கோபம் எல்லையை மீறி இருக்கலாம்! இல்லை ஒரு வேளை எல்ல மீறாம இருந்ததுன்னா கோபம் அடக்கப்படலாம்! 

 

அதாவது ரிப்லக்ஸ் சீக்கிரமா வேலை செய்யும். புத்தி கொஞ்சம் தாமதமா வேலைக்கு வரும். ஹும்! மந்த புத்தி என்கிறது இதான் போலிருக்கு.

 

மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறது என்னன்னா இது காலங்காலமா பரிணாம வளர்ச்சில வந்த விஷயம். மிருகங்கள் சட்டுன்னு தன்னை காப்பாத்திக்கொள்ள இப்படி ஒரு ரிப்லக்ஸ் உருவாகி இருக்கு. ஒரு காலகட்டத்திலே உயிரோட இருக்கப்போகிறோமா இல்லை சாகப்போகிறோமா என்பதற்கு இது வெகு முக்கியமான காரணியா இருந்தது. இப்போ நிலமை வெகுவாக மாறிட்டாலும் இது இன்னும் மாறலை. பல்லாயிரக்கணக்கான வருஷங்களோட பரிணாம வளர்ச்சில ஏற்பட்ட மரபணு மாற்றம் இது.

 

ஆனா ஏன் ஒத்தர் போலவே இன்னொருத்தர் இல்லை? இந்த ரிப்லெக்ஸ் எல்லாருக்குமே இருக்கணுமே? ஆனாலும் உன் வீட்டுல எரிகல் விழுந்து எரிஞ்சுபோச்சு ன்னு சொன்னா, ”அப்படியா எரிகல் ஏதும் மிச்சம் இருக்கா, நான் பார்க்கணுமே!” ந்னு சொல்கிறாப்போல சிலரை பார்க்கிறோமே?

 

நம்ம கலாசாரத்துல சொல்லறது என்னன்னா இது வாசனைகள் சம்பந்தப்பட்ட சமாசாரம். வாசனைன்னா? நாத்தத்துக்கு எதிர்பதம்தானே? அது இல்லை.

 

ஒரு வேலை செய்கிறோம். முதலில் பயந்துண்டு கவனமா செய்வோம். அப்படியே செய்யச்செய்ய சுலபமா கவலை இல்லாமல் செய்வோம். இதன் பெயர் சம்ஸ்காரம். இன்னும் பழகப்பட இது இறுகி வாசனை ஆகிறது. இது ஜன்ம ஜன்மமாக நம்முடன் வரும். இதனால்தான் ஒருத்தர் போல ஒருத்தர் இல்லை. ஒரு செயலுக்கு ஒருவர் என்ன எதிர்வினை ஆற்றுவார் என்பது ஒரே மாதிரி இல்லை. அவர் போன ஜன்மங்களில எப்படி எப்படி மாறி கடைசியா இருந்தாரோ அப்படித்தான் இருப்பார். போன ஜன்மத்துல மூக்கு மேல கோபம்ன்னா இப்பவும் அப்படித்தான் இருக்கும். போன ஜன்மத்துல என்னத்தான் எரிச்சலூட்டினாலும் சிரிச்சுகிட்டு இருப்பார்ன்னா இப்பவும் அப்படித்தான் இருப்பார்! இதான் வாசனை. இதுக்கெல்லாம் செயலியான லிம்பிக் சிஸ்டத்துல ஸ்மெல் என்கிற வாசனையை அறிகிற ஆல்பாக்டரி பல்ப் இருக்கறதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொன்னா நம்பணும்!

 

அப்ப என்ன செய்யணும் என்கிறது சிம்பிள்தானே? ரிப்லக்ஸ்ல கோபம் பயம் எல்லாம் வந்துடும் சரி, ஆனா உடனே எதிர்வினையை செய்யாம புத்தியை களத்துக்கு கொண்டுவந்து செய்யணும். அதுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படும் என்கிறதால அந்த அவகாசத்தை கொடுக்கணும்.

 

ஒத்தரோட பையன் ஸ்கூல்ல எப்பப்பாத்தாலும் அடி தடில இறங்கிட்டு இருந்தான்.ஏண்டா ந்னு கேட்டா எதோ ஒரு காரணம் இருக்கவே இருந்தது. அப்பா சொன்னார் இதோ பார்ரா, யாரும் எரிச்சல் மூட்டினா உடனடியா அடிதடில இறங்கிடாதே. பத்து வரைக்கும் எண்ணனும். அப்புறம்தான் எந்த செயலும் செய்யலாம்.”

அடுத்த நாளும் பையன் அடிதடில சட்டையை கிழிச்சுகிட்டு வந்தான்.

ஏண்டா, பத்து வரைக்கும் எண்ணச்சொன்னேன் இல்லையா?”

ஆமாம்பா.”

பின்னே?”

அவன் என்னைவிட சீக்கிரம் எண்ணிட்டான்பா!”



திவாஜி

unread,
Oct 16, 2014, 5:39:26 AM10/16/14
to mint...@googlegroups.com

உணர்வு சார் நுண்ணறிவு - முதல் படி - உன்னை நீ கவனி

இந்த உணர்வு சார் நுண்ணறிவுல முதல்படி நம்மை நாம் அறிவது. இது பெரிய வேதாந்த கருத்தான உன்னை நீ அறிந்து கொண்டால் உனக்கு ஒரு கேடும் இல்லை சமாசாரம் இல்லை. இங்கே நம்மை ந்னு சொல்வது பரம லௌகீகமான நம்மை தான். இங்கே நம்மோட மனதைன்னு பொருள் கொள்ளணும். நாம் கோபமா இருக்கிறப்ப நாம் கோபமா இருக்கிறோம்ன்னு தெரியணும். நாம் மன அழுத்தத்தில இருக்கிறப்ப மன அழுத்தத்துல இருக்கிறோம்ன்னு தெரியணும். சந்தோஷமா இருக்கிறப்ப சந்தோஷமா இருக்கிறோம்ன்னு தெரியணும். அது என்ன பெரிய ப்ரம்ம வித்தையா, இல்லையே?ஆனா கஷ்டம்!

நீ எப்படி இருக்கேன்னு யாரும் கேட்டா கொஞ்சமா உள்ளே கவனிச்சு நான் கோபமா இருக்கேன், வருத்தமா இருக்கேன், மகிழ்ச்சியா இருக்கேன் ந்னு சொல்வது யாருக்குமே சுலபமே! ஆனா இதை யாரும் கேட்டாத்தானே இது நடக்கும்? இல்லைன்னா கோபமோ வருத்தமோ அப்படியே அனுபவிச்சுகிட்டுத்தான் இருப்போம். 

 

யாரும் வந்து நமக்கு ஆறுதல் சொல்லும் போது இதுதானே நடக்கிறது? 

 

வருத்தப்படாதப்பா! நடந்தது நடந்து போச்சு!  அடுத்து ஆக வேண்டியதை பார்ப்போம்ந்னு சொல்லும் போது வருத்தம் முழுக்க மறையலைன்னாலும் கொஞ்சமாவது மட்டுப்படும்!

அதாவது ஒரு உணர்ச்சி நிலையில நாம் இருக்கிறோம்ன்னு புரியும் போது அதை மாற்ற முடியும். 

 

காலையில் இருந்து எரிச்சலுடனே இருக்கிறோம். எல்லாமே தப்பா போகுது. எல்லார் மேலும் எரிஞ்சு விழறோம். ராத்திரி வரைக்கு இது தொடர்ந்து வருது! அடித்தளத்துல நாம் கோபமா இருக்கோம்ன்னு தெரியலை. அதனால எடுக்கிற முடிவுகள் செயல்கள் எல்லாம் சரியில்லாம போகிற வாய்ப்புகள் அதிகம்! கோபமா இருக்கோம்ன்னு தெரிஞ்சு இருந்தா நாம அதை சரி செய்ய ஏதேனும் செஞ்சு இருக்கலாம்! (என்ன என்ன? அது என்ன? :-) அப்புறமா அதுக்கு வரலாம்!)

 

யாரும் கேட்டாத்தான் நாம் எந்த உணர்வில இருக்கோம்ன்னு ஒரு நிலை இல்லாம எப்பவும் அல்லது அடிக்கடி எப்படி இருக்கோம்ன்னு கவனிக்க முடியுமா? முடியும். அதுக்கு பயிற்சி அவசியம்.

 

என் சர்ஜனுக்கு இப்ப 58 வயசு. அவர் மருத்துவ கல்லூரியில படிச்சப்பா அவருக்கு பேண்ட் தைச்ச டெய்லர்தான் இன்னும் பேண்ட் தைக்கிறார். அளவு கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது! ஏன்னா இடுப்பு அளவு அப்படியேத்தான் இருக்கு. மாறவே இல்லை! சில வருஷங்களுக்கு முன்னே இதைப்பத்தி விவாதிச்சோம். அவர் சொன்னது, “இதுல ரெண்டு விஷயங்கள் இருக்கு. ஒண்ணு அளவுக்கு அதிகமா சாப்டு வயித்துல கொழுப்பு சேருவது. உணவு கட்டுப்பாட்டோட இருக்கறதால இது நடக்கலை.இரண்டாவது வயிற்றுப்பகுதி தசைகள் இறுக்கம் (tone) இழக்கிறது. உடல் பயிற்சி குறைக்குறைய இது நடக்கும். அதனால நான் எப்பவும் விழிப்புடன் வயிறை எக்கிப்பிடிச்சு தசைகளை இறுக்கமாக வைக்கிறேன். ”  

 

எப்பவுமா?  

ஆமாம் எப்பவும்.  

அதெப்படி சாத்தியம்?

 

இதுத்யானம் செய்கிறது போலத்தான். ஆரம்பத்துல மனசு கட்டுக்கு அடங்கா ஓடிகிட்டே இருக்கும். எப்போதெல்லாம் மனசு விலகிடுத்துன்னு தெரியுதோ அப்பல்லாம் அதை திருப்பி த்யானத்துக்கு கொண்டு வரோம். அதைப்போலத்தான் இதுவும். தசைகளை இறுக்கிப்பிடிக்க நினைப்பேன். எப்போதெல்லாம் தசைகள் இறுகி இல்லைன்னு தெரியுதோ அப்போதெல்லாம் அதை இறுக்குவேன். நாளடைவில இது ஆட்டோமேடிக்காப்போச்சு!”

இதே மாதிரித்தான் இங்கேயும் செய்யணும். மனதை எப்படி இருக்கன்னு அப்பப்ப கேட்கணும். பாத்துகிட்டே இருக்கணும்.

 

ஏன் சார்? வேற வேலையே எங்களுக்கு கிடையாதா? மனசையே கவனிச்சுகிட்டு இருந்தா வேற என்னத்தான் செய்ய முடியும்?

Tthamizth Tthenee

unread,
Oct 16, 2014, 7:27:13 AM10/16/14
to mint...@googlegroups.com
​ஹும்   வாயைக் கட்டி  வயித்தைக் கட்டி   மனசைக் கட்டி​

எல்லாத்தையும்  கட்டி வெச்சிக்கணும்

கொஞ்சம்   தளர  விட்டா   ப்ரச்சனைதான்


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




திவாஜி

unread,
Oct 16, 2014, 10:03:49 AM10/16/14
to mint...@googlegroups.com

2014-10-16 15:09 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
யாரும் கேட்டாத்தான் நாம் எந்த உணர்வில இருக்கோம்ன்னு ஒரு நிலை இல்லாம எப்பவும் அல்லது அடிக்கடி எப்படி இருக்கோம்ன்னு கவனிக்க முடியுமா? முடியும். அதுக்கு பயிற்சி அவசியம்.

இந்த வரிகள் கீழ் காணும்படி மாற்றப்படுகின்றன!

//வேற
யாரும் கேட்டாத்தான் நாம் எந்த உணர்வில இருக்கோம்ன்னு கவனிக்கிற ஒரு நிலை இல்லாம, எப்பவும் அல்லது அடிக்கடி எப்படி இருக்கோம்ன்னு கவனிக்க முடியுமா? முடியும். அதுக்கு பயிற்சி அவசியம்!//

கவன ஈர்ப்புக்கு நன்றி ப்ரசாத்!


திவாஜி

unread,
Oct 16, 2014, 10:04:59 AM10/16/14
to mint...@googlegroups.com

2014-10-16 16:56 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
​ஹும்   வாயைக் கட்டி  வயித்தைக் கட்டி   மனசைக் கட்டி​

எல்லாத்தையும்  கட்டி வெச்சிக்கணும்

கொஞ்சம்   தளர  விட்டா   ப்ரச்சனைதான்

அதானே! நாம் சொல்றா மாதிரி அதெல்லாம் கேட்கணுமா, இல்லை அதுக சொல்கிறா மாதிரி நாம கேட்கணுமா?
:-)))

திவாஜி

unread,
Oct 17, 2014, 6:21:15 AM10/17/14
to mint...@googlegroups.com

2014-10-16 15:09 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
ஏன் சார்? வேற வேலையே எங்களுக்கு கிடையாதா? மனசையே கவனிச்சுகிட்டு இருந்தா வேற என்னத்தான் செய்ய முடியும்?

உணர்வு சார் நுண்ணறிவு - முதல்படி- நம் உணர்ச்சிகள்

என்னத்தான் செய்ய முடியாது? எல்லாமே செய்யலாம்! தினசரி சர்வ சாதாரணமா செஞ்சுகிட்டு இருக்கோம்.

 

ஒரு வேலையை செஞ்சுகிட்டே நாம் வேற எதையோ நினைச்சுகிட்டு இருக்கோம். வீட்டு வேலை செய்துகிட்டே சாயந்தரம் எந்த சினிமா பார்க்கலாம்ன்னு நினைக்கிறோம். பூஜை பண்ணிகிட்டே என்ன டிபன் இன்னைக்குன்னு நினைச்சுகிட்டு இருக்கோம்.

 

மனசு சாதாரணமாவே மல்டி டாஸ்கிங் செய்ய வல்லது. சில சமயம் நாம் வேணும்ன்னு அதை ஃபோகஸ் செய்து எதையாவது செய்யறோம். இன்னும் கான்சண்ட்ரேட் செய்யறோம். அதாவது மத்ததை எல்லாம் புறம் தள்ளி ஒரு விஷயத்துல மட்டும் கவனம் செலுத்தறோம். இல்லைனா அது ரெண்டு மூணு வேலையை செஞ்சுகிட்டு இருக்கும்.

 

அதனால அப்பப்ப மனசு எப்படி இருக்குன்னு சோதிக்கறது நிஜமா கஷ்டம் இல்லை.


கஷ்டம் எதுன்னா அதை தக்க வைச்சுக்கிறதுதான். செஸ்ல வர குதிரை மாதிரி இடம் திசை மாறிக்கிட்டே இருக்கிறது மனதின் இயல்பு. 

 

ஒரு நாளில பல நேரங்களை இதுக்குன்னு ஒதுக்கி இதை செய்யலாம். எங்கே வேணுமானாலும்; எப்ப வேணுமானாலும். செய்ய சில நொடிகள்தானே ஆகும்? இப்படியே செய்ய செய்ய பழகி தானா நிகழும்.

 

ரைட்! மனசை பார்க்க ஆரம்பிச்சாச்சு. அங்கே எப்படி இருக்கு?  கோபம், சந்தோஷம். ம்ம்ம் ... வருத்தம்…… சாந்தம்…… அப்புறம் அப்புறம்….

அவ்ளோதான்!


நமக்கு உணர்ச்சிகள் பலது இருக்குன்னே தெரியலை.

இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யலாமா? இந்த பட்டியல் ஒரு இடத்துல கிடைச்சது.

1. கோபம்  2. குற்றம். 3 கவலை. 4. வெறுப்பு 5. சலிப்பு 6. விரக்தி 7. குழப்பம் 8. மகிழ்ச்சி 9. ஆனந்தம் 10. சோகம்.   இன்னும் சீற்றம்நிறைவு, பயம், வெட்கம்,வருத்தம், சந்தேகம்,  ஆச்சரியம், சோர்வு, பொறாமை.

இன்னும் யோசிச்சு பார்த்தா இன்னும் அதிகமா கிடைக்க்லாம்.

விக்கியை கேட்டா..


அன்பு - பாசம் - கோபம் - சினம் - ஆனந்தம் - இன்பம், மகிழ்ச்சி - துக்கம் - ஆசை - பொறாமை - வெறுப்பு - விரக்தி - அமைதி - பயம் - கவலை - எதிர்பார்ப்பு - ஏமாற்றம் - ஆச்சரியம் - வெட்கம் - பரிவு, இரக்கம் - காதல் - காமம் - எரிச்சல் - சலிப்பு - குற்றுணர்வு - மனவுளைச்சல் அல்லது மன அழுத்தம் - ஈர்ப்பு - பெருமை - உணர்வின்மை - நம்பிக்கை - மனக்கலக்கம் - தவிப்பு - பற்று - அவநம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை - சோம்பல் - அதிர்ச்சி - மன நிறைவு அல்லது திருப்தி - தனிமை - அவா - வலி - அலட்சியம் - திகில் - பீதி


இதுலேயே டிகிரி வித்தியாசம் வரலாம். உதாரணமா எரிச்சல், கோபம், சீற்றம், மஹா கோபம். இப்படி ஒவ்வொண்ணுத்துக்குமே இருக்கும். இது முக்கியம்! ஏன்னா இதோட பலம் அதிகமா ஆச்சுன்னா அதை மாத்தறது இன்னும் கஷ்டமாகும். அதனால சீற்றத்தை கோபமாகவும், கோபத்தை எரிச்சலாகவும் ஆக்கலாம். அது நல்லது. எவ்வளவுக்கு எவ்வளவு நமக்கு வகைப்படுத்த தெரியுதோ அவ்வளவுக்கு அவ்வளவு சரி செய்யறது சுலபம்.

 

அத்தோட ரெண்டு மூணு உணர்ச்சிகள் கலந்தும் இருக்கலாம். உதாரணமா பயமும் துக்கமும் கலந்து இருக்கலாம். 

 

ஆங்கிலத்துல இன்னும் அதிகமா இருக்காப்போல இருக்கு. அப்படியே கீழே கொடுக்கறேன்! லவ் என்கிறது அன்பு, காமம், தாகம் ந்னு இருக்கலாம். இந்த அன்பே இன்னும் பலதா பிரியலாம். காம எழுச்சி, விருப்பம், காம வெறி, அதிக விருப்பு,மோகம் ந்னு பலதா இருக்கலாம். ஒவ்வொண்ணுத்துக்கும் சட்ல்  நுட்பமான- வித்தியாசம் இருக்கும் அல்லது தீவிரத்தில வித்தியாசம் இருக்கும். இதையும் வகைப்படுத்தி தெரிந்துக்கொள்ள முடிஞ்சா மிகவும் நல்லது. அது மற்றவர்களோட உணர்வுகளைப்பத்தி அறிய முற்படும்போது கொஞ்சம் நல்லது செய்யும். வெறுமே ஒருத்தர் என்கிட்ட கோபப்பட்டார்ன்னு நினைக்காம அவர் என்கிட்ட எரிச்சல் அடைஞ்சார் ந்னு நினைக்கறப்ப அதோட தாக்கம் குறையும். இதனால அந்த உறவை இன்னும் நல்லபடி கையாள முடியும்.

 

 

Primary emotion

Secondary emotion

Tertiary emotions

Love

Affection

Adoration, affection, love, fondness, liking, attraction, caring, tenderness, compassion, sentimentality

Lust

Arousal, desire, lust, passion, infatuation

Longing

Longing

Joy

Cheerfulness

Amusement, bliss, cheerfulness, gaiety, glee, jolliness, joviality, joy, delight, enjoyment, gladness, happiness, jubilation, elation, satisfaction, ecstasy, euphoria

Zest

Enthusiasm, zeal, zest, excitement, thrill, exhilaration

Contentment

Contentment, pleasure

Pride

Pride, triumph

Optimism

Eagerness, hope, optimism

Enthrallment

Enthrallment, rapture

Relief

Relief

Surprise

Surprise

Amazement, surprise, astonishment

Anger

Irritation

Aggravation, irritation, agitation, annoyance, grouchiness, grumpiness

Exasperation

Exasperation, frustration

Rage

Anger, rage, outrage, fury, wrath, hostility, ferocity, bitterness, hate, loathing, scorn, spite, vengefulness, dislike, resentment

Disgust

Disgust, revulsion, contempt

Envy

Envy, jealousy

Torment

Torment

Sadness

Suffering

Agony, suffering, hurt, anguish

Sadness

Depression, despair, hopelessness, gloom, glumness, sadness, unhappiness, grief, sorrow, woe, misery, melancholy

Disappointment

Dismay, disappointment, displeasure

Shame

Guilt, shame, regret, remorse

Neglect

Alienation, isolation, neglect, loneliness, rejection, homesickness, defeat, dejection, insecurity, embarrassment, humiliation, insult

Sympathy

Pity, sympathy

Fear

Horror

Alarm, shock, fear, fright, horror, terror, panic, hysteria, mortification

Nervousness

Anxiety, nervousness, tenseness, uneasiness, apprehension, worry, distress, dread

 



N. Kannan

unread,
Oct 17, 2014, 8:39:56 AM10/17/14
to மின்தமிழ்
சுவாரசியமாக் கொண்டு போகிறீர்கள். அதுவொரு கலைதான். வாழ்த்துகள்.

நா.கண்ணன்

திவாஜி

unread,
Oct 21, 2014, 12:33:04 AM10/21/14
to mint...@googlegroups.com

2014-10-17 18:09 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
சுவாரசியமாக் கொண்டு போகிறீர்கள். அதுவொரு கலைதான். வாழ்த்துகள்.

நா.கண்ணன்

திவாஜி

unread,
Oct 21, 2014, 12:33:51 AM10/21/14
to mint...@googlegroups.com

உணர்வு சார் நுண்ணறிவு - முதல்படி- நம் உணர்ச்சிகள் - 2

அடிப்படை உணர்ச்சிகள்

இரண்டாம்-நிலை உந்திகள்

மூன்றாம்-நிலை உந்திகள்

அன்பு

(1)ஆர்வம் 
(2)
 காமம்
(3)
 ஏக்கம்

(1) வழிபாடு, ஆர்வம், அன்பு, விழைவு,விருப்பம், ஈர்ப்பு, கவனம், வேட்கை, கனிவு, மனப்பாங்கு
(2)
 மனவெழுச்சி , ஆசை, இணைவிழைச்சு என்னும் பாலுணர்வு, பாசம், மையல்
(3)
 ஏக்கம்

மகிழ்ச்சி

(1) பொலிவு
(2)
 உவகை 
(3)
 நம்பிக்கை 
(4)
 பெருமிதம் 
(5)நிறைவுடைமை
(6)
 களிப்பு 
(7)
 சிக்கல்-தீர்தல்

(1) களியாட்டம், இன்பம், உவகை,கொண்டாட்டம், துழனி, உல்லாசம்,சோக்கு, மகிழ்ச்சி, திளைப்பு, நுகர்வு,மனச்செழுமை, பூரிப்பு, கேளிக்கை,பெருமிதம் , நிறைவு, எக்காளம்,உயர்வுள்ளல் 
(2)
 உற்சாகம், முனைப்பார்வம்,திளைப்பார்வம், உளக்கிளர்ச்சி, உடல்-சிலிர்ப்பு, பூரிப்பு 
(3)
 தன்னிறைவு, விருப்பின்பம்
(4)
 வீறு, வெற்றி
(5)
 எதிர்பார்ப்பு, நம்பிக்கை, நன்னல-நோக்கு 
(6)
 துள்ளல், பரவசம் என்னும் கழிபேருவகை 
(7)
 சிக்கல்-தீர்தல்

மருட்கை

மருட்கை

வியப்பு-நிலை, மருட்கை, வியப்பலை

வெகுளி

(1) எரிச்சல்
(2)
 எரிச்சலைத் தூண்டுதல் 
(3)சினமூட்டுதல்
 
(4)
 வெறுப்பு 
(5)
 பொறாமை
(6)புறக்கணித்தல்

(1) அடம்பிடித்தல் , எரிச்சலூட்டுதல் ,பிடிவாதம் ,துன்புறுத்துதல்,,அலைக்களித்தல் ,, கயமைத்தனம் ,
(2)
 தொணதொணப்பு , வெறுப்பூட்டுதல்
(3)
 வெகுளி, சினம் , சினமூட்டுதல், குத்தல்-பேச்சு, கடுஞ்சினம் , புறக்கணித்தல் ,வெறுப்பூட்டுதல் , கசப்பூட்டுதல், வெறுப்பு,தூக்கி-எறிந்து பேசல், திட்டுதல், காறி-உமிழ்தல் , வஞ்சம், விரும்பாமை,தணியாச் சினம்
(4)
 அருவருப்பு ,புரட்சி, எதிர்ப்பு 
(5)
 பொறாமைச்செயல், பொறாமை-உள்ளம் 
(6)
 மாறுபடப் பேசல்

 

துக்கம்

(1) துன்புறுதல் 
(2)
 துயரம்
(3)
 ஏமாறுதல் 
(4)
 இளிவரல்

(1) வேதனை, துன்புறுதல் , காயம் ,உடல்நோவு 
(2)
 பதட்டம், மனக்கசப்பு, நம்பிக்கை-இன்மை , மனமயக்கம், மாழ்குதல், துயரம், மகிழ்வின்மை, கடுந்துயரம் , அழுகை,அவலம் , தொடர்-துயரம் , சலிப்பு
(3)
 அழிவு, ஏமாற்றம், துன்பம் 
(4)
 கயமைத்தனம் , நாணம், ஏமாற்ற-நினைவு, உள்ளம் நய்ந்துபோகும் நைவு

                                                   

போன பதிவில் ஆங்கிலத்தில் இருந்ததை விக்கியில் தமிழாக்கம் செய்திருக்காங்க. சிலருக்கு இது பயனாகலாம்.


அது சரி சார்! மனசை பாத்து அது கோபமா இருக்கு, வருத்தமா இருக்குன்னு தெரிஞ்சு என்ன ஆகப்போறது?



திவாஜி

unread,
Oct 21, 2014, 12:39:07 AM10/21/14
to mint...@googlegroups.com

அது சரி சார்! மனசை பாத்து அது கோபமா இருக்கு, வருத்தமா இருக்குன்னு தெரிஞ்சு என்ன ஆகப்போறது?


பல வருஷங்களுக்கு முன்னே ஸ்வாமி தயானந்தர் நடத்தின ஆங்கர் மேனேஜ்மெண்ட் வொர்க் ஷாப் புக்கு போயிருந்தேன். அது பத்தி பல விஷயங்களை பேசிவிட்டு அதை கையாள அவர் கொடுத்த சில பயிற்சிகளில் ஒன்று மிக எளிது. நிமிர்ந்து உட்கார்ந்து மூச்சை ஆழமா இழுத்து விட்டுவிட்டு ….. மனசை கவனி! அது என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறது? முதலில் எது எதையோ நினைத்துக்கொண்டு இருப்பது தெரியும். தொடர்ந்து கவனிக்க

​,​
அது மெதுவாக
​’​
கொய்யட்
​’​
ஆகிவிடும்! ஆனா
​ ​
விடாத பயிற்சியாலத்தான் சில காலம் மனசை அப்படி
​’​
கொய்யட்
​’​
டா இருக்க வைக்க முடியும்
.

 

ஆமாம்! அது அப்படித்தான் இருக்கு. 

 எளிதா அமைதியாகிடும்! பிரச்சினையே வெகு சீக்கிரம் நம்மை அறியாமலே வேற ஏதோ எண்ணம் கிளைத்து வளரும்! நம்மாலே இதை அப்படியே நிறுத்த முடியாது. மனசு கொஞ்ச கொஞ்சமா நின்னுடும்- அப்படி சொன்னேன் இல்லையா? இப்ப ¨அட! மனசு நின்னுடுச்சு¨ன்னு ஒரு எண்ணம் வரும்! 


நம்மையே அறியாம இன்னொரு எண்ணம் கிளர்ந்து மனசை ஆக்கிரமிச்சுடும்! இல்லை, எந்த எண்ணத்தை பாத்தோமோ அதை தொடர்ந்தே இன்னொன்னு வந்துடும். வேடிக்கை பாக்கிறதே இன்னொரு எண்ணத்தை தோற்றுவிக்கும். அதான் வாசனைகளோட சக்தி! விலகி நின்னு நெடு நேரம் மனசை பாக்கிறதை ரொம்ப நாள் பயிற்சிக்கு அப்புறம் செய்ய முடியுமோ என்னவோ!
 

 

கவனிப்பு என்கிறது புத்தி ரூபமா செய்கிற செயல். அதனால அது உடனடியா ஒரு ஆக்ஷன் எடுக்கவும் முடியும். 

​ “​
சும்மா இரு
​”​
ந்னு அதட்ட முடியும்
.
​ “
 இப்போதைக்கு ஒண்ணும் செய்யாதே
​”​
ந்னு அறிவுரை சொல்ல முடியும்
. இல்லை வேற எந்த வழியை வேணுமானாலும் காட்ட முடியும். இங்கே முக்கியமான விஷயம் அதுக்குப்பின்னே நாம் செயல் படறது புத்தி பூர்வமா என்கிறதுதான். நம் புத்திக்கு எட்டின வரை சிறப்பா செயல்பட ஒரு வழி கிடைக்கும்.
​ ‘
 புத்திக்கு எட்டின
​’​
என்பதை கவனிங்க
! நம்மை விட புத்திசாலிகள் இன்னும் சில சிறப்பான வழி வைச்சிருக்கக்கூடும். ஒரு வேளை நமக்கு சரியான வழி தெரியலைன்னாலும் அல்லது அதில கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் உடனடி எதிர்வினை தேவையில்லாத சமயங்களில மத்தவங்களை கலந்து ஆலோசிப்பது நல்லது.

 

அப்ப மனசை புத்தியால கவனிக்கணும்? 

 

ஆமாம், ஆனா இரண்டுமே ஒரே விஷயத்தோட வெவ்வேறு வடிவங்கள்தான்.

​ ​
அப்படித்தான் சங்கரர் சொல்கிறார். பல லேயர்கள் இருக்கிற இந்த மனசால - அதுல ஒரு லேயரால சலனப்படுகிற லேயரை கவனிக்கறோம். சலனம் இல்லாத இந்த லேயர் சலனப்படுகிற லேயரையும் சமன் செய்துவிடும்.

 

நம் மனசை எப்படி இருக்குன்னு கவனிக்கிறது போலவே மத்தவங்க மனசையும் கவனிக்கப்பார்க்கணும். இது சுலபமில்லைதான். நம் மனசு நம்மோடது; அதை பார்த்துகேட்டு தெரிஞ்சுக்கலாம். மத்தவங்க மனசுல என்ன இருக்குன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?




