குமரன்
மோரியர்களுக்கு முன்னர் வடபுலம் ஆண்ட நந்தர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கு. ஆனால் குப்தர்கள் குறிப்பு சங்க இலக்கியங்களில் இல்லை. எனவே சங்க காலம் இவ்விரண்டு ஆட்சிகளுக்கும் இடைப்பட்ட காலமாக இருக்கலாம்
தமிழ் செட்டியார்கள் வணிகத்தால் வடபுல அறிவு பெற்றவராக இருக்கலாம். புகாரில் பன்னாட்டு பலபண்டம் மண்டி கிடந்தன என பட்டினப்பாலையில் வரிகள் உள்.
வடநாட்டினர் தமிழ்நாட்டைக் குறித்து அக்காலத்தில் தெரிந்திருப்பதைப் பார்க்கிலும், தமிழர்கள் வடநாட்டைப் பற்றி மிகுதியாக அறிந்திருந்தார்கள்.
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.
நா. கணேசன்
ஆமாம் ஐயா. இரத்னேஷின் பதிவில் படித்ததைப் 'படித்ததில் பிடித்தது' தலைப்பில் என்னுடைய கூடல் பதிவில் இட்டேன். அங்கே இரத்னேஷின் பதிவைப் பற்றி குறிப்பிட்டேன். அதே கையோடு பரந்தாமனாரின் நூலின் பகுதியை மட்டும் இங்கே இட்டேன்.
கூடலில் இன்று இட்ட இடுகை: http://koodal1.blogspot.com/2009/01/blog-post_28.html
On Jan 28, 9:33 pm, Kumaran Malli <kumaran.ma...@gmail.com> wrote:
> நீங்கள் சொல்வது போல் பார்த்தால் சங்க இலக்கிய காலம் 300 BCE முதல் 300 CE வரை
> வரும் ஐயா.
>
இந்தத் தேதிகள் எனக்கும் ஒப்புதலே.
2 ஆண்டுகளுக்கு முன்னர் நான் திருவனந்தபுரம்
கேரளப் பல்கலையிலே உரையாற்றினேன்.
வ. ஐ. சுப்பிரமணியம் ஐயா தலைமையில்.
பின்னர் சாயுங்காலம் அனந்தைத் தமிழ்ச்
சங்கத்திலே பேசினேன், நீல. பத்மநாபன்,
அனந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு அனந்தபத்மநாபசுவாமி
கோவில் அருகிலே மிக நல்ல இடமும்,
கட்டடமும் அளித்தவர்கள், இஸ்ரோ பொறிஞர்கள்,
... வந்திருந்தனர்.
வ. ஐ. சுப்பிரமணியன் (தமிழ்ப் பல்கலை முதல் துணைவேந்தர்)
IJDL இதழை வெளியிட வைத்தார்.
அதில் முனைவர் கா. ராஜன் கண்டுபிடித்த
தாதப்பட்டி நடுகல் கல்வெட்டு இருக்கிறது.
அது கி.மு. 3 (அ) 2-ஆம் நூற்றாண்டு.
அது ஆநிரை கவர்தல் பற்றிக் குறிக்கும்
கல்வெட்டு.
பொதுவாக, மேலைநாடுகளில் கட்டுரை
வெளியாகணும்னாக்க கொஞ்சம் காலத்தை
முன்னுக்கு கொண்டுவந்து conservative-ஆ சொன்னால் ஒத்துக்குவாங்க.
அப்படித்தான் ஐராவதம் நூலில் தேதிகள்
இருக்கலாம். அதற்கு ஒரு நூற்றாண்டு
முன்னாடியும் இருக்கலாம் என்பது என் யூகம்.
இதற்கு சிறீலங்கா, தமிழ்நாடு கிடைத்த
பானை ஓடுகளில் கிடைத்த பிராமி எழுத்து
சான்று. அவ்வோடுகளை விஞ்ஞான
பூர்வமாகப் பார்த்தால் அசோகனுக்கு
முந்தையது என்று காட்டுகிறது.