Nagarajan Vadivel

unread,
Oct 21, 2014, 12:48:51 AM10/21/14
to மின்தமிழ்
ஞாயிற்றுக் கிழமை என் எம்.பெ.ஏ வகுப்பில் தலைமைப் பண்பு பற்றிய பொழிவில் உங்களின் உணர்வுசார் நுண்ணறிவு (நேரடி மொழிபெயப்பு முழி பெயர்க்கிறது) பற்றிக் குறிப்பிட்டேன்.  ஒரு துடுக்கு மாணவி வெடுக்கென்று ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாத இரணடுக்கும் ஏன் முடிச்சுப்போட்டு நோகடிக்கிறீர்கள் என்று கேட்டார்.  எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

ஒரு சமாளிப்புக்காக முரண்பாடுடைய இரண்டு தனித் தனியாக முரண்டு பிடித்தாலும் இரண்டற இணையும்போது ஒரு நன்மை விளைவிக்கும் புதியதை உருவாக்கலாமே.  அகல் விளக்கில் எண்ணெயும் திரியௌம் நெருப்பும் ஒன்றுக்கொன்று முரன்பட்டதுதானே.  அது இணையும்போது இருளகற்றும் முற்றும்புதிதான ஒளியைத்தருவதில்லையா.  அதுபோல்தான் இதுவும் என்றேன்

சிலர் சமாளிக்கத் தெரிந்தவர்கள் சரடுவிடுகிறார்கள் என்று அந்த மாணவி முணுமுணுப்பதுபோல் தொன்றவே நான் உணர்வுசால் நுண்ணறிவுபற்றி எழுதும் அறிஞர்களிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்துள்ளேன்

காப்பாத்துங்கய்யா காப்பாத்துங்க

இனா பனா அனா

--

திவாஜி

unread,
Oct 21, 2014, 1:01:56 AM10/21/14
to mint...@googlegroups.com

2014-10-21 10:18 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
காப்பாத்துங்கய்யா காப்பாத்துங்க

​ஐயா இரண்டாம் பதிவிலேயே இப்படி எழுதி இருக்கிறேன்...

உணர்வு சார் நுண்ணறிவு - 2 சூடான ஐஸ்க்ரீம்!

 

Emotional intelligence ன்னாலே ஒரு சந்தேகம் வரலாம். அதென்னது கிறுக்குத்தனமா இருக்கு? எமோஷன் இருக்கற இடத்துல இண்டெலிஜன்ஸ் எப்படி இருக்கும்? அதாவது மனசும் அறிவும் எதிரானது இல்லையா? மனசுல உணர்ச்சிகள் இருக்கிறப்ப அறிவு சரியா வேலை செய்யாது. அறிவு வேலை செய்கிற இடத்துல உணர்ச்சிகளுக்கு வேலை இல்லை.சூடான ஐஸ்க்ரீம் என்கிறது போல இருக்கு Emotional intelligence ந்னு சொல்கிறது!

 

அப்படி இல்லை. இது உணர்ச்சிகளை புரிந்து கொள்கிறதான அறிவு. எமோஷன்ஸ் பத்திய இண்டெலிஜன்ஸ். அறிவும் மனசும் ஒரே விஷயம்தான். மனசு சலனமாகிறது.அறிவு நிலையானது. ஸ்திரமானது. மனதை புரிந்து கொள்வது அதற்கான சரிப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க உதவும்....


திவாஜி

unread,
Oct 23, 2014, 7:27:09 AM10/23/14
to mint...@googlegroups.com

2014-10-21 10:08 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
நம் மனசை எப்படி இருக்குன்னு கவனிக்கிறது போலவே மத்தவங்க மனசையும் கவனிக்கப்பார்க்கணும். இது சுலபமில்லைதான். நம் மனசு நம்மோடது; அதை பார்த்துகேட்டு தெரிஞ்சுக்கலாம். மத்தவங்க மனசுல என்ன இருக்குன்னு எப்படி தெரிஞ்சுக்கறது?

மத்தவங்க மனசு....

ம்ம்ம்ம்..... அப்படியே என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியாதுதான். ஆனா அதுல இருக்கிற உணர்ச்சிகளை கொஞ்சமாவது தெரிஞ்சுக்க முடியும்.

பிறக்கிறப்ப எல்லாருக்கும் இந்த உணர்வுகளை உணருகிற ஆற்றல் இருக்காப்போல இருக்கு. வயசாக ஆகத்தான் இது காணாப்போயிடும் போல இருக்கு!

 

ஒரு ஒன்பது மாச குழந்தைக்குதான்ன்னு ஒண்ணுமே கிடையாது. இன்னொரு குழந்தை அடிபடறதை பாத்தா தானும் அழும்; அல்லது அப்செட் ஆகும்! ஒரு வயசுல அஹங்காரம் கொஞ்சம் முளை விட்டு இருக்கும். ஆனாலும் அது மற்ற குழந்தைகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும்.

இந்த மாதிரி குழந்தைகள் நாலஞ்சு இருந்தா அதுகளை பார்க்கிறதே தமாஷா இருக்கும். எல்லாமே ஏக காலத்துல அழும்; அல்லது சிரிக்கும்! அவை எல்லாம் உணர்வு பூர்வமா ஒண்ணாகறதாலே இப்படி! பின்னால அகங்காரம் அதிகமாகி திடப்பட மற்றவர் உணர்வுகளை உணருவதை விட்டுவிடறோம்.

குழந்தைகளுக்கு இந்த உணர்ச்சிகளை கிரஹிக்கிற சக்தி இருக்கறதாலத்தான் வீட்டில் நடக்கிற எந்த யுத்தமும் குழந்தைகளை பாதிக்காம விடாது! நாம்தான் நம் சண்டை எல்லாம் யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சு கொண்டு இருக்கிறோம். அம்மா அப்பா நடுவில இருக்கிற சண்டை மௌன யுத்தமா இருந்தாக்கூட அதை குழந்தைகள் உணருவாங்க. அது அவங்களை பாதிக்கும்!

பல வருஷங்களுக்கு முன்னே ஒரு சைல்ட் சைகாலஜிஸ்டை சந்திச்சேன். அவங்க பெற்றோர் குழந்தைகளோட பிரச்சினைன்னு சொல்லிகிட்டு வரவங்ககிட்ட மணிக்கணக்கா அவங்களைப்பத்தியே விசாரிப்பாங்க. பின்னால் கேட்டப்ப அவங்க சொன்னது: குழந்தைகளுக்குன்னு பிரச்சினைகள் இல்லே. எல்லாம் அப்பா அம்மா நடுவில இருக்கிற பிரச்சினைகளோட பிரதிபலிப்புதான்!

சிலர் இருக்கிற உணர்ச்சியை அப்படியே முகத்தில காட்டுவாங்க. அப்படி இருந்தா உடனே தெரிஞ்சுடும். சிலர் என்ன நடந்தாலும் ஒரு உணர்ச்சியையும் காட்டமாட்டாங்க. அதுக்காக அவங்களுக்கு உணர்ச்சி இல்லைன்னு அர்த்தம் இல்லை. வெளியே காட்டறதில்லை; அவ்ளோதான்.

பெரும்பாலான மக்கள் இந்த ரெண்டு கோடிகளுக்கு இடையில இருக்காங்க.ஒவ்வொருத்தர் ஒவ்வொரு வகை! ஒருத்தர் உணர்ச்சியை சரியா புரிஞ்சுக்கறது உணர்வு சார் நுண்ணறிவோட அடுத்த கட்டம். மற்றவங்களோட உறவாடுறதுல இது ரொம்ப முக்கியம்.

ஒருத்தர் என்ன பேசறார் என்கிறது வெளிப்படையா அவரோட மனசை பிரதிபலிக்கலாம். ஆனால் தன் உணர்ச்சியை காட்டறதுல அது 7 % தான். மீதி 93%

​ ​
உடல் மொழியாலேயும் சொல்லற்ற குறிப்புகளாலும்தான் கடத்தப்படுதுன்னு சிலர் சொல்கிறாங்க.. இன்னும் சிலர் முகத்துக்கு முகம் கொடுத்து பேசும்போது இது 35% - 65% என்கிறார்கள். எப்படி இருந்தாலும் பேச்சில்லாத பாகம் ரொம்பவே பெரிசு என்பதை பாருங்க.

நாலு வயசு குழந்தைக்கு அப்பாதான் ஹீரோ. அப்பா எங்காவது நின்னுகிட்டு இன்னொருத்தரோட பேசிகிட்டு இருக்கிறப்ப பக்கத்தில இருக்கிற குழந்தை தானும் அதே போல நிக்கும். அவர் நிக்கிற விதத்தை மாத்தி வேற மாதிரி நின்னா தானும் அதே மாதிரி நிக்கும். அவர் வலது காலை பின்னே ஒரு அடி நகர்த்தினா தானும் நகர்த்தும்.

​ ​
இப்படி ஒத்தரை போலவே செய்கிறவங்க அவரோட மனநிலையில தானும் இருக்க நினைக்கிறவங்கநாம் ஒத்தர்கிட்ட பேசறப்ப அவங்க இந்த மாதிரி நடந்துகிட்டா நம்மை புரிஞ்சுக்கிறாங்கன்னு அர்த்தம்! அதே போல ஒத்தர்கிட்ட நாம் இப்படி நடந்துகிட்டா சீக்கிரமே அவங்க நம்மோட ஒத்துப்போயிடுவாங்க!

சாதாரணமா ஒத்தர் நம் கண்களை சந்திச்சு தயக்கமில்லாம பேசினா உண்மை சொல்கிறாங்கன்னு அர்த்தம். நம்கண்களை தவிர்த்தா அனேகமா பொய்யாத்தான் இருக்கும். ஆனாலும் பொய் சொல்கிறதுல தேர்ந்த ஆசாமிக்கு இது பொருந்தாது!

​ ​
அவனுக்கு எப்படி நடிக்கணும்ன்னு தெரியும்!

 தலையை மேலும் கீழும் ஆட்டினா ஆமாம் போடறான்னு சொல்வாங்க.

​ ​
சீனாக்காரன்கிட்ட முடியாதுன்னு சொல்லறது கஷ்டமாம்அவங்க பேசறப்ப இப்படி தலையை மேல கீழ ஆட்டிகிட்டு பேசுவாங்களாம்!  

பேசுறப்ப தூக்கம் வராமலே கொட்டாவி விடறதும் பேச்சை மாத்தறதும் போர் அடிக்கறதுன்னு சொல்லாம சொல்லுது இல்லையா?

பொதுவாக இல்லாம சிலருக்கே உரித்தான சில விஷயங்களும் இருக்கும்.சீட்டாட்டத்துல முகத்தில ஒரு உணர்ச்சியும் காட்டாத நபர் ரொம்ப நல்ல கார்ட் வந்து இருந்தா மூக்கை சொரியலாம்! அப்படி நடக்கும்போது அவரைப்பத்தி நல்லா தெரிஞ்சவங்க பேசாம ஆட்டத்தை விட்டுட்டு போயிடுவாங்க!

இதே போல கைகளை ஆட்டுவது, சுட்டிக்காட்டுவது, தொடுவது, உடம்பை தளர்த்திவிடுவது எல்லாம் ஒரு அர்த்தம் கொடுக்கும்.

நடிகர்கள் இதை எல்லாம் நல்லா புரிஞ்சுகிட்டு தன் நடிப்பில கொண்டு வந்தா சிறந்த நடிகரா பரிமளிப்பாங்க. மக்கள்  அடாடா! என்ன நடிப்பா! நடிப்பாவே தோணலை.ரொம்ப இயல்பா நடிச்சு இருக்காரு ந்னு சொல்வாங்க!

இதைப்போல நிறையவே பார்த்துக்கொண்டு போகலாம். ஆனால் இப்படி முடிவுகளுக்கு வருவதுல கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருக்கணும். நாம் பேசறப்ப தன் மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கிற ஆசாமி நாம் சொல்வதுக்கு உடன்பாடு இல்லைன்னும் காட்டலாம். அல்லது அவருக்கு குளிராவும் இருக்கலாம்! நம் கண்களை சந்திக்க மறுக்கிற குழந்தை பொய் சொல்லவும் சொல்லலாம் அல்லது அதன் கலாசாரத்துல கண்களை நேருக்கு நேர் பார்க்கிறது அவமதிப்புன்னு சொல்லிக்கொடுத்து இருக்கலாம். அதனால ஒரே ஒரு சைகை, நடத்தையை வைத்து முடிவு எடுக்கக்கூடாது.எல்லா சைகைகள், நடத்தைகளையும் பார்த்தே இப்படி இருக்கலாம்ன்னு முடிவு எடுக்கணும். எல்லாத்துக்கும் கால தேச வர்த்தமானத்தை பார்த்து நடந்துக்கணும்!



N. Kannan

unread,
Oct 23, 2014, 11:26:32 PM10/23/14
to mint...@googlegroups.com

சார்! ஜோராப் போறது! என்னை இது போன்ற தலைப்பில் முன்பு எழுதச் சொன்னார்கள். உங்கள் மாதிரி சொல்ல வருமா தெரியலை. அருமை.

நா.கண்ணன்

(வாலை வெட்ட முடியலை, மன்னிக்கவும்! Damn Samsung!)

--

திவாஜி

unread,
Oct 24, 2014, 2:12:00 AM10/24/14
to mint...@googlegroups.com
2014-10-24 8:56 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:

சார்! ஜோராப் போறது! என்னை இது போன்ற தலைப்பில் முன்பு எழுதச் சொன்னார்கள். உங்கள் மாதிரி சொல்ல வருமா தெரியலை. அருமை.

வரும் வரும்! வராம என்ன? உங்களுக்கு நேரமில்லை!​
 

நா.கண்ணன்

(வாலை வெட்ட முடியலை, மன்னிக்கவும்! Damn Samsung!)

​ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! ஓ இப்படி ஒரு விஷயம் இருக்கா?​
 



திவாஜி

unread,
Oct 24, 2014, 2:20:03 AM10/24/14
to mint...@googlegroups.com

2014-10-23 16:56 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
எல்லாத்துக்கும் கால தேச வர்த்தமானத்தை பார்த்து நடந்துக்கணும்!

 கொஞ்ச காலமாக நாடு கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுப்போய்க்கொண்டு இருக்குஎன்கிறது காலம் காலமாக கேள்விப்படும் விஷயம்தான்! புகார் அதேதான். டிகிரிதான் வேறயா இருக்கு!  

 

உணர்ச்சிகளின் போராட்டம், திறமையின்மை,  நம்பிக்கை இழந்த நிலை, மூர்க்கத்தனம், கவனக்குறைவு, எல்லாம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது.

 

என்ன செய்தால் நம் குழந்தைகள் நம்மைவிட நல்லா  இருப்பாங்க? சுய கட்டுப்பாடு, உற்சாகம். விடா முயற்சி, சுய ஊக்கம்   இதையெல்லாம்  வளர்க்கணும். பின்னால அவர்களோட மரபணுக்கள் / விதி என்ன விதிச்சு இருக்கோ, அந்த சூழலில் அவர்கள் மேலும் வளர இன்னும் நல்ல வாய்ப்பு இருக்கும்.  

 

நன்னடத்தை இருக்கிறவரோட வாழ்க்கையில எப்பவும்  அடிப்படையான உணர்ச்சிகள் அவரோட மேலாளுமையில் இருக்கு.  ஒருவருடையஇம்பல்ஸ் என்கிற உத்வேகம் இந்த அடிப்படை உணர்வுகள் செயலாகும் வழி. சாதாரணமா இவை மலினமானவை. சுயநல, காம, கோபங்களால் ஆனவை. இந்த உணர்வுகள் எப்போதுமே பீரிட்டு எழ காத்துக்கிட்டு இருக்கும். சுய கட்டுப்பாட்டால் உத்வேகம் மட்டுபடுத்தப் படவில்லையானா நன்னடத்தை இராது. இந்த உத்வேகத்தை மட்டுப்படுத்தறது எது? அது ஒருவரின் மன உறுதியும் குணங்களும். வைதான் இவர் இப்படிப்பட்டவர் ந்னு வரையறுக்குது. 

 

அதே போல ஒருவரின் பொதுநலப்பண்பு, அவர் மற்றவரை புரிந்து உணர்வதில் இருக்கிறது. இதிலிருந்துதான் மனிதாபிமானம் எழுகிறது.  

தற்காலத்தின் கட்டாய தேவை என்று சிலது இருக்குமானால் அவை இந்த சுய கட்டுப்பாடும் மனிதாபிமானமும்தான்.

 

இந்த மூளையின் பாகங்களின் ஊடாடலை புரிந்து கொள்வது ஏன் அவசியம்? இதுதான் நமக்கு சிலதை புரியவைக்குது. எப்படி நாம் நம் மகத்தான நோக்கங்களையும் தாண்டி உணர்ச்சிகளின் ஆட்டத்துக்கு அடி பணிந்து விடுகிறோம் என்பதை.  நம்மை ஆட்டிவிக்கும் இந்த உத்வேகங்களை எப்படி கையாளலாம் என்பதையும் கூட காட்டுவிக்கும்.

 

இப்பல்லாம் நாம் ஜீன்ஸ் படித்தான் இருக்கோம்ன்னு பரவலா பேசப்படுது இல்லையா? ஆமாம்,  நாம் பெற்றோர்கிட்ட இருந்து பெற்ற பாரம்பரியம்தான்  நம் மனப்போக்கை நிர்ணயிக்கும் உணர்ச்சிகளின் கால கட்டங்களை அமைக்குது. ஆனால் இதுவே விதியாகி விடாது. ஏன்னா  நல்ல காலமாக இந்த நரம்புப் பின்னல் போக்கெல்லாம் மாற்றி அமைக்கப்படக்கூடியன. குழந்தை/ பால பருவங்களில் இவை இன்னும் நெகிழ்வானவை. அதனால் முயற்சி எடுத்தால் அவற்றை சீக்கிரமே நெறிப்படுத்தலாம். இந்த காலகட்டத்தில் நிகழும் மாற்றங்களே, பின்னால் வயது முதிர்ந்த நபராக செயல்படும் காலத்தில் இருக்கும் உணர்வு வலிமைக்கு அடித்தளமாக இருக்கும்.

 

உலகளாவிய அளவில் சிறுவர்களும் சிறுமியர்களும் இப்போது மேலும் மேலும் முந்தைய தலைமுறையை விட அதிகமாக உணர்வுகளை கையாள முடியலைன்னு சொல்லப்படுது. ஆமாம், ஆராய்ச்சிகள் அப்படித்தான் சொல்வதாக சொல்கிறாங்க! கட்டற்ற உத்வேகம், கவலை, பகைமை, உணர்வு, தனிமை, மனத்தளர்வு,கோபம், யாருக்கும் எதற்கும் கட்டுப்படாமை இவற்றோட அவங்க கஷ்டப்படுகிறாங்கன்னு தெரியுது.

 

இதற்காக உணர்வுகள் ஒட்டு மொத்தமாக கெட்டவை என்று ஒன்றுமில்லை.


திவாஜி

unread,
Oct 25, 2014, 4:13:16 AM10/25/14
to mint...@googlegroups.com

2014-10-24 11:49 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
இதற்காக உணர்வுகள் ஒட்டு மொத்தமாக கெட்டவை என்று ஒன்றுமில்லை.

 

உணர்வுகள் ஒட்டு மொத்தமாக கெட்டவையில்லை....

இதற்காக உணர்வுகள் ஒட்டு மொத்தமாக கெட்டவை என்று ஒன்றுமில்லை. உணர்வுகள் கால தேச வர்த்தமானத்துக்கு பொருத்தமாக இல்லாமல் இருப்பதுதான் பிரச்சினை. உணர்வுகள் தான் நம்மை சில கடினமான காலகட்டங்களில் வழி நடத்துகின்றன. இந்த கால கட்டங்களில் மூளையால் ஆகக்கூடியது ஏதுமில்லை. அது வெறும் பாசிபிலிடீஸ் -சாத்தியக்கூறுகளைத்தான் காட்டும். என்ன செய்ய வேண்டும் என்பது நம் கலாசாரத்தாலும் மனதாலும்தான் நிர்ணயிக்கப்படுகிறது.

சில முக்கிய விஷயங்களை புத்திக்கு கொடுக்காமல் உணர்வு தானே முடிவெடுக்க தூண்டும். ஆபத்து, ஒரு துன்பமான இழப்பு, பல தடைகளை தாண்டி ஒரு இலக்கை அடைய செய்யும் முயற்சி, ஒருவருடன் இருக்கக்கூடிய உறவு, குடும்பத்தை நடத்திப்போவது…. இது போன்ற சில விஷயங்களில் மனசோ அல்லது உள்ளுணர்வு என்கிற இன்ஸ்டிங்ட்டோ முடிவு எடுக்கணும்.

 

உணர்வுகள் இல்லாம பல அரிய காரியங்களை செய்ய முடியாது. புத்தி ஒரு காரியத்தை முடியாது, விட்டுடலாம்ன்னு சொல்கிறப்போ உணர்வுகளே ஒருவரைத் தூண்டி அவற்றை சாதிக்க வைக்கும்! ஒரு அநியாயம் கண் முன்னே நடக்கிறப்ப அதை தடுக்க முனைவது உணர்ச்சியால் தூண்டப்பட்டே. ஒரு விபத்து நடந்தால் இருக்கிற வேலையை ஒத்திப்போட்டு உடனடியாக உதவப்போவது உணர்ச்சியால் தூண்டப்பட்டுதான். உதவப்போகிறாங்களா இல்லை எனக்கென்ன ந்னு தான் பாட்டுக்கு தன் வழியில் போகிறாங்களா என்பதுதான் ஒரு வட்டார மக்களின் கலாசாரத்தை காட்டுது.

 

நாமோ சாதாரணமாக புத்திசாலித்தனத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனா எவ்வளவு சமூக கட்டுப்பாடுகள் இருந்தாலும் திருப்பித்திருப்பி உணர்ச்சிதான் ஜெயிக்குது!

 

ஆழமாகவும் பலமாகவும் இருக்கும் உணர்ச்சிகள் இந்த புத்தியை தாண்டிச்செல்கின்றன. வழக்கமா புத்தியும், உணர்வு மயமான மனதும் ஒன்றை ஒன்று அனுசரிச்சுப்போகின்றன. புத்தியின் செயல்களை உணர்வுகள் ஆராய்ஞ்சு, அதற்கு விமர்சனமும் தருகின்றன. உன்னால இந்த ரௌடியோட சண்டை போட முடியாதுதான்; இருந்தாலும் இதைக்கூட தட்டி கேக்க துணிச்சல் இல்லைன்னா எதுக்குடா வாழ்கை?” ந்னு கடிஞ்சுக்கும்!

புத்தி உணர்வுகளை செம்மைப்படுத்துது. சில சமயம் கூடவே கூடாது என்று வீட்டோ கூட போட்டுவிடும்! “இவன் கம்பத்துல மின்சாரம் தாக்கி செயலிழந்து நிக்கறான். முட்டாள்தனமா இவனை நீ தொட்டா நீயும் மின்சாரத்தால தாக்கப்படுவே. ரெண்டு பேரும் பாதிக்கப்படுவீங்க! வேற வழியை யோசி!” என்கிற ரீதியில இவை அமையும் இல்லையா? இவற்றுக்கான நரம்புப்பின்னல்கள் தனித்தனியாக, அதே சமயம் பிணைந்தும் இருக்கின்றன!

 

எல்லா உணர்ச்சிகளும் கெட்டவை ந்னு இல்லே. சோகத்துக்குக் கூட ஒரு வேலை இருக்கு. நெருங்கிய ஒத்தர் இறந்து போயிட்டார்ன்னா துக்கம் மனசை வேற எதையும் கவனிக்காம செஞ்சு இழப்பு மேலே கவனத்தை கொண்டு வந்து இனி எப்படி இவர் இல்லாம இருப்போம்ன்னு வழி தேட வைக்கும். இந்த மாதிரி சோகம் இருக்கலாமே ஒழிய பெரிய டிப்ரஷனுக்கே போயிடக் கூடாது. அழுகை உணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாக இருக்கலாம். துக்கம் மேலே மேலே வளர்ந்துவிடாம தடுக்கும். ஆனால் அதுவே துக்கத்தை மேலும் வளரச்செய்யவும் செய்யலாம். அதுதான் பிரச்சினை!

 

சரி, இந்த உணர்ச்சிகளை கையாளுவது எப்படி?


திவாஜி

unread,
Oct 27, 2014, 5:59:05 AM10/27/14
to mint...@googlegroups.com

2014-10-25 13:42 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
சரி, இந்த உணர்ச்சிகளை கையாளுவது எப்படி?

சரி, இந்த உணர்ச்சிகளை கையாளுவது எப்படி?

இதை கற்பனை பண்ணிப்பாருங்க!

மிஸ்டர் குமார் ஒரு கம்பெனில பாஸ்! ஒரு நாள் ஆபீஸுக்கு வராரு. முகத்தை பாத்தாலே நாய்கள் ஜாக்கிரதை போர்டு நினைவுக்கு வருது! அவர் அவரோட உணர்வுகளைப்பத்தி ஒரு ஐடியாவும் இல்லாம இருக்காரு. அதனால அவரோட உணர்ச்சிகள் கட்டுப்பாட்டுல இல்லை.

அவரோட செக்ரடரி வழக்கம் போல காபி கொண்டு வந்து வைக்கிறாங்க. 

 

உங்க காபி சார்!

ஹும்!

ஏதும் பிரச்சினை சார்?

ஒண்ணுமில்ல. கல்கத்தா கம்பனி சம்பந்தமான பைலை கொண்டு வாங்க!

 

செக்ரடரிக்கு ஒரே ஷாக். இந்த மாதிரி பாஸ் தன்கிட்ட பேசினதே இல்லையே! எதோ பெரிய தப்பு பண்ணிட்டோம் போலிருக்கே! அவங்களுக்கு அன்னைக்கு மீதி நாள் முழுக்க உருப்படியா ஒரு காரியமும் ஓடலை! அவங்க சக பணியாளர்கள் மேலே எரிஞ்சு விழுந்து அவங்களும் அவங்க கீழே வேலை செய்யறவங்களை திட்டுக்கொண்டு மொத்தத்துல ஆபீஸே அன்னைக்கு சரியா நடக்கலை.

 

முதல் கோணல் முற்றும் கோணல் என்கிறது போல காலை குமார் எழுந்தப்பவே பிரச்சினை. தண்ணி டாங்க் முழுக்க காலி. மோட்டார் போட்டு தண்ணி ஏத்திவிட்டு பாத்தா கீஸர் வேலை செய்யலை. பச்சைத்தண்ணில குளிச்சு வந்து தன் பேவரைட் க்ரே ஸ்யூட் போடுக்கலாம்ன்னு பாத்தா அது இன்னும் வாஷ் போய் வரலை. காலை டிபன்ல உப்பு திட்டமா இல்லை. காபி ஆறிப்போயிடுத்து. பையன் பரிட்சையில பெய்ல் ந்னு மனைவி சொன்னாங்க. பெரிய சண்டையா ஆயிடுச்சு. ஆபீஸ் கிளம்பி வரும்போது ஒரு தறுதலை பல்சர் பைக்ல வெகு வேகமா குறுக்கே வந்து வித்தை காட்டி ஏறக்குறைய ஹார்ட் அட்டாக் வரவெச்சுட்டான்! அப்புறம் அரசியல்வாதிக்காக ட்ராபிக்கை நிறுத்தி வெச்சுட்டாங்க. ஆபீஸ் வந்து சேந்தா ரிசப்ஷன்ல யாருமில்ல.  இப்படித்தான் சில நாட்கள் எதை எடுத்தாலும் தப்பா போயிட்டே இருக்கும்!

 

ஆபீஸுக்கு ஒரு வழியா வந்து சேர்ந்தப்பவும் அவர் மோசமான மூட்லதான் இருந்தார்! என்ன பிரச்சினைன்னே தெரியாம நாள் முழுக்க கோபத்தில இருந்ததுல இன்னும் அதிகமா தவறுகள்தான் நடந்தன! 

 

குமார் ஒரு வேளை புத்தியால நடந்த விஷயங்களை ஆராய்ஞ்சு இருந்தா….  பல விஷயங்கள் புரிஞ்சு இருக்கும். பையன் பரிட்சையில் ஏன் பெய்ல்? அவன்கிட்ட பேசி என்ன பிரச்சினைன்னு கண்டு பிடிக்கணும். சகவாசம் சரியில்லையா, ஸ்கூல்ல சொல்லித்தரது சரியில்லையா, ஸ்கூல் மாத்தணுமா, கூடுதலா கோச்சிங் ஏற்பாடு செய்யணுமா? ரைட் இன்னைக்கு சாயங்காலம் அவனோட பேசிடலாம். 

 

தான் அவனை கவனிக்கலை என்கிற குற்ற உணர்ச்சியோட அதை மறைக்க பழியை மனைவி மேல திருப்பி மனைவியோட சண்டை போட்டது தப்பு. தப்போ தப்பு.

​ ​
வீட்டுக்கு திரும்பும்போது மறக்காம அவங்களுக்கு பிடிச்ச சாக்லேட் வாங்கிகிட்டு போகணும்.

மத்ததெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள். அதெல்லாம் நம்ம கண்ட்ரோல்ல இல்லை.தினசரி ஒண்ணு ரெண்டு நடக்கறதுதான். சில சமயம் இப்படித்தான் நிறைய நடந்து உசிரை வாங்கும். சட்! விடு!

 

ஆபீஸூக்கு வரும் முன்னே இதை எல்லாம் புத்தியில அப்பப்ப கொண்டு வந்து சரி செஞ்சிருந்தா பிரச்சினைகள் இன்னும் அதிகமாகி இருக்காது. பிரச்சினைகளை ஒண்ணா கோபப்பந்தா திரட்டி இன்னும் இன்னும் அதை வளர்த்திருக்க மாட்டார்!


திவாஜி

unread,
Oct 28, 2014, 5:17:59 AM10/28/14
to mint...@googlegroups.com

2014-10-27 15:28 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
ஆபீஸூக்கு வரும் முன்னே இதை எல்லாம் புத்தியில அப்பப்ப கொண்டு வந்து சரி செஞ்சிருந்தா பிரச்சினைகள் இன்னும் அதிகமாகி இருக்காது. பிரச்சினைகளை ஒண்ணா கோபப்பந்தா திரட்டி இன்னும் இன்னும் அதை வளர்த்திருக்க மாட்டார்!