கடல்வழி வாணிகத்தால் தமிழ்
எழுத்து அசோகனுக்கு முன்னமே இலங்கை,
பொதிகை மலைப் பகுதிகளில்
தோன்றிவிட்டதோ? என ஆய்வுக்கு இடமுண்டு.
கி.மு. முதல் நூற்றாண்டிலே *எகிப்திலே*
கூடத் தமிழ் எழுத்துக் கிடைக்கிறதே!
2007-ல் எனக்கு ஜார்ஜ் ஹார்ட் எழுதிய மடல் இது:
Ganesan -- whatever it means, it seems to me no one has pointed out an
obvious fact: that if people were scribbling such things on pots, it
meant that they had a remarkable level of literacy. That would accord
with the existence of the Sangam poems. I wish one of them had been
impractical enough to write a line from a poem on pottery. George
On Nov 24, 2007, at 8:42 AM, N. Ganesan wrote:
http://www.hinduonnet.com/2007/11/21/stories/2007112158412400.htm
It is possible to give another explanation. the newspaper article
mentions that "The word occurring in the pottery inscription
found at Quseir-al-Qadim can also be read as o(R)Ri as Tamil Brahmi
inscriptions generally avoid doubling of consonants."
Instead of "pAn2ai oRi", perhaps this can be interpreted as "pAn2ai
oRRi" means the pot in which the mariners' mortgage, lease documents
written in palm leaves are kept.
Here is the word, oRRi in these meanings from a bhakti era poem:
"aRRa pOztum alanta pOztum aavaR kAlat taTikEL ummai
oRRi vaittinGuNNalAmO? ONakAntan2 RaLiyuLiirE" Cuntarar 7.5.3
------
Just last year, a major port, Muciri (cf. Muziris) on the Malabar
coast where major trade tookplace with the west was discovered by
archaeologists,
http://news.bbc.co.uk/2/hi/south_asia/4970452.stm
Maximum number of Roman coins have been found in Kongunadu region,
some miles east of Muciri port. Since the Western ghat mountains
break in what is called Palghat gap, trade routes between Kerala's
Muciri to Tamil Nadu run via the Kongu region.
The Roman coins, rings, .. in and near old Vanchi (modern Karur),
capital of Cheras in Sangam texts discovered in recent years is
substantial.
(1) Catalogue of the Roman and Byzantine coins in the Madras
Government Museum. Author: Aravamuthan, T. G.
Chennai : The Commissioner of Museums, Govt. Museum, 2002
(2) Roman Karur : a peep into Tamils' past
R Nagaswamy, 1995, 153 p., [43] leaves of plates, Madras.
(3) Symbols of trade : Roman and pseudo-Roman objects found
in India. Author: Suresh, S.
New Delhi : Manohar Publishers & Distributors, 2004
(4) Late Roman copper coins from South India, Karur and Madurai
Ira Kirusnamurtti, 1994, 140 p. Madras : Garnet Publications,
(5) Non-roman ancient foreign coins from Karur in India,
Ira Kirusnamurtti, 2000, 145 p. Chennai : Garnet Publishers,
(important finds including Hellenistic coins).
(6) Sangam : numismatics and cultural history : essays in honour
of Dr. R. Krishnamurthy. Chennai : New Era Publications, 2006
N. Ganesan
> 2009/1/28 வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com>
>
>
>
> > குமரன்
>
> > மோரியர்களுக்கு முன்னர் வடபுலம் ஆண்ட நந்தர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கு.