உள்ளதை உள்ளபடி பார்.... Cognitive restructuring

இதுல நாம் கவனிக்க வேண்டியது உணர்வுகளை பெரிய அளவில கட்டுப்படுத்த முடியும் என்கிறது.

உணர்வுகள் ஹைஜாக் ஆனால் ஒழிய அதை டக்குன்னு மாத்திட முடியும்/ மாற முடியும்.. இந்த நிகழ்வை கற்பனை செய்து பாருங்க!

 

க்ரூப் மெய்ல்ல ஒரு மெய்ல் வருது. அதுல ஒத்தர் எழுதி இருக்கிறது பிடிக்கலை! பயங்கர கோபம்! இதை சம்பந்தப்பட்ட இன்னொருவருக்கு அனுப்ப நினைச்சு ரிப்ளைன்னு தட்டி அந்த ஒத்தரை திட்டு எழுதறோம்! அனுப்பின பிறகு பாத்தா அது க்ரூபுக்குத்தான் போயிருக்கு! திட்டப்பட்ட நபரும் அதை பார்ப்பார்!

 

இப்ப கோபம் காணாம போயிடுத்து! இப்ப இருப்பது? பயம்? வெட்கம்?!

இதுவாவது பரவாயில்லை! முகம் தெரியாத நபர்களா இருக்கலாம்!

இதே மாதிரி ஆபீஸ் பாஸை திட்டி எழுதின மெய்ல் பாஸுக்கே போயிட்டா?

 

ஒரு உணர்வு இன்னொரு பலமான உணர்வால  மாறலாம்! 

பஸ்ஸில் ஒரே கூட்டம் முண்டி அடித்து எப்படியோ ஏறிவிடுகிறோம். பஸ் வழக்கம் போல குலுங்கிக்கிட்டே வேகமா போகுது. பின்னாலிருந்து எதோ சுருக்குன்னு குத்துது! திரும்பி பார்க்கக்கூட முடியாதபடி கூட்டம். இன்னும் கொஞ்ச நேரத்தில திருப்பி ஒரு குத்து! நமக்கு கோபம் ஆரம்பிச்சு அதிகமாகிக்கிட்டே போகுது! பஸ் வேகமா பல மேடு பள்ளங்களில ஏறி இறங்க பல தரம் குத்து வாங்கறோம். இப்ப பஸ் நிற்க, நிறுத்தத்துல பலர் இறங்கிட்டாங்க. படு கோபமா யார் நம்மை குத்தினதுன்னு திரும்பிப்பார்க்கிறோம்! பார்வை இல்லாத வயசான அதிக உயரமில்லாத ஒரு அம்மா கையில் ஒரு பையோட தடுமாறிகிட்டு நிக்கிறாங்க. அவங்க பை கைப்பிடிதான் குத்திச்சு! 

 

நம் கோபமெல்லாம் புஸ்ஸுன்னு காணாமப்போய் ஐயோ பாவம் ந்னு வருத்தம் தோணுது! எப்படி ஒரு உணர்ச்சி திடீர்ன்னு காணாமப்போச்சு? ஒரு புத்தி பூர்வமான புரிதல் வந்ததால.

ஆக உணர்வுகள் புத்தியால மாற்றப்பட முடியும்.

 

இது Cognitive restructuring..... இதை பார்வை மறுகட்டுமானம்ன்னு சொல்லலாமா?வேணாம். ஆங்கிலத்துல அப்படி இருக்கு என்கிறதுக்காக ஏன் அப்படிசொல்லணும்?நாம் புதிய பார்வை ந்னு சொல்லிக்கலாம்.

இதுல முதல் படி உள்ளதை உள்ளபடி பார்க்கிறது.

 

சாதாரணமா நாம் பார்க்கிறதை அப்படியே உள்வாங்காமல் நம் கற்பனை, முன் சார்பு எல்லாம் வெச்சுக்கொண்டு வண்ணம் பூசித்தான் பார்க்கிறோம். இதை முதல்ல நிறுத்தணும்.

அதுக்கு நேரம் ஒதுக்கி  நடந்த விஷயங்களை அசை போடணும். நமக்கு கோபத்தை உண்டாக்கிய அல்லது பிரச்சினை கொடுத்த விஷயத்தை அதாவது உணர்ச்சி தாக்குதலை நினைவுக்கு கொண்டு வரணும். என்ன நடந்தது? அப்ப நாம் என்ன உணர்ந்தோம்?என்ன நினைச்சோம்? எப்படி நடந்துகிட்டோம்?

 

நோட் புக்ல டேபுலர் காலம் போட்டு எழுதணும். பேப்பர் பேனா ரெடியா? ஒரு டேபிள் ... மேசை இல்லைங்க, பட்டியல்.... போடுங்க.

முதல் ரோ. உணர்ச்சியை தூண்டிய விஷயம் என்ன? நாம் ஒரு வேலையை முடித்துக் கொண்டு போய் பாஸ் கிட்ட காட்டினோம். நாம நல்லா செஞ்சதாத்தான் நினைச்சோம்.ஆனா அவர் அதை பாத்துட்டு மோசமா இருக்குன்னு சொல்லிட்டார்.


அடுத்து எப்படி உணர்ந்தோம்?
 கோபம் வந்ததா? சோர்வா? த்ருப்தி இன்மையா?


அடுத்து முதல் எதிர்வினை.
 உதாரணமா….

-      - பாஸ் கிறுக்கன்; சாடிஸ்ட்!

-      - பாஸ்ஸுக்கு எவ்வளோ செஞ்சாலும் திருப்தி வராது.

-      - நான் என்ன முயற்சி செஞ்சும் அது சரியா அமையலை.

-      - எனக்கு இந்த வேலை ஒத்துவராது; பேசாம வேலைய விட்டுடலாம்.


அடுத்து வரது சரியாக்கும் ஆதரவு எண்ணங்கள்.
 உதாரணமா….

-      - நான் இன்னும் கொஞ்சம் உழைச்சு இருக்கணும்.

-      - இதுக்கு ஆதாரங்களை திரட்டினதுல எனக்கே திருப்தி இல்லை.

-      - இந்த வேலையை செய்யும் போது நல்ல தலைவலி இருந்தது; சரியா கவனத்தோட செய்யலை போலிருக்கு.

 

இதுக்கு எதிராகவும் சில எண்ணங்கள் வரலாம். உதாரணமா….

-      - ஏற்கெனெவே வேலைக்கு கொடுத்த நேரம் குறைவு. இன்னும் என்ன உழைச்சு இருக்க முடியும்?

-      - எனக்கு திருப்தி இல்லைனாலும் ஆதாரங்கள் போதுமானதாத்தான் இருந்தது.

-      - ஒரு வேலையை குறை சொன்னாங்க என்கிறதுக்காக வேலையையே விட முடியுமா என்ன? அடுத்து வரதை நல்லா செய்வேன்.


இதை எல்லாத்தையும் எழுதின பிறகு அதை படிச்சுட்டு பாரபட்சமில்லாம அடுத்து உங்க முடிவுகளை எழுதுங்க.
 நடந்தது என்ன? அதற்கு உங்க எதிர்வினை பொருத்தமானதா?

இதைப்பத்தி மிகவும் நம்பிக்கையான ஒத்தர்கிட்டே விவாதிக்கவும் செய்யலாம். அவசியம்ன்னு இல்லை; ஆனா தப்பில்லை. அந்த நபர் ரொம்பவே நம்பிக்கை வைக்கக்கூடியவரா இருக்கணும்; இது ரொம்பவே முக்கியம்.
   

அடுத்து  பாரபட்சமில்லாம முத்தாய்ப்பா உங்க முடிவை எழுதுங்க. உதாரணமா….

-      - இந்த முறை சொதப்பிட்டேன்; அடுத்த முறை நல்லா செய்வேன்.

-      - இதே வேலையை வேற கோணத்திலேந்து அணுகி செய்து பார்க்கணும்.

-       முன்னே செய்த வேலைகளுக்கு எல்லாம் நிறையவே பாராட்டுகள் வாங்கி இருக்கேன். திரும்ப இன்னமும் வாங்க முடியும்.
   

அடுத்து வரது மூட் . இந்த ஆராய்ச்சி மூலமா நீங்க இப்ப வித்தியாசமா உணருகிறீங்களா? தப்பான வழில பண்ணிட்டோம்; மோசமில்லை, இப்படி செய்தால் இதை சரி செய்துடலாம் ந்னு தோணலாம். சில நேரம் செய்ததை ஒண்ணும் சரி செய்ய முடியாது. அடுத்த முறை இதை இப்படி செய்யணும்ன்னு தோணலாம். எப்படி இருந்தாலும் இப்ப வித்தியாசமா மூட் இருக்கும். அதை பதிவு செய்யுங்க.
   

கடைசியா மேலே என்ன செய்யப்போகிறோம்ன்னு எழுதுங்க. உதாரணமா….

- நாளைக்கு பாஸ்கிட்ட இதை வேற விதமா இப்படி செய்திருக்கலாமான்னு விவாதிக்கணும்.

- என்ன இருந்தாலும் அவர் கோவிச்சுக்கிட்டது ரொம்பவே அதிகம்; எனக்கு நிறைய வருத்தம் உண்டாச்சுன்னு அவருக்கு தெரிவிக்கணும்.

இந்த ரீதியில இருக்கலாம்.
  

முதல் எதிர்வினை

சரியாக்கும் ஆதரவு எண்ணங்கள்

எதிரான எண்ணங்கள்

 நடந்தது என்ன?  எதிர்வினை பொருத்தமானதா

பாரபட்சமில்லாத

முடிவு

மூட் 

மேலே செய்யப்போவது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதையே செய்து கொண்டு வர நம்மோட புரிதல் அதிகமாகும். அப்படி அதிகமாக ஆக நாம் செய்யும் எதிர்வினைகள் இன்னும் அர்த்தம் உள்ளவையாக இருக்கும். மொத்தத்தில் நாம் முன்னேறுவோம்



சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 28, 2014, 5:57:48 AM10/28/14
to mintamil

2014-10-28 14:47 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:

கடைசியா மேலே என்ன செய்யப்போகிறோம்ன்னு எழுதுங்க. உதாரணமா….

- நாளைக்கு பாஸ்கிட்ட இதை வேற விதமா இப்படி செய்திருக்கலாமான்னு விவாதிக்கணும்.

- என்ன இருந்தாலும் அவர் கோவிச்சுக்கிட்டது ரொம்பவே அதிகம்; எனக்கு நிறைய வருத்தம் உண்டாச்சுன்னு அவருக்கு தெரிவிக்கணும்.

இந்த ரீதியில இருக்கலாம்.
  

முதல் எதிர்வினை

சரியாக்கும் ஆதரவு எண்ணங்கள்

எதிரான எண்ணங்கள்

 நடந்தது என்ன?  எதிர்வினை பொருத்தமானதா

பாரபட்சமில்லாத

முடிவு

மூட் 

மேலே செய்யப்போவது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதையே செய்து கொண்டு வர நம்மோட புரிதல் அதிகமாகும். அப்படி அதிகமாக ஆக நாம் செய்யும் எதிர்வினைகள் இன்னும் அர்த்தம் உள்ளவையாக இருக்கும். மொத்தத்தில் நாம் முன்னேறுவோம்

அருமை!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

திவாஜி

unread,
Oct 29, 2014, 5:12:27 AM10/29/14
to mint...@googlegroups.com

2014-10-28 15:27 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
அருமை!

அன்புடன்

​நன்றி ஐயா!
--

'நல்ல' கோபம், 'கெட்ட' கோபம் - 1

நம்மில் பலருக்கும் பிரச்சினை இந்த கோபம்தான். அதனால் இந்த காக்னிடிவ் ரீஸ்ட்ரக்சரிங் என்கிற 'புதிய பார்வை' படி கோபத்தை பார்க்கலாமா?

கோபம் கெட்டது, இருக்கக்கூடாதுன்னு சொன்னாலும் அது ஓரளவுக்கு பயன்படவும் செய்யுது. ரொம்ப சாதுவா இருக்கிறவங்களுக்கு இது காலம் இல்லைன்னு சொல்லக்கேட்டு இருக்கீங்கதானே? சாதுவா இருக்கிறது தனக்கு;மத்தவங்களுக்காக இல்லை. போகட்டும்.

கோபத்தில இரண்டு வகை இருப்பதா சிலர் சொல்கிறாங்க. இவங்க தியரியை பார்ப்போம்.

கொஞ்சம் 'நல்ல' கோபம், 'கெட்ட' கோபம்.

கொஞ்சம் 'நல்ல' கோபம் எது? இது எரிச்சலும், லேசான கோபமும். இவை தேவையான போது நம்முடைய உரிமையை நிலைநாட்ட உதவும்.

கெட்ட கோபம் ஒண்ணுமில்லாத விஷயத்துக்கும் மிகலேசா எடுத்துக்கொள்ளக்கூடிய விஷயத்துக்கும் அளவு மீறின எதிர்வினையை உருவாக்குது. மேலும் நம்முள்ளேயே கோபத்தை அடைச்சு வைக்கிறதும் கெட்ட கோபம்தான்! அதை சம்பந்தமில்லாதவர்களிடம் வெளிப்படுத்துவதும் கெட்ட கோபம்தான்.

எல்லா உணர்சிகளுமே தூண்டப்படுவது ஏதோ ஒரு 'செட் அப்'பில்தான். அதாவது ஒரு சூழ்நிலை. நம்முடைய சொந்த விதிகளை மீறுவது; சொல்லாலோ செயலாலோ நம்முடைய சுய கௌரவத்துக்கு பங்கம் விளைவிப்பது; அல்லது நாம் நம் இலைக்கை அடைவதற்கு தடையாக இருப்பது.

இந்த கெட்ட கோபத்துக்கு நம் மனப்போக்கு எப்படி காரணமாக இருக்க முடியும்?

  1. 'இப்படித்தான்' எல்லாரும் நடந்துக்கணும் / நடந்துக்கக்கூடாது என்கிற வளையாத பிடிவாதம்.
  2. என்னை யாரும் விமர்சிக்கவோ கேலி செய்யவோ கூடாது.
  3. என் சூழ்நிலை இப்படித்தான் இருக்கணும்; எனக்கும் என் குறிக்கோள்களுக்கும் நடுவே யாரும் வரக்கூடாது.
  4. இவங்க எல்லாரும் எனக்கு பிடிக்காத வகையில வேணும்ன்னு நடந்துக்கிறாங்க.
  5. நான் சொல்வது, செய்வது எல்லாமே எப்பவுமே சரிதான்!
  6. மத்தவங்களோட கருத்துக்கோ, பார்வைக்கோ இங்கே இடமில்லை.

இதை எல்லாம் நமக்கு இருக்கா இல்லையான்னு பாரபட்சமில்லாம பார்த்தால் ஒழிய நாம் கெட்ட கோபத்தை தவிர்க்க முடியாது.

இந்த கெட்ட கோபத்தால பின் வருவதெல்லாம் நடக்கும்!

  1. நேரடியா சொல்லாலோ செயலாலோ ஒருவரை தாக்குவது
  2. மறைமுகமாக சொல்லாலோ செயலாலோ ஒருவரை தாக்குவது -உதாரணமா அவரோட வேலையை இன்னும் கடினமாக ஆக்குவது.
  3. உங்கள் கோபத்தை மூன்றாம் நபர்/ மிருகம்/ பொருள் - இடம் காட்டுவது.
  4. பழிக்குபழி என்று திட்டமிடுவது
  5. கருவிக்கொண்டு இருப்பது
  6. மற்றவர்களை நமக்கு வேண்டாதவருக்கு எதிராக திருப்பிவிடுவது.
  7. உம்மணாம் மூஞ்சியாக இருப்பது
  8. நமக்கு எதிராக செயல் பட அவருக்கு உள்நோக்கம் இருக்கிறதா என்று ஆராய்வது
  9. எப்போது அவர் மீண்டும் நமக்கு எதிராக செயல்படுவார் என்று காத்திருப்பது.
  10. நமக்குப்பிடிக்காதவர் எப்போது சிறிய தப்பாவது செய்வார் என்று கண்காணிப்பது.

 

வழக்கமா இவற்றுக்கான உடல்மொழி: இறுக்கிய கைகள்; இறுகிய தசைகள் (-வழக்கமாக கழுத்திலும் தோள்களிலும் தென்படும்.); உடல் துடிப்பது; பற்களை கடிப்பது; இதயம் வேகமாக துடிப்பது; சூடாக உணர்வது.

சிலருக்கு சட்டென்று கோபம் வந்துவிடும். சிலருக்கு நேரமாகும். ஆனால் கோபம் வருகிறது என்று சில உடல் மாறுதல்கள் முன்னேயே உணர்த்தும். இதை கொஞ்சம் ஆராய்ந்து தெரிந்து கொண்டால் நாம் சீக்கிரமே இதை கட்டுப்படுத்த ஆரம்பிக்கலாம்.

சரி! இந்த கொஞ்சம் 'நல்ல' கோபத்துக்கு நம் மனப்போக்கு எப்படி இருக்கும்?அதுக்கும் கெட்ட கோபத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்?

  1. 'இப்படித்தான்' எல்லாரும் நடந்துக்கணும் / நடந்துக்கக்கூடாது என்பதில் வளையாத பிடிவாதத்துக்கு பதில் நெகிழும் பலமான தேர்வுகள்.
  2. என்னை யாரும் விமர்சிக்கவோ கேலி செய்யவோ கூடாது என்றில்லாமல் இப்படி இருந்தால் நல்லது என்று நினைப்பது.
  3. என் சூழ்நிலை இப்படித்தான் இருக்கணும்; எனக்கும் என் குறிக்கோள்களுக்கும் நடுவே யாரும் வரக்கூடாது என்றில்லாமல் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்று ஆசை படுவது.
  4. இவங்க எல்லாரும் எனக்கு பிடிக்காத வகையில வேணும்ன்னு நடந்துக்கிறாங்க என்று நினைக்காமல் யதார்த்தமாக பார்ப்பது.
  5. நான் சொல்வது செய்வது எல்லாமே எப்பவுமே சரிதான் என்றில்லாமல் அவற்றில் தவறு இருக்கக்கூடும் என்றும் மற்றவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம் என்றும் ஒப்புக்கொள்வது.
  6. மத்தவங்களோட கருத்துக்கோ பார்வைக்கோ இங்கே இடமில்லை எனாமல் மற்றவர் கருத்தையும் பாரபட்சமில்லாமல் ஆராய்வது.

 

இந்த மனப்போக்கு இருந்தா நாம் தன் நிலை இழக்க மாட்டோம். நம் சுய கௌரவம் பாதிக்கப்படாது. நம் கோபம் கட்டிலேயே இருக்கும். பிரச்சினை இருந்தால் அதை அதிகமாக்காமல் தீர்வு காண முயற்சிப்போம். மற்றவருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம் என ஒப்புக்கொள்வோம்; ஆனால் அதே சமயம் மற்றவர் தம் போக்கையும் மாற்றிக்கொள்ள இடமிருக்கிறது என்று கோபப்படாமல் சுட்டிக்காட்டுவோம். அவர் வேண்டுமென்று நமக்கு எதிராக இல்லை என்பதற்கு ஆதாரங்களை தேடுவோம். மன்னிக்கவும் மறக்கவும் தயாராக இருப்போம். மொத்தத்தில் இந்த போக்கு நல்லது.

ஆகவே எப்படி கெட்ட கோபத்தை நல்ல கோபமாக ஆக்குவது என்று புரிகிறதல்லவா? நம் பார்வை மாற வேண்டும்!


Dhivakar

unread,
Oct 29, 2014, 6:04:32 AM10/29/14
to மின்தமிழ்
டாக்டர் தி. வா. ஜி!!

அத்தனைக் கட்டுரைகளையும் நிதானமாக வாசித்தேன்.. அருமையான கட்டுரை.

ஏதோ ஒரு கேள்வி கேட்கவேண்டும் என்று மூளைக்குள் ஒன்று நினைவு படுத்துகிறது. அதற்குள் பாருங்கள் இன்னொன்று அதை மறந்துவிடு என்கிறது.. இந்த மறதி விஷயத்தையும் பற்றியும் அதன் சூட்சும ஆளுமை பற்றியும் மறக்காமல் சற்று ஞாபகப்படுத்தி எழுதிவிடுங்கள்.

இல்லாவிட்டால் கோபம் வரும்.. கெட்ட கோபமா இல்லை நல்ல கோபமா என்று நீங்களே முடிவெடுக்கலாம்.  எனக்குப் புரிந்த வரை கெட்டகோபம் என்பது தன்னையும் துன்புறுத்தி, மற்றவரையும் தாக்கும்.. நல்ல கோபம் என்பது அதனால் மற்றவரின் மனதில் ஒரு பயமும் (நல்ல பயமா? கெட்ட பயமா?) மாற்றமும் ஏற்படுத்த முயலும்.

அப்புறம்..என்ன எழுதவேண்டுமென மறந்துவிட்டேன்.. நினைவு வந்ததும் எதை மறந்துபோனேனோ  அதை ஞாபகப்படுத்தி, மறக்காமல் எழுதுகிறேன்.

அன்புடன். 
திவாகர்

--

திவாஜி

unread,
Oct 29, 2014, 7:53:16 AM10/29/14
to mint...@googlegroups.com

2014-10-29 15:34 GMT+05:30 Dhivakar <venkdh...@gmail.com>:

அப்புறம்..என்ன எழுதவேண்டுமென மறந்துவிட்டேன்.. நினைவு வந்ததும் எதை மறந்துபோனேனோ  அதை ஞாபகப்படுத்தி, மறக்காமல் எழுதுகிறேன்.

​ஞாபகம் இருந்தால் எழுதிவிடுகிறேன்.... ஆமாம், எதைப்பற்றி? உம் பரவாயில்லை. ஞாபகம் இருந்தால் உங்கள் மின்னஞ்சலை திருப்பிப்பார்த்துவிடுகிறேன்.
அப்புறம் உங்க ஊரில் மழை காத்தே இல்லையாமே?​
நலமாய் இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்....


திவாஜி

unread,
Oct 30, 2014, 4:55:14 AM10/30/14
to mint...@googlegroups.com

2014-10-29 14:42 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
ஆகவே எப்படி கெட்ட கோபத்தை நல்ல கோபமாக ஆக்குவது என்று புரிகிறதல்லவா? நம் பார்வை மாற வேண்டும்!

'நல்ல' கோபம், 'கெட்ட' கோபம் - 2

இந்த உலகம் / மக்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்பதில் நமக்கு இருக்கிற கற்பனை மாற வேண்டும். இந்த விஷயத்தில் சில விஷ கற்பனைகள் நமக்கு இருக்கலாம். அவை நமக்கு எதிரிகள்!

- என்னை யாருமே கேவலமாகவோ மோசமாகவோ நடத்தக்கூடாது.

- உலகம் யாருக்குக்கும் முக்கியமா எனக்கு எதிராக இருக்கக்கூடாது.

- நான் நினைச்சதை அடைய யாரும்/ எதுவும் குறுக்கே வரக்கூடாது.

- எந்த நிகழ்வும்/ யாருடைய நடத்தையும் என் குற்ற உணர்ச்சி, தவறுகளை சுட்டிக்காட்டக்கூடாது; எனக்கு வெட்கம், அவமானம் நிகழும் படி நடந்து கொள்ளக்கூடாது.

 

எல்லாம் சரிதான், ஆனா நாம அதுக்கு தகுதியா இருக்கோமா என்ன? இல்லை என்கிற போது எப்படி இதை எல்லாம் எதிர்பார்க்கமுடியும்? நிபந்தனை இல்லாம இதை எல்லாம் எதிர்பார்கிறது சரியில்லை!

இதை வெகு நேரம் ஆராய்ந்து நம் பார்வையை மாற்றிக்கொண்டால் ஒழிய நாம் அப்படியேத்தான் கஷ்டப்பட்டு கொண்டு இருப்போம். பொதுவாக நாம் நம்மைப்பற்றி/ பிற மக்களைப்பற்றி/ உலகத்தைப்பற்றி என்ன பார்வை வைத்து இருக்கிறோம் என்பதே நம் உணர்ச்சிகளில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும்.

ஆரோக்கியமான உணர்வுகள் வளர நாம் நம் பார்வையை மாற்றிக்கொண்டே ஆக வேண்டும்.

நம் நடத்தை கொஞ்சமாவது நெகிழ வேண்டும். ஆமாம், உலகத்தில் எல்லாமே 100% சரியாக இல்லை என்று ஒப்புக்கொள்ள முடிய வேண்டும். கொஞ்சம் பொறுமை வேண்டும். மிருக காட்சி சாலையில் எல்லா மிருகங்களும் இருக்கும் என்பது போல உலகத்தில் எல்லா வகை மக்களும் இருக்க இடமுண்டு என்று புரிய வேண்டும்.

இதை எல்லாம் கொஞ்சம் விரிவாக பார்க்கலாம். ஆனால் இதில் முக்கியமான விஷயம் இதை ஆராய்ந்து ஒப்புக்கொண்டு நம் பார்வையை மாற்றிக்கொள்வதை செயலில் கொண்டு வர வேண்டும்.

 

முதலாவதா மற்ற மக்களுடன் வாழ்வதைப் பார்க்கலாம்.

இறைவன் உலகையும் படைச்சு ஏராளமான பூச்சிகள், மிருகங்கள், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள், மனிதர்கள் ன்னு நிறைய உயிரினங்களை படைச்சு இருக்கார். நாம் வாழ்வதற்கு எப்படி ஒரு ரைட் இருக்கோ அதே போல அவை வாழ்வதற்கும் ரைட் இருக்கு, இல்லையா?

மனிதர்களை படைச்சதிலேயும் பல விதங்கள் ... குட்டை நெட்டை; கருப்பு சிவப்பு பழுப்பு; புத்திசாலி மந்தபுத்தி; பலசாலி சோனி; சுறுசுறுப்பு பேர்வழி சோம்பல் பேர்வழி.... லிஸ்ட் முடிவே இல்லாதது! சுருக்கமா ஒவ்வொரு ஜீவனும் தனித்துவம் வாய்ந்ததுன்னு சொல்லிடலாம். இதை ஒத்துக்கொண்டா அப்புறம் சமம், சமமில்லை ன்னு ஒரு விஷயமே கிடையாது!

நமக்கு பிடிக்குதோ இல்லையோ நாம் இவங்க கூடத்தான் வாழ்ந்தாகணும்! "உன்னை எனக்குப்பிடிக்கலை நீ ஒழிஞ்சுப்போ" ன்னு சொல்ல முடியாது. பிடிக்கலைன்னா விலகி இருக்கலாம்; கண்டுக்காம இருக்கலாம். ஆனால் நீ இருக்கக்கூடாது ன்னு சொல்ல நமக்கு ஒரு ரைட்டும் இல்லை!

சில சமயம் நமக்கு இந்த சுதந்திரம் இல்லாமல் போயிடலாம். நமக்குப்பிடிக்காதவர் கூட வாழ வேண்டி இருக்கலாம். அது வாழ்கைத்துணையோ, பக்கத்து வீட்டுக்காரரோ, அலுவலக சக ஊழியரோ.... இவர்களுடன் நாம் உறவாடும் அவசியம் ஏற்பட்டு விடுகிறது. இந்த சமயத்தில்தான் நமக்கு கட்டுப்பாடு அவசியமாகிறது.

 

மற்றவரை அவருடைய குறை நிறைகளுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால் பல விஷயங்கள் சரியாகி விடுகின்றன!

சவிதா தினசரி அலுவலக பேருந்தில் வேலைக்குப்போகிறார். பஸ் ஏறும்போது ட்ரைவருக்கு குட் மார்னிங் சொல்கிறார். அந்த ட்ரைவர் பதிலுக்கு ஒண்ணும் சொல்வதில்லை. தினசரி இது நடப்பதை பார்த்த கவிதா அவரை கேட்கிறார்: என்ன திமிர்? பதிலுக்கு ஒரு குட்மார்னிங் சொல்லலைனாலும் இப்படி ஒரு ரெஸ்பான்ஸும் இல்லாமலா இருப்பான் ஒரு மனுஷன்? நீ ஏன் தினசரி இவனுக்கு குட் மார்னிங் சொல்கிறாய்?

சவிதா சிரித்துக்கொண்டே சொன்னார்: எனக்கு குட் மார்னிங் சொல்லத்தோன்றுகிறது, அதனால் சொல்கிறேன்; பதிலுக்கு எதையும் எதிர்பார்த்து சொல்லவில்லை! அவருக்கு இது பழக்கமில்லாமல் இருக்கலாம்; அவர் இயல்பாகவே சிடுமூஞ்சியாக இருக்கலாம்; நாகரீகம் தெரியாமல் இருக்கலாம். வேண்டுமென்று என்னை அவமானப்படுத்த இப்படி செய்வதாக நான் நினைக்கவில்லை. அவருக்கு நல்ல நடத்தை இல்லை என்பதற்காக என் நன்நடத்தை ஏன் இல்லாமல் போக வேண்டும்?

இதில் ஒவ்வொரு வரியிலும் ஒரு விஷயம் இருக்கிறது!

பார்வை சரியாக இருந்துவிட்டால் பல விஷயங்கள் சரியாகிவிடும் என்பது புரிகிறதா?



Tthamizth Tthenee

unread,
Oct 30, 2014, 5:10:54 AM10/30/14
to mint...@googlegroups.com

2014-10-30 14:24 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
பார்வை சரியாக இருந்துவிட்டால் பல விஷயங்கள் சரியாகிவிடும் என்பது புரிகிறதா?


பார்வை சரியாக இருந்துவிட்டால் பல விஷயங்கள் சரியாகிவிடும் என்பது புரிகிறதா
?

​இந்த உலகில் வாழத் தகுதியான   உணர்வு சார் நுண்ணறிவு

திவாஜி

unread,
Oct 30, 2014, 7:53:19 AM10/30/14
to mint...@googlegroups.com

2014-10-30 14:40 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
இந்த உலகில் வாழத் தகுதியான   உணர்வு சார் நுண்ணறிவு

​ஆமாம் சார். படிப்பு இருக்கிறதோ இல்லையோ இனி ​இது இல்லாமல் யாரும் முன்னேற முடியாது என்று தோன்றுகிறது.