> > ஆனால் குப்தர்கள் குறிப்பு சங்க இலக்கியங்களில் இல்லை. எனவே சங்க காலம்
> > இவ்விரண்டு ஆட்சிகளுக்கும் இடைப்பட்ட காலமாக இருக்கலாம்
>
> > தமிழ் செட்டியார்கள் வணிகத்தால் வடபுல அறிவு பெற்றவராக இருக்கலாம். புகாரில்
> > பன்னாட்டு பலபண்டம் மண்டி கிடந்தன என பட்டினப்பாலையில் வரிகள் உள்.
>
> > 2009/1/28 Kumaran Malli <kumaran.ma...@gmail.com>
>
> >> வடநாட்டினர் தமிழ்நாட்டைக் குறித்து அக்காலத்தில் தெரிந்திருப்பதைப்
> >> பார்க்கிலும், தமிழர்கள் வடநாட்டைப் பற்றி மிகுதியாக அறிந்திருந்தார்கள்.
>
> >> --
> >> வேந்தன் அரசு
> >> சின்சின்னாட்டி
> >> (வள்ளுவம் என் சமயம்)
> >> I have enough love for you to forgive your follies.- Hide quoted text -
>
> - Show quoted text -
நன்றி கணேசன் ஐயா. முன்பொரு முறை இராம.கி. ஐயாவின் பதிவில் சில சங்க கால இலக்கியங்கள் 500 BCE - 600 BCE ஆகக் கூட இருக்கலாம் என்று படித்த நினைவு. எங்கே படித்தேன்; எந்த நூற்களைச் சொன்னார் என்பது மறந்துவிட்டது.
மதுரைத் திட்டம் முதல் பல இடங்களில் சங்க காலம் 200 BCE முதல் 200 CE வரை என்றே குறிக்கப்படுகிறது. ஆனால் மற்ற தரவுகளை வைத்துப் பார்க்கும் போது குறைந்தது 300 BCE முதலே எழுதப்பட்டவை சங்க இலக்கியங்களில் தொகுக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேன்டும் என்று தோன்றுகிறது.
மதுரைப் பல்கலைக்கழக ஆய்வு இன்னும் விரிவாக்கப்பட்டு தென் தமிழகமே
இந்தியாவின் தொல்பரப்பு என நிருவப்படும் போது தேதிகள் இன்னும் பின்னால்
போகும். ராமதுரை பேசும் ஆழ்வார்கள் காலம் மெய்ப்படலாம்.
சமீபத்திய தொல்பொருள் ஆய்வுகளே சங்கத்தை பின் தள்ளுகின்றனவே. நம்
தமிழ்த்துறை இன்னும் அறிவியல் பூர்வமாகவில்லை. வெறும் இலக்கியத்தை
நம்பியே காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறது. பல்துறை அறிஞர்கள்
தமிழ்த்துறைக்கு வரும்போது அதன் நோக்கு விரியும். புத்தாக்கம் பிறக்கும்.
காலம் கனியக்காத்திருப்போம்.
கணியன்
2009/1/29 Kumaran Malli <kumara...@gmail.com>:
சரிதான்..நம்ம வேலைக்கு வேட்டு வச்சுருவாறு பாலருக்கே!
அண்ணாச்சி, இப்ப இரவு இங்கே!
மற்ற நேரங்களில் எழுதுவது களவாணித்தனம்தான்.
பலநேரங்களில் எனக்கொரு கேள்வியுண்டு. இங்கு கடிதங்கள் வாரநாட்களில்
அதிகம் வருவதேன்.
கம்பெனி அக்கவுண்டா?
அவதாரம்! கண்ணன் என்றால் அவதாரம் இருக்க வேண்டாமா?
நா.கண்ணன் (இது எப்படி இருக்கு. எனக்கே இந்தப்பேரு மறந்து போச்சு)
சரிதான்..நம்ம வேலைக்கு வேட்டு வச்சுருவாறு பாலருக்கே!
அண்ணாச்சி, இப்ப இரவு இங்கே!
மற்ற நேரங்களில் எழுதுவது களவாணித்தனம்தான்.