Tthamizth Tthenee

unread,
Oct 30, 2014, 8:20:29 AM10/30/14
to mint...@googlegroups.com
உண்மைதான்  படிப்புக்கும்  உள்ளுணர்வான நுண்ணறிவுக்கும்  சம்பந்தமே இல்லை

எப்பேர்ப்பட்ட படிப்பாளியாய் இருந்தாலும் அவர்களுக்கு இந்த நுண்ணறிவு இல்லையென்றால்  மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறார்கள்

எல்லோரிடமும்  எரிந்து விழுகிறார்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--

திவாஜி

unread,
Oct 31, 2014, 5:08:33 AM10/31/14
to mint...@googlegroups.com

2014-10-30 17:50 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
உண்மைதான்  படிப்புக்கும்  உள்ளுணர்வான நுண்ணறிவுக்கும்  சம்பந்தமே இல்லை

எப்பேர்ப்பட்ட படிப்பாளியாய் இருந்தாலும் அவர்களுக்கு இந்த நுண்ணறிவு இல்லையென்றால்  மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறார்கள்

எல்லோரிடமும்  எரிந்து விழுகிறார்கள்

​நன்றி தேனீ சார்!
------

'நல்ல' கோபம், 'கெட்ட' கோபம் - 3

நீக்குப்போக்குடன் எதிர்பார்ப்பு:

'இப்படித்தான் இருக்க வேண்டும்' என்ற பிடிவாதம் இல்லாமல் 'இப்படி இருந்தால் நல்லாயிருக்கும்' என்ற ரீதியில் எதிர்பார்ப்புகளாக மாற்றிக்கொண்டால் பல விஷயங்கள் சௌகரியமாக போய்விடும். இது கெட்டகோபத்தை 'நல்ல' கோபம் ஆக்கிவிடும். பின்னால் அதை எதிர்பார்ப்பதையும் நீக்கிஇப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது, அவ்வளவே’ என்று மாற்றிக்கொள்ள முடிந்தால் இன்னும் சிறப்பு! அப்போது கோபமே வராது!

ராமுவும் சோமுவும் சாப்பிட ஹோட்டலுக்கு போகிறார்கள். அங்கே இரண்டு பேர்கள் குடித்துவிட்டு சத்தம் போட்டு அசிங்கமாக பேசிக்கொண்டு தொந்திரவு கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். ராமு முகம் சுளித்து "இங்கே இருக்க வேண்டாம், வேறு இடத்துக்குப்போய் விடலாம்" என்கிறார். மாறாக சோமு எழுந்து அவர்களைப்பார்த்து திட்டுகிறார். கடைசியில் குடிகாரர்கள் இன்னும் இரண்டு நண்பர்களை சேர்த்துக்கொண்டு சோமுவை நன்றாக அடித்துவிடுகிறார்கள்!

இங்கே ராமுவின் மனப்போக்கை பாருங்கள்: இவர்கள் இப்படி குடித்துவிட்டு கலாட்டா செய்வது நன்றாக இல்லை. இந்த கெட்ட சூழ்நிலையிலிருந்து விலகிவிடலாம். இவர்களை இந்த இடத்து சொந்தக்காரர் பார்த்துக்கொள்ளட்டும்.

மாறாக சோமுவின் மனப்போக்கு: இந்த முட்டாள்கள் என்னை அவமானப்படுத்துகின்றனர்; இவர்களுக்கு பாடம் கற்பிப்பேன். யார் பெரியவன் என்று பார்த்துவிடலாம்!

என்ன நடந்தது என்பது தானே விளங்குகிறது.

குறை நிறையுடன் மற்றவர்களை ஒப்புக்கொள்வது:

மற்றவரை முட்டாள், அசடு, ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லை ன்னு நினைக்கும் முன் ஒரு விஷயத்தை ஆராயறது நல்லது. ப்படி செய்வது மிகவும் தவறான மிகைப்படுத்தல். அவர் எப்போதுமே அசடு/ முட்டாள்/ லாயக்கில்லை ன்னு இல்லை. அப்பப்ப அப்படி இருக்கலாம். அப்படித்தான் நாமும் அனேகமா இருக்கோம்!

எல்லாருமே எப்போதுமே புத்திசாலியாவும் சமர்த்தாவும் இருக்கோமா என்ன? நம்மில் அனேகமான பேர் அப்படி இல்லை. எப்போதோ எத்தனையோ அசட்டுத்தனம் செய்திருப்போம்; முட்டாள் போல நடந்திருப்போம்; லாயக்கில்லாம இருந்திருப்போம்! நம்மைப்போல இவரும் இப்ப அப்படி இருக்கிறார்! அவ்வளவுதான். ப்படி நினைத்துப்பார்ப்பது நாம் நம் சமநிலையை தவறாது வைத்துக்கொள்ள உதவும்; கோபம் வருவதை கட்டுப்படுத்தும்; எல்லாரையும் அவரவர் குறை நிறைகளுடன் ஏற்க சுலபமாக ஆக்கும்! குறைகளை மட்டும் பார்த்தால் இன்னொருவரை மதிப்பது கஷ்டம்! மதிக்காவிட்டால் நாம் உள்ளதை உள்ளபடி பார்க்க மாட்டோம். அப்படி பார்க்காவிட்டால் நாம் சரிவர நிலமையை புரிந்து கொள்ளாமல் நம் உறுதித்தன்மையை நிலைநாட்ட முடியாது.

இப்படி பார்வை சரியானால், நாம் ஒரு நபரை கண்டனம் செய்யாமல் ஒருவருடைய குறிப்பிட்ட செயலை கண்டனம் செய்வோம்! இது நல்ல பழக்கம். ஆனால் இது பலருக்கும் புரிவதில்லை!

ஒரு வகையில் இதற்குக்காரணம் இன்றைய ஊடகங்கள்தான். கெட்ட விஷயங்களே சாதாரணமாக பரபரப்பை உண்டு பண்ணுகின்றன. டிவி சேனலுக்கு அதிக ரேட்டிங்க் வரவோ, பத்திரிகை அதிகம் விற்கவோ இது தேவையாக இருக்கிறது. அதனால் அவை மிகைப்படுத்தப்பட்டு அடிக்கடி காட்டப்படுகின்றன. இப்படி பார்த்து பழகிய நாம் உலகத்தில் நல்லதே நடப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம்.3இந்த மாயையில் இருந்து நாம் விடுபட வேண்டும்.

இப்படி தொடர்ந்து செய்தால் இது பொது விதி ஆவதால் நம்மை நாமே கூட சுலபமாக ஒப்புக்கொள்வோம்! சிலருக்கு தன்னை பற்றியே நல்ல அபிப்பிராயம் இராது. தன் இயலாமை ஓங்கி வளர்ந்து பயமுறுத்தும்! இவர்கள் ஒரு எதிர்வினையாக பிறருடன் சண்டை போடுவார்கள்... உன்னை நசுக்குவதால் நான் பெரியவனாகிவிடுவேன் என்ற தவறான கற்பனை! எல்லாரைப்போலவும்தான் நானும் குறை நிறைகளுடன் இருக்கிறேன் என்று தோன்றிவிட்டால் இந்த தாழ்வு மனப்பான்மை மறைந்துவிடும்.

விரக்தி: நம் குறிக்கோள்களையும் இலக்கையும் அடைய தடையாக ஏதாவது வந்தால் நமக்கு விரக்தி ஏற்படுகிறது; இதுவே சம்பந்தப்பட்ட நபரிடம் கோபமாக மாறுகிறது. குறிக்கோள்களும் இலக்குகளும் நமக்கு எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு விரக்தியும் கோபமும் அதிகமாகின்றன.

எவ்வளவு தடை ஏற்பட்டால் இந்த விரக்தி வருகிறது என்பது ஆளுக்காள் மாறுபடுகிறது.

'மிடிலை!' 'இனிமே தாங்காது!' 'போதும்பா போதும்!' இதெல்லாம் சுலபமா விரக்தி அடைகிற மனிதன் வாயில் வருகிறவை.

'ம்ம்ம்ம் கஷ்டம்தான்; இருந்தாலும் சமாளிச்சுடலாம்!' 'தாங்க முடியாதுன்னு தோணினாலும் தாங்க சக்தி இருக்கு!' 'சில குறிக்கோள்கள் என்ன கஷ்டம் வந்தாலும் தாங்கிக்க வொர்த்!' இதெல்லாம் சுலபமா விரக்தி அடையாத மனிதன் வாயில் வருகிறவை.

நமக்கு விரக்தி வரும்போது இப்படி யோசித்துப்பார்க்கலாம்:

  1. நிஜமாகவே இது அவ்வளவு மோசமான நிலமையா?
  2. இது மோசமான நிலமையா அல்லது எனக்கு பிடிக்காத நிலமையா?
  3. இது வெறும் இக்கட்டான நிலமையா அல்லது ஒத்துக்க முடியாத அளவு மோசமா?

உண்மையில் பல விஷயங்கள் நமக்கு சகிக்கவோ தாங்கவோ கஷ்டமானாலும் சகிக்க / தாங்க முடியக்கூடினவைதான். கசப்பானாலும் சோகமானாலும் முழுங்கக்கூடியவைதான்! நாம் வாழ்கையில் முன்னே சந்தித்த இதே போன்ற சமாசாரத்தை நினைவுக்கு கொண்டுவந்து பார்த்தால் புரிந்துவிடும், நாம் எவ்வளவு தாங்கி இருக்கிறோம் என்று!

 

உதாரணமா ட்ராபிக்ல ஒரு நாள் நல்லா மாட்டிக்கிடோம்ன்னு வெச்சுக்கலாம். ஆபீஸ்ல முக்கியமான வேலை! பெரிய க்லையண்ட் ஒத்தர் வரார். நேரத்துக்கு நாம போகலைன்னா பிரச்சினை வரும்! இப்ப என்னதான் கத்தினாலும் கொண்டாலும் ட்ராபிக் இம்ப்ரூவ் ஆகாது! மாறா நம்ம கோபம் இன்னும் சிலருக்கு கோபத்தை கிளப்பிவிட்டு இன்னும் மோசமாக்க முடியும்!

மாற்றா இது நல்ல கோபமா இருந்தா, கோபத்தை நம் கார் ஸ்டியரிங் மேல காட்டாம ஆபீஸுக்கு அலை பேசியில போன் பண்ணி மாற்று நபர் க்லையண்டை சந்திக்கவும், நாம் ஏன் வரலை என்கிறதுக்கான காரணத்தை அவருக்கு தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யலாம். நிறைய பேர் இதை புரிஞ்சுக்க முடியும்; தப்பா நினைக்க மாட்டாங்க.


சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 31, 2014, 7:02:08 AM10/31/14
to mintamil
ஒவ்வொரு கருத்தும் எண்ணிப்பார்க்கத் தக்க கருத்து ஐயா. மிகச் சிறப்பான பதிவு.தொடர்ந்து படித்து வருகிறேன்..

நாம் ஒரு நபரை கண்டனம் செய்யாமல் ஒருவருடைய குறிப்பிட்ட செயலை கண்டனம் செய்வோம்! இது நல்ல பழக்கம். ஆனால் இது பலருக்கும் புரிவதில்லை!

தங்களின் மேற்கண்ட சொற்றொடருக்கு ஆதரவாக ஒரு நிகழ்வை நான் பயிற்சிகளில் பகிர்ந்துகொள்வதுண்டு. மனைவி சமைத்த இரசம் சுவையாக நன்றாக இல்லை. கணவன் என்ன செய்யலாம்? 1.சமைக்கத் தெரிந்த தன் தாயாரிடம், சகோதரியிடம் கற்றுக்கொள்ளச் செய்யலாம்.2.சமைத்துப் பார் நூல் வாங்கிக்கொடுக்கலாம் அல்லது 3.இரசத்தில் அன்பைக் கலந்து நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்தது பால் கலந்தது போல உள்ளது என்று கூறி உண்டு மகிழலாம்/தொலைக்கலாம்.

இதையெல்லாம் விட்விட்டு “இரசம் உன் மூஜ்சி மாதிரித் தான் இருக்கும்” என்றானாம். இரசத்துக்கும் மூஞ்சிக்கும் என்ன சம்பந்தம்! அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, “உங்க ஆத்தாவுக்கே இரசம் வைக்கத் தெரியாது. உனக்கு எப்படிச் சமைக்கத் தெரியப்போகுது,” என்று பரம்பரையை இழுத்தானாம். வாழ்வு நரகமானது!.

இரசம் நல்லாயில்லை என்ற செயலையும் அச்செயலில் குறை போக்கி நிறைகாண்பதை விடுத்து இரசம் வைத்தவரின் மூஞ்சியையும், அவரோடு நில்லாமல் அவர் தாயாரையும் ஏளனம் செய்வது பலரும் புரியாமல் செய்யும் செயல். 


அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

திவாஜி

unread,
Oct 31, 2014, 7:34:34 AM10/31/14
to mint...@googlegroups.com

2014-10-31 16:32 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
3.இரசத்தில் அன்பைக் கலந்து நற்கருப்பஞ் சாற்றினிலே தேன் கலந்தது பால் கலந்தது போல உள்ளது என்று கூறி உண்டு மகிழலாம்/தொலைக்கலாம்.

சார் இதைத்தான் அ லிட்டில் லை இஸ் குட் என்கிறாங்க!
என்ன பிரச்சினை? காலா காலத்துக்கும் ரசம் அப்படியேத்தான் இருக்கும்.
 :-))))

நீங்க இந்த மாத்ரி க்ளாஸ் எடுத்தவர்; அதனால் நல்லா புரியுது. பொது மக்களுக்கு புரியறா மாதிரி எழுதறேனா ந்னு கொஞ்சம் சந்தேகம் இருக்குத்தான்!

திவாஜி

unread,
Oct 31, 2014, 7:42:07 AM10/31/14
to mint...@googlegroups.com

2014-10-31 16:32 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
நாம் ஒரு நபரை கண்டனம் செய்யாமல் ஒருவருடைய குறிப்பிட்ட செயலை கண்டனம் செய்வோம்! இது நல்ல பழக்கம். ஆனால் இது பலருக்கும் புரிவதில்லை!

யாருக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ ஸ்ரீ சுப்பிரமணியம் சாமிக்கு இந்த பழக்கம் இருக்கு.
டிவில ஒரு நேர்காணல் பாத்தேன். அதுல ஒரு அரசியல்வாதி மேல கேஸ் போட்டுட்டு வெளியே அவங்ககிட்ட பேசி பழகறீங்களே முரண்பாடா இல்லையான்னு கேள்வி.
சு.சா சிரிச்சுகிட்டே சொன்னார் “ஆமாம் அது நிறைய பேருக்கு புரியறதில்லை. நான் அவங்களோட குறிப்பிட்ட செயல் சரியில்லைன்னு கேஸ் போட்டேனே தவிர, அவர் மேல வெறுப்பால இல்லை. அதனால அவரோட பேசறதுல எந்த பிரச்சினையும் இல்லை”
 “இந்த பழக்கம் எப்படி வந்தது?”
“காஞ்சி பரமாச்சாரியார்கிட்ட பேசிட்டு இருந்தப்ப அவர் சொன்னது. நீ அநீதியை எதிர்த்து போராடு. ஆனா அதே சமயம் அந்த நபர் மேல உனக்கு எந்த காழ்ப்புணர்வும் இருக்கக்கூடாதுன்னு சொன்னார். அது நல்லா மனசில பதிஞ்சது. அப்போது முதல் நான் அப்படித்தான் இருக்கேன்.”
மற்ற அரசியல்வாதிகளும் இருக்காங்களே! ஹும்!
இந்த நேர்காணலை பார்க்கும் வரை வரை ஒரு கிறுக்கண்ன்னு நினைச்சு கொண்டு இருந்தேன். அப்புறம் அபிப்ராயத்தை மாற்றிக்கொள்ள வேண்டி வந்தது!

Tthamizth Tthenee

unread,
Oct 31, 2014, 10:11:10 AM10/31/14
to mint...@googlegroups.com
நான் எப்போதும் மனிதர்களை வெறுப்பதில்லை

அவர்களிடம் இருக்கும் விதண்டாவாதம், வேண்டாத  கலகமூட்டல்,  போன்ற செயல்களை மட்டும் வெறுக்கிறேன்

அப்படி வெறுத்தாலும்  அவர்களிடம்   மரியாதையாக வே  நடக்கிறேன்
அன்பாகவே பழகுகிறேன்  என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ளுதல்  நலம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--

Megala Ramamourty

unread,
Oct 31, 2014, 10:42:11 AM10/31/14
to மின்தமிழ்
//பொது மக்களுக்கு புரியறா மாதிரி எழுதறேனா ந்னு கொஞ்சம் சந்தேகம் இருக்குத்தான்!//

பொதுமக்களான எங்களுக்கும் நல்லாவே புரியுது திவாஜி. சந்தேகமே வேண்டாம்!  You are doing an excellent job; go ahead!    :-)

கொள்கைகளோடு/கருத்துக்களோடு மட்டும்தான் வேறுபாடு; சம்பந்தப்பட்ட தனி நபரிடம் எந்தக் கோபமும் தேவையற்றது என்ற புரிதல் இன்று பலரிடம் இருப்பதில்லை. அவர்களுடைய பேச்சையோ/எழுத்தையோ மறுத்துப் பிறர் ஏதாவது சொல்லிவிட்டால் ‘ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி!’ என்று பாரதி முழக்கமிட்டதுபோல் இவர்களும் புரட்சியில் இறங்கிவிடுகிறார்கள்; கருத்தை மறுத்துரைத்தவர்களைப் பரம வைரிகளாகக் கருதத் தொடங்கிவிடுகிறார்கள். :-)

கொள்கைகளை மீறிய நட்பைப் பேணியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மூதறிஞர் ராஜாஜியும், தந்தை பெரியாரும்! கொள்கைகளில் அவர்கள் இருவரும் எதிரெதிர் துருவங்கள் என்ற போதிலும் நல்ல நண்பர்களாகவும் அவர்களால் இருக்க முடிந்திருப்பது (இன்றும்) நம்மை வியக்கவைக்கிறது.

அன்புடன்,
மேகலா




--

Megala Ramamourty

unread,
Oct 31, 2014, 10:46:51 AM10/31/14
to மின்தமிழ்
//இதையெல்லாம் விட்விட்டு “இரசம் உன் மூஜ்சி மாதிரித் தான் இருக்கும்” என்றானாம். இரசத்துக்கும் மூஞ்சிக்கும் என்ன சம்பந்தம்!//

Good question வினைதீர்த்தான் ஐயா!

இப்படி ரசத்தைப் பற்றி ’ரசக்குறைவாக’ப் பேசியதால் அங்கே அவர்களுக்குள் நிச்சயம் பெரிய சண்டை நிகழ்ந்திருக்கும்; விரசமாய்ப் போயிருக்கும் என்று ஊகிக்க முடிகிறது.  :-))

அன்புடன்,
மேகலா

Nagarajan Vadivel

unread,
Oct 31, 2014, 10:55:10 AM10/31/14
to மின்தமிழ்
பழரசம் அருந்திவிட்டு ரசம் அருந்தியதால் நடந்த உரசல்தானே இது
 
உரசல் அரசல் புரசலா வீட்டுக்கு வீடு நடப்பதுதானே. 

ரசத்தின் சுவை மணம் பக்குவம் மாறலாம் ஆனால் மூஞ்சி அப்புடியேதானே இருக்கும் என்ற ரசனை இல்லாத எகனை மொகனைப் பேச்சு விரசமாவதற்கு வாய்ப்பில்லை என்பது என் காத்துட்டுக் கருத்து

இனா பனா அனா


திவாஜி

unread,
Nov 3, 2014, 4:06:24 AM11/3/14
to mint...@googlegroups.com

​தொடர்ந்து படித்து உற்சாகப்படுத்தி வருவோருக்கு நன்றி!​

2014-10-31 14:38 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
மாற்றா இது நல்ல கோபமா இருந்தா, கோபத்தை நம் கார் ஸ்டியரிங் மேல காட்டாம ஆபீஸுக்கு அலை பேசியில போன் பண்ணி மாற்று நபர் க்லையண்டை சந்திக்கவும், நாம் ஏன் வரலை என்கிறதுக்கான காரணத்தை அவருக்கு தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யலாம். நிறைய பேர் இதை புரிஞ்சுக்க முடியும்; தப்பா நினைக்க மாட்டாங்க.

'நல்ல' கோபம், 'கெட்ட' கோபம் - 4 நம் அதிருப்தியை தெரிவிக்க ...

நாம் கோபமா இருக்கிறது நம்ம ’ரைட்’ன்னு சிலர் நினைக்கலாம். கோபப்படுகிறதுக்கான காரணமும் நிஜமா சரியாகவே இருக்கலாம். ஆனால் கொஞ்சம் நாம் கோபப்படுகிறதுல என்ன சாதக பாதகம் ன்னு யோசித்துப்பார்க்கலாம். ஒண்ணும் பிரயோசனம் இல்லைன்னு தெரியும் போது நம்மோட கெட்ட கோபங்கள் எல்லாம் நல்ல கோபங்களா ஆக வாய்ப்பிருக்கு!

 

பின்னே நம்மோட அதிருப்தியை எப்படி தெரிவிக்கிறதுன்னு கேட்கலாம். அது நல்ல கேள்வி!

ஏன்னா நாம் உணர்ச்சிகளை அப்பப்ப வெளிப்படுத்திட்டா பின்னால கெட்ட கோபமோ, டிப்ரஷனோ வராதாம்! ஆனாலும் நாம் நினைக்கறதை அப்படியே வெளிப்படுத்த முடியாதே? அது பிறருக்கு உவப்பா இராது. அதனால் எப்படி வெளிப்படுத்தணும் என்பதை கொஞ்சம் ஆற்றுப்படுத்தணும். 

 

நம்மோட நிலைப்பாட்டை சொல்வதில யாருக்கும் ஒரு ஆட்சேபணையும் இருக்க முடியாது! அதாவது அதை சொல்கிறபடி சொன்னால்! அது நம்மோட உறுதியை காட்டுது. இது மற்றவருடன் உடன் படலை என்பதை காட்டுமே ஒழிய அவங்களோட நமக்கு வேற காழ்ப்பு உணர்ச்சி இருப்பதா அர்த்தமில்லை. அதாவது ஒத்தரோட ஒரு நிலைப்பாடு/ கருத்துடன் நாம் உடன்படலை; அப்படி எப்பவும் உடன் படுவது அவசியமும் இல்லை. அதில வன்முறையோ வற்புறுத்தலோ பிறருடைய உரிமைகளை மீறுவதோ இல்லை. நான் பெரியவனா நீ பெரியவனா சமாசாரம் இல்லை. நீ தோற்கணும் நான் ஜெயிக்கணும் ன்னு ஒண்ணும் இல்லை.

 

இப்படி இருந்தாலும் இடம் பொருள் ஏவல் தெரிஞ்சே நம் நிலைப்பாட்டை பதிவு செய்யணும்.

இப்படி செய்யும்போது மற்றவர்கள் நாம் சொல்வதை கூர்ந்து கேட்கும் வாய்ப்பு அதிகம். நாம் கோபப்பட்டால் எதிர்வினையாக அவர்கள் நாம் சொல்வதற்கு செவி சாய்க்காமல் போகும் வாய்ப்பே அதிகம்.

கோபம் வந்தாச்சு, இந்த ’சொல்கிறபடி சொல்வது’ நம்மால் செய்ய முடியாதுன்னா பேசமலே இருந்துடலாம்; அல்லது மன்னிப்பு கேட்டுக்கொண்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்துடலாம். பின்னால நாம் அமைதியா இருக்கும்போது திருப்பி கலந்துக்கலாம்.

 

இந்த நிலைப்பாட்டை நிலை நிறுத்துவதில சில விஷயங்கள் இருக்கு.

முதலாவதா மற்றவரோட கவனத்தை கவரணும். உதாரணமா ஏதாவது ஒரு கடையில ஒரு புகார் கொடுக்கணும் ன்னு வைத்துக்கொள்ளலாம். கடை சிப்பந்தி மற்ற ஒருவரை கவனித்துக்கொண்டு இருக்கிறார். நாம் கொஞ்சம் பொறுமையுடன் இருந்து அவர் அப்போதைய வேலையை முடிக்கும் வரை காத்திருந்து பிறகு நம் புகாரை சொன்னால் அது முறையாக கவனிக்கப்படும் வாய்ப்பு அதிகம். மாறாக நாம் பாட்டுக்கு திடீர்ன்னு கோபத்துடன் கத்த ஆரம்பித்தால், எப்படி புகாரை கவனிக்காமல் இருக்க முடியுமோ அந்த வழியைத்தான் அவர் கண்டுபிடிப்பார்!

 

அடுத்து சரியான இடம். போர்ட் மீட்டிங்கில் உங்களைப்பற்றி ஏதேனும் உங்கள் பாஸ் தவறுதலாக சொல்லிவிட்டால் அப்போதைக்கு சும்மா இருந்துவிடலாம். பின்னால் அவருடன் அவருடைய அலுவலகத்தில் தனியாக இருக்கும் போது நம்முடைய அதிருப்தியை சொல்லலாம்.

என்ன சொல்ல வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். இந்த விஷயத்துக்கு புதிது என்றால் முன் கூட்டியே கொஞ்சம் ஒத்திகை பார்ப்பது நல்லது. கூச்சல், திட்டுவது என்பதெல்லாம் அறவே தவிர்க்க வேண்டியன.

 

நாம் ஒரு செயலுக்கோ நடத்தைக்கோதான் அதிருப்தியை தெரிவிக்கிறோம் என்பது நினைவில் இருக்கட்டும். குறிப்பிட்ட நபரைப்பற்றி சொல்ல வேண்டாம். "நீ முட்டாள்”, "அறிவிலி" போன்ற தனி நபர் தாக்குதல் வேண்டாம்.

 

அதிருப்தி நம்முடையது என்பதும் நினைவில் இருக்கட்டும். அடுத்த நபர் மீது குற்றம் சாட்டுவது நம் நோக்கம் இல்லை. நாம் நம் உணர்ச்சியை தெரிவிக்கப்போகிறோம். “ நீ செய்வதாக சொன்ன வேலையை சரியாக செய்யாதது எனக்கு வருத்தம்", “நீ தாமதப்படுத்தியதால், என்னால் என் வேலையை நேரத்துக்கு முடிக்க முடியவில்லைபோன்ற ரீதியில் இருக்கலாம். 

 

நம் அடிப்படை உரிமைகள் பறிபோகாமல் இருக்கவும் பின்னால் நாம் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கவும்தான் நம் நிலைப்பாட்டை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இப்படி இல்லை என்றால் இதை செய்வது அவசியம்தானா என்று சற்றே சிந்திக்க வேண்டும். குறிப்பாக, நாம் கெட்ட கோபத்துக்கு அடிக்கடி ஆளாவதாக இருந்தால் சிந்தித்தே ஆக வேண்டும்.

நாம் இதுவே சரி என்பதால் வன்முறையை விட்டு அமைதியான இந்த நிலைநாட்டலை கடைபிடிக்கிறோம். இது எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவிடும் என்றெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை அமைய ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறோம். அவ்வளவே. என்ன நடக்குமென்பதில் எதிராளியின் பங்கு அதிகமாகவே இருக்கிறது. எதிராளி இதற்கு மோசமாக நடந்து கொள்ளலாம். அது அவருடைய பிரச்சினை. இந்த அவருடைய பிரச்சினை நம்மையும் பாதிக்குமென்றால் நாம் நகர்ந்துவிடுவதே உசிதம்.



சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 3, 2014, 5:20:19 AM11/3/14
to mintamil
2014-11-03 14:35 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:

 நம் அதிருப்தியை தெரிவிக்க ...

நாம் கோபமா இருக்கிறது நம்ம ’ரைட்’ன்னு சிலர் நினைக்கலாம். கோபப்படுகிறதுக்கான காரணமும் நிஜமா சரியாகவே இருக்கலாம். ஆனால் கொஞ்சம் நாம் கோபப்படுகிறதுல என்ன சாதக பாதகம் ன்னு யோசித்துப்பார்க்கலாம். 

 

நாம் நினைக்கறதை அப்படியே வெளிப்படுத்த முடியாதே? அது பிறருக்கு உவப்பா இராது. அதனால் எப்படி வெளிப்படுத்தணும் என்பதை கொஞ்சம் ஆற்றுப்படுத்தணும். 


இப்படி இருந்தாலும் இடம் பொருள் ஏவல் தெரிஞ்சே நம் நிலைப்பாட்டை பதிவு செய்யணும்.

இப்படி செய்யும்போது மற்றவர்கள் நாம் சொல்வதை கூர்ந்து கேட்கும் வாய்ப்பு அதிகம். நாம் கோபப்பட்டால் எதிர்வினையாக அவர்கள் நாம் சொல்வதற்கு செவி சாய்க்காமல் போகும் வாய்ப்பே அதிகம்.

கோபம் வந்தாச்சு, இந்த ’சொல்கிறபடி சொல்வது’ நம்மால் செய்ய முடியாதுன்னா பேசமலே இருந்துடலாம்;  பின்னால நாம் அமைதியா இருக்கும்போது திருப்பி கலந்துக்கலாம்.


 அடுத்து சரியான இடம். போர்ட் மீட்டிங்கில் உங்களைப்பற்றி ஏதேனும் உங்கள் பாஸ் தவறுதலாக சொல்லிவிட்டால் அப்போதைக்கு சும்மா இருந்துவிடலாம். பின்னால் அவருடன் அவருடைய அலுவலகத்தில் தனியாக இருக்கும் போது நம்முடைய அதிருப்தியை சொல்லலாம்.

 
வணக்கம். எப்போதும் போல அருமையான கருத்து.
 
யோசிக்க நேரம் எடுத்துக்கொள்ளுதல் பற்றி ஒரு கதை சொல்வதுண்டு. ஒரு கணவன் மனைவியிடையே எப்பொழுதும் தகராறு. அடுத்தவீட்டுக்காரி தன் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தாள். அடுத்துவீட்டுப் பெண்ணிடம் இவள் ‘மகிழ்வான வாழ்வுக்கு வழியென்ன’ என்று கேட்டாளாம். “அதற்கு ஒரு மருந்திருக்கிறது. மருந்தென்றால் பத்தியமும் உண்டு தானே. கோபமாகக் கணவன் கத்தும்போது இந்த மருந்தை ஒரு வாய் குடிக்க வேண்டும். ஆனால் முழுங்கி விடக்கூடாது. வாயில் ஒரு நிமிடம் வைத்திருந்து பிறகு தான் விழுங்க வேண்டும்” என்று கூறி ஒரு சீசாவில் மருந்து கொடுத்து விட்டாளாம்.
கணவன் அலுவலகத்திலிருந்து வந்ததும் “இதென்ன வீடெல்லாம் ஒழுங்கு பண்ணி வைக்காமல் கிடக்கிறது என்ன செய்து கிழிக்கிறாய்” என்று சத்தம் போட்டானாம். முன்பெல்லாம் “நீங்கள் என்ன பண்ணிக் கிழிக்கிறீர்கள். எடுத்து வைக்க வேண்டியது தானே” என்பாளாம் மனைவி. இப்பொழுதுதான் மருந்து இருக்கிறதே! மருந்து சீசாவைத் திறந்து ஒரு மிடறு வாயில் ஊற்றிக்கொண்டு மௌனம் காத்தாளாம். கணவன் அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டான்.
பிறகு சோறு போட்டாளாம். சோறில் ஒரு முடி கிடந்ததாம். “இதை மனுசன் தின்பானா? ஒரு நாய் கூடத் திங்காது” என்றானாம். “இவ்வளவு நாளாக நீங்கள் தான் தின்றீர்கள்” என்று சொல்லுபவள் ஒரு வாய் மருந்து ஊற்றிக்கொண்டு சும்மாயிருந்தாள். அவன் உண்டுவிட்டுப் போய்விட்டான். (நாமெல்லாம் இந்த முடி தலையிலிருந்தாலும் அழகு; இலையிலிருந்தாலும் அழகு என்போம்!)
மெல்ல மெல்ல அந்த வீடு சொர்க்கமாயிற்றாம். அடுத்தவீட்டுப் பெண் சந்தித்து “இப்ப எப்படி இருக்கிறீர்கள்” என்ற கேட்டபோது. “நல்லா இருக்கோம். மருந்துதான் தீர்ந்திருச்சு” என்றாளாம்.
இங்கு மருந்து எது? எண்ணிப்பார்க்க அவனுக்குக் கிடைத்த ஒரு நிமிட நேரம். அவள் மௌனம் சாதித்தபோது அவள் யோசிக்கக் கிடைத்த அவகாசம். இதுவே ம்கிழ்ச்சிக்கான அதிசய மருந்து.
இடையூறுக்குப் பொருத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் திரு திவாஜி.
நன்றி
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

க்ருஷ்ணகுமார்

unread,
Nov 3, 2014, 5:28:32 AM11/3/14
to mint...@googlegroups.com
ம்............அன்பின் ஸ்ரீ திவா ஜி அவர்கள் இப்போது இங்கு எழுதியுள்ள பதிவில் நல்ல கோபத்தை எப்படி வெளிப்படுத்தலாம் என்று எழுதியிருக்கிறார்.

ம்...........கோபத்தை முதலில் வெளிப்படுத்தியே ஆக வேண்டும் என்பது கூட அவச்யமில்லை தான். சினம் என்பது பேரிழிவான சமாசாரம் (ஆன்மீக்த்தின் பாற்பட்டு).  சினத்துக்காட்பட்டோர் அதிலிருந்து விரைவில் மீள்வதில்லை என்பதும் இன்னொரு விஷயம்.  சினம் போன பின்னும் கசடுகள் அழிவதற்கு மேலும் கால அவகாசம் ஆகிறது.

நல்ல கோபம் ............. கெட்ட கோபம்........... ம்ஹும்.......... கோபம் kOpam தான்............ ஆன்மீகத்தில் நாட்டமுள்ள அன்பர்களுக்கு ( குறிப்பாக) பேரிழிவான செயல் கோபம். இதில் நல்ல கெட்ட என இரண்டு வகை தொகைகளை பிரிப்பதற்கு அவச்யம் (ஏ) இல்லை.

சரி............ உடன்பாடில்லாத ஒரு நிகழ்வை எப்படி எதிர்கொள்வது? அதற்கு இந்த பதிவு நல்ல கருத்துக்களை முன் வைக்கிறது.

ஒரு தொலைமுனைப்புள்ளி (நன்றி பாண்டியராஜா ஐயா) யிலிருந்து ஆன்மீகம் சார்ந்து கோபத்தை எப்படி  அணுகுதல் என்பதற்கு யோசனை வருகிறது.  கால அவகாசம் இருக்கும் போது பகிர்கிறேன்.

நீங்கள் யதார்த்தத்திலிருந்து அணுகுகிறீர்கள்.  பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்
க்ருஷ்ணகுமார்

திவாஜி

unread,
Nov 3, 2014, 6:44:09 AM11/3/14
to mint...@googlegroups.com

2014-11-03 15:58 GMT+05:30 க்ருஷ்ணகுமார் <vraj...@gmail.com>:
நீங்கள் யதார்த்தத்திலிருந்து அணுகுகிறீர்கள்.

ஐயா, மிகச்சரியாக புரிந்து கொண்டீர்கள்!
இந்த இழையில் வரும் கருத்துக்கள் முக்காலே மூணு வீசம் ஆங்கில புத்தகங்களில் படித்தவையே. ஆகையால் இதில் யதார்த்தமே ப்ரதானம். மற்றவர் கண்டுள்ள வழி முறைகளில் என்னுடையதை வலிந்து புகுத்த முடியாதல்லவா? என்னுடையதை தனியாகவே சொல்ல வேண்டும்.
ஆன்மீகத்தில் கோபம் பெரும் தடையான இரண்டில் ஒன்று. அது குறித்த தங்கள் கருத்துகளை தயை செய்து சொல்லுங்கள்! யாருக்கு ப்ரயோஜனமோ இல்லையோ எனக்கு ப்ரயோஜனமாக இருக்கும்.

திவாஜி

unread,
Nov 3, 2014, 6:45:06 AM11/3/14
to mint...@googlegroups.com

2014-11-03 15:50 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
இடையூறுக்குப் பொருத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் திரு திவாஜி.

:-))))
பிரச்சினை இல்லை. சுவையான கதை!

திவாஜி

unread,
Nov 4, 2014, 4:44:29 AM11/4/14
to mint...@googlegroups.com

2014-11-03 17:14 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
பிரச்சினை இல்லை. சுவையான கதை!

'நல்ல' கோபம், 'கெட்ட' கோபம் – 5

விமர்சனம் என்பதை பல பேரால் சரியாக ஆள முடியவில்லை. நம் வேலையை யாரும் விமர்சிக்கக்கூடாது என்றே பலரும் நினைக்கிறோம். பாராட்டும் ஒரு விமர்சனம்தான் என்பதை நினைவில் கொள்ளவும்!

நாம் ஒரு அறிக்கையை தயார் செய்து கொண்டுப்போய் கொடுக்கிறோம். பாஸ் அதை படித்துவிட்டு "இந்த அறிக்கை ரொம்ப மோசம்என்கிறார். நாம் அதை எப்படி எடுத்துக்கொள்கிறோம்?

இந்த அறிக்கை ரொம்ப மோசம் >> என் அறிக்கைகள் ரொம்ப மோசம் >> என் வேலைகள் எல்லாமே ரொம்ப மோசம் >> நான் ரொம்ப மோசம்!

இப்படி மனசு போனால் நமக்கு கோபம் வந்து எதிர்வினைக்கு தயாராகிவிடுகிறோம்!

ஆகவே சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.

நம் வேலைதான் விமர்சனத்துக்கு உள்ளானதே தவிர நாம் அல்ல.

விமர்சனம் நம் வேலையை செம்மை படுத்தக்கூடியது. ஆகவே நம் உறவும் பலப்படலாம்.

விமர்சனம் செய்வது பாஸ் இன் உரிமை; கடமையும் கூட. உங்களை முன்னேற்றுவதும் அவருடைய வேலைகளில் ஒன்று.

கேட்கும் விமர்சனங்களை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கூட ஒன்றுமில்லை. அதை நிதானமாக ஆராய்ந்து சரி என்று நினைப்பதை ஏற்றுக்கொண்டு மற்றதை தள்ளிவிடலாம்.

எல்லோருக்குமே அவ்வப்போது விமர்சனங்கள் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. நாம் விமர்சனத்துக்கு ஆட் படாமலே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.

பொத்தாம் பொதுவாக யாரும் விமர்சித்தால் குறிப்பான கேள்வியை கேட்கலாம். அது அவர்களை வலுவிழக்கச்செய்து விடலாம். யோசிச்சு பாருங்க... நீ முட்டாள்ன்னு யார்கிட்டேயாவது சொன்னா அவங்க சிரிச்சுகிட்டே " அப்படியா? ஏன் அப்படி சொல்லறீங்க?” ன்னு கேட்டா அவங்களை என்ன செய்யமுடியும்? குறிப்பான காரணத்தை சொல்ல வேண்டி இருக்கும். அப்படி காரணத்தை சொல்ல முடியாவிட்டால் பேசாமல் இருக்க வேண்டியதுதான்! ஏதேனும் குறிப்பிட்டு சொன்னால் அதற்கு "ம்ம்ம் .. அப்படியா? அந்த விஷயத்தில நான் செஞ்சது முட்டாள்தனமா இருக்கலாம்" ன்னு சொல்லிட்டாலும் நாம் வாயை மூட வேண்டியதுதான்!

ஆமாம்! நமக்கு கிடைக்கிற விமர்சனம் எல்லாமே சரியான ஆரோக்கியமான விமர்சனம் இல்லைதான். அதில பல பொய்கள் இருக்கலாம்; தவறான முடிவுகள் இருக்கலாம்; வேண்டுமென்றே கூட சில பழிகள் சுமத்தப்படலாம். இதை எல்லாம் எப்படி எதிர்கொள்வது? எப்படி வலுவிழக்கச்செய்வது?

ஒரு உதாரணத்தைத்தான் மேலே பார்த்தோம். விமர்சனத்தில் கொஞ்சம் உண்மை இருந்தால் அதை ஒப்புக்கொண்டால் எதிராளியால் அதற்கு மேல் ஒண்ணும் சொல்ல முடியாது. வேணும்ன்னு சண்டை வளர்க்க வந்த ஆசாமிகிட்ட "ஆமா, இந்த குறிப்பிட்ட விஷயத்தில நீ சொல்கிறது சரியே" ன்னு சொல்ல கொஞ்சம் ஆடிப்போயிடுவார்! அடுத்து என்ன செய்யறதுன்னு அவர் யோசிக்கிறதுக்குள்ள நாம் அடுத்த விஷயத்துக்கு போயிடலாம்!

பொத்தாம் பொதுவான் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டால் நாம் கெட்ட கோபத்துக்கு ஆளாகி சண்டையை ஆரம்பிக்காமல் குறிப்பா விமர்சனம்செய்யச் சொல்லி கேட்கலாம். மேலே உதாரணம் பார்த்தோம் இல்லையா?

அடுத்து கொஞ்சம் எம்பதி காட்டலாம். நீ எப்பவும் லேட்டாத்தான் வரே!என்று திட்டும் நண்பரிடம் " ஆமாம். சரிதான். எப்பவுமே சரியான நேரத்துக்கு வரும் பழக்கம் எனக்கும் கிடையாது"
,  நிஜமா அவ்வளவு எரிச்சல் இருக்கா?” ன்னு கேட்டா .... முதலாவது பாதி உண்மை, ஒப்புக்கிறதுல பிரச்சினை இல்லை. எல்லாருமே சரியான நேரத்துக்கு வரும் பழக்கம் உடையவர்கள் இல்லை! அடுத்து கொஞ்சம் எம்பதி காட்டுவதால கொஞ்சம் இளகி "ஆமா, இன்னைக்கு எல்லாமே தப்பா போகிறது" ன்னு தன் பிரச்சினையை அவர் சொல்லலாம். அது புது பாதையை திறக்கும்.



திவாஜி

unread,
Nov 5, 2014, 1:30:08 AM11/5/14
to mint...@googlegroups.com

2014-11-04 15:14 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
அடுத்து கொஞ்சம் எம்பதி காட்டலாம்.

தெ க்ரேட் எஸ்கேப்!

உங்க கடமை தவறலைன்னா, சில சமயம் நாம செய்யக்கூடிய ரொம்ப நல்ல செயல், பிரச்சினை இருக்கும் இடத்திலேந்து நகர்வது. சூழ்நிலையை பொருத்து இது ச்சும்மா 10 செகண்ட் கண்களை மூடி கவனத்தை திருப்புவதிலிருந்து, மன்னிப்பு கேட்டுக்கொண்டு ரூமிலிருந்து வெளியே போவது; சாரி, அப்புறம் சந்திக்கிறேன்ன்னு சொல்லிட்டு 20 நிமிஷம் நடைபயிற்சிக்கு போவது; விடுமுறை எடுத்துக்கொண்டு வெளியூர் போவது என்று இருக்கலாம்.


 நாம் நேரடியா ஈடுபட்டு இருக்கிற விவாதம் சூடாகி வார்த்தைகள் தடித்துப்போனால் 20 நிமிஷம் நடைக்கு போவதே சரி. ஏன்? கெமிகல்ஸ் ரத்தத்திலிருந்து அகன்று  நம் மனசு சமநிலைக்கு திரும்ப அவ்வளவு நேரம் ஆகும். இப்படி விலகுவதால நாம் உணர்ச்சிவசப்படாமல் திருப்பி நிலமையை பாரபட்சமில்லாம புத்தியால பார்க்க இயலும். பின்னால வருத்தப்படும்படி ஏதேனும் சொல்லிவிடுவதையும் தடுக்கும். பாட்டரி ரீசார்ஜ் செய்கிறாப்போல இது!

 

இப்படி உணர்ச்சி கொந்தளிக்க வாக்கிங் போகும் போது கவனம் தேவை. ட்ராபிக்ல போய் மாட்டிக்காதீங்க! அப்படி போய் ட்ராபிக்கை கவனிக்கறதால கவனம் திரும்பும்ன்னா சரி. ஆனா உணர்ச்சில ட்ராபிக்கை கவனிக்காம ஏதேனும் விபத்து நடக்கும் வாய்ப்பு அதிகமாவே இருக்கு!  மைதானம், பார்க் போல இடஞ்சல் இல்லாத இடங்களே உசிதம்!

 

யோகா (சவாசனம்), ஆழ்ந்த மூச்சு பயிற்சி செய்தல், படுத்துக்கொண்டு தசைகளை தளர்த்துதல், சாந்தமளிக்கிற இசையை கேட்பது போல பல அமைதி உண்டாக்கும் விஷயங்கள் இருக்கின்றன. இதை எல்லாம் நாம் தினசரி நடத்தையிலேயே கொண்டு வந்து விடலாம். எதுக்காக பிரச்சினை வரும் வரை காத்துக்கொண்டு இருக்கணும்? மனசை முன்னேயே அமைதியாக்கிகொண்டு விட்டால் பிரச்சினை தோன்றும் வாய்ப்பே குறைவாக இருக்கும்!இதுக்கெல்லாம் ஏது சார் நேரம் எனக்கு?” ந்னு சொல்லறீங்களா? நாம காபி, டீ குடிக்கப்போறேன்னு    ‘எஸ்கேப்’ ஆகிற நேரம், வெட்டியா இண்டர்நெட்ல இருக்கிற நேரம்,  அழுவாச்சி சீரியல் பாக்கிற நேரம் எல்லாத்தையும் கணக்கு பண்ணா இது நல்லா செலவழிக்கிற நேரம்தான்!

 

சில ரிலாக்ஷேஷன் முறைகளை பார்க்கலாம். வெகு எளிது. வேண்டியது எல்லாம் படுக்க இடம், ஒரு விரிப்பு. அவ்வளோதான். முக்கியமான குறிப்பு: தூங்கிடாதீங்க!

காலணிகளை கழட்டி விட்டு, உடைகளை தளர்த்திவிட்டு மல்லாக்க படுங்க. கண்களை மூடிக்கொள்ளவும்.

3 முறை ஆழ்ந்த மூச்சு எடுத்துவிடவும்.

கைகள் பக்கவாட்டில் இருக்கட்டும். கால்களை தேவையானால் கொஞ்சம் அகட்டிக்கொள்ளலாம்.

கைகளை பத்து வினாடிகள் இறுக்கவும். அந்த இறுக்கத்தில் கவனத்தை செலுத்தவும். பின் தளர்த்தவும். கைகளில் உணர்வு வித்தியாசப்படுவதை கவனிக்கவும்.

இதே போல வரிசையாக முன் கை, மேற்கை, தோள் ந்னு இறுக்கி தளர்த்தி அந்த வித்தியாசத்தை கவனிக்கவும்.

இதே போல மார்பு, வயிறு, முதுகு..

பின் தொடை, முழங்கால், கால், கால்விரல்கள்….

ஐடியா புரிஞ்சுடுத்து இல்லையா? உடம்பின் தசைகளை பகுதி பகுதியாக இறுக்கி தளர்த்தி பயிற்சி செய்யவும்.

பின் உடம்பு  முழுக்க தளர்த்திவிட்டு அப்படியே கொஞ்சம் நேரம் படுத்து இருக்கவும்.

கண்களை மூடிய படியே வலது பக்கம் புரண்டு எழுந்திருக்கவும். அமைதியாக கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்து பின் மெதுவாக கண்களை திறக்கவும்.

 

இதெல்லாம் கடினம் என்றால் மாற்றாக மூச்சு கவனிப்பு செய்யலாம்.

முன் சொன்னது போல படுத்துக்கொண்டு… . கண்களை மூடிக்கொள்ளவும்.

மெதுவாக ஆழ்ந்த மூச்சு எடுக்கவும். கஷ்டப்படாமல் …. மூச்சை பிடித்துக்கொள்ளாமல்….

(இப்படி செய்வது எப்போது கடினமாக தோன்றினாலும் இயல்பு நிலைக்கு திரும்பவும்.)

உள்ளே வெளியே …. உள்ளே வெளியே உள்ளே வெளியே

இப்படி செய்யும்போது மூச்சை கவனிக்கவும். அது உள்ளே செல்வது பரவுவது. வெளியே வருவது. கூடவே எண்ணிக்கொண்டு வாருங்கள். ஓண்ண்ண்ண்ண்ண்……..ணூ

ரெண்ண்ண்ண்ண்ண்……. டு

மூஊஊஊஊஊஊ ….. ணூ ......


கஷ்டப்படாமல் செய்யவும். மொத்தம் 32 வரை செய்யலாம்.

எங்கோ கவனத்துடன் செய்து கொண்டு நாப்பத்தி …. நாலு, நாப்பத்தி..... அஞ்சு  என்று எண்ணிக்கொண்டு இருப்பதை கண்டுபிடித்தால்…. கீழிறங்கு வரிசையில் எண்ணவும். ஒன்றுக்கும் கீழே எண்ணிக்கொண்டு போவது அரிது!

 

இன்னொரு வழி வயிற்றால் மூச்சு விடுவது. காற்று வாத்தியக்கருவிகளை இசைப்போர் இப்படிதான் செய்கிறார்களாம்.

சாதாரணமாக மூச்சு விடுவதில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று மார்பு விரிந்து சுருங்குவது. இரண்டாவது வயிறு விரிந்து தளர்ந்து சுருங்குவது. இரண்டுமே மூச்சு விடும் வழி என்றாலும் சாதாரணமாக மார்பு விரிந்து அடங்குவதே அதிகமாக இருக்கும். உணர்ச்சிவசப்படும்போது இப்படி மூச்சு விடுவது அதிகமாகும். இது இதயத்துடிப்பையும் அதிகரித்து நமக்கு படபடப்பை உண்டாக்கும்.

 

மாற்றாக வயிறு உள்ளே வெளியே செல்கையில் ஏற்படும் மூச்சு நம்மை தளர்த்தும்.

இப்போதே சொல்லிவிடுகிறேன்; வயிற்றில் உணவோ, பானமோ  இருந்து வயிறு நிறைந்து இருக்கும் சமயம் இதை செய்ய வேண்டாம்!

 

முன் போலவே படுத்துக்கொள்ளலாம். . கண்களை மூடிக்கொள்ளவும்.

ஒரு கையை மார்பு மீதும் மற்றதை வயிற்றின் மீதும் வைக்கவும்.

இயல்பான மூச்சு விட்டு…. மார்பு, வயிற்றுடன் கைகள் எப்படி அசைகின்றன என கவனியுங்கள்.

இப்போது மூக்கின் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும்; மார்பு விரியாமல் அப்படியே இருக்கட்டும். வயிற்றுபகுதி வெளியே நகருவதால் மூச்சு உள்ளே போகட்டும்.

வாயை சற்றே திறந்து மூச்சை மெதுவாக  வெளியேற்றவும்; மார்பு அசைய வேண்டாம். .வயிற்றுப்பகுதி தளருகையில்  மூச்சு வெளியே போகட்டும். நுரையீரல் தானே சுருங்கும் தன்மை உடையதால் காற்று தானாக வெளியேறும்.

 

இந்தப்பயிற்சியில் இருக்கும் ஆதாயம் என்னவென்றால் பயிற்சி கிடைத்து புரிந்த பின்னர் இதை எங்கே எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். படுத்துத்தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. நிற்கிறோமோ நடக்கிறோமோ உட்கார்ந்து இருக்கிறோமோ அந்த நிலைகளிலும் செய்யலாம். கண்களை மூடிக்கொள்ளாவிடில் எதிரே ஏதோ ஒரு புள்ளியில் பார்வையை நாட்டி செய்யலாம்.

 

 ‘டென்சன்’ அதிகமாக இருக்கும் போது அதை குறைக்க இன்னொரு எளிய வழியை சொல்கிறார்கள். கட்டைவிரல் ஆள்கட்டிவிரல்களுக்கு நடுவே சதைப்பற்றான இடம் இருக்கிறதல்லவா? இரண்டுக்கும் நடுவில் இருக்கும் மெல்லிய தோல் அல்ல. இன்னும் ஒரு இன்ச் கீழே சதை ஆங்.. அதேதான்! சந்தேகமிருந்தா படத்தை பாருங்கள்!


Inline images 1


மற்ற கையின் கட்டைவிரல் ஆள்கட்டிவிரல் நுனிகளுக்கு நடுவால் இந்த இடத்தை பிடித்து அழுத்தவும். (இது அக்குபங்சர் முறையில ஹோகுஎன்கிற பாய்ண்ட்!) கொஞ்சம் வலிப்பது போல இருக்கும்! பரவாயில்லை. ஐந்து வினாடிகள் அழுத்தி விட்டுவிடுங்கள். அடுத்து இதே போல கை மாற்றி செய்யவும். இதை இன்னும் இரண்டு முறை இரு பக்கமும் செய்யவும். அவ்ளோதான்!


தூங்கி எழுந்திருங்க! அடுத்த பதிவிலே மேலே பார்க்கலாம்!



திவாஜி

unread,
Nov 6, 2014, 10:25:04 AM11/6/14
to mint...@googlegroups.com

2014-11-05 11:59 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
தூங்கி எழுந்திருங்க! அடுத்த பதிவிலே மேலே பார்க்கலாம்!

நிகழ் காலத்தில் இருப்பது என்பது இன்னொரு சற்றே மாற்றிய பயிற்சி!

காலா காலமா நாம சொல்லிக்கிட்டு இருக்கிற பயிற்சியை புது தொன்னையில வெளிநாட்டினர் கொடுத்து இருக்காங்க!  இதுக்கு மைண்ட்புல்னஸ்ன்னு பேராம்!

படுத்துக்கொள்ளலாம். அல்லது நாற்காலியில அமரலாம்.

கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் மறந்துட்டு (ஹும்! அவ்வளோ லேசான காரியமா அது? ன்னு கேட்கிறது இங்க தெளிவா கேட்குது!) இந்த கணத்தில மனசை குவியுங்க. எவ்வளோ நேரம் முடியுமோ அவ்வளவு நேரம்.

மனசை எதில குவிக்கிறது? மூச்சில குவிக்கலாம். முன்னே சொன்ன மாதிரிதான். மூச்சு உள்ளே வெளியே போவதை கவனிக்கலாம்.

பின்னர் நம் புலன்களை ஒரு டூருக்கு அழைச்சு போகலாம். கண்களை திறந்திருந்தா மெதுவா சுழட்டி ரூமில் இருப்பதை கவனிக்கலாம்.

கண்களை மூடி வெளியிலிருந்து சப்தங்களை கேட்கலாம். தெருவில் ஓடும் ஆட்டோ, கார், எங்கோ தூரத்தில் கூவும் குயில், அடுத்த ரூமில் இருக்கிற கடிகாரம், நாலாவது வீட்டில் இருப்பவர்கள் பேசுகிற பேச்சு.... பல விஷயங்கள் இதெல்லாம் இருக்குன்னு இப்பதான் கவனத்துக்கே வரும். நம்ம வீட்டு பக்கத்தில கிளி கூடவா இருக்கு? ன்னு ஆச்சரியமா இருக்கும்.

அடுத்து சுவை.... வாய் ஏன் கசக்குது?

அடுத்து தொடுதல். நாம் படுத்து இருக்கிற பாயோட சுரசுரப்பு.... தரையில் பட்டு இருக்கிற குதிகாலில் குளிர்ச்சி.... ஜன்னல் வழியா வர காத்தோட வெம்மை....

இந்த மாடர்ன் வாழ்க்கையில் நாம் ஓடற ஓட்டத்துல பல உணர்ச்சிகளே காணாம போயிருக்கும்! ட்யூன் அவுட் செய்திருப்போம். அதெல்லாம் இன்னும் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்!

இப்படி மனசை/ உணர்ச்சிகளை கவனிக்கறப்ப மனசு கொய்யட் ஆகும்ன்னு முன்னேயே பாத்திருக்கோம்!

இப்படி செய்கிறப்ப மனசுக்குதிரை எங்கான புல் மேயப்போயிடுத்துன்னா ... கவலை வேண்டாம். திருப்பி கவனத்தை மூச்சுக்கு கொண்டு வாங்க. அவ்ளோதான்!

நாளாக ஆக இந்த உணர்ச்சிகளை எல்லாம் சும்மா பதிவு செய்யணும். அவ்ளோதான். அதைப்பத்தி எண்ணத்தை ஓட்டக்கூடாது!  சத்தம் கேக்கும்போது ... பாத்திரம் விழுற சத்தம் கேக்குதா? உடனே இன்னார்தான் பாத்திரத்தை கீழே போட்டு இருப்பாங்க ன்னு ஆரம்பிச்சா திருப்பி வேதாளம் முருங்கை மரம் ஏறிடும்! வெறும் சாட்சி பாவனையோட இதை எல்லாம் பார்க்கணும்! பயிற்சி செய்யச்செய்ய நல்ல பலனை தரும் இது!



திவாஜி

unread,
Nov 6, 2014, 11:59:36 PM11/6/14
to mint...@googlegroups.com

2014-11-06 20:54 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
பயிற்சி செய்யச்செய்ய நல்ல பலனை தரும் இது!

எல்லாமே தப்பாக போகும்போது...

 

வாழ்கை அதிசயமானது! அடுத்த அதிர்ச்சி எங்கிருந்து எப்போது வரும் என்று யாருமே சொல்ல முடியாது.  அடுத்து என்ன நடக்கபோகிறது என்று யாருமே நிச்சயமாக சொல்ல முடியாது! நாம் நினைத்ததெல்லாம் நினைத்தபடியே நடக்கும் என்றும் சொல்ல முடியாது. (நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடப்பதையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை! அருமையான திரைப்பாடல்!) உண்மையில் நாம் திட்டமிட்டபடி எப்போதுமே நடப்பதில்லை. ஒரு சின்ன மாற்றமாவது இருக்கிறது. அது பெரிய விளைவை ஏற்படுத்தாதபோது நாம் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறோம்! இருந்தாலும் எப்போதுமே நாம் நினைத்தபடி எல்லாம் நடக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மட்டும் போவதில்லை. அப்படி நடக்காத போது உணர்ச்சிவசப்படுகிறோம்! சின்ன வருத்தத்தில் இருந்து கடும் கோபம் வரை எது வேண்டுமானாலும் ஏற்படுகிறது.


என்ன செய்யப்போகிறோம்?


உடனடியாக செய்யக்கூடியது என்ன? நீண்ட கால திட்டமாக செய்யக்கூடியது என்ன?


உதாரணமாக ஒருவரை ஒரு வேலையை செய்யச்சொல்கிறோம். ஆபீஸ் என்று வைத்துக்கொள்வோம். முக்கியமான வேலை ஒன்றை ஒரு நபரிடம் ஒப்படைக்கிறோம். இதற்கு 2 மணி நேரம் ஆகும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இரண்டு மணி நேரத்தில் அது முடிந்து நம்மிடம் வந்து சேரவில்லை. என்னடா ஆச்சு என்று போய் பார்த்தால் ஆசாமி காபி சாப்பிட்டுக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு இருக்கிறார். நமக்கு கோபம் மேலிடுகிறது. உடனே அவரை திட்டுகிறோம்.


என்னவெல்லாம் நடந்து இருக்கலாம்?


வேலையை ஒப்படைத்த போது அது முக்கியம், அவசரம் என்று சொன்னோமா? இல்லை என்றால் தப்பு நம்முடையது.

வேலையை கொடுக்கும்போது நம் மனநிலை என்ன? இரண்டு அது முடிந்துவிடும் என்று நினைத்திருந்தால் தப்பு நம்முடையது. அது இரண்டு மணி நேரத்தில் முடியும் சாத்தியக்கூறுகள்தான் இருந்தது. முடியும் என்று நினைத்தால் அது நம் தவறு.

ஆமாம், முடிந்துவிட்டதா என்று பார்க்கப்போன போது முடிந்துவிட்டதா என்று ஏன் கேட்கவில்லை? அதை முடித்து அவர் போக வேண்டிய இடத்துக்கு அனுப்பி இருக்கலாம். அல்லது வேலை கடினமானதாக இருக்கலாம். அதை எப்படி செய்வது என்று அவர் மற்றவர்களுடன் காபி குடித்துகொண்டு விவாதித்து கொண்டு இருக்கலாம்!


அவசரப்பட்டுக்கொண்டு தீர விசாரிக்காமல் ஒரு முடிவுக்கு நாம் வந்துவிட்டோமோ!


சரி, ஒரு வேளை தவறு நம்முடையது இல்லை என்றால் என்ன செய்யலாம்?


இப்போதைக்கு செய்யக்கூடியது? ஏன்முடிக்க முடியவில்லை என்று விசாரித்து அவரால் முடியாது என்றால் வேறு ஒருவருக்கு கொடுக்கலாம். தாமதமானதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்கலாம். உதாரணமாக க்ளையண்டுக்கு தாமதமாகும் என்பதை தெரிவித்து சமாதானமும் சொல்லலாம். அதை விட்டு கோபத்தில் கத்தினால் மற்றவர்களும் மூட் அவுட் ஆகிவிடுவார்கள். சம்பந்தப்பட்ட நபரும் அவமானப்படுவார். மொத்தத்தில் நல்லது நடக்காது.


நீண்ட கால நடவடிக்கையாக இதில் செய்ய வேண்டியது?