பலநேரங்களில் எனக்கொரு கேள்வியுண்டு. இங்கு கடிதங்கள் வாரநாட்களில்
அதிகம் வருவதேன்.
கம்பெனி அக்கவுண்டா?
அவதாரம்! கண்ணன் என்றால் அவதாரம் இருக்க வேண்டாமா?
நா.கண்ணன் (இது எப்படி இருக்கு. எனக்கே இந்தப்பேரு மறந்து போச்சு)
சிலநாளில் முடியும். ஆனால் எப்போதும் முடியாது.
எனது கடிதங்களைப் பார்த்தால் ஒரு பேட்டன் கிடைக்கும்.
வாரக்கடைசி கடிதங்கள் நீளமாயிருக்கும். அதுபோல் வேலை ஓய்வு நேரமும்.
வேலைக்குப் போகுமுன் சின்னப்பதில்கள்.
வேலைப்பொழுதில் 10 பக்க கடிதம் வந்தால் படிக்கவே மாட்டேன். இப்படிப்போன
கடிதங்கள் நிறைய உள்ளன. சின்னதாய் பதில் சொல்லத்தக்க இடுகைகளுக்கு
ஊக்கமளிக்க எழுதுவேன்.
வேலையாய் வெளியூர் போய்விட்டால், அவ்வளவுதான், 90% கடிதங்கள் நேராகக்
கிட்டங்கிக்குத்தான்.
ஏதோ இன்னக்கி கமலம் வேண்டிக்கொண்டதால்.
பிற பின் ;-)
க.>
On Jan 29, 5:48 am, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
> குமரன்:
>
> மதுரைப் பல்கலைக்கழக ஆய்வு இன்னும் விரிவாக்கப்பட்டு தென் தமிழகமே
> இந்தியாவின் தொல்பரப்பு என நிருவப்படும் போது தேதிகள் இன்னும் பின்னால்
> போகும். ராமதுரை பேசும் ஆழ்வார்கள் காலம் மெய்ப்படலாம்.
>
நாகரீகம் என்று பார்த்தால் செம்பூழி (bronze age) விரிவாகக்
கிடைப்பது சிந்து - சரஸ்வதி நதிக் கரை ஊர்களே.
இவற்றின் திராவிடப் பெயர்கள் முறையே: சீந்து(ஈங்கு மரம்), விசும்பாள்/
வானி
என்பதாகலாம். ஆயிரக் கணக்கான ஊர்கள் தொல்லியல் அகழ்வாயில் உள்ளன.
இன்னும் 1% தான் தோண்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, ஈழம் - கிடைப்பதெல்லாம் இரும்பூழி
நாகரீக ஈமச் சின்னங்கள் தான். ~ 800 BCE or later,
நானும் ஆதிச்சநல்லூர் போன ஆண்டு போயிருந்தேன்.
அழைத்துச் செல்ல நெல்லை தொல்பொருள் காப்பக
அதிகாரி, பேரா. தொ. பரமசிவன், முனைவர் மு. இளங்கோ
வந்திருந்தனர்.
தொல்லியலார் சிந்து குஜராத் ... இருந்து நாகரிகம்
கங்கை, காவிரி (உ-ம்: செம்பியன் கண்டியூர்) கரைகளை அடைந்தன என்று
ஆய்வால் தெரிவிக்கின்றனர்.
நா. கணேசன்
> சமீபத்திய தொல்பொருள் ஆய்வுகளே சங்கத்தை பின் தள்ளுகின்றனவே. நம்
> தமிழ்த்துறை இன்னும் அறிவியல் பூர்வமாகவில்லை. வெறும் இலக்கியத்தை
> நம்பியே காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறது. பல்துறை அறிஞர்கள்
> தமிழ்த்துறைக்கு வரும்போது அதன் நோக்கு விரியும். புத்தாக்கம் பிறக்கும்.
>
> காலம் கனியக்காத்திருப்போம்.