விசாரித்ததில் இந்த நபர் இந்த மாதிரி வேலைகளை திறம்பட செய்ய முடியாது எனில் வேறு மாதிரி வேலை கொடுப்பதா; செய்ய முடியும் என்றால் ஊக்குவிப்பதா; அக்கறை இல்லை என்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதா அல்லது வேலையை விட்டு நீக்குவதா என்பதை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.

சுருங்கச்சொல்ல அவசரப்பட்டு வினையாற்றாதீர்கள். நிதானமாக விசாரித்து செயல் படுங்கள்.

திவாஜி

unread,
Nov 10, 2014, 3:36:06 AM11/10/14
to mint...@googlegroups.com

2014-11-07 10:29 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
சுருங்கச்சொல்ல அவசரப்பட்டு வினையாற்றாதீர்கள். நிதானமாக விசாரித்து செயல் படுங்கள்.

அடுத்து நாம் எப்படி எல்லாம் இருக்க முடியும் ந்னு பார்க்கலாம்.

 

தன்னைத்தானே உற்சாகப்படுத்திக்கிறது பெரிய விஷயம். உழைப்பு உழைப்பு உழைப்பு சிலர் திருப்பித்திருப்பி அயராம ஒரே விஷயத்தை செய்து செய்து அதுல பாண்டித்தியம் பெறுவாங்க. உலக அளவில சிறந்த விளையாட்டு வீரர்கள் இப்படி இருப்பாங்க.  நிறைய மேற்கத்திய மக்கள் ஒரு குழந்தையோட பலவீனங்களை ஒத்துப்பாங்க. அவங்களோட பலத்துல போகஸ் செய்வாங்க. இந்திய/ சீன மக்கள் அப்படி இல்லை. ஒரு விஷயம் கைவரலைன்னா இன்னும் கொஞ்ச நேரம் அதுக்காக உழைக்கணும்; அதெப்படி வராமப்போகும்? அவ்ளோதான்.  இப்படி இருக்கிற வேலை நடத்தை என்கிற கலாசாரம் மிகச்சிறந்த உந்து சக்தியா, உற்சாகமா, விடா முயற்சியா உருவெடுத்து மத்தவர்களை காட்டிலும் அவர்களை சிறப்பானவர்களாக்குது.

 

 நம் யோசித்து திட்டமிடும் திறனையும், பிரச்சினைகளை தீர்க்கும் திறனையும் நம் உணர்ச்சிகள் பாதிக்குதா? அப்படி எவ்வளவு தூரம்  பாதிக்க நாம் அனுமதிக்கறோம் என்பதை பொருத்தே நம் மன வலிமை இருக்கு. வாழ்க்கையில் நாம் சாதிக்க முடிவது எவ்வளோ என்பதும் இதிலேயே இருக்கு. என்ன வேலை செய்கிறோமோ அதை உற்சாகப்படுத்துவதா நம் உணர்வுகள் அமைஞ்சுட்டா அது போல வேறில்லை!

 

நம் உந்துதல் சக்தி (impulse) கட்டுப்படுத்தப்படணும் ன்னு சொன்னோம் இல்லையா?குழந்தைகளாக இருக்கிறப்பவே இது நடக்கணும். ஒரு அருமையான சோதனை. நாலு வயசு குழந்தைகள் றைந்த ஒரு வகுப்பில் ஒருவர் சொல்கிறார் - குழந்தைகளே!உங்கள் எல்லாருக்கும் இனிப்பு தரப்போறேன். இங்கே வைத்திருக்கிறேன் பாருங்க. ஆனால் எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு. போய்விட்டு வந்து கொடுப்பேன். ஒவ்வொருத்தருக்கும் இரண்டு கிடைக்கும். இல்லை, அவசரம் இப்பவே வேணும்ன்னு யாரும்  நினைச்சா  இப்பவே ஒண்ணே ஒண்ணு எடுத்துக்கலாம்.அப்புறமா கிடைக்காது! சரியா?”

 

உடனே பல குழந்தைகள் ஒரு இனிப்பை எடுத்துக்கொண்டாங்க. சிலர் மட்டும் பொறுமையாக காத்து இருந்தாங்க. அது சுலபமாக இருக்கலை. பாட்டுப் பாடியோ விளையாடியோ தன்னைத்தானே கட்டுப்பாட்டில் வைத்து இருந்தாங்க. ஆராய்ச்சியாளர் திரும்பி வந்த பிறகு அவர்களுக்கு இரண்டு இனிப்பு கிடைத்தது. இந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை ஆய்வு தொடர்ந்தது. யார் இப்படி கட்டுப்படுத்திக்கொள்ள முடிந்ததோ அவர்கள் சமூக உறவுகளில் இன்னும் பலமாக இருந்தனர்; அவங்க இன்னும் பல உந்துதல்களை சமாளித்து நினைத்த இலக்கை அடைய முடிந்தது. பிரச்சைனைகளால் பாதிக்கப்படவில்லை; மனசு உடைந்து போகவில்லை. நம்பிக்கையுடன் புதிய விஷயங்களில் ஈடுபட்டு வெற்றியடைந்து கொண்டு இருந்தாங்க.மாறாக உடனே இனிப்பை எடுத்தவர்களில் பலரும் நம்பிக்கையில்லாமல் பிரச்சினைகளை சமாளிக்க கஷ்டப்பட்டுக்கொண்டு சண்டை சச்சரவுகளில் ஈடு பட்டுக்கொண்டு இருந்தாங்க.  இந்த இரு குழுவுக்கும் இடையில் சாட் (SAT) மதிப்பெண்களில் 200 புள்ளிகள் வித்தியாசம் இருந்தது.

 

இந்த இலக்கு நோக்கிய, வெகுமதியை பெறுவதை தள்ளிப்போடக்கூடிய சுய கட்டுப்பாடே உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதின் சாரம்!

 

அடுத்ததா ...
எல்லா விதமான செயல்களையும் பாழாக்கக்கூடிய மனக்கலக்கத்தின் அச்சாணின்னு ஒண்ணை சொல்ல முடியுமா? அப்படிச்சொல்லக்கூடியது கவலைதான்! கவலைப்பட்டுப் பட்டே காலம் உழைப்பு எல்லாமே விரயம் ஆகும். சதா கவலைப்படுகிறவர்களோட படிப்புத்திறன் என்ன மாதிரி சோதிச்சுப்பாத்தாலும் மோசமாகத்தான் இருக்கும்!
சிலருக்கு காலை எழுந்தது முதலே கவலைதான்! ஒரு கவலை தர விஷயம் முடிஞ்சாச்சுன்னா அடுத்த கவலை வரும்! கவலை தர ஒண்ணுமே இல்லைன்னாக்கூட அட கவலையே இல்லையே, என்ன இதுந்னு கவலை வரும்!

பொதுவா கவலை கெட்டது என்றாலும் பரிட்சைப்பத்தின கவலை சமாசாரம் தமாஷானது! பலருக்கும் கவலை படுவது மனசை வேறு விஷயங்களில் போகாம தடுத்து, நினைவாற்றலை குறைச்சு மோசமா செய்யத்தூண்டும். ஆனா சிலருக்கு பரிட்சையில மோசமா செய்துடுவோமோ என்கிற கவலையே இன்னும் கடினமா உழைக்க வெச்சு நல்ல மார்க் எடுக்க வைக்கும்! இந்த ட்ரிக்கைத்தான் உணர்ச்சிகளை கையாளத்தெரிந்த சிலர் பயன்படுத்தறாங்க!



திவாஜி

unread,
Nov 11, 2014, 6:43:19 AM11/11/14
to mint...@googlegroups.com

2014-11-10 14:05 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:

இந்த ட்ரிக்கைத்தான் உணர்ச்சிகளை கையாளத்தெரிந்த சிலர் பயன்படுத்தறாங்க!


நேர்முறை எண்ணங்கள்

நம்பிக்கை பெரிய வரப்பிரசாதம். 

ஒரு முறை ஸ்கூல் முடித்து காலேஜ் சேர்ந்த மாணவர்களை வைத்து ஆய்வுகள் செய்தார்கள். அதுக்கு முதல் பரிட்சை முடிவுகளை ஆராய்ந்தாங்க. அதில  ’நிச்சயம் நல்லா செய்வோம்’ என்கிற எண்ணம் இருக்கிறவங்க நல்ல மதிப்பெண்கள் எடுத்தாங்க. இந்த எண்ணம் இருப்பது சாட் மதிப்பெண்களைவிட சரியா முடிவை காட்டுவதாக தெரிந்தது. எதானாலும் நல்லா செய்ய எனக்கு திறமையும் மனதிடமும் இருக்குஎன்ற எண்ணம் முக்கியம்.

 

நம்பிக்கையோட அண்ணன் நன்நம்பிக்கை என்கிற ஆப்டிமிசம். (optimism) ஒரு காரணமும் இல்லாம எல்லாம் நல்லபடியா நடக்கும் என்கிற மனப்போக்கு இவர்களுக்கு இருக்கும். கவலை என்பதே இராது! என்னதான் பெரிய தோல்வியை சந்திக்கட்டுமே,அடுத்த முறை நல்லபடியா நடக்கும்ன்னு அணுகுவாங்க! குறிப்பா சிறந்த விளையாட்டு வீரர்கள்கிட்ட காணக்கூடிய விஷயம் இது. தோல்வி கிடைத்ததா? அது ஏதோ ஒரு காரணத்தால், அடுத்த முறை அது மாறிடும்ன்னு நம்பிக்கை. 

மற்றவர்கள் ’தாந்தான் தோல்விக்கு காரணம்; அதனால அடுத்த முறையும் தன்னால முடியாது’ ன்னு நினைப்பாங்க. 

 

ஒரே அளவு புத்திசாலித்தனம் இருக்கறவங்க வாழ்கையில் சாதிப்பதில வித்தியாசம் அவர்களோட தோல்வியை ஏத்துக்கிற மனோதிடத்தை பொறுத்தது. இந்த இன்ஸ்யூரன்ஸ் விக்கிறவங்களை பாருங்களேன். இவங்க சந்திக்கிற முக்காலே மூணு வீசம் பேர் வேண்டாம்ன்னுதான் சொல்லுவாங்க. இருந்தாலும் இவங்க சிரிச்சுகிட்டே ரைட் இன்னொரு முறை பார்க்கலாம்ன்னு கை குலுக்கிட்டு கிளம்புவாங்க. நேரா அடுத்த ஆசாமியை பார்க்கபோயிடுவாங்க. இவங்க பார்வையில் ’அந்த ஆசாமிக்கு நிஜமாவே இன்ஸ்யூரன்ஸ் வேண்டாம்; அல்லது அவர் மோசமான மூட் ல இருந்தார், வேறு சந்தர்பத்துல திருப்பி பார்க்கலாம்; அல்லது வேற அணுகு முறை தேவை போலிருக்குஇப்படியே நினைப்பாங்க.

 

அப்படி இல்லாம இடிஞ்சு போய் உக்காருகிற ஆசாமியால ஒரு பாலிசியும் விக்க முடியாது. இவர் எனக்கு திறமை இல்லை. என்னால பாலிசி விக்க முடியாதுன்னு நினைப்பார். இந்த வேறுபாட்டுக்கு என்ன காரணம்?  இவங்களோட பிறவி குணம் அல்லது வளர்த்துகிட்ட மனநிலை.


சிலருக்கு அசாத்திய தன் நம்பிக்கை (self confidence) இருக்கும். என்ன பிரச்சினை வந்தாலும் சமாளிப்பேன், என்ன இப்ப? என்பார்கள். தன் வாழ்கை தன் கையில் என்ற நினைப்பு இவர்களுக்கு. தத்துவப்படி இது தப்புதான். ஆனாலும் அது சரியோ தவறோ இது அவங்களுக்கு உதவுது. என்ன தோல்வி வந்தாலும் அதுக்கு என்ன செய்யலாம்ன்னு மேலே மேலே பாத்துகிட்டு போவாங்க!

 

வழிந்தோடும் பேராற்றல்: இதெல்லாம் புத்தியை பயன்படுத்தி செய்யற விஷயங்கள். எப்ப மனசு, புத்தின்னு ரெண்டுத்தையும் கழட்டி வைக்க முடியுமோ அப்ப நம்முள்ளே இருக்கிற பேராற்றலே வழிந்தோடும். இதை ’இறையாற்றல்’ ன்னும் சொல்லலாம். ஏதோ ஒரு சமயம் இந்த வாய்ப்பு கிடைச்சா அனுபவிக்கணும்! மனசளவில் விலகி நின்னு வேடிக்கை பார்க்க, தானா எல்லாமே நடக்கும். கை எழுதும். கால் நடனமாடும். வாய் பாட்டு பாடும். எல்லாமே மிக மிக உயர்தரமா இருக்கும்! சாதாரணமா செய்ய முடியாத விஷயங்கள் சர்வ சாதாரணமா கொஞ்சம் கூட அலட்டிக்காம நடக்கும்! இது சிலர் ஜென் நிலைன்னு கூட சொல்லலாம். யாரிந்த நிலைக்கு நினைச்சப்ப போக முடியுமோ அவங்களுக்கு ஆகக்கூடியது வேறு ஒண்ணுமில்லை!

 

அதிக வேலைக்கு நியோ கார்டக்ஸ்ல அதிக வேலை நடக்கணுமில்லையா?  அப்படி இந்த நிலையில நடக்கிறதில்லை என்கிறதே இது புத்தி சார்ந்த வேலை இல்லை என்பதை காட்டுது. செய்கிற வேலையில் ஒரு காதல் இருக்கும் போது இது நிகழும் வாய்ப்பு இருப்பதா சொல்லறாங்க. குழந்தைகளுக்கு எது பிடிக்குதுன்னு கண்டு பிடிச்சு அது சம்பந்தமா அவங்களை படிக்க தூண்டும் போது மத்த விஷயங்களிலும் அவங்களுக்கு இந்த நிலை வாய்க்குதாம்.

 

ஆக மொத்தத்தில் நம் உந்துதல்களை கட்டுப்படுத்தறது;
வெகுமதியை தள்ளிப்போடும் அளவு நம் சுயகட்டுப்பாட்டை வளர்ப்பது;
நம் மூட்களை மாற்றிக்கொள்வது; அதனால் அவை செய்கிற வேலைகளுக்கு தடையாக இல்லாமல் துணையாக ஆக்கிக்கொள்வது;
இடர்கள் வந்தாலும் மனம் தளராமல் விடா முயற்சி செய்வதை வளர்ப்பது;
இதெல்லாம் உணர்ச்சிகள் நமக்கு உதவும் வகையில் மாற்றி அமைக்கும்.



திவாஜி

unread,
Nov 13, 2014, 2:01:42 AM11/13/14
to mint...@googlegroups.com

2014-11-11 17:12 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
இதெல்லாம் உணர்ச்சிகள் நமக்கு உதவும் வகையில் மாற்றி அமைக்கும்.

உணர்ச்சிகளை கவனிக்கும் போது ..

உணர்ச்சிகளை கவனிக்கும் போது 3 விஷயங்களாக நடக்கலாம்.

1. சாட்சியாக பார்ப்பது.

2. உணர்சிகளால மூழ்கடிக்கப்படுவது.

3. என் தலை விதின்னு ஒப்புக்கொண்டு அதை அனுபவிப்பது.

 

முதல் வகை ஆசாமிக்கு சுயக்கட்டுப்பாடு இருக்கு. இரண்டாவது வகையில் உணர்ச்சிகளை கண்காணிக்கவும் தெரியலை,  சுத்தமா கட்டுப்பாடும் இல்லை. மூணாவது வகையில  உணர்ச்சிகளை கொஞ்சமாவது அடையாளம் காணமுடியும்; ஆனால் அதை கட்டுப்படுத்த ஆர்வமோ உந்துதலோ இல்லை. டிப்ரஷன் இருக்கிறவங்க இப்படி இருப்பாங்க.

 

என் தலை விதின்னு ஒப்புக்கொண்டு அதை அனுபவிக்கிறதை சரணாகதி தத்துவமா நினைக்கக்கூடாது. ஏன்னா இது ஒரு அறிவு பூர்வமான சரண்டர் இல்லை. இப்போதைக்கு வேற வழி தோணலை அல்லது அது பத்தி யோசிக்க தயார் இல்லை; அதனால நடக்கிறது நடக்கட்டும்ன்னு விடறேன். அவ்வளோதான்!

நம்முடைய லிமிடேஷன்ஸ் தெரிஞ்சு இறைவன்கிட்ட எல்லாத்தையும் ஒப்படைக்கிறதே சரி ந்னு புத்தி பூர்வமா கருதி ஒப்படைச்சு, அதனால் என்னதான் விளைவு வந்தாலும் அப்படியே புகார் செய்யாம பகவத் ப்ரசாதமா ஏத்துக்கொண்டு இருப்பதுதான் சரணாகதி!

 

ஆதர்சமா வெறும் சாட்சி பாவத்தில நடக்கிறதை கவனிக்கணும். இருந்தாலும் பல சமயம் நம்மோட இன்வால்மெண்டும் வந்துடும். “இப்படி எல்லாம் நினைக்கக்கூடாது;” “நான் என்னையே உற்சாகப்படுத்திக்க நல்ல விஷயங்களை நினைக்கிறேன்;” அல்லது ரொம்ப துன்புறுத்தற விஷயமா இருந்தாஇதைப்பத்தி நினைக்க வேண்டாம்.” இப்படி ஏதாவது இன்வால்வ்மெண்ட் இருக்கும்!

சாட்சி பாவத்துல இந்த இன்வால்மெண்ட் கிடையாது. உள்ளதை உள்ள படி பார்க்கும்! நமக்கு சாதகம் என்கிறதால எதையும் திணிக்காது. இன்ன உணர்ச்சின்னு கண்டு பிடிக்க அது மொழி சார் மூளையின் பாகங்களையும் செயலுக்கு கொண்டுவரும். நியோ கார்டக்ஸ் வேலை செய்வதால சாட்சி பாவம் வராட்டாலும் குறைந்த பட்சம் எதிர்வினை செயல்வேகமாவது மட்டுப்படும்!

 

தர்க்க ரீதியா பாத்தா உணர்சிகளை கவனிக்கறதும், மேலே செயல் ஒண்ணை துவக்கறதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். இருந்தாலும் வழக்கமா ரெண்டும் ஒண்ணாவே நடக்கும். நல்லதில்லாத உணர்ச்சி ஒண்ணை அடையாளம் காண்பதும் உடனே அதை நீக்க நடவடிக்கையும் கை கோர்த்துப்போகும்! ஆனா இதுவும், உத்வேகத்தில எதிர்வினை செய்யாம கட்டிப்போடறதும் வேற வேற. தன்கிட்டேந்து பொம்மையை பிடுங்கின குழந்தையை அடிக்கபோகிறது ஒரு குழந்தை. “ஏய் சும்மா இருன்னா இருந்துடலாம். ஆனால் கோபத்துக்கான காரணம் அப்படியேத்தான் இருக்கும். மாறா 'நான் கோபமா இருக்கேன்'னு அடையாளம் காண்பது பல வழிகளை காட்டும். எதிர்வினை இருக்கலாமா? இருந்தால் எப்படி இருக்கலாம்? அது நல்லதா? இல்லை கோபத்தை விட்டுவிடலாமா? 

 

ஆமாம், சரியாக புரிஞ்சு கொண்டீங்க! இங்கே புத்தி வேலை செய்கிறது.

இதான் சுயக்கட்டுப்பாடோட முதல் படி!



திவாஜி

unread,
Nov 14, 2014, 1:56:28 AM11/14/14
to mint...@googlegroups.com

2014-11-13 12:31 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
இதான் சுயக்கட்டுப்பாடோட முதல் படி!

சரியாக தன்னை உணர்ந்தால்....

முடிந்த வரை தெளிவாக ‘உணர்வு சார் நுண்ணறிவு’ பத்தி சுருக்கமாசொல்லிட்டேன். இந்த பதிவுகளின் நோக்கம் உங்களுக்கு இந்த விஷயம் குறித்து ஒரு அறிமுகம் கொடுத்து மேலே நீங்களே படிச்சுக்குங்க/ கத்துக்குங்க ந்னு சொல்லத்தான்! இனிமேலும் அதிகமா எழுதினா அது குழப்பத்தை அதிகமாக்குவதோடு அயற்சியையும் கொடுக்கலாம்.

கடைசி பதிவுகளில சில செக் லிஸ்ட் பார்க்கலாம்!

சரியாக தன்னை உணர்கிறவருக்கு பின் வரும் விஷயங்கள் தெரியும்:

நாம் எப்படி நடந்துக்கறோம்; மத்தவங்க நம்மை எப்படி பார்க்கிறாங்க?

நாம் மத்தவங்களுக்கு எப்படி எதிர்வினை செய்கிறோம்?

நம் மனப்பாங்கு, உணர்வுகள், உத்தேசங்கள், தகவல் பரிமாறும் விதம் எப்படி இருக்கு?

இதை மத்தவங்களுக்கு புரிய வைக்க முடியுதா?

 

நமக்கு இதுல பாண்டித்தியம் வந்தாச்சான்னு சோதிக்க:

எதிர்மறை எண்ணங்கள் மேலெழும்போது நமக்கு அது உடனே தெரியுதா?

உற்சாகப்படுத்திக்க தனக்குத்தானே பேசறது உதவிகரமா இருக்கும் சந்தர்பங்கள் எதுன்னு தெரியுதா? எப்படி பேசறதுன்னு தெரியுதா? நமக்கு நாமே எப்படி உற்சாகப்படுத்தி கொள்கிறோம்?

கோபப்படுகிறோம் என்பது தெரியுதா?

நடப்பை எப்படி உள்வாங்கிக்கொள்கிறோம் என்று?

நடப்பில் என்ன உணர்ச்சி மேலோங்கி இருக்கிறது என்று?

நாம் அனுபவிக்கிறதை சரியாக மற்றவருக்கு உணர்த்த முடியுதா?

நம் மூட் மாறுவதை அறிகிறோமா?

நம் நடத்தை மற்றவர்களை எப்படி பாதிக்குது ன்னு அறிகிறோமா?

நாம் தவறான பக்கத்தில் இருக்க நேர்ந்தால் எப்படி நடந்துக்கிறோம்?

உணர்ச்சிகளை கையாளுதல்:  தன்னைத்தானே சமநிலைப்படுத்திக்கொள்ளுதல், பெருகும் கலக்கம், பயம், துக்கம், எரிச்சல் இது எல்லாத்தையும்  உதறுதல்முடியுதா?

உடலின் செயல்நிலை மாறும் போது தெரியுதா?

அழுத்தமான மனோ நிலை வருமானால் தளர்த்திக்கொள்ள முடியுதா?

மனக்கலக்கம் வந்தாலும் சரியான படி வேலை செய்ய முடியுதா?

கோபம் வரும்போது அதை குளிர்விக்க முடியுதா?

நமக்கு இதுல பாண்டித்தியம் வந்தாச்சான்னு சோதிக்க:

வெவ்வேறு உடல் செயல்நிலைகளை வெவ்வேறு உணர்ச்சிகளுடன் சரியாக சேர்த்துப் பார்க்க முடியுதா?

உணர்ச்சியை கட்டுப்படுத்த தனக்குத்தானே பேசிக்கொள்ள முடியுதா? நம் உணர்வுகளை சரியாக மத்தவங்களுக்கு புரிய வைக்க முடியுதா?

எதிர்மறை உணர்வுகளை பட்டும் படாம கவனிச்சு ஆராய முடியுதா?

மற்றவர் கோபத்துக்கு நாம் ஆளாகும்போது அமைதியா இருக்க முடியுதா?

கோபத்தை பயன் தரும் வழிக்கு திருப்ப முடியுதா?

உங்களை நீங்களே நல்ல மூடுக்கு திருப்பிக்க முடியுதா?

மோடிவேஷன்: ஒரு இலக்கை அடைய உணர்ச்சிகளை வழித்தடமாக்க முடிவது. எதிர்கால நலன் கருதி உடனடி திருப்தி அடைவதை தள்ளிப்போட முடிவது. சுவாரசியம் குறைந்த வேலை, செயல்களானாலும் உற்சாகத்துடன் ஈடுபட முடிவது. என்ன தடைகள் வந்தாலும் விடா முயற்சியுடன் இருப்பது. வெளியிலிருந்து தூண்டுதல் இல்லாமலே தானே  பல செயல்களை துவக்குவது.


 எதெல்லாம் மோடிவேஷன் இருப்பதை காட்டும்?

 

நினைத்த மாத்திரத்தில் செயல் திறனை அடுத்த படிக்கு அதிகரிப்பது.

எதிர்பாரா விளைவுகள் இருந்தால் சட்டென்று மீண்டும் திட்டமிட்டு செயலுக்கு வருதல்.

தொலைநாள் இலக்குகளை திட்டமிட்டு பகுதி பகுதியாக குறித்த காலத்தில் முடித்தல்.

உபயோகம் இல்லாத அனாவசிய பழக்கங்களை மாற்றுதல் அல்லது நிறுத்துதல்.

லாபம் தரும் புதிய நடத்தைகளை உருவாக்குதல்.

எதை செய்யப்போவதாக சொல்கிறோமோ அதை வாய் வார்த்தையாகவே நின்று விடாமல் செயலுக்கு கொண்டு வருதல்.

 திறமைகளுக்கு ஆய்வு: விடாமுயற்சி இருக்கா? தடைகள் உங்களை நிறுத்திவிடுகின்றனவா? சுயமாக மனநிலையை மாத்திக்கொள்ள முடியுதா?



சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 19, 2014, 12:50:56 PM11/19/14
to mint...@googlegroups.com, agni...@gmail.com
On 11/7/14, திவாஜி <agni...@gmail.com> wrote:

> ​ எல்லாமே தப்பாக போகும்போது...

> வாழ்கை அதிசயமானது! அடுத்த அதிர்ச்சி எங்கிருந்து எப்போது வரும் என்று யாருமே சொல்ல முடியாது. அடுத்து என்ன நடக்கபோகிறது என்று யாருமே நிச்சயமாக சொல்ல முடியாது! நாம் நினைத்ததெல்லாம் நினைத்தபடியே நடக்கும் என்றும் சொல்லமுடியாது. (நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடப்பதையே
> நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை! அருமையான திரைப்பாடல்!) உண்மையில் நாம் திட்டமிட்டபடி எப்போதுமே நடப்பதில்லை. ஒரு சின்ன மாற்றமாவது இருக்கிறது. அது
> பெரிய விளைவை ஏற்படுத்தாதபோது நாம் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறோம்!
> இருந்தாலும் எப்போதுமே நாம் நினைத்தபடி எல்லாம் நடக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மட்டும் போவதில்லை. அப்படி நடக்காத போது உணர்ச்சிவசப்படுகிறோம்!
> சின்ன வருத்தத்தில் இருந்து கடும் கோபம் வரை எது வேண்டுமானாலும் ஏற்படுகிறது.
> என்ன செய்யப்போகிறோம்?

பல எண்ணங்களைத் தூண்டி அவற்றை நினைத்துப் பார்க்க வைத்துள்ளீர்கள்.
தீர்வுகளையும் வழங்கியுள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா.

தங்களுடைய மேற்கண்ட கருத்துக்கும், attitude குறித்த கருத்துக்கும் நான்
அண்மையில் படித்த பதிவு பொருந்தி வருவதால் இங்கு தந்துள்ளேன். தங்கள்
கருத்தும் நண்பர்கள் கருத்தும் அறிய விருப்பம்.

Attitude and Emotions - Powerful Lesson
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
When someone is doing something or is about to do something, in a way
we don't want it to be done and when we are not able to accept it, we
become angry.

However, when someone is doing something or is about to do something,
in a way we don't want it to be done – and we are able to accept it –
We remain tolerant.

When someone has something which we don't have, or someone is able to
produce the results which we are not able to produce – and we are not
able to accept it – we become jealous.

When someone has something which we don't have or someone is able to
produce the results which we are not able to produce and we are able
to accept it we get inspired.

When Someone is present in our thoughts, but if not physically present
and we are not able to accept it – We say 'I am missing you'.

When someone is present in our thoughts, but not physically present –
and we are able to accept it – We say 'I am thinking of you'.

Then emotional equation is quite simple.
Something + Acceptance = Positive Emotion
Something + Non Acceptance = Negative Emotion

So, it is not 'Something' or 'someone' who is making us feel positive
or negative, but it is our 'acceptance' or 'non acceptance' of
something or someone, which is making us feel positive or negative.

It isn't the world but the quality of our response to the world
(acceptance or non acceptance) that determines the quality of our
emotions.

Next time we feel disturbed with a negative emotion, instead of asking
who or what is disturbing us, we will examine who or what we are
resisting (not accepting) that is causing this disturbance in us.

We will replace resistance (non acceptance) with acceptance, and the
negative emotion will turn into a positive one.

Emotional management begins by stopping to blame that 'something' or
'someone' and starting to take the responsibility to respond to life
with 'acceptance'.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

திவாஜி

unread,
Nov 22, 2014, 8:31:38 AM11/22/14
to minT...@googlegroups.com

உணர்வு சார் நுண்ணறிவை செயல் களத்துக்கு கொண்டு வரலாமா?

எந்த அறிவுமே செயலுக்கு வரும் வரை அதிக பொருள் வாய்ந்த்தாக இருப்பதில்லை. முன்னே இந்த உ.சா.நு வை என்ன என்று தெரிந்து கொண்டோம் இல்லையா?

இப்போது வேறு விதமாக இதை அணுகி செயல் திட்டம் ஒன்றுக்கு வரலாம். இதற்கு ஆறு நொடி திட்டம் (Six Seconds model) என்று பெயர். http://www.6seconds.org/

உணர்வு சார் நுண்ணறிவு என்பது சிந்தனையையும் உணர்வுகளையும் ஒருங்கிணைத்து கொஞ்சம் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க உதவுகிறது. இதனால் நாம் நம்மோடும் மற்றவர்களோடும் சரியாக உறவாட வழி பிறக்கிறது. இந்த செயலாகத்தை சுலபமாக்க சில வழிகள் உள்ளன.

மூன்று முக்கிய நாட்டங்கள் உள்ளன. அவை: 1.விழிப்புணர்வை அதிகரித்தல். 2. கருத்துடன் செயலாக்கம். 3. குறிப்புடன் செயலாக்கம்.


Inline images 1

உன்னை அறிந்து கொள்:

நாம் உணர்வதையும் செய்வதையும் தெளிவாக காணல்.

உணர்ச்சிகள் என்பன தரவு. இவற்றை சரியாக திரட்ட  ஒரு தனித்திறன் வேண்டும்.

உன்னைத்தேர்ந்தெடு

நாம் எதை செய்ய வேண்டுமோ அதை செய்தல்.

சும்மா ஒரு இயந்திர கதி எதிர்வினையாக இல்லாமல், நாம் சரியாக நல்ல எதிர்வினை ஆற்ற ஒரு தனித்திறன் வேண்டும்..

உனக்கே கொடுத்துக்கொள்

எதை செய்தாலும் ஒரு காரணத்துக்காக அதை செய்ய ஒரு தனித்திறன் வேண்டும்..

இந்த தனித்திறன்கள் உங்களுக்கு ஒரு சரியான பார்வையையும்  தன்னேற்புத் திட்டத்தையும் சரியாக செயலில் கொண்டு வந்து நீங்கள் குறிப்புடனும் நேர்மையாகவும் வழி நடத்த உதவும்..

 

உன்னை அறிந்து கொள்  என்பது தருவதுஎதைஎன்பது. – நம்மை நாம் அறிந்து கொள்ளும்போது நம் பலம், பலகீனங்களை புரிந்து கொள்கிறோம். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், நமக்கு என்ன வேண்டும், எதை மாற்ற வேண்டும் என்பது எல்லாம் தெரியும்.

உன்னைத்தேர்ந்தெடு என்பது தருவதுஎப்படிஎன்பது.   அது எப்படி நாம் செயலை ஆற்ற வேண்டும்; எப்படி நம்மையும் மற்றவர்களையும் பாதிக்க வேண்டும்; கருத்துக்களை எப்படி செயலுக்கு கொண்டு வர வேண்டும் என்று காட்டுகிறது.

 உனக்கே கொடுத்துக்கொள் என்பது தருவதுஏன்என்பது. இது தெளிவாக இருக்கும் போது நாம் முழு சக்தியுடனிருக்கிறோம். தெளிவின்மை அலைகழிப்பால் சக்தியை விரயமாக்கும். ஏன் குறிப்பிட்ட விதத்தில் நாம் செயலாற்ற வேண்டும்; ஏன் குறிப்பிட்ட திசையில் செல்ல வேண்டும்; ஏன் ஏனையோரும் நம் போல செயலாற்ற வேண்டும் என்பன தெளிவாக இருக்கும்.  

இது அப்படியே முடிந்து விடுவதல்ல. இது ஒரு சுழற்சி. அதனால் மீண்டும் முதல் அடிக்கு செல்கிறோம்! இந்த சுழற்சி நம்மை முன் நோக்கி செலுத்துகிறது! நாம் ஈடுபட்டுள்ள செயல்களை முடுக்கிவிடுகிறது!

உணர்வு சார் நுண்ணறிவில் இந்த மூன்று முக்கிய நாட்டங்களுக்கும் மொத்தமாக எட்டு தனித்திறன்கள் தேவை. இவை குறிப்பானவை, கற்றுக்கொள்ளக்கூடியவை, அளவிடக்கூடியவை! அவற்றை கொஞ்சம் பார்க்கலாமா?





திவாஜி

unread,
Nov 22, 2014, 8:34:40 AM11/22/14
to mint...@googlegroups.com

2014-11-14 12:26 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
 திறமைகளுக்கு ஆய்வு: விடாமுயற்சி இருக்கா? தடைகள் உங்களை நிறுத்திவிடுகின்றனவா? சுயமாக மனநிலையை மாத்திக்கொள்ள முடியுதா?

​பட்டியல் தொடர்கிறது.....

 

பரிந்துள்ளல்: உருப்படியாக தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியணும். குழுக்களை உருவாக்கி நடத்த தெரியணும். கலந்து பேசி தீர்வுகளை காண முடியணும். பிறரிடையே தோன்றும் சச்சரவுகளை மத்யஸ்தம் செய்யத்தெரியணும். தனி நபர்களிடம் நல்ல தொடர்புகளை உருவாக்கிக்கொள்ள தெரியணும்.

எதெல்லாம் பரிந்துள்ளல் இருப்பதை காட்டும்?

சச்சரவுகளை தீர்த்தல்; ஒருமித்த கருத்துகளை உருவாக்குதல்; பிறர் பிரச்சினைகளில் மத்யஸ்தம் செய்தல்; மற்றவருக்கு தெளிவாக செய்தியை தெரிவிக்கும் தன்மை; ஒரு குழுவின் எண்ணங்களை பிரதிபலிக்க முடிவது; நேரடியாகவோ மறைமுகமாகவோ மற்றவர் கருத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடிவது; பிறருக்கு நம்மிடம் நம்பிக்கையை உருவாக்குதல்; ஆதரவு குழுக்களை உருவாக்க முடிவது; நம் அண்மையில் பிறர் மகிழ்ச்சியுடன் இருக்க முடிவது; மற்றவர் தமக்கு பிரச்சினை எழுந்தால் வழிகாட்டலும் ஆதரவும் தேடி நம்மிடம் வருவது.

 

திறமைகளுக்கு ஆய்வு: பிரச்சினைகளை எளிதில் தீர்க்க இயலுகிறதா?

மனம் நோகாமல் நேர்மையாக விமர்சனம் செய்ய முடியுதா?

பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்கிறோமா?

பிறரை பாராட்டுகிறோமா?

 

சமூகத்தில் தாக்கம்: ஏனையோர் உணர்வுகளை புரிந்திருப்பது; அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது; அவற்றை லாபகரமாக திருப்ப அவர்களுக்கு உதவுவது. அவர்கள் மற்றவர் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை உணரச்செய்வது.

 

சமூக தாக்கத்தை எவை காட்டும்?

பிறர் அனுபவிப்பதை மிகச்சரியாக பிரதிபலிப்பது.

மற்றவரது துன்பப்பட்டு எதிர்மறை உணர்வுகள் வெளிப்படும் நேரங்களில் சமநிலையுடன் இருக்க முடிவது.

பிறருக்கு துன்பம் நேர்கையில் அதை புரிந்து கொள்வது.

பிறர் தம் உணர்வுகளை கட்டுக்கு கொண்டு வர உதவுவது.

பிறர் நம்மை பரிந்துள்ளல் உள்ளவராக அறிவது.

பிறர் நம்முடன் தம் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடிவது.

குழுக்களின் உணர்வுகளை மேலாள முடிவது.

பிறரின் உணர்வுகளுக்கு பொருந்தாத நடத்தையை கண்டு பிடிப்பது.


திறமைகளுக்கு ஆய்வு:  நம்மால் பிறரது உணர்வுகளை மேலாள முடியுதா? நம் மேலதிகாரி கோபம், துக்கம், கலக்கத்தில் இருக்கையில் அது நமக்கு தெரிகிறதா? கோபமாக இருக்கும் ஒரு குழுவை கட்டுப்படுத்த முடியுதா? நம் எண்ணங்களுடன் நாமே சமாதானமாக இருக்கமுடியுதா?


சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 22, 2014, 8:42:25 AM11/22/14
to mint...@googlegroups.com
மிகவும் ஆர்வமூட்டுவதாகவும் பயன்பாடுள்ளதாகவும் தற்போது இட்டிருக்கும்
பதிவுகளைக் காண்கிறேன்.
பரிந்துள்ளல் என்ற சொல்லின் ஆங்கிலச் சொல் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பரிந்து உள்ளல் Empathetic எண்ணலா?
ஆப்பிரகாம் மாஸ்லா வின் தேவைக்கோட்பாடுச் சட்டகத்தை வைத்து Motivation
தியரிஸ் குறித்து எண்ணிப் பார்த்துள்ளேன்.
மூன்று முக்கிய நாட்டங்களைப் படித்தேன். எட்டு தனித்திறன் அறிந்துகொள்ள
ஆர்வம். அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.
நன்றி.


--
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

திவாஜி

unread,
Nov 22, 2014, 8:44:16 AM11/22/14
to mint...@googlegroups.com

2014-11-22 19:12 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
பரிந்துள்ளல் என்ற சொல்லின் ஆங்கிலச் சொல் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பரிந்து உள்ளல் Empathetic எண்ணலா?

பரிந்துள்ளல் empathy க்கு பதில் பயனாகும் சொல்லே.
அடுத்த பதிவு நாளை!


திவாஜி

unread,
Nov 24, 2014, 3:41:00 AM11/24/14
to mint...@googlegroups.com

2014-11-22 19:13 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
பரிந்துள்ளல் empathy க்கு பதில் பயனாகும் சொல்லே.
அடுத்த பதிவு நாளை!

 

நாட்டம்

திறன்

பொருள்

உன்னை அறிந்து கொள் 

உணர்வுகளின் புரிதலை உன்னதமாக்கு 

எளிய மற்றும் சிக்கலான உணர்வுகளை சரியாக இனம் கண்டு, புரிந்து கொள்ளுதல்.

பாங்குகள் இருப்பின் இனம் காணல்

அடிக்கடி நிகழும் எதிர்வினைகள், நடத்தைகளை அடையாளம் காணுதல்.

உன்னைத்தேர்ந்தெடு

பிற்செயல் குறித்த சிந்தனையை செயலாக்குதல்

நம் தேர்வால் எதை இழக்கிறோம், எதை பெறுகிறோம் என சீர்தூக்கிப் பார்த்தல்

உணர்ச்சிகளூடே பயணம்.

உணர்வுகளை ஆய்ந்து, கைக்கொண்டு திட்டமிடலுக்கு உறுதுணை ஆக்குதல்

உள்ளிருந்து சுய ஊக்கத்தை வெளிக்கொண்டு வருதல்

வெளி உந்துதல் சக்திகளின் எதிரில் நம் சுய மதிப்புகள், ஏற்றுக்கொண்ட கடமைகளை பொருத்தி ஊக்கம் பெறுதல்.

நன்னம்பிக்கையை செயலாக்குதல்

நம்பிக்கை, சாத்தியங்கள் குறித்து முனைப்புள்ள ஒரு  பார்வையை கொண்டிருத்தல்.

உனக்கே கொடுத்துக்கொள்

புரிந்துள்ளலை அதிகரித்தல்

மற்றவரது உணர்ச்சிகளை அடையாளம் காணுதல், பொருத்தமாக எதிர்வினையாற்றுதல்.

உயர்ந்த இலக்குகள் நோக்கி பயணித்தல்.

நம் குறிக்கோளுக்கு பொருத்தமாக நம் தினசரி செயல்களில் தேர்வுகளை செய்தல்.



அடிப்படையில் உணர்வு சார் நுண்ணறிவு என்பது நாம் இருக்க வேண்டிய விதம்
. ந்த அறிவு செறிந்து நாம் உணர்சிகளை திறனுடன் புரிந்து இருப்பதால் நம் உணர்வுகளையும் ஏனையோர் உணர்வுகளையும் மிகச்சரியாக அடையாளம் காண்போம்.  

இந்த தரவு
- தகவல்- நாம் தினசரி எதிர்கொள்ளும் வாழ்கை புதிர்களுக்கு நாம் சரியான தீர்வுகளை காண உதவும். இவை அனைத்துமே செயல்களாகும்! ஆகவே மூன்று நாட்டங்களும் எட்டு தனித்திறன்களும் வினையால் குறிப்பிடப்படுகிண்றன; பெயர் சொற்களால் அல்ல!


Suba.T.

unread,
Nov 24, 2014, 1:18:04 PM11/24/14
to மின்தமிழ், Subashini Tremmel
​அருமை.
எல்லா வயதினருக்கும் பொருந்தும் வகையில் உள்ள கருத்துக்களை மிக எளிமையாகச் சொல்லிச் செல்லும் பாங்கு.. இந்த இழை மிகச் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்.

சுபா​
 

அடிப்படையில் உணர்வு சார் நுண்ணறிவு என்பது நாம் இருக்க வேண்டிய விதம்
. ந்த அறிவு செறிந்து நாம் உணர்சிகளை திறனுடன் புரிந்து இருப்பதால் நம் உணர்வுகளையும் ஏனையோர் உணர்வுகளையும் மிகச்சரியாக அடையாளம் காண்போம்.  

இந்த தரவு
- தகவல்- நாம் தினசரி எதிர்கொள்ளும் வாழ்கை புதிர்களுக்கு நாம் சரியான தீர்வுகளை காண உதவும். இவை அனைத்துமே செயல்களாகும்! ஆகவே மூன்று நாட்டங்களும் எட்டு தனித்திறன்களும் வினையால் குறிப்பிடப்படுகிண்றன; பெயர் சொற்களால் அல்ல!


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

திவாஜி

unread,
Nov 25, 2014, 3:20:08 AM11/25/14
to mint...@googlegroups.com

2014-11-24 23:48 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
. இந்த இழை மிகச் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்.

நன்றி சுபா!
-------------

உணர்வு சார் நுண்ணறிவில் குழந்தைகளுக்கு உதவ 14 குறிப்புகள்

உணர்வு சார் நுண்ணறிவு என்பது  நம்முடைய மற்றும் மற்றவர்களுடைய உணர்ச்சிகளை அறிவது. அதன் மூலம் மற்றவர்களுடன் சுலபமாக இசைவுடன் இருக்கலாம். உணர்வு சார் நுண்ணறிவே வாழ்வில் இன்பத்தை ஊகிக்கக்கூடிய மிகப்பெரிய காரணி என்கிறார்கள் வல்லுனர்கள். இந்த உணர்வு சார் நுண்ணறிவை நம் குழந்தைகள்  பெற வேண்டுமானால் அவர்கள் தம் உணர்ச்சிகளை இனம் காணுவதிலும் எப்படி ஒரு சரியான தீர்வை காண்பது என்பதிலும் நாம் அவர்களுக்கு சற்றே உதவி செய்ய வேண்டும். உணர்வு சார் நுண்ணறிவை அதிக உடைய குழந்தைகள்  சமூகத்துடன் உறவாடுவதிலும், ஒத்துழைப்பதிலும், நன்நம்பிக்கையுடன் இருப்பதிலும், பிரச்சினைகளை தீர்ப்பதிலும் அதிக திறனுடன் இருக்கிறார்கள். அவர்கள் நடத்தை நன்றாக இருக்கிறது. அவர்கள் உணர்ச்சி வசப்படுவதில்லை. படிப்பிலும் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறார்கள்; இவர்களுக்கு அதிக நண்பர்கள் இருக்கிறார்கள்; வாழ்கையில் சிறந்து விளங்கும் வாய்ப்பும் இவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. ஆகவே பெற்றோர் செய்யக்கூடியதன் விளைவு அபரிமிதமாக இருக்கும்!

அப்படியானால் நாம் நம் குழந்தைகள்   உணர்வு சார் நுண்ணறிவு பெற நாம் என்ன செய்ய இயலும்?


1. குழந்தைகளின் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.

பயப்படும் குழந்தையிடம் 'பயப்படக்கூடாது' என்பதில் அதிக அர்த்தமில்லை. நான் இருக்கிறேன் பயப்படாதே என்று சொல்லலாம். உணர்ச்சிகளை இல்லாமல் செய்வது நம் நோக்கமல்ல. அவற்றை கையாள புரிந்து கொள்வதே நோக்கம். குழந்தைகளுடன் பேசும் போது கீழ்கண்டபடி பேசுவது பயனளிக்கும்.

ஐய, அது ரொம்ப ஏமாத்தமா இருக்குமே?’ ’! நீ எவ்வளோ கோபமா இருக்கேன்னு காட்டறியே!’

அட்ரா சக்கைன்னானாம்! உனக்கு எவ்வளோ சந்தோஷமா இருக்குன்னு தெரியுது
உன் நண்பர்கள் உன்னை இப்படி கைவிட்டுட்டாங்கன்னா பெரிய கஷ்டம்தான்!.’
 உன் மூஞ்சியே சரியா இல்லையே? என்னமோ நடந்திருக்கு,’

 2. உணர்வுகளுக்கு சரியான பெயரிட உதவுங்கள்.

வெறுமே கோபம் துக்கம் என்றபடி இல்லாமல் அவற்றிலேயே படிகளை பார்க்க முடிவது கொஞ்சம் நல்லது. அதனால எவ்வளவு அதிகமா உணர்ச்சிகளை விவரிக்க முடியுமோ அவ்வளவு நல்லது.

அப்செட் ஆயிட்டே போலிருக்கு
 உன்ன பாத்தா தல பாதாலத்துக்கு போயிட்டா மாதிரி இருக்கு!’
 உனக்கு அதுல ரொம்ப வருத்தமோ?’
 கொஞ்சமே கொஞ்சம் கவலப்படறா மாதிரி இருக்கு!’
 உனக்கு இதால் ரொம்ப ….’
 அது ரொம்பவே வலிச்சிருக்குமே?’


 3. உணர்வுகளைப் பற்றி பேச  குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுங்கள்.

நல்லது கெட்டதுகளை பகிர்ந்துக்கலைன்னா என்ன பிரயோஜனம்?

அதுல உனக்கு பொறுமையே போயிடுத்து போலிருக்கு? இதை பத்தி உனக்கு பேசணுமா? 
 உம்! உனக்கு அப்போ எப்படி இருந்தது?’


4. மற்றவர் உணர்வுகளை புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்துங்கள்.

வயதான பிறகு இருக்கும் பெரிய பிரச்சினை மற்றவர்களின் உணர்வுகளைக் குறித்த கரிசனம் துளிக்கூட இல்லாது இருப்பதுதான். பின் வரும்படி பேசுவது குழந்தைகளின் கவனத்தை அந்த விஷயத்தில் செலுத்தும்.

 அவனுக்கு அப்ப எப்படி இருந்திருக்கும்?’
 அவன் மனசில என்ன நினைச்சு இருப்பான்?’
 அந்த மாதிரி நமக்கு நடந்திருந்தா எப்படி இருந்திருப்போம்


5. மனஇறுக்கம் எதனால் ஏற்படுகிறது என்பதையும் அது ஏற்படும் போது அதை அடையாளம் காணவும் உதவுங்கள்.

டென்ஷன் என்னும் மனஇறுக்கம் மெதுவாக கிளம்பி இருப்பதே தெரியாமலே வளர்ந்து ஆளையே முழுங்கிவிடும் அபாயம் இருக்கிறது. அது ஏற்பட ஆரம்பிக்கும் போதே அடையாளம் கண்டு கொண்டால் அதை முளையிலேயே கிள்ள வழி இருக்கலாம்.

இது உனக்கு இறுக்கமா இருக்கா?’
 தலைக்கு மேலேவெள்ளம் போறா மாதிரி ஆயிடுத்து போலிருக்கே? உனக்கு டென்சன் அதிகமாயிடுத்தா?’
 நீ பல்ல கடிக்கிறதை பாத்தா செம கோபம் போலிருக்கு!’


6. தன்னை அமைதி படுத்திக்கொள்ள கற்றுத் தாருங்கள்.  

உணர்ச்சிகளை தூண்டுகிற சமாசாரங்கள் வாழ்க்கையில் இருந்து கொண்டேதான் இருக்கும். அப்பப்ப நம்மை நாமே அமைதி படுத்திக்கணும்.

கொஞ்ச நேரம் கொடுத்து அமைதியானா நல்லா இருக்குமோ?’
 கொஞ்சம் ஆழமா மூச்சு எடுத்தா அமைதியாவோமோ?’
 அடுத்த தரம் அந்த மாதிரி நடக்கிறப்ப இப்படி உனக்கு நீயே சொல்லிக்கலாமா: ‘என்னால அமைதியா இருக்க முடியும்.’
 எல்லாருமே அப்பப்ப தப்பு செய்வாங்கதான்
 இல்லை, ‘அது ஒரு விபத்து’”;

 நீ அமைதியான பிறகு நாம உக்காந்து இது பத்தி கொஞ்சம் பேசலாமா?


 7. குழந்தைகள்  தம் விரக்தியை உணர்த்த வேறு வழிகளை கற்றுக்கொடுங்கள்.

Frustration என்கிற விரக்தியும் அப்பப்ப தலையை நீட்டும் வழக்கம் போல அழுது ஆர்பாட்டம் செய்யாம இருக்க

உனக்கு எப்படி இருந்ததுன்னு அடிதடில இறங்காம வார்த்தையில எப்படி சொல்ல முடியும்?’
 உனக்கு எவ்வளவு கோபம் வந்ததுன்னு அவனுக்கு வேற எப்படி காட்டி இருக்க முடியும்?’
 நீ என்னை திட்டறது எனக்குப்பிடிக்கலை. உனக்கு ஏதாவது வேணும்ன்னா அதை வேற வழில சொல்லு.’
 அந்த சமயத்துல உனக்கு எப்படி இருந்ததுன்னு உன் நண்பன்கிட்ட எப்படி சொல்லுவே?’
 அடுத்த தரம் இதே மாதிரி நடந்தா நீ என்ன செய்வாய்?’


​-தொடரும்.
--
இது இந்த பதிவின் மொழிபெயர்ப்பு:

திவாஜி

unread,
Nov 26, 2014, 4:17:31 AM11/26/14
to mint...@googlegroups.com

 8. பிரச்சினைகளை தீர்க்க கற்றுக்கொடுங்கள்.

பிரச்சினைகள் யாருக்குத்தான் இல்லை? ஆனா அதை எல்லாம் எப்படி தீர்க்கிறதுன்னு யாரும் நமக்கு சொல்லித்தந்தாங்களா? சொல்லித்தந்து இருந்தா எவ்வளோ நல்லா இருக்கும்?

நாம் உக்காந்து எதெல்லாம் உதவும்ன்னு ஒரு லிஸ்ட் போடலாமா? அப்புறமா அதுல இருந்து எதை முயற்சி செய்யலாம்ன்னு நீயே தேர்ந்தெடுக்கலாம்.’
 ‘சரி, அப்படி செய்தா என்ன நடக்கும்ன்னு நீ நினைக்கிறே?’
 ‘நீ அப்படி செஞ்சா அவன் என்ன செய்வான்னு நினைக்கிறே?’

 9. குழந்தைகளுக்கு  நேர்முறையா சுய ஊக்கப்படுத்திக்கொள்ள கற்றுக்கொடுங்கள்.

யாரும் வந்து நீ பெரிய ஆளு, உன்னால நிச்சயம் முடியும்ன்னு சொல்ல அனுமார் மாதிரி காத்துக் கொண்டு இருக்க வேண்டாமே! நம் கையே நமக்கு உதவி…..

 “அப்படித்தோணும் போது நீ என்னவெல்லாம் சொல்லலாம்? : ‘இதை என்னால் கையாள முடியும்
 ‘இதை என்னால செய்ய முடியும்
 ‘என்னால முடிஞ்ச வரை செய்வேன்
 ‘ஒவ்வொரு நாளும் நான்  முன்னேறிக்கிட்டு இருக்கேன்.’
 ‘நான் சந்தோஷமா இருக்கணும்
 ‘சவால்ன்னா எனக்குப்பிடிக்கும்
 ‘இதுதான் நான் இது வரை செய்ததிலேயே நல்ல முயற்சி’”

  10. எது அவர்களை சிறப்பாக செயல்பட வைக்கிறது என்பதை அடையாளம் காணுங்கள்.

ஒரு சின்ன எண்ணம், வார்த்தை …. சிறப்பா செயல்பட அது கூட போதுமானதா இருக்கலாம்!

 ‘காலை எழுந்த உடனே என்ன நினைச்சா அல்லது சொன்னா, அன்னைக்கு நாள் முழுதும் உனக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு நினைக்கிறே?’
 ‘என்னதான் எல்லாம் கஷ்டமா போயிட்டாலும் நீ எப்பவும் முயற்சி செய்துகிட்டே இருக்கே என்கிற
தை பார்க்கிறேன்
 ‘ஒரு இலக்கை வெச்சாச்சுன்னா அப்புறம் அதை அடையற வரை நீ விடறதில்லை!’
 ‘செய்வேன்னு சொன்னே ….செய்து காட்டிட்டியே
 ‘பரிட்சைக்கு எல்லாத்தையும் திருப்பி படிக்க நீ திட்டமிட்டது ரொம்ப நல்லா இருக்கு!’

11. காது கொடுத்து கேட்கவும் பேசவும் கற்றுக்கொடுங்கள். இதனால்  முரண்பாடுகளை களைந்து இருவரும் ஜெயிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

வளர்ந்த நமக்கே இது கஷ்டமா தோணும்! ஏன்னா பயிற்சி இல்லை! நம் குழந்தையும் அப்படியே இருக்கணுமா?

இதை எப்படி சரி செய்தா இரண்டு பேரும் சந்தோஷமா இருக்கலாம்?’
 ‘அவளுக்
கு என்ன வேணும்ன்னு நீ நினைக்கிறே?’
 உங்க ரெண்டு பேருக்கும் வேண்டியது கிடைக்க என்ன செய்ய முடியும்?
 ‘அவ ஏத்துகொள்கிற மாதிரி இதை எப்படி சொல்ல முடியும்??’
 ‘என் மேல புகார் சொல்லாம நான், எனக்கு ன்னு ஆரம்பிச்சு பேசறயே, அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

 12. குழந்தைகள்  சுய கட்டுப்பாட்டை காட்டும் போது பாராட்டுங்கள்.

பாராட்டப்படும் நடத்தை வளரும்….

 ‘இப்போ அதை ரொம்ப நல்லா கையாண்டாய்.
 ‘அவன் சத்தமா பேசினப்பக்கூட நீ அமைதியாவே இருந்தயே-அது நிறைய சுயகட்டுப்பாடு இருக்கிறதை காட்டுது.
 ‘கைய ஓங்காம வார்த்தையாலேயே வேலையை முடிச்சயே அது பிரமாதம்!’
 ‘அந்த புதிரை விடுவிக்க ரொம்ப அமைதியாவே வேலை செஞ்சையே! சரியான துண்டு கிடைக்காதப்பக்கூட மேலும் மேலும் முயற்சி செஞ்சியே- அது ரொம்பவே  மனசை கவர்ந்தது!'

 13. நம் உணர்ச்சிகளை பற்றி பேசுங்கள்.

உணர்ச்சிகளை உள்ளே பாட்டிலில் போட்டு அடைக்க வேண்டாம். அது பல நோய்களை கொண்டு வந்து சேர்க்கும். அதற்காக அப்படியே வெளியே விடவும் வேண்டாம். கொஞ்சம் கட்டுப்படுத்தி வெளியே விட வேண்டும்.

வீட்டை சுத்தி குப்பை இருக்கிறது எனக்கு அலுத்துபோச்சு
 ‘நான் ஏதேனும் சொல்ல ஆரம்பிக்கறப்ப நீ நடுவில பேசினா எனக்கு கடுப்பா இருக்கு!
 ‘நீ ஸ்கூல்ல இருந்த நேரத்துக்கு வரலைன்னதும் எனக்கு கொஞ்சம் கவலையாப்போச்சு
 ‘ஒரு சுத்தமாக சமையலறைக்குள் வரத்து ரொம்ப சந்தோஷமா இருக்கு..’
 ‘இப்ப நான் கொஞ்சம் சோர்வா இருக்கேன்.என் நண்பர்களோட வெளியே போய் வரலாம்ன்னு நினைக்கிறேன்.

 14. நாம் கோபமாக இருக்கும்போதும் எவ்வளவு கட்டுப்பாட்டில் இருக்கிறோம் என்பதை செய்து காட்டுங்கள்.

ஆயிரம் தியரி பேசி புண்ணியமில்லை. உதாரணமாக செய்து காட்டுவது போல வேற இல்லை.

 ‘இன்னைக்கு வேலையில பிக்கல் பிடுங்கல் ரொம்ப அதிகம். இது பத்தி நான் கொஞ்சம் ஓய்வெடுத்த பிறகு பேசலாமா?
 ‘இத பார், நீ பேசற விதம் சரியா இல்ல. இனியும் இப்படி பேசினா காது கொடுத்து கேட்க நான் தயாராக இல்ல.
 ‘ஹாய், உன் கூட நான் கொஞ்சம் பேச வேண்டி இருக்கு. அதுக்கு இப்ப நல்ல நேரமா? இல்லை அப்புறம் பேசலாமா?
 ‘எனக்கு கோபம் வந்துகிட்டே இருக்கு. நாம பேசாம  வீட்டுக்கு போயிடலாமா?

Suba.T.

unread,
Nov 26, 2014, 11:01:36 AM11/26/14
to மின்தமிழ், Subashini Tremmel
​அனைத்து கருத்துக்களுமே இக்காலத்துக்கு ஏற்றவை.

ஆயிரம் தியரி பேசி புண்ணியமில்லை. உதாரணமாக செய்து காட்டுவது போல வேற இல்லை.

​அருமை.

சுபா

 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திவாஜி

unread,
Nov 27, 2014, 1:10:05 AM11/27/14
to mint...@googlegroups.com

2014-11-26 21:31 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
அனைத்து கருத்துக்களுமே இக்காலத்துக்கு ஏற்றவை.

நன்றி சுபா!
-------------------
  • இனியும் படிப்பது, எழுதுவது, கணினியை இயக்குவது மட்டும் போதாது. எப்படி உரையாடுவது, எப்படி சிந்திப்பது, முடிவுகள் எடுப்பது, பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண்பது போன்ற திறன்கள் வரும்காலத்தில் இன்றியமையாததாகி விடும்.
  • மாணவர்களுக்கு தன் மீதும், தன் வளர்ச்சி மீதும் நம்பிக்கை வளர வேண்டும். பிறரிடம் கம்பேஷனும், புரிதலும் வேண்டும்.
  • பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் இதையும் பள்ளி பாட திட்டத்தையும் அறிந்திருக்க வேண்டும். பள்ளிகளில் கற்றுத்தருதலிலும் இந்த மதிப்புகளுக்கு தகுந்த கவனமும் ஆதரவும் தருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கற்றலில் உங்கள் சகாக்களுடன் ஒத்துழையுங்கள்.

உங்கள் நண்பரின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.

உங்களுடைய உணர்வுகளுக்கும் செயல்களுக்கும் நீங்களே பொறுப்பு.m

வகுப்பறையில் நல்லபடி பாடங்கள் நடக்க ஆசிரியருடன் ஒத்துழையுங்கள்.

மற்றவரின் உரிமைகளுக்கும் உடைமைகளுக்கும் மரியாதை கொடுங்கள்.

மரியாதையையும் பொறுப்பையும் கற்றுகொடுக்கும் நிறுவனத்துக்கு உதவுங்கள்.

 

கொடுமையான சொற்களை சொல்லக்கூடாது. (அது முட்டாள்தனமானது; என்னால வரைய முடியாது; உன்னை எனக்கு பிடிக்கவே இல்லை)

பொது அல்லது தனி நபர் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க்கூடாது. (சுவற்றில் கிறுக்குதல்; மற்றவர் பொருளை திருடுதல்)

வன்முறை கூடவே கூடாது. (அடித்தல், உதைத்தல், கடித்தல், கிள்ளுதல்)

பள்ளிகளில் அவசியம் கற்றுத்தர வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. இவற்றால் உலகையே மாற்றி அமைக்கக்கூடிய வாய்ப்பு உருவாகும். அவை மிக கடினமானவையோ புதிதோ இல்லை. இருந்தாலும் அவை அரிதானவையாகிவிட்டன.

முக்கிய கருதுகோள் #1: உன்னை மாற்றிக்கொள்; மற்றவரை அல்ல!

நாமும்தான் எத்தனை பேரை மாற்ற முயற்சி செய்யறோம்! அப்பா, அம்மா, பெண் நண்பி, ஆண் நண்பன், அண்ணா, தம்பி, அக்கா, தங்கை, டீச்சர்ஹிஹிஹி பட்டியல் முடிவே இல்லாதது. நானும் இப்படி எல்லாம் முயற்சி செய்து இருக்கேன். அதனால சொன்னா நம்புங்க! மத்தவங்களை நீங்க முழுக்க திருத்தவே முடியாது!

அத்தோட அப்படி முயற்சி செய்யறதால தெரிஞ்சோ தெரியாமலோ கொடுக்கிற செய்தி ஒண்னு இருக்கு. அது என்னன்னா, நான் பெரியவன்; புத்திசாலி; நான் சரியா இருக்கேன், நீ சரியா இல்லை. அதனால் நீ மாறணும்! மொத்தத்துல நீ உருப்பட மாட்டே! இது எந்த அளவில இருந்தாலும் சக்தி வாய்ந்தது! எதிர் மறையானது!

இதனால அந்த நபர் நம்மை விட்டு விலகி போயிடுவார்; அன்பு அடிபடும்; வெறுப்பு உண்டாகும்.

பால் கோல்மேன், எலி ஃபிங்கிள் போன்ற உளவியல் விஞானிகள் சொல்வது என்னன்ன, மத்தவங்களை இருக்கிற படியே ஏத்துக்கோ! அப்படி செய்யறது மத்தவங்களை நம்மோடு சுதந்திரமா இருக்க உதவும்!

முக்கிய கருதுகோள் #2: அனுமானங்கள் வேண்டாம்; நேரடியாக கேள்!

! அப்படின்னு நான் நினைச்சேன்! எத்தனை முறை எதையாவது சொதப்பிட்டு இப்படி சொல்லிகிட்டு இருக்கோம்! என்னை உற்சாகப்படுத்தணும்ன்னா சாக்லேட் கொடுங்க்! வெள்ளை சாக்லேட், கருப்பு சாக்லேட், எக்லேர், 5 ஸ்டார், மில்க் சாக்லேட், ரூட்ஸ் அன் நட்ஸ்எத்தனை இருக்கு? அதை விட்டுட்டு கேக் வாங்கிகிட்டு வந்து உனக்கு பிடிக்கும்ன்னு நினைச்சேன்னு சொல்லாதீங்க!

இதெல்லாம் அனேகமா உங்களுக்கு பிடிக்காம இருக்கலாம். உங்களுக்கு பிடிச்சது ஒரு புத்தகம், மலர் கொத்து, ஹோட்டல்ல ஒரு ட்ரீட்!

மத்தவங்களுக்கு என்ன பிடிக்கும்ன்னு தெரியணும்ன்னா அவங்களை கேளுங்க. சிம்பிள்! இதனால அவங்கள இன்னும் அதிகமா புரிஞ்சுக்க முடியும். அடுத்து புரிந்துள்ளல் அதிகமாகும்! புரிந்துள்ளல் இருக்கிறவங்க இன்னும் நல்ல ஆராய்ச்சியாளன், விஞானி, நண்பன், மனைவி, கணவன், ஆசிரியன்…. புரியுதில்லையா?

அரசுகள் கிராமங்களை முன்னேற்ற எத்தனையோ திட்டங்கள் போடுது. ஆனா எல்லாம் உபயோகமில்லாம போகுது. கழிவறை கட்டிக்கொடுத்தா அதுல விறகு அடுக்கி வெச்சுட்டு வழக்கம் போல வயலுக்கு போய்கிட்டு இருந்தாங்கன்னு ஒரு அதிகாரி நொந்து போய் எங்ககிட்ட சொன்னார்.

வேற ஒரு கிராமத்துக்குபோய் உங்களுக்கு என்ன வேணும்ன்னு கேட்டப்ப எத்தனையோ விஷயம் இருக்கறப்பஎங்களுக்கு சுடுகாட்டுக்கு பாதை வேணும்ந்னு சொன்னாங்களாம்! அதுதான் அப்போதைக்கு அவங்களுக்கு தலையாய பிரச்சினை!

ஆகவே கடைபிடிக்க வேண்டிய விதி என்ன? “மற்றவர்களூக்கு கொடுக்கும்போது நீ அவர்களுக்கு விருப்பமானது என்று நினைத்து கொடுக்காதே; அவர்களுக்கு தேவையானதை கொடு. அதை என்ன வென்று தெரியாவிட்டால் நேரடியாக கேட்டுவிடு!”

முக்கிய கருதுகோள் #3: தைரியமாக இரு!

தைரியமாக இருப்பது நம் இதயம் தேடும் விஷயங்களை நனவாக்கும். நம் கனவுகள் முளை விட்டு வளர சிறகுகள் முளைத்து பறக்கவருமிடர் துணிந்து ஏற்கவிடாப்பிடியாக ஒரு விஷயத்தை செய்து முடிக்ககீழே விழுந்தாலும் மீண்டும் எழுந்திருக்க! இதெக்கெல்லாம் தைரியம் இருந்தால்தான் முடியும்.

வின்ஸ்டன் சர்சில் இங்கிலாந்து பிரதமராக இருந்தார். இரண்டாம் உலகப்பெரும் போரை சந்தித்து வெற்றி கொண்டவர். சொந்த வாழ்கையில் எத்தனையோ சோதனைகள்! பதினோராம் வகுப்பில் ஃபெய்ல்! பேசும் போது தெத்தும்!  போர் காலத்தில் அவர் படித்த ஹாரோ பள்ளியிலிருந்து ஒரு விழாவில் பேசும்படி வேண்டுகோள் வந்தது. அவரும் அக்டோபர் 29, 1941 அன்று சுருட்டு, கைத்தடி தொப்பி சகிதம் போனார். பேசும் முறை வந்த போது எழுந்து சொன்னது: “இதுதான் பாடம். முயற்சியை கைவிடாதே, கைவிடாதே.  எப்போதுமே, எப்போதுமே, எப்போதுமே! சின்னதோ பெரிசோ அரிதானதோ அற்பமானதோகைவிடாதே; மானமும் புத்திசாலித்தனமும் வேண்டாம் என்று சொன்னால் ஒழிய!  வன்முறைக்கு அடிபணியாதீர்கள்; எதிரிகளின் அளப்பரிய சக்திக்கும் கூட!” அவ்வளவுதான். உரையை முடித்துவிட்டார்!

--- தொடரும்.

இது பின் வரும் பதிவை ஒட்டி எழுதியது:

திவாஜி

unread,
Nov 28, 2014, 9:20:23 AM11/28/14
to mint...@googlegroups.com

2014-11-27 11:39 GMT+05:30 திவாஜி <agni...@gmail.com>:
--- தொடரும்.

முக்கிய கருதுகோள் #4 முடிவு செய்யும் முன் கொஞ்சம் தாமதி!

ஒரு விம்பிள்டன் டென்னிஸ் ஆட்டக்காரர்; பஞ்ச் லைன் சொல்லப்போகும் தேர்ந்த நகைச்சுவை நடிகர். புதிய விடையை சொல்ல மாணவரை எதிர் நோக்கும் ஆசிரியர்.

இவர்களுக்குள் என்ன ஒற்றுமை?

இவர்களால சரியா நேரம் வருவதற்கு  காத்திருக்க முடியும்!

ஆனால் இது அவசர உலகம்! டெஸ்ட் கிரிக்கெட் இனி தலை எடுக்க முடியாது. இது டி 20 யுகம்! வேகம் வேகம்; அதிக அளவு உற்பத்தி (தரம் எப்படியோ போகட்டும்!); திறன். இதெல்லாம்தான் இப்பல்லாம் பேசப்படுது! ஒரு நிமிஷத்தில ஒரு முடிவை எடுத்துட்டா அது பிரமாதம். யோசிச்சு முடிவுன்னா அது மட்டம் என்று வகைப்படுத்தப்படும்! ஃப்ராங்க் பார்ட்நோய் ந்னு ஒத்தர்வெய்ட்ந்னு ஒரு புத்தகம் எழுதியிருக்கார். அதில அவர் சொல்லறது என்னன்னா, முடிவுகள் எடுக்க கொஞ்சம் தாமதம் செய்தா அவை நல்ல முடிவுகளா அமையும். தாமதிக்கும் நேரத்தில கொஞ்சம் விஷயத்தை உள் வாங்கி, அலசி,  சீர் தூக்கிப்பாத்து முடிவை உருவாக்கி ந்னு தாமதிக்கற நேரம் மிக நல்லது!

அவர் சொல்வது: முடிவெடுக்க உனக்கு ஒரு நிமிஷம் இருக்கா? கடைசி நொடி வரை தாமதி. ஒரு மணி நேரம் இருக்கா? கடைசி நிமிஷம் வரை தாமதி! ஒரு வருஷம் இருக்கா? கடைசி நாள் வரை தாமதி!

நிறைய ஆசிரியர்கள் மாணவர்களை பத்து நொடி தாமதிச்சு விடையை சொல்லச்சொல்லுவாங்க! 10 ல இருந்து கீழா எண்ணிகிட்டு வரணும். 0 வந்த பிறகு விடை சொல்லணும்.


முக்கிய கருதுகோள் #5:  கடின உழைப்பும்  சீலமும் பரிட்சையில் வாங்கும் அதிக மதிப்பெண்களைவிட உயர்ந்தவை என்று அறிக.

நாவல்களை வெளியிடாதவர்களும், மாநில கிரிகெட் அணியில் இடம் பெறாதவர்களும் கவலைப்பட வேண்டாம். டேவிட் ஷெங்க் என்பவர் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அவர் பல ஆராய்ச்சிகளை ஆராய்ந்து வரும் முடிவு என்னவென்றால் சிலர் மேன்மையான இடத்தை அடைவதற்கும் சிலர் விளங்காமல் போவதற்கும் டிஎன்ஏ என்கிற மரபணுக்கள் மட்டுமே காரணமில்லை. உந்துதல்களே முக்கியம். நெடும்நாட்களில் சாதிப்பனவற்றுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும்  உந்துதல்களே காரணிகளாக இருக்கின்றன. வளர்ச்சிகளை மரபணுக்கள் உடைத்துவிட மாட்டா. நல்ல சூழ்நிலையும் வளர வேண்டும் என்ற உந்துதலும் இருந்தால் நெடும்நாட்களில் சாதிப்பன பல இருக்கலாம்.

கடின உழைப்பு மிக முக்கியம். 10,000 மணி நேரத்தை ஒரு விஷயத்தில் செலவழித்தால் அதில் செய்ய முடியாதது இல்லை என்று ஒரு கருதுகோள் இருக்கிறது.


முக்கிய கருதுகோள் #6: வேறு எதையும்விட நண்பர்களே உன் நீண்ட ஆயுளுக்கும் மகிழ்ச்சிக்கும் முக்கியம்.

நீண்ட நாள் வாழ எது முக்கியம்? பல வருஷங்களாக எதை எதையோ கேள்விப்படுகிறோம். மரக்கறி உணவு, உடற்பயிற்சி, மிதமான வாழ்கை முறை…. ஆனால் சமீபத்திய ஆரய்ச்சி சிறப்பென சுட்டிக்காட்டுவது ஆதரவு தரும் நண்பர்கள்! உங்கள் உறவின் தரமும் எண்ணிக்கையும் அதிகமாக ஆக நீங்கள் நீண்ட  நாட்கள் உயிர்வாழ்வீர்கள்.

ஜுலியான் ஹோல்ட் லன்ஸ்டெட் தன் ஆராய்ச்சியில் சமூக உறவு மிகக்குறைவாக இருப்பது, தினசரி 15 சிகரெட் பிடிப்பது போன்ற எதிர்மறை விளைவை உண்டாக்கும். ஷெல்டன் கோஹன் என்பவர் ஜலதோஷத்தை உண்டாக்கும் கிருமிகளுடன் ஆராய்ச்சி செய்து யாருக்கு நிறைய ஆதரவு தரும் நண்பர்கள் இருக்கிறார்களோ அவர்கள் இந்த கிருமிகளால் பாதிக்கப்படுவது குறைவே என்று கண்டுபிடித்தார். நவீன யுகத்தின் ஸ்ட்ரெஸ் ஐ நண்பர்கள் குறைப்பதாக தோன்றுகிறது!


திவாஜி

unread,
Nov 28, 2014, 11:47:51 PM11/28/14
to mint...@googlegroups.com

முடிவாகமக்களுக்குயூரேக்காவகையில் கண்டுபிடிப்புகளை தற்செயலாக நிகழ்த்தும் கதை பிடித்து இருக்கிறது. ஆனால் பல கண்டுபிடிப்புகள் உழைப்பில் விளைந்தவை. ந்யூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டு பிடித்ததில் உண்மையிலேயே ஆப்பிளுக்கு பங்கு இருந்ததா என்று எனக்கு சந்தேகமே! பெர்னர் லீ ஒரு ராத்திரியில் உலக இணைய பின்னலை கண்டுபிடித்ததாக நினைக்கிறாரா என்ன?


போஸ்ட் இட் என்னும் ஒட்டு காகிதங்கள் இப்போது எவ்வளவு சாதாரணமாக ஆகிவிட்டன? அது என் கைப்பையில் இல்லாமல் என்ன செய்வேன் என்று யோசிக்கும் அளவு எனக்கு அது பழகிவிட்டது. ஆனால் அது கண்டுபிடிக்கப்பட்டு 12 வருடங்களுக்குப்பின்தான் அதிலிருந்து வருமானமே வர ஆரம்பித்தது. இது போல பல புது எண்ணங்களும் வெற்றி பெற பல ஆண்டுகள் காலம் ஆயின.


பள்ளிகளிலும் வீட்டிலும் இந்த புதிய எண்ணங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. அவை ஒரு பொம்மையுடன் விளையாடும் போது; எதையேனும்பார்ட் பார்ட்ஆக பிரித்து அது எப்படி இருக்கிறது என்று பார்க்கும்போது; நண்பர்களுடன் இருக்கும்போது; இந்த சமயங்களில் பல விதைகள் ஊன்றப்படுகின்றன. இவை முளைவிட்டு வளருமா என்பது ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் இருக்கிறது. புதிது புதிதாக எதையேனும் செய்து கொண்டே இருந்தால் ஏதோ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு விடலாம்! கண்டு பிடிப்புகள் அதி புத்திசாலிகளிடமிருந்து மட்டுமே வரும் என்பதை நான் பலமாக மறுக்கிறேன். ஆகவே உங்கள் குழந்தைகள் எப்போதும் எதையேனும் நோண்டிக்கொண்டு ஆரய்ந்து கொண்டு இருந்தால் அது அவர்களுக்கு ஆபத்து இல்லை என்னும் பட்சத்தில், ஊக்கப்படுத்தாவிட்டாலும் குறைந்தது, அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். அவர்கள் எதையாவது தட்டிக்கொட்டிக்கொண்டு இருக்க முயன்றால் அதற்கு போதிய நேரம் கொடுங்கள்.

உங்களுக்குள்ளேயும் ஒரு குழந்தை இருக்கிறது. அதற்கும் தட்டிக்கொட்ட போதிய நேரம் கொடுங்கள்!


இது பின் வரும் பதிவை ஒட்டி எழுதியது: ​ http://www.6seconds.org/2013/01/30/emotional-intelligence-child-centered-education/

----------------------

அவ்வளவுதான்! (அப்பாடா! போரடிச்சு ஒரு வழியா விட்டாண்டா!)

இந்த விஷயங்களை படித்து புரிந்து கொள்ள உதவியாக இருந்த புத்தகங்கள்:


emotional intelligence - Daniel Goleman, Ph.D

Emotional Intelligence For Dummies - Steven J. Stein, PhD

Cognitive behavioural therapy For Dummies - Rhena Branch, MSc, Dip CBT, and Rob Willson, BSc, MSc, Dip SBHS


உதவியாக இருந்த வலைத்தளம்: http://www.6seconds.org/


கொஞ்சம் கடினமாக புது விஷயமாக இருந்ததால எழுதறது கொஞ்சம் சவாலாகவே இருந்தது. இருந்தாலும் ஓரளவு செய்திருக்கேன் ந்னு நினைக்கிறேன். குறை நிறைகளை தயை செய்து விமர்சனம் செய்யுங்கள். தேவையானால் திருத்தங்கள் செய்து ஒரு பிடிஎஃப் ஆக வெளியிடலாம்!

உங்களுக்கு இந்த பதிவுகள் உபயோகமாக இருந்திருந்தா கொஞ்சம் சொல்லுங்க. சிரமப்பட்டதுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்! இந்த இழையில் அவ்வப்போது உபயோகமான விமர்சனங்கள், பின்னூட்டங்கள் கொடுத்தோருக்கு மனமார்ந்த நன்றி!


பல விஷயங்களும் தியரடிக்கலா தெரியும். இருந்தாலும் கொஞ்சம் சிரத்தை, முயற்சி, இறை அருள் கூடினா சாதிச்சுடலாம். அப்படி சாதிச்சா அது உங்க வாழ்நாள் முழுதும் நல்ல துணையா இருக்கும் என்கிறதுல சந்தேகமே இல்லை. வெற்றி பெற வாழ்த்துக்கள்!


-நிறைந்தது-


தேமொழி

unread,
Nov 29, 2014, 1:00:29 AM11/29/14
to mint...@googlegroups.com
On Friday, November 28, 2014 8:47:51 PM UTC-8, திவாஜி wrote:

கொஞ்சம் கடினமாக புது விஷயமாக இருந்ததால எழுதறது கொஞ்சம் சவாலாகவே இருந்தது. இருந்தாலும் ஓரளவு செய்திருக்கேன் ந்னு நினைக்கிறேன். குறை நிறைகளை தயை செய்து விமர்சனம் செய்யுங்கள். தேவையானால் திருத்தங்கள் செய்து ஒரு பிடிஎஃப் ஆக வெளியிடலாம்!

உங்களுக்கு இந்த பதிவுகள் உபயோகமாக இருந்திருந்தா கொஞ்சம் சொல்லுங்க. சிரமப்பட்டதுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்!


 

நன்றி டாக்டர் திவாஜி.
நல்ல பயனுள்ள பதிவு.

குறிப்பாக குழந்தைகளின் ஆர்வத்திற்கு ஊக்கமளிக்க அறிவுரை கூறும் இறுதிப்பகுதி மிகவும் பயனுள்ளது.

தொடர்ந்து படித்துக் கொண்டிருந்த பொழுதே எனக்கு இருமுறை பதிவிற்கு மாறுபட்ட கருத்துக்கள் தோன்றினாலும் உங்கள் சிந்தனையோட்டத்தை தடை செய்ய விரும்பாது அமைதி காத்தேன். அதாவது நீங்கள் அறிவுறுத்தியபடி சரியான நேரம் வரும் வரை பொறுமை காத்தேன் என வைத்துக் கொள்ளுங்களேன் :)))

இப்பொழுது அவை:
[1]

ஒரு வேலை செய்கிறோம். முதலில் பயந்துண்டு கவனமா செய்வோம். அப்படியே செய்யச்செய்ய சுலபமா கவலை இல்லாமல் செய்வோம். இதன் பெயர் சம்ஸ்காரம். இன்னும் பழகப்பட இது இறுகி வாசனை ஆகிறது. இது ஜன்ம ஜன்மமாக நம்முடன் வரும். இதனால்தான் ஒருத்தர் போல ஒருத்தர் இல்லை. ஒரு செயலுக்கு ஒருவர் என்ன எதிர்வினை ஆற்றுவார் என்பது ஒரே மாதிரி இல்லை. அவர் போன ஜன்மங்களில எப்படி எப்படி மாறி கடைசியா இருந்தாரோ அப்படித்தான் இருப்பார். போன ஜன்மத்துல மூக்கு மேல கோபம்ன்னா இப்பவும் அப்படித்தான் இருக்கும். போன ஜன்மத்துல என்னத்தான் எரிச்சலூட்டினாலும் சிரிச்சுகிட்டு இருப்பார்ன்னா இப்பவும் அப்படித்தான் இருப்பார்! இதான் வாசனை. 

என்கருத்து:  அறிவியல் அடிப்படையிலான ஒரு கட்டுரையில் ஜன்மம் பற்றிய விளக்கங்கள் முற்றிலும் பொருந்தவில்லை.  என்னால் மேலே உள்ள கருத்தை செரிமானம் செய்யவே முடியவில்லை. 

[2]


உள்ளதை உள்ளபடி பார்....பதிவு 

 நாம் ஒரு வேலையை முடித்துக் கொண்டு போய் பாஸ் கிட்ட காட்டினோம். நாம நல்லா செஞ்சதாத்தான் நினைச்சோம்.ஆனா அவர் அதை பாத்துட்டு மோசமா இருக்குன்னு சொல்லிட்டார்.

அடுத்து எப்படி உணர்ந்தோம்? கோபம் வந்ததா? சோர்வா? த்ருப்தி இன்மையா?

அடுத்து முதல் எதிர்வினை.
அடுத்து வரது சரியாக்கும் ஆதரவு எண்ணங்கள். 
இதுக்கு எதிராகவும் சில எண்ணங்கள் வரலாம்.


என்கருத்து:
இதில் முதல் வினையாற்றலில் உண்மையும் இருக்கலாம்.  மற்றவை தவறு நம்மிடம் இருக்கலாம் என்ற கோணத்தில் வைக்கப்பட்ட கருத்துகள்.

உண்மையில் நம்மிடம் தவறே இன்றி கடின உழைப்பும், உண்மையான முயற்சியையும் ஏதோ அரசியல் காரணங்களுக்காக குறைத்து மதிப்பிட முனையும் சூழ்நிலையும் இருக்கும்.

சகாயம் ஒரு எடுத்துக்காட்டு.

திறமைக்கு மதிப்பின்றி (அலுவலக) அரசியல், நிர்வாகியின் தன்னலம் போன்றவை முன்னிறுத்தப்படுவது உண்டு.   அந்த சூழ்நிலைகளை அறிவுபூர்வமாக  எடை போட்டு, நாம் உணர்வது உண்மைதான் எனத்  தெளிவாகத் தெரிந்தால்... தக்க சமயம் பார்த்து சூழ்நிலை மேலும் நமது மனநிலையைப் பாதிக்காத வகையில், நம் முன்நேற்றதிற்கு வைக்கப்படும் இடையூறைக் களைந்து வேறிடத்திற்குப் போக வேண்டும். 

இங்கு தன்னிடம் தவறு என்ற கோணம் மட்டுமே விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை மிகவும் பயனுள்ளது. 

மீண்டும் நன்றி.

அன்புடன்
..... தேமொழி



திவாஜி

unread,
Nov 29, 2014, 6:25:24 AM11/29/14
to mint...@googlegroups.com
2014-11-29 11:30 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
On Friday, November 28, 2014 8:47:51 PM UTC-8, திவாஜி wrote:

கொஞ்சம் கடினமாக புது விஷயமாக இருந்ததால எழுதறது கொஞ்சம் சவாலாகவே இருந்தது. இருந்தாலும் ஓரளவு செய்திருக்கேன் ந்னு நினைக்கிறேன். குறை நிறைகளை தயை செய்து விமர்சனம் செய்யுங்கள். தேவையானால் திருத்தங்கள் செய்து ஒரு பிடிஎஃப் ஆக வெளியிடலாம்!

உங்களுக்கு இந்த பதிவுகள் உபயோகமாக இருந்திருந்தா கொஞ்சம் சொல்லுங்க. சிரமப்பட்டதுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்!


 

நன்றி டாக்டர் திவாஜி.
நல்ல பயனுள்ள பதிவு.
நன்றி!
 

குறிப்பாக குழந்தைகளின் ஆர்வத்திற்கு ஊக்கமளிக்க அறிவுரை கூறும் இறுதிப்பகுதி மிகவும் பயனுள்ளது.

தொடர்ந்து படித்துக் கொண்டிருந்த பொழுதே எனக்கு இருமுறை பதிவிற்கு மாறுபட்ட கருத்துக்கள் தோன்றினாலும் உங்கள் சிந்தனையோட்டத்தை தடை செய்ய விரும்பாது அமைதி காத்தேன். அதாவது நீங்கள் அறிவுறுத்தியபடி சரியான நேரம் வரும் வரை பொறுமை காத்தேன் என வைத்துக் கொள்ளுங்களேன் :)))
 
உண்மை. தொடர் பதிவில் சந்தேகம் தெளிதலும். முடிவில் ஆட்சேபனைகள், மாற்றுக்கருத்துகள் இருப்பது நல்லதே! சில சமயம் அடுத்தடுத்த பதிவுகளில் ஆட்சேபணை விலகிவிடலாம். உங்கள் செய்கைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

 

இப்பொழுது அவை:
[1]

ஒரு வேலை செய்கிறோம். முதலில் பயந்துண்டு கவனமா செய்வோம். அப்படியே செய்யச்செய்ய சுலபமா கவலை இல்லாமல் செய்வோம். இதன் பெயர் சம்ஸ்காரம். இன்னும் பழகப்பட இது இறுகி வாசனை ஆகிறது. இது ஜன்ம ஜன்மமாக நம்முடன் வரும். இதனால்தான் ஒருத்தர் போல ஒருத்தர் இல்லை. ஒரு செயலுக்கு ஒருவர் என்ன எதிர்வினை ஆற்றுவார் என்பது ஒரே மாதிரி இல்லை. அவர் போன ஜன்மங்களில எப்படி எப்படி மாறி கடைசியா இருந்தாரோ அப்படித்தான் இருப்பார். போன ஜன்மத்துல மூக்கு மேல கோபம்ன்னா இப்பவும் அப்படித்தான் இருக்கும். போன ஜன்மத்துல என்னத்தான் எரிச்சலூட்டினாலும் சிரிச்சுகிட்டு இருப்பார்ன்னா இப்பவும் அப்படித்தான் இருப்பார்! இதான் வாசனை. 

என்கருத்து:  அறிவியல் அடிப்படையிலான ஒரு கட்டுரையில் ஜன்மம் பற்றிய விளக்கங்கள் முற்றிலும் பொருந்தவில்லை.  என்னால் மேலே உள்ள கருத்தை செரிமானம் செய்யவே முடியவில்லை. 

இது அறிவியல் பதிவுக்ள் என்று எங்குமே சொல்லவில்லை. சில விஷயங்களை படிக்கும் போது பல சமாசாரங்கள் என் கருத்துகளுக்கும் கண்ணோட்டத்துக்கும் இசைவாக தெரிந்தன. ஆகவே என் பார்வையில் பட்டதை சொல்லி இருக்கிறேன். இதிலேயே நடுவில் க்ருஷ்ணகுமார் அவர்கள் நல்ல கோபம் என்று ஒன்று ஆன்மீக ரீதியில் இல்லை என்றார். எனக்கு அதில் உடன்பாடு என்றாலும்  அப்போது சொல்லிக்கொண்டு இருந்த கருதுகோளை விளக்க நல்ல கோபம் கெட்ட கோபம் என்றே பிரித்து எழுதினேன்.
உங்களுக்கு செரிமானம் ஆகவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. இதை தள்ளிவிட்டு போய்விடுங்கள்.


[2]


உள்ளதை உள்ளபடி பார்....பதிவு 

 நாம் ஒரு வேலையை முடித்துக் கொண்டு போய் பாஸ் கிட்ட காட்டினோம். நாம நல்லா செஞ்சதாத்தான் நினைச்சோம்.ஆனா அவர் அதை பாத்துட்டு மோசமா இருக்குன்னு சொல்லிட்டார்.

அடுத்து எப்படி உணர்ந்தோம்? கோபம் வந்ததா? சோர்வா? த்ருப்தி இன்மையா?

அடுத்து முதல் எதிர்வினை.
அடுத்து வரது சரியாக்கும் ஆதரவு எண்ணங்கள். 
இதுக்கு எதிராகவும் சில எண்ணங்கள் வரலாம்.


என்கருத்து:
இதில் முதல் வினையாற்றலில் உண்மையும் இருக்கலாம்.  மற்றவை தவறு நம்மிடம் இருக்கலாம் என்ற கோணத்தில் வைக்கப்பட்ட கருத்துகள்.

உண்மையில் நம்மிடம் தவறே இன்றி கடின உழைப்பும், உண்மையான முயற்சியையும் ஏதோ அரசியல் காரணங்களுக்காக குறைத்து மதிப்பிட முனையும் சூழ்நிலையும் இருக்கும்.

சகாயம் ஒரு எடுத்துக்காட்டு.

திறமைக்கு மதிப்பின்றி (அலுவலக) அரசியல், நிர்வாகியின் தன்னலம் போன்றவை முன்னிறுத்தப்படுவது உண்டு.   அந்த சூழ்நிலைகளை அறிவுபூர்வமாக  எடை போட்டு, நாம் உணர்வது உண்மைதான் எனத்  தெளிவாகத் தெரிந்தால்... தக்க சமயம் பார்த்து சூழ்நிலை மேலும் நமது மனநிலையைப் பாதிக்காத வகையில், நம் முன்நேற்றதிற்கு வைக்கப்படும் இடையூறைக் களைந்து வேறிடத்திற்குப் போக வேண்டும். 

இங்கு தன்னிடம் தவறு என்ற கோணம் மட்டுமே விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

முதல் எதிர்வினை, சரியாக்கும் ஆதரவு எண்ணங்கள், எதிரான எண்ணங்கள், நடந்தது குறித்த ஆய்வு, பாரபட்சமில்லாத முடிவு, மூட், மேலே செயல்திட்டம்​ என்ற தொடரை காட்ட பயன்பட்ட
உதாரணமே அது. பாரபட்சமில்லாத முடிவில் தான் செய்தது சரியே என்று தெரிந்தால் அதற்கு தகுந்தபடி அடுத்த செயலை வகுத்துக்கொள்ளலாம்.
 இதில் எல்லாம் வேரியேஷன் ஆயிரத்து முண்ணூத்து அம்பத்தி எட்டரை இருக்கலாம்! :-))) அவை இங்கே தேவையில்லை.


நன்றி!

Reply all
Reply to author
Forward
0 new messages