>
> கணியன்
>
> 2009/1/29 Kumaran Malli <kumaran.ma...@gmail.com>:
>
>
>
>
>
> > நன்றி கணேசன் ஐயா. முன்பொரு முறை இராம.கி. ஐயாவின் பதிவில் சில சங்க கால
> > இலக்கியங்கள் 500 BCE - 600 BCE ஆகக் கூட இருக்கலாம் என்று படித்த நினைவு.
> > எங்கே படித்தேன்; எந்த நூற்களைச் சொன்னார் என்பது மறந்துவிட்டது.- Hide quoted text -
உங்களுக்குத்தெரியும் அறிவியலில் சரியான கோட்பாடு கிடைப்பதுதான் கடினம்
கிடைத்துவிட்டால் ஆய்வுகள் அதை நோக்கி நகரும். பிச்சப்பனின் ஆய்வு
அத்தகைய மறுமலர்ச்சியை தமிழுக்கு கொண்டுவரட்டும்.
இந்த வடக்கு தெற்கு என்பதெல்லாம் சார்பானவை. மாறலாம்.
இமயம் என்பது முக்கியமாகப்படுவதற்கு முக்கிய காரணம் அது இந்தியாவிற்கு
மழை வளம் தருவதால்தான். சிவனின் முடியில் கங்கை அவிழ்வதும்,
திருவிக்கிரமன் காலடி கழுவி ஆகாச கங்கை இந்திய கங்கை ஆவதும்
இதைச்சுட்டத்தான். இதை 'இந்தியாவின் கதை' ஆவணம் மிக அழகாக எடுத்துச்
சொல்கிறது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் தென்னாடுடையோருக்கு இமயமலையின் இருப்பு
எப்படித்தெரிந்தது? இவர்கள் பொதிகை மலைவாசிகளாயிற்றே!
க.>
On Jan 29, 7:03 am, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
> இதில் ஆச்சர்யம் என்னவென்றால் தென்னாடுடையோருக்கு இமயமலையின் இருப்பு
> எப்படித்தெரிந்தது? இவர்கள் பொதிகை மலைவாசிகளாயிற்றே!
>
எவ்வளவு பிச்சப்பன் ஆய்வுகள் வந்தாலும் நாகரீகம்
வடக்கே இருந்து தெற்கே நகர்ந்தது என்பது மாறாது.
Briefly,
http://groups.google.com/group/minTamil/msg/8b700a0f756a40ab
BTW, all the genetics research is in a very large time scale.
It does not tell about the Aryan movements into Punjab
around 1900 BCE or later. Rgveda is heavily tied to
horses and chariots which are missing in Harappan civilization.
Also, Indus folks valued Tiger as their symbol and associated tigers
with their goddess worship, and lions even though they existed
in the area were not represented in Indus art at all.
May be because their neighbors in Middle East had lions
as symbols. Even in Tamil history we can see this:
Muu-vEndhar don't have lion as symbol, only Pallavas
(who have some north western India/Persia connection
have lions as royal symbol). Pallavas wrote
in initial centruries in ANdhra, Kanchi, Mamallapuram
completely in Sanskrit (not Tamil) and only later
Pallavas get tamilised.
anbudan,
N. Ganesan
மாறும்! பார்த்துக்கொண்டு இருங்கள்.
ஆண்டாள் சிங்கம் பற்றிப்பாடுவதை எதில் சேர்ப்பது?
உடனே ஆண்டாளை 8ம் நூற்றாண்டிற்குத்தள்ளிவிடுவார்கள். அதை அரங்கத்து
ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த ஆசிய மைனர் கதையே வெள்ளையர் தம்
சுயநலத்திற்காக ஏற்படுத்தியது.
காலம் மாறும். கவனியுங்கள். இதன் முதல் அறிகுறிதான் பி.பி.சியின் ஆவணப்படம்.
க.